SST– EPI 16
SST– EPI 16
அத்தியாயம் 16
தைப்பூசம் மலேசியா வாழ் இந்தியர்களால் விசேஷமாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாளாகும். எல்லா மாநிலங்களுக்கும் இந்த நாளன்று விடுமுறை கிடையாது. முருகன் திருத்தலம் கொண்ட சில மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை கொடுக்கப்படுகிறது. பத்துமலை(சிலாங்கூர்), கல்லுமலை(பேரா), தண்ணீர்மலை(பினாங்கு) ஆகியவவை அதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
“என்னம்மா ஒரு மாதிரியா இருக்கீங்க?” என கேட்டான் ஹரி.
“எனக்கு என்ன? நான் நல்லாத்தான் இருக்கேன்!” குரல் சாதாரணமாக வந்தாலும் ஆனந்தியின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.
“மேனு சாப்பிடக் கூப்பிட்டாளாம், காது கேட்காத மாதிரி உட்கார்ந்திருக்கீங்கன்னு சொன்னா!”
“ஏதோ யோசனைடா!”
“டைம் டேபிள் போட்டு கரேக்டான டைம்ல சாப்பிடுவீங்க, கரேக்டான டைம்ல தூங்குவீங்க! இப்படி சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம உட்கார்ந்திருந்தா என்னன்னு நினைக்கம்மா? குரு அண்ணா ஞாபகமா இருக்கா?”
“என் பிள்ளைங்கள தவிர நான் வேற யாரடா நினைச்சுட்டு இருக்கப் போறேன்!”
‘பிள்ளைங்கன்னு சொல்லாம பெரிய பிள்ளைன்னு மட்டும் சொல்லுங்க!’ ஹரியால் மனதில் மட்டும்தான் அதை நினைக்க முடியும். வெளியே சொல்லி ஆனந்தியிடம் வாங்கிக் கட்ட அவனுக்கு என்ன பைத்தியமா!
“அண்ணா தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டானே! நீங்களும் பொண்ணெல்லாம் பாத்து வச்சிட்டீங்க. நானும் பிரஷாவும் சேர்ந்து ஜே ஜேன்னு அண்ணா கல்யாணத்த சிறப்பா செஞ்சிற மாட்டோமா! கவலைய விடுங்க கண்ணீரைத் தொடைங்கம்மா”
“உனக்கு தெரியாதது இல்லடா ஹரி. உங்கப்பா இறந்தப்போ அவனுக்கு இருபது வயசுதான். அது வரைக்கும் ப்ரேண்ட்ஸ், படிப்பு, ஊர் சுத்தறது, திருட்டு தம்னு ஜாலியா சுத்திட்டு இருந்தவன் உங்கண்ணா! உன் அப்பாவும் ப்ரேண்ட் மாதிரிதான் நடத்துவாரு அவன. குருவோட கேர் ஃப்ரீ லைப் எல்லாம் நம்மள புரட்டிப் போட்ட அந்த கருப்பு நாள் வரைக்கும்தான்” தொண்டையை செருமி அழுகையை அடக்கினார் ஆனந்தி. மகன் முன்னே கூட அழுது அவரின் பலவீனத்தை காட்ட விருப்பப்படவில்லை.
தான் நெருங்கி ஆறுதல் படுத்துவது அவருக்குப் பிடிக்காது என அறிந்திருந்த ஹரி அமைதியாக அமர்ந்திருந்தான். அவரே மீண்டும் பேசினார்.
