Thoda Thoda Thodarkathai–EPI 12

280654150_1081598149094185_3262610077133346742_n-38fe5f58

அத்தியாயம் 12

Takahiro Shiraishi—தகாஹீரோ ஷீராய்ஷி எனும் ஜப்பானிய ஆடவன் சுமார் ஒன்பது பேரைக் கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவனை ‘ட்வீட்டர் கில்லர்’ எனவும் அழைக்கிறார்கள். ட்வீட்டரில் தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் ஆட்களை டார்கேட் செய்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களோடு சேர்ந்து சாகப் போவதாகக் கூறி இந்தக் கொலைகளை செய்திருக்கிறான் இவன். காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடி இவனது வீட்டைச் சோதனை செய்த பொழுது, பலரின் உடல் அங்கங்கள் அவன் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.  ஜப்பானிய நீதிமன்றம் இவனுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தது.

 

“Her coming was my hope each day,
Her parting was my pain;
The chance that did her steps delay
Was ice in every vein.”

கண் மூடி, நிறுத்தி, நிதானமாய் ப்ரோபஸர் மணி அனுபவித்துச் சொன்ன அவ்வரிகளைக் கேட்ட மாணவர் கூட்டம் ஒரு மோன நிலையில் இருந்தது.

என்னவோ அவர் கதை சொல்லும் பொழுதுகள் எல்லாம் மிக இனிமையான பொழுதுகளாய் தோன்றும் சஞ்சீவினிக்கு. கண் இமைக்காமல் அவரையேப் பார்த்திருந்தாள் இவள்.

கண்களை மெல்லத் திறந்தவரின் பார்வை, தன் முன்னே அமர்ந்திருந்த மாணவர்களை சுற்றி வந்து வினியின் மேல் நங்கூரம் இட்டு நின்றது. சில நொடிகள், அவரது பார்வை இவளது பார்வையைத் தாங்கி நிற்க, இவளுக்கு உள்ளுக்குள் சுகமாய் ஏதோ பரவியது. முகமெல்லாம் சூடாகிப் போக, நெஞ்சு படபடவெனத் துடிக்க, கை ரோமங்கள் குத்திட்டு நிற்க, உடம்பு ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.  

மெல்லிய புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக் கொண்ட ப்ரோபெஸர் மணி,

“டியர் ஸ்டூடண்ட்ஸ்! இந்த ‘கோட்’, எந்த புத்தகத்தில் வந்ததுனு யாருக்காச்சும் தெரியுமா?” எனக் கேட்டார்.

சஞ்சீவினி சேர்ந்திருந்த காலேஜில் புறப்பாட நடவடிக்கைகளில் கலந்துக் கொள்வது கட்டாயமான ஒன்றாக இருந்தது. ஆங்கிலத்தின் மேல் இவளுக்கு ஏற்கனவே கிறுக்கு இருந்தது. இப்பொழுது இங்கிலிஸ் கிளப்பை வழி நடத்தும் ப்ரோபெஸர் மணியின் மீது புதிதாய் கிறுக்குப் பிடித்திருந்தது. அதனாலேயே இந்த கிளப்பில் வந்து சேர்ந்திருந்தாள். அவளைப் போலவே பல பெண்கள் அந்த கிளப்பில் உறுப்பினராக இணைந்திருந்தனர்.

மணியை மோதிய தினத்தில் அவர் மேல் வந்த க்ரஷ் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, குறையவேயில்லை வினிக்கு. அவர் முழு பெயர் சுப்ரமணி. பின் நாற்பதுகளில் இருக்கும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. தனியாய்தான் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறார் என்பது வரை கண்டுப்பிடித்திருந்தாள் வினி.   

“கமான் கைய்ஸ்!! யாருக்கும் தெரியலயா?” எனக் கேட்ட மணி,

“சஞ்சீவினி!!!” என அழைத்தார்.

பட்டென எழுந்து நின்றவள்,

“எஸ் சார்!” என்றாள்.

“அந்த ‘கோட்’ எந்த நாவல்ல வந்ததுன்னு உனக்கு தெரியுமாம்மா?”

ஆமெனத் தலையாட்டினாள் இவள்.

“குட்! கம் இன் ஃராண்ட் மை கேர்ள்” என அவளைத் தன்னருகே வரச் சொல்லி அழைத்தார் மணி.

