TholilSaayaVaa15

TholilSaayaVaa15

15

 

 

 

“என்ன ஓவரா சீன போடறியாம்?” முறைத்தவளை விலக்கிவிட்டு பைரவ் அவளை கடந்துசெல்ல,

 

“கேட்டுகிட்டே இருக்கேன்” மிரட்டியபடி ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள்.

 

“நில்லு!” 

 

“என்ன?” பைரவும் கோவத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

 

“நான் முகிலை லவ் பண்ணா உனக்கென்ன? எதுக்கு இப்போ இங்க வந்த?” 

 

“மாதவா, இவளை சும்மா இருக்க சொல்லு, எப்போவும் பொறுமையா இருக்கமாட்டேன்”

 

“ஹலோ என்கிட்டே பேசு, நான் அவன்கூட இங்க வந்ததுல உனக்கென்ன?”

 

“வரக்கூடாது!”

 

“எல்லாத்தையும் நீ கண்ட்ரோல் பண்ண முடியாது”

 

“உன்கிட்ட நான் பர்மிஷன் கேட்கல” 

 

“பைரவ் நான் அவனை லவ்பண்ண போறேன்”

 

ஒரு நொடி நின்றவன், மீண்டும் நடந்தபடி, “உன்னால முடியாது” ஏளனமாக சொல்ல, திகைத்தவள், 

 

“ஏனாம்?” புருவம் சுருக்க,  

 

“நீயா உன்னை ஏமாத்திக்கறே! அவன் உனக்கானவன் இல்ல”  

 

“பின்ன யாராம்?”

 

“தெரியாது, ஆனா அவன் இல்ல”

 

“நீ இதெல்லாம் தலையிடாத, நாளைக்கே முகில்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லப்போறேன்”

வேகமாக நடந்துகொண்டிருந்த பைரவ் காரை அடைந்து, மாயாவிற்கு கதவை திறந்துவிட்டான். 

 

“முடிஞ்சா முயற்சி செய்” 

 

“சவால் விடறியா?”

 

“எனக்கு தெரியும் உன்னால முடியாது”

 

“பெட்?”

 

“தேவையே இல்ல, நாடகத்துக்கு எதுக்கு பந்தயம்? உன்னால அவன்கிட்ட லவ்வ சொல்ல முடியாது”

 

“உனக்கு ரொம்ப தெரியுமோ?” காரில் அமர்ந்தவள் கோவமாக கேட்க,

 

“எஸ்” புன்னகையுடன் சொன்னவன், “மாதவா நீ ட்ரைவ் பண்ணு நான் கொஞ்சம் சாஞ்சுக்கறேன்”

 

மாயா கோவமாக எதோ முணுமுணுப்பது காதில் விழுந்தாலும் பைரவ் முகத்தில் புன்னகை மறையவில்லை.

 

‘எனக்காக முகிலை விட்டு கிளம்பினப்போவே, எனக்கு தெரியும் டா நீ என்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு’

“லூசு!” வாய்விட்டு அவன் சொன்னது நல்லவேளை பின்னால் அமர்ந்திருந்த மாயாவின் காதில் விழவில்லை.

 

ரிசார்ட்டில் மாயாவுடன் அவள்  பெற்றோர் அறைக்கு  சென்றவன்  அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

 

“பரவால்ல இப்போ சந்தோஷம் தானே? உன்  பிரென்ட்  வந்தாச்சு விடு, எதுவும் இனியோசிக்காம போங்க போய் தூங்குங்க. நேரமாச்சு” கிருஷ்ணன் சமாதானம் செய்ய, சிறிதுநேரம் அங்கே  பேசிக்கொண்டிருந்தவன் மாயாவுடன் தங்கள் அறைக்கு புறப்பட்டான்.

 

ட்ரீ ஹவுசின் படிகளில் ஏறியபடி மாயா. “என்னால முடியாதுன்னு  ஏன் சொன்ன?” அவள் குரலில் வருத்தம். 

 

“ஏன்னா நீ அவனை காதலிக்கவுமில்லை. ஈர்ப்பும் இல்ல. வெறும் அட்டரெக்ஷன். இல்ல வெறும் கண்ஃபியூஷன்!” தீர்க்கமாக சொன்னவன், உறங்காமல் சிட்டவுட்டில் அமர்ந்திருந்த வாணியை பார்த்ததும்,

 

“என்ன  வாணிமா  தூங்கலையா?” கேட்டபடி அவரை நோக்கி  நடந்தான். 

