கம்பீரமான லக்ஷ்மி விலாஸ் காலை நேர பரபரப்பில் இருந்தது… பழமையான அந்த கடிகாரம் மணி எட்டரை என்று அடித்து ஓய… டக்… டக்… என்றுஒலி எழும்ப மாடி படிகளில் இறங்கி வந்தான் அவன்.
‘ஹர்ஷவர்தன்’
யாரையும் தலை வணங்க வைக்கும் கம்பீரம். ஆறடிக்கு குறைவில்லாத உயரம்… மாநிறம்… முப்பது வயதை தொட்டவனின் முகத்தில் எனக்கு இணை யாருமில்லை எனும் தோரணை… எதிரியை நிமிடத்தில் வலுவிழக்க செய்யும் கூர்மையான கண்கள்… அந்த கண்களில் எப்போதும் இருக்கும் ஆராய்ச்சி… தான் நினைத்ததை எந்த வகையிலும் சாதிக்கும் சாதனையாளன்… அதற்காக எந்த விலையும் குடுக்க தயங்காதவன்… அண்ணாமலைக்கும் மீனாக்ஷிக்கும் பிறந்த மகன்… தமிழகத்தின்முதன்மையானதொழிலதிபன்… கால் வைக்காத துறை இல்லை!
தாத்தாவும் அப்பாவும் சேர்த்து வைத்த பெயரையும் புகழையும்பொறுப்புடன் காப்பாற்றி வரும் இவனுக்கு ஒரே தங்கை ரிஷிபாலா… மருத்துவம் பயிலும் மாணவி… வயது இருபத்தி ஒன்று… கல்லூரியின் கனவுகன்னி… வீட்டில் அண்ணனின் செல்ல தங்கை. தினம் அம்மாவிடம் திட்டு வாங்கவில்லை என்றால் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கவில்லை என்று புலம்பும் ஜாதி.
நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் மணல் வண்ண கால்சராயுமாக கம்பீரமாக வந்துஅமர்ந்தான். அன்றைய அலுவல்களை தனது செயலாளரும் நண்பனுமான நரேஷிடம்கேட்டு கொண்டு இருந்தவனை பார்த்து மீனாக்ஷி முறைத்தார்.
“ஹர்ஷாஎத்தன தடவ சொல்றது? சாப்பிடற இடத்துல தொழில பேசாதன்னு… இந்த ஒருஇடத்தையாவது விட்டு வைப்பா…”
அம்மாவின் முறைப்பை சிரித்து கொண்டே எதிர் கொண்டவன்,
“ஓகே ஓகே சரி அந்த வாலு எங்க? ”
“ஏன் ண்ணா உனக்கு வேணுமா? சூப்பரா மேட்ச் ஆகுமே உனக்கு…” அப்போதுதான் டைனிங் ஹால் வந்த ரிஷிபாலா சிரித்து கொண்டே அவனை வார… அவளது காதை திருகியவன்.
“அட பக்கி… அது உனக்கு தான் சூட் ஆகும்… அதோட உன் வாயை தச்சு வெச்சுட்டா அப்படியே அழகா ஹனுமார் மாதிரியே இருப்ப…” என்று சிரிக்க.
“டேய் அண்ணா… அப்படீன்னா உன்னோட செலவு தான் அதிகமாகும்… நம்ம டௌரி எகிறிடுமாச்சே…” கண்ணடித்து சிரிக்க… மீனாட்சி அவளது தலையில் நங்கென்று கொட்டினார்!
“ஏய் ரிஷி… இதென்ன அண்ணனைமரியாதை இல்லாம? இதே பழக்கம் தான் பின்னாடியும் வரும்… உனக்கு அண்ணி வந்த பின்னாடியும்… வாயை அடக்கு…” முறைத்து கொண்டே கூறியவரின் கன்னங்களை பிடித்து கிள்ளியவள்.
“ஹலோ… உங்களுக்கு என்ன இவ்ளோ சிரிப்பு? ” ரிஷி நரேஷை மிரட்ட சிரித்து கொண்டிருந்த நரேஷ் கைகளை மேலே தூக்கினான்!
“ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரல”
“சரி சரி… இன்னிக்கு எனக்கு ப்ராக்டிகல்ஸ் இருக்கு… அம்மா நான் போயிட்டு வரேன்…” சிட்டு போல பறந்து சென்றவளை பார்த்து சிரித்து கொண்டே,
“நரேஷ்… ஈ சி ஆர் ப்ராஜெக்ட் என்னாச்சு? ”
அது மிக ஆடம்பரமாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடம்… பணவசதி மிகுந்து இருப்பவர்களுக்காக.
