TN-6

TN-6

               துளிர்விடும் நேசமடி  – 6

எனது நெஞ்சத்தில் நேசத்தின்

விதைகளை விதைத்தவள் எங்கே

இருக்கிறாளோ என்று குழம்பினேன்

இதோ நான் உன் கண்ணின் முன்னே

என்று நேரில் வந்தாயடி பெண்ணே..

அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது நிமிர்ந்து பார்த்த பானுமாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.. கிராமத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு வழக்கம்.. தங்களுக்கு நன்றாக பழகியவர்கள் தங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டுமே வீட்டின் உள்ளே அழைத்து செல்வார்..

மற்றபடி தங்களுக்கு தெரிந்தவர்கள், புதியவர்கள் அனைவருக்கும் வீட்டின் முன்னே திண்ணை இருக்கும் அதில் அமர் வைத்து பேசி அனுப்பிவிடுவார்.. இது எதற்கு என்று சிலர் யோசிப்பதும் உண்டு.. கிராமத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருப்பதால் அவளை பாதுக்காக்க இது ஒரு வழக்கமாக வைத்திருப்பார்கள்..

அவரின் பார்வையின் பொருள் உணர்ந்த மகிழன் வீட்டின் வாசலில் நின்றுவிட, “தம்பி நீங்க யாரு..?” என்று கேட்டபடியே எழுந்து வாசலுக்கு வந்தார் பானுமா.. அவரின் முகத்தையே பார்த்த மகிழன் சிலநொடி மட்டும் அமைதியாக நின்றான்.. அவனின் அமைதிக்கு காரணம் புரியாமல் அவனையே பார்த்தார் பானுமா..

அவனின் மனமோ, ‘இந்த பாட்டியோட மனசை சரி பண்ண இன்னும் எத்தனை பொய்தான் சொல்லணுமோ..’ என்று நினைத்தவனுக்கு அவர் சின்ன வயதில் அவனுக்காக செய்யும் வேலைகளும் ஒரு நொடி கூட பிரியாமல் அவனின் அருகில் இருந்த நினைவுகளும் மனதில் படமென ஓடியது..

“பாட்டி நான் பாரியூரில் இருந்து..” என்று சொல்லவும் அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னாடியே, “ஓ நீங்கதான் அந்த மேனேஜர் வேலைக்கு வந்திருப்பதா..?” என்று கேட்டவர், “உன்ன பார்க்க தானே ஐயா கிளம்பி வந்தாரு..” என்று சொல்லவும் மகிழனுக்கும் அவர் சொல்ல வருவது புரிந்ததும்,

“பாட்டி அவருதான் என்னை வீட்டுக்கு போக சொல்லி அனுப்பினாரு..” என்று சொல்லவும் மகிழனின் முகத்தை பார்த்தார் பானுமா.. அவனின் பார்வையில் இருந்த உண்மை புரிந்ததும், “வாப்பா வந்து உள்ளே உட்காரு..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்..

“அடியே பொன்னுத்தாய் இந்த தம்பிக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா..” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் பானுமா.. அவரின் அழைப்பில் புன்னகையோடு வீட்டின் உள்ளே நுழைந்தான் மகிழன்..

பானுமாவிடம் இருந்து தப்பித்து மேலே வந்த வளர்மதி, “என்ன ராக்கம்மா வேலை முடிஞ்சதா..?” என்று கேட்டதும் அவளை நிமிர்ந்து பார்த்த ராக்கம்மா, “அடியே மனுஷங்கள வேல வாங்கவே பிறந்திருக்கியோ..?” என்று கேட்டதும், “ஆமா அதுக்கு என்ன இப்போ..?” என்று அதிகாரப் பாவனையோடு கேட்டாள்..

அவளின் முகத்தைப் பார்த்தவள், “பெரியவீட்டம்மா உன் மேல பாசமாக இருக்காங்க என்று நம்பாதே.. அப்புறம் ஒரு நாள் நீயும் ஏமாந்து போவ..” என்று கூறியவளை முறைத்த வளரு, “அதபத்தி நீ கவலைபடாத ராக்கம்மா.. அது நடக்கும் போது பார்த்துக்கலாம்.. இப்போ நீ வேலைய பாரு..” என்று கூறினாள்..

