SST– EPI 19

SST– EPI 19

அத்தியாயம் 19

மலேசியாவின் கரென்சி ரிங்கிட் மலேசியா என அழைக்கப்படுகிறது. தமிழில் மலேசிய வெள்ளி எனவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு நோட்டிலும் நாட்டின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மானின் படம் பொறிக்கப் பட்டிருக்கும்.

 

ரீனாவின் கைப்பிடித்து ஆபாமோசா கோட்டையின் படிகளை ஏறிக் கொண்டிருக்கும் மிருவையே பார்த்திருந்தான் குரு. இன்று காலை முழுவதும் ஷோப்பிங் செய்யவும் மலாக்காவை சுற்றிப் பார்க்கவும் நேரம் ஒதுக்கி இருந்தார்கள். பகல் உணவை முடித்துக் கொண்டு கோலாலம்பூர் கிளம்புவது தான் அவர்களின் அன்றைய நிகழ்ச்சி நிரல்.

சிரித்துக் பேசியபடி செல்லும் அவளையே கண்களால் தொடர்ந்துக் கொண்டிருந்தான் குரு. அவன், அவள் பின்னால் படி ஏறி வருவதைக் கூட கண்டு கொள்ளாமல் ரீனாவுடன் கலகலத்தப்படி இருந்தாள் மிரு.

‘குடுத்த நான் தவிச்சுப் போய் நிக்கறேன்! வாங்கிகிட்ட இவ எப்படி இவ்வளவு ரிலேக்சா இருக்கா? எனக்கு மட்டும் இன்னும் வேணும் வேணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குதே!’ என மனதில் புலம்பியபடியே அவர்களை தொடர்ந்தான் குரு.

“மை டே முடிஞ்சதா ரீனா டியர்? இன்னிக்கு ஈவ்னிங்ல இருந்து வைப், மம்மி டூட்டி ஆரம்பிக்குதே உனக்கு!”

“முடிஞ்சே போச்சு! ஆனாலும் இருபத்தி நாலு மணி நேரம் கூட ஆகல, புள்ளய மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் நான். வைப்பா இருக்கறப்போ கூட கில்டி இல்லாம மை டே எடுத்துக்கலாம். ஆனா அம்மாவா ஆகிட்டா அதெல்லாம் சாத்தியமே இல்ல. முனுக் முனுக்குன்னு மனசுக்குள்ள பிள்ளைங்க ஞாபகம் இருந்துட்டே தான் இருக்கும். சோ இப்பவே நல்லா எஞ்சாய் பண்ணிக்க மிரு. கல்யாணம் ஆச்சுன்னா, கட்டில்ல ஆரம்பிச்சு தொட்டில்ல தொடர்ந்து கட்டையில போற வரைக்கும் கடமை உன்னை சுத்தி சுத்தி அடிக்கும்.”

“இத்தனைப் பொறுப்பு, பிரச்சனை எல்லாம் வருதுன்னு தெரியுதுல்ல! அப்புறம் ஏன் வாண்டட்டா போய் கல்யாண வண்டியில ஏறறீங்க?”

“கல்யாணம்கிறது ஒரு வகையான போதை மிரு. ஒருத்தன் தண்ணி அடிக்கனும்னு  நினைக்கறப்பவே, அவனுக்குள்ள ஒரு துடிதுடிப்பு வந்துரும். எப்படா அடிப்போம்னு உடம்பும் மனசும் பரபரன்னு ஏங்கும். அதே தண்ணிய அடிச்சிட்டோம்னு வை, போதை தலைக்கேற புஸ்க்குனு ப்ளாட் ஆகிருவோம். அதே மாதிரிதான் கல்யாண போதையும். ஒருத்தன கட்டற வரைக்கும் பரபரன்னு இருக்கும், கட்டிட்டோம் புஸ்க்குன்னு ஆகிரும்!”

மிருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“தண்ணி அடிக்கறதும் கல்யாணம் பண்ணி கட்டிப் புடிக்கறதும் ஒன்னுதான்னு தத்துவம் சொன்ன ரீனா வாழ்க!”

“எல்லாம் ஒன்னுதான்டி! தண்ணி அடிச்சாலும் போதை ஏறும், கட்டிப் புடிச்சாலும் போதை ஏறும்! தண்ணி ஓவரா ஆனாலும் கவுந்துக் கிடப்போம், கட்டிப்புடி ஓவரா ஆனாலும் கவுந்துக் கிடப்போம்” என சொல்லி கண் சிமிட்டினாள் ரீனா.

“சீச்சீ! யெல்லோ யெல்லோ டேர்ட்டி ஃபெல்லோடி நீ. தண்ணி அடிக்கறது பத்திலாம் நல்லா தெரிஞ்சு வச்சிருக்க! நல்லா வருவடி” என ரீனாவின் முதுகிலே ஒன்று போட்டாள் மிரு.

“தண்ணி பத்திலாம் பேசறதுக்கு அனுபவ அறிவு தேவையில்ல டியர். டிவில ட்ராமா பாத்தாலே போதும்!”

அவர்கள் பேசுவதை புன்னகையுடன் பின்னால் ஒருவன் கேட்டுக் கொண்டு வருவதை அறியாமல் இருவரும் ஒருத்தர் காலை ஒருத்தர் வாரியபடி நடந்தார்கள்.

போர்த்துகீசியர்கள் 1511ல் கட்டிய ஆபாமோசா கோட்டை இன்னும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. மேலே ஏறி வந்ததில் மூச்சு வாங்க, ஓர் ஓரமாய் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மிரு. அதன் பின் கோட்டையின் நுழைவாயிலில் இருந்த சமதரையில் நின்று தூரத்தே தெரிந்த கடலையும், சுற்றி தெரிந்த மலாக்கா டவுனையும் ரசித்தப்படி நின்றிருந்தாள் அவள். அடித்து வீசிய காற்றில் கூந்தல் பறக்க, சுருட்டை முடி முன்னே வந்து விழுந்து அவளை இம்சித்தது. முடியை நொடிக்கொரு தரம் ஒதுக்கி விட்டப்படியே, எதையோ கைக்காட்டி ரீனாவிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள் மிரு.

அவள் சிரித்துக் கொண்டிருக்க குருவுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏற ஆரம்பித்தது. இங்கே இவன் தவித்துக் கொண்டிருக்க அதற்கு காரணமானவளோ ஒன்றுமே நடக்காதது போல சாதரணமாக நடமாடியது அவனுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.

அவர்கள் இருவரையும் நெருங்கியவன்,

“ஹாய் ரீனா” என புன்னகைத்தான்.

“ஹலோ பாஸ்” என அவளும் முகம் மலர சிரித்து வைத்தாள்.

“ஹாய் மிரு” என சொல்லியவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

சலனமே இல்லாமல் சிரித்த முகத்துடன்,

“ஹாய் பாஸ், பாய் பாஸ்” என்றவள் விலகி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளை தொடரப் போன ரீனாவைத் தடுத்து நிறுத்தினான் குரு.

“ரீனா, ஐ நீட் டூ டால்க் டூ ஹேர் பெர்சனலி!”

ஆச்சரியமாக குருவைப் பார்த்த ரீனா சரியென தலையாட்டிவிட்டு வேறு இடத்திற்கு நகர்ந்து விட்டாள்.

கோட்டைக்குள் புகுந்திருந்த மிருவை தொடர்ந்தவன்,

“எதிரிகள் தாக்குதலை சமாளிக்க இந்த கோட்டையைக் கட்டுனாங்களாம் மிரு! காதல் தாக்குதலை சமாளிக்க நான் எந்த கோட்டையைக் கட்டறதுன்னு சொல்லேன்!” என கேட்டான்.

