TholilSaayaVaa11

11

 

“அவளை கண்டுக்காத, ஆமா பைரவ் டிசைன் பண்ணது எப்படி வேதாவுக்கு…” வெங்கட் யோசிக்க,

 

“மொத்த பிக்ஸெல் ஸ்டூடியோக்கே தெரியுமாம், இந்த பைத்தியத்துக்கு தெரிஞ்சதா பெரிய விஷயம்?” வினோத் அலுத்துக்கொள்ள,

 

மூவரும் ஒரே நேரம் “வாட்?” என்று அவனை பார்க்க,

 

“வாட் இல்லை வேட்டு! அந்த ஸ்டூடியோ காரன் வேற டீம் மீட் பண்ணறச்சே உளறி இருக்கான், அது சும்மா ஹாட் நியூஸா பத்திக்கிச்சு, இதுல அதுக்குள்ள நாலு வெர்ஷன் வேற” வினோத் சிரிக்க.

 

“என்ன?” மாயா கேட்க,

 

“ஒருத்தன் கேட்டான், உங்க டீம்ல நீங்க பண்ண எல்லா டிசைனும் பைரவ்சார் போட்டதான்னு? வந்தது பாரு கோவம், அவன் மூக்குலயே பொக்குன்னு குத்தணும் போல இருந்துது…துடித்த என் புஜங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.” 

 

மெல்லிய அவன் கையை உயர்த்தி பலம் காட்டி பேசியவனை, கொலைவெறியோடு பார்த்தான் வெங்கட்.

 

“என்னடா இதுக்கே முறைக்கிறே? இப்போ லேட்டஸ்ட் புரளி என்ன தெரியுமா?” அவன் ஆர்வமாக முன்னே சாய,

 

மாயா ஆர்வமாக, அவனை போலவே முன்னே சாய்ந்து, கிசுகிசு குரலில், “என்ன?” என்று கேட்க,

 

“அடியே உன்னை பத்தி கிசு கிசு கேட்க உனக்கு இவ்ளோ ஆர்வமா?” வினோத் கிண்டல் செய்ய,

 

“அட சொல்லுடா” மாயா அவசரப்படுத்த,

 

“நீ பைரவ் கூட லிவ்-இன் ரிலேஷன்ல இருக்கியாம்! அவர் வீட்லருந்து வந்ததை பார்த்தானாம் ஒருத்தன்.” 

 

“ச்சே இதானா?” ஏமாற்றமடைந்த மாயா, “நான் கூட ஏதாவது பெரிசா எதிர்பார்த்தேன்.” 

 

பத்மா, “ விளையாடாதே டி, எவ்ளோ பெரிய பழி தெரியுமா? வெளில கசிஞ்சா உங்க வாழ்க்கையே பாதிக்கும்.” 

 

“இதுல பாதி உண்மைதானே!” தோளை குலுக்கினாள் மாயா.

 

“என்ன?” வெங்கட் அதிர்ந்து கேட்க,

 

“அடிப்பாவி, அப்போ இனி எங்க முதலாளி நீயா?” வினோத் விழிக்க,

பத்மா, மாயாவையே கேள்வியாக பார்த்திருந்தாள், 

 

“நானும் மாதவனும் பைரவ் வீட்லதான் ஸ்டே பண்றோம்…” முன்தினம் நடந்ததை நண்பர்களிடம் பகிர்ந்தாள். 

 

பத்மா, ஆசுவாசம் அடைய, 

வினோத், “இப்போதான் நிம்மதி, எங்க நீ பைரவ்கூட சேர்ந்து எனக்கு முதலாளியா வந்துடுவியோன்னு பயந்துட்டேன். ஒருவேளை அப்படி ஆனா நான் வாங்கி கொடுத்த சமோசா பானிபூரி மறந்துடாதேமா” நக்கலடிக்க,

 

பத்மா, “பாத்துடி, வேதா மாதிரி கூட்டத்துக்கு அசலே உன்னைப்பார்த்து வயித்தெரிச்சல், வெறும் வாய மெல்றவங்களுக்கு அவல் கொடுக்காதே.”

