UEUfinal

UEUfinal

அத்தியாயம் 16
மலர்விழி மிசெளரியில் ஸ்பெஷல் ட்ரைனிங்கிற்க்காக வந்து பத்து நாட்களாகியது! பத்து நாட்களா? இல்லை பத்து வருடங்களா? என்று புரியாமல் தலைவனை பிரிந்த சங்க கால தலைவி போல உடல் இளைத்து கண்களில் ஒளி குன்றி… (இதெல்லாம் description மக்களே… உதைக்க வராதீங்க)!
ஹர்ஷா வந்து விட்டு போன அடுத்த நாள் மிசெளரி கிளம்பி வந்தவள் தான்!
அதுவும் இந்த கேம்பிற்கு கடைசி வரை மலர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தது… கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதால் அவசரமாக கிளம்பி இங்கு வந்து விட்டாள்! … ஆனால் அன்று அவளிடம் கோபத்தை கொட்டி விட்டு போனவன் திரும்ப தொடர்பு கொள்ள வில்லை!
அன்று அவள் அழுகையில் கரைந்து கூறியதை முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் கேட்ட ஹர்ஷா.
“மலர்… நான் உன்னை லவ் பண்றேன்… உன்னை மட்டும் தான் லவ் பண்ணினேன்… பண்ணுவேன்… அத மட்டும் தான் என்னால உனக்கு சொல்ல முடியும்… வேற எல்லாம் பாசிங் க்லௌட்ஸ்மா… புரிஞ்சுக்கோ… எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் பார்த்துக்குவேன் ஆனா இப்படி ஒரு விஷயத்துக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலடா…” என்று இடைவெளி விட்டவன்.
“நமக்குள்ள ஜெய்க்கிறது தோற்க்கறதுன்னு கிடையாது மலர்! வெற்றி தோல்விங்கறது நம்ம இரண்டு பேருக்கும் சேர்த்து தான்… அத நான் எப்போவோ புரிஞ்சுக்கிட்டேன்… நீயும் புரிஞ்சுக்கணும் கண்ணம்மா…” அமர்ந்திருந்த அவளின் முன் கண்களில் உயிரை தேக்கி அவளிடம் மண்டியிட்டு அமர்ந்து அவன் கூறிய விதம் மலருடைய நெஞ்சை உருக்கியது.
“ஹரி… உங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்க எனக்கு மட்டுமே சொந்தமில்லைங்கற நினைப்பு தான் வருதே தவிர வேற வர மாட்டேங்குது… அத நினைச்சாலே மனசு வலிக்குது…” இன்னும் அழுகை நின்றபாடில்லாமல்
“என்னோட விளையாட்டுத்தனம் உன்னை எவ்வளவு பாதிச்சிருக்குன்னு புரியுதுடா… பட் நீ ஒரு விஷயத்த புரிஞ்சுக்கனும் மலர்… இது நம்ம வாழ்க்கை… இதுல இனிமே உனக்கு எந்த விதமான நெருடலும் இல்லாம கொண்டு போக என்னால முடியும்…” அவளது
“என்னால முடியாது ஹரி… முடியவே முடியாது… எப்போவுமே நான் எனக்கானா வாழ்க்கைய பத்தி ரொம்ப நினைச்சது இல்ல… ஆனா ஒரு ஓரத்துல இருந்த பிம்பத்த பத்தி சொல்லனும்னா அது எனக்கு வர்றவர் ஸ்ரீராமனா இருக்கணும்ன்னு தான்… அப்படி இருக்கும் போது என்னால உங்களை ஏத்துக்கவே…” அழுகையில் பேச்சு அதற்க்கு மேல் வராமல் போகவே.
“அப்படின்னா என்னை நீ லவ் பண்ணவே இல்லையா மலர்…? ” நிராசையுடன் அவன் கேட்க.
“எப்படியோ லவ் பண்ணிட்டேன்! இல்லைன்னு சொல்லல… ப்ளீஸ் என்னை போர்ஸ் பண்ணாதீங்க ஹரி ப்ளீஸ்…” என்று மறுபடியும் அழுகை வெடிக்க ஆரம்பிக்க.
முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவளை பார்த்து கசப்பான ஒரு புன்னகையை படர விட்டு.
“கண்டிப்பா நீ உன்னை புரிஞ்சுக்குவ மலர்… அது வரைக்கும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்! நானா உன் கூட பேச கூட மாட்டேன்… ஆனா என் வாழ்க்கைல மனைவின்னு ஒருத்தி வரனும்னா அது நீ மட்டும் தான்! என்னோட உயிரே நீதான்டா… நீ மட்டும் தான் கடைசி வரைக்கும்…” என்று கூறியவன் அவள் இடையை சட்டென்று இழுத்து அணைத்தான்.
அவள் திகைத்து அவனிடம் இருந்து விடுபட முயல அவனது இறுக்கம் அதிகமானது… அவளுக்குள் அழுத்தி கொண்டிருந்த ஏதோ ஒன்று கரைந்து காணாமல் போக முயல்வதை அவள் உணர்ந்தாள்!
“விடுங்க ஹ…” பேச முயன்றவளின் இதழ்களை தன்வசப்படுத்தி கொள்ள.
நொடிகளா… நிமிடங்களா.
அதிர்ச்சியில் அவள்! … அவனது வேகத்தை தாங்கவும் முடியாமல் தள்ளிவிடவும் முடியாமல் மலர் திண்டாடும் போதே சடாரென்று விட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்று விட.
பிரம்மை பிடித்தார் போல நிற்பது இப்போது மலரின் முறையானது… ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வுக்கு என்ன செய்வது என்று கூட புரியாமல் விழித்தாள்!
ஆனால் அவன் அணைத்தபோது… தன்னை மறந்து அவனுள் மூழ்கியதை உணர்ந்தாள்!
*********
“ஹேய்… மலர்… கெட் அப் மேன்…” அவளை பிடித்து உலுக்கி கொண்டு இருந்தாள் ஷைலஜா… ஒரிசா மாநிலத்தில் ஆட்சியராக இருப்பவள்! ஒரே வருடத்தில் ட்ரைனிங் வந்தவர்கள்… நல்ல நண்பி… மலருக்கு தமிழ்நாடு cadre கிடைக்க ஷைலஜாவிற்கு ஒரிசா cadre கிடைக்க அதிகமான தொடர்பில் இல்லாமல்… இது போன்ற orientation campகளில் சந்திக்கும் போது தங்கள் நட்பை அசை போடுவார்கள்!
“என்னப்பா… ஒரே ட்ரீம்ஸ்ல இருக்க? அவ்ளோ நேரமா கூப்பிடறேன்… திரும்பி கூட பாக்காம என்னடா அப்படி ஒரு நினைப்பு? எதாச்சும் ப்ராப்லமா? ” வாஞ்சையாக கேட்டவளிடம் மறுதலித்து விட்டு துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்!
வெறுமையாய் ஒரு பார்வை பார்த்து விட்டு
“நத்திங் ஷைலு… ஒண்ணுமில்ல…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மலரின் செல்பேசி அழைத்தது.
பேசியது துவாரகா!
அவளது திருமணம் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அவளது பெற்றோர் திருமணத்தை முடித்து விட்டு மறுபடியும் ஆஸ்திரேலியா போக வேண்டி இருப்பதால் இன்னும் நான்கு நாளைக்குள் திருமணத்தை முடிக்க அவசரபடுவதாகவும் கூறினாள்!
பேசி முடித்து செல்பேசியை வைத்து விட்டு கிளம்ப தயாரானாள்!
இந்த பத்து நாளில் அவளை அவள் மறந்து இருந்தாள்! எங்கு பார்த்தாலும் அவன் முகமே தெரிந்தது! அவளை நினைத்து அவளுக்கே பயமாக இருந்தது! அவனை பார்த்தால் எங்கே வெட்கம் கெட்டு போய் கட்டி கொள்வோமோ என்று நடுங்கினாள்!
ஹர்ஷா மேல் காதல் இருந்தாலும் அவனுடைய முந்தைய அணுகுமுறையும் பழக்கவழக்கமும் அவனுடைய அளவுக்கு மீறிய செல்வமும் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியதே நிஜம்! ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்தையும் குறும்புத்தனத்தையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தவளுக்கு தெரியவில்லை… அது எப்போது காதலானது என்று?
ஒரு வேளை வர்ஷினி அவனை பற்றி பேசி பேசியே தனக்கு அவன் மேல் ஈடுபாடு வந்து விட்டதோ? இல்லை அவள் ஹர்ஷாவை பற்றியே பேசியதால் ஏற்பட்ட பொறாமைதான் காதலை உணர்த்தியதோ? இல்லையென்றால் தான் ஏன் அவனுடைய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்? அவன் யாருடன் இருந்தால் என்ன என்று இருக்க வேண்டியதுதானே?
ஆனால் வேண்டாம்! எனக்கு வேண்டாம்! இப்போது மணந்து கொண்டு பின்னாளில் தான் சொல்லி காட்ட நேரிட்டாலோ அல்லது அவன் மாறி விட்டாலோ தன்னால் தாள முடியாது… இப்போது கொஞ்சம் மறக்க சிரமமாக இருந்தாலும் போக போக சரியாகிவிடும்! கண்டிப்பாக!
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா?
*******
சென்னையில் விமானம் தரை இறங்கிய போது மனசெல்லாம் கனத்தது… மறுபடியும் ஹர்ஷாவை பார்க்க வேண்டி இருக்குமோ என்று உள்ளுக்குள் குளிர் பரவியது… வெளியே வந்த போது நரேஷும் துவாரகாவும் காத்துகொண்டு இருந்தனர்!