பின்னால் கேட்ட அவன் குரலில் ஒரு நிமிடம் அசைவற்று நின்றவள்,

“மணல் கோட்டை கட்டுங்க பாஸ்! ஸ்ட்ராங்கா நிக்கும்” என சொல்லியபடியே கோட்டை சுவரை தொட்டு ஆராய்ந்தாள்.

உடனுக்குடன் பதிலடி கிடைக்க, சற்றும் மனம் தளராதவன் மீண்டும் ஆரம்பித்தான்.

“அபோன்சோ டி அல்புகெர்க்கேன்ற போர்த்துகீசியர் தான் இந்தக் கோட்டையைக் கட்டினாராம். ஆனா பாரேன், அவரோட ஹிஸ்டரில பொண்டாட்டின்னு ஒருத்திய மென்ஷன் பண்ணவே இல்ல. என் ஹிஸ்டரியும் அவரோடது மாதிரியே ஆகிருமோ மிரு?”

பல்லைக் கடித்தவள், நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அந்த அபோன்சோவுக்கு பொண்டாட்டி மட்டும்தான் இல்ல. ஆனா ஸ்டெப்னிலாம் ஜோரா இருந்துருக்கும். கீப் மூலமா ஒரு மகன் கூட இருந்தானாம். ஹிஸ்டரில நானும் படிச்சேன் பாஸ்!” என்றவள் அர்த்தத்துடன் அவனைப் பார்த்தாள்.

பார்வையால் அவளைத் துளைத்தெடுத்தவன்,

“இந்த ஸ்டேட்மெண்டுக்கும், உன் பார்வைக்கும் என்ன அர்த்தம் மிரு?” என கூலாக கேட்டான்.

“ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ்னு நீங்கத்தான பாஸ் சொல்லிக் குடுத்தீங்க! நீங்களே கண்டுப்பிடிங்க” நேற்று அவ்வளவு சொல்லியும் மீண்டும் தன்னை நாடி வந்திருப்பவனை இந்த வழியில் விலக்கி வைக்க முயன்றாள் மிரு.

அந்தக் கோட்டையை சுற்றி நடந்தப்படியே மெல்லிய குரலில் இருவரும் தர்க்கம் புரிந்து கொண்டிருந்தனர்.

“அதாவது அவருக்கு ஸ்டெப்னி இருந்த மாதிரி எனக்கும் சில ஸ்டெப்னிஸ் இருந்ததால நான் உனக்கு ஹஸ்பண்டா வேணாம் ஆனா ப்ரெண்டா மட்டும் வேணும்! அப்படித்தானே?”

“ஆமா பாஸ்! எனக்கு அல்ப்பா மேல் வேணாம், அடக்கவொடுக்கமா எனக்கு மட்டும் புருஷனா இருக்கற மேல்(male) போதும்.”

“லிஷன் மிரு! உனக்கு வரப் போறவன் அடக்கவொடுக்கமானவனாத்தான் இருப்பான்னு என்ன நிச்சயம்? நீ தான் அவன் தொடப் போற முதல் பெண் அப்படிங்கறதுக்கு எதாச்சும் சூரிட்டி இருக்கா? பெண்கள் மாதிரி ஆண்களுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட்னு எதாச்சும் இருக்கா மிரு அவனோட கற்பு நிலைய கண்டுப்பிடிக்க?”

ஃப்ரான்காக அவன் பேச, இவள் சுற்றி முற்றி பார்த்தாள் யாராவது கவனிக்கிறார்களா என.

“என்ன பேச்சு பேசறீங்க பாஸ்!” மெல்லிய குரலில் கடிந்துக் கொண்டாள் மிரு.

“என்னை பேச வைக்கறது நீதான் மிரு. எனக்கு நீ வேணும்! அதுக்காக எந்த லெவலுக்கும் இறங்கி நான் ஆர்கியூ பண்ணுவேன்”

உதட்டைக் கடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்தினாள் மிரு.

