Thendral’s ‘Ketti Melam’ – Full Novel

 சுமனச வந்தித சுந்தரி மாதவி 

  சந்திர சகோதரி ஹேமமையே

 

பிசிறில்லாத கணீர் குரலில் பாடிக்கொண்டு வாசலில் போட்ட மனை கோலத்தை செம்மணிட்டு அழகு படுத்திக் கொண்டிருந்தார் வச்சு என்கிற வத்சலா

 

மனது முழுக்க உற்சாகம். ஒரு படபடப்பு. சந்தோஷம். உள்ளே ஒரே பெருமிதம்

அதற்கு காரணம் அவரது மூத்த மகளான அனு என்கிற அனுராதாவை இன்று பெண் பார்க்க வருகிறார்கள்உறவினர்கள் மூலம் கிடைத்த சம்மந்தம்

 

அனுவின் போட்டோவைப் பார்த்ததிலிருந்தே பையனுக்குப் பிடித்துவிட்டதால் , போனிலேயே அனைத்தும் பேசி, இன்று சம்ப்ரதாயப் படி பெண் பார்ப்பது முடிவானது

 

வச்சு மாமி மிகவும் ஆச்சாரம் பார்ப்பவள். அவளது பூர்வீகமும் சரி அவளது கணவனின் பூர்வீகமும் சரி , கோவிலில் கைங்கர்யம் செய்தவர்கள். அதனால் அப்படியே வளர்ந்துவிட்டாள்

 

கணவன் சாரங்கபாணிக்கு  கவர்ன்மென்ட்டில் வேலை. இப்போது தான் சாய்வு நாற்காலிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கூடிய சீக்கிரம் ரிட்டயர்டு வாழ்க்கையை அதிலே கழிக்கவேண்டுமென்று

 

பொண்டாட்டி சொல்லே வேதம் அவருக்கு. வச்சு மாமி போடும் பில்டர் காப்பிக்கே மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல மயங்கி கிடப்பார். சம்பளத்தை வாங்கியதும் கவரோடு வச்சு கையில் கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விடுபவர்

 

வச்சு தான் ஆல் இன் ஆல். அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீட்டில் மோர் மிளகாய் எப்போது தீரும், புதிதாக அப்பளம் எப்போது இட வேண்டும்ஜாடியில் போட்ட ஊறுகாய் கிளறி விடும் நேரம் கூட அத்துப்படி

 

பால் காரன் முதல் கொல்லைபுறத்தை சுத்தம் செய்பவனை வேலை வாங்குவது வரை அவர் பொறுப்பு தான். கணவனையும் ஒரு குழந்தை போலவே பார்த்துக் கொண்டதால், சாரங்கனுக்கும் வச்சு இல்லாமல் எதுவும் ஓடாது

 

இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை மிகவும் பொறுப்பானவள், அம்மாவைப் போலவேஅவள் தான் கல்யாணத்திற்கு தயாராக நிற்கும் நம்ம அனு

 

அனு , சீக்கிரம் எழுந்துக்கோ டீ. நாழி ஆறது பாரு. மள மளன்னு ஸ்நானம் பண்ணிட்டு வா. இன்னிக்கு வெள்ளிக்கிழமை! லக்ஷ்மி பூஜை பண்றதுக்கு கொல்லை லேந்து பூ றிச்சுண்டு வந்து வை. நேக்கு திரும்மாப்படில  நெறைய வேலை இருக்கு. அவாள்ளாம் வரத்துக்குள்ள எல்லாம் ரெடி பண்ணி வைக்கணுமோன்னோபடுக்கை அறையின் வெளியில் நின்றே குரல் கொடுத்தாள்

 

எழுந்துட்டேன் மா… ” போர்த்திக்கொண்ட போர்வையை மடித்தபடியே எழுந்தாள். இன்னும் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் தங்கையை வாஞ்சையுடன் பார்த்தவள், மெல்ல அவளது போர்வையை உருவ

 

ஹே அனு , என்னை ஒன்பது மணிக்கு குறைஞ்சு எழுப்புனா உன்னை அணுகுண்டு வெச்சே கொன்னுடுவேன்‘  என அவள் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தது நினைவிற்கு வர , லேசான பயத்துடன் மீண்டும் போர்வையை சத்தமில்லாமல் அவள் மேல் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்

 

தங்கை வைஷ்ணவி என்றால் அவளுக்கு உயிர். தாய் போல பார்த்துக் கொள்வாள். அனு படித்து முடித்து வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் தான் இருந்தாள்

 

நன்றாக சமைப்பாள். தையல் , ஓவியம் என அசத்துவாள்வைஷ்ணவிக்கு டிசைனர் அனு தான். காலேஜில் அனைவரும் வைஷுவின்  உடையை பாராட்டாமல் இருந்ததே இல்லைஅதற்கு காரணம் அனுவின் கலைநயம் தான்

 

அனுவிற்கு வெளி உலகம் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் வைஷு ஊரையே விற்று வெல்லம் தடவி சாப்பிட்டு விடுவாள்

 

அக்காவிற்கு எப்போதும் அவள் தான் லீகல் அட்வைசர்

வீட்டு வேலை மட்டும் செஞ்சுட்டு இருந்தா உன் மாமியார் உன்ன காசில்லாத வேலைக்காரி ஆக்கிடுவா.. என்கூட வாஎன தன் தோழிகளோடு வெளியே செல்லும்போது அழைத்துச் செல்வாள்.

 

அனு உடன் சென்றாலும் அவளுக்கு ஜனக்கூட்டத்தை கண்டாலே தலைவலி வந்துவிடும்

 

எப்போதும் சாந்தமாக , அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்துவிடுவாள்

 

வைஷ்ணவி அவளுக்கு நேர் எதிர். எப்போதும் கலகலப்பு. அம்மாவை வம்பிழுப்பது. ஒருவர் விடாமல் கிண்டல் செய்வது. எந்த இடத்தில் அவள் இருந்தாலும் அனைவருக்கும் அவளைத் தெரிந்து விடும்

 

பாப்புலாரிட்டி பைத்தியம். அப்பவின் செல்லம் வேறு .. இப்போது தான் கல்லூரி முடிந்து வேலையில் சேர்ந்திருந்தாள். டீ யில் தான் வேலை

 

அங்கேயும் அணைத்து வேலைகளிலும் சுட்டி என பேர் எடுத்திருந்தாள்.

 

வச்சு மாமி இரு பெண்களையும் சிறு வயது முதலே அழகாகப் பராமரிப்பாள். வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் பொடி போட்டுக் குளித்தே ஆகவேண்டும்

 

பயத்தமாவும் கடலைமாவும் வைத்து உடலுக்குத் தேய்த்து வந்ததால் இரு பெண்களும் மேக்கப் இல்லாமலே ஜொலிப்பர்

சார்ங்கபாணியின் சிவந்த நிறம் இருவரிடமும் சற்று அதிகமாகவே வந்து சேர்ந்திருந்தது

 

மாமி உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் ரொம்ப லட்சணமா இருக்கா! ‘  என யாராவது சொன்னால் போதும் உடனே அழகிகள் இருவருக்கும் சுத்திப் போட்டு விடுவார் வச்சு

 

வயிற்றில் நெருப்பைக் கட்டிண்டு இருக்கேன்.. ரெண்டு பேரையும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பிடனும்என புலம்பிக் கொண்டே இருப்பார்

 

இப்போது அனுவிற்கு வரன் அமைந்தது கொஞ்சம் அவர் வயிற்றில் பால் வார்த்தது

 

அனு குளித்துவிட்டு தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு அழகாக ஒரு காட்டன் புடவை அணிந்து வந்தாள். மலர்களை பறித்துக் கொண்டு வந்தவள் அதை மாலையாகக் கட்டி , ஸ்வாமி படங்களுக்கு மாட்டினாள்.

 

வச்சு மாமி வேகமாக பூஜை அறைக்குள் வந்தாள். அனு உடனே வெளியேற

 

அனு நீ போய் கொஞ்சம் வாழைக்காயை நீளமா நறுக்கி வை. ஜலத்துல போட்டு வை டீ, இல்லனா கருத்துடும். நான் பூஜை முடிஞ்சுச்சுண்டு வந்துடறேன்.” வெளியே சென்றவளை துரத்திக் கொண்டே அவர் குரலும் சென்றது

 

அனு அப்பாக்கு காபி எடுத்துண்டு போய் குடுத்துட்டு , இந்த சின்னக் கழுதையை எழுப்பிவிடு. நாளுங் கிழமையுமா  நன்னா தூங்கறது..” மீண்டும் குரல் கொடுத்துவிட்டு , பூஜையில் லயித்தார்

 

அனு முதலில் சாரங்கபாணிக்கு காபியைக் கொடுக்கஅவரோ 

 “அம்மா எங்க …?” என மூக்குக் கண்ணாடியை சரி செய்துகொண்டு சமையல்கட்டை பார்க்க,

அம்மா பூஜை பண்ணிண்டு இருக்கா பா ..” 

சரி சரி , வேற ஏதாவது வாங்கிண்டு வரணுமா பாரு.. காத்தால போனா கறிகாய் எல்லாம் பிரெஷா வச்சின்டிருப்பான். போய் வாங்கிண்டு வரேன்காபியை உதட்டில் படாமல் தொண்டைக்குள் நேராக சரித்துக் கொண்டார்

 

இல்லப்பா. அம்மா ஏற்கனவே பொன்னம்மா கிட்ட சொல்லி கொண்டுவர சொல்லிருக்கா.. இப்போ அவளே வந்து கொடுத்துடுவாஅவளும் வாழைக்காய் நறுக்கச் சென்றாள்

 

நல்ல காரியம் பண்ணா. இப்போ நான் என்ன பண்றதுஆபீசுக்கும் லீவ் போட்டுட்டேன். அவா மூணு மனிக்குத் தானே வாரா. வச்சு வந்தா தான் ஏதாவது வேலை சொல்லுவா. அதுவரை செத்த இந்த பேப்பரை படிக்கறேன். ரொம்ப நாள் ஆச்சு நிம்மதியா பேப்பர் படிச்சுகாபியை சொட்டு விடாமல் மொத்தமாகக் குடித்துவிட்டு அந்தத் தெம்பில் பேப்பர் படிக்க வாசல் திண்ணையில் அமர்ந்தார்

 

அதற்குள் பொன்னம்மாவும் காய்கறி கூடையுடன் வந்தாள்

 

கொஞ்சம் இறக்கி வை சாமி”  என குரல் கொடுக்க,

 

நான் பேப்பர் படிக்கறது அந்த பகவானுக்கே பிடிக்கல..” என பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவள் தலையில் இருந்த மூட்டையை இறக்கி வைத்தார்

 

மாமி இல்லையா சாமி?” புடவைத்  தலைப்பால் முகத்தின் வியர்வையை துடைத்துக் கொண்டு கூடை அருகிலேயே தரையில் அமர்ந்தாள்

 

வருவா இரு.. ” மீண்டும் பேப்பரில் முகத்தை திணித்துக் கொண்டு அமர்ந்தார்

 

ஐந்து நிமிடத்தில் வச்சு மாமியும் பூஜையை முடித்து விட்டு வெளியே வந்தார்

 

அழகாக மடிசார் அணிந்து  நெற்றியில் குங்குமத்துடன் லட்சணமாக இருந்தார்

 

வா மாமி. உன்ன பாத்தாலே நாள் பூரா என் வியாபாரம் நல்லா போகும்மனதார பொன்னம்மா சொல்ல ,

 

ஏன் டீ! இப்படி சொல்லி விலை எல்லாம் அதிகமா சொல்லலான்னு பாக்கறியா.. எல்லா காயும் கொண்டு வந்திருக்கியா ?”  கூடையை ஆராய்ந்த படியே கேட்க

 

அய்ய .. இன்னம்மா அப்படி சொல்லிட்ட , உனுக்கு எப்பயாச்சும் அதிகமா சொல்லிகிறேனா . எடுத்துனு போ மாமிகுடுக்கறத குடு..” சிரித்துக்கொண்டே சொல்ல

 

வச்சுவும் சிரித்தாள்

 

அனு அந்த சிகப்புக் கூடையை எடுத்துண்டு வா.. ” என வீட்டுக்குள் குரல் அனுப்பகாய்களை பார்த்து எடுத்துக் கொண்டார்

 

இந்தா மாஅனு நீட்ட

 

பெரிய பாப்பாவை பொண்ணு பாக்க வரவங்க வேண்டானா சொல்லப் போறாங்க.. கரும்பு தின்ன கூலியா ? பெரிய பாப்பா உன் கண்ணாலத்துக்கு எனக்கு ஒரு சீல எடுத்து தந்துடு. சரியா ?” பொன்னம்மா அவளிடம் சொல்வது போல வச்சு மாமியிடம்  புதுப் புடவைக்கு அப்பிளிகேஷன் போட்டாள்

 

அம்மா கண்டிப்பா வாங்கித் தருவாங்க பொன்னம்மா. கவலப் படாதசிரித்து விட்டு தாயுடன் சேர்ந்து கறிகாயை எடுத்து வைத்தாள்

 

வச்சு மாமி அவளிடம் ஐம்பது ரூபாயை கொடுக்க பொன்னம்மாவும் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சென்றாள்

 

இன்னும் பேப்பரில் மூழ்கி இருந்த சாராங்கனை பார்த்த வச்சு மாமி

 

நான் இங்க ஒண்டியா கெடந்து அல்லாடறேன். நீங்க நிம்மதியா பேப்பரை படிச்சிண்டு இருக்கேளே! உங்க அண்ணா மன்னி க்கு போன் பண்ணி எப்போ வரான்னு கேளுங்கோ! புள்ளையாத்துக்காரா  வரப்ப அவா இருந்தா தான் நன்னா இருக்கும். இல்லனா நம்ம சைடுல ஆளே இல்லனு நெனச்சுப்பா

 

நம்ம கெளரவம் போய்டும். போங்கோ உடனே போன் பண்ணுங்கோ!” விரட்டினாள்

 

நீ சொன்னா சரி டீ . உடனே பண்ணிடுறேன். நாலு தெரு தள்ளி தான இருக்க , கூப்டா உடனே வர போறா ..” அவரும் தன் செல்போனை எடுக்க

 

ஆமா.. உடனே வந்து நின்னுட போறா.. உங்க அண்ணனா தேவலாம். உங்க மன்னி இருக்காளே! விஷயமே மறந்து போச்சுன்னு முழு பூசணிக்காய மறைக்கற மாதிரி  மறச்சிப்புடுவோ.. நாம வெத்தல பாக்கு வெச்சு அவளை அழைக்கணும். பொறாமை புடிச்சதுகள். உங்க தங்கை வரமாட்டா , ஆனாலும் சொல்லி வைங்கோ. பொருமிக்கொண்டே உள்ளே செல்ல, வழியில் வந்த படுக்கையறையில் இன்னும் வைஷ்ணவி உறங்குவது தெரிய

 

நாங்க இங்க இவ்ளோ வேலை பண்ணிண்டிருக்கோம், அங்க ஒன்னு யாருக்கோ வந்த விருந்து மாதிரி இழுத்துப் போத்திண்டு தூங்கறது பாரு. அடியே வைஷு ..கழுத எழுந்திரு டீ.. கூட மாட வேலை பண்ணு…” 

 

அனைவரையும் வச்சு ஆட்டி வைத்தாலும் , அவளின் புயல் காற்றுப் பேச்சுக்கு அசையாமல் இருப்பது வைஷு மட்டுமே!

 

வைஷு அசையாமல் படுத்திருக்க

பூஜையை முடிச்சுட்டேன் டீ , உள்ள வந்தா அடிச்சு தான் எழுப்புவேன். இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல நீ கூடத்துல இருக்கணும். ” மிரட்டி விட்டு 

சமையல் வேலையை கவனிக்கச் சென்றாள்

 

அனு தான் அனைத்துக்கும் உதவி செய்தாள்

 

போதும் அனு. நீ இன்னிக்கு அடுப்பு கிட்ட நீக்காதபோய் உக்காந்துக்கோ. ஏதோ பேஸ் பேக் குடுத்தாளே உன் தங்க, அதை போட்டுக்கோ. அந்த வைஷுவை நாலு தட்டு தட்டி எழுப்பு

 

மொதல்ல அவளுக்கு கல்யாணத்த பண்ணி அனுப்பி வைக்கணும். அப்போ தான் எனக்கு நிம்மதி, இல்லனா என்னை கத்த விட்டே பி பி வர வெச்சு என்னை சீக்கிரம் அனுப்பிடுவா..” 

 

பாவம்மா அவ.. இன்னிக்கு தானே லீவ் ..கொஞ்சம் தூங்கட்டும். ஒன்னும் இப்போ வேலை இல்லையே.” தங்கைக்கு பரிந்து கொண்டு வர

 

இல்லன்னா அவ தூங்கவே மாட்டாளா.. போய் எழுப்பு போஅதட்டினாள் வச்சு

 

அதற்கு மேல் அவளும் அங்கு நிற்க வில்லை

 

வைஷு எழுந்துவிட்டிருந்தாள்

வாடி கல்யாண பொண்ணு. ஏன் டீ நீ சுறுசுறுப்பா இருந்து என்னை திட்டுவாங்க வைக்கற. வச்சு பாரு காலைலயே வீச்சு பரோட்டா போடா ஆரம்பிச்சுடுத்துதூக்கம் கலையாமல் எழுந்து வர

 

என்ன டீ எக்ஸாம்பிள் இது ..பரோட்டா அது இதுன்னு ..அம்மா காதுல விழுந்தா அவ்ளோ தான். ” அனு தலையில் அடித்துக் கொள்ள

 

நான் அஞ்சா நெஞ்சி.. வச்சு க்கு பயப்பட மாட்டேன். ” பயில்வான் போல கையை உயர்த்திக் காட்டி சொல்ல

 

போதுண்டி தாயே! அந்த பேஸ் பேக் எங்க வெச்ச..?” கைகூப்பிவிட்டு அலமாரியை தேட

 

இரு நான் ப்ரஷ் பண்ணிட்டு , வச்சு கைல ஒரு காபி குடிச்சுட்டு வந்து நானே உனக்கு போட்டு விடறேன்.” அக்காவிற்கு செய்வதென்றால் அவளுக்கு குஷி தான்

 

வச்சு காபி ப்ளீஸ்கிச்சனில் சென்று நின்றாள் வைஷு

 

பழைய பாடல்களை அவளின் சிறிய ரேடியோ ஒன்றில் ஓடவிட்டுக் கொண்டே வைஷுவிற்கு காபி கொடுத்தாள் வத்சலா. 

 

டம்ளரை கையில் வாங்கி

 சிப்பினாள்

எச்சல் பண்ணாத. உங்க பெரிம்மா பெரிப்பா வரதுக்குள்ள குளிச்சுட்டு வா” 

போ மா. நான் அக்காக்கு பேக் போட்டுவிட்டு அப்பறம் குளிக்கறேன். அப்போ தான் அவங்க வரப்ப பிரெஷா இருக்கும். ” 

 

உன்னையா பொண்ணு பாக்க வாரா… ” 

 

அதுக்காக நான்  அசிங்கமா வா வர முடியும். போ மா” 

 

அனுவிற்கு அனைத்தும் செய்து அவளை தயார் படுத்தினாள்

 

சாரங்கனின் அண்ணா நாராயணன், மன்னி ருக்மினி  வந்துவிட

குடும்பப் பேச்சுகள் தொடர்ந்தது

 

என்ன டி வச்சு, புள்ளையாததுக்காரா கரெக்ட்டா வந்துடுவாளோனோ?!” இளக்காரமாக ருக்கு கேட்க

 

கெளம்பரச்சே போன் பண்றதா அந்த மாமா சொல்லிருக்கார் மன்னி.” பட்டும் படாமல் பதில் சொன்னாள் வச்சு. ஏற்கனவே ருக்கு  விற்கு சற்று வயிற்றெரிச்சல் , இவளது பெண்கள் இருவரும் அழகு என்று

 

ருக்குவின் பெண் அவளை போன்றே சற்று மாநிறம்ஒருவழியாக அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து ஊட்டிக்கு அனுப்பிவிட்டாள். ஆனாலும் அவள் இவர்களை போல அழகும் இல்லை, வேறு ஏதும் கற்றுக் கொள்ளவும் இல்லை

 

ஆனால் அனு நன்றாக வீணை வாசிப்பாள். வைஷு நன்றாகக் பாடுவாள். எந்த வீட்டிற்கு கொலுவிற்கோ அல்லது திருமணத்திற்கோ போனாலும் இவர்களைத் தான் நன்றாக கவனிப்பார்கள்

 ‘அனு வீணை எடுத்துண்டு வா . வைஷு நீ பாடுஎன  இருவரையும் வருந்தி வருந்தி அழைப்பார்கள்

 

இவளுக்குப் பொறாமை தாண்டவமாடும். எப்போது சாக்கு கிடைத்தாலும் வச்சுவை மட்டம் தட்டவே காத்திருந்தாள் ருக்மிணி.

 

ஆனால் வெளியில் மற்றவர்கள் முன்பு காட்டிக் கொள்ள மாட்டாள்.  

 

என்ன பண்ணலான்னு இருக்க ? கேசரியா ? அப்புறம் பஜ்ஜி போட்டுடுமூத்தவளாக சொன்னாள்

 

ஆமா மன்னி. கேசரி பஜ்ஜி தான வழக்கம். அவா எங்க சித்தி வழில தூரத்து சொந்தம். அதுனால சித்தி கிட்ட பேசினேன். புள்ளையாத்துலையும் கொஞ்சம் நம்மள மாதிரி மடி விழுப்பு எல்லாம் பாப்பாளாம். அதுனால எல்லாம் வழக்கப் படி செஞ்சுடலாம்.”

 

“உங்க சித்தி வழி சொந்தமா..” ஏதோ ஒரு சலிப்புடன் கூறி, 

” கூட பொறந்தவா எத்தனை பேர்” என முடித்தாள் பத்மா. 

” ரெண்டு பசங்கன்னு சொன்னா. மூத்தவன் தான் அனுக்கு பாத்திருக்கோம்” தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு  பழம் முதலியவற்றை அடுக்கிய படியே ருக்குவின் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் வத்சலா. 

 

வைஷுவும் அனுவிற்கு புடவை அதற்கு மேட்சிங் பிளவுஸ், தலைக்கு வைக்க மல்லிகைச் சாரம் முதலியவற்றை எடுத்து வைத்துக் காத்திருந்தாள். 

 

அனு பேஸ் பேக்கை கவிழுக் கொண்டு வந்தாள். ருக்கு  அவளை எதிர்கொண்டு 

 

” என்ன டீ இன்னும் புடவை உடுத்திக்காம இருக்க? சீக்கிரம் கெளம்பு. அவாளாம் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவா. நல்ல நேரத்துல பாக்கணுமோன்னோ.. எங்க இந்த வைஷு?  வைஷு … அடியே … ” தொண்டை கிழிய கத்தினாள். 

 

“ஐயோ பெரிம்மா என்னத்துக்கு இப்படி கத்தற..?” அவளது புது புடவையை சரி செய்தபடி வந்தாள் வைஷு. 

 

கட்டை விரலும் ஆள் கட்டி விரலையும் தாடையில் வைத்து ‘ஆ’ வென வைஷுவைப் பார்த்தாள் ருக்கு. 

 

“ஏண்டி என்னடி கூத்து இது. நோக்கு கல்யாணமா இல்ல உங்க அக்காவுக்கா?” என்று இழுக்க, 

 

“ஆஅஹ்ஹ்ங் … அது வர மாப்பிள்ளையை பார்த்து அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். உனக்கு பிடிச்சிருந்தா நீயும் பெரிப்பாவ டிவோர்ஸ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” கண்ணடித்து சிரித்தாள். 

 

” கொழுப்பு டீ உனக்கு. வச்சு.. இந்த வைஷு என்ன பேச்சு பேசறா பாத்தியோனோ!!  முதல்ல அனு வ ரெடி பண்ணு டீ” வச்சுவிடமும் வைஷுவிடமும் மாறி மாறி பேசிவிட்டு தன் மடிசாரை சரி செய்தபடி நகர்ந்தாள். 

 

” என்ன டீ வைஷு..” அனு சைகையால் கேட்க, 

” அட விடு அனு. பெரிம்மா இந்த குடும்பத்துக்கே மூத்தவன்னு பிகு பண்ணிக்கறா, அப்பப்ப இப்டி வாய மூடி அனுப்பனும். நம்ம அம்மா எப்பவாச்சும் அவா ஆத்து விஷயத்துல தலையிட்டுருக்காளா.. சும்மா சீன் போட வேண்டியது. நீ வா முதல்ல உன்ன அலங்காரம் பண்ணனும் ” அவளை அழைத்துச் சென்றாள். 

 

நீளமான தலைமுடியை தழைய பின்னலிட்டு , கீழே குஞ்சம் வைத்து கட்டினாள். அது தொடை வரை தொங்க, நெறுக்கிக் கட்டிய மல்லிகையை நான்கு சரமாக தலையில் வைத்து ஹேர்பின் குத்தினாள். 

சிவந்த முகத்தில் மெல்லிய மேக்அப் செய்து அலங்கரித்தாள். 

அனு எப்போதும் போட்டிருக்கும் ஜிமிக்கி போதும் என்று விட , கழுத்துக்கு மட்டும் மேலும் ஒரு ஆரத்தை போட்டுவிட்டாள். 

 

கரும்பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவை கட்டி வர , அவளது நிறத்திற்கு அது மேலும் அம்சமாக இருந்தது. 

 

அக்காவை கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொஞ்சினாள் வைஷு. 

“வரப் போறவர் குடுத்து வெச்சவர். இப்படி ஒரு அழகு சிலையை எங்காத்துலேந்து கடத்திண்டு போகப் போறாரு. ”  வைஷு சொல்ல,

 

வெட்கத்துடன் அனு , “அட சீ..” என்றாள்.

 

“வெட்கப் படாத , அப்புறம் இன்னிக்கே தூக்கிண்டு போய்டப்போறாரு” வைஷு அவளது கண்ணில் இருந்த மையால் அனுவின் காதுக்கு கீழ் தெரியாமல் ஒரு த்ரிஷ்டிப் போட்டு வைத்தாள். 

 

மீதி மையை தன் தலையில் தடவிக் கொண்டு, 

 

” அக்கா, இங்க பாரு மாப்பிள்ளை வந்து தனியா பேசணும்னு சொன்ன, சரி ன்னு சொல்லு. பயந்துகிட்டு அப்டியே இருந்துடாத. புரியுதா. இப்போ பேசி பாத்தா தான் , ஆள் எப்படின்னு தெரியும். இப்போ விட்டா அதுக்கப்புறம், நிச்சயம் கல்யாணம் கெட்டிமேளம் தான். சோ பீ கேர்புல் ” அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க,

 

“ஹே பொண்ணுங்களா, மாப்பிள்ளை ஆத்துக்காரா கிளம்பியாச்சாம் . நான் போய் பஜ்ஜி போடறேன். அனு ரெடி தானே? ” வச்சு வந்து எட்டிப் பார்த்தாள். 

 

” ம்ம்ம் அவ ரெடி தான். நானும் ரெடி” வைஷு நக்கல் செய்ய, 

 

” நீயும் ரெடியா. இரு இரு , ரெண்டு பசங்கன்னு சொன்னா, ரெண்டாவது பையனுக்கு உன்ன பேசி முடிச்சுடறேன். ” வச்சு பதில் கொடுக்க,

 

” என்ன கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு சில குவாலிடீஸ் இருக்கணும். அப்படி எல்லாம் என்னை ஈஸியா தள்ளி விட முடியாது வச்சு.” அளந்தாள் சின்னவள்.

 

“வச்சு.. கேசரி ரெடி. வந்து பஜ்ஜி போடு ” கிச்சனிலிருந்து ருக்கு  குரல் தர, 

 

“உன்ன அப்பறம் பேசிக்கறேன்” என்று ஓடினாள் வச்சு. 

 

சாரங்கனும் நாராயணனும் அங்கிருந்த நாற்காலிகளை ஒழுங்கு படுத்தி, வட்ட வடிவ சிறிய மேசை ஒன்றை நடுவில் கொண்டு வந்து போட்டனர். 

ருக்கு  தாம்பூல தாம்பாளத்தை எடுத்து வந்து அதில் வைத்து விட்டு, 

 

“ஒருத்தர் வாசல்ல போய் நில்லுங்கோ. அவாளுக்கு ஆகம் தெரியணுமோன்னோ” தன் கழுத்து அட்டிகையை சரி செய்து கொண்டே சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

“அனு மாப்பிள்ளை பேர் என்ன?” பயந்திருந்த அனுவை சரி செய்ய ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள் வைஷு. 

 

” ரகுராம் ” 

“போட்டோவே நான் பாக்கலையே. நீ பாத்தியா?” – வைஷு 

 

“ம்ம் ..அப்பா காட்டினா வாட்ஸாப்ப்ல”  படபடப்பாகவே பதில் சொன்னாள் அனு. 

 

“ம்ம் .. எனக்கு காட்டவே இல்ல..” புருவத்தை தூக்க 

 

” நீ பாதி தூக்கத்துல பாத்திருப்ப..அதான் உனக்கு ஞாபகம் இல்லை” அனு சீரியஸாக பதில் சொன்னாள். 

 

“ஓ! ஆமா , அந்த மீசை இல்லாம மொழு மொழுனு கொழுக்கட்டை மூஞ்சி மாதிரி இருந்துச்சே!” கிண்டல் செய்தாள் வைஷு. 

 

“ஹே ! இல்ல , மொழு மொழுன்னு லாம் இல்ல. லைட் டா மீசையை ட்ரிம் பண்ணி அழகா தான் இருந்தார்” அனு அவளது கிண்டல் பொறுக்காமல் சொல்லிவிட , 

 

“ஓ அழகா இருந்தாரா அனு. சொல்லவே இல்லையே!” வைஷு அவளது முகம் பார்த்து சிரிக்க ,

 

“போடி” வெட்கத்திலும் சிறு கோபம் கொண்டாள் அனு. 

 

“வத்சலா, எல்லாரும் வந்தாச்சு பாரு! ” வாசலில் நின்று குரல் கொடுத்தார் சாரங்கன். 

 

                                           

                                                     2

 

                                                       

 

வத்சலாவும் ருக்குவும்  ஓடி வந்து அனைவரையும் வரவேற்றனர். 

 

” கரெக்ட் டைம்க்கு வந்துட்டோம்” அசடு வழிந்தார் மாப்பிள்ளையின் அப்பா வேணு.

 

“ஆமா. வாங்கோ வாங்கோ” உள்ளே அழைத்துக் கொண்டு போனார் நாராயணன். 

 

வேணுவை முழங்கையால் இடித்தார் பங்கஜம். வேணு திரும்பி பார்க்க,

 

“ரொம்ப வழியாதீங்கோ. சித்த அடக்கிவாசிங்கோ. உங்க பிரதாபமெல்லாம் நம்மாத்தோட இருக்கட்டும்” அவருக்கு மட்டும் கேட்குமாறு பல்லைக் கடிக்க,

 

அடுத்த கணமே வாயை மூடிக் கொண்டார் . 

 

ஐந்தாறு பேர் உள்ளே வந்தனர் மாப்பிள்ளையுடன் சேர்த்து. 

 

“உக்காருங்கோ..” சாரங்கன் சொல்ல ,

 

” நான் தான் வேணுகோபலன். இவ எங்காத்து ப்ரைம்மினிஸ்டர் பங்கஜம். 

 இவன் தான் எங்க மூத்த பையன் ரகுராம். 

ரெண்டாவது பையன் ஆஸ்திரேலியால வேலை பாக்கறான். 

இது என் தங்கை , அவ ஆத்துக்காரர்.” என அனைவரையும் இன்ட்ரோ செய்து வைத்தார் வேணு. 

அவர் சொல்ல சொல்ல அனைவரையும் பார்த்து இங்கிருப்பவர்கள் சினேகமாக தலையசைக்க, 

 

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துடலாம். அப்பறம் சாவகாசமா பேசிக்கலாம்” பங்கஜம் ஆர்டர். 

 

“ஆங் சரி. ” சாரங்கன் வச்சுவை பார்க்க, 

 

ருக்கு  உள்ளே சென்று அனுவை அழைக்க, வச்சு கிச்சனுக்குள் சென்று போட்டு வைத்திருந்த பில்டர் காபியை சூடாக  டவரா டம்ளரில் ஊற்றி ட்ரேயுடன் கொண்டு வந்தார். 

 

அனு தலை குனிந்த படி  வெளியே வர, பின்னால் வைஷுவும் வந்தாள். 

வச்சு அவளிடம் ட்ரேயை கொடுக்க, 

 

அதை வாங்கிச் சென்று அனைவருக்கும் கொடுத்தாள் அனு. சற்றும் நிமிர்ந்து பார்க்கவில்லை. 

 

ரகுவோ அனு  வெளியே வந்ததிலிருந்து அவளைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அவளை கண்ணுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கு போட்டோ பார்த்ததிலிருந்து அனுவை மிகவும் பிடித்துவிட்டது. 

 

இவளைத் தான் திருமணம் செய்வேன் என்று அம்மாவிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டான். 