“காங்கிரட்ஸ்டா செல்லம்!
“தேங்க்ஸ்டி…” கலங்கிய கண்களோடு அவளை அணைத்துகொண்டாள்!
இரண்டு பேரும் போட்டு கொண்ட பொய் சண்டையையும் செல்ல கோபங்களையும் பார்த்த மலர் வயிறு வலிக்க சிரித்தாலும்… உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு!
“ஹர்ஷா…”
அடச்சே… அவனை பற்றியே நினைவுகளே வேண்டாம் என்று நினைத்தால்… என்ன இது… சட்டென்று அவளை ஒரு தனிமை உணர்வு சூழ்ந்தது! ஏன் ஹர்ஷா வரவில்லை?
அவர்கள் இருவரை பார்க்கும் போது ஹர்ஷாவை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது! … ஏதோ ஒரு உணர்வால் திரும்பி பார்க்க ஹர்ஷா கைகளை கட்டி அவனது கார் மேல் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்!
ஆயிரம் பூக்கள் சேர்ந்து மலர்ந்தது போன்ற உணர்வு மலருக்கு!
“ச்சே… இந்நேரம் வரை இங்கேயே இருந்துட்டு ஒண்ணுமே பேசல…” ஒரு ஏமாற்ற உணர்வு ஆட்கொண்டது!
நரேஷும் துவாரகாவும் பின்னால் அமர்ந்து கொண்டு ஏதாவது பேசி சீண்டி கொண்டே வர… மலர் முன்னால் ஹர்ஷவோடு உட்கார்ந்து இருந்தவளுக்கு… முள் மேல் அமர்ந்ததிருந்தார் போல இருந்தது! அவளை அவன் திரும்பியும் பார்க்கவில்லை! ஒரு வார்த்தை கூட பேசவில்லை!
மௌனமான நீண்ட பயணத்திற்கு பின் வீட்டிற்கு வந்த மலருக்கு துவாரகாவின் சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொள்ள கூட முடியாத அளவு மனதை அழுத்தியது ஹர்ஷாவின் மெளனம்!
“ஏன் ஒரு வார்த்தை பேசிட்டா சார் குறைஞ்சு போய்டுவாரா? எப்படி இருக்கன்னு கூடவா கேக்க கூடாது? பத்து நாள் கழிச்சு பார்க்கறோம் அப்படீங்கற பீலிங் கூடவா இல்லாம போய்டும்? ”
அவனாக வந்து வந்து பேசும்போதெல்லாம் உணராதவள்… இப்போது, அவன் பேசாத போது அவனை திட்டி கொண்டு இருந்தாள்! நினைக்கும் போதே அழுகை முட்டி கொண்டு வந்தது! .
மலர் சில பொருட்களை வாங்க இறங்க… துவாரகா பின் தொடர்ந்தாள்!
திடீரென்று பின்னால் இருந்து”அம்மாஆஆஆஆஆ” என்ற சத்தம் கேட்டது! ஹர்ஷாதான் அந்த ஆண்களின் ஒருவன் கையை பிடித்து திருகி கொண்டிருந்தான்!
“இனிமே கைய்ய வைப்பியா? இனிமே கைய்ய வைப்பியா…” என்று கேட்டபடி அந்த ஆளின் கையை முறுக்கி கொண்டு இருந்தான்! … கிட்டத்தட்ட முறிந்தே இருக்கலாம்!
துவாரகாவும் மலரும் இந்த காட்சியை பார்த்து பதறினார்கள்! … மலர் இடையில் வந்து
“ஹரி… அவன் கைய விடுங்க… கடவுளே… என்ன காரியம் செஞ்சுட்டு இருக்கீங்க? விடுங்க ஹரி…” அவளை பார்த்து முறைத்த ஹர்ஷா.
“நீ போய் கார்ல வெயிட் பண்ணு…”
“இல்ல ஹரி… இந்த ஆள…” மலர் பேச அவன் அதிகபட்ச கோபத்தோடு
“போய் கார்ல உக்காருன்னு சொல்றேன்ல…” என்று உறுமினான் ஹர்ஷா!
திடுக்கிட்ட மலர்விழி துவாரகாவை அழைத்து கொண்டு காருக்கு போனாலும் கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்!
“ஏன் அவன அப்படி பண்ணுனீங்க? ”
அவளை முறைத்து பார்த்து…” ஓருத்தன் பின்னாடி வேணும்னே இடிக்கறான்னா உனக்கு அறிவு வேண்டாம்… வேடிக்கை பார்த்துட்டு இருக்க? மண்டைல என்ன மசாலாவா இருக்கு? ” என்று சப்தமிட.
“அதுக்குன்னு… அவனை இப்படித்தான் அடிப்பீங்களா? ” கோபமாக கேள்வியெழுப்பினாள்!
“உங்க கேள்விக்கெல்லாம் இங்க பதில் சொல்ல முடியாது கலெக்டர் மேடம்… வீட்டுக்கு போய் பேசிக்கலாம்…”
“நீங்க ஏன் அப்படி பிகேவ் பண்ணறீங்க ஹர்ஷா? ”
“உன்னை தொட்டான்ல… தொட்ட கைய அப்படித்தான் முறிப்பேன்… இதுக்கெல்லாம் நான் பாவ புண்ணியமோ நேரம் காலமோ பார்க்க முடியாது! . “ உறுமிவிட்டு காரை ஓட்டுவதில் கவனத்தை செலுத்த முயன்றான்!
“இது காட்டுமிரான்டித்தனம்…”
“என்ன பேரோ வெச்சுக்க…” முகத்தில் அறைந்தார் போல சொல்ல… அவனது செல்பேசி அழைத்தது!
செல்பேசியை வைத்து விட்டு நரேஷிடம் திரும்பி
“மினிஸ்ட்ரில புது ஆள் உள்ள வரார் நரேஷ்! ”
“யாரு ஹர்ஷா? ”
“நம்ம சுதர்சன பெருமாள்! ” யோசனையாக இருவரும் பார்த்து கொண்டார்கள்!
*******
நாட்கள் வேகமாக நகர்ந்தது… திருமண நாளும் வந்தது… துவாரகா மணப்பெண்னாய் ஜொலிக்க… ரிஷி மணப்பெண் தோழியாய் கலக்க… மலர்விழியோ அந்த வெண்ணிலவே தரைக்கு இறங்கி வந்து விட்டதோ என்று சந்தேகம் கொள்ளும் அளவு அழகு பெட்டகமாக வலம் வந்தாள்! பார்ப்பவர் அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்கவைக்கும் அற்புதமான பேரழகு!
அவளை பார்த்த ஹர்ஷாவுக்கு மின்சாரம் பாய்ந்தது என்றாலும்… கண்டு கொள்ளாமல் போய் விட்டான் (ரகசியமாக அவளை சைட் அடித்து கொண்டு இருந்தது வேறு விஷயம்)… ஒரு பாராட்டு கூட வேண்டாம் ஆனால் ஒரு பார்வை… ம்ஹூம்… ஏமாற்றத்தில் துடித்தது மலர் மனம்!
“ஏன் அப்படீன்னா போய் அவன் கிட்ட ஒத்துக்கோ மலர்…” மனசாட்சி மறுபடியும் காலை வாரியது!
“நோ… அத மட்டும் பண்ணவே மாட்டேன்…” என்று தனது பிடிவாதத்தை தளர்தாமல் இருந்தாள் மலர்… ஆனாலும் அடுத்தடுத்து அவன் வீசிய கணைகளில் சிதறி போனது அவளது பிடிவாதம்!
மணமக்களை அழைத்து கொண்டு பெரியவர்கள் நரேஷ் வீட்டிற்கு செல்ல… ஹர்ஷாவிடம் வந்த மலர் தயங்கிக்கொண்டு.
“ஹர்ஷா… உ… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” திணறினாள்!
“என்ன? ” அதை கண்டும் காணாதவாறு கேட்டான்! சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தவர்களை பார்த்து
“கொஞ்சம் தனியா பேசணும் ஹரி…” சிறிதான குரலில் அவள் கூற
“இங்கேயே தனியா தான் இருக்கோம் சொல்லு…” ஒட்டாத த்னமையோடு அவன் பேசுவதை கேட்டவளுக்கு தன்மானம் இடறியது… கண்களில் கோபத்தோடு.
“சரி… நீங்க ஒன்னும் பேசவே வேண்டாம்…”
“அதான் உன் கிட்ட நான் முதல்லயே சொல்லிட்டேன்ல…”
இப்படி சொல்லவும் அவனை முறைத்தவள்.
“சரி… நீங்க என்னை பார்க்கவே வேண்டாம்…” என்று சீறி விட்டு வீட்டிற்கு கிளம்பினாள்! அவளை பார்த்த ஹர்ஷாவுக்கு சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது… ஏன் அவளும் தான் கொஞ்சம் உணரட்டுமே! … அழுவதற்கு தெரிவது போல் இதையும் தெரிந்து கொள்ளட்டும்.
ஆனால் மலர் சொன்னதே உண்மையாக போவது தெரிந்திருந்தால்?
*******
வீட்டிற்கு போன மலருக்கு முழுவதுமாக தனிமை உணர்வு சூழ்ந்தது! இனிமேல் அந்த வீட்டில் அவள் மட்டும் தான்! தனிமை ஒன்றும் புதிதில்லையே எனக்கு… பழக்கமானது தானே… ஆறு வயதில் பெற்றோர் தனியாக விட்டு சென்றனர்… அதன் பின் உறவினர்கள் தனியாக என்னை ஆஸ்ரமத்தில் விட்டு சென்றனர்… வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தனிமையே துணை என்று தானே நான் போராடி இருக்கிறேன்… இப்போது மட்டும் என்ன… புதிதாக?
