Urugum Venpani Malare- Kavi soumi full novel

Urugum Venpani Malare- Kavi soumi full novel

வெண் பனி மலரே

தன் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கு என்ன  பதில்  சொல்வது என தெரியாமல் தவித்து  கொண்டு  இருந்தார் மதுசூதனன்வீட்டுக்கு  வாபார்த்து  விட்டு  மேற்கொண்டு  பேசிக் கொள்ளலாம் என உரைத்தவர் தான்ஆனால் நடந்ததோ வேறு.. ஓரே ஆறுதல் அவன் தனது குடும்பத்தை அழைத்து  வரவில்லைவந்திருந்தால் இன்னும்  மோசமாகி இருக்கும். குடும்பத்தோடு கூப்பிட்டு  அசிங்க படுத்துகிறாயா    என வேறுமாதிரி ஆகி இருக்கும்.

தனது மகள் பனிமலரை பெண் பார்க்க தனது நண்பனிடம் குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தார்கடைசி நேரத்தில்  நண்பனின் தாயாருக்கு முடியாமல் போக தனது மகனை மட்டும் அனுப்பி இருந்தார். இவன் வருவதை கடைசி வரை சொல்லாமல்
இருந்தவர்  காலையில்  இவன் இங்கு  வந்ததை போனில் சொல்ல அடுத்த  நிமிடம் தனது பர்ஸை எடுத்துக் கொண்டு தனது அபிமான பெப்பில் கிளம்பி இருந்தாள் பனிமலர்.

புறப்பட்ட  நேரண்திலேயே தனது தோழிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாள். குறிப்பிட்ட மால்ற்கு வரும்படிஅதே  நேரத்தில் தகப்பனாறிற்கும்  போனில் அழைத்தவள்…. அப்பா நான்  முன்னமே உங்க கிட்ட சொல்லிவிட்டேன். எனக்கு  கல்யாணம் வேணாம்ன்னு. நீங்க கொஞ்சம்  கூட காதுல வாங்கவே இல்லைஎனக்கு  பிடிக்கல. நான்  யாரையும்  பார்க்க விரும்பல..

பாப்பா இப்ப வந்திடுவாங்கம்மாபாவமான குரலோடு சொல்லும் போது மனதை  லேசாக அசைத்து  தான்  பார்த்தது. அதுவும்  ஒரு  நிமிடம் தான்

அப்பா நீங்க  தானே வர சொன்னிங்க. நீங்களே உட்கார வைச்சு பார்த்து  அனுப்புங்கஎனக்கு  எந்த  பிரச்சினையும் இல்லை. .அஞ்சு மணி இல்லாம வீட்டுக்கு  வர மாட்டேன்

எங்க பாப்பா இருக்கற

ப்பாபாப்பா சொல்லாதிங்கன்னு எத்தனை  தடவை சொல்லறது. இங்கே . இங்கே ப்ரோசோன் வந்து  இருக்கிறேன்   ப்ரெண்டுங்ககூட அஞ்சு  மணிக்கு  மேல் தான் வருவேன். நான்  வர்றதுக்கு முன்னாடி அந்த  மாப்பிள்ளையை சுத்தி சுத்தி நல்லா  பார்த்துவிட்டு அனுப்பி வச்சிடுங்கசரியாஇப்படி  சொல்லியளை  இவனிடம் சொல்லவா முடியும்.

அங்கிள் என்ன  ஆச்சுசொன்னவனை திரும்பி  பார்த்தவர். மெதுவாக  ஆரம்பித்தார். பொண்ணு  ஆரம்பத்தில்  இருந்தே கல்யாணம் வேணாம்ன்னு சொன்னாநான் கேட்கலஏதோ விளையாட்டுக்கு சொல்லறான்னு நினைச்சேன். அவ உண்மையாதான் சொல்லி  இருக்கிறாநீங்க  வர்றது தெரியவும் சொல்லாம  வெளிய கிளம்பி போயிட்டா..ஸாரிஅபி

அபிநந்தன் நல்ல நிறம். அன்னாந்து பார்க்க கூடிய உயரம். காற்றில்  கலைந்தாடும் தலை கொள்ளா கேசம்.
பேசும் கண்கள். எனக்கு  கோபமே வராதே என்பது போல சிரிக்கும்  உதடுகள்இவனது குடும்பம்  மொத்தமும் பெங்களூரில்  இருக்க இவன் மும்பையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து  கொண்டிருந்தான். திருமணம்  வேண்டாம் என டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தவனை பாட்டியின்கடைசி ஆசைஉன் திருமணத்தை பார்ப்பது தான் என சொல்லி இம்முறை அழைத்து வந்திருந்தனர். இவனோடு கூட பிறந்த தங்கை ஒன்றுதிருமணம்  முடிந்து டெல்லியில்   செட்டில் ஆகி இருந்தாள். மூன்று  வயது பெண் குழந்தை  ஓன்று  இருந்தது.

பாதி நாட்கள்  வேலை சம்மந்தமாக வெளிநாடுகளை சுற்றிக் கொண்டு  இருந்தவன் ஓரு மாத விடுமுறையில்  வரஇங்கே அனுப்பி இருந்தனர். ஏற்கனவே  தனது தந்தையும் இவரும் பால்ய நண்பர்கள்
அதனால் பெரிதாக எதுவும்  தோணவில்லை. வரும்  போதே முடிவு செய்துதான்  வந்திருந்தான். பாராத்ததும் பொண்ணு பிடிக்கலைசொல்லிட்டு கிளம்பிடணும்  இப்படி  நினைத்து வரஇங்கே  அப்படியே எதிர்  பதமாய் நடந்து  இருந்தது. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஓன்று  ஈர்க்குதோ!!!

இப்போது  அவளின் மேல் லேசாக ஆர்வம் துளிர்விட ஆரம்பித்து இருந்தது. ஏன் அங்கிள்உங்க பொண்ணு  வேறயாரையாவது விரும்பறாளா என்ன….

சே..சே அதெல்லாம்  இல்லை அபிஅவளுக்கு  என்னை விட்டுவிட்டு போக மாட்டாலாம். என் கூடதான் கடைசி வரைக்கும்  இருப்பாளாம். நான்  இவளுக்கு  எப்படி  சொல்லி புரிய வைக்க போறேன்னு தெரியலை

அவர் பேச பேச ஹாலை சுற்றி  பார்த்தவன் அங்கிள் உங்க பொண்ணு  போட்டோ ஏதாவது  இருக்காஅவனும் அவளது புகைப்படத்தை பார்க்கவில்லைஇவனது செல்பேசிக்கு அணுப்பி இருக்க ஓபன் செய்து பார்க்காமலேயே டிலைட் செய்திருந்தான்.

இரு அபி ஆல்பம் இருக்கு எடுத்துட்டு வரேன் பாருதனது ரூம்பிற்கு சென்று  ஆல்பம் எடுத்து வந்து  இவனிடம் தரஏதோ பங்சனில் எடுத்து புகைப்படம் அதுஆரஞ்சு நிற லெகன்காவில் இரு புறமும் தோள்வரையே வழிந்த கூந்தல்… . பெயருக்கு  ஏற்றாற்போல்  நல்ல பால் வெண்மை நிறம். குறை சொல்ல முடியாத அளவிற்கு  நல்ல  அழகி தான்

அங்கிள் எனக்கு  உங்க பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்குஇங்கே  தான்  பார்க்கணும்ன்னு கட்டாயம் எதுவும்  இல்லையே. .. எங்க  போய் இருக்கறான்னு சொல்லுங்கள்அங்கேயே போய் நான்  பார்த்துக்கறேன்.

இப்படி  கேட்பவனுக்கு என்ன  பதில்  சொல்வது என யோசித்தவர் கடைசி நிமிடத்தில்  



யோசித்து  அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு  கூறினார். நல்ல  பொண்ணு  தான்  அபிபிடிவாதம்  ஜாஸ்தி. அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணில்லையாகூடவே என் மேல பாசம் ஜாஸ்திஅதனால்தான் இப்படி  நடந்துக்கறாஎனக்கும்  அவளை விட்டா யார் இருக்கறா

டோன்ட்வொரி  அங்கிள் . இனி நான்  அவள பார்த்துக்கறேன்உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குது தானேநீங்க  அப்பாகிட்ட பேசி  முடிவு பண்ணுங்கள்.
நான்  உங்க பொண்ண பார்த்துவிட்டு வந்திடறேன். கால்டாக்சியை அழைத்தவன் மாலின்  பெயர் சொல்லி அடுத்த  கால்மணி நேரத்தில்  அங்கு  இருந்தான். அவளை கண்டு பிடிப்பது அப்படி  ஒன்றும்  சிரமமாக இல்லைஅவளோடு இன்னும்  நால்வர் பட்டாளம் இணைந்திருக்க கலகலத்து கொண்டிருந்தாள்.

நீலநிற ஜூன்ஸ் கருப்பு  கலந்த டாப்ஸ் தூக்கி கட்டிய குதிரைவால்  மேக்கப்  என பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லைஆனாலும்  திரும்பி பார்க்க வைத்தாள். அவர்களது குரூப்பில்  சமீபத்தில்  திருமணம்  பேசி இருந்து  இருப்பார்கள் போல. குறிப்பிட்ட பெண்ணை சுற்றிலும்  அமர்ந்து  கிண்டல்  செய்து கொண்டிருந்தனர்.
எந்த  கவலையும் இல்லாமல் சிரித்து  கொண்டிருந்தவளை பார்க்க  சற்றே  கோபம் கூட வந்தது.

அங்க ஒருத்தன வர வச்சிட்டு   எந்த  கவலையும்  இல்லாமல்   இங்க இருக்கிறத பார்!! அதுவும்  சில நிமிடம் தான்  பிறகு அவனையும் அறியாமல்  ரசிக்க ஆரம்பித்து இருந்தான். சிறிது நேரம் பேசியவர்கள் மொத்தமாக தியேட்டர்  உள் நுழைய அவர்களை  தொடர்ந்து  இவனும் சென்றான்அவென்சர் என்டு கேம் ஆங்கில படம் . அவர்களுக்கு  நேர் பின்புறம் இரண்டு  இருக்கை தாண்டி அமர்ந்து  கொண்டான்.

அபிநந்தனுக்கு  தன்னையே நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை அவளது வீட்டில் இந்த  சந்திப்பு  நடந்திருந்தால்பிடிக்கவில்லை  எனக்கு சொல்லி  புறப்பட்டு  இருப்பானோ!! ஆனால்  இப்போது  அவளது  நடவடிக்கை  ஓவ்வொன்றும் அவனை வியக்க வைத்தது. படம் ஆரம்பித்ததுமே  ஒவ்வொரு  ஹிரோவை காட்டும் போதும் கூச்சமே இல்லாமல் சத்தம் போட்டு…. விசில் அடித்துக் கொண்டு  இருந்தாள்.

இதை பார்த்ததுமே தனக்கு தானே சொல்லிக் கொண்டான் அபி கல்யாணத்துக்கு  அப்புறம்  இவளை சமாளிக்கறது ரொம்ப  கஷ்டம்  போலயேஉன்னை தொவச்சி தோரணம் கட்ட போறா !!! தனக்குள் சிரித்தபடி மொத்தமாய் அவளை மட்டும்  ரசித்துக்  கொண்டு  இருந்தான்.

அதே நேரம்   மலருக்கு  அவ்வப்போது கவனம்  தந்தையிடம் போய் வந்து  கொண்டிருந்தது. தன்னை  அறியாமல்  மணியை பார்த்தவள் வந்துட்டு போய் இருப்பான். இந்த அப்பா என்ன  சொல்லி  சமாளிச்சிப்பாங்கபொய் வேற சொல்ல தெரியாது. பாவமா முளிச்சிருப்பாங்கஅதுக்காக நம்ம கொள்கையை விட்டு தர முடியுமா

அருகில் இருந்த நந்தினி  இவளை பார்த்தவள் ஏன் மலர் அடிக்கடி  மொபைல் பார்க்கற..

நந்தினி  அப்பாகிட்ட கோசிட்டு வந்துவிட்டேன். அதுதான்  மறுபடியும்  கூப்பிடறாங்கலான்னு பார்க்கிறேன்.

நீ கோச்சுகிட்டயாநம்மற மாதிரி  சொல்லு

மாப்பிள்ளை  பார்க்கிறேன்னு ஒரு  பையனை வீட்டுக்கு  வரச் சொல்லி  இருந்தாங்க. நான்  இங்க  கிளம்பி  வந்துட்டேன்.

ஏன் மலர் இது தப்புல்ல. உங்க அப்பா வந்தவங்க முன்னாடி சங்கடபடுவாங்கல்ல  நீ அங்கேயே இருந்து நேரா அவங்க  கிட்ட சொல்லி  இருக்கலாம்

இப்ப எதுக்கு  என்ன  கில்டியா ஃபீல் பண்ண வைக்கிற. இந்த  தடவை இத பண்ணினா தான்  அடுத்த  தடவை என்ன  கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாங்கஉள்ளூர் மாப்பிள்ளைன்னா கூட பரவாயில்லைபோனா போகுதுன்னு விடலாம்இவன் மும்பையாம். நான்  இவன் கல்யாணம் பண்ணி இவன் பின்னாடி போயிட்டாஎன் அப்பாவை பார்த்துக்கறது யாராம் ?

சாமிஆளை விடு. தெரியாம சொல்லிவிட்டேன். படத்தை பார்க்கவிடு

அதுஅந்த  பயம் இருக்கணும்.

அதே நேரம் பின்புற இருக்கையில் இருந்தவனுக்கு போன் வர நம்பரை பார்த்தவன் பேசுவதற்கு  வெளியே  எழுந்து  சென்றான். ஏனென்றால்  அழைத்தது  அவனது அன்பு  தங்கை தாரிகா அல்லவா..

ஹேய்தாரு சப்ரைஸ் இந்த  நேரம்
கூப்பிட்டு  இருக்கற

டேய் அண்ணா  சப்ரைஸா நிறைய நடக்கும்  போது தானும் இப்படி  பேச தான வேண்டியதா இருக்கு.

ஓய்என்ன  சொல்லற

இப்ப தான்  அப்பா கூப்பிட்டு  சொன்னாங்க. நீ பொண்ண  பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டயாம். நான்  வேற இவர்கிட்ட பெட் வச்சேன். என் அண்ணா  இப்போதைக்கு  யாரையும்  கட்டிக்க மாட்டான்னு  பத்தாயிரம்  ரூபாய்  லாஸ்.

அந்த  காச நான்  தரவாதாருஎன் மருமக என்ன  சொல்லறா

அவளுக்கென்னணா. இவ்வளவு  நேரம்  அடம்புடிச்சிட்டு இப்ப தான்  தூங்கறா

தாரு.. நீ மட்டும்  சமத்தா என்ன. . உன் பொண்ணும் உன்ன மாதிரிதான்  இருப்பாஎப்ப வர்ரேஊருக்கு

உன் கல்யாணம் பிக்ஸ் ஆச்சுன்னா அங்கே  தான்  டேறா

வாவாஎன்றவன் போனை கட் செய்து பார்க்க படம் இடைவேளை விட்டிருக்க அனைவரும் வெளியே வந்து  கொண்டு  இருந்தனர். மலர் கூட இருந்த தோழிகளுக்கு சாப்பிட என்ன  என்ன 

வேண்டும் என கேட்டவள் பில் பே செய்தபடி வரிசையில்  நகர்ந்து  கொண்டிருந்தாள் தனது இன்னொரு தோழியுடன்  பேசியபடிநிஷா சான்வெஜ் மூன்று  நீ வாங்கிக்கோநான்  பாப்கார்ன்  வாங்குகிறேன் என்றபடி நகர்ந்தவள் பாப்கார்ன்  வாங்கியபடி நிஷா முன் செல்ல அவளுக்கு பின்னால் நடந்து  வந்து  கொண்டிருந்தாள். இதுவரை எல்லாம் சரியாக தான்  நடந்தது. அதற்கு  அடுத்து  நடந்தது யாரும்  எதிர்பாராதது.

அவள் உள் நுழைந்ததை பார்த்தவன்
அவள் வந்ததை கவனிக்காமல் அவளை தேடியபடி அவளது நண்பர்கள்  கூட்டத்தை  பார்த்தபடி பின் நகர
இவன் வருவதை கவனித்து நிஷா நகர்ந்திருந்தாள் பின்னோடு வந்த மலரின் மேல் இடித்து  விட கையில்  இருந்த மொத்த  பாப்கார்னும்  டைல்ஸ் தரையில்  கொட்டியிருந்தது.

கொட்டிய நொடியே திட்ட ஆரம்பித்து  இருந்தாள். கண்ணு தெரியலையா. இப்படி தான்  வந்து  மோதுவிங்களா
வாங்கிட்டு வந்தது எல்லாம்  வீணா போச்சுநிஷா முன்னாள்  போனவள் திரும்பி வந்து  மலர் பரவாயில்லைவிடு. வேற வாங்கிகலாம். சத்தம்  போடாத

பாரேன் தட்டி விட்டுடு எப்படி  நிக்கறனான்னுதிட்டியபடி இவனது முகத்தை  பார்க்கநல்ல  உயரம்,நல்ல நிறம் கூடவே கண்ணுக்கு குளிர் கண்ணாடி.. எதுவுமே நடகாகாதது போல நின்றிருந்த  தோற்றம் ….இவள் முகத்தை  கவனிக்க ஆரம்பிக்கவும்   அப்பாவி போல நின்றிருந்தான்.

அருகில்  வந்த  நிஷாவோமலர் நிஜமாகவே  அவருக்கு  கண்ணு தெரியலை  போலநீ வா இங்கே என்றபடி இழுத்து  சென்றிருந்தாள்.

அதற்கேற்றாற்போல் அவன் அருகில்  வந்த  ஒருவன் இப்படி  ஒரமா வந்து உட்காருங்கள் பாஸ் என்றபடி அழைத்து  சென்று  அமர  வைக்க

இவனை பார்த்தபடியே தியேட்டரின்  உள் நுழைந்தாள். கண்ணு தெரியலைன்னா எப்படி  படம் பார்ப்பாங்க.. தனது பெரிய  சந்தேகத்தை தனது தோழியிடம் கேட்டபடி….

நந்தினியோசத்தம்  காதுக்கு கேட்கதான செய்யும் ஆதி கேட்க வந்திருப்பாங்க என்றபடி படத்தில்  மூழ்கி இருந்தனர் அனைவரும்.

அபிநந்தன் அதற்கு  மேல் அங்கே  இருக்க பிடிக்காமல் கிளம்பி  இருந்தான். அவளை எப்படி  அணுகுவது என்று  யோசித்தபடி..

பனிமலர் வருவாள்.