 

பங்கஜத்தின் அதிகாரம் கணவனிடத்தில் மட்டும் தான். பிள்ளைகள் இருவரிடத்திலும் செல்லாது. 

 

அதனால் சரி என்று விட்டார். 

 

ரகுவிற்கு அனுவிடம் பேச வேண்டும் என்றிருந்தது. பெரியவர்கள் நாலு வார்த்தை பேசிய பின்னர், தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லலாம் என்றிருந்தான். 

 

அனு காபி கொடுத்துவிட்டு சற்று தள்ளிச் சென்று வைஷுவுடன் நின்று கொண்டாள். 

 

“ எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கோ அனு” பெரியப்பா நாராயணன் சொல்ல, 

 

அவளும் பொதுவாக விழுந்து வணங்கினாள். 

 

“ நன்னா இரும்மா” பங்கஜமும் வேணுவும் ஒருசேரக் கூறினர்.

 

“ பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதை நாங்க முன்னாடியே சொல்லிட்டோம். இருந்தாலும் சாஸ்திரம் சம்ப்ரதாயம் இருக்கோனோ . அதுக்காக தான் வந்தோம். வா மா இங்க “ என அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் பங்கஜம். 

அவளிடம் பேச, 

 மற்றவர்கள் மற்றது பேசிக் கொண்டிருந்தனர். 

 

ரகுவிடம் சாரங்கனும் நாராயணனும் வேலை பற்றியும் அவனைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தனர். 

 

“ நான் அமெரிக்கால ஐஞ்சு வருஷம் இருந்தேன். இதுக்கப்பறம் சான்ஸ் கெடச்சா போவேன். இப்போதிக்கு இங்க தான்” 

 

வைஷுவிற்கு வந்ததிலிருந்து ரகு மீது தான் கண். அவன் பார்வையிலேயே அவன் எப்படிப் பட்டவன் என கணிக்க முயன்று கொண்டிருந்தாள். 

 

வந்ததிலிருந்து அனுவ விட்டு இவன் கண் நகர்ல, அதே சமயம் ரொம்ப கூச்சப் படாம, நல்லா நிமிர்வா தான் இருக்கான்.  பெரியவங்க பேசட்டும்னு அவன் எதுவும் பேசாம தான் இருக்கான். மரியாதை தெரிஞ்சவனா இருக்கான். 

 

அனுவ நல்லா பாத்துப்பான்னு நெனைக்கறேன். இருந்தாலும் அனு கிட்ட அவன் பேச போகும் போது நாமளும் போய்டணும். கரெக்டா பேசிடனும். அப்போ தான் அனு சந்தோஷமா இருப்பா. மனதில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். 

 

 

பையனின் அத்தை அதாவது வேணுவின் தங்கை மெல்ல ஆரம்பித்தாள். 

“பொண்ணுக்கு என்ன போடறேன். கல்யாணத்துக்கு என்ன செய்யறேள்?” 

 

ரகுவிற்கு எரிச்சல் வந்தது. அவன் கிளம்பும் முன்பே சொல்லி தான் அழைத்து வந்திருந்தான். இப்படி எதுவும் கேட்கக் கூடாது என்று. 

 

உடனே தன் தாயை அவன் பார்க்க, 

 

பங்கஜமும் மகனின் கோபம் புரிந்து , 

 

” அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யறதை செய்யுங்கோ. கொழந்தேள் நன்னா இருந்த போதாதோ.” உள்ளுக்குள்ளே எத்தனை பவுன் நகை போடுவார்கள், பிள்ளைக்கு என்ன செய்வார்கள், வீட்டிற்கு புதிதாக என்னென்ன பொருள் அனுப்புவார்கள் என்று தெரிந்து கொள்ள அவளுக்கும் ஆசை தான். 

மகனின் முறைப்புக்கு பயந்து அத்தோடு நிறுத்திக் கொண்டாள். 

 

காபியை குடித்து முடிப்பதற்குள் , ருக்கு குறிப்பறிந்து அனைவருக்கும் பஜ்ஜியும்  கேசரியும் தனித் தனி தட்டுகளில் எடுத்து வந்தாள். 

இடையே புகுந்த வைஷு தட்டுகளை வாங்கி அனைவரிடமும் கொடுத்தாள். 

 

” இது தான் உங்க ரெண்டாவது பொண்ணா?” வேணு கேட்க,

 

“ஆமா. பேரு வைஷ்ணவி. ஐ டி ல வேலை பாக்கறா”  எப்போதும், தான் பெற்ற பெண்களின் புகழ் பாடுவது சாரங்கனுக்கு பிடித்த ஒன்று.

 

வைஷு அனைவருக்கும் கேசரி பஜ்ஜி கொடுக்க, ரகுராமின் அருகில் வந்து அவனுக்கு கொடுத்து, “அக்கா வோட பேசுங்கோ”  என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு சென்றாள்.

 

அவனும் அப்போதே, “பேசாம போகமாட்டேன்” என்று பதில் தந்தான். 

 

நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து கொண்டாள். 

 

தட்டை வாங்கி நெய் வடிந்த கேசரியை ஸ்பூனால் இரண்டு வாய் உண்ண, அது வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள் நேராக இறங்கியது. 

 

பெரியவர்கள் அனைவரும் தங்களின் சொந்தங்கள் பற்றியும், “அவாளத் தெரியுமா, இவாள தெரியுமா என்றும், குலதெய்வம் என்ன உங்களுக்கு?” போன்றவற்றைப் பேசிக் கொண்டிருக்க, 

 

அவர்களுக்கு இடையில் அனு சங்கடமாக தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தாள். 

 ரகுவிற்கு அவளின் நிலை புரிய, 

 

“நான் அனுகிட்ட கொஞ்சம் பேசணும்” என சாரங்கனிடம் சொல்ல, 

 

சோஷியலிஸ்ட் என்று வெளியே சொல்லிக் கொண்டு உள்ளே இன்னும் கட்டுப்பெட்டியாக இருக்கும் அனைவரும், ஒரு நொடி அவனைப் பார்க்க, 

 

பின் பங்கஜம் தான், “போப்ப்பா” என்று சோஷியலிசத்தை முதலில் வெளிப்படுத்தினாள். 

 

“அனு போம்மா” நாராயணன் சொல்ல,

 

வைஷு வந்து அனுவை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். 

 

“வாங்கோ” என ரகுவை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள். 

 

“தேங்க்ஸ்” என பொதுவாகக் கூறிவிட்டு அவனும் அவர்களை பின் தொடர்ந்தான். 

 

அனுவும் வைஷுவும் உள்ளே செல்ல, 

 

ரகு அந்த அறைக்குள் சென்றான். 

 

அனு அமைதியாக குனிந்த தலை நிமிராமல் நின்றாள். வைஷுவும் அருகிலேயே இருப்பதைக் கண்ட ரகு, 

 

“தனியா பேசலாமா?” என்று அனுவைப் பார்த்துக் கேட்க, 

 

“பேசலாம். அதுக்கு முன்னாடி நான் பேசிடறேன்.” வைஷு அனுவை நகர்த்திவிட்டு முன்னே வந்தாள். 

 

புருவத்தை சுருக்கி அவளை பார்த்தவன், 

 

“என்ன?” எனவும்

 

“அனுவ உங்களுக்கு பிடிச்சிருக்கா?” 

அனுவை ஒரு முறை பார்த்தவன், உதட்டில் மெல்லிய சிரிப்பைப் படரவிட்டு, 

 

“ரொம்ப பிடிச்சிருக்கு. அதுனால தான் பாக்க வந்தேன். இல்லனா இப்படி வந்து பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு பிடிக்காத விஷயம்.” 

 

“ஓகே .அப்போ நான் சில விஷயங்களை உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும். ஏன்னா தன்னோட விருப்பத்தை கூட வெளில ஓப்பனா சொல்றதுக்கு அனுவுக்கு தெரியாது.” 

 

“ம்ம்” என கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான். 

 

“எங்க அனு ரொம்ப ரொம்ப சாஃப்ட் டைப். சத்தமா கூட பேச மாட்டா. ரொம்ப பாசமா இருப்பா எல்லார் மேலையும். எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செய்வா. 

ஆனா அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா வெளில சொல்ல மாட்டா.  மனசுக்குள்ளையே வெச்சு புழுங்கிடுவா. நீங்க தான் அவ கிட்ட பேசி தெரிஞ்சுக்கணும்.  அவளை கஷ்டப் படாம பார்த்துக்கணும். 

 

உங்காத்துல எல்லாரும் எப்படின்னு தெரியாது. ஆனா என் அக்காவ யாராவது ஏதாவது சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அது மாதிரி நீங்களும் இருக்கணும். அவளுக்கு எப்பவும் துணையா, அவளை எங்கயும் விட்டுக்குடுக்காம இருக்கணும்.  இருப்பேளா??” பட படவென பேசியவள், இறுதியில் இரைஞ்சும் குரலில் முடிக்க, 

 

அவர்களின் பாசம் தெரிந்தது. அவனுக்கும் வைஷுவின் பேச்சு முதலில் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் பின் அவளின் பயம் புரிந்தது. 

 

அனுவின் வாழ்வு சிறப்பாக இருக்க அவள் பேசுகிறாள் என்பதும் புரிந்தது.

அவனது பதிலுக்காக அவள் காத்திருப்பது தெரிய,

 

“நீ அவளை விட எத்தனை வயசு சின்னவ?” அவளையே கேட்க,

 

” மூன்ற வருஷம்” 

 

“நான் அவளை விட நாலு வருஷம் பெரியவன். நீயே அவளை இவ்வளவு பாத்துக்கும் போது, நான் அதை விட அதிகமாகவே பாத்துப்பேன். 

 

எனக்கு பொண்டாட்டியா வர்றவள முகம் சினுங்க கூட விடக் கூடாதுங்கறது  தான் என் பாலிசி. அவளை அழவெச்சா நான் ஆம்பளையே இல்ல. 

 

எல்லா பசங்களும் பொதுவா அம்மா பேச்சு தான் கேப்பாங்க. நானும் அம்மா பேச்சை கேட்பேன். ஆனா அது நியாயமா இருந்தா மட்டும் தான். 

 

கண்மூடித்தனமா எல்லாத்தையும் கேட்க மாட்டேன். நான் படிச்ச படிப்பு எனக்கு நியாயம் அநியாயம் எதுன்னு பிரிச்சு பாக்கற அறிவை கொடுத்திருக்கு. அது கூட இல்லனா நான் படிச்சதுக்கே அர்த்தமில்லாம போய்டுமே. 

 

அப்படி நியாயம் தெரிஞ்ச ஒருத்தன் தான் உண்மையிலேயே படிச்சவன்னு சொல்லிக்கற தகுதி உள்ளவன். 

 

உங்க அக்காவ பத்தி இனிமே நீ கவலைப் படத் தேவை இல்லைன்னு நினைக்கறேன். 

 

” நான் சொன்ன பதில் உனக்குத் திருப்தியா இருந்ததா?” வைஷுவைப் பார்த்துக் கேட்க ,

 

அவனின் பதிலில் சற்று மலைத்து தான் போனாள். படித்த படிப்பை, பெற்ற அறிவை  தெளிவாகப் பெற்றிருக்கிறான் என்பதை உணர்ந்தாள். 

 

” ரொம்ப திருப்தி அத்திம்பேர். இனி அனு உங்க பொறுப்பு. இப்போ நீங்க தனியா பேசுங்கோ . பெர்மிஷன்  க்ராண்டட்” நக்கலாகக் கூறிவிட்டு மனநிறைவோடு அங்கிருந்து சென்றாள். 

 

அத்திம்பேர் என்ற அழைப்பு அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.  சிரித்துக் கொண்டே அனுவைப் பார்க்க, 

 

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனு கண்ணில் கண்ணீருடன் நின்றாள். 

 

“ஹே! என்ன ஆச்சு. உனக்கு என்னைப் பிடிக்கலையா?!” சிறு கவலையோடு ரகு கேட்க,

 

” ரொம்ப பிடிச்சிருக்கு.” மெதுவாகச் சொல்ல,

 

“அப்பறம் ஏன் இந்த அழுகை?” இரண்டடி தள்ளி நின்றே பேசினான். 

 

“நீங்க பேசினதை கேட்டத்துலேந்து , நான் ரொம்ப குடுத்து வெச்சவன்னு புரிஞ்சுண்டேன். என்னையும் அறியாமை கண் கலங்கிடுத்து”  கண்ணைத் துடைத்துக் கொள்ள, 

 

“இப்போ கலங்கினதோட சரி, இனிமே கலங்கினா நான் சும்மா இருக்க மாட்டேன்.  நிச்சயம் ஆனதுக்கப்பறம் ஸ்ட்ரிக்ட்ல்லி நோ. புரியறதா” சற்று நெருங்க நினைத்தான். ஆனால் இப்போது வேண்டாமென விட்டான். 

 

அவன் பேச்சில் லேசாகச் சிரித்தாள் அனு. 

 

“குட். என் வேலைய சுலபமாக்கிட்டா உன் தங்கை. உன் மனசையும் தெரிஞ்சுண்டேன். ” 

 

“அவ எப்போதும் அப்படி தான் ரொம்ப ஓபன் டைப். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிடுவா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ”  ஒருவேளை வைஷு பேசியதில் அவனுக்கு சங்கடமோவென்று அவள் சொல்ல, 

 

“சே சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்பேக்ட் நானும் என் தம்பியும் கூட ரொம்ப கிளோஸ். அவனும் இவளை மாதிரி கலாட்டா பேர்வழி தான்.” 

 

“ஓ” 

 

“ம்ம்ம்ம்” வேறு என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று தான் மனம் ஏங்கியது. என்ன ஆரம்பிப்பது எப்படி என்று புரியாமல் நின்றான். 

 

அந்த பச்சை நிற புடவையில் அம்சமாக இருந்த அவளை மொத்தமாக மனதுக்குள் நிரப்பிக் கொண்டான்.  

அவளும் அவனை ஏறிட்டு பார்த்தாலும், கண்ணைப் பார்த்துப் பேச தயங்கினாள். 

 

அவளது அறையை சுற்றி பார்த்தான். மிகவும் சுத்தமாக வைத்திருந்தாள். 

 

 

சில புத்தகங்கள் அடுக்கப் பட்டு இருந்த டேபிள் அருகில் சென்றான். அங்கிருந்த பேனா ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் தனது கைபேசி எண்ணை எழுதி அவளிடம் கொடுத்தான். 

 

“உன்கிட்ட செல்போன் இருக்கோன்னோ!?”

 

“ம்ம்” 

“உனக்கு எப்போ தோணுதோ கூப்டு. சரி வா போகலாம். எல்லாரும் அங்க இருந்தாலும் இங்க என்ன நடக்கறதுன்னு தான் நெனச்சின்டிருப்பா” 

 

அவன் முன்னே செல்ல, அனு பின்னால் வந்து கதவில் சாய்ந்து நின்று கொண்டாள். 

 

வைஷு அங்கே அனைவரிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள். அனுவின் வீணை வேறு அங்கே எடுத்து வைத்திருந்தாள். 

 

பங்கஜம் எழுந்து வந்து “பேசினியா” என ரகுவிடம் கேட்க.

 

“ம்ம்” என்று விட்டு நாராயணன் கேட்ட கேள்விக்கு மீண்டும் பதில் சொல்லலானான். 

 

யாருக்கும் தெரியாமல் ரகுவைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள் வைஷு. அவனும் கண்ணசைத்தான்.

 

அனுவிடம் சென்றாள் பங்கஜம். 

 

“நன்னா வீணை வாசிப்பனு உங்க சித்தி பாட்டி சொல்லிருக்கா. ரகுக்கும் மியூசிக் னா இண்டரஸ்ட். 

என் பசங்க ரெண்டு பெரும் மிருதங்கம் கத்துண்டா. ஆனா ரகு விட்டுட்டான். எங்க அர்விந்த் இன்னும் வாசிப்பான்.” 

 

“யார் அந்த புது கேரக்டெர்” வாய் துடுக்காகக் கேட்டு வைத்தாள் வைஷு. 

 

அவளை ஏற இங்கப் பார்த்து விட்டு, “என்னோட சின்ன புள்ள” என்றாள் பங்கஜம். 

 

வச்சு அங்கிருந்து வைஷுவை முறைக்க, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள் வைஷு. 

 

“எங்கம்மா போற, நீ பாடு, அனு வாசிக்கட்டும் கேப்போம்” வேணு வாயைத் திறந்தார். 

 

வச்சுவைப் பார்க்க, அவரும் சரி என்றார். 

 

ருக்குவுக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘எங்க போனாலும் இது ஒன்னு கேட்டுடறா எல்லாரும்’ என மனதில் கொதித்தாள்.

 

கலர் கலராக கோடு போட்டிருந்த ஜமக்காளத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு ,

 

அனு வீணையில் சுருதி மீட்ட , வைஷு பாட ஆரம்பித்தாள். 

 

 ” குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா 

       குறை ஒன்றும் இல்லை கண்ணா … .

      குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ……” 

 

இந்தக் குறையுமில்லாமல் பெண் பார்க்கும் படலம் முடிந்து, அப்போதே ரகுவின் அத்தையின் கணவர் நாள் பார்த்துச் சொல்ல, அன்றிலிருந்து இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் என்று முடிவானது. 

 

அனைவருக்கும் தாம்பூலம் வெற்றிலை பாக்கு ரவிக்கை துணி வைத்துக் கொடுக்க, 

 

பங்கஜமும் தான் கொண்டு வந்திருந்த தேங்காய் பூ பழத்தை ஸ்வீட் பாக்ஸ் வைத்து அனுவிற்கு கொடுத்தாள். 

பூவை அவரே அனுவின் தலையில் வைத்து விட, ரகு மனதில் அன்றே அவள் குடி புகுந்தாள். 

 

அனைவரும் கிளம்ப, ரகு அனுவிடம்  கண்களால் விடை பெற்று, போன் செய்யுமாறு ஜாடை காட்டிச் சென்றதை வைஷு பார்க்க தவற வில்லை.  

 

 

 

                                               3

 

 

“நேக்கு அத்திம்பேரை ரொம்ப பிடிச்சிருக்கு” அவர்களின் கார் சென்ற உடனேயே வீட்டிற்குள் வந்த வைஷ்ணவி   குதித்தாள். 

“நோக்கு புடிச்சு என்ன ஆப்போறது? அனுவுக்கு புடிச்சா சேரி. என்ன அனு, பையன் என்ன பேசினான்?” ருக்கு பெரிம்மா அனுவிடம் ரகசியம் பேச, 

 

“ஒண்ணுமில்ல பெரிம்மா. அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டார். வேற ஒன்னும் பேசல. 

 

“என்னவோ போ. எங்க காலத்துல கல்யாணமாகி ரெண்டு வாரம் கழிச்சு தான் உங்க பெரியப்பா முகத்தையே சரியா பாத்தேன். “சலித்துக் கொண்டாள் ருக்கு. 

 

“அப்பறம்…?!” வைஷு ஆர்வமாக 

 

“அப்பறம் என்ன. ஏன்டா பாத்தோம்னு தோணிடுத்து!” நாராயணனைப் பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கொண்டு சொல்ல, 

 

“உங்க பெரியம்மாவ கட்டிண்டா தான் ஆச்சுன்னு அவ அப்பா ஒரே போராட்டம். போனா போகுதுன்னு ஒத்துண்டேன். இல்லன்னா …” நாராயணன் தன் பக்கத்து நியாயத்தைக் கூற,

 

“ஐயோ போதுமே உங்க கல்யாண புராணம். கொழந்த கல்யாணத்தைப் பத்தி பேசுங்கோ” ருக்கு அத்துடன் அவள் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க,

 

வச்சு கேசரியை எடுத்து வந்து அனுவிற்கு ஊட்டினாள். 

அனுவும் மகிழ்ச்சியாக வாங்கி உண்ண,

 

பெண்ணைப் பிரிய வேண்டுமே என்ற கவலை வச்சுவிற்கு இப்போதே தொற்றிக் கொண்டது. 

 

அதைக் கண்ட வைஷு, “லாலே லா ல லே லா லா……..”

 

என்று பின்னாலிருந்து பாட, 

 

“போடி கழுத” அவள் தலையில் கொட்டினாள் வச்சு.

 

“ஆ!!” தலையைத் தேய்த்துக் கொண்டவள்,

“வச்சு … இந்த நாள் உன் காலெண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ” வீர வசனம் பேச,

 

“எதுக்கு டீ?” வச்சு பஜ்ஜி பிளேட்டை கையில் எடுக்கவும்,

 

“ம்ம் ஒண்ணுமில்ல சும்மா குறிச்சு வெச்சுக்க சொன்னேன். எனக்கு ரெண்டு பஜ்ஜி மா ப்ளீஸ்” என அந்தர் பல்டி அடித்தாள். 

 

“உடனே ஒரு சின்ன மண்டபம் பாக்கணும். அவா ஆத்துல எத்தனை பேர் வருவான்னு கேட்டுக்கோங்கோ. சாப்பாட்டுக்கு நம்ம கோவிந்தன் கேட்டரிங் சொல்லிடுவோம். நன்னா சுத்தமா பண்ணிகுடுப்பான்.” வச்சு அடுக்கிக் கொண்டே போனாள். 

 

“சரி டி வச்சு. பத்திரிகை எழுத வாத்தியாருக்கும் சொல்லிடறேன். ஆத்துக்கு பக்கத்துலயே இருக்காரோனோ.” சாரங்கபாணி தன் பங்கை சொல்ல, 

 

“அம்மா மெனு நான் சொல்றேன்.” வைஷு சாப்பாட்டு விஷயம் என்றால் உடனே ஆஜர். 

 

“ம்ம்ம் சொல்லலாம் இரு டீ. அதுக்கு முன்ன நிச்சயதார்த்தத்துக்கு புடவை ஒன்னு புதுசா வாங்கணும். மாப்பிளைக்கும் பேண்ட் ஷர்ட் மோதிரம் வாங்கணுமே! அட கடவுளே இப்போவே அளவுக்கு கேட்டிருக்கலாமே!” வச்சு மறந்ததை சொல்ல, 

 

“பரவால்ல வத்சலா. நாம எல்லாருமே அவா ஆத்தை பாக்கணுமோன்னோ. போய் பார்த்துட்டு அப்படியே அளவு வாங்கிண்டு வருவோம்.” நாராயணன் சொல்ல, 

 

“ஆமா அதுவும் சரி தான்.” சாரங்கன் ஆமோதித்தார். 

 

“கட கட ன்னு எல்லாம் நடந்துடுத்தே! இந்த அம்புவும் கூட இருந்திருந்தா நன்னா இருக்கும். உங்க தங்கைக்கு போன் பண்ணேளா!?” ருக்கு அவளின் நாத்தனாரை நினைவு படுத்த, 

 

“அவ நாளைக்கு வரேன்னு சொன்னா. அவளையும் கூட்டிண்டு போவோம்” சாரங்கன் பதில் தர,

 

“ஐ அப்போ நாளைக்கே போறோமா!” வைஷு குஷியானாள்.

 

“நீ வர வேண்டாம். நீ அனுக்கு துணையா ஆத்துலையே இரு. நாங்க பெரியவா மட்டும் போய்ட்டு வரோம்.” வச்சு ஆர்டர். 

 

அனைத்தும் பேசி முடிவெடுத்தனர். 

 

மண்டபம் முதல் தாம்பூலப் பை வரை அனைத்திற்கும் ஆளுக்கொரு வேலையாகச் செய்து ஒரே நாளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தனர். 

 

பெண் பார்த்துவிட்டு காரில் கிளம்பியதிலிருந்து அத்தை மீது காட்டமாகவே இருந்தான் ரகு.

 

“அத்தை நான் தான் நகை பணம் பத்தி எதுவும் பேசக்கூடாதுனு சொன்னேனோல்யோ அப்புறம் எதுக்கு கேட்ட” கார் சற்று தூரம் சென்ற பிறகு கேட்க, 

 

அவனது அத்தை அலமேலு, பங்கஜத்தைப் பார்க்க, 

 

“ஓ! நீ சொல்லி தான் அத்தை கேட்டாளா! என்னம்மா இப்படி இருக்க? நம்ம கிட்ட என்ன இல்ல? அவ கொண்டு வர போறத வெச்சு தான் வாழணுமா? 

அவகிட்ட வாங்கி அவளுக்கு நான் சாப்பாடு போடறதுக்கு, அந்த பணத்தையும் நகையும் வெச்சு அவா ஆத்துலையே அவ சந்தோஷமா இருப்பாளே மா! 

அவ அப்பா அம்மா குடும்பத்தை விட்டுட்டு நம்ம குடும்பத்தை பாத்துக்க என்னை நம்பி வரா, அவளுக்கு நாம தான் குடுக்கணும். எனக்கு இந்த வழக்கமே புடிக்கல. இதோட நிறுத்திக்கோங்கோ. அவா என்ன பண்ணாலும் குறை கண்டுபிடிக்காம இருங்கோ. 

 

போறப்ப என்னத்த கொண்டு போகப் போறோம். இருக்கற கொஞ்ச கால வாழ்க்கையை பணத்தை காட்டி கெடுக்காதீங்கோ. “தலையில் கடுப்புடன் அடித்துக் கொண்டான். 

 

“ஏன் டா ஊர்ல நடக்காததையா நாங்க கேட்டுட்டோம். எதுக்கு இப்படி பேசற” பங்கஜம் வாயை மூடுமாறு சைகை செய்தும் அதை புறக்கணித்து அத்தை அலமு கேட்டுவிட, 

 

“ஊர்ல இருக்கறவாள்ளாம் கிணத்துல குதிக்கறாளாம். நீங்களும் குதிச்சுடுவேளா?” 

 

“நன்னா இருக்கு. நான் என்னத்துக்கு குதிக்கணும்?” அலமு தோளில் முகத்தை இடித்துக் கொள்ள,

 

“அதே தான். ஊர்ல இருக்கறவா என்ன பண்ணா எனக்கென்ன. நானும் அவளா மாதிரி இருக்கணுமா” 

 

“இங்க பாரு ரகு. நாங்க எதுவும் கேக்க மாட்டோம். உன்னோட விருப்பம் தான் டா முக்கியம். அத்தைய தெரியாம கேக்க சொல்லிட்டேன். மன்னிச்சுடு” பங்கஜம் மனதாரக் கூற, 

 

சற்று சாந்தமடைந்தான் ரகு. 

 

“அந்தச் சின்ன பொண்ணும் நன்னா இருக்கா. நன்னா பாடறா” வேணு நிலைமையை சரி படுத்த வாயைத் திறந்தார். 

 

“நன்னாவே பேசறா கூட. வாயாடியா இருப்பா போலிருக்கு” பங்கஜம் சேர்ந்துகொள்ள, 

அவள் தன்னிடம் பேசியதை நினைவுப்படுத்திக் கொண்டான் ரகு. 

 

மெல்லிய புன்னகை அவனையும் அறியாமல் அரும்பியது. 

 

நிச்சயத்தைப் பற்றி அவர்களும் பேசிக் கொண்டு வர, அனுவிடம் தான் மனத்தால் பறந்து கொண்டிருந்தான் ரகு. 

 

“நாம புடவை மட்டும் தான் வாங்கணும். மத்தபடி சீர் தட்டு வைக்கணும். மத்ததெல்லாம் அவா தான் பண்ணனும்” வீட்டில் நுழைந்த படியே பங்கஜம் பேசிக் கொண்டு வர, 

 

சரியாக போன் செய்தான் அரவிந்த். 

 

“ஹே அர்விந்த். இப்போ தான் உன்னை நெனச்சேன்”

 

“டேய் பொய் சொல்லாதடா. அங்க இருக்கும் போது போன் பண்ணுடானு சொன்னா. வீட்டுக்கு வந்து என்னை நெனைக்கறேன்னு சொல்ற. சரி விடு.  எல்லாம் ஓகே வா? எப்போ மேரேஜ்?” 

 

“ஆல் ஓகே டா. நீ எப்போ வரியோ அப்போ தான் மேரேஜ். ஆனா இன்னும் டு வீக் ல பெட்ரோத்தால்” 

“வாவ் டா. கங்கிராட்ஸ். கலக்கறே ரகு. எனக்கு ரெண்டு மாசம் லீவ் இருக்கு. அவா ஆத்துல எப்போ ஓகே வோ அப்போ மேரேஜ் வெச்சுக்க சொல்லு. நீ டேட் சொன்னதும் லீவ் போட்டுட்டு ஓடி வரேன்! “அண்ணன் ரகுவிற்காக மிகவும் மகிழ்ந்தான் அரவிந்த். 

 

போனை வைத்தவன், “ஊ ஹூ … மை பிரதர் இஸ் கெட்டிங் மேரீட் சூன் கெல்சி டியர்” தன்னோடு ஒரே வீட்டில் வசிக்கும் அவனது தோழியிடம் குதூகலிதான். 

 

“ஹே! ஆஸம். வென் ஆர் வீ கெட்டிங் மேரீட்?” அவன் தோளில் சாதாரணமாக கை போட்டுக் கொண்டு அந்த வெள்ளைக்காரி கேட்க, 

 

“ஆள விடு மா தாயே. எனக்கு எங்க ஊர் பொன்னே போதும். திட்டினாலும் வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்கும். உன்ன கல்யாணம் பண்ணி யார் வாழ்க்கை முழுக்க விரதம் இருக்கறது. டெய்லி நீ போடற பாஸ்தாவ திங்க எனக்கு என்ன விதியா?” அவள் கைய எடுத்து விட்டவன் தமிழிலேயே சொல்ல,

 

“வாட்..?” 

 

“நத்திங்.” கை எடுத்துக் கும்பிட்டு அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். 

 

“ஹா ஹா ஸ்வீட் பாய்” அவளது பாய்ப்பிரண்டை அழைத்து வர வெளியே சென்றாள். 

கெல்சி எப்போதும் இப்படி கலகலப்பாக பேசுவது வழக்கம்.

அரவிந்தோடு தான் வேலை பார்த்தாள். 

அரவிந்த்தும் அவனது நண்பனும் இவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். கெல்சியும் அவளது பாய் ப்ரெண்டும்   வீட்டை இவர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். 

 

                                                               **

 

 

அனுவிற்கு மட்டும் ஏனோ மனம் பதைத்தது. ஒரு புறம் ரகுவை நினைத்து குளிர்ந்தாலும், அப்பா அம்மா வைஷுவை பிரிவதென்பது வேதனை தந்தது. 

 

பெண்ணாகப் பிறந்தால் இந்த வேதனையை நிச்சயம் அடைந்தே தீர வேண்டுமே. அம்மாவின் கைமணம், அப்பாவின் பாசம், வைஷுவின் குறும்பு அனைத்திற்கும் இனி காத்திருந்து அனுபவிக்க வேண்டும். 

 

இந்தக் கல்யாணம் என்ற ஒன்று, ஒரு பெண்ணுக்கு துணையாக கணவனை கொடுத்தாலும், ஏன் பெற்றவர்களை அவளிடமிருந்து பிரிக்கிறது. இந்தக் கொடுமையை மிகவும் தைரியசாலிகள், திடமானவர்கள், ஆம்பளை என்று மீசையை முறுக்கிக் கொள்ளும் ஆண்களுக்கு கொடுக்க வேண்டியது தானே! 

 

பாசத்திற்கு கட்டுப் பட்டு, பூ போன்ற மென்மையான மனம் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஏன் வைத்தார்கள். 

 

கல் நெஞ்சக்காரன் எவனோ ஒருவன் தான் இப்படிப் பட்ட சட்டத்தை கொண்டுவந்திருக்கணும். 

மனதிற்குள் போட்டு எதை எதையோ யோசித்தும் திட்டிக் கொண்டும் இருந்தாள். 

 

இரவு விடி விளக்கின் ஒளியி ல் தூக்கம் வராமல் இதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்க, 

அவள் அருகில் படுத்திருந்த வைஷ்ணவி பாதி தூக்கத்தல் எழுந்து இவளை பார்த்தாள். 

 

“என்ன அனு, ரகுக்கு போன் பண்ணலாமான்னு யோசிக்கரியா?” வசதியாக அவள் தோள் மேல் தலை வைத்து அவளைக் கட்டி கொண்டு கேட்க, 

 

“எனக்கு அதை பத்தியே ஞாபகம் இல்ல டீ” குரல் சுரத்தே இல்லாமல் வர, 

 

“பின்ன என்ன அனு. எதை பத்தி யோசிச்சு இப்படி முழிஞ்சிண்டிருக்க?” திரும்பி அவளை பார்க்க, 

 

“கல்யாணம் பண்ணி போய்ட்டா, நான் உங்களை எல்லாம் மிஸ் பண்ணனும். ஏன் டீ பொண்ணுங்கள மட்டும் மாப்பிள்ளை ஆத்துக்கு அனுப்பி வைக்கறா? மாப்பிள்ளை பொன்னாத்துக்கு வந்து இருக்க வேண்டியது தான!”

 

“அதப் பத்தி யோசிக்கற நேரமா டீ இது. பேசாம படு” விட்டேத்தியாக பதில் சொல்ல,

 

“என் கஷ்டம் உனக்கு இப்போ புரியாது வைஷு” கரகரத்த குரலில் அனு வலியுடன் கூற,

 

எழுந்து அமர்ந்தாள் தங்கை. 