எழுந்து மெல்ல நடந்து போய் அவர் அருகே நின்றாள் வினி. அவர் மேல் வந்த பெர்பியும் கலந்த வியர்வை வாசம் இவளை அப்படியே மயக்கியது.

“சொல்லுமா வினி”

தொண்டையை செறுமியவள்,

“இந்த கோட்  ஜேன் ஏர்(Jane Eyre)னு ஒரு புக்ல வந்தது. அதை எழுதனது சார்லேட் ப்ரோண்ட்டி(Charlotte Bronte)ங்கற ஆங்கில பெண் எழுத்தாளர். இந்த புக் 1847ல பப்ளிஷ் ஆனது”

“வெரி வெல்டன் சஞ்சீவினி!” என அவளது கையைப் பிடித்துக் குலுக்கிய மணி, அவளது பெருவிரலை மெல்ல வருடிக் கொடுத்த பின் தன் கரத்தைச் சட்டென விலக்கிக் கொண்டார்.

அந்த மெல்லியத் தீண்டல் இவளது அடி வயிறு வரை தீ மூட்டியது. மயக்கத்திலேயே மெல்ல நடந்து வந்து தனதிருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் பெண்.

“இந்த வரிகள் அந்தக் கதையின் நாயகன் பாடறது போலவும், நாயகி ஜென் இசைக்கருவி வாசிக்கறது போலவும் வரும். இந்த வரிகளுக்கான அர்த்தம் யாருக்காவது தெரியுதா?”

யாருமே வாயைத் திறக்கவில்லை. பேரமைதி அங்கே! மேசை மேல் இருந்த மாணவர் பெயர் லிஸ்டை எடுத்துப் பார்த்தபடியே,

“கனிகா! ட்ரை செய்யறியாம்மா?” எனக் கேட்டார் மணி.

“எனக்குத் தெரியல சார்”

“சரி! வேற யாராவது சொல்லுங்கப்பா! ரொம்ப ஈசிதானே!”

அதற்கும் அமைதியே பதிலாய் வந்தது.

“ஒரு மொழிய கத்துக்கறப்போ முதல்ல பயத்த விடனும்! தப்பா பேசிடுவோமோ, தப்பா எழுதிடுவோமோன்னு பயந்துட்டே இருந்தா சந்தோஷமா கத்துக்க முடியாது! கணக்கு மாதிரி, ரெண்டையும் ரெண்டையும் கூட்டுனா கண்டிப்பா நாலுதான் வரும்னு சொல்ற கான்சேப்ட்லாம் மொழிக்கு ஒத்துவராது! மொழிய மூளையால படிக்கக் கூடாது! மனசால படிக்கனும்!“ என மென்மையாக, புன்னகையுடன் சொன்னவரைப் பரவசமாகப் பார்த்திருந்தனர் மாணாக்கார்கள்.

“இந்த பாடல் வரில நாயகன்,

‘தினம் அவள் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கிறேன்

எனை அவள் நீங்கும் போது வலி கொள்கிறது என் இதயம்

அவள் வருகை தாமதமாகும் நேரமெல்லாம் என் நாடி நரம்புகள் பயத்தில் சில்லிட்டுப் போகின்றன’ன்னு சொல்றான். காதல் ஒரு மனுஷன எப்படிலாம் புலம்ப விடுது பார்த்தீங்களா!” எனக் கேட்டவர், தனது கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார்.

“ஒகே ஸ்டூடன்ட்ஸ்! லிஸ்ட்ல உள்ளவங்கள க்ரூப் வாரியா பிரிக்கப் போறேன்! இனிமே க்ரூப் டிஸ்கஷன்ஸ், க்ரூப் ப்ரோஜெக்ட்னு நெறைய வரும். க்ரூப் 1..” என ஆரம்பித்தவர்,

“க்ரூப் ஃபைவ் மெம்பர்ஸ் வுட் பீ சஞ்சீவினி, கனிகா, ஹேமா, சரண்யா அண்ட் மதுமிதா” என முடித்தார்.

இப்படிதான் வேறு வேறு டிபார்ட்மெண்டில் இருந்த ஐவரும் ஆங்கில கிளப் வழி ஒன்றாய் இணைந்தார்கள்.

