SST —Epi 11

SST —Epi 11

அத்தியாயம் 11

 

இந்தியர்களின் உணவான வடை, அதிரசம் போன்றைவைகள் மலாய்காரர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இப்பொழுது அவர்களே அவற்றை செய்து விற்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். வடை அவர்களால் வடே என அழைக்கப்படுகிறது. இவர்கள் வித்தியாசமாக இறால், நெத்திலி  போன்ற அசைவ ஐட்டங்களை கலந்து வடை செய்வதில் கில்லாடிகள்.

 

பயிற்சி முடிந்து இன்றுதான் முழுநேர வேலையாக மிரு அந்த ஆபிசில் கால் பதித்திருந்தாள். அவளுக்கென்று ஒரு லாப்டாப் வழங்கப்பட்டது மோனிக்காவால்.

“வெல்கம் அகேய்ன் மிரு. இனிமே வேலை பிச்சி எடுக்கும். ஹனிமூன் பீரியட் இஸ் ஓவர்! குடுக்கற ப்ராஜேக்ட கரேக்டா குடுத்த டைம்ல செஞ்சு முடிக்கனும். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கேய்ன் பண்ணதும், நீயேதான் க்ளையண்ட் பார்க்கப் போகனும். அவங்க கூட பேசி என்ன ரிகுவாயர்மெண்ட்ல ப்ராக்ரம் எதிர்ப்பாக்கறாங்கன்னு கரேக்டா புரிஞ்சிட்டு, நீட்டா செஞ்சுக் குடுக்கனும். மத்தது எல்லாம் டீம் லீட் சொல்லிக் கொடுப்பாரு. இந்தா உன் போட்டோ வச்ச எக்சஸ் கார்ட். டெம்ப்ரவரி கார்ட் திருப்பிக் கொடுத்துரு. லாப்டாப்ல பாஸ்வோர்ட் போட்டுக்க. ஆல்வேய்ஸ் க்ளீன் டெஸ்க் பாலிசி ஃபோலோ பண்ணு”

“ஓகே மோனிக்கா”

“க்ளின் டேஸ்க் போலிசினா என்ன மிரு?”

“க்ளையண்ட் டிடேய்ல்ஸ் அப்புறம் நிறுவனம் சம்பந்தப்பட்ட எதையும் கண்காணிப்பில்லாம அப்படியே விட்டுப் போயிட கூடாது. எப்பவும் பூட்டி வைக்கனும். பாத்ரூம் போனா கூட லாப்டாப லாக் பண்ணிட்டு மேசைய கிளினா வச்சிட்டுப் போகனும்”

“அட்டா கேர்ள்! பாஸ் க்ளீன் டேஸ்க் பாலிஸிய ரொம்ப ஸ்ட்ரீக்டா ஃபோல்லோ பண்ணுவார். அதான் ரிமைண்டர் கொடுத்தேன்! இனிமே நீ இந்த நிறுவனத்தோட ஸ்டாப். மாத்தவங்களுக்கு கிடைக்கற எல்லா பெனெபிட்ஸும் இனிமே உனக்கும் கிடைக்கும். இப்போ நீ உன் சீட்டுக்குப் போகலாம்” என அனுப்பி வைத்தாள்.

அவள் இடத்தில் அமர்ந்து லாப்டாப்பைத் திறந்த மிரு, முதலில் பாஸ்வோர்ட் செட் செய்தாள். எழுத்துக்களும் நம்பரும் சேர்த்துக் கேட்டது சிஸ்டம். ரதி143 என ஆங்கிலத்தில் பாஸ்வோர்டை செட் செய்தவள் மனமோ குருவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.

‘க்ளின் டெஸ்க் மட்டும் ஃபோல்லோ பண்ணா போதுமா உங்க பாஸ்? அவன் மண்டையும் மண்டைகுள்ள இருக்கற மைண்டும் க்ளினா இல்லையேமா மோனிக்கா! அப்படி கிளினா இருந்துருந்தா அன்னிக்கு மால்ல என்னைப் பார்த்து அப்படி கேட்டிருப்பானா?’

அன்று சட்டை இல்லாமல் அவனைப் பார்த்த ஷாக்கில் இவள் வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தன.

“அது வந்து..”

