Thendral’s Kandharva Loga – 41 (FINAL)

கந்தர்வ லோகா 41 (FINAL)

 

லோகாஷி இப்போதும் அதீந்த்ரியனின் கை வளைவிற்குள் நின்று கொண்டிருந்தாள். அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘தன்னை வெளியே அமர வைத்துவிட்டு நீருக்குள் சென்றவன், எப்போது வெளியே வந்தான்! ஒரு பூனையைத் துரத்திக் கொண்டு, இத்தனை தூரம் வந்து விட்டோமே! அவனிடம் சொல்லாமலே! எங்கெங்கு தேடினானோ! ‘ அவளின் சிந்தனை அதில் நிலைத்திருக்க,

எதிரே நின்று விஷ்வா கத்திக் கொண்டிருப்பது அவளுக்கு சிறிதம் அவளது காதுகளை எட்டியதாகத்  தெரியவில்லை. அவனைப் பார்த்ததாகவும் தெரியவில்லை.

அவளின் முகத்தைப் பார்த்த கந்தர்வன், தன்னிடம் மட்டுமே அவளின் எண்ணம் இருக்கிறது என்று வெற்றிப் புன்னகை சிந்தினான். விஷ்வாவை ஏளனமாகப் பார்க்க,

அப்போது தான் விஷ்வா உணர்ந்தான். இது அந்த கந்தர்வனின் மாய வேலை. தன்னையே அவளின் கண்களிலிருந்து மறைத்துவிட்டான் என்பதை ஒரு வலியுடன் அறிந்தான்.

இப்போது அவனும் விஷ்வாவைக் கண்டு கொள்ளாமல், லோகாவிடம் தன் கவனத்தைத் திருப்பினான்.

“என்ன விட்டுட்டு எங்க போன லோகா.. எவ்ளோ நேரம் தேடினேன் தெரியுமா? சரி வா நம்ம வீட்டுக்குப் போகலாம்.” விஷ்வாவிடம் முன்பு காட்டிய காட்டம் அனைத்தையும் மறைத்து முகத்தில் காதலுடன் உரிமையாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவளும் ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருக்க, விஷ்வா சற்றும் பதட்டம் இல்லாமல் , இப்போது யோசனையில் ஆழ்ந்தான். அடுத்து தான் செய்ய வேண்டியது என்ன என்பதை திட்டமிட்டான்.

தன்னைப் பற்றிய எண்ணத்தை லோகாவிடம் திணிக்க நினைத்தான். அவளை எண்ணங்களால் துரத்த முயன்று தோற்றான். காரணம், அந்த கந்தர்வன் பிடியில் அவள் இருப்பதால் அவளின் மூளையில் உள்ள எண்ணங்களின் அறை சாத்தப் பட்டது  போல இருந்தது.

விஷ்வா எவ்வளவோ முயன்றும் அவளது எண்ணத்தோடு தன்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் சற்றும் சோர்வில்லாமல் அடுத்த கட்ட முயற்சியாக, அந்த கந்தர்வனுடைய எண்ணத்தையே படிக்க முயன்றான்.

அவனது சக்தி இப்போது அந்த அளவிற்கு முன்னேறியிருந்தது. யாராக இருந்தாலும் கடவுளுக்கு அடுத்தபடி தான். அதுவும் எல்லாம் ஒன்று எல்லாரும் சமம் என்று பக்குவத்தை அடைந்தவனுக்கு இது ஒரு விஷயமாகவே தெரியவில்லை.

குருஜிக்குத் தெரியும், விஷ்வா இப்போது கந்தர்வனை எளிதாக காணவும் பேசவும் முடியும் என்று. அவனது அடுத்த செயல் கந்தர்வனையே எண்ணங்களால் சிறைபிடிபான் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால் தான், இதில் அவனது முழு முயற்சி இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

அவனது சிறு வயது முதலே அவன் பெரிய அளவில் வருவான் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அவரே எதிர் பார்க்காத ஒன்று இன்று நடக்கப் போகிறது. அவனுக்கு சொல்லிக் கொடுத்த , அவன் பயிற்சி எடுத்த அனைத்தும் இன்று அவனுக்குக் கை கொடுக்கப் போகிறது. ஆம்! இப்போது விஷ்வா பயணிப்பது கந்தர்வனது எண்ணத்தில்.

லோகாவின் எண்ணங்களை தன்னைகச் சுற்றியே இருக்கும்படி பூட்டி வைத்தவன், தன் எண்ணங்களை லோகாவைக் கண்ட சந்தோஷத்தில் கட்டுக் கடங்காமல் திறந்து விட்டிருந்தான்.

அவன் நினைப்பது இப்போது விஸ்வாவிற்குப் புரிந்தது. லோகாவை தனியே அழைத்துச்செல்வது தான் அதீந்த்ரியனின் இப்போதைய எண்ணம். அதனால் அவனது எண்ணங்களில் புகுந்து மாறுபாடுகளை ஏற்படுத்த நினைத்தான்.