வெண்பனிமலரே_2

மதுசூதனன் ஹாலில் அமர்ந்தபடி நேரம் பார்க்க  மாலை நான்கு மணியை தாண்டி  இருந்தது. பார்த்து விட்டு  வருவதாக சொன்ன அபிநந்தனும் எந்த  தகவலும் தரவில்லைமலரும்  வீட்டிற்கு  வருவதாக இல்லை . இத்தனை  நாள் இல்லாமல் இப்போது  தன் மேலேயே கோபமாய் வந்தது. தெரிந்தவர்களுக்கு
விஷயம் தெரிந்தால் என்ன  சொல்வார்கள்பொண்ணு  பார்க்க வரும்  போதே பார்க்க மாட்டேன்  என்ன வெளிய கிளம்பி  போயிட்டாஇந்த  பொண்ண  கல்யாணம்  பண்ணினா பையனோட வாழ்க்கை அவ்வளவுதான்.. ஒருவர்  துவங்கி  வைத்தால் போதுமே ஊரே பேசுவதற்குநாம் என்ன  ஆட்கள் இல்லாத ஊரிலா குடி இருக்கிறோம்.
என்ன  நடந்தாலும்  யாருக்கும்  தெரியாது என்ன நினைப்பதற்கு

எதற்காகவும் இது வரை மகளின்  மேல் கோபபடாதவர் தான். முதல் முதலாக
கோபம் வந்தது. என்ன  பொண்ணு
இப்படி  செய்யாறாஅதிகமாக செல்லம்  கொடுத்து  விட்டோமோ!!!

சரியாக வளர்ப்பதில் தவறிவிட்டோமோ!!!  பல வாராக மனதில் மகளை பற்றிய நினைவே ஓடிக்கொண்டு இருந்தது.பனிமலரின் தாயார்  இறந்த போது அவளிற்கு
பன்னிரெண்டு  வயது தான்ஒருவார காய்ச்சல்  இவர்களது குடும்பத்தை  உரு தெரியாமல் சிதைத்து போய் இருந்தது. இறக்கும்  தருவாயில்  இவனது கைகளை பற்றியபடி  நம்ம பொண்ண   பத்திரமாக பாத்துக்கங்க அவளை விட்டுடாதிங்கஎன்றது தான் கடைசியாக  பேசியது. அன்றிலிருந்து  இன்றுவரை அவளுக்கு  தாய்  தந்தை  இரண்டுமே இவரே ஆகி போனார்.

பனிமலரும் புத்திசாலி குழந்தை.. நடந்ததை புரிந்து கொண்டவள் எதற்காகவும் அடம்பிடித்து  அழுதது  இல்லைஇவருக்கு  சிரமமாக இருந்தது அப்போது அவளது இடுப்பிற்கு கீழாய் வளர்ந்து  இருந்த அவளது நீள கூந்தல் தான்தலைவாரி பிண்ண சிரமமாக இருக்க குதிரைவால் போடும் அளவிற்கு  வெட்டியது தான் . மற்றபடி இன்று வரை எந்த  சிரமமும் இல்லாமல் நாட்கள் சென்றிருந்தது.

கோவை கணபதியில்  ஆரம்ப நாட்களிலேயே இந்த  வீட்டை கட்டி இருந்தார். கிட்டத்தட்ட  ஏழு சென்ட்டில் ஹால்,கிச்சன்,இரண்டு  பெட்ரூம் சற்று  பெரியதாய் இவர்களுக்கும்  விருந்தினர்  வந்தால் தங்குவதற்கு  சிறியதாக இன்னொரு அறை எனஅழகாய் அப்போதே வடிவமைத்து  இருந்தார். வீட்டிற்கு  பின் புறத்தில்  சிறியதாய் ஒரு தோட்டம் அவரை பொறுத்தவரை நிறைவாய் வீட்டை கட்டி இருந்தார்.

உறவினர்கள்  பலரும்  இவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் எதையும் கேளாமல் மகளே உலகம் என
மாற்றிக்கொண்டவர். மணல்,ஜல்லி,செங்கல் மொத்த வியாபாரம்  இவருடையது. பெரும்பாலும்  அனைத்துமே போனிலேயே வியாபாரம்  முடிந்து  விடும். ஏற்றி அணுப்பும் போது குடோனில்  இவர் இருந்தால் போதும்.

நல்ல வருமானம்அதுவே அவரை இரண்டாவது  திருமணம் செய்து கொள்ள பலர் வற்புறுத்தும்படி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதுவும் குறைந்து ஒரு கட்டத்தில்  கேட்பதையே நிறுத்தி  இருந்தனர்.

தன் மேல் அவள் வைத்திருந்த பாசம்
அவளை இப்படி  நடந்து  கொள்ள செய்திருந்தது. முக்கியமாக  தனது நண்பனிடம்  எப்படி  கூறுவது இதுவே தற்போது கவலை தந்து கொண்டு  இருந்தது. இவரும்  அபிநந்தனின் தகப்பனாரும் பள்ளியில்  படித்த காலத்திலேயே நல்ல  நண்பர்கள்அந்த  உறவு இன்றும்  தொடர்ந்து  கொண்டிருந்தது. இவரை முழுவதும்  தெரிந்ததால் அவரே தனது மகனுக்கு  மலரை கேட்டிருந்தார்.

அவர் கேட்டபோது இருந்த அன்றைய 
சந்தோஷம் மொத்தமாய் வடிந்திருந்தது தற்போது. அடிக்கின்ற போனின் சத்தத்தில்  பழைய நினைவில் இருந்து மீண்டவர் யார்  என பார்க்க அபிநந்தன் அழைத்திருந்தான்.

அங்கிள் உங்கள்  பொண்ண  பார்த்துட்டேன். முன்ன சொன்னது  தான்   எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. என்னோட முடிவுல எந்த  மாற்றமும் இல்லைநான்  அப்பாகிட்ட பேசிட்டு மறுபடியும்  உங்க வீட்டிற்கு  வரேன். உங்க பொண்ணுக்கு கொஞ்சம்  பிடிவாதம் மத்தபடி ரொம்ப  பாசகாரின்னு நினைக்கிறேன். வொரி பண்ணிக்காதிங்க அங்கிள்

அபி அவ வேண்டாம்ன்னு சொன்னா என்ன  செய்ய

அங்கிள் அவளோட சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது. அவளே  உங்க கிட்ட ஒரு நாள் சொல்லுவா அபிய எனக்கு கட்டி வைங்கன்னு..

ஆனாலும்  உனக்கு  நிறைய நம்பிக்கைபா….

வாழறதே நம்பிக்கையால தானசொன்னவன் சிரித்தபடி  கால்ஸை  கட் செய்ய இப்போது  தான்  அவருக்கு  ஒரு வித அசுவாசம், நிம்மதி தோன்றியது

அடுத்த சில நிமிடத்தில்  அபிநந்தனின் தகப்பனார்  செல்வம் அழைத்திருந்தார் .

மதுஇப்ப சந்தோஷமாஎன்னவோ பயந்திட்டு இருந்தேஇப்பதான் என் பையன் கூப்பிட்டு  பேசினான். எனக்கு
ரொம்ப சந்தோஷமா  இருக்கு. எவ்வளவு  நாளா டிமிக்கி  கொடுத்துவிட்டு இருந்த பய இப்ப இப்படி  சொன்னது நிம்மதியாக இருக்கு.. மறந்திடாதமுன்பு  நீயும்  நானும்  பேசினதுதான். கல்யாணம்  முடிஞ்சதும் நீயும்  நானும்  ஊர் ஊரா லாங்டூர் போகணும். அப்புறம்  பேச்சு  மாறக்கூடாது.

சரிடா.. சரிடா சொல்லும் போதே இதோ இப்போதே திருமணம் நடத்திய உணர்வில் லயித்திருந்தார். கொஞ்சமாய் நிம்மதி தோன்றி  இருந்தாலும் இம்முறை  

போல மன்னிக்க தயாராய் இல்லைநிச்சயமாக  ரெண்டு  நாளைக்கு  இவகிட்ட பேச கூடாதுமனதில் தீர்மானம்  எடுத்தாலும் அவரது மனசாட்சி  யாருநீ…. ரெண்டு  நாளுகாமெடி பண்ணாதே மது..
உன் பொண்ண பார்த்தா போதும் அப்படியே பனிமாதிரி உருகிடுவயே..போபோய் வேற வேலை இருந்தா பாரு . உன் பொண்ணு  வந்ததும் என்ன  சாப்பிட வாங்கி  வச்சிருக்கறேன்னு தேடுவா

என்ன  செய்ய  அவர் அப்படிதான். அவளது கோபத்தை  கூடாது ரசிக்க முடியும் என்றால் அவரால் மட்டுமே  முடியும்.

மாலை நேரம் நான்கு முப்பதை நெருங்க அனைவரும் வெளிப்புறத்தில் கூடிய இருந்தனர். நிஷா அணைவரையும் பார்த்தபடி மலர்,நந்து ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக சொல்ல முடியாதுஎல்லோரும்  என்னுடைய  என்கேஜ்மெண்டுக்கு வந்திடுங்க. இனிய என்ன  வெளியே  விட மாட்டாங்க. அப்புறம்  இன்னும்  நாலு நாள் கழிச்சு நம்ம ப்ரெணடுங்களுக்கு மட்டும்  சின்னதாய் கெட் டூ கெதர்  பார்ட்டி நானும்  கிஷோர்ரும் சேர்ந்து  அரேன்ஜ் பண்ணி இருக்கறோம்.

நம்ம ப்ரெண்டுங்க எல்லொரையும் வரச் சொல்லி இருக்கிறேன்ஏழு டூ ஒன்பது  பாப்பீஸ் ரெஸ்ட்டாரண்ட்யாரும்  மிஸ் ஆக கூடாதுவரலைன்னா லைப்லாங் அவங்க  கிட்ட  பேச மாட்டேன். பார்த்துக்கங்க

இன்னோரு தோழி பிருந்தாவோ….
நிஷா சாப்பாடு  போடுவல்லநீ சொல்லாட்டி கூட நான்  வருவேன். ஏன்னா நமக்கு  சாப்பாடு  தான் முக்கியம்

பிருந்தா  உனக்கில்லாததா.. உனக்கு  பிடிச்சதும் இருக்கு.

இன்னொரு தோழிநிஷா தயிர்  சாதகமாஇதை சொன்னதும் மறுபடியும்  ஒரு  சிரிப்பலை துவங்கி  இருந்தது. பேசியபடியே நேரம் பார்த்தபடி ஒவ்வொருவராய் புறப்பட்டு  கொண்டிருந்தனர்.

அனைவரும் கிளம்பி  விட கடைசியாக  இவளோடு நந்தினி மட்டும்  எஞ்சி இருந்தனர். அழைத்து  செல்ல  கேப்ஸ் புக் செய்திருக்க வெளிப்புற இருக்கையில்  அமர்ந்தபடிமலர் நீ பண்ணினது பெரிய  தப்பு அப்பாவோட இடத்தில்  இருந்து பாருஅங்கே  இருந்துவிட்டு பையனை பிடிக்கலைன்னு சொல்லி இருந்தா வேற விதம். நீ வந்தவங்கல மட்டும்  இல்லை  உன் அப்பாவையும் அசிங்கபடுத்திட்ட

இத பாரு நானே வீட்டுக்கு  போய் அப்பாவை எப்படி  சமாளிக்கறதுன்னு யோசிட்டு இருக்கிறேன்நீ வேற என்ன  குழப்பி விடாத.. குழந்தை  மாதிரி  முகத்தை  தூக்கி  வச்சிட்டு  உட்கார்ந்து  இருப்பாங்க.. அவங்கல பழையமாதிரி கொண்டு  வர ரெண்டு  நாள் போராடணும். இன்னும்  ரெண்டு  நாளைக்கு  என்னுடைய  பேச்சு  சத்தம்  தான்  வீட்டில்  கேட்க போகுது. இத நினைச்சாலே எனக்கு  கவலையா இருக்கு. நீ வேறயாரு நான்…  செஞ்சது சரின்னு சொன்னாநான்  பண்ணினது பெரிய  தப்பு  தான்ஆனா அந்த  பையன்  எப்படியும் இந்த  பொண்ணு  வேணாம்ன்னு  போயிருப்பான்ல எனக்கு  அது தானே வேணும்.

சற்று  நேரம்  அமைதியாய் இருந்தவள் தன்னை  மறந்து  சிரிக்க ஆரம்பித்தாள். இதை பார்த்த நந்தினி.. ஏன்டி  இப்படி  சிரிக்கற. எதை பண்ணினாலும் சொல்லிட்டு  செய்.. பயமாக இருக்குல்ல..

சிரிப்பை அடக்கியபடி நந்தினி  அந்த  பையனை நினைச்சு பார்த்தனு சிரிப்பு  வந்திடுச்சி. பொண்ணு  இல்லைன்னதும் அவனோடு முகம் எப்படி  போயிருக்கும்  பார்க்க கொடுத்து  வைக்கல ..

சரிடி வண்டி வந்துடுச்சி..நானும் புறப்படறேன்மறுபடியும்  பார்க்கலாம். போன் பண்ணுடி. அப்பா சமாதானம்  பண்ணு. இன்னும்  நாலுநாள் கழிச்சி பார்ப்பமே அப்போ சொல்லு பை என்றபடி அவளும் புறப்பட பனிமலரும் அவளது பெப்பை எடுத்து  கொண்டு  வீட்டை நோக்கி  புறப்பட்டாள்.

வீட்டின் அருகில்  நெருங்க நெருங்க லேசான படபடப்பு  தோன்றியதுஅதுவும்  உள் நுழையும்  வரையேஹாலில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தவள் அவரது அருகில் அமர்ந்தபடிஅப்பாஅப்பாஎன அழைக்க எந்த  சலனமும் இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தார்.

கோபமாக திட்டுவார். ஏன் அடித்தால் கூட வாங்கிகலாம் என நினைத்தவள் நிஜமாகவே பேசாமல் அமர்ந்து இருந்தவரை பார்க்கவும் எப்படி சரி செய்யஎன யோசித்தவள் ஸாரிபா.. ஸாரி இனி இத மாதிரி பண்ண மாட்டேன்இப்படி  பேசாம இருக்காதிங்கஅவள் மட்டும்  தான்  பேசிக்கொண்டு  இருந்தாள். சற்று  நேரம்  இருந்தவர் தனது அறைக்குள்  அமைதியாக செல்லஅப்பா என்ன  செய்சிட்டேன்னு இப்படி  இருக்கறிங்க. நான்  தான்  ஸாரி  கேட்டேன்ல. வேணும்னா ரெண்டு  அடி கூட அடிச்சிக்கோங்கபேசாமல் இருந்தா என்ன  அர்த்தம் சின்ன  வயதில்  இருந்து  பார்க்கறிங்கல்ல. எனக்கு  பிடிக்கலைன்னு சொல்லியும் நீங்கள்தான் கேட்கலஇப்போ முகத்தை  தூக்கி வச்சிகிட்டாநான்  யார் கிட்ட பேசுவேன்.
குழந்தை  போல் சத்தமாக கத்தியபடி கேட்க

பாப்பா  இத நான்  உன்கிட்ட எதிர் பார்க்கல என்றபடி  தனது அறைக்குள்  நுழைந்தவர்கள் கதவை சாத்தி இருந்தார்.

கதவிற்கு வெளியே  நின்றவளோ
மலரு தம் கட்டி இவ்வளவு  நேரம் பேசினதுக்கு இவ்வளவு தான்  ரீயாக்ஷனாநோதப்பாச்சே

அப்பாஅப்பா


சும்மா  கத்தாத பாப்பாசமையற்கட்டுல சாப்பிட  சினாக்ஸ் வாங்கி  வச்சிருக்கறேன் எடுத்து  சாப்பிடு. எனக்கு  மனசு சரியில்லைகொஞ்ச நேரம்  தனியா இருக்க விடு.

ப்பாநீங்க  இல்லாம எப்போ தனியா சாப்பிட்டு இருக்கிறேன் கதவைத் திறக்க வைக்க சத்தமிட்டு கொண்டிருந்தாள்.

பொய் சொல்லாத பாப்பாமதியம்  நான் இல்லாமதான சாப்பிட்டஅது மாதிரி  சாப்பிடு.

அப்பா வர வர ஓவர் ஸ்மார்ட்  ஆகிட்டு வர்றிங்க இது தப்பு. நான்  ஹால்ல உட்கார்ந்து இருக்கிறேன்ரொம்ப  நேரம்  காக்க வைக்காமல் வந்து  சேருங்க .. ஹாலில் இருந்த   ஷோபாவில் தஞ்சம் அடைந்தவள் நகம் கொறித்தபடி  அடிக்கடி அவளது தந்தை  அறையை பார்த்து  கொண்டிருந்தாள். நேரம் பார்க்க அரை மணி நேரம் ஒடி இருந்தது. வருவதற்கான எந்த  அறிகுறியும்  இல்லை

மலர் பேபி இந்த  முறை செம கோபம் போலயே. வெளியே  வர்ற ஐடியாவே இல்ல போல இருக்கு. இப்போது  எப்படி  சரிபண்ணகையில்  இருந்த பொபைலை சுத்தியபடி யோசித்து  கொண்டிரூந்தாள். மேலும் பத்து  நிமிடம்  தாண்டி  இருக்க கதவைத் திறந்தபடி வெளியில் வந்தார் மதுசூதனன்.

எதுவுமே நடக்காதது போல் சமையலறைக்கு  சென்றவர் இரண்டு  ஃபவுலில் ஐஸ்கிரீம்  நிறைத்தவர் எடுத்து  வந்து  இவளுக்கு  அருகில் ஓன்றை வைத்தவர் தனக்கும் ஒன்றை எடுத்து  சாப்பிட ஆரம்பித்தார்.

மலருக்கு  ஒரு  நிமிஷம்  ஒன்றுமே புரியவில்லைஎப்போதுமே மிகவும்  மகிழ்ச்சியாக   இருக்கும் போது அவர் எடுத்து  கொண்டு  வந்து  இருவரும்  இணைந்து  சாப்பிடுவது இன்று இவர் இருக்கின்ற கோபத்திற்குஐஸ்கிரீமாஎன்னங்கடா நடக்குது.
ஓரு வேளை பையன் சரியில்லையோபொண்ணு  தப்பிச்சிட்டா அப்படின்னு நினைக்கறாரோஐஸ்கிரீமை உண்டபடி  கடைகண்னால் அவரை பார்க்க முகத்தில்  மகிழ்ச்சி  மட்டுமே  இருந்தது.

என்னடாஹேப்பியா தான்  தெரியறாங்க. ப்பாஎன் மேல கோபம் இல்லையே

இல்லைடாநான்  ரொம்ப  சந்தோஷமாக இருக்கிறேன்

என்னபா விஷயம். ஏதாவது  பெரிய  ஆர்டர் கிடைச்சிருக்குதா..

ஆர்டர் தினமும்  கிடைக்குதே இது வேறமா. புரிஞ்சிக்கற மனுசங்க கிடைச்சா  சந்தோஷம் தான… 

யாருடா அது நம்மல விடவும் புரிஞ்சிகிட்டவங்கமனதிற்குள்  நினைத்தவள். யாரா இருந்தா என்ன  நம்ம கிட்ட மாட்டாமலா போயிடுவாங்க. ஆளை பார்க்கும் போது தெரிஞ்சுக்கலாம்.

யார்  என்பதை தெரிந்து  கொள்ள அதிக சிரமப்பட தேவையில்லாமல் அடுத்த  நாள் காலையில்  முதுகில் சுமந்த டிராவல்ஸ் பேக்கோடு வாசலில் நின்றிருந்தான் அவளது நாயகன்..

உருகிடுமோ பனிமலர்!!



உருகாதே வெண் பனிமலரே_3



காலை எட்டு மணியை நெருங்கி  கொண்டிருக்க விடாது ஒலித்த ஹாலிங்பெல் சத்தம் கேட்டு வேகமாக  வந்து  கதவை திறந்தாள் மலர். நேற்று  பார்த்தவன் தான். இன்றும் அதே கோலத்தில்  நின்றிருந்தான். முகத்தில்  எந்த  வித உணர்வும் காட்டாமல் கண்களில் நேற்றைய போல அதே ரீபேக் கண்ணாடி  கவ்வியிருந்தது. யார்  என்னஏது எதுவும்  கேட்க தோன்றாமல்  ஒரு நிமிடம் நின்றவள்..
கேள்விகளை கேட்கும் முன்னமே அவன் பேசி இருந்தான்.