வேண்டாம் அதை பற்றி நினைக்கவே வேண்டாம்!
வேறு ஏதாவது செய்யலாம்… டைம் பத்திரிக்கை டீபாயில் கிடந்தது… எடுத்து புரட்டினாள்!
கவர் ஸ்டோரி… ஹர்ஷாவை பற்றி!
இது வரை ஹர்ஷாவை பற்றி தெரியாததெல்லாம் தெரிந்தது… கடின உழைப்பாளியாக… மிகுந்த புத்திசாலியாக… இன்னும் சொல்லி கொண்டே போனது கட்டுரை! பெஸ்ட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அவார்ட் கொடுக்கபட்டிருந்த விஷயம் தெரிய வர பெருமை பொங்க படித்தாள் மலர்விழி! சரி இதற்கு ஒரு வாழ்த்து சொல்லி விடலாமே என்று செல்பேசியை எடுத்தவளுக்கு தான் கோபமாக பேசி விட்டு வந்தது நினைவிற்கு வந்தது… எப்படி தானே பேசுவது? ஈகோ தடுத்தது… சரி வாழ்த்துதானே! அது மட்டும் தான் அதற்கு மேல் ஒன்றும் கிடையாது!
ஹர்ஷாவை அழைத்தாள்!
சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற செய்தியே கிடைத்தது!
“என்ன பண்ணிட்டு இருக்காங்க? போன எடுக்காம…” மீண்டும் மீண்டும் அழைத்தாள்!
அதே பதிலே கிடைக்கவும்…”ச்சே…” என்று செல்பேசியை தூக்கி போட்டாள்!
மிகவும் போரடிக்கவே தொலைக்காட்சியை ஆன் செய்தாள்! சேனல்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தவள் நிறைய சேனல்களில் ஸ்க்ரோல் ஓடுவதை பார்த்தாள்! என்னது இது? படித்தாள்! காலடியில் பூமி நழுவியது!
சற்று முன் கிடைத்த தகவல்… தொழிலதிபர் வேதா ஹர்ஷவர்தன் கார் விபத்துக்குள்ளாகி படுகாயம்… இரவு ஏழு மணி செய்திகளில்.
அத்தியாயம் 17
கண்களில் பெருகிய அருவி நிற்காமல் தொடர்ந்தது! இந்த உலகமே நின்று விட்டது போல தோன்றியது! அவ்வளவுதானா இந்த மனித வாழ்க்கை! இதற்குள்ளாக முடிந்து விடத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? இதற்கு தான் இப்படி விளையாடினாயா ஹரி? உனது சீண்டல்களும் கேலி பேச்சும் அவ்வளவுதானா? இனிமேல் உன்னை பார்க்க முடியாதா? எப்படி முடியும் ஹரி? என்னால் எப்படி முடியும்? நினைத்து பார்த்தாயா என்னை? நான் பாவி… ஐயோ நான் பாவி இனிமேல் என்னை பார்க்காதே என்று அச்சானியமாக சொல்லி விட்டு வந்த பாவி! எங்கே போய் விட்டாய் ஹரி? சுற்றி சுற்றி வந்தாயேடா! எவ்வளவு சொன்னாய்… கேட்காத நான் தான் பாவி… மன்னித்து விடு ஹரி… என்னை மன்னித்து விடு!
உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் நான் கண்களில் பார்த்து கொண்டே என் வாழ்க்கையை முடித்து விடுவேனே! நீ இல்லாத இந்த உலகத்தில் நான் எப்படி இருப்பேன் ஹரி? பத்து நாட்கள் உன்னை பிரிந்து போனதற்கே என்னால் தாள முடியவில்லையே இன்னும் மீதி காலங்களை நான் தனியாக தான் கழிக்க வேண்டுமா?
என் தாய் தந்தை என்னை விட்டு சென்ற போது அந்த வலி எனக்கு தெரியவில்லை! பின் உறவினர்கள் கைவிட்ட போதும் எனக்கு வலிக்கவில்லை! பாவி ஏனடா என் முன்னே வந்தாய்? என்னை இப்படி தவிக்க விட்டு செல்வதற்கா? ஏன் அப்படி உருகி உருகி காதலித்தாய்? வாழ்க்கையில் தனிமை என்ற ஒன்றை மறந்தது உன்னிடம் தானே ஹரி! எவ்வளவு சண்டை போட்டாலும் என்னால் உன்னை வெறுக்க முடியுமா? அதை ஏன் நீ புரிந்து கொள்ள வில்லை? ஐயோ! எனது மனசாட்சி கொல்லுகிறதே!
என்னை விட்டு போய் விடாதே ஹரி… போய் விடாதே… வேண்டாம்! நீ எனக்கு வேண்டும்… நீ எனக்கு வேண்டும்… நான் உன்னை எதிர்த்து பேசி கொண்டே இருக்க மாட்டேண்டா… உன்னிடம் சண்டை போட மாட்டேன்… எதுவும் அறிவு கெட்ட தனமாக பேச மாட்டேன்… நீ இருந்தால் மட்டும் போதும் ஹரி… போதும்… வந்துவிடு ஹரி வந்துவிடு… நீ எனக்கு வேண்டும்! அப்படி ஏதாவது ஒன்று ஆகி விட்டால் நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்! நீ இல்லாத இந்த உலகத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? நானும் வந்து விடுகிறேன்! என்னையும் அழைத்து போய் விடு ஹரி! அழைத்து போய் விடு! ”
காரில் ஏறியதில் இருந்து மலர்விழி கதறி அழுததை தடுக்க யாராலும் முடியவில்லை! தொலைகாட்சியில் ஸ்க்ரோல் பார்த்தவுடன் மீனாக்ஷி மயங்கி விழுத்தவர்தான்… அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்யும் போதே மலரிடம் இருந்து ரிஷிக்கு போன் வந்தது… பேசும் போதே உடைந்து போய் கதறினாள்.
விபத்தை கேள்விப்பட்டு அவசரமாக விரைந்த நரேஷிடம் இருந்து எந்த சரியான தகவலும் இல்லை… அதனால் இப்போதைக்கு செய்தி உறுதி செய்யப்படவில்லை என்று கூறியவள் இப்போது மலரை தனியாக விட பயந்து துவாரகாவை அழைத்து மலரை அழைத்து கொண்டு தங்கள் மருத்துவ மனைக்கு வந்து விட சொன்னாள்… இயல்பில் இது போன்ற விடயங்களை அவள் பார்த்து கொண்டே இருந்தாலும் தன் அண்ணன் எனும் போது அவளாலும் தாள முடியவில்லை! ஆனால் ஒருவராவது சமநிலையில் இருக்க வேண்டுமே!
மலர்விழி மருத்துவமனைக்கு வந்தவுடன் கூட தைர்யமாக தான் இருந்தாள்… ஆனால் நரேஷ் அழைத்து விபத்து நடந்ததை உறுதி படுத்தி தான் ஜிஹெச்சில் இருப்பதை கூறியவுடன் பிரம்மை பிடித்தார் போல நின்றவள் தான்… காரில் போகும் வழியெல்லாம் மலர் கதறியதை கேட்க இருவராலும் முடியவில்லை… துவாரகாவிற்கு தன் தோழியை தேற்றுவதா இல்லை ரிஷிக்கு தைர்யம் கூறுவதா என்று புரியாத நிலையில் இருந்தாள்!
துவாரகா நரேஷிடம் மறுபடியும் பேசி விட்டு வைத்தவள் மலரை பார்த்து தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தவளாக ரிஷியிடம் மட்டும் ரகசியமாக முணுமுணுத்தாள்! இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்! மலர் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை… அவளது கதறலும் நின்ற பாடில்லை!
ஜி ஹெச் முன் நின்ற காரில் இருந்து இறங்கவும் மறுத்தாள் மலர்விழி!
“நோ… முடியாது! என்னால அவர இந்த நிலைமைல பார்க்க முடியாது! வேண்டாம்…” என்று கதற
“அண்ணி… எல்லாரும் பாக்கறாங்க… பிரஸ் ஆளுங்க எல்லாம் இருக்காங்கண்ணி! கன்ட்ரோல் யுவர் செல்ப்” என்று சமாதான படுத்தி அழைத்து போக முயன்றாள்!
“மலர் ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா வாடா…” துவாரகா அவளை ஆற்றுப்படுத்த உள்ளே போகும் வரை அமைதியாக போனவள்… மருத்துவமனையின் உள்ளே சென்றதும், அந்த அறை வாசலுக்கு ரிஷியும் துவாரகாவும் மலர்விழியை கட்டாயபடுத்தி இழுத்து வர வேண்டி இருந்தது!
“இல்ல… நான் வரல… என்னால என் ஹரிய அப்படி ஒரு கோலத்துல பார்க்க முடியாது! …” என்று அவள் முகத்தை மூடி கொண்டு கதறலில் கரைந்தாள்!
“மலர்… டேய்… மலர்” என்று உலுக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்! இது… இது… அவனது குரலல்லவா!
ஹர்ஷா!
விழி விரிய வியப்புடன் அவனை பார்த்தவள் திருவிழாவில் தாயை தொலைத்த குழந்தை மீண்டும் தாயை கண்டால் எப்படி மகிழ்ச்சியடைந்து அடைக்கலமாகுமோ அதே உணர்வில் கதறி கொண்டு அவனிடம் அடைக்கலமானாள்!
