SST — epi 5

SST — epi 5

அத்தியாயம் 5

மலேசியாவில் மலாய் மொழியே தேசிய மொழியாகும். ஆனாலும் இங்கு 112கும் மேல் பல மொழிகள் வழக்கில் இருக்கின்றன. அதில் ஆங்கிலம், சீன மொழி, தமிழ் போன்றவையும் அடக்கம். ரோஜாக்(கலந்து பேசுவது) இங்கே மிக பிரபலம். எல்லோருடைய பேச்சு வழக்கிலும் தமிழோ, மலாயோ, ஆங்கிலமோ, சீனமோ கலந்து வருவது மிக சாதாரணம் இங்கே. மச்சான்(மச்சா), தாபாவ்(சீனத்தில் உணவைப் பார்சல் செய்வது), கீலா( மலாயில் பைத்தியம்) போன்ற வார்த்தைகள் எல்லா இனத்தவரின் வாயிலும் விழுந்து விளையாடும்.

 

இது தான் முதல் நேர்முகக்காணல் இல்லை மிருவுக்கு. இதற்கு முன்பே பல நிறுவனங்களுக்குப் போய் முட்டி மோதி வந்திருக்கிறாள். பிறகு போன் செய்கிறோம், ஈமேயில் செய்கிறோமென பல பசப்பு வார்த்தைகளை உண்மை என நம்பி காத்திருந்து ஏமாந்துப் போனவள் இவள்.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார், நன்றாக சிரிக்க சிரிக்கப் பேசி நம்பிக்கையைக் கொடுத்து பிறகு போன் செய்கிறோம் என எஸ்சாவது போலத்தான் இங்கேயும். பெண் வீட்டினரே போன் செய்து மானத்தை விட்டு என்னவாயிற்று என கேட்பது போல, இவளும் போன் செய்து என்னவாகிற்று என கேட்டு அவர்கள் வாயாலேயே ரிஜேக்ட் செய்யப்பட்டிருக்கிறாள்.

இந்த விஷயத்தில் பலத்த அனுபவம் இருப்பதால், மிரு தகுந்த ஏற்பாட்டுடனே வந்திருந்தாள். அதில் முதல் படிதான் முகத்தை சிரித்த மாதிரி வைத்திருப்பது. உள்ளே டப்பா டாண்ஸ் ஆடுவதை மறைத்து அனைவரிடமும் புன்னகைத்து வைத்தாள்.

குருவின் ஆபீஸ் பெரிய அளவிலே இருந்தது. உட்காரும் இடங்கள் ஓபன் கான்சப்டில் வடிவமைக்கப்பட்டிருந்தன. தனி தனி டிபார்ட்மெண்ட்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் குருவைத் தவிர யாருக்கும் தனி அறை இல்லை. ஒரு கம்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் தடுப்பு இருந்தாலும் உட்காரும் இடங்களுக்கு தடுப்பு இல்லை. உட்கார்ந்தபடியே நாற்காலியைத் தள்ளிக் கொண்டு மூன்று மேசை தள்ளி இருப்பவரிடம் சந்தேகம் கேட்டு வந்துவிடலாம். ஒவ்வொரு மேசைக்கும் சின்னதாக பெடெஸ்டல் என அழைக்கப்படும் குட்டி அலமாரி ஒன்று இருந்தது. ஃபைலிங் காபினேட், ஸ்டோர் ரூம் இதெல்லாம் இல்லை. இவர்களே ஐடி துறையில் இருக்கிறார்கள், எல்லாவற்றையும் மேகக் கூட்டத்திலேயே சேர்த்து வைத்துக் கொள்வார்கள். அதாவது க்லாவுட் ஸ்டோரஜ் செய்து விடுவார்கள்.

குட்டியாக ஒரு பேண்ட்ரீ இருந்தது. அது காபி மெசின், மைக்ரோவேவ் ஓவன், ப்ரீட்ஜ் என கச்சிதமாக இருந்தது. உள்ளே வந்தவளின் கண்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து கொண்டன.

