UEJ-36(2)

UEJ-36(2)

கௌதம், தனது செல்லம்மாவிடம் கேட்க வேண்டிய விசயத்தை, எப்படி கேட்பது, அதற்கு வரும் பதில் என்னவாய் இருக்கும்? என்பதை பற்றியே யோசனையில் இருந்ததால், வெகு நேரம் தன்னை சுற்றி நிகழ்வதை கவனிக்காது இருந்தவன், சற்று சுயம் பெறவும், அவனுக்கு பின் ஏதோ அசைவது போன்று தோன்றிடவும் சரியாக இருக்க, திரும்பியவன், நிச்சயமாய் அந்த நிலையில் ஆரனை, அவனின் செயலை எதிர்பார்க்கவில்லை, அதுவும் இன்று..  இந்த நேரத்தில்…. என்பது அவனின் அதிர்ந்த தோற்றமே வெளிப்படுத்தியது…

 

“டேய் ஆரா! என்னடா பண்ணற இங்க..?!” என அதே அதிர்ச்சியில் கௌதம் கேட்க, அதுவரை யாருமில்ல இடத்தை பார்த்து, பலவிதமான பாவனையை செய்வதும், இல்லை என்பதாய் தலையசைப்பதுமாய் செய்து கொண்டிருந்த ஆரன், திடீரென கேட்ட கௌதமின் குரலில் சட்டென திரும்பியவன்,

 

“டேய், நீ என்னடா பண்ணற இங்க..?!” என அதையே திருப்பி கேட்க,

 

“களை எடுக்க வந்தேன். அடுச்சேன்னு வைய்யி.. ஆமா, நீ எதுக்கு இப்ப இங்க வந்து, மோனோ ஏக்ட் பண்ணிட்டு இருக்க?!” என கௌதம் கேட்டதும்,

 

“நா கேட்டதற்கு பதில் சொல்லு, இங்க என்ன பண்ணற?! காயத்ரி தேடுவா,  நீ போ..” என அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது, அவனை அனுப்ப பார்க்க,

 

அவனின் பதிலில் யோசனையோடு அவனை பார்த்த கௌதம், “ஆரா, என்னடா பிரச்சனை உனக்கு?!  நானும் கல்யாணமுன்னு சொன்ன நாளுல இருந்து, பார்த்துட்டு தான் இருக்கேன், ஏதோ ஒரு விசயத்த, மனசுல போட்டு குழப்பிட்டு இருக்க. என்ன விசயம்? எதுவானாலும், யாராவது கிட்ட ஷேர் பண்ணிட்டா, உனக்கு தோனாத தீர்வு கூட அடுத்தவங்களுக்கு தோணும்.. சொல்ல நினச்சா சொல்லு.. இல்ல..” என இழுத்தவன், அங்கிருந்து நகர போக,

 

அவன் கையை பிடித்து நிறுத்தியவன், “கௌதம், எனக்கு நீ கல்யாணமுன்னு சொன்னதும், முதல்ல மனசுல வந்தது ஹரிணியோட முகம் தான். ஆனா, நீ அவள பார்த்திருப்பேன்னு நா யோசிக்கல.. நைட் புல்லா யோசிச்சு, நீ எது செஞ்சாலும் சரியா இருக்குமின்னு தான், ஓகே சொன்னேன். காலைல நீ ஹரிணி தான்னு சொன்னதும், சந்தோஷமா இருந்தாலும், சில விசயத்த நினச்சா, அவ முடிவு எப்படி இருக்குமின்னு பயந்து தான், அவ சம்மதிச்சிட்டாளான்னு கேட்டேன்.

 

அவ சம்மதம் சொல்லிட்டான்னு சொன்னாலும், ஒருவேளை, நீ போய் கேட்டதாலையோ! அல்லது அவங்க அம்மா போர்ஸ் பண்ணதாலையோ! சம்மதம் சொல்லிட்டு, எங்க நா பேசினா மறுத்திடுவாளோ ன்னு தான், கல்யாணம் வரைக்கும் ஒதுங்கி, அவகூட பேசாம இருந்தேன். ஆனா, இப்ப அதுவும் தப்போன்னு தோனுதுடா… அதான் எப்படி அவகிட்ட பேசன்னு…..!” என இழுக்க…

 

அவன் மனதில் ஹரிணியை நினைத்திருக்க, தான் அவளையே பெண்ணாய் தேர்ந்தெடுத்ததால் எல்லாம் சரியாகி விட்டது, ஒருவேளை ஹரிணிக்கு பதிலாய், தான் வேறு பெண்ணை காட்டியிருந்தாலும், அவன் எனக்காக அந்த பெண்ணை ஏற்றிருப்பான் என்பதை, அவனின் வார்த்தைகளில் உணர்ந்த கௌதமிற்கு, ஆரன் தன் மீது வைத்திருக்கும் நட்புக்கும், நம்பிக்கைக்கும் இந்த உலகத்தில் ஈடுடாக எதுவும் இல்லை என்ற கர்வம் தோன்ற, அவனின் கரத்தோடு, தன் கரம் கோர்த்தவன்,

