6
வினய் அவன் அன்னை சென்றதும் ரேஷ்மிக்கு துணையாய் அந்த அறையில் இருந்தான்….
அவளது ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறுகையை தன் கைகளில் ஏந்தியவன் அதனை தன் இரு கைகளுக்குள் அடக்கிக்கொண்டான்…..
“இன்று நீ செயலால் செய்வதை ஏன் இவ்வளவு நாட்கள் மனதால் அவளுக்கு புரியவைக்க முயலவில்லை” என்று அவனது மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை…..
“உன் அமைதி அவளை இந்நிலைக்கு உள்ளாக்கியது சரி தானா???
நீ உன் காதலை திருமணத்திற்கு முன்பே அவளுக்கு உணர்த்தியிருந்தால் அவள் தன் பெற்றோர்களின் இழப்பிற்காக பித்து பிடிக்கும் அளவிற்கு தளந்திருக்க மாட்டாளே…???
அவள் தன் துக்கத்தை ஆற்றிக்கொள்வதற்காக கூட உன்னை நாடவில்லையே?? நீ ஆற்ற முயன்றவேளையில் கூட உன்னை அணுகவிட மறுத்தாளே?? ஒரு நண்பனாக கூட அவள் மனதில் உன்னால் இடம்பிடிக்க முடியவில்லையா??? இல்லை இந்த இரண்டு மாத கால அவகாசம் காதலுக்கு வித்திட போதவில்லையா??? இது காதல் தானா??? அவளை திருமணம் செய்ததால் உனக்கு அவள் சொந்தமாகிவிட்டாள் என்று நீ எண்ணியது சரிதானா..?? ஊரார் சூழ உன்னை கணவனாய் ஏற்றுக்கொண்டவள் மனதால் உன்னை ஏற்காமல் விட்டதன் காரணம் என்ன?? அன்றொரு நாள் கூட திருமணத்தில் பெரிதும் விருப்பம் இல்லாதது போல் கூறினாளே..??? அப்படியென்றால் நீ தான் அவள் கனவுகளை அழித்து உன் விருப்பத்திற்காக அவளை மணந்து கொண்டாயா?? உன்னால் அவள் கனவுகள் சிதைந்திருக்க நீ மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெயர் காதல் தானா??? உன்னை நம்பி வந்தவளுக்கு இந்நாள் வரை என்ன செய்திருக்கிறாய்…??
அவளது இழப்புகளுக்கு மருந்தாக மாறா முடியாத உன் காதல் மெய்யானதா???” என்று அவன் மனசாட்சி கேள்விகளை எழுப்பியவண்ணம் இருந்தது..
திடீரென்று ரேஷ்மி
“அம்மா அப்பா ஏன் நீங்க இரண்டு பேரும் என்னை விட்டுட்டு போனீங்க??? உங்கள் ஆசைப்படி தானே நான் வினயை திருமணம் செய்து கொண்டேன்… அவரோடு நான் சந்தோஷமாக வாழ்வதை பார்க்கமாலேயே போயிட்டீங்களே.. எதுக்கு என்னை மட்டும் விட்டு போனீங்க…?? என்னையும் உங்க கூட கூட்டிட்டு போயிருக்கலாமே..” என்று உளறலாக கூறிவிட்டு மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்…
அவளது உளறல் காயப்பட்டிருந்த காதல் நெஞ்சத்தை இன்னும் வருத்தியது….
இரண்டு நாட்கள் கழித்து ரேஷ்மியை டிஸ்சார்ஜ் செய்து வினயும் வீரலட்சுமியும் அவளை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்…
இரண்டு நாட்கள் ஆஸ்பிடல் வாசமும் வீரலட்சுமியின் கைப்பக்குவமும் வினயின் கவனிப்பும் அவளை ஓரளவு தேற்றியிருந்தது… ஆனால் முன் போல் இல்லாமல் ஒரு வித இறுக்கத்துடனேயே இருந்தாள் ரேஷ்மி…
அவளது முகமோ எந்தவித உணர்வையும் வெளிக்காட்டது இறுகிப்போயிருந்தது… அவளுடன் பேச்சு கொடுக்க முயன்ற வினயிற்கு ஒற்றை வார்த்தைகளே பதிலாக கிடைத்தது… வழமையாகவே வீரலட்சுமியுடன் மரியாதையாக பேசுபவள் இப்போதும் அதே மரியாதையுடன் பேசினாள்… ஆனால் எப்போதும் அவளது முகம் வெளிக்காட்டும் உணர்வு அவளிடம் இல்லை…
ரேஷ்மியை வீட்டுற்கு அழைத்து வந்ததும் அவள் ஓய்வெடுக்க வழி செய்து கொடுத்த வீரலட்சுமி வினயை தனியே பேச அழைத்தார்…
“கவின்… ரேஷ்மியுடைய நடவடிக்கைகள் எதுவும் எனக்கு சரியாக படவில்லை… அவள் இன்னும் அந்த இழப்பிலேயே உழன்றுக்கொண்டு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது…. அவ முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு வனப்பு இப்போ இல்லை… அவளுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி தனக்குள்ளே இறுகிப்போய் இருக்கின்ற மாதிரி இருக்கு… அவள் தன்னுடைய துக்கம் முழுவதையும் வெளியிட்டால் தான் அவளால் அந்த இழப்பிலிருந்து மீண்டெழ முடியும்.. அது உன் கையில் தான் இருக்கு…”
“நான் என்னமா பண்றது??? நானும் சொல்லிப்பார்த்துட்டேன்… ஆனா அவள் அதிலேயே தான் உழன்றுக்கொண்டு இருக்கா… அவளை எப்படி தேற்றுவதென்று எனக்கு புரியவில்லை…”
“இது சொல்லி புரியவைக்கின்ற விடயம் இல்லை… உன்னோட செயலில் புரியவைக்கின்ற விடயம்…. உன்னோட காதலால் புரியவைக்கின்ற விடயம்… அதுக்கு தான் நம்ம பெரியவங்க தாம்பத்தியம்னு பெயர் வைத்திருக்காங்க…. காதல், காமம் அரவணைப்பு, கடமை , பொறுப்பு, கரிசனம் இப்படி எல்லாம் உள்ளடங்கியது தான் தாம்பத்தியம்… எதுக்கு எப்போ தேவை இருக்கோ அதை அப்போ நாம் நம்முடைய துணைக்கு கொடுத்தா தான் தாம்பத்தியம் இனிக்கும்… நாம மட்டும் இல்லாம நம்முடைய துணையையும் சந்தோஷமாக வைத்திருக்கனும்…. அது அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவங்களை மனதளவிலும் சந்தோஷப்படுத்த வேண்டியது நம்முடைய கடமை…
உனக்கு நான் சொல்லுறது புரியும்னு நினைக்கின்றேன்….”
“புரியிது அம்மா…”
“ரேஷ்மியை நீ தான் கவனமாக பார்த்துக்கனும்… உன்னுடைய அன்பும் செயலும் தான் அவளுக்கு மருந்து அதை புரிந்து நடந்துக்கோ… நான் ஜூஸ் போட்டு தரேன்… அவளுக்கு கொண்டு போய் கொடு…. அப்புறம் டாக்டர் சொன்ன அந்த டாக்டரை பார்க்க ஆப்பாயின்ட்மென்ட் போட்டுரு… மறந்துவிடாதே கவின்..” என்றுவிட்டு வீரலட்சுமி ஜூஸ் தயாரிக்க சென்றார்….
மூன்று நாட்களுக்கு பின் சைக்காட்டிஸ்ட் ராதாவர்மனை சந்திக்க சென்றனர் ரேஷ்மியும் வினயும்…
ரேஷ்மியை தனியே பரிசோதிக்க ஒரு மணிநேரம் வேண்டியவர் வினயை காத்திருக்கும் படி கூறினார்…. ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரமாக மாற அப்போது கன்சல்ஷன் அறையிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்…
மரியாதை நிமித்தமாக எழுந்த வினயை பார்த்து அமரச்சொல்லி கை அசைத்தவர் வினயிடம் பேசத்தொடங்கினார்…
“மிஸ்டர் கவினயன் ரேஷ்மிகாவை ஆழ்ந்த நித்திரைக்கு கூட்டிட்டு போய் அவங்களோட ஆழ்மனதில் இருப்பவற்றை அனலைஸ் பண்ணப்போ அவங்க ரொம்ப லோன்லியா பீல் பண்ணுறாங்கனு தெரிஞ்சது…. அவங்க அம்மா அப்பாவோட இறப்பு, தான் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டுட்டோம் அப்படீங்கிற ஒரு உணர்வை அவங்களுக்குள் தோன்றுவித்திருக்கிறது…. அது தான் அவங்களை அப்படி நடந்து கொள்ள வைத்திருக்கு… தென் உங்கள் இருவருக்கும் திருமணமாகி எத்தனை காலம்??”
“இரண்டரை மாதம்”
“ஓகே… நீங்க லவ் மேரேஜா இல்லை ஆரென்ஜ்ட் மேரேஜா??”
“ஆரென்ஜ்ட் மேரேஜ் தான் டாக்டர்..”
“ஓ.. பட் அவங்க நீங்க ஏதோ அவங்களை விரும்பி மேரேஜ் பண்ணிக்கிட்டதா சொன்னாங்க..”
“ஆமா டாக்டர்.. வன் சைட் லவ்… வீட்டுல பேசி ஓகே பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டேன்..”
“ஓகே… நீங்க உங்க லவ்வை எக்ஸ்போஸ் பண்ணிட்டீங்களா??”
“ரேஷ்மிக்கு நான் அவளை லவ் பண்ணது தெரியும்… அதோடு ஒவ்வொரு நாளும் என்னோட லவ்வை அவளுக்கு புரியவைத்திக்கொண்டு தான் இருந்தேன்… அவளும் கொஞ்ச நாட்களாக என் காதலை உணர்ந்ததற்கான பிரபலிப்பை சில சமயங்களில் வெளிப்படுத்தினாள்… ஆனால் வார்த்தைகளால் அவளது காதலை இன்னும் சொல்லலை டாக்டர்..”
“ஓகே… உங்க ஸ்டேட்மன்ட் கரெக்ட்… அவங்க உங்களை விரும்பத்தொடங்கிட்டாங்க…. ஆனா அவங்க இன்னும் அதை சரியாக உணரவில்லை… அவங்களுக்குள்ள ஒரு கன்பியூசன் இருக்கு… அதனால் தான் அவங்க இப்படி லோன்லினஸ்சை பீல் பண்ணி இருக்காங்க..ஓகே வன் மோர் க்வெஸ்ஷன்… இது கொஞ்சம் வியர்டான க்வெஸ்ஷன் தான்.. பட் எஸ் அ டாக்டரா இதை நான் கேட்டுத்தான் ஆகனும்… நீங்க இரண்டு பேரும் சேர்ந்துட்டீங்களா???”
“டாக்டர் நீங்க கேட்கிறது எனக்கு புரியவில்லை…”
“ஐமீன் ஆர் யூ செக்ஸுவலி ஆக்டிவ்..??”
“டாக்டர்…”
“..மிஸ்டர் கவினயன் இதில் நீங்க சங்கடப்பட எதுவும் இல்லை… எஸ் அ டாக்டரா இதை நான் கேட்கிறேன்… நீங்க அதற்கு பதில் சொன்னா தான் என்னால் சொலூஷன் சொல்ல முடியும்.. சோ பீல் ப்ரீ டு டாக் வித் மீ…சொல்லுங்க..”
“இல்லை டாக்டர்…”
“ஓகே.. ஏன் இன்னும் சேராமல் இருக்கீங்க…”
“எப்படி டாக்டர்…?? அவளோட விருப்பம் இல்லாமல் எப்படி…?”
“அவங்களுக்கு விரும்பம் இல்லைனு உங்ககிட்ட சொன்னாங்களா??”
“அது டாக்டர்…”
“சொல்லுங்க கவினயன்..”
“பெஸ்ட் நைட்டில் டைம் வேணும்னு சொன்னாங்க…”
“அதற்கு பிறகு கேட்டீங்களா???”
“இல்லை டாக்டர்..”
“ஏன் கேட்கவில்லை…??”
“இதை எப்படி டாக்டர் கேட்பது??”
“பையன் நீங்களே தயங்கும் போது பொண்ணு அவங்க எப்படி சொல்லுவாங்க??”
“டாக்டர் நீங்க சொல்வது எனக்கு புரிகிறது… ஆனா.. இது ரொம்ப சென்சிட்டிவ்வான விஷயம் டாக்டர்… மனம் இணையாமல் உடல் இணைவதில் என்ன தாம்பத்தியம் டாக்டர்???”
“சரி… நீங்க அவங்களுக்கு மறுபடியும் பிரோபோஸ் பண்ணிங்களா?? ஐமீன் உங்களுடைய வாய் வார்த்தைகளால் அவங்களுக்கு உங்களுடைய காதலை வெளிப்படுத்தினீங்களா??”
“இல்லை டாக்டர்…”
“அப்போ எப்படி கவினயன் அவங்க தன்னோட லவ்வை உங்களுக்கு சொல்வாங்க… அப்புறம் இன்னொரு விடயம் செக்ஸ் இஸ் அ பார்ட் ஒப் லவ்… லவ் பண்ணுறவங்க தான் செக்ஸ் பண்ணனும்னா நாட்டுல எத்தனை பேர் அப்படி இருக்காங்க?? அதைவிட நிறைய தம்பதிகள் காதல் இல்லாமல் காமத்துடன் மட்டுமேயே வாழ்பவர்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள்.. அவங்க வாழவில்லையா??? காமத்துடன் வாழ்க்கையைத் தொடங்கி காதலுடன் வாழ்பவர்களும் இந்த உலகத்தில் இருக்காங்க…. நம்ம சமூகம் திருமணம் என்ற ஒன்றை ஏன் உருவாக்கினார்கள் என்று தெரியுமா?? நம்ம ஒழுக்கத்தை கட்டிக்காக்க தான்… அதே சமூகம் தான் சாந்தி முகூர்த்தம்னு ஒரு ராத்திரியை பலவித அலங்காரங்களுடன் புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பாடு செய்றாங்க… இப்போ தான் இந்த லவ் மேரேஜ் ரொம்ப அதிகமாயிடுச்சி…
அரேன்ஜ்ட் மேரேஜிற்கு கூட பொண்ணும் பையனும் கலந்து பேசி அவங்களுக்கு ஓகேனா தான் மேரேஜ் பண்ணிக்கிறாங்க… ஆனா அந்த காலத்தில் அப்படி இல்லை…. ஆனா அந்த காலத்தில் காதல் இருக்கவில்லை என்று சொல்லுறீங்களா?? இல்லை கவினயன் எல்லாம் அவரவர் மனதை பொருத்தது… அதுனால அவங்க விருப்பத்தை நீங்க கேட்டு தெரிஞ்சிக்கனும்…. அதோடு இப்ப அவங்களுக்கு தேவை ஒரு துணை… அதை நீங்க உடல் ரீதியான சங்கமத்தின் மூலம் முதலில் உணர்த்துங்க.. அது அவங்களுக்குள் நிச்சயம் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்…. இந்த சங்கமம் அவங்களுக்குள் எனக்காக என் கணவர் இருக்கிறார் அப்படீங்கிற வலுவான எண்ணத்தை உண்டு பண்ணும்… அதோடு அவங்களுடைய டிப்ரஷனை குறைக்கவும் இது வழி செய்யும்…….அதுமட்டுமில்லாமல் அவங்களை அவங்களுக்கு பிடித்த விடயங்களில் ஈடுபடுத்துங்க…. அவங்களோடு உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்… நண்பன் என்ற வட்டத்தை தாண்டி உனக்காக எப்பவும் நான் இருப்பேன் அப்படீங்கிற எண்ணத்தை அவங்களுக்குள்ள கொண்டு வாங்க… அது தான் அவங்களுக்கு மருந்து….. இதை நீங்க கண்டினியூ பண்ணீங்கனா அவங்க த்ரீ மன்த்சில் நார்மல் ஆகிடுவாங்க… இன்னொரு முக்கியமான விஷயம் உங்கள் காதலை செயலில் மட்டுமல்லாது வார்த்தையிலும் வெளிப்படுத்துங்கள் ……. சில விஷயங்களை செய்து காட்டுவதிலும் பார்க்க வார்த்தைகளால் வெளிப்படுத்துவது அழகு…”
“ஓகே டாக்டர்… தாங்ஸ் டாக்டர்… இனிமே ரேஷ்மியை நான் நீங்க சொன்ன படி கவனித்துக்கொள்கிறேன்…”
“தாட்ஸ் குட்…. அவங்க தூங்கிட்டு இருக்காங்க… அவங்க எழும்புனதும் நீங்க அவங்களை அழைச்சிட்டு போகலாம்…”
“ஓகே டாக்டர்… தாங்கியூ…சோ மச்…” என்றுவிட்டு ரேஷ்மி இருந்த அறைக்கு சென்றான் வினய்…