“என்ன வந்து போயி? படபடன்னு பேசற மிருவோட நாக்க நரி கொண்டுப் போயிருச்சோ? அந்நிய ஆம்பளையோட சிக்ஸ் பேக்ஸ்ச உத்துப் பார்க்கறது இண்டீசண்ட்னு தெரியாது? இதே நான் செஞ்சதுக்கு கபோதின்னு திட்டுனே, இப்போ நான் உன்னை என்ன சொல்லித் திட்டட்டும்? பொண்ணுக்கு ஒரு நியாயம் ஆணுக்கு ஒரு நியாயமா?”

‘ஐயயோ, இவன் எத்தனை சாரி சொன்னாலும் அதை மறக்க மாட்டான் போலிருக்கே! தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறானே! மிடிலடா!’

“ஹலோ பாஸ், கொஞ்சம் நிறுத்துறீங்களா? நாங்க ஹிரித்திக் ரோஷன்ல இருந்து பரோட்டா சூரி வச்சிருக்கற சிக்ஸ் பேக்ஸ் வரைக்கும் பார்த்துட்டோம். உங்களோட சிக்ஸ் பேக்ஸ்ல குற்றம் கண்டேன்! அதனாலத்தான் உத்துப் பார்த்துட்டு இருந்தேன்” என நக்கீரர் வசனத்தை எடுத்து விட்டாள் மிரு.

“குற்றம் கண்டியா?”

“யெஸ் பாஸ்! சிக்ஸ் பேக்ஸ்னு சொன்னீங்களே, அதுல நாலு பேக்ஸ் குறையுதேன்னு பார்த்தேன். அவ்ளோதான்! இதுக்கு இவ்ளோ சீன்லாம் தேவையில்ல!”

‘நாலு பேக்ஸ் குறையுதா? கொழுப்ப பாரேன்!’

“மை காட்! கணக்குல நீ வீக்னு இப்போத்தானே தெரியுது. முன்னமே தெரிஞ்சிருந்தா வேலை குடுத்துருக்க மாட்டேன்! பரவாயில்ல விடு மிரு. சின்ன புள்ளைங்க தொட்டுப் பிடிச்சு எண்ணிப் பார்க்கற மாதிரி, தொட்டு தொட்டு ஒரு ஒரு பேக்ஸ்சா எண்ணிப் பார்க்கறியா?” என கேட்டவன் கிட்டே நெருங்கவும்.

“கணே, சீக்கிரம் வாடா” என பின்னால் நகர்ந்துக் கொண்டே சத்தமாக கத்தினாள் மிரு.

“அந்த பயம் இருக்கட்டும்!” என்று சிரித்த குரு வரிசையாக இருந்த ட்ரையல் அறைகளில் ஒன்றில் நுழைந்துக் கொண்டான்.

“ஏன்கா கத்துற? நாலு சட்டை உள்ள எடுத்துட்டுப் போனேன்! எல்லாத்தையும் போட்டுப் பார்க்கறது இல்லையா?” என சிடுசிடுத்த கணே கடைசியாக போட்டிருந்த சட்டையில் மிருவைப் போட்டோ எடுக்க சொன்னான்.

அந்த நேரத்தில் வாங்க வந்திருந்த சட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் குரு. இவர்கள் அருகில் வந்தவன்,

“ஹாய் மிரு! வாட் எ ப்ளசண்ட் சர்ப்ரைஸ்! யாரிது?” என இப்பொழுதுதான் அவளைப் பார்ப்பது போல பேசினான் குரு.

‘உலகமகா நடிப்புடா சாமி’

“இது என்னோட தம்பி கணேஷ்! கணே இது என்னோட பாஸ் மிஸ்டர் குரு”

“ஓ உன் ஆபீஸ் ச்சேகுவா? ஹலோ சார்! அக்கா உங்களப் பத்தி ரொம்ப நல்லா சொல்லிருக்கா” என நல்லாவை அழுத்தி சொன்னான்.

‘அப்படி என்ன சொன்னான்னு தெரியலையே! இவன் ஒரு மார்க்கமா பார்த்து வைக்கறான்!’

“ஓ! நைஸ் டூ மீட் யூ கணேஷ்!” என்றவன் பொதுவாக அவனிடம் சில வார்த்தைகள் பேசினான். பிறகு மிருவிடம் ஒரு தலை அசைப்புடன் கிளம்பி விட்டான்.

