TholilSaayaVaa21B

TholilSaayaVaa21B

தன் அறையில் சில கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தவனின் எண்ணம் முழுவதும் மாயாவை பற்றிய சிந்தனைகளே. விளையாட்டாய் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க துவங்கியவன் பின்னாளில் அவன் கவனத்தை ஈர்க்க அவள் செய்யத்துவங்கிய சின்ன சின்ன சேஷ்டைகளை ரசிக்க துவங்கினான்.

தனக்காக எவ்வளவு தூரம் செல்கிறாளென்ற ஆர்வம் மெல்ல அதிகரிக்க அவன் நாடகத்தை நிறுத்தாமல் நீடிக்க, அவளை இன்னும் சீண்ட நினைத்தவன், அவளுக்கு வாட்ஸாப்பில்,

‘லஞ்சுக்கு வெளில போலாமா பேப்ஸ்?’ என்று அனுப்ப,

அதுவரை அவன் மேலிருந்த கோவம் அவன் அனுப்பியிருந்த ஒற்றை ‘பேப்ஸ்’ என்ற கொஞ்சலில் காற்றில் பறக்க, சரியென்று உடனே பதில் அனுப்பிவைத்தவள், சம்மந்தமே இல்லாமல் அசட்டுத்தனமாக நண்பர்களை பார்த்து சிரிக்க,

விஷயத்தை கேட்ட வினோத் “ஒரு பேப்ஸ்ன்னு சொன்னதுக்கு இவ்ளோ இளிக்கிறே! அப்போ உன்ன கொஞ்சினா போதுமா? அடடே இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே” போலியாக வருந்தியவன்,

“மாயா பேபி, என் செல்லமே! எனக்காக இந்த டெமோவா நீயே ரெடி பண்ணிடுவியாம். நான் உனக்கு சாக்கி வாங்கித்தருவேனாம்” மாயாவை பார்த்து சொல்ல,

“ஆச தோச!” அவனை பழித்தவள், வெட்கமே இல்லாமல் ஈ என்று இளிக்க,

“காதல், கல்யாணம் இதுல எது நடந்தாலும் இப்படித்தான் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு” பத்மா சிரிக்க,

“உனக்கும் இந்த ரெண்டுல எதாவது ஒன்னு ஒருநாளைக்கு நடக்கும் அப்போ நீயும் இந்த பைத்தியக்கார கூட்டணில சேர்ந்துப்பே!” மாயா புன்னகைக்க ,

“பாப்போம் பாப்போம்” என்றபடி வேலையை தொடர்ந்தாள் பத்மா.

லஞ்சிற்கு பைரவுடன் உணவகத்திற்கு சென்ற மாயா, முதல் முறை உணவில் கவனமின்றி அவனையே ரசித்து பார்த்திருக்க, அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை,

உணவையும் மொபைலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தவன், காரில் அலுவலகம் திரும்பும் பொழுது சிக்கனலில்,
“ஹேய் அங்க பாரேன்!” அதுவரை மௌனமாகயிருந்தவன் ஆர்வமாக சொன்னதில், அதே ஆர்வத்துடனே அவன் பார்வை சென்ற திசையை பார்க்க,

அழகிய இளம்பெண் கார் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து அங்கு ஒலித்துக்கொண்டிருக்கும் இசைக்கேற்ப தலையை ஆட்டியபடி அதே நொடி இவர்களை பார்த்து திரும்ப,

“இத காட்டவா கூப்பிட்…” கேட்டபடி பைரவை பார்க்க திரும்ப, அவனோ மாயாவை கண்டுகொள்ளாது, அப்பெண்ணிற்கு ‘ஹாய்’ என்றும்,
பின்பு ‘நீ அழகா இருக்க!’ என்று செய்கை காட்ட, மாயாவோ கோவமாக பார்வை சாலை மீது திருப்பி,

“கிரீன் போட்டாச்சு! வண்டியை கிளப்ப பிளான் இருக்கா இல்லையா?” என்று கடுப்பாக, தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன், “பாய்!” என்று பக்கத்து காரிலிருந்து பெண்ணிற்கு சொன்னபடியே, காரை கிளப்பினான்.

