Thoda Thoda Thodarkathai–EPI 15

280654150_1081598149094185_3262610077133346742_n-8f3ad8a5

அத்தியாயம் 15

கே.டி. கேம்பம்மா எனும் பெண்தான் இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர். இவளை சயனைடு மல்லிகா எனவும் அழைக்கிறார்கள். பக்தி நிறைந்த பெண்ணாக வேடமிட்டு, கோயிலுக்கு வரும் பெண்களில் சோகமான ஆளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கஸ்டங்களைக் கேட்பது போல நடித்து, மண்டல பூசை செய்தால் துன்பம் நீங்கும் எனச் சொல்லி தனது வேலையை ஆரம்பிப்பாள் இவள். அப்பெண்களை நன்றாக உடுத்தி, நகை நட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு வர சொல்லி, பூசை செய்து, புனித நீரென சொல்லி சயனைடு கலந்த நீர் கொடுத்து அவர்களைக் கொன்று கொள்ளையடித்த கொடூரி இவள்.

 

தூக்கத்தில் இருந்து கண் விழித்த சஞ்சீவினிக்கு தலை பாரமாய் அழுத்தியது. அறையில் இருந்த ஒற்றை விளக்கு, இவளது கண்களை ஊசியாய் குத்தியது. அதன் தாக்கம் தாளாமல் விழிகளை மீண்டும் மூடிக் கொண்டாள் அவள்.

உடல் அடித்துப் போட்டது போல வலித்தது. மூளையோ எதையும் சிந்திக்க முடியாத அளவுக்கு மசமசத்துப் போயிருந்தது. தலையை இடம் வலம் ஆட்டினாள், கால்களை அசைத்துப் பார்த்தாள், கண்களை மூடி மூடித் திறந்தாள், கை விரல்களை ஆட்டிப் பார்த்தாள். சாதரணமாக செய்யக் கூடிய இந்த செயல்கள் எல்லாம் இப்பொழுது மலையைப் புரட்டிப் போடுவது போல கஸ்டமாக இருந்தன.

யோகா பயிலும் போது, அவளது குரு சொல்லிக் கொடுத்திருந்த மூச்சுப் பயிற்சியை மெல்ல செய்ய ஆரம்பித்தாள். முதலில் சிரமாக இருந்தது, போகப் போக கை வசமானது. மீண்டும் மெல்லக் கண்களைத் திறந்தவளுக்கு, பார்வை தன் வசமானது. அவள் படுத்திருந்த அறையை ஒரு அலசு அலசியவளின் பார்வை தன் இடது புறம் கைக்கட்டி அமர்ந்து சுவாரசியமாக இவளையேப் பார்த்திருந்தவன் மீது நிலைக் குத்தி நின்றது.

“வெல்கம் டூ த வோர்ல்ட் ஓஃப் புல்ஷிட், மை டியர்!! யூ ஹேவ் அரைவ்ட்!”(welcome to the world of bullshit, my dear! You have arrived) எனப் புன்னகையுடன் சொன்னான் அவன்.

“எல்ட்டன் ஜோன் (Elton John—இந்த கோட் சென்னவர்)” என மெல்ல முணுமுணுத்தாள் இவள்.

அவளது கூற்றில் முகம் மலர்ந்து விகசித்தது ஆணழகனுக்கு! அவள் அருகே குனிந்து உலர்ந்துப் போய் கிடந்த உதடுகளில் மென்மையான முத்தமிட்டான் இவன். அதைத் தடுக்கக் கூட திராணியில்லாமல் படுத்திருந்தாள் இவள்.

“ப்ரொபெசர் மணிக்கு உன் மேல இவ்ளோ க்ரேஸ் இருந்ததுல ஆச்சரியமே இல்ல சஞ்சு குட்டி! சாதாரண ஆம்பளைக்கு பொண்ணோட வளைவு சுழிவுகள பார்த்தா காதல் பிச்சிக்கும்! ஆனா எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஆம்பளைக்குத்தான் உன்னைப் போல ஒரு புத்திசாலிய கட்டிலுல கட்டிப் போடனும்னு தோணும்! அழகு சலிச்சிடும்டி! ஆனா அறிவு!!!!!! அதும் உன்னோட அறிவு, அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது!” என ரசித்து சொன்னவன், மீண்டும் அவளை முத்தமிட்டான். இந்த முறை மென்மை காணாமல் போயிருந்தது.