வீட்டுக்கு  வந்தா வாங்கன்னு கேட்கிற பழக்கம்  இல்லையா..  இப்படி முழிக்கற..வழிய மறிச்சிட்டு நின்னா எப்படி  உள்ள வர்றதுநகரு…  என்றபடி எளிதாக அவளின் தோள் தொட்டு நகர்த்தியவன் உள் நுழைய  போக ..

ஏய்நில்லு ….ப்ராடு நேற்று  கண் தெரியாதவன் மாதிரி  நடிச்சவன்தான நீ.. இங்கே  எதுக்கு  வந்திருக்கிற

என்னயாரை பார்த்து  ப்ராடுங்கற.. நானா வந்து உன்மேல மோதினேன். வாங்கின பாப்கார்னை பார்த்துட்டே வந்து  நீ இடிச்ச.. நீயா கண்ணு தெரியாதுன்னு முடிவு  பண்ணினா நான் எப்படி  பொறுப்பாக முடியும். நீ  எவ்வளவு தூரம்   பேசுவன்னு பேசாமல் வேடிக்கை  பார்த்தேன். உடனே  முடிவு  பண்ணிடுவயா. எங்கே என்ன  பார்த்து  சொல்லுகண் தெரியாதுன்னு. கண்களில் மறைத்திருந்த கூலரை கலட்டியவன்
அவளது முகத்திற்கு  அருகே கொண்டு  சென்று  இரண்டு  கண்களையும் மாற்றி மாற்றி கண் சிமிட்டி காட்டினான்.

அப்பாஎன வேகமாக  கத்தினாள் பனிமலர். சத்தம்  கேட்டு வேகமாய் தனது அறையில்  இருந்து  வெளிவந்தவர் இவனை பார்த்து அடஅபி வா.. வா  என்றபடி இவனை நோக்கி  வர

ஒரு நிமிடத்தில்  இவளை கடந்தவன் ஹாய் அங்கிள்ஆசீர்வாதம்  பண்ணுங்கள் என்றபடி பாதம் தொட்டு வணங்கமும்பையில்  இவன் பழகி இருந்தது வயதில்  பெரியவர்கள் யாரை பார்த்தாலும் ஆசீர்வாதம்  வாங்குவது மும்பையில்  நண்பர்கள்  பலர் இருக்க அவர்களின் பழக்கம்  இவனை தொற்றிக் கொண்டு  இருந்ததுநேற்று போலவே இன்றும் இயல்பாகவே  அவனுக்கு வந்தது.

நல்லா இருப்பாநல்லா  இரு என்றபடி  அப்பா நேற்று  பேசினாங்க. பத்து  நாள் தங்கறேன்னு சொன்னியாம் உன்னோட அப்பா எனக்கு  நிறைய உதவி செஞ்சிருக்கறான். ஏதோ என்னாலான சின்ன  கைமாறு

என்ன  அங்கிள் பெரிய வார்த்தை  எல்லாம்  சொல்லறிங்கதோளோடு  அணைத்து அழைத்து  சென்றவரை பார்த்தவள்மலர் பேபி வீட்ல என்ன  நடக்குது. இந்த  குரங்கு  யார்ன்னு தெரியலைஓரே நிமிடத்தில்  அப்பாவை இப்படி  இம்பரஸ் பண்ணறான் தப்பாச்சேஎன்றபடி அவர்களோடு இவளும் பின் தொடர்ந்தாள்.

இவனை அழைத்து  சென்றவர் விருந்தினர் தங்குவதற்கு  இருந்த அறையை திறந்து  விட்டபடிஅபி நீ வர்றேன்னதும் இந்த  ரூமை நானே ரெடி பண்ணினேன் நேற்று  நைட்
உனக்கு  ஓகே  தான ஏதாவது  வேணும்னா சொல்லு நான்  சரி பண்ணி தந்திடறேன்.

ஐயோ அங்கிள்என்ன  நீங்க. .. அதெல்லாம்  வேண்டாம்பத்து நாளைக்கு இதுவே அதிகம்.. தேவைபட்டா சொல்லறேன் என்றபடி அவன் ரூம்பிற்குல் நுழைய பின்னோடு நுழைய போன தந்தையை இழுத்துக் கொண்டு  அடுத்து இருந்த தந்தையின் அறைக்குள் அழைத்து  சென்றாள்.

அப்பா உங்களுக்கு  பைத்தியமாப்பா. வயசு பொண்ணு  இருக்கற வீட்டுக்கு  கூப்பிட்டுட்டு வந்து  தங்க வைக்கறிங்க.. பார்க்கறவங்க என்ன  சொல்வாங்க

இதுல சொல்ல என்னடா இருக்கு. பத்து  நாள் தங்கி ஊட்டி, கொடைக்கானல்,கேரளான்னு சுற்றி  பார்க்கணுமாம் . ஒவ்வொரு வருசமும் ஒவ்வொரு ஊரை சுற்றி பார்ப்பானாம்.இந்த தடவை இங்கே வந்து இருக்கறான் யாரோ மாதிரி வெளிய தங்கிக்கோன்னு  விட முடியாதுல்ல..

ஆனா அவன் நல்லவன் இல்லைபா. நான்  நேற்று அவன அந்த  மால்ல பார்த்தேன்பா. கண்ணு தெரியாத மாதிரி நடிச்சான். ப்ராடுபா அவன் எப்படியாவது  அவனை புரிய வைத்திட வேண்டும் என வேகமாக  கூறிக்கொண்டு  இருந்தாள்.

சிரிக்க வைக்காத பாப்பா. அவனுக்கு  கண்ணு தெரியாதா. அவன் சிரிக்கும்  போது அவனோட கண்ணும் சேர்ந்து  சிரிக்குது அத நீ கவனிச்சயா. சுவிட்பாய்அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாதுன்னு என்னோட ப்ரெண்டு சொல்லுவான் அது எவ்வளவு  சரின்னு இந்த  பத்து நாள்ல  பார்க்க போறேன். சொல்லியவர் இவளை தாண்டி வெளியேறியபடி அபி.. அபி  என அழைத்தபடி செலல

சுத்தம்விட்டா இந்த  அப்பா அவன் பேர்ல் ரசிகர்மன்றமே ஆரம்பிப்பார் போலவேஇனி இவரை நம்பி பிரயோஜனம்  இல்ல நாமதான் ஏதாவது  செய்யணும் மலர் இன்றையில் இருந்து உனக்கு  இதுதான்  வேலை அவனை வீட்டை விட்டு அணுப்பின பிறகுதான்  தூங்கணும். யோசி யோசிஏதாவது  ஐடியா கிடைக்கும்  என்னபண்ணலாம். அறையை அளந்தபடி
இங்கும் அங்கும் நடந்து  கொண்டிருந்தாள்.

நடந்து  நடந்து  கால்தான் வலிக்குது
எதுவும்  தோணமாட்டேங்குது தந்தையின்  கட்டிலில் அமர்ந்தவள் அன்றைக்கு  மாப்பிள்ளை  போட்டோன்னு  ஒன்றை காட்டினாங்கலேஒரு  வேளை இவன் அவனா இருப்பானோ.. தோன்றவும் வேகமாக  தந்தையின்  அறையில்  தேட ஆரம்பித்தாள். டேபிளில்,கட்டில் அடி என  தேட.. பாப்பா ஏதாவது  வேண்டுமா


என்ன  தேடற.. என்றபடி மறுபடியும்  வந்து  நிற்க..

இல்லைபா  ஒன்றும்  இல்லையே .

நீ டிரைவிங்  கிளாஸ்  கிளம்பலையா வரச் சொல்லி  இருந்தாங்கல்ல

இதோ கிளம்பறேன்பாஎன்றவள் தனது அறைக்குள்  செல்லமறுபடியும் தனது அறையில்  தேட ஆரம்பித்தாள்போட்டோ இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

அங்கே  மால்ல ஓருத்தன் ஓரமாக வந்து  உட்காருங்க ப்ரோ. .. கூப்பிட்டுட்டு  போனானே இவனும் அவனோடு கையை பிடிச்சிட்டு போய் உட்கார்ந்தான். எஸ் இத சொல்லலாம் இவன் ப்ராடுதான் யார்  என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு  வேளை இவன்  திருடனா இருப்பானோ அப்பாவுக்கு தெரிஞ்சவனோட பேரை சொல்லிட்டு இங்கே  வந்து  ஏதாவது  திருடிவிட்டு போயிட்டாபத்து  நாள்  தங்கறவன் வெறும்  ஒரு  செட்  துணியோடவா வருவான். மறுபடியும்  அப்பாகிட்ட பேசிப்பார்க்கலாம். இத  சொன்னா யோசிப்பாங்கல்ல

அப்பா அப்பா மறுபடியும்  தனது  தந்தையின்  அறைக்குள்  நுழைந்தாள். …அறையில்  அவளது தந்தை இல்லைபாத்ரூமில்  தண்ணீர்  விழும் சத்தம்  கேட்டது.

அப்பா அப்பா..  என சத்தமாக பாத்ரூம் கதவருகே கூப்பிடவும் இவள் கூப்பிட்டதற்கான சத்தம் கேட்ட அடையாளமாய் நீர் விழும் சத்தம் நின்றிருந்ததுஅப்பா என ஆரம்பித்தவள்இந்த  பையன்  ப்ராடுபா. பத்து  நாள்  தங்கறவன் ஒரு   செட் துணியோடவா வருவான் உங்களோட  தெரிஞ்சவர் பேரை தெரிஞ்சிட்டு ஏமாத்த வந்து இருக்கறான். நீங்க அப்பாவிபா. யார் என்ன சொன்னாலும் அப்படியே  நம்பிடுவிங்கஇவன் வீட்டுல எதையாவது  திருட்டிட்டு போக போகிறான். முதலில்  அவனை வீட்டைவிட்டு  போக சொல்லுங்கள்போகலைன்னா  போலீஸ்ல சொல்லிடுவேன்னு சொல்லலாம். என்னபாநான்  சொன்னது கேட்குதாஎன கேட்டபடி தந்தையின் வரவுக்காக அருகில்  இருந்த கட்டிலில்
அமர்ந்திருந்தாள்.

ரொம்ப நல்லா தெளிவா கேட்டது என்றபடி கதவை திறந்தவன் அபிநந்தன். இடுப்பில்  கட்டிய டவளோடு  ஈர தலையோடு  முகத்தை 
சிரிப்போடுஅவன் வந்த  கோலத்தை பார்த்தவள் திகைத்து  திரும்பி நின்றிருந்தாள் . எதிர்பாராத வகையில்  அவன் வந்து  நின்ற  தோற்றம்  இவளது முகத்தை  சிவக்க  வைத்திருந்தது.

என்  மேல தான்  உனக்கு  எவ்வளவு  நம்பிக்கை….

நீநீஎப்போ இங்க வந்தே.. உள்ளே  நான் தான்  இருக்கறேன்னு சொல்ல மாட்டியா.

உங்க அப்பா எனக்கு  தந்த  ரூம்ல பைப் இறுகி இருக்கு. ரொம்ப  வருஷம்  யூஸ் பண்ணல போல.. அங்கிள் இங்க  குளிக்க சொன்னாங்கயார் உள்ள இருக்கறாங்கன்னு கூட பார்க்க மாட்டியா.. எவ்வளவு  வேகமா பேசற..
மொதல்ல பதில் சொல்ல விட்டயா.. 

அப்புறம்  வெளியே போறியா.

யார பார்த்து  வெளியே போக சொல்லறஇது என்னுடைய  அப்பா ரூம். என்ன  போக சொல்லுவயாகோபமாக பேசியவள் திரும்பி அவன் முகம் பார்க்க கைகளை கட்டியபடி அதே கோலத்தில்  நின்றிருந்தான். வேகமாக  மறுபடியும்  திரும்பி நின்றாள்.

நான்  டிரஸ் மாத்தனும்மாஇங்கே 
தான்  இருப்பன்னா இரு எனக்கு  எந்த  பிரச்சினையும் இல்ல

பொறுக்கிபொறுக்கி  என்றபடி வேகமாக வெளியேறியவள் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தபடி  நகம் கொறிக்க ஆரம்பித்தாள் .

பாப்பா  நகம் கொறிக்காத எத்தனை தடவை சொல்லறது.

அப்பாஅவன் பொறுக்கிபாஅவனை போக சொல்லுங்க

பாப்பா சின்ன குழந்தை  மாதிரி பேச கூடாது  காதில் கேட்டா சங்கட படுவாங்கல்ல .

அங்கிள் நான்  வரலாமாஏதாவது  முக்கியமாக பேசறிங்களா என்ன.

ஏம்பா நீ வேற.. வா.. பாப்பா  நீ சாப்பிட்டயாடிரைவிங்  கிளாஸ்  போகணும்ல. இரு எடுத்துவிட்டு வரேன். சமையல்கார  அம்மா லீவா
இன்னும்  வரல

அப்பா நீங்க  தான் ஒரு  வாரம்  லீவு கொடுத்திங்க. இப்ப  இப்படி  கேட்கறிங்க

மறந்துவிட்டேன் பாப்பா. .. சரிடா சரி. தோசை ஊத்தவா சட்னி ரெடி பண்ணி தர்றேன்.

பாப்பா  சொல்லாதிங்கன்னு எத்தனை  தடவை சொல்ல ..

அப்படியே  சொல்லி  பழகிடுச்சுடாசிரித்தபடி நகற

ம்ம்என்றபடி  ஷோபாவில் அமர்ந்திருக்க டிபாயில் இருந்த அன்றைய நாளிதலை  எடுத்தவன் ஏழு கழுதை வயசாகுது பாப்பாவாம். பீப்பா மாதிரி  இருக்கறவங்களுக்கு பேர் பாப்பாவாம்….

என்னுடைய  அப்பா எப்படி  வேணும்னாலும் கூப்பிடுவாங்கஉனக்கென்ன பிரச்சினை..  நீ உன் வேலைய மட்டும்  பாரு. சரியா

எப்படி  நீ என்ன பொறுக்கின்னு சொல்லலாம் நான்  எதுவும்  திருப்பி  பேசக்கூடாது  அப்படிதான

ஆமாம்  அப்படி தான்  உனக்கு  பிடிக்கலைன்னா எங்கேயாவது  போய் தங்கு உன்ன ஒன்னும்  கேட்க மாட்டேன். நூறு தடவை சொல்லுவேன் பொறுக்கி  பொறுக்கிநீ பொறுக்கி  தான்.

ஏய்யாரை பார்த்து பொறுக்கிங்கற
பொறுக்கி  என்ன  பண்ணுவான் தெரியுமாகிட்டே நெருங்கியவனை பார்த்து  பயத்தில் கண்கள் மூடியபடி அப்பாஎன வேகமாக  கத்தி இருந்தாள்.

என்னடா.. எடுத்துவிட்டு  வர்றதுகுல்ல இப்படி  சத்தம்  போடற.. இந்தா..

இல்ல இதுக்காக கத்தல இவன் என் கிட்ட வந்துகண்கள் திறந்து  பார்க்க சற்று  தூரமாய் எடுத்த பேப்பரை பிடித்தபடி


தனக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும்  இல்லை  என்பது போல அமர்ந்திருந்தான்.

இப்பதான கிட்டவந்தான் அதுக்குல்ல அவ்வளவு தூரம் எப்படி  போணான் குழப்பத்தோடு அவனை பார்க்கஒருவேளை அவன் அருகில்  வரவே இல்லையோ..
நாம தான்  ஓவரா கற்பனை  செய்யறமோ.. நினைத்தபடி திரும்பவும் பார்க்க தன் புறம் பார்ப்பதை உணர்த்தவன் இவள் புறம் திரும்பி இவளை பார்த்து  கண் அடித்தான்..

அதுவும்  ஒரு நிமிடம் தான் இவளது தந்தை வரும் அரவம் கேட்டு மறுபடியும் பேப்பரில் முழுகி இருந்தான்.

இம்சை இம்சை நல்லா நடிக்கறான் இந்த  அப்பா வேற இவனைபோய் நம்பறாங்கஎன மனதிற்குல் அர்ச்சனை  செய்து கொண்டிருந்தாள்..

அப்போது கையில்  தோசை தட்டோடு வந்தவர் இவளது கைகளில் தந்தபடி

நீ சாப்பிட்டுவிட்டு கிளம்புமாஎனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. நானும்  குடோன் வரை போகணும் அப்படியே ப்ளம்பர பார்த்து  வர சொல்லணும்.. அபியும் என் கூட வர்றேன்னு சொல்லி  இருக்கிறான்.

சரிபாமதியம்  எத்தனை  மணிக்கு வருவிங்கசாப்பாடு செஞ்சிடவா

சரிடா.. செஞ்சிடுமாஅபி என்ன பொண்ணு  நல்லா சமைப்பா தெரியுமா!!! குடோனில் இருந்து வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம். இரு இன்னோரு தோசை எடுத்துவிட்டு வரேன் என்றவர் சமையல் அறைக்குள்  நுழைய

பாப்பு…  பாப்புமா….பாப்புக்கு  சமைக்க கூட தெரியுமாராகமாக பாடி வம்பிழுத்துக்கொண்டு இருந்தான்.

என் அப்பாவுக்கு  மட்டும் தான்  பாப்பாநீ என்ன  கூப்பிட்ட எதையாவது  எடுத்துவிட்டு மண்டைய உடைச்சிடுவேன் பார்த்துக்கோஇம்சைஇம்சை..

ஐயோ பயமா இருக்கேயாராவது இருக்கறிங்களாஎன்ன  காப்பாத்த

இந்த  பாப்பா  ரெண்டே தோசைதான் சாப்பிடுமா .. அதனால தான்  கூப்படறது  பாப்பாவோ….

டேய்வாய கிண்டாத ஏதாவது  சொல்லிட போறேன். அப்பா எனக்கு  போதும்பா  சத்தமாக சொன்னவள். இந்த  வீட்ல நிம்மதியா சாப்பிட கூட முடியல..அவனுக்கு  கேட்கும்படி சொல்லிவிட்டு கிளம்ப

அவளைப் போலவே அங்கிள்  உங்க பொண்ணு  போகட்டும்எனக்கு  நானே தோசை ஊத்திக்கறேன். நானெல்லாம் மினிமம் பத்தாவது சாப்பிடுவேன் உங்க பொண்ணு அத பார்த்தா எனக்கு  தான்  வயிறு வலிக்கும்

ஐயாசப்பாட்டு ராமனே எவ்வளவு  வேணும்னாலும் சாப்பிடு தயவு செஞ்சு நான்  இருக்கும்  போது மட்டும்  சாப்பிட்டுடாத.. வரேன்பா என்றவள் தனது பெப் சாவியை எடுத்து  கொண்டு  வெளியேறினாள்.

உருகாதே!!!! வெண்பனிமலரே!!!!

உருகாதே.. வெண்பனிமலரே_4

பனிமலர் புறப்பட்டு போகவும் அபி சாப்பிடலாமா என கேட்டவரிடம்..
அங்கிள் நீங்க உட்காருங்க நான்  எடுத்துவிட்டு வரேன் என்றவன் சமையல் அறையை நோக்கி  போக
மதுசூதனனோ வேண்டாம்பா அதெல்லாம்  வேண்டாம்  நான்  எடுத்துவிட்டு  வரேன்.