கிராமத்து ஆட்கள் எதர்ச்சியாக சொல்லும் விஷத்தை எல்லாம் வளரு பெருசாகவே எடுக்கவே மாட்டாள்.. அவளுக்கு எப்பொழுது சந்தோசமாக இருக்கணும்.. அதுவும் பானும்மா பக்கத்தில் இருக்கணும்.. இதை மட்டும் மனதில் வைத்து யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்கவே மாட்டாள்..

“ஆமா நாங்க எல்லாம் சொல்றது உன்னோட மரமண்டைக்கு ஏறாதே..” என்று ராக்கம்மா சலிப்புடன் சொல்ல அவளின் முகத்தைப் பார்த்த வளர்மதியோ, “யாருக்கு தெரியும்.. நீ பொறாமைல கூட சொல்லுவ..” என்று சொல்ல ராக்கம்மா அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்..

அதற்கு எல்லாம் பயப்படாத வளரு, “என்ன ராக்கு கோப வருதாக்கும்..?” என்று படுகேலியாக கேட்டவள், “நீ எத சொன்னாலும் அத நாங்க கண்ணா மூட்டிட்டு நம்பணுமாக்கும்.. அதுக்கு எல்லாம் வேற ஆள பாரு.. நானும் சேவூர் காரியாக்கும்.. என்கிட்ட உன்னோட ஆட்டம் எல்லாம் செல்லாதிடி ராக்கம்மா..” என்று சொல்லிவிட ராக்கம்மாவுக்கு பேச வழியில்லாமல் போனது..

பானுமாவைப் பற்றி யார் சொன்னாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவாள்.. அவளுக்கு தெரியும் பானுமாவின் மனம் என்னவென்று.. அதனால் யார் என்ன சொன்னாலும் சொன்ன இடத்திலேயே அதை மறந்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க போய்விடுவாள்..

“ஆமா அது என்ன அந்த இடத்த நீ கூட்டவே இல்லையா..? அங்கன பாரு எவ்வளவு தூது கிடைக்குதுன்னு..” என்றவள் சொல்ல, “ஏன் ஊரில் இருந்து உன்னோட மாமன் வரானாக்கும்.. மூளை முடுக்கு எல்லாம் பார்த்து பார்த்து சுத்தம் பண்ண சொல்றவ..”என்று அவளும் துடுக்காகவே கேட்டாள்..

அவளின் கேள்வியில் சிரித்த வளரு, “ஆமா அப்படிதான் வெச்சுக்கோ.. யார் வேண்டான்னு சொன்னது.. என்ன பானுமா முன்னாடி இத வந்து ஒரு மொற சொல்லு அப்பறம் நடப்பத பார்க்கலாம்..” என்று அவளை வம்பில் மாட்டிவிட முடிவெடுத்தாள் வளர்மதி..   

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்த ராக்கம்மா, “அடியே வளரு என்னை வேலை செய்ய விடுடி.. இவ என்னவோ இந்த வீட்டுக்கு ராணி மாதிரி நெனச்சிட்டு நம்மள போட்டு படுத்தி எடுக்கிற..” என்று சலிப்புடன் கூறினார்..

“ஆமா நான் இந்த வீட்டு ராணிதான்.. அதுக்கு இப்போ நீ என்ன ராக்கம்மா..” என்று இடையில் கையூன்றி அவளை வம்பிழுக்கும் நோக்கத்தோடு கேட்ட வளரின் முகம் பார்த்தவர், “அடியே நீ முதலில் அறையவிட்டு வெளிய போடி.. மனுஷனை ஒழுங்கா வேல செய்ய விடு.. ஆத்தாவுக்கு மட்டும் கோபம் வந்துச்சு அப்புறம் என் பாடு பேரும் பாடுதான்..” என்று பயத்தோடு கூறினார் ராக்கம்மா..