அதையும் தடுக்க முடியாத தன் நிலையை எண்ணிக் கண்ணீர் வந்தது வினிக்கு.

“நோ!!! அழுதா எனக்குப் பிடிக்காது சஞ்சு! ஐ ஹேட் கண்ணீர்! நீலிக் கண்ணீர் வடிக்கறதுல உங்க இனத்த யாராலயும் மிஞ்ச முடியாதுடி!” எனும் அவன் அழுத்தமான குரலில், முயன்று கண்ணீரை அடக்கினாள் இவள்.

வினியின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரைத் தன் நாவால் துடைத்து விட்டவன்,

“சொன்னதும் கேட்டுக்கறியே! அட்டா கேர்ள்! இந்த ஒத்துழைப்பு வேணும்னுதான், உன் கூட பேசிப் பழகனும்னுதான் ரொம்ப மைல்டான ட்ரக் குடுத்திருக்கேன்! மத்த நாலு பேரும் என்னோட உடல் தேவைய மட்டும்தான் தீர்த்து வச்சாங்க! நீ மட்டும்தான் என்னோட உடல் பசியையும் அறிவுப் பசியையும் சேர்த்து தீர்த்து வைக்க போற! அது தீர்ந்ததும் மெல்ல உன்னைத் தீர்த்துடறேன்!”

இவளது கண்கள் அப்பட்டமாகப் பயத்தைக் காட்டியது!

“பயப்படக் கூடாது டார்லிங்! மனுஷனா பொறந்துட்டா இறப்பு நிச்சயம்தானே! என்னைக்கு இறப்போம்னு தெரியாம பயந்துட்டே வாழ்றத விட, அது தெரிஞ்சிடுச்சேன்னு நீ நிம்மதிதான் அடையனும்! அந்த நிம்மதிய உனக்குக் குடுக்கப் போற என்னை எக்ஸ்ட்ராவா மகிழ்ச்சிப்படுத்தனும்” எனறவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

மூளையின் மசமசப்பு கொஞ்சமாய் நீங்க, தன் முன்னே நிற்பவன் அன்று லிப்டில் பார்த்த ‘கிஸ்ஸபிள் கியூட் லிப்ஸ்’ எனச் சொன்னவன் என்பதைக் கண்டுக் கொண்டாள் பெண். அது மட்டுமல்ல, தன்னைப் பிறந்த மேனியாக்கி போர்வையால் மூடி வைத்திருக்கிறான், என்பதையும் உணர்ந்துக் கொண்டாள். கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அழுவது இவனுக்கு கோப மூட்டி, தன் ஆயுளைக் குறைக்க வைத்து விடும் என எண்ணி அமைதியாய் இருக்க முயன்றாள்.

அவள் கண் போர்வையைப் பார்ப்பதைக் கண்டவனுக்கு, குறுஞ்சிரிப்பு ஒன்று முளைத்தது.