நோ பார்மாலிட்டிஸ் அங்கிள் நான்  நல்லாவே சமைப்பேன்இது எனக்கு  பிடிச்ச வேலையும் கூட

இத என் பொண்ணு  கிட்ட சொல்லிடாதே வருசம் முழுசும் உன்னையவே சமைக்க வச்சிடுவா. அவ சரியான சோம்பேறி . கவனிக்காம விட்டா அவ சாப்பிடவே மாட்டா  இதுக்காகவே அவள் கூட சாப்பிட ஆரம்பிச்சேன் இப்போ எனக்காகவே நேரநேரத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சிட்டா  ..
சொன்னவர் முகம்  வருத்தத்தை தத்தெடுத்தது.

அங்கிள்வொய் சோகம்..ஏன் இப்போ கவல படறிங்க. .

அதில்ல அபி இவளுக்கு  உன்ன பிடிக்குமாஇப்பவே இவ்வளவு  சண்டை  போடறிங்க. எனக்கு  கவலையாக இருக்கு அவளுக்கு  பிடிக்காதத என்னால திணிக்க முடியாது உனக்கு  புரியுது தான

அங்கிள்புரியுது அங்கிள் நீங்க  நினைச்சு பயப்படற அளவுக்கு  எதுவும்  நடக்காது. நான்  ப்ராமிஸ் பண்ணறேன் உங்க பொண்ணுக்கு என்ன  கட்டாயம் பிடிக்கும். பிடிக்க வச்சிடுவேன் எனக்கு  நிறைய நம்பிக்கை  இருக்கு. இன்றைக்கு  நடந்ததே எப்பவும் நடக்காது மாறிடுவாஇன்னும்  ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்க  எல்லாமே மாறிடும் .

மாறினால் சரி தான்வா சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். போன் வர்றதுகுல்ல குடோன் போய்விடலாம்.
அடுத்த  இருபது நிமிடத்தில்  இருவரும் கிளம்பி  இருந்தனர்.

அபி.. நீ கார் ஓட்டுவதான..அதிலே போயிடலாமா..

நானும்  காரை பார்த்ததும் கேட்கணும்ன்னு நினைச்சேன் டிரைவர் வரலையா

நீ வேற அபி இந்த கார் மலருக்காக வாங்கியது. டிரைவிங்கிளாஸ் போறா இல்லையாஓட்டி பார்க்கறதுக்காக வாங்கினது. அவளுக்கு  ஏனோ தனியா  காரை எடுக்க பயந்துக்கறா..

அவள் எடுக்காட்டி என்னஏன் அங்கிள் உங்களுக்கு  ஓட்ட தெரியாதா

இந்த  வயசுக்கு மேல பழகி  என்ன  செய்ய போறேன். எனக்கு என்னுடைய  டூவிலர் போதும் ஓட்டற அரை கிலோமீட்டருக்கு  அதுவே அதிகம்.

வண்டி  சாவியை வாங்கியவன் காரை வெளியில் எடுத்து ஓட்டும்போதே தெரிந்தது கார் அந்த  அளவுக்கு  நல்ல  கன்டிசனில் இருந்தது. வண்டி  நல்ல  கன்டிசன்ல இருக்கு அங்கிள்.

என்ன  செய்ய  அபிவண்டி வாங்கின நாளில் இருந்து ஒருத்தன் வரச்சொல்லி இருக்கிறேன்  ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து  கொஞ்ச நேரம் ஆன் பண்ணி அரைமணி நேரம் ஓட்டிட்டு வந்து  நிப்பாட்டுவான். இந்த பக்கம்  தான்  அபி லெப்ட் திருப்பு.. அந்த  கேட் பக்கம்  தான்.. சொன்ன இடத்தில்  நிற்பாட்ட.. சாவியை எடுத்தவர் கேட்டை திறக்க இங்கே  அபியின் போன் அவனை அழைத்தது.

கதவை திறந்தவரை பார்த்தவன் அங்கிள் உள்ளே  போங்கபோன் பேசிவிட்டு வரேன் என்றவன் போனை ஆன் செய்ய

டேய் அண்ணா.. என ஆர்பாட்டமாய் தாரிகாவின் குரல் கேட்டது..

ஏய்.. வாலு நீ கத்தறதுல என்னுடைய  காது ஸ்பீக்கர்  போய்விடும் போல இருக்கு ஏன் இப்படி  கத்தறகாதை தேய்த்து  விட்டபடி பதில் கூற.. அவளோ..

சும்மா  பேச்ச மாத்தாதஇப்பதான்  அப்பாகிட்ட பேசினேன் அவர்தான்  சொன்னாங்க நீ பெட்டி படுக்கையை கட்டிட்டு அந்த  பொண்ணு  வீட்டுக்கே போயிட்டயாம். கேட்க்கும்  போதே எவ்வளவு  ஹேப்பியா இருக்கு தெரியுமா.. அத்தான்  எப்பவுமே உன்னபத்தி பேசும் போது சொல்லுவாங்க…  கல்யாணமே வேணாம்ன்னு சொல்லற இந்த  மாதிரி  பசங்க விழுந்தா தலைகுப்புற விழுவாங்க அப்படின்னு.. அதே மாதிரி  நடந்துக்கறடா

ஏய்நான் எப்ப சொன்னேன் கல்யாணம் வேணாம்ன்னு…. இப்போதைக்கு வேணாம்னேன் அவ்வளவுதான்ஆக டைம் போகலைனா என்ன  தான்
கழுவி ஊத்தறிங்க ரெண்டு  பேரும் அப்படித்தானே..

சேச்சே அத இவ்வளவு பப்லிக்கா ஆமாம்ன்னு சொல்வனா

அவளது பதில்  கேட்டு  சிரித்தவன் சரி மச்சான்  எங்கே

இவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்ப தான்  வெளிய புறப்பட்டு  போணாங்கஅப்புறம்  அண்ணா  நான்  சீக்கிரமே  அங்கே வரலாம்ல உன்னோட கல்யாணத்துக்கு

அதுக்கு்  பொண்ணு சம்மதிக்கணுமே இந்த  நிமிஷம்  வரை  மூஞ்சை தூக்கி  வச்சிட்டு சண்டை போட்டுவிட்டு இருக்கறாபத்து நாள் தங்க போறேன்னதுக்கே இந்த  பாடு.. நான்  தான்  உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா கல்ல எடுத்து  தலையில போட்டாலும் போடுவாஆனா இவ கூட வம்பிழுக்கறது கூட ஒரு மாதிரி  நல்லா  தான்  இருக்கு. அவ கூட இருந்தா நேரம் போறதே தெரியலை தெரியுமா..

அண்ணா  டேய் உனக்கு  முத்தி போச்சிடா. நான்  வைக்கிறேன் நீ சொன்னத அப்படியே அம்மாகிட்ட சொல்ல போறேன்.

தாரு செல்லம்  எதையாவது  உளரி
வைக்காதடாஇதையே சொல்லி  அம்மா  ரொம்ப  கிண்டல் பண்ணுவாங்க

அதுசொல்ல முடியாதுன்ணா என்னுடைய  மூட பொறுத்துபை வைக்கிறேன் என்றபடி கட் செய்ய இவனும் குடோனிற்குல் நுழைந்தான்.
சற்று  நேரத்திற்கெல்லாம் மணல் எடுத்து  செல்ல வண்டி வர வேகவேகமாக  வேலை நடந்தது
சற்று  நேரத்தில்  சல்லி கற்கள் இறக்க வாகனம் வர இரண்டு  மணிவரை நேரம் போனதே தெரியவில்லை
அதற்குல்லாகவே இரண்டு  முறை போன் செய்திருந்தாள் பனிமலர் மூன்றாவது  முறை போன் அடிக்கவும் நேரம் பார்த்தவர் அபி கிளம்பலாம் ரொம்ப  நேரம் ஆயிடுச்சி.

அபிக்கு உண்மையிலேயே  மலரை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது தந்தை வர தாமதமானதும்
அவரை அழைத்தவள் படபடவென பொறிந்து கொண்டிருந்தாள். இன்னும்  எவ்வளவு  நேரம்  ஆகும்அப்படி சாப்பிடாம யாருக்கு  சம்பாதிக்க சொன்னா..உடம்புக்கு ஏதாவது வந்ததின்னாநமக்கு வயசு குறையல புரியுதா…  கிளம்பி  வாங்கஇவன் கூட இருப்பது அவளுக்கு  தெரியவில்லைஅவரது போனில் சத்தம்  நன்றாகவே கேட்டது.

இவன்புறம் திரும்பியவர் ஸாரி  அபிதினமும்  ஒரு  மணிக்கு  வீட்டுக்கு  கிளம்பிடுவேன் நீ இருக்கவும் பேசிட்டே இருந்துட்டேன் வா போகலாம்வீட்டுக்கு  போனபிறகும் அமைதியாய் சாப்பிட எடுத்து  வைத்தவள் இவனிடம்  ஒரு  வார்த்தை  கூட பேசவில்லைகாலையில்  அவனிடம் பேசியது அதிகபடியோ என்ன உணர ஆரம்பித்து  இருந்தாள்.

காலையில்  இவள்பேசிக்கொண்டு இருந்த போதே அபியின் தகப்பனார்  இவளது தந்தையிடம்  பேசிவிட்டு  இவனிடம் பேசியதை கேட்டுக்கொண்டு  இருந்தாள். பத்து நாள் தானே  சொடக்கு அடிக்கும் நேரத்தில்  நாட்கள் விரைந்தோடி விடும். மறுபடியும்  பழைய நாட்கள் போல அப்பாவும் நானும் தானே பார்த்து  கொள்ளலாம் என நினைத்திருந்தாள்இந்த  தீர்மானம்  இரவுக்குல் மாறிவிடப்போவதை அப்போது  உணரவில்லை.

அப்போது  மட்டும்  அல்ல மாலையில்  காபி கொடுத்த  போதும் எந்த  ஒரு
பேச்சும் இல்லாமல் அமைதியாக நகர்ந்தது நேரம்

இரவு உணவு தயாரிக்க ரெடி ஆன போது பிரச்சனை  ஸ்டார்ட் ஆகியது.
மதுசூதனனை அழைத்தபடி அபிநந்தன் அங்கிள் நைட்க்கு நான்  டிபன் செய்யறேன். சப்பாத்தி அன்டு வெஜ்குருமா சரியா என்றபடி இவனும்
வந்து  நிற்கஏற்கனவே  சப்பாத்தி  மாவை பிசைந்து கொண்டிருந்த மலரை பார்த்தவன் மலர் நீ சப்பாத்தி  செஞ்சிடு குறுமா நான்  செய்யறேன் என்ன ஆரம்பித்தான்.

சதா எந்த நேரமும் தந்தையோடு பேசிக்கொண்டு  இருக்கும் மலருக்கு இவன் வந்த பிறகு பேசாதது கோபத்தை  ஏற்கனவே  ஏற்படுத்தி இருந்தது. யோசிக்காது பதில் கூறினாள்குறுமா வைப்பிங்கசரி அத யாரு சாப்பிடறது என

அபியும் ஏன் நீ மத்தியானம் வச்சத நான்  சாப்பிடலையா.. ஏதாவது  குறை சொன்னேனா..

என்ன  நானும்  இருக்கறவரைக்கும் சண்டை  போட கூடாதுன்னு பேசாமல் இருந்தா ரொம்ப  பேசறிங்க. குறுமாதான வைக்கணும் வைங்க என்றபடி நகர்ந்து  நின்றாள்.

குறுமாவுக்கு வேணும்ங்கற சாமான் எடுத்து தா மலர்.

ம்சரி

எடுத்த காய்கறிகளை ஒவ்வொன்றாய் வெட்டியபடிதிரும்பி அவளை பார்க்க தனக்கும் இதற்கும் சம்பந்தம்  இல்லாதது போல எங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அபி ஏதாவது  செய்டாஇப்படி  திரும்பி நின்னா ப்யூச்சருக்கு நல்லதில்லையேமெல்ல வம்பிழுக்க நினைத்தவன் அவளது முகத்தை  பார்த்தபடி பாட ஆரம்பித்தான்.

‘”மலரே மெளமா”  என ஆரம்பிக்க..

சாருக்கு  உடம்பு  எப்படியிருக்குஅப்பா பக்கத்துல இல்லைன்னா பாட்டு வருமாபிச்சிடுவேன். ஒழுங்காக வேலைய  பாருமரியாதை கொஞ்சமாய் குறைந்திருந்தது.

ஓய்என்ன  மிரட்டறயாஇதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.   என்னோட வாய் என்னோட பாட்டு என்னமோ இந்த  அம்மாவோட பேரை கூப்பிடறகாகவே பாடின  மாதிரி என்னா பில்டப்

சற்று நேரம் மறுபடியும்  இருவருக்கும்  விரும்பாத மெளனம் இருவருக்கும்  நடுவே  இருந்தது.மறுபடியும்  அபியே துவங்கினான். அப்புறம்மலரு..

கொஞ்சம்  சலிப்பாக என்ன  என்றவள் இப்போது  தான்  பார்த்தாள் அவன் காய்கறி வெட்டுவதை ஒரே சீராக நேர்த்தியாகபார்த்தவள் யோசிக்காது உண்மைய  சொல்லு நீ ஐடி பில்ட்டுல ஓர்க் பண்ணலதானநீ மும்பையில்  ரெஸ்டாரண்டுல தான் வேலை செய்யற..

ஏன் ரோட்டு கடையில் வேலை செய்யறேன்னு சொல்லேன்கேட்க இன்னும்  நல்லா இருக்கும்ல. ..

நல்லாதான் இருக்கும். உனக்கேத்த பர்பெக்ட் வேலை அதாதான் இருக்கும். பழையபடி பேச ஆரம்பித்து  இருந்தால் அவளையும் அறியாமல்..

எவ்வளவு  பேசற.. வாயே ஓயாம..  ஆமாம்  உனக்கு  பச்சை  கேரட் பிடிக்காதாம் அப்படியா.. உன்னோட அப்பாகிட்ட பேசும் போது சொன்னாங்க..

ஆமாம் சுத்தமான பிடிக்காது. சின்ன  வயதில் இருந்தே

அப்படியா அப்போ இத நீ சாப்பிட்டே ஆகணும் என்றவன் பொடியாக  வெட்டியிருந்த கேரட்டை ஓரு நிறைய எடுத்தவன்  இவள் கவனிக்கும் முன்னே இவளது தலைக்கு ஒரு கையை பிடித்தபடி வாய்க்குல் திணித்திருந்தான். ஒரு நிமிடத்தில்  அவனிடம் இருந்து திமிறி நகர்ந்தவள் வாயில் இருந்த கேரட்டை துப்பியபடி

எவ்வளவு  கொழுப்பு  இருந்தா என்ன  பிடிச்சி வச்சி என் வாய்க்குல்ல திணிச்சிருப்பமலரை யாருன்னு நினைச்ச என்கிட்ட சீண்டாத வரைக்கும் தான்  நான் நல்லவ.. வம்பு வச்சிகிட்ட என்னோட சுயரூபத்தை காட்டாம விட மாட்டைன். நீ காலிடா என்றவள் கைக்கு கிடைத்த காய்கறிகளை எடுத்து  அடிக்க ஆரம்பித்தாள்..  

இவள் ஓன்றை வீச பதிலுக்கு  அவன் ஓன்றை வீச யோசிக்காமல் தக்காளியை  எடுத்தவள்  கைகளில் உடைத்து அவன்  முகத்தில்  தேய்த்திருந்தாள் .

மலர் விட்டுடு என்கிட்ட வம்பு வைகாத
என்றவன் அவன் பங்குக்கு இரண்டை உடைத்து  தலையில் தேய்க்க
மலரோ அருகில் இருந்த கோதுமை மாவை ஒரு கையில் அள்ளி அவன் தலையில்  அபிஷேகம் செய்திருந்தாள்.

சில நிமிடத்தில்  சமையல் அறை தனது மொத்த அழகையிம் இழந்திருந்தது.
போராட்ட பூமி போல் காட்சி தர இப்போது  அபி அருகில்  இருந்த இரண்டு  முட்டையை எடுத்தவன் இவளை நோக்கி வர

வேண்டாம்  அபி எனக்கு  பச்ச முட்டை  ஸ்மெல் பிடிக்காது  என்னை  விட்டுடு

அப்படின்னா கட்டாயம் உடைக்கணுமே
என்றவன் தலையில்  ஒன்றை உடைக்க அப்பா என சத்தமாக அழைத்திருந்தாள். இவளது சத்தம்  கேட்டு  சமையலறைக்கு வந்தவர்
இருவரையும் பார்க்க

என்ன  இதுஎன்ன  செஞ்சு வச்சிருக்கறிங்க..

இவன்தான்  வம்பிழுத்தான்பா.. என மலரும்

அங்கிள் இவதான்  தலையில மாவ அள்ளி போட்டா என அவனும் ஒருவர்  மேல் ஒருவர் குற்றம் சொல்ல..
இருவரையும்  மாறி மாறி பார்த்தவருக்கு ஐந்து  வயது குழந்தை 
கொட்டி கவிழ்த்து  விட்டு மாற்றி மாற்றி குறை சொல்லுமே அது தான்  ஞாபகம் வந்தது.

நீங்க ரெண்டு  பேரும் சமைக்கவே வேண்டாம்நான்  கடையில போய்  வாங்கிட்டு வரேன்முதல்ல ரெண்டு  பேரும் போய் குளிங்கமுடியலமுதல்ல நாளைக்கு சமையல் பண்ணற அம்மாவ வரச்சொல்லறேன். இவங்க பஞ்ஞாயத்தை பார்க்கவே நேரம் போதாது போலயேவிட்டுட்டு போய் அரைமணி நேரம் இருக்குமா ரணகலம் பண்ணி வச்சிருக்கறாங்கஎன்றபடி நகர

முட்டை உடைஞ்ச ஸ்மெல்லில் முகத்தை  அஷ்டகோணலாய் வைத்திருந்தவளோ தலையில் இருந்ததை  ஒரு கையில் எடுத்தவள் இவனது அருகில்  வந்துஇவனது  தலை முடியை  கொத்தாய் பற்றியவள் அவனது தலையில் தனது கைகளில் இருந்ததை தேய்த்தபடி   போ
நீயும் இந்த ஸ்மெல்லோடஎன்றபடி வேகமாக  தனது குளியல் அறைக்குள்  சென்றிருந்தாள்.

சண்டைகள் தொடரும்

 

உருகாதே வெண்பனிமலரே_5

இரண்டு  பேருமே குளியல் முடித்து  வெளியில் வர.. இவனை பார்த்ததுமே அப்பா.. என மறுபடியும்  கத்த ஆரம்பித்தாள். இவள் என்ன  சொல்ல போகிறாள் என தெரிந்தவனோ அவளுக்கு  முன்பே அங்கிள் என சத்தமிட்டு இருந்தான்.

இப்ப  என்ன  பிரச்சனை  ரெண்டு  பேருக்கும்.. வந்து  சாப்பிடுங்கசாப்பிட்டதற்கு  அப்புறமா நானும்  வரேன் மூனுபேரும் சேர்ந்து  சமையல் ரூம்ப கிளின்  பண்ணலாம்.

அப்பாவயசு  பொண்ணு  இருக்கற இடத்துல இப்படி  தான்  டிரஸ் போடுவானா..நீங்க சொல்ல மாட்டிங்கலா..