 

“அவல் எதுக்கு? அல்வாவே கொடுப்போம்” மாயா சிரிக்க,

வெங்கட் மட்டும் தலை கவிழ்ந்து மெளனமாக இருந்தான்.

 

“வெங்கட் ஆர் யு ஓகே?” மாயா கேட்க,

 

“சாரிமா! நான் உனக்கு கெட்ட பேரு வரக்கூடாதேன்னு… கடைசில என் ப்ரெஷர்னாலே நீ எக்ஸ்ட்ரா நேரம் இருக்க போய், நேத்து இவ்ளோ நடந்துருக்கு. சாரி” அவன் எழுந்து சென்றுவிட,

 

“நான் பாத்துக்கறேன். சீட்டுக்கு போங்க” வினோத் வெங்கட்டின் பின்னே சென்றான்.

 

உண்மையை விட, வதந்தி வேகமாக பரவும், பரவியது! 

 

மாலை அனைவர்க்கும் ஒரு ஈமெயில் வந்தது, டீம் பில்டிங் ட்ரிப், வரும் வார இறுதியில் ஏற்பாடு செய்திருப்பதாக.

 

( குழுவிற்குள் ஒற்றுமையையும், அவர்கள் பலத்தை வளர்பதற்காகவும், பலவீனங்களை சரி செய்துகொள்ளவும் உதவும் பயணம் – ஒரு நாளோ, சில நாட்களோ) 

 

ஈமெயிலை படித்த வினோத், “இருக்கறதே நாம 4 பேரு, இதுல என்ன டீம் பில்டிங்?” சிரித்துக்கொண்டான்.

 

பத்மா “நான் வர முடியாது, எங்க வீட்ல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க, என்னை வேலைக்கு அனுப்புறத்தே பெரியவிஷயம்.” 

 

“நான் பேசறேன்!” மாயா எழ, 

 

“இல்ல மாயா நாங்க நெறைய வாட்டி பேசிருக்கோம். கஷ்டம். ஒரு நாளுக்கு வற்புறுத்தினா, அவளை வேலைக்கே அனுப்பமாட்டேன்னு அவங்க அப்பா சொல்லிட்டார், இது ரெண்டு நாள் ட்ரிப். வாய்ப்பே இல்ல” வெங்கட் சொல்ல,

மாயா, பத்மாவின் முகத்தை பார்க்க, அவளோ ஆமாம் என்று தலை அசைத்தாள்.

 

கைப்பேசியில் அழைப்பு வர, “சொல்லுங்க பாஸ்” என்றவள் முகம் இருக, “வரேன்” எழுந்தவள், “வந்துடறேன்.”

 

பைரவ் அவளை தன் அறைக்கு அழைத்திருந்தான். பலமுறை அவன் அறை வாசல் வரை சென்றவள் இதுவரை அவன் அறைக்குள் நுழைந்ததில்லை.

 

அவன் குரலில் இருந்த கோவம், மாயாவை அச்சுறுத்தியது. 

 

அறையின் வெளியே இருந்த கீர்த்தியிடம் கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

 

அந்த மிகப்பெரிய அறைக்குள்,

ஒருபக்க சுவர் முழுவதும் கண்ணாடியில், அதை ஒட்டி மேஜையில் லேப்டாப், டிராயிங் டேப்லெட், தொலைபேசி அதைத்தவிர எதுவுமே இல்லாத மேஜை.

 

சுழலும் நாற்காலியில் பைரவ் அமர்ந்திருக்க, மெல்ல அவன் முகத்தை பார்த்தவள், ‘ரைட்டு இன்னிக்கி வேதாளம் சேர் போட்டு உக்காந்துருக்கு’ பயத்தை காட்டிக்கொள்ளாமல், புன்னகையுடன்,

 

“என்ன ரூமுக்கே வர சொல்லிருக்கே?” 

அவளையே முறைத்தபடி அமைதியாக இருந்தான் பைரவ்.

 

“என்ன ஆச்சு? எதுக்கு முகத்துல கடுகு வெடிகுது?” 

 

“மாயா வொய்?” கோவமாக எழுந்தவன் அவளை நெருங்க, பதறி மேஜையில் சாய்ந்தாள். 

