Tamizharasiyin kathirazhagi 34

Tamizharasiyin kathirazhagi 34

அத்தியாயம் – 34

நடுஹாலில் அமர்ந்திருந்த கோபிநாத் அமர்ந்திருக்க ஆனந்த், ஜீவன், கண்ணன் மூவரும் அமைதியாக இருக்க, அவர் முதலில் பேச்சைத் தொடங்கினார்..

“நான் கோபிநாத்.. என்னோட மகன் பிரபாவிற்கு உங்கள் மகளை பெண்கேட்டு வந்திருக்கிறேன்..” என்றதும் ஆனந்த் புருவங்கள் கேள்வியாக சுருங்க, “பணகார சம்மதம் என்று யோசிக்கிறீங்களா..?” என்றவர் தயங்கினார்..

“அதெல்லாம் இல்லங்க.. பொண்ணு என்று இருந்த நாலுபேர் வந்து பெண் பார்ப்பாங்க..” என்றவர் எதார்த்தமான மனநிலையுடன்..

பிறகு பிரபாவைப் பற்றிய விவரங்களை அவர் சொல்ல, “ரொம்ப சந்தோஷம்.. நீங்க இப்போ பெண்ணைப் பார்த்து பிடிச்சிருந்தா நம்ம மற்றது பேசலாம்.. ஆனால் நாங்க முதலில் மாப்பிள்ளையைப் பார்க்கணும்.. அதன்பிறகு மற்றவற்றைப் பேசிக்கொள்வோம்..” என்றார் ஆனந்த்..

அதற்கு கோபிநாத், “இப்பொழுது நிச்சயதார்த்தம் பண்ணி திருமணத்திற்கு தேதி குறிக்கலாம்.. மற்றது அப்புறம் பேசிக்கலாம்..” என்றதும், “எதற்கு இவ்வளவு அவரசப்பட்டு எல்லாவற்றையும் செய்யணும்.. நாங்க கொஞ்சம் யோசிக்கணும்..” என்று அவரின் கருத்தை முன் வைத்தார் ஆனந்த்..

விஜி சுவாரசியமாக வேடிக்கை பார்க்க, “சரிங்க நீங்க நல்ல யோசித்து முடிவெடுங்க..” என்றவர் பொறுமையாக சொல்ல கண்ணனின் மனம்தான் வலித்தது..

பெண்கள் இருவரும் இணைந்து சமையலறையில் வேலைகளை முடித்துவிட்டு, “டேய் உங்க அக்கா ரெடி ஆகிட்டாளா என்று பாரு..” என்று சுகந்தி தன் மகனை அழைத்தார்..

“ம்ம் இதோ பார்க்கிறேன்ம்மா..” என்றவன் அக்காவின் அலங்காரம் முடிந்துவிட்டதா..? என்று பார்க்க சென்றான்.. ரோஸ் கலர் சேலைக்கட்டி தலைநிறைய மல்லிகைப் பூ சூடி அமர்ந்திருந்த அக்காவின் அருகில் சென்று அமர்ந்தான்..    

“அக்கா அவங்க பேசறது ஒருப்பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் சீக்கிரம் மேரேஜ் என்று பேசறாங்க.. இனிமேல் உன்னை பார்க்க நாங்க அவ்வளவு தூரம் வரணுமே..” அவன் வருத்தப்பட்டான்..

அவனின் தோளில் கைபோட்டு அருகில் அமர்ந்த ருக்மணி, “குட்டிப்பையா இதுக்கு எல்லாம் கவலைப்படாதே.. நீ படிப்பு முடிச்சிட்டு நேராக பெங்களூர் வந்துவிடு..” என்றவள் புன்னகையுடன்..

“ருக்கு அக்கா கிண்டல் பண்ணாதே..” என்றவனின் கண்கள் கலங்கிவிட, “கண்ணா என்னடா சின்ன பையன் மாதிரி பண்ற..” என்று அவனின் விழிகளை துடைத்துவிட, “இப்போ ஆறுமாசமாக சண்டை போட ஆள் இல்லாமல் நானே ஆள் இல்லாமல் இருக்கேன்..” என்றவன் சொல்ல ருக்மணி, ஜெயா இருவரின் மனமும் வலித்தது..