“ஹே பியூட்டி! பயப்படாதே! நான் உன்னை இன்னும் ஒன்னுமே பண்ணல! மயங்கிக் கிடக்கற பொண்ணுக் கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கறதுல என்ன கிக் இருக்கு! நத்திங்!!! நான் தொடனும், நீ துடிக்கனும்! நீ தொடனும், நான் துவளனும்!!! அதுதான் பேபி கிக்! அந்த இன்ஸ்சு உன் உடம்பெல்லாம் ஜி.பி.எஸ் ட்ராக்கரால இழைச்சு வச்சிருக்கான்! கடிகாரத்துல இருந்து, நீ போட்டிருந்த ஷூ, சட்டை, செயின்னு ஒரே பாதுகாப்புதான். அவன் எத்தன்னா நான் எத்தனுக்கு எத்தன்டி! ஒரு புதருகிட்ட காரை நிறுத்தி ஏர்போர்ட்ல செக் பண்ணுவாங்கல்ல, அந்த மாதிரி டிவைஸ் வச்சி மொத்த உடம்பையும் செக் பண்ணிட்டேன். எல்லாத்தையும் அவுத்து, உன் பேக், போன் எல்லாம் ஒன்னா கட்டி அந்த புதர்லயே வீசிட்டு வந்திருக்கேன்! அந்த ஒத்தக் கை நாய், நாய் போல ஊரே மோப்பம் புடிச்சுத் தேடட்டும்! என் கண்ணு முன்னுக்கே உன்னைக் கட்டிக்கிட்டுப் படுத்தான்ல! அதுக்குத்தான் உன்னைக் கட்டிக்கிட்ட கையைத் தூக்க முடியாம பண்ணிட்டேன்டி! உனக்காக எத்தனை வருஷம் தவமா தவமிருந்து காத்திருக்கேன்! காத்திருந்தவன் பொண்டாட்டிய, நேத்து வந்தவன் ஜல்சா பண்ண பார்த்தா விட்டுருவேனா!!!!” என்றவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“எவ்ளோவுக்கு எவ்ளோ முடியுமோ, அவ்ளோ செக்கியூர் பண்ணனும் உன்னை! கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னு என் பாட்டி அடிக்கடி சொல்வாங்க! போலிஸ் நாங்க எவ்ளோ அலர்ட்டா இருந்தாலும், க்ரிமினல்ஸ் இன்னும் டபுள் அலர்ட்டா இருப்பாங்க! உன்னோட எல்லா க்ளோத்ஸ்லயும், ஐ மீன் உள்ளாடை முதல் கொண்டு இந்த ஸ்ட்டிக்கி ஜீ.பி.எஸ் டிவைஸ் ஒட்டிக்கனும். நான் அன்னிக்குக் போட்டு விட்ட இந்தக் கடிகாரத்துல, லேட்டஸ்ட் ட்ராக்கர் இருக்கு. அதோட ரெக்கார்டிங் ஆப்ஷனும் இருக்கு! “எனச் சொல்லி ஒவ்வொன்றாய் பாடம் எடுத்தத் தன்னவனை நினைத்து மனது வலித்தது இவளுக்கு.

‘கள்ளன ஜெயிக்க விட்ராதீங்க வீர்!’ என மனதுக்குள் வேண்டிக் கொண்டாள் வினி.

மணி இறந்த சமயத்தில் வந்த வீடியோவினாலும் மேசேஜினாலும் மிகுந்த மன உளைச்சலை அடைந்திருந்தாள் சஞ்சீவினி. அந்த வயதில் ஆவியாக இருக்குமோ என பயந்தவள், போகப் போக யாரோ பாவியாக இருக்கும் எனும் முடிவுக்கு வந்திருந்தாள். ஆனாலும் தன்னை நம்பாத குடும்பத்திடம் உதவி கேட்கக் கூடாது எனும் வைராக்கியம் நெஞ்சு முட்ட இருந்தது. மணியின் நம்பரை தன்னோடு பள்ளியில் படித்தத் தோழியின் அண்ணனிடம் கேட்டு, ட்ரேஸ் செய்துப் பார்க்க, அது பயன்பாட்டில் இல்லை என வந்தது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டவள், சதா சர்வ காலமும் ஒரு விழிப்புணர்வுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். வீராவிடம் பழகிய நேரங்களில்தான் சஞ்சீவினியால் நிம்மதியாக இருக்க முடிந்தது. போகப் போக, எந்த ஆபத்தும் தன்னை நெருங்காமல் இருக்க, கொஞ்சமாய் ஆசுவாசமடைந்திருந்தாள் பெண். அந்த ஆசுவாசம் அடுத்த டார்கேட் இவள்தான் என்பதில் காணாமல் போயிருந்தது. வயது கோளாறில் தான் செய்த சிறு பிழை, வாழ்நாள் முழுதும் துரத்துவதை என்ணித் துவண்டுப் போனாள் சஞ்சீவினி.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி பயந்து வாழ்வது!!! மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தவள் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தாள்.

‘உனக்கும் எனக்கும் நடக்கற இந்தப் போர்ல, ஒன்னு நான் வீர மரணம் அடையறேன்! இல்ல உன்னைப் போட்டுத் தள்ளிட்டு வீராங்கனையா ஆகறேன்! இனி இந்த டார்ச்சர தாங்க என்னால முடியாது! நீ என்னடா என்னைத் தூக்கறது!!! நானே என்னைத் தூக்க வழி செய்யறேன்டா’ என வீறு கொண்டு எழுந்தவள், வீராவிடம் அடம் பிடித்து வீட்டுக்குப் போக வேண்டி இருக்கிறது என நின்றாள்.

எது வேண்டுமென்றாலும் ராகவன் கொண்டு வந்து தருவார். தனது கண் பார்வையிலேயே இவள் இருக்க வேண்டும் என ஆணித்தரமாகச் சொல்லி விட்டான் காவலன். விடிகாலையில் வலிமருந்தின் உபயத்தால் அவன் அசந்துப் போயிருக்க, கமுக்கமாய் வெளியேறி விட்டாள் வினி.   