அன்றிலிருந்து குருவை எங்குப் பார்த்தாலும் பம்மினாள் மிரு. விஷ் செய்வது கூட இல்லை. அவனை தேவையில்லாமல் வம்பிழுத்து எதற்கு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான். அதோடு முதல் சந்திப்பை அவன் மறக்காமல் அப்படியே மனதில் வைத்திருந்து அவ்வப்பொழுது இவளை வார்த்தையால் வாட்டுவது வேறு இவளுக்குப் பிடிக்கவில்லை.

இவள் குணமே ஒரு தடவை மனதில் உள்ளதை வார்த்தைகளால் வெளியேற்றி விட்டால், அதற்கு மேல் சமாதானமாகி விடுவாள். அதையேப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பது கிடையாது. குருவோ இந்த விஷயத்தில் அவளுக்கு நேரெதிர். தேவையில்லாமல் அவனிடம் நட்பு பாராட்டி மனதை ரணமாக்கிக் கொள்ள வேண்டாம் என அவன் திசைக்கே ஒரு கும்பிடு போட்டாள் மிரு. அடிக்கடி அவன் வெளியூர் போய்விடுவதும், கோலாலம்பூரில் இருந்தாலும் கிளையண்ட் மீட்டிங் என சுற்றிக் கொண்டு இருப்பதும் இவளுக்கு ஏதுவாகப் போயிற்று. இன்று கூட அவன் அலுவலகம் வரவில்லை.

டீம் லீட் ரீனாவின் ப்ராஜக்டில் பாதி வேலையை மிருவுக்குப் பிரித்துக் கொடுத்தான். இவள் இடத்தில் அமர்ந்தவள், புதிதாக தனக்கு செட் செய்யப்பட்டிருந்த ஈமேயிலைத் திறந்தாள். அவள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன, எப்படி செய்ய வேண்டும், டேட் லைன் என்ன, என்பன மெயிலாக அனுப்பி இருந்தான் டீம் லீட். குருவையும் ரீனாவையும் சீசீ செய்திருந்தான் அவன்.

அட்டாச்மெண்ட்களைத் திறந்து என்ன செய்ய வேண்டும் என படித்துப் பார்த்தாள் மிரு. பின் ரீனாவிடம் ஏற்கனவே கற்றிருந்ததைப் போல ப்ராகிராமை கோடிங் செய்ய ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் சென்றிருக்கும். ஈமெயில் வந்த நோட்டிபிகேஷன் சத்ததில் அதைத் திறந்துப் பார்த்தாள் மிரு. டீம் லீட் அனுப்பி இருந்த ஈமெயிலை கொண்டு இவளுக்கு மட்டும் ரிப்ளை செய்திருந்தான் குரு.

“முழு நேர வேலையைத் தொடங்கியதுக்கு வாழ்த்துகள் மிரு. வேலைக்கு எடுத்த என்னைப் பெருமைப் படுத்தற அளவுக்கு நல்லா பெர்போர்ம் பண்ணனும். பெஸ்ட் ஆப் லக்.” என அனுப்பி இருந்தான்.

‘பார்டா! எந்த ஊருல, என்ன வேலையில மாட்டிட்டு இருக்கான்னு தெரியல. இருந்தும் பெஸ்ட் ஆப் லக் சொல்லுறானே! என் பாஸ் கிரேட்டுப்பா’ இவ்வளவு நேரம் திட்டியதை மறந்து விட்டுப் பாராட்டுப் பத்திரம் வாசித்தாள் மிரு.

“தேங்க் யூ பாஸ்” என ரிப்ளையைத் தட்டி விட்டவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். ஓரளவுக்கு  கோடிங் வந்தது. வராவிட்டாலும் ரீனாவைத் தொல்லை செய்து வர வைத்துக் கொண்டாள்.

உள்ளுக்குள் இவர்களுக்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ளும் மெசேஞ்சர் பீப் செய்து மேசேஜ் வந்ததைத் தெரிவித்தது.

‘யாருடா நமக்கு மேசேஜ் போடறாங்க?’ என திறந்துப் பார்த்தாள்.

“லன்ச் ஆன் மீ” என தட்டி விட்டிருந்தாள் ரீனா.

“ஓகே!” என பதில் அனுப்பினாள் மிரு.