அதற்குள் அங்கே வந்த சுகந்தி, “இது நல்ல இருக்கு.. மூவரும் இங்கே என்ன பண்றீங்க.. ருக்மணி ஜெயாவை அழச்சிட்டு வாம்மா..” என்றதும், “நான்தான் என்னோட அக்காவை அழச்சிட்டு போவேன்..” என்றவன் ஜெயாவை அழைத்துச் சென்றான்..

“மச்சானுக்கும் – மாப்பிள்ளைக்கும் பெரிய தகராறு வராமல் இருந்த சரிதான்..” என்று அவர்களை பின் தொடர்ந்தாள் ருக்மணி.. கோபிநாத்திற்கு ஜெயாவைப் பார்த்தும் பிடித்துவிட்டது..

“அண்ணி நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க..” என்று கண்சிமிட்டினாள் விஜி.. அவளுக்கு புன்னகையை பதிலாக கொடுத்த ஜெயா அறைக்குள் சென்றவளின் கவனத்தை ஈர்த்தது அவளின் செல்போன்..

‘அந்த மணமகள் பெண்ணின் இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்..?’ அவனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது..

“எனக்கு அந்த நிலை வந்தால் உங்களுக்கு பதில் அனுப்புகிறேன்..” என்று பேச்சை முடித்துக்கொண்டு அவன் சொன்னதை ஆழ்ந்து சிந்திக்க, ‘ஒரு ஆண் தேவை இல்லாமல் எதற்கு பொய் சொல்ல வேண்டும்..?’ என்ற கேள்வியுடன் அவன் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தாள்..

அவன் அறிமுகம் ஆன நாளிலிருந்து அவன் பேசிய விஷயங்கள், பகிருந்த தகவல்கள் அனைத்தையும் படித்தவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிய கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய தோற்றத்தில் பார்வையை நிலைக்க விட்டாள்..

மணமகள் கோலத்திற்கு ஒப்பாக இருந்த தன் முகம் கவனித்தவள், “இந்த அன்பரசு ஒருவேளை பிரபாவாக இருப்பாரோ..’ என்ற சந்தேகம் அவளின் மனதில் எழுந்தது..

ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்கும் ஜெயாவிற்கு கிடைத்த ஒரே க்ளூ அவன் இப்பொழுது கேட்ட அந்த கேள்வி.. அந்த நொடியில் இருந்தே பிரபாவின் மீது சந்தேகம் தொடங்கியது..

‘வீட்டிற்கு வந்து பெண்கேட்க சொன்னது நான்.. இப்போ அவரோட மாமா வந்து கேட்கிறார்.. இந்த நேரத்தில் அன்பரசுவிடமிருந்து இப்படியொரு கேள்வி வருகிறது..’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது..

‘என்னோட அப்பா – அம்மாவின் வாழ்க்கையை விட்டு இப்போ என்னோட வாழ்க்கையில் விளையாட்டை தொடங்குகிறாயா..?’ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, “விதியை மதியால் வெல்ல இந்த ஜெயாவால் முடியும்.. இதுவரை நடந்து நடப்பதெல்லாம் நன்மைக்கே..” என்றவள் எழுந்து பின் வாசலுக்கு சென்றுவிட்டாள்..

அவர்கள் கிளம்பிச்செல்ல, “நாங்க முடிவு பண்ணிட்டு தகவல் சொல்றோம்..” என்றவர் கோபிநாத்திடம் சொல்ல, “சரிங்க நாங்க கிளம்பறோம்..” என்றவர்கள் கிளம்பிவிட்டனர்..

அவர்கள் சென்றபிறகு வீட்டில் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்க ஜெயா தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருக்க மகளின் அருகில் சென்ற ஆனந்த், “உன்னோட விருப்பம் என்னடா..” என்று கேட்டதும், “அப்பா நீங்க உங்களோட விருப்பம் போல செய்ங்க..” என்றவள் புன்னகையுடன்..