இதன் மூலம் லோகாவிடம் அவன் பேசும் வார்த்தைகளை இவன் மனதின் வார்த்தைகளை வைத்து மாற்ற நினைத்தான். அதை வைத்து அவன் நெடுநேரம் அதீத்ரியனை ஏமாற்ற முடியாது. முதல் மாறுபட்ட வார்த்தையிலிருந்தே அதீ கண்டுகொள்வான்.

அதனால் அவன் உபயோகிக்கும் அந்த வார்த்தை லோகாவின் மனதைத் தொடும் வார்த்தையாக இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாது அது விஷ்வாவை அவளுக்கு ஞாபகப் படுத்துவதாகவும் இருத்தல் மிக மிக அவசியம்.

 

‘அப்படி என்ன சொன்னால் தன்னை பற்றி நினைப்பாள் ‘ என வெகுவாக யோசித்தான். அப்படி மட்டும் அவள் நினைத்து விட்டால், அதீ யிடம் அதிகம் போராடாமல் லோகாவை காப்பாற்றி விடலாம்.

‘அப்படி அந்த ஒரு வார்த்தை தன்னை நினைவுபடுத்தவில்லை என்றால் !?? இரண்டாவது வார்த்தை!!

‘அதற்குள் அதீக்கும் , தான் அவன் நினைவுகளில் புகுந்து, அவன் வார்த்தைகளை கையாள்வது தெரிந்து விட்டால்!??’

அவன் மனது அடுத்து செய்யவேண்டியதை பற்றி யோசிக்கும் முன்பே அசரத் தொடங்கியது.

“ இல்லை இல்லை ! தயங்காதே மனமே! லோகி வேண்டும்.அதனால் நிதானமாக யோசி. வார்த்தைகளையும் பார்த்துத் தான் உபயோகிக்க வேண்டும். அதே நேரம் அதீயும் கண்டுபிடிக்கக் கூடாது.

அதற்கு ஒரு வழி இருக்கிறது தான். ஆனால் மிக மிக நுணுக்கமாக , கவனம் சிதறாமல் , சர்வ ஜாக்கிரதையாக வார்த்தை ஜாலத்தை கொடுக்க வேண்டும்.” அவன் மனது அவனிடமே பேசியது.

அதாவது, அதீந்த்ரியன் பேசும் போது, அவனது வார்த்தைகளைக் கொண்டே, அவனை ஏமாற்ற வேண்டும். அவன் பேசும் போது வரும் வார்த்தைகளை சிறிது திருத்தி பேச வைக்க வேண்டும். அந்த வார்த்தை லோகாவின் மூளையை யோசிக்க வைக்க வேண்டும். அதீ வாய் குழறி பேசியதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

விஷ்வாவின் மனது ஒரு சிக்கலான கோலத்தை தெளிவாக, சிக்கிக் கொள்ளாமல் போடா நினைத்து.

சிறிது சிரமம் தான். இதில் மாட்டிக் கொண்டால், அதீயின் கோபம் தன் பக்கம் திரும்பும், ஆனால் அவன் சுதாரித்துக் கொண்டு லோகாவை நோக்கி முன்னேறி விட்டால்!!

நினைக்கவே நெஞ்சம் பதறியது. கடவுளே !! எனக்கு வாக்கு வன்மையைக் கொடு. பக்கத்திலேயே நில்! அவன் மனது அவசர வேண்டுதலை வைத்தது.

அந்த வேண்டுதலுக்குப் பலன் கொடுக்க தெய்வம் துணை நிற்குமா என்பது சந்தேகம் தான்.

மனதை திடப் படுத்திக் கொண்டான். இத்தனையும்,  தன்னை கண்டுகொள்ளாமல் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் லோகாவைப் பார்த்துக் கொண்டே சிந்தித்தான்.

அவள் தன்னைப் பற்றியே நினைவே இல்லாமல் நிற்பது கண்டு , வாழ்வில் இதை விடக் கொடுமையை தான் சந்திக்கப் போவதில்லை என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இல்லை.

அதீயோ விஷ்வாவின் நிலையறிந்து, அவன் முன்னேயே லோகாவின் தோளில் கை போட்டு, தன் இதயத்தின் அருகில் அவளை நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தான். வாழ்வையே வெறுத்தான் விஷ்வா!!

“ லோகா! நாம ரொம்ப நேரமா இங்கயே நிக்கறோம், வா வீட்டுக்குப் போகலாம்.” அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.

லோகாவும் அவனுடன் ஒன்றி நடக்க, சிந்திக்கும் திறனற்றுப் போனவலாகத் திரிந்தாள். அவன் தான் தன் வாழ்க்கையில் இருக்கும் ஒரே மனிதன் என்பதைப் போல நடந்து கொண்டாள். அவனைத் தாண்டி என்ன, அல்லது அவனுடன் தான் வாழ்கிறோமா இல்லையா என்ற கேள்வி கூட அவளுக்கு எழாதவாறு பார்த்துக் கொண்டான் அதீ.