அவளுக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது. இப்படி தானும் ஓர் ஆபிசில் அமர்ந்து வேலைப் பார்ப்போமா என ஏங்கி இருந்தவளுக்கு அழகான ஆபிஸ், அவளுக்கே அவளுக்கான கியூபிக்கள், அக்சேஸ் கார்ட், மெடிக்கல் இன்சுரண்ஸ், லொட்டு லொசுக்குக்கெல்லாம் கிளேய்ம் செய்யும் வசதி (எல்லா கிளேய்மும் கிளையண்ட் சம்பந்தப்பட்டதுதான். அவர்களைப் பார்க்க போகும் போக்குவரத்து செலவுகள், அவர்களை சாப்பிட அழைத்து சென்றால் அந்த செலவுகள்) என பலதரப்பட்ட வசதிகளைக் கொடுத்த இந்த நிறுவனம் அவளுக்கு வரப்பிரசாதமாகவே தோன்றியது.

‘எவ்ளோ வேணா திட்டிக்கடா பாஸ்! இங்க வேலை செய்யற பந்தாவுக்கே உன் திட்டையெல்லாம் தாங்கிக்குவா இந்த மிரு!’

லன்ச் டைம்முக்கு மிருவைக் கைப்பற்றி பேண்ட்ரீக்கு அழைத்துப் போனாள் ரீனா. அவர்கள் பெருநாள் முடிந்து இன்றுதான் வேலைக்கு வந்திருந்தாள் அவள்.

“மிரு இன்னைக்கு என்னோட சமையல் தான் உனக்கு. பெருநாள் பலகாரமும் கொண்டு வந்துருக்கேன். சாப்பிடு! இதை ஒவன்ல சூடு காட்டி எடுத்துட்டு வரேன்” என டப்பேர்வர்களைத் திறந்து வைத்தாள்.

“இவ்வளோ சாப்பாடா? நாம ரெண்டு பேரும் முடிச்சுருவமா?” என சந்தேகமாகக் கேட்டாள் மிரு.

“சாப்பாட சூடு காட்டற வாசத்துக்கு சில பல பெருச்சாளிங்க இந்தப் பக்கம் வருங்க பாரேன்! நீ மட்டும் சட்டுப் புட்டுன்னு ப்ளேட்டுல போட்டுட்டு உட்கார்ந்துரு. இல்லைனா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள காணா போயிடும்”

அவள் சொன்னதுதான் சரி என்பது போல, கொஞ்ச நேரத்தில் பல தலைகள் அங்கே எட்டிப் பார்த்தன.

‘நான் சொல்லல!’ என்பதைப் போல கண்ணைக் காட்டினாள் ரீனா. மிருவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அந்த பெருச்சாளிகளில் தனது டீம் லீட்டும் இருப்பதைப் பார்த்து கஸ்டப்பட்டு சிரிப்பை அடக்கினாள் மிரு. எல்லோரும் சிரித்துப் பேசியபடியே பகிர்ந்து உண்டார்கள்.

“நாளைக்கு மூவி டேட்டுக்கு யாரெல்லாம் வரீங்க?” என பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன மூவி டேட்?” என ரீனாவைக் கேட்டாள் மிரு.

“உனக்கு இன்னிக்குத்தானே இமெயில் எல்லாம் செட் பண்ணி குடுத்தாங்க, அதனால உனக்கு விஷயம் தெரியல! இந்த மூவி டேட் பத்தி போன வாரமே மெமோ வந்துருச்சு. ஆறு மாசத்துக்கு ஒரு முறை மூவீ டேட் ஏற்பாடு செய்வாங்க நம்ம நிறுவனத்துல. முழுசா ஒரு ஹால் புக் பண்ணுவாங்க நம்ம எச்.ஆர். இங்க வேலை செய்யறவங்க ஒரு ஆள கூட கூட்டிட்டு வரலாம். ப்ரேண்ட்ஸ், பேமிலினு கணக்கு இல்ல. நாளைக்கு வா மிரு என் ஹஸ்பென்ட இண்ட்ரோ குடுக்கறேன்” என்றாள் ரீனா.

“நானும் வரலாமா?” என கேட்டாள் மிரு.

அப்பொழுதுதான் உள்ளே வந்த மோனிக்கா,

“ஆப் கோர்ஸ் மிரு! யூ ஆர் அவர் ஸ்டாப். நான் அந்த ஈமேயில உனக்கு பார்வார்ட் பண்ணுறேன்.” என சொன்னாள்.