ரிசெப்ஷென் என எழுதியிருந்த மேசை அருகே சென்று அங்கிருட்ந்த மலாய் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் மிரு. அவள் மோனிக்காவைக் கைக்காட்ட, அவள் இடத்துக்கு போய் நின்றாள். அதற்குள் அங்கிருந்த எல்லோருடைய கண்களும் இவளை ஆராய்ச்சியாய் பார்த்தன.

குருவும், இவள் உள்ளே வந்ததில் இருந்து அவளின் முகம் காட்டும் பாவங்களையும், யாரையும் எதிர்பார்க்காமல் தானே கேட்டு கேட்டு மோனிக்காவிடம் போனதையும் கவனித்திருந்தான்.

நிறுவனத்தின் முதலாளி என பந்தாவுக்காக தனி அறை அமைத்துக் கொள்ளவில்லை அவன். அடிக்கடி அவனைப் பார்க்க கிளையண்ட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்களின் ப்ரைவசிக்காகவே தனி அறை அமைத்திருந்தான். ஆனாலும் வெளியில் இருப்பவர்கள் அவனைப் பார்க்க முடியும், அவனும் வெளியே நடப்பதைப் பார்க்க முடியும். பெரிய மீட்டிங் ஏதாவது நடத்த வேண்டும் என்றால் அந்த பில்டிங்கிலேயே அதற்கு வசதி இருந்தது. முன்கூட்டியே பதிவு செய்து வைத்தால் அவர்களின் மீட்டிங் ரூமை சொற்ப விலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தன் அருகே வந்து நின்ற மிருவை ஏற இறங்கப் பார்த்தாள் மோனிக்கா. அவள் ஒரு சீன பெண்ணாவாள்.(இந்த கதையில் பல உரையாடல்களும் ஆங்கிலம் அல்லது மலாயில் தான் இருக்கும். அதை அப்படியே தமிழில் தருகிறேன்)

“குட் மார்னிங் மோனிக்கா. நான் மிருதுளாஸ்ரீ” என கை நீட்டினாள் மிரு.

எழுந்து நின்று கையைக் குலுக்கினாள் மோனிக்கா.

“ஆர் யூ ரெடி ஃபார் தி இண்டெர்வியூ?” என சிரித்த முகமாக கேட்டாள் மோனிக்கா.

“யெஸ்!” என தன்னம்பிக்கையாக தலையாட்டினாள் மிரு.

மிருவை தன்னோடு வரும்படி அழைத்துப் போனாள் மோனிக்கா. அங்கே இருந்த ஒரு கம்ப்யூட்டரின் முன் அமர்த்தியவள்,

“இங்கயே வெய்ட் பண்ணு மிருதுளாஸ்ரீ! ஓ காட்! உன் பெயர் என் வாயிலயே நுழையல! எதாவது ஷோர்ட் நேம் இருக்கா?” என கேட்டாள் அவள். பொதுவாகவே நம் மக்களின் பெயர்களை சீனர்கள் உச்சரிக்க சிரமப்படுவார்கள்.

“என்னை மிருன்னே கூப்பிடுனுங்க”

“மிரு! தட்ஸ் பெட்டர்” என சொல்லியவள் பேண்ட்ரீ பக்கம் போனாள். வரும் போது கையில் ஒரு கப் காபி இருந்தது.

“முதல்ல இத குடி. கொஞ்ச நேரம் ரிலேக்ஸ் பண்ணு மிரு. நான் குவேஸ்டியன் பேப்பர்ஸ்சோட வரேன்.”

‘பாஸ் சரியான ஜொள்ளுப் பார்ட்டியா இருந்தாலும் ஸ்டாப்லாம் தங்கம்மா இருக்காங்கப்பா’ சிலாகித்தவாறே சுற்றிப் பார்த்தவளுக்கு கண்ணாடி ரூமில் இருந்து இவளைப் பார்த்தபடி இருந்த குருவைப் பார்க்கவும் புரை ஏறியது. கப்பை மேசையில் வைத்து விட்டு தானாகவே தலையத் தட்டிக் கொண்டாள். லேசாக அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள். அவன் சிரிக்கவே இல்லை. தலையை மட்டும் லேசாக ஆட்டிவிட்டு லப்டாப்புக்குப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

‘யப்பாடா சிரிக்கல! எங்கடா சிரிச்சுக்கிட்டே நலம் விசாரிக்க வந்துருவானோன்னு பயம்மா இருந்துச்சு. நீ அப்படியே பாஸ் கெத்தோட இருடா சாமி! அதுதான் உலகத்துக்கு நல்லது’ சந்தோசமாக காபியை அருந்தினாள் மிரு.

