SSKN— epi 22

அத்தியாயம் 22

 

இருவர் ஒருவராய்

இணைந்து விட்டோம்

இரண்டு பெயர் ஏனடி!!!

 

 

“மணி” குரலே எழும்பவில்லை கவிக்கு.

“மணிதான்! மணிக்கு என்ன வச்சிருக்க கவி?” ஆளை மயக்கும் புன்னகையுடன் நெருங்கினான் மணி.

“இப்படிலாம் திடீர்னு பாடி பயம் காட்டாதடா மணி! பாரு நெஞ்சு எப்படி துடிக்குதுனு” பட்பட்டென துடிக்கும் நெஞ்சை கைக் கொண்டு அழுத்தினாள்.

அவனுக்கு இன்னும் புன்னகை விரிந்தது.

“வாய் மட்டும் தானா உனக்கு? ஆக்‌ஷன்னு வந்த பேஸ்மேண்ட் வீக்காயிருமா லயனஸ்?” அவள் அருகே வந்து நின்று கேட்டான்.

“என்ன கூப்பிட்ட? லயனஸா? அப்படியா கூப்புட்ட மணி? என் மேல இருந்த கோபம் போயிருச்சா?” கண்கள் மின்னலடிக்க அவனை நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டாள் கவி.

தன் இரு கைகளாலும் கன்னத்தைப் பிடித்தவன், அவள் கண்களுக்குள் தன் பார்வையைக் கலக்க விட்டான்.

“உன் மேல என்னால கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியுமா கவி? எத்தனை முறை நீ உடைச்சிப் போட்டாலும், இந்த மனசு உன்னை மட்டும் தானே தேடுது? நீ வேணாம் இந்தப் பாழாப் போன காதல் வேணாம்னு நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் உன் காலடியில தான இந்த மனசு வந்து விழுந்து புரளுது! இந்த காதல் தரும் சித்ரவதைய என்னால தாங்கிக்கவே முடியல கவி”

“மணி!”

பேச வந்தவளின் வாயைத் தன் விரல்களால் வருடி அவள் பேச்சை நிறுத்தினான் மணி.

“இப்போ கூட தள்ளி நிக்கனும்னு நான் நினைக்கறேன்! ஆனா உன்னோட ஏக்கமான குரல், கனவு சுமந்த பார்வை என்னைப் புரட்டிப் போடுது கவி. நீ கேட்கறத எல்லாம் குடுக்க சொல்லுது! நீ என்னையே கேட்கறப்போ எப்படி மறுக்க முடியும்? கல்யாணத்துக்கு முன்னயே உன்னை மறுக்க ரொம்ப கஸ்டப்பட்டேன். பெண்கள் சூழ வளர்ந்ததால இன்னொரு பெண்ணை முறையில்லாம எடுத்துக்கறது தப்புன்னு மனசாட்சி உறுத்த ஒதுங்கி ஒதுங்கிப் போனேன். உன் விஷயத்துல மட்டும் நான் ரொம்பவே வீக்கான ஆளு லயனஸ்”

கவியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ம்ப்ச்! அழாதடி! நீ செய்யறதுக்கெல்லாம் எதாச்சும் காரணம் இருக்கும்ன்னு எனக்குப் புரியுது. மிஷன் மணி தெரியாத வரைக்கும் இதெல்லாம் உன் ஓவர்வெர்க் செய்யற மூளையோட வேலைன்னு மட்டும்தான் நினைச்சேன். என்னை நெருங்கறது, அப்புறம் ப்ரேண்ட் வீட்டுல ஓடி ஒளிஞ்சிக்கறது, எனக்கு ஆள் செட் பண்ணறது, ஒட்டிக்கறது பிறகு வெட்டிக்கறது, ஏசறது அப்புறம் கொஞ்சறது இப்படின்னு என்னை ஆட்டி வச்சப்பலாம் இன்பிரியாரிட்டி காம்ப்ளேக்ஸ்ல என்னைத் தள்ளி நிறுத்தறன்னு மட்டும்தான் நினைச்சேன். அதுக்கேத்த மாதிரி நீ அழகா இருக்க, நான் உனக்குப் பொருத்தம் இல்லன்னு எப்பப்பாரு புலம்பிட்டே இருப்ப. ஆனா மிஷன் மணி தெரிஞ்சதுக்கப்புறம் இன்னும் வேற எதுவோ உன்னைப் போட்டு வாட்டுதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அது என்னான்னு தெரியாம என் மனசு கிடந்து துடிக்குது. ஆரம்ப கட்ட அதிர்ச்சியில கோபமா கத்திட்டேன் கவி, மன்னிச்சிரு. ஹேட் யூன்னு வாய் மட்டும்தாண்டி சொன்னுச்சு! மனசு லவ் யூ லவ் யூன்னு துடிக்குதுடி”