 

“ஹே! லூசு அக்கா. இங்க பாரு. உனக்கு லாஜிக் தெரியுமா?” புதிதாக ஏதோ அவளுக்கு சொல்ல வந்தாள். 

 

“என்ன டீ லாஜிக் இதுல?”  அவளும் பின்னால் ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்து கேட்க, 

 

“ம்ம். கல்யாணம் ஆகப் போற பொண்ணு. முதல்ல இதை தெரிஞ்சுக்கோ” தொண்டையைச் செருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள். 

 

“சொல்லுங்கோ கேட்டுக்கறேன்” அனு கைகூப்பினாள். 

 

“இந்த பசங்க பொண்ணுங்க கல்யாணம், இதுக்கு பின்னாடி ஒரு பெரிய ரகசியம் இருக்கு. அதை பத்தி நான் உனக்கு சொல்லப் போறேன். 

பசங்க பொதுவா நான் தான் பெரிய ஆளு. நீ பொம்பள, எனக்குக் கீழ தான் எப்பவுமே அப்படிங்கற எண்ணத்துல இருப்பாங்க. 

ஆனா அது உண்மை இல்லை. 

எப்பவுமே ஸ்ட்ராங்கானவங்க பெண்கள் தான். 

 

ஒரு பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணா ஏன் பையன விட நாலு அஞ்சு வயசு கம்மியான பொண்ணா பாத்து கல்யாணம் பன்றாங்க தெரியுமா? பொண்ணுங்க பசங்கள விட அறிவுலயும் சரி, மனப்பக்குவத்துலையும் சரி அதிகமான திறன் உள்ளவங்க. 

 

பசங்க பொண்ணுங்க லெவல் அடையரத்துக்கு கொஞ்சம் டைம் ஆகும். அப்போ நாலு வயசு கம்மியா இருக்கற பொண்ண அவன் கல்யாணம் பண்ணும்போது, அந்தப் பொண்ணோட அவனால சரிசமமா வாழ முடியும். 

 

பொண்ணுங்க எல்லா இடத்துலயும் ஈஸியா அடாப்ட் ஆகிடுவாங்க. ஒரு பசுமையான செடி மாதிரி. எங்க நட்டாலும் அவங்களால அங்க வேர் விட்டு வளர முடியும். 

ஆனா இந்த ஆண்கள் மரம் மாதிரி. ஒரு இடத்துல வளந்துட்டா, அதுக்கப்பறம் வெட்டிபோடற வரை அங்க தான். 

அவங்களுக்கு எங்கயும் நகர்ற சக்தி கிடையாது. 

 

மனசளவுலையும் ரொம்ப திடமெல்லாம் இல்லைன்னு தான் சொல்லுவேன். 

 

நாலு பசங்க இருக்கற இடத்துல ஒரு பொண்ணால ப்ரெண்டா பழகிட முடியும். அதே நாலு பெண்கள் இருக்கற இடத்துல ஒரு பையானால் ப்ரெண்டா இருக்கவே முடியாது.  அவனுக்கு மனசு பலகீனம். 

 

ஒரு பொண்ணோட அவன் பழகும் போதே அவன் மனசு அந்த பொண்ணை சார்ந்து இருக்க ஆரம்பிச்சுடும். இல்ல அவ தனக்காக தன்னையே நினைக்கணும்னு ஏங்க ஆரம்பிப்பான். உடனே லவ் ப்ரொபோஸ் பண்ணி அவளை தன் கூட வெச்சுக்க பார்ப்பான். 

 

அந்தக் காலத்துல புருஷன் இன்னொரு பொண்ணோட பழக்கம் வெச்சிருக்கான்னு தெரிஞ்சா கூட பொண்ணுங்க அதை ஏத்துக்கற அளவு பக்குவமா தான் இருந்தாங்க. இதே பொண்டாட்டிக்கு வேற ஒருத்தன் கூட பழக்கம் இருக்குனு தெரிஞ்சா அந்தக் கோழைங்க தற்கொலை தான் பண்ணிக்குங்க. 

 

இல்லனா அவளை ஊரறிய அசிங்கப்படுத்தி தன்னோட மனசு வலிய போக்கிப்பாங்க. 

இதுலேந்து தெரியுதா அவங்க மனசு எவ்வளவு வீக்னு. 

 

இந்தக் காலத்துல அம்மா அப்பா வேலைக்கு போனா அந்தக் குழந்தையை பாத்துக்கரத்துக்கு ஆள் வைக்கறா. வளந்த அந்த குழந்தையை பாத்துக்கறதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறா.” வைஷு பாய்ண்ட் பாயிண்டாக சொல்ல, தன் மனதில் கவலை எங்கே போனதென்று தேடினாள் அனு. 

 

“கடைசியா வளந்த அந்தக் குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க தான் நாம பொறந்தோமா?” சிரித்துக் கொண்டே சொல்ல, 

 

“என்ன பண்றது, அவங்க கெபாசிட்டி அவ்ளோ தான். எப்பவுமே பொண்ணுங்க தான் அனு கெத்து. குடும்ப பாரம், கணவன் பாரம், பிள்ளைகளை சுமக்கற பாரம் எல்லாத்தையும் தாங்கற அளவு ஒரு பொண்ணுக்கு சக்தியை ஆண்டவன் குடுத்திருக்கான்.” இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள் வைஷு.

 

“நீ எங்கயும் போய்ட போறதில்ல நாங்களும் எங்கயும் போய்டப்போறதில்ல. இந்தக் காலத்துல போன், வீடியோ கால் இந்த வசதியெல்லாம் இருக்கு. எப்போ வேணாலும் பாத்து பேசலாம். 

 

பிரிய போறோம்னு நினைக்காம, நமக்கு இன்னொரு குடும்பத்தையும் பாத்துக்கற அளவு பக்குவம் வந்துடுச்சுன்னு கெத்தா நில்லு. என்னோட அக்கா இதுக்கெல்லாம் கலங்கிட கூடாது. “அவளின் கழுத்தைக் கட்டிக்க கொண்டு அவளை ஓரளவு தேற்றிவிட்டாள்.

 

அனுவின் முகம் தெளிந்தது. 

“ரொம்ப தேங்க்ஸ் வைஷு. உன்ன நெனச்சா எனக்குப் பெருமையா இருக்கு” அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள். 

 

“சரி சரி தூங்கலாம் வா. இந்த மாதிரி முழிச்சிருந்து தேவைல்லாதத யோசிக்காம, அந்த நேரத்துல வளந்த கொழந்த என்ன பண்ணுதுனு போன் பண்ணி கேளு. போறப்ப யாருக்கும் தெரியாம சிக்னல் வேற குடுத்துட்டு போயிருக்கார்” கிண்டல் செய்யவும் 

 

“ஏய்” அனு அவளை அடிக்க வர, 

 

போர்வைக்குள் புகுந்து கொண்டாள் வைஷு.

 

 

                                                    4

 

“அனு.. எங்க இருக்க?” வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்பு என்கிற அம்புஜம்.

 

நாராயணன் சாரங்கபாணியின் ஒரே தங்கை. உள்ளூரிலேயே இருந்தாலும், அவள் எப்போதாவது தான் வருவாள். கணவன் குடும்பத்தை தூக்கிச் சுமப்பவள். 

 

அனைவர் மீதும் பாசம் உள்ளவள். அனு இவளை போன்றே இருந்தாள். குணத்திலும் அழகிலும். 

 

அனு அவளின் குரல் கேட்டு வெளியே வந்தாள். 

 

“அத்தை.. வா வா. ஆனா உன் மேல நான் கோவமா இருக்கேன். ஏன் நேத்திக்கு நீ வரல?” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அனு. 

 

“இல்ல டீ கொழந்த, நேத்திக்கு  தான் என் மாமனாரோட அப்பாவுக்கு ஸ்ரார்த்தம். அதுக்கு தளிகை பண்ண வேண்டாமா. மாப்பிள்ளை உன்னை பார்க்க தான வந்தார். என்னய்யா பார்க்கப் போறார். நிச்சயதார்தத்தை ஜமாய்ச்சுடலாம். கவலைப் படாத. எங்க அம்மா அப்பாலாம்? 

 என்னை சீக்கிரம் வர சொல்லிட்டு, இவாளாம் இன்னும் கெளம்பலையா? கல கலப்பாக பேசினாள். 

 

“அம்மா உள்ள தான் இருக்கா. அப்பா அவா ஆத்துக்கு போறதுக்கு வெத்தலை பாக்கு எல்லாம் வாங்கப் போயிருக்கா.” 

 

“வா அம்பு” வச்சு வெளிய வந்தாள். 

” என்ன மன்னி நீ இன்னும் என்ன பண்ணிண்டிருக்க. பெரிய மன்னி எங்க? ” அம்பு கனிவாகக் கேட்க,

 

“கார் புக் பண்ணியிருக்கு . அவா போறவழில ஏறிக்கறேன்னு சொன்னா.” 

அதற்குள் சாரங்கனும் காருடன் வந்துவிட, 

 

“கார் வந்தாச்சு கிளம்புங்கோ. அண்ணாவும் அங்க ரெடியா இருக்கான்” பர பரத்தார். 

 

“ஜாக்கரதையா இருந்துக்கோங்க டீ. அவளை எழுப்பி காபி குடு. விட்டா நாள் முழுக்க தூங்குவா. நாங்க போயிட்டு வரோம்” வச்சு அனைவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பினாள். 

 

போகும் வழியில் நாராயணனும் ருக்குவுக்கு ஏறிக்கொள்ள, மாப்பிள்ளை வீட்டை பற்றி பேசிக்கொண்டே சென்றனர். 

 

அம்புவிற்கு நேற்று நடந்தவைகளை ஒன்று விடாமல் ஒப்பித்தனர். 

 

**

“கூடத்தை நன்னா துடை. பொன்னாத்துக்காரா வர போறா. ஆகம் நன்னா இருக்கணும்” வேலைக்காரியை படுத்திக்க கொண்டிருந்தாள் பங்கஜம். 

 

“இதுக்குமேல தொடச்சா மொசைக் பேந்துரும்மா.” அவளும் சளைக்காமல் பதில் சொல்ல, 

“போதும் டீ. இந்த காப்பிய குடிச்சுட்டு கெளம்பு” அதற்குள் போன் வந்தது. 

 

சாரங்கபாணி வீட்டு எண்ணிற்கு போன் செய்து கிளம்பிவிட்டதாகக் கூற, வேணு விஷயத்தை சொன்னார். 

 

வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ரகு கிளம்பி அலுவலகம் சென்றிருந்தான். 

 

அனைவரும் வந்துவிட, நன்றாகவே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

அவர்களை நன்றாகவே உபசரித்தனர் வேணுவும் பங்கஜமும். பிள்ளையைப் பெற்றதால் பங்கஜத்திற்கு எப்போதும் ஒரு மிதப்பு இருக்கத்தான் செய்தது. 

ஆனாலும் இப்போது முதல் முறை என்பதால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். 

 

அப்படி இப்படி என்று ஏதாவது கேள்விப் பட்டால் ரகு விடம் யார் பாட்டு வாங்குவது என்ற பயம் வேறு இருந்தது. 

“ஆத்த சுத்திப் பாருங்கோ.” என்றாள் தன் வீட்டுப் பெருமையைக் காட்ட,

சாரங்கனும் நாராயணனும் அக்கறை காட்டவில்லை. மற்றவர்களும் சங்கோஜ பட்டு உட்கார்ந்த படியே பார்க்க,

பங்கஜம் “வாங்கோ” என உள்ளே ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்றாள்.

 

“இது தான் ரகு ரூம்” என அவனின் அறையைக் காட்ட, 

 

“நன்னா இருக்கு” என வச்சு பாராட்ட, 

 

ருக்குவுக்கு ஆச்சரியம். ஏனெனில் ரகு, மிகவும் ரசனை உள்ளவன். அவனது அறையில் நிறைய பொருட்கள் வைக்கமாட்டான். ஆனால் சிலவற்றை நேர்த்தியாக வைத்திருப்பான். 

 

அதிலேயே அந்த அறை அழகாக தெரிந்தது. அவனும் அவனது தம்பி அரவிந்தும் எடுத்துக் கொண்ட படம் அங்கே மாட்டியிருந்தான். 

 

இருவரும் பற்கள் தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தனர். 

 

“இது தான் உங்க ரெண்டாவது புள்ளையா” அம்பு முதல் முறை பங்கஜத்திடம் பேசினாள். 

 

“ஆமா. ஆஸ்திரேலியால இருக்கான்.” பெருமை பேசினாள் பங்கஜம்.

 

“கல்யாணத்திற்கு வருவாரோனோ!” 

 

“ஆமா கண்டிப்பா. அண்ணா தம்பி ரெண்டு பேரும் அவ்ளோ கிளோஸ். நீங்க பொண்ணோட சௌரியத்த பாத்துண்டு சீக்கிரம் நாள் பார்த்து சொன்னா, அவனுக்கும் லீவ் கேட்டுண்டு வத்துக்கு ஈஸியா இருக்கும்.”

 

“ம்ம் கண்டிப்பா சொல்லிடறோம். எங்காத்து பக்கத்துல வாத்தியார் இருக்கார். அவர் தான் எங்க ஆத்து வாத்தியார். சீக்கிரம் கேட்டு சொல்றோம்.” வச்சு உத்திரவாதம் தர, 

 

“மாப்பிளையோட அளவு சொல்லுங்கோ மோதிரம் வாங்க. இது பொண்ணோட அளவு.” பண்டமாற்று முறை நடக்க, 

 

“நீங்க பொண்ணுக்கு என்ன கலர் புடவை எடுக்கப் போறேள்ன்னு சொன்னா. பையனுக்கும் அதுக்கு மேட்சிங்கா சட்டை எடுப்போம். இப்போ அது தான பேஷன். எல்லாரும் அப்டி தான் பண்ணிக்கறா” அம்பு வந்த வேலையை சரியாகச் செய்தாள். அனுவின் மனம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் வாய் திறந்து கேட்காமலேயே அவளுக்கு எல்லாம் செய்வாள் அம்பு.

 

“கடைக்கு போய் வாங்கிட்டு நான் உங்களுக்கு போட்டோ அனுப்பறேன். அப்பறம் நீங்க வாங்குங்கோ” 

 

சட்டை அளவு எல்லாம் தெரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். 

 

இன்னும் இரண்டு வாரம் கூட முழுதாக இல்லையென்பதால், அன்றே நல்ல நாளும் கூட எனவும், 

பங்கஜம் தன் நாத்தனாரை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள். 

 

“மன்னி நம்ம பவுசு இதுல தான் தெரியும். அதுனால நன்னா எடுங்கோ” ஏத்தி விட்டாள். 

 

“ஆமா டீ.  நன்னா வாங்கிடுவோம். அவாளும் நம்ம புள்ளைக்கு எடுப்பா. மோதிரமும் வாங்கிண்டு போயிடுவோம்.” பங்கஜம் கடையில் புடவைகளை தேடினாள்.

ரகு இதற்கு வரவில்லை. அவனுக்கு புடவை செலக்ட் செய்வது எல்லாம் பழக்கம் இல்லாத ஒன்று. அதனால் அம்மாவையே எடுக்கச் சொல்லி விட்டான். 

 

பங்கஜமும் ஓரளவு நன்றாகவே எடுப்பாள். 

 

இருவரும் சேர்ந்து பேபி பிங்க் நிறத்தில் வெள்ளி ஜரிகை போட்ட புடவையை எடுத்தனர். நல்ல உயர்ந்த ரகம். 

 

அங்கேயே போட்டோ எடுத்து வச்சுவின் எண்ணிற்கு வாட்சாப் செய்தாள். 

 

வச்சு உடனே அதை அனுவிடமும் வைஷுவிடமும் காட்ட, 

 

“உன் வருங்கால மாமியார், கெத்து காட்டணும்னே விலையோட அனுப்பியிருக்கா பாரு அனு” வைஷு சரியாக கணித்தாள்.

“பரவால்ல வைஷு விடு.தெரியாம கூட அனுப்பியிருக்கலாம் இல்லையா” அனு சொல்ல,

 

“நீ இப்படி நல்லவளாவே இரு.எனக்கு என்னவோ அப்படி தோணல. உன் தலைல மொளகா அரைக்காம இருந்தா சரி.”  நம்பாமல் பேசினாள்.

 

“அவளை கெடுக்காத வைஷு. ஒருத்தர் நம்மள ஏமாத்தறாங்கன்னு நமக்கு புரியாம இருக்கற வரை நம்ம மனசு எதையும் போட்டு குழப்பிக்காம நல்லாவே இருக்கும். தெரிஞ்சா தான் கஷ்டம். இப்படி பண்ணிருப்பாளோ அப்படி பண்ணிருப்பாளோனு யோசிச்சு நம்ம நிம்மதி கெட்டு போகும். அனுவுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். வெள்ளந்தியா இருக்கா. அப்படியே இருக்கட்டும்.உன்னோட சி ஐ டீ புத்திய உன்னோடையே வெச்சுக்கோ” வச்சு வைஷுவை கடிந்து கொள்ள,

 

“நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க. போக போக புரியும்.சரி நாம எப்போ புடவை எடுக்க போறோம்?” 

“நாளைக்கு போகலாம். நல்ல நேரம் எப்போனு காலெண்டர்ல பாரு. போகலாம். உனக்கு லீவ் தான. நாம மூணு பேர் போயிட்டு வருவோம்.” சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றாள் வச்சு. 

 

“எனக்கு இருக்கற ஒரே தைரியம் அத்திம்பேர் தான். உன்னை அவர் நல்லா பாத்துப்பாரு. அங்க போய் என்ன கஷ்டம் வந்தாலும் நீ அவர் கிட்ட சொல்லு அனு” அவளின் கபடமில்லாத முகத்தைப் பார்த்து கூறினாள் தங்கை. 

 

“நீயும் என்கூடவே வந்துடு பேசாம.” அனு சிரிக்க,

 

“ம்ம்ம். இது கூட நல்ல ஐடியா தான். சொல்ல முடியாது அந்த ரெண்டாவது பையன் எனக்கு ஏத்த மாதிரி இருந்தா, அவனையே கல்யாணம் பண்ணிண்டு உனக்கு துணையா அங்கேயே வந்துடுவேன்” தீவிரமாக யோசித்த படியே சொல்ல,

 

“அடிப்பாவி நீ செஞ்சாலும் செய்வ” அழகாக சிரித்தாள். 

 

**

 

அம்மா எனக்கு இந்த புடவை மா. இந்த கலர் புதுசா இருக்கு.” வைஷு புடவைகளை அலச

 

இரு டீ மொதல்ல அனு எடுக்கட்டும். அதுக்கப்புறம் மிச்சம் இருந்த உனக்கு. கல்யாணத்துக்கு நன்னா எடுத்துத் தரேன் வைஷு. இது நிச்சயம் தானே. அனு நீ மொதல்ல பாரு.” வச்சு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு புடைவை வாங்க வந்தாள்

 

எனக்கு நல்ல தேன் கலர்ல வேணும்அந்த கலர் இருந்தா காட்டுங்ககடைக்காரனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்

 

மூவரும் சேர்ந்து தேன் நிறத்தில் இருக்கும் அணைத்து புடவைகளையும் ஆராய்ந்து கடைசியில் ஒன்றை எடுத்தனர்

 

பின்பு அதிக விலையில்லாமல் வைஷுவும் ஒன்றை எடுத்துக் கொள்ள

 

ரகுவிற்கு சட்டையை அனுவே தெரிந்தெடுத்தாள். அவளுக்கு அவர்கள் வீட்டில் வாங்கிய புடவைக்கு மேட்சிங்காக அவனுக்கும் பேபிபிங்க் நிறத்தில் சட்டை எடுத்தாள்

 

மோதிரம் அவர்கள் வீட்டில் எப்படி வாங்கினார்கள் என்று தெரியாது.ஆனால்  அனு அவனுக்காக பார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்

 

ரகுவிற்கு எப்போதும் அனுவின் ஞாபகம் தான். “அவகிட்ட  நம்பர் குடுத்து கால் பண்ண  சொன்னது தப்பு. அவ நம்பரை நானே வாங்கிருக்கணும்.”  போனில் புலம்பினான்

 

ஆமா டா கெடச்ச சான்சை விட்டுட்டு இப்போ எதுக்கு புலம்பற. பேசாம அம்மா கிட்ட சொல்லி அவங்க நம்பரை வாங்க சொல்லேன்.” மறுமுனையில் ஐடியா கொடுத்தான் அர்விந்த்

இல்ல டா. அம்மா கிட்ட போய் எப்படி நான் கேக்கறது. அது நன்னா இருக்காது.” மறுத்தான்

 

அட போடா. நானா இருந்தா…. ” சற்று இடைவெளி விட்டு

அண்ணன் கிட்ட சில விஷயத்தை எல்லாம் சொல்ல முடியாது. அவங்களே கால் பண்ணனும்னு வேண்டிக்கோ போ. அது தான் முடியும்சலிப்பாக சொல்ல,

 

அவ தங்க நன்னா பேசினாஅவகிட்டயாவது நம்பர் வாங்கிட்டு உங்க அக்கா பேச சொல்லுன்னு சொல்லிருக்கணுமோலேட்டாக யோசித்தான் ரகு

 

என்னது தங்கச்சியா…! இந்த விஷயத்தை யாரும் என்கிட்டே சொல்லலையே. சே! நான் அங்க இல்லாம போனது ரொம்ப தப்பா இருக்கே!” பீல் செய்து பேச,

 

டேய் அவ சரியான வாய். என்கிட்டயே தைரியமா வந்து, எங்க அக்காவை நன்னா பாத்துக்கணும்னு சைலன்ட் எச்சரிக்கை பண்ணிட்டு போயிருக்காசிரித்தான்.

 

பார்றா.. அவ்ளோ பெரிய ரௌடியா.” ஆச்சரிய பட,

 

ஆமா டா.சரியான வாய்.” 

 

என்னை விடவா..!” 

 

ரெண்டு ரையும் பேசவிட்டா சரியான போட்டியா இருக்கும்மீண்டும் சிரிக்க,

 

கவனிச்சுக்கறேன்எங்கோ மனதில் அவளிடம் வம்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து ஒட்டிக்கொண்டது

 

டேய் தம்பி. ஏதாவது கலாட்டா பண்ணி, என் வாழ்க்கையோட விளையாடிடாத. உன் டோனே சரியில்ல

 

ச்சே என்ன ரகு. அப்டி எல்லாம் பண்ணுவேனா” 

 

டேய்! கல்யாணத்துக்கு நீ வரணுமா?!” வேண்டுமென்றே வம்பிழுத்தான்

 

உன் கல்யாணம் நடக்கணும்னா நான் கண்டிப்பா அங்க இருக்கணும்.இல்ல..” வில்லன் போல பேச 

 

ஜஸ்ட் கிட்டிங்.. சீக்கிரம் வா டா. தேதி உனக்கு அனுப்பறேன் மெஸேஜ்ல. டேக் கேர்.”

 

ஓகே டா. பேச முயற்சி பண்ணு. இல்லன்னா நிச்சயதார்த்தம் வரை வெய்ட் பண்ணு. ஒரு வேளை நம்பர் கெடச்சா, அப்டியே அந்த பொண்ணு நம்பர் வாங்கி குடு டா” 

 

தம்பி..இது ல்லத்துக்கு இல்ல.. பாத்து இரு. இல்லனா நீ கெல்சி கூட தங்கியிருக்கன்னு அம்மா கிட்ட சொல்லிடுவேன்ரகு மிரட்ட,

 

அடேய் என்ன கேட்டுட்டேன்னு இப்படி டென்சன் ஆகற. கூல்.நம்பர் எல்லாம் வேண்டாம். சும்மா சொன்னேன். ஹீ ஹீ” 

 

போதும் போதும்.போய் தூங்கறேன். குட் நைட்போனை வைத்ததும்

 

உடனே புது எண்ணிலிருந்து ரகுவிற்கு அழைப்பு வர,

 

ஆர்வமாக எடுத்தான்

 

ஹல்லோ

 

அத்திம்பேர். நான் தான் வைஷ்னவி பேசறேன்.”

 

எப்படி இருக்க. ஆத்துல எல்லாரும் எப்படி இருக்காபொதுவாகக் கேட்க

 

ம்ம்.. ரெண்டு நாள் கூட ஆகல. அதுவும் நேத்திக்கு தான் உங்காத்துக்கு எல்லாரும் வந்தா. அனுவை கேட்ட கூட ஓகே. பொதுவா கேக்கறேளே!” 

 

உன்கிட்ட பேச முடியாது போலிருக்கே!” மெல்ல சிரிக்க,

ஆமா என்கிட்டே பேசாதீங்கோ. அனு கிட்ட பேசுங்கோ. போறப்ப என்கிட்டே சொல்லிட்டு போயிருந்தா நானே அவளை போன் பண்ண வெச்சிருப்பேன். நீங்க ஜாடை காட்டிட்டு போனா அவ உடனே பண்ணிடுவாளா. நல்ல ஆள பாத்தீங்க. எல்லாத்துக்கும் நானே ஹெல்ப் பண்றேன். வேற வழி. இந்தாங்கோ, அவ கிட்ட கொடுக்கறேன்” 

 

வாலா இருக்க. உன்னை எல்லாம் எப்படி சமாளிக்கறது.” 

 

அதை பத்தி நீங்க கவலை படாதீங்க. எனக்குன்னு ஒருத்தன் வருவான்” 

போனை அனுவிடம் கொடுத்து விட்டு சென்றாள்.

 

அனு

ம்ம்…”

 

அன்று ஆரம்பமானதுசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்காஇன்னும் இருக்கா…. “

 

நிச்சயத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளோர்களை மட்டும் அழைத்திருந்தனர்.

மண்டபத்திற்கு மதியமே சென்று விட, அவர்கள் ஏற்படு செய்திருந்த கேட்ரிங்காரர் அவர்களுக்கு முன்னே அங்கே வந்து, காபியுடன் அவர்களை வரவேற்றார்.

பெண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர் ருக்குவும் அம்புவும்.

அத்தை அவளின் கணவர், பெரியம்மா பெரியப்பா அவர்களின் பிள்ளைகள், பேரன் பேத்தி, அத்தையின் மகள் , மகன் எல்லோரும் வந்துவிட கல்யாணக் களை கட்டியது.

வைஷு மேடையில் பூ பழங்கள் மாலைகள் என அழகாக வைத்தாள். சிறுவர்கள் இருவரை அழைத்து வாசலில் வருபவர்களுக்கு பன்னீர் தெளிக்க நிறுத்தி வைத்தாள்.

கல்கண்டு தட்டில் ஜெம்ஸ் வாங்கி அதில் அனு கெட்டிங் என்கேஜ்ட் வித்  ரகு  என எழுதி வைத்தாள்.

அனு வை தயார் செய்ய பியூட்டி பார்லரில் இருந்து ஆட்கள் வர, அவர்களை அழைத்துக் கொண்டு அனுவிடம் சென்றாள்.

அரை மணி நேரத்தில் அனு அழகான மணமகள் ஆனாள்.

வாசலிலேயே நின்று மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்காக காத்திருந்தனர் வச்சுவும் அம்புவும்.

ரகுவிற்கு மனம் முழுக்க அனு நிறைந்திருந்தாள். அவளை சர்வ அலங்காரத்துடன் காண ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டிருந்தான்.

ஒருவாரம் முழுதும் இரவு தவறாமல் பேசி இருந்தனர். சில நேரங்களில் பொதுவாக சில நேரங்கள் காதலாக!

அவளின் அமைதியான சொல்லாத காதல் அவனை கட்டிப் போட்டு வைத்திருந்தது.

மண்டபத்து வாசலில் வண்டி வந்து நிற்க, பின்னாலேயே ஒரு பெரிய வேன் வைத்து தன் சொந்தங்களை அழைத்து வந்திருந்தார் பங்கஜம்.

மாப்பிள்ளை வந்தாச்சுஒரு வாண்டு ஓடிச் சென்று அனுவின் அறையில் தகவலை சொன்னது.

வருங்கால மாமியார் வத்சலாவும் ருக்குவும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

கம்பீரமாக, மாப்பிளை மிடுக்குடன் லட்சணமாக இருந்தான் ரகு.

மொதல்ல எல்லாரும் டிபன் சாப்ட வாங்கோசாரங்கன் மாப்பிள்ளை சுற்றத்தினை அழைத்துச் சென்றார்.

 

 

                                                            5 

 

“வாங்கோ சாப்பிட வாங்கோ” சாரங்கன் அழைத்துச் சென்றார். 

 

“மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது” பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு இலை பரிமாறி அதில் நீர் தெளித்து வைத்தாள். 

 

யாரும் குறை சொல்ல முடியாத அளவு டிபன் இருந்தது. காசி அல்வா, நெய் பொங்கல், இட்லி சாம்பார், தேங்காய் சட்டினி, மெது வடை கூடவே சூடாக பில்டர் காபியும் வர, 

 

அனைவரும் திருப்தியாக உண்டனர். 

 

அதற்குள் மேடையில் அனைத்தும் தயார் படுத்தியிருந்தனர். பங்கஜமும் தன் பங்கு சீர்களை அடுக்கி வைத்து புடவையும் கூடவே வாங்கி வந்திருந்த மோதிரம், அதனோடு ஒரு நெக்லெஸ் டப்பாவும் இருக்க, 

 

எதேர்ச்சையாக அந்தப் பக்கம் வந்த வைஷு இதை கவனித்தாள். 

 

‘அடடா இவா நம்ம அக்காக்கு நெக்லெஸ் போட்டா நாமளும் பதிலுக்கு மாப்பிள்ளைக்கு இப்போவே ஏதாவது போடணுமே. இல்லனா அசிங்கமா போய்டும்.’ மனதில் எண்ணிக்கொண்டே இந்த விஷயத்தை வச்சுவிடம் சொல்ல வச்சுவைத் தேடினாள்.

 

வச்சு தன் உறவினர்களிடம் சம்மந்தி வீட்டாரை அறிமுகம் செய்து கொண்டிருக்க, இப்போது போய் பேசுவது சரிப்பட்டு வராது என்று நினைத்தாள்.

 

‘இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல வைஷு. எப்படியும் மாப்பிள்ளைக்கு நாம செயின் பிரேஸ்லெட் இதெல்லாம் கல்யாணத்துக்கு போடத் தான் போறோம். அதுல ஒண்ணாவது இப்போ போட்டா தப்பில்லை.’ சட்டென யோசித்தவள் கையில் இருந்த வாட்ச்சைப் பார்க்க, 

 

இன்னும் நிச்சயம் ஆரம்பிக்க அரை மணி நேரமே இருந்தது. உடனே தன் கைப் பையை தேடி எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள். 

 

அவளுடைய சம்பளம் முழுதும் அப்படியே சேமிப்பில் தான் இருந்தது. அந்த தைரியத்தில் நகை வாங்க உடனே கிளம்பினாள். 

 

மண்டபம் இருந்த இடமும் மக்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அங்கேயே நகைக் கடை இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ஊர்ஜிதம் தான். 

 

சற்று தூரம் நடந்து செல்ல, அங்கே கடைகள் நிறைய தென்படவும், எப்படியும் ஏரியாவுக்கு நாலு நகைக் கடை இருக்கும் காலம் என்பதால் அதற்குள் நுழைந்தாள். 

 

அவள் எதிர்ப்பார்த்தபடி, பிரபலமான நகைக் கடையே கண்ணில் பட்டது. 

 

உள்ளே புகுந்து உடனே ஒரு ப்ரேஸ்லெட்டை செலக்ட் செய்து பில் போடச் சொன்னாள். 

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் மண்டபத்தில் இருந்தாள். 

அவள் எங்கிருந்தோ வருவதைப் பார்த்த சாரங்கன் அவளை அழைத்து கேட்க, 

 

விவரத்தை சொன்னாள்.

 

“என்ன வைஷு இது. இப்போ இல்லனா கல்யாணத்துக்கு போட போறோம். அதுக்காக இப்படி அவசர அவசரமா போவியா. என்ன பொண்ணு நீ. சரி வா அம்மாகிட்ட சொல்லு” அவளையும் அழைத்துச் செல்ல,

 

“அப்பா இப்போல்லாம் சொல்ல வேண்டாம். அம்மா டென்சன் ஆவா. ஆத்துக்கு போய் பேசிக்கலாம். மொதல்ல இதை மாப்பிளை மனைல உக்காந்ததும் போட்டு விடு.” அவரது கையில் அந்த நகையைக் கொடுத்து விட்டு எப்போதும் போல அனுவுடன் நின்று கொண்டாள். 

 

வாத்தியார் வந்து மாப்பிள்ளையையும் பொன்னையும் அழைத்து  , சுற்றம் சூழ நிற்க, அவர்களை விழுந்து வணங்குமாறு சொல்ல, 

 

அனுவும் ரகுவும் முதல் முறை அருகே நின்றனர். பின் பொதுவாக அனைவரையும் வணங்கி அமர்ந்தனர்.