அவள் எண்ணம் முழுதும் அவன் தன்னைக் காதலிக்கிறான், தனக்கும் அவனை மிகவும் பிடித்திருக்கிறது, பித்துப் பிடிக்கும் அளவு , என்பதுதான்.

அதீந்த்ரியன் அவளை விஷவாவின் கண்முன்னே கூட்டிக் கொண்டு மறைந்தான். அவனுடைய அந்த மாய வீட்டிற்கு. அவனுக்கு மட்டுமே அது தெரியும்.

லோகாவை விட்டு இம்மியும் நகரவில்லை. ஒட்டிக் கொண்டும் உரசிக் கொண்டும் திரிந்தான். அவளை அவ்வப் போது இடையில் கைவைத்து அவளை நெகிழ்த்தினான்.

“ அதீ போதும் .. கூச்சமா இருக்கு..” அவள் குழந்தையாய் சிணுங்க,

“ கூச்சம் தான் பெண்ணிற்கு அழகு, அதிலும் வெட்கப்படற உன் சிவந்த முகத்தோட  ,அந்த அழகான கண்களால பார்த்து என்னை மயக்கிடற நீ..” கலைந்த அவளது கூந்தலை ஒதுக்கி அவளின் காதுகளில்

தன்னுடைய இதழ்களை ஒற்றிப் பேசினான்.

அவளுக்கு இன்னும் அது சிலிர்க்க வைத்தது. அவளைத் தூக்கித் தன மடியில் அமர்த்திக் கொண்டான்.

விஷ்வா அவனது மூளையில் தான் குடியிருந்தான். அவன் பேசும் அந்த காதல் வசனத்தை கோபத்தை அடக்கிக் கேட்டுக் கொண்டான். அடுத்து அவன் என்ன பேசப் போகிறான் என்பதை அதீயின் மூளை சிந்திக்கும் போதே அந்தத் தவகல் விஸ்வாவிற்கும் சென்றது.

அவனது வாக்கியத்தை மாற்ற இது தான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. அவன் இப்போது லோகாவை அழைக்கும் போது , அந்த “லோகா” என்பதை மாற்றி “லோகி” என்று தான் அழைப்பது போல செய்ய நினைத்தான்.

அதீக்கும் சந்தேகம் வராது, அவளுக்கும் உரைக்கும்.

கந்தர்வன் பேசத் தொடங்கினான்.

அவள் அவனை விட்டு எழ முயற்சிக்க, அவளது கரம் பிடித்து இழுத்தான். சற்றும் எதிர்ப்பார்க்காத லோகா, அவன் மேல் எக்குத்தப்பாக விழுந்தாள்.

அவளின் மார்பு அவன் நெஞ்ஜோடு அழுந்த விழுந்து கிடந்தாள்.

“ ஆஹ்ஹ்… என்னால எவ்வளவு நேரம் காத்திருக்க முடியும்னு தெரியல.. நீ அசஞ்சா கூட கட்டுப் படுத்த முடியல….லோகி

அந்த லோகி என்ற வார்த்தை சிறு அதிர்வை அவளிடம் ஏற்படுத்தியது. அந்த லோகி என்ற அழைப்பு நீண்ட காலமாக தன்னுடன் பழகிய ஒன்றாகத் தோன்றியதே தவிற , விஷ்வா வின் நினைப்பு வரவில்லை.

அவளிடம் மயங்கிக் கிடந்த அதீயும் , அவனின் கைகளால் அவளின் முதுகை துளைத்துக் கொண்டிருந்தானே தவிற, தான் லோகி என அழைத்தது அவனுக்கே தெரியவில்லை.

இல்லை அவன் அழைக்கவில்லை! விஷ்வா அவனை அழைக்க வைத்தான். அவனது எண்ணங்களோடு பயணிந்து வாரத்தைகளை தனதாகிக் கொண்டான்.

அந்த சிறு அதிர்வு லோகாவிடம் இருந்தாலும், கந்தர்வனோடு கட்டுண்டு கிடந்ததால் அதற்கு மேல் யோசிக்கவில்லை.

 

தன் பதிலுக்காக எதிர்ப்பார்த்து அவளது முகத்தில் பார்வையை பதித்திருந்த கந்தர்வனிடம் என்ன பதில் சொல்லுவாள்!! அவனிடம் தானும் மயங்குகிறேன் என்றா!! வெட்கம் கண்கள் வரை வந்தது. மயங்கியதன் அறிகுறியாக கண்கள் மூடியது.

அவளை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டு அவள் மேல் படர்ந்தான்.

கண்டும் காணாதது போல கைகளை மடக்கிப் பொறுத்துக் கொண்டான் விஷ்வா..