“அப்பாவோட உயிரற்ற உடலை வீட்டுக்கு கொண்டு வந்தப்போ, அவர கட்டிக்கிட்டு வாய் விட்டு அழுதான். அது தான் அவன் அழுது நான் கடைசியாப் பார்த்தது. ஆட்டம் பாட்டம் எல்லாத்தையும் விட்டுட்டாண்டா அதுக்கப்புறம். படிச்சுக்கிட்டே கார் பிஸ்னசையும் பார்த்தான். உங்களையும் கரை ஏத்துனான். நம்ம முகத்துல சிரிப்ப வர வச்ச என் புள்ள இறுகிப் போய் நின்னுட்டான். அதனால தான் பிஸ்னசை உன் கிட்ட குடுத்துட்டு தன் கனவ நோக்கிப் போறேன்னு சொன்னப்போ நம்ம கூட்டுல இருந்து அவன சுதந்திரமா பறக்க விட்டுட்டேன். அப்பயாவது கண்ணுல பழைய மின்னல் வருதான்னு பார்த்தேன். அது மட்டும் திரும்பவே இல்லைடா ஹரி! கல்யாணத்தைத் தள்ளிப் போட்டான், சரின்னு விட்டேன். கேர்ள்ப்ரேண்ட்ஸ் இருக்குன்னு தெரியும், ஓகேசியனலா ட்ரிங்க் பண்ணறான்னும் தெரியும். தோளுக்கு மேல வளந்த புள்ளைய கண்டிக்க முடியுமா சொல்லு? ஜாடை மாடையா நானும் சொல்லிட்டு தான் வரேன். பிஸ்னஸ் நல்லா போகுது, அவன் இஸ்டப்படி தான் வாழறான் ஆனா சந்தோஷமா இருக்கானான்னு கேட்டா எனக்கு என்னமோ இல்லைன்னுதாண்டா தோணுது. எது அவன சந்தோஷப்படுத்தும், என்னத்தான் அவனோட தேடல்னு எனக்கு இன்னும் புரியலடா” பெருமூச்சு விட்டார் ஆனந்தி.
“நீங்க தேவையில்லாம கவலைப்படறீங்கம்மா! அண்ணா சந்தோஷமா தான் இருக்கான். பொண்டாட்டி டார்ச்சர், பிள்ளைக்குட்டி குடைச்சல் இதெல்லாம் இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி இருக்கான். அவன பார்த்து கண்ணுல மின்னல் இல்ல, தலையில பின்னல் இல்லைன்னு கவலைப்பட்டுட்டு இருக்கீங்க” என சொல்லியவன் ப்ரீசாகி நின்றான். அவன் மனைவி மேனகா முறைத்தவாறே அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்திருந்தாள்.
“அத்தை, சாப்பாடு ஹாட் பேக்ல இருக்கு. பேபிமா தூக்கத்துக்கு அடம் பண்ணுறா. அதாவது குடைச்சல் பண்ணுறா! நான் போய் தூங்க வைக்கிறேன். நீங்க போட்டு சாப்பிடுங்க அத்தை” என சொல்லியவள் ஹரியைத் திரும்பிக் கூட பார்க்காமல் போய் விட்டாள்.
“போய்ட்டாடா உன் பொண்டாட்டி, அதிர்ச்சியில இருந்து வெளிய வா! பகல்ல பக்கம் பாத்து பேசு, ராவுல அதுவும் பேசாதன்னு உன்ன மாதிரி ஆளுங்களுக்குத் தான் சொல்லி வச்சிருக்காங்க. போ, போ! கால்ல விழுந்தாவது அவள சமாதானப்படுத்து!” என கிண்டலாக சிரித்தார் ஆனந்தி.
“ஏன்மா ஏன்? சோகமா இருக்கீங்களேன்னு நான் என்னமோ பேச போய் இப்போ என் வைப்பு முறுக்கிட்டுப் போயிட்டாளேமா! இனி ஓன் வீக் என் லைப்பு நயாகரால நீந்தற மாதிரி, பாலைவனத்துல நடக்கற மாதிரி, எரிமலையில குதிக்கற மாதிரி ரணகளமா போகுமேம்மா!” விட்டால் அழுது விடுபவன் போல புலம்பினான் ஹரி.
“அதுதாண்டா கல்யாண லைப்போட சுவாரசியமே! தினம் கொஞ்சிக்கிட்டே இருக்க முடியுமா? அடிக்கடி அடிதடி, முகத்திருப்பல், முறைப்பு இப்படி முட்டிக்கிட்டாத்தான் நல்லாருக்கும். இல்லைன்னா வாழ்க்கை உப்பு சப்பு இல்லாம போயிடும்டா!”
“இந்த உப்பு சப்புலாம் உங்க பெரிய மகன் கல்யாணம் பண்ணுவாருல்ல அப்போ சொல்லிக் குடுங்க. இப்ப என்னை ஆள விடுங்க. உப்புவாம் சப்புவாம்! இப்போ ரூமுக்குள்ள போனதும் அப்புவாளே, அதை யாரு வாங்கறது!” என கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள்ளேயே முனகியபடி போனான் ஹரி.