 

முதலில் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து பெண்ணுக்கு சந்தனம் மஞ்சள் பூசச் சொல்ல, 

 

பங்கஜம் தன்னுடைய அரக்கு நிற மடிசாரை நன்றாக இன்னொரு முறை இழுத்துச் சொருகிக் கொண்டு , கையில் இருந்த நான்கு தங்க வளையல்களை எல்லோருக்கும் முன்பு ஒரு முறை சுழற்றி கையோடு இறுக்கிக் கொள்ள, 

 

‘இது சரியான அல்டாப்பு சிங்காரியா இருக்கும் போல’ வைஷு தன்னுடைய பாஷையில் பல்லைக் கடித்தாள். 

 

வெள்ளித் தட்டில் சிறிய வெள்ளிக் கிண்ணங்களில் சந்தனம் குங்குமம் நிரப்பி இருக்க, அதை கையில் எடுத்துக் கொண்டு, அனுவிற்கு வைத்துவிட்டாள். 

 

பின் அனுவிற்கு வாங்கி வைத்திருந்த நகை பெட்டியைத் திறந்து அழகான வெள்ளைக் கல் ஜொலிக்கும் அந்த தங்க அட்டிகையை அவளுக்கு அணிவித்தாள். 

 

இது அவளுடைய லிஸ்டில் இல்லாத ஒன்று. அன்று காலையில் தான் ரகு கடைக்குச் சென்று யாருக்கும் சொல்லாமல் வாங்கி வந்திருந்தான். 

 

இது போன்ற கடைகளுக்கு சென்றே அறியாதவன், இன்று முதல் முறை சென்றது பங்கஜத்திற்கு ஆச்சரியம் தான். 

 

“அவன் வருங்கால ஆம்படையாளுக்கு அவன் வாங்கறான்.” வேணு அவனுக்கு சப்போர்ட் செய்ய, 

“அம்மா வாங்கணும் னு தோணித்து வாங்கிட்டேன். இது தப்பா” ரகு அவன் நினைத்தை சொல்ல,

 

இருவருக்கும் சேர்த்து வேணுவைத் தான் திட்டினாள். 

 

ரகு சென்ற பிறகு, 

 

“பாருங்கோ இப்போவே பொண்டாட்டி பக்கம் போக ஆரம்பிச்சுட்டான். இன்னும் என்ன என்ன பண்ணுவானோ” வேணுவை பிடித்துக் கொண்டாள்.

 

“பங்கஜம், நகை தானே வாங்கினான். அதுல என்ன தப்பு.” நியாயவாதி போல் பேச,

 

“நீங்க ஒரு நாளாவது இப்படி செஞ்சிருப்பேளா?” தாடையை இடித்துக் கொள்ள,

 

“சம்பளக் கவர் மொத்தமா உன் கைல கொடுத்துடறேன். எனக்கே கை செலவுக்கு நீ தான் தரணும். உனக்கு வேண்டியதை நீ வாங்கிண்ட, இதுல நான் என்னத்த செய்ய” சந்தடி சாக்கில் அவளை வாரி விட்டு சென்றார். 

 

“பாப்போம் அவா ஆத்துல என்ன போடறான்னு. ஒரு மோதிரம் மட்டும் தான். மிச்சம் கல்யாணத்துலனு சொல்ல போறா பாருங்கோ” தன்னிடம் கேட்காமல் ரகு வாங்கியது அவளுக்கு பிடிக்கவில்லை. 

 

ரகு கேட்டிருந்தால் அவளே கூட சென்று வாங்கியிருப்பாள் தான். ஆனால் இதில் அவள் பங்கு இல்லையென்பதால் வந்த காட்டம்.

 

அந்த நகையை இப்போது அவளே அனுவிற்கு அணிவிக்கும்படி ஆனது. 

எல்லோர் முன்னிலையிலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவளே விருப்பப்பட்டு செய்வது போல நடந்துகொண்டாள்.

 

அத்துடன் புடவையைக் கொடுத்து மாற்றிக் கொண்டு வரச் சொல்ல, 

 

அனுவிற்கு நகையைப் போட்டு விடுவதைப் பார்த்த வச்சு, 

“கடவுளே நாம எதுவும் வாங்காத போய்ட்டோமே” என வைஷுவிடம் புலம்பினாள். 

வைஷு , “டோன்ட் ஒர்ரி மா” விஷயத்தை சொல்வதற்குள் அனுவை அழைத்துக் கொண்டு போகச் சொல்ல, அவளுடன் சென்றுவிட்டாள். 

 

அடுத்து மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் சந்தனம் வைத்து அத்துடன் சாரங்கன் , வைஷு வாங்கி வந்த பிரெஸ்லெட்டை போட்டு விட, வச்சுவுக்குமே ஆச்சரியம் தான். 

 

‘ஏது இது? எப்படி வந்தது?’ என்ற கேள்விகள் குடைந்தாலும் சபையில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். 

 

ரகுவிற்கு புது பேண்ட் சட்டையைக் கொடுத்து, 

“அனு தான் செலெக்க்ஷன்” என்று சொல்லி சிரித்தார் சாரங்கன். 

 ரகுவும் சிரித்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டு போக, 

 

வேணு பங்கஜத்தைப் பார்த்தார். 

 

“என்னமோ ஒன்னும் பண்ண மாட்டான்னு சொன்ன, இப்போ பாரு நம்ம புள்ளைக்கு நகை போட்டிருக்கா. ரகு மட்டும் காத்தால இந்த நகையை வாங்கலன்னா நம்ம மானம் தான் போயிருக்கும்” காதை கடிக்க, 

 

“ஆமா மாப்பிள்ளைக்கு போடணும் அதான் போட்ருக்கா. இதுல என்ன ஜம்பப் படுத்தறேள்.” முறைத்து பின் முகத்தை சரி செய்தாள். 

 

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை எதேர்ச்சையாக வெளியே வந்த வைஷு கேட்டுவிட, 

 

‘ ஓ! எங்காத்த பத்தி தான் பேசறேளா! எங்காத்துல சொன்னா எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்னு தான் சொல்லுவா. அதுனால சொல்ல மாட்டேன். பங்கஜம் உன்னை நானே டீல் பண்றேன். இரு!’ மூளையில் திட்டம் போட ஆரம்பித்தாள். 

 

“மாமி! உங்கள கூப்படறா பாருங்கோ!” வாத்தியார் அழைத்ததை சொல்ல, 

 

ஒரு நொடி முகம் வியர்த்தது பங்கஜத்திற்கு. 

 

மாப்பிள்ளை பெண் இருவரும் வந்தவுடன், மாமாக்கள் வந்து மாலை அணிவிக்க, பின் லக்ன பத்திரிக்கையை எழுதினார் வாத்தியார். 

 

ரகு அனுவைப் பார்க்க, அவள் நாணத்தில் அவனை ஏறிட்டும் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 

 

“அனு” சற்று அவளை நெருங்கி அமர்ந்து  யாருக்கும் கேட்காமல் அழைத்தான். 

 நிமிராமலே “ம்ம்” என்றாள். 

 

“ரொம்ப அழகா இருக்க! இன்னிக்கே என்கூட கூட்டிண்டு போகப் போறேன்” யாரும் அறியாமல் அவள் விரலைத் தொட, 

கையை எடுத்துக் கொண்டாள் அனு. 

 

“போன் பேசற இங்க பேசமாட்டியா” 

 

“எல்லாரும் பாக்கறா” உதடு அசையாமல் பேசினாள்.

 

“ம்ம். இந்த வெட்கம் தான் என்னை இழுக்குது”  மேலும் அவளை வெட்கப் பட வைத்தான். 

 

ஹே ஒரு நிமிஷம்.” ரகு தன கைபேசி எடுத்து அதில் அரவிந்துக்கு வீடியோ கால் செய்தான்

எடுத்தவுடன்ஹே ப்ரோ கங்க்ராட்ஸ். ஹாப்பி டு சி யு லைக் திஸ் டா” 

தேங்க்ஸ் டா. இரு அனு கிட்ட தரேன்.” அனுவிடம் போனைக் கொடுக்க,

கங்க்ராட்ஸ் மன்னி.” அரவிந்த் சற்று மரியாதையாகப் பேச

தேங்க்ஸ். உங்கள பத்தி அடிக்கடி பேசுவார். கல்யாணத்துக்கு சீக்கிரம் வந்துடனும்அனு அன்புக் கட்டளையிட ,

கண்டிப்பா. நான் இல்லாமலா. மோதிரம் மாத்தியாச்சா ?” நினைவு வந்தவனாக கேட்க,

இல்ல இனிமே தான்” 

வான்ட் டூ சி தட்.”

உங்க அண்ணா கிட்ட கொடுக்கறேன்அனு ரகுவிடம் போனைக் கொடுக்க

அந்த நேரம்அழகிய தட்டில் சிவப்பு ரோஜாக்களை நிரப்பி அதில் இரண்டு மோதிரங்களை வைத்து எடுத்து வந்தாள் வைஷ்ணவி.

வைஷு , வீடியோ கால் போய்ட்டு இருக்கு. மோதிரம் மாத்தறத கொஞ்சம் காட்டுயாரென்று சொல்லாமல் ரகு கொடுத்துவிட

சரி முதல்ல ரிங்க்ஸ் எடுத்துக்கோங்கதட்டை நீட்டி அவர்களிடம் மோதிரத்தை கொடுத்துவிட்டு போனைப் பெற்றுக் கொண்டாள்.

ஹாய். ஒரு நிமிஷம்யாரென சரியாகப் பார்க்காமல் , பின்னால் இருக்கும் கேமிரா வை மாற்றினாள்

அவளும் கேமிராவைக் காட்டிக்கொண்டு தானும் அவர்களைக் காண

அனைவர் முன்னிலையிலும் இப்போது தைரியமாக அவளின் கையைப் பிடித்து மோதிரம் அணிவித்தான் ரகுராம்.

அவளும் அவனது கரம் பற்றி மோதிரம் போட,

 

சுற்றி இருந்த அனைவரும் அட்சதை மற்றும் பூக்கள் தூவி அவர்களை வாழ்த்தினர்.

 

குட்டீஸ் கமான்வைஷு மேலே பார்த்து குரல் கொடுக்க, அந்த நேரம் கையில் இருந்த கேமிராவில் அவளது கை பட்டு , முன்னால் இருக்கும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள்

மாடியில் இவர்களுக்கு நேராக நின்று கொண்டிருந்த சில வாண்டுகள் பூக்கூடையை இருவர் மேலும் கவிழ்த்து விட்டனர்.

 

 

மல்லிகை ரோஜா என பலவகை பூக்கள் அவர்களை நனைத்தது.

ஹே! தேங்க்ஸ் குட்டீஸ்என கூச்சல்லிட்டு போனை ரகுவிடம் கொடுத்தாள்

ரகுவும் அதை அணைக்காமல் அப்படியே வைத்திருந்தான்.

வாழ்த்துக்கள் கூறினாள் வைஷு.

அத்திம்பேர்னு இன்னிக்கு அபீஷியால டிக்ளர் பண்ணியாச்சு. இனி அனுவுக்கு நீங்க தான் பொறுப்பு.” ரகுவை வம்பிழுத்தாள்.

 

சரிங்கஎன அவனும் சிரிக்க,

 

அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நான் அப்பறம் உங்க வீட்டுக்கு வந்து பாத்துக்க வேண்டியதா இருக்கும்

 

எப்படி?”

 

உங்க ஆஸ்ட்ரேலியா தம்பிய கதற கதற தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிட வேண்டியது தான் . ஹா ஹா. சும்மா சொன்னேன்என்று   விட்டு வச்சு அழைத்ததும் ஓடிவிட்டாள்.

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அர்விந்த் அங்கே ஒற்றைக் கையைத் தூக்கிஹூ ஹூஎன கத்தினான். காரணம் வைஷு இத்தனை அழகாய் இருப்பாள் என அவன் எதிர்பார்க்க வில்லை.

போனை வைத்தவன் , “அழகும் இருக்கு திமிரும் இருக்கு. பரவால்ல நீ அழகா இருக்கறதால அந்த திமிரை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நீ என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றியா. வரேன் டிபோனைப் பார்த்து சிரித்தான்

அதற்குள் இரவாகிவிட,

மணமக்களை இப்போது சேர்ந்து அமர வைத்து உணவு பரிமாறினர்.

அனைவரும் உண்டு விட்டு வர,

எல்லாம் திருப்தியா இருந்ததா மாமி?!” சாரங்கனும் வச்சுவும் ரகுவின் பெற்றோரைக் கேட்க,

 

வைஷுவும் அங்கே ஆஜரானாள்.

ஒன்னும் குறை இல்லை நன்னா இருந்ததுவேணு வாய் விட,

 

சாப்பாட்டுக்கு யாரை சொன்னேள். கல்யாணத்துக்கு இவா வேண்டாம். அப்பளம் கொஞ்சம் எண்ணையா இருந்தது.

 ஸ்வீட் கூட அத்தனை ருசி இல்ல

 

குறை சொல்வது சம்மந்தி குணம் என்று எப்போதோ எங்கோ கேட்டிருக்கிறாள் வைஷு.

அதற்காக இப்படியா? ரெண்டு அப்பளம் ஸ்வீட் கூட ரெண்டு மூணு சாப்டுட்டு இப்போ இப்படி சொல்றா பாரு.விட மாட்டேன்

 

அதுனால தான் நீங்க ரெண்டு மூணு வாங்கி சாப்பிட்டு பாத்தேளா?!” நறுக்கென கேட்டுவிட்டாள்.

 

வச்சுவும் சாரங்கனும் அவளை பார்க்க,

பங்கஜம் என்ன சொல்வதென்று விழித்தாள்.

வச்சு அதற்குள் நிலைமையை சமாளித்தாள்.

 

நாங்க வேற ஏற்பாடு பண்றோம் மாமி. வேற ஏதாவது இருந்தா சொல்லுங்கோ.” பணிந்து வச்சு கேட்க,

 

கல்யாணத்த கான்டராக்ட் காரன் கிட்ட தான குடுப்பேள்?” மீண்டும் அதிகாரத் தொனியில் கேட்க,

 

வச்சு உடனே, “இல்ல மாமி. ஏங்காதது பக்கம் மனுஷா ஜாஸ்தி. அதுவும் எல்லாரும் ரொம்ப நன்னா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுண்டு செய்வா. நாங்களே எல்லாம் பண்ணிடுவோம். பட்சணம் லேந்து பந்தி பரிமாறறது வரை நாங்களே பண்ணிடுவோம்.

அது தான் கல்யாணம் மாதிரி இருக்கும். கான்டராக்ட் காரண் கிட்ட குடுத்தா நம்மாத்து கல்யாணுத்துல நாமளே மூனா மனுஷா மாதிரி தான் நிப்போம்.”

அவள் கூறியது ஏனோ சற்று பங்கஜத்தை அடித்தது போல இருந்தது. அதனால்,

 

அப்டினா சேரி. எங்காத்தவா எல்லாருக்கும் பட்சணம் கொடுக்கணும். எல்லாத்துலயும் எண்ணிக்கை அதிகமா பண்ணிக்கோங்கோ.

அப்புறம் இந்த ரிசெப்ஷன் எல்லாம் இப்போ பேஷன் ஆயிடுத்து. அதெல்லாம் வேண்டாம். கல்யாணம் ரொம்ப ட்ரெடிஷனலா இருக்கணும். ஜானவாசம் வெச்சிடுங்கோ. அது தான் அழகு.”

 

நானே சொல்லணும்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டேள்வைஷு சிரித்தாள்.

 

பங்கஜம் அவளை பார்க்க,

எல்லா கல்யாணனும் நம்ம முறையை மறந்துட்டு பண்றா. அது நன்னாவுமில்லை. அந்தக் காலத்து கல்யாணம் மாதிரி எல்லாரும் ஒண்ணா கூடி நின்னு பண்னனும். அப்போ தான் கல்யாண பீல் வரும்.” விவரிக்க,

 

சரியா சொன்ன மா. கலாட்டாவும் கிண்டலுமா இருக்கும்.” வேணு அவளோடு சேர்ந்து கொண்டார்.

அனுவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ரகு. அவளை பிரிய முடியாமல் கிளம்பினான்.

 

எல்லாம் பேசி முடிவு செய்து தாம்பூலப் பையை பெற்றுக் கொண்டு கிளம்பினர் சம்மந்தி வீட்டார்.

 

ருக்குவுக்கு அம்புவும் அனைவர்க்கும் பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்தனர்.

 

அவர்கள் சென்ற பின், பெண் வீட்டார் அனைவரும் நிம்மதியாக அமர்ந்தனர்.

 

அனு கல்யாணம் ஒரு களை கட்டும் போலிருக்கு. ஒன் வீக் லீவ் சொல்லிட போறேன்அம்புவின் மகன் கண்ணன் சொல்ல

ஆமா. ஹேமாக்கா கல்யாணம் மாதிரி மொதல் நாள் நைட் மாப்பிள்ளை ஆத்து பசங்களயும் சேத்துண்டு அந்தாக்ஷரி அப்புறம் மத்த கேம்ஸ் எல்லாம் ஆடனும்வச்சுவின் அண்ணன் மகன் கூற

டேய்! இவன் எதுக்கு ப்ளான் பண்றான் பாரு. டேய் உனக்கு அங்க ஒரு பிகரும் கிடைக்காதுஅத்தை மகள் ஜானகி சொல்ல,

உனக்கு ஏன் டி பொறாமை.” கண்ணன் சிரிக்க

ஆமா எனக்கு பொறாமை. எனக்கும் ஆள் இருக்கு” 

யாரு அந்த கோவில்ல நீ போறப்ப உனக்கு சடாரி வைப்பாரே அந்த மாமா தானகேலி அதிகரிக்க,

போங்கடா ப்ராடுங்களா. உங்களுக்கு ஒன்னும் செட் ஆக கூடாதுன்னு நான் பெருமாள வேண்டிக்கறேன்” 

சொல்லிட்டாடா பத்தினி. பலிச்சுட போகுது” 

இப்படி இளமை பட்டாளங்கள் தனியாக மீட்டிங் போட்டு பேசிக்கொண்டிருக்க,

பெரிசுகள் யார் யார் எப்படி என்று மாப்பிள்ளை வீடு பற்றிய  யூகத்தை சொல்ல,

வைஷு மண்டபத்தை காலி செய்ய வச்சுவிற்கு உதவ,

அனு கனவுகளில் மிளிர்ந்தாள்.

                                                            6

 

“வச்சு நம்ம வைஷு தான் டீ மாப்பிள்ளைக்கு நகை வாங்கிண்டு வந்தா” சாரங்கன் விஷயத்தை சொல்ல,

 

“நல்ல காரியம் பண்ண டீ வைஷு. கண்டிப்பா நாம போடலனா அசிங்கமாகிருக்கும். அந்த மாமி கொஞ்சம் பவுசு எதிர்பார்க்கறா.” வச்சு குடும்பத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். 

 

“நம்மள விட அவா தான் உசத்தின்னு காட்டிக்கணும்னு நெனைக்கறா” வைஷு முனகினாள். 

 

“மொதல்ல அவாளும் வாங்கலையாம் மா. இவர் தான் அன்னிக்கு காத்தால நெனச்சுண்டு போய் வாங்கினாராம். ஆனா வைஷு ஆன் தி ஸ்பாட்ல பண்ணது பெரிய விஷயம்” அனு பாராட்ட, 

 

“நான் சொல்றத யார் நம்புனீங்க. அன்னிக்கு பந்தீல உக்காந்துண்டு சாம்பார் கொண்டா, பாயசம் கொண்டா, இன்னும் கொஞ்சம் வடாம் போடுன்னு சொல்லிட்டு நாம கிட்ட வந்து அது சொத்தை இது சொள்ளன்னு கம்பளைண்ட் பண்றா. அந்த மாமிய நான் டீல் பண்ணிக்கறேன்.என்கிட்டே விடுங்கோ” வைஷு வீம்பாக நிற்க, 

 

“ஹேய் வைஷு. அப்படி எல்லாம் எதுவும் பண்ணாத. நீ அன்னிக்கு அவா கிட்ட ஸ்வீட் கேட்டேளேன்னு சொன்னப்பவே பிரச்சனை வருமோன்னு பயந்தேன். நீ கல்யாணம் முடியற வரை கொஞ்சம் வாய மூடிண்டு இரு” வச்சு பதறினாள். 

 

“என்ன வச்சு நீயே இப்படி பேசற. எல்லார்கிட்டயும் தைரியமா பேச சொல்லி வளத்ததே நீ. இப்போ நீயே பேசாதன்னு சொல்ற. அவ ஒன்னும் தப்பா பேசலையே. அவாளோட வீம்பு பேச்சுக்கு பதில் கொடுத்தா. அவ்ளோ தான்” சாரங்கன் மகளின் பக்கம் நின்றார். 

 

“அப்படி சொல்லு பா” 

 

“ஏன் உங்க ரெண்டு பேருகும் அனு நன்னா இருக்கறது புடிக்கலயா?” வச்சு ஆத்திர பட,

 

“அம்மா.. நீ ஏன் மா பயப்படற. அத்திம்பேர் அப்படி எல்லாம் விட்டுட  மாட்டார். அனு அவர் பொறுப்புன்னு நான் சொல்லிருக்கேன்” வைஷு கொதிக்க, 

 

“ஆமா நீ பெரிய மனுஷி. நோக்கு தெரியாது வைஷு” 

 

“சரி மா. நோக்கும் வேண்டாம் நேக்கும் வேண்டாம். நான் டயரக்டா அவா கிட்ட மல்லுக்கு நிக்க மாட்டேன். போதுமா” வைஷு எதையோ யோசித்து சொல்ல, 

 

“என்ன டீ ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கு” அனு சிரித்துக் கொண்டு கேட்க,

 

“ஆமா. என்னோட டீலிங்கே தனி. டோன்ட் ஒர்ரி. கல்யாண வேலைய பார்ப்போம்” வைஷு சபையைக் கலைத்துச் சென்றாள்.

 

“ஆமா இன்னும் சரியா சொல்லப் போனா ரெண்டரை மாசம் தான் இருக்கு. மண்டபம் புக் பண்ணனும், சமையலுக்கு யாரைச் சொல்லலாம்? அவா வேற ஸ்பெஷலா சொல்லிட்டு போயிருக்கா வேற தளிகை பண்றவன வரச்சொல்லுங்கோன்னு” 

 

“வச்சு என்னத்துக்கு டீ டென்க்ஷன் ஆகற. நம்ப ஸ்ரீரங்கம் கோபு வ வரச்சொல்லுவோம். இப்போ எல்லார் கல்யாணத்துலையும் அவன் தான் ஜமாய்க்கறான்.” சாரங்கன் ஞாபகப்படுத்த,

 

“ஆமா சரியா சொன்னேள். கோபுவுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கோ. அப்புறம் நேர்ல பத்திரிகை குடுத்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடுவோம்” கோபுவின் பெரியரைக் கேட்டதும் முகம் மலர்ந்தது வச்சுவுக்கு. 

 

“பத்திரிக்கை நாளைக்கே அடிக்க குடுத்துடறேன். நாள் பாத்து வெச்சுட்டேன்” வெளி வேலைகளை தான் எடுத்துக் கொண்டார் சாரங்கன். 

 

“உங்க அண்ணாவையும் கூட்டிண்டு போங்கோ. அவருக்கு தான் எங்க யார் பேர போடணும்னு தெரியும். ஆச்சாரியன் பேரையும் மறக்காம போட சொல்லுங்கோ” வழக்கம் போல அனைத்தையும் தெளிவு படுத்தினாள். 

 

“மத்த வேலை எல்லாம் நாங்க டிவைட் பண்ணி தரோம்” வைஷு பிரஸ்தாபித்தாள். 

 

அத்தை மாமா பாட்டி தாத்தா என சொந்த பந்தங்கள் அனைவருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

 

வச்சுவின் தாயார் இன்னும் கிராமத்தில் தான் இருந்தார். எண்பது வயதை கடந்துவிட்டதால் அவரை நிச்சயத்திற்கு வரவேண்டாம், கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பே கூட்டி வருமாறு வச்சு தன் அண்ணனிடம் கூறியிருந்தார். 

 

பப்பி பாட்டி வந்தால் தான் என்ன என்ன க்ரமமாக செய்ய வேண்டும் என பட்டியல் போடுவாள். அவள் பெயர் பத்மினி. 

பேரன் பேத்திகள் பேச்சு வரும் மழலையில் அவளை பம்மி பாட்டி என்று அழைத்து நாளடைவில் அது பப்பி பாட்டி ஆனது. 

 

பாட்டி வச்சுவுக்கும் மேல். அனைவரையும் ஆட்டி வைத்து விடுவாள். 

அவளது வரவை ஆவலாக எதிர் பார்த்தாள் வைஷு. 

 

வைஷுவுக்கு பாட்டி என்றால் உயிர். பாட்டி தான் அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். ஒருவரை பார்த்தவுடன் கணிப்பது, பேச்சால் மடக்குவது அனைத்தும் வைஷுவுக்கு பாட்டியின் சொத்து. 

 

இதே போல பாட்டிக்கு செல்லப் பேரனாக ஒருவன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறான். அரவிந்த் கிருஷ்ணா. இந்த பெயரை வைத்ததே அவன் பாட்டி தான். வேணுவின் தாயார். 

 

“உங்க அம்மா என்ன பண்ணிடுவா. நீ போய்ட்டு வா” என சொல்லியே அரவிந்துக்கு அவன் தாய் மேல் பயமில்லாமல் ஆக்கிவிட்டாள். பங்கஜமும் ஒரு காலத்தில் மாமியாருக்கு பயந்து வாழ்ந்தவள் தான். 

அவர் இறந்ததும் ஆட்சி இவள் கைக்கு வந்தது. வந்து என்ன பிரயோஜனம்? 

பிள்ளைகள் பெரிதாகி விட்டனர். அவளையே அடக்கும் அளவுக்கு. அதனால் வேணுவிடம் மட்டும் தான் அனைத்தும். 

 

விசிலடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். கார் சாவியை அங்கிருந்த மேசை மீது தூக்கி எரிய, பின்னால் வந்தாள் கெல்சியும் அவளது பாய் ப்ரெண்டும். 

 

“ஹே டூட்! ஆர் யு லீவிங் டுமாரோ?” கெல்சி கேட்க, 

 

“ஆமா கெல்சி. நீங்க தான் என்னை ஏர்போர்ட்டில் டிராப் செய்யணும்” இருவரையும் பார்த்து ஆங்கிலத்தில் பேசினான்.

 

” ஷூர். நாங்களும் வரலானு நெனச்சோம் ஆனா, ஜெர்ரிக்கு நெறய்ய வேலை இருக்கு. டோன்ட் மிஸ்டேக்” அவன் கையைப் பிடித்துக் கொண்டு வருந்தினாள் கெல்சி. 

 

“வாட் டு டூ. ஐ வில் மிஸ் யூ கைஸ்” பொய்யாக வருத்தம் தெரிவித்து 

‘தாயே நீ வராம இருக்கறதே நல்லது. அங்கேயும் வந்து என் கைய புடிச்சு தொங்குனா, எனக்கு ஊர்ல ஒருத்தனும் பொண்ணு குடுக்க மாட்டான்.’  ஆனந்தமாக தன் உடமைகளை எடுத்து வைக்கலானான்.

 

அண்ணனுக்காக அழகிய கோட் ஒன்றை வாங்கி இருந்தான். அத்துடன் வருங்கால மன்னிக்கு பரிசளிக்க பிளாட்டினத்தில் வைரம் பதித்த தோடு ஒன்றையும் வாங்கியிருந்தான். 

 

பத்து வருடங்கள் கழித்து இந்தியா செல்கிறான். அவன் ப்ளஸ் டூ முடித்தவுடன் அவனை இங்கு அனுப்பி படிக்க வைத்தனர். இங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகி இருந்தான். 

 

ரகு அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்ற போது அங்கே இரு முறை சென்று அவனுடன் லீவைக் கழித்தான். ஆளே அடியோடு வெள்ளைக்காரன் போல மாறியிருந்தான். 

 

என்னன்னவோ ஆசைகள், மொத்தமாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான். வைஷு வேறு அவ்வப்போது கண் முன் வந்து செல்ல, ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. 

 

அவளை வம்பிழுக்க!

 

இரண்டு மாத விடுமுறை மூன்றாக வேறு கிடைத்திருக்க, முன்கூட்டியே கிளம்பினான். 

 

ரகுவிற்கு போன் செய்து ஏர்போர்ட் வந்து விடுமாறு சொல்லிருந்தான். 

 

இந்தியா செல்லும் விமானம் அவனை ஏற்றிச் செல்ல காத்திருந்தது. 

கெல்சிக்கும் ஜெர்ரிக்கும் அணைத்தபடி விடை கொடுக்க, 

 

மறுநாள் அதிகாலையில் இந்திய மண்ணில் தரையிறங்கியது. 

 

“டேய் ரகு!” ஓடி வந்து ரகுவை அனைத்துக் கொண்டான். 

 

பின்னால் பங்கஜமும் வேணுவம் நிற்க, இருவரையும் தோளோடு அணைத்துக்கொண்டான். 

 

“என்ன டா கிச்சா. அம்மாப்பாவ பாக்க இத்தனை வருஷமா!” வேணு சற்று கண் கலங்கினார்.

 

 

 

“அப்பா என்ன இது கொழந்த மாதிரி” அர்விந்த் அவரை கட்டியணைத்து சமாதானம் செய்ய, அவனுக்கும் அந்த வலி உள்ளே இருக்க தான் செய்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. 

 

“நீங்க என்னத்துக்கு இப்போ கொழந்தைய கஷ்டப் படுத்தறேள்” கரகரத்த குரலில் பங்கஜமும் கேட்க,

 

“அட அம்மா நீயுமா!” அவரையும் தோளில் கை போட்டு அழைத்து சென்றான். 

 

“சரி சரி இன்னும் மூணு மாசம் இங்க தான இருக்கப் போறான். பொறுமையா அழுதுக்கலாம். இப்போ வாங்க ஆத்துக்கு போகலாம்” ரகு தன்னுடைய வண்டியில் அரவிந்தின் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சொல்ல, 

 

“இந்தியா வந்தா தான் ஏதோ ஒரு உரிமை வந்த மாதிரி இருக்கு. ஹே எங்க ஏரியாடான்னு நெஞ்ச நிமித்தி நடக்கணும் போல இருக்கு. அங்கன்னா எப்போ என்ன நடக்கும்னு பாத்துக்கிட்டே இருக்கணும். என்ன தான் சொல்லு, சொந்த ஊரு சொந்த ஊரு தான். 

சும்மாவா சொன்னாங்க, அசலூருக்கு போனா அசஞ்சு குடுக்கணும், சொந்த ஊர்ல இருந்தா சோறு திங்கணும்னு” 

 

 பங்கஜமும் வேணுவும் சிரிக்க, 

“என்னடா கருமம் பழமொழி இது. யார் சொன்னா!?” ரகு விழுந்து விழுந்து சிரித்தான்.

 

“இது மாதிரி நெறையா இருக்கு. எங்க ஊர்ல ஒருத்தன் எப் எம் நடத்தறான். இப்படி தான் மொக்க ஜோக் சொல்லி அப்பப்ப எல்லாரையும் சிரிக்க வைப்பான். உங்களுக்கும் ஒன்னு ஒண்ணா சொல்றேன்” சிரிக்க வைத்தே வீடு வரை கூட்டி வந்தான். 

 

ரொம்ப நாளைக்கு பிறகு வீட்டிற்குள் வந்தவன், நிம்மதியாக உணர்ந்தான். 

 

அவன் சென்ற பிறகு வீட்டை சில மாறுதல்களுடன் மாற்றி அமைத்திருந்தான் ரகு. அவ்வப்போது வீடியோ காலில் பார்த்தாலும் இப்போது தான் நேரில் பார்த்து அனுபவிக்கின்றான்.

 

 

 

“குளிச்சுட்டு வந்து சாப்டுட்டு ரெஸ்ட் எடு டா. நான் உனக்கு சூடா இட்லி பண்ணி தரேன்.” பங்கஜம் மகனுக்காக சுறுசுறுப்பாக அனைத்தும் செய்ய, 

 

“அம்மா எனக்கு கொத்தமல்லி சட்னி கூடவே கொஞ்சம் மொளகாப் பொடி நல்லெண்ணெய் விட்டு கொண்டு வா” பத்து நிமிடத்தில் குளித்து ஷார்ட்ஸும் ட்ஷர்ட்டுமாக வந்து நின்றான். 

 

ஆவி பறக்க இட்லியும் அவன் கேட்ட மற்றவைகளும் வர, ஐந்தாறு உள்ளே தள்ளினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான டிபன். 

காபியை எடுத்துக் கொண்டு பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க, 

 

பக்கத்து வீட்டு பால்கனியில் ஒரு பெண் படித்துக் கொண்டிருந்தாள். 

 

இவனைப் பார்த்ததும், அவளது கண்கள் விரிய , மீண்டும் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். 