“என்னை வெறுத்து ஒதுக்கிட்டியோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் மணி! செத்துறலாமான்னு இருந்துச்சு”

“பைத்தியம்! செத்துருவேன் கித்துருவேன்னு பேசுன அடிச்சு முகத்தப் பேத்துருவேன்”

“நெஜமாவா மணி? நான் செத்துட்டா ரொம்ப கவலைப்படுவியா?” கண்கள் மின்ன கேட்டாள் கவி.

பட்டென அவள் வாயில் ஒன்று போட்டான் மணி.

“என்னை விட்டு ஓடிப்போனா கூட எங்கயோ ஒரு மூலையில நீ சுவாசிச்சுட்டு இருக்கன்னு நான் வாழ்ந்துருவேன் கவி. சாவு நம்மல பிரிச்சா நான் நடைப்பிணமா ஆகிருவேன். நானா சாவைத் தேடி போக மாட்டேன்! ஆனா அதுவா என்னை தேடி வர வச்சிக்குவேன் கவி”

“சீச்சி லூசு! எதுக்குடா சாவு கீவுன்னு பேசற! அறைஞ்சிருவேன் பாத்துக்கோ!”

“ஆரம்பிச்சது யாருடி?”

“சாரி மணி! இனிமே சாவு பத்திப் பேச மாட்டேன். ஒருத்தரோட இறப்பு மத்தவங்கள எப்படித் தாக்கும்னு எனக்கு நல்லாவேத் தெரியும்” என இன்னும் ஏதோ சொல்ல வந்தவள் இறுக வாயை மூடிக் கொண்டாள்.

“ஃபர்ஸ்ட் நைட்ல சாவப் பத்தி பேசுன அபூர்வ தம்பதி நாமா மட்டும்தான் இருப்போம் லயனஸ்”

மெல்ல புன்னகைத்தாள் கவி. அவளை இழுத்துக் கொண்டு போய் கட்டிலின் கீழே அமர்த்தி இவன் கட்டிலின் மேலே அமர்ந்துக் கொண்டான். அவள் கையில் இருந்த துண்டை வாங்கி இன்னும் ஈரமாக இருந்த அவள் தலையைத் துவட்ட ஆரம்பித்தான் மணி.

“இங்க வந்த நாளுல இருந்து மிஷன் மணிக்கு என்ன காரணம்னு நீயா சொல்லுவன்னு  வேய்ட் பண்ணுறேன் லயனஸ். ஆனா சாரி, சாரின்னு கெஞ்சறியே தவிர, என் கிட்ட எந்த விஷயத்தையும் நீ ஷேர் பண்ணிக்க இன்னும் தயாரா இல்ல”

“அது வந்து மணி..”

“ஷ்ஷ்!! எதுவும் இன்னைக்கு சொல்ல வேணாம் கவி. உன் கிட்ட பேசாம அமைதியா இருந்த இந்த நாட்கள்ல நான் ரொம்பவே யோசிச்சேன் கவி. பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு அப்புறம் என் லவ்வ காட்டுறதுல என்ன அர்த்தம் இருக்கு சொல்லு? உன் பிரச்சனை என்னன்னு தெரியாத போதே, உன்னை அணுசரிச்சு ஆதரிச்சு அன்பு செய்யறது தானே நிஜ காதல்! என் காதல் ஆத்மார்த்தமானது கவி. இத்தனை வருஷமா உன்னை மட்டுமே இந்த நெஞ்சுக்குள்ள வச்சு குடும்பம் நடத்திட்டேன். இனி மேலும் அப்படித்தான் இருப்பேன், என்னை வேணாம்னு நீ விட்டுட்டுப் போனாலும். உனக்கா இந்த மணிய நம்பி சொல்லலாம்னு எப்ப தோணுதோ அப்போ சொல்லுடா. ஐ லவ் யூ லயனஸ் அண்ட் லெட் மீ லவ் யூ!”

துண்டை கட்டிலின் ஓரமாக வைத்தவன் கைகளால் கவியின் கூந்தலை அளைந்தான். இரு கைகளாலும் முடிக் கற்றைகளைக் கொத்தாகப் பற்றி மெல்ல இழுத்தான்.