“உன்னால பதில் சொல்ல முடியல இல்லையா? ஓர் ஆம்பளையே வாய் திறந்து சொன்னாதான் தெரியும் அவன் கற்புக்கரசனா இல்ல காதல் கண்ணனான்னு! எத்தனைப் பேரு தன் வைப் கிட்ட இதையெல்லாம் தைரியமா ஒத்துக்குவாங்க? நூத்துலப் பத்து பேரு? மத்தவங்க எல்லாம் தான் ஒரு உத்தமன்னு தானே சொல்லுவாங்க! ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவன் வருங்காலத்துல உன்னை விட்டுட்டு இன்னொருத்திய தேடிப் போக மாட்டான்னு என்ன நிச்சயம்? மனுஷங்க வாழ்க்கையில எதுக்குமே கேரண்டியோ வாரண்டியோ இல்ல மிரு!”

காற்றில் கலைந்த தலை முடியைக் கோதிக் கொண்டவன்,

“ஆனா நான் ஒத்துக்கறேன் மிரு, நான் கற்புக்கரசன் இல்ல! நீ தான் என்னோட இளமையின் முதல் தேடல்னு சொல்லனும்னு என் மனசு கிடந்து அடிச்சிக்கிது! ஆனா அப்படி என்னால சொல்ல முடியாது! பட் ஐ கென் ப்ராமீஸ் யூ ஓன் திங்! நீதான் என் கடைசி தேடல் மிரு! இந்த குரு உன்னோட கை எனும் சிறைக்குள்ள ஆயுள் தண்டனை அடைய ஆசைப்படறான். ப்ளிஸ் என்னை கைது செஞ்சு வச்சுக்கோ மிரு!”

அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டாள் மிரு.

“நான் தான் உங்க வாழ்க்கையில கடைசியா இருப்பேன்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்ல பாஸ்!” குரலை செறுமி சரி செய்தவள், மனதில் பட்டதை அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

அவள் முகத்தைப் பற்றித் திருப்பி தன் முகம் பார்க்க வைத்தவன்,

“ஹஸ்பென்ட் மேல நம்பிக்கை வைக்கறதுல நம்ம பெண்களை அடிச்சுக்க முடியாது மிரு. வேலைக்கு, வோர்க் ட்ரீப், ப்ரேண்ட்ஸ் கூட ஜாலி ட்ரீப் இப்படி போய்ட்டு வர புருஷன் மேல எத்தனை பொண்ணுங்க சந்தேகப்படறாங்க? ரொம்ப குறைவு மிரு. அவன் ராமனா தான் திரும்பி வந்துருப்பான்னு வைப் நம்பறானா அதுக்கு என்ன காரணம்? ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கற அன்பு, காதல். அந்தக் காதல் தர பரஸ்பர நம்பிக்கை. என் கூட வாழ்ந்து பாரு மிரு, அந்த நம்பிக்கை உனக்குத் தானா வரும். கண்டிப்பா வர மாதிரி நான் நடந்துப்பேன்!” அவள் கண்களைப் பார்த்து மெல்லிய குரலில் பேசினான் குரு.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், வாய் வார்த்தையாக ஒன்றுமே சொல்லவில்லை. தலையை மட்டும் முடியாது என்பது போல மெல்ல ஆட்டினாள். அவன் இன்னும் பேச வருவதற்குள், சட்டென விலகி அருகில் வந்துக் கொண்டிருந்த தன் டீம் லீட்டுடன் போய் சேர்ந்துக் கொண்டாள். அதன் பிறகு லன்ச் போன போதும் சரி, பஸ்சுக்குள் ஏறி அமர்ந்த போதும் சரி கூட்டத்துடனே கோவிந்தா போட்டாள் மிரு. குருவும் அவளை நெருங்க முயலவில்லை.