 

இவனும் அதை கவனிக்க, 

“ஆண்டவா வந்ததுமே கருணை காட்றியே. காட் இஸ் கிரேட்” வாய்க்குள் முனகி விட்டு,

 

“ஹாய் பேப்” என்றான் சாதாரணமாக,

 

“நீங்க தான் பங்கஜம் மாமி ரெண்டாவது பையனா!” அப்பெண் சற்று வழிய,

 

“ம்ம் ஆமா. உன் பேர் என்ன?” 

 

“அக்க்ஷயா” புத்தகத்தை ஒரு ஓரம் கடித்துக் கொண்டே அவனைப் பார்த்து வெட்கத்தில் நெளிந்தாள். 

 

“டேய் அரவிந்தா, வந்ததுமே ஆரம்பிக்காத. இது இந்தியா. கொஞ்சம் ஏமாந்த அந்த பொண்ணையே கட்டி வெச்சிடுவா” ரகு பின்னால் வந்து குரல் கொடுக்க,

 

“சே சே இதெல்லாம் சும்மா டா. பக்கத்து வீட்டுல பொண்ணு இருந்தா பார்க்கணும். அப்போ தான் லைஃப் ஜாலியா போகும்” 

 

அது சரிபெருமூச்சு விட்டு, வா உனக்கு நிச்சயதார்த்தம் போட்டோஸ் வீடியோஸ் காட்றேன். அப்புறம் கொஞ்சம் தூங்குஅவனை அழைத்து சென்று ஆல்பம் காட்டினான்.

 

அனைத்திலும் அவன் கண்ணைக் கவர்ந்தது வைஷு தான். 

“இது தானே அந்த வாயாடி!” 

 

“ஹா ஹா ஆமா!” ரகு ஆமோதிக்க,

 

“ஹே மன்னிய ஒரு இடத்துக்கு வர சொல்லு மீட் பண்ணலாம். அப்டியே இந்த பொன்னையும் துணைக்கு கூட்டிட்டு வர சொல்லு” ஆர்வமானான் அர்விந்த். 

 

“டேய், நீ நெனைக்கற மாதிரி இந்த பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி கிடையாது அவ. சரியான ஷார்ப்பு.” 

 

“அட அதையும் தான் பார்ப்போமே. எவ்ளோ ஷார்ப்பா குத்துதுன்னு. அன்னிக்கு என்னையே கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னவளாச்சே.” விஷமமாக சிரிக்க, 

 

“அனு வெளில வருவாளா தெரியல. கேட்டுப் பார்க்கறேன். இல்லனா நீ அவாத்துக்கு போய் பார்த்துட்டு வாயேன்.” சற்று இடைவெளி விட்டு “அனுவ” என்றன் ரகு.

 

 

“இது கூட நல்ல ஐடியா தான். லெட்ஸ் பிளான் சம்டைம். அதுசரி நீ இன்னும் மன்னிய வெளில கூட்டிண்டு போகவே இல்லையா” 

 

“எங்க டா. கூப்டா வரமாட்டேங்கறா” 

 

“கரென்சிய செலவு பண்ண தெரியாதவனும் 

பியான்சிய கூட்டிட்டு சுத்தாதவனும் 

நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை”

 

ரஜினி போல பேசிக்காட்ட,  

 

“பேசாம படு டா” என அவன் தலையில் செல்லமாக அடித்துவிட்டு சென்றான் ரகு.

 

உண்ட மயக்கம் ஜெட்லாக் எல்லாம் சேர்ந்து அவனை இழுக்க, நன்றாக குப்புறப் படுத்து உறங்கி போனான்.

 

                                   

                                                7 

 

“டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா?” ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த்.

“இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் தான் செட் ஆகும்.” ஒரு பக்கெட்டில் தண்ணீரும் ஒரு துணியும் கொண்டு வந்தான் ரகு.

 

“என்னவோ போ. ஸ்டைலா பைக்ல போவியா, அத விட்டுட்டு வயசானவன் மாதிரி கார்ல போறேங்கற. இங்க குடு நான் தொடைக்கறேன்” அவனிடமிருந்து துணியை வாங்கி தூசி தட்டி துடைக்க ஆரம்பித்தான். 

 

ரகு தண்ணீர் ஊற்றி கழுவ, அண்ணன் தம்பி இருவரும் ஊர் கதை எல்லாம் பேசிக்கொண்டே வண்டியை தயார் செய்தனர். 

 

தாங்களும் சென்று தயாராகி, பங்கஜத்தின் வத்தல் குழம்பும், மிளகு ரசம், வெண்டைக்காய் பொரியலுடன் ஒரு கை பார்த்துவிட்டு, ஊர் சுற்றக் கிளம்பினார்கள். 

 

அவனுக்கு வேண்டிய உடைகள், ரகுவிற்கு வேண்டியவை என தனித் தனியாக எடுத்தான். 

 

“இந்த கலர் ட்ரை பண்ணுங்க சார்” கடையில் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் பெண்களில் ஒருத்தி அரவிந்தின் ஸ்டைலில் மயங்கி வேண்டுமென்றே பேச்சுக்கு கொடுக்க, 

 

“தேங்க்ஸ். இது எனக்கு நல்லா இருக்கும். நீங்க சரியா சூஸ் பண்ணிருக்கீங்க” என அவனும் விடாமல் பேச,

 

அவள் அவனை விடுவதாகவே இல்லை. அவன் எங்கு சென்றாலும் அங்கு வந்து உடைகளை அவனுக்கு மேல் வைத்துக் காட்ட,

 

ரகு மலைத்துப் போனான். 

 

“எங்க போனாலுமாடா?” பெருமூச்சு விட,

“நான் என்னடா பண்றது. அதுவா வந்து பேசுது. திரும்ப பேசாம போன மனசு கஷ்டப் படுமில்ல.” இக்கப் பட்டு பேசுவதை போல காட்டிக்கொண்டான்.

 

“நீ திருந்த மாட்ட டா. சரி வா” அவனை இழுத்துக் கொண்டு செல்ல, 

பில் போடுமிடத்தில் அரவிந்தைப் பார்த்து “கல்யாணமா சார். நெறய ஷாப் பண்ணிருக்கீங்க. நாங்க டிஸ்கவுண்ட் தரோம்” என்றால் மற்றொரு பெண்,

 

 “கல்யாண மாப்பிள்ளை இவர் தான். ஆனா டிரஸ் எனக்கு” என ரகுவை காட்டி சிரிக்க, 

 

“அடப்பாவி அப்போ கூட நீ ஹீரோ நான் காமெடியனா. தொலை” என கடையிலிருந்து அவனை இழுத்துச் சென்றான்.

 

இரவு களைத்துப் போய் வீட்டிற்கு வந்தவர்களை,

ஏன் டா. என்னையும் கூட்டிண்டு போயிருக்கலாமோன்னோபங்கஜம் கேட்க,

 

அவன் பண்ண லீலை எல்லாம் நீ பாத்திருந்தா நீ என்னை விட்டுட்டு மொதல்ல அவனுக்கு கல்யாணம் பண்ணிருப்பரகு அளக்க,

 

என்னடா ஆச்சுபதற,

 

நான் நெறையா டிரஸ் வாங்கிண்டேன். அத சொல்றார் அண்ணால்லைக் கடித்தான்.

 

சரி சரி சாப்டேளோனோ போய் தூங்குங்கோ.” அனுப்பிவிட்டு தானும் உறங்கச் சென்றாள்.

 

அறைக்குள் வந்து அவன் உடைகள் வைக்குமிடத்தில் கவரைப் பிரித்து அடுக்கியவன், தான் வாங்கி வந்த வைரத் தோடு கண்ணில் பட

 

இது தான் நான் மன்னிக்கு வாங்கின ப்ரெசென்ட்ரகுவிடம் காட்ட,

 

ரொம்ப நன்னா இருக்குடா அரவிந்தா

 

அதெல்லாம் இருக்கட்டும். எப்போ மன்னிய பாக்கலாம்” 

 

நாளைக்கே போயிட்டு வா. யார் உன்னை தடுத்தா?” அசால்ட்டாக சொல்ல,

 

அப்படியா. சரி அப்போ மன்னிக்கு போன் பண்ணி சொல்லிடு. நாளைக்கு வரேன்னு, அந்த வாயாடிய பாத்தே ஆகணும்.” 

 

அனு விற்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்

அவளோ அம்மாவிடம் கேட்டு சொல்வதாகச் சொல்லிவிட்டு,

 

அம்மா அவரோட தம்பி ஊர்லேந்து வந்துட்டாராம். நம்மாத்துக்கு சும்மா பாக்க வரணும்னு கேட்கறார். என்ன சொல்லட்டும்அனு தயங்கி நிற்க,

 

என்னடி இது இப்படி கேட்கற. தாராளமா வரச்சொல்லு. எப்போ வரான்னு கேட்டு சொல்லு. ஏதாவது செஞ்சு வைக்கணுமோன்னோவச்சு அனுமதி கொடுத்தாள்

 

உடனே அனு, ரகுவிற்கு போன் செய்து சொல்ல, எதிர்பார்ப்போடு உறங்கினான் அர்விந்த்.

 

 

 

அழகாக உடையணிந்து கொண்டு தன் பைக்கில் கிளம்பினான்

தைரியமாகவே பங்கஜத்திடம் வருங்கால மன்னியை பார்க்கப்போவதாக கூறிவிட்டு சென்றான்

முதல் முறை என்பதால் அவளும் தடுக்க வில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை.

 

அனுவும் வச்சுவும் எப்போதும் போல சீக்கிரம் எழுந்து வேலை செய்ய, சனிக்கிழமையும் இரவு பதினோரு மணி வரை வேலை செய்துவிட்டு வந்த வைஷு தூங்கி கொண்டிருந்தாள்

 

ரகுவிடம் கேட்டு அரவிந்தனுக்குப் பிடித்த அக்காரவடிசலுடன் சமையல் செய்து கொண்டிருந்தனர் தாயும் மகளும்

 

சாரங்கன் அவனுக்காக காலையிலிருந்து காத்திருந்தார்

 

வைஷு எழுப்புங்கோஎன்றாள் வச்சு

 

அம்மா அவ தூங்கட்டும். பதினோரு மணிக்கு தான் வந்தா. பாவம். அவ இப்போ என்ன பண்ண போறாஅனு வழக்கம் போல அவளுக்காகப் பேசினாள்.

 

இருந்த வேலையில் வச்சுவும் அவளை பற்றி கண்டுகொள்ளாமல் விட

 

ஒரு பத்து நிமிடத்தில் பைக்கை அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிறுத்தினான் அர்விந்த்.

 

ஆறு அடி உயரத்தில் வெள்ளைக்கார தோரணையுடன் வந்து இறங்கியவனை சாரங்கனுக்கு பிடித்து விட,

 

ஹலோ மாமா. நான் அர்விந்த் கிருஷ்ணா.ரகுவோட..” ஆரம்பிக்க,

 

தெரியும் பா. உள்ள வாங்கோ. அனு…” என அழைத்தபடியே உள்ளே சென்றார்

 

அனு சற்று உடையை சரி செய்து கொண்டு பவ்யமாக வெளியே வர

 

ஹாய் மன்னி.” என கைகுலுக்கினான்.

 

எப்படி இருக்க.ஜெட்லாக் எல்லாம் போயிடுத்தாசாதாரணமாக பேசினாள்

 

ஊரிலிருந்து வந்த பிறகு ரகு பேசும்போதெல்லாம் அவ்வப்போது இவனும் வாங்கி பேசுவான். இருவரையும் ஓட்டுவதே அவன் வேலை. அதனால் அனுவும் சற்று சகஜமாகவே பேச முடிந்தது

 

ஜெட்லாகா.. அதெல்லாம் நான் கண்டுக்கறதே இல்லை. எப்போ தூக்கம் வருதோ அப்பப்போ தூங்கிடறேன்.” அவளுக்காக வாங்கி வந்திருந்த ஸ்வீட்பாக்ஸும் பூவும் பழமும் கொடுத்து பேச,

 

என்ன இது பார்மாலிடீஸ்அனு சலித்துக் கொண்டாள்.

 

இது அம்மா வாங்கிண்டு போக சொன்னாஅழகாக சிரித்தான்.

 

வேலை எல்லாம் அங்க எப்படி இருக்குப்பா உனக்கு?” சாரங்கன் பேச்சுக்கு கொடுக்க, வச்சுவும் வந்தாள்.

 

வாங்கோ. சௌக்கியமா இருக்கேளா?” சிரித்த முகத்துடன் வரவேற்க,

 

நன்னா இருக்கேன். நன்னா சமைப்பேள் போலிருக்கே. ஆகம் முழுக்க வாசனை.” ஐஸ் வைத்தான்

 

சாப்பிட்டு பாத்துட்டு நீயே சொல்லுவச்சு மகிழ்ந்தாள்.

 

கண்டிப்பா” 

 

அனு கொஞ்சம் வரியா.நீ மாமா கூட பேசிண்டு இருப்பா, கொஞ்சம் வேலை இருக்கு. இதோ வந்துடறோம்என அழைத்துச் செல்ல,

 

சாரங்கன் சற்று வளவளத்தார்

 

அவரிடம் ஒரு பார்வை வைத்துக் கொண்டே அந்த வீட்டை கண்களால் அலசினான். வைஷு எங்கே என்று தான் அவனது தேடல்

 

என்னையா நீயும் எங்கப்பா மாதிரி ரம்பமா இருக்க. எங்க உன் ரெண்டாவது பொண்ணு. என்னையே கடத்தறேன்னு சொன்னாளே..!மனதுக்குள் தனியே பேசிக்கொண்டிருந்தான்

 

அவனுக்கு ஏற்றார் போல் சாரங்கனுக்கு போன் வரவும் எடுத்து பேசலானார்

 

அப்படியா! இதோ வரேன்என்றவர், பத்திரிகை வந்துடுத்தாம். போய் வாங்கிண்டு வந்துடறேன். இங்க தான் பக்கத்துல என்றுவிட்டு வச்சுவிடம் ஒரு குரல் கத்திவிட்டு கிளம்பினார்.

 

அனு வெளியே வந்து, “அரவிந்த் நீ வீட்டையெல்லாம் சுத்திப் பாரு. நான் உனக்குப் பிடிச்ச அக்காரவடிசல் பண்ணிண்டு இருக்கேன். பக்கத்துல இல்லன்னா அடி புடிச்சுடும்கெஞ்சும் குரலில் கேட்கவும்,

 

நோ ப்ராப்ளம் நீங்க பொறுமையா பண்ணுங்க. நான் இந்த போட்டோஸ் எல்லாம் பாத்துண்டு இருக்கேன்என அங்கே சுவரில் வரிசையாக இருந்த போட்டோக்களை காட்டிச் சொல்ல,

சரிஎன்றாள்

அனுவின் தலை மறைந்ததும் அங்கிருந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டு ஒரு அறையின் வாசலை கடக்க

கால்கள் அங்கேயே ஒட்டிக் கொண்டது

 

ஏதோ ஒன்று அவனை உள்ளே பார்க்கச் செய்தது. ஆர்வத்தில் அவனும் எட்டிப்பார்க்க,

 

அழகுப் பொற்சிலை ஒன்று முகம் மட்டும் காட்டி, போர்வைக்குள் மொத்த அழகையும் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தது.

 

அந்த நேரம் அனு வர, அவன் அரை வாசலில் நிற்பதைக் கண்டு

 

என் தங்கை வைஷ்ணவி தான் தூங்கறா அர்விந்த். அவளை எழுப்ப தான் வந்தேன்.” 

 

! நீங்க போங்க நான் எழுப்பறேன்அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

 

ச்ச ச்ச .. அது நல்லா இருக்காது. நானே எழுப்பறேன்.” 

 

என்ன மன்னி, நான் என்ன வேற ஆளா. நீங்க போங்க, அக்காரவடிசல் தான் முக்கியம். நான் அவளை எழுப்பறேன்ஏதோ சொல்லி அவளை அனுப்ப நினைக்க

 

உங்க வாயாடி தங்கச்சிய பத்தி அண்ணா சொல்லிருக்கான். சும்மா ஒரு ஜெர்க் இண்ட்ரோவா இருக்கட்டுமேசிரித்துக் கொண்டே சொல்ல,

 

எழுப்பினா கொஞ்சம் டென்சன் ஆயிடுவா.. அதான்தயங்கி நிற்க

 

மன்னி. நான் பாத்துக்கறேன்அவளை அனுப்பி வைத்தான்.

 

மெல்ல அடியெடுத்து வைத்து அவள் அருகில் செல்ல, வைஷு நிம்மதியாகத் தூங்கி கொண்டிருந்தாள். ஃபேன் காற்றில் அவளது கூந்தல், முகத்தில் அசைந்தாடிக் கொண்டிருக்க முகம் சரியாக அவனுக்குத் தெரியவில்லை

 

அவளது கூந்தலை மெல்ல விலக்க நினைத்து அவளை நோக்கிக் குனிந்தான்

 

காற்றை மறைத்துக் கொண்டு அவன் அருகில் வர, அவனது சென்ட் வாசம் அவளது நாசியைத் துளைத்தது. அதை தூக்கத்திலேயே மேலும் நன்றாக இழுத்து நுகர்ந்தாள்.

 

அதைக் கண்டு மெல்லச் சிரித்தவன், தன் கையைத் பேண்ட்டில் துடைத்து கொண்டு, அவள் முகத்தில் கை படாமல் ஆள்காட்டி விரலின் நுனியால் அவளது நெற்றியில் இருந்து விழுந்த முடிக்கற்றையை மெல்ல விலக்கினான்.

 

பால் போன்ற முகம், நீண்ட இமைகளைக் கொண்டு மூடிய கண்கள், கூரான நாசி, வரைந்து வைத்தது போன்ற பஞ்சு உதடுகள் அனைத்தும் பளிச்சென அவன் கண்களில் விழ, அசந்து நின்றான் அர்விந்த்

 

இந்த வாய் தான என்ன அப்படி பேசுச்சுமுனகிக் கொண்டே ஆர்வத்தில் மெல்ல அதன் மேல் கை பட்டுவிட, அவள் சிணுங்கி விட்டு மீண்டும் மறு பக்கம் திரும்பி உறங்க

 

அது அவனுக்கு மேலும் துணிவை வரவைத்தது. ‘என்ன செஞ்சிடுவாஎன்ற நினைப்பில் அவளது கன்னத்தில் மெலிதாக விரலை வைத்து சீண்டினான்

 

அவளோ கன்னத்தை சொரிந்து கொண்டு விட, மீண்டும் அதையே செய்தான்

 

இம்முறை, “என்ன புதுசா கொசு கடிக்குதுஎன லேசாக கண்விழிக்க

 

கையை எடுத்துக்கொண்டு, “ஹலோ டியர், குட் மார்னிங்என்றான் அசால்டாக

 

ஒரு புதியவனை கண்டதும், அதிலும் தன் அறையிலேயே வந்து கன்னத்தை சீண்டியவன் என்று புரிய, பதறி எழுந்து,

 

யார் டா நீ? இங்க எப்படி வந்த? என்ன தைரியம் இருந்த என்னை டச் பண்ணிருப்ப. பொறுக்கி.” என அவள் ஆரம்பிக்கும் போதே,

 

ஹே ஹே நிறுத்து. ஐம் அர்விந்த். அர்விந்த் கிருஷ்ணாகையை உயர்த்தி சொல்ல, 

 

எவனா இருந்தா எனக்கென்ன. என் ரூம்க்கு எப்படிடா வந்த?” கடுப்பில் கத்தினாள்.

 

ம்ம்ம். உங்க அக்கா தான் எழுப்ப சொன்னாங்க.” கூலாகச் சொன்னான்

 

வாட்? என்ன உளர்ர? அனுனு.” என கூப்பிட

அது அனுவிற்கு கேட்டு அவள் வரும்முன், 

 

ஹே நான் ரகு பிரதர்.” 

 

யாரு!?” கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

உன் வருங்கால அத்திம்பேரோட தம்பிபுருவத்தை உயரத்திச் சொல்ல,

 

ஒரு நொடி தயங்கியவள்,

 

அப்ப்ப்பா என்ன கத்து கத்துறஎன அவன் பெட்டில் அமர

 

இருந்தாலும் அவன் தன்னை சீண்டியது பொருக்காமல்,

 

உங்க ஊர்ல இப்படி தான் எழுப்புவாங்களா. அதுவும் முன்ன பின்ன தெரியாத பொண்ணகலைந்திருந்த தலையை சுற்றி முடிந்துகொண்டே கேட்க 

 

அவள் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் பேண்ட்டுமான இரவு உடை அவள் கை உயர்த்தியதால் அவளது சிறு இடையை இரவு நேரத்தில் அடித்த டார்ச் வெளிச்சம் போல பளீரென காட்ட

 

அரவிந்தின் கண்கள் தானாக அங்கே தஞ்சமடைய, அதை கவனித்தவள், சட்டென கூந்தலை விட்டாள். சட்டையை இழுத்து வீட்டுக் கொண்டு அவனை முறைக்க,

 

எங்க ஊர்ல வேற மாதிரி தான் எழுப்புவாங்க. ஆனா நீ பயந்துடக் கூடாதுல. அதான் கம்மி பண்ணிக்கிட்டேன்நாக்கை வாய்க்குள் சுழற்றி நக்கல் பேச்சை உணர்த்தினான்.

 

இந்த ரோமியோ வேலை எல்லாம் என்கிட்ட வேணாம். என்ன பத்தி உனக்கு தெரியாதுஎரிச்சலாக அவனிடம் பேசினாள்.

 

நல்லாவே தெரியுமே! என்னை கடத்தி கூட்டிட்டு போறேன்னு சொன்னவ தான நீ!” அவன் அன்று கேட்டதை சொல்லி விட

 

வைஷு அதிர்ந்தாள். ‘இவனுக்கு எப்படி தெரிஞ்சுது. அத்திம்பேர் சொல்லிருக்க மாட்டார்என யோசித்துக் கொண்டிருக்க,

 

அது..உனக்கு எப்படி தெரியும்அவனிடமே கேட்க,

 

அன்னிக்கு வீடியோ கால் கட் பண்ணாம பேசுனது கூட தெரியல எழுந்து அவள் முன் வந்து நிற்க,

 

நீ தான் வீடியோ கால் பண்ணினதா. அன்னிக்கு உன்னை பார்க்கவே இல்லை.” 

 

பார்த்திருந்தா..?” 

 

ம்ம்ம் பார்த்திருந்தா. அப்போவே சொல்லிருப்பேன். இது கடத்துறதுக்கு வொர்த் இல்லன்னுஎகத்தாளமாக கூற

 

ஏய்சற்று கோபமாக அவள் முன் வர,

 

வைஷு அசராமல் நின்றாள்

உனக்கு தைரியம் ஜாஸ்தி தான். என்கிட்டயே வா. பாக்கலாமா?” 

 

இந்த மூஞ்சியெல்லாம் பாக்க முடியாதுமுகத்தை திருப்பிக் கொள்ள,

 

பாக்க வைக்கறேன் டீ.” 

 

உன் மனசுல என்ன பெரிய ஆணழகன்னு நெனப்பா.உன்ன பாத்ததும் நான் மயங்கி விழ.” 

 

அவளது முகத்தை திருப்பி, “மயங்க வெக்கறேன் டீசிரித்துக் கொண்டே சொல்ல

 

அது உன்னால முடியாது” 

ஹா ஹா, நான் லேசா தொட்டதுக்கே நீ தூக்கத்துல சிணுங்கின, அப்போ என் டச் உன்ன டிஸ்டர்ப் பண்ணுதுல்ல” 

லூசா நீ! தூங்கும் போது யார் சீண்டினாலும் டிஸ்டர்பா தான் இருக்கும்அவள் சொல்லி முடிக்க

 

அவளை நெருங்கி வந்து உதட்டைப் பிடித்து பேசவிடாமல், “இப்போ டிஸ்டர்ப் ஆகாம எப்படி இருக்கன்னு பாக்கறேன்“.

 

அவனது வாசமோ, அல்லது தொடுகையோ ஏதோ ஒன்று அவளை நிதானமாக இருக்க விடாமல் செய்ய

அவனை தள்ளி விட்டவள்

நீ இப்படி எல்லாம் தொட்டு பேசுனா அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்முறைக்க,

 

அப்போ டிஸ்டர்ப் ஆகுது” 

 

இல்ல

 

சரி போகப் போக பாப்போம்.” 

 

பாக்கலாம்.” அவளை விட்டு தள்ளி நின்றான்

 

வைஷுஅனுவின் குரல் கேட்க

 

எங்க அக்கா கிட்ட சொல்றேன் இரு. உன்னோட கேவலமான பிஹேவியரவேகமாக நடக்க முயன்றவளை, ஒரு கையால் பிடித்து தடுக்க

 

அப்போவே நெனச்சேன். நீ சின்ன பிள்ளை மாதிரி அப்பா கிட்ட சொல்றேன் அக்கா கிட்ட சொல்றேன்னு கெளம்புவனு. உங்கிட்ட சேலன்ஞ் பண்ணது தப்பு. நீ எனக்கு ஈகுவல் இல்ல. போ வாபஸ் வாங்கிக்கறேன்அவன் அப்படி சொல்லவும் அவளுக்கு ஈகோ இடிக்க,

 

ஹே யாரு சின்ன பொண்ணு. உன்ன நானே ஹேண்டில் பண்ணிடுவேன். அப்பறம் அம்மா அப்பா ன்னு அழுதுட்டு ஓடிடுவ.” அவன் கையை உதறிவிட்டு சொல்ல,

 

அப்படியா. அப்போ இது நமக்குள்ளயே இருக்கட்டும். ஜென்டில் மேன் அண்ட் வுமன் அக்ரீமெண்ட்எனவும்,

 

சாதாரணமாக தோளைக் குலுக்கி, “டீல்என்று விட்டு சென்றாள்

 

அதற்குள் அனு வந்துவிட, “எழுந்துட்டியா, போய் குளிச்சு ரெடியாகி வா, சாப்பிடலாம். வா அர்விந்த் எல்லாம் ரெடியா இருக்கு“.

 

எல்லாரும் வரட்டும் சாப்பிடலாம்பொதுவாக கூறினாலும் வைஷுவைத் தான் குறிப்பிட்டான்

 

அப்பா வர லேட் ஆகும். நீ வாஎன அழைத்துச் சென்றாள்

 

வைஷுவைப் பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தை தந்தவன் அனுவின் பின்னே சென்றான்.

 

வைஷுவும் கையை தூக்கி அடிப்பது போல செய்தவள்அவன் செல்லும் வரை அவனை கோபப் பார்வையால் எரித்தாள்

அவனோ பெயருக்கு ஏற்றார் போல கிருஷ்ணனாக சிரித்துக் கொண்டே அவளை எதிர்கொண்டான்

 

 

                                                     8

 

அர்விந்த் வந்ததிலிருந்து எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தான். பங்கஜம் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் உண்ட உணவைப் பற்றி சொல்ல, 

அவளுக்கும் வாயில் நீர் ஊரவே செய்தது. 

 

“அன்னிக்கு நிச்சய சாப்பாடும் ரொம்ப நன்னா இருந்தது டா கிச்சா” உண்மையை இப்போது ஒத்துக்க கொண்டாள்.

 

“அப்பறம் ஏன் அன்னிக்கு இது சரியில்ல அது சரியில்லன்னு சொன்ன?” வேணு அருகில் வர, 

 

“உடனே எல்லாம் நன்னா இருக்குன்னு சொல்லிட்டா அப்புறம் அவா கேர்லெஸ்சா விட்டுடுவா கல்யாணத்துல. இப்படி சொன்ன தான் கல்யாண சாப்பாடும் நன்னா பண்ணுவா” 

 

“அடிப்பாவி. நன்னா இருந்ததுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அவாளும் சந்தோஷப் பட்டிருப்பா. கல்யாணத்துலையும் இதே போல செய்ங்கோன்னு சொல்லிருக்கலாம். ஆனா அந்த சின்ன பொண்ணு உனக்கு சரியான பதிலடி கொடுத்தா” வேணு மீண்டும் அதை நினைவு படுத்த,

 

“அப்படியா என்ன பா சொன்ன?” ஆர்வமானான் அர்விந்த்.

 

“நல்லா இல்லையான்னு பாக்கத்தான் ரெண்டு மூணு தடவ கேட்டு வாங்கி சாப்டீங்களான்னு கேட்டா?” வேணு நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல,

 

அர்விந்துக்கும் அவளின் உடனடி கேள்வியை நினைத்து ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை. 

 

“அம்மாவ, அதுவும் ஆன் தி ஸ்பாட்ல கேட்ருக்கானா அவ பெரிய ஆளு தான்” அவனும் பாராட்ட,

 

“யப்பா என்ன வாய் அந்த பொண்ணுக்கு, நல்ல வேளை அனு இப்படி இல்லை. பொறுமையா பேசறா” கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். 

 

“ஹா ஹா. ஒரு வேளை இவ மாட்டுப்பொன்னா வந்தா என்ன பண்ணுவ?” அர்விந்த் சிரிக்க,

 

“என்ன பண்றது, அதிகாரத்த அவகிட்ட குடுத்துட்டு, போடறத தின்னுட்டு மூலைல கிடக்க வேண்டியது தான்” வேணு நடக்கப் போவதை சொல்லி சொல்லி சிரித்தார்.

 

“ஹ்ம்ம் ஹூம்.. அப்பாக்கும் பிள்ளைக்கும் கிண்டலா போச்சா. ஏண்டா உங்க அம்மாவ ஒருத்தி இப்படி பேசியிருக்கா உனக்கு கோவம் வரல?” அரவிந்தை பார்த்து கத்த,

 

“நான் ஏன் கோவப் படனும்? நீ அவளோட அப்பா அம்மா கஷ்டப்பட்டு பண்ணத குறை சொல்லிருக்க, அதை பாத்துட்டு அவ சும்மா இருக்கணுமா?உன்னை யாரவது சொன்னா நான் கேட்கணும்னு நீ எதிர்பார்க்கற மாதிரி தான அவளும் அவா ஆத்துக்காக பேசிருப்பா. இதுல தப்பு என்ன இருக்கு? அதுவும் இல்லாம நீ வேணும்னே குறை சொல்லிருக்க. அதுக்கு அவ பேசினது தப்பில்லன்னு தான் நான் சொல்லுவேன்” அசால்டாக சொல்லிவிட்டு அர்விந்த் சென்று விட,

 

“ரகுவே தேவலாம்.உனக்கு கல்யாணம் பண்ணின கையோட உன்னை முதல்ல ஊருக்கு அனுப்பிடனும்.இல்லனா உன் பொண்டாட்டியும் நீயும் சேந்து என்னை ஒரு வழி ஆகிடுவீங்க. இங்க பாத்தேளா?” வேணுவைத் தேட, அவர் எப்போதோ சென்றிருந்தார்.

 

“எல்லாம் மத்தவாளுக்குத் தான் சப்போர்ட் பண்றதுகள்.இருக்கட்டும் நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.பங்கஜம்மா கொக்கா”, புலம்பிக் கொண்டே நாத்தனாருக்கு போன் செய்தாள்.

 

“அலமு கிளம்பி வா டீ. துணிமணி எல்லாம் எடுத்துண்டு வருவோம். நோக்கு ஆறு கஜமா இல்ல ஒம்போதா?”

 

“…”

“சரி வா. என் அண்ணா தம்பிக்கு தங்கைக்கு உங்காத்துக்கு எல்லாருக்கும் நாமளே வாங்கிண்டு வருவோம்” போனை வைத்துவிட்டு வேறு புடவை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

 

மாப்பிளை வீட்டுப் பத்திரிக்கை அச்சிட்டு வந்தது. பெண் வீட்டுப் பத்திரிக்கையும் வந்திருக்க, இருவரும் கோவிலுக்குச் சென்று ஸ்வாமிக்கு வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, அங்கேயே மாற்றிக் கொண்டனர். 

 

வைஷுவை எதிர்ப்பார்த்து வந்த அர்விந்த் ஏமாந்தான். 

வச்சு சாரங்கன் மற்றும் அனு மட்டுமே வந்திருந்தனர். ரகசியமாக அனுவைக் கூப்பிட்டுக் கேட்டான் அர்விந்த்.

 

“அவளுக்கு ஆபீஸ் இருக்கு அதுனால வரல”

“ஆமா..கேட்கணும்னு நெனச்சேன். எங்க ஒர்க் பண்றா?”

கம்பெனியின் பெயரைச் சொல்ல,

 

“ஓ! எங்க இருக்கு” அப்பாவியாய் கேட்க,

 அங்கு வந்த ரகு 

“டேய்..கெளம்பு டா. அவ கிட்டயும் வம்பு பண்ணாத”

 

“சும்மா ஒரு ஜி கே க்காக கேட்டேன்.” மழுப்பிவிட்டுச் சென்றான்.

 

ரகு அருகில் வந்ததும் அனு சற்று வெட்கப் பட,

” புடவையெல்லாம் வாங்கியாச்சா?” 

 

“ம்ம். அதான் அன்னிக்கு போன்ல சொன்னேனே” குரல் முன்பை விட சற்று சத்தமாக வந்தது. 

 

“ஆமால. தினமும் போன்ல பேசிடறோமா, அதுனால நேர்ல பாக்கறப்ப ஒன்னும் தோணமாட்டேங்குது” உணர்ந்து சொன்னான்.