 

“எதுக்காக அவங்ககிட்ட நான் டிசைன் செஞ்சதா சொன்ன?” அவன் கண்களில் தெரிந்த கோவத்தில், உள்ளுக்குள் உதறினாலும், “உண்மையை தானே சொன்னேன், இப்போ அதுக்கா இப்படி?” முறைத்தாள்.

 

“ஷட் அப்! உனக்கு நல்ல பேர் கிடைக்க நான் ஹெல்ப் பண்ணா, நீயே எதுக்கு ஸ்பாயில் பண்ற?” 

 

“இதுல என்ன கெட்டது? இதைவிட பெரிசா வெளில பேசறாங்க. புலியே வருதாம், பூனைக்கு பயப்படணுமா?” 

 

“என்ன?” அவன் புருவம் உயர்த்த,

 

“நாம லிவ்வின் ரிலேஷன்ல இருக்கோமாமே! உன் வீட்லேந்து நாம வந்ததை பார்த்து ஒரு நல்ல உள்ளம் ஆபீஸ் பூரா தண்டோரா போட்டாச்சு. அத பத்தி கவலை படாம, உன் கோவம் டிசைன்ல நிக்குது?” 

 

“நான்சென்ஸ்!” 

 

“அதே நான்சென்ஸ் தான், எங்கிருந்து தான் புதுசு புதுசா யோசிப்பாங்களோ. ஏற்கனவே வேதா நான் உன்கூட இன்டிமேட்டா இருந்து முதல் ப்ராஜெக்ட் ஓகே பன்னேனு சொல்லிட்டு சுத்தினா…”

 

“வாட்!” அதிர்ந்தான்.

 

“என்ன வாட்? முதல் ப்ரோஜெட்கு அப்படி, இப்போ ரெண்டாவது ப்ராஜெட்க்கு உன்கூட கல்யாணம் பண்ணாம குடித்தனமே பன்றேன்னு சொல்றாங்க, அடுத்தது என்னவா இருக்கும்…” அவள் போலியாய் யோசிக்க,

 

பைரவ், கோவமாக தொலைபேசியை எடுத்து, “கீர்த்தி அந்த வேதா… எஸ் அனிமேட்டர்…” துவங்க பாய்ந்து அழைப்பை துண்டித்தாள் மாயா.

 

“என்ன சேய்ற?” அவள் பதற,

 

“கை எடு மாயா!” கர்ஜித்தான்.

 

“ப்ளீஸ் கூல் ஆகு” 

 

கீர்த்தனா கதவை தட்டிவிட்டு உள்ளே வர, மாயா சற்று விலகி நிற்க, 

 

பைரவோ, “கீர்த்தி வேதா பத்தி கொஞ்சம் பேசணும் கொஞ்ச நேரம் அப்புறம் வா”

 

“ஓகே சார்” கீர்த்தி வெளியேறினாள்.

 

“பைரவ் ப்ளீஸ்!” அவள் கெஞ்ச,

 

“உன்கிட்ட ரெண்டு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ, ஒன்னு – யாரோ நாலுபேர் எதோ நினைக்கிறாங்க , பேசறாங்கன்னு நாம நம்ம வாழக்கையை மாத்திக்க முடியாது! 

 

நீயும் நானும் பேசறதையோ, நெனைக்கறதையோ வச்சு இதுல ஒருதராவது அவங்க வாழ்க்கையையோ நடவடிக்கையோ மாதிப்பாங்களா?  யாருக்கும் நாம பதில் சொல்ல வேண்டியது இல்லை நம்ம குடும்பத்தை தவிர.

 

ரெண்டு. வேதா விஷயத்துல நீ தலையிடாத” 

 

“ப்ளீஸ் பாஸ்.. .நீ ஏதாவது பண்ணா இப்போ தப்பா…”

 

“ஸ்டாப் இட்! என் வேலை எப்படி செய்யணும்ன்னு எனக்கு சொல்லித்தராதே! 

இது ஹராஸ்மென்ட் இஷ்யூ! நீ இல்ல யாரா இருந்தாலும் நான் நடவடிக்கை எடுக்கணும் . உன் சீட்டுக்கு போ!”

 

“பைரவ்…”

 

“CEOவா சொல்றேன்!” அவன் குரலில் இருந்த கண்டிப்பில், பதில் எதுவும் பேசாது , தன் இருப்பிடத்திற்கு புறப்பட்டாள்.

 

பேன்ட்ரி அரை வாசலில் கதையடித்து கொண்டிருந்த வேதா, “என்ன அவர் வீட்டுக்கே போயாச்சு போல? ” நக்கலாக கேட்க,

 

ஏற்கனவே அவன் மிரட்டியதால் கடுப்பில் இருந்தவள், கோவமாக,

”அடியே அறிவுக்கெட்ட கூமுட்டை! ஒருவாட்டி சொன்னா அறிவே இல்லையா? மவளே நானும் பாக்கறேன், சும்மா என்ன உனக்கு, என்னையே வம்பிழுக்கறே? என்னத்தாண்டி உன் பிரச்சனை?” அவன் கத்தியதில் ஸ்தம்பித்தாள் வேதா.

 

அவன் அருகில் இருந்தவள், “ஹேய் நாங்க சீனியர்!” மிரட்டினாள்.

 

“நீ என்ன இதுக்கு எடுப்பா? மூடிக்கிட்டு ஓடிரு இருக்குற கொலைவெறில ரெண்டுபேரையும் தூக்கி போட்டு மிதிச்சே கொன்னுடுவேன். சீ போ!” அவளை கேவலமாக பார்த்தவள், 

 

வேதாவிடம், “உனக்கு என்ன வயித்தெரிச்சல்?” முறைக்க,

 

வேதா இப்பொழுது கோவமாக, “அவரை வளைச்சுப்போட்ட திமிரு, உன்னை என்ன பண்றேன் பாரு?” 

 

“என்னத்த பண்ண போறே? ஆமா உனக்கென்ன பைரவ் மேல கண்ணா? அதான்…” அவள் இழுக்க, மிரண்ட வேதா,

 

“அ..அது…” திணறியவள், தோழியிடம், “வாடி மரியாதை தெரியாததுங்க கிட்ட என்ன பேச்சு” தப்பிக்க பார்க்க,

 

மாயா குரலை உயர்த்தி, “ அப்போ அதான் மேட்டரா? நான் சொல்லிடறேன்!” என்றதுதான் தாமதம். பிரேக் அடித்து நின்றாள் வேதா.

 

சிரித்துக்கொண்ட மாயா ‘அதானா! வாடி வா!’ அவளை நெருங்கியவள், வேதாவின் காதில்,

“நான் சொல்லிடறேன் உனக்கு அவர் மேல இன்டெரெஸ்ட் அதான் பொங்கறேன்னு” என்றுவிட்டு நகர்ந்து செல்ல, வேதா இம்மியும் நகராமல் வேர்த்து விறுவிறுத்து நின்றுவிட்டாள்.

 

பைரவ் திட்டியதால் வருத்தமும், வேதாவின் வெறுப்பிற்கு காரணம் தெரிந்த சந்தோஷமும் மாயாவை குழப்பி இருக்க, வேதா விஷயத்தை மட்டும் மூவருடன் பகிர்ந்து கொண்டாள்.

 

“அவளை…” வெங்கட் எழ, 

 

மாயாவோ, “விடு விடு நீ எதாவது கேட்க போய், பொண்ணுகிட்ட தப்பா பேசினதா உன்மேல திருப்பி விடுவா. அவ கூடவே எடுப்பும் துடுப்பு சுத்துதுங்க வேற. பாத்துக்கலாம்” 

 

“அதுக்காக? உன்னைப்பத்தி சீப்பா பேசறவளை சும்மா விடணுமா? மாதவனா இருந்தா இப்படித்தான் சும்மா இருப்பானா?” முறைத்தான்.