அங்கிள் நானும் இதையே கேட்கலாம்ல.. நீ மட்டும்  என்ன  போட்டு இருக்கறவயசு பையன் இருக்கற இடத்துக்கு இப்படி டிரஸ் போட்டுட்டு வருவியா

யாருநீ  உனக்கு அங்கிள் வயசாகுது. நீ வயசு பையனா வெளியே  சொல்லாதசிரிக்க போறாங்க..

பாப்பா  இப்படியெல்லாம் பேச கூடாது. இதெல்லாம்  ஒரு பிரச்சனையாவந்து  சாப்பிடுங்க

அவள் போட்டு இருந்தது முட்டியை தாண்டிய சாட்ஸ் டீ சர்ட்…. அதே போல்
அவனும் ஷாட்ஸ் கையில்லா பனியன்
ஒன்று  என்ன  இவன் சற்று  உயரம் ஆதலால் முட்டியோடு நின்றிருந்தது.
அவனது சிவந்த  நிறத்திற்கு இன்னும்  எடுப்பாய் அழகாக தான்  இருந்தது.

அவனை முறைத்தபடி அப்பாஇப்ப சொல்லறது தான்  இவன் கிளம்பற வரைக்கும்  இது போல அரை குறையா டிரஸ் போட்டுவிட்டு என்
முன்னாடி வந்து  நிற்க கூடாது.

இதையே நானும்  சொல்லலாம்ல
பாத்ரூம்குல்ல யார்  இருக்கறாங்கன்னு தெரியாம பேச கூடாதுஅப்புறம்  மாவ தலையில கொட்ட கூடாது. முட்டையை தலையில் தேய்க்க கூடாது.

அத்தனையும்  நீ தான்  செஞ்சஓகே  வா. இனி பேசாதநீ செஞ்சதுக்கு பதில் நான்  செஞ்சிட்டுடேன். முடிஞ்சது. திரும்ப ஆரம்பிக்க கூடாதுவாங்கப்பா என்றபடி அழைத்து  சென்றாள்.

அமைதியாக  சாப்பிட்டு முடிக்க எதுவும்  சொல்லாமல் சமையல் அறையை சரி செய்ய மலர் சென்றிருந்தாள். அவளை தொடர்ந்து  வந்த மதுசூதனனை பார்த்து  அப்பாநீங்க  எதுவும்  செய்ய வேண்டாம் நானே பார்த்துக்கறேன் இப்படி  ஓரமாக உட்காருங்கபா
எப்படியும்  அவரை அவள்  வேலை எதையும்  செய்ய விடுவதில்லை  நீண்ட நாட்களாய் இன்றும் அதே போல் அமரபின்னோடு வந்த அபியோ அணைத்து  பாத்திரங்களையும் எடுத்து  கழுவ ஆரம்பித்தான்சமையல் மேடையை சரி செய்து அணைத்தையும் ஒதுங்க வைக்கவும் இவள் தரையை  துடைத்து  முடிக்கவும் சரியாக  இருந்தது.

எதுவும் பேசாமல்  மலரின் முகம் பார்க்க அவள் கோபத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது நிறைய யோசிக்க வேண்டியது இருந்தது அவனுக்கு அமைதியாக  வெளியேறியவன் நேராக  மொட்டை  மாடியில் தஞ்சம் அடைந்திருந்தான்.
பெளர்ணமிக்கு  சில நாட்கள் இருக்க நல்ல வெளிச்சமாய் இருந்தது.

சுற்றிலும்  பார்க்க தோட்டத்தில்  இருந்து ஜாதி பூ செடியை கொடியாக மாடி வரை இழுத்து  விட்டிருந்தனர். பூக்களின்  சீசன் ஆதலால் காற்றோடு சேர்த்து பூவின் வாசம் அவனின் குழப்பமான  மனதை அமைதி படுத்தியது. அமைதியாக  ஓரமாக அமர்ந்தவன் ஹெட்செட்டை காதில் மாட்டியவன் தனது மொபைலில் தனக்கு  பிடித்த பாடலை போட்டபடி கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

பாடல்கள் இனிமையாய் காதில் ஒலிக்க மூளை தன் போக்கில் யோசித்து  கொண்டிருந்தது. வந்ததிலிருந்து இந்த  நிமிடம்  நடந்த சண்டை வரை யோசித்தவனுக்கு தனது செயலின் தவறு நன்றாக  புரிந்தது. தொடர்ந்து  இது போல் சண்டையிட்டு  கொண்டிருந்தால் இந்த  திருமணம்  நடக்க  வாய்ப்பு  குறைவதை உணர்ந்தவன். இனி எங்காரணம்  கொண்டும் சண்டையிட கூடாது தீர்மாணித்தபடி  இருந்தான்.

அதே நேரம் இரவு மலரோ தனக்கும் தந்தைக்கும் பால் காய்ச்சியவள் டம்ளரில் ஊற்றியபடி தந்தையின்  அருகில்  அமர்ந்திருந்தாள். இவளது குழப்ப முகத்தை  பார்த்தவர்

ஸாரிமா அவன் இங்கே  தங்கறது உனக்கு  பிடிக்கலையாநாளைக்கு  வேணும்னா போக சொல்லிடறேன்.

இல்லைபா.. வேண்டாம்பத்து  நாள் தங்க சொல்லிட்டு போன்னு சொன்னா நல்லா  இருக்காதுநீங்க உங்க ப்ரெண்டுக்கு என்ன பதில் சொல்லுவிங்கஇங்கேயே இருக்கட்டும்  எனக்கு  எந்த  பிரச்சனையும் இல்லை.

சரிடா.. அவனுக்கும் ஒரு டம்ளர் பால் குடுத்திடுபொட்டை மாடி பக்கம்  போறத பார்த்தேன்.

சரிபா கொடுத்துடறேன் என்றவள் அவனுக்கானதை எடுத்தபடி மாடிப்படி ஏறினாள். அங்கே  அவன் அமர்ந்திருந்த தோற்றம்  இவன் தான்  அங்கு  அத்தனை ரகளை செய்தான் என்றால் யாரும்  நம்மி இருக்க மாட்டார்கள்..இதமான காற்றா நிலவு வெளிச்சமாக ஏதோ ஒன்று அவனை மோனநிலையில் ஆழ்த்தி இருந்தது.

இவளும் தன்னை  அறியாமல்  அவனது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். கண்கள் மூடி இருக்க காற்றில் லேசாக கலைந்தாடிய தலைகேசம்இருக்கம் குறைந்து முகத்தில் தெரிந்த அமைதி அவனை இளமையாய் இன்னும் அழகாய் காட்டியது.தானும் அவரையே பார்ப்பதை உணர்ந்தவள் அவனின் பெயர் சொல்லி அழைத்தாள்.அவளது சத்தம்  மட்டுமே  தனியாய் கேட்டது.

அவன் கண் திறப்பது போல் தெரியவில்லை..


அவன் வேறு உலகத்தில்  இருந்தான். இம்முறை  அவன்  அருகில்  போனவள் அபிஎன்றபடி தோள் தொட்டு அழைக்கவும் கண் திறந்தவன் வேகமாக  எழுந்தான்.

ஸாரி  வந்து  ரொம்ப நேரம் ஆச்சா நான்  கவனிக்கல

இல்லல்ல இப்ப தான்  வந்தேன். நீங்க  உட்காருங்க என்றவள் கையில்  இருந்ததை அவன்புறம்  நீட்ட

தேங்க்ஸ் என்றபடி வாங்கியவன்  இவள் புறம் பார்த்து  ஏதாவது  வேலை இருக்குதா மலர்..

இல்ல.. எல்லாம்  முடிஞ்சதுஏன்..

கொஞ்சம்  நேரம் இப்படி  உட்காரு மலர். நிலா வெளிச்சம்  இந்த  குளுமை இந்த காற்று நல்லா இருக்கு ஏனோ ரசித்து சொன்னதை கேட்டவள் மறுமொழி பேசாமல் சற்று  நகர்ந்து  அமர்ந்தாள்இருவருக்கும்  ஒன்றும்  பேச தோன்றவில்லை  ஆனாலும்  அந்த  நிமிடத்தை இருவருமே ரசித்தனர். சற்று  நேரம் செல்லவும் அபி ..மலரிடம் திரும்பி அமர்ந்தவன்.

ஸாரி  மலர் உன்ன  ஹாட் பண்ணறமாதிரி  ஏதாவது  பேசியிருந்தாஸாரி இனிமேல் இத மாதிரி  பேச மாட்டேன். உன்னோடது புரியுது…. அப்பாவே உலகம் அப்படின்னு இருந்துட்டபுதுசா யாராவது வந்தா ஏற்றுக்கொள்ள முடியாது தான்இனிமேல்  உன் கிட்ட வம்பு  இழுக்க மாட்டேன்அதிகபட்சம் இன்னும்  ஒரு  வாரம்அப்புறம்  ஊருக்கு போயிடுவேன்.

இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை  மலர்இவன் ஸாரி கேட்பான் என்பதைஅவனும் வருந்துகிறான்..
அமைதியாக  கேட்டிருந்தவள். நானும் ஸாரி  அபிஇவ்வளவு  மோசமா நானும்  நடந்து  இருக்க கூடாது

இல்ல . உன் மேல தப்பு இல்ல. நான்  தான்  கேரட்டை எடுத்துஸாரி  என்னாலதான் எல்லாம்உன்னை பார்த்தா தெரியாத பொண்ணுங்கற ப்வில் வரலரொம்ப  வருஷம்  கூட இருந்தமாதிரிஈசியா சண்டை  போட வருது.

அவளுக்கும் அது போல உணர்வு  தான்  தோன்றுகிறதோ.. தன்னிடமே கேள்வி கேட்டவள். . பேச்சை மாற்ற வேண்டி உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கறிங்க அபி.. ஸாரி உங்க அப்பா அப்பாவோட ப்ரெண்டு தான்எனக்கு  அவ்வளவா தெரியாது.

அதனால என்ன  மலர் எங்க வீட்ல நான்  தான்  முதல் பையன். எனக்கு  கீழே என்னுடைய  சிஸ்டர் பேரு தாரிகா அவளோட கணவர் ரஞ்சன் அப்புறம்  குட்டி செல்லம்  பூஜாஅப்பா பேருமூர்த்தி  அம்மா கோமதி,முக்கியமான ஆள் எங்கே பாட்டி வேதவல்லிஅவ்வளவு  தான்

எனக்கு  மும்பையில்  வேலைசிஸ்டர்  டெல்லியில்  இருக்கறாஅவளுக்கும் எனக்கும்  டெலிபதி செமையா ஓர்க்  ஆகும் தெரியுமா

எப்படி

எப்படின்னாநான்  அவள எப்ப நினைச்சாலும் அவள் எனக்கு  உடனே கால் பண்ணிடுவா தெரியுமா
இப்போ அவள பத்தி பேசறோம்ல்ல இன்னும்  ரெண்டு  நிமிஷத்தில அவள் என்ன போன்ல  கூப்பிடுவா பாரேன்.

பொய்பொய் சொல்லறிங்க. நான்  நம்ப மாட்டேன்.

நிஜமா மலர் வேணும்னா இப்ப போன் வரும் பாருசொன்னது  போலவே போன் வந்தது தாரிகாவிடம் இருந்து

எஸ் போன் வந்துடுச்சி இரு என்றவன் கொஞ்சம்  நகர்ந்து அட்டென் செய்யவழக்கம் போல சத்தமாக அவளது குரல் காதில் பாய்ந்தது.

டேய் அண்ணாஎதுக்குடா  போன் பண்ண சொல்லி மெசேஜ் பண்ணினஎங்க இருக்கற நீ

மொட்டை மாடியில்  உன்னோட அண்ணி என சொல்ல வந்தவன் நிறுத்தி மலர் கூட என  முடித்தான்.

டேய் அண்ணா  இதெல்லாம்  சரியில்லை. ரொம்ப  வேகமா போறதூங்கறவள எழுப்பி  கடுபேத்தாத சரியா

தாருமா நான் உன்னை ஆகா ஓகோ புகழ்ந்து இருக்கறேன். என்னை அதல பாதாளத்துல தள்ளிடாத என்றவன் நிஜமாடாஅவள் கிட்ட பேசறையா.. போன் வரவும் நகர்ந்து  இருந்து பேசியவன் இவள் அருகில் வந்து  போனை நீட்டினான்.

என்னுடைய  சிஸ்டர்  கிட்ட பேசு மலர்

அவள் பேசுவதா வேண்டாமா என தயங்கி கொண்டு  இருக்கும் போதே அவளது கைகளில் தந்தவன் கீழே அப்பாகிட்ட பேசிட்டு இருக்கிறேன்  பேசிட்டு வா என இறங்கி  இருந்தான்.

ஹலோ என ஆரம்பித்தது தான்  அடுத்த  சில நிமிடத்திலேயே இருவரும் நெருங்கி இருந்தனர். அவ்வளவு  இனிமையாக பேசினாள் தாரிகா சின்ன  சின்ன  விஷயத்தை  பற்றி  கேட்கும் போதும் சொல்லும் போதும் அவ்வளவு  ரசனை இழையோடியது அவளது பேச்சில்

அண்ணா  அவன் சரியான ப்ராடு நிறைய  பொய் சொல்லுவான். உங்கள் மிரட்டினா சொல்லுங்க நான்  அவன்கிட்ட  பேசிக்கறேன்.

அதெல்லாம்  இல்லபிரச்சனை  ஒன்றும்  இல்ல

சரி உங்களோட போன் நம்பர் என்ன..
நம்பர் தாங்க ப்ரீயா இருக்கும் போது பேசலாம். இருவரும் தங்களது செல்பேசி நம்பர்களை பரிமாறி கொண்டனர்.

தாரிகாவோ அண்ணனிடம் துவங்கி
நண்பர்கள், காலேஜ் எனக்கு சுழன்று  இறுதியில் பூஜாவின்  சேஷ்டைகளை சொல்லி சிரிக்க வைத்து பேச்சை முடிக்க அரை மணி நேரம் தாண்டியிருந்தது. அதே சிரிப்போடு கைகளில் மொபைலை தாங்கியபடி இறங்கி வீட்டிற்குள்  வந்தவளை பார்த்த போது அபிக்கும் நிறைவாய் இருந்தது.

தேங்க்ஸ் அபிஉங்க சிஸ்டர்  சோ ஸ்விட்.. பேசாமல் இருந்து இருந்தா நல்ல ப்ரெண்ட மிஸ் பண்ணி இருப்பேன் கூறியவள் அவனது கைகளில் போனை தந்து விட்டு  குட் நைட்பாகுட் நைட்  அபி என்றபடி தனது அறைக்குள்  நுழைந்தாள்.

அபி தனது அறைக்கு  தூங்க செல்ல சென்றவன் நிம்மதியாக தூங்கினான். இனி மேல் பயப்பட தேவையில்லை என்கிற அளவிற்கு  நிம்மதியாக இருந்தது.

அங்கே மலரும் படுத்த உடனே தூங்கி இருந்தாள். கனவு கூட வந்தது அதே மாடியில் வெண்ணிலா வானில் காய.. ஜாதிமல்லியின் வாசனை  முகத்தில் அலைமோத .. கூடவே சில பூக்களும் காற்றின் வேகத்தில்  இவளது மேல் வந்து விழுந்தது. ஏனோ ஒரு மோன நிலைஒரு வித்தியாசமான  மயக்கம்கண்கள் கூட லேசாக சுகமாய் மூடியபடி  இருந்ததோ….என்ன  அவளது மனநிலை என உணராத அளவிற்கு  நின்றிருக்கமிக நெருக்கமாக அவளது மயக்கத்தை  மேலும் அதிக படுத்துவது போல அவளது  கைகோர்த்தபடி  அவளை முழுவதுமாய் ரசித்தபடி அபி

தூங்கிக்கொண்டு இருந்தவள் சட்டென எழுந்து  அமர்ந்தாள். முகம் முழுவதும் லேசாக வியர்த்து இருந்தது நேரம் பார்க்க மூன்று  மணியை தொட்டு இருந்தது. அவசரமாக தண்ணீர்  எடுத்து  குடித்தவள்கொஞ்ச நேரம்அவன் கூட தனியா  இருந்தது கனவு தப்பு தப்பா வருது.
நியாயமா சண்டை  போட்டது தானே கனவில் வரணும் நினைத்தவள் ஒன்றை மறந்து  விட்டாள் ஆழ்மனதில் பதிந்தது தான்  கனவாய் வரும் என்பதை

உருகாதே!!!!

 

உருகாதே.. வெண்பனிமலரே_6

அடுத்த  நாள் காலை  எழுந்து  வரும் போதே சமையலறையில்  நின்றிருந்தான் அபி..ஸாரி நேற்று  செஞ்சதுக்கு பிராய்ச்சித்தமாகாலையில் என்னோட டிபன்குறுமா ரெடி பண்ணிட்டேன் டேஸ்ட் பண்ணி பார்க்கறயா.. நேற்று பிசைஞ்ச மாவு பிரிஜ்ல இருந்து எடுத்துட்டேன்கூறிய அபியை பார்த்தவளுக்கு  நேற்றய கோபம் துளியும் இல்லைஇன்று அவனிடம் கொஞ்சமாய் வம்பிழுக்க தோன்றியது.

குட்மானிங் என ஆரம்பித்தவள் சாரை தான்  உலக சுற்றுலா துறை  அமைச்சரா பிரமோட் பண்ணி இருக்கறாங்களாசாருக்கு  ஊர் சுத்த பிடிக்குமோநம்ம பிரதமர் மாதிரி

என்னடா காலையிலேயா என நினைத்தவன் இவளை திரும்பி பார்க்கஅவள் கண்களில் இருந்தது
முழுக்க முழுக்க கிண்டல்  மட்டுமே..

கையில்  கலக்கி கொண்டிருந்த காபியை இவளிடம் நீட்டியவன்சிபிஐ மேடம் எதை கண்டு பிடிச்சிங்க..

பேஸ்புக்புல்லா உன்னோட ஊர் சுற்றின ப்ரோக்ராம் தான்  இருக்கு அதுதான்  கேட்டேன். நீ சரியான  சோப்பு டப்பா போல..

நீ முழுசா படிக்கலையா.. ஊரோட பேர் மட்டும்  இல்லைஅந்தந்த ஊர்ல என்ன  ஸ்பெஷல்  போக வர்ற ஆகிற செலவு எல்லாம்  டிட்டெய்ல்லா கொடுத்து இருக்கிறேன். நிறைய பேருக்கு  யூஸ் ஆகும் தெரியுமா.. ஆமாம் நீ ப்ரெண்ட் லிஸ்ட் இருக்கிறாயா என்னசொல்லவே இல்ல..

இருக்கிறேன் ஆனா என்ன  பேர்ல இருக்கறேன்னு சொல்ல மாட்டேன்முடிஞ்சா கண்டு பிடி

பேக் ஐடி.. தெளிவாத்தான் இருக்கற.. நான்  கம்ப்யூட்டர்  இன்ஜினியர்மா.. ரெட்டே  செக்கன்ட் கண்டு பிடிச்சிடுவேன்.

பேசாதடிரை பண்ணுநேற்றைய கோபம் அவன் மேல் அவளுக்கு  தற்சமயம் இல்லை . இருவருக்கும்  நடுவே மெல்லிய நட்பு புதியதாய் உருவாகி இருந்தது .