முகத்தை கைகளால் மூடிக் கொண்டு படுத்திருந்தாள் லோகா.

அவளது தாவணி இப்போது அதீயின் கைகளில் விளையாடியது. வெற்று இடையைத் தடவிக் கொடுத்தான் கந்தர்வன்.

கள் குடித்த வண்டைப் போல ஆனான். அவளை விட அவனுக்கே மோகம் உச்சத்தில் இருந்தது. பூவிலிருந்து தேன் எடுப்பதைப் போல மெல்ல மெல்ல அவளை ரசித்தான்.

விஷ்வா ருத்ரதாண்டவம் ஆடக் காத்திருந்தான். பொறுமை எல்லைகளை கடந்து சென்றுகொண்டிருந்தது.

“லோகி!! என்ன நெனச்சுக்கோ டீ!!” உள்ளம் குமுறியது.

*****

பூசாரியும் குருஜியும் கோவிலைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கே மண்டபத்தில் அந்த அணையா வி ளக்குடன் அமர்ந்திருந்தார் பாட்டி.

குருஜியைப் பார்த்ததும் அவருக்கு ஆனந்தமாகி விட்டது.

“ வாங்க குருஜி! விஷ்வா வந்துட்டானா ? லோகாவை காப்பாத்திட்டானா?!” ஆர்வம் அதிகமாகியது.

“ வந்தாச்சு ம்மா.. ஆனா இன்னும் அவன் போராடிக்கிட்டு தான் இருக்கான்.. அவளை முழுசா கொண்டுவந்துடுவான். உங்க முடிவைக் கேட்டுத் தான் நான் ஆடிப் போயிட்டேன். என்ன சொல்றதுன்னே தெரியல!” குரலில் வருத்தம் மிகுந்தது.

“ என்னைப் பத்தி கவலையில்லை குருஜி! லோகா விஷ்வா வாழ்க்கை தான் முக்கியம். நான் சந்தோஷமா எங்க அம்மா கூட இருக்கப் போறேன். இதுல வருத்தப் பட ஒண்ணுமில்ல.” சிரித்த முகத்துடனே கூறினார்.

குருஜிக்கு புரிந்தது. அவர் இப்போது உலக வாழ்வை விரும்பவில்லேய் என்று. கடவுளைக் கண்ட எவனும் இன்னும் இந்த பூமியில் வாழத் துடிப்பானோ! அவனுடன் சேர்வதே உண்மையில் பேரானந்தம். அதுவே ஜென்ம பலன். உணர்ந்தார்.

அதற்குள் பூசாரி உள்ளே சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

பாட்டி மீண்டும் சென்று கோவில் கிணற்றில் குளித்து விட்டு வந்தார். அன்று தனது வாழ்வின் கடைசி நாள் என்று நன்றாவே தெரியும். இருந்தாலும் எந்த மகளுக்காக தன் தாயைத் துறந்தாரோ அம்மகளை கடைசியாகப் பார்க்கும் சிறு ஆசை தோன்றியது. இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், அபிஷேகம் பார்க்க அமர்ந்தார்.

குருஜியும் அங்கே வந்து நிற்க, பாட்டியின் மூடிய கண்களுக்குள் வலியைக் கண்டார்.

“ நீ உன் மகளை காட்டாயம் பார்ப்பம்மா. விஷ்வா நேத்து நாங்க கிளம்பி வந்தப்பவே , ஊரிலிருந்து உன் மகளையும் மருமகனையும் அவனோட அப்பாவையும் வர சொல்லிட்டான்.அவங்க கிளம்பி வந்துட்டு இருப்பாங்க. “ அவர் சொன்னதும் மெல்லிதாக அவரிடம் புன்னகை தோன்றியது.

சட்டென ஏதோ தோன்ற, குருஜியை ஏதோ கேட்க வந்தார் பாட்டி. உடனே கையைக் காட்டி நிறுத்தினார் குருஜி.

“ உன் விஷயமோ இல்ல லோகா விஷயமோ எதுவும் அவங்களுக்குத் தெரியாது. ஊர்ல நிச்சியதார்த்தம் வெச்சுக்கலாம்னு சொல்லி வர சொல்லியிருக்கான்.” என்று சொல்லி சிரித்தார்.

பாட்டிக்கு இருந்த சந்தேகம் நீங்கி சற்று நிம்மையுற்றார்.

“ கடைசி வரை இந்த விஷயம் அவங்களுக்குத் தெரிய வேண்டாம் குருஜி! விஷ்வா கிட்ட சொல்லிடுங்க” மெல்லிய குரலில் பாட்டி சொல்ல,

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து வைத்த அம்மனுக்கு தீபாராதானை காட்டினார் பூசாரி.

 

இருவரும் கண்ணை மூடி அந்தக் கடவுளிடம்  உருக்கமான பிராத்தனைகளை வைத்தனர்.