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த வளரு, “சரி ராக்கம்மா நான் வாரேன்.. நீ சீக்கிரம் வேலைய முடி..” என்று சொல்லிவிட்டு அவள் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல ராக்கம்மா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் தன்னுடைய வேலையை தொடங்கினார்..

அந்த அறையைவிட்டு வெளியே வந்த வளர்மதி சுற்றிலும் தன்னுடைய பார்வையைச் சுழற்ற அங்கே யாரும் இல்லாததை கவனித்தவள் அங்கிருந்த படிக்கட்டில் வேகமாக இறங்க ஹாலில் ஒலித்த பழைய பாடல் அவளின் காதுக்களின் தெளிவாக கேட்டது..

முதல் படியில் சரோஜாதேவி போலவே இறங்கியவள் என்று ஜடையை தூக்கி பின்னால் போட்டுவிட்டு, “அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா..?” என்று அந்த படிகளின் வரிசையாக குதிக்க ஆரம்பித்தவள், “அன்னநடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா..?” என்று அடுத்த வரியைப் பாடியவள் மெல்ல நடந்தபடியே இறங்கினாள்..

ஒவ்வொரு வரிக்கும் மாடி படிகட்டின் இந்த பக்கமும் அந்த பக்கமும் சரோஜாதேவி போலவே நடந்தவள், அடுத்தடுத்த படிகளில் வேகமாக குதித்தாள்.. அடுத்த வரிக்கு அடுத்த படியில் நின்று, “ஓ ஓகோ ஒகோஓஓ..” என்று பாடியவள் தனக்கு எதிரே வந்த மகிழனை கவனிக்காமல் அவனுக்கு எதிரே வந்து “ஜங்..” என்று குதிக்கவும் மகிழன் அப்படியே நின்றுவிட்டான்..

அவள் அவனுக்கு நேர் எதிரே குதித்துவிட வீட்டின் உள்ளே வந்த மகிழன் அவளின் இந்த செயலில் அதிர்ந்து அடுத்த நொடியே அவளை நிமிர்ந்து பார்க்க அவளை அடையாளம் கண்டுகொண்டவனின்  உதடுகளில் ரகசிய புன்னகை அழகாக மலர்ந்தது.. அவளைப் பார்த்ததும் மனதில் துளிர்விட்ட நேசத்தின் சாயலை உணர்ந்தவனுக்கு அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற என்ன தோன்றிவிட்டது..

அவன் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்தானே தவிர தன்னெதிரே வந்து அவள் குதிப்பால் என்ற அவன் கனவிலும் நினைக்கவில்லை.. அதே நினைவோடு அவன் அவளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.. இதுவரை மகிழன் எந்த பெண்ணையும் இப்படி விழியால் அளவேடுதத்தே இல்லை.. ஆனால் வளர்மதியை மட்டும் அவனின் பார்வை ஒருவிதமான உரிமையோடு தழுவியது.. அது எந்த உரிமை என்று அவனுக்கே புரியவில்லை..

நெற்றில் நேரடேத்து இரட்டை ஜடையாக மடித்து கட்டிய அவளின் கூந்தல் அவளின் மார்போடு உறவாட, பாலில் கலக்கப்பட்ட மஞ்சளை போலவே இருந்த அவளின் நிறமும், வட்ட முகமும், காதில் தொங்கிய ஜிமிக்கி தொடும், வில்லென்று வளைந்த புருவமும், மை தீட்டிய கண்கள் இரண்டும் மீன் போல காட்சியளிக்க, அவளின் மூக்கின் இடதுபுறம் அவள் அணிந்திந்த மூக்குத்தி அவனின் கண்ணை கவர்ந்தது.. பன்னீர் ரோஜாவின் இதழில் செய்யப்பட்டது போல இருந்த இரண்டு இதழும், அவளின் அழகுக்கு அழகு அவள் அணிந்திருந்த பாவாடை தாவணியும் அவனின் இதயத்தில் நீங்காது இடம் பிடித்தது அவளின் உருவம்..

