6
கமிஷ்னரின் அறை பரபரப்பாகயிருக்க, அங்கே வெளியே கேஸ் பைலுடன் காத்துக் கொண்டிருந்தாள் கனிஷ்கா..
உள்ளே வேறு சில உயரதிகாரிகளுடன் மீட்டிங்கை தொடர்ந்த கமிஷ்னர் கனியை உள்ளே வரச் சொல்ல, அவளுக்குத் தெரியும் இந்த மீட்டிங் ஐம்பது நாட்களுக்கு முன் நடந்த அந்தப் பஸ் ஸ்டான்ட் பெண்ணின் கொலை சம்பவத்திற்கும், ஈஸ்வரின் மரணத்திற்கும் தான் என்பது..
உள்ளே நுழைந்தவள் கமிஷ்னருக்கு சல்யூட் அடிக்க, “கனிஷ்கா, இன்னும் அந்த ரெண்டு கேசும் முடியல போல..” என்க
“எல்லா இடத்துலையும் விசாரிச்சிட்டு தான் சார் இருக்கோம்..” நிமிர்வாய் பேசுபவளிடம்..
“இன்னும் எத்தனை நாளுக்கு தான் விசாரிச்சிட்டு மட்டுமே இருப்பீங்க..” கடுப்பாய் அவர் கேட்க,
“சார்..கிட்டதட்ட இந்த ஐம்பது நாளுல நாற்பது பேர் கிட்ட விசாரிச்சாச்சு..ஸ்பாட் அங்க இங்கன்னு ஒரு இடம் விடாம அலசியாச்சு..அந்த கொலைகாரன் வந்த தடத்தை வச்சி விசாரிச்சா கூட இது கிராமம் இல்ல, இங்க ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்குல வராங்க போறாங்க..எதை வச்சி தான் விசாரிக்க சொல்றீங்க..?”
“கனி புரியுது..பட்..”
“சார்..பொண்ணு வீட்டுல விசாரிக்க இப்போ வரைக்கும் நீங்க பெர்மிஷன் கொடுக்கல..அவங்க வீட்டுல அரசியல் செல்வாக்கு இருக்குன்னு அங்கயும் கால் வைக்க கூடாது அப்புறம் எங்கயிருந்து சார் துப்பு கிடைக்கும்..” கோபமாய் கேட்பவளிடம் இடையிட்டவர்
“கனி இன்னும் ஒன் மன்த்ல இந்த கேசை நீங்க க்ளோஸ் பண்ணலனா சிபிஐக்கு நம்ம கேஸ் போயிடும்…சோ க்விக்கா..”
“என்னால முடிஞ்ச வரைக்கும் நான் ட்ரை பண்றேன் சார்..” என்றவள்
“அந்த இறந்த பொண்ணு ஸ்தமிதி வீட்டுல விசாரிக்க நாளைக்கு போறேன் சார்..” இதோடு என் பேச்சு முடிந்தது என அவள் கிளம்பியதும், தனக்கு எதிரே இருந்த அதிகாரிகள் வைத்தப் புகார்களுக்கு இம் கொட்டத் தொடங்கினார் கமிஷ்னர்..
“சார்..இந்த லேடி நியாயம் எல்லாம் பேசி விசாரிக்கிறதுக்குள்ள கேஸ் கிட்ட சிபிஐ போயிடும்…அப்படி சிபிஐக்கு மட்டும் கேஸ் போயிட்டுனா நாம பெட்டி பெட்டியா வாங்குனத அவுக்க வேண்டியது தான்..” கோபமாய் பேசிய அதிகாரி கமிஷ்னரிடம்..
“சார், கேஸை என் கையில கொடுங்க நாங்க எப்படி எப்படி முடிக்கனுமோ அப்படி அப்படி முடிச்சிக்கிறோம்..” என்றதும், சரியெனத் தலையசைத்தவர்
“ஒரு இரண்டு நாள் போகட்டும் யா..அப்றம் அந்தப் பொம்பளைய ரிலீவ் பண்ணிட்டு உங்க கையில சார்ஜ் கொடுக்குறேன்..” என்றவர் அடுத்தப் பேச்சைத் தொடங்கினார்..