பெரியவர்கள் பேசி ஒரு முடிவெடுக்க, “அப்பா நான் பெங்களூர் போய் வேலையை ரிஸைன் பண்றேன்..” என்ற ஜெயாவை நிமிர்ந்து பார்த்தவர், “இல்லடா நீ அங்கே வேலையைப் பாரு.. மற்றது எல்லாம் நாங்க பார்க்கிறோம்..” என்றார்..

தன் மகளின் திருமணம் முடிவான பிறகும், “ருக்மணி அங்கே தனியாக வேலை செய்வாம்மா.. அதனால நீ அவளோட பெங்களூர் போம்மா..” என்றவர் சொல்ல, “அவங்க இருவரும் வேலை விட்டுவிட்டு வரட்டும் விடுங்க அண்ணா..” என்றார் ரேகா..

ஜெயாவின் கவனம் இங்கில்லை என்று உணர்ந்த ஆனந்த், “இல்ல அவங்க இருவரும் பெங்களூர் போகட்டும்.. மற்றது அப்புறம் பேசலாம்..” என்று முடிவாக சொல்லிவிட, “ஹைய்யா ஜெயா ருக்மணி எஸ்கேப்..” என்று சந்தோஷத்தில் குதித்தாள்..

அவளின் விருப்பம் அதுவென்று என்று உணர்ந்த அவளின் பெற்றோர், “சரி அண்ணா…” என்று அனுமதி வழங்க மறுவாரமே இருவரும் பெங்களூர் வந்து சேர்ந்தனர்..

டெல்லியில் இருந்து பிரபா பெங்களூர் வந்து சேர்ந்தான்.. அவன் ஊருக்கு போகும் பொழுது எந்தளவுக்கு சந்தோசமாக சென்றானோ அதைவிட பலமடங்கு மனமுடைந்து வீடு வந்து சேர்ந்தான்..

அவன் காரின் சத்தம் கேட்டதும் வாசலுக்கு ஓடிச்சென்ற விஜி, “அண்ணா..” என்றதும் காரைவிட்டு சோர்வுடன் இறங்கினான் பிரபா.. அவன் சோர்ந்த முகம் வைத்தே அவனின் மனநிலையைக் கவனித்தவள்,

“என்ன இப்படி வந்திருக்கிற.. உனக்கு பொண்ணு பார்த்து அப்பா ஓகே பண்ணிட்டார்.. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. அடுத்த மாசம் கல்யாணம்..” என்றவள் குஷியாகவே..

அப்பொழுது வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த நேத்ரா, “பிரபா வந்துட்டியா.. எனக்கு கதை சொல்ல ஆளே இல்ல.. ஆமா மதன் அண்ணா எங்கே..” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தான்..

சோபாவில் அமர்ந்து கணக்கு வழக்கு பார்த்த கோபிநாத், “பிரபா என்னப்பா போன வேலை எல்லாம் நல்லபடியாக முடிந்ததா..?” என்று விசாரிக்க, “ம்ம் முடிஞ்சிது மாமா..” என்றான்..

“மினியை ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தாயா..?” என்றவர் கேட்டதும், “இல்ல மாமா மினி வேலையை ரிஸைன் பண்ணிட்டா..” என்றவன் சொல்ல நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தார் கோபிநாத்..

‘அவரிடம் உண்மையை மறைக்கிறோம்’ என்று அவனுக்கு தவிப்பாக இருந்தாலும், “அவளுக்கு எப்பொழுதும் புதிய புதிய வேலையைக் கற்பதில் ஆர்வம் அதிகம்.. அதனால தான் வேலையை விட்டுவிட்டால் போல..” தனக்குள் முடிவெடுத்துக்கொண்டு, “சரிப்பா நீ போய் ரெஸ்ட்..” என்றார்..