பெரிய மகனுக்கு சிந்தியாவின் போட்டோவையும், அவளின் போன் நம்பரையும் அனுப்பி பல நாட்கள் ஆகியிருந்தன. வெறும்
“கே(K)! நோட்டேட் மா” என பதில் அனுப்பி இருந்த மகனை நினைத்துத்தான் இவர் அப்செட்டாக அமர்ந்திருந்தார். இன்றுவரை அவளுடன் பேசினானா, பழகினானா என கேட்க போன் செய்யும் போதெல்லாம் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தப்படி இருந்தான் குரு. சொந்த திருமணத்தில் கூட அக்கறை காட்டாமல், வேலை வேலை என இருக்கும் தன் ஆசை மகன், சின்னவன் ஹரியைப் போல கல்யாண பந்தத்தில் சிக்குண்டு சண்டையும் சமாதானமுமாக சிறப்புடன் வாழ வேண்டும் என்பதுதானே அவரின் விருப்பம்.
“கல்லுமலை முருகா! என் குருப்பாவ எப்போதும் நல்ல ஆரோக்கியத்தோடும், சந்தோஷத்தோடும் வச்சிருப்பா! அவனுக்கு நல்லபடி கல்யாணம் முடிஞ்சா நான் மொட்டைப் போட்டு பால் குடம் எடுக்கறேன்பா” என மனமுருக வேண்டிக் கொண்டார் ஆனந்தி. கேட்டதைக் கொடுப்பாரா முருகன்?
இங்கே மிருவோ தம்பியிடமும் அம்மாவிடமும் மலாக்கா டீம் போண்டிங் பற்றி பேசினாள்.
“போய்ட்டு வா மிரும்மா! ஒரு அம்மாவா நானும் எங்கயும் உங்கள கூட்டிப் போனது இல்ல. வீட்டுக்குள்ளயே வச்சு வளத்துட்டேன்! ஆபிசுல வேலை விஷயமா கூப்பிட்டா போய் தானே ஆவனும். அப்டியே சுத்தியும் பாத்துட்டு வாம்மா!” என்றார் ரதி.
“ஆமாக்கா, போயிட்டு வா! பக்கத்துல இருக்கற மலாக்காவுக்கு நாம போனது இல்லைன்னு சொன்னா ஃபுல் மலேசியாவே நம்மள கைக்கொட்டி சிரிக்கும். இப்போ கிடைச்சிருக்கு சான்ஸ், கப்புன்னு புடிச்சுக்கோ!”
“நீயும் அம்மாவும் எப்படிடா தனியா?”
“யக்கோ! ஒரு ராத்திரிக்குள்ள எங்கள பூதம் தூக்கிறாது! சொல்லப் போனா உன் குறட்டை இல்லாம நானும் அம்மாவும் நிம்மதியா தூங்குவோம்! நான் அம்மாவ பாத்துப்பேன்கா. லீவ் நாளு தானே! வெளிய எங்கயும் சுத்த போக மாட்டேன்! ஓகேவா?”
“ஹ்ம்ம் சரிடா!”
அரை மனதாக செல்ல முடிவெடுத்தாள் மிரு. இமெயிலையும் வருகிறேன் என ரிப்ளை செய்திருந்தாள்.
அதற்கிடையில் ஒரு வாரம் ஆஸ்திரேலியா சென்று வந்திருந்தான் குரு. அன்று ஆபிசில் எல்லோருக்கும் குவாலா பேர்(koala bear) கீ செயினும் சாக்லேட்டும் அவன் கையாலேயே கொடுத்தான் அவன். மிருவிடம் கொடுக்கும் போது மட்டும் அவன் கண்கள் எதிர்ப்பார்ப்புடன் மிளிர்ந்தன. அவள் குவாலாவில் ஹார்ட் வைத்து ஐ லவ் யூ என எழுதி இருந்தது. அவள் கேள்வியாகப் பார்க்க,
“என்ன?” என கேட்டான் குரு.
“இதுல ஐ லவ் யூ போட்டுருக்கு. எனக்கு வேணாம் பாஸ்!” என சொல்லியவள் அதை திருப்பி அவனிடமே கொடுத்தாள்.