ஹாஸ்பிட்டல் அறைக்கு வெளியே காவலுக்கு நின்றிருந்த ராகவன், இவளோடு வீடு வரை வந்தார். அதற்கு மேல் எந்த பயமும் இல்லையென, அபார்ட்மேண்டின் கீழ் தளத்தில் ராகவனைக் காத்திருக்க சொல்லிவிட்டு தனது வீடு இருந்த மேல் தளத்துக்கு சென்றாள் வினி. வீட்டினுள்ளே நுழையும் போதே, உள்மனம் ஏதோ சரியில்லை என்பது போல எச்சரித்தது. மெல்ல விழிகளை சுழற்றியவளுக்கு, தாடி அடர்ந்த ஓர் உருவம் தன்னை நெருங்குவது மட்டும்தான் தெரிந்தது. அதற்கு மேல் எதுவுமே பெண்ணுக்கு ஞாபகமில்லை.

கற்று வைத்திருந்த தற்காப்பு கலை எதுவுமே கைக் கொடுக்காமல் சிலந்தியின் வலையில் தானாகவே அகப்பட்டுக் கொண்டது அழகிய பட்டாம்பூச்சி.

மெல்லிய குரலில்,

“எப்படி?” எனக் கேட்டாள் வினி.

“என்ன எப்படி?”

“கடத்தல்!!!”

“ஓஹோ! உன்னை எப்படி தூக்கனேன்னு கேக்கறியா? ஹேக் பண்ணறது, வீட்டுக்குக் கள்ள சாவி போடறது, ட்ரேக் பண்ணறது எல்லாம் எனக்குக் கை வந்தக் கலை டார்லிங்! ஹாஸ்பிட்டல்ல ஆள் வச்சிருக்கேன் உன் நடமாட்டத்த ஸ்பை பண்ண! நீ கிளம்பி வீட்டுக்கு வரன்னு தெரிஞ்சதும், உனக்காக உள்ள வந்து காத்திருந்தேன். உன்னை மயங்க வச்சு, உன் மேல ஆம்பள பசங்க போடற ஹீடிய போட்டு, மெல்ல நடத்தி படிக்கட்டு வழியா போய், பின் வாசல்ல எஸ்கேப் ஆனது எல்லாத்தையும் விளக்கி சொல்லாமலே உனக்குப் புரியும்னு நெனைக்கறேன்! அந்த வீரா கண்ணுல மண்ணத் தூவ கிடைச்ச சான்ஸ விட்டிருவேனா பேபி!“ என்றவன் மலர்ந்து சிரித்தான்.

இது நாள் வரை அறிந்திராத பயம் நெஞ்சைக் கௌவிப் பிடித்திருந்தது வீராவுக்கு. நெஞ்சாங்கூடு காலியாகிப் போனது போல உணர்ந்தான் அவன்.  வினி திருமணத்தை முறித்துக் கொண்டு விலகி இருந்தப் பொழுதுகளைக் கூட அங்கிங்கே அவளைப் பார்வையால் தரிசித்து கடந்து வந்திருந்தான். இப்பொழுது அறவே அவள் இல்லாமல் போய் விடக் கூடும் எனும் உண்மை அவனை யோசிக்க விடாமல் முடக்கியது.

“மச்சான்” எனும் அவளது கடுப்புக் கலந்த செல்ல அழைப்பு காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.

போனில் அவன் போட்டிருந்த ட்ராக்கரை கவனிக்கும் ஆப் அவளது இருப்பிடத்தைக் சிவப்பு நிற புள்ளியாய் காட்டிக் கொண்டிருந்தது. ட்ரைவர் ஜீப்பை ஓட்ட, மறுபக்கம் அமர்ந்து வந்தான் வீரமணிகண்டன். அவன் பின்னே அமர்ந்திருந்தார் ராகவன்.