அப்படியே இரு மாதங்கள் கடந்திருந்தன. வினி ஒழுங்காகப் படித்தாளோ இல்லையோ ப்ரோபெஸர் மணியை நன்றாக சைட்டடித்தாள். அவளது ஆசைக்கு அவளது கேங்கில் இருந்த மற்ற நால்வரும் ஒத்தூதினார்கள்.

“இன்னிக்கு மிஸ்டர் பெல் கண்ணெல்லாம் உன் மேலதான்டி வினி!” என்பாள் சரண்யா.

இவளுக்கு ஒரேடியாய் பூரித்துப் போய் விடும்.

“நானும்தான்டி உன்னைப் போல அழகா வெள்ளையா இருக்கேன்! ஆனா என்னைக் கடைக் கண்ணாலக் கூட உன் பெல் பார்க்க மாட்டறாருடி!” எனப் பொறாமைப் படுவாள் மதுமிதா.

இவளுக்குப் பெருமிதமாய் இருக்கும். மிதப்பாகத் தோழிகளைப் பார்த்து வைப்பாள்.

அவரைப் பற்றிப் பேசிப் பேசி இவள் உள்ளத்தில் காதல் தீயை வளர்த்து விட்டனர் மற்ற நால்வரும்.

பெரும்பாலான மாணவிகளுக்கு, அழகான, நெர்ட் என அழைக்கப்படும் படிப்பாளியான ப்ரோபெஸர்களைப் பார்க்கும் போது க்ரஷ் வருவதென்பது மிக மிக இயல்பான ஒன்று. நாளடைவில் அது அப்படியே வந்தது போல மறைந்தும் போய்விடும். பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாகக் கூட இருக்கும். ஆனால் அந்த பதின்ம வயதின் ஹார்மோன்களின் ஆட்டத்திலிருந்து எந்த சேதாரமும் இல்லாமல் மீண்டு வருபவர்களால்தான் பழைய நினைவுகளை எண்ணிச் சிரிக்க முடியும். அதே வயது கோளாறினால் ப்ரோபெஸருக்கு லவ் லெட்டர் கொடுத்தவர்கள், வேறு வித அசம்பாவிதங்களில் மாட்டிக் கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஆராத ரணமாய் வாழ்நாள் முழுக்க மனதை அரித்துக் கொண்டே இருக்கும்.

அன்றைய சனிக்கிழமை, ஆங்கில கிளப்பின் ஆக்டிவிட்டிஸ் முடிந்ததும் மாணவர்கள் எல்லோரும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

“சஞ்சீவினி” என இவளை மட்டும் அழைத்தார் மணி.

“எஸ் சார்”

“ப்ளிஸ் ஸ்டே பேக்! அடுத்த வாரத்தோட கோயர்(choir) ப்ரீபெரெஷன் பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் செய்யனும்” என்றார் அவர்.

சரியெனத் தலையாட்டியவள், கோயருக்காக இவள் செய்திருந்த ஏற்பாடுகள் அடங்கிய ஃபைலை எடுத்துக் கொண்டு போய் அவர் டேபிளில் வைத்தாள். வெளியே இடியுடன் கூடிய மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது.

“டேக் யுவர் சீட் டியர்” என்ற மணி, கதவுகளை அடைத்து விட்டு வந்தார்.

இவள் கேள்வியாகப் பார்க்க,

“சாரல் அடிக்குதுமா” என்றவரின் குரலில் ஒரு குழைவு வந்திருந்தது.

வினியின் பின்னால் வந்து நின்ற மணி, குனிந்து அவள் முன்னே வைத்திருந்த ப்ரிண்ட் அவுட்டைப் பார்த்தார். அவரது வாசம் இவளது மூக்கைத் துளைத்தது. அவரது மூச்சுக் காற்று உஷ்ணமாய் இவள் கன்னம் தீண்டியது. தொடைகளுக்கு நடுவே என்னவோ செய்தது பெண்ணுக்கு. இத்தனை நாட்களாய் அனுபவித்திராத புது வித இம்சையாய் இருந்தது. மேனி நடுங்க, மூச்செடுக்க மறந்தவளாய் சிலையென அமர்ந்திருந்தாள் சஞ்சீவினி.

அவளது காதோரம் சொருகி இருந்த ரோஜா மலரை அவர் மெல்லத் தீண்ட, இவளுக்கு மேனி சிலிர்த்தது.

“சஞ்சீவினி”

அவளது பெயரை அவர் வாய் வழி கேட்கையில் ஜிவ்வென இருந்தது வினிக்கு.