பார்வை சாலையில் இருந்தாலும், மாயாவின் மனமென்னவோ அருகில் விசிலடித்தபடி காரோட்டிக்கொண்டிருந்த பைரவை அரசித்துக்கொண்டிருந்தது,

‘அரைமணிநேரமா ஒருத்தி மாஞ்சு மாஞ்சு பாக்குறாளேன்னு அறிவில்ல, ரோட்டுல போற வரவளை எல்லாம் சைட் அடிக்க வேண்டியது. கூமுட்டை!

போட போ! உன்னையே சுத்திவரேன்னு கொழுப்பா போச்சு போல இருக்கு. மவனே இனிமே உன்கிட்ட வழிஞ்சேன்னா ஏன்டின்னு கேளு’ தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டதன் பிரதிபலிப்பாக தீர்மானமாக தலையை மேலும் கீழும் ஆடிக்கொண்டவள் அறியவில்லை அவள் தீர்மானம் அன்றிரவே காற்றில் பறந்துவிடுமென்று.

பார்க்கிங் தளத்தில் காரை விட்டு இறங்கியவள், பைரவிற்காக காத்திராமல் வேகமாக முன்னே நடக்க,

“ஹேய் மாயா! நில்லு” அவளை பின்தொடர்ந்த பைரவ் அழைக்க, காதில் போட்டுக்கொள்ளாமல் வேகமாக அவள் நடக்க, இரண்டெட்டு வைத்து அவளை நெருங்கியவன்,

“எதுக்கு இப்போ இவ்ளோ வேகமா நடக்குற? என் மேல ஏதாவது கோவமா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,

வேகத்தை சிறிதும் குறைக்காதவள், “நான் ஏன் கோவப்படப்போறேன்?” குரலில் கோவமிருந்தாலும் வார்த்தைகளில் மறுத்தாள்.

“அத நீ தான் சொல்லணும்!”

“நான் எதுவும் சொல்லுறதா இல்ல, என்னை எதுவும் கேக்காத”

தோளை குலுக்கியவன், “சரி கேக்கல!” லிப்ட் பட்டனை அழுத்தியவன் அமைதியாக.

“தேங்க்ஸ்!” அவள் சொல்லிமுடிக்கும் முன்பே “வெல்கம்!” என்றவன், மொபைலை பார்த்தபடி குனிந்து கொள்ள, கோவமாக திரும்பிக்கொண்டவளை ஓரக்கனில் பார்த்தவன், சத்தமின்றி சிரித்துக்கொண்டான்.

இரவு உணவின் பொழுது வாணியிடம் மட்டும் பேசிய மாயா மறந்தும் பைரவை பார்க்கக்கூட இல்லை. இருவரையும் கடந்தசில நாட்களாக கவனித்துக் கொண்டிருந்த வாணி, இருவரிடமும்,

“உங்க ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது, சொல்லணும்னும் இல்ல. எதுவா இருந்தாலும் பேசி சரிபண்ணிகோங்க. இதேமாதிரி ரெண்டுபேரும் மறுபடி என் கண்ணுல பட்டீங்கன்னா தொலைச்சு கட்டிடுவேன்!” பொதுவாக எச்சரித்தவர், தன் அறைக்கு சென்றுவிட,

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பைரவும் மாயாவும் உர்ரென்றே தங்கள் அறைக்கு சென்றனர்.

அறைக்குள் நுழைந்தவன், பால்கனிக்கு சென்று நின்றுகொள்ள, அவனிடம் சென்று பேசுவதா வேண்டாமா என்று குழப்பத்தில் கையை பிசைந்தபடி மெல்ல அவன் அருகில் சென்றவள், அவனை தயக்கத்துடன் பார்க்க,

நிலவை வெறித்திருந்தவன், “ஏதாவது சொல்லனும்னா தயங்காம சொல்லு! என்கிட்ட எதான சொல்லனுமா?”

“நான் என்ன சொல்லணும்னு நினைக்கறே?” அவள் கேள்வியில் திரும்பியவன்,

“என்ன வேணும்னாலும் சொல்லலாம், என்னை எவ்ளோ பிடிக்கும்னு சொல்லாம்…” அவளை நெருங்கி, அவள் முகத்திற்கு நேராக குனிந்து,

“ஏன் இருபத்திநாலு மணிநேரமும் என்னை சைட் அடிக்குறேன்னு சொல்லலாம்…” அவள் கண்களையே ஊடுருவும் பார்வை பார்த்தவன், மாயாவின் கன்னத்தை ஒற்றை விரலால் வருடியபடி, அவளை இன்னும் நெருங்கி,