சலசலப்புடன் வீடு நோக்கி தொடங்கிய பயணம் சற்று நேரத்தில் அமைதியாகியது. எல்லோரும் களைப்புடன் சீட்டில் சாய்ந்து விட்டார்கள். காதில் இயர்போனுடன் ஜன்னலில் தெரிந்த காட்சிகளை பார்த்தப்படி வந்தான் குரு.

“புல்லாங்குழலே பூங்குழலே

நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரி பாதி”

அந்தக் குரலும் அதன் ஏக்கமும் இவன் மனதை பிசைந்தது. தன் ஏக்கத்தையே அந்தக் குரல் பிரதிபலிப்பது போல ஒரு மாயை அவனிடம். தலைக்கு மேல் இருந்த கம்பார்ட்மெண்டில் தன் பேக்கை எடுப்பது போன்ற பாவனையில் எழுந்து நின்றவன் கண்கள் மிருவைத் தேடியது. இரண்டு சீட் முன்னே ரீனா அருகில் அமர்ந்திருந்தவளை சட்டென கண்டுக் கொண்டன அவன் கண்கள். ரீனாவின் தோளில் சாய்ந்து உறங்கியபடியே வருபவளை அவன் பார்வை லேசாக வருடி விலகியது.

பெருமூச்சுடன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவன் நினைவுகள் நேற்றைய இரவில் தன் குடிலில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட ஆரம்பித்தது.

கதவு மூடியதை அதிர்வுடன் பார்த்திருந்த மிருவை மென்மையாக பின்னிருந்து அணைத்துக் கொண்டான் குரு. அவள் தோளின் மேல் தன் தாடையைப் பதித்தவன், கைகள் இரண்டையும் முன்னே கொண்டு வந்து அவள் கைகளோடு கோர்த்துக் கொண்டான். அவள் காதில் தன் மீசை வைத்து குறுகுறுப்பு மூட்டியவன் மெல்லிய மயக்கும் குரலில்,

“ஐ லவ் யூ மிருது!” என காதலோடு சொன்னான்.

தன் அணைப்பில் அவள் உடல் சிலிர்ப்பதைக் கண்டவன், இன்னும் இறுக்கிக் கொண்டான் மிருவை.

“வி…விடுங்க பாஸ்” திணறினாள் மிரு.

“இன்னும் கொஞ்சம் நேரம் மிரு, ப்ளீஸ்! நீ நெஜத்துல என் கைக்குள்ள தான் இருக்கேன்னு என் மனசும் உடம்பும் நம்புற வரைக்கும் இப்படியே இருடா மிரும்மா”

“தப்பா நடந்துருக்கனா அப்படி இப்படின்னு கேட்டிங்களே பாஸ்? உள்ள நம்பி வந்ததும் இப்படி கட்டிப்புடிக்கிறீங்களே!” குரல் நடுங்கினாலும் நினைத்ததை அப்படியே கேட்டாள் மிரு.

மெல்லிய சிரிப்பு அவனிடம். தன் மூக்கால் அவள் காதின் வடிவத்தை அளந்தவன்,

“இதுக்கு முன்ன கையைப் புடிச்சு இழுத்துருக்கனான்னு கேட்டேன் தான் மிரு! ஆனா ரூமுக்குள்ள வந்தா கையைப் புடிச்சு இழுக்க மாட்டேன்னு ப்ராமிஸ் ஏதும் பண்ணதா ஞாபகம் இல்லையே!” என உல்லாசம் பொங்க கேட்டான் குரு.

“விடுங்க பாஸ்! இது தப்பு” என குரலை உயர்த்தினாள் மிரு.

“தப்ப தப்பா செஞ்சாதான் தப்பு மிரு. தப்ப தப்பே இல்லாம செஞ்சா தப்பில்ல மிரு”

அந்த நிலையிலும் அவன் தத்துவத்தைக் கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. அவன் பிடியில் இருந்து விலகி நின்றவள்,

“தப்ப தப்பே இல்லாம செஞ்சாலும் தப்பாம அப்புவா இந்த மிரு!” என சொல்லி சிரித்தாள் அவள்.