“சார்! நான் வீடு வரைக்கும் பாதுகாப்புக்குப் போனேன் சார்! மேடம்தான் இதுக்கு மேல எந்த பயமும் இல்லன்னு க்ரவுண்ட் லிப்ட் ப்ளோர்ல நிக்க சொல்லிட்டாங்க! அரை மணி நேரத்துல வரேன்னு சொன்னவங்கள காணாமேன்னு மேல போய் பார்த்தா ஆளையேக் காணோம் சார்! அவங்க ப்ளோர் சி,சி.டி.விய வேற உடச்சி வச்சிருக்கான் அந்த சைக்கோ! சுத்தி முத்தி எல்லா இடத்துலயும் தேடிட்டேன் சார்! ட்ரேஸ் இல்லாம மாயமா மறைஞ்சிட்டாங்க சார்” என திக்கித் திணறி சொல்லிக் கொண்டே வந்தார்.

அந்த நேரம் கவினிடம் இருந்து போன் வந்தது வீராவுக்கு.

“சொல்லு கவின்”

“சார் ப்ரோபெசர் மணியப் பத்தி விசாரிக்க சொல்லிருந்தீங்கல்ல, இப்போ நான் திருச்சில இருந்து பேசறேன் சார்! அந்த மணியோட பூர்வீக ஊர் இதுதான் சார். அந்தாளுக்கு அம்மா அப்பாலாம் யாரும் உயிரோட இல்ல சார்! சொல்லிக்கற போல சொந்த பந்தமும் இல்ல. அவருக்கு கல்யாணம் காட்சின்னு ஒன்னும் ஆகிருக்கலைன்னு அவரோட அக்கம் பக்கத்து வீட்டுல உள்ளவங்க சொன்னாங்க சார்! இங்க வந்ததுல ஒரு யூசூம் இல்ல சார்!”

“அப்போ நீங்க கிளம்பி வந்துடுங்க கவின்! ஐ நீட் யூ ஹியர்!”

“கண்டிப்பா சார்! இப்பவே கிளம்பிடறேன்”

அபார்ட்மெண்ட் லாபியில் ராகவன் இருந்திருக்கிறார். வாசலில் போலிஸ் ஜீப் ட்ரைவரோடு நின்றிருக்கிறது! அப்படி இருந்தும் தைரியமாக வினியைத் தூக்கி இருந்தவன் மேல் வீராவுக்கு பயம் வந்தது. ஏற்கனவே அவன் வெட்டி அனுப்பி இருந்த மற்ற பெண்களின் விரல்கள் கண் முன்னே தோன்றி இவனை இம்சித்தது. இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து நடந்த கடத்தல்கள், வினி மேல் கண்காணிப்பு இருக்கும் எனத் தெரிந்தும் தைரியமாக அவளைக் கடத்திய பாங்கு எல்லாம் சைக்கோவின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாய் மோசமாகி வருவதற்கான அறிகுறிகள் எனப் புரிந்தது இவனுக்கு. தன்னை வெட்டியவன் கூட அவனாகத்தான் இருக்கக் கூடும் எனும் யூகம் இருந்தது வீராவுக்கு.

ட்ராக்கர் காட்டிய இடத்தை நெருங்கி இருந்தார்கள். ஜீப் நிற்பதற்குள் பாய்ந்து இறங்கி இருந்தான் வீரா. வேகமாய் அவ்விடத்தை சுற்றி முற்றித் தேடினான். ட்ராக்கர் இவ்விடத்தைக் காட்ட, அங்கே வீடு எதுவும் இல்லாமல் இருக்க இவனுக்கு நெஞ்சம் துடிதுடித்தது. தன்னவளைக் கொன்று வீசியிருப்பானோ எனும் யூகமே நடுநடுங்க வைத்தது இவனை.

“சார்! ப்ளாஸ்டிக் கவர் இருக்கு சார் இங்க” எனக் குரல் கொடுத்தார் ராகவன்.

அவ்விடத்தை நோக்கி ஓடினான் வீரா. ஒற்றைக் கையால் அதில் இருந்த பொருட்களை எடுத்துப் பார்த்தவனுக்கு, கண்ணில் கடகடவென கண்ணீர் இறங்கியது. இவன் அவளுக்குப் போட்டு விட்டிருந்த அனைத்து ட்ராக்கிங் டிவைஸ்களோடு, அவளது உடைகளும் அதில் கிடந்தன.

“வினீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” எனத் தரையில் மடிந்து அமர்ந்து கதறினான் வீரமணிகண்டன்.

ஆணழகனின் வீட்டில்,

“பசிக்குதாடாம்மா?” எனக் கேட்டான் வினியை.

இல்லையென்பது போலத் தலையை ஆட்டினாள் இவள்.