 

அவரோ அவனை தவிர்த்து , மாயாவிடம், “நீ போய் படுத்துக்கோ, எனக்கு இவன் கூட கொஞ்சம் பேசணும்” அவர் குரலில் இருந்த கட்டளையில், “சரி வாணிமா” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள். 

 

பைரவ், “என்ன பேசணும் வாணிமா…” தாயை நெருங்கியவன் அவர் கண்ணில் தெரிந்த கோவத்தில் உணர்ந்து கொண்டான்.

 

“இங்க  வேண்டாம் கிழ போய் பேசிப்போம்.”

 

“ஹ்ம்ம்” அமைதியாக தாயை பின்தொடர்ந்தவன், சற்று தொலைவில் வாணியுடன் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். வாணி அமைதியாய் காற்றை வெறித்திருக்க,

 

“சொல்லு என்ன?” அவனே பேச்சை துவங்கினான்.

 

“என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ?”

 

“என்னென்னமோ நினைக்கிறன்” புன்னகைத்தான். 

 

“நீ இப்போ நினைக்கறத சொல்லு ?”

 

“எதுன்னு சொல்லு, நான் என்ன நினைக்கிறேன்னு சொல்றேன்”

 

“மாயா!” 

 

“என் பிரென்ட்! இதுகூட தெரியாதா?” புன்னகைத்தான். 

 

“இல்ல” மறுப்பாக தலையசைத்தார்.

 

“வாணிமா ப்ளீஸ்! சொல்றேன்ல என்னை நம்ப மாட்டியா?”

 

“மாட்டேன்!”

 

அவர் பதிலில் கோவமாக எழுந்தவன், “இதான் பேசணுமா?” கடுகடுத்தான்.

 

“…”

 

“வாணிமா, நான் அவளை லவ்பண்ணா சொல்லமாட்டேனா? ஏன் இப்படி குழப்பிக்கிற?” 

 

“நீ தான் குழம்பி இருக்க நான் இல்ல” 

 

வேகமாக அலுப்புடன்.  “புரிஞ்சுக்காம எதுக்கு படுத்துற? என்னை பார்த்தா காதல்ல சுத்துற பைத்தியம் மாதிரியா இருக்கு?” முறைத்தான்.

 

“அதைவிட பெரிய பைத்தியமா தெரியுதுடா” அவரும் முறைத்தார்.

 

கண்களை உருட்டியவன், “வாணி டார்லிங் ஏன் இப்படி பண்றே?”

 

“டேய்! நீ ஒரு சாதாரண நண்பனா இல்ல. உனக்கு அது தெரியலையா?”

 

“அப்படி என்னத்த பண்ணிட்டேனாம்?” முறைத்தவன், மீண்டும் அமர்ந்து கொண்டு தலை கவிழ்ந்தான்.

 

“நீயே யோசிச்சுப்பாரு, இங்க வந்ததுலேர்ந்து எப்போவும் உர்ருன்னு இருக்க, மாயா, முகில் கூட பேசினா உன்னால தாங்க முடியலை.”

 

“இதெல்லாம் ஒரு குத்தமா?”

 

“நீ சொல்றமாதிரி உங்களுக்குள்ள இருக்குறது நட்புன்னா தப்புதான், நீ செய்ற எல்லாமே!” 

 

“…”

 

“பிரென்ட் மேல பொசஸிவ் பீலிங் தப்பு”

 

“வாணிமா ப்ளீஸ்”

 

“இல்ல இன்னிக்கி எனக்கு பேசியே ஆகணும்”

 

“பேசு” வேண்டா வெறுப்பாய் சொன்னவன் கண்களை மூடிக்கொண்டான்.

 

“நட்புன்னாலும் ஒரு லிமிட் இருக்கு, ஒரு மனுஷனை சுத்தி இருக்க வட்டத்துல முதல் வட்டம் வாழ்க்கை துணை, அடுத்தவட்டம் குடும்பம், அடுத்த வட்டம்தான் நட்பு, அதுக்கும் அடுத்த வட்டம்தான் உருவுக்காரங்களும் மத்தவங்களும். நீ உன் எல்லையை மீறிக்கிட்டு இருக்க”

 

“அப்படி என்ன செஞ்சேன்?” அவன் கண்களை திறக்கவில்லை. 

 

“நீ நட்புன்னு சொல்லிக்கிட்டு அந்த வட்டத்தை தாண்டி போற”

 

“அவ நம்ம குடும்பத்துல ஒருத்தி மாதிரின்னு சொன்ன?” குற்றம் சாட்டினான்.

 

“நீ அவ குடும்பத்தையும் தாண்டி அடுத்த வட்டத்தை நோக்கி போயிகிட்டு இருக்கியே”

 

“இன்னிக்கி அவங்க கிட்ட கோவப்பட்டதுக்கா இப்படி என்னை வச்சு இம்சை பண்றே?” அலுத்துக்கொண்டான்.

 

“இது மட்டும் இல்லை. அவ உலகமா நீ இருக்கணும்னு நினைக்கற, அவளை பொத்திவச்சுக்க பாக்குற, அவ குடும்பத்தை விட நீதான் அவளை நல்லா  பாத்துக்க முடியும்னு சொல்ற, அவ வேற யார் கூட நெருங்கி பழகினாலும் நீ ஏன் கால்ல வெந்நீரை கொட்டிக்கிற? 

 

இதைவிடு, போன மாசம் குலதெய்வம் கோயிலுக்கு போகலாம்னு சொன்னேன். வேலை இருக்குனு வரமாட்டேன்னு சொன்ன, ஆனா மாயா ஆசைபட்டான்னு உடனே அவசரமா இந்த ட்ரிப்.

 

அந்த முகிலை பார்த்தா நீ பயப்படற…”

 

“நான்சென்ஸ்! அவனை பார்த்து எனக்கென்ன பயம்?”

 

“அதை நான் வாய்விட்டு  வேற சொல்லணுமா?” அவர் குரலில் ஏளனம்.

 

“வாணிமா!”

 

“என் பையனை எனக்கு தெரியும்! உனக்கு பயம். அவளை இழக்க பயம். ஆனா ஒன்னு கேட்டுக்கோ, உனக்கு வேண்டியது அவ நட்புத்தான்னா இப்போவே நீ தாண்டி போயிகிட்டு இருக்க எல்லையை விட்டு பின்னாடி வா. 

 

உன் நெருக்கம் அவ கல்யாணம் ஆன பிறகு தொடர்ந்தா அவ வாழ்க்கை என்னாகும்? அவ புருஷன் நீங்க பழகறது பிடிக்கலைனு சொன்னா?”

 

“அப்படி சொல்வானா? மூஞ்சியை உடைச்சுடுவேன்!” ஆவேசமாக சொன்னவனை பார்த்து புன்னகைத்த வாணி.

 

“எந்த உரிமைல?” 

 

“என்ன?”

 

“எந்த உரிமைல அவ புருஷன் மூஞ்சியை உடைப்ப? அவனை விட உனக்கு உரிமை இருக்குமா ?  யோசிச்சுப்பாரு”  பொறுமையாகவே சொன்னார்.

 

“அதுக்காக…” தொடராமல் மௌனமானான்.

 

என்ன சொல்வான்? என்ன சொல்லமுடியும்? நிதர்சனம் மெல்ல புரிய துவங்கியது.

 

அவன்  மனதை பிடித்தாற்போல்  வாணி, “நீ எதிர்பார்க்குற உரிமை நண்பனுக்கானது இல்ல பைரவ். அந்த உரிமை அவ புருஷனுக்கானது, மாயாக்கு கல்யாணம் ஆகுறவரை அந்த உரிமை ஆன்ட்டி அங்கிளுக்கும் மாதவனுக்கும் தான்.

 

நீ அவங்களையும் தாண்டி மாயாவை நெருங்கிகிட்டு இருக்கறதுக்கு சின்ன சேம்பிள் இன்னிக்கி நீ நடந்துகிட்ட விதம்”

 

“…”

 

“உனக்கு அவ நட்பு வேணும்னா தாண்டின வட்டத்தை விட்டு  பின்னாடி போ, இல்லை அந்த உரிமை வேணும்னா முன்னாடி அவளை நெருங்கிப்போ, ஆனா நண்பனா இல்ல அவ புருஷனா! 

 

நீ நெருங்க நினைச்சாலும் அதுக்கு அனுமதி தரவேண்டியது மாயா.

 

நெருங்கலாமான்னு யோசிக்க உனக்கு  உரிமை இருக்கமாதிரி, உன்னை நெருங்கவிடலாமான்னு யோசிக்க வேண்டியது மாயா.

 

பைரவுக்கு, ‘மாயா கிருஷ்ணன்’ கிட்ட ஒரு அளவுக்கு தான் உரிமை உண்டு, நீ எதிர்பார்க்கிற உரிமை வேணும்னா அவ ‘மிஸ்ஸஸ் மாயா பைரவ்விஷ்வநாத்’தா மாறினாதான் உண்டு”

 

வாணி சொல்ல சொல்ல யோசிக்க துவங்கினான்.

 

‘தன்னையும் அறியாமல் மாயாவை தன் உயிராகவே உணர்கிறானே, ஆனால் காதலியாக நொடிகூட நினைக்கவில்லையே. நினைக்க முடியுமா?’ 

 

‘உரிமையை விட்டு பின்னாடி செல்லத்தான் வேண்டுமா? உரிமை வேண்டுமென்று முன்னோக்கி செல்ல வேண்டுமா? செல்ல முடியுமா?’

 

அமைதியாக அமர்ந்திருந்தாலும் மனதிற்குள்ளே குழப்பமும் போராட்டமும் விஸ்வரூபம் எடுக்க துவங்கியது.

 

மகனின் சிகையை வருடிய வாணி, “பொறுமையா யோசி, அந்த ஸ்பேஸ் குள்ள நீ போகணும்னு முடிவெடுத்தா எனக்கும் சம்மதம், பின்வாங்க நினைச்சாலும் எனக்கு சம்மதம். யோசி. மாயா தனியா இருப்பா. நான் ரூம்க்கு போறேன். முடிவெடு எடுத்துட்டு அப்புறம்  தான் நீ வரணும்!” 

 

வாணி சென்றபின் பைரவ் அவ்விடத்தை விட்டு இம்மியும் அசையவில்லை.

 

அறையினுள் நுழைந்த வாணி “என்னாடா தூங்கலையா?” மாயா யோசனையாய்  கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்து  கேட்டபடி தானும் அவளருகில் அமர்ந்துகொண்டார். 

 

“இல்ல வாணிமா ஒரே குழப்பமா இருக்கு, அம்மாகிட்ட பேசலாம்னு போன் பண்ணேன் எடுக்கல தூங்கிட்டாங்க போல இருக்கு”

 

“என்னமா என்கிட்டே சொல்லலாம்னா சொல்லு” 

 

சிலநொடிகள் தயங்கியவள். “வாணிமா எனக்கு முகிலை பிடிச்சுருக்கு. ஆனா. அது காதலும் இல்ல, ஈர்ப்பும் இல்லன்னு பைரவ் சொல்றான்” முகம் வாடினாள். 

 

மகனின் வேலையை உணர்ந்தவர். “அவன் கெடக்கான் அவனுக்கு பொண்ணுங்க மனசை பத்தி எப்படி தெரியும்? நாம பேசி ஒரு முடிவுக்கு வருவோமா?” ஆர்வமாக கேட்க. 

 

“எஸ் எஸ், உங்களுக்கு  இதெல்லாம் பிடிக்காதுன்னு… அதான் உங்களை கேட்கல வாணிமா.” 

 

“பிடிக்காமலா விஷ்வாவை துரத்தி துரத்தி காதலிச்சேன். சரி வா நாம பாய்ஸ் பத்தி பேசுவோம். எவ்ளோ நாளாச்சு இப்படி பேசி, இந்த பைரவ் அதுக்கு சரிவர மாட்டான்.” 

 

சிரித்துவிட்ட மாயா, “வாணிமா நீங்க சான்சே இல்ல செம்ம கூல். சரி சொல்லுங்க என்ன பேசலாம்?”

 

“நீ தான்  சொல்லணும் முகில் பத்தி என்ன நெனைக்கற?”

 

“எனக்கு அவனை பிடிச்சுருக்கு” தலையணையை மடியில் வைத்துக்கொண்டாள். 

 

“வெறுமனே பிடிச்சிருக்கா ரொம்ப பிடிச்சிருக்கா?”

 

“தெரியலையே” விழித்தவளை பார்க்க வாணிக்கு சிரிப்பு வர,

 

“ம்ம் என்ன பண்ணலாம்?” 

 

“தெரியல வாணிமா” 

 

“சரி நான் கேள்வி கேட்கறேன். நீ பதில் சொல்லு, கண்டுபிடிக்க முடியுதான்னு பாப்போமா?” 

 

“எஸ்!”

 

“சரி உன் மொபைல்ல நோட் ஓபன் செஞ்சு நான் கேட்கறதுக்கு மனசுல வர பையன் பெயரை எழுது. கடைசில படிச்சு பார்த்தா யாருனு புரியும்”

 

“அவ்ளோ பேரெல்லாம் இல்லை. எனக்கு க்ளோஸ்னா பைரவ் தான். இப்போ முகில் பிடிக்கும். ஆ வினோத். அவ்ளோ தான் வேற யாரும் இல்ல. மீதி எல்லாரும் காலேஜ் பிரெண்ட்ஸ்”

 

“சரி அப்போ பைரவ், முகில், ரெண்டு பெரும் இல்லைனா x னு போட்டுக்கோ”

 

“ஓகே” 

 

“ஜென்டில்மேன் யார்?”

 

மாயாவோ “அர்ஜுன்” என்று சிரிக்க, 

 

“ஓதப்படுவே படவா!” போலியாய் வாணி கையை ஒங்க, 

 

“சரி சரி” சிரித்தவள், மொபைலில் எழுத துவங்கினாள்.

 

“யாராயாவது ஒருத்தர் கூடத்தான் வாழ்க்கை முழுசுக்கும் இருக்கணும்னு சொன்னா யார் கூட உன் வாழ்க்கையை பகிர்ந்துக்க விரும்பற?”

 

சிலநொடிகள் யோசித்தவள், எழுதினாள்.

 

“உனக்கு பிறக்க போற குழந்தைகள் யாரை மாதிரி இருக்க ஆசை, அதாவது குணத்துல”

 

“ஹ்ம்ம்… டன்” 

 

“யார்கூட பேசும்போது, பழகும்போது நீ நீயா இருக்க முடியுது? முகமூடியோ பொய்யோ இல்லாம?”

 

“இதென்ன கேள்வி பைரவ் தான்” தோளை குலுக்கினாள்.

 

“பிச்சுடுவேன் படவா, என்கிட்டே சொல்லாத எழுது” புன்னகைத்தார்.

 

“டன்”

 

கேள்விகள் நீண்டுகொண்டே போக,  ஒருவழியாக கேள்விகளை முடித்த வாணி  “இப்போ மொத்தம் எவ்ளோ கேள்வி ஆச்சு?”

 

“20”

 

“யார் எவ்ளோ மார்க்? மொதல்ல முகிலன் சொல்லு”

 

“2” என்றாள் சோகமாக

 

“வினோத்?” 

 

“1”

 

“பைரவ்”

 

“16”

 

புன்னகைத்துக்கொண்டார் வாணி, ‘நீயுமா?’

 

“என்ன பண்ணலாம்?” அவளையே கேட்டார்.

 

“பைரவ் சொன்னது சரிதான் போல இருக்கே. அப்போ முகில் சரி வரமாட்டான்” உதட்டை பிதுக்கினாள்.

 

“அப்போ என்ன முடிவு பண்ணிருக்க?”

 

“பைரவை ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன், பாதிக்குமேல… இல்ல கிட்டத்தட்ட அவன் மட்டுமே இருக்கான்”

 

உரக்க சிரித்த வாணி, “இவன் இல்லைனா அவன்னு ப்ரொபோஸ் பண்ண கூடாது. இவன் இல்லாட்டி வாழ்க்கையே இல்லைனு தோனணும் அதுவரை நீ சிங்கிளா இரு. அதான் சரி” 

 

யோசித்தவள், “எனக்கு லவ் பண்ணனும் போல இருக்கே”

 

“அப்போ நீ யாரை கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு தோணுதோ அப்போ அவங்களை அந்த நொடிலேந்து லவ் பண்ணு சிம்பிள்” 

 

கட்டிலில் படுத்துக்கொண்டவர், “மாயா…”

 

“சொல்லுங்க”

 

“இது உன் வாழ்க்கை, விளையாட்டா கமிட் ஆகக்கூடாது, உன் விருப்பம் என் பையனா இருந்தாலும். முழுமனசோட தோனுறவரை யாருக்கும் வாக்கு கொடுக்காத. 

வாழக்கை முழுசுக்கும் வரபோற உறவு, ஹார்மோனுக்கு வேலைகொடுக்கறதுக்கு முன்னாடி ஹார்டுக்கு மூளைக்கு கொடு.”

 

“ம்ம்… சரி கண்டிப்பா விளையாட்டுத்தனமா இனி செய்ய மாட்டேன்”

 

“குட்”

 

“ஆமா பைரவ் எங்க?”

 

“வருவான்”

 

“ம்ம்”

 

“படுத்துக்கோ, அவன் வருவான்”

 

“ஓகே… குட்நைட்” 

 

படுத்து சிறிதுநேரம்  கழிந்தும்  மாயாவிற்கு  உறக்கம்  வரவில்லை. 

 

‘எங்கடா  போன?’ 

 

கைபேசியில் பைரவை அழைத்தாள். 

 

“சொல்லு டா”

 

“எங்க இருக்க?”

 

“பக்கத்துல”

 

“வா“

 

“வரேன் டா கொஞ்சம் டைம் தா”

 

“இல்ல இப்போவே மணி ஒன்னு வா, அப்படி  என்ன பண்றே?”

 

“ஒன்னும் இல்ல…”

 

“ஏதாவது யோசனையா? ஒருவேளை நான் தான்  காரணமா?”

 

“…” ஆமென்று எப்படி சொல்வான்? 

 

“என்ன பாஸ்? நான்  தானா?  நீ  எங்க  இருக்க  நான்  வரேன்”

 

“ஹே நோ நோ . இரு நான் வரேன்” 

 

அவன் பேச்சை மீறவும் மனமில்லை. உறக்கமும் வரவில்லை. அறையை விட்டு வெளியே வந்தவள், சிட்டவுடில் வந்து நிற்க , குளிர்தாங்காமல் ஓடிச்சென்று  போர்வையை சுத்திகொண்டு மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தாள். 

 

ஏதோ யோசனையாய் படியேறி வந்தவனை முறைத்தவள்,

 “இந்த குளிருல ஸ்வெட்டர் கூட போடாம லூசாடா நீ?” அவள் போர்வையை விரித்து, “வா” என்று அழைக்க, 

 

‘நீ வேற மனுஷன் குழப்பம் புரியாம’ நொந்துகொண்டவன், 

 

“நீ உள்ள போ அதான் வந்துட்டேன்ல?” கடிந்துகொண்டான். 

 

“முடியாது என்ன பண்ணுவ?” அண்ணாந்து முறைத்தவளை என்ன செய்வது? 

 

புன்னகைத்தவன் அவள் போர்வையை பறித்து தன்னை சுற்றிக்கொண்டான். 

 

“அடேய் ! நான் என்ன பண்ணுவேன் டுபுக்கு!” 

 

“நீ வேற எடுத்துக்கோ” சிரித்தபடி அமர்ந்துகொண்டான். 

 

“முடியாது இது என்னுது” போர்வையை இழுக்க முயற்சிக்க, 

 

அவன் பிடியை மீறி போர்வையை இழுக்க முடியாமல், “போடா” சோகமாய் அவனருகில் அமர்ந்துகொண்டாள். 

 

“ஆழாக்கு…”

 

“என்ன?”

 

“வா”

 

“எங்க?”

 

“இங்க” கையை விரித்து அவளை அழைக்க,

 

“அப்பாடா மனசு வந்ததுதே” புன்னகைத்தபடி, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள், அவளுக்கும் சேர்த்து போர்த்தி விட்டான். 

 

“மாயா…”

 

“எஸ் பாஸ்”

 

“எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு“

 

“என்ன குழப்பம்? எதுனாலும் வாணிமாவை கேளு”

 

‘குழப்பமே அவங்களால தானே’ 

“எதுக்கு”

 

“முகில் குழப்பத்தை தீர்த்து வச்சுட்டாங்க தெரியுமா?”

 

“என்ன?” கொஞ்சம் அதிர்ந்தவன், “புரியல” அவள் பதில் என்னவாக இருக்கும்? அவனுக்கு  பொறுமை இல்லை. 

 

“எனக்கு முகில் சரி வர மாட்டான்” இன்னும் பைரவை ஒட்டி சாய்ந்துகொண்டாள். 

 

எனோ மனம் லேசாக, நிம்மதி பெருமூச்சை விட்டவன் 

‘எதோ ஸ்கெட்ச் போடுறே வாணி டார்லிங்’ சிரித்துக்கொண்டான். 

 

“என்ன பைரவ் சும்மா  இருக்க? என்னனு கேட்க மாட்டியா?”

 

“கேட்கணுமா? நீயா சொல்லமாட்டியா?”அவள் தோளை பற்றிகொண்டவன் சாய்ந்திருந்த அவளது  உச்சியின் மேல்  கன்னத்தை வைத்துக்கொண்டு சாய்ந்தபடி கேட்க, 

 

“அவங்க எனக்கு டெஸ்ட் வச்சாங்க”

 

“டெஸ்ட் டா ?” புருவம் உயர்த்தினான். 

 

“ஆமா“

 

“பாஸா? புட்டுக்கிச்சா?”

 

“பாஸ்! ஆனா நான் இல்ல… நீ!” 

 

“என்ன” அவனுக்கு விளங்கவில்லை. 

 

“நான் குழப்பமா இருந்தேனா…” நடந்ததை அவனிடம் அவள் சொல்ல, 

 

‘மாஸ்டர் பிளான் வாணிமா! இதுக்கு மாயாவை கல்யாணம் செஞ்சுக்கோனு எனக்கு ஆர்டர் போட்டிருக்கலாம். பாவம் இவளையும் குழப்பி விடணுமா?’

 

“நான் சொல்லிகிட்டே இருக்கேன்” அவனை கண்களை உயர்த்தி முறைத்தாள். 

 

“என்ன பண்ணலாம்னு இருக்க? முகிலை விட்டு என்னை சைட் அடிக்க போறியா” என்றவன்,

 

‘உன்னை விட்டு கொடுக்க எப்படி முடியும்’ என்றெண்ணி கண்களை மூடிக்கொண்டான். 

 

“சைட் அடிக்க எப்போவோ ஸ்டார்ட் பண்ணிட்டேன், நீ ஸ்லோ பாஸ்”

 

கிளுக்கென்று சிரித்தவன், “இதுவேறயா இது எப்போலேந்து? நீதான் முகிலன் பின்னாடியே…” குரலில் ஏக்கம். 

 

“இருந்தேன் நீ என்னைத்தேடி அங்க வரவரை”

 

“என்ன?” கண்களை திறக்காமல் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். 

 

“ப்ளூ டிஷர்ட், வொயிட் ஷார்ட்ஸ் எப்படி இருந்த தெரியுமா? முகிலன் என் கருத்துக்கே வரலை, அவன் கிட்ட பேசினாலும் உன்னையே தான் பாத்துகிட்டு இருந்தேன். ஆனா நீ தான் ஜெம் மாதிரி இருந்த”

 

“ஆஹா கவனிக்காம விட்டேனே!” போலியாக அலுத்து கொண்டவன். 

“ஆமா அதென்ன ஜெம்?”

 

“Gem, இஞ்சி தின்ன குரங்கு , இங்கிலீஷிலே ஷார்ட்டா” சிரித்தாள்.

 

“ஏன் சொல்லமாட்ட? இருக்க ஒரே பிரெண்ட அவன் லவுட்டிகிட்டா நான் சோகமா இல்லாம இளிக்கவா முடியும்?”

 

“ஹே எவ்ளோ பேரை சைட் அடிச்சாலும், யாரையாவது  கல்யாணம் செஞ்சுக்கிட்டு  போனாலும் எனக்கு நீதான் க்ளோஸ் பிரென்ட். நீ என்னிக்குமே எனக்கு ஸ்பெஷல்”

 

“முடியுமா ஆழாக்கு?”

 

“ஏன் முடியாது “

 

“தெரியல”

 

“நீ ஏன்…” பேசத் துவங்கியவள் இதழில் விரல் வைத்து, 

 

“பேசாத, கொஞ்ச நேரம் இந்த தகர டப்பாவை மூடிக்கிட்டு சாஞ்சுக்கோ, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு ப்ளீஸ்”

 

“தகர டப்பா ?” யோசித்தவள். “அடேய் என் வாய் உனக்கு தகர டப்பாவா?” 

 

மீண்டும் கிளுக்கென்று சிரித்தவன். “ஆமா” அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். 

 

“பொழைச்சுப்போ” சிரித்தவள். அமைதியாக சாய்ந்துகொண்டாள். 

 

விடியல் மற்றவருக்கு எப்படியோ மாயாவிற்கு குழப்பம் நிறைந்ததாக இருந்தது.

 

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!