“நான் ஐ லவ் யூ போட்ட பொம்மை குடுத்தா தப்பு! அதே ஐ லவ் யூவ நீ எனக்குத் திருப்பி குடுத்தா மட்டும் சரியா?” என கேட்டான் குரு.
பட்டென நீட்டிய கீ செயினை அவளே வைத்துக் கொண்டாள் மிரு.
குரு புன்னகையுடன்,
“உனக்கு மட்டும் குடுத்தாத்தான் தப்பு மிரு! எல்லோருக்கும் இதை தானே குடுத்தேன். அவங்க எல்லாம் வாங்கிக்கிட்டாங்க! நீ மட்டும் எதுக்கு எகிறி குதிக்கற?” என கேட்டான்.
“ஓ எல்லோருக்கும் ஐ லவ் யூவா! அப்போ ஓக்கே!” அசடு வழிந்தாள் மிரு.
அவன் ஒன்றும் பேசாமல் தனது இடத்துக்குப் போய் விட்டான். மற்றவர்கள் பார்க்க அதிக நேரம் ஒரே ஸ்டாப்புடன் வேலை சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருப்பது பார்ஷியாலிட்டி காட்டுவது போல ஆகிவிடுமே! அதிலெல்லாம் குரு கவனமாக இருப்பான்.
அவன் கேபினுக்குள் சென்று அமர்ந்ததும், இவளுக்கு மெசெஞ்சரில் மேசேஜ் வந்தது.
“எல்லாரும் வாய் பேசாம வாங்கிக்க, நீ மட்டும் ஓவர் ரியக்ட் பண்ணிருக்கே! வொய் மிரு? என் மேல உன்னை அறியாமலே எதாவது ஃபீலிங் டெவலப் ஆகிருச்சா? அது எனக்கு தெரிஞ்சிரும்னு பயந்துதான் இப்படி ரியாக்ட் பண்ணீயா?” என அனுப்பி இருந்தான் குரு.
“உங்க மேல எனக்கு ஃபீலிங் இல்லைன்னு யார் சொன்னா? எக்கச்சக்க ஃபீலிங் இருக்கு பாஸ்!”
“ரியலி? சொல்லு சொல்லு, என்ன ஃபீலிங்?”
“நீங்க கோபப்படறப்போ மீ ஃபீலிங் செம காண்டு, பல்ப் குடுக்கறப்போ ஃபீலிங் ஓவர் கடுப்ஸ், கிண்டல் பண்ணறப்போ ஃபீலிங் இன்சல்ட், அட்வைஸ் பண்ணுறப்போ ஃபீலிங் இரிடேட்டட் அப்படி உங்க மேல ஃபீலிங்சா கொட்டுது பாஸ் எனக்கு!”
“தேங்க் யூ மிரு! இதே ஃபீலிங்சோடயே சுத்திட்டு இரு. ஜென்மத்துக்கும் இதுல எல்லாம் இருந்து உனக்கு விடுதலை கிடையாது.”
“ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே! இதுல ஜென்ம ஜென்மத்துக்குமா? போங்க போய் வேலையப் பாருங்க! வேலை நேரத்துல நான் ச்சேட் பண்றத பார்த்தா என் சிடுமூஞ்சி பாஸ் சீட்டைக் கிழிச்சிருவாரு. நான் வேலையப் பார்க்கறேன்”
“நான் சிடுமூஞ்சியா? இன்னிக்கு ஈவ்னிங் உன் கூடத்தான் வருவேன். மறந்துறாதே!”
“யெஸ் பாஸ்” என டைப்பியபடியே, அவன் கொடுத்த ஆஸ்திரேலியா சாக்லெட்டைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள் மிரு.
மாலை ஆறு மணிக்கு இருவரும் ஆபிசில் இருந்து வெளியேறி இருந்தனர். ட்ராவல் செய்து வந்திருந்ததால் மிக களைப்பாகத் தெரிந்தான் குரு. அமைதியாக கண் மூடி சீட்டில் சாய்ந்துவிட்டான். இவளும் ரேடியோ வோல்யூமை குறைத்து வைத்திருந்தாள். திடீரென அவனின் குரல் கேட்டது. கண்ணை மூடியபடியே பேசினான் குரு.
“பசிக்கிது மிரு!”
பசி என்றால் தான் இவளுக்குப் பொறுக்க முடியாதே!