 

“ஆமா”

 

“அப்போ இனிமே எப்படி பண்ணலாம். வாரத்துக்கு ஒரு தடவ பேசுவோம்.” தனது மனதில் பட்டதைச் சொல்ல,

 

அனுவின் முகம் வாடியது. 

 

“டேய். என்னடா உடனே டல் ஆகற. நான் எதுக்கு சொன்னேன்னு சொல்றேன். அப்பறம் நீ உன் முடிவைச் சொல்லு.” அவளை அரை நிமிடம் கூட முகம் வாடா விடாமல் அவன் பேச,

 

“சொல்லுங்க” பொறுமையாகவே கேட்டாள்.

 

“இந்தக் காலத்துல புருஷன் பொண்டாட்டிக்குள்ள புரிதல் ரொம்பவே கம்மி. அதுக்கு காரணம் கூடுமான வரைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பேசி முடிச்சிடறது தான். அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி வீட்டுல இருக்கறப்ப என்ன பேசறதுன்னே தெரியாது. புருஷன் ஒரு பக்கம் வேலைக்கு போவான் பொண்டாட்டி ஒரு பக்கம் வேலை. கடமைக்கு புள்ளைங்க. இல்லனா அக்கம் பக்கம் இருக்கறவா கேப்பாளேன்னு. 

 

இதுவே அந்த காலம் மாதிரி நெனச்சு பாரு. கல்யாணம் ஆனா பிறகு தான் பேசவே ஆரம்பிப்பா. புருஷன் எப்போ வருவான்னு பொண்டாட்டி காத்திருந்து பேசுவா. 

புருஷனும் பொண்டாட்டி காதலிக்கவே அவளுக்காக பூ வாங்கிட்டு சீக்கிரம் போவான். 

கணவனுக்கு பிடிச்சதை சமைச்சு போட்டு, பொண்டாட்டி ரசிக்க,

அவனும் து நல்லா இருக்குன்னு ருசிச்சு சாப்பிட, மத்தவங்க முன்னாடி பேச முடியாம,

 

தனிமையில சந்திச்சு பேசறதுக்காக காத்திருப்பாங்க. யாரும் பாக்காம அவளுக்கு அவன் ஜாடை காட்றது. அவ அதை புரிஞ்சுகிட்டு வெட்கப் படறது. 

 

இரவு தனிமையில மணிக்கணக்கா முகத்தைப் பார்த்து பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அதன் பிறகு அவங்க சேர்ற தாம்பத்தியம் இருக்கே, அது இந்தக் காலத்துல வரவே வராது அனு. 

 

ஏன்னா கல்யாணத்துக்கு பிறகு பேசவேண்டியதை மெசேஜ்லையும், போன்லயும் பேசிட்டா அவங்க ரியாக்ஷன நேர்ல பாக்கற வாய்ப்பில்லாம போகுது. அதோட இல்லாம அவங்க வெட்கமும் காதலும் போன்ல அடங்கி போயிடுது. கல்யாணம் ஆனா பிறகு என்ன தான் திரும்பவும் அதை பேசினாலும், முதல்ல பேசறப்ப இருந்த வெட்கம் நாணம் எதுவும் வராது.

 

அது கொஞ்ச நாள்லயே மறந்தும் போய்டும். அப்புறம் முகம் குடுத்து பேசக்கூட மாட்டாங்க. 

 

இது நமக்கும் வேண்டாம்.அதுக்காக நாம பேசாமலே இருக்கணும்னு நான் சொல்லல. வாரத்துக்கு ஒரு முறை காத்திருந்து பேசுவோம்.இப்போவும் உனக்கு இதுல விருப்பம் இல்லனா தினமும் பேசலாம். உன் இஷ்டம் தான் எனக்கு முக்கியம்.” அவளின் முகம் பார்க்க,

 

“நீங்க சொல்றது சரி தான். வாரத்துக்கு ஒரு முறை பேசுவோம்.” அவளும் ஒத்துக்கொள்ள, 

 

பெற்றோர்களும் பிரகாரம் சுற்றி வர இரு குடும்பமும் கிளம்பினர்.

 

பெரிய பெரிய பையுடன் ஆடி ஆடி ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தார் பப்பி பாட்டி.

 

“பப்பி பாட்டி, மாமாவும் வந்தாச்சு.” வைஷு ஓடி வைத்து பாட்டியை கட்டிக்கொள்ள, 

 

“வா டீ என் கண்ணு. நன்னா இருக்கியா” வைஷுவின் கண்ணம் வழித்து முத்தமிட்டார். 

 

“நன்னா இருக்கேன் பாட்டி. நீ எப்படி இருக்க?” 

 

“நன்னா இருக்கேன்.எங்க அனு?”கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய,

 

அனு வந்து பாட்டியை கட்டிக்கொண்டாள்.

 

“நன்னா இரு டீ கோந்தே. உங்க தாத்தா மேலேந்து உங்கள பாத்துண்டே இருப்பார். நோக்கு ஒரு குறையும் வராது.” கண்கலங்கினார்.

 

“என்ன பாட்டி வந்ததும் வராததும்மா அழுதுண்டு. கண்ண தொட” வைஷு சமாதானம் செய்தாள். 

 

வச்சுவும் வந்து தாயுடன் சற்று அளவளாவினாள். வச்சுவின் அண்ணன் அன்று இரவு பாட்டியை வைத்து விட்டு ஊருக்கு கிளம்பினார்.

 

சாரங்கனைப் பார்த்தால் இன்னும் கூட சற்று மறைந்து நின்று தான் பேசுவார் பப்பி. மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை அது. 

 

அவரே அன்று இரவு அரிசியை உடைத்து, பருப்பைச் சேர்த்து காய்ந்த மிளகாய், அத்துடன் சிறிது பச்சை மிளகாய், மிளகு, கறிவேப்பில்லை சேர்த்து பெருங்காயத்தை தட்டிப் போட்டு, சுடச் சுட மணக்க மணக்க அரிசி உப்புமா செய்து கொடுத்தார். 

 

சாரங்கன் இரவு உண்டு விட்டு மாடிக்குச் சென்று படுக்கும் வரை பப்பி சமையல்அறையில் தான் இருந்தார். 

 

அதன் பிறகு கதை பேசிக்கொண்டே பெண்கள் அனைவரும், அங்கேயே அமர்ந்து அந்த உப்புமாவை கொத்சு சேர்த்து உண்டனர். 

 

வைஷு அந்த வாணலியில் ஒட்டிக்கொண்டிருந்த மொறு மொறு உப்புமாவை கரண்டியால் சுரண்டி எடுத்து தனியாக வைத்துக் கொண்டிருந்தாள். 

 

அனு அதை எடுக்கப் போக, “இதுல கைய வெச்ச மொத டெட் பாடி நீ தான். அங்க இருக்கற எல்லா உப்புமாவும் நீயே சாப்பிடு, ஆனா இந்த காந்தலுக்கு மட்டும் வராத. ப்ளீஸ் டீ” 

 

பாவமாக கெஞ்ச,

போய் தொல. ஆனா மாகாளி கிழங்கு பக்கத்துல மட்டும் நீ வரவே கூடாதுஅனு விடாமல் ல்ல,

 

அக்கா..”

 

ஹாங்ங் ..”

 

சிறிது காந்தல் எடுத்துக் கொண்டு மாகாளியில் பங்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

 

அப்படி வா வழிக்கு” 

 

இருவரும் உப்புமாவுக்கு மாகாளிக்கிழங்கு ஊறுகாயை தொட்டுக்க கொண்டு ரசித்து உண்டனர்.

 

ஏன் டீ மா. இன்னும் அடிச்சுக்கறேளே! அவ கல்யாணம் பண்ணி போய்ட்டா நீ என்ன பண்ணுவ வைஷுபப்பி கேட்க,

 

நானும் கூட போய்டுவேன்சொன்னவள், உடனே அர்விந்த் நினைவு வர,

 

இல்ல போ மாட்டேன்என மாற்றினாள்.

ஏன் டீ. இதனை நாள் வேற சொல்லிட்டு இருந்தஅனு மறைமுகமாக கேட்க

 

அது அப்போ. இது இப்போ. நீ என் வாய கிளறாத.” நன்றாக உண்டுவிட்டு எழுந்து சென்றாள்.

 

அனுவுக்கு ஏதோ புரிந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் விட்டாள்.

 

 

 

பெண்கள் அனைவரும் ஒரே அறையில் கதை பேசிக்கொண்டு படுத்திருந்தனர்

 

அம்மா. எல்லாருக்கும் புடவை துணிமணி எடுத்தாச்சு. மாப்பிளை வகையறாவுக்கும் எல்லாம் வாங்கியாச்சு. வேற என்ன பண்ணனும். எல்லாம் ரொம்ப முறையா பண்ணனும். அதுனால நீயே சொல்லுவச்சு கேட்க,

 

பாட்டியின் அருகில் படுத்துக்க கொண்டிருந்த வைஷுவும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

 

முகுர்த்தக் கால் நடறதுக்கு முன்னாடி, சில விஷயமெல்லாம் நாம செஞ்சு வெச்சுக்கணும். பொண்ணோட மாமா தான் பொண்ணுக்கு ஊஞ்சல் புடவை, காலுக்கு மெட்டி வாங்கித் தரணும். அப்பறம் பொண்ணோட அத்தை பொண்ணுக்கு அரிசி அப்பளம், வடாம் எல்லாம் போட்டு எடுத்துண்டு வரணும். இதெல்லாம் செஞ்ஜேளா?” 

 

புடவை அண்ணா அனுவையே பாத்து எடுத்துக்க சொல்லிட்டான். அதுக்கு தனியா பணம் குடுக்கறதா சொல்லிருக்கான். அப்புறம் நாளைக்கே அம்புவுக்கு சொல்லிடறேன் அப்பளம் இட ஆரம்பிச்சுடுவா

வச்சு பதில் சொல்ல,

 

சரி அது அவா பண்ணிட்டா, நாம நம்ம அனுவுக்கு நலங்கு வைக்கணும். அத்தை மாமி எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தா, அவாளை வெச்சுண்டு தான் பண்ணனும். ஆத்துல பொண்ண அனுப்பறதுக்கு முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணி தான் அனுப்பனும். அதுனால மொதல்ல அதுக்கு ஏற்பாடு பண்ணு.” 

பப்பி பாட்டி பட்டியல் போட ஆரம்பித்தாள்.

நீ வந்தப்புறம் தான், கல்யாணம் ளை கட்டுது பாட்டி.” வைஷு பாட்டியின் சுருக்கம் விழுந்த துணி போன்ற கையை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே சொல்ல,

 

அடுத்து உனக்கும் சீக்கிரம் பண்ணின்டுடு. பாட்டி இருக்கறச்சேயே பாத்துட்ரேன்  டீவைஷுவின் தாடையைப் பிடித்து சொல்ல

 

பாட்டி அவ ரெடி தான். அவரோட தம்பிய கல்யாணம் பண்ணிண்டு எனக்கு துணையா வரேன்னு சொல்லிருக்கமேலே  மெத்தையில் படுத்திருந்த அனு கிண்டலடிக்க,

 

பேஷா ண்ணின்று டீ. புள்ளாண்டான் எப்படி?” 

 

வைஷுவுக்கு உள்ளே கொதிக்க ஆரம்பித்தது இந்த உரையாடல். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணற,

 

நன்னா லட்சணமா இருக்கான் பையன்.ஆஸ்திரேலியால வேலை பாக்கறான். மரியாதையா நடந்துக்கறான்வச்சு பாராட்டு பாத்திரம் வாசிக்க,

 

அவனுக்கு மரியாதையா நடந்துக்க தெரியுமா?வச்சு அவன் செஞ்சதா சொன்ன வெச்சு செஞ்சுடுவ. நான் அதை தான் பண்ண போறேன்.இருந்தாலும் ஓவரா வாசிக்காத

 

அப்படியா.அப்போ பேசிடுவோமாபப்பி கேட்க,

 

பப்பி, கம்முனு தூங்கு.அனுவ மொதல்ல பேக் பண்ணுவோம். அப்பறம் என்னை பத்தி யோசிக்கலாம். நான் எல்லாம் தாத்தா உன்கிட்ட அடங்கி இருந்தாரு பாரு அப்டி ஒரு பையன பாக்கறேன். இது நமக்கு செட் ஆகாது. அதுவும் அனு மாமியார் இருக்காளே,அவளுக்கு கல்யாணத்துல நன்னா நோஸ் கேட் பண்ணி விடணும்அர்விந்திலிருந்து பேச்சை மாற்ற,

 

ஏன் டீ. அவ என்ன பண்ணா.” 

 

நிச்சயத்தில் நடந்ததை சொல்ல,

 

நீயாவது சொல்லுமா, அவளை பேசாம இருக்க சொல்லி, துக்குறி தனமா ஏதாவது செஞ்சுட போறாவச்சு தாயிடம் சொல்ல,

 

அதெல்லாம் பண்ண மாட்டா. நான் சொல்றேன்பாட்டி வச்சுவை தற்காலிகமாக சமாளித்தலும், குறித்துக் கொண்டாள்

 

பாட்டி எப்போதும் வைஷு பக்கம் தான்

 

அவளின் காதில் கிசுகிசுத்தாள்

பாத்துக்கலாம் வைஷு“.

 

வைஷு இன்னும் தெம்பாக உணர்ந்தாள்.

 

 

                                                       9 

 

ஏண்டி வச்சு கொழந்தேளுக்கு எண்ணெய் தேச்சி குளிபாட்ரியோ? பப்பி பாட்டி கீரை ஆய்ந்து கொண்டே கேட்க

முன்னாடி எல்லாம் தேச்சி விட்டுண்டிருந்தேன். இப்போல்லாம் அதுகளே பண்ணிக்கறதுகள். க்கும் கை அழுத்தி தேய்க்க முடியலவச்சு குறைபட்டுக் கொள்ள,

 

என்ன டீ நீ. தானே தேச்சிண்டா என்னமா இருக்கும். இன்னிக்கு வெள்ளிக்கிழமை வைஷுவும் லேட்டா தான போவா நான் ரெண்டு பேரையும் உக்காத்தி வெச்சு தேய்ச்சி விடறேன். “

 

பாட்டி மொதல்ல வைஷுவுக்கு. அவ தான் கிளம்பனும். நான் அப்ரமா குளித்தேன்” அனு வைஷுவை அனுப்ப,

 

மிளகு போட்டு நல்ல சூடாகக் காய்ச்சிய நல்லெண்ணெய் எடுத்து வந்தாள் பப்பி பாட்டி

வைஷுவை கொல்லைப்புறத்தில் ஒரு மரப்பலகையில் அமர வைத்து நன்றாக தலையில் தட்டி தட்டி எண்ணெய் தேய்த்தாள்.

 

தலைமுடி முழுவதும் நுனி முதல் அடி வரை எண்ணெய் ஊற வைத்தாள்

 

பாட்டியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வைஷு டிக் கொண்டிருந்தாள். கண்கள் சொருகி சுகமாக மீண்டும் தூக்கம் வந்தது வைஷுவுக்கு

அவளை அங்கேயே விட்டுட்டு ஊரிலிருந்து தான் அரைத்துக் கொண்டு வந்த சீயக்காய் பொடியை தன் பையிலிருந்து கொண்டு வந்தாள் பப்பி பாட்டி.

 

அதை அவளிடம் கொடுத்து வெந்நீரில் குளித்து விட்டு வருமாறு சொன்னாள்

அவள் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லுமுன்

வைஷு அனு மாமியாரை மட்டந்தட்ட அருமையான வழி ஒன்னு சொல்றேன்” 

 

வைஷு கையில் இருந்ததை அங்கேயே வைத்து விட்டு பாட்டியிடம் அமர்ந்து ரகசியம் பேச ஆரம்பித்தாள்.

 

என்ன பாட்டி. சொல்லு சொல்லுஆர்வமாக

 

உனக்கு நான் ஒரு பாட்டு சொல்லித் தரேன். அந்த பாட்ட பாடு. அவளுக்கு சரியான பதிலடியா இருக்கும். இது அன்னிக்கு சாப்பாட்டை குறை சொன்னதுக்காக மட்டும் தான்

அவ பண்ற ஜம்பத்துக்கு அப்பப்ப நான் உனக்கு என்ன பண்ணனும்னு எடுத்து கொடுக்கறேன்.” பாட்டி திட்டம் தீட்டினாள்.

 

பாட்டா? என்ன பாட்டி, பாட்டுல எப்படி அவாளை மூக்கை உடைக்கறது.” வைஷு மறுக்க,

 

அடி அந்தக் காலத்துல மாப்பிளை ஆத்து சம்மந்திக்காராள பாட்டு பாடி தான் கல்யாணத்துல கிண்டல் பண்ணுவா. நலங்கு, ஊஞ்சல், எல்லாத்துக்கும் பாட்டு பாடணும். அதுமாதிரி இதையும் பாடு. அப்புறம் பாரு வேடிக்கைய.” 

 

சரி நீ ஏதோ சொல்ற. உன்ன நம்பலாமா பப்பி?”

பப்பி கிட்ட சொல்லிட்டா நீ கவலை இல்லாம இருக்கலாம். நம்மாத்த விட்டுக்கொடுக்க முடியுமா?”

பப்பி பாட்டி ஆத்து பெருமையை காப்பாற்றுவேன் என்று வைஷு குளிக்கச் சென்றாள்.

 

அன்று அனுவிற்கு நலங்கு வைக்க ஏற்பாடு செய்தனர். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையில் பூ பழம் முதலிய மங்கள பொருட்களை வைத்து தயார் செய்தாள் வச்சு

 

வழக்கம் போல பொன்னம்மா கறிகாய்களை கொண்டு வந்து தர, மாமி அத்தை பெரியம்மா பாட்டி என அனைத்து குடும்பமும் சூழ்ந்தது

 

அனைவரும் ஒன்றாக சிரித்து பேசி மகிழ்ந்து சமையல் செய்வதும், ஆளுக்கொரு வேலையாக உதவுவதும், கலகலப்பாக ஆனாது வீடு

 

அத்தை மகள், மாமன் மகன் போன்றவர்கள் கூடி, அனுவை கிண்டல் செய்ய தொடங்கினர்.

 

இந்த அனு ஒரு ஐஞ்சு வருஷம் முன்னாடி பொறந்துட்டா. இல்லனா நானே இவளை கல்யாணம் பண்ணிருப்பேன். அட்லீஸ்ட் இந்த வைஷு வாச்சும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பொறந்திருக்கலாம்” 

அலுத்துக் கொண்டான் மாமன் மகன் கண்ணன் .

 

பாட்டி கொண்டு வந்த கை முறுக்கை சுவைத்து கொண்டிருந்த வைஷு,

டேய்! உனக்கு டிராயர் போடா சொல்லிகுடுத்தவளே நானு. என்னையே நீ கல்யாணம் பண்ணிக்கணுமா” 

 

வேற பிகர் மாட்டல வைஷு. அட்ஜஸ்ட் ண்ணு டீ” அவள் முறுக்கில் பாதி வாங்கி உண்டான்

 

முறுக்குல வென அடஜஸ்ட் பண்றேன்.” வைஷு சிரிக்க, அவளுக்கு ஒரு ஐடியா வந்தது

 

இவர்களை வைத்து அரவிந்தை மடக்கலாம் என்று நினைத்தாள்

 

அவன் இவர்களைக் டந் போகும் போது கிண்டல் செய்வது, அவன் சாப்பிடும் போது பரிமாறாமல் கடந்து செல்வது, அவனை அவர்கள் கூப்பிடுவதாகவும் இவர்கள் கூப்பிடுவதாகவும் சொல்லி அலையவிடுவது போன்ற உன்னதமான ஐடியாக்கள் அவள் மூளையைச் சுற்றியது

 

சரி டைம் பார்த்து அவனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சுடணும். புன்னகை மலர அவள் அமர்ந்திருக்க

என்ன டீ வைஷு கனவா?நீயும் நானும் ஜோடியா!” கண்ணன் ஜொள்ளு விட

 

போடா அர டிக்கெட்டுஎழுந்து சென்று விட்டாள்.

 

இரு டீ உன் பொஸசிவ்நேஸ்ஸ தூண்டறேன்தொடையை தட்டி சபதம் செய்ய,

 

டேய் அவ போய்  அரை நாள்  ஆகுது. வா ஒரு டம்ளர் பாயசம் குடிச்சுட்டு வரலாம்ஜானகி கூட்டிச்சென்றாள்

 

நண்டு சிண்டு கூட நம்மள மதிக்க மாட்டேங்குது.” புலம்பிக்கொண்டே சென்றான்

 

அனுவை அமர வைத்து ,

அவளுக்கு மஞ்சளும் குங்குமமும் கலந்த கலவையை கால்களில் நலங்கிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து

 

கையிலும் கன்னத்திலும் காலிலும் சந்தனம் பூசி, உச்சந்தலையில் எண்ணெய் வைத்தனர்

 

வரிசையாக வச்சு, பப்பி பாட்டி, அத்தை அம்பு, மாமி என பெரியவர்கள் அனைவரும் நலங்கிட

 

லட்சுமி கல்யாண வைபோகமே.. நம்ம அனு கல்யாண வைபோகமே 

பாவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்திர

ரவி சோம வர நேத்ர ரமணிய காத்ர“, வைஷு பாட்டு பாட 

 

அவளை குளிக்கச் சொல்லி புது புடவை கட்டி வந்ததும் அனைவரும் தலையில் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர்

 

நலங்கு நல்ல படியா முடிஞ்சுது அடுத்து பந்தக்கால் நடணும். அதுக்கு முன்ன நீ அப்பளம் இட ஆரம்பி அம்புபப்பி பாட்டி வேலை சொல்ல ஆரம்பித்தாள்.

 

ரகு வீட்டில் அனைவரும் சென்று பெண்ணுக்கு கூர புடவை மற்றும் திருமாங்கல்யம் அத்துடன் சேர்ந்த தாலிக் கொடியும் வாங்கினர்

நாத்தனார் இல்லாததால் அவர்களே விளையாடல் சீர்களும் வாங்கிவிட

 

அவளுக்கு எடுத்த புடவைகளுக்கான ரவிக்கையை கொடுக்க பங்கஜம் கிளம்ப, கூடவே அரவிந்தும் கிளம்பினான்.

வாமா வண்டில கூட்டிண்டு போறேன்பாச வார்த்தைகள் கூற

பங்கஜமும் அவனுடன் சென்றாள்.

 

வைஷுவைப் பார்க்க கிளம்புகிறான் என்று அவன் மட்டுமே அறிவான்

 

தான் வரப்போவதாக முன்னமே போன் செய்து கூறினாள் பங்கஜம். வச்சு அதை பொதுவில் சொல்ல, பாட்டியும் பேத்தியும் கண்ணால் ஜாடை காட்டிக் கொண்டனர்

 

பப்பி பாட்டி வைஷுவை தனியே அழைத்துச் சென்று

 

வைஷு இப்போ எதுவும் பண்ணி வைக்காத. பாக்கறேன் அவ எப்படின்னு. அப்பறம் கல்யாணத்துல பாத்துக்கலாம்சொல்லிவிட்டு வெளியே சென்றாள்

 

கெடச்ச சான்சை விடுதே இந்த பப்பிவேறு வழியின்றி தானும் செல்ல,

 

இன்று நலங்கு வைத்ததால் சாப்பாடும் தடபுடலாக இருக்க அவாளையும் சாப்பிடச் சொல்லலாம் என்று இருந்தாள் வச்சு

 

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க, வாசலில் இருந்த ஜானகி கண்ணன் அனைவரும் பங்கஜத்தை அடையாளம் கண்டு கொண்டு, அவளை உள்ளே அழைக்க, கூடவே வந்த அரவிந்தைப் பார்த்ததும்

 

என்னோட பையன் அர்விந்த் கிருஷ்ணாஎன அறிமுகம் செய்தாள் பங்கஜம்

 

இவாளாம் அனுவோட கசின்ஸ்என அர்விந்திடம் சொல்ல

 

அவனும்ஹாய் கைஸ்சகஜமாக பேச அங்கேயே அறிமுகப் படலம் நடந்தது. ஜானகி வந்தது முதல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க

 

அர்விந்துக்கும் புரிந்தது அவளின் நிலை.  “ஹே ஜானு , நீ என்ன பண்றஎன கண்ணனை விட்டு அவளிடமும் சற்று பேச, அவள் தன்னைப் பற்றி மொத்தத்தையும் கூற ஆரம்பித்தாள்

பங்கஜம் முன்னே சென்று விட, அரவிந்தன் இருவரோடும் பின்னால் வர

வைஷு அதிர்ந்தாள். இவன் என்ன இதுங்களோட ஒட்டிக்கிட்டு இருக்கான். நம்ம பிளான் என்ன ஆகிறது

 

இந்த ஜானகி வேற அவனோட ஈஷிண்டு நிக்கறா

வைஷுவைக் கண்டதும் லேசாகக் கண்ணடிக்க, அவள் முறைத்து விட்டு,

ஜானகி வாடி இங்கபல்லைக் கடித்து கத்தினாள்.

 

அவளோ கண்டு கொள்ளாமல் அவனைப் பார்த்தபடி இருக்க

அதை பார்த்து மெல்ல சிரித்தான் அர்விந்த்

அப்புறம் ஜானு, நீ எங்க இருக்க?” என குழையவும்,

 

இவனிடம் அவளை நெருங்க விடுவது தவறு என்று தானே அங்கு சென்று, அவளை இழுத்து வந்தாள்

 

என்ன வைஷு இது, பேசிண்டு இருக்கும்போது இப்படி பாதில கூட்டிண்டு வர, அவர் என்ன நெனச்சுப்பார்?” 

 

பின்னால் அவன் கண்ணனோடு வருவது தெரியாமல்,

 

ஏன் டீ இப்படி வழியற.சகிக்கலகாட்டமாக கூறினாள்

 

நான் ஒன்னும் வழியல. பையன் கொஞ்சம் நன்னா இருக்கானேன்னு பேசினேன்.” ஜானகி அலுத்து கொள்ளாமல் சொல்ல,

ச்சீ. அவன் என்ன டீ நன்னா இருக்கான்.” 

ஆமா உனக்கு மன்மதனே வந்தாலும் சுமாரா தான் தெரிவான். நீ சாமியாரா தான் போக போற. யாரை பாத்தாலும் புடிக்கலன்னு சொல்லிண்டு. போடி நான் போய் என கலர் பிளவுஸ் எடுத்துண்டு வந்திருக்கான்னு பாத்துட்டு வரேன்அறையிலிருந்து அவளும் ஓடிவிட

 

வைஷு அங்கேயே நின்று பொருமிக் கொண்டிருந்தாள்

கண்ணன் உன்ன யாரோ கூப்பிட மாதிரி இருக்கேஅப்டியா எங்க மாமா கூப்பிட்டு இருப்பார் வாழை இலை வாங்க, போயிட்டு வந்துடறேன்அவன் சென்ற பிறகு

 

அவள் இருந்த அறைக்குச் சென்றான். அழகாக புடவை அணிந்து பூ வைத்து இருக்க, அவள் அன்று மிகவும் அழகாகத் தெரிந்தாள். அன்று வீடியோ காலில் பார்த்தது போல இருக்க , அவனுக்குள் ஒரு அவள் மீது ஓர் ஈர்ப்பு வரவே செய்தது

 

இன்னிக்கு என்ன சவால் விட வந்த?” 

உன்ன பாக்கணும்னு தோணுச்சு பேபி. அதான் வந்தேன்அவளின் அருகே சென்று சொல்ல

 

உன்ன பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு. அத்திம்பேர் க்கு இருக்கற குவாலிடீஸ்ல பத்து பெர்சன்ட் கூட உனக்கு இல்ல

 

உன் கசின் சொன்ன மாதிரி சாமியார் தான் புடிச்சிருக்குஅவளைக் கண்டு சிரிக்க,

 

ஒட்டு கேட்டியா?” இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்

 

ச்சே ச்சே நான் ஏன் ஒட்டு கேட்கணும். நானும் கண்ணனும் பின்னால வந்தோம். நீ எங்களை பாக்கல” 

 

இங்க பாரு என் கசின் கிட்ட லாம் எங்ககிட்ட நடந்துக்கிட்ட மாதிரி நடந்துக்கிட்டேனு தெரிஞ்சுது தொலைச்சிருவேன்வில் நீட்டி அவனிடம் எச்சரிக்கை செய்ய

 அவளது விரலைப் பற்றினான்

உனக்கு பொறாமையா இருக்க பேபி? உங்கிட்ட மட்டும் தான் நான் பேசணுமா ? ஓப்பனா சொல்லு. அம் ரெடிஅவளின் விரலைப் பற்ற,

 

ஐய. எனக்கு பொறாமையா? என் கசின் ஒன்னும் தெரியாதவ, உன்ன மாதிரி ரோமியோ கிட்டேந்து காப்பாத்தணும். அதுக்கு தான்

 

ம்ம்ம். அப்படி தெரிலயே. என்கூட அவ பேசிட்டு இருந்தப்ப உன் கண்ணுல லைட்டா பொறாமை பாத்தேன் டியர்” 

 

அவளுக்கு கோபம் வர,

 

என்கிட்ட நீ மயங்கிட்டேன்னு சொல்ற நாள் ரொம்ப தூரம் இல்ல செல்லம்” 

 

கனவு தான் நீ காணனும்அனல் வீசியது அவள் முகத்தில்.

ஆல்ரெடி என் கனவுல நீ தான்

ச்சே போ” 

 

இப்படி ஒருத்தர் மேல ரொம்ப கோவப்படற பொண்ணுங்க அப்பறம் அவனை செமயா லவ் பண்ணுவாங்களாம்

 

நான் அப்படி இல்ல செமயா அடி குடுத்து அனுப்புவேன்

 

கோவம் கொள்வாளே ஒருவள் அவள் மாற 

இறுக்கி அணைத்து விடல் 

இந்த குறள் தான் உனக்கு செட் ஆகும்என அவளை லேசாக அணைத்து விட்டு சென்று விட்டான்.

 

அவன் சொன்னத்தின் அர்த்தத்தை இவள் கிரகிக்கும் முன்னே அது நடந்தும் விட, உடல் படபடக்க அமர்ந்து விட்டாள்

 

கட்டி பிடிச்சனா? இல்ல இல்ல இது ப்ரெண்ட்லி ஹக் தான். எப்படி அவன் பண்ணலாம். எருமைமாடு. கொரங்கு. இப்படி பண்ணா நான் அவன் கிட்ட மயங்கிடுவேனா. நான் யாரு? வைஷு. அவனை எனக்கு பிடிக்காது. எப்பவும்‘ 

 

வைஷுவச்சுவின் குரல் கேட்க, சுதாரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

நல்ல பிள்ளை போல பப்பி பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான்

 

வந்து எல்லாருக்கும் சாதம் பரிமாறுவச்சு அழைக்க,

 

அவளும் மறுப்பேதும் இன்றி அதை செய்தாள்

 

அவள் பரிமாறும் போது கூட அரவிந்தன் எதையும் காட்டிக் கொள்ள வில்லை

 

ஜென்டில் மேனாம்.’ வைஷு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது அவனைக் காண்கையில்.

 

 

                                              10

 

என்ன பப்பி ஒன்னும் சொல்லாம இருக்க?” வெய்யலில் அரிசியைக் காய வைத்துக் கொண்டிருந்த பப்பி பாட்டியிடம் ஊற வைத்த அரிசியை வாயில் சிறிது போட்டுக் கொண்டே கேட்டாள் வைஷு.

நானும் செத்த கவனிச்சேன். அவ கொஞ்சம் பகட்டு காட்டிண்டு தான் இருக்கா. வேணும்னு பண்ற மாதிரி தான் தெரியறது. அன்னிக்கு அந்த ரவிக்கை துணிய கொண்டு வந்து கொடுத்துட்டு, இது இங்க வாங்கினோம் அது அங்க வாங்கினோம்இத்தன வெலைன்னு பீத்திக்கறா டி. நாம என்ன வாங்கிருக்கோம்னு பாத்துட்டு,

அவளுக்கு என்ன வாங்கினோம்னு வேற கேட்டு வாங்கி பாத்துட்டு, இந்த கலர் என்னண்ட இருக்குன்னு ஒரு நொட்டு சொல்றா.

ஒரு சபை நாகரீகம் தெரிய வேண்டாமோ. அடுத்தவா வாங்கித்தரா! அதை குறை சொல்லாம ஏத்துற மனசு வேணும். அது தான் பொம்மனாட்டிக்கு அழகு. அத விட்டுட்டு இப்படி பண்றாளே! நேக்கு சுத்தமா அவ போக்கு பிடிக்கல

அரிசியை விளாவிவிட்டுக் கொண்டே பேசமீண்டும் சிறிது அரிசியை எடுத்து வைஷு வாயில் போட்டு ரைக்கலானாள்.

 

நானும் இதே தான் சொன்னேன். அவா சரியில்லன்னு , யாரு கேக்கறா. சின்ன பொண்ணு ஓரமா போங்கறா

அடிசும்மா ஊற வெச்ச அரிசிய திங்காத, கல்யானத்தன்னிக்கு மழை பெய்யும்அதட்டினாள் பாட்டி.