பூசாரி அருகே வந்தார். பாட்டிக்கு திருநீர் கொண்டுவந்து கொடுக்க, அதை கைகளில் அள்ளி நெற்றி நிறைய பூசிக் கொண்டார் பாட்டி.

பூசாரி பாட்டியிடம் விசாரித்தார்.

“ அவ தரிசனம் கிடைச்சுதா தாயி!! “

“ ஆமாங்கையா…ஆனந்தமா இருந்தது. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. அவளை காணக் கண் கோடி இருந்தாலும் பத்தாது. சொல்லும்போதே உடல் சிலிர்த்தது அவருக்கு.

அவளை சேரும் நேரத்தைத் தான் எதிர்ப்பார்க்கறேன்.” கண்களில் நீர் தளும்பக் கூறினார்.

பூசாரிக்கும் உடல் புல்லரித்தது. “ நீ கொடுத்துவெச்சவம்மா.. அவளே உன்னை அழைச்சுப்பா.. அது வரை நீ பொறுமையா இரு. அவளுக்குத் தெரியும் எப்போ உன் நேரம்னு. இப்போ நீ நிம்மதியா வீட்டுக்குப் போய்ட்டு வா. உன் மக வந்துடப் போறா..”

“சரிங்க ஐயா!” கிளம்ப எத்தனிக்க,

“மறந்துடாத உன்னோட உயிர் அவ கிட்ட சேர்ந்த  பிறகு தான் லோகா முழுசா வெளில வருவான்னு ஆத்தா சொல்லியிருக்கா”  அனுப்பி வைத்தார்.

கசப்பான உண்மை… எச்சில் விழுங்கி ஜீரணித்துக் கொண்டார் பாட்டி.

******

லோகாவின்  இடையில் இப்போது அவனது உதடுகள் தான் விளையாடிக் கொண்டிருந்தது. தரையில் விழுந்த மீன் போலத் துடித்துக் கொண்டிருந்தாள் லோகா.

ஆனாலும் அவளுக்குள் எந்த ஒரு ரசாயன மாற்றமும் ஏற்படவில்லை . அது ஏன் என்று அவளுக்கும் தெரிய வில்லை. அதற்குக் காரணம் அந்த அழைப்பு.’ லோகி ‘ என்று ஒருவேளை அதீ தான் அழைப்பானோ! நான் தான் மறந்துவிட்டேனோ என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

**

“ அம்மா! அவங்க வந்துட்டாக… “ வேலைக்காரப் பெண் ஓடிவந்தாள்.

ரகுபதியுடன், மகேஸ்வரனும் மஞ்சுளாவும் வர, எதையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே இருந்தார் பாட்டி.

குருஜியை அங்கே கண்டதும், அனைவருக்கும் கேள்வி எழ, விஷ்வா தான் வரச் சொன்னதாக கூறி சமாளித்தார்.

“எங்க அம்மா விஷ்வாவும் லோகாவும்?” மஞ்சுளா மகளைத் தேட,

பாட்டி சிறு தடுமாறினாலும் எதையோ சொல்லி சமாளிக்க நினைத்தார்.

“ அதுக ரெண்டும் பத்தி உனக்குத் தெரியாதா, ஊர் சுத்த போய்டுச்சுங்க.. விடு மஞ்சு சந்தோஷமா இருக்கட்டும்.” என்று சொல்லிவிட,

மற்றவர்களும் அன்றே நல்ல நாள் என்று நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

விஷ்வா லோகா இல்லாதது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.

சொந்த வீட்டிற்கு வந்த மஞ்சுளா, அனைவரிடமும் தன் சிறு வயது அனுபவங்களை , அந்த வீட்டுடன் தான் அடைந்த இன்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

வீடே கலகலப்பாக இருந்தது. பாட்டியும் அதைத் தான் விரும்பினார்.

திடீரென, பாட்டிக்கு ஒரு குரல் கேட்டது…

“ லோகாம்பா….” பாட்டியின் முழுப் பெயர்.

யாராக இருக்கும் என்று திரும்பிப் பார்க்க, அவரின் கண்களுக்கு மட்டும் வாசலில் ஒரு சிறு பெண் நிற்பது தெரிந்தது.

பாட்டி எழுந்து வெளியே செல்ல, அந்த சிறு பெண் இரு கைளையும் பாட்டியை நோக்கிக் காட்டி அவரை அழைத்தாள்.

இவர் எழுந்து செல்வதற்குள் அவள் மறைந்து விட்டாள். பாட்டி புரிந்து கொண்டார்.

இது தனக்கான அழைப்பு என்று!

உடனே மீண்டும் வீட்டிற்குள் வந்தவர்,

“ ஒரு நிமிஷம்” என்று அனைவரின் பேச்சையும் நிறுத்தினார்.

