Tk-38
Tk-38
அத்தியாயம் – 38
அதன்பிறகு வந்த நாட்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட பிரபாவும் தன்னுடைய தொழிலைக் கவனிக்கக தொடங்கினான்.. அவனுக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வொர்க் காரணமாக மறுவீடு செல்ல நேரமே இல்லாமல் போனது..
அந்த வீட்டிற்கு ஜெயா இயல்பாக பொருந்தி போனாள்.. அந்த இடைப்பட்ட நாளில் விஜி கனடா சென்றுவிட்டாள்.. கோபிநாத் மற்றும் பிரபாகரன் இருவருக்கும் அவள் இல்லாமல் ஒரு வேலை ஓடாது என்னும் அளவிற்கு அவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள்..
சுந்தரிம்மா வீட்டில் மற்ற வேலைகளைக் கவனித்துக்கொள்ள சமையல் வேலையை தன் கைவசம் எடுத்துக்கொண்டாள் ஜெயா.. அது மட்டும் இல்லாமல் நேத்ரா முழுக்க முழுக்க ஜெயாவுடன் ஒட்டிக்கொண்டாள்.. அவளுக்கு தூங்கும் பொழுது மட்டும்தான் பாட்டி தேவை..
மற்ற நேரத்தில் எல்லாம் ஜெயாவுடன் இருந்தாள்.. நேத்ரா படிப்பது, விளையாடுவது, கதை கேட்பது எல்லாமே அவளிடம்தான்.. ஜெயாவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் ஏதோவொரு சேட்டை செய்துகொண்டே இருப்பாள்.. நாட்கள் அதன் போக்கில் சென்றது..
ஆனந்த் – சுகந்தி இருவரும் மறுவீடு அழைக்க வந்திருக்க தன்னுடைய வேலையைக் காரணம் காட்டி அவன் தள்ளிபோட, “பிரபா நீ ஏண்டா இப்படி பண்ணின..” என்று அவனிடம் காரணத்தைக் கேட்டார் கோபிநாத்..
“மாமா கொஞ்சம் வேலை இருக்கு மாமா.. இந்த வேலை முடிச்சிட்ட ஒரு வாரம் கூட ஊருக்குப் போய் நிம்மதியாக தங்கிட்டு வரலாம்..” என்றதும்,
“சரிங்க மாப்பிள்ளை.. நீங்க உங்களோட வேலை எல்லாம் முடித்துவிட்டு வாங்க..” என்றார் ஆனந்த்.. அவர்கள் இரண்டு நாள் இங்கே தங்கிவிட்டு ஊருக்கு கிளம்பினர்..
அவர்கள் சென்ற பின்னோடு அறைக்குள் நுழைந்த ஜெயாவின் முகம் பார்த்த பிரபா, “என்மேல் கோபமா..?” என்று சாதாரணமாக கேட்க, “இன்னைக்கு இருக்கிற நிலையில் நானே ஊருக்கு போகக் கூடாது என்ற முடிவில்தான் இருந்தேன்..” என்றவளின் செல் சிணுங்கியது..
அதன் திரையைப் பார்த்தும், “ருக்மணிதான்..” என்றதும், “சரி நீ பேசு..” என்று படுக்கையில் படுத்து தூங்கிவிட்டான் பிரபா..
“ஹாய் ருக்கு.. என்ன பண்ற..” என்று இவள் விசாரிக்க, “நான் நல்ல இருக்கிறேன்..” என்றவள் புன்னகைத்தாள்..
“என்ன விஷயம் மேடம்.. எதற்கு இந்த நேரத்தில் போன் பண்ணிருக்கிற..” என்று கேட்க அன்று நடந்த விஷயத்தை அவளிடம் ஒப்பித்தாள் ருக்மணி..
அவள் திருமணம் வேண்டாம் என்று மறுக்க அவளின் அப்பா கோபத்தில் அவளுடன் பேசாமல் இருப்பதாக வருத்ததுடன் கூற, “உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா..” என்று மெல்ல நூல்விட்டு பார்த்தாள் ஜெயா..