அவளையே கண்ணெடுக்காமல் பார்க்க அவனின் பார்வை வளர்மதியை ஏதோ செய்ய, ‘ச்சீ இவனென்ன இப்படி பார்க்கிறான்..’ என்று நினைத்தவள், “யோவ் உனக்கு கண்ணு இரண்டு நல்ல தானே இருக்கு.. நான் எதிரே வந்து குதிப்பதைப் பார்த்தாவது நீ நகர்ந்து நிற்ககூடாதா.. சரியான மங்க மடையனாக இருப்பான் போல..” என்று கூறியவளைப் பார்த்தவனுக்கு அதுவரை இருந்த மனநிலை மாறிவிட அவளை முறைத்தான் மகிழன்..

அவள் வந்து குதித்த சத்தம்கேட்டு நின்று திரும்பிப் பார்த்த பானுமாவிற்கு பார்த்ததும் புரிந்து போனது.. அவள் வழக்கம் போலவே இன்றும் மாடிப்படிகளில் இருந்து குதித்தபடியே இறங்கினாள் என்று..! “அடி கழுத உனக்கு எத்தன மொற சொல்றது.. இப்படி படிக்கட்டில் குத்திபடி இறங்காதே இறங்காதே என்று..” என்று அவளைத் திட்டியதைப் பார்த்து மகிழன் சிரித்தான்..

அவனின் சிரிப்பில் அவனின் முகத்தைப் பார்த்த வளர்மதி அவனை முறைக்க, அவனின் முறைப்பை கவனித்த பானுமா, “அவனை எதுக்குடி மோரைக்கரவ.. படிக்கட்டில குதிச்சி விளையாடும் வயசா இது..” என்று கேட்டதும், மகிழன் வளரின் முகம் பார்க்க அவளோ அவனை முறைத்தபடியே நின்றாள்..

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகிழன், “என்ன பாட்டி நடுவீட்டில் மோகினி பிசாசை எல்லாம் உலாவ விட்டிருக்கீங்க..?” என்று சிரிப்புடன் கேட்டான்.. அவனின் கேள்வியில் அவளின் இயல்பான துடுக்குத்தனம் தலை தூக்க, “யோவ் உனக்கு என்ன ஏத்தமா..? என்ன பார்த்த மோகினி பிசாசு போல இருக்கோ..?” என்று அவனிடம் எகிறியவளைப் விழிகளில் அளவேடுத்தவன்..

தன் பக்கத்தில் இருப்பது தன்னுடைய பாட்டி என்பதை கூட மறந்து அவளை தழுவிய அவனின் பார்வை அவளின் நெஞ்சான்கூட்டை ஏதோ செய்தது.. அவனின் பார்வை அவளுக்குள் செய்யும் மாற்றம் புரிந்தும், அது என்ன என்று புரியாமல் நின்றாள்..

அதன்பிறகு அவளைப் பார்த்த மகிழன், “பத்து பொருத்தமும் பக்காவாக இருக்குடி..” என்று சொல்லி அவளின் கோபத்தை ஏற்றிவிட்டான்.. அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு கோபம் வந்து அவள் திட்டும் முன்னாடியே, “ஏய் வளரு.. என்னடி வாய் நீளுது.. நீ முதலில் போ..” என்று சொல்ல அவனை முறைத்துவிட்டு, ‘இருடா மகனே உனக்கு இருக்கு கச்சேரி..’ என்று நினைத்தவள் பானுமாவின் பக்கம் திரும்பினாள்..

அவளின் பார்வையும் பயப்படாமல் அவள் பேசிய பேச்சும் அவனுக்கு ரொம்பவே பிடித்தது… இயல்பிலேயே அவள் வாய் துடுக்கு என்பதை அவள் பேசியதுமே உணர்ந்து கொண்டான்.. முதல் பார்வையிலேயே மனதில் விதையென விழுந்து துளிர்விட்டவள், இப்பொழுது அவனின் மனதில் வேர்விட ஆரம்பித்தாள்..!