‘என்ன’ என்பது போல அனைவரும் பார்க்க,

“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுனால என் பேத்தியோட நிச்சியம் இன்னிக்குத் தான் நடக்கணும்” என்க,

புரியாமல் பார்த்தார் மகேஸ்வரன். “ இன்னிக்குத் தானா அத்தை ஏற்பாடு செஞ்சிருக்கோம். அப்பறம் என்ன?”

“ என்ன ம்மா” மஞ்சுளாவும் வர,

“ இல்லப்பா.. இப்போவே நேரம் நல்லா இருக்கு, அதுனால இப்போவே தட்டை மாத்திக்கலாம்.” அவசரப் படுத்தினார்.

“விஷ்வாவும் லோகாவும் வந்துறட்டுமே மா “ ரகுபதி சொல்ல,

“அவங்க இருக்கணும்னு அவசியம் இல்லப்பா.. அதுங்களுக்கு சம்மதம்னு தான் நமக்குத் தெரியுமே! அதுனால என் கண்முன்னாடி சீக்கிரம் தாம்பூலம் மாத்திக்குங்க “ சொன்னவுடன், ஏனோ யாருக்கும் மறுக்கும் எண்ணம் வரவில்லை.

லோகாவிடம் லயித்திருந்த கந்தர்வனும் இப்போது கவனமில்லாமல் தன் குறிக்கோளில் குறியாக இருந்தான். அதனால் தடுக்கும் சக்தி எதுவும் இல்லாமல், லோகாவை விஷ்வா விற்கு திருமணம் முடிப்பதாக , அனைவரும் ஒப்புக் கொண்டு தட்டை மாற்றிக் கொண்டனர்.

பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“ தெய்வமே!! அபிராமி!! நீயே துணை! நீயே என் வம்சத்துக்கு தெய்வம்! என்னை ஏத்துக்கோமா தாயே!!” பெருத்த சத்தத்துடன் சொல்ல, வித்தியாசமாகப் பார்த்தனர் அனைவரும்.

அவர்களின் கண் முன்னேயே பாட்டி கீழே விழுந்து கண்களை மூடினார்.

“அம்மா!!” அருகில் ஓடிவந்தார் மஞ்சுளா….

எல்லோரும் பெருத்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பூசாரியும் அங்கே சரியான நேரத்திற்கு வந்தார்.

குருஜியும் பூசாரியும் அர்த்தப் பார்வை பார்க்க, மற்றவர்கள் பாட்டியின் அருகே நின்று கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்.

 

அந்த நொடியே, அதீந்த்ரியனை வாய் தவறி வார்த்தையை விட வைத்தான் விஷ்வா.. தனது பிரம்மாச்த்திரமாக நினைத்த வார்த்தை,

அவளின் இடையில் முத்தமிட்ட கந்தர்வன், மோகத்தில்,

“ நீ மலர், நான் தேன் குடிக்க வந்த வாண்டு!!”

அவ்வளவு தான். அவனின் தீண்டலில் சுகம் பெறாமல் , ஒட்டாமல் இருந்த லோகா, அவன் வார்த்தையை கவனித்தாள்.

‘வாண்டா…’ இந்த வார்த்தை … இந்த வார்த்தை… இது என்னை அழைக்கும் வார்த்தை… யார் அது! ‘

“விஷ்வா…….!” மூளை உரைத்தது…

படாரென எழுந்தவள், அவனை உதறித் தள்ளிவிட்டு தன் மேலாடையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

கோபம் கொப்பளிக்க எழுந்தான் அதீந்த்ரியன்….

“ அடேய் ! விஷ்வா…! “ அப்போது தான் தன் வாயிலிருந்து வந்த வார்த்தை விஷ்வா வால் சொல்லப் பட்டது என்று!!

மறுகணமே அந்த மாயவீடு மறைந்து, அந்தக் கோவிலின் முன் இருந்தனர் லோகாவும் அதீந்த்ரியனும்.

விஷ்வா அங்கே நின்று கொண்டிருக்க, ஒன்றும் புரியாமல் விழ்த்த லோகா, தாயைத் தேடிய கன்றைப் போல, விஷ்வாவைக் கண்டதும், ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

“விஷ்வா…. விஷ்வா…” தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.  அவளைக் கட்டிக் கொண்டு அவளது முதுகை வருடிக் கொடுத்தான் விஷ்வா…

“ஒன்னும்மில்ல டா… நீ என்கூட தான் இருக்க கண்ணம்மா… அழாத டா..” சொல்லியவன் கண்களும் கண்ணீரில் தேங்கி நின்றது.

அவளைத் தேற்றுவதே இப்போது பிரதானமாகத் தோன்றியது.

கண்கள் சிவக்க எதிரே நின்று கொண்டிருந்தான் அதீந்த்ரியன். அவனை எப்படி சமாளிக்க, என்று யோசிக்கும் போதே அவனது கைகளில் தோய்ந்து மயங்கி விழுந்தாள் லோகாஷி.

இப்போது இதுவும் நல்லது தான் என்று அவளை ஓரமாகப் படுக்க வைத்தவன் , அதீயின் முன்னே வந்து நின்றான்.