தனது மொபைலை எடுத்தவன்கொஞ்சம்  கஷ்டம்  தான்  போல.. ஆயிரம்  பேருக்கு  மேல இருக்கறாங்கஇதோ பிடிச்சிட்டேன் என அவள் முகத்தை  பார்த்தவன் ரொம்ப  அறிவாளி மாதிரி  தெரியலை. இது நீதான்என்னது சன் பிளவரா

இல்லை  அது ஸ்னோ ப்ளவர்

அவள் சொன்னதை கேட்டவர் சிரிக்க ஆரம்பித்தான். ஆனாலும் நீ அல்டிமேட் ஸ்னோ ப்ளவர்

அபி வேண்டாம்ஓவரா சிரிக்காத

ஒரு பேரை ஒழுங்கா வைக்க தெரியுதா….இத கண்டு வேற பிடிக்கணுமா

கண்களும் சேர்ந்து  அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு அவனிடம் கோபமாக கூட பேச முடியவில்லை..அப்பா சொன்னது  சரிதான் இவன் சிரிச்சா கண்ணும்கூடவே சிரிக்குது..சிரித்த முகம்  அவளிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்கியது முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

எட்டு முப்பது  மணிக்கு  போன் வர பரபரப்பாக காணப்பட்டாள் மலர். இயல்பாக இல்லாமல் சற்றே  பதட்டமாக அவளையே கவனித்தவன்..

என்ன  ஆச்சு.. ஏன் இவ்வளவு பதட்டம்..ஏதாவது  பிரச்சனையா .. மலரிடம் கேட்க ..

இப்பதான் கூப்பிட்டு சொன்னாங்க..
இன்றைக்கு  லைசென்சுக்கு ஆர்டிஓ
ஆபிஸ் வரச்சொல்லி  இருக்கறாங்க

அதுக்கென்ன இப்போபதட்டபட எதுவுமே  இல்லையே

நான்  இன்னும்  கார் ஓட்ட  சரியா கத்துக்கலஅதுக்குல்ல கூப்பிடறாங்க.

பயமாக இருக்கா.. பயப்படாத .. தைரியமாக ஓட்டு  அது ஈசி தான்கிடைச்சிடும். நான்  வேணும்னா கூட வரவா ..

வேண்டாம் நானே பார்த்துக்கறேன்.கொஞ்சம்  நம்பிக்கை  வந்தவலாய்தேங்க்யூ என்றபடி புறப்பட்டாள்அவள் புறப்படவும் மதுசூதனனோடு இவனும் குடோனுக்கு  சென்றிருந்தான்.

நேற்று இரவே சமைக்கும் பெண்மணியை வரச்சொல்லி இருந்ததால் பத்து  மணிக்கு இவர்களது வீட்டு சமையல் பொறுப்பை  ஏற்றிருந்தார்.

மதியம்  இரண்டு  மணிக்கு சாப்பிட வர.. இவர்கள்  பார்த்தது மலரின்  அழுது வீங்கிய முகத்தைஹால் சோபாவில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தாள். மதுசூதனன் ஒரு என்ன  ஆச்சுமா என பதற மறுபுறம்  அபி  தவித்து  நின்றான்.

மலர் எழுந்திரு என ஒருபுறம்  மதுசூதனன் எழுப்ப கையில் நீருடன்  அபி நின்றிருந்தான். மலர் எழுந்திருச்சி முதல்ல தண்ணீர்  குடி மத்தத பிறகு பேசிக்கலாம்.

சமையற்கார அம்மாவோ வந்து  அரைமணி நேரம் ஆச்சு வந்த நேரத்தில்  இருந்து பாப்பா அழுதிட்டேதான் இருக்கு. என்ன  சொல்லியும் கேட்கலை..

மலர் என்னடா ஏன் அழற

அப்பாஎன ஆரம்பித்து  லைசென்ஸ்  கிடைக்கலபாஅவள் சொன்ன டோனை கேட்வனுக்கு சிரிக்கதான் தோன்றியது.

மலர் இதுக்கா அழறஇது சின்ன  விஷயம் இந்த  தடவை இல்லாட்டி  அடுத்த  தடவை வாங்கிகலாம். இதுக்காக அழுவாங்களா.. நானும்  உன்னை என்னவோ பெருசா பில்டப் பண்ணி வச்சிருந்தா நீ இப்படி  அழுது அசிங்கப்படுத்தற

உனக்கு  தெரியாது. நான்  இது வரை எதிலேயும் தோற்றதே இல்ல. இது தான்  பஸ்ட்.

இது பெரிய  விஷயமே இல்லைநான்  பஸ்ட் டைம் போகும் போது பயத்துல ஓடி வந்துவிட்டேன் தெரியுமா நீ வேணும்னா தாரு கிட்ட கேட்டு பாரு நான்  லைசென்ஸ்  வாங்கினத கதை கதையா சொல்லுவா.. உன்னொட டிரைனி  உனக்கு  சரியா சொல்லி தரல.. அதனால உன்னால சரியா பர்பாம் பண்ண வரல. இது தான நிஜம். மறுபடியும்  தான்  பத்து  நாளுக்குல்ல  லைசென்ஸ்  போடலாமே. அடுத்த  தடவை வாங்கிடலாம்

இல்ல இனி அந்த  ஆளுகிட்ட கத்துக்க நான்  போக மாட்டேன். ஒழுங்கா சொல்லியே தரல. முழுசா கால்மணி நேரம் கூட ஓட்ட விடறது இல்லை.

ஓகே  போக வேண்டாம். அதுக்காக இப்படி தான் அழுவயா..  நான்  வேணும்னா உனக்கு சொல்லி  தரவா..

இப்பதான் பயந்து  ஓடி வந்தேன்னு சொன்னஅப்ப அது பொய்யா..

அது என்னுடைய  பத்தொன்பதாவது வயசுல..  அப்ப நான் லைசென்ஸ் வாங்க போன இடத்துல எட்டு போடற ப்ளேஸ் ரொம்ப குறுகலா இருந்தது. பக்கத்தில்  பெரிய  மதில் சுவர் வேற.. முதல் ஆள் எட்டு போடறேன்னு மதில்ல போய் மோதினான் பாருஅதுக்கப்புறம் தைரியம் வரும்ங்கற.. ஓடியே வந்துட்டைன் ஆனா..என்னோட சிஸ்டருக்கு கார் ஓட்ட நான்  தான்  கத்துக்கொடுத்தேன். டெல்லியில்  எவ்வளவு  அழகா வண்டி ஓட்டறா தெரியுமா..  என்ன என்மேல உனக்கு  நம்பிக்கை இல்லையா..நீ வேணா அவகிட்ட  பேசறையா.

இப்படியே பேச முடியாது. குரல் தெரிஞ்சிடும் அழுதிருக்கறேன்னு..
வேண்டாம்  நான்  அப்புறம்  பேசறேன் இன்னும்  அழுகை மிச்சம்  இருந்தது.

சரி முகம் கழுகிட்டு வா முதல்ல…  அப்புறம் கார் ஓட்ட எப்ப சொல்லி தர…  இப்ப  சாப்பிடதும் கிளம்பலாமா..

இப்பவாகேட்டவளுக்கே சந்தேகம் தான்  இவன் நிஜமாகவே  சொல்லி  தருவானா

ஆமாம்  உனக்கு  எந்த  அளவுக்கு  தெரியும்ங்கறத பார்த்தா தானே அதுக்கேத்தமாதிரி சொல்லி  தர முடியும். அங்கிள் நீங்களும் வாங்கசும்மா  கொஞ்ச  தூரம் சின்ன டிரைவ்..

ஆமாம்டா.. வா நானும் வரேன்.மூன்று  மணிக்கு  மூவரும் கிளம்பி  இருந்தனர். வாசலில் வண்டியை நிறுத்தியவன் இவளிடம் வாடிரைவிங் சீட்ல உட்காருஎங்கே வண்டியை ஸ்டார்ட் பண்ணு பார்க்கலாம்வண்டியை  ஸ்டார்ட்  செய்தவள் கிளச்சை விட வண்டியை குழுங்கி நின்றிருந்தது.

ஸ்டாடிங் டிரபில்

ஆமாம்  அங்கேயும் இப்படி தான்  ஆச்சு. அந்த  ஆள் சரியான  சிடுமூஞ்சி எதுவுமே சொல்லாமல் இறக்கி விட்டுட்டான்இறங்கும் போது டிரைனிங் பத்தாது அப்படின்னு சொல்லிட்டான். அசிங்கமான போச்சு  தெரியுமா..

பார்த்தேன்.. ஒரு மணி நேரம்  லேட்டா வீட்டுக்கு  வந்திருந்தால் வீடு கண்ணீர்ல முழ்கி இருக்கும்நல்ல  வேளை சீக்கிரம்  வந்து  வீட்டை காப்பாத்திட்டேன். அங்கிள் நிஜம் தானே..

என்ன  கிண்டல்  பண்ணறத விட்டுட்டு
ஒழுங்கா சொல்லி தா

ஆப் கிளச்ச  கரைக்டா பிடிஅவ்வளவுதான்  மூவ் பண்ணு
எஸ்.. இப்போ கியரை சேன்ஜ் பண்ணுபதட்டபடாதஅக்ஸிலேட்டர வேகமா கொடுக்காத.. மிடியம் ஸ்பீடு போதும். ஸ்டேயரிங்க கரெக்டா பிடிஇங்க அங்கே  திருப்பாத .. அவனுடைய சொல்வதை  ஒவ்வொன்றையும் கேட்டு  அதன் படி செய்து கொண்டிருந்தாள். சற்று  நேரத்தில்  எந்த  பயமும்  இன்றி வண்டி ஓட்டியவள் ஓரமாக நிறுத்தியபட
இவன் புறம் திரும்பி வீட்டுக்கு  போகலாமா என கேட்கநேரம் பார்த்தவன் நான்கை நெருங்கிக் கொண்டு  இருந்தது.

மலர் இங்கேயிருந்து மருதமலை கோவில்  பக்கம்தான் போகலாமா என கேட்கஇவள் இவளது தந்தையின்  முகம் பார்த்தாள்.

போறதுன்னா போகலாம்டா. நாம கோவிலுக்கு  போயும் ரொம்ப  நாள் ஆச்சே

வண்டியை  மறுபடியும்  ஸ்டாட் செய்தவள் மருதமலையின் பாதையில்  வண்டியை  செல்லுத்தினாள். சின்ன  சின்ன  திருத்தங்களை சொல்லியபடி வந்தவன் அடிவாரம் வருகையில் வண்டியை  நிறுத்தியவளை பார்த்து

என்ன  நிப்பாட்டியாச்சு.. இவ்வளவு  தூரம் ஓட்டினமாதிரி தான்  வண்டியை மேல விடு  பயப்படாத.. நான்  கூடதானே இருக்கிறேன்.

இல்லை அபி. இந்த  மலையை பார்த்தாலே பயமா இருக்கு. நீங்க  பக்கத்தில்  இருந்ததால தான்  இவ்வளவு  தூரம்  ஓட்டினேன். போதும்  நீங்க  வந்து ஓட்டுங்க..நான்  இன்னோரு நாள் வேணும்னா ஓட்டி காட்டறேன் .

டிரைவிங்னா எல்லாம்  தானே ஓட்டணும். இன்னோரு நாள் இத மாதிரி  அமையுமாநீ வண்டியை எடு.

ஆமாம்டா வண்டியை  மேல விடு. அபி பக்கத்தில்  தானே இருக்கிறான். எம் பொண்ணு  தைரியசாலி.. ஓட்டுவா

அப்பா என்றவள் யோசிக்காது மறுபடியும்  வண்டியை  ஓட்டினாள். கொஞ்சம்  படபடப்பு, பயம் மொத்த கலவையாய் மனம் பிரதிபளிக்க
சரியாக வண்டியை  அதனது பார்ங்கில் நிறுத்தினாள்.

சூப்பர்மலர். அவ்வளவுதான்

எங்கே அவ்வளவுதான்  கையெல்லாம் நடுங்குது பாருங்க  என கையை நீட்ட உண்மையிலேயே  கை நடுங்கிக் கொண்டு  இருந்தது.

அவளது கைகளை தனது ஒரு கையில் வைத்தபடி மறுகையால் பற்றியவன் ரிலாக்ஸ் மலர்என கூற அவனது கதகதப்பான கை  அந்த நிமிடம் நானிருக்கிறேன் உனக்கு என கூறுவது போல் தோன்றபயம் விலக பாதுகாப்பு  உணர்வோடு நிம்மதி தோன்றியது.

இவளோடு மதுசூதனனும் இறங்க படி ஏற ஆரம்பித்தனர். மாலை நேரத்தில் இதமான காற்று  கூடவே கோவிலிலும் கூட்டம்  அதிகமில்லாத மாலை வேளைநிம்மதியான  தெய்வ தரிசனம்  மூவருக்கும்  கிடைத்தது.

அர்ச்சனை  பொருட்களை பெற்று  கொண்டவர்கள் கோவிலை மெதுவாக வலம்வரஅடுத்ததாக பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கு  செல்ல படிகளில் இறங்கினர். முன்பாக மவர் வேகமாக  நடக்க இவளுக்கு  சற்று  தொலைவில்



மதுசூதனனும் அபியும் பேசியபடி வந்து  கொண்டிருந்தனர். அது மழைக்காலம்  ஆதலால் சிறு ஓடை உற்பத்தி  ஆகி  பாம்பாட்டிசித்தர் கோவிலுக்கு  செல்லும்  வழியில் தண்ணீர்  சென்று  கொண்டிருந்தது.
பெறும்பாலும் வரண்டிருக்கஅதிக மழை பொழியும்  நாட்களில்  தண்ணீர்  வரத்து  ஒரளவுக்கு  இருக்கும்.

இதை பார்த்தவன் அருகில்  சென்று  பார்க்க  நினைக்க.. மலரோ சற்று  தூரமாய் சென்றிருந்தாள். மலர்..மலர் என அழைத்தான்.. அவளோ சற்றே  தூரமாய் சென்றிருக்க இவன் அழைத்தது  கேட்க வில்லை.
அருகில் சென்று  கொண்டிருந்த வயதான பெண்மணியை 
அழைத்தவன் இவளை சுட்டி  காட்டி இங்கு  வரச் சொல்லி விட்டு  போகும் படி உறைத்தவன் அந்த  இடத்தில்  நின்றபடி மதுசூதனனோடு பேசிக்கொண்டு  இருந்தான்.

இவளது அருகில்  சென்ற  அந்த  பெண்மணியோஏனுங்கம்மணி
உன்ற ஊட்டுக்காரரு அங்கே  கூப்பிடறாரு பாரு. என்னன்னு கேட்டுட்டு வா அம்மணி என்றபடி விலகி நடக்க  திகைத்தபடி திரும்பி பார்த்தாள்.

அங்கே சற்று  தொலைவில்  இவளது தந்தையின்  கைகளை பற்றியபடி சிரித்தபடி பேசிக்கொண்டு  இருந்தான். அவரது தந்தையின் முகத்திலும் அவ்வளவு  மகிழ்ச்சி தெரிந்ததுஇவள் திரும்பி  பார்ப்பதை உணர்ந்தவன் இங்கே வா என்பது போல கைகளை ஆட்டியவன் மறுபடியும்  அவர் புறம் திரும்பி  பேசிக்கொண்டு  இருந்தான் திகைத்த   இவளது மனநிலை  புரியாமல்..

பனிமலரே உருகாதே!!!

உருகாதே வெண்பனி மலரே_7

கோவிலில் தரிசனம்  முடித்து  திரும்பி  வருகையில்  மூவருமே அவ்வளவு நிம்மதியாக  உணர்ந்தனர். மலர் இன்றைக்கு  போதும் இனி நான் வண்டி ஓட்டறேன் ஜஸ்ட் கவனிக்க மட்டும் செய்சரியா என்றபடி  வண்டி ஓட்ட அருகில்  இருந்தவளுக்கு அவள் செய்த  சிறு சிறு  தவறுகளை சுட்டிகாட்டியபடி வந்து  சேர்ந்தனர்.

வீட்டின் உள் வரவும்  அபிக்கு போன் வந்தது அவனது தந்தையிடம் இருந்து..
அபி பாட்டி  பேசணும்ன்னு சொல்லறாங்கடா பேசறயா

பாட்டிஎன்றதும்  பாட்டியின்  பாச குரல் செல்பேசி வழியே வந்தது.
அபி இந்த  பாட்டிய  எப்படா பார்க்க வரப்போற

வேதா பாட்டி எல்லாம்  உன்னாலதான் எப்ப பாரு கல்யாணம் கல்யாணம் சொல்லியே அந்த  பக்கம்  வர விடலை. நான்  இப்போதைக்கு அங்கே  வர்ற ஐடியா இல்லைகூப்பிடாதிங்க

டேய் தெரியும்டா தெரியும்என் பேத்தி  எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டா. எப்ப கூப்பிட்டு  வர்ற..நானும்  கண்ண மூடறதுக்குல்ல உன்னோடு குழந்தையையும் பார்த்துட்டா நிம்மதியா போவேன்ல..

கல்யாணத்துக்கே பொண்ண காணோம்மாம்  நீ கொள்ளு பேரன், பேத்திக்கு போயிட்ட போனை வை வேதா

டேய் எப்ப பாரு பேரை சொல்லற.. உன்னோட தாத்தா  ஒரு  நாள் கூட  பேர் சொல்லி  கூப்பிட்டது இல்லை. நீ எப்ப பாரு பேர் வச்சவனாட்டம் கூப்பிடற

வேதா வயசானகாலத்துல  ஒழுங்கா இருக்காம காலை உடைச்சிகிட்டு என்ன  வேற டார்ச்சர் பண்ணற கல்யாணம்  பண்ணிக்கோகடைசி ஆசையின்னுஅதுக்கெல்லாம் நான்  தலைகீழாக நின்றால்  கூட இங்கே நடக்காது போல இருக்கு.

ஏன் பேராண்டி அப்படி  சொல்லற..  நீ ராஜாடா உனக்கென்ன குறை உன்னை பிடிக்காம கூட போகுமா நான்  எதுவுமே உன்னை கேட்கல ஒரு  தடவை வந்து  பார்த்துட்டு போடா..

வேதா இப்படி  பேசிதான்  ஆளை கவுக்கறஇந்த வாரம் வரேன் சரியாஒரு  நாளு தான்அதுக்குமேல தங்க சொல்ல கூடாது

சரிடா.. சரிடா உன் அம்மா என்னுடைய  முகத்தையே பார்க்கறாஅவள்கிட்டேயும் ரெண்டு  வார்த்தை  பேசிடு..

குடுங்க பாட்டியின் என்றவன் அவரோடு பேச ஆரம்பிக்க
மேலும் பத்து  நிமிடங்கள்  கழித்து  கட் செய்ய அருகில்  மதுசூதனன் நிற்பதை பார்த்தவன் சொல்லுங்க  அங்கிள்என்ன  விஷயம்

எனக்கொரு ஐடியா  தோனிச்சுஉங்க பாட்டி மாதிரி  நானும்  கீழ விழுந்து காலை உடைச்சிகிட்டு..
என்னோட கடைசி ஆசைன்னு சொன்னா..

சொன்னாசொல்லுங்க அங்கிள்குழந்தை  போல குதுகலமாய் கூறியவரை சிரித்தபடி பார்த்தவன்என்ன  பிளான் அதையும்  நீங்களே சொல்லுங்க அவனுடைய முகத்தை  பார்க்க  அதில் தெரிந்த குறுஞ்சிரிப்பை பார்த்தபடியேஅபி
நான்  வேணும்னா மாடியில் இருந்து குதிக்கட்டா..