“ஸ்ஸ்! வலிக்குதுடா மணி!”

“வலிதான் காதலுக்கும் சரி காமத்துக்கும் சரி முதல் படி லயன்ஸ்!” கிசுகிசுப்பாக சொன்னான் மணி.

“அடஅடா! மணி டேய், நீயா பேசியது? எப்படிடா இப்படிலாம் பேசி அசத்தற? உனக்குள்ள இப்படி ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான்னு தெரியாம உலகம் உன்னைத் தப்பா பேசிட்டு இருக்குடா!”

சிரிப்புடன் எழுந்தவன், பெட் அருகில் இருந்த கிண்ணத்தை எடுத்து வந்தான்.

“என் மடில உட்காந்துக்க லயனஸ்!”

மறுபேச்சு பேசாமல் மடியில் அமர்ந்தவள் சிந்தனை வயப்பட்டிருப்பதைப் பார்த்தவன் மெல்லியக் குரலில்,

“லயனஸ்” என அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“என்ன யோசிக்கற?”

“ஒன்னும் இல்ல மணி”

“பொய் சொல்லாதே! உன் மண்டை மூளை சதா எதாச்சும் நினைச்சுட்டே இருக்கும்னு எனக்குத் தெரியும்”

“அதை என்னால தடுக்க முடியாது மணி. ஒரே சிஹயத்துல காண்ட்சன்ரேட் பண்ணவும் முடியாது”

“என் பக்கத்துல இருக்கறப்போ, என்னைத் தவிர வேற எந்த நினைப்பும் இந்த பட்டுத்தலைக்குள்ள இருக்கக் கூடாது. இருக்க விடவும் மாட்டேன்” என்றவன் தன் கையாலேயே பால் பாயாசத்தை ஊட்டினான்.

அவள் அதரங்களில் ஒட்டி இருந்தப் பாலை தன் அதரங்களால் மெல்ல துடைத்து விட்டான். ஷாக் அடித்ததுப் போல சிலிர்த்தவளைப் பார்த்து,

“இப்ப உன் நினைப்புல யார் இருக்கா லயனஸ்?” என கேட்டான்.

“நீ அப்புறம் நேத்து நான் கிரியேட் பண்ண கேமோட ஹீரோ”

“ஓஹோ!”

பாயாசத்தை ஒரு வாய் குடித்தவன், தன் வாய் வழியாகவே அவளுக்குப் புகட்டினான்.

கவி விழி விரிய அவன் முகத்தைப் பார்க்க,

“இப்ப சொல்லு, உன் நினைப்புல யார் இருக்கா லயனஸ்?”

“நீ, நீ மட்டும்தான் இருக்க மணி” ஒரு வித மோன நிலையில் சொன்னாள் கவி. வெற்றிப் புன்னகையுடன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான் மணி.

“நான் கூட நீ விளையாட்டுக்குத்தான் பாயாசம் பத்தி சொல்லுறேன்னு நினைச்சேண்டா. இப்படி நிஜமாகவே செஞ்சு குடுப்பேன்னு நினைக்கல”

“உனக்கு பால் பாயாசம், அதுவும் இந்த நேரத்துல குடுக்கறதுக்கும் ஒரு காரணம் இருக்கு லயனஸ்” என சொல்லி கண் அடித்தான் மணி.

“எதுக்கு? சொல்லு சொல்லு எதுக்கு பாயாசம் அதுவும் இந்த நேரத்துல?” ஆர்வம் தாங்காமல் கேட்டாள் கவி.

“சொல்லுறேன். முதல்ல பாயாசத்துல என்னென்ன தட்டுப்படுதுன்னு சொல்லு”

பாயாசத்தை அப்படியே விழுங்காமல், வாயில் தட்டுப்பட்டதை மென்றுப் பார்த்தாள் கவி.

“சேமியா இருக்கு, பால் இருக்கு, நெய் வாசனை இருக்கு, பாதாம் அண்ட் முந்திரி இருக்கு”

“முக்கியமான ஐட்டம் ஜவ்வரிசிய விட்டுட்டியே மை டார்லிங்” பாயாசத்தில் அள்ளிப் போட்டிருந்த ஜவ்வரிசியை கரண்டியால் எடுத்து அவளுக்கு ஊட்டினான்.