“ம்ம் சீனிவாசனை பிடிச்சிருக்கு.. ஆனால் அவரிடம் நான் எப்படி இதை சொல்ல..” என்றவள் தொடர்ந்து, “உன்னோட திருமணம் நடந்த மறுவாரம் என்னை வந்து பார்க்க வந்தார்..” என்றவளின் நினைவுகள் அன்றைய நாளுக்கு சென்றது..
ஜெயாவின் திருமணம் முடிந்த நாளில் இருந்து ருக்மணி தனியாக ஆபீஸ் போய் வந்ததால் அவளுக்கு நேரம் செல்ல மறுத்தது.. அப்பொழுது ஜெயாவின் திருமணம் நடந்த விஷயமறிந்த சீனிவாசன் அவளிடம் பேச நேரில் சென்றான்..
அன்று அவள் ரோட்டில் நடந்து வரும் பொழுது அவளை வழிமறித்து வண்டியை நிறுத்திவிட்டு வண்டியைவிட்டு இறங்கினான் சீனிவாசன்..
“நீங்கதானா..?” என்றவள் சாதாரணமாக பேச, “ஜெயாவிற்கு திருமணம் ஆகிருச்சு என்று சொல்றாங்க..” என்றவன் அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமா ஆகிருச்சு.. இப்போ அதுக்கு என்ன பண்ண முடியும்..” என்று கோபத்தை அவனிடம் காட்டினாள்..
“அவள் இப்போ எங்கே இருக்கிற..” என்று கேட்க, “இங்கே பிரபா வீட்டில்தான் இருக்கிற..” என்றதும், “சரி நான் அவளிடம் பேசிக்கொள்கிறேன்..” என்றவன் வண்டியில் ஏறிச்சென்று விட்டான்..
அதற்கு மறுநாள் அவன் கொடுத்த புத்தகத்தை கையில் வைத்து யோசித்துவிட்டு ருக்மணியே அவனுக்கு போன் பண்ணி, “நீங்க எதற்காக எனக்கு புக் வாங்கி தந்தீங்க..” என்று அவனிடமே நேரடியாக கேட்டாள்..
அவளே தனக்கு போன் செய்த சந்தோஷத்தில் இருந்த சீனிவாசன், “ஏன் என்று உனக்கு தெரியாதா..? நான் ஜெயாவிடம் சொன்னேனே.. அவள் உன்னிடம் சொல்லல..” என்று அவளிடம் விளையாட தொடங்கினான்..
அவனின் விளையாட்டை புரிந்து கொண்ட ருக்மணி, “ம்ம் சொன்ன சொன்னா..” என்றவள் நக்கலடிக்க, “என்ன சொன்னா..” என்று ஆர்வமாகக் கேட்டான் சீனிவாசன்..
“நீ படிக்காத நாவல்கள் எதாவது இருந்தா அண்ணாகிட்ட சொல்லு ருக்மணி.. அவன் உனக்கு வாங்கி தருவான் என்று சொன்னா..” என்றவள் தொடர்ந்து, “நான் சில எழுத்தாளர்கள் நாவல் படிக்கல வாங்கி கொடுங்க..” என்று லிஸ்ட் போட்டு கொடுத்தாள்..
“சீனிவாசன் மறக்காமல் வாங்கி கொடுங்க.. இந்த லிஸ்ட்ல தினமும் ஒரு இரண்டு புத்தகம் போதும்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள், “லூசு.. மெண்டல்..” என்று திட்டிவிட்டு உறங்கி விட்டாள்..
அதன்பிறகு நடந்த அனைத்தையும் தோழியிடம் பகிர்ந்த ருக்மணி, “அப்பா இப்போ நான் எது சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்கிறார் ஜெயா.. எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியல..” என்றவள் அழுகையுடன் கூறிவிட்டாள்..
“அவர் புக் வாங்கி தரும் விஷயம் வீட்டுக்கு தெரியுமா ருக்மணி..” என்று ஜெயா அவளிடம் கேட்க, “அதனால்தான் வீட்டில் பிரச்சனையே..” என்றதும், “என்னடி சொல்ற..” என்று அதிர்ந்தாள்..
“வீட்டில் வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்த அப்பா அவரை பெண்கேட்டு வர சொல்கிறார் ஜெயா.. அவரிடம் இந்த விஷயத்தை நான் எப்படி சொல்ல..” என்று கேட்டாள்..
“சரி நீ அவரை சமாளித்துவிட்டு வேலைக்கு பெங்களூர் வா.. மற்ற விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்றவள் போன் வைத்துவிட்டு யோசிக்க தொடங்கினாள்..
மறுநாள் காலை பிரபா எப்பொழுதும் போல ஆபீஸ் கிளம்ப வேலையை முடித்துவிட்டு அவனோடு சேர்ந்து கிளம்பிய ஜெயா, “அப்பா நாங்க ஆபீஸ் போறோம்..” என்று கோபிநாத் முன்னாடி வந்து நின்றாள்..
“நீ ஆபீஸ் போகவேண்டாம்மா..” என்று அவர் தடுக்க, “அப்பா ப்ளீஸ்ப்பா.. வீட்டில் பொழுது போக போகலப்பா..” என்றவள் சிணுங்க அவரும் கொஞ்சம் யோசிக்க தொடங்க, ஜெயா அமைதியாக அவரின் முன்னே நின்றிருந்தாள்..
பிரபாவிற்கு முக்கியமான போன் வரவே, “ஜெயா இந்த பைலை கையில் வெச்சிரு.. நான் இதோ வர்றேன்..” என்றவன் அவளைவிட்டு நகர்ந்து நின்று போனை பேசினான்..
“சரிம்மா நீ ஆபீஸ் போயிட்டு வா..” என்றவர் அனுமதி வழங்கினார்..
“தேங்க்ஸ்பா..” அவள் புன்னகைக்க, “சாயந்திரம் சீக்கிரம் வந்துவிடு ஜெயா..” என்றவர் சொல்ல, “ம்ம் சீக்கிரம் வந்துவிடுகிறேன்.. நேத்ரா வருவதற்குள் நான் வீட்டிற்கு வந்துவிடுவேன்..” என்றவளிடன் இணைந்து நகைத்தார் கோபிநாத்..
“ஜெயா கிளம்பலாமா..?” என்றவான் அவளின் அருகில் வர, “ம்ம் போகலாம் பிரபா..” என்றவால் கோபிநாத் பக்கம் திரும்பி, “அப்பா டைம்க்கு சாப்பிடுங்க.. நான் வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வருகிறேன்..”என்று அவரை மிரட்டிவிட்டு ஆபீஸ் கிளம்பினாள்..
“மாமாவை எதுக்கு இந்த பாடுபடுத்தற..” என்றவன் காரில் ஏறியதும் கேட்க, “சுகர் மாத்திரை சாப்பிடாமல் எனக்கே டிமிக்கி கொடுக்கிறார்.. அவரை மிரட்டாமல் என்ன செய்ய..” என்று அவனை அதட்டுவிட்டு, “பிரபா காரை எடுங்க..” என்றாள்..
“சரிங்க மேடம்..” என்று பணிவாக பதில் தந்தான் பிரபா..
அவர்கள் இருவரும் சேர்ந்து காரில் ஆபீஸ் உள்ளே நுழையும் பொழுது, “பிரபா காரை நிறுத்துங்க.. நான் அண்ணாவின் ஆபிஸிற்கு போயிட்டு வந்துவிடுகிறேன்..” என்றதும் வண்டியை நிறுத்தியவன், “சீனிவாசன் உன்னோட அண்ணாவா..?” என்று விவரம் கேட்டான்..
“ம்ம் ஆமா பிரபா.. கல்யாணத்திற்கு கூட அவருக்கு சொல்லல.. அதன் போய் பார்த்துட்டு வருகிறேன்..” என்றவள் தொடர்ந்து, “சரி டிரைவர் நீ வண்டியை பார்க் பண்ணிட்டு வேலையை கவனி..” என்றவள் அவனை மட்டம் தட்டிட அவளை முறைத்தான்..
“நான் என்ன உனக்கு டிரைவரா?” என்றவன் கோபத்துடன் கேட்க, “ஆமான்னு சொன்ன என்ன பண்ணுவீங்க..” அவள் கேள்வியாக புருவம் உயர்த்தினாள்..
“உன்னோட காருக்கு நான்தான் போதுமா..” என்று அவளை கையெடுத்து கும்பிட, “என்மேல் பயம் வரணும் இல்ல..” என்றவள் காரைவிட்டு இறங்கிட, “எல்லாம் என்னோட நேரம்..” என்று சிடுசிடுத்தவன் காரை எடுத்தான்..
‘புன்னகை மன்னனுக்கு நக்கலை பாரு..’ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு சீனிவாசன் ஆபீஸ் உள்ளே நுழைய, “வாங்க மேடம்..” என்றவனோ கோபத்தில் முகத்தைத் திருப்பினான்..
“அண்ணா இங்கே பாரு என்னோட நிலையை கொஞ்சம் புரிஞ்சிக்கோ.. திடீரென்று அப்பா கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க.. என்னால ஒண்ணுமே பண்ண முடியல..” என்றவள் எடுத்து சொல்ல,
“அதுக்கு ஒரு போன் பண்ண கூட உனக்கு நேரம் இல்லையா..?” என்றவன் மீண்டும் கோபத்தையே காட்ட, “தப்புதான் பண்ணிருக்கணும்.. ஆனால் நான் வேற யோசனை இருந்தேன்..” என்றவளை முறைத்தான் சீனிவாசன்..
“அண்ணா ஸாரி..” என்றதும், “சரி இப்போ எதற்கு வந்திருக்கிற..” என்று கேட்க, “ருக்மணியை உன்கிட்ட பேச சொன்னேன் பேசினாளா..?” என்று பொறுமையுடன் கேட்டாள் ஜெயா..
அவளுக்கு வாரம் ஒரு பத்து புத்தகம் வாங்கி கொடுக்கிறேன்.. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லைப்ரரி வைக்கும் அளவுக்கு என்னிடம் இருந்து புக் வாங்கிட்டு என்னை சுத்தலில் விட்டுட்டு இருக்கிற..” என்று அவளிடம் உண்மையை உளறிவிட்டான் சீனிவாசன்..
“அண்ணா என்னடா ஒரு மாசத்தில் இவ்வளவு மாற்றமா..?” என்று அவள் புரியாமல் கேட்க, “தினம் போன் பண்ணி பொண்டாட்டி மாதிரி லிஸ்ட் தருகிறாள் தெரியுமா..? அவளுக்கு புக் வாங்கி கொடுத்தே என்னோட பேங்க் பேலன்ஸ் காலி ஆகிரும் போல..” என்றவன் புலம்பிட வாய்விட்டு சிரித்தாள் ஜெயா..
“உனக்கு சிரிப்பு வேற வருதோ.. தினமும் புக் வாங்கி கொடுக்கல என்றால் என்னை பேசியே உயிரை எடுக்கிற..” என்றவன் தொடர்ந்து புலம்பினான்.
அவன் நடந்ததை அவளிடம் சொல்ல, “இப்போ ருக்மணி ஊரில்தானே இருக்கிற..” என்று சந்தேகமாகவே கேட்டாள் ஜெயா..
“ஆமா மேடம் ஊருக்கு போய் ஒரு வாரம் ஆச்சு..” என்றவன் அவளை பார்க்க முடியாத வருத்ததுடன் சொல்ல, “அப்பா, அம்மாயுடன் ஊருக்கு போய் அவங்க வீட்டில் பொண்ணு கேளுங்க அண்ணா..” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் ஜெயா..
அவன் அவளை புரியாத பார்வை பார்த்தவன், “இல்ல அவள் வந்ததும் கேட்டுட்டு அப்புறம் யோசிக்கிறேன் ஜெயா..” என்றதும், “சரி அண்ணா நான் போய் வேலையை கவனிக்கிறேன்..” என்றவள் புன்னகைத்தாள்..
“பிரபா உன்னை நல்ல பார்த்துக் கொள்கிறாரா..?” என்றவன் விசாரிக்க, “ம்ம்..” என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட சீனிவாசன் அவள் சொன்ன விஷயத்தை சிந்திக்க தொடங்கினான்..