 

“ஆரா, உண்மையிலேயே உன்னை மாதிரி ஒருத்தன் நண்பனா கிடைக்க நா கொடுத்து வைத்திருக்கணும். அதே மாதிரி, நீ நல்ல கணவனாவும் இருக்கறதுக்கான, எல்லா தகுதியும் இருக்குன்னு, நம்பி மட்டும் தான் ஹரிணி உன்னை கல்யாணம் செஞ்சிட்டா! அது நூறு சதவீதம் உண்மை..! வீணா மனச போட்டு குழப்பிக்காம, போ போய் நல்லபடியா வாழ்க்கைய துவங்கு…” என்றிட..

 

கௌதமின் வார்த்தையில், சிறு தைரியமும், நம்பிக்கையும் துளிர்க்க, அங்கிருந்து விலகி செல்ல போனவன், திரும்பி, “ஆமா, நீ இங்க என்ன, நிலா கூட டூயட்டா பாட போற.. அங்க காயத்ரியும் தான் உனக்காக வெயிட்டிங்.. போ நீயும்..!” என்றதும்…

 

அதுவரை, ஆரனிடம் பேசிய போது இருந்தது போல இல்லாமல், கொஞ்சம் பதட்டத்தோடு, “இல்லடா ஆரா, ஒரே டென்ஷனா இருக்கு. அதான்…!” என்றிட..

 

“என்ன டென்ஷனா..!!! அடேய், இது உலகமகா அநியாயம்டா.. எதையோ புதுசா செய்யறவன் மாதிரி இல்ல இருக்கு, நீ சொல்றது.. நீயே டென்ஷன்னு சொன்னா, நானெல்லாம் அதுல…” என சொன்னவனின், அடுத்த வார்த்தை வெளிவரும் முன்பு, அவனின் வாயை கையால் அடைத்தவன்,

 

“ஆரா வேணாம், என் நிலைமை புரியாம கலாய்க்காத.. போடா, போய் உன் வேலைய ஆரம்பி.. நானும் போறேன்!” என்றவன், அவனுக்கு முன்பு படியிலிறங்கி சென்றுவிட, சிறு புன்னகையோடு, தனது அறையை நோக்கி சென்றான் ஆரன்…

 

முதலிரவிற்கான, சகல அலங்காரத்தோடு இருந்த அறைக்குள் நுழைந்த ஆரனுக்கு, கௌதம் பேச்சில் வந்த தைரியம் மெல்ல விடைபெறுமோ?! என்ற நிலை வர, “ஆரா, எல்லாமே சரியா நடக்கும்..”  என்று உருப்போட்டபடி வந்தவன், கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்து உறங்கியிருந்த ஹரிணியை பார்த்த போது, ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் சிறு ஏமாற்றம் எழுவதை தவிர்க்க தான் முடியவில்லை.

 

“கிடச்ச டைம்ல பேசாம, இந்த நேரத்துல, எதெதுக்கோ ஒத்திகை பார்க்கறத விட்டுட்டு, பேச ஒத்திகை பார்த்தா, இப்படி தான் கவுந்தடுச்சு தூங்கனும். உனக்கு தேவை தான்…!” என்று வாய்விட்டே சொன்னவன், மறுபுறம் வந்து படுக்க, தூக்கம் தான் எட்டிப்போனது அவனுக்கு…

 

“அச்சோ, என்னடா ஆரா ஆச்சு உனக்கு.. படுத்ததும், தூங்கம் வருமேடா.. இப்ப இப்படி பண்ணுதே…!” என புலம்பியவன், அவள் புறம் திரும்பி படுத்தான்.

 

“ஆரா, இவளுக்கு இந்த தலைகாணிய, இல்ல, இந்த டெட்டிய கட்டிபிடிச்சு தூங்கற பழக்கம் இருக்குமா..?! அப்படி இருந்தாலாவது, நமக்கு ச்சான்ஸ் இருக்கு…!” என்று சொல்லியபடி, அவளையே பார்த்திருக்க, நேரம் கடந்த போதும், அசையாது படுத்திருந்தவளின் மேல் சிறிது கடுப்பு தோன்றியது.