“ஹ்ம்ம்” வெறும் காற்று மட்டும்தான் வந்தது இவளுக்கு.

“எனக்குப் பிடிச்ச ரோஜாவ எனக்காக வச்சிட்டு வந்திருக்க!!” என்றவரின் விரல் அவளது காதைத் தீண்டியது.

 “A rose by any other name would smell as sweet! யாரு சொன்னது இது?” எனக் கேட்டபடியே, அவளது கன்னத்தைத் தடவினார் மணி.

“ஷே…ஷேக்ஸ்பியர்!” எனத் திக்கினாள் வினி.

“கரேக்ட்!” எனக் குதூகலித்தவர், பட்டென அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.

 இவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.

“இந்த அழகும் அதோட சேர்ந்த அறிவும் என்னை மயக்குது சஞ்சீவினி! தினம் தினம் உன்னை நெனைச்சு என்னால தூங்க முடியல! உடம்பு முறுக்கிப் போடுது! உனக்குப் புரியுதாடாமா?” என்றவர் நடுங்கிக் கொண்டிருந்தவளைத் தன் வயிற்றோடு கட்டிக் கொண்டார்.

“புடிக்குது! ரொம்ப ரொம்ப புடிக்குது உன்னை! எனக்கு இந்த அழகும் அறிவும் வேணும்! எனக்கே எனக்கா வேணும்!” என்றவரின் கரங்கள், வினியின் முதுகை வருடியது.

“சா…..ர்ர்ர்ர்” எனத் திணறியவளை அணைத்துத் தூக்கி, மேசை மேல் அமர வைத்தார் மணி.

“என்னைப் பிடிச்சிருக்கா வினி? நெஜமாலுமே பிடிச்சிருக்கா?”

இவளது தலை ஆமென ஆடியது.

“எவ்ளோ பிடிச்சிருக்குன்னு காட்டு”

“எ..எப்படி?”

தனது உதட்டைத் தொட்டுக் காட்டினார் அவர். தயங்கினாள் பதின்ம வயதில் இருக்கும் குழந்தைக் குமரி.

“கமான் டார்லிங்! ஷோ மீ” என்றவரின் குரலில் அவ்வளவு மென்மை.

இவள் மெல்ல உதட்டைக் கொண்டு வந்து அவர் உதட்டில் ஒற்றி எடுத்தாள்.

“மை ஸ்வீட் இன்னெசெண்ட் வினி! கொல்றியே என்னை” என்றவர் தனது உதட்டால் அவள் உதட்டைக் கௌவிக் கொண்டார்.

இவர் கைகள் இரண்டும் அவள் மேனி எங்கும் அத்துமீற, உதடோ சின்னப் பெண்ணின் உதட்டை பாடாய்ப்படுத்தியது.

“சார்!!!” என இன்பத்தில் முனங்கினாள் பெண்.

அவளது ஒத்துழைப்பு தந்த தைரியத்தில், இவர் மேலும் முன்னேற ஆரம்பித்தார். வயதுக்கு வந்தப் பிறகு தாயிடம் கூட காட்டாமல் பொத்தி வைத்திருந்த இடத்தில் அவர் கை விரல் பட்ட நொடி, பட்டென மோக வலை அறுந்துப் போனது பெண்ணுக்கு.

“எல்லாரும் பசங்களுக்கு குட் டச் பெட் டச் சொல்லிக் குடுப்பாங்க! என்னைப் பொறுத்த வரைக்கும் எல்லாமே பேட் டச்தான். நம்ம உடம்பு சில சமயம் நாம சொன்னப் பேச்சக் கேட்காது பாப்பா! அதுக்கு என்னமோ ஹோர்மோன், அது இதுன்னு காரணம் சொல்றாங்க. அந்த சொன்னப் பேச்சு கேட்காத சமயத்துல குட் டச் கூட பேட்டா போய்டக் கூடிய வாய்ப்பு இருக்கு! பஸ்ல சட்டுன்னு யாராச்சும் தொடக் கூடாத, படக் கூடாத இடத்துல தொட்டுட்டாவோ, பட்டுட்டாவோ, அருவருப்பாகவும் கோபமாவும் வந்தாலும் உடம்பு சட்டுன்னு சூடாகிப் போறத நம்மாலத் தடுக்க முடியாது! அது இயற்கை செய்யும் சதி. உடம்பையும் மனசையும் அடக்கி ஆள்ற அளவுக்கு நாம மகான் இல்லைன்னாலும், கல்யாணம் காட்சின்னு ஆகற வரைக்குமாச்சும் அடக்கி வைக்கனும்டா! நமக்குன்னு கலாச்சாரம் இருக்கு, பண்பாடு இருக்கு! புரிஞ்சு நடந்துக்கனும் கண்ணு! சூடான எடம் எது தெரியுமா? நரகம்! சூட்டைத் தேடி நரகத்துல போய் விழுந்துடக் கூடாது” என, ஒரு முறை இவள் ப்ரெஞ்ச் கிஸ் சீனை சத்தமில்லாமல் லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த கவிதா புத்திமதி சொல்லி இருந்தார்.