 

புன்னகைத்தவளோ, “அட நான் கூட நீ ஒரு ஹிட்லர்ன்னு நெனச்சேன். உனக்குள்ள ஒரு வானத்தை போல விஜயகாந்த் இருக்கறது தெரியாம போச்சே!” போலியாய் வியக்க,

 

வினோத், “எங்கள் டீமில் எல்லா நாளும் கார்த்திகை…” என்று பாட, பத்மா, ‘லா லலா…” கோரஸ் பாட,

 

சிரித்துவிட்ட வெங்கட், மீண்டும் முகம் இறுக, “மாயா, இந்த மாதிரி வதந்தினாலதானே உனக்கு ரெண்டுவாட்டி கல்யாணம் தடைபட்டது. இதை வளர விடகூடாது.” 

 

“அப்படி புரளிய நம்பி வர எவனும் எனக்கு வேண்டாம்” என்றவள் அமர்ந்து வேலையை தொடர்ந்தாள்.

 

மாலை பைரவ்வுடன் காரில் சென்று கொண்டிருந்த மாயா அவனிடம் பேச தயங்கியபடி இருக்க, பைரவ் தான் அவளிடம் கடுமையாக பேசிவிட்டதாக உணர்ந்தான்.

 

“ஆழாக்கு…”

 

“ம்ம்”

 

“சாரி!”

 

“பரவால்ல”

 

மீண்டும் நீண்ட அமைதி, காரை ஒரு ஜவுளிக்கடைக்கு எதிரே நிறுத்தினான்.

மாயாவோ எதோ நினைவில் இருந்ததால் அவள் எங்கு வந்திருகிறோம் என்று கூட உணராமல், கார் கதவை திறந்துகொண்டு இருங்கியபின்பே உணர்ந்தாள்.

 

கேள்வியாய் பைரவ் முகம் பார்த்தவள், “என்ன?”

 

“வா”

 

எதுவும் பேசாது அவனை பின் தொடர்ந்தாள்.

 

உள்ளே நுழைந்தவன் தாமாக, சில உடைகளை எடுத்துக்காட்ட, “வேண்டாம்” என்றாள்.

 

“சாரி சொன்னேன்ல?” அவன் அவள் கண்ணில் எதையோ தேட,

 

“அதுக்காக இல்லை, எதுக்கு வேண்டாம்”

 

“ப்ளீஸ் நீ நேத்தே ரொம்ப கஷ்டப்பட்ட, ப்ளீஸ் இதெல்லாம் பார் உனக்கு பிடிச்சமாதிரி இருக்கா” 

 

“வேணாம் பாஸ்”

 

“ஏண்டா கெஞ்ச வைக்கறே?” அவன் கண்ணில் ஏக்கம்.

 

“நீயே எதையான எடு”

 

அவனே இரவு உடைகளையும், தினசரி உடைக்ககளையும் எடுத்தான்.

 

“இப்போ நீ தான் வரணும்” என்று வந்து நின்றான் அவள் முன்பு.

 

“நீயே எடு பாஸ்” 

 

“இன்னர்ஸ் வேணும்ல? நான் எப்படி? போ எடுத்துட்டு வா. வெயிட் பண்றேன்” அமர்ந்து கொண்டான்.

 

வேண்டாவெறுப்பாய் சென்றவள், வேண்டியதை எடுத்துக்கொண்டு வர, இப்பொழுதும் அவனே வற்புறுத்தி வாங்கி தந்தான்.

 

காரில் மீண்டும் அமைதியாகவே மாயா வர, “ஹே பேசாம கொல்லாதே, எதாவது பேசுடா” அவன் கெஞ்ச,

“சாரி பாஸ்” முகத்தில் உணர்ச்சியே இல்லை.

 

“…”

 

“நான் உன் வாழ்க்கைல வந்திருக்க கூடாது. எவ்ளோ பெரிய பழி உங்க மேல என்னால. நீ எவ்ளோ நல்லவன் உங்களை போயி தப்பா… ச்சே” கண்களை மூடி கொண்டாள்.

 

“இதுக்கா இப்படி இருக்கே?” சிரித்தவன், “நான் இதெல்லாம் பீல் பண்ற ஆளா?”

 

“இல்லைதான்…” எனோ, திடீரென்று சோகமான மனநிலையில் இருந்தவள், உற்சாகமாக,

 

“பீல் பண்ணமாட்டியா?” ஆர்வமாக கேட்க,

 

திடீர் மாற்றத்தை உணர்ந்தவன், “மாட்டேன், என்ன விஷயம்?”