 

“என்ன இவ, கொஞ்சம் கூட அசையாம படுத்திருக்கா..  கும்பகரணன் தங்கச்சி மாதிரி..! படுத்தவ நம்ம சைடா புரண்டு வந்தாலாவது, ஒட்டி படுக்கலாமுன்னா…  கட்டிலோட முனையில, கீழ விழற மாதிரி படுத்தவ, அசையாம இருக்காளே…! ஐய்யோ…!!!” என்றுபடி, எழுந்து அமர்ந்து தலையில் கைவைத்தவன், திரும்பி அவள் புறம் பார்க்க,

 

அவளுக்கு நேர் எதிரில் இருந்த, ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில், ஹரிணி சிரிப்பை அடக்கியபடி படுத்திருக்கும் கோலம் தெரிய, ‘அடப்பாவி, முழிச்சிட்டு தான் என்னைய புலம்ப விட்டருக்கா!’ என்று அவளின் நடிப்பை கண்டு கொண்ட ஆரன்,

 

“அச்சோ, ஓவரா தலை வழிக்குதே.. நைட் இருந்த டென்ஷன்ல சரியா சாப்பிடல, இப்ப பசி வேற…!” என சத்தமாக புலம்பியபடியே, அவன் பக்கமாய் படுக்க போக, அவன் முன்பு நீண்டது பால் அடங்கிய டம்ளர்..

 

கை நீட்டிய அடுத்த நொடி, ஒருகரத்தால் பால் டம்ளரை இடம் மாற்றிவிட்டு, மறுகரம் கொண்டு அவளின் இடைவலைத்தவன், அவளின் மேல் படர.. ஆரனின் அதிரடியை எதிர்பார்க்காத ஹரிணி, பதட்டத்தில் அவனிடமிருந்து விலக பார்த்தாள்.

 

அவளின் விலகலை உணர்ந்த உடனே, ஆரனும், “சாரி.. சாரி ஹரிணி…!” என்றபடியே விலகி அமர, இப்போது குழம்பி போவது, ஹரிணியின் முறையாகி போனது.

 

ஆசையோடு அணைத்தவன், இப்படி மன்னிப்போடு விலக காரணம் புரியாது அவனை கேள்வியாய் பார்த்திட, அவளின் முகம் பார்க்காமல், “சாரி… ரியல்லி சாரி… உன்னை பற்றி தெரிந்தும்.. சட்டுன்னு… சாரி..!” என அவன் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க, அவனின் புலம்பலுக்கும், விலகலுக்கும் காரணம் புரியாது இருந்தவளுக்கு, ‘உன்னை பற்றி தெரிந்தும்!’ என்ற வார்த்தை, அவளின் கடந்தகாலத்தை நினைவில் கொண்டுவர, கண்ணில் நீர் வடிய துவங்கியது.

 

அதனோடே, “நீங்க எதுக்கு சார் சாரி சொல்றீங்க? எனக்கு தெரியும், நீங்க கௌதம் சார் சொன்னதுக்காக தான், என்னை கல்யாணம் செஞ்சிட்டீங்கன்னு…!  இத்தன நாளா, நீங்க, என்கூட பேசாம விலகி இருந்த போதாவது, நா புருஞ்சுக்கிட்டு, இந்த கல்யாணத்த மறுத்திருக்கனும்…! அதவிட்டு, உங்கள தர்மசங்கடத்துல நிறுத்திட்டேன். கொஞ்சம் டைம் கொடுங்க.. நா, வேற வேலை தேடிட்டு மொத்தமா, உங்க வாழ்க்கையில இருந்து போயிடுறேன். கலங்கப்பட இருந்த என்னை மாதிரி பொண்ணு, உங்களுக்கு வேணாம் சார்… நீங்க மனசார வாழ ஆசை படற வாழ்க்கை, நீங்க உயிரா நினைக்க தகுந்த மாதிரி பொண்ணு, சீக்கிரமே உங்களுக்கு கிடைப்பா..!” என அழுகையோடு பேசி முடித்து, மெத்தையிலிருந்து எழுந்தவளின்  வார்த்தையில் முதலில் திகைத்த ஆரன்,

 

அவளின் தவறான புரிலை எண்ணியும், தான் பேசாமல் போனதால் வந்த வினையையும் எண்ணி நொந்தவன், “ஹரிணி உக்காரு..!” என்றதும், அமராமல் நின்றவளை பார்த்து, “ஐ செட் சிட் டவுன்…!” என்று அதட்டல் போட, மிரட்சியோடு அவனை பார்த்தபடி அமர்ந்தவளை நோக்கி,

 

“முதல்ல இந்த சார் ன்னு கூப்பிடறத விட்டொழி.. அடுத்து, நா உன்னை கலங்கப்பட இருந்தவளா பார்த்து ஒதுங்கி போகல.. அதோட தாக்கம், உன்னை எந்த அளவு பாதிச்சிருக்குன்னு தெரியாம, உன்னை அணுக கூடாதுன்னு நினச்சிருந்தேனே ஒழிய, உன்னை விலக்கி நிறுத்தவோ, வேற யாரையும் மணக்கவோ நா நினைக்கல..