“ஹர்ஷா நைன்த் ப்ளோர் வேலை முடிஞ்சுது… இன்டீரியர் மட்டும் பாக்கி… சான்ட்லியர் வராம… இன்னும் ரெண்டு மாதத்துல முழு வேலையும் முடிஞ்சுடும்! ”
“நரேஷ்… அவங்களை சீக்கிரம் சப்ளை பண்ண சொல்லி இண்டிமேட் பண்ணு… அப்படி இல்லைன்னா வேற இடத்துல பார்த்துக்கலாம்…” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறி முடிக்க.
“ஹர்ஷா அவங்க நம்ம ரெகுலர் சப்ளையர்ஸ்… கொஞ்சம் வெயிட் பண்ணலாமே” யாரையும் சட்டென்று வெட்டிவிடாத பழக்கம் கொண்ட நரேஷ் கூற
“நோ நரேஷ்… எனக்கு லேட் பண்றது பிடிக்காது… ரெண்டு நாள் தான் டைம்… முடியலைன்னா ஆர்டர் கான்சல் பண்ணிடு…”
இதுதான் ஹர்ஷவர்தன்!
“ஓகே ஹர்ஷா… நான் குப்தா சார் கிட்ட சொல்லிடறேன்…”
“அதுக்கப்புறம் அந்த ஓஎம்ஆர் மேட்டர் என்ன ஆச்சு நரேஷ்…? அனுமதி வாங்கலைன்னு இப்போ தான் தெரிஞ்சுதா? நான் உன்கிட்ட இதை எதிர்ப்பார்க்கல நரேஷ்! ”
ஹர்ஷா கோபமாக கேட்க துவங்க… நரேஷுக்கு சங்கடமாக இருந்தது.
“சாரி ஹர்ஷா… JV போடும்போது அந்த காண்ட்ராக்டர் இந்த விஷயத்த மறைச்சுட்டான்… மொத்தமா முப்பது கிரௌண்ட் இடத்துல இருபது கிரௌண்ட்க்கு தான் முறையான அனுமதி இருக்கு… அந்த 10 கிரவுண்ட்க்கு இப்போ தான் பர்மிஷன் கேட்டு அப்ளை பண்ணி இருக்கு” முகம் கறுக்க கூறியவனை முறைத்தான் ஹர்ஷா.
“இதையே தான் நாலு நாள் முன்னாடி சொன்ன… இன்னமும் என்ன பண்ணிட்டு இருக்க? ”
“இல்ல ஹர்ஷா… அங்ககலெக்டர் ரொம்ப ப்ராப்ளம் பண்றாங்க போல இருக்கு…”
“நரேஷ் இதை சொல்ல நீ தேவையே இல்ல… ஒரு பைசா ரெண்டுபைசா இல்ல… முன்னூறு கோடி… இதென்ன கரி காய் வியாபாரமா? அவங்க ப்ராப்ளம் பண்றாங்க இவங்கபண்றாங்க ன்னு சொல்ல…? டோன்ட் யு பீல் அஷேம்ட்…? எவ்ளோ டிமாண்ட்ன்னு பாத்து ப்ராப்ளம் பண்றவங்களுக்கு காச குடுத்து முடி…”
“அந்த லேடி ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்டா இருக்காங்க… அனுமதி இல்லாத இடத்துல கட்டியதை இடித்தே தீருவேன்னுபிடிவாதமாசொல்றாங்க…”
“வாட்… ஹொவ் டேர் ஷி இஸ்? லுக் நரேஷ்… எல்லாருக்குமே விலைன்னு ஒன்னு இருக்கு… அந்த லேடிக்கும் இருக்கும்… இப்படி ப்ராப்ளம் பண்ணினா அவங்க டிமேண்ட் அதிகம்ன்னு புரிஞ்சுக்கோ… என்ன டிமாண்ட் பண்றாளோ அதை செஞ்சுகுடுத்துடு… அப்புறம் இன்னிக்கு ஈவினிங் பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிடு… அங்கேயே வெச்சு பேசிக்கலாம்… ஓகே…”
காலையிலேயே அர்ச்சனையை வாங்கி கட்டிய நரேஷ் நெற்றியில் வழிந்த வேர்வையை துடைத்தபடி.
“ஓகே ஹர்ஷா”
என்று கூறி பெருமூச்சு விட்டான்!
ஹர்ஷவர்தன் அறியாதது ஒன்று உள்ளதென்றால் அந்த மலர்விழிவிலைகளுக்குஅப்பாற்பட்டவள் என்பதும்… அதனால் வரும் பிரச்சனைகளின்விளைவுகளால் இனி தன்னால்உறங்க முடியாது என்பதும்!