“அப்பா திருமணத்திற்கு மூன்று முகூர்த்தம் இருக்கு..” என்ற விஜியின் குரல் அவனின் கவனத்தைக் கலைக்க, “மாமா எனக்கு திருமணம் வேண்டாம்..” என்றவன் அவரைப் பார்த்து நேருக்கு நேராக கூறினான்..

‘எனக்கு அந்த பெண்ணைத் திருமணம் பண்ணி வைங்க என்று அடம்பிடித்தவன் இப்பொழுது ஏன் இப்படி பண்ணுகிறான்..’ என்று புரியாமல் திகைத்தார்.. விஜியும் அவரின் மனநிலையிலேயே இருந்தாள்..

அவன் சிலையென நின்றிருக்க, “என்னடா பேச்சு இது.. இந்த மாதிரி இன்னொருமுறை பேசின.. அப்புறம் நடப்பதே வேற..” அவனை அதட்டியவர், “வழிய போன குலம் என்னன்னு கேப்பாங்கன்ற மாதிரி.. நீயும் இப்படி பேசற..” என்றதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது..

“எனக்கு அவளை பிடிக்கல மாமா..” என்றவன் நெஞ்சறிந்து போய் சொல்ல, “பிடிக்கல.. ம்ம் இல்லாத வீட்டில் இருந்து வரும் பெண் என்றதால் அந்த பெண்ணை பிடிக்கலயா..?” என்ற வார்த்தை அவனின் இதயத்தை பதம் பார்த்தது..

‘ஐயோ அவமேல எந்த தவறும் இல்ல.. நான்தான் எல்லாமே செய்திருக்கிறேன்..’ என்று கத்த வேண்டும் என்றே நினைத்தான்.. ஆனால் அது முடியாமல் போக மெளனமாக நின்றான்.. அவன் சிலையென நிற்க,

“என்னோட முடிவில் மாற்றம் இல்ல.. அந்த பொண்ணுதான் இந்த வீட்டிற்கு மருமகள்..” என்று தன்னுடைய முடிவை உறுதியாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மறந்தார்..

பிரபாகரன் வேதனையுடன் நின்றிருக்க, “உன்னோட சுயநலத்திற்கு மற்றவங்க வாழ்க்கையோடு விளையாடாத அண்ணா..” என்றவளும் அவளின் அறைக்கு சென்றுவிட நேத்ரா அவளின் பாட்டியுடன் சமையலறைக்கு சென்றுவிட்டாள்..          

அவன் தன்னறைக்குள் சென்ற பிரபா கோபத்தில் “நட்பு, காதல் இரண்டும் என்னோட கைவிட்டு போயிருச்சு..” என்றவன் கண்ணாடியை போட்டு உடைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்தான்..

‘என்னோட ஜெயாவின் வாழ்க்கை என்னால பாழாக வேண்டாம்..’ என்ற முடிவுடன் திருமணத்தை நிறுத்த சொன்னான்.. ஆனால் அவனின் மாமா அதில் பிடிவாதமாக இருக்க அவருடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான்..

அவர்களின் பேச்சு அவனின் காயம்பட்ட மனதை மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேறு வழியே இல்லாமல் தன் கோபத்தை வெளிபடுத்தாமல் இருக்க கற்றுக்கொண்டான்.. தவறு தன்மேல் என்று உணர்ந்த பிரபா ஜெயாவின் வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை..   

கார்மேகம் சூழ்ந்து நின்ற வானம் பார்த்த பிரபா ஜாக்கிங் சென்றவனுக்கு வீடு செல்ல மனமில்லாமல் பூங்காவிற்குள் நுழைந்தான்.. அவனின் மனநிலை அறிய அவனுக்கு அமைதி தேவை என்று அங்கே சென்றான்..

அதேநேரத்தில் காலைபொழுது அழகாக விடிந்திட மெல்ல விழிதிறந்த ஜெயா படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.. அவள் எழுந்த சிலநொடியில் ருக்மணியும் எழுந்துவிட்டாள்..