 

கௌதம் கேட்டதால மட்டும் இல்ல, உன் மேல உள்ள, நேசத்தாலையும் தான் இந்த கல்யாணம் நடந்துச்சு…!” என்றதும், அவன் நேசத்தை சொன்னதும், இதுவரை வழிந்த கண்ணீரோடு, தனது கடந்தகாலம் குறித்து, மனதில் இருந்த கலக்கமும் விடைபெற,

 

“நிஜமாவே, என்னை உங்களுக்கு பிடிக்குமா?!” என்று ஆர்வத்தோடு கேட்டவளை பார்த்தவன்,

 

“பிடிக்குமுன்னு வார்த்தையால சொல்றத விட, செயலால காட்டினா நல்லா இருக்குமின்னு, நா நினைக்கிறேன் நீ என்ன நினைக்கற?! என தனது தேவையை அழகாய் கேட்டிட, ‘சம்மதம்..!’ எனும் விதமாய், ஹரிணி தலையசைத்தும், அவளை தன் அணைப்பில் கொண்டு வந்தவன், அடுத்து வந்த ஒவ்வொரு நொடியும் உணர்த்தியது, அவள் மீதான, அவனின் அழகான காதலை மட்டுமே..

 

எப்படியான கணவன் வேண்டும் என்று ஆசை கொண்டாளோ, அதே போன்று, தன் மனதை நன்கு புரிந்து, தன்னை உணர்ந்து, தனக்கு அவனின் மனதை புரியவைத்து பின், தன்மீது உரிமையை நிலை நாட்டியவன் மீதும், அவன் காட்டிய புது உலகிலும் மயங்கியவள், அவனின் கையில் நெகிழ்ந்து, கரைந்திருந்தாள் அடுத்து வந்த காலை வரையிலும்…

 

இடையில், எங்கே அவனின் காதல், அவனின் கருப்பு பக்கத்தை கொண்டு, இந்த திருமணம் நிகழ்த்த விடாது போகுமோ?! அல்லது ஹரிணியின் மனநிலையில் ஆரனை முழுதாய் ஏற்க தயாராய் இல்லை என்பதை தன்னிடம் காட்டிவிடுவாளோ?!’ என்று அஞ்சி, தன்னை தவிர்த்ததையும் சொல்லிட, அவனின் மனநிலை நன்கு புரிந்து போனது ஹரிணிக்கு…

 

உண்மையான, நேர்மையான கணவன் கிடைத்த நிம்மதியும், சந்தோஷமும் அவன் கேட்ட அனைத்தையும் விட, அதிகமாகவே செய்திட ஹரிணியை தூண்ட, அவர்களின் அறையில் அடுத்து கேட்ட அனைத்தும், சிங்கார சிணுங்களும், சிரிப்பொலியும் மட்டுமே….

 

*****

 

கௌதம், தனது அறைக்கு சென்ற போது,  பால்கனியில் இருந்த தூணில் சாய்ந்தவாறு, வானத்து நிலவை வெறித்தபடி நின்றிருந்தாள் அவனின் செல்லம்மா. அவளை நோக்கி செல்லும் போதே, அவளின் தோற்றம் அவனை கவர, அவள் உடுத்தியிருந்த அழகிய ஷாப்ட் சில்க் சேலையும், மாலையில் சூடிய மல்லிகையும், கழுத்தில் இன்று காலை அவன் கட்டிய மாங்கல்யமும், அவனின் குழப்பத்தை ஒத்தி வைக்க, அந்த இடத்தை நேசமும், மோகமும் ஆட்கொண்டது..

 

நின்றிருந்த செல்லம்மாவிடம் சென்றவன், மெல்ல அவளை பின்னிருந்தே அணைக்க, அவனின் நெருக்கத்தில் அவனின் மார்பில் தனது முதுகு படிய சாய்ந்தவளின் கண்கள் நிலவை வெறிப்பதை விடுத்து, மெல்ல மூடிக்கொண்டது, அடுத்து நடக்க போவதை அனுமானித்தது போன்று….

 

அவளின் கூந்தல் மலரின் வாசம், அவனை மேலும் கிறங்கடிக்க, அதனை வாசம் பிடித்தபடியே, தனது இதழால் அவளின் முதுகில் கோலம் போட்டவனின் செயலில், செல்லம்மாவின் உடலில் தோன்றிய சிலிர்ப்பு, ஆணாய் அவனை கர்வம் கொள்ள வைக்க, அவனின் இதழ்கள் மெல்ல கழுத்து வளைவில் பயணிக்க துவங்கியது.

 

அவளை மெல்ல தன் புறம் திரும்பியவன், மூடியிருந்த அவளின் விழியில் தனது இதழ் முத்திரையை பதிக்க, இன்னும் அவளின் மேனி இளக்கம் கொண்டது… அதை உணர்ந்தது போன்று, மேலும் தன் உடலோடு அவளை சேர்த்து,  ஒருகரத்தால் அணைத்து பிடித்தவன், மறுகரத்தால், அவளின் மேனியின் மென்மையை உணர துவங்க, இதழ்களும் அதற்கு போட்டியாக, அவன் கரம் பயணித்த பாதையில் தொடர்ந்தது.

