tik 29

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்போன்று… ஆதியை உடனடியாக மருத்துவமனையிலிருந்து… டிஸ்சார்ஜ் செய்திருந்தான் வினோத்…

“இந்த நேரத்துல… நீ அம்மா அப்பா கூடத்தான் இருக்கனும் ஆதி… அதனால ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணாம… GH…க்கு போயிட்டு…  வீட்டிற்குப் போ… அம்முவின் பாடியை… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… அவ்வளவு சீக்கிரம்… GH இலிருந்து வெளியில் கொண்டுவர… முயற்சி செய்கிறேன்… மேற்கொண்டு… செக்கப் எல்லாம்… நம்ம ஊரிலேயே இருக்கும் என்னுடைய கிளினிக்கில்… பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறேன்…” என்று சொல்லி அவனை அங்கிருந்து… ஆம்புலன்ஸ் உதவியுடன்… அனுப்பிவைத்தான் வினோத்…

பிறகு அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியே வரவும்… அந்தப் பகுதியில்… போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது…

ஆதி கேள்வியாய் சசியைப் பார்க்க… “மினிஸ்டர்… பையனை இங்கே… அட்மிட் பண்ணியிருக்காங்களாம்!’ என்றான் சசி… சுருக்கமாக…

அதன் பிறகு சசியின் துணையுடன்… அம்புலன்ஸிலேயே… அம்முவின் சடலத்தை அடையாளம் காட்டவென GH வரை சென்றான் ஆதி…

சரவணன் வயதில் சிறியவன் என்பதால்… அவனை வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டு… ஆதி… சசி இருவரும்… மார்ச்சுவரிக்குள் சென்றனர்…

அங்கே சதை கோளமாக மூட்டைக்கட்டி வைக்கப்பட்டிருந்த… அம்முவைக் காண சகிக்கவில்லை அவனுக்கு… எதை வைத்து அடையாளம் கட்டுவது? என… அருகில் செல்லவே பயந்து… கதறித் துடித்தான் ஆதி…

சசியும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்ததால்… ஆதியைச் சமாதானப்படுத்த முடியவில்லை அவனால்…

வேறுவழியின்றி… அவனை வற்புறுத்தி… அதைப் பார்க்கவைத்தார்… அங்கே பணியில் இருந்த சிப்பந்தி ஒருவர்… சிதையாமல் இருந்த முகத்தின் ஒரு பகுதிமட்டுமே… அம்மு என்று புரிய போதுமானதாக இருந்தது அவனுக்கு…

பிறகு… சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆதியை… வெளியே அழைத்துவந்தான் சசி…

அதற்குள்… கொஞ்சம் தெளிந்தவன்… “ஏன் சசி அவ இப்படி செஞ்சா?”

“போயும்போயும்… அந்த கோபாலுக்காகவா?”

“சத்தியமா… என்னால நம்ப முடியலடா!!”  என்ற ஆதியிடம் சசி எதோ சொல்லவரவும்… அவனை முந்திக்கொண்டு… சரவணன்…

“அவசர படாதீங்க அண்ணா… எனக்கு அம்முவைப் பற்றி நல்லாவே தெரியும்… இந்த மாதிரி… சில்லியாக… அவள் செய்திருக்க மாட்டாள்…” என்க…

“நான்… நேத்து பார்த்தேன் சரவணா… அந்த கோபாலுடன்… எதோ சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள் அம்மு…”

என அவன் சொல்லவும்…

“முதல்ல… அவனைப் பிடித்து உதைத்தால்… நமக்கு எதாவது ஐடியா கிடைக்கும்” என சரவணன் சொல்லவும்…

“சரி… முதலில் அதைத்தான் செய்யணும்…” என்றவன்… எதோ நினைவு வந்தவனாக…

“அம்மு தற்கொலை செய்துகொண்டாள் என்று அம்மா அப்பாவிடம் கூட சொல்லவேண்டாம்… அவங்களால தாங்கமுடியாது…” என சசி… சரவணன் இருவருக்கும் பொதுவாக… சொல்லிவிட்டு… கிளம்பலாம் என்பதுபோல் ஜாடை செய்ய…

மூவரும் அங்கிருந்து கிளப்பினர்…

“அம்மா… அப்பாவின் முகத்தில் எப்படி… விழிப்பது…” என்று உள்ளுக்குள்ளேயே வதைபட்டுக்கொண்டிருந்தான் ஆதி… கையாலாகாமல்… அம்முவைச் சாகவிட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில்…