“கூ.. கூ.. கூ..” என்ற குயிலின் சத்தம்கேட்ட ஜெயா வேகமாக எழுந்துசென்று ஜன்னலின் கதவைத்திறந்து பார்க்க வானம் இருள் மூடி காணப்பட்டது.. அவர்கள் பெங்களூர் வந்து ஒருவாரம் சென்றிருந்தது..

மழை எப்பொழுது வேண்டும் வரலாம் என்ற நிலையில் இருந்த வானத்தைப் பார்த்துவிட்டு, “ருக்கு நம்ம பார்க் போகலாமா..?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் ஜெயா..

“இன்னைக்கு என்ன காலையில் பார்க்..?” என்று ருக்மணி தலைசாய்த்து அவளைப் பார்த்து கேட்க, “இன்னைக்கு பார்க் போகணும் போல இருக்கு..” என்றாள் ஜெயா உதட்டில் பூத்த புன்புருவலுடன்..

“சரி முகம் கழுவிவிட்டு வருகிறேன்..” என்றவள் எழுந்து குளியறைக்குள் செல்ல நினைக்க, “நான் முதலில் போயிட்டு வரேன்..” என்றவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்..

அவள் சென்று பத்து நிமிடத்தில் வெளியே வர, “ஒரு பத்துநிமிஷம் நான் வரேன்..” என்றவள் குளியலறைக்குள் புகுந்தாள்..  

அதன்பிறகு இருவரும் மெல்ல அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்ல திடீரென்று மழை வர, “ஐயோ மழை வந்துவிட்டது ஜெயா..” என்று ருக்மணி சொல்ல, “மழையில் நனையத்தானே உன்னை இழுத்துட்டு வந்தேன்..” என்று குறும்புடன் சிரித்தாள் ஜெயா..

அவளை முறைத்த ருக்மணி, “உன்னை என்ன பண்றேன் பாரு..” என்றவள் கையில் இருக்கும் வாட்டர் பலூனை அருகில் இருக்கும் தண்ணீர் பைப்பில் தண்ணீர் பிடித்து முடிச்சு போட்டு, “இன்னைக்கு நீ தொலைஞ்ச..” என்று ஜெயாவைத் துரத்தினாள்..

“ஹே ருக்கு நான் பாவம்..” என்ற ஜெயா முன்னே ஓட மழை வலுக்க தொடங்கிட, “இந்த மழைவேற வேகமாக வருது..” என்றவள் புலம்பியவண்ணம் ஜெயாவைத் தேடினாள்..

அதற்குள் பூங்காவின் உள்ளே நுழைந்த ஜெயா அங்கிருந்த ஒரு பைப்பில் தண்ணீர் பிடித்து, “இன்னைக்கு இருக்கு..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்..

அதற்குள் அவளைத் தேடிவந்த ருக்மணி தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, “நீ இங்கே இருக்கிறாயா..” என்று ஜெயாவின் மீது வாட்டர் பலூனை வீசிவிட்டாள்.. அது முகத்தில் வந்து பட்டதும், “பட்..” என்று வெடித்து நீர் அவளின் முகத்தில் வழிந்தது..

கொஞ்சநேரம் என்ன நடந்தது என்று புரியாமல் நின்றவளிடம், “யார்கிட்ட உன்னோட விளையாட்டு..” என்று சுடிதாரில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டு அவள் கெத்தாக..

“அதுக்கு என்று இப்படியா..?” என்ற கோபத்தில் அவளை முறைத்த ஜெயா, “எப்போ பாரு என்னிடம் வம்பு வளர்ப்பதே உன்னோட வேலை..” என்றவள் ருக்மணியைத் துரத்தினாள்..

“ருக்மணி விடு ஜூட்..” என்றவள் முன்னே ஓடிவிட, “ஏய் ருக்கு நில்லு இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று கையில் வாட்டர் பலூனுடன் ருக்மணியைத் துரத்தினாள் ஜெயா..

மழை நன்றாக பொழிய நீர் ஆங்காங்கே தேங்கி நிற்க தூரத்தில் ஓடிய ருக்மணியைக் குறிபார்த்து வாட்டர் பலூனை வீசினாள் ஜெயா.. அதற்குள் யாரோ இடையில் வந்துவிட அவரின் முகத்தில் அந்த வாட்டர் பலூன் விழுந்துவிட்டது..