 

அவனின் செயலில் மொத்தமாக, தன் பிடிமானத்தை இழந்தவள் தேகம் தடுமாற, அவளை கரத்தில் அள்ளி எடுத்து கொண்டு, அந்த பால்கனி கதவை, தனது காலால் மூடியவன், அவளோடு தனது மெத்தையில் சரிந்தான்.

 

அவளின் ஆடைக்கு விடை கொடுத்து,  அதற்கு பதிலாய் தன்னையே ஆடையாக்கியவனின் வேகத்தில் சற்று மிரண்டாலும், அவனின் வேகத்தை ஏற்கனவே நன்கு அறிந்தவள் என்பதால், அவனின் செயலுக்கு வழிகாட்டி, அனுமதி தந்தவளின் செய்கையில், அவள் மீதான பித்து கூடி தான் போனது அவளவனுக்கு…

 

அன்று, தன் கணவனாய் தெரியாத போதே, அவனின் தேவை மட்டுமே முக்கியமாய் கருதியவள், இன்று அனைவரின் மத்தியிலும், தாலியை அதுவும் அவளின் இஷ்ட தெய்வமாம் பெருமாளின் முன்பு அணிவித்து, சரி பாதியாய் அறிவித்தவனின் செய்கைக்கா தடையாகிட போகிறாள்?!!

 

அவனின் செயலில், அவளின் சிணுங்களும், முனங்களும் அவனுக்கு புது வேகத்தை தந்திட, அவனை தடுக்கவும் இயலாது, தவிர்க்கவும் இயலாது அலையின் ஓட்டத்தில் ஆடும் படகாய் தத்தளித்தாள் பாவையவள்..

 

அவனின் தேவை அனைத்தும் தீர்ந்தும், செல்லம்மாவிடமிருந்து விலகாது, அவளை தன்னோடு இறுக்கியவன், கரங்களும், இதழ்களும் மட்டும் இன்னும் கட்டுக்குள் அடங்குவதாய் இல்லையோ..?! என்ற எண்ணம் தான் காயத்ரியிடம்….

 

அவள் தடை போட போட, அதன் வேகம் கூடுவதை உணர்ந்தவள், அமைதியாகிட அதுவே அவனின் அடுத்த செயலுக்கு அச்சாரமாகி போனது.. கூடலில் அவள் அவனின் பேர் சொல்லிடும் ஒவ்வொரு முறையும், கேட்க தூண்டும் கேள்வி, எங்கே இந்த இதமான சூழலை கொடுத்திடுமோ?! என்று அஞ்சியவனாய் அதை விடுத்து முழுதாய் மூழ்கி போனான் அவளுள்ளே….

 

********

அதிகாலை பகலவன் வரும் முன்பே, துயில் கலைந்த காயத்ரிக்கு, தன்னை அணைத்துக்கொண்டு, சிறு பிள்ளை போல் உறங்கும் கௌதமை காண, ‘இரவில் அவ்வளவு சேட்டை செய்தவனா, இவன்!’ என்ற எண்ணம் எழாமல் இல்லை…. அதே நினைவோடு, அவனின் நெற்றியில் இதழ் பதிக்க, தூக்கத்திலும் அவனின் இதழ்கள் மலர்ந்தது தன்னவளின் முத்தத்தில்…

 

அவன் புன்னகை முகத்தை பார்த்துவிட்டு, மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அடுத்து மடமடவென தனது வேலையை முடித்து கீழே வந்தாள், அம்மு எழுவதற்குள் செய்ய வேண்டியவற்றை முடித்திடும் நோக்கில்….

 

அவளுக்கு நன்கு தெரியும், அம்மூ கண்விழித்த நொடி, அவள் ஆரனை தேடுவாள் என்பது.. இன்றைய பொழுதில், அதற்கு சாத்தியம் இருக்குமா?! என்பது தெரியாத நிலையில், தான் அருகே இருந்தால் மட்டுமே, சச்சும்மாவால் அவளை சமாளிக்க இயலும் என்பதை கருத்தில் கொண்டு, விரைவாக வந்திட, அதற்கு தேவையே இல்லை என்பது போல் இருந்தது, ஆரன் ஹாலில் அமர்ந்திருந்த விதம்…

 

அவனை பார்த்தவளுக்கு, ஒரு நொடி எல்லாம் சரியாக தான் நடந்திருக்குமா? என்ற எண்ணம் தோன்றிட, அதை ஆரனிடம் கேட்க இயலாது என்பதால், ஹரிணியை தேட, அவளோ தலையில் துண்டோடு, பூஜை அறையில் விளக்கேற்றி, பூஜைக்காக தயார் செய்து கொண்டிருந்தாள். அவளிடம் விரைந்த காயத்ரி, “ஹரிணி, இதெல்லாம் நா வந்து செஞ்சிருப்பேனே..! நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்த?” என அவர்கள் வாழ்க்கை துவங்கியிருக்குமா, என்ற சிறு அச்சத்தோடும், சந்தேகத்தோடும் கேட்க,