சக்கர நாற்காலியில்… உள்ளே நுழைந்த ஆதியைக்கண்டு… கதறித்துடித்தார் லட்சுமி… உணர்ச்சியற்று சுவரில் சாய்ந்தவாறு… தரையில் உட்கார்ந்திருந்தார் வரதன்…

அருகில் போடப்பட்டிருந்த இருக்கைகளில்… அருளாளனும் லட்சுமியின் அன்னையும்…… கண்ணீருடன் எதோ… புலம்பிக்கொண்டிருந்தனர்…

செல்வத்தின் குடும்பம்… கயலின் குடும்பத்தினர்… லட்சுமியின் உடன்பிறந்தோர் என எல்லோரும் அங்கே கூடியிருக்க… மற்ற உறவினர்… ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்…  அவர்கள் வீடே… துயரத்தில் மூழ்கியிருந்தது…

அப்பொழுது அங்கே வந்த அனு… யாரிடமும் எதுவும் பேசாமல்… ஜோதியுடன் போய் ஓரமாக நின்றுகொண்டாள்… மற்றவர் முன்னிலையில்… ஆதியுடன் பேச அவள் முற்படவில்லை…

வலியைப் பொறுத்துக்கொண்டு… குனிந்து… தன்னை அணைத்துக்கொண்டு அழுத அன்னையின் பாதத்தை பிடித்துக்கொண்டு… “என்னை… மன்னிச்சிடுங்கம்மா…” என ஆதி கரகரப்பான குரலில் சொல்ல…

அதைக்கண்டு… ஆவேசத்துடன் எழுந்துவந்த வரதன்…

“இதுல நீ என்ன தப்பு செஞ்ச ஆதி… அந்த நேரத்துல… விளையாட்டா… அவ அங்கே போனதுதான் தப்பு… எதோ… அவளோட விதிதான் அவளை அங்கே இழுத்துக்கொண்டு போயிருக்கு…” என்றவர்… இனிமேல் நீ இதுபோல பேசாதே… என்றார்… அந்த நிலையிலும்… மனம் தாங்காமல்…

அதன்பிறகு… அம்முவின் சடலம் அங்கே வந்துசேர… பிறகு ஈமச்சடங்குகள் அனைத்தும் நடந்துமுடிந்தது…

ஆண்கள் அனைவரும் இடுகாட்டிற்குச் சென்றுவிட… ஆதியை அந்த நிலையில் வரவேண்டாம் என்று சொல்லவிட்டனர்…

தாத்தாவின் அறையில் இருந்தான் ஆதி… அவர்கள் வீட்டில் அங்கே மட்டுமே வெஸ்டர்ன் டாய்லட் வசதி இருந்தது…

அதன் உள்ளே ஆதி இருக்கும் சமயம்… வெளியில்… அணு ஜோதியிடம் பேசிக்கொண்டிருப்பது அவனுக்கு நன்றாகக் கேட்டது…

“ப்சு… இந்த அம்மா… அப்பா ஏன்தான் இவ்ளோ உருகறாங்கன்னு தெரியல… வீட்டுக்கு போகலாம்னா வரமாட்டேங்கறாங்க… ஜோதி… நானே ரொம்ப கஷ்டப்பட்டு… தூக்கமா இருக்கற மாதிரி மெயின்டைன் பண்ணிட்டு இருக்கேன்…” என அணு சொல்ல…

“ஏய்… ஏன்டி இப்படி பேசர?” என ஜோதி கேட்க…

“ஐயோ… அதை ஏன் கேக்கற… இந்த ஆதிக்கு நான் எப்ப போன் பண்ணாலும்… அம்மு… அம்மு… அம்முன்னு அவளைப் பற்றியே உருகிட்டு இருப்பான்…”

“ரொம்ப இன்செக்யுர்டா பீல் பன்றாளாம்…”

“நான் இங்கே வந்த பிறகு… அவளிடம் அக்கறையுடன் நடந்துக்கணுமாம்…”

 ‘நான் அவகிட்டத்தான்… மேனர்ஸ்னா என்னன்னு கத்துக்கணுமாம்”

“ஷ்…பா… எப்படித்தான் டாலரேட் செய்யறதுன்னு… பயந்துட்டே இருந்தேன்”

“அதோட… ஆதி டெக்ஸ்டைல்ஸ்ல… பாதி ஷேர் அவளுக்காமே…”

“முடில…”

“இதே சோகத்துல… இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் ரெண்டும்… சீக்கிரமா போய் சேர்த்துட்டா… பிறகு மொத்தமா எனக்குதான்…” என அடுக்கிக்கொண்டே போனாள் அனு…

வெறுப்பின் உச்சிக்கே போய்விட்டான்… அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஆதி…

ஏற்கனவே… கயல் மற்றும் சுலோச்சனாவின் நடவடிக்கைகளால்… சூடுபட்ட பூனை நிலையில் இருந்தவன்… அன்னை மற்றும் தந்தையை நினைத்து… இனி கல்யாணம் என்ற ஒன்று வாழ்க்கையில் தேவையே இல்லை… என்ற மனநிலைக்கு வந்திருந்தான்…

உண்மையில் இதுபோன்ற பெண்களெல்லாம்… குடும்பத்திற்கே இழுக்கு… நல்ல ஆண்கள் கூட… பெண்களைப் பற்றி இழிவாக எண்ணுவதற்கு… இதுபோன்றவர்களே காரணம்…

கோபால்… கொஞ்சமும் சலனமின்றி… அங்கே வந்திருந்தான் கார் ஓட்டுநர் என்பதால்… இடுகாட்டிற்கும்… வீட்டுக்குமென… போய்வர… அங்கே அவனது தேவை இருந்தது…

அவன்மீதே தன் பார்வையைப் பதித்திருந்தான் ஆதி… அவனோ அதை கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை…

அனைவருக்கும் நிலைமை புரியும் வாய்ப்பிருந்தால்… அங்கே வைத்து அவனை ஏதும் கேட்கமுடியவில்லை ஆதியால்… சசியிடம் ஜாடை செய்துவிட்டு… அன்றைக்கு அவனை அப்படியே விட்டுவிட்டான்…

அனைத்தும் முடிந்து… சில தினகள் கடந்திருந்தது…

வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தனியாக… நடக்கத்தொடங்கியிருந்தான் ஆதி… அப்பொழுதுதான்… கோடௌனுக்கு போகவேண்டும் என்று… வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதி…

கோபால்தான் காரைச் செலுத்திக்கொண்டு வந்தான்…

ஆதியின் லேப்டாப் பாக்கை எடுத்துக்கொண்டு… அவனைத் தொடர்ந்து… கோபால் கோடௌனுக்குள் நுழையவும்…

அங்கே சசியுடன்… மணியையும் இன்னும் சில அடியாள்களையும் கண்ட கோபால் நடுங்கித்தான் போனான்…

அங்கே இருந்த நாற்காலியில் அமர்த்தலாக அமர்ந்த ஆதி… கடுமை ஏறிய குரலில்…

“சொல்லு கோபால்… அம்மு ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?” என்று கேட்க…

“அது… எனக்கு எப்படித் தெரியும்… நீங்க இப்ப சொல்லித்தான் எனக்குப் பாப்பா தற்கொலை செஞ்சுக்கிட்டதே தெரியும்… நான் ஆக்சிடென்ட்னு இல்ல நினைச்சுகிட்டு இருக்கேன்…” என அவன் சொன்ன அடுத்த நொடி… மணி அவனை அடிக்க வரவும்… அவனைக் கையை காட்டித் தடுத்த ஆதி…

“அம்மு… செத்துப்போன அன்னைக்கு…அவ கோவமா உன்கிட்ட பேசிட்டு இருந்ததை… நான் பார்த்தேன்… எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்…” என்று ஆதி மிரட்டலான குரலில் சொல்லவும்…

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல!” என அவன் மறுக்கவும்…

மணி அறைந்த அறையில்… நிலைகுலைந்து போனான் கோபால்…

பிறகு… “அம்மு பாப்பாதான்… என்னை லவ் பண்ணுவதாய் சொல்லிச்சு… நான் எவ்வளவோ மறுத்து பார்த்துட்டேன்… கேக்கல…” என்றவன்… தனது கைப்பேசியை அவனிடம் காண்பித்து… “இதோ பாருங்க…அடிக்கடி பேசச் சொல்லி… இதை பாப்பாதான் எனக்கு கொடுத்துச்சு… நான் வேண்டாம்னு எவ்ளோ சொல்லியும் கேக்கல…”

“வீட்டுல… பொண்ணு பார்த்துட்டாங்க… கல்யாணம் செஞ்சுட்டா… பாப்பா விட்டுரும்னு நெனச்சிட்டு இருந்தேன்… ஆனால் அன்னைக்கு… என்னை ரொம்பவே திட்டிடுச்சு … என் பேரை சொல்லிட்டு தற்கொலை செஞ்சுப்பேன்னு மிரட்டிச்சு… நான் பயந்துபோய் வீட்டுக்கு போயிட்டேன்… உண்மையா இப்படி செஞ்சுக்கும்னு நான் நினைக்கல…” என்று முடித்தான் கோபால்…

உண்மையில்… அந்தக் கைப்பேசி அம்மு இதற்கு முன்பு உபயோகப்படுத்தியதுதான்… இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஆதி…  

அவனால் அதை நம்பவும்… முடியவில்லை… நம்பாமலும் இருக்க முடியவில்லை… ஆனால் ஒன்று… “அம்மு இதைச் செய்திருக்க மாட்டாள்” என்று முழுமனதுடன் அவனால் எண்ண முடியவில்லை… அவள் அப்படியில்லை என்பதற்கு… ஒரே ஒரு சான்றாவது கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தான் ஆதி…

கோபால் இவ்வாறு சொல்லவும்… மேலும் கிளறாமல்… அப்படியே விடச்சொல்லிவிட்டான் ஆதி…

கோபால்… அவனாகவே ஓட்டுநர்  வேலையிலிருந்து விலகிக்கொண்டான்…

சில தினங்களிலேயே… பேத்தியை அந்த நிலையில் கண்ட துக்கத்தில் அருளாளனும்… லட்சுமியின் அன்னையும்… ஒருவர் பின் ஒருவராக    இறந்துவிட… அந்த வீட்டிலேயே இருக்கப்பிடிக்காமல்… ஐயங்கார்குளம் வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர்… ஆதி குடும்பத்தினர்…

மறுபடியும் அனுவுடனான… திருமணப் பேச்சு எழவே… தன் பெற்றோரிடம்… அன்று அவள் பேசிய அனைத்தையும் சொன்ன ஆதி… “நீங்களே வேண்டாம்னு சொல்லிடுங்க…” என்று சொல்லிவிட..,

“அப்படினா… வேறு பெண் பார்க்கலாமா?” என லட்சுமி கேட்கவும்…

“இந்த பணம்… சொத்து… இதையெல்லாம் பார்க்காமல்… முழு அன்புடன்… மனிதனை மனிதனாகப் பார்க்கும்… அதாவது… என்னை தேவாதிராஜனாக பார்க்காமல்… ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கும்… பெண்ணை நான் சந்திக்க நேர்ந்தால்… அவள்தான் எனக்கு மனைவி” என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆதி…

அவன் கால் முழுவதுமாக சரியாகும்வரை… அம்முவின் கொலுசொலி… அவளது சிரிப்பு… அவளை முதன்முதலில் கைகளில் தாங்கிய நினைவு என ஆதியை வாட்டியெடுக்க… அவளது நினைவுகள் கொடுத்த வலியால் தூக்கம்கூட வராமல் போக…  தவித்துப்போனான் ஆதி…

அதன்பிறகு தொடர்ந்த நாட்களில்… சொந்த தங்கையையே பாதுகாக்க இயலாமல் போன குற்றஉணர்ச்சியில்… தனது முகத்தை யாருக்கும் காண்பிக்க விரும்பாததுபோன்று… அவனது முகத்தைத் தாடிக்குள் மறைத்துக்கொண்ட ஆதி…

“To be a workaholic is better to be an alcoholic”   என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கேற்ப…முழு நேரமும்… உழைப்பில் தன்னை மறந்துபோனான்.