ஆமா நீ வந்து கொட பிடி. நான் என்ன பேசிண்டு இருக்கேன்அதுக்கு பதில் சொல்லு

இதெல்லாம் சின்ன விஷயம் டி. போறபோக்குல தட்டி வெக்கலாம். டோன்டு ஒர்ரி

என்னவோ போ.. இதுல இங்கிலீஷ் வேற.” தானும் சேர்ந்து அரிசியை உலர்த்தலானாள்.

 

அன்று அவளை சற்று நிலைகுலைய வைக்கவே அவளை லேசாகக் கட்டிப் பிடித்தான் அர்விந்த். ஆனால் அது நடந்தது என்னவோ அவனுக்குத் தான் . அவளின் வாசமோ மென்மையோ அவனை புரட்டிப் போட்டது உண்மையே.

அதனாலேயே அவளை அதற்குப் பிறகு பார்ப்பதைத் தவிர்த்து மற்றவர்களுடன் சகஜமாக இருக்க முயன்றான்.

அவன் மற்ற பெண்களைப் போல முதலில்  அவளை வம்பிழுக்கவே நினைத்தான். இன்று ஏனோ அந்த எண்ணம் சற்று மாறுவது போல தோன்றியது.

நான் கட்டிப் பிடித்தாலும் அவள் அவனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இருந்தது அவளின் திடத்தை உணர்த்தஅதுவே அவனுக்கு மிகவும் பிடித்தது.

ஏற்கனவே தன்னோடு சரிக்கு சமமாக நிற்பவளை சீண்டிப் பார்க்கத் தோன்றஇது இன்னும் அவனை அவளிடத்தில் ஆழமாக எதையோ தேடச் சொன்னது.

டேய் அரவிந்தா..உன்ன மாத்தற ஒருத்தியா..அதுக்கு நீ விடலாமா. எப்பவும் ஜாலியா இருந்துட்டு போய்டுடா ஆனா கினா

அவன் புலம்பி முடிக்கும் சமயம் ரகு வந்துவிட,

அது என்ன டா ஆனா கினா?”

அதுவா..அர்விந்த் கிருஷ்ணா தான் ஷார்ர்டா ஆனா கினா

கஷ்ட காலம். ஏகே ன்னு தான உன்ன உன் ப்ரெண்ட்ஸ் கூப்டுவாங்க. இது எப்போலேந்து?”

இது எனக்கு நானே சொல்லிக்கறது. சூனா பானா ஸ்டைலு

தலயில் அடித்துக் கொண்டான் ரகு.

ஹே ரவுடி பேபி ..உன்ன விடமாட்டேன் டி

இது யாரு டா

ம்ம்அது ஒரு வேண்டாத ப்ரெண்டுஅதற்கு மேல் அங்கு நிற்காமல் பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க பால்கனிக்கு சென்று விட்டான்.

இவன் போக்கே சரியில்லையேரகு நினைத்தான்.

பால்கனியில் இவன் வருவதைப் பார்த்து அந்தப் பெண்ணும் வர, இவனுக்கு முன்னே அவளேஹாய்என்கவும்

அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது. ‘இதுவே வைஷுவா இருந்தா முறைச்சுட்டு போயிருப்பாஎன்று தான் தோன்றியது.

அங்கேயும் அவள் நினைவு வரயோசித்தவாறே அவளுக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டான்.

மாப்பிள்ளை வீட்டில் அன்று பந்தக்கால் நட்டனர். அத்தை , மாமா என அனைவரும் வந்திருக்க,

மூங்கில் கம்பில் மஞ்சள் குங்குமம் வைத்து, அதன் தலையில் மாவிலைத் தோரணம் வைத்து அலங்கரித்து, அதற்கு பூவும் சூட்டி, வீட்டு வாசலில் அனைவரும் சேர்ந்து அதை நடபின் அதற்கு பால் தண்ணீர் ஊற்றி வணங்கி விட்டு, திருமணம் ல் படியாக நடக்க வேண்டுமென பிரார்த்தனை செய்துவிட்டு வந்தனர்.

ரகுவிற்கு அன்று ஏனோ அனுவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவன் சொன்னதைக் கேட்டு அவளும் வாரத்திற்கு ஒரு முறை தான் பேசுகிறாள். ஆறு நாட்களின் கதையை ஏழாம் நாள் பேசும்போது அனைத்தையும் சொல்லிவிட வேண்டும்அவளின் குரலைக் கேட்க வேண்டும் என அவனுக்கும் ஆர்வம் இருக்கும்.

 

இன்று ஐந்தாம் நாள் தான். ஆனாலும் பேச வேண்டும் போல் இருக்ககுடும்ப நபர்களிடமிருந்து பிரிந்து தனியே தன் அறைக்கு வந்து அவளுக்கு போன் செய்தான். அது பல முறை அடித்து ஓய்ந்தது. அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கவிடாமல் அடுத்து வைஷ்ணவியின் எண்ணிற்கு அழைக்க, அவளும் எடுக்கவில்லை.

அலுத்துப் போய் மெத்தையில் வந்து விழுந்தான்.

என்ன ரகு சோர்ந்து போய்ட்ட?” அர்விந்த் வந்து அருகில் அமர,

இல்ல டா! அனுகிட்ட பேசலாம்னு பாத்தேன். அவ போன் எடுக்கல. வைஷுக்கு பண்ணேன் அவளும் எடுக்கல.” குறைபட்டுக் கொள்ள,

குடு எனக்கு ராசி இருக்க நான் ட்ரை பண்றேன்என்றவன் ரகுவின் போனை எடுத்து கால் லிஸ்ட் பார்க்கவைஷுவின் எண் கண்ணில் பட்டது. அதற்கு டயல் செய்தான்.

அவ மட்டும் இப்போ மூணு ரிங்ல போன் எடுத்தானா எனக்கும் அவளுக்கும் ஏதோ இருக்குன்னு அர்த்தம். இல்லனா எதுவும் இல்ல.’ அவனையும் மீறி அவன் மனது நினைத்தது.

ரிங் போனதுமுதல் ரிங் ..இரண்டாவது ரிங்.. 

இரண்டாவது ரிங் முழுதாக முடிவதற்குள்,

 

ஹல்லோ.. அத்திம்பேர்..?” அழகான குரலில் வைஷ்ணவி பேச,

 

அர்விந்துக்கு புதிதாக இருந்தது அவளின் இந்த குரல். எப்போதும் தன்னிடம் எரிந்து விழுந்து தான் பேசுவாள். இப்படி ஒரு இனிமை அவனுக்கு ஏதோ செய்ய, உடனே எதுவும் பேசாமல் ரகுவிடம் போனைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டான்.

 

அவன் பேசாமலே கொடுத்தது ரகுவை யோசிக்க வைத்தாலும், உடனே வைஷுவிடம் சொல்லி அனுவிடம் பேச விழைந்தான்

அர்விந்த் அன்று முழுதும் பலவிதமாக யோசித்து கொண்டிருந்தான்

பிறகும் இரு மனமாகவே இருந்தான்.

 

அனு வீட்டில் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை

 

ஐந்து சுமங்கலிகளை அழைத்து, அவர்களுக்கு புது புடவை வாங்கி நனைத்து மடியாகக் கொடுத்து வீட்டில் இறந்து போன சுமங்கலிகளை நினைத்து கொண்டு, இவர்களுக்கு பாத பூஜை செய்தனர்

பின்னர் அவர்கள் அனைவருக்கும் உணவிட்டு, அவர்களிடம் அனு ஆசி பெற்றாள். அவர்களும் மனதார அவளது வாழ்வு சிறக்க வாழ்த்திவிட்டு சென்றனர்

இரு வீட்டிலும் கல்யாணத்திற்கு முன் செய்ய வேண்டிய அனைத்தும் நல்லபடியாக முடிந்தது

 

திருமணத் தேதி நெருங்கி கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் , உறவுகள் என அனைவருக்கும் பத்திரிகை கொடுத்தாயிற்று

அனுவுக்கு மனம் ஒரு புறம் திக் திக் என்று தான் இருந்தது

 

வைஷு திருமணத்திற்காக இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்து இருந்தாள். இன்னும் இரண்டே நாளில் திருமணம் என்று நிலை வந்தது

 

மாமா மாமி என அனைவரும் வந்தாயிற்று. சமையல் கோபுவையும்  முன் கூட்டியே வர சொல்லி இருந்தனர். அவனை கூட வைத்துக் கொண்டே அனைத்து பக்ஷணங்களையும் செய்தனர்

 

வச்சு , பப்பி பாட்டி மேற்பார்வையில், அதிரசம், கை முறுக்கு, ஜாங்கிரி, லட்டு, மைசூர்பாகு, ரவா லட்டு, தேங்காய் பர்பி, பாதுஷாநுக்கல் , அப்பம் , தேன்குழல், மான்கொம்பு, தெரட்டிப்பால், மனோகரம், பணியாரக்காய் முதலிய சீர் பக்ஷணங்கள் அனைத்தும் தயாராக இருந்தன. அனைத்திலும் நூற்றியெட்டு. 

 

அத்துடன் கல்யாணத்தில் பந்தியில் பரிமாற, மோர் மிளகாய், ஜவ்வரிசி வடாம் என இதர சிலவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொண்டான் கோபு. அவனின் ஆட்கள் நாளை காலை தான் வருகிறார்கள்

வச்சு, வீட்டில் தான் பக்ஷணங்கள் செய்ய வேண்டும் என்று கூறியதால், இவைகள் மட்டும் சுத்தமாக இங்கே தயாரானது.

 

 அம்பு அத்தை ஒரு கூடை நிறைய மருதாணி இலை பறித்துக் கொண்டு வந்திருந்தாள்அனு தனக்கு மெஹந்தி வேண்டாம் என்று கூறி விட்டதால் அனைவருக்கும் சேர்த்தே பறித்துக் கொண்டு வந்தாள்

 

பப்பி பாட்டி அதை பதமாக பாக்கு சேர்த்து அரைத்துக் கொடுத்தாள். பாக்கு சேர்த்து அரைத்தால் இன்னும் சிவக்கும்

 

பப்பி , நீ கவலையே படாத, அனு கை ரொம்ப நல்லா சிவக்கும். அத்திம்பேர் இவ மேல கொள்ள பிரியம் வெச்சிருக்கார்.” வைஷு சொல்ல, அங்கே சிரிப்பலை ஓயவில்லை

 

அனுவுக்கு சிவக்கும். உனக்கும் எனக்கும் இப்படி செஞ்சாதான் சிவக்கும்ருக்கு பெரியம்மா ஜாடையாக சொல்ல,

 

அவளுக்கு என்ன டீ. அவளை தாங்கு தாங்குன்னு தாங்கறவன் தான் அவளை கட்டிக்கப் போறான்பப்பி பேத்தியை யாரிடமும் வீட்டுக் கொடுக்க மாட்டாள்.

இந்த கெழம் பக்கத்துல இருக்கறது தெரியாம சொல்லிப்ட்டேன். உடனே இது நம்மள எப்படி வாரலான்னு அடுத்து யோசிக்கும்மனதிற்குள் பயந்த ருக்கு

 

நேக்கு கொஞ்சம் ஆத்துல வேலை இருக்கு டி வச்சு. ஒரு கிண்ணத்துல நான் மருதாணி எடுத்துண்டு போறேன். நாளைக்கு வரேன்உடனே கிளம்பி விட்டாள்.

 

ஜானகி, வச்சு அம்பு வைஷு என அனைவரும் ஒருவருக்கொருவர் மருதாணி வைத்துக் கொண்டு, கீழே பாயை மட்டும் விரித்திக் கொண்டு படுத்தனர்

 

அனைவரும் மறுநாள் செய்ய வேண்டிய வற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, வைஷு மட்டும் தன் மருதாணி சிவக்குமா இல்லையா என யோசித்தாள்

 

வர போறவன் எப்படி இருப்பானோஎன யோசித்துக் கொண்டிருக்கும் போது அர்விந்த் முகம் நிழலாட

 

ச்சே நல்லது யோசிக்கறப்ப இந்த கொரங்கு ஏன் ஞாபகம் வருதுகோபம் வர, வலுக்கட்டாயமாக கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்

பப்பி பாட்டி அன்று மதியம் தான் அவளுக்கு கல்யாணத்தில் என்னென்ன பாட வேண்டும் என்று சொல்லி இருந்தார். அந்த பாட்டை ஒரு முறை த்திற்குள் பாடிப் பார்த்தாள்.

உறங்கியும் போனாள்.

காலையில் அனைவரும் எழுந்து தங்கள் மருதாணியை கலைத்துவிட்டு, யாருடையது சிவப்பு என்று பார்த்துக் கொண்டிருக்க, வைஷு வழக்கம் போல தூங்கி கொண்டிருந்தாள்

 

அனுவிற்கு நன்றாகவே சிவந்திருக்க, ஜானகிக்கு ஓரளவே சிவந்திருந்தது

 

இரு இரு வைஷுவும் வரட்டும் அப்பறம் பாப்போம்என முனகினாள் ஜானகி

 

சோம்பல் முறித்தபடி எழுந்த வைஷுவை, ஜானகி அவசர படுத்தி கூட்டிச் சென்று முதலில் அவளது கையை துடைக்கச் சொல்ல

 

அவளது பளிங்கு கைகளில் செக்கச்சிவந்து துளியும் கலையாமல் அழகாக வேறு இருந்தது. அனுவை விட வைஷுவுக்கே நன்றாகச் சிவந்தது

 

ஜானகி அழும் நிலைக்கு சென்றாள். அவளை சமாதானப் படுத்தி அழைத்து வந்தாள்

 

குளித்து அழகாக உடுத்தி அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பினர்

நாராயணனும் வீட்டு பூஜை அறையில் கற்பூரம் காட்டி வழிபாடு செய்துவிட்டு, வாசலில் சூரத் தேங்காயை உடைத்து விட்டு

ஏற்பாடு செய்திருந்த வேனில் அனைவரையும் ஏற்றினார்

 

வண்டியின் நான்கு பக்க வீலிலும் எலுமிச்சை வைத்து விட்டு வர, சாரங்கனும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வண்டியில் ஏறினார்

 

கலகலப்பாக வண்டி கிளம்பியது மண்டபத்தை நோக்கி

 

வைஷு நிறைய வளையலிட்ட தன் கையை பார்க்க மருதாணியை ஒரு முறை ரசித்தாள்.

அதே நேரம் அவளின் போனிற்கு வாட்சப்பில் புது எண்ணிலிருந்து தகவல் வந்தது.  

 

காண்ட் வெய்ட் டு ஃபைட்  வித் யு ரவுடி பேபி. யு வில் ஃபால் ஃபார் மீ ” 

அந்த எண்ணிற்குரிய புகைப்படத்தை பார்க்க, கே என்ற எழுதிட்டு அவனது கார் அருகே நின்று கொண்டிருந்தான் அர்விந்த் கிருஷ்ணா.

நான் ரவுடியாஆத்திரப்பட்டுமுதலில் அதை தவிர்த்து விட எண்ணினாலும், அவள் பார்த்து விட்டதால் நீல டிக் வந்துவிடும் என்பதால், அவளும் பதில் அனுப்ப முடிவு செய்தாள்

 

ரவுடி கிட்ட அடி வாங்க ரெடியா இரு கே( A K – Australia korangu ).

அனுப்பிவிட்டு கொஞ்சம் திருப்தி அடைந்தாள்

அதைப் படித்த அர்விந்த் விழுந்து விழுந்து சிரித்தான். ‘ கே க்கு இப்படி ஒரு மீனிங் சொல்லிட்டாளேஎன்று.

 

                                                           11

 

மணப்பெண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். இனி அவள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் வரை மண்டபத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது தான் முறை

வாத்தியார் முன்னமே வந்திருந்தார். அவர் பெண்ணிற்கு விரதம் செய்து வைக்கக் காத்திருந்தார்

இவர்கள் வந்ததும்யாராவது வந்து ஆசன கல்லுக்கு கோலம் போடுங்கோ.

இதோ வந்துட்டேன் மாமாஅம்பு தான் முன்னால் ஓடினாள்.

வாடி அம்பு நன்னா இருக்கியா? எங்க உன் ஆத்துக்காரர்வம்பளந்தார்.

அம்புவும் அரிசிமாவில் கோலமிட்டுக் கொண்டேநன்னா இருக்கேன். அதோ அங்க அண்ணாவோட நின்னு பேசிண்டு இருக்காரேஎன்றாள்.

 

அடடே நான் கவனிக்கல. தக்ளி திரிச்சு தரச் சொல்லிருந்தார். ரெடி பண்ணி எடுத்துண்டு வந்திருக்கேன். மாப்பிளைக்கு வேணுமோன்னோ. அதுனால நம்மாத்து மாப்பிள்ளைக்கும் சேர்த்து கொண்டு வந்திருக்கேன். அப்பறமா என்னண்ட வந்து வாங்கிக்கச் சொல்லு டீ மாதான் கொண்டு வந்திருந்த துணிப் பைகளில் அதை தேடிக் கொண்டே அம்புவிடம் விவரம் சொன்னார்

 

ஆகட்டும் மாமா. அதுக்கென்ன அவசரம். கல்யாணம் முடிஞ்சு கூட வாங்கிண்டா ஆச்சு. கோலம் போட்டுட்டேன். நான் போய் அனுவ கவனிக்கறேன். புள்ளையாத்துக் காறாளாம் வந்துடுவா. அவாளுக்கு நீங்க தான் விரதம் பண்றேள் போலருக்கே!” 

 

ஆமா. அந்த மாமி அன்னிக்கு நிச்சயதார்த்தத்துலயே சொல்லிட்டா. “அசடு வழிந்தார்

 

அவரிடமிருந்து சிறு சிரிப்புடன் அம்பு நகர்ந்து கொண்டாள்

 

மணமேடை அழகாக மாக்கோலமிடப் பட்டு ஆங்காங்கே போட்ட செம்மண்ணால் அது பளிச்சென்று விளங்கியது

பெருமாளும் தாயாரும் மணமேடையின் நடு சுவரில் ஓவியரின் கைவண்ணத்தால் வீற்றிருந்தனர்

வச்சுவும் சாரங்கனும் தயாராக வந்து நிற்க, அனுவை புதுப் புடவை கட்டி நாமகரணம் செய்ய அழைத்து வந்தாள் அம்பு

வைஷு நீ வாசல்ல நில்லு. மாப்பிள்ளை ஆத்துல இருந்து வர்றவாள வாங்கோன்னு கூப்டு. இந்த வாண்டுகளை கூட வெச்சுக்கோவச்சு வைஷுவை சொல்ல,

அவளும் அது போலச் செய்தாள்.

அனுவை அமர வைத்து தாயும் தந்தையுமாக அவள் காதில் அவளது பெயரைச் சொல்லி நாமகரணம் செய்து வைத்தனர்

பிறகு மாமா மாமி அத்தை அத்திம்பேர் பெரியம்மா பெரியப்பா என வரிசை கட்டி அவளுக்கு புடவை கொடுத்து ஆசீர்வதித்தனர்.

 

முதல் சடங்கு முடிந்து அவர்கள் காத்திருக்கும் நேரம் சரியாக மாப்பிள்ளை வீட்டாரின் வண்டி மண்டப வாசலை அடைந்தது

 

புது வாழ்வின் ஆயிரமாயிரம் கனவுகளோடு அனு காத்திருக்க, அவளை மட்டுமே மனதில் நிறுத்தி அவளைக் காணும் ஆவலோடு ரகு வாசலில் வந்து நின்றான்

 

வைஷு அனைவரையும் கூப்பிட, அனுவின் குடும்பமே வந்து வாசலில் நின்று, மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்

 ரகுவிற்கு மாலை போட்டார் நாராயணன்

மாப்பிளையுடன் ஒரு பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல, வைஷுவின் கண்கள் ஒருவனையே தேடியது

 

கடைசி நேரத்தில் சிலவற்றை மறந்துவிட்டதால் அவன் அதை எடுத்துக் கொண்டு பைக்கில் வருவதாகச் சொல்லி இவர்களை முன்னே அனுப்பிவிட்டான்

 

சம்மந்தி வீட்டினர் கடைசி ஆள் வரை வைஷு பன்னீர் தெளிக்க  உள்ளே சென்று விட்டனர். அவன் மட்டும் இல்லை. யாரைக் கேட்பது

 

குழம்பியபடியே சேரில் அமர்ந்துவிட்டாள். ஜானகி அருகில் வந்து,

என்னடி வைஷு. அந்த ஹீரோ சார் மட்டும் காணும்என்கவும்,

 

டீ. நீ என்கிட்டே ஓத வாங்காத. அவன் ஹீரோவா ?” வைஷு கொதிக்க,

அவனை பத்தி பேசுனாலே நீ பதட்டப் படற. என்னடி விஷயம்?” அவள் தோளை உரசிக் கொண்டு கேட்க,

 

நீ காலேஜ் போய் கெட்டு போற. அவனை எனக்கு பிடிக்கல

 

இப்படி சொல்றவங்கள தான் நம்ப கூடாது.”

 

அப்படியா. உன்ன இப்போவே நம்ப வைக்கிறேன். கூப்டு கண்ணனை. அப்பறம் நம்ம கசின்ஸ் எல்லாம் கேதர் பண்ணு. நான் சொல்ற மாதிரி செய்யணும்.” புருவத்தை உயர்த்தி சீரியஸாக சொல்ல 

 

என்ன டீ பண்ணப் போறே! எதுக்கு எல்லாரையும் வர சொல்றகுழப்பமானாள் ஜானகி.

 

இருந்தாலும் அவள் பேச்சுக்கு மதிப்புக்கு கொடுத்து அனைவரையும் ஓரிடத்தில் கூட்டினாள்.

 

டேய் கண்ணா, இங்க பாரு அந்த அரவிந்த நாம ட்ரீட் பண்ற விதமே வேறயா இருக்கணும். இப்போ நாம தான் கல்யாணத்துல சாப்பாடு பரிமாற போறோம் . சோ அப்பப்போ அவனை அசிங்க படுத்தனும்வைஷு கண்ணனின் தோள் மேல் ை போட்டுக் கொண்டு சொல்ல

 

அவனுக்கு சரி என மண்டை ஆட்டுவதைத் தவிர வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை

 

எதுக்கு டீ இதெல்லாம் பண்ற? அவன் உன்னை என்ன பண்ணான்?” ஜானகி புத்திசாலித்தனமாக கேட்டு வைக்க,

 

சொன்னதை செய் . இல்லனா நீ கேங் இருக்க மாட்டஅசால்டாக மிரட்ட,

 

பொடுசுகள் அனைத்தும் வைஷு புறம் நிற்க, ஜானகிக்கு மனம் இல்லாவிட்டாலும் அவளோடு நிற்க வேண்டிய சூழல்

 

சரியென ஒத்துக்கொண்டாள்.

 

அனைவரும் கலைந்து செல்ல எத்தனிக்க

அப்புறம் இன்னொரு விஷயம். எனக்குத் தெரியாம யாரும் அவன் கிட்ட அனாவசியமா பேச கூடாது. எது செஞ்சாலும் மொதல்ல என்கிட்டே சொல்லிட்டு பண்ணுங்க. நம்ம டார்கெட் அவனை அசிங்க படுத்தனும்அலெர்ட்டாக இருக்க வைத்தாள் ரவுடி பேபி

 

வாசலில் நிறுத்தி வைத்திருந்த வரவேற்கும் பொம்மைகள் கையில் குடம் வைத்திருக்க, அதிலிருந்து தண்ணீர் வர வைக்கச் சொல்லி அங்கிருந்த வேலையாட்களிடம் பணித்திருந்தார் சாரங்கன்

 

வைஷுவை அனுப்பி அதை சரி பார்க்கச் சொன்னார்

 

மாப்பிள்ளை வீட்டில் ரகுவிற்கு இப்போது விரதம் நடந்துகொண்டிருக்க, ரகு அர்விந்துக்கு போன் செய்தான்.

வந்துட்டேன் டா. டூ மினிட்ஸ்ல அங்க இருப்பேன்வண்டியில் விரைந்து வந்தான்

 

அந்த நேரம் வைஷுவும் தண்ணீர் பைப்பை கைவைத்துக் கொண்டு அந்த பொம்மையில் நீர் வைக்க தயாராக இருந்தாள்

 

இதுல தண்ணி ரொப்பிவிட்ருங்க மா. போதுமான அளவு வந்ததும் அது சர்குலேட் ஆகும். அப்பறம் தண்ணீர் தேவை இல்லை. எல்லாம் ரெடி பண்ணிட்டேன். சுச்சு போட்டா போதும்.” என அவன் சென்று விட

 

வைஷு ஆர்வமாக அந்த பொம்மை கையில் இருந்த குடத்தில் தண்ணீரை ஊற்றி ரொப்பிக் கொண்டிருந்தாள்

 

அந்த நேரம் தனது டூ வீலரில் ஸ்டைலாக மண்டபத்தின் உள்ளே நுழைந்தான் அரவிந்தன்.

 

இவனைக் கண்டதும் அவள் முகம் மாற

 

ஹே பேபி! என்னை பார்க்காம ஏங்கி போயிருப்பியே! என்னை வெல்கம் பண்ண வாசல்லயே நிக்கற. தேங்க்ஸ் டியர்என கையில் சில பொருட்களுடன் இறங்கி வர,

 

ஆமா உனக்கு பன்னீர் தெளிச்சு வரவேற்கத் தான் நான் இங்க நிக்கறேன்அழகு காட்டிச் சொல்ல,

 

நோ! பன்னீர் ப்ளீஸ்என அவள் செய்யும் வேலையை கவனிக்காமல் அவன் நிற்க

 

தண்ணீர் பைப்பை அப்படியே அவன் மேல் பாரபட்சமின்றி தெளித்தாள்

 

ஒரு நொடியில் தொப்பலாக நனைந்து விட்டான். சட்டென கையில் இருந்த பையை மட்டும் தூக்கிக் கொண்டு தண்ணீர் படாமல் பத்திர படுத்தி விட

 

ஹே! அறிவிருக்கா உனக்கு, கைல முக்கியமான திங்ஸ் இருக்கு. இப்போ போய்..” அவன் கடுப்பில் கத்தினாலும், அவள் சாதாரணமாக தண்ணீரை தெளித்த படி நிற்க, 

அவனது உடமைகள் நனையாமல் காப்பாற்றி அவன் மட்டும் அவள் தன்னிடம் செய்யும் சேட்டையை ரசித்தபடி நின்றான். 

 

உள்ளிருந்து வெளியே வந்தவர்கள், இவன் நனைந்திருப்பதையும் வைஷு கையில் தண்ணீர் பைப் இருப்பதையும் கண்டு அவள சந்தேகம் கொள்ள, 

 

அவர்கள் சுதாரிக்கும் முன்பே, “பரவால்ல தெரியாம தான தண்ணி பட்டுருச்சு. இட்ஸ் ஓகே” என திடீரென அவளை பார்த்து சொன்னான். அவள் அப்போது தான் அங்கு இருப்பவர்களை கவனித்து, அவனுக்குத் தோதாக தலையை மட்டும் ஆட்ட, 

 

“போப்பா போய் ட்ரெஸ்ஸ மாத்து. தொப்பமா நனஞ்சுட்டியே” வைஷுவையும் அவனையும் குறை சொல்லாமல் சாதாரணமாக விலகிச் சென்றனர்.

 

அவர்கள் சென்றதும், அவளை பார்த்து கண்ணடித்து விட்டு,

“ஐ சேவ்ட் யூ” என்று உள்ளே சென்றான்.

 

‘மொதல்ல காண்டானல எனக்கு அதுவே போதும்” ஜெயித்து விட்டதாக பெருமைபட்டுக் கொண்டு சென்றாள்.

அர்விந்த் பங்கஜம் கண்ணில் படும் முன் சென்று குளித்து உடை மாற்றி வந்தான்

அழகிய ஜிப்பாவும் ஜீன்சும் அணிந்து கொண்டு வெளியே வர, ஜானகி அவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்

 

அவனோ அன்று போல இல்லாமல் அவளைக் கண்டதும் சினேகமாக புன்னகைத்து சென்றான்

 

ஜானவாசத்திற்கு முன் நிச்சயம் செய்ய வேண்டும். ரகுவின் விரதம் செய்யும் சடங்கு முடிந்ததும், மதியம் ஆகிவிட, அனைவரும் சாப்பிடச் சென்றனர்

 

அனுவின் உறவினர்களே நின்று அனைவர்க்கும் உணவு பரிமாறினர். அப்போதும் அர்விந்துக்கு ஏதோ வேலை வந்துவிட, பங்கஜம் வேணு என பெரியவர்கள் உண்டு சென்ற பின் அவன் பந்திக்கு வந்தான்.

 

அப்போது அங்கே பரிமாறியது கண்ணன், வைஷு இன்னும் சில இளசுகள்  மட்டுமே

ரகு அரவிந்தைக் கை காட்டி , “வா டா. இங்க வந்து உட்காருதனக்கு எதிரே இருந்த இடத்தைக் காட்ட,

 

ரகுவிற்கு முன்னே அனைவரும் அவனுக்கு , பொரியல் அவியல் என அனைத்தும் பரிமாற, சாம்பார் சாதம் வரை ரசித்து உண்டான்

ரகு எழுந்து சென்ற பின், வைஷு அனைவருக்கும் சிக்னல் கொடுக்க

 

ஜாங்கிரி போடுங்கஅர்விந்த் கேட்டான்.

 

ஜாங்கிரியை எடுத்து வந்துவிட்டு, “மூன்றாவது டேபிளில் யாரோ கூப்புட்றாங்க பாரு கண்ணாஎன வைஷு குரல் கொடுக்க,

 

இதோ வரேன்என அங்கே ஓடினான்

 

அர்விந்த் ஜாங்கிரியை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அது வேறு திசையில் சென்றது. வரும் வரும் என அவனும் காத்திருந்தான். கண்ணனோ அப்படியே பக்கத்து இலை அடுத்த இலை என சென்று கொண்டிருந்தான்

 

அரவிந்தின் முகத்தை பார்த்துஅச்சச்சோ.. ப்ச்ச்என தள்ளி நின்று பரிதாபப் பட்டாள்

 

அது வரலைனா பரவால்லஎன மனதை தேற்றிக் கொண்டு அவன் பாயசம் கேட்க,

 

ஜானகி பாயச வாளியோடு வந்தாள். வைஷு அவளை பார்த்து , “பாயசம் அவன் இலைக்கு போச்சு உனக்கு பல்லு போய்டும் அப்டியே யுடர்ன் பண்ணி போய்டுஎன மிரட்டி அனுப்பினாள்.

 

ஜானகிக்கு மனமில்லை என்றாலும், வாளியை எடுத்துக் கொண்டு அவனுக்கு எதிரே சென்று விட்டு ,

 

ஜானு இங்க பாயசம்கண்ணன் குரல் கொடுக்க,

 

ஒரு நிமிஷம்என அங்கே ஓடினாள்.

 

ச்சே!” என வெறுத்தவன், அங்கே புடவையில் அழகாக நின்று தன்னைப் பார்த்து பரிதாபப் படும் வைஷுவைக் கண்டதும் புரிந்து கொண்டான்

 

உன் வேலை தான ரவுடி பேபி. இதை இப்போ சால்வ் பண்றேன்முனகியவன்

 

சத்தமாக, தனது பக்கத்தில் இருக்கும் பெரியவரைக் காட்டி

கண்ணன், இந்த மாமாவுக்கு ஜாங்கிரி வேணுமாம், இங்க வாங்கஎன்றான்

அவன் கத்தவும் அருகில் இருக்கும் இருவர், “இங்கயும் கொண்டாங்கோ

என்று கூற,

 

வைஷுவைப் பார்த்தான் கண்ணன். அவள் வேண்டாமென தலை அசைத்தும் நிறைய பேர் கேட்டதால், வேறு வழி இன்றி ஜாங்கிரி எடுத்துச் சென்றான்.

 

அவன் அருகில் வந்ததும், அவனைப் பிடித்து, “ரெண்டு ஜாங்கிரி வைஎன்று சொல்ல

கண்ணன் வைத்தான்.

 

வைஷு முறைக்க, அவளை பார்த்துக் கொண்டே ஜாங்கிரியில் இருக்கும் சக்கரை பாகைம்ம்ம்ம்ம்என உறிஞ்சி விட்டு கடித்து சுவைத்தான்

 

சூப்பர் ஜாங்கிரிஅவளை பார்த்துக் கூற,

 

அவன் தன்னை தான் சொல்கிறான் என்று நன்றாகவே புரிந்தது வைஷுவுக்கு. அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டாள்.

 

அவள் சென்றதும் ஜானகி அவனுக்கு பாயசம் ஊற்ற

என்ன பிளான்என்றான் அர்விந்த் .

என்ன கேக்கறேள்!?” ஜானகி பயந்து விழிக்க,

 

உங்க வைஷு பிளான்?” 

 

அதெல்லாம் ஒன்னுமில்லையே!” தடுமாறினாள்.