சில நிமிடங்களிலேயே மிருவிடம் வந்தாள் மோனிக்கா.

“மிரு இதுல உன் பயடேட்டா ஃபில் பண்ணிட்டு, உன்னோட ரெசியூம் அண்ட் காபி ஆப் செர்டிபிகேட்ஸ் இணைச்சு வச்சுடு. அதுக்கு அப்புறம் இந்த கேள்வி பதில் செக்‌ஷன செஞ்சுடு. ஓன் ஹவர்ல வந்து வாங்கிக்கறேன்” என தாட்களைக் கொடுத்து விட்டுப் போனாள்.

மூன்று செக்‌ஷன்களாக அந்த கேள்வி பதில் பிரிக்கப்பட்டிருந்தது. கணக்கு கேள்விகள், ஆங்கில புலமையை சோதிக்கும் கேள்விகள், மற்றும் ஐடி சம்பந்தப்பட்ட கேள்விகள். கணக்கும், ஆங்கிலமும் பதினைந்து நிமிடங்களில் செய்து முடித்து விட்டாள் மிரு.

ஐடி கேள்விகள் தான் சவாலாக இருந்தன. டிகிரி படிக்கும் போது இதெல்லாம் சொல்லி தரவில்லையே! குட்டி குளத்தில் நீச்சல் பழக்கி விட்டு, சமுத்திரத்தில் தள்ளி விட்டால் என்ன ஆகும்? அந்த நிலமையில் இருந்தாள் மிரு. ஹார்ட்வேர் பற்றிய கேள்விகளுக்கு கடகடவென பதில் எழுதியவள், சாப்ட்வேரில் திணறினாள். கடுப்பில் பேனாவைக் கடித்து வைத்தாள். ஷாலைத் திருகி திருகி யோசித்தாள்.

படிக்கும் போதே கோடிங் மட்டும் அவளிடம் வாலாட்டிக் கொண்டே இருக்கும். அந்த பாடங்களில் பார்டரில் மட்டுமே பாஸ் செய்வாள். அதே கோடிங் இங்கேயும் வந்து அவளைப் படுத்தியது. மற்ற இண்டேர்வியூவில் எல்லாம் இரண்டாவது ரவுண்டில் தான் கோடிங் கொடுத்து டெஸ்ட் செய்வார்கள். அவள் தான் முதல் ரவுண்டிலேயே அவுட் ஆகி வந்து விடுவாளே.

கோடிங்கை அடித்து அடித்து எழுதினாள் மிரு. இவளுக்கு ஜாவா லாங்குவேஜ் ஓரளவுக்கு வரும். ஆனால் இங்கே டோட்.நேட் கேட்டிருந்தார்கள். அதுதான் இப்பொழுது பரவலாக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் லாங்குவேஜ். ஆனால் இதெல்லாம் எங்கே கல்வித் தளங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள்! தனியாக அல்லவா பணம் கட்டி கோர்சாக எடுத்துப் படிக்க வேண்டி இருக்கிறது.

“தெரியலனா விடு! பேப்பரைக் குத்தி கிழிச்சு வச்சிறாதே!” எனும் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டவள், பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

கையில் காபி கப்புடன், ஸ்டைலாக மேசை மேல் சாய்ந்து நின்றிருந்தான் குரு.

“இல்ல சார், எனக்கு டோட்.நெட் பத்தி அவ்வளவா தெரியல!”

“சாரா?”

“ஆ..ஆமாம் சார்”

“எனக்கு வேற என்னமோ பேர் வச்சிக் கூப்பிட்டியே அன்றைக்கு!”