“ஹரீஈஈ…” அவனை இறுக கட்டி கொண்டவள்… நடுவில் காற்று கூட வர கூடாது என்று மேலும் மேலும் இறுக்கி கொண்டாள்!
“ஹரி… உங்களுக்கு ஒன்னும் ஆகலையே…” அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்!
“ஒன்னும் இல்லடா கண்ணம்மா! ” தலையில் மட்டும் சிறிய கட்டு போடப்பட்டிருக்க வேறு எந்த காயமும் இல்லாததை முழுதாக ஆராய்ந்த பின்னர் தான் ஒப்புகொண்டாள்!
“டிவில ஸ்க்ரோல் போச்சே ஹரி… வர்ஷினி கூட எனக்கு போன் பண்ணி… பண்ணி…” சொல்ல முடியாமல் திக்கி திக்கி சொல்லி கொண்டே அழுதாள்!
“சொல்லுடா… என்ன சொன்னா”
“நீங்க… நீங்க…” அழுகையில் அவளால் பேச முடியாமல் தேம்பினாள்!
“அவனது முகம் கோபத்தில் சிவந்தது!
“எனக்கு வேற எதுவும் வேண்டாம் ஹரி! நீங்க மட்டும் போதும்… ஐ லவ் யு ஹரி… இப்போ தவிச்சதே ஆயுளுக்கும் போதும்… போதும்ப்பா! ”
மறுபடியும் இறுக கட்டி கொண்டவள்… முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்!
சுற்றிலும் இருப்பவர்களை பார்த்து ஹர்ஷா,
“ஹேய்… ஹனி… பக்கத்துல எல்லாரும் இருக்காங்கடா! நாம வேணும்னா தனியா ரூம்ல போய் ரொமான்ஸ் பண்ணலாமா? என்று சிரித்து கொண்டே கிசுகிசுப்பாக அவளிடம் கேட்க… சட்டென்று அவனை விட்ட மலர் வெட்கத்தில் முகம் சிவந்து,
“ச்சீ போடா பிசாசு! ” அவனை தள்ளிவிட்டாள்!
“ஐயோ வலிக்குதுடி! ”
“அச்சோ… எங்க ஹரி வலிக்குது…” பதறி போய் மலர்விழி கேட்க அவளை பார்த்து கண்ணை சிமிட்டி
“சும்மாஆஆஆ” என்று கேலியாக சொல்லி விட்டு சிரிக்க மலர் அவனை பார்த்து முறைத்து கொண்டே சிரித்து,
“உனக்கு இதெல்லாம் பத்தாது… குச்சி எதுவும் கிடைக்க மாட்டேங்குதே…” என்று தேட
“ஹய்யோ… மீ எஸ்கேப்! ”
நரேஷ் வந்து ஹர்ஷாவிடம் ஏதோ கூறினான்! மலர் துவாரகாவை பார்த்து
“ஏன் லூசு… உனக்கு முதல்லயே விஷயம் தெரியுமா? தெரிஞ்சும் என் கிட்ட நடிச்சு இருக்க…” என்று கேட்கவும்.
“ம்ம்ம்… இந்த ஷாக் ட்ரீட்மென்ட வெளிய சொல்லாததுனால தான் நீ உண்மைய சொன்ன… இல்லைன்னா அமுக்குன்னி நீயாவது உன் லவ்வ சொல்றதாவது? ”
அதை கேட்டு சிரித்த மலர்விழி அவளை செல்லமாக ஒரு அடி வைத்து விட்டு முகம் தெளிவாக”என்னாச்சு ஹர்ஷா? எப்படி ஆச்சு? கார் முழுசா கொலாப்ஸ்ட்ன்னு அவ சொன்னதும் பொய்யா? ”என்று கேட்க
“கொலாப்ஸ் ஆனது நிஜம் தான்! ”
“என்னது…? ”பதறி போய் கேட்க
“வெயிட் வெயிட்… வெளில பிரஸ் கிட்ட பேசிடலாம்டா…”
*****
“சார்… இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்னுன்னு நீங்க நினைக்கிறீங்களா? ” நிருபர் பகுதியில் இருந்து கேள்வி வர.
“நோ… அது மாதிரி நான் நினைக்கல… இது எதேச்சையா நடந்த விபத்து…”
“மலர் மேடம் மேல அன்னைக்கு ஆசிட் வீச்சு நடந்துச்சு… அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்ல வரீங்களா ஹர்ஷா சார்? ”
“பாஸ்… ஆசிட் ஊற்றுன அந்த ஆள் மனநிலை சரி இல்லாதவர்ன்னு போலீஸ் ரிப்போர்ட் குடுத்து இருக்கே… நீங்க பார்க்கலையா… அவர் போலீஸ்ல கஸ்டடில இருக்கார்! …” நழுவினான் ஹர்ஷா!
மலர்… நரேஷ் உடன் இருக்க அவ்வப்போது மலரை பார்த்து கொண்டே பதில் கூறி கொண்டு இருந்தான்! மலரும் தீர்க்கமாக அவனை பார்த்து கொண்டிருந்தாள்!
நிருபர் பகுதியில் இருந்து மாறி மாறி கேள்விகள் பறந்து வர பதில் கூறினான் ஹர்ஷா! திடீரென்று ஒரு நிருபர்.
“சார் நீங்களும் நடிகை வர்ஷினியும் ரொம்ப க்ளோஸ்ன்னு பேசிக்கிட்டாங்க… அந்த வீடியோ உங்க நிலா டிவில வெளியிடபட்டதே… உங்க ரெண்டு பேர்க்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வரவும் தான்னு சொல்றாங்களே… அது உண்மையா? ” என்று கேட்க.
“பாஸ்… நம்ம ஹோம் மினிஸ்ட்ரி இங்க தான் இருக்காங்க… அவங்கள வெச்சுகிட்டே இப்படி சூனியம் வைக்கிறீங்களே…” என்று கேலியாக சிரித்து கொண்டே கேட்க அங்கே சிரிப்பலை எழுந்தது! மலர்விழி உணர்ச்சியை துடைத்து வைத்து பார்த்து கொண்டு இருந்தாள்!
“வர்ஷினி இப்போவும் எனக்கு நல்ல பிரெண்ட் தான்… ஆனா பிரெண்ட்ஷிப் வேற டிவி வேற பிரதர்… டிவில அவங்களுக்கு கிடைக்கிற ஸ்கூப்ஸ போடறாங்க… நிலா டிவியோட சேர்மன் மட்டும் தான் நான்… மற்றபடி excecutive board of directors தான் எல்லா முடிவும் எடுக்கறது… போதுமா விளக்கம்! ”
“சார்… உங்களுக்கும் மினிஸ்டர் சுதர்சன பெருமாளுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லைன்னும் அவர மந்திரி பதவிய விட்டு தூக்க நீங்க ட்ரை பண்றீங்கன்னும் நிறைய செய்திகள் வருதே… அது உண்மையா? ”
“கண்டிப்பா இல்ல… அவர் என்னோட மிக நெருங்கிய நண்பர்… அவர எதுக்கு நான் பதவி விட்டு தூக்க சொல்ல போறேன் பாஸ்… இது தான் ஜோக்…” சிரித்தான் ஹர்ஷா!
“அப்படீன்னா பத்து நாள் முன்னாடி அவரோட ஸ்பின்னிங் மில் பயர் ஆனதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்றீங்களா? ”
“பாஸ்… என்ன சொல்றீங்க? அவர் மில் பயர் ஆனதுக்கு ஷர்ட் சர்க்யூட் ஆனது காரணமில்லையா? நான்தானா? நல்ல தகவலா சொல்றீங்க! ” கேலியாக அவன் பேச
“அவரோட நிறுவன பங்குகள் மார்க்கெட்ல ரொம்பவும் இறங்கி போனதுக்கும், அவரோட நிலமோசடி பற்றி தெஹல்கா எக்ஸ்போஸ் செஞ்சதுக்கும்… உங்க தலையீடு தான் காரணம்ன்னு சொல்றாங்களே ஹர்ஷா சார்! ”
“அவரோட நிறுவன பங்குகள் வீழ்ச்சி ஆனதுக்கு காரணம் foreign investors தங்களோட முதலீட ஒரே நேரத்துல விலக்கினது தான் அது பற்றின விசாரணை செய்ய எங்க தொழில் கூட்டமைப்பு சார்பா கேட்டு இருக்கோம்! நில மோசடி பற்றி எனக்கு ஒன்னும் ஐடியா இல்ல… இந்த கேஸ் விசாரணைல இருக்கும் போது வெளியாள் நான் கமெண்ட் பண்றது அவ்ளோ சரியா இருக்காது! ”
“இப்போ இந்த விபத்து நடந்ததுக்கு கூட அவரோட உள்ளீடு இருக்குன்னு சொல்றாங்களே ஹர்ஷா சார்! ”
“பிரதர்… விபத்து முழுக்க முழுக்க எதேச்சையா நடந்தது! இதுக்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்ல… அவர் என்னோட மிக நெருங்கிய நண்பர்… என் நலன் விரும்பி! அவர இதுல இழுக்காதீங்க… நான் தான் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்! ”
“அவ்வளவு மோசமான விபத்து நடந்து இருக்கு… விபத்து எப்படி நடந்துன்னும் எப்படி நீங்க தப்பிசீங்கன்னும் சொல்ல முடியுமா ஹர்ஷா சார்…”
“ம்ம்ம்… கண்டிப்பா… என்னோட நண்பர் நரேஷ் திருமணம் முடிஞ்ச பிறகு நான் மலர்விழிய பார்க்க போயிட்டு இருந்தேன்… கொஞ்சூண்டு கோபத்துல இருந்தாங்க… சமாதானப்படுத்தலாமேன்னு போனேன்…” என்று கண்ணில் குறும்புடன் மலர்விழியை பார்த்து கொண்டே சொல்லவும், நிருபர் பகுதில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
“ஹர்ஷா சார்… உங்க நிலைமை இப்படி ஆகிட்டதே… நீங்களும் இனிமே தாயே சரணம் தான் சொல்லணும் போல்…” என்று குறும்பான நிருபர் கிண்டலடிக்கவும்
“என்ன பாஸ் பண்றது… விதின்னு இருந்தா விட்டுடவா போகுது…” மலர்விழி புன்னகைத்து கொண்டே முறைப்பதை பார்த்து…”அம்மா தாயே… உன் பர்மிஷன் இல்லாம பேச கூட மாட்டேன்… ஆனா உன் முட்டை கண்ண வெச்சு முறைக்காத தாயே…” என்று கிண்டலடிக்கவும் அங்கு சூழ்நிலை இயல்புக்கு மாறி சகஜமானது!