 

ஹே எனக்குத் தெரியும். சும்மா சொல்லுஅவளை போட்டு வாங்க

யார் கிட்டயும் சொல்லிடாதீங்கோ. முக்கியமா வைஷு கிட்ட. தெரிஞ்சா என்னை பின்னி எடுத்துடுவா” 

 

அதெல்லாம் உன்னை மாட்டிவிடமாட்டேன். நான் தனியா டீல் பண்ணிக்கறேன்என தைரியம் சொல்ல,

 

ஜானகி வைஷுவின் பிளானை உளறினாள்

 

தேங்க்ஸ்சிரித்துக் கொண்டு அர்விந்த் சொல்ல,

 

அவளும் வழிந்தாள்.

 

அதைக் காண முடியாமல் அர்விந்த் சென்றான். மாலையில் நிச்சயம் நடந்து கொண்டிருக்க, அர்விந்துக்கு வைஷுவிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து, அநியாயத்திற்கு அழகாகத் தெரிந்தாள்

 

அவனது பார்வை அவளைத் துளைக்க, வைஷுவால் வெகு நேரம் அதை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

 

என்ன இப்படி பாக்கறான்.’ என நினைத்தாலும் , அரை நொடி கூட அவன் பார்வை விலகவில்லை. அவளுக்கு அது அத்தனை பேர் முன்னிலையிலும் கூச்சத்தை அளிக்கவே செய்தது

 

அவனும் சந்தன நிறத்தில் குர்தா அணிந்து சந்தனம் நெற்றியில் வைத்துக் கொண்டு அனைவரையும் வசீகரித்தான்

 

அனுவும் ரகுவும் மிகவும் அழகிய ஜோடி என அனைவரும் பேசிக்கொண்டிருக்க, பங்கஜம் அரவிந்தை அழைத்து 

பொன்னாத்துல ஜானவாசத்துக்கு ரெடி பண்ண சொல்லுஎன்றதும்

 

நேரே வைஷுவிடம் வந்தான்.

 

அவள் அவன் நெருங்கி வந்ததும் அக்கம் பக்கம் பார்த்து அவனை என்ன என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.

உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வாஎன்கவும்,

 

ஹே.. முடியாது.. என்ன நெனச்சுட்டு இருக்க..” அவளுக்கு மனது வேறு நினைத்தது. அத்தனை நேரம் அவன் வீசிய பார்வை அவளை ஏதேதோ நினைக்க வைத்திருந்தது

 

இப்போ நீ வரியா இல்லையா.”

 

முடியாது. நீ கூப்பிட்டதும் வரத்துக்கு நான் ஆள் இல்ல

 

அப்போ இங்கயே…” என அரைகுறையாக நிறுத்த,

 

அவள் பதறிப் போனாள்

 

அப்போ வாஎன தனியே முன்னே சென்றான்.

 

 அவளும் தொடர்ந்து செல்ல

 

அவர்கள் தங்கி இருந்த அறைக்குள் சென்றான். அனைவரும் வெளியே இருப்பதால், யாரும் அங்கில்லை. வைஷு சற்று தயங்கி வாசலிலேயே  நிற்க,

 

உள்ள வாஅடிக்குரலில் ரகசியம் போல அழைக்க,

 

அவனை எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டு உள்ளே வந்தாள்

 

அவளை இழுத்து கதவை லேசாக மூடியவன்,

 

ஹே! என்ன பண்ற..” வைஷு பயந்து அவனைப் பார்க்க,

 

அவள் முகத்தை முழுதாக ஒரு நிமிடம் அருகில் நின்று ரசித்தான்

 

அவளுக்கு உடல் லேசாக பதறியது

 

தள்ளுஎன விலக நினைக்க,

 

உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” 

சற்று நின்றவள், “என்னமெலிதாக கேட்க,

 

ஒண்ணுமில்ல, ஜானவாசத்துக்கு எல்லாம் ரெடியான்னு அம்மா கேட்க சொன்னாஎன்று கேட்டுவிட,

 

தன்னை அவன் வேண்டுமென்றே பதறடித்தது புரிந்தது வைஷுவுக்கு

 

கோப மூச்சுடன் அவனை எரிக்கும் பார்வை பார்க்க ,

 

வேற என்ன நெனச்ச ரவுடி பேபி?” அருகில் வந்து அவளது ஜிமிக்கியை ஆட்டிவிட்டுக் கேட்க,

 

அவன் கையை தட்டி விட்டுநான் ஒன்னும் நினைக்கலஎன்று வெளியே சென்றாள்.

 

உன் மனசுல வேற இருக்கு. நோ” 

 

ஆமா. உன்னை எப்படி விரட்டறதுன்னு மட்டும் தான் இருக்கு” 

 

அது முடியாது, ஆல்ரெடி உன் மனசுக்குள்ள நான் வந்துட்டேன்

 

கனவு கூட காணாத” 

 

ம்ம். பாக்க தானே போறேன். இந்தக் கல்யாணம் முடியறதுக்குள்ள உன்னை சொல்ல வைக்கறேன்.” 

 

கோபத்தில் அங்கிருந்த ஆப்பிளை அவன் மேல் எடுத்து வீச, அதை லாவகமாக பிடித்துதேங்க்ஸ்என்றான்.

 

ச்சீஎன்று விட்டு அங்கிருந்து சென்றாள்.

 

ரகுவை கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஊர்வலமாக காரில் வைத்து மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். உறவினர்கள் சீர்களை எடுத்துக் கொண்டு கூட நடந்து வந்தனர். மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது.

                                                   12

 

ரகுவை கோவிலிலிருந்து காரில் அழைத்து வந்தனர். சொந்தங்கள் அனைத்தும் சீர் வரிசையுடன் பேசியபடி கூட நடந்து வரசிறு குழந்தைகளை அருகில் அமர வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரகு.

அர்விந்த் பக்கத்தில் சேர்ந்து நடந்து வந்தான்.

என்ன டா இது அரவிந்தா..இப்படி ஊர்வலம் போறோம் இந்தக் காலத்துல. ரோட்ல போறவன் எல்லாம் ஒரு மாதிரி பாக்கறான் டாஉட்கார முடியாமல் தவித்தபடி ரகு புலம்ப,

ஆடு தெரியுமா அதை பலி கொடுக்கறத்துக்கு முன்னாடி இப்படித் தான் மாலை போட்டு அழைச்சுட்டு போவாங்க.இப்போ அது உனக்கு நடக்குது.” நக்கலடிக்க,

டேய்! உனக்கு நடக்கும்ல அப்போ இதே டையலாக் திரும்பி வரும் பாத்துக்கோ!” எரிச்சலுற்றான்.

திரும்பி வந்தாலும் சரி நேரா வந்தாலும் சரி நமக்கு பொண்ணு குடுத்தா போதும்ங்கற கேடகரி நானுகாலரை அர்விந்த் தூக்கி விட்டுக் கொண்டான்.

தலையில் அடித்துக் கொண்டான் ரகு.

சரி சரிஎல்லாரும் பாக்கறா. இந்த மாதிரி பண்ணாதஅர்விந்த் முனுமுனுக்க, அவனையே வெகு நேரமாக கவனித்துக் கொண்டு வந்தாள் வைஷு.

பப்பி பாட்டியும் வைஷுவின் அருகில் வர,

பாட்டி என்ன ரொம்ப சாந்தமா இருக்க, அந்த பங்கஜம் ஓவர் சீன் போடறாளே! இத எடுத்து வைங்கோ அத செய்யுங்கோ ன்னு அதிகாரம் பண்றா. நீ பாத்துண்டு இருக்கமுகம் கடுகடுக்க வைஷு கேட்டாள்.

என்ன நெனச்சுண்டு இருக்க, நீ தான் அப்பப்ப பக்கத்துல இல்லாம போய்டற.நான் பதிலடி கொடுத்துண்டு தான் இருக்கேன்.”

நான் எங்கயும் போகல. இங்க தான் இருக்கேன்தூரத்தில் தெரிந்த அரவிந்தை முறைத்துக் கொண்டே வந்தாள். எங்கோ கூட்டத்தில் அவளை அந்தக் கணமே கண்டான் அர்விந்த்.

திங்க் ஆப் டெவில். கொரங்குமுனுமுனுத்தாள்.

நீ என்கூட இருந்து அந்த கூத்தெல்லாம் பாரு.” பப்பி பாட்டி சொல்ல,

சரி வா நாம இந்த ஊர்வலத்தோட போனா லேட் ஆகும். முன்னாடி போய்டுவோம்வைஷு பப்பியை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அரவிந்த் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

என்ன டா வைஷு உன்ன பார்த்துட்டு கெளம்பறா. அவ கிட்ட வம்பு பண்றியா?” ரகு சந்தேகமாகக் கேட்க,

யாரு நானாஅவ தான் ..” சொல்ல ஆரம்பித்தவன் வாயை மூடிக் கொண்டான்.

என்ன டா ? அவ ..?ஏதோ சொல்ல வந்த?” ரகு புருவத்தை சுருக்கி அவனிடம் கேட்க,

ஒண்ணுமில்ல..விடு

ஏதோ நடக்குது ஆனா சொல்ல மாட்டேங்கற

டேய் அர்விந்த்…” அருகில் ஒருவர் வந்து பேச,

அத்தோடு முடிந்தது அந்த உரையாடல். ரகுவுக்கும் அதன் பிறகு மண்டபம் நெருங்கி விடவேறொன்றும் கேட்க முடியவில்லை.

மண்டப வாசலில் அனு நின்றிருந்தாள். அவளையும் மாப்பிள்ளை முன் வர வைத்து இருவரையும் ஒன்றாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

                   

அனுவிற்கு கல்யாணப் பெண்ணின் நாணம் குடிகொள்ளஅவள் மேலும் அழகானாள்.

அந்த அழகு ரகுவை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போகச் செய்தது.

கழுத்தில் இருந்த மாலை நீண்டு தொங்கஅதன் மறைவில் அவளது கையைப் பிடித்தான்.

சும்மா இருங்கோஅனு அவன் கையை விலக்கப் பார்க்க,

ம்ம் சும்மா தான் இருக்கேன்.அதுனால தான் கையாவது பிடிச்சுக்கறேன்கிசுகிசுத்தான்.

கொழந்தேள் பக்கத்துல இருக்கா. பாத்தா என்ன நினைப்பா?”
இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கூட உன்னை விட நெறய விஷயம் தெரியும். அது உனக்குத் தெரியுமா?”

ஆமா. நேக்கு ஒன்னும் தெரியாது.” லேசாகச் சினுங்க,

அது தான் எனக்கு பிடிச்சிருக்குஅவளை பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்து, கையை இன்னும் இருக்கமாகப் பற்ற,

மீண்டும் கன்னம் சிவந்தாள் அனு.

 

****

 

ஜானவாசத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்க, பெரியவர்கள் ஆங்காங்கே அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருக்க,
பப்பி பாட்டியும் வச்சுவும் சீர் கொடுக்கும் பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்தனர்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு முதல் பூஜைக்கு வேண்டிய அனைத்தும் முன் வரிசையில் வைத்து , வெள்ளிக்குடம்,பித்தளைக் குடம் , தவலை , அண்டா குண்டா, வெண்கலப் பானை முதலியனவும் , வெள்ளித் தட்டு வெள்ளி லோட்டா , டபரா சொம்பு ஆகியவையும் அடக்கம். அத்துடன் சமைக்கும் பாத்திரங்கள், புதிய குக்கர், மிக்ஸி , கிரைண்டர் என சகலமும் புதிதாக வாங்கி வைத்திருந்தார் வச்சு.

 

பப்பி பாட்டி வரிசைப் படுத்தி வைக்க, வச்சு,
அம்மா நான் ய் அந்த மாமிய கூட்டிண்டு வந்து காட்டிடட்டுமா?” எனக் கேட்க,

இதோ பாரு டீ, அந்த மாமிய மாத்திரம் கூட்டிண்டு வராத, கூட அவா நாத்தனார் அப்புறம் இன்னொருத்தரையும் சேர்த்து அழைச்சுண்டு வாசொல்லியே அனுப்பினாள்.

போகும் அவசரத்தில் சரியாக காதில் வாங்காமல் வச்சு சென்று விட,
அங்கே பங்கஜம் தங்களுக்கென கொடுக்கப் பட்டிருந்த அறையில் மறுநாளுக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

மாமி!” வச்சு அழைத்தபடி உள்ளே செல்ல,

வாங்கோ! என்ன சமாச்சாரம்முகத்தில் மறந்தும் சிரிப்பில்லை.

சீர் பாத்திரம் மத்ததெல்லாம் வந்து பாக்கறேளா?!” பொறுமையாகக் கேட்டாள் வச்சு.

உடனே பங்கஜம் போட்டது போடப்படி எழுந்து வந்தாள். அந்த நேரம் அலமு உள்ளே வர,

அலமு நீ இங்க எல்லாத்தையும் எடுத்து வை. நான் மாமியோட செத்த போயிட்டு வரேன்பதிலுக்காக நிற்காமல் சென்று விட்டாள்.

பங்கஜமும் வச்சுவும் ஒன்றாக சீர் அடுக்கப்பட்ட அறைக்குச் செல்ல, தூரத்தில் நின்றிருந்த வைஷு அதைக் கண்டாள். வச்சுவை நிச்சயம் ஏதாவது சொல்வாள் பங்கஜம் என நினைத்து வைஷு அவர்களை நோக்கி வேகமாக ஓடிச் சென்றாள்.

அத்தனை நேரம் அவளை ஜாடையால் வம்பிழுத்துக் கொண்டிருந்த அர்விந்த் , ரகுவிடம் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு தனியாக மாட்டுவாளா என எழுந்து ஓடினான்.

வழியில் ரெண்டு மூன்று பேர் பேசப் பிடித்துக் கொள்ள , பங்கஜம் அவர்களிடம் நின்று நின்று பேசி வந்து கொண்டிருந்தாள். அதற்குள் வைஷு அவர்கள் செல்லுமிடத்தை கவனித்து அங்கே செல்ல, பப்பி பாட்டி மட்டும் சீர் பட்ஷணங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

என்ன பப்பி, அம்மா அந்த அல்டாப்பிய கூட்டிண்டு வந்ததுண்டு இருக்கா?” ரகசியமாக கேட்க,

என்னது? அவளை மட்டுமா கூட்டிண்டு வரா? இன்னும் அவா ஆத்து மனுஷா ரெண்டு பேரை சேர்த்து கூட்டிண்டு வான்னு சொல்லிருந்தேன். சீர் காட்ட வேண்டாமா? இவ மட்டும் வந்தா அது இல்ல இது இல்லன்னு குறை சொல்லுவா. அதுனால சொன்னேன். உங்க அம்மா காதுல வாங்காம அவளை மட்டும் அழைச்சுண்டு வராளே, கடவுளே!”

இரு நான் போய் வேற யாரையாவது கூட்டிண்டு வரேன்அவள் அவசரமாக வெளியேறினாள்.

அதற்குள் வச்சு பங்கஜத்துடன் உள்ளே நுழைய, பப்பி பாட்டி அனைத்தையும் காட்டினாள்.”இதென்ன குடம் சின்னதா இருக்கு? சாம்பார் வாளியை காணுமே!” இடுப்பில் வைத்துக் கொண்டு பங்கஜம் சொல்ல ஆரம்பிக்க,

உங்காத்துல இன்னும் குடத்துல தான் தண்ணி புடிச்சு வெச்சுக்கறேளா?” பப்பி நக்கலாக கேட்டாள்.

இல்லையே! எங்காத்துல ஆர் போட்ருக்கோம். பியூரிஃபைட் வாட்டர்

அப்பறம் என்னத்துக்கு குடம். ஏதோ சாஸ்ரத்துக்கு வெச்சா போறாதோ!” அவளை வைத்தே மடக்கினாள் பாட்டி.

இந்தக் காலத்துல யார் குடம் யூஸ் பண்றா..” தன போக்கில் பேசிக்கொண்டார்.பங்கஜத்திற்கு கோபம் வரவே செய்தது. இருந்தாலும் மற்ற விஷயங்களைப் பார்க்க முயன்றாள்.

வெளியே வைஷ்ணவி ரகுவின் அத்தை அலமுவை தேடச் சென்றாள். அவள் அப்போது தான் அறையை பூட்டிக் கொண்டு வெளியே சென்றிருந்தாள். வேறு யாரும் கிடைக்கிறார்களா என்று பார்க்க, வேறு எவரையும் வைஷுவுக்குத் தெரியவில்லை.

அவள் அங்குமிங்கும் சுற்றுவதைப் பார்த்த அர்விந்த் , என்ன தேடுகிறாள் என்று அவளிடமே கேட்க வந்தான்.

என்ன மேடம் தேடறீங்க?” பின்னால் வந்து நின்றான்.

கடுப்பானாலும் அந்த நேரம் அவனைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது என்பதை அறிந்தாள். உடனே அவனிடம், “உங்க நெருங்கின சொந்தக்காரா யாரையாவது கூப்ட முடியுமா?” முகத்தை கெத்தாகவே வைத்துக் கொண்டு கேட்டாள்.

எதுக்கு? என்ன விஷயம் சொல்லு?” விளையாடாமல் அவனும் கேட்க,

இவனிடமே இவன் அம்மாவைப் பற்றி எப்படி சொல்வதுஎன தயங்கினாள். பிறகு இவனிடம் சொன்னால் என்ன என்று மறுபுறம் தோன்ற,

உங்க அம்மாவ சீர் பாத்திரம் காட்ட கூப்டோம். அதான் கூட வேற ஒருத்தர் இருக்கலாம்னு பாட்டி கூட்டிண்டு வரச் சொன்னா!” ஒருவழியாக சொல்லிவிட்டாள்.

என்ன! இதெல்லாம் எனக்கும் புடிக்காது ரகுக்கும் பிடிக்காது. எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? ” அவன் கோபமாக கேட்டான்.

முதல் முறையாக அவன் பேசியதைக் கேட்டு, ஒரு நல்ல அபிப்பிராயம் அவன் மேல் தோன்றியது வைஷுவுக்கு. இருந்தும்இப்போது ஆள் வேண்டுமே! யாராவது வரச் சொல்லுங்கஎன்றாள்.

இப்போ தான சொன்னேன். நானே வரேன் வா!” என அவளுக்கு முன்னால் விறு விறுவென நடந்தான்.

ஓட்டமும் நடையுமா அவன் பின்னே சென்றாள்

நீ இங்கயே இருஅவளை அங்கேயே நிறுத்தினான்.
ஏன்?” கோபம் வர,

சொன்னா கேளு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி. நீ வந்தா எங்க அம்மாக்கு டவுட் வராதா! ” ஒரே வரியில் அவளை அடக்கி விட்டான்.

அவளும் வாசலில் நின்றாள்.

அவன் அந்த அறையை அடைந்ததும் , வச்சுவா பாஎன்றாள்.

பங்கஜம் சரியாகஎன்ன ஒரு சொம்பு வெச்சிருக்கேள். சாந்தி முகூர்த்தத்துக்கு ஒன்னு தனியா வாங்க வேண்டாமோ! “

அதுக்கும் வாங்கிருக்கோம். இதோ இருக்கு பாருங்கோ!” வச்சு காட்ட,
இது நான் குழந்தைக்கு போட்டுற பால் கிண்ணின்னு நெனச்சேன்.”நக்கலடிக்க,

இதைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அர்விந்த்.
என்ன மா பண்ணிண்டு இருக்க?” குரல் அழுத்தமாக ஒலித்தது.

பங்கஜம் உள்ளே அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

சீர் பாத்திரம் டா கிச்சா. இது பாருஎன பேச்சை மாற்றி சாதாரணமாக இருக்க முயல,

அவருக்கு அருகில் சென்று , “இது ரகுக்கு தெரியுமா?” மெதுவாகக் கேட்க,

டேய் என்ன டா. நானா ஒன்னும் கேட்கல. அவளா காட்டறா அதை தான் பாத்தேன்அவளும் முணுமுணுக்க

நீ பாக்க வந்த மாதிரி தெரியலையே! இது சரி இல்ல அது சரி இல்லன்னு சொல்லிண்டு இருக்க..” பல்கலைக் கடித்துக் கொண்டு முறைத்தான் .

இப்போ என்ன டா பண்ண சொல்றஅதற்கு மேல் மகனிடம் மல்லுக்கு நிற்க முடியாமல் சொல்ல,

எல்லாம் நன்னா இருக்குன்னு சொல்லிட்டு கெளம்பு

சேரி டா. உங்களுக்கெல்லாம் நல்லது பண்ணத் தான்..”

கெளம்புறியாமுடித்துவிட்டான்.

பப்பியிடம் திரும்பி,

எல்லாம் நன்னா இருக்கு மாமி. உங்க பொண்ணுக்கு செய்யறேள். நான் என்னத்த சொல்லிட போறேன். வரேன் மாமி. காத்தால முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடும். செத்த கண்ண மூடி எழுந்தா தான் சௌரியமா இருக்கும். வரேன்என அவசரமாக சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவள் என்றதும் அர்விந்த் பப்பியிடமும் வச்சுவிடமும்,

நீங்க எங்க அம்மா பேசினதை மனசுல வெச்சுக்காதீங்கோ. எதுவா இருந்தாலும் என்கிட்டே நீங்க தாராளமா சொல்லலாம். என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கோ.” சிரித்துக் கொண்டே கிளம்பினான்.

பப்பிக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. வச்சு ஏற்கனவே அவனை நல்ல பையன் என செர்டிபிகட் கொடுத்தவள் தான்.

இவை அனைத்தையும் வாசலில் நின்று கேட்ட வைஷு தான் அவனது இந்த முகத்தைக் கண்டு அசந்து நின்று விட்டாள்.

அர்விந்துக்கு இப்படி ஒரு குணம் உண்டா!

வைஷுவுக்கு அவனை புதியவனாக பார்க்க தோன்றியது. வெளியே அவன் வந்ததும் நன்றி சொல்ல நினைத்தவள் அவன் அருகில் வர மீண்டும் படபடப்புடன் நின்றாள்.

அவன்தேங்க்ஸ் பேபிஎன்றுவிட்டு கண்ணசைவில் விடை பெற்றுச் சென்றான்.

                             

                                                            13

 

அர்விந்த் வைஷுவைக் கடந்து செல்ல, சட்டென அவன் பின்னே சென்றாள்.
மண்டப வாசலில் சென்று தனது வண்டியின் மேல் சாய்ந்து நிற்க, மெதுவாக அவனிடம் வந்தாள் வைஷு.

அவளைக் கண்டதும், “ஹே என்ன?” என எழுந்து வந்தான். மீண்டும் ஏதாவது பிரச்சனையோ என நினைத்தான்.

நீ எதுக்கு தேங்க்ஸ் சொன்ன?” அவனை ஆழ்ந்த பார்வை பார்க்க,

அதை கேட்க தான் வந்தியா? எங்க அம்மா பண்ண இருந்த தப்ப என்கிட்ட சொல்லி பண்ண விடாம செஞ்சதுக்குஇயல்பாக சொல்லிவிட்டான்.

யாரா இருந்தாலும் அவங்க அம்மாவை சொன்ன கோபம் வரும். ஆனா?” அவளும் மனதிலிருந்ததை சொல்ல,

இங்க பாரு வைஷு. எனக்கு அம்மா அப்பான்னு பார்க்க தெரியாது. தப்பு யார் பண்ணாலும் தப்பு தான். பார்ஷியாலிட்டி பார்த்து நடந்துக்க எனக்கு பிடிக்காது. தட்ஸ் கே !” தோளைக் குலுக்கிக் கொண்டான்.

அவனது கே என்ற வார்த்தையை கிண்டல் செய்ய அப்போது அவளுக்கு தோணவே இல்லை.

ஏதோ நினைவில் திரும்பிச் சென்றாள். அவளுக்கு ஒரு அடி முன்னே சென்று அவளை நிறுத்தியவன்,

ரொம்ப யோசிக்காத.. நான் நல்லவன் தான். ஆனா உன்கிட்ட மட்டும் ரொம்ப கெட்டவனா நடந்துக்க தோணுது. எப்படி இருக்கணும்னு நீயே சொல்லு.. ” அவளுக்கு விளங்கும் முன்னர் தன் வண்டியில் கிளம்பிவிட்டான்.

இப்போ என்ன சொன்னான்? ப்ரொபோஸ் பண்ணானா!?’ அதிர்ச்சியில் இருந்தாள்.

அதற்குள் பப்பி பாட்டி அவளைத் தேடித் கொண்டு வர,
வைஷு இந்த அர்விந்த் ரொம்ப நல்ல பையனா இருக்கான் டீ! எவ்ளோ அழகா பேசி அவன் அம்மாவை கூட்டிண்டு போனான் பாத்தியா?”

அவனுக்கு பேச்சுல என்ன குறைச்சல்?” பாட்டிக்கு நேரே கடுகடுத்தாலும், மனதில் அவன் சொன்னது இனித்தது.

இருந்தாலும் அதை அவளே ஏற்றுக்கொண்டு விட முடியவில்லை. காரணம் அவள் வைஷு.

ஏன் டீ இப்படி சொல்ற.. உனக்கு அவனை பிடிச்சுதுன்னா அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன் பாத்துக்கோபப்பி அனாயாசமாக கூற,

வைஷு அதிர்வைக் கண்களில் காட்டினாள்.
பப்பி உனக்கு சில விஷயம் சொன்னா புரியாது, வா சாப்பிட போலாம்என இழுத்துச் சென்றாள்.

பந்தியில் சம்மந்தி வீட்டார் முதலில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்,
ரகு ஏற்கனவே உண்டுவிட்டு காலையில் சீக்கிரம் எழ வேண்டும் படுக்கச் சென்று விட்டான். அரவிந்தும் இல்லாததால், பங்கஜம் ந்தியில் களை கட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் நாத்தனார் அருகில் இருந்து கொண்டு, “நன்னா இருக்கு மன்னி சாப்பாடு, ஆனா நீங்க கெத்த விடாதீங்கோஎன உசுப்பேற்ற,

அங்கே பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அனுவின் உறவினர்கள் தான்.
ஜானவாச சாப்பாடு, என்ன இவ்வளோ சிம்பிளா பண்ணிட்டேள்.?” ஆரம்பித்தாள் பங்கஜம்.

அப்போதே அவள் இரண்டு முறை சாம்பார் , ரசம் , பாயசம் என வெளுத்துக்கொண்டு தான் இருந்தாள்.

என்ன வேணும் மாமி சொல்லுங்கோபொறுமையாக ஒருவர் வந்து கேட்க,
இஞ்சி ரசம் பண்ணிருக்கேளா?”
இப்போ கப் கொடுத்தேனே மாமி! இன்னொரு கப் தரட்டுமா?” பொறுமையாக அவர் கேட்க,
இப்போ தான் குடிச்சேனா! ஐயோ மறந்துட்டேன்!’ மனம் பதற,
ஆஹ்.. வேண்டாம். மாவடு கொண்டுவாங்கோ. தயிர் சாதத்துக்குஅவரை அனுப்ப,

இதோ வரேன்என ஓடினார்.

மன்னி, பாத்து பேசுங்கோ, யாரவது வேணும்னே பன்றோம்னு கண்டு பிடிச்சுட போறாஅலமு காது கடிக்க,

உன்னால வந்தது. இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்டுட்டு போயிருப்பேனோல்யோதாடையை தோளில் இடித்துக் கொண்டு தயிர் சாதம் உண்டாள்.
பின்பு மீண்டும் மெதுவாக, அக்காரவடிசலும் ஜாங்கிரியும் ஒரு முறை வாங்கி உண்டு விட்டுத் தான் பந்தியிலிருந்து எழுந்தாள். இவை அனைத்தையும் பப்பியும் வைஷுவும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்து சிரித்துக் கொண்டு தான் இருந்தனர்.

என்கிட்டே நீ வசமா மாட்டிக்கிட்ட பங்கு..” வைஷு பப்பியின் முன் சொல்ல,
இருவரும் சிரித்துக் கொண்டு அடுத்த பந்தியில் அமர்ந்தனர்.

அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
ரகுவிற்கு உச்சந்தலையில் ண்ணெய் வைத்து, காலுக்கு நலுங்கு வைத்து

அவனை விரதம் செய்ய தயார் படுத்தினர். பங்கஜமும் வேணுவும் மேடையில் அவனோடு இருக்க, அரவிந்தும் தயாராக வந்தான்.
பட்டு வேட்டியும் வெண்பட்டு சட்டையும் அணிந்து வந்தவனை ரசிக்காதவர் இல்லை.
அவனுடைய உடல் கட்டும் அதற்குப் பொருந்திய சட்டையும் அவனை வசீகரனாகக் காட்ட,
அங்கே அவனுக்கு சற்றும் குறைவில்லாமல் மாம்பழ நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து வந்தாள் வைஷு.

மாப்பிளை வீட்டாரிடம் கூரைப் புடவையின் பிளவுசை கொடுக்க வந்தவள், அறையின் வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே எத்தனிக்க, அதே நேரம் அனைவரும் சென்றதும் கதவை சாத்திக் கொண்டு செல்ல உள்ளிருந்த அர்விந்த் கதவை வேகமாக திறக்க , ஒரே இழுப்பில் அவன் மேல் சரிந்தாள்.

அவனும் அவளை எதிர்ப்பாராததால் சற்று தடுமாற, அவள் விழுந்த வேகத்தில் அவளின் இடையை சுற்றி பிடித்துக் கொண்டான். இருவரும் கீழே விழுந்து புரண்டனர்.
அவளது புடவை அவன் பிடியில் நெகிழ்ந்துவிட , அவன் மேல் மொத்தமாக கிடந்தாள்.

அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி . அவளோ பதட்டமாக எழ முயன்று புடவை தடுக்க மேலும் அவன் மேலே விழ,

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது. இருந்தாலும் அந்த இடத்தில் சிரித்தால் அவள் இன்னும் கோபப்டுவாள் என்று அமைதியாக இருந்தான்.

வைஷு பின்பு அவன் மார்பில் கை ஊன்றித் தான் எழ வேண்டி இருந்தது. அவளது தோளை பிடித்து உதவியவன், அவள் எழுந்து நின்றதும், அவள் பதட்டத்தை உணர்ந்து, அந்த நொடியை இலகுவாக்க முயன்றான்.

அடி படலயே.. ?” அக்கறையுடன் அவளைப் பார்க்க,

இல்லஅவன் முகத்தைப் பார்த்துக் சொன்னாள். ஒரு வேளை அவன் கிண்டல் செய்து கேட்கிறானோ என நினைத்து அவனைப் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த உண்மையான அக்கறை அவனைப் பற்றிய அந்த சிந்தனையை மாற்றியது.

எதுக்கு அவ்ளோ வேகமா வந்த?”

ம்ம் வேண்டுதல்.. கூரப்புடவையோட இந்த ப்ளவுஸ் வைக்கணும். அது தான் குடுக்க வந்தேன். எங்க வெச்சிருக்கீங்க?” அவனை தள்ளிவிட்டுக் கொண்டு உள்ளே சென்று தேடினாள்.

அந்த சிறிய அறையில் பொருட்கள் வேறு ஆங்காங்கே சிதறிக் கிடக்க, தாவி தாவி அவள் தேடிச் சென்று, புடவையோடு வைத்துவிட்டு வந்தாள்.’

அவள் வரும் வரை அங்கேயே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாத்தியார் கேட்கும் போது கொண்டு வரணும்உத்தரவிட,

அழகாக புன்னகைத்து சலாம் செய்தான்.

அந்த நொடி அவன் அத்தனை அழகாக அவள் கண்களில் விழுந்தான். அவன் மேல் இருந்த வஞ்சம் மறைந்து அவன் அழகும் குணமும் அவள் மனதை நிறைத்தது.

வேட்டி சட்டையில் வேறு அவளை ஏற்கனவே கவர்ந்து விட்டான்.

முகத்தை சரி செய்து கொண்டு,

வழி விடுங்கஎன்றாள்.

அவள் கையைப் பிடித்து , “ ஹே ரவுடி பேபி, எப்போ பதில் சொல்வ?”

ம்ம்ம் நான் தான் ரவுடியாச்சே .. ரவுடித்தனமா சீக்கிரம் பதில் சொல்றேன். மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பு.” கடுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் பதிலில் அவனுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டான்.

மாப்பிள்ளையின் விரதம் முடிந்ததும் , விரத பட்சணங்களை பெண் வீட்டார் வரிசையில் வந்து வைத்தனர். வைத்தியார் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்து கொண்டிருந்தார்.

மாப்ளைக்கும் துணை மாப்பிள்ளைக்கும் இலை போடுங்கோ. பொண்ணோட அம்மா வாங்கோ! மாபிள்ளைக்கு மை வைங்கோ

வச்சு சிறிய வெள்ளி டப்பாவில் மை கொண்டு வந்து ரகுவிற்கு கண்ணில் மை தீட்டி , பின்பு அவனுக்கு வாழை இலையில் டிப்பன் பரிமாறினாள்.

துணை மாப்பிள்ளைக்கு அருகிலேயே நின்ற அரவிந்தை அமரச் சொல்ல,

வேறு வழியின்றி அவனும் அமர்ந்தான்.

இருவருக்கும் உணவிட்டு , பின்பு மாப்பிள்ளையை காசி யாத்திரைக்கு அனுப்பினார் வாத்தியார். தோளில் பையுடன் அதில் சுந்தர காண