“அது வந்து!” சுற்றி கண்களை ஓட்டியவள், மெல்ல குரலைத் தணித்து,

“கபோதின்னு கூப்பிட்டேன்! மறுபடியும் எக்குத்தப்பா பார்த்தா, கூறுகெட்ட கபோதின்னும் கூப்புடுவேன்” என கூறினாள்.

“கொஞ்சம் கூட பயமே இல்லைல்ல உனக்கு?”

“எதுக்கு பயப்படனும்?”

“உனக்கு நான் முதலாளியா ஆகலாம் மிரு! உனக்கு சம்பளம் குடுக்கறவனா ஆகலாம்! மனசுல ஒரு பயம் வேணாமா?”

“நீங்க முதலாளியா ஆகலாம், சம்பளம் குடுக்கலாம்! அதனால நான் என்ன உங்களுக்கு அடிமையா, பயந்து நடக்க? அப்படி பயந்து யார் கிட்டயும் வேலைப் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்ல சார். நீங்க குடுக்கற சம்பளத்துக்கு ஏத்த மாதிரி நான் வேலைப் பார்க்கப் போறேன்! நீங்க குடுக்கற மரியாதைக்கு ஏத்த மாதிரி நானும் பதில் மரியாதைக் குடுக்கப் போறேன்! இதுல பயம், கியம்லாம் எங்க வந்துச்சு?”

தெளிவாகவே, நீ முதலாளி ஆனாலும் மரியாதை தராவிட்டால் உனக்கு சீனே கிடையாது என மறைமுக மிரட்டல் விடுத்தாள் மிரு.

மெல்லிய புன்னகை வந்தது குருவுக்கு.

“துடுக்குத்தனம் உன் கூடவே பிறந்ததோ மிரு? உனக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?”

“இத்தனை நாள் பண்ணத தான் பண்ணுவேன் சார்! வறட்டு கௌரவம் பார்க்கறவனுக்கு ஒரு வேலை, வறுமையில நிக்கறவங்களுக்கு மானத்துக்கு பிரச்சனை வராத வரையில பணம் குடுக்கறது எல்லாமே வேலைதான். இந்த வேலை இல்லைனா வேற வேலை கிடக்காமலா போயிரும்! டோட் நெட் எனக்கு வரல, எப்படியும் பாய் பாய் சொல்லத்தான் போறீங்க! சோ அன்னிக்கு நான் ஏசுனத மனசுல வச்சிக்காதீங்க! மனவருத்தம் இல்லாம அவங்க அவங்க வழியில போகலாம் சார். ப்ரேண்ட்ஸ்?” என கை நீட்டினாள் மிரு.

அப்படியும் வெளியே அனுப்பி விடுவார்கள், எதற்கு தேவையில்லாமல் ஒரு எதிரி என எண்ணினாள். அதோடு இன்னொரு முறை கிரேபில் பார்த்தாலும், நல்ல படியாக பேசிக் கொள்ளலாம் என நினைத்தாள் மிரு.

தன் முன் நீண்டிருந்த அவள் கையையே பார்த்திருந்தான் குரு. பின் அவளை நெருங்கியவன், அவள் கையை மெல்லப் பற்றிக் குலுக்கினான்.

‘மிருதுவான கை மிருதுவுக்கு!’

“வெல்கம் டூ ஜிபி ஐடி சொலுஷன் மிரு” என்றவன் திரும்பிப் பார்க்காமல் தனது ரூமுக்கு சென்று விட்டான்.

வெல்கம் சொல்லிட்டுப் போறானே! அப்போ வேலை இருக்கா?’ குழம்பினாள் மிரு.

ஒரு மணி நேரம் கழித்து வந்தாள் மோனிக்கா. அவள் கையில் இருந்த காகிதங்களை வாங்கிக் கொண்டவள்,

கம்ப்யூட்டரை ஆன் செய்தாள். இன்னொரு செட் காகிதங்களை இவள் கையில் திணித்தவள்,

“இதுல பல வகையான லாங்குவேஜ் கோடிங்ஸ் இருக்கு! எது உனக்கு வருதோ அதுல, இந்த தேவைகளுக்கேட்ப ஒரு ப்ரோகிராம் செஞ்சு குடு மிரு” என சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