 

“வேதா உன்னை லவ் பண்ணுறான்னு நினைக்கறேன்” சொன்னவள் அவன் முகத்தையே பார்க்க,

 

உரக்க சிரித்து, “புதுசா எதாவது சொல்லபோறேன்னு நெனச்சேன்” கிண்டலாக சொன்னவன், துளியும் அலட்டிக்கொள்ளவில்லை.

 

“தெரியுமா?”

 

“ம்ம்”

 

“எப்படி?”

 

“தெரியும், அது லவ் இல்ல ஒரு பிஸிக்கல் அட்ரேக்ஷன்( உடல் அளவிலான ஈர்ப்பு)”

 

“ரொம்ப தெரியுமோ?”

 

“தெரியும்!”

 

“எப்படி?”

 

“அவ என் காலேஜ் ஜூனியர்!”

 

“என்ன?”

 

அவளை ஒருநொடி பார்த்தவன், “வாய மூடு, டைனோஸாரே போயிடும் உள்ள” கிண்டல் செய்ய.

 

“விளையாடாதீங்க ஒழுங்கா சொல்லுங்க” முறைத்தாள்.

 

“அவ என் யுஜி ஜூனியர். நானே அவளை இங்க எதிர்பார்கல, நான் பிஜி முடிச்சுட்டு கம்பெனி ஜாயின் பண்ணப்போ அவ ஏற்கனவே இங்க இருந்தா…”

 

“…”

 

“ம்ம் கொட்டு! இல்லை சொல்ல மாட்டேன் வண்டிய ஒட்டுவேனா உன்னை பார்ப்பேனா?” கடுகடுக்க,

 

“சரி ம்ம் ம்ம் ம்ம்ம்” 

 

“அது! சரி கேளு, கம்பெனில ஜாயின் பண்ணப்போ தெரிஞ்ச பொண்ணாச்சேனு எதார்த்தமா பேசினேன், நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னா.”

 

“ம்ம்”

 

“சாரி நான் அப்படி யோசிக்கலைன்னு சொன்னேன், நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னா”

 

புருவம் உயர்த்தியவள், “வேதா? அதுவும் காதல் டைலாக் ?” 

 

“ம்ம் ஒரு பொண்ணு மனச கஷ்டப்படுத்த கூடாதுனு நாசூக்கா சொல்லிட்டு விலகினேன், அவ விடவே இல்ல.” சிரித்துக்கொண்டான்.

 

“காதல் இல்லைனு எப்படி சொல்றே?”

 

“காதலிக்கிறவங்க பாடி லேங்குவேஜே , வேற மாயா. பிஸிக்கல் அட்ராக்க்ஷன் பாடி லாங்குவேஜ் வேற”

 

குழப்பமாய் அவனை வெறித்தவளுக்கு துளியும் புரியவில்லை, அவள் மௌனமே உணர்த்த, எப்படி அவளுக்கு புரியவைப்பதென்று யோசித்தவன்.

 

“உனக்கு இதெல்லாம்… வேணாம் விடு” தயங்க,

 

“சொல்லு ப்ளீஸ்… ப்ளீஸ்…”

 

“உனக்கு புரியுமான்னு கூட தெரியாதுடா…” தயக்கம் தொடர.

 

“இப்போ சொல்றியா நான் நெட்ல தேடவா?” 

 

“ஹேய் வேண்டாம்! கண்டதும் வரும். இம்சைடா நீ… சொல்றேன்…” சில நொடி மௌனமாக யோசித்தவன், 

 

“லவ் வந்தா நாம அன்பை தேடுவோம், பிஸிக்கல் அட்ராக்க்ஷன் தேடல்… இன்டிமேட்… அதான்… புரியுதா?” முழுவதாய் சொல்ல தயங்கினான்.