“ட்ரைவ் த்ரூ எதாச்சும் போகவா பாஸ்?” என கேட்டாள்.
“என் கூட இன்னைக்கு டின்னர் சாப்படறியா மிரு?” இன்னும் கூட கண்களை மூடியபடித்தான் பேசினான்.
“சாரி பாஸ்! எனக்கு டின்னர் மட்டும் வீட்டுல தான்! ரதி கோச்சுக்குவாங்க நைட் வீட்டுல நான் சாப்பிடலனா! நான் வேணும்னா எதாச்சும் ரெஸ்டாரெண்ட் கிட்ட நிறுத்தவா? சாப்பிட்டு வாங்க, நான் வெயிட் பண்ணறேன்!”
“ம்ப்ச்! வேணா விடு மிரு” சலிப்பாக சொன்னான் அவன்.
அதற்குள் அவளுக்குப் போன் வந்திருந்தது.
“தம்பி கூப்படறான்! ப்ளூதூத் போடவா பாஸ்?” என கேட்டாள்.
“ஹ்ம்ம்” என தலையாட்டினான்.
“ஹலோ, சொல்லுடா கணே”
“மஅ மக்கா”(அக்கா)
“என்ன வேணும்?”
“மபர் மகர் மவே மணும்”(பர்கர் வேணும்)
கணே பேசுவதையும் இவள் பதில் அளிப்பதையும் கண் திறந்து அதிசயமாகப் பார்த்தான் குரு.
“காலையில நான் சமைச்சிட்டுத்தானே வந்தேன். அதுவும் உனக்குப் பிடிச்ச மீன் கறி!”
“மபக மல்ல மசாப் மபிட் மடேன். மஇ மப்போ மபர் மகர் மவே மணும். மடாட்”(பகல்ல சாப்பிட்டேன். இப்போ பர்கர் வேணும். டாட்)
“சரி, வாங்கிட்டு வரேன்”
“அங்க என்ன அக்காவும் தம்பியும் எனக்கு புரியாத பாஷை பேசறீங்க?” கணேவின் பின்னால் இருந்து ரதியின் சத்தம் கேட்டது.
“அம்மா!” என குருவிடம் வாயசைத்தாள் மிரு.
“ஒன்னும் இல்லம்மா! எத்தனை மணிக்கு அக்கா வரும்னு கேட்டேன்” சமாளித்தான் அவன்.
“கதை விடாதடா! எனக்கு தெரியாம மாமாமீமீன்னு ரெண்டு பேரும் என்னத்தான் ரகசியம் பேசுவீங்களோ! உங்கக்கா இருக்காளே அந்த மிரு, அவதான் உனக்கு இந்த கெட்ட பழக்கம்லாம் சொல்லிக் குடுக்கறா. வீட்டுக்கு வரட்டும் அவ தோலை உரிக்கறேன்” என சத்தம் போட்டார்.
“சும்மா சொல்லுறாங்க ரதி. எங்க மேல கையே வைக்க மாட்டாங்க” என பக்கத்தில் அமர்ந்திருந்தவனுக்கு சமாதானம் சொன்னாள் மிரு. அவன் புன்னகையுடன் இவர்கள் மூவரின் பேச்சுவார்த்தையை கேட்டிருந்தான்.
தம்பி அங்கே அம்மாவை சமாதானம் செய்ய, இவள் போன் காலை கட் பண்ணி இருந்தாள்.
“என்ன லேங்குவேஜ் அது மிரு?”
“இது எங்க ரெண்டு பேரோட சீக்ரேட் லேங்குவேஜ். எங்களது சின்ன வீடுல, எவ்வளோ மெதுவா பேசனாலும் மத்தவங்களுக்கு கேக்கும்! அதனால அம்மா ஹெல்த் பத்தி பேசறப்போ இந்த லேங்குவேஜ் யூஸ் பண்ணுவோம். அவங்களுக்குப் புரியாது. என்னன்னு கேட்டா எதையாச்சும் சொல்லி சமாளிப்போம். அவங்களுக்கு லேப்ட் அவுட் ஃபீல் வந்துரும்ல அதனால அடிக்கடி பேச மாட்டோம். அவசியத்துக்கு மட்டும்தான். இப்போ எங்க வீட்டு பெரிய மனுஷருக்கு பர்கர் அவசியமாம்” சிரித்தாள் மிரு.
“அந்த லேங்குவேஜ் பத்தி கொஞ்சம் சொல்லேன்”
“நாம பேசற வார்த்தைய ரெண்டா இல்ல மூனா பிரிச்சு அதுக்கு முன்ன ம போட்டுக்கனும். இப்போ உங்க பேர மகு மரு(குரு) அப்படின்னு சொல்லனும். என் பேர மமி மரு(மிரு) சொல்லனும். அவ்ளோதான், ஈசி. பேச பேச கடகடன்னு வந்துரும்.”
சில்லரை காசை போட்டு வைக்கும் இடத்தில் குவாலா கீ செயினை வைத்திருந்தாள் மிரு. அதை கையில் எடுத்து வருடியவாறே,
“ஐ லவ் யூன்னு எப்படி இந்த பாஷையில சொல்லுறது?” என கேட்டான்.
அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் மிரு.
“சொல்லு மிரு!”
“மஐ மலவ் மயூ!”(ஐ லவ் யூ)
“மறுபடி ஃபீலிங்கோட சொல்லு! என்னால கேட்ச் பண்ண முடியல”
“ஃபீலிங்கோடலாம் சொல்ல முடியாது பாஸ்”
“சரி சரி! நார்மலாவே சொல்லு, கத்துக்கறேன்”
“மஐ மலவ் மயூ!” அவள் சொன்னதை அவள் அறியாமல் போனில் பதிவு செய்துக் கொண்டான் குரு.
“தேங்க்ஸ் மிரு. புதுசா ஒன்னு கத்துக் குடுத்ததுக்கு” என புன்னகைத்தான் அவன்.
“ஷ்ஷ்ஷ்!” அவனை பேசாதே என்றவள், வானொலி சத்தத்தை அதிகரித்தாள். ஆறடி சுவருதான் ஆசையைத் தடுக்குமா என ஸ்வர்ணலதாவும் யேசுதாசும் உருகி கரைந்தார்கள். பாடல் முடியும் வரை அமைதியாக இருந்தாள் மிரு. முடியவும்,
“ஸ்வர்ணலதா கலக்கிட்டாங்கல்ல?” என கேட்டாள்.
“யாரு ஸ்வர்ணலதா?”
குருவைக் கேவலமாக ஒரு லுக் விட்டாள் மிரு.
“அவங்கள தெரியாதா? அவங்க ஒரு பாடகி. அவங்க குரலு உயிர உருக்கி கையில குடுத்துரும். சோல்ஃபுல் வாய்ஸ்”
“உனக்கு கைலி தெரியுமா மிரு?”
“தெரியுமே! எங்கம்மா அதை தான் நைட் கட்டிக்குவாங்க”
இப்பொழுது அவளைக் கேவலமாகப் பார்ப்பது குருவின் முறையானது.
“கட்டிக்கிற கைலி(இங்கே லுங்கியை கைலி என்பார்கள்) இல்ல. பாடகி கைலி மினோக்”
“தெரியாது பாஸ்”
“உனக்கு எப்படி கைலி தெரியலையோ அது மாதிரி எனக்கு ஸ்வர்ணலதா தெரியல. இதுல என்ன தப்பு? எதுக்கு அப்படி கேவலமா பார்த்த மிரு?”
‘ஆவ்வ்வ்வ்வ்வ்! இவன பத்தி தெரிஞ்சும் இப்படி மாட்டறியே மிரு!’
“தப்புதான்! சாரி பாஸ்”
“எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்காது மிரு. எனக்குத் தெரியலையா சொல்லிக் குடு, நான் கத்துப்பேன். அதே போல உனக்கும் நான் நிறைய, நிறைய கத்துக் குடுப்பேன் மிரு! பயப்படாம கத்துக்கனும்” அதை சொல்லும் போது களைப்பையும் மீறி அவன் முகம் ஒளிர்ந்தது.
“எனக்கென்ன பயம்! பயமே என்னைப் பார்த்து பயந்து ஓடும்” உதார் விட்டவள் மேக்டோனல்ட்ஸ் ட்ரைவ் ட்ரூவுக்குள் வண்டியை விட்டிருந்தாள்.
“தம்பிக்கு பர்கர் வாங்கிக்கலாம் பாஸ்”
காரில் இருந்தப்படியே ஆர்டர் செய்து வாங்கியவள், குருவிடம் நகேட் டப்பாவை நீட்டினாள்.