கால் உடையாது அங்கிள் ஒரேடியா போயிடுவிங்க பரவாயில்லையா

ஐயோ…  அப்ப இந்த  படிக்கட்டு

அங்கிள் நான்  ஒன்று  சொல்லவா உங்க பொண்ணுகிட்ட நான் தான்  நீங்க பார்த்து வச்சிருக்க பையன்னு மட்டும்  சொல்லுங்கள்அந்த  நிமிஷம்  என்னோட பெட்டி  படுக்கையை ரோட்டில்  தூக்கி போட்டுடுவா.. அப்புறம்  இந்த  ஐடியா  உங்க பொண்ணுக்கு செட் ஆகாது. இப்பவே இப்படி  சொல்லறவ உங்களுக்கு  முடியலைன்னா அதுவே அவளுக்கு  காரணமாயிடும். அப்பாவை நான் தான்  பார்ப்பேன்னுஅதுக்கப்புறம் நீங்களே  ஆசைபட்டாலும்  உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது.
அதனால இந்த  மாதிரி  யோசிக்காதிங்க. நான்  தான்  சொன்னேன்ல.. சரி பண்ணிடலாம்.

மலர் எங்கே. ..அங்கிள்

அவளுக்கு  போன் வந்ததுபா.. தோட்டம்  பக்கம்  போனா வந்திடுவா..

அங்கே மலரின்  தோழி நிஷாவோடு பேசிக்கொண்டு இருந்தாள் அவளோ அவளை பார்ட்டிக்கு அழைத்து  கொண்டிருந்தாள். அன்றைக்கு  பேசினோமே பார்ட்டி தர்றேன்னு ஹோட்டல்  பாப்பீஸ்ல ..இன்றைக்கு  அரேன்ஜ் பண்ணி இருக்கு நீ கிளம்பி வா..

தீடின்னு சொன்னா எப்படி நிஷா  அப்பாகிட்ட முன்னமே சொல்லவே இல்லையே இப்படி சொன்னா  எப்படி..

மலர் எல்லோர்கிட்டேயும் சொல்லிவிட்டேன் நீதான்  பாக்கி காலையில்  இருந்து எத்தனை  தடவை கூப்பிட்டு  இருக்கிறேன்னு பாரு. நீதான்  அட்டென் பண்ணல..

புரியுது நிஷாஆனா

மலர் நீ இருந்தால்தான் நல்லா  இருக்கும். இல்லாட்டி அந்த  பார்ட்டியே போர் தான்  ப்ளீஸ்  வந்திடு

ஓகே  நிஷா அப்பாகிட்ட கேட்கிறேன்.டைம் என்ன..

ஏழு டூ ஒன்பது  அன்றைக்கு சொன்னேன்ல. எப்படியும் முடிய பத்து  மணி ஆகிவிடும் நான்  அங்கே  போனதும் கூப்பிடறேன்.

சரிடி என கட் செய்து விட்டு  வந்தவள் தந்தையிடம்  அணுமதி கேட்க வந்து  நின்றாள். அடுத்து  தொடக்க இருக்கும்  பூகம்பத்தை உணராமல்சாதாரணமாக அப்பாவின் அருகில்  ஷோபாவில் அமர்ந்தவள் அப்பா.. நிஷாவுக்கு மேரேஜ்பிக்ஸ்  ஆகி இருக்கு அவ காலேஜ் ப்ரெண்டுங்க  எல்லோருக்கும் பார்ட்டி தர்றா.. என்னையும் கூப்பிடறா நான்  போயிட்டு  ஒன்பது  மணிக்குல்ல திரும்பி வந்திடறேன் என்னப்பா சொல்லறிங்க என ஆரம்பிக்க

அருகில் இருந்த  அபியோ
பார்ட்டிக்கா  அதுவும்  நைட்டா பாதுகாப்பு  இருக்காது அங்கிள் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க என கூறியது தான்  தெரியும்


மொத்த எரிமலையும் வெடித்திருந்தது மலரின் வாயிலிருந்துஎன்ன  பாதுகாப்பு  இருக்காது.. என்ன  தெரியும் உங்களுக்கு  என்ன  பற்றி.. அங்கே என்ன  டிரிங்க்ஸ் பார்ட்டியா நடக்குது இப்படி  பயப்படஉங்க மும்பை  மாதிரி  நினைச்சிங்களா..உங்களுக்கு  வேணும்னா அது  பழக்கமா இருக்கலாம் இங்கே  அதுமாதிரி  கிடையாதுஎன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோரும் பக்கா ஜென்டில் ஓகே..

முதல்ல அடுத்தவங்க பர்சனல்ல தலையிடாதிங்க சரியா..

பாப்பா  என்ன  இது.. இப்படி  பேசாத பாப்பா..

நீங்க  சும்மா  இருங்கபாஏதோ பத்து  நாள்  தானேன்னு நினைச்சா சார் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்களா..
எனக்கு  தெரியாதுபா. நான்  இன்றைக்கு  அங்கே  கட்டாயம்  போவேன்  யாரும்  தடுக்க கூடாது.

ஷப்பாபேசி முடிச்சாச்சா பாதுகாப்பு  இருக்காதுன்னு சொன்னேன் டிரிங்க்ஸ் பார்ட்டிதான்
நடக்குதுன்னு  சொன்னேனா.. அதென்ன மும்பை  மாதிரின்னா இதுக்கு என்ன  அர்த்தம்  யார்  எங்கே இருந்தாலும்  அவங்க அவங்க எல்லை அவங்களுக்கு  தெரியும்எப்படி  நீ என்ன  அப்படி நினைக்கலாம் உனக்கு  மட்டும்  யார்  பர்மிஷன்  கொடுத்தது.

இத பாரு டாபிக்க மாத்தாதசரியா. இப்போ நான்  கிளம்ப தான்  போறேன்
ரெண்டு  பேரும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்க மதுசூதனனுக்கு யாருக்காக பேசுவது என்ன புரியாமல்  தவித்து  நின்றார்.

ஓகே இதுதான்  முடிவுன்னா கிளம்பு நானும்  கூட வர்றேன்.

வாட் நீயும் வர்றயாஎன்ன  ஜோக் அடிக்கறயா.. என்னோட ப்ரெண்ட் அவங்க  கிட்ட உன்ன என்னன்னு இன்டடியூஸ் பண்ணுவேன்.

ஹாங்உன்னோட பாய் ப்ரெண்டுன்னுநீயூஸ் ரெகுலரா பார்க்கிற தானே..,இல்ல பேப்பர்  படிக்கறதில்லையாஇங்கே  யாரையும்  நம்ப முடியாதுயாருக்கும்  பாதுகாப்பு  இல்லைபதினோருமணி ஆனாலும் ஓகே  தான்உன்னோட அப்பாவுக்கு  அவ்வளவு  நேரம் காத்து இருக்க முடியாதுசோ அதனால நானும் வரேன் சொன்னவன் முடிந்தது என்பது போல தனது அறைக்குள்  செல்ல..

மதுசூதனனோ பாப்பா  அபி சொல்லறதும் சரிதானே உனக்கு  பாதுகாப்புக்கு வரேன்ங்கறான் கூப்பிட்டுட்டு போ..இதுவரைக்கும்  நைட் வெளியே  போனதில்லையேதனியா எப்படி  விட முடியும். இப்படி  சட்டின்னு எடுத்தெருச்சி யாரையும்  பேசாத பாப்பா. கேட்கறவங்களுக்கு கஷ்டமான இருக்கும்ல

ம்ம் என்றபடி விலகி தனது அறைக்குள்  நகர்ந்தாள். கோபத்தில் அவனிடம்  கத்தியதை யோசித்தவளுக்கு தான்  பேசியது தவறு என நன்றாக  தெரிந்தது. கோபம் வந்தா ஓவரா பேசற மலரு. ..
அப்ப கூடாது அவனுக்கு  உன் மேலும் கோபமே வரல.. உனக்கு  புரிய வைக்க தான்  டிரை பண்ணினான்.

ஒரு மனசாட்சி  இப்படி  கூற அடுத்ததோ  பேசலாம்  மலர் அப்ப தான்  அடுத்த  தடவை உன் விஷயத்தில்  தலையிடனும்னா  கொஞ்சம்  யோசிப்பான்.

அதேநேரம் அடுத்த அறையில்  இருந்தவனுக்கு இவள் கத்தியதை  பார்த்து  செல்லமாக கொஞ்ச  தான்  தோன்றியதுஅப்பா படபட பட்டாசுதான் என்னா வாய் ப்யூச்சர்ல நம்மல பேசவே விட மாட்டா போல இருக்கே!!!எப்படி  இருந்த அபிஇப்படி  மாறிட்டே இந்த  பொண்ணுகிட்ட அப்படி என்ன  இருக்குஉன் ஆபீஸ்ல  நீ பார்க்காத பொண்ணாஎத்தனை  பேர் உன்கிட்ட வந்து  வழிச்சிட்டு நின்று இருக்கறாங்க.. நீ கடைசியில் இந்த  பொண்ணு  கிட்ட வந்து மாட்டிகிட்ட.. உனக்கு  பெட்ரமாஸ் லைட்டே தான்  வேண்டுமாஒரு மனம் அவனை கிண்டல்  செய்ய அடுத்த  மனமோ அவளேதான் வேணும் என்றபடி புறப்பட்டான்.

ஏழு மணியை  தாண்டி இருக்க இரு முறை நிஷா அழைத்திருந்தாள். மலர்  எல்லோரும்  வர ஆரம்பிச்சிட்டாங்க. வர்றதானே என.. புறப்பட்டாள் தந்தையிடம்  வந்து  அப்பா அந்த  வளர்ந்து  கெட்டவன் எங்கே? வரச்சொல்லுங்க..

பாப்பா

சரிஅபி எங்கே

அவன் ரூம்ல இருக்கிறான் கூப்பிட்டுகோ..

சரி.. அபி வெளியே வா டைம் ஆச்சு போகலாம் கதவைத் திறக்க ஒரு  நிமிடம் திகைத்து  போனாள். அணிந்திருந்தது என்னவோ பேன்ட் முழுக்கை டீசர் ஒன்று  தான் அதுவே அவனை அழகாய் காட்டியது..

கார் எடுக்கவா மலர்

வேண்டாம்.. நான்   டூவிலர்ல தான்  போகப்போறேன். என் கூட வண்டியில் வர்றதில உனக்கு  ஆட்சேபனை ஒன்றும்  இல்லையே

நான்  பொண்ணுங்களுக்கு ஈக்குவல் ரைட்ஸ் கொடுக்கறவன்மா. நோ ப்ராபளம் போகலாமா

தனது டூவிலரை எடுத்தவள் தந்தையிடம்  வரேன் என்ன சொல்லியபடி  வண்டியை  எடுக்க அடுத்த  சோதனை  ஆரம்பித்தது. இவள் ஓட்டும் வேகத்திற்கு வண்டி தூக்கி போட விழ இருத்தவன் அவளது தோளை அழுத்தமாக பற்றி  இருந்தான்.தனது கைகளால் அவனது கையை எடுத்து  விட்டவள் வண்டியில ஒழுங்கா  உட்காருமேல கை பட்டுச்சு பிச்சுடுவேன்

பார்த்து  ஓட்டுமா.. என்னை கீழே தள்ளனும்ன்னு முடிவோட தான் வண்டியை  எடுத்தயா..

இது தமிழ்நாட்டு  ரோடு இப்படி தான்  இருக்கும்சைட்ல கம்மியபிடி அடுத்த  குழியில் வண்டியை  இறக்க மொத்தமாக அவள் மேல் வந்து  விழுந்தான்.

அபி

மலர் நீ வண்டியை  நிப்பாட்டு . நீ வேணும்னே குழியில் வண்டியை  விடற . உனக்கு  நிஜமாகவே  கண்ணு தெரியுது தான..



இல்ல.. இனி பாத்து ஓட்டறேன். வண்டியில்  ஏறும் போது கோபத்தோடு வண்டியை ஓட்டவேண்டும் என்றே பள்ளத்தில்  இறக்கி  ஏற்றிக் கொண்டு  இருந்தாள். இப்போது  கொஞ்சம்  குறைந்திருக்க நிதானமாக வண்டியை ஓட்டினாள்.

அவர்கள்  பார்ட்டி  தரும்  ஹோட்டலை நெருக்கியவள்.. இங்கே  பாரு அங்கே  வந்து  எதுவும்  யார் கிட்டேயும் பேசக் கூடாது.

என்ன..  என்னன்னு இன்டடியூஸ்  பண்ணுவே..

எதையாவது  சொல்லுவேன் அது என்னோட பிரச்சனை  சரியா..ஏன் இவ்வளவு  ஆர்வம் உனக்கு

உன்னோடு ப்ரெண்டுங்கல தெரிஞ்சு வச்சிக்கிட்டா எதிர் காலத்துக்கு நல்லது தானே..

எப்படி..

யாருக்கு தெரியும்  இந்த  கூட்டத்தில என்னோட எதிர் கால ஓய்ப் இருந்தாலும் இருக்கலாம்ல.. ஏதாவது  பொண்ண  கூட எனக்கு  பிடிக்கலாம். இல்லைனா அந்த  பொண்ணுக்கு என்ன  பிடிக்கலாம்..மலரு

என்ன.. கோபத்தோடு வந்து  விழுந்தது.

அவன் அப்படி  சொன்னது  அவளுக்கு  சுத்தமாக பிடிக்கவில்லை  என்பது அவள் முகம் பார்த்தே உணர்ந்தவன் அவளை மேலும் கடுப்பேத்த நினைத்தபடி

என்னுடைய  போன் நம்பர் உன்னோட ப்ரெண்டுங்க யார்  கேட்டாலும் கொடுத்துடு சரியா

அபி பேசாம வந்திடு. அங்கே  யார்  கிட்டேயாவது பேசின என்ன  பண்ணுவேன்னு தெரியாது.
பார்ட்டிஹாலில் நுழைந்தது தான்  தெரியும்  அங்கிருந்தவர்களோடு மொத்தமாக சில நிமிடத்திலேயே ஒன்றி போனான் அபி . மலர் தான்  நிஷாவோடு பேசியபடி திரும்பி  பார்க்க.. இவள் பார்ப்பதை பார்த்த நிஷாமலர் உன்மைய சொல்லு யார்  இந்த  ஹேன்சம் பாய்.. உங்க அப்பா பார்த்து மாப்பிள்ளை  இவன் தானே

இல்லைடி. நீ வேற அது ஒரு  இம்சை.. அப்பாவோட ப்ரெண்டு பையன் ஊர் சுற்றி  பார்க்க வந்து  இருக்கிறான்.
அப்பாதான் தனியா விட யோசிச்சாங்க. அதனால தான்.

ஓகே.. இங்கே  அழைச்சிட்டு வா.. கிஷோர் கிட்ட அறிமுகப்படுத்தலாம்.

இவள் இங்கிருந்தபடி அவனை பார்க்க அடுத்த  நொடி அவள் அருகில்  வந்திருந்தான்அறிமுக படுத்திய சில நொடிகளிலேயே கிஷோரோடு நெருங்கி இருந்தான்இருவரும் சிரித்துக்கொண்டிருக்க இப்போது  நிஷாவும் அவர்களோடு இணைந்திருந்தாள். மலருக்கு தான்  ஏதோ அவனுடைய நண்பர்கள்  பார்ட்டிக்கு இவளை அழைத்து  வந்தது போல் இருந்தது. இது போதாது  என்று இவளது தோழிகள்  இருவர் இவளிடம்  வந்து  அவனது போன் நம்பர் கேட்க மொத்தமாக நொந்து போனாள்.

ஓன்பது மணியை நெருங்கும் போது மதுசூதனனிடம் இருந்து போன் வர அபி முகத்தில்  பதற்றம் தொற்றிக்கொண்டது. இவனது முகம் பார்த்தவள் அருகில்  வர.. அவளது கையை பற்றியபடி  வேகமாக  புறப்பட்டான்.

உருகிடுவாளாபணிமலர்.

உருகாதே .. வெண்பனிமலரே_8


சில நிமிடத்திலேயே இயல்பை தொலைத்து இருந்தவன் எதுவும் கூறாமல் அவளை வேகமாக  அவளது கையை பிடித்து  இழுத்தபடி  வெளியேறினான்காரணம் புரியாத மலரோ.. ஏன் இப்படி  இழுத்திட்டு வர்ற.. என்ன  ஆச்சு..உனக்கு  பைத்தியமா பிடிச்சு  இருக்கு  அங்கே  பார்த்தவங்க என்ன  சொல்வாங்க.. இதுக்காகதான் உன்ன  கூப்பிட்டுட்டு  வரமாட்டேன்னேன்.

உன்னோட போன் எங்கே..

வீட்ல இருக்கு. அது ஸ்விச் ஆப் ஆகிடுச்சி..அதனால நான்  எடுத்துட்டு வரல..

எப்பவுமே இப்படி தான் செய்வாயா..
வெளிய கிளம்பினா போன் எடுக்கணும்ன்னு கூட தெரியாதா..

சும்மா  திட்டாதே நான்  ஓன்னும் தனியா வரல. உன் கூட தான்  வந்தேன். நீ கூட இருக்கறதாலதான் போன் எடுத்துட்டு வரல போதுமா..இந்த  பதில் அவனது கோபத்தை  கொஞ்சமாய் குறைத்தது.

அப்பா கூப்பிட்டு  இருந்தாங்க..ஏதோ எமர்ஜென்சி  போல உடனே வரச்சொல்லி இருக்கறாங்க..

அப்பாவுக்கு  ஒன்றும்  இல்லைல்ல

ஏய்.. கூல் அப்பாவுக்கு  எதுவும்  இல்லைவீட்டு பக்கத்தில..  யாரோ கட்சிக்காரனை  வெட்டிட்டாங்கலாம். பிரச்சினை  ஆகும் போல இருக்கு ரெண்டு  பேரும் வீட்டுக்கு உடனே வாங்கன்னு சொன்னாங்க

இன்னும் நாலு நாள்ல இவங்களோட நிச்சயம் இருக்குல்ல அன்றைக்கு நிறைய நேரம் இருப்பயாம் இப்ப கிளம்பலாம்நீ வண்டி  ஓட்ட வேண்டாம்நான்  வண்டி  ஓட்டறேன் பின்னால்  ஊட்காரு சரியா என்றவன் இவள்  உட்காரவும் வண்டி வேகமாக பறந்தது.

கொஞ்சம் நிதானமா போங்க அபி இவள் சொன்னது காற்றின் கேகத்தில் அவன் காதில் விழுந்ததோ! இல்லையோ..பயத்தில் கைகளுக்கு அருகில் இருந்த  கம்மியை பற்றிய  படி கண்கள் இருக்கமாக மூடி அமர்ந்தவள் தான்  வண்டி  நிற்கவும் கண் திறந்து  பார்த்தாள். கண்முன்னால்  அவள் கண்ட காட்சி கைகள் தானாக நடுங்க
இப்ப என்ன  செய்யறதுசற்று  தூரத்தில்  ஐம்பதிற்துக்கும்  மேற்பட்டோர் கையில் கம்பு ,கத்தி,தடிகளோடு ஒவ்வொரு  கடையையும் எதிர்  பட்ட வாகனங்களையும் அடித்து  நொறுக்கியபடி வந்து  கொண்டிருந்தனர்.