“சாப்பிடனும்! நல்லா சாப்பிடனும்! தெம்பா சாப்பிடனும்! யாரு அடிச்சாலும், திட்டனாலும், உதைச்சாலும், ஊதாசினப்படுத்தனாலும் சாப்படறத மட்டும் விட்டுடக் கூடாது வினிக்குட்டி! எதையும் தாங்கிக்க உடம்புல தெம்பு வேணும்ல! சாப்பிடலைனா ஒரு அடிக்கே அப்படியே சுருண்டு விழுந்துடுவோம்!” என்றவன், தலையை ஓர் உலுக்கு உலுக்கிக் கொண்டான்.

பின் ஹஸ்கியான குரலில்,

“நீ சாப்பிட்டாத்தானே நாம விளையாடப் போற அப்பாம்மா விளையாட்டுக்கு எனர்ஜி இருக்கும். உனக்குப் பிடிச்ச மாதிரி சாப்பாடு நானே செஞ்சிருக்கேன்டாமா! முதல்ல வயித்துக்கு உணவு, பின்பு செவிக்கு உணவு, கடைசியா இந்த உடலுக்கு உணவு!” என்றான்.

தலையை இடம் வலம் ஆட்டினாள் பெண்.

“என்ன? சாப்பிட மாட்டியா? வாய்ல வச்சித் திணிப்பேன்டி” என்றவனின் குரல் கோபமாக ஒலித்தது.

மெல்லியக் குரலில்,

“இரு உடலின் சங்கமத்தை பசின்னு சர்வ சாதாரணமா சொல்றது தப்பு! அது ஒரு தியானம்!

கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற’ “ எனப் பாடிக் காட்டியவள், அவனை நேராகப் பார்த்து,

“நான் சொல்லல! வாலி சொல்லிருக்காரு” என்றாள்.

“வாவ்! வாவ்! வாவ்! உன் கிட்ட ஆங்கிலம்தான் புகுந்து விளையாடும்னு நெனைச்சேன்! தமிழும் கலைக்கட்டுதே பேபி! மயக்கறடி என்னை!” என்றவனுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.

அவள் பாடிய பாடலையே ப்ளேயரில் ஒலிக்க விட்டவன்,

“சாப்பாட்டோட வரேன் பேபி! கிவ் மி அ செகண்ட்” எனச் சொல்லித் துள்ளலோடு அறையை விட்டு வெளியேறினான்.

இவளது அறிவார்த்தமான பேச்சு அவனுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது எனப் புரிந்தது வினிக்கு! அவனை எவ்வளவுக்கு எவ்வளவு பேச்சில் கட்டிப் போடுகிறாளோ, அவ்வளது நாட்கள் தன் உடலில் உயிர் ஒட்டி இருக்கும் எனவும் புரிந்தது.பேசிப் பேசியே அவனை தாமதப்படுத்த எண்ணியவள், கையை மெல்ல அசைத்துப் பார்த்தாள். அவள் சொல் பேச்சு கேட்பது போல, லேசாக அசைந்தது. மிகச் சிரமப்பட்டு கையைத் தூக்கியவள், அவள் உடலில் அவன் மிச்சம் வைத்திருந்த தோட்டை நோக்கி கையை உயர்த்தினாள். நடுங்கிய கையை ஒரு மூச்சு இழுத்து விட்டு நிலைப் படுத்தியவள், வலதுப் பக்கத் தோட்டை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.

அதற்குள் கதவு திறக்கப்பட, கையை பொத்தென கீழே போட்டாள் வினி.

‘என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்’ எனப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

வினியை மெல்லக் கைக் கொடுத்துத் தூக்கி தன் மேல் சாய்த்துக் கொண்ட ஆணழகன், அவளுக்கு உணவூட்ட ஆரம்பித்தான். போர்த்தி இருந்த போர்வை நழுவி இவளது ஒரு பக்க வெண்ணெய் பந்தை அப்பட்டமாய் காட்ட, இவள் நெளிய ஆரம்பித்தாள்.

“ஷ்!!! என்ன வெக்கம்! நான்தானே பேபி! உணவு ஊட்டும் நேரம் நான் உனக்குத் தாய் போல! என் கவனமெல்லாம் உன் வயித்த நிரப்புவதுல மட்டும்தான் இருக்கும்! சோ டோண்ட் வொரி!“ என்றவன் அவள் கன்னத்தில் அன்பாய் ஒரு முத்தமிட்டான்.