மெல்ல மென்றவள்,

“இதுல என்ன ஸ்பெஷல்?” என கேட்டாள்.

கிண்ணத்தைக் கட்டில் அருகில் இருந்த டேபிளில் வைத்தவன், அவளை இடையோடு அணைத்துக் கொண்டான்.

“ஜவ்வரிசி மனுஷ உடம்புக்கு தேவையான ஆற்றலைக் குடுக்கும் சக்தி வாய்ந்தது கவி. சுறுசுறுப்பா வச்சிருக்கும். அதோட நமக்கு ஏற்படற பதட்டத்தையும் குறைக்க உதவும். அதாவது இன்னிக்கு இப்போ இந்த நொடி, இத்தனை வருஷ காத்திருப்புக்குப் பிறகு சேர போற நமக்கு எந்த பதட்டமும் வரக் கூடாது இல்லையா? அதுக்குத்தான் இந்தப் பாயாசம்! என்னோட பல வருஷ கனவ நனவாக்கும் போது, அதைத் தாங்கிக்க என் லயனஸ்சுக்கு எனர்ஜி வேணுமில்லையா, அதுக்குத்தான் இந்த பாயாசம். பால் மேனி கொண்டவள் பாரம் தாங்க பலம் வேணுமில்லையா, அதுக்குத்தான் இந்தப் பால் பாயாசம்” அவன் சொன்ன ஒவ்வொரு பாயாசத்துக்கும் பாவையவள் பாகாய் உருகினாள்.

பால் பாயாசம் அருந்தி, பாலாடை விலக்கி, பால பாடம் பயில பள்ளியறை நுழைந்த பசுங்கிளிகள் இரண்டும் பகலவன் பார் உலா வந்த பின்பே பள்ளிக் கொண்டன.

மணியுடன் களித்த அந்த மணித்துளிகளில் கவிக்கு மணியைத் தவிர வேறு எந்த எண்ணங்களோ சிந்தனைகளோ வரவில்லை. வராமல் பார்த்துக் கொண்டான் மணி. மணி, மணி, மணி மட்டுமே அந்த ஜீனியசின் சிந்தனையிலும் செயலிலும்.

இருவருக்கும் நாட்கள் வண்ணமயமாக சுழன்றன. மணி அவர்கள் வசிக்கும் இடத்துக்கு சற்று தொலைவில் இருந்த ஜிம்மில் பெர்சனல் இன்ஸ்ட்ரக்டராக பணிக்கு அமர்ந்தான். பார்ட் டைம் ஜாப்தான். கவி எப்பொழுதும் போல வீட்டில் இருந்தே அவள் கேம் தயாரிக்கும் வேலையைப் பார்த்தாள்.

வீட்டையும் சமையலையும் மணி பார்த்துக் கொள்ள, மணியை இவள் பார்த்துக் கொண்டாள். சிறு வயதில் இருந்தே தன் கூட இருந்தவர்களைப் கவனித்துப் பொறுப்பாய் இருந்த மணியை இவள் பொறுப்பாய் கவனித்துக் கொண்டாள். முன்பெல்லாம் நேரம் காலம் தெரியாமல் தூங்குபவள், மணி எழும் நேரம் அடித்துப் பிடித்து எழுந்தாள். அவனிடம் வம்பு செய்து பொழுதை ஆரம்பிப்பவள், அவன் குளிக்க ஹாட் ஷவரைத் திறந்து விடுவது, துண்டு எடுத்துக் கொடுப்பது, போட்டுக் கொள்ள துணிமணிகள் எடுத்து வைப்பது, அவன் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பது, ஷாக்ஸ் போட்டு விடுவது என அவனுக்கு தேவையானதை எல்லாம் செய்தாள்.

தனக்காக கவி செய்யும் இந்த வேலைகளில் மனம் குளிர்ந்துப் போய் விடுவான் மணி. தான் மற்றவர்களுக்கு செய்ததுப் போய், தனக்காக ஒருத்தி செய்வதை அனுபவிப்பது அவனுக்கு அவ்வளவு இன்பமாய் இருந்தது.

அவன் வேலை நேரம் முடியும் முன் ஜிம் வாசலில் போய் காத்திருப்பாள் கவி. அவன் வந்ததும், இருவரும் எங்காவது சாப்பிடப் போவார்கள். சில சமயங்களில் படம் பார்க்கப் போவார்கள். சோம்பேறியாக இருக்கும் நாட்களில் பிஷா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள். வேண்டும் என்றே ஏர்கண்டிஷனரின் குளிரை ஏற்றி, இகுலிபிரியம் ஃபார்முலா படி ஒருத்தருக்கு ஒருத்தர் சூடேற்றிக் கொள்வார்கள்.