அவள் கொடுத்ததில் ஜாவாவும் இருக்க, மிருவுக்கு மகிழ்ச்சியாகிப் போனது. முழுதாக கையில் இருந்த ஸ்பெசிபிகேஷனைப் படித்துப் புரிந்துக் கொண்டு ப்ரோகிராமை தயாரித்தாள். முடிக்கவே ஒரு மணி நேரம் ஆனது. மோனிகா வந்து அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“மிரு இப்போ ல்னச் டைம் ஆகுது. போய் சாப்பிட்டுட்டு ஒரு மணி நேரத்துல வா! நீ செஞ்சத எல்லாம் நான் செக் பண்ணி வைக்கிறேன்! எல்லாம் ஓகேன்னா லாஸ்ட் ஸ்டேஜ் பாஸ் இண்டெர்வியூ பண்ணுவாரு! அவர் ஓகே பண்ணாதான் உனக்கு வேலைக் கிடைக்கும்” என சொல்லிவிட்டுப் போனாள்.

வந்த மாதிரியே கீழே இறங்கிப் போனாள் மிரு. இவர்கள் பக்கத்து பில்டிங்கில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளேஸ் இருந்தது. அங்கே புகுந்தவள், ஒரு ஜூசும் ஹாட் டாக் பன்னும் வாங்கிக் கொண்டாள். அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து உண்டவள், அதன் பிறகு பொழுதை போக்குவதற்காக அப்படியே சுற்றி வந்தாள்.

அதே நேரம் குருவின் அறையில்,

“பாஸ், அவங்களுக்கு கோடிங் சுட்டுப் போட்டாலும் வரல. ஆனா ஹார்ட்வேர், நெட்வோர்க்கிங் பத்திலாம் நல்லா தெரியுது. சோ நெட்வோர்க்கிங் டிபார்ட்மெண்ட்ல வேலைக்குப் போடலாம்” என சொல்லிக் கொண்டிருந்தாள் மோனிக்கா.

‘அந்த டிபார்ட்மெண்ட்ல ஆம்பளைங்க தானே வேலைப் பார்க்கறாங்க! அதோட இவ குனிஞ்சு நிமிர்ந்து எழுந்து அந்த வேலைய பார்க்கறதா!’ அந்த கற்பனையே அவனுக்கு கசந்தது. பல நிறுவனங்கள் புதிதாக ஆபிசை செட் பண்ணும் போது இவர்களை அழைப்பார்கள். இவர்கள் தான் கம்ப்யூட்டர்களை செட் செய்து, நெட்வோர்க்கிங் அதாவது இண்டெர்னேட் கனேக்ஹன் எல்லாம் பொருத்தி, செர்வர் எல்லாம் செட் செய்து கொடுப்பார்கள். பொதுவாகவே இது கொஞ்சம் வியர்வை சிந்தி உழைக்க வேண்டிய டிபார்ட்மெண்ட். அங்கே மிருதுவான மிருவை அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

“புட் ஹெர் இன் வெப் டிசைனிங்!”

“பாஸ்! மிருவுக்கு அதப்பத்தி ஒன்னும் தெரியல. இந்த மாதிரி வேலைக்கு நாம அனுபவம் இல்லாதவங்கள எடுக்கறது இல்லையே! குழம்பினாள் மோனிக்கா.

“லிஷன் மோனிக்கா! மிரு என்னோட ரிலேடிவ். அதனாலதான் அனுபவம் இல்லாமலே வேலை குடுக்கறேன். அவளுக்கு ப்ரைவெட்டா ட்ரெய்னிங் அரெஞ் பண்ணு! ஓன் மந்த் போகட்டும். அப்புறம் வேலைக்கு வந்து சேரட்டும். ட்ரைனிங் எக்ஸ்பென்சஸ் என்னோட ப்ரைவேட் அக்கவுண்ட்ல இருந்து குடுக்கறேன். அவங்களுக்கு அக்ரிமேண்ட் ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க. ரெண்டு வருஷம் இங்கதான் வேலை செய்யனும்னு பாண்ட் பண்ணுங்க. சிக்ஸ் மந்த் ட்ரைனிங் பீரியட்ல இருக்கட்டும். அப்புறம் பெர்மனேண்ட் பண்ணலாம். பாண்ட் பண்ண ரெண்டு வருஷத்துல வெளிய போகனும்னா பெனால்டி ப்ளஸ் ட்ரைனிங் ஃபீஸ் எல்லாம் திரும்ப கட்டனும்னு காண்ட்ராக்ட்ல போடுங்க மோனிக்கா”