 

“புரிஞ்சுது செக்ஸுவல்” எதார்த்தமாக சொல்ல, ஒரு நொடி அதிர்ந்தவன், 

 

“உனக்கு இதெல்லாம்…”

 

“தெரியும் பாஸ். எனக்கு 20 வயசாகுது நான் என்ன பாப்பாவா? அம்மா எல்லாம் சொல்லிருக்காங்க குட் டச், பேட் டச்!. சரி நீ சொல்லு எப்படி வித்தியாசம் பழகுற விதத்துல தெரியும் அதான் பாடி லேங்குவேஜ்ல?”

 

‘உன்கிட்ட தயங்கினேன் பாரு என்னை ஜோட்டால அடிச்சுக்கணும்’ நொந்துகொண்டான்.

 

“வெறும் ஈர்ப்புன்னா…

அர்த்தமில்லாத ஆர்பாட்டமான சிரிப்பு, அடிக்கடி உதட்டை கடிப்பாங்க, பக்கத்துல வரும்போது மூச்சு விடறதே கேட்கும் அவ்ளோ சத்தமா, 

கண்ணு கண்ணை பார்த்து பேசாது கண்டபடி மேயும், தலைமுடி, இடுப்பு, ம்ம்ம்… இன்னும் சில இடங்கள்ல தன்னை தானே தொட்டு நம்ம பார்வையை அங்க ஓடவிட முயற்சிப்பாங்க, 

 

பார்வைல ஒரு மாதிரி அழைப்பு இருக்கும், நெறைய தொட்டு பேசுவாங்க, இப்படி…” அதிகமாக சொல்லிவிட்டதாக தயங்கியவன் அமைதியாக.

 

மாயாவோ ஆர்வமாக “இவ்ளோ இருக்கா?” வியந்தாள்.

 

பைரவ் “ம்ம் இன்னும் சிலது சொல்ல முடியாது… காதல்னா…”

 

புன்னகைத்து கொண்டவன்… 

“ஒரு பதட்டம் இருக்கும். எதையாவது பிடிச்சுக்குறது லைக்… முடி, செயின், கீ, பேனா ஒரு சப்போர்டுக்கு, அடிக்கடி காரணமே இல்லாம சின்னதா ஸ்மைல் பண்ணுவாங்க, 

 

நிறைய தன்னை பத்தி வலிய பகிர்ந்துப்பாங்க, நம்மை பத்தி நிறைய கேட்டு தெரிஞ்சுப்பாங்க,

 

கண்ணை பார்த்தே பேச்சிருக்கும், ஆனா பதிலுக்கு உத்து பார்த்தா லயிட்டா வெட்கம் வரும், அப்போ பார்வை சுற்றுவட்டாரத்தின் பக்கம் மாறும், ஒரு நடுக்கம் உடல்ல இருந்துகிட்டே  இருக்கும், அவங்க கூட பேசிக்கிட்டே இருக்க தோணும்,  

 

குரல் மாறும், இது கொஞ்சம் கஷ்டம் கண்டுபிடிக்க நல்லா பரிச்சயம் ஆனவங்களா இருந்தா தான் தெரியும்”

 

“இதெல்லாம் எப்படி தெரியும்?”

 

“படிச்சு தெரிஞ்சுக்கறதுதான்”

 

“அப்போ எவ்ளோ லவ் எவ்ளோ அட்ரேக்ஷன் இதுவரை உன்கிட்ட பழகினவங்களுக்கு?”

 

“நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?” சிரித்துக்கொண்டவன், காரை வீட்டின் கேரேஜில் பார்க் செய்தான்.

 

“சொல்லு” அடம் பிடித்தாள்.

 

“ஒரு 4 , 5 அட்ரேக்ஷன்…லவ்…ஒன்னு கூட இல்ல” சொன்னவன் முன்னே நடக்க.

 

“என்னது? ஒண்ணுகூட இல்லையா?”

 

“ம்ம்”

 

“அப்போ உன் ஆர்ம்ஸ்க்கு கொடுக்குற வேல்யூ, உன் மனசுக்கு யாரும் கொடுக்கல” சொன்னவள் தோளை குலுக்கி முன்னே செல்ல,

 

“சிம்பிளா சொல்லிட்டே ஆழாக்கு” சிரித்தபடி பின் தொடர்ந்தான்.