அத்தியாயம் 2
‘மலர்விழி’
27 வயதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பெடுத்து கொண்ட இளம் அதிகாரி… செங்கல்பட்டில் உதவி கலெக்டராக இருந்தபோது தேர்தல் சமயத்தில்பேருந்தில் வைத்து பணம் கடத்துகிறார்கள் என்ற செய்தி வருகையில் தனியாக சென்று பணத்தை கைப்பற்றி சம்பந்த பட்டவர்களை கைது செய்த தைர்யலக்ஷ்மி… தஞ்சையில் துணைஆட்சியராக இருந்த போது கொத்தடிமைகளை அரசியல் சிக்கல்களுக்கு இடையில் மீட்ட வீராங்கனை… அழகில் சௌந்தர்யலக்ஷ்மி… தவறாக பார்பவர்களை பார்வையாலேயே அடக்கி வைக்கும் சிம்மவாகினி.
அவளின் வீர தீர பராக்ரமங்களை சொல்லி கொண்டே தான் போகலாம். ஆனால் என்ன இந்திய ஆட்சிபணியில் சேர்ந்த இந்த ஆறு வருடங்களில் எட்டு முறை இடமாற்றம் செய்ய பட்டதிலும் சாதனை படைத்தவள் தான்… பால்போன்றசருமமும் மீன் விழிகளும் குவிந்த ரோஜா போன்ற உதடுகளும் சேர்ந்த ஐந்தரை அடி தேவதை! … ஆனால் அதைஉணராத மனோபாவமும் ஒப்பனையை விரும்பாத தன்மையும்கொண்டமலருக்கு பெற்றவர் இல்லை… உற்றவர்களும் அவளை சுமையெனகருதி இல்லத்தில் சேர்க்க… சிறு வயது முதற்கொண்டு அன்னை தெரேசா காப்பகம்தான் அவளது பிறந்த வீடு என்றானது.
கடவுள் பெற்றவர்களைதான் பறித்து கொண்டாரேதவிர அறிவை வாரி வழங்கி இருந்தார்… இளநிலை அறிவியல் முடிக்கும்போதே IAS தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து ட்ரைனிங் முடிந்து ஹோம் cadre லேயேபிளேஸ் ஆனவள். அதற்கு பின் மக்களே அவளுக்கு உறவினர் ஆயினர். திருமணத்தை பற்றி இன்னமும் நினைத்துபார்க்காமல் இருக்கும் அவளுக்கு பிடித்தது மூன்று வார்த்தை… நேர்மை… நேர்மை… நேர்மை.
நெருங்கிய தோழி துவாரகாவுடன் ஆட்சியருக்கான வீட்டில் வாசம்… துவாரகாவுக்கு வேலை சென்னையில் என்றாலும் மலரை தனித்து விட விருப்பமில்லாமல் ஆஸ்திரேலியாவிலிருக்கும் அன்னைக்கு டேக்கா கொடுத்து கொண்டிருப்பவள்… திருமணத்தை மறுத்து!
ஆர்வமாக தன்னிடம் மனுக்களை கொடுத்த மக்களிடம் இருந்து சிரித்த முகமாகபெற்று கொண்ட மலர்விழியை தொடர்ந்து கொண்டு இருந்தார் உதவியாளர்… காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இரண்டுமாதம்முடிந்த நிலையில்… தன்னுடைய தொகுதிக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை தனக்காக செலவு செய்த MLA வைஆதாரத்துடன் கண்டுபிடித்து அவரது கோபத்துக்கு ஆளாகி அந்த பணத்தை மீண்டும் மக்களுக்கே போகவைத்து இருப்பவள்… அந்த மக்கள்பிரதிநிதி அலுவலகத்துக்கு வந்து மிரட்டி விட்டு போனது தனி கதை.
ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த மலர், அதன் பொருட்டு கணக்கெடுப்பு செய்ததில் அதிர்ந்து போனாள். சமூகத்தில்மிக முக்கியமானவர்கள் எல்லாம் தாங்கள் தங்கள் பங்குக்கு இடங்களைஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். விரிவான விசாரணைக்கு பின்கிழக்கு கடற்கரைசாலையில் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட… அதன் பொருட்டு நிறைய இடங்களில் இருந்து மிரட்டல் வந்தாலும் அதைபற்றியெல்லாம் கவலை படுகிற ஆளா நம்ம மலர்?
ஆனால் அவளையும் தூக்கி சாப்பிட ஒருவன் இருக்கிறான்… அவன் தான் ஹர்ஷா என்பது இப்போது மலருக்கு தெரியுமா!
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss