Tk43
Tk43
அத்தியாயம் – 43
பெங்களூர் வந்து இறங்கும் வரை தோழியை மறந்திருந்த ஜெயாவிற்கு அப்பொழுதுதான் ருக்மணியின் நினைவே வந்தது..
“ஐயோ இப்போ என்ன பண்றது என்று தெரியல.. இனிமேல் நான் அவளை எப்படி சமாளிக்க போகிறேனோ..” என்று காரில் ஏறியதில் இருந்தே தனியாக புலம்பிக்கொண்டே வந்த மனைவியை குறும்பு புன்னகையுடன் கவனித்தவன்,
“ஜெயா இப்போ எதுக்கு இப்படி புலம்பற..” கள்ளச்சிரிப்புடன் கேட்க, “என்னது புலம்புகிறேனா? அடப்பாவி..” கணவனின் முதுகில் ‘சட்’ என்று ஒரு அடிப்போட்டாள்..
“என்னடா மலர் தனியாக புலம்புதேன்னு கேட்ட மலராமல் என்னோடு அக்கப்போர் பண்ணுது..” என்று தனியாக புலம்பிய பிரபாவோ, “என்னாச்சு ஜெயா..” சாலையில் பார்வையை பதித்தவண்ணம் கேட்டான் பிரபா..
“பிரபா இன்னைக்கு ருக்மணிக்கு மேரேஜ் முடிஞ்சிருக்கும். இப்போ என்ன பண்றது. உன்னோட சிந்தனையிலேயே இருந்ததில் அவளோட திருமணத்தையே மறந்துவிட்டேன்..” என்றவள் வருத்ததுடன்..
மறுகரத்தில் அவளின் கையைப்பிடித்து அழுத்தம் கொடுத்த பிரபா, “ருக்மணி உன்னை புரிஞ்சிக்குவா.. நீ ஃபீல் பண்ணாத மலர்..” என்றான் அவன் நிதானமாகவே..
“திருமணத்திற்கு நான் வருவேன் என்று ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பா..” என்றதும் பிரபா எதையோ நினைத்துகொண்டு வாய்விட்டு சிரிக்க, “எதுக்குடா சிரிக்கிற..” என்று கோபத்துடன் கேட்டாள் ஜெயா..
“அவள் உன்மேல் எங்கே கோபமாக இருக்க போறா, ஏற்கனவே பெருமாள் பெயரில் கணவன் வேண்டும் என்று கேட்டுட்டு இருந்தாள். இப்போ சீனிவாசன் கிடைத்தும் அந்த பெருமாளையே மறந்திருப்பாள்..” என்றவன் மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான்..
அப்பொழுதுதான் அவனுக்கும் ருக்மணி பற்றிய ஒரு விஷயம் ஞாபகம் வர, “மலர் உன்னிடம் சொல்ல மறந்துட்டேன். அன்னைக்கு கோவிலில் என்ன நடந்தது தெரியுமா?” என்றவனை புரியாத பார்வை பார்த்தாள் ஜெயா..
“இந்த விஷயம் நடந்து எப்படியும் ஒரு மூன்று மாசம் இருக்கும். நீ ருக்மணியை இங்கே பெங்களூர் வர சொன்னதற்கு மறுவாரம் நடந்த விஷயம்..” அன்னைக்கு கோவிலில் நடந்த விஷயத்தை அவளிடம் சொல்ல தொடங்கினான்..
அன்று சனிக்கிழமை பிரபா எப்பொழுதும் போலவே கோவிலுக்கு செல்ல அங்கே சீனிவாசனை எதர்ச்சியாக சந்தித்தான். இருவரும் தோளைப் பற்றி பேசியபடியே கோவிலைச் சுற்றி வந்தனர்.
அப்பொழுது பெருமாள் முன்னே நின்று நெய்தீபம் ஏற்றுவதைப் பார்த்த சீனிவாசன், “ருக்மணி மாதிரி இருக்கு..” என்றவனின் பார்வை சென்ற திசையை நோக்கியவனோ, “ஆமா அவள்தான்..” என்றதும் இருவரும் அவளின் அருகில் சென்றனர்.
பெருமாளுக்கு நெய்தீபம் போடும் இடத்தில் நின்று இரண்டு விளக்கை வைத்துகொண்டு, “என்னடா இவள் வாரம் வாரம் ஹனுமானுக்கு தானே விளக்கு போடுவாள். இது என்ன புதுசாக இருக்கு என்று யோசிக்கிறாயா?” அவள் தனியாக பேசிக் கொண்டிருந்தாள்.
“ருக்மணி தனியாக நின்று எல்லாம் புலம்புவாளா?” என்றவன் சீனிவாசனிடம் கேட்க, “அவள் என்ன புலம்பற என்று முதலில் காது கொடுத்து கேளுங்க பிரபா..” என்றான் சீனிவாசன் புன்னகையுடன்..
இருவர் தன்னை நோக்குவது தெரியாமல் நின்றவளோ, “ஹனுமானுக்கு இந்த வாரம் விளக்கு கேன்சல் பண்ணிட்டேன்.. காதலுக்கு தூது போக சொன்னதுக்கு, நான் ராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தூது போவேன் என்று சொல்லிட்டார்..
ஏன் சீனிவாசனுக்கும், ருக்மணிக்கும் தூது போனால் என்ன? முடியாது என்று சொல்லவும் எனக்கு கோபம் வந்துருச்சு.. அதனால இன்னைக்கு அவருக்கு விளக்கு கேன்சல்.. என்ன பெருமாளே நான் சொல்றது சரிதானே..” என்று பக்தியில் முக்தி நின்ற ருக்மணியைப் பார்த்த பிரபாவோ, “என்ன பெருமாளுக்கு மிரட்டல் விடுகிற..” என்று வாய்விட்டு சிரித்தான்..
அவளின் அருகில் சென்ற சீனிவாசன், “ஹனுமான் தூது போக மாட்டேன் என்று சொன்னதும் சீனிவாசனுக்கு பெருமாளையே தூதாக அனுப்ப தயாராகிட்ட போல..” அவன் சிரிக்காமல் கேட்க அவளோ சீரியஸாக பதில் சொன்னாள் ருக்மணி.
“பின்ன வேற வழி. நான் என்ன சினிமாவில் வர மாதிரி அவர் முன்னாடி போய் நின்று வராத வெக்கத்தை கயிற்றை கட்டி இழுத்து நாணி கோணி என்னோட காதலை சொல்ல முடியாது. அதுக்கு இந்த தூது எவ்வளவோ பெட்டர்..” என்றாள் ருக்மணி விளக்கை ஏற்றியபடியே.
அவள் பேசியதைக் கேட்டு பிரபா வாய்விட்டுச் சிரிக்க மற்றொரு பக்கம் சீனிவாசனோ இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்க விளக்கை ஏற்றிவிட்டு திரும்பிய ருக்மணி அங்கே சீனிவாசனைப் பார்த்தும், ‘ஐயோ மாட்டிகிட்டேன்..’ என்று கைகளை உதறினாள்..
அவளை முறைத்த சீனிவாசனோ, “ருக்மணி நீ இன்னும் மாறவே இல்லையா?” என்று கேட்க, “நான் இப்படித்தான்..” என்றவளை இமைக்காமல் பார்த்தவனோ, “அதன் உண்மையை சொல்லாமல் என்னை இப்படி சுத்த விடுகிறாயா?” அவனின் பார்வை ருக்மணியின் மீது நிலைத்தது..
“நான் உங்களை சுத்தலில் விடல. நீங்க வந்து பொண்ணு கேளுங்க..” என்று நேருக்கு நேர் சொல்லிவிட்டு தன்வழி சென்றவளை பார்த்த சீனிவாசனின் உதட்டில் புன்னகை அரும்பியது. அதன்பிறகு ருக்மணியின் வீட்டில் பேசி இருவரின் சம்மதம் கிடைத்தது.
அவர்கள் ஊருக்கு செல்லும் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் ருக்மணி தனது கல்யாண பத்திரிக்கையை அனுப்பியிருந்தாள். இப்படி அனைத்தையும் மனைவிடம் பகிர்ந்தவன்,
“பொண்ணுங்க விளக்கு வைக்கிறேன் என்று சொன்னாலே இனிமேல் எனக்கு ருக்மணியின் நினைவுதான் மலர் வரும்..” என்றவன் வாய்விட்டுச் சிரிக்க, “அவள் அப்படித்தான். இப்படித்தான் ஏதாவது எடக்கு முடக்க வேண்டுதல் வைப்ப..” என்று சிரித்தாள் ஜெயா..
ஆனால் பிரபாவின் சிந்தனையுடனே இருந்த ஜெயாவோ அவளின் திருமணம் பற்றிய நினைவே இல்லாமல் இருந்துவிட்டாள். எப்படியும் ருக்மணி தன்னை அவள் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை ஜெயாவிடம் இருந்தது..
பிரபா வீட்டின் முன்னே காரை நிறுத்திட சத்தம் கேட்டு, “மாமாவும், அக்காவும் வந்துட்டாங்க..”என்றவன் வேகமாக வாசலுக்கு வர அவனின் பின்னோடு ஆனந்த் மற்றும் சுகந்தியும் வாசலுக்கு வந்தனர்.
தம்பியின் முகம் பார்த்ததும் மறந்துவிட்டு, “கண்ணா..” என்ற அழைப்புடன் வேகமாக காரைவிட்டு இறங்க, “வாங்க மாமா. வாங்க அத்தை..” என்ற அழைப்புடன் மறுபக்கத்திலிருந்து இறங்கினான் பிரபா.
“அக்கா எப்படி இருக்கிற..” என்றவன் ஜெயாவின் கையோடு கையைக் கோர்த்துக்கொள்ள, “நான் நல்ல இருக்கிறேன்டா கண்ணா..” என்றாள் அவள் புன்னகையுடன்..
அவளை மேலும் கீழும் பார்த்த கண்ணன், “அக்கா நீ ஏன் ஊருக்கு வரல..” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்கும் பொழுதே அவளுக்கு ஏதோ மாதிரி இருக்க, “கொஞ்சம் வேலை கண்ணா.. அதன் ஊருக்கு வர முடியல..” என்று தன்னால் முடித்தவரை தம்பியை சமாளித்தாள் ஜெயா..
அதற்குள் அவனின் அருகில் வந்த பிரபாவோ, “கண்ணா என்ன மறந்துட்ட இல்ல..” அவனின் தோளில் கைபோட்டான்.
“உங்களை மறக்க முடியுமா மாமா..” என்று கண்சிமிட்டியதும், “நல்ல சமாளிக்கிற..” என்று வாய்விட்டுச் சிரித்தான் பிரபா.
“அப்பா எப்படிப்பா இருக்கீங்க.. அம்மா என்னை மறந்துட்டீங்க..” என்று முதல் வாக்கியத்தை ஆனந்திடம் தொடங்கி சுகந்தியிடம் முடித்தாள் மகள்.
அவளின் மலர்ந்த முகம் பார்த்த சுகந்தி, “உனக்குத்தான் எங்க யாரோட நினைப்பும் இல்ல..” என்றதும் நாக்கைக் கடித்துக்கொண்டு, “அதெல்லாம் இல்லம்மா..” சினுங்கினாள் மகள்..
கண்ணனும், பிரபாவும் பேசியபடியே வீட்டின் உள்ளே சென்றுவிட, “வாப்பா பிரபா பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது..” என்று கேட்க, “சூப்பர் மாமா..” சோபாவில் அமர்ந்தான் பிரபா..
அவனின் பளிச்சென்று மலர்ந்த முகம் பார்த்ததும் அவருக்கு உண்மை புரிந்துவிட, “மீட்டிங் எல்லாம் எப்படி இருந்தது..” என்று கேட்டவர் கம்பெனி நிர்வாகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்..
“மாமா நீங்களாவது அக்காவைக் கூட்டிட்டு கல்யாணத்திற்கு வந்திருந்திருக்கலாம் இல்ல.. பாவம் ருக்மணி அக்கா..” என்றதும் உஷாரான பிரபா, “என்ன கண்ணா சொல்ற?” புரியாமல் கேட்டவனை வேற்றுகிரகவாசிகளை பார்ப்பது போல பார்த்து வைத்தான் கண்ணன்..
பிறகு, “ருக்மணி அக்காவிற்கும், சீனிவாசன் மாமாவிற்கும் திருமணம் ஆன விஷயம் உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்க, “எனக்கு தெரியாதுடா..” என்றான் பிரபா அதிர்ச்சியுடன்..
அதே நேரத்தில் ஜெயாவின் தலையைப் பாசமாக வருடிய ஆனந்த், “என்னடா ருக்மணியோட கல்யாணத்திற்கு கூட வராமல் இங்கேயே இருந்துட்ட..” உண்மையைச் சொன்னால் யாரும் நம்ப போவதில்லை என்று அறிந்தவள், “அப்பா என்ன சொல்றீங்க ருக்மணிக்கு திருமணம் முடிந்ததா?” என்று அதிர்ந்தாள் மகள்..
“ம்ம் அவளுக்கு திருமணம் முடிந்து இப்போ மூன்று வாரத்திற்கு பக்கம் ஆச்சுடா. அவளையும் இங்கே தனிக்குடித்தனம் வைக்க ஜீவன், ரேகா இருவரும் வந்தாங்க. அப்படியே உன்னைப் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் ஜெயா..” என்றார் புன்னகையுடன்.
“இங்கே முக்கியமான மீட்டிங் வேலையாக அவரும், நானும் டெல்லி போயிருந்தோம்..” இருவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.
கோபிநாத், பிரபா, கண்ணன் மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “அப்பா நான் ருக்மணிக்கு போன் பண்ணிட்டு வருகிறேன்..” என்று தனியாக சென்ற மனைவியை கவனித்தான் பிரபா..
ஜெயா – ருக்மணி இருவரின் நட்பு எத்தகையது என்று அவனுக்கு தெரியும். அவளின் கல்யாணத்திற்கு ஜெயா போகவில்லை என்றால் ருக்மணியின் மனநிலை என்னவாக இருக்கும் என்றவன் சிந்தனையுடன் எழுந்து அவளின் அருகில் சென்றான்.
அவளோ முதலில் ருக்மணிக்கு அழைக்க முதல் ரிங் போய் கட்டாகவே, மீண்டும் அழைக்க மீண்டும் ஃபுல் ரிங் போய் கட்டானது. அவள் மீண்டும் மீண்டும் மீண்டும் அழைத்தாள். ஆனால் அவளின் அழைப்பை ருக்மணி எடுக்கவே இல்லை..
அப்பொழுது மெல்ல அவளின் அருகில் வந்த பிரபா, “ஜெயா என்ன பிரச்சனை?” என்று கேட்க, “ருக்மணி போனை எடுக்கவே மாட்டேங்கிற..” கலங்கிய விழிகளுடன் கூறினாள் ஜெயா..
அவளின் மனவலியை புரிந்து கொண்ட பிரபா, “ஜெயா ஒரு நிமிஷம்..” தன்னுடைய போனிலிருந்து சீனிவாசனுக்கு அழைக்க, “ஹலோ பிரபா சொல்லுங்க..” மறுப்பக்கத்தில் அவனின் குரல் தெளிவாக கேட்டது..
“சீனிவாசன் திருமணம் முடிந்துவிட்டது என்று கேள்விபட்டேன். ஸாரி என்னால வர முடியவில்லை..” அவன் மன்னிப்பு கேட்க, “என்ன பிரபா.. நீங்க ஒரு டீலிங் விஷயமாக டெல்லி போனது எனக்குதெரியாதா? அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல..” என்றான் அவன் சாதாரணமாக..
“ஆனால் ருக்மணிதான்..” அவன் இழுக்க, “ஏன் ருக்மணிக்கு என்ன?” அவன் சாதாரணமாக கேட்க, “ஜெயா மேல் சரியான கோபத்தில் இருக்கிற..” என்றான்.
அவனிடமிருந்து போனை வாங்கியவள், “அண்ணா நான் வேண்டும் என்று பண்ணல. சில பிரச்சனைகளில் அவள் அனுப்பிய பத்திரிக்கை தேதி பார்க்க மறந்துவிட்டேன்..” பிரபாவின் இதழ்களில் கள்ளச்சிரிப்பை தோன்றி மறைந்தது.
அவனை முறைத்துவிட்டு, ‘உன்னாலதான் எல்லாம்..’ மனதிற்குள் சிணுங்கியவள் உதட்டை சுளிக்க பிரபாவோ உல்லாசமாக சிரித்து வைக்க சீனிவாசனின் குரல் அவளின் கவனத்தை திசை திருப்பியது.
“நீ மட்டும் மறந்துட்டேன்னு மட்டும் அவளிடம் சொல்லிவிடாதே. அவள் பத்ரகாளியாக மாறுவிடுவாள்..” மெளனமாக இருந்தாள் ஜெயா..
“அக்கா நம்ம ருக்மணி அக்காவின் வீட்டிற்கு போலாமா?” கண்ணனின் குரல்கேட்டு திரும்பிய பிரபா, “ம்ம் போகலாம்..” என்றவன் அவளிடமிருந்த கைபேசியை பிடுங்கியவன், “நாங்க நேரில் வருகிறோம் சீனிவாசன்..” போனை கட் பண்ணினான்.
வீட்டிலிருந்து பெரியவர்கள் மூவரும் அமர்ந்து பேசிகொண்டிருக்க, “அப்பா, அம்மா நாங்க ருக்மணி அக்காவின் வீட்டிற்கு போயிட்டு வருகிறோம்..” என்ற கண்ணனை நிமிர்ந்து பார்த்தார் கோபிநாத்..
“பிரபா முதலில் ஜெயாவை கூட்டிட்டு போப்பா. பாவம் அந்த பொண்ணு அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு கோபத்தில் திரும்பி போனாள்..” என்றார்..
“சரிங்க மாமா..” மனைவியை அழைத்துக்கொண்டு காரில் ஏறியதும் பின் கதவைத் திறந்து காரில் ஏறினான் கண்ணன். அடுத்த கொஞ்ச நேரத்தில் சீனிவாசனின் வீட்டின் முன்னே கார் நின்றதும் காரிலிருந்து வேகமாக இறங்கினாள் ஜெயா..
மூவரையும் பார்த்து புன்னகைத்த ஜீவன், “வாம்மா ஜெயா..” என்றழைக்க, “அப்பா ருக்மணி..” என்றவள் தயக்கமாகவே கேட்க அவளின் குரல்கேட்டு வாசலுக்கு வந்த சீனிவாசன், “வாங்க பிரபா, வா ஜெயா, வா கண்ணா..”என்றழைத்தான்..
அவனை பார்த்ததும், “மாமா நீங்க வான்னு கூப்பிடல என்றாலும் நான் வருவேன்..” என்றவன் வீட்டிற்குள் நுழைய, “நீதானே என்னோட மச்சினன் உனக்கு இல்லாத உரிமையா?” என்றவனை பின் தொடர்ந்தனர் ஜெயாவும், பிரபாவும்..!
அதற்குள் ஹாலுக்கு வந்த ரேகா, “வா ஜெயா.. எப்படி இருக்கிற..” என்று விசாரித்துவிட்டு, “அவள் ரூமில் இருக்கிற இரு கூப்பிடுகிறேன்..” என்றார்..
அதற்குள் அறைக்குள் இருந்து வெளியே வந்த ருக்மணி, “வாடி வா.. உன்னைத்தான் தேடிட்டு இருக்கிறேன். என்னோட கல்யாணத்திற்கு வராமல் இப்பொழுது எதற்கு வந்தாய்..?” என்று கோபத்துடன் சண்டைக்கு கிளம்பிவிட்டாள்..
“ஜெயாக்கா ருக்மணிக்கா உன்மேல் சரியான கடுப்பில் இருக்கிற..” அவன் பங்கிற்கு போட்டு கொடுத்துவிட்டு, “மாமா நீங்க இருவரும் அவங்க சண்டையைப் பாருங்க..” என்று ஜெயாவிடம் தொடங்கி பிரபாவிடம் முடிந்தான்..
“நீ வேற அவளை ஏற்றிவிடாதே..” என்று பிரபா கண்ணனை அதட்ட, “ருக்மணி..” மனைவியை அதட்டிய சீனிவாசனை முறைத்தாள்..
“எங்களுக்கு இடையே நீங்க வராதீங்க. நானும், அவளும் சண்டை போட்டுகொள்வோம். அப்புறம் சேர்ந்து கொள்வோம். அதனால நீங்க இடையே வராதீங்க..” என்று முற்றுபுள்ளி வைத்துவிட்டாள்..
“நல்ல பிரிண்ட்ஸ்..” என்றான் சீனிவாசன்.
அதற்குள் ருக்மணியின் பக்கம் திரும்பிய பிரபாவோ, “ருக்மணி அவளைத் திட்டாதே. நான்தான் அவளை ஊருக்கு கூட்டிட்டு போனேன்..” அவளுக்கு கோபம் வந்துவிட, “ஏன் அண்ணா நான் அவளை எதிர்பார்ப்பேன் என்று தெரியாதா?” என்றவள் ஜெயாவின் பக்கம் திரும்பினாள்..
“என்னைவிட நேற்று வந்த இவர் உனக்கு முக்கியம். நான் முக்கியம் இல்ல..” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.. தோழியின் கோபம் பற்றி அவள் அறியாத விஷயமா?
“ருக்மணி..” என்று ஜீவன் மகளை அதட்ட, “அங்கிள் விடுங்க. ருக்மணி சொல்றதுதான் சரி. நீங்க அமைதியாக இருங்க..” அவனின் பக்கம் திரும்பியவள், “உங்கமேல் சரியான கடுப்பில் இருக்கேன். அப்புறம் நான் ஏதாவது சொல்லிட்டா நீங்க வருத்தப்படக்கூடாது..” என்று மிரட்டினாள்..
ஜெயா அமைதியாக நின்றிருக்க, “ஏய் நீ ஏன் கல்யாணத்திற்கு வரல..” என்று கேட்க, “அம்மா தாயே நான் வராமல் போனது தப்புதான். இந்த என்னோட கிப்ட்..” அவளின் கையில் ஒரு பார்சலைக் கொடுக்க, “மாமா அக்கா ஏதோ பிளான் பண்ணிட்ட..” என்றான் கண்ணன்.
அந்த பார்சலை பிரித்து பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிய, “ஹே ஜெயா உன்னோட புக் வந்துவிட்டதா? சூப்பர்டி..” என்று மற்றத்தை மறந்துவிட்டு தோழியை அணைத்துக்கொள்ள தலையில் அடித்துக்கொண்டான் சீனிவாசன்..
“ஏண்டா தலையில் அடிச்சிக்கிற..” பிரபா புரியாமல் அவனிடம் கேட்க, “இன்னைக்கு நைட்டும் புக்கை கையில் தூக்கி வெச்சு படிக்க உட்கார்ந்து விடுவா.. அப்போ என்னோட நிலைமை?” முகத்தை பாவமாக வைத்திருக்க வாய்விட்டு சிரித்தான் பிரபா..
அதுவரை இருந்த கோபம் மறந்து, “விடு ஜெயா! குடுப்பத்திற்கு நுழைந்த பெண்களோட வாழ்க்கையே இப்படித்தான்.. சோ அதற்காக எல்லாம் நான் கோபடல கொஞ்சம் வருத்தம்..” என்றாள்..
மலைபோல வந்த பிரச்சனை பனிபோல விலகியதில், “ஹப்பாடா இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு..” என்றாள் ஜெயா..
அதன்பிறகு அங்கே கொஞ்சநேரம் இருந்துவிட்டு மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.. மறுவாரமே தாய், தந்தை, தம்பி மூவரும் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர்..
பிரபாகரன் பழையபடி வேலையை தொடங்க, சுந்தரியம்மா தன்னுடைய பேத்தியுடன் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட ஜெயா வீட்டின் பொறுப்புகளை கவனித்துக் கொண்டாள்..
சீனிவாசன் அவனின் வேலையைக் கவனிக்க அவனுக்கு துணையாக நின்றாள் ருக்மணி. நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்ல ஜெயாவின் மனதில் பாரம் ஏறிக்கொண்டே சென்றது.
அந்த பாரம் தாங்க முடியாமல் ஒருநாள் மயங்கி சரிய அவளைத் தாங்கிக் கொண்டான் பிரபா. அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்தும் பிரபா சந்தோஷத்தின் உச்சியில் நின்றான்.. அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் சந்தோசம்.. சந்தோசம்.. சந்தோசம் மட்டுமே..!