அதற்குள் லன்ச் ஹவரும் முடிந்திருக்க, எல்லோரும் கலைந்து சென்றார்கள். மிருவும் ரீனாவும் டப்பவேர்களைக் கழுவி அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு வெளியேறினார்கள்.

அவேஞ்சர்ஸ் புதிதாக வந்தப் படத்துக்குத்தான் மூவீ டேட் புக்காகி இருந்தது. முதலில் போகலாமா வேண்டாமா என யோசித்தவள், கணேவுக்குப் பிடிக்கும், அவனை அழைத்து செல்லலாம் என முடிவெடுத்தாள். எப்படியும் இரவு பத்துக்குள் திரும்பி விடலாம். அம்மாவும் அது வரை தனியாக இருந்துக் கொள்வார் என திட்டமிட்டாள் மிரு.

கணே சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் ஆசையாக பார்ப்பான். தங்கள் ப்ளாட்டுக்கு அருகே இருந்த சிடி கடையில் கள்ள விசிடி ஒன்று நான்கு வெள்ளிக்கு விற்பார்கள். அதே மூன்று வாங்கினால் பத்து வெள்ளிதான். அவன் ஆங்கில படங்களை அப்படித்தான் வாங்கி வருவான். சில சமயம் தலை தெரியும், சில சமயம் கால் தெரியும், பல சமயங்களில் குரல் கேட்காமல் விட்டு விட்டு வரும். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பொறுமையாக பார்ப்பான் அவன். ரதி நன்றாக இருந்த வரை தமிழ் படங்களுக்குப் தியேட்டருக்குப் போயிருக்கிறார்கள். அதன் பிறகு இப்படித்தான் பிழைப்பு ஓடியது.

அக்கா தம்பியின் மூவி டைம் அம்மா படுத்தவுடன் தான் ஆரம்பிக்கும். பதினைந்து நிமிடங்கள் கண்ணைக் கஸ்டப்பட்டு பிரித்து வைத்துப் பார்க்கும் மிரு அதன் பிறகு உறங்கிவிடுவாள். ஓர் அரை மணி நேரம் கழித்து எழுந்து, என்ன ஆனது என கணேவைப் போட்டு வாட்டுவாள். அவன் பொறுமையாக என்ன நடந்தது என சொல்லுவான். கேட்டுவிட்டு மறுபடியும் தூங்கி விடுவாள். அதற்குப் பிறகு படம் முடிந்தவுடன் தான் மீண்டும் எழுவாள். மறுபடியும் இவள் வாயைத் திறப்பதற்குள் டீவியை அடைத்து விட்டு கபால் என கவுந்து விடுவான் கணே.

அதனால்தான் தம்பியை அழைத்துப் போக முடிவெடுத்தாள் மிரு. வேலை முடிந்துதான் மூவீ டேட் ஆரம்பிக்கும். அதுவும் அவர்கள் ஆபீசின் பக்கத்து பில்டிங்கில் இருந்த மாலின் தியேட்டருக்குத்தான் போகிறார்கள்.

அன்று மாலை ஐந்து மணிக்கு மேல் கணேவை ரயில் எடுத்து அவள் வேலை இடத்துக்கு வர சொல்லி விட்டு வேலைக்கு வந்திருந்தாள் மிரு. வேலை நேரம் எப்போழுதும் போல ரணகளமாகப் போனது மிருவுக்கு. மண்டை வலிக்க கோடிங் அடித்தாள். தப்பும் தவறுமாக அவுட்புட் காட்டியது. மீண்டும் செக் செய்து, மீண்டும் சரி செய்து என பொழுது அமோகமாகப் போனது அவளுக்கு.

ஓரளவு வேலையை முடித்தவள், ரீனாவுடன் பக்கத்து மாலுக்குக் கிளம்பினாள்.

“மூஞ்ச கழுவி கொஞ்சம் மேக்காப் போட்டுக்க மிரு”

“எதுக்கு? தியேட்டர் இருட்டுல என்ன தெரிய போகுது? இதுவே போதும். நீ போய் பெயிண்ட் அடிச்சிட்டு வா முகத்துக்கு. நான் வெயிட் பண்ணறேன்”

இவர்கள் தியேட்டர் வாயிலை அடைந்தப் போது ரீனாவின் கணவனும் கணேவும் வந்திருந்தார்கள். அவர்களுடன் வேலை செய்யும் மற்றவர்களும் வந்திருந்தார்கள். பரஸ்பர அறிமுகம் செய்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் கூப்பன் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க, தாங்களே போய் பாப்கார்ன்னும் பேப்சியும் பெற்றுக் கொண்டார்கள்.