 

“அக்கா, அதனால என்ன, உங்கள மட்டும் செய்யவிட்டுட்டு, நா அவர்கூட சந்தோஷமா இருக்க முடியுமா…?! இனி எதுவானாலும், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம், ஓகே வா?” என்றவளின் வார்த்தையில், அவர்கள் வாழ்க்கை துவங்கிவிட்டது என்பது மட்டும் தெளிவாக, அதுவே காயத்ரிக்கு அதுவரை இருந்த பயத்தை போக்க, ஹரிணியை அணைத்து விடுவித்தவள்,

 

“எனக்கு, நீங்க சந்தோஷமா இருந்தா போதும், இதெல்லாம் இப்பவே நீ செய்யணுமின்னு இல்ல.. சரியா, போ போய் ஆரன் கூட இரு..! நா, சாமி கும்பிட்டு காபி தர்றேன்” என்று ஹரிணியின் கன்னத்தில், மென்மையாய் தனது கரம் பதித்து சொன்னவளிடம்…

 

“அக்கா.. மறுபடியுமா…! நோ வே…!! என்னால முடியாதுப்பா… அவர சமாளிக்க! மை காட், அவரு இப்படி பேசுவாறு, இப்படி ரியாக்ட் பண்ணுவாறுன்னு.. கனவுல கூட நினச்சதில்ல.. நா..! எப்பா, எப்படி சமாளிக்கறதுன்னே தெரியலக்கா….” என்றவளின் வார்த்தையில் இருந்த சலிப்பு, கொஞ்சமும் குரலில் இல்லாததை உணர்ந்த காயத்ரிக்கு சிரிப்பை அடக்க இயலாது, வாய் விட்டு சிரிக்க, அதன் பின்பே, தான் சொன்னதன் அர்த்தம் புரிய, ஹரிணிக்கு வெக்கத்தால் முகம் சிவந்து போனது.

 

“அக்கா…  நா, அத மீன் பண்ணி சொல்லல..!” என சிணுங்கலாக சொல்லி, காயத்ரியிடம் செல்லம் கொஞ்ச, “சரி, சரி.. நீ, எதையும் சொல்லல.. நா கேட்கல.. ஓகே..!” என புன்னகையோடு சொன்னவள், அடுத்து பூஜையை முடித்து சமையலறைக்கு சென்று, அனைவருக்கும் காபி போட்டவள்,

 

“ஆரனுக்கு கொடுத்துட்டு, நீயும் குடிடா.. அம்மூ வர்றதுக்குள்ள, நா போய் அவருக்கும் கொடுத்திட்டு வந்திடுறேன்!” என்றிட, சரியென்றவள் வெளியேற காயத்ரியும், தனது அறையை நோக்கி சென்றாள்.

 

காயத்ரி வரும் போது, கட்டில் காலியாக இருக்க, “அதுக்குள்ள எழுந்துட்டாரா? பாத்ரூம் கதவும் திறந்து தான் இருக்கு! பால்கனியில இருப்பாரோ?!” என்றபடியே, காபி கப்பை, டீப்பாய் மீது வைத்துவிட்டு, பால்கனியை நோக்கி செல்ல நினைத்த நேரம், பின்புறமாய் வந்து அணைத்த தன்னவன் ஸ்பரிஷத்தில், முகம் சிவந்தவள்,

 

“கௌதம், என்ன இது விடுங்க.. விடிஞ்சிடுச்சு.. போங்க.. முதல்ல குளிச்சிட்டு வாங்க!” என்ற அவளின் எந்த வார்த்தையும் காதில் விழாதவாறு, தனது செயலில் குறியாக இருந்தவனை, அதட்டி மிரட்டி, அம்மு பேர் சொல்லி, குளிக்க அனுப்புவதற்குள் போதும் போதுமென்றானது காயத்ரிக்கு…

 

அப்போதும் கூட, சின்ன குழந்தை போல, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, நிலத்தை ஒரு காலால் உதைத்துவிட்டு, சென்றவனின் செய்கையில் சிரித்தபடி அறையை சுத்தம் செய்ய துவங்கினாள் காயத்ரி…

 

“செல்லம்மா, டவல் எடுக்கல…!” என கத்திய கௌதமின் குரலில், செய்து கொண்டிருந்த வேலையை விட்டு, “இத கூட எடுக்காம தான் போவீங்களா..? வர வர அம்மு கூட, பிக் கேர்ள் மாதிரி பிகேவ் பண்றா..! நீங்க தான், இப்படி !” என்று சலித்தபடியே டவலை நீட்ட, அடுத்த கணம் அவனோட நின்றிருந்தாள் ஷவரின் அடியில்…

 