கமிஷ்னர் அலுவலகம் விட்டு வெளியே வந்த கனிஷ்காவை தற்செயலாய் பரத் பார்க்க, “கனி..” என சத்தமாய் அழைத்திருந்தான்..
அவனது சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிய கனி, “என்ன டா சிபிஐ இந்தப் பக்கம்..?” என்றதும்,
“அந்த வடபழனி பஸ் ஸ்டான்ட் மர்டர் ஸ்தமதி கேஸ் விஷயமா உங்க கமிஷ்னரைப் பார்க்க போறேன்..” என்றவனிடம்
“இப்போவே என்ன டா அவசரம்..? அதான் இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கே..” என்றவளைப் பார்த்து சிரித்தவன்..
“அப்போ அந்த ஒரு மாசத்துல கூட கண்டுபிடிக்க மாட்டீங்க அப்படி தானே..”
வெறுப்பாய் தனது இதழை வளைத்தவள், “ஸ்தமதி பேரெண்ட்ஸையே நாளைக்கு தான் பரத் விசாரிக்கப் போறேன்..” என்றவளிடம்
“என்னது..? அப்போ மர்டர் அப்போ என்ன பண்ணுனீங்க..?” என்க
“மர்டர் அப்போ அவங்க ஒத்துழைக்கல..கேட்டா பொண்ண பறிகொடுத்த அதிர்ச்சில இருக்கோம் அப்படி இப்படினுட்டாங்க..சரின்னு அப்புறம் விசாரிக்க போனா அந்த பொண்ணோட அப்பா இருக்க கட்சி ஆளுங்கள வச்சி பிரச்சனை பண்ணுறாரு..” என்றதும் சிரித்தவன்..
“அப்போ தப்பு அங்க தான் இருக்கும்னு சொல்றீயா..?” என்றவனை இடைமறித்தவள்..
“நான் அந்தப் பொண்ணோட அப்பாவ இன்னும் பார்க்கல, பட் உண்மையா அவங்க அம்மா அப்புறம் மொத்த ஃபேமிலி கண்ணுலையும் கொஞ்சம் கூட பொய் இல்லை..சோ அவங்களா இருக்க வாய்ப்பில்லை ஆனா விசாரணைக்கு ஏதாச்சும் யூஸ் ஃபுல்லா கிடைக்கலாம் இல்லையா..?” என்றவளிடம் சரியெனத் தலையசைத்தவன்..
“அப்போ இன்னும் ஒரு மாசத்துல கேஸை முடிச்சிருவன்னு சொல்லு..” என்றதும் மறுப்பாய் தலையசைத்தவள்,
“இன்னும் இரண்டு நாளுல இந்த கேஸ் என் கைவிட்டு போயிடும் பாரு..” என்றவளின் மொபைல் போன் இப்போது ஒலித்தது..
“சரி பரத்..ஈவ்னிங் வீட்டுல பார்ப்போம்..” என்றவள் அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள்..
கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து காரை ஸ்டேஷனுக்கு ஓட்டிக் கொண்டிருந்தவளின் நினைவலைகளில் ஈஸ்வர் பற்றியே ஓடிக் கொண்டிருக்க, முயன்று அவனைப் பார்த்த அந்நாளுக்குத் தனது கவனத்தைக் கொண்டு சென்றாள்..
அன்று,
காக்கி நிற பேண்டும் கருப்பு நிற முழுக்கை சட்டையும் அணிந்து தலையை ஏற்றி கொண்டைப் போட்டு அதற்கு மேல் கேப் வைத்திருந்தவளின் கைகள் அனிச்சையாய் தனது முதுகில் இருக்கும் பிஸ்டலை தடவிப் பார்த்து கொண்டது..
தூரத்திலே ஒருவன் தள்ளாடியடி நடந்து வருவதைக் கண்டவள், வாய்க்குள்ளே “குடிகாரப் பய..” என முணுங்க போதை தலைக்கேறியவனுக்கு எதிரேவரும் கனியின் வண்டியில் இருக்கும் ஹெட்லைட் கூட தெரியவில்லை..
கனியின் அருகே நெருங்கியவன் இப்போது சுருண்டு கீழே விழ, அவன் விழுந்ததும் ஐந்தடி தூரத்திலே வண்டியை நிறுத்தியவள், பைக்கை ஆப் செய்யாமல் சைட் ஸ்டான்ட் போட்டு கீழே விழுந்தவனை நெருங்கினாள்..
தற்காப்புக்காக அவனைத் தொட்டு தூக்காமல், காலால் நகற்றி பார்க்க, அங்கே மயக்கமாய் கிடந்த ஈஸ்வரைப் பார்த்து திகைத்து தான் போனாள்..
சுற்றி பார்வையை சுழல விட்டவளுக்கு தூரத்தில் நின்றிருந்த இன்டிக்கோ பார்வையில் வட்டத்துள் விழுந்தது..
அந்த வண்டியில் மீதும் தன்னைச் சுற்றியும் கவனத்தை வைத்தவளின் கைகள் ஸ்டேஷனுக்கு அழைப்பு விடுத்தது..
தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஸ்டேஷனுக்கு அழைப்பு விடுத்தவள் கைகளைக் கட்டி தனது வண்டியில் ஏறி அமர, சந்த்ருவும் அவளைத் தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்..
தூரத்திலே நின்ற காரை ஓரக் கண்ணால் பார்த்தவளுக்கு அதில் ஏதோ அசைவு தெரிவதாய் இருக்க, கனியையே கூர்ந்து உள்வாங்கியனுக்கு இப்போது தனது காரின் மீது அவளது சந்தேகப் பார்வை விழுவதை ஊர்ஜித்தவன், தனது எண்ணில் இருந்து ஆனந்திற்கு குறுந்தகவலைத் தட்டிவிட்டான்..
அவள் தகவல் தெரிவித்த அரை மணி நேரத்திற்கெல்லாம் கான்ஸ்டெபிளும் இன்ஸ்பெக்டரும் ஜீப்பில் வந்துவிட, அவர்கள் வைத்த வணக்கத்தை புறந்தள்ளியவள்…
“மணி சார், இங்க பக்கத்துல இப்போ எந்த 24 ஹவர்ஸ் தொறந்திருந்தாலும் ஒரு டாக்டரை உடனே கூட்டி வாங்க..” கான்ஸ்டபிளுக்கு ஆணையிட்டவள்,
“முருகன் சார், இவனோட பேண்ட் பாக்கெட் எல்லாத்தையும் செக் பண்ணுங்க..அப்புறம் நீங்க பிஸ்டல் வச்சிருக்கீங்களா..?”
“நோ மேம்..”
“ஓ..தட்ஸ் குட்..நீங்க இங்க நில்லுங்க..நான் கொஞ்ச தூரம் போயிட்டு வாரேன்..” என்றவள் பைக்கை விடுத்து நடந்து செல்ல,
“மேம்..நானும் வரவா…?”
“ஏன் சார்..? தனியா நிக்க பயமா இருக்கா..?” எள்ளல் மிகுந்த குரலில் கேட்கும் கனியை மனதினுள் அர்ச்சித்தவன்,
“இல்ல மேம் நீங்க தனியா..?”
“இட்ஸ் ஓகே..ஐ வில் மேனேஜ்..” என்றவள் அடுத்தவன் பேச முற்படும் முன் அந்தக் காரை நோக்கி நகர்ந்திருந்தாள்..
அவளுக்கும் அந்தக் காருக்கும் இடையில் இருந்த ஐம்பது அடியைக் கடக்கும் முன், இருவர் பைக்கில் வந்து அந்தக் காரை மறைத்து கொண்டு நிற்க, அதில் ஒருவன் கீழிறங்கி அந்தக் காரின் டிக்கியைத் திறந்து பின்னால் இருந்து எதையோ எடுத்தான்..
பைக்கில் இருந்தவன், காரின் முன் பக்கத்திற்கு பைக்கை கொண்டு செல்ல கண் மூடித் திறக்கும் சொற்ப நேரத்தில் அந்தப் பைக்கில் இருந்தவன் இறங்கி அதில் சந்த்ரு ஏறி அப்படியே யூ டேர்ன் அடித்து வண்டியை கிளப்பியிருந்தான்..
அவை அனைத்தும் சொற்ப நிமிடங்களுக்குள் நடந்து முடிந்திருக்க, கனிக்கு இருவர் பைக்கில் வந்ததும் மட்டுமே தெரிந்ததே அன்றி ஒருவன் கீழிறங்கி இடம் மாறியதை அவள் உணரவேயில்லை..
காரை நெருங்கியவள் பின்னே டிக்கியை நோண்டிக் கொண்டிருந்தவனிடம், “இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறீங்க..?” என்றாள்..
நிமிர்ந்தவன், “மேடம் வண்டி ரிப்பேர்னு சொன்னாங்க..நான் பக்கத்துல தான் மெக்கானிக் ஷாப் வச்சிருக்கேன்..” என்க
“அப்படியா..உன் மெக்கானிக் ஷாப் பேரு என்ன..?” கேள்வி அவனிடம் இருந்தாலும் கண்கள் என்னவோ காரைச் சுற்றியே இருக்க,
“சந்த்ரு டூ வீலர் ஃபோர் வீலர் மெக்கானிக் ஷாப் மேடம்..” என்றவனிடம் சரியெனத் தலையசைத்தவள்,
வின்டோவின் டோரைத் தட்டி, “சார் நீங்க தான் வண்டி ஓனரா..?”
“இல்ல மேடம் நான் டிரைவர் தான்..”
“ம்..அப்போ வண்டியோட இன்ஸ்சூரன்ஸ் எல்லாம் நான் பார்க்கலாமா..?” என்றவளிடம் அனைத்தையும் அவன் எடுத்து கொடுக்க, முறையாக அதைப் பார்வையிட்டவள் இப்போது தனது செல்லில் ஒரு புகைப்படத்தை எடுத்து கொண்டு,
“தாங்க் யூ சார்..” என்று நிதானமாய் ஈஸ்வர் விழுந்திருந்த இடத்தில் பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரை நோக்கி நடந்தாள்..
அவள் சென்று சிறிது நேரம் டாக்டரிடம் பேச அதற்குள் ஆம்புலஸ் வந்து அவனை ஏற்றிச் சென்றது..
கனிக்கு அவன் போதை மருந்து எடுத்திருக்கிறான் என்பது புரிந்தாலும் அவன் எடுத்து கொண்ட அளவிற்கு பிழைப்பது கடினம் என்றாகிவிட, அவன் எப்படி தப்பித்தான்? எதனால் இங்கு இப்படி கிடக்கிறான்? என்பதையெல்லாம் நினைத்து தலைவலி தான் வந்தது..
ஈஸ்வரைத் தூக்கிச் சென்ற ஒரு மணி நேரத்தைக் கடந்தும் கனி, அச்சாலையிலே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நடந்து யோசித்து கொண்டிருக்க, அவள் பின்னே நிழல் போல தொடரும் அந்த வாலிபனை இறுக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றியிருந்தான் ஆனந்த்…
தூரத்தில் நின்று கனி யோசிப்பதையும் அவள் முகத்தில் சூழ்ந்திருக்கும் குழப்பங்களையும் ஆசைத் தீர பார்த்தவன், இப்போது தனது நோக்கியா பேஸிக் மாடலில் இருந்து,
“இறக்கப் போகும் பிணத்திற்கு பின்னால்
எனது வேட்டையும் உனது குழப்பமும் தொடரும்..”
என அனுப்பி, தனது கையில் இருந்த ஈஸ்வராகிய உசேமின் மொபைலுக்கு வந்த அழைப்பை எடுத்து உரக்கச் சிரித்தான்..
வேட்டை நிற்காது..