ரீனா மட்டும் சுற்றி முற்றி பார்த்தப்படி இருந்தாள்.

“யார தேடுற? அதான் வீட்டுக்காரு பக்கத்துலயே இருக்காறே!”

இவள் காதருகே வந்தவள் மெல்லிய குரலில்,

“பாஸ் வந்துருக்காறான்னு பார்க்கறேன்” என்றாள்.

“அவர் தான் எங்கயோ வெளியூர் போயிருக்காரு போல! அவர ஏன் இவ்வளவு ஆவலா தேடுற?” என கேட்டாள் மிரு.

“அவர யாரு தேடுனா! ஒவ்வொரு மூவீ டேட்டுக்கும் வேற வேற கேர்ள்ப்ரேண்ட் கூட்டிட்டு வருவாரு நம்ம பாஸ். எல்லாம் செம்ம அழகா இருப்பாங்க. அதப் பத்திதான் அடுத்த ஒரு வாரத்துக்கு நாங்க லேடிஸ்லாம் கோஷீப் பண்ணுவோம். அதான் இந்த தடவ யாருன்னு பார்க்கறேன். அதோட ஹீ லேண்டேட் டுடே. கண்டிப்பா வருவாரு மிரு.”

‘ஓ, அவ்வளவு பெரிய அப்பாடக்காரா நம்ம பாஸ்! பார்டா’ என சிரிப்புடன் நினைத்துக் கொண்டாள் மிரு.

இவர்கள் எல்லோரும் உள்ளே நுழைந்து இடம் தேடி அமர்ந்தார்கள். மிருவும் ரீனாவும் பக்கமாக அமர்ந்துக் கொண்டர்கள். மிருவின் வலது புறம் ரீனா இருக்க, இடது புறம் கணே அமர்ந்திருந்தான். லைட் இன்னும் அடைக்கப்படவில்லை. அதற்குள் விளம்பரங்கள் ஆரம்பித்திருந்தன. திடீரென ரீனா மிருவின் கையை சுரண்டினாள்.

“என்ன?”

“மெதுவா திரும்பிப் பாரு! பாஸ் வராரு. கையோட ஒரு பொண்ணு. பஞ்சாபியா, வெள்ளைகாரியா, சீனத்தியானே தெரியல. அப்படி ஒரு கலரு.” என சிலாகித்தாள்.

மிருவுக்கும் ஆர்வம் பொங்க, மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

மெல்லிய வெளிச்சத்தில் குருவின் பக்கம் நடந்து வந்த அந்தப் பெண் அழகாக ஜொலித்தாள். வாவ் என மனதில் சொல்லிக் கொண்டாள் மிரு. மீண்டும் முன்னே திரும்புவதற்குள் அவள் பார்வை குருவை உரசிப் போனது.

அவன் அவளையேத்தான் பார்த்திருந்தான். இவள் பார்வை அவனை மோதவும் மெல்லிய சிரிப்பொன்றை சிந்தினான் குரு. இவளோ மலர்ந்து சிரித்தாள் அதோடு சைகையால் உன் கேர்ப்ரேண்ட் ரொம்ப அழகு என காட்டிவிட்டு முன்னே திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.

அவர்கள் இவள் சீட்டின் பின்னால் தான் அமர்ந்தார்கள். குருவுடன் வந்த பெண் மெல்லிய குரலில் பேசும் சத்தம் மட்டுமே கேட்டது. குருவின் குரல் இவளுக்கு கேட்கவே இல்லை. எப்பொழுதும் போல படம் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் தாக்குப் பிடித்தவள், பாப்கார்ன் முடிந்ததும் கணேவின் தோளில் தலை சாய்த்துத் தூங்க ஆரம்பித்து விட்டாள்.

தன் தம்பியின் தோளை தலையணையாக பயன்படுத்தி உறங்கும் மிருவையே வைத்தக் கண் வாங்காமல் படம் முடியும் வரைப் பார்த்திருந்தான் குரு.

 

(தவிப்பான்)

error: Content is protected !!