“ஒரு டாங்கர் லாரி முன்னாடி போயிட்டு இருந்தது! சைடு விடறாங்கன்னு நினைச்சு முன்னாடி போனேன்… அப்போ எதிர்பாரா விதமா ரைட்ல வந்துடுச்சு அந்த லாரி… நான் போயிட்டு இருந்த ஸ்பீட் கொஞ்சம் அதிகம் தான்! அதான் டக்குன்னு என்னால சமாளிக்க முடியல… ஸ்கிட் ஆகி பின்னால வந்த லாரி மேல கொலாப்ஸ் ஆய்டுச்சு! ”
“அப்புறம் எப்படி சார் தப்பிச்சீங்க? ”
“ஏர் பேக்ஸ் தான்… கண்ணாடி உடைந்ததுல நெற்றில காயம் மட்டும் தான் ஆனா கார் தான் முழுசா காலி…” என்று சொல்லி விட்டு சிரித்தான்!
“ஹர்ஷா சார்! ஒரு பர்சனல் கேள்வி! கேக்கலாமா? ” ஒரு பெண் நிருபர் கேட்க,
ஹர்ஷா மலரை பார்த்து விட்டு
“கேளுங்க பாஸ்! ”
“நீங்களும் மேடமும் லவ் பண்றீங்கன்னு தெரியும்… எப்போ சார் கல்யாணம்…? ”
மலர்விழியை பார்த்து குறும்பாக புன்னகைத்துவிட்டு
“அப்படியே அந்த கேள்விய இங்க கேளுங்க… நானும் கெஞ்சிகிட்டே தான் இருக்கேன்… ஆனா அம்மணி அசைஞ்சு குடுக்க மாட்டேங்கறாங்க… நீங்களாவது கொஞ்சம் ரெகமென்ட் பண்ணுங்க பாஸ்…” என்று சொல்லி சிரிக்க குபீரென்று அனைவரும் சிரித்தனர்!
“சீக்கிரமே டேட் பிக்ஸ் பண்ணிடுவாங்க வீட்ல… பிக்ஸ் பண்ணவுடன் சொல்றேன்… என்னங்க… என்னமோ சினிமா ஆள பேட்டி எடுக்கற மாதிரி கேக்குறீங்க…” என்று கேலி பேசவும்
“ஹர்ஷா சார்… நீங்க தானே இப்போ ஹாட் பேச்சிலர்…” என்று சொல்லி சிரித்து விட்டு
“வேணும்னா மலர்விழி மேடம் கிட்ட சொல்லுங்க… அவங்களுக்கு வேண்டாம்னா நான் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்… நீங்க என்ன ஹர்ஷா சார் நினைக்கிறீங்க…? ” என்று குறும்பாக அந்த பெண் கேட்க… அங்கு எழுந்த சிரிப்பலை ஓய சிறிது நேரம் ஆனது!
ஹர்ஷா சிரித்து சிரித்து ஒய்ந்து பின் மலர்விழியை குறும்பாக பார்த்து விட்டு…”யு ஆர் மோஸ்ட் வெல்கம் யெங் லேடி! இவங்க வம்பு பண்ணா சொல்றேன்… அடுத்த ஆப்ஷன் நீங்க தான்…” என்று சொல்லவும் அது வரை பொறுமையாக இருந்த மலர் அவன் காதை பிடித்து
“அய்யாவுக்கு வெயிட் லிஸ்ட் கேக்குதா? என்ன தைர்யம் இருந்தா என் முன்னாடியே இப்படி சொல்வீங்க…”
“ஸ்ஸ்ஸ்… எம்மா… வலிக்குதுடி… ஏய் எல்லாரும் இருக்காங்க… நாம தனியா டீல் பண்ணிக்கலாம்…” அவன் சரணடைய எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று!
********
“உண்மைய சொல்லு ஹரி… ஸ்பாட்ல என்னாச்சு? ”
கோபமாக நரேஷ் கேட்டு கொண்டிருந்தான்! அனைவரும் சுற்றி நின்று கொண்டு கேட்கவும் சிறிது நேரம் மெளனமாக இருந்தான் ஹர்ஷா… இருந்த இடம் லக்ஷ்மி விலாஸ்! மீனாக்ஷி மருத்துவமனையில் இருந்து வந்து அப்போதுதான் மகனை முழுதாக பார்த்த பின்னரே அவருக்கு உயிர் வந்தது… அவரை ஓய்வு எடுக்க செய்துவிட்டு ஹர்ஷாவை உலுக்கி கொண்டு இருந்தனர்!
தொண்டையை செருமி கொண்டவன்,
“சேஸ் பண்ணாங்க… ஹைவேஸ்ல ரெண்டு பைக் ரெண்டு கார்! சிட்டி அவுட்டர்க்கு என்னை டைவர்ட் பண்ணி ரவுண்டு பண்ண பார்த்தாங்க நரேஷ்! … அந்த நேரத்துல எப்போவும் என்கிட்டே இருக்கற பிஸ்டல காணோம்! அதனால அவங்க டைவர்ட் பண்ணற ரூட்ல போகாம நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கிற ஓஎம்ஆர் பக்கம் போயிட்டேன்! ”
“ஒரு அரை மணி நேரம் போக்கு காட்டினேன்… அப்போ எதிர்ல லாரி வந்தது! பக்கத்துல நிறைய கூட்டமும் இருந்தது! நம்ம ஆளுங்க… அதனால துணிஞ்சு லாரி மேல மோதிட்டேன்! கூட்டம் இருந்ததால அவங்க பக்கத்துல வராம ஆக்சிடென்ட் ஆனதா மட்டும் சுதர்சன பெருமாள்க்கு தகவல் சொல்லி இருப்பாங்க! கார் ரொம்ப டேமேஜ் ஆனதுனால நான் பிழைச்சு இருக்க மாட்டேன்னு நினைச்சு இருப்பாங்க…”
“ஆனா என் கார பத்தி எனக்கு தெரியும்! நேரா பேனட் வெச்சு மோதுனதால உள்ள airbags எக்ஸ்போஸ் ஆய்டுச்சு… அதோட ESP, trottle கன்ட்ரோல்ல கார விட ஆளுங்க safe ஆய்டலாம்… அதனால தான் நான் துணிஞ்சு மோதிட்டேன்! அதனால தான் அவன் உடனே மீடியால அப்படி ஒரு பிளாஷ் குடுத்து இருக்கணும்! ”
“எதுக்காகண்ணா அப்படி அவசரமா குடுத்தான்…? ” ரிஷி!
“விபத்து நடந்தது மதியம் 2 மணி! ஷேர் மார்க்கெட் க்ளோஸ் பண்றது 3:30 மணி… அதுக்குள்ளே ஷேர்ஸ் டவுன் ஆகணும்ல… அதுக்கு தான்… அவன் எக்ஸ்பெக்ட் பண்ண மாதிரி நம்ம ஷேர்ஸ் கிட்டத்தட்ட 30 % வால்யூ குறைஞ்சிடுச்சு! அதான் உடனே ப்ரெஸ் மீட்டிங் அரேஞ் பண்ண சொன்னேன் நரேஷ் கிட்ட… இப்போ எவ்ளோல க்ளோஸ் ஆயிருக்கு நரேஷ்? ”
“அமேசிங் ஹர்ஷா… நிஜமா நான் இந்த பாயிண்ட நினைக்கவே இல்ல… இப்போ பாசிடிவ்ல க்ளோஸ் ஆயிருக்கு… ஆக்சிடென்ட் டென்ஷன்ல நான் நினைக்கவே இல்ல… யு ஆர் அமேசிங்! ” வியந்தான்!
“அப்படி எதுக்குண்ணா உங்கள இந்த அளவு அந்த ஆள் செய்ய நினைக்கணும்? ” ரிஷி புரியாமல் கேட்டாள்!
அது வரை பேசாமல் இருந்த மலர் “உங்க அண்ணன் பண்ணி வெச்சுருக்கற காரியம் எல்லாம் மட்டும் சும்மான்னு நினைச்சியா ரிஷி…”
கோபமாக மலர் சொல்லவும் ஹர்ஷா என்னவென்பது போல பார்த்தான்!
“ஆசிட் மேட்டர்ல நீங்க ஒரு ஆள செட்அப் பண்ணி சரண்டர் ஆக சொல்லி இருக்கீங்க! அதுவும் நான் மிசெளரி போன ரெண்டாவது நாளே! செய்தீங்களா? இல்லையா ஹர்ஷா? ” கூர்மையாக பார்த்தபடி கேள்வி எழுப்ப.
“ஆமா… பண்ணேன்…” ரொம்பவும் காஷுவலாக சொல்ல.
“நான் போன நாலாவது நாள் அவரோட ஸ்பின்னிங் மில்லுல தீ பிடிச்சுருக்கு! கரெக்டா? ”
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மலர்? ”
“இந்த பதில நீங்க மத்தவங்க கிட்ட சொல்ல முடியும் ஹர்ஷா… ஆனா என்கிட்டே இல்ல… நான் ஒன்னும் ரெண்டு ரெண்டு அஞ்சுன்னு சொன்னா ஆமாம்ன்னு சொல்ற ஆள் இல்ல… அந்த மில் அசிஸ்டென்ட் மேனேஜரோட மாமா அக்கௌன்ட்க்கு மில் தீ பிடிச்ச ரெண்டாவது நாள் 5 லட்சம் போய் இருக்கு… அதுவும் உங்க அகௌன்ட்ல இருந்து… ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்ஷன் மூலமா… பத்து தடவையா வேற வேற பேங்க் அகௌன்ட்ல இருந்து பண்ணி இருக்கீங்க… அந்த மேனேஜர் பேர் சிவகுமரன்… அவங்க மாமா பேர் மதுசூதனன்… அகௌன்ட் நம்பர் 110859873456… இந்தியன் பேங்க்… ரைட்! ”
“ம்ம்ம்… ரைட்! ” உணர்ச்சியே இல்லாமல் சொல்ல நரேஷும் ரிஷியும் வியந்து பார்த்து கொண்டிருந்தனர்!
“மில் தீப்பிடிச்சதால கிங் க்ரூப்ஸ் ஷேர் இறங்க ஆரம்பிச்சது உன்மை… ஆனா முழு உண்மை என்னன்னா மார்கன் ஸ்டான்லிக்கு நீங்க குடுத்த பிரஷர் தான்! ஓவர்சீஸ் டெபாசிட்ஸ பார்த்துட்டு இருந்த எம்எஸ் உங்களோட வற்புறுத்தலால FDI யை கிங் க்ரூப்ஸ்ல இருந்து எடுத்தாங்க… இது நடந்தது, நான் மிசெளரில இருந்த ஏழாவது நாள்! அதாவது செப்டம்பர் 13… ரைட்! ”
“ம்ம்ம்… ரைட்… சொல்லு…” புன்னகைத்து கொண்டான்!
“தெஹெல்கா எக்ஸ்சிக்யுடிவ் ஹெட் சந்தீப்சென் குப்தா உங்க பிரெண்ட்… அவர அவரோட வீட்டுல நொய்டால செப்டம்பர் 22 பார்த்து இருக்கீங்க… செப்டம்பர் 23 லேன்ட் accquisition scam வெளிய வந்து இருக்கு… நீங்க அங்க தங்குனது ஹோட்டல் ரெசிடென்சி… சூட் நம்பர் வேணுமா ஹர்ஷா. “
“பரவால்ல… ஐஏஎஸ்ன்னு ப்ரூவ் பண்ணற செல்லம்…? ! ”வியந்து போய் கேட்டான்!
“அதே மாதிரி கடைசி வரைக்கும் செக்லிஸ்ட்ல என் பேர் இல்ல… ஆனா கடைசியா இன்க்ளூட் ஆச்சு… மிசெளரில ட்ரைனிங் கேம்ப் அட்டென்ட் பண்றதுக்கு… அதுக்கு காராணம் நீங்க… என்னை இந்த சைட்ல இருந்து ரிமூவ் பண்றதுக்கு… ரைட்? ”
“ஹேய் அமேசிங் செல்லகுட்டி… அசர வைக்கிற…”
“ஏன்… நீங்க மட்டும் தான் ஷேடோ போடுவீங்களா? நான் அத பண்ண மாட்டேனா ஹர்ஷா? இப்போ வரைக்கும்… ஐ அம் அண்டர் பிளாங்கெட்ன்னு தெரியும் ஹரி! அதே மாதிரி… யு ஆர் அண்டர் மை விஜிலென்ஸ்… நீங்க வர்ஷினிய எக்ஸ்போஸ் பண்ணதுல இருந்து… ஏன்னா நீங்க ஆபத்தான பாதைல போற மாதிரி எனக்கு தோனுச்சு… அதனால தான் ஷேடோ அரேஞ்ச் பண்ணிட்டு தான் மிசெளரி போனேன்… உங்கள நான் கிளோசா வாட்ச் பண்ணிட்டு தான் இருந்தேன்! … அதோட உங்க மெயில்ஸ் எல்லாமே என் கன்ட்ரோல்ல தான் இருக்கு…”
“ஹேய்… எப்படி… ஹாக் பண்ணுவியா? ” வியந்து கேட்க.
“மண்ணாங்கட்டி… அத வேற பண்ணனுமா? உங்க ஐடி போட்டு பாஸ்வோர்ட் போட்டா தெரிஞ்சுட்டு போறது… நீங்க எவ்ளோ பெரிய வேலை எல்லாம் பண்ணி என்ன யூஸ் ஹரி? இப்படி சிங்கள் பீஸ்ல கோட்டை விட்டுட்டீங்களே…” என்று கேலியாக கூற
அதற்கு பெரும்சிரிப்பு சிரித்த ஹர்ஷா
“மேடம்… ஆனானப்பட்ட சக்ரவர்த்திங்க எல்லாம் கவுந்தது பொண்ணுங்க கிட்ட தான்… என்ன பண்றது பாஸ்வோர்டா உன் பேர வெச்சா கூட கவுக்குறியே தாயே… ஷப்பா முதல்ல பாஸ்வோர்ட் மாத்தணும்… பேசாம ஆளையே மாத்திட்டா என்ன? இத்தன கேள்வி கேக்குறாளே? ” என்று சத்தமாக யோசிப்பது போல் நடிக்க
“மாத்தேன்… நானாவது எஸ்கேப் ஆவேன்! ” என்று சீண்டினாள்!
“அதுக்கப்புறம் வந்து ஹரி என்னை விட்டுட்டு போகாதன்னு அழுக கூடாது… ஓகே வா? ” என்று வம்பிழுக்க
“ஓஓஓ… அய்யாவுக்கு இப்படி நினைப்பு வேற இருக்கா? அதெல்லாம் சான்சே இல்ல… முதல்ல என்னைய விட்ருங்க! ”
“ஹய்… அப்போ அந்த ரிப்போட்டர் பொண்ணு ஓகே வா செல்லம்… சூப்பர்ல… அதையே ட்ரை பண்றேன்…” என்று சொல்லவும்.
“படவா… ட்ரை பண்ணுவ நல்லா ட்ரை பண்ணுவ… உன் வால முதல்ல ஓட்ட நறுக்கணும்…” என்று அடிப்பதற்கு தேடவும்.
“ரிஷி… காப்பாதுடா… ப்ளீஸ்…” என்று தங்கையிடம் சரண் புகுந்தான்!
“அய்யா சாமிங்களா… என்னை விடுங்க… அண்ணா நீயே எத்தன்! உனக்கு மேல இருக்காங்களே அண்ணி… ஆனா உனக்கு தகுந்த ஆள் தான்! இல்லைன்னா உன்னை சமாளிக்க முடியுமா? நீங்களே அடிச்சுகோங்க சேர்ந்துகோங்க… என்னை ஆள விடுங்கப்பா சாமிங்களா…” என்று எஸ்கேப் ஆனாள் ரிஷி!
“அதே தான் நானும் சொல்றேன் ஹர்ஷா… எப்பா… உனக்கு தகுந்த ஆள் தான் என் தங்கச்சி… நாங்களும் கிளம்பறோம் ஹர்ஷா… எதுனாச்சுனா…”
“கண்டிப்பா கூப்பிடுறேன் நரேஷ்…” என்று கூறி கண்ணடிக்கவும்.
“மவனே கூப்டீன்னா கொன்னுருவேன்… நாளைக்கு காலைல கூப்பிடு…” என்று சொல்லி சிரித்து விட்டு துவாரகாவை அழைத்து கொண்டு சென்றான்!
தனியே விடப்பட்ட இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர்!
“சரி வா உன்னை கொண்டு போய் வீட்டுல விட்டுடறேன்…” என்று கூறி மலர்விழியை அழைத்து கொண்டு காரை நோக்கி சென்றான்! போகும் வழியில் மௌனமே ஆட்சி செய்தத்து! மலர்விழியின் மனதில் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை!
வீட்டிற்கு வந்ததும் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்த ஹர்ஷா
“இன்னும் என்னடா கேக்க நினைக்கிற… கேளு…” என்றான்!
ஒரு நிமிடம் உள்ளுக்குள் வியந்த மலர்,
“ஏன் ஹரி… இதையெல்லாம் எதுக்கு பண்ணறீங்க? நீங்க பாட்டுக்கு உங்கபிசினெஸ பார்க்க வேண்டியது தானே? ஏன் பகைய இப்படி இழுத்து விட்டுட்டு ரிஸ்க் எடுக்கறீங்க? ஏன்? உங்களுக்குபுரியலையா… இது ஆபத்தான விளையாட்டுன்னு… இன்னிக்கு நீங்கதப்பிச்சுடலாம்… ஆனா அவனும் சும்மா இருக்க போறதில்ல… நீங்களும் சும்மா இருக்க போறதில்ல… இதுனால லாஸ் ரெண்டு பக்கமும் தான்… இதெல்லாம் உங்களுக்கு தெரியாம இல்ல… அப்புறம் ஏன்? என்று கம்மிய குரலில் மலர்விழி கேட்கவும்
“காரணம்… நீ… நீ மட்டும் தான் மலர்! ”
“வாட்? ” அதிர்ந்தாள்!
“எஸ்… அவன் புறம்போக்கு நிலங்கள அவன் பேருக்கு பட்டா பண்ணி தர சொல்லி கேட்டதுக்கு நீ முடியாதுன்னு சொல்லி இருக்க! ரைட்டா? ”
“ம்ம்ம்… ஆமா! ” புரியாமல் தலையாட்டினாள்!
“நீ செங்கல்பட்டுல சப்கலெக்டரா இருந்தப்போ தேர்தல் சமயத்துல ஆம்னி பஸ்ல இருந்து மொத்தமா இருபது கோடி சீஸ் பண்ண… ரைட்டா? ”
“ம்ம்ம்… ஆமா! ”
“அது அவன் பணம்… அந்த சரவணன் இவனோட பினாமி…” என்று கூறி இடைவெளி விட்டவன்.
“ஓஎம்ஆர்ல இல்லீகல் பில்டிங்ஸ இடிக்க நீ ட்ரை பண்ணப்போ என்னோடத மட்டும் தான் உன்னால இடிக்க முடியல… மத்தது ஸ்வாஹா… ரைட்டா? ”
“ம்ம்ம்… ஆமாம்! ”
“அதுல நாலு கன்ஸ்ட்ரக்ஷன் சுதர்சன பெருமாளோடது… ம்ம்ம் ரைட்டா? ”
“ம்ம்ம்… ரைட்! ”
“சென்னை ரியல் எஸ்டேட் ஆளுங்க பத்தி உனக்கு தெரிஞ்சது ரொம்ப குறைச்சல்மா… முறைக்காத… நிஜத்த தான் சொல்றேன்… என்னோட லிங்க் பண்ணி பேப்பர்ல வந்த ஒரு நியூஸால மட்டும் தான் நீ தப்பிச்ச… எனக்கு பயந்துட்டு யாரும் நெருங்கல… இதே தனியா இந்த காரியத்த பண்ணி இருந்தா உனக்கு எப்பயோ பால் ஊத்தி இருப்பாங்க… இதுதான் நிஜம்…”
“ஆனா அதே விஷயத்துல என்னோட பகையான சுதர்சனுக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கிற மாதிரி ஆய்டுச்சு… ஆனா அவன் என்னை கொஞ்சம் குறைச்சலா எடை போட்டுட்டானோ இல்லை அரசியல் செல்வாக்கு அதிகரிச்சதால தைர்யம் வந்ததோ… உன் மேல கை வைக்க துணிஞ்சுட்டான்… அந்த வர்ஷினி அவனுக்கு ஜால்ரா… ஆனா இனிமே அவ வெளிய வரவே முடியாது…”
“அப்படீன்னா… ஆசிட் ஊத்த வந்தவன விட்டுட்டு ஏன் எவனோ ஒருத்தன மனநிலை சரி இல்லாதவன்னு பிராண்ட் பண்ணி வெச்சு இருக்கீங்க…? ”
“அவன் இப்போ இருந்தா தானே? நீ மிசெளரி போன ரெண்டாவது நாள் யாரோ பொண்ணோட தாலிய திருட ட்ரை பண்ணப்போ மக்கள் அவனை துரத்த அப்போ வந்த மணல் லாரி மோதி இறந்துட்டான்! இது நடந்தது காஞ்சிபுரம் பக்கத்துல…” உணர்வுகளை துடைத்து கொண்டு அவன் கூற… முகம் முழுக்க அதிர்ச்சியை தாங்கி கொண்டு அவனை பார்த்தாள்!
“ஹரி… நிஜமா அவன் எதேச்சையாவா இறந்தான்…? ”
“அவன் இப்போ இல்லை… அதோட விடு… எப்படி என்னன்னு கேக்காத! ”
“அதெப்படி ஹரி… கேக்காம விட முடியும்… சட்டப்படியும் தப்பு! நியாயப்படியும் தப்பு…”
“ஓ அப்படீன்னா உன் மேல அன்னைக்கு ஆசிட் ஊத்தியிருந்தா உன் நியாயம் எல்லாம் எங்க போகும் மலர்? ”
“அத பார்த்துக்க போலிஸ் இருக்காங்க… நீங்க எப்பிடி சட்டத்த உங்க கைல எடுத்துக்கலாம்? ”
“அப்படியா… சரி இன்னொன்னு கேளு… அன்னைக்கு ஷாப்பிங் போனப்போ உன்னை அவசரமா காருக்கு போக சொன்னேனே நினைவிருக்கா? ”
“ஆமா… ஏதோ பசங்க பின்னாடி இடிச்சதுக்காக சண்டை பிடிச்சீங்க…”
“அப்போ அந்த ஆளுங்க உன்னை இடிக்க வரல… கைல கத்தி வெச்சுட்டு இருக்கவன் கைய முறிக்காம என்ன பண்ண சொல்ற மலர்? அப்பவும் நியாயம் பார்க்க சொல்றீயா? எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும் தான்! உன் மேல கை வைக்கிற எவனா இருந்தாலும் இதே நிலைமை தான்! அவனுங்களுக்கு நம்ம பிஎஸ்ஓஸ் ட்ரீட்மென்ட் குடுத்தப்போ தான் தெரிஞ்சுது… அவனுங்க சுதர்சன் ஆளுங்கன்னு…”
“கடவுளே… எனக்கு தெரியாம இவ்ளோ நடந்து இருக்கா? ”
“அதனால தான்… இனிமே இவன விட்டு வெச்சா ஆபத்துன்னு லீகலா ட்ராப் பண்ண தான் நில ஆக்ரமிப்பு மோசடிய வெளிய கொண்டு வர செய்தேன்… அதோட மோர்கன் ஸ்டான்லியையும் வச்சு கன்ட்ரோல் பண்ணேன்! ”
சிறிது நேரம் விட்டு தொடர்ந்தவன்
“இதுல எல்லாம் ரொம்பவே கடுப்பான சுதர்சன் என்னை மொத்தமா முடிக்க ட்ரை பண்ணான்! ”
“ஹரி! ” குரல் நடுங்கியது மலருக்கு…” இப்போ மட்டும் சும்மா இருக்க போறானா ஹர்ஷா… என்னால தாங்க முடியல… நீங்க எதாச்சும் ஆபத்த இழுத்துக்க போறீங்களோன்னு தான் உங்கள நான் வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்… ஆனா இப்படி ஒரு வலை எனக்கு தெரியாம என்னை சுத்தியே பின்னப்பட்டு இருக்குன்னு எனக்கு தெரியல… ஒவ்வொரு தடவை எனக்கு எதாச்சும் ஆபத்து வரும் போது நீங்க தான் காப்பத்துறீங்க…” கண்களில் அருவி கொட்ட காத்திருக்க.
“ஏதோ சம் இன்ட்யுஷன் ஹனி… தெரியல… ஒரு வேளை அதுதான் லவ்வோ? எனக்கு பிரிச்சு பார்க்க தெரியல… இல்லைன்னா ஏதோ பூர்வ ஜென்ம விட்ட குறையோ தொட்ட குறையா இருக்கனும்… ஆனா ஒன்னு மட்டும் நிஜம் மலர்…” என்று கூறி இடைவெளி விட்டவன்.
“என்னோட உயிரே நீ தான்டா… எப்படி உன் மேல இந்தளவு பைத்தியமானேன்னு புரியவே இல்ல…”
“ஹரீ… இதுக்கெல்லாம் நான் தகுதி கிடையாது… உங்களுக்கு இன்ட்யுஷன் வொர்க் ஆகிருக்கு… ஆனா உங்களுக்கு ஒரு ஆபத்து வரும் போது எனக்கு அப்படி ஒன்னும் வொர்க் ஆகலையே… ஐ அம் நாட் டிசெர்விங் ஹரி…” என்று அழ தொடங்க.
“ஹேய்… கண்ணம்மா என்னடா… அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது… நீ இப்படியெல்லாம் போட்டு குழப்பிகிட்டு ……ப்ளீஸ் கண்ணா…” என்று கூறி அணைத்து கொண்டு… தொடர்ந்தான்.
“உன்னை நான் முதல்ல பார்த்த உடனே பிளாட்… ஆனா அத புரிஞ்சுக்க எனக்குமே டைம் தேவைப்பட்டது… போக போக உனக்கும் இந்த லூசுதனம் எல்லாம் வந்துடும் பன்ஸ்…”
“ம்ம்ம்… என்ன பன்ஸா… உதை விழும்…” என்று அழுகையோடு சிரித்து கொண்டு மிரட்டினாள்!
“ஆமா உன் பிரெண்ட் அப்படி தானே சொல்லுவாங்க… ஹஹா… என்ன பொருத்தமான பேர்… அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கியே…” என்று ஒரு மாதிரியான குரலில் குழைய… அவனிடம் இருந்து விலக முயற்சி செய்து கொண்டே
“ஹலோ… மிஸ்டர் ஹர்ஷவர்தன்… இந்த குழையறது நெளியறது எல்லாம் வேற எங்கேயாச்சும் வெச்சுகோங்க…” என்று குறும்பாக சொல்ல
“அப்படியா… இதுக்கு தனியா ஆள் தேட முடியாது ஹனி… வேணும்னா நீயே பார்த்து குடு…” என்று கூறி கண்ணடித்து அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்து கொண்டான்!