கண்கள் மின்ன சிரித்தவளைப் பட்டென இழுத்து மீண்டும் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் குரு. அப்படியே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,

“நான் என்ன பேசனாலும் அடங்காம பட்டு பட்டுன்னு திருப்பிக் குடுக்கற துறுதுறு மிரு இந்த குருவுக்கு வேணும். எனக்கே எனக்கா வேணும்!” என ஹஸ்கி குரலில் கெஞ்சினான்.

அவன் வார்த்தையில் உடல் விறைக்க, விலக போராடினாள் மிரு.

“ஷ் மிருது! என் கிட்ட என்ன பயம்? ப்ளிஸ் டோண்ட் புஷ் மீ அவே!” என்றவன் அவளை நடத்திக் கொணர்ந்து நாற்காலியில் அமர்த்தினான். அவள் காலடியில் கார்பேட்டின் மேல் அமர்ந்தவன், அவள் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தான்.

“இத்தனை நாளுல வித விதமா நேரடியாகவும் ரீடிங் பிட்வீன் தெ லைன்ஸ்சாகவும் என் காதலை உன் கிட்ட சொல்லிட்டேன் மிரு. ஆனா உன் கிட்ட இருந்து எந்த ரியாக்‌ஷனோ பதிலோ வரல. காதல் சொன்னத தானே உன்னால சீரியசா எடுத்துக்க முடியல? நாம ஸ்ட்ரேய்டா கல்யாணத்துக்குப் போயிரலாமா மிரும்மா?”

அதிர்ச்சியாக அவள் நோக்க, அவள் கைகளை மென்மையாகப் பற்றி வருடியவன்,

“மிருது, வில் யூ மேரி மீ டார்லிங்? இந்த குருவ கல்யாணம் செஞ்சு உன்னோட சிஷ்யனா ஆக்கிக்கிறியா மிரு?” என ஆசையாகவும் கண்ணில் எதிர்ப்பார்ப்புடனும் கேட்டான்.

வாயில் வார்த்தை வராமல் மிரு பார்த்திருக்க, அவள் விரல்கள் ஒவ்வொன்றுக்கும் குட்டி குட்டி முத்தம் இட்டவன்,

“என்னால இனி நீ இல்லாம இருக்க முடியாது மிரு. என்னை ட்ரோப் பண்ணிட்டு நீ போறப்பலாம் என் உலகம் அப்படியே இருட்டடிச்சுப் போயிடர ஃபீல். மறுநாள் நீ வந்து என்னை ஏத்தறப்போத்தான் என் உலகம் வெளிச்சம் ஆகுது மிரும்மா! இனி என் கூடவே இருந்திடேன் என் மனைவியா!” என கேட்டான்.

அவள் பதிலளிக்காமல் யோசனையாக இவனைப் பார்க்க,

“நாம கல்யாணம் செஞ்சுகிட்டா உன் கலோரிய குறைக்கறதுக்கு நீ கேட்காமலே ஹெல்ப் பண்ணுவேன் மிரு. கொஞ்சம் கூட சலிச்சுக்கவே மாட்டேன். ப்ளிஸ் சே யெஸ்!” என கண்களால் சிரித்தான் குரு.

“கலோரி குறைக்க கல்யாணமா பாஸ்? நல்லா பண்ணறீங்க ப்ரோபோசு! விளையாடனது போதும் பாஸ், நான் கிளம்பறேன்” என அவன் பிடியில் இருந்து கையை விலக்கிக் கொண்டவள் எழுந்து நின்றாள்.