அதன்பிறகு வந்த நாட்களில் பிரபா தொழிலில் கொஞ்சம் பிஸியாக இருக்க இரண்டு மாதங்கள் சென்ற பின்னர்தான் பிறந்த வீட்டிற்கு மறுவீடு சென்றனர்..
அவனின் தொழில் பற்றி அறிந்திருந்த ஆனந்த் வீட்டிற்கு வந்த மகளையும் மருமகனையும் நன்றாக கவனிக்க அவர்களின் வீட்டிற்கு இயல்பாக பொருந்தி போனான் பிரபா..
அது மட்டும் இல்லாமல் அவன் கண்ணனிடம் வேற்றுமை இல்லாமல் பேச, “மாமா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன் ஒருநாள் பிரபாவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்..
அந்த வீட்டில் இருந்து கொஞ்சதூரம் சென்றதும், “மாமா நான் உங்களிடம் ஒன்று சொல்லட்டுமா..? நீங்க என்னைத் தவறாக நினைக்க கூடாது..” என்றவன் தயங்க, “என்ன விஷயம் கண்ணா.. நீ சொல்லு..” என்று தென்னந்தோப்பிறகு நடந்தான்..
“ஜெயா என்னோட அக்கா இல்ல..” என்றவன் மெல்லிய குரலில் சொல்ல, ‘என்னிடம் இல்லாத பணமா..?’ என்றவளின் குரல் காதோரம் ஒலிக்க, “நீ என்ன சொல்ற..” என்று அவனிடம் விவரம் கேட்டான்..
அவன் கதையில் படித்த அனைத்தும் அவனின் மனதில் படமாக ஓடிட, ‘பார்த்திபன் – பார்கவி கதாபாத்திரமாக மலர் சித்தரித்தது அவளின் வளர்ப்பு பெற்றோரான இவர்கள் இருவருமா..?’ அவனின் சந்தேகத்திற்கு கண்ணனிடம் பதில் கிடைத்தது..
“அக்காவோட அப்பா அம்மா இருவரும் ஒரு தீ விபத்தில் எதிர்பாராமல் இறந்து போயிட்டாங்க மாமா.. அவங்க சாகும் பொழுது அவளுக்கு ஐந்து வயசு என்று அம்மா சொல்வாங்க.. அவள் ஒண்ணும் சாதாரண பொண்ணு இல்ல..” என்றவன் நிறுத்தி பிரபாவின் முகம் பார்த்தான்..
அவன் அமைதியாக இருக்கவே, “அக்காவோட அப்பா பெரிய கோடிஸ்வரர்.. ஆனால் அந்த பணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அப்பா வந்துட்டார்.. இப்போ கொஞ்சநாள் முன்னாடிகூட அக்காவோட பாட்டி வீட்டிற்கு தேடி வந்தாங்க.. அப்போதான் எனக்கு அனைத்து உண்மையும் தெரியும்..” என்று மனதில் இருப்பதை அவனிடம் சொல்லிவிட்டான்..
பிரபா சிந்தனையுடன் இருக்க, “நீங்க அவளை நல்ல பார்த்துகோங்க.. பாவம் மாமா ஜெயாக்கா.. அவளுடன் வளர்ந்த பாசம் எனக்கு இருக்கு மாமா.. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் உங்களை சும்மா விடமாட்டேன்..” என்று சாதாரணமாக பேச தொடங்கிய கண்ணன் முடிக்கும் பொழுது மிரட்டலுடன் முடித்தான்..
அவனின் பாசமும், ஜெயாவின் மீது இருந்த அக்கறையும் பிரபாவின் மனதினை கவரவே, “உன்னோட அக்காவை நான் நல்ல பார்த்துகொள்கிறேன் கண்ணா.. அதுக்காக தனியாக கூட்டிட்டு வந்து இப்படியெல்லாம் மிரட்டாதே..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்..
அவன் சொன்ன பாணியில் கண்ணனுக்கு சிரிப்பு வந்துவிட, “ஸாரி மாமா..” என்றவன் சிரிக்க பிரபாவின் செல் அடித்தது.. திரையில் தெரிந்த நம்பரைக் கவனித்தவனோ, “கண்ணா ஒரு முக்கியமான கால்.. இரு நான் பேசிட்டு வருகிறேன்..” என்று செல்லை ஆன் செய்து பேசினான்..
மறுபக்கத்தில் அவனுக்கு கிடைத்த செய்தியில் அவனின் முகம் பளிச்சென்று மாறிவிட, “தேங்க்ஸ் சரத்..” என்றவன் போனை வைத்துவிட்டு, “கண்ணா வீட்டிற்கு போலாமா..” என்றவனின் குரலில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது..
“மாமா என்ன விஷயம்.. என்னிடம் சொல்ல மாட்டீங்களா..?” கண்ணன் ஆர்வமாகக் கேட்கவே, “பெரிய கம்பெனிக்கு கிடைக்க வேண்டிய டெண்டர் ஒன்று நம்ம கம்பெனிக்கு கிடச்சிருக்கு.. அதான்..” என்று அவனிடம் போய் சொன்னான்..
“வாவ் சூப்பர் நியூஸ் மாமா..” என்றவனும் உற்சாகமாகிவிடவே, ‘என்னோட காதல் உண்மை பனிமலர்..’ என்று பல நாட்களுக்கு பிறகு அந்த பெயரை உச்சரித்தவன் வீடு வந்து சேர்ந்தான்..
“ஜெயா மாப்பிள்ளை எப்படி உன்னைப் பார்த்துக் கொள்கிறார்..?” என்றவர் அக்கறையுடன் விசாரிக்க, “உன்னோட மகளை தங்க தட்டில் வைத்து தாங்குகிறார் போதுமா..” என்று புன்னகைக்க தாயின் மனம் நிறைத்தது..
அவள் பேசியது பிரபாவின் காதில் விழவே ஒன்றும் பேசாமல் அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.. அவன் வேலைகளை எல்லாம் துல்லியமாக முடித்துவிட்டு நிமிர்ந்த பிரபாவின் பார்வை மனைவியைச் சுற்றி வந்தது..
இந்த இரண்டு மாதத்தில் அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்றாலும் கூட தாமரை இலையில் நீர் போலவே அவர்களின் உறவும் இருந்தது.. ஆனால் இன்று பிரபாவின் மாற்றம் அவளுக்கு புரிந்தாலும் அதற்கான காரணம் புரியாமல் தவித்தாள்..
இரவு அவர்களின் அறைக்குள் நுழைந்தவளோ அவனின் பார்வையில் மாற்றம் உணர்ந்து, “என்ன பாஸ் பார்வையே ஒரு மாதிரி இருக்கு.. என்னவோ சரியில்ல..” என்றவனைக் கிண்டலடித்தாள்..
“ஆமா என்னோட பார்வை சரியில்லதான்.. ஆனால் என்ன பண்ண அழகாக மனைவி அக்கறையுடன் கவனித்தால் கணவனோட மனசும் கொஞ்சம் மாறும் இல்ல..” என்றவன் அவளை பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்..
“இல்ல என்னவோ சரியில்ல..” என்றவள் தொடர்ந்து, “அப்பா போன் பண்ணினார்.. முக்கியமான வேலை விஷயமாக மீட்டிங் ஏற்பாடு பண்ணிருக்கார்.. நம்ம இருவரும் நாளைக்கு ஊருக்கு போகணும்..” என்றவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனின் பார்வையை தன்மேல் நிலைக்க, “பிரபா என்ன விஷயம்..?” என்றவள் நேரடியாக கேட்க, “ம்ஹும்.. நான் சொல்ல மாட்டேன்.. உனக்கே உண்மை புரியும்..” என்றவன் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவனை குழப்பிவிட்டு, “குட் நைட் மலர்க்கொடி..” என்றவன் படுத்து உறங்கிவிட்டான்..
‘திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் இந்த மாற்றம் எப்படி..?’ என்ற குழப்பத்துடன் சிந்தனையில் ஆழ்ந்த ஜெயா எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.. அதன்பிறகு திருச்சியில் இருந்து இருவரும் மீண்டும் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.. அவர்கள் வீட்டிற்கு வந்த ஒருவாரத்தில் அவளின் கேள்விக்கு விடை கிடைத்தது..