“அச்சோ, என்ன செய்யறீங்க.. விடுங்க முதல்ல.. நா ஏற்கனவே குளிச்சாச்சு..!” என்றபடி திமிரியவளை, தனது இதழும், கரமும் கொண்டு அடக்கியவனை, மீறி விலகி வெளியே வரும் போது மொத்தமாய் நனைந்திருந்தாள் கௌதமின் செல்லம்மா…

 

“கௌதம் உங்கள என்ன செய்ய..?! ப்ராடு..!!” என்றபடியே உடை மாற்றி, அவன் வருவதற்கு முன்பே வெளியேறி இருந்தாள், அவன் எங்கே மீண்டும் ஆரம்பித்து விடுவானோ?! என்ற அச்சத்தில்…

 

கீழே வரும் போதே, ஹரிணியின் பார்வையில், தனது உடைமாற்றத்தால் வந்த சிரிப்பை கண்டதும், இப்போது முகம் சிவப்பது காயத்ரியின் முறையாகி போனது.. காயத்ரியோடு சமையறைக்கு சென்றவள், அவளை கேலி செய்து ஒருவழியாக்க.. அன்றைய காலை அவ்வளவு நிறைவானதாக ஆகிபோனது.

 

“டாடீ….!” என்றபடி வந்த, அவர்கள் வீட்டு இளவரசியின் சத்தத்தில், பெண்கள் இருவரும் தங்கள் பேச்சை நிறுத்தி வெளிவர, “டாடீ, ஹதிணி மம்மியும் இனி இங்க தான் இதுப்பாங்களாமே, சச்சும்மா சொன்னாங்க..?!” என்று தனது கேள்வி கேட்கும் படலத்தை, காலையிலேயே அழகாய் துவங்கினாள் ஆரனின் பட்டு…

 

“ஆமாம்டா பட்டு, இனி நீ, நா, ஹரிணி, அப்பா, காயு எல்லாருமே ஒண்ணா தான் இருக்க போறோம்..!” என்றதும், “அய்…!!! ஜாலி..!!!” என்றவளின் சந்தோஷ கூச்சலில் அந்த இல்லமே அதிர்ந்தது.. அடுத்து அவளோடே வந்த சச்சும்மா, அவளை சுத்தப்படுத்தி, உடை மாற்றவென அறைக்கு அழைத்து சென்றார்.

 

சமையலுக்காக மீண்டும் சமையலறைக்குள் செல்ல போன காயத்ரியை, மேலிருந்தே “செல்லம்மா…..!!!!”  என்று அழைத்த கௌதமின் குரல் நிறுத்த, ஹரிணியின் கிண்டல் பார்வையில், எப்படி மேலே செல்வது என்று யோசனையோடு நின்றவளை, கௌதம் அதற்குள் பலமுறை கத்தி அழைக்க, ஹாலில் அமர்ந்திருந்த ஆரனோ, “ஏய் மாமி! கௌதம் கூப்பிடுறான்.  என்னன்னு போய் பாரு!” என அவனும் சொல்ல, ஆரனை சமாளிக்கும் நோக்கில்…

 

“ஆரன், அவருக்கு தலைவலிக்குதுன்னு சொன்னாரூ. அதான், ஸ்ராங்கா காபி போட்டுட்டு போல..” என்ற வார்த்தை முடிக்கும் முன்பே, பாதிபடிக்கு சென்றிருந்த ஆரனை பார்த்தவளுக்கு, ‘அச்சோ போச்சு! வேற எதையாவது சொல்லாம, தலைவலின்னு சொல்லிட்டோமே..?! அதனால தான் ஆரன் பதட்டத்தோட இப்படி போறாரூ..! ஆண்டவா, எதுவும் ஏடாகூடமா ஆகாம காப்பாத்திடு!!” என்ற வேண்டுதலோடு அவனை தடுக்கவென காயத்ரி விரைய,

 

காலை முதல் நடப்பதை உன்னிப்பாக பார்த்திருந்த ஹரிணிக்கு, அனைத்தும் புரிந்ததால் ஆரன் வாங்க போகும் பல்புக்காகவே அவளும் அங்கு விரைந்தாள்….

 

மாடிபடியில் ஆரன் வரும் சத்தம் கேட்டதும், வருவது காயத்ரி என்ற எண்ணத்தில், சிறிது நேரத்திற்கு முன்பு போலவே, கதவின் பின் நின்ற கௌதம்,  வருவது ஆரன் என்பதை உணராது போக, கதவை அவன் திறந்த நொடி, இழுத்து கதவோடு நிறுத்தி, அவனுன் கன்னத்தில் இருகரம் பதித்து, இதழை நோக்கி நெருங்கியவனின் செயலில் அதிர்ந்த ஆரன்… “அடேய்…. என்னடா செய்ற…..?!!!!” என்றபடி, வேகமாய் கௌதமே தள்ளி விலக்கிட.. ஆரனின் குரலுக்கு அடுத்தே, அங்கு நிற்பது செல்லம்மா அல்ல என்பது கௌதமிற்கு புரிய… செய்த செயலால் தோன்றிய வெக்கத்தோடு, அசட்டு சிரிப்பை உதிர்த்தவனின் முகம், காலை சூரியனின் வருகையில் சிவந்திடும் வானத்திற்கு ஒப்பாகி போனது..