“ஹேய்!!! ஐ நெவர் பீன் திஸ் சீரியஸ் இன் மை லைப்! இன்னும் எப்படி ப்ரோபோஸ் செஞ்சாதான் நான் ஜெனூய்ன்னா இருக்கேன்னு நீ நம்புவ மிருது?” என கேட்டவாறே எழுந்து நின்றவன் அவளை ஆழப் பார்த்தான்.

பார்வையை அவன் முகத்தில் இருந்து விலக்கிக் கொண்ட மிரு,

“நான் போறேன் பாஸ்” என கதவை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.

“ங்கொய்யால! நான் பைத்தியக்காரன் மாதிரி லவ், லைப், வெட்டிங்னு புலம்பிகிட்டு இருக்கேன்! விளையாடாதீங்கன்னு சொல்லி நீ எனக்கு விளையாட்டு காட்டிட்டு இருக்க மிரு!”

அவன் போட்ட சத்ததில் திகைத்து விழித்தாள் மிரு. அவன் ஹை கிளாஸ் வாயில் இருந்து வந்த லோ கிளாஸ் வார்த்தையை கேட்டவளுக்கு திகைப்பையும் மீறி புன்னகை அரும்பியது.

புன்னகையில் விரிந்த உதட்டையும், மின்னிய கண்களையும் பார்த்த குரு,

“மை ஈவல் டெம்ப்ட்ரெஸ்!(my evil temptress-மயக்கும் மாயக்காரி).” என மென்மையாக முணுமுணுத்தவன், அவளை மீண்டும் தன் கைச்சிறையில் அடைத்தான்.

“இந்த சிரிப்புதான் என்னை இரவும் பகலும் தூங்க விடாம செய்யுது மிருது. உன் மயக்கும் சிரிப்புல நான் மாயமாகிப் போறேன். ஒவ்வொரு தடவையும் நீ உதட்ட பிரிச்சு சிரிக்கறப்போ, அந்த சிரிப்ப என் உதட்டால அப்படியே முழுங்கிறனும் போல இருக்கு” என்றவன் மென்மையாக தன் உதட்டால் மிருவின் உதட்டை உரசினான். அவள் விலக முயல,

“ப்ளிஸ் மிருதும்மா!” என இன்னும் தனக்குள் புதைத்துக் கொண்டான்.

அவள் உதட்டில் தன் உதட்டை ஒட்டி வைத்துக் கொண்டே,

“மமி மரு மம்மா, மஐ மலவ் மயூ” என அவள் உதட்டை உரசி உரசியே உச்சரித்தான்.

அவன் செயலுக்கு எந்த எதிர்வினையும் காட்டாத மிரு, போராடாமல் அமைதியாகவே நின்றிருந்தாள். அவள் அமைதி குருவை என்னவோ செய்தது. மெல்ல அவளை விட்டு விலகியவன்,

“பிடிக்கலையா என்னை?” என குரலில் வலியுடன் கேட்டான்.

“ஒரு ப்ரேண்டா மட்டும்தான் பிடிச்சிருக்கு பாஸ். அதுக்கு மேல என்னால போக முடியாது”

“ப்ரேண்ட்?”

“ஆமா ப்ரேண்ட், நண்பன், காவான்(மலாயில் நண்பன்). அதுக்கு மேல என் கிட்ட எதையும் எதிர்ப்பார்க்காதீங்க பாஸ்!”

“டூ லேட் மிரு! நான் உன்னைக் காதலிக்கறேன்! இதுக்கு மேல ரிவர்ஸ் கியர் போட்டு நட்பு வட்டத்துக்குள்ளலாம் என்னால போக முடியாது”

“என்னாலயும் வேகமா நாலாவது கியர் போட்டு காதல் வட்டத்துக்குள்ள வர முடியாது பாஸ்”

“நாலாவது ஏன் போடுற மிரு? ஒன்னாவது கியர் போட்டு படி படியா முன்னேறி நாலாவது கியருக்கு வா. நான் காத்திருப்பேன்!”

காதலில் ஆரம்பித்து கார் ஓட்டுவதில் வந்து நின்ற தங்களின் பேச்சு வார்த்தையை நினைத்து இருவருக்கும் புன்னகை மலர்ந்தது. தன் புன்னகையை சட்டென அடக்கிய மிரு,

“நமக்குள்ள காதலெல்லாம் செட் ஆகாது பாஸ்! உங்க கிட்ட என்னால நட்புக்கரம் மட்டும்தான் நீட்ட முடியும்! வேற எதையும் எதிர்ப்பார்க்காதீங்க! நான் கடந்து வந்த ஆம்பளைங்க மாதிரி நீங்க இல்லை. ரொம்ப டீசண்டா என் கிட்ட பிஹேவ் பண்ணீங்க. அதனாலத்தான் நானும் ப்ரெண்ட்லியா பழகனேன். ஆனா அதுக்கான பலன இன்னிக்கு அனுபவிச்சுட்டேன். பழகன பாவத்துக்கு நீங்க தொட்டதையும் தடவனதையும் மன்னிச்சு விடறேன். இனிமே உங்க கை என் மேல பட்டுச்சு இந்த மிரு சும்மா இருக்க மாட்டா” என ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவள் சட்டென கதவைத் திறந்து வெளியேறிவிட்டாள்.

தான் பயந்தது போலவே தன்னை நிராகரித்த மிருவின் மேல் கோபம் கொஞ்சம் கூட வரவில்லை குருவுக்கு. மாறாக இன்னும் இன்னும் காதல் பொங்கியது.

ரீனாவின் தோளில் கண் மூடி சாய்ந்திருந்த மிருவும் நேற்று குருவின் குடிலில் நடந்ததை தான் நினைத்தப்படி இருந்தாள். போன் மேசேஜ் சத்தம் கேட்கவும் எழுந்து அமர்ந்தவள், அதை திறந்துப் பார்த்தாள். மேசேஜைப் படித்தவளுக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. முயன்று அழுகையை அடக்கினாள்.

ஆபிஸ் வளாகத்தை அடைந்து காரில் அமரும் வரை இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். மிருவின் கண்களின் சிவப்பை கவனித்த குரு,

“என்னாச்சு மிரு? நேத்து காதல் சொன்னதுக்கு இன்னைக்கு அழறியா?” என கேட்டான்.

“எனக்குத் தலை வலிக்குது பாஸ்!”

“சரி காரை நிறுத்து மிரு! நான் ஓட்டறேன்!”

“இல்ல பரவாயில்ல!”

நேற்று தைரியமாக மறுத்தவளின் குரல் இன்று கரகரத்து இருந்ததை கவலையாக பார்த்தான் குரு.

அவளை மேலும் தொல்லை பண்ணாமல், அமைதியாகவே வந்தான். அவனை இறக்கி விட்ட மிரு, எதுவும் பேசாமல் விருட்டென காரைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டாள். அவள் கார் கண் மறையும் வரை குழப்பத்துடன் பார்த்தப்படியே நின்றிருந்தான் குரு.

அன்றிரவு மிருவின் ப்ளாட் பூட்டு மெல்ல உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

“மாமு, அதிசயமா வெடக்கோழி இன்னிக்கு தனியா சிக்கிருக்கு! அப்படியே அமுக்கி சுட்டு சூப் வச்சிரனும்.” என தலைவன் மெல்லிய குரலில் சொல்ல அவன் அடிபொடிகள்,

“கோழி வெடக்கோழி…

உன்னைக் கொத்தி திங்கற படுபாவி…கொக்கோ கொக்கோ கொகக்கக்கோ” என மெல்லிய குரலில் கோரஸ் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அந்த நடு இரவில் கூட தூங்காமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மிருவுக்கு அவர்களின் மெல்லிய குரல் சொன்ன செய்தி பீதியைக் கிளப்பியது…

 

 

(இனி இருவரும் தவிப்பார்கள்….)

error: Content is protected !!