“சாப்பிடுங்க பாஸ்! பசிக்குதுன்னு சொன்னீங்க”
“ஃபாஸ்ட் பூட் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு மிரு”
“ஏதோ ஒரு நாள் சாப்பிடலாம், தப்பில்ல. சாப்பிடுங்க பாஸ்” வற்புறுத்தினாள் மிரு.
“யாராவது பசின்னு சொன்னா நீ தாங்க மாட்டியா மிரு?” அன்றைக்கு பங்களாதேஷ் பய்யாவுக்கு அவள் உணவளித்ததை நினைத்துக் கேட்டான் குரு.
“பசிச்ச வயித்துக்குத்தான் இன்னொரு பசிச்ச வயித்தோட வலி புரியும் பாஸ்” சாதாரணமாக சொன்னாள் மிரு.
நகெட்டை மெல்ல மென்றபடி அவள் முகத்தைப் பார்த்தான் குரு.
“நான் தமிழ் ஸ்கூல் தான் படிச்சேன் பாஸ். அப்போலாம் கொஞ்சம் ஏழையான பிள்ளைங்களுக்கு, சிங்கிள் பேரண்ட் பிள்ளைங்களுக்கு ஆர்.எம்.ட்டி திட்டத்துல ஃப்ரீ சாப்பாடு குடுப்பாங்க. ஒரு பத்து வயசு வரைக்கும் வெக்கப்படாம அதை சாப்பிட்டுருக்கேன். கொஞ்சம் விவரம் தெரியவும் மத்த பிள்ளைங்க நம்மள ஒரு மாதிரி பார்க்கறப்போ அப்படியே கூசிப் போயிரும். ஓசி சாப்பாடுன்னு கிண்டல் அடிப்பாங்க. மனசு வலிக்கும், ஆனா வயிறு பசிக்கும். சில சமயம் சாப்பிடாம இருக்க ட்ரை பண்ணுவேன். ஆனா பசிச்ச வயிறு ஜெயிச்சிரும். அந்த வயசுலயே மனசுல பதிஞ்சிருச்சு கொடுமையில எல்லாம் பெரிய கொடுமை பசிக்கொடுமைதான்னு. அதான் பசின்னு யாராச்சும் சொன்ன பச்சை தண்ணீயாச்சும் குடுத்துருவேன்” என சொன்னாள் மிரு.
அவள் சொன்னதைக் கேட்டு தொண்டையை அடைத்தது குருவுக்கு. அவன் இருமவும், அவசரமாக கோக் கப்பை அவன் புறம் நீட்டினாள் மிரு.
“குடிங்க பாஸ்”
அதை குடித்து தொண்டையில் அடைத்திருந்த உணவையும் மிருவின் பால் சுரந்த தாய்மை உணர்வையும் உள்ளே இறக்கினான் குரு.
சற்று நேரம் காரில் பாடல் சத்தம் மட்டுமே கேட்டது. இருவரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். குருவின் இருப்பிடம் நெருங்க,
“மமி மரு!” என அழைத்தான் குரு.
ஆச்சரியமாக அவனைப் பார்த்தவள்,
“சொல்லுங்க பாஸ்” என்றாள்.
அவன் இறங்கும் இடத்தில் காரை நிறுத்தினாள் மிரு. இறங்கியவன், கதவை சாற்றும் முன்,
“மஐ மலவ் மயூ மவெரி மமச்”(ஐ லவ் யூ வெரி மச்) என நிறுத்தி நிதானமாக சொன்னவன் கண் சிமிட்டி அழகாகப் புன்னகைத்தபடி நடந்துப் போய் விட்டான்.
அதிர்ச்சியில் உறைந்தவள், பின்னால் நிற்கும் காரின் ஹோன் ஒலியில் தான் சுயம் பெற்று காரை எடுத்தாள் மிரு.
அவன் குறும்பு அறிந்திருந்தவள் சிரிப்புடன்,
“வானெல்லாம் நிலம் வளம் நீரெல்லாம்
உன்னைப் பார்க்கிறேன்..ஓஓஓஓ” என ஓலமிட்டப்படியே வீடு போய் சேர்ந்தாள்.
(தவிப்பான்)