“ஓகே பாஸ்!” என நடந்தவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

“மிரு என்னோட ரிலேட்டிவ்னு யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமா உனக்கு தெரியும்னு மிருவுக்கு தெரிய வேணாம்” குரலில் அழுத்தம் இருந்தது.

சரி என தலையாட்டியபடியே வெளியேறினாள் மோனிக்கா. வேலை தலைக்கு மேல் இருந்தாலும் நல்ல சம்பளம், போனஸ், பிற அலவுன்ஸ்கள் என இங்கே நல்ல எதிர்காலம். அதை தேவையில்லாமல் மிருவைப் பற்றி கோசிப் செய்து கெடுத்துக் கொள்ள மோனிகாவுக்கு என்ன பைத்தியமா?

ஒரு மணி நேரம் முடிந்து வந்தவளை நேராக குருவின் அறைக்கு அனுப்பினாள் மோனிக்கா.

வணக்கம் சொன்னவளை அமர சொன்னான் குரு.

அவள் முன்னே அக்ரீமேண்டை எடுத்துப் போட்டவன்,

“சைன் பண்ணு மிரு” என்றான்.

அந்த தாள்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தாள் மிரு. முதல் பக்கத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் பேசிக் சேலரி ரிங்கிட் மலேசியா 2500.00 என போட்டிருந்தது. வேலை ஊர்ஜிதம் ஆனால் 3000.00 ஆகும் என இருந்தது. அங்கேயே அவள் கண்கள் ஆணி அடித்தது போல நின்றுவிட்டன.

இவள் இடுப்பொடிய கார் ஓட்டினாலும் 1500க்கு மேல் தாண்டாது. கண்களை விரித்தவள், குருவை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனோ லாப்டோப்பில் கண்ணை வைத்திருந்தான்.

“சார், வேலை குடுத்துட்டீங்களா எனக்கு?” ஆச்சரியமாக கேட்டாள்.

“ஆமா!”

“நீங்க கேள்வி ஒன்னும் கேட்கலியா?”

“படிச்சுட்டு சைன் பண்ணு முதல்ல! ஒன்னே ஒன்னு கேட்கனும், அதுக்கப்புறம் கேட்கறேன்” என்றான்.

‘சைன் பண்ணதும் என்ன கேட்கப் போறான்!’ லேசாக குழம்பியவள், பின் கவனமாக அக்ரிமெண்டைப் படித்துப் பார்த்தாள். பாண்ட் செய்வது எல்லா இடத்திலும் இருப்பதுதான் என்பதால் தயக்கம் இல்லாமல் சைன் வைத்தாள் மிரு.

“காங்க்ராட்ஸ் மிரு”

“தேங்க்ஸ் சார்”

“நெக்ஸ்ட் வீக்ல இருந்து வேலைக்கு வந்துருங்க. மத்தது எல்லாம் மோனிக்கா சொல்லுவாங்க. டேக் கேர்!”

நன்றி சொல்லிவிட்டு கதவு வரை போனவளை குருவின் குரல் நிறுத்தியது.

“என்ன சார்?”

“நான் இன்னும் கேட்க வந்த கேள்விய கேட்கலியே மிரு!”

“கேளுங்க சார்”

“உனக்கு பாய்ப்ரண்ட் இருக்கா மிரு? இல்லைன்னா என்னை வச்சிக்கிறியா, பாய்பிரண்டா?”

நன்றாக திரும்பி அவனை முறைத்தவள்,

“இருந்துச்சுனா?”

“சோ சிம்பிள்! அவன கழட்டி விட்டுட்டு என்னை வச்சுக்கோ, பாய்பிரண்டா!”

(தவிப்பான்)

error: Content is protected !!