 

ஆரனின் பின்னே வந்த இருவருக்கும், அங்கே  என்ன நடந்திருக்கும் என்பது புரிய, சிரிப்பை கட்டுப்படுத்தவே இயலவில்லை.. அனைவரும் சிரிக்க ஆரன் மட்டும், நடந்த நிகழ்ச்சியின் அதிர்வில், பேந்த பேந்த விழிக்க, அது இன்னும் மற்றவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது..

 

நடந்ததிலிருந்து வெளி வந்த ஆரன், “கௌதம், உன்னை….” என்றபடி துரத்த, “ஆரா, நீ வருவேன்னு நினைக்கலடா!”  என்று சிரித்தபடியே அவன் கரத்தில் சிக்காதவாறு, கௌதம் விலகி ஓட,  

 

“ஒரு செக்கண்ட், நா சுதாரிக்காம போயிருந்தா…. எல்லாரும் சொன்னது மாதிரி, ‘அவனா நீ?!’ ங்கற மாதிரி ஆகியிருக்குமோடா.. லூசு!!!”  என்றபடி மேலும் துரத்த, அந்த அறையே போர்க்களம் போல ஆகிபோனது நொடியில்…

 

சிறிது நேரத்திற்கு பின், ஓய்ந்து அமர்ந்த இருவருக்கும் நடந்ததை நினைக்கும் போது, அவர்களாலேயே சிரிப்பை அடக்கிட முடியாது போக, சிரித்து ஓய்ந்தவர்கள், மொத்தமாய் கீழே வந்தனர். காலை உணவிற்கு பின், அனைவரும் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வர, மதியம் வரையிலும், அந்த இல்லமே கலகலப்பிலும், சிரிப்பொலியிலும் நிறைந்து போனது..

 

எல்லாரிடமும் பேசி சிரித்தாலும் கௌதம் முகம் மட்டும் அவ்வப்போது, எதோ சிந்தனையில் இருப்பதை கண்ட செல்லம்மாவும், அவனின் முகத்தையே பார்த்திருக்க, ஆரன், ஹரிணி இருவரும் அம்முவோடு அங்கிருந்து விலகி சென்றனர், எதுவானாலும் அவர்கள் பேசி தீர்க்க வேண்டியதை செய்து கொள்ள ஏதுவாக…

 

அவர்கள் விலகி சென்றதை உணர்ந்த காயத்ரியும், இப்போது கௌதமிடம் பேச வேண்டிய தேவையை கருதி, அவர்கள் விலகலை பொருட்படுத்தாமல், “கௌதம், என்ன ஆச்சு?! என்ன யோசனை.. ?!” என்று அவனுக்கு அருகே சென்று அமர்ந்து கேட்க,

 

“செல்லம்மா, நா வந்த நாள்ல இருந்து உன்கிட்ட கேட்க நினச்சது தான்!” என்றவனுக்கு, கேட்க வந்ததை எப்படி கேட்க என தயங்கி நிறுத்த, “கௌதம், எதுவானாலும் மனசுல தயவு செஞ்சு வச்சுக்காதீங்க, அதனால வந்த சிக்கலும், பிரச்சனையும் போதும்.. இனியாவது எதையும் ஓப்பனா சொல்லுங்க!”? என்றிட…

 

தனது கண்களை ஒரு நொடி இறுக மூடி திறந்தவன், ஒரு முடிவோடு.. “ஏன் செல்லம்மா,  நீ எப்பவும் என்னை கூப்பிடற மாதிரி கூப்பிட மாட்டிங்கற. உன்னோட அந்த அழைப்புக்காக எவ்வளவு ஏங்கி இருக்கேன் தெரியுமா..?! நேத்து வரைக்கும் கூட, முறையா தாலின்னு ஒன்னு கட்டல, அதனால போலன்னு யோசுச்சேன். பட், தாலி கட்டி நைட் நம்ம சேர்ந்த போதும் சரி, இப்பவரைக்கும் உன்கிட்ட இருந்து ஒரு முறையாவது, ‘ஏன்னா…!’ ன்னு ஒரு வார்த்தை வராதான்னு தான் இத்தனையும் செஞ்சேன், ‘பட், நீ அப்படி சொல்லவே இல்ல.. ஏன்… ???!!!”

 

கௌதமின் கேள்விற்கு, செல்லம்மா சொன்ன பதிலும், அதற்கு கௌதமின் நடவடிக்கையும் என்னவாக இருக்கும்..??!!!

 

error: Content is protected !!