அவன் மீது வாட்டர் பலூன் விழுந்து பட்டென்று வெடிக்க அவனின் முகத்தில் நீர்வடிய அதுவரை இருந்த சிந்தனையெல்லாம் மாறி கோபத்தில் திரும்பிய பிரபாவின் எதிரே வந்து நின்றாள் ஜெயா..

“ஐயோ நான் வீசும் பொழுதும் மட்டும் யாராவது குறுக்க வந்தறாங்க..” என்றவள் புலம்ப அவளின் முகத்தில் இருந்த நீர்த்துளிகள் அவனுக்கு பனியில் நனைந்த மலரின் நினைவுப்படுத்தியது..

அவளின் முகம் பார்க்க முடியாமல் உள்ளுக்குள் நொறுங்கிப்போனான் பிரபா.. இதே நேரம் அவன் மட்டும் அங்கே அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் இப்பொழுது அவள் முகம் பார்த்தும் அவன் சொல்லும் வார்த்தை, ‘ஐ லவ் யூ மலர்..’ என்றுதான்..

ஆனால் விதி அவனின் கைகளை கட்டிபோட சிலையென நின்றவனை நிமிர்ந்து பார்த்த ஜெயா, “என்ன ஸார் சொன்ன மாதிரி வீட்டிற்கு வந்து பொண்ணு கேட்டுட்டு வந்துட்டீங்க.. ஜெயாவை அவ்வளவு பிடிக்குமா..” அவள் குறும்புடன் கேட்டாள்..

“ஜெயா..” அவன் தொடங்கும் முன்னே அங்கு வந்த ருக்மணி, “அண்ணா ஊரில் இருந்து எப்போ வந்தீங்க.. ஆனாலும் உங்களுக்கு செம தில்லு அண்ணா.. வீட்டில் வந்து பொண்ணு கேட்டு பிக்ஸ் பண்ணற லெவலுக்கு காய் நகர்த்திட்டீங்க..” என்று அவள் பெருமையாக..

ஜெயா பிரபாவைப் பார்த்து புன்னகைக்க, “கல்யாணம் பிக்ஸ் ஆகாமல் எதையும் தேவையில்லாமல் பேசாதே ருக்மணி..” என்றவன் கோபத்துடன் திரும்பிச் செல்ல இதே மாதிரி ஒருமுறை கோவிலில் நடந்தது அவளுக்கு நினைவு வந்தது..

“பிரபா..” என்ற ஜெயாவின் குரல்கேட்டு அவன் நின்று திரும்பிப் பார்க்க, “நீங்க எங்க ஊர் கோவிலுக்கு வந்திருக்கீங்களா..?” என்றவள் சந்தேகமாக கேட்க, ‘நீ எதற்கு கேட்கற என்று எனக்கு தெரியும்..’ என்று நினைத்தவன்,

“நான் கோவிலுக்கு வந்தேன்.. ஆனால் அங்கே உன்னைப் பார்க்கல..” என்றவன் நிற்காமல் செல்ல, ‘உங்களுக்கு பொய் பேச வரல பிரபா..’ என்று நினைத்த ஜெயா, “ருக்மணி நீ வா நம்ம ரூமிற்கு போலாம்..” என்றாள்..

“முடிந்தவரை இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும்.. அதேமாதிரி இனிமேல் ஜெயாவை நேரில் சந்திக்கவே கூடாது..” என்ற உறுதியுடன் வீட்டிற்கு சென்றான்.. ஆனால் அது ரொம்ப சுலபமான விஷயம் அல்ல என்று அவன் உணர்ந்தான்..

இனிவரும் நாட்களில் அவனை பற்றிய உண்மைகளை அறிவாளா ஜெயா.. அவன்தான் அன்பரசு என்று கண்டுபிடித்துவிடுவாளா..?

error: Content is protected !!