“என்னை ஏமாற்றி நீ ஜெயித்துவிட்டாய் விஷ்வா… இது நல்லதல்ல.. எனக்கு லோகா வேண்டும். அது இப்போது இல்லையென்றால், உனக்கும் அவள் வேண்டாம்! ” கையில் வாளுடன் நின்றான் கந்தர்வன்.

அசராமல் முன்னே வந்து நின்றான் விஷ்வா.. “ மனிதர்களுடன் கந்தர்வர்கள் எப்போதும் சிநேகமாகவே இருப்பாங்கன்னு கேள்விப் பட்டேன். நீயும் கந்தர்வன் தானே! “ அவனது பொறுமையான பேச்சு அதீயை நிறுத்தியது.

விஷ்வா மேலும் தொடர்ந்தான். “ அவ சின்னப் பொண்ணு. உங்களுக்கு அவ பத்தோட பதினொன்னு, ஆனா எனக்கு அவ தான் எல்லாமே! தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க. இதையெல்லாம் நான் முன்னாடியே சொல்லிக் கேட்டிருந்தா நிச்சயம் உங்களுக்கு மோகம் தான் முன்ன வந்து நிக்கும்.

ஆனா இப்போ அவள நீங்க விட்டுட்டு போய் தான் ஆகணும். அதுனால தான் பொறுமையா சொல்றேன். “

அவன் சொல்லும் கூற்றில் ஒரு ஞாயம் இருப்பதாகத் தோன்ற, இனி அவன் நினைத்தாலும் லோகாவை நெருங்க முடியாது, காரணம் தான் கொடுத்த வரம்.

கையிலிருந்த வாளை மறைத்துக் கொண்டவன், ஒரு பெருமூச்சுடன், நின்றான்.

“ சரி நான் வருகிறேன்! இனி என்னால் லோகவிற்கு எந்தக் குழப்பமும் வராது!” என்று கிளம்ப நினைத்தான்.

“ஒரு நிமிஷம்!” விஷ்வா நிறுத்த,

அவனை கேள்வியாகப் பார்த்தான் அதீ.

“ எனக்கு ஒரு உதவி வேணும்” –  விஷ்வா

“ என்ன வென்று சொல்” – அதீ

“ உங்க கூட இருந்த அனைத்தையும் லோகி மறக்கணும். ஔ கனவாவே அவளுக்குத் தோன்றனும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இது உணமைன்னு அவ சாகர வரைக்கும் தெரியக் கூடாது! “ விஷ்வா கேட்க,

 

அவன் நிலைமையும் உணரத்தான் அதீந்த்ரியன்.

“ சரி விஷ்வா. அவளுக்கு நடந்தவை அனைத்தும் மறக்கச் செய்து விடுகிறேன்.  லோகா என்னை மறந்தாலும், நான் லோகாவை மறக்க மாட்டேன்.” வருத்தத்துடன் தெரிவித்தவன், லோகாவின் மூளையில் தன் ஞாபகப் பதிவை ஈர்த்துக் கொண்டான்.

கடைசியாக அவளின் உருவத்தை கண்களால் நிரப்பிக் கொண்டு , அவன் செய்த அந்த அழகிய சிலையையும் எடுத்துக் கொண்டு கந்தர்வ லோகம் நோக்கிப் பயணப் பட்டான்.

இரண்டு மாதம் கழித்து ……

“அடியே வாண்டு ! நாளைக்குக் கல்யாணம் , இப்போ எதுக்கு டி மொட்டை மாடிக்குக் கூப்பிட்ட?” விஷ்வா லோகாவின் மண்டையைக் கொட்ட,

“ஸ்ஸ்ஸ்…ஆஆஅ வலிக்குது மாமா!!!” அவளின் சொல்லில் காதில் தேன் வந்து பாய்ந்தது.

அவளை பிடித்து இழுத்து , உதட்டைக் கையில் பிடித்துக் கொண்டு,

“ ஹே! இப்போ இது என்ன சொல்லுச்சு!! “

‘இப்போ மட்டும் குழைவியே!! ‘ மனதில் அவனுக்கு அழகு காட்டி வெளியில் தெரியாதது போல நடித்தாள்.

“அது ஒன்னும் சொல்லலையே…” கண்களை சுழற்றி எங்கோ பார்த்தபடி சொல்ல,

“ நான் கேட்டேன்! இப்போது இது என்ன சொல்லுச்சு, ஒழுங்கா சொல்லு, இல்ல வெத்தல போடாமலே இந்த வாய செவக்க வெச்சுடுவேன்! “ அவளது கழுத்தில் மாலையாக கை கோர்த்து , நெருக்கமாக நின்று கேட்டான்.

“அப்படியா… பயந்துட்டேன்.. வெறும் வாய் தான் சாமியாருக்கு.. முடிஞ்சா பண்ணு டா… “ அவனை வேண்டுமென்றே உசுப்பேற்றினாள்.