“ஓஹோ… அய்யாவுக்கு இந்த வேலை வேற பாக்கணுமா… எதுவும் கைல கிடைக்க மாட்டேங்குதே… அடிக்க…” அடிப்பதற்கு ஆயுதத்தை தேடினாள்!
“அப்படியா…” என்று கூறியவன் பார்த்த பார்வை மலருக்கு எதையோ உணர்த்த… ,
“ஹய்யோ… இன்னும் இங்க இருந்தா டேஞ்சர் சாமியோவ்… ஆள விடுங்க…” என்று சொல்லிவிட்டு ஓடுவதற்கு முனைந்தாள்! சட்டென்று அவளது இடையை வளைத்தவன்.
“முடிஞ்சா போய்க்க பாக்கலாம்…” கிசுகிசுத்தான்!
முகம் எல்லாம் சிவந்து போய்
“ஹரி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” பாதி குரல் உள்ளே போக…”
“ஹனி… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று அவளை போலவே கூறி கேலி செய்தான்
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடன் பிணைத்து கொண்ட ஹர்ஷா மென்மையாக அவளது முகத்தை பற்றி உதடால் கோலம் போட
“ஹரி… இது தான் எல்லை தாண்டிய தீவிரவாதம்! ” என்று கிசுகிசுத்தாள்!
“ம்ம்ம்… அப்படியா… ஆனா இன்னும் எல்லையே தாண்டலையே ஹனி… தாண்டிடலாமா? ” என்று கேட்டு கொண்டே கழுத்து வளைவுக்கு வர… மலருக்கு உடல் சிலிர்த்தது!
“லைன் ஆப் கன்ட்ரோல தாண்டுரதுக்கு விசா பாஸ்போர்ட் வேணும் ஹரி! ”
“ஹேய்… என்கிட்டே பாஸ்போர்ட் இருக்கு… ஆனா விசா ப்ரோசெஸ மேடம் தான்டிலே பண்றாங்க… டூ பேட்… ரொம்ப டிலே பண்ணா எல்லை தாண்ட வேண்டியதுதான்…” என்றான் சிரித்து கொண்டே
“ச்சீ… போடா! ” என்று வெட்கப்பட்டு முகம் சிவந்து அவனை தள்ளி விட… ஒரு நிமிடம் அவளை கண்களால் விழுங்கியவன், அடுத்த நிமிடம் அவளது அதரங்களை சிறை பிடித்து இருந்தான்! சிறிது சிறிதாக நினைவை இழந்தவள் முழுவதுமாக அவனுள் உறைந்த கணங்கள் அவை… மயக்கத்தோடு புன்னகைத்த ஹர்ஷா அவளை விடுவித்து விட்டு எதிர் சோபாவில் உட்கார்ந்தான்!
“ஹேய்… மலர்… வேணாம் உன் பக்கத்துல வந்தா என்னால கன்ட்ரோல் பண்ண முடியல… நீ அங்கேயே இரு…” என்று கூறி சிரித்தவன்… சிறிது நேரம் பேசி விட்டு சென்றான்!
தனிமையை மறந்து உறங்க சென்றாள் மலர்.
*******
காலையில் எழுந்த மலர்விழி எப்போதும் போல் சுறுசுறுப்பாக யோகா செய்துவிட்டு சுப்ரபாதத்தை கேட்டு கொண்டே காபியோடு தோட்டத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்! பக்கத்தில்”பே” என்ற ஒலி கேட்கவும் அரண்டு போய் திரும்ப.
வேறு யார்?
நம்ம ஹீரோ சார் தான்! ஜாக்கிங் சூட்டில் வியர்வை கொப்பளிக்க ஓடி வந்து இருந்தான்!
“ஹேய்… குட் மார்னிங்” சந்தோஷமாக விளித்தவள்…”என்னப்பா இது… காலைலேயே விசிட் அதுவும் ஆறு மணிக்கே…” என்று கேட்கவும்
“நேத்து உன் கிட்ட இருந்து வாங்கிட்டு போன மெடிசின் தீர்ந்து போயிடுச்சா… அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்…”
“நானா… உங்களுக்கா… மெடிசினா? இல்லையே… நான் அதிகமா மருந்தே எடுத்துக்க மாட்டேன் ஹரி… இயற்கை வைத்தியம் தான்… அதுல தானே பக்க விளைவு இல்ல…” என்று அப்புரானியாக விளக்கம் குடுத்தாள் மலர்!
“ஆமா! பன்ஸ்… அதுவும் இயற்கை மருத்துவம் தான்… உன் கிட்ட தானே நேத்து வாங்கினதா ஞாபகம்…” என்று குறும்பாக கேட்கவும் தான் மலருக்கு புரிய.
“ச்சீ போடா பிசாசு… காலைலேயே வந்து மூட ஸ்பாயில் பண்றியா? ஓடி போ…” வெட்கத்தோடு சிரித்தாள்!
“ஹேய்… நீயும் வா மலர்… ரெண்டு பேரும் ஓடி போய்டலாமா? ” என்று மறுபடி வம்பிழுக்கவும்
“டேய்… வேணாம்… காபி போட்டு தரலாம்னு நினச்சேன்… உன் வாலுதனத்துக்கு காபி கட்! ”
“சரி சரி… அதெல்லாம் பேசி தீர்த்துக்கலாம்… எனக்கு காபி குடுடி”
“என்ன டியா… என்னடா நினைச்சுட்டு இருக்க? ” பொய்யாக கோபப்பட.
“நீ ரொம்ப ஒழுங்கு… பாதி நேரம் வாடா போடாங்க வேண்டியது… பாதி நேரம் ரொம்ப நல்ல பிள்ளையா வாங்க போங்கன்னு சொல்ல வேண்டியது! … போடி செல்லக்குட்டி… உன் மாமனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா பாக்கலாம்…”
“என்னது மாமாவா… ஆச தோச…. மாமான்னு வேற கூப்பிடனுமா? அதுக்கு வேற ஆள பாருங்க…” என்று கூறியபடியே காபி கலந்து கொண்டு இருந்தாள்!
“தோசை இட்லி எல்லாம் வேணாம்… இப்போதைக்கு காபி குடுன்னா இத்தனை பேசிட்டு இருக்க! ” என்று சிரித்தான்.
அப்போதுதான் குளித்து பூஜை முடித்து இருந்தாள் மலர்! காலையில் பூத்த புத்தம் புது பூவாக இருந்தவளை பார்த்து கொண்டே காபியை அருந்தினான்! தொலைகாட்சியை ஆன் செய்தபடி!
“பன்ஸ்… இன்னிக்கு உன் மாமியார் வராங்க…”
“ஹை… அப்படியா… என்ன விஷயம்? ”
“ம்ம்ம்… உலக பொருளாதாரத்த உன் கிட்ட டிஸ்கஸ் பண்ண போறாங்களாம்… கேக்கறா பாரு கேள்வி… ஆவணி முடியறதுக்குள்ள கல்யாணம் வைக்கனுமாம்… அத சொல்லிட்டு உன்னை பார்த்து பூ முடிக்கனுமாம்… சாங்கியமாம் மலர்… அதான் உன் மாமியார் விசிட்…”
இதை சொல்லவும் மலர்ந்த மலர்விழி அடுத்த நிமிடம் வாடினாள்!
“ஹேய்… என்னப்பா… ஏன் டல்லாயிட்ட? ”
“இங்க எனக்காக பேச யாருமே இல்லையே ஹரி…” என்று மிகவும் வருத்தமாக கூற
“அட மக்கு… உன் ஆருயிர் அண்ணாத்தை நரேஷ் எதுக்கு இருக்கான்? கொஞ்ச நேரத்துல அவங்க இங்க வந்துடுவாங்க… நீ இன்னைக்கு லீவ் போட முடியுமாடா? ”
அவனை பார்த்து வாஞ்சையாக புன்னகைத்தாள்!
“லீவ் போடுன்னு சொல்லாம… போட முடியுமான்னு கேக்குறியே… ஐ ம் ப்ளஸ்ட்… ஓகே ஹர்ஷா”
தொலைகாட்சியில் செய்திகள் ஆரம்பிக்க
“சைதாபேட்டை எம்எல்ஏ சுதர்சன பெருமாள் கைது செய்யபட்டார்! பாகிஸ்தான் உளவாளியிடம் ரகசியங்களை குடுத்த போது சுற்றி வளைத்தது சிபிஐ… ராஜ துரோக குற்றசாட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்க பட்டார்! ”
ஹர்ஷாவை பார்த்து புன்னகைத்தாள்!
“உங்க வேலையா? ”
“ம்ம்ம்… சொன்னா அர்ச்சனை கிடையாதுன்னு சொல்லு நான் சொல்றேன்…” என்று கேட்டு கண்ணடிக்கவும்
“உங்களை… என்ன பண்றதுன்னே தெரியல ஹரி…” என்று மலர்விழி அலுத்து கொள்ளவும்.
“ஒன்னும் பண்ண வேணாம்… இப்போதைக்கு ஒன்னு மட்டும் குடு போதும்…” என்று குறும்பாக கேட்க.
“ம்ம்ம்ம்… என்ன? ”
“உம்மா…” என்று சொல்லி விட்டு கண்ணடிக்க… மலர் அவனை அடிப்பதற்கு குச்சியை தேட… அதை பார்த்து ஹர்ஷா ஓட.
அப்புறம் என்னங்க நமக்கு அங்க வேலை?                                                 
இனி எல்லாம் சுகமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!