இவனை மாட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே பானுமாவின் பக்கம் திரும்பியவள், “அது எல்லாம் விடு பானுமா..” என்றவள் சொல்ல, “அதவிட்டுட்டு இப்போ என்ன பண்ணனும்..?” என்று அவளை முறைத்தபடியே கேட்டார் பானுமா.. இருவரின் இயல்பான பேச்சு மகிழனுக்கு ரொம்பே பிடித்தது..

இருவரையும் பார்த்த மகிழன் புன்னகை முகம் மாறாமல் அங்கு நடக்கும் வாக்குவாதத்தை கவனிக்க தயாரானான்.. “இல்ல பானுமா.. எங்களுக்கு இடையே புகுந்து பேச்சை மாற்றி என்னை கிளம்ப சொல்றீயே.. ஒரு வேலை இந்த பனமரம் தான் உன்னோட பேரனோ..?” என்று கேட்டதும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்த மகிழனுக்கு  தூக்கிவாரிப் போட்டது..

‘இவ என்ன நேரில் வந்து பார்த்தது போலவே சொல்ற..’ என்று நினைத்தவனுக்கு அவள் தன்னை, ‘பனமரம்..’ என்று சொன்னது மறந்து போனது.. மகிழன் பானுமாவின் முகத்தை கேள்வியோடு பார்க்க தன்னருகே நிற்பது தன்னுடைய பேரன் என்று அறியாத பானுமா அவளுக்கு பதில் நோக்கில் பேச தொடங்கினார்..

“வளரு என்னப்பா பாரு என்னோட பேரனை வம்பிழுப்பதே உனக்கு வேலயா போச்சுடி..” என்று எப்பொழுது போலவே கூறினார்.. “ஆமா பானுமா.. உன்னோட பேரன நான் வம்பிழுக்கமா வேற யார் வருவா வம்பிழுக்க..” என்று இடையில் கையூன்றி அவரைப் பார்த்து திரும்பிக் கேட்டவளின் கேள்வியில் திகைத்து நின்றான் மகிழன்.. அவனின் மனமோ, ‘உன்ன முன்ன பின்ன பார்க்காதவ என்ன பேச்சு பேசற பாரு..’ என்று அவனை ஏத்திவிட்டது..

இருந்தாலும் அவளின் இயல்பான துடுக்கு அவனுக்கு பிடிக்க அவனும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே, ‘என்னோட பாட்டியை கண்டு பயப்படாமல் பேசறாளே இவ யாரு..’ என்று யோசிக்கும் பொழுதே அங்கே வந்து சேர்ந்தார் பொன்னுத்தாய்.. அவரைப் பார்த்த மகிழனுக்கு, ‘இவங்கள நான் எங்கையோ பார்த்திருக்கேனே..’ என்று யோசித்தது..

அவர் வந்ததும், ‘ஐயோ இவளோட வாயை நான் என்ன பண்ண போறேனோ.. ஏழுகழுத வயசானாலும் இவளோட துடுக்கு தனத்தை மட்டும் குறைக்காம இருக்காளே..’ என்று மனதிற்குள் ஒரு தாயென்ற முறையில் தவித்தவர், “ஏய் வளரு வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்ட..?” என்று கேட்டதும், “பொன்னுத்தாய் நீ கம்முன்னு நில்லு நான் இவளை என்னானு கேக்கிறேன்..” என்று சொல்லி அவளின் வாயை அடைத்தவர்,

“அவன் மட்டும் வெளிநாட்டில இருந்து வரட்டும் உன்னோட மொத்த வாயை அப்படியே அடைக்க சொல்றேனா இல்லையான்னு பாரு..” என்று அவரும் அவளுக்கு சரிக்கு சரி பதில் கொடுத்தார்.. ‘இது என்ன என்னை வைத்து பெரிய பட்டிமன்றமே நடக்குது..?’ என்று  நினைத்தபடி வளரின் முகத்தைப் பார்த்தான்..

இதுவரை இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இன்று அவனின் மனதில் தோன்றிவிட, ‘இதுக்கு இவ என்ன பதில் சொல்ல போறாளோ..’ என்று நினைத்தவன் வளரின் முகத்தை அவன் பார்க்க அவளோ “ஆமா இவங்க பேரன் வந்து என்னோட வாயை அடச்சிட்டாலும்..” என்று மெல்லிய குரலில் அவள் முணுமுணுக்க அது மகிழனின் காதில் தெளிவாகவே கேட்டது..

அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு மனம் அவள் சொன்னதை உண்மையாக மாற்ற நினைக்க அவனின் மனதில் எச்சரிக்கை மணி பலமாக அடித்தது.. இவனின் மனம் புரியாத பானுமா வளரைப் பார்த்து, “அடியே அங்கே என்ன முணுமுணுப்பு..?” என்று பானுமா அவளை அதட்ட்டினார்..

“அதுவா பானுமா உன்னோட பேரன் வந்து என்னோட வாயை அடைக்க போறானா.. அதுக்கு அவனுக்கு தில்லு இருக்க இருந்த அவனை கிளம்பி வர சொல்லு..” என்று கூறியவள் பானுமாவைப் பார்த்து கண்ணடித்து, “இந்த சாக்கை வெச்சாவது என்னோட மாமானோட முகத்த ஒரு முறை பாத்துகிறேன்..” என்று சொல்ல பானுமாவின் முகம் மாறிவிட்டது..

 இதையெல்லாம் அமைதியாக நின்று கவனித்த மகிழன் அவள் சொன்னதைக்கேட்டு  அதிர்ச்சியில், ‘அடிபாவி.. இவ என்ன இந்த அளவுக்கு வாய் பேசறா..?’ என்று நினைத்துக்கொண்டு அவளையே அவன் பார்த்தான்.. அப்பொழுது அவனை பார்த்த வளரு, “அப்போ இவன் உன்னோட பேரன் இல்லையா..?” என்று கேட்டதும் மகிழனுக்கு ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட அவன் அமைதியாக நின்றுவிட்டான்..

“இவன் என்னோட பேரன் இல்லடி.. கொஞ்ச நேரத்தில இருந்த இடத்த ஒருவழி பண்ணிட்டா.. முதலில் போடி.. போயி வேலைய பாரு..” என்று வளர்மதியை அதட்டி அனுப்பி வைக்க மகிழனைத் திரும்பிப் பார்த்தவள், “பனமரம் நாளைக்காவது பார்த்து வா.. நான் நிதமும் அதே மாதிரிதான் பண்ணுவேன்..” என்றவள் சொல்ல அவளின் தலையில் நறுகென்று கொட்டினார் பொன்னுத்தாய்..

அதைப்பார்த்த மகிழன், ‘இவள ஏன் எனக்கு இந்த அளவுக்கு பிடிக்குது..’ என்று யோசிக்க அவளோ அவனை முறைத்துவிட்டு திரும்பியவள் அங்கேயே நிற்பதைப் பார்த்து “நீ முதலில் போடி..” என்று மகளை அதட்டிய அவளை அனுப்பி வைத்தவருக்கு வயிறு பக்கென்றது..

ஒரு தாயாக மகளைப் பார்த்த பொன்னுத்தாய்க்கு மகிழனின் வரவு வயிற்றில் நெருப்பை கட்டியது போலவே இருந்தது.. அவர் அந்த பயத்தோடு இருக்க வீட்டின் உள்ளே நுழைந்தான் மகிழன்.. பானுமா நின்று மகிழனின் முகம் பார்க்க அவன் வாசலைப் பார்க்காமல் அவரை பின் தொடர்ந்தான்..

மகிழனின் மனதில் துளிர்விட்ட நேசம் வளரும் பிறையாகுமா..? இல்லை கருகும் செடியாகுமா..?

துளிர்விடும் நேசம் தொடரும்….

 

error: Content is protected !!