Un Vizhigalil Vizhuntha Naatkalil – 24 ** FINAL **

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 24 ** FINAL **

“ வில்லி பக்கத்துல வந்த …” அவனை முறைத்துக் கொண்டே வாணி கத்த,

“ என்ன பண்ணுவ .. உன்னை நான் இப்போ எதுவுமே பண்ண மாட்டேன் வாணி. ஆனா வெளில போய் எல்லார்கிட்டயும் சொல்லுவேன், நாம ரெண்டு பேரும் தோப்புல…. “ சிரித்துக் கொண்டே சொல்ல,

“ உனக்கு இவ்வளோ கேவலமான புத்தி இருக்கும்னு நான் நெனச்சு கூட பாக்கலை. ஆனா நீ நினைக்கறது எதுவுமே நடக்காது டா” திமிராகவே பதில் சொன்னாள்.

“ ஏன் நடக்காது, நான் நடத்திக் காட்றேன். உங்க அண்ணனே உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கரானா இல்லையான்னு பாரு! “ அவளை நெருங்கி தாடையைப் பற்ற ,

அடுத்த நொடி அவனது காலில் எட்டி உதைத்தாள் வாணி. அவனும் எதிர்பாரா தாக்குதலில் சறுக்கி விழ, அங்கிருந்து ஓடத் தொடங்கினாள் வாணி.

அதற்குள் சுதாரித்து எழுந்து அவளை இரண்டே எட்டில் எட்டிப் பிடித்தான்.

அவளின் கை கட்டியிருந்ததால் அவன் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. அவள் அவனிடமிருந்து விலக திமிறிக் கொண்டிருக்க,

யமுனாவும் சுபியும் வேலையாள் முருகனுடன் ஓடி வந்தனர்.

“ வாணி..” யமுனா கத்த, ஆட்களைக் கண்டவுடன் மேலும் கோபமுற்றான் வில்லி.

“ ஹே! இவங்கல்லாம் எப்போ வர சொன்ன, எங்க ப்ளான் உனக்கு முன்னாடியே தெரிஞ்சுடுச்சா?” அவனின் பிடி மேலும் இறுகியது.

“ ஹ்ம்ம்… உன்னைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா நீ இவ்வளவு தூரம் வரவே விட்டிருக்க மாட்டோம். சொல்லு யாரு உனக்கு ப்ளான் போட்டுக் குடுத்த அந்த அக்கா?” வாணியும் மிரட்ட,

“ நீ கேட்டா நான் சொல்லனுமா, உனக்கு ஒரு வழி பண்றேன் டி “ தன் தோளில் இருந்தப் பையைக் கழட்டினான். அதிலிருந்த எதையோ எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.

அதற்குள் முருகனும் நெருங்கி வந்தான். அவனைக் கண்டதும் வாணியின் கழுத்தில் பின்னாலிருந்து கை வைத்துப் பிடித்துக் கொண்டான்.

“ டேய்! அந்தப் பொண்ண விட்டுரு! “ முருகன் அதட்டினான். முருகனின் பின்னால் பயத்துடன் நின்றனர் மற்ற இருவரும்.

“ இங்க பாருங்க உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன். என் கைல இருக்கறது மயக்க மருந்து ஸ்ப்ரே . இதை அடிச்சா இன்னிக்கு நைட் வரை எந்திரிக்க மாட்டீங்க, பக்கத்துல வந்தா உங்க எல்லார் மேலயும் அடிச்சிருவேன். ஓடிருங்க “ அவர்களின் முன்னால் அந்த ஸ்ப்ரேவைக் காட்டி மிரட்ட,

முருகன் இவனை வேறு எந்த வழியில் மடக்கலாம் என்று யோசித்தான்.

“ யமுனா சுபி நீங்க கெளம்புங்க, நான் இவனப் பாத்துக்கறேன். “ வாணி அப்போதும் தைரியமாகக் கூறினாள்.

“ உன்னை இவன் கிட்ட தனியா விட்டுட்டு எப்படி போறது வாணி. அதெல்லாம் முடியாது.

அடேய் லூசு, இப்போ நீ அவள விடாம புடிச்சு வெச்சிக்கோ, அப்போ தான் போலிஸ் வரப்ப சாட்சிக்கு சரியா இருக்கும்” யமுனாவும் தன் பங்கிற்கு சொன்னாள்.

போலிஸ் என்றதும் சற்றே பயம் வந்தது வில்லிக்கு.

“ என்ன மெரட்டறீங்களா ? இப்போ பாரு! “ அவர்களை மேல் இருந்த கோவத்தில் அந்தப் ஸ்ப்ரேயை அடித்தான் .

அது சில புகையைக் கிளப்பியது. அவர்கள் எல்லோறோம் கண்ணையும் மூக்கையும் மூடிக் கொள்ள, அந்த சிறிய சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு வாணியை இழுத்துக் கொண்டு ஓடினான். அவள் முரண்டு பிடித்தாலும் பிடித்து இழுக்க, சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்தான்.

இந்த கலாட்டாக்கள் அரை மணி நேரமாக நடந்து கொண்டிருக்க, அதற்குள் வெற்றியும் ஜீவாவும் வந்துவிட்டனர்.

தன் தங்கையை கையைக் கட்டி அவன் இழுத்து வருவதைக் கண்ட வெற்றி ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான்.

அந்த இடத்தில் வெற்றியைக் கண்டதும் பயத்தில் நடுங்கினான் வில்லி. அங்கேயே வாணியை தள்ளி விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

வாணி கீழே விழ , யமுனாவும் சுபியும் அவளைப் பிடிக்கச் சென்றனர்.

அதற்குள் வெற்றியும் ஜீவாவும் அவனை இருபுறமும் சுற்றி வளைக்க, இன்னொரு புறம் முருகனும் வந்து நின்றான்.

வேறு வழியின்றி வில்லி அவர்கள் கையில் சிக்க, வெற்றியும் ஜீவாவும்  அவனை கன்னம் கன்னமாக விளாசித் தள்ளினார்கள்.

“ அண்ணா, அண்ணா விட்ருங்க…” வில்லி கதறியும் அவர்கள்  காதில் விழவில்லை.

ஒரு கட்டத்தில் அடித்து ஓய்ந்தான் வெற்றி. ஜீவா அவனை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றான்.

வாணி அங்கே வந்து , “ இவனை மட்டும் இல்ல, இன்னொருத்தரும் இதில் இவனோட கூட்டாளி, அது யாருன்னு முதல்ல கேளுங்க “ எனவும்,

ஜீவா அவனை விசாரித்தான். அவனோ சொல்லும் நிலையில் இல்லை. வெற்றி அடித்ததில் மயக்கம் வராத குறையாக கீழ கிடந்தான்.

உடனே அவனது செல்போனை வாணி எடுத்துக் கொடுக்க, அதில் தெரிந்த நம்பரை தன் போனில் அடித்துப் பார்க்க அது வசுந்தரா என்று காட்டியது.

ஜீவா அதிர்ந்து நின்றான். இதற்கு ஒரு முடிவு கட்ட, அனைவரும் கிளம்பி வசுந்தராவின் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே அனைவரையும் பார்த்து குழம்பினார் வரதன்.

“ மாமா, உங்க பொண்ண கொஞ்சம் வர சொல்லுங்க “ ஜீவா நேரே விஷயத்திற்கு வர,

காலையிலேயே ஆபீசுக்கு சென்றவளை உடனே கிளம்பி வருமாறு போன் செய்தார். சேரனும் வந்துவிட,

நடந்த அனைத்தையும் வில்லியமின் வாயால் சொல்ல வைத்தனர்.

தன் மகளின் இந்தச் செயலைக் கேட்ட வரதன் மிகவும் அவமானமாக உணர்ந்தார்.

செல்வியை அழைத்துக் கேட்க, அவரும் இதற்கு உடந்தை என்பது புரிந்தது. அப்படியே நாற்காலியில் சரிந்தார்.

தன் நண்பன் குடும்பத்திற்கு இப்படி ஒரு காரியத்தைச் செய்த தன் மகளை நினைத்து அவர் இதயம் வெடித்துவிடும் போல ஆனது.

வசுவின் பிடிவாதம் அவருக்கும் தெரியும் தான். ஆனால் தான் சொன்ன பிறகு அவள் இந்த விஷயத்தில் மாறி விட்டாள் என்றே நினைத்தார்.

வசு வீட்டிற்குள் நுழைந்ததும் அவளைக் கண்டவர் , நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்து விட்டார்.

அனைவரும் பதற , அவரைத் தூகிக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றனர்.

வசுவின் வாழ்வில் இது அவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. தன் தந்தை தன்னிடம் கம்பனியையே ஒப்படைத்தும் தான் இப்படி அவரின் நம்பிக்கையை அழிக்கும் படி நடந்து கொண்டது அவளுக்கு மிகவும் குற்ற உணர்வைத் தந்தது.

சேரன் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. தான் போனில் பேசியதை ஒட்டுக் கேட்டு இப்படிச் செய்தாள் என்று நினைத்து அவனுக்கு இருந்த பாசம் அனைத்தும் விட்டுப் போனது.

செல்வி இப்போது வரதனின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

“ என்னை மன்னிச்சிடுங்க, நான் தான் நம்ம பொன்னை சரியா வளக்காம போய்டேன். எங்களை விட்டுப் போய்டாதீங்க” கதறினார்.

டாக்டர் வந்து அவரின் உடல் நிலை தேறிவிட்டது என்று சொன்னதும் தான் நிம்மதியாக இருந்தது.

சிறிது நேரத்தில் கண் விழித்தவர், ஜீவா மற்றும் வாணியை அழைத்து மன்னிப்புக் கேட்டார்.

“ இல்ல மாமா, உங்க தப்பு என்ன இருக்கு, உங்களுக்கு இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் உங்க கிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. “

“ இல்லப் பா , நான் தான் அவளை ரொம்ப கண்டிக்காம விட்டுட்டேன் . அதுனால வந்த பாதிப்புத் தான். சரிப்பா, நீங்க கெளம்புங்க. “ அவர் கண்கலங்கினார்.

இருவரும் வெளியே வந்ததும், அனைவர் முன்னிலும் மன்னிப்புக் கேட்டாள் வசுந்தரா.

“ என்னை மன்னிச்சுடுங்க ஜீவா. நான் ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டேன். வாணி, சுபத்ரா என்னால உங்க எல்லாருக்கும் கஷ்டம். இனி என்னால எந்தப் பிரச்சனையும் உங்க லைப்ல வராது. ஐ அம் சாரி” தலை குனிந்த படி பேச,

அவளோடு சேர்ந்து வில்லியமும் சரணடைந்தான்.

ஜீவா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப, வெற்றி வில்லியின் பெற்றோரை மனதில் வைத்து அவனை சும்மா விட்டான்.

வசுந்தராவின் தந்தைக்கு ஏற்பட்டது அவர்களுக்கும் நடக்கக் கூடாது என்பதனால். ஆனால் கடுமையாக எச்சரிதே அவனை விட்டான்.

வசுந்தரா தன் தந்தையின் அருகில் சென்று கண்ணீர் விட்டு அழுதாள்.

அவள் அழுது ஓயும் வரை அமைதியாகவே இருந்தார் வரதன்.

*******

மறுநாள் எந்த வித மாற்றமும் இன்றி அனைவரும் வாணியின் வீட்டிற்குச் சென்று பெண் பார்த்து தட்டை மாற்றிக் கொண்டனர். மிகுந்த சந்தோஷப் பட்டது வெற்றி தான்.

தன் தங்கையைப் பற்றிய கவலை இப்போது தீர்ந்துவிட்டது. ஜீவாவை கட்டிக் கொண்டு வாழ்த்துச் சொன்னான்.

“ என் கடமை பொறுப்பு எல்லாத்தையும் உங்ககிட்ட ஒப்படச்சிடேன் ஜீவா, இனி அது உங்க பொறுப்பு” வெற்றி சொல்ல,

“ உங்களை அப்படி ஈசியா விட்ருவோமா, முதல்ல உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து கட்டி வைக்கணும்னு இதயா வோட ஆர்டர்.” ஜீவா பொறுப்பாகப் பேசினான்.

வெற்றியை மிகவும் பிடித்துப் போனது தவசிக்கு.

ரேகாவிடம், “ வெற்றியின் கல்யாணம் என் பொறுப்பு . நான் தான் அவனுக்குப் பொண்ணு பார்ப்பேன் “ என்றுவிட,

ரேகாவின் அந்தக் கவலையும் நீங்கியது.

தங்கையின் கல்யாணத்திற்குப் பிறகே தான் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்த வெற்றியை தவசி பேசியே மாற்றினார்.

அடுத்த ஆறு மாதத்தில் வெற்றிக்கு தன் சொந்தத்திலேயே ஒரு பெண்ணைக் கட்டி வைத்தார். வெற்றிக்கு ஏற்ப அந்தப் பெண்ணும் நடந்து கொண்டாள்.  ரேகாவை ஒரு வேலையும் செய்யவிடாமல் எல்லாம் அவளே பார்த்துக் கொண்டாள். வாணியையும் தன் சொந்த தங்கை போல பாசமாகக் கவனித்துக் கொண்டாள்.

வெற்றியின் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரேகாவும் இப்போது அவரின் அண்ணன்களுக்கு தைரியமாக பதில் சொல்லி, தன் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தினார்.

ஆனந்தின் தந்தை உடல் நிலை தேறி இருந்தாலும், உடனே திருமணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ள, தவசியும் வேறு வழியின்றி அவர்களின் திருமணத்தை சுபியின் படிப்பு முடியும் முன்னரே செய்து வைத்தார்.

வரதன் தன் பெண்ணின் செயலுக்கு வருந்தி அதன் பிறகு சேரனின் திருமணம் பற்றிக் கூட தவசியிடம் வாய் திறக்க வில்லை. இந்த ஒன்றரை வருடத்தில் யமுனாவும் சேரனும் போனில் கூடப் பேசிக் கொள்ளவில்லை.

வசுவின் செயலுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வார்களா என்று வரதன் வருந்தியதில் சேரனும் கலங்கித்தான் போனான். ஆகவே யமுனாவிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தான்.

யமுனாவும் சேரன் மேல் காதல் இருந்தும் தவசியின் முடிவே தனக்கு முக்கியம் என்று எதுவும் பேசாமல் இருந்தாள்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, தவசியே வரதனிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசினார்.

“ வரதா, உன் உடம்பு கொஞ்சம் தேரனும், நடந்ததை எல்லாரும் மறக்கணும்னு தான் கொஞ்ச நாள் இந்தப் பேச்சை ஆரப்போட்டேன். உன் பொண்ணு பண்ண தப்புக்கு சேரன் என்ன செய்வான்.

இப்போ வசுந்தரா கூட அடியோட மாறிட்டதா கேள்விப் பட்டேன்” இலகுவாக பேச்சைத் துவங்க,

வரதன் தவசியின் நல்ல மனதை மெச்சினார்.

“ தவசி , எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப சந்தோஷம் . நான் என் பையன் கல்யாணத்திற்கு சீக்கிரமா நாள் பாக்கறேன். “ வசுவைப் பற்றி மறந்தும் கூட பேசவில்லை.

“ வசுந்தரா எப்படி இருக்கா ?” தவசி கேட்க,

“ அவ இங்க இல்ல தவசி. வெளிநாட்டுல அவ படிச்ச இடத்துல வேலை தேடிட்டு போய்ட்டா. கல்யாணமே வேண்டான்னு சொல்லிட்டா. நாங்களும் அவளை அதுக்கு மேல கம்பெல் பன்னல. இப்போ அவ அங்க நிம்மதியா தான் இருக்கா. இதுக்கு மேல எதுவும் கேட்காத தவசி” என்று முடித்து விட , தவசியும் மேலே எதுவும் கேட்கவில்லை.

சேரன் யமுனா திருமணம் மிகவும் மகிழ்ச்சியாக நடந்தது.

அடுத்து வந்த முகூர்த்த நாளில் ஜீவா இதயா வின் கரம் பற்றினான். வெற்றியின் முகத்தில் மிகுந்த ஆனந்தம்.

யமுனா சேரன், சுபி ஆனந்த என அனைவரும் அவர்களை கிண்டல் செய்து கொண்டும் , ஒருவரை ஒருவர் பார்க்கும் போது “ஓ” என கத்திக் கொண்டும் மிகுந்த ஆரவாரம் செய்தனர்.

வாணியின் கல்லூரித் தோழிகளும் , கண்மணியுடன் வந்து சேர்ந்து கொள்ள, வாணியின் முகம் வெட்கத்தில் பூத்தது.

அந்த அழகு முகத்தை தன் கண்களால் ஆசை தீரப் பருகினான் ஜீவா.

வில்லியம் தன் பெற்றோருடன் வந்து வாழ்த்துச் சொல்ல, ஜீவா அவனை சாதாரணமாகவே எதிர் கொண்டான்.

வெற்றி மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், அவனின் பெற்றோருக்காக மட்டுமே அவனை விட்டுவைத்தான்.  

பூங்கொத்து மூலம் வசுவின் வாழ்த்தும் அவர்களுக்கு வந்தது.

எந்த வித சங்கடமும் இன்றி அவர்களின் திருமணம் முடிந்து இரவு சந்தித்தனர்.

புதுத் தாலி மினுமினுக்க, பேபி பிங்க் நிற டிசைனர் புடவை கட்டி, தலை நிறைய பூவுடன் , தேவதை போல அறைக்குள் வந்தாள் இதயா.

பட்டு வேட்டி சட்டை அணிந்து , எப்போதும் போல இதயாவை மயக்கும் அந்த லேசான சந்தனக் கீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு , கைகளை மார்புக்கு நடுவே கட்டிக் கொண்டு அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.

நிமிர்ந்து பார்த்தவள் அவன் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டாள்.

மெல்ல நடந்து வந்து அவன் அருகில் நின்றாள். அவன் எதுவும் பேசாமல் அவளை அளவெடுக்க,

“எப்படி டா இவ்ளோ அழகா இருக்க?!”

“ஹ்ம்ம் உன் லேசர் கண்ணால பாத்து பாத்து என்னை அழகாகிட்ட டி “

“ போடா “ என அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அவனது இதயராணி….

இதயவாணி….

காதலால் கண்கள் சங்கமித்து…

 மென்மையாக இதழ் முத்தமிட்டு…

  வாயோடு வாய் கலந்து …

   உயிர் உரசி…

   அவள்கை நகம் அவன் முதுகில் கோலமிட…

   இவன் கைகள் அவளில்  ஜாலம் செய்ய…

    யுகங்கள் நொடிகளாவது மறந்து

    அவனுள் அவளும் , அவளுக்குள் அவனும்

    தேடலில் இறங்கினர்……..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் ——- முற்றும்

 

 

 

 

 

 

error: Content is protected !!