“ஏன் நான் கிட்டவந்தா ஓடிப்போனே, ஏன் இப்போ நீயா நெருங்கி வர அதையும் சொல்லாம்…” அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டு சிதற, கால்கள் வேரூன்றியதை போல உறைந்து நனறவள், தட்டுத்தடுமாறி,

“பை…” அவள் வாய்திறக்கும் பொழுதே, பிறந்த குழந்தையை வருடுவதைப்போல மிக மிக மென்மையான முத்தத்தை அவள் இதழில் பதித்து, புன்னகைத்தவன் மெல்ல விலகி,

“எப்படி நடந்துக்கணும்னே எனக்கு புரியல மாயா! நான் எதையும் போர்ஸ் பண்ண விரும்பல, ஆனா விருப்பப்பட்டு விலகியும் இருக்கல, என் கவனத்தை ஈர்க்க நீ பண்ணுற லூசுத்தனமெல்லாம் பார்க்க அழகா இருந்துது அதான் கொஞ்சம் விளையாட ஒதுங்கி நின்னினேன்.

எத்தனையோ தடவ உன்ன அப்படியே அள்ளியெடுத்துக்கணும் போல இருக்கும் ஆனா கண்ட்ரோல் பண்ணிப்பேன், ஒருவேளை நான் தொட்டா உனக்கு பிடிக்கலையோன்னு…” அவன் கண்கள் நிலத்தை பார்க்க,

அவன் நெஞ்சில் குத்தியவள் அவனை அணைத்துக்கொள்ள, “உனக்கு ஒருவேளை என்னை புருஷனா பாக்க முடியலையோன்னு கூட நெனச்சேன்” அவளை அணைத்துக்கொண்டவன் குரலில் வலி.

“லூசாடா நீ?” மீண்டும் அவன் மார்பில் குத்தியவள்,

“உன் அன்புக்காக எவ்ளோ ஏங்கிப்போயிருக்கேன்னு உனக்கு ஐடியாவாது இருக்கா?

தினமும் எவ்ளோ இம்சிக்கிற தெரியுமா?

எப்போவும் அழகா கண்ணு முன்னாடியே திரியவேண்டியது, பாக்கும்போதுலாம் போதாகுறைக்கு அப்டியே அடிச்சு தூக்குறமாதிரி சிரிச்சுவேற வை! ஆனா கண்டுக்காம ஓடிடு !

இதெல்லாம் தெரிஞ்சு செய்யறீயா தெரியாம செய்யறீயான்னுலாம் எனக்கு தெரியல. உனக்குத்தான் என்னை பிடிக்கலைனு நினைச்சேன்!” அவள் கண்களில் ஒற்றை நீர்த்துளி வெளியேறியது.

“பைத்தியம்!” அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டவன், “என் மனசுல என்ன நினைக்கிறேன்னு உன்னால உணரமுடியும் தான? இல்ல வாய்விட்டு சொன்னாதான் தெரியுமா?”

“நான் என்ன ஞானியா நீ சொல்லாம நீ நினைக்கிறதை தெரிஞ்சுக்க? உனக்கு என்னை புடிக்குதா இல்லையான்னு யோசிச்சே தினமும் தூக்கமே இருக்கறதில்ல…” மெல்ல விலகியவள் அவனை முறைக்க,

வெற்று புன்னகையை உதித்தவன், “இதெல்லாம் உனக்கு மட்டுமே நடக்குதுன்னு நீ நினைக்கிறியா? நானும்தான் ரொம்ப நாளா அவஸ்தபடறேன்!”

“ஆஹா அப்படியே பட்டுட்டே!” அவனை முறைத்தவள், அறைக்குள்ளே செல்ல, அவளை பின்தொடர்ந்தவன்,

“ஃபர்ஸ்ட் நைட் ரெண்டுபேரும் முயற்சி பண்ணி லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம் ஆனா அடுத்தநாளே நான் நெருங்கும்போதுலாம் நீ விலகித்தான் போன. நான் என்னனு புரிஞ்சுக்க முடியும் ?” குற்றம் சாட்ட,

“வேணும்னே பண்ணலடா…என்னமோ நீ கிட்ட வரும்போது அந்த நெருக்கம் பயமா இருந்துது…வெறும் பிரெண்டா இருந்தப்போ இவ்ளோ க்ளோசா பழகலல…”

“பிரென்ட் கிட்ட யாரான அப்படி பழகுவாங்களா? லூசா நீ?’
“அதில்ல…”

“எதில்ல? அப்போ நான் தூங்கும்போது கட்டிபிடிச்சா பரவால்லயா? மத்த டைம்ல நெருங்கினா மட்டும் பயமா இருக்குமா என்ன?”