அதுவே… ஆதி க்ரூப் ஆஃப் கம்பெனீசின் உலகளாவிய அசுர வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது…

அம்முவின் மரணத்திற்குப்பின் கிட்டத்தட்ட… இரண்டு வருடங்கள் முடியும் நிலையில்… ஆதி… மறுக்கமுடியாமல்… ஒரு பாஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடூடில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கவென வந்திருந்தான்…

அதில்… ஒரு பகுதியாக அமைந்த… பாஷன் ஷோவில்… சில பெண்கள் அணிந்துவந்த ஆடைகளின்… தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிறங்களும்… அவற்றின் வடிவமைப்பும்… அவனை மிகவும் கவரவே… அதை வடிவமைத்தவரைப் பற்றி அவன் விசாரிக்க… அவள் பெயர் மரகதவல்லி என்று மட்டும் அறிந்துகொண்டான் ஆதி…

அம்மு எப்பொழுதுமே மல்லி என்று சொல்லியே கேட்டிருந்ததால்… அந்த மரகதவல்லிதான் மல்லி என்பதை அறியவில்லை அவன்…

அந்த நிகழ்ச்சி முடியவும்… அந்த உடை மாதிரிகளைப் பற்றிய ஒரு PPT திரையில் ஒளிர… அதை விளக்கிக்கொண்டிருந்தாள் மரகதவல்லி… அத்தனைத் தெளிவாக… அழகாக…

பிரவுன்… மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த… அழகிய வேலைப்பாடு செய்யப்பட்ட… அனார்கலி உடையில்… எளிய நகைகள் அணிந்து… அழகுற நின்றிருந்த அந்தப்பெண்ணைவிட்டு… கண்களைப் பிரிக்கவே முடியவில்லை ஆதியால்…

மாறாக… அங்கே இருந்த அத்தனை மாணவர்களின்… குறிப்பாக… பெண்களின் பார்வை ஆதியையே சுற்றிக்கொண்டிருந்தது… அவனது ஆளுமையுடன் கூடிய தோற்றம் அப்படி…

ஆனால்… அவளது கண்களோ… ஒளிரும் திரையையும்… கீழே அமர்ந்திருந்த பார்வையாளர்களையும்… மாற்றி… மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததே தவிர… மறந்தும்… தனிப்பட்ட முறையில் ஆதியை நோக்கவில்லை…

அதையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஆதி… அவன் மனம் மட்டும் ஏனோ… அவளை நோக்கியே போய்க்கொண்டிருந்தது…

அவளைப் பற்றி அவள் கொடுத்திருந்த… அறிமுகத்தினால்…”இப்பதான் செகண்ட் இயர் படிக்கறா… ரொம்ப சின்ன பொண்ணு… நீ கொஞ்சம் அடங்கு!! ” என அவனது மனசாட்சி வேறு அவனை அடக்க… அதுவும்… திருமணமே வேண்டாம் என்று அவன் எடுத்திருந்த முடிவும் அவனுக்கு நினைவில் வர… தலையைக் குலுக்கி… தன் எண்ணப்போக்கை… புறந்தள்ளினான் ஆதி…

நிகழ்ச்சி முடித்து… அவன் கிளம்பும் தருவாயில்… அங்கே படிக்கும் பெண்களெல்லாம்… செல்ஃபீ எடுத்துக்கொள்ளவென அவனைச் சூழ்ந்துகொள்ள… அந்த மரகதவல்லியும் அவனைத் தேடி வருவாளோ… என்று ஆதியின் கண்கள் அவளைத் தேட…

அவள் பார்வை வட்டத்திற்குள்தான் இருந்தாள் அவள்…

அவள் தோழி ஒருத்தி அவளை ஆதியை நோக்கி இழுக்க… கை எடுத்து அவளைக் கும்பிட்டவள்… அங்கிருந்து விலகிச்சென்று… அங்கே பாதுகாப்பிற்கென நின்றுகொண்டிருந்த… வயது முதிர்ந்த காவலாளி ஒருவரிடம் பேசத்தொடங்கிவிட்டாள்… மரகதவல்லி…

அவனைப் பற்றி கண்டிப்பாக… அவளுக்குத் தெரிந்துதான் இருக்கும்… இருந்தாலும் அவனது உயரத்தைக் கண்டு பிரமிக்காமல்… அவனிடமிருந்து ஒதுங்கிப்போகும் அந்த மரகதவல்லியை… தனக்கு நெருக்கமாகக் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு… அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது…

அடுத்த நொடியே… அவளைப் பற்றிய தகவல்களை சசிக்கு அனுப்பியவன்…

“அடுத்தவருடம்… இந்த காலேஜ்ல… கேம்பஸ் செலக்ஷன் வரும்பொழுது… இந்தப் பெண் நம்ம கம்பெனிக்காக செலக்ட் ஆகியிருக்கணும்” என்ற குறுஞ்செய்தியையும் தொடர்ந்து அனுப்பினான் தேவாதிராஜன்… மரகதவல்லியின் படத்துடன்…