அருகில்  இருந்த குறுகலான  தெருவில்  வண்டியை விட்டவன் இந்த  வழியா போனா எங்க  போகலாம் மலர்.

இது கட் ரோடு..வழி கிடையாது.
அந்த  ரோட்டிலும்  அங்கங்கு வண்டி
நிறுத்தி இருக்க  சற்று  தொலைவில் வண்டியை  நிறுத்தியவன்.. இவளை அழைத்தபடி  சற்று  மறைவாக  நின்றிருந்தான். கட் ரோட்டுக்கு  வர மாட்டாங்க. மெயின்  ரோடு வழியா போகத்தான்  பார்ப்பாங்க. எப்படியும்
இன்னேரம் போலீஸ்டேசனுக்கு கம்லைன்ட் போய் இருக்கும். பயப்படாதே என்றவன் இவளை தன் பின் புறமாக நிற்க வைத்து  கொண்டான்.

கூச்சல்  ஒருபுறம் கூடவே பொருட்கள் உடைபடும் சத்தம் அந்த கும்பல் அந்த  தெருவை கடக்கும்  சத்தம்  தெளிவாக  கேட்டது ஹோ என்ற கூச்சல் அருகில்  கேட்க கடை விளக்குகளை  உடைக்கும்  சத்தம்  உடைந்த கண்ணாடி  சிதறலின் சத்தம்  தெளிவாக  காதில் கேட்க  பயத்தில் கண்களை இருக்க மூடியபடி அவனது முதுகில்  இருக்கி அணைத்தபடி நின்றிருந்தாள்.

அவளது இதய துடிப்பு அவனுக்கு  நன்றாக கேட்டது. கைகளின் நடுக்கம்  அவளது பயத்தை  அப்பட்டமாய் அவனுக்கு  உறைத்ததுபயப்படாத மலர்  நடுங்கும் அவளது கைகளை தனது கைகளுக்குள் வைத்தபடிஇன்னும்  ஐந்து  நிமிடம்  அவங்க  நகர்ந்து  போயிடுவாங்க.. இவளது பயத்தை  அதிகப்படுத்தும் படி கூட்டத்தில்  ஒரு  குரல் கேட்டது.

தலைவா..இந்த  ரோட்டுக்கும் போய் ஒரு  காட்டு காட்டிட்டு வரலாமாஇதை கேட்டதும் பயத்தில் இன்னும்  அவனது முதுகில் நன்றாகவே ஓண்டினாள்.

வேண்டாம்டா அது கட் ரோடுஉள்ளே  போன நேரம்  போலீஸ் வந்தாங்கன்னா ஓடி தப்பிக்க வழி இருக்காது. அப்படியே  நேரா போ
போலீஸ்  வண்டி  சத்தம்  கேட்டா ஆளுக்கு  ஒரு  பக்கமாக ஓடிடுங்க

மேலும் பத்து  நிமிடம் தாண்டியிருக்க
போலீஸ்  வாகனம் போகும் சத்தத்தை தொடர்ந்து அமைதியாய் இருக்க
மலர் போகலாம்  என்றவன் இவளை அழைத்தபடி  வீட்டிற்கு  வண்டியை  விட இன்னமும் நடுங்கி  கொண்டிருந்தாள்.
கம்மியை இருக்கி பிடித்தவளின் கைகளை பிரித்து  விட்டவன் ஓரு கையை எடுத்து  தனது தோளில் வைத்தபடிபயப்படாதஇன்னும்  ஐந்து  நிமிடம்  வீட்டுக்கு  போயிடலாம்
சொன்னவனின் நம்பிக்கை  குரலில்  அவளது பயம் மெல்ல  மெல்ல விலகியது.

மெயின்  ரோட்டில்  அங்கிங்கு போலீஸ் நின்றிருக்க வீடு வரவும்
வாசலிலேயே காத்திருந்த மதுசூதனனோடு உள் சென்ற போது தான்  தெரிந்தது பிரச்சினையின்  தீவிரம்…  எந்த  அளவுக்கு  நடந்து  கொண்டு இருக்கிறது என…  லோக்கல் சேனலில் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.
வன்முறையில்  ஈடுபட்டவர்களின் அட்டகாசத்தை…. எதிர்  பட்டவர்களுக்கு அடி பட்டதாக கிட்டத்தட்ட  இருபது பேருக்கும் மேல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தனர். நூற்றுக்கனக்கான வாகனங்கள் சேதம் எனதிரும்ப திரும்ப ப்ளாஸ் நியூஸில் கொட்டை எழுத்தில் ஓடிக்கொண்டு  இருந்தது.

சற்று நேரம் டிவியை  பார்த்தபடி அமர்ந்தவளுக்கு  தெரிந்தது தனியாக ஓரு வேளை வந்திருந்தால் என்னவாகி இருக்கும்.




தனக்கு ஏதாவது  ஒன்று  என்றால் தந்தையின்  நிலை என்ன???
நினைத்தவள் அப்படியே அமர்ந்திருக்க அபியோ.. இன்னும்  என்ன  யோசனை  மலர் தூங்கலையா..

தேங்க்ஸ் அபி.. நடந்தத பார்த்ததில் இருந்து இன்னும் வெளிவர முடியலை ஓரு வேளை நீ கூட இல்லைன்னா என்ன  ஆகி இருக்குமோஉன்னை மாதிரி  அவசரத்துக்கு யோசிக்க கூட வராது.

ஏன் அப்படி யோசிக்கற.. நான்  இல்லன்னா நீ அங்கே  இருந்து கிளம்பியே இருக்க மாட்டஉன் ப்ரெண்டுங்க யாராவது உன்ன அவங்க  வீட்டுக்கு  கூப்பிட்டுட்டு  போய்  இருப்பாங்க. எப்பவுமே பாசிட்வா யோசிஓகே  குட்நைட் நாளைக்கு  பார்க்கலாம் அவன் எழுந்து அவனது அறைக்குள்  செல்ல

அமர்ந்து  இருந்தவளுக்கு தான்  தெரியவில்லை  தான்  அவனிடம்
மனதால் நெருங்கி  கொண்டு இருப்பதை

அடுத்த  நாள் அழகாய் விடிய இரவு ஏதேதோ யோசனையில் தாமதமாக தூங்கியவள் எழும் போதே ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. வேகமாக  காலை கடன்களை முடித்து  விட்டு  ஹாலிற்குள் வர தந்தை  மட்டும்  தனியாக  அமர்ந்து  அன்றைய  நாளிதழை பார்த்து  கொண்டு  இருந்தார்.

குட்மானிங்பா

வாடா வாடா லேட்டாகிடுச்சாஅப்போது வேலைக்கார பெண்மணி காபியோடு வர அதை வாங்கி அருந்தியபடி..அப்பா எங்கப்பாஅபிய காணோம் . கடந்த  இரண்டு  நாட்களாய் இவன் பார்க்கும் பொழுது எல்லாம்  தந்தையோடு காட்சி தருபவன் இன்று அந்த  இடத்தில் இல்லை  எனவும் இயல்பாய் வந்து  விழுந்தது.

உனக்கு  தெரியாதாஅவன் ஊருக்கு  போயிட்டான்  அவங்க  பாட்டி பேசிணாங்கல்ல பார்த்துட்டு வர நேற்றே டிக்கெட்  புக் பண்ணிட்டான். எட்டு மணி வண்டிக்கு கிளம்பிட்டான்.

.. சரிப்பாமுதல் முறையாக தன்னிடம்  சொல்ல விட்டு போகவில்லை  என்பதை நினைத்தவள் முகம் வருத்தத்தில் சுருங்கியது இதை கவனித்தவருக்கு மனதில் லேசாக மகிழ்ச்சி  தோன்றியது.

வருத்தத்தோடு எழுந்து சென்ற மகளை  பார்த்த போது  அபி கூறியது நினைவில்  வந்தது. அங்கிள் உங்க பொண்ணு  நான்  இல்லைன்னு வருத்தபட்டான்னா  என்னை தேடிடான்னா..உங்கள்  ஆசை சீக்கிரமே நிறைவேறிடும்கவலையே படாதிங்க..

சரிடாவா நாம ரெண்டு  பேரும் சாப்பிடலாம் என சொன்னவர் நேராக தனது அறைக்குள்  சென்று  அபியை அழைத்திருந்தார்  தனது செல்பேசிக்கு

அபி நீ சொன்ன  மாதிரி  வருத்தபடறா எனக்கு  செம சந்தோஷமாக இருக்குபா

ஐயோ அங்கிள் நீங்க  வேற.. நீங்களே அவகிட்ட சொல்லிடுவிங்க போல இருக்கு இப்ப  மலர் எங்கே

அவளோட ரூமிற்க்கு போய் இருக்கிறா

சரி அங்கிள் நான்  கூப்பிட்டு  பேசறேன் என்றவன் அவளது நம்பருக்கு  அழைக்கஎடுத்து உடனே பொறிய ஆரம்பித்து  இருந்தாள் மலர். நான்  யார்  உங்களுக்குநான்  யாரோ தானே..என்கிட்ட ஏன் சொல்லணும்.நீங்க நினைச்சா வரலாம். நினைச்சா எங்கே வேணும்னாலும் போகலாம்.. நான்  உனக்கு  ஒன்னுமே இல்லல்லஊருக்கு போறதபத்தி சொல்லகூட தோணலைல.. நான் ஒரு பைத்தியகாரி..கோபமாக பேசியவள் கடைசியில்  அழுதிருந்தாள்.

மலர்மலர் அழுகிறயா.. இத பாரு நாளை நைட்க்கு வந்திடுவேன். காலையில்  நீ தூங்கிட்டு இருந்தே அதனால்தான் சொல்ல முடியலைப்ளீஸ்  அழாதஸாரி..

ஏன் நேற்று  நைட் பத்து  மணி வரைக்கும்  உன் கூட தானே இருந்தேன் அப்ப சொல்லி  இருக்கலாம்லஏன் சொல்லல ..

அதுதான்  ஸாரி  கேட்டுட்டனேப்ளீஸ்  விட்டுடேன்.

ம்நானும் ஸாரிநான்  தான்  அதிகமா உரிமை எடுத்துட்டேன் போல.. இட்ஸ் ஓகே

உனக்கு  என் கிட்ட இல்லாத உரிமையா.. மலர்.. பாட்டிய பாத்து ரொம்ப நாள் ஆச்சு .அவங்களோட குரலை கேட்கவும் உடனே பார்க்கணும் போல தோணிச்சு..அதனால தான் வண்டி ஏறிட்டேன். அங்கே  வந்ததும் சொல்லாமல் வந்ததிற்கு தோப்புகரணம்  கூட போடறேன் ஓகே வா. வருத்தபடற மாதிரி  பேசாத.. ஊருக்கு  போனதும்  பேசறேன் அவன் கட் செய்யஇங்கே  கட்டிலில்  அமர்ந்தவள் தன்னை  பற்றி  தன் இயல்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

நியாயமாக பார்த்தால் அவன் போனதிற்கு சந்தோஷம் தானே வரணும் ஏன் அவனோட குரலை கேட்கவும் அழுகை வந்தது. அவன் கிட்ட உன்னோட எதிர்  பார்ப்புதான் என்ன
யோசித்தவளுக்கு தன் மனம் போகும் போக்கு தெளிவாக  புரிந்தது..

இல்லை அப்பாவுக்காக முடிவு பண்ணினதில் எந்த  மாற்றமும் இல்லை . உன்னோட மனதில்  இனி சலனத்துக்கே இடம் இல்லைஇவ்வளவு  நாளா யாரும்  இங்கே  தங்கினது இல்லைகூட இத மாதிரி  உரிமையா சண்டை  போட்டது இல்லை. அதுதான்  இந்த  அளவுக்கு  அவனை நினைக்க சொல்லுவது. அவனை மறந்திடு. இனி அவன் வந்தாலும் நீ அவன் விட்டு  விலகியே இரு. அதுதான்  உனக்கு  நல்லது.
தெளிவாக  முடிவு செய்தவள் தனது அறையில்  இருந்து வந்த  படி தந்தையிடம் அப்பாசாப்பிடலாம் வாங்கஎன அழைக்கும்  போது குழப்பம்  எதுவுமில்லாமல்  தெளிந்திருந்தாள்.

அபியோ இவளுக்கு  நேர்மாறான மனநிலையில்  இருந்தான். அவனை தேடறா என்பதே அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் வரையில்  தெளிவாக  தெரிந்தது அவளுக்கு  அவனை பிடிக்கும் என்பது..

தன்னிடம்  சண்டையிட்டது  ஸாரி சொன்னது பயத்தில்  முதுகில் அணைத்தபடி நின்றதுஇப்படி  ஒவ்வொன்றிலும் அவளது முகம் பல பாவனைகள் காட்ட..

அதுவே அவனுக்கு சுகமாய் இருந்தது. கண்கள் மூடியபடி அதை அணுபவித்தவன் மனதிற்குள்  கொஞ்சி கொண்டான் மலரைஇந்த  ஒரு  முறைதான் செல்லம்இனிமேல் நீயே ஆசைபட்டாலும் உன்னை நான்  தனியா விட மாட்டேன். எப்பவுமே என் கூட மட்டும்  தான்  இருப்ப..

தனக்குல்லேயே கேட்டுக் கொண்டான். வேண்டாம்ன்னுதானே சொல்ல வந்தோம்.. எது அவளிடம்  தன்னை  கட்டி  போட்டது .அங்கும் இங்கும் நடனமாடும் அந்த கண்களா..பார்த்த உடனே முதல்  நாள் சண்டையிட்டது பிறகு  சமாதானம்  ஆனது இதோ சற்று  முன்பு அழுதது இதுவே அவளது மனதை தெளிவாக  படம்  பிடித்து  காட்டியது .

அதே மகிழ்ச்சி  அவனது வீட்டிற்கு சென்றபோதும் பாட்டியிடம் ஆசிர்வாதம்  வாங்கிவிட்டு தாய் தந்தையுடம் பேசியவன் அடுத்த  நாள் கோவைக்கு வண்டி  ஏறியிருந்தான்.
தன்னை  பார்த்ததும் அவளது முகம் மகிழ்ச்சியில் எப்படி  மலரும் என பல வாராக நினைத்தபடி  கதவை தட்ட அவனுக்கு  அடுத்த அதிர்ச்சி  காத்திருந்தது.

உருகாதே!!!

 


உருகாதேவெண்பனிமலரே-9



அவளது முகமாற்றத்தை பார்க்க ஆவலாக கதவை தட்ட திறந்தவனுக்கு அதிர்ச்சி  அழகாய் காத்திருந்தது. இவன் சிரித்தபடி நிற்க அவளோ இவனை முறைத்தபடி  விழகி நடந்தாள். மலர் நான்  சொன்ன மாதிரியே வந்துட்டேன். எப்படி  இருக்கற.. அவனது கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தந்தையின்  அறைக்குள்  சென்றவள் அப்பா உங்களை தேடி வந்து  இருக்கறாங்க என்னன்னு கேட்டு அணுப்புங்க என்றபடி தனது அறைக்குள்  நுழைந்து  காதலை அடைத்து  கொண்டாள்.

மது அங்கிள் உங்க பொண்ணுக்கு என்ன  ஆச்சு  நீங்க  சொன்னத நினைச்சு எவ்வளவு  ஆசையா ஓடி வந்தா  தெரியாதவனை பார்க்கறமாதிரி  பார்த்து  வைக்கறா..

அபி எனக்கும்  தெரியலைநேற்றைகெல்லாம் நான்  சொன்னது  மாதிரி  தான்  இருந்தா.. இப்ப  என்ன  செய்ய

தெரியலையே இருங்க வெளியே வரட்டும் பேசிப்பார்க்கறேன். என்றவன் தனக்கு  ஒதுக்கப்பட்ட அறையில் தனது பேக்கை வைத்தவிட்டுகதவை சாத்தியவன் யோசித்தபடியே வழக்கம்போல  தனது செல்பேசியில் அவனையும் அறியாமல் அவனது தங்கைக்கு  அழைத்து இருந்தான்
மறுமுனையில் அட்டென்  செய்தவளோ
டேய் அண்ணா  அங்கே போயிச்சாஎன்ன சொல்லறாங்க என்னோட அண்ணி

நீ கடுப்படிக்காதஎன்ன  தெரியாதமாதிரி நடந்துக்கறா.. நானே செம காண்டுல இருக்கிறேன்இப்ப  என்ன  செய்யறது ஏதாவது ப்ளான்  சொல்லுஇவனது பதிலை கேட்டவள் எதிர்  முனையில்  சிரிக்க ஆரம்பித்தாள்.

ஏய் எதுக்கு  இப்ப  சிரிக்கற..

என்ன  உன்னோட ப்ளான் சொதப்பலாகாலேஜ்ல எத்தனை  பேரோட வயிறெரிச்சல கொட்டி இருப்ப…  அதெல்லாம்்  அவ்வளவு  சீக்கிரம்  விட்டுடுமா என்ன!! என்னோட ப்ரெண்டுங்களே ரெண்டு  பேர் உன் பின்னாடி சுற்றி இருக்கறாங்க…  அவங்கல எப்படி அழவச்சி இருக்கற..அப்பல்லாம் என்ன  சொன்ன ஞாபகம் இருக்கா

என்ன  சொன்னேன் அதையும்  நீயே சொல்லு….

உனக்கு  மறந்து  போச்சாதி கிரேட் அபிநந்தன் அவ்வளவு  சீக்கிரம்  யார்  கிட்டையும் சிக்க மாட்டேன்இப்ப என்ன  ஆச்சு…  இப்படி  புளம்பற

என்ன  கிண்டல்  பண்ணற நேரமா இது அதுக்காகதான் உனக்கு  போன் பண்ணினனா ஏதாவது  ஐடியா  குடு இல்லைன்னா கட் பண்ணு

கோச்சுக்காதணா.. அண்ணா என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா   அந்த  புள்ளைக்கு உன் மேல லவ்  ஸ்டாட் ஆகிடுச்சி..  நீ வேணா கவனிச்சி பாரு உனக்கே புரியும்..

அப்படிங்கற

அப்படியே தான்அவளுக்கு  உண்மை  புரிஞ்சிடுச்சி சோ பேசாமல் விலகிடலாம்ன்னு நினைக்கறாஅது சரியான அப்பா பைத்தியம்  போல இருக்குநீ கொஞ்சம்  பொறுமையாக தான்  இருக்கணும்.

இப்ப  நான்  என்ன  செய்ய..
தாரு

அண்ணா  அவளோட வழியிலேயே போ.. இன்னும் ரெண்டு  நாள் வெயிட்பண்ணு நீ வழக்கம்போல  பேசிட்டே இரு பார்க்கலாம்.

பேசவே இல்லைன்னா

அப்படி எல்லாம்  இருக்கமாட்டா

ஓகே டாபோனை கட் செய்தவன் சற்று நேரம் அமைதியாக  அமர்ந்திருந்தான். ஐந்து  நிமிடங்களை தாண்டி இருக்க கதவு தட்டும் ஓளி காதில்   கேட்டது . இவன் கதவை திறக்க கையில்  காபி டம்ளரோடு மலர் நின்றிருந்தாள்.

அவளிடம்  ஓருகையில் காபியை வாங்கியபடி  ஹாலில் வந்து  அமர்ந்தவன்  மலர் கார் ஓட்ட போகலாமா

இல்லைஎனக்கு மூட்இல்ல. இன்னொரு நாள் பார்க்கலாம