எந்தளவுக்கு நெருங்கி இழைந்தார்களோ அந்தளவுக்கு சண்டையும் போட்டார்கள் இருவரும்.

“யார் அவ இன்னிக்கு ஜிம்முக்கு நான் வந்தப்போ உன்னை ஒட்டிக்கிட்டு நின்னவ?”

“யார கேட்கற லயனஸ்?”

“ஓஹோ! பல பேர் உன்னை இப்படி ஒட்டிட்டு நின்னுருக்காளுங்களோ? அதான் ஐயாவுக்கு எவ அவன்னு தெரியலையோ? நான் வீட்டுல இருடா, உன்னை ராஜாவாட்டம் பார்த்துக்கறேன்னு சொல்ல சொல்ல நீ அந்த ஜிம்முக்கு வேலைக்குப் போனப்பவே தெரியும்டா எனக்கு!”

“என்ன தெரியும்?” இவனுக்கும் குரலில் சுதி ஏறி இருந்தது.

“இந்த சுமார் மூஞ்சி கவிய விட்டுட்டு சூப்பர் மூஞ்சி வெள்ளைக்காரியப் பிடிச்சிருவன்னு”

“லூசு மாதிரி பேசாதடி”

“யாருடா லூசு? லயனஸ், லயனஸ்ன்னு கொஞ்சறப்பலாம் இடம், பொருள், ஏவல், பில்லி சூனியம் எதையும் பார்க்காம மணி, மணின்னு இழைஞ்சிட்டு நிக்கறேன்ல நான் லூசுதான்!” கண்ணைக் கசக்குவாள் கவி. உடனே இவனுக்கு உருகிவிடும்.

“என் லயனஸ் குட்டிய தவிர வேற யாரும் என்னை அசைக்க முடியாதுடி! அவ எந்த பிளேனட்டுக்கு அழகியா இருந்தாலும் இந்த மணி என் உலகத்தோட அழகி கவிய தவிர யாரையும் ஓரப்பார்வைக்கூட பார்க்க மாட்டான். இது என் ஜீஜூ மேல சத்தியம் கவி” என கெஞ்சி கொஞ்சி சமாதானப் படுத்தும் வரை சாப்பிடமாட்டாள், தூங்கமாட்டாள், இவனையும் படுத்தி எடுத்து விடுவாள் கவி.

இதற்கிடையில் மணியின் ப்ராஜக்டையும் முடித்து ஜர்னல் பேப்பரையும் சப்மிட் செய்திருந்தார்கள் இருவரும்.

அன்று கவி படம் பார்க்க போகலாம் என சொல்லி இருந்தாள். புதிதாக வந்து ஹவுஸ் ஃபுல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்துக்கு இரவு காட்சி டிக்கேட்தான் கிடைத்தது. இரவில் வெளியே சுற்றுவது பாதுகாப்பு இல்லை என மணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இவள் பிடித்தப் பிடியில் நின்றாள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வது என்பது எல்லோருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். ஆனால் அங்கு வாழ்ந்துப் பார்க்கும் நம் மக்களுக்குத்தான் அதில் இருக்கும் கஸ்ட நஸ்டங்கள் புரியும். எந்த நேரத்தில் வழிபறி நடக்குமோ, எந்த நேரத்தில் எந்த பைத்தியக்காரன் துப்பாக்கியால் சுடுவானோ என பயம் எப்பொழுதும் அவர்கள் நெஞ்சில் அப்பிக் கொண்டிருக்கும்.

பார்கார்னும் கோக்கும் வாங்கிக் கொண்டு திரையரங்குக்குள் நுழைந்தனர் இருவரும்.

நல்ல உறக்கத்தில் இருந்த வெங்கியைப் போன் மணி அடித்து எழுப்பியது. அவர் நெஞ்சை மஞ்சமாக்கி உறங்கிக் கொண்டிருந்த மனைவியை மெல்ல நகர்த்தி தலையணையில் படுக்க வைத்தவர் கை நீட்டி அலைபேசியை எடுத்தார்.

“ஹலோ!”

அந்தப்புறம் என்னவோ சொல்லப்பட்டது.

“வாட்!!!!!!!!!!!!!”

 

(கொட்டும்)