அது தக்கச் சமயத்தில் ஞாபகம் வர, திமிர ஆரம்பித்தாள் வினி.

“ஸ்ஸ்!! ஒன்னும் இல்லடா! கால்ம் டவுன்” என அவளைச் சமாதானப்படுத்தினார் மணி.

“சார் ! வேணாம்! விடுங்க” என அவரது கையைத் தள்ளி விட்டாள் இவள்.

“சஞ்சும்மா! என் செல்லம்ல! மை லிட்டில் ஹார்ட்! ப்ளிஸ்! ப்ளிஸ்” எனக் கெஞ்சியவர் மீண்டும் அவளது உதட்டில் முத்தமிட வந்தார்.

“வேணா! வேணா!” என அழ ஆரம்பித்தாள் வினி.

“என்ன வேணா? இல்ல என்ன வேணா? உன் கிட்ட சிக்னல் வரவும்தானே இன்னிக்கு ஃபிக்ஸ் பண்ணேன்”

“நான் ஒன்னுமே சொல்லலியே!” எனத் தேம்ப ஆரம்பித்தாள் சஞ்சீவினி.

“அழாதேடா! சொர்க்கத்தத் தொடப் போகும் நேரத்துல யாராச்சும் அழுவாங்களா?”

“இது சொர்க்கம் இல்ல! நரகம்! எனக்கு வேணா! விடுங்க” என மேசையில் இருந்து இறங்கியவளை மீண்டும் தூக்கி மேசையில் அமர்ந்த்தினார் மணி.

“எங்க போற நீ? எனக்கு ஆசையக் காட்டிட்டு, அப்படியே விட்டுட்டுப் போய்டுவியா? வினி, டார்லிங்! நான் உன்னோட பெல்டா! பெல்லப் பிடிச்சு விளையாடனும்னு சொன்னியேடா! இப்போ என்ன பயம்! கம்” எனக் கொஞ்சினார் அவர்.

“பொய்! பொய்! இப்படிலாம் பேசாதீங்க சார்! உங்கள எனக்கு ரொம்பப் புடிக்கும்! நீங்கதான் நான் காதலிச்ச முதல் ஆள். ஆனா இதெல்லாம் வேணா” எனக் கண்களில் கண்ணீர் வழியக் கதறினாள் வினி.

“மை பேபி! இதுலாம் யாருக்கும் தெரியாம சார் பார்த்துக்கறேன்! பயப்படாதடா”

மேசையில் இருந்து இறங்க முற்பட்டவளைப் பிடித்து உலுக்கினார் மணி.

“ஏய் என்னடி? என்னைக் கிறுக்கனாக்கறியா? கச்சேரிக்கு சரின்னா ரோஸ் வச்சிட்டு வான்னு சொன்னதுக்கு, இன்னிக்கு ரோஸ் வச்சிட்டு வந்து மறைமுகமா சம்மதம் சொல்லிட்டு, ஏன் வினி இந்த நடிப்பு?”

“அது மதுமிதா வச்சிக்க சொல்லிக் குடுத்தா”

“டோண்ட் லை டு மீ!  சரி விடு! என் கிட்ட மிஞ்சிப் பார்க்கனும்னு நெனைக்கறியா! சரி! மிஞ்சிக்கோ! அதோட சேர்த்து என்னைக் கொஞ்சிக்கோ ஹனி” எனக் கட்டிப்பிடித்தவரை தன் பலம் கொண்ட மட்டும் அடித்தாள் இவள்.