சாப்பிட்டது கொஞ்சம் தெம்பாய் இருக்க, தன்னை நெருங்கினால் இனி போராடிப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தவளின் எண்ணத்தை முளையிலே கிள்ளிப் போட்டான் இவன்.

பெட்டி ஒன்றை திறந்தவன், அதில் இருந்து ஊசியை வெளியே எடுத்தான்.  அதைப் பார்த்து இவளுக்கு நா உலர்ந்துப் போக குரலில் நடுக்கத்துடன்,

“வேணாமே!” எனக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“வேணுமே! எனக்கு வேணுமே! டேட் ரேப் ட்ரக் பேபி! மைல்ட் டோஸ்தான்! அடிச்சு, கடிச்சு, புடிச்சு முரட்டுத்தனமா எனக்கு காதல் பண்ண வராது பேபி! மனசளவுள ரொம்ப மென்மையானவன் நான்! என் பார்ட்னர் கிட்ட முழு ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பேன்! அது தப்பா பேபி? இல்லைதானே! அந்த போலீஸ்கார நாய மனசுல வச்சிருக்கற நீ, என்ன செய்வ? என்னை எதிர்க்கப் பார்ப்ப! அது எனக்குக் கோபத்தக் குடுக்கும்! பட்டுன்னு உன்னைப் போட்டுத் தள்ள சொல்லும்! இந்த ரிஸ்க்லாம் எதுக்குடா செல்லம்! அதான் இந்த ஊசி! தோ, அவ்ளோதான்! முடிஞ்சது” என ஊசியை செலுத்தி விட்டே நிமிர்ந்தான் ஆணழகன்.

இவளுக்கு மூளை மீண்டும் மசமசக்க ஆரம்பித்தது. தனது ஆடைகளை களைந்து விட்டு அவள் அருகே வந்துப் படுத்தவன், மேசை விளக்கின் ஒளியில் இவளை அணு அணுவாய் ரசிக்க ஆரம்பித்தான்.

“ஒளியிலே தெரிவது தேவதையா” எனப் பாடியவனின் குரல் அவ்வளவு இனிமையாக இருந்தது.

அவளது நெற்றியில் ஆரம்பித்து, மெல்ல மற்ற இடங்களுக்கும் பயணித்தது அவன் விரல்கள்.

“எங்கப்பன் முடிக்காம விட்டத, இன்னிக்கு நான் முடிக்கப் போறேன் பேபிமா! அவன் உனக்காக எவ்வளவு ஏங்கனான் தெரியுமா! அந்த ஏக்கத்தைத் தீர்த்துக்க முடியாமலே போய் சேர்ந்துட்டான். சோ சேட்! ஆனா நான், அவனுக்கும் சேர்த்து வச்சு உன்னை அடையப் போறேன், அனுபவிக்கப் போறேன், ஆட்கொள்ளப் போறேன்! “ என்றவன்,

“யோ டாடி! ஆத்மா சாந்தியாகாம எங்கயாச்சும் சுத்திட்டு இருந்தினா, இங்க வாயா! வந்து என் சாந்தி முகூர்த்தத்த பார்த்துட்டு போ! அப்பவாச்சும் மோட்சம் கிடைக்குதா உனக்குன்னு பார்க்கலாம்” என்றவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

அங்கே வீராவின் முன் ஆத்திரமாக நின்றுக் கொண்டிருந்தார் ஜெய்தேவ்!

“இதை என் கிட்ட ஏன் முன்னமே சொல்லல வீரா? என் மகளுக்கு ஆபத்து இருக்குன்னு ஏன் சொல்லல! அந்த மணிய சார்ந்தவங்க இதை செய்யறாங்கன்னு சொல்றியே, என் மக எப்படிப்பட்ட ஆபத்துல மாட்டி இருக்கான்னு உனக்குப் புரியுதா? இந்த ரெண்டு கையால நான்தான் மணிய சுட்டுக் கொன்னேன்னு அவனுக்கு தெரிஞ்சிருந்தா என் மகள என்னப் பாடு படுத்துவான்னு உனக்குப் புரியுதா?” என ஆவேசமாகக் கேட்டார் ஜெய்தேவ்!

 

(தொடுவான்…)

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. ஆணழகன் யாருன்னு கண்டுப் புடிக்க முடியுதா? இனி அடுத்த எபியில் சந்திக்கலாம்! லவ் யூ ஆல்!!!)