“டேய் ! அதுவேற…” பதறியவள், வார்த்தைகள் கிடைக்காமல் திணற,

சிலநொடி மௌனமானவன், ஏதோ தோன்ற, “சும்ம கிட்ட வந்தா பரவால்ல ஆனா அந்த நோக்கத்தோட வரக்கூடாதுன்னு சொல்றியா?” வெளிப்படையாக கேட்க,

“ஹ்ம்ம்…” தலைகவிழ்ந்து கொண்டவள், “ஆனா அது அப்போதான்…இப்போ பரவால்ல…” தயக்கத்துடன் நிறுத்த,

“ஏன் இந்த மாற்றமோ?” கிண்டலாக கேட்க,

“தெரியல…”

நீண்ட மூச்சொன்றைவிட்டு கண்களை மூடி கொண்டவன், பொறுமையாக “உனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியாம எப்படி நான் மறுபடி நெருங்க முடியும்?” தன் மனதை வருத்துவதை கேட்க,

கட்டிலில் அமர்ந்து கொண்டவள், “பிடிக்கலைன்னா அப்படியே விட்ருவியா? உனக்கு தான் பிடிச்சுருக்கே, நீ மெனக்கெட மாட்டியா? இல்ல இப்படித்தானு, நீ போர்ஸ் பண்ணா நான் கோச்சுக்க போறேனா? ”

அவள் அருகில் அமர்ந்துகொண்டவன், அவள் கையை தன் இருக்கைகளுக்குள்ளேயும் பொத்தி வைத்துகொண்டு,

“பாரு டா, நாம ஒருத்தரை நேசிச்சா அவங்களுக்கு நாம கொடுக்க வேண்டியது சுதந்திரம்தான் அதுனாலதான் நான் உன்ன வற்புறுத்தலை!
பரஸ்பரமான அன்பு இருந்தா நீயா வருவேன்னு காத்துகிட்டு இருந்தேன் அவ்ளோதான்” அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன்,
“எனக்கு உன்ன எவ்ளோ பிடிக்கும் தெரியுமா?” அவளை இறுக்கமாக அணைந்துகொண்டு கேட்க,

“எனக்கும் தான்…” அவன் மார்பில் சாய்ந்துகொண்டவள், “டேய்!”

“ம்ம்…”

“இது நட்பா காதலா?” முகத்தை உயர்த்தி அவனை கேட்க,

“நீ எடுத்துக்கறதை பொறுத்து!”

“நீ எப்படி எடுத்துக்கறே?”

“நீ என் பிரெண்ட்லி காதிலின்னு?”

“போடா!” ஏமாற்றத்துடன் விலகி அமர்ந்தவள், என்ன பதில் எதிர்பார்த்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.

புன்னகையுடன் அவளை மீண்டும் வீம்பாக அணைத்துக் கொண்டவன், “இந்த கொஞ்ச நாளுல ஒண்ணே ஒண்ணுதான் உணர்ந்தேன். குளோஸ் பிரென்ட் மேல காதல் வரமாதிரி அழகான உணர்வு எதுவுமே இல்ல!”

அவன் சொன்னதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள், “அப்போ… அப்போ…” திக்கி திணற,

அவள் கன்னத்தை வருடியவன், “எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு, காதிலிக்கிறேன்னு சொன்னா நீ வருத்தப்படவோ, கோவப்படவோ மாட்டே தானே?” சிறு தயத்துடன் கேட்க,

“நீ என் மனசை தெரிஞ்சுக்கணுமா?” அவள் கேட்க, ஆமென்று அவன் கண்களால் பதில்தர,

“அதுக்கு நீ கொஞ்சம் மெனக்கெடனுமே!” மெல்ல விலகி அமர்ந்தாள்.

அவனோ ஆர்வமாக, “என்ன செய்யணும்?”

“டெய்லி ஐ லவ் யு சொல்லணுமே! முடியுமா?” தலைசாய்த்து கேட்க , சிரித்துவிட்டவன்,

“ஐ லவ் யு!” இறுக்கமாக மீட்டும் அணைத்துக்கொண்டான்.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!