“விடுடா! விடு”

“என்னடி! என்னை மிருகமாக்கப் பார்க்கறியா? இந்த சின்ன வயசுலயே ஆம்பளைய எப்படி உசுப்பேத்தறதுன்னு கத்து வச்சிருக்கடி! எனக்கு சேலைப் பிடிக்கும்னு சொன்னதுக்கு, சேலைக் கட்டிட்டு வந்து இடுப்பையும் மடிப்பையும் காட்டி என்னைப் பைத்தியமாக்கிட்டு, ஏன் இப்போ பிகு பண்ணற! அடுத்த கிளாஸ்க்கு நீங்க ப்ளூல வாங்க, நானும் அப்படியே வரேன்னு சொல்லி என்னை டேம்ப்ட் பண்ணவளுக்கு இப்போ என்ன கேடு வந்துச்சு! ஐம் க்ரேசி அபவுட் யூ வினி! டேம்ன் யூ! ஐ காண்ட் கண்ட்ரோல் இட்!” என்றவர் அவளது மேலாடையை இழுத்துப் பிய்த்து எறிந்தார்.

தன் பலம் கொண்ட மட்டும் போராடியப் பெண், உதவிக் கேட்டு அலற ஆரம்பித்தாள்.

கதவை லேசாகத் திறந்து உள்ளே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்களில் ஒருத்தியான சரண்யா,

“ஏ! பாவம்டி அவ! காப்பாத்திடலாம்டி” எனப் பதறினாள்.

“சனியன்! கெட்டு ஒழியட்டும்” எனச் சிரித்தாள் கனிகா.

“ஷோ இப்போத்தான் சூடுப் பிடிக்குது! இப்போ போய் காப்பாத்தலாம்னு சொல்றியே! சும்மா இருடி!” என்றாள் ஹேமா.

“திமிர் புடிச்சவ! பெல்லு அந்தத் திமிர கொஞ்சம் அடக்கட்டும்!” என்றாள் மதுமிதா.

“அழறாடி! ஐயோ! என்னாலப் பார்க்க முடியலையே!” என அழ ஆரம்பித்தாள் சரண்யா.

“மூடிட்டு போறியா, இல்லை உன்னையும் உள்ளப் புடிச்சுத் தள்ளவா! த்ரீசம்னா பெல்லுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னது ஞாபகம் இருக்கா?” என மிரட்டினாள் ஹேமா.

அந்த காரிடாரில் பெண்கள் நால்வர் மட்டும் நிற்பதைப் பார்த்து அவர்களை நோக்கி வந்தார் அன்றைய தினம் ஏதோ காரணமாக காலேஜிக்கு வந்திருந்த எச்.ஹோ.டி.

“வீட்டுக்குப் போகாம இங்க என்ன கும்மாளம்?” எனக் கேட்டவருக்கு கதவுக்குப் பின்னே பெண்ணொருத்திக் கதறிய சத்தம் கேட்டு விட்டது.

“வாட் தெ ஹெல்!” எனச் சத்தமிட்டவர் பட்டெனக் கதவை எட்டி உதைத்துத் திறந்தார்.

அங்கே………

 

(தொடுவான்….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. கதைய ஓரளவுக்குக் கொண்டு வந்துட்டேன். கொஞ்சம் ஓப்பனாத்தான் இன்னிக்கு எபி எழுதிருக்கேன். அந்த வயசுல வர தடுமாற்றம், கிளுகிளுப்புலாம் சொல்லித்தான் ஆகனும்னு தோணுச்சு! ஆக்சுவலி 18ப்ளஸ்னு போட்டதுல எனக்கு விருப்பம் இல்ல.(போடலினா அதுக்கு வேற பஞ்சாயத்து வரும்). ஏன்னா இதெல்லாம் பதினஞ்சு வயசுக்கு மேல உள்ள பிள்ளைகளுக்குத் தெரியனும்! அப்போத்தான் ஸ்கூல் டீச்சர்ஸ், ப்ரோபெசர் மாதிரி ஆட்கள் அட்வாண்டேஜ் எடுக்கறப்போ அவங்களுக்குத் இது தப்புன்னு புரியும். அந்த வயசுல உடம்பு என்ன வேலைப் பண்ணும், எப்படி ஜிவ்வுன்னு ஃபீல் ஆகும் எல்லாத்தையும் உடைச்சு சொல்லிருக்கேன். தப்பா தோணுச்சுனா, மன்னிச்சிடுங்க! இதோட அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல். )