“என்ன டி .. குளிர் விட்டுப் போச்சா… போன போகுது சின்ன பொண்ணுன்னு விட்டுவெச்சா..ரொம்பத் துள்ற..இனி நீ லாக் தான் “ அதற்கு மேல் பேசவிடாமல் அவளது வாயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

நீண்ட நேர முத்தம்… போதும் என்ற மனமில்லாமல், வேண்டும் வேண்டும் என்று இருவருக்குமே கேட்டது.

பதினைத்து நிமிடம் நான் ஸ்டாப் திண்டாட்டத்திற்கு பிறகு, மூச்சுக்காக ஏங்கி தவித்த போது தான் போர் முடிந்தது.

கீழ்க் கண்ணால் தன் உதட்டைப் பார்த்தவள்,

“பாவி! எப்படி செவந்து போச்சுன்னு பாரு! யாராச்சும் பாத்தா என்ன சொல்றது.. ஏன் டா இப்படி பண்ண..” அவனது இதயத்தை குத்திக் கொண்டிருந்தாள் அவனது மகாராணி.

“ என்னது டா வா… இன்னொரு சண்டை வெச்சுக்கலாமா என்று நாக்கால் மேல் உதட்டை எச்சில் செய்து கேட்க, சட்டென வாயை மூடிக் கொண்டாள்.

“ வேண்டாம் வேண்டாம்.. டா சொல்ல மாட்டேன்” சரணடைந்தாள்.

“ இப்போ சொல்லு, அப்போ என்ன சொன்ன..?” அவளின் இடையைத் தன்னோடு அனைத்துக் கொண்டு காமப் பார்வையுடன் கேட்க,

அவனின் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்தாள். கன்னம் சிவக்க, பச்சைக் கண்கள் பளபளக்க ,

“ மாமா…” என்றாள் காதலுடன்….

அந்த கிறக்கத்திலிருந்து வெளி வருவதற்குள் அவளுக்குத் தாலியே கட்டிவிட்டான்.

அனைவரும் ஆசிர்வதிக்க, மஞ்சள் பூசிய புதுத் தாலியுடன், காதல் கணவன் கைபிடித்து , மொத்த நிம்மைதியையும் குத்தகைக்கு எடுத்து அமர்ந்திருந்தாள் லோகாஷி…

கண்களில் நீர் நிறைந்து மனதில் ஆனந்தம் சுமந்து தங்களின் பிள்ளைகள் பல்லாண்டு வாழ வாழ்த்தினர் அவர்களின் பெற்றோர்கள்.

ஒரு வாரம் தான் தேக்கி வைத்த காதல் அனைத்தையும் அவளிடம் காட்டினான் விஷ்வா. அதற்கு சற்றும் குறைவில்லாமல், ‘மாமா மாமா ‘ வென்று அவனுக்குப் பிடித்த மாதிரி அழைத்து அவனை மேலும் காதல் தொல்லை செய்தாள் லோகா.

ஒரு நாளும் அவளை விட்டுப் பிரியாமல், ஓர் இரவும் அவனது அனைப்பின்றித் தூங்காமல் அல்லும் பகலும் காதல் பாடத்தையும் , கூடல் பாடத்தையும் படித்து இன்புற்றனர்.

அன்று ஏனோ இதயம் கணக்க அமர்ந்திருந்தாள் லோகா. அவர்களின் பாட்டி ஊருக்கு வந்திருந்தனர், குல தெய்வ வழிபாட்டிற்காக .

அவளது வருத்தம் உணர்ந்து அருகில் வந்து அமர்ந்தான் விஷ்வா.

“ இங்க பாரு டா.. பாட்டி நம்ம கூட தான் இருக்காங்க. நீ வருத்தப் படாத. அவங்களுக்கு நீ வருத்தப் பட்டா புடிக்காது. சந்தோஷமா பொங்கல் வைக்கணும். சரியா…” அவளது முகம் தாங்கி ஆறுதல் படுத்தினான்.

மனம் கேட்காவிட்டாலும், கணவன் வார்த்தைக்கு கட்டுப் பட்டு, பொங்கல் வைக்கச் சென்றாள்.

படையல் போட்டு தீபம் காட்டும் நேரம், விஷ்வாவும் லோகாவும் ஒரு காட்சியைக் கண்டனர்…….

 

அந்த அம்மனின் உருவத்தில் லோகாவின் இரண்டு பாட்டிகளும் தெரிந்து ஆசிர்வதித்தனர்…..

மெய் சிலிர்த்து போனார்கள்.

அவர்களின் ஆசி விஷ்வா லோகாவிற்கு எப்போதும் உண்டு என்பதாக…..

 

ஆம்! இனி அவள் விஷ்வாவின் லோகா… கந்தர்வ லோகா அல்ல……

 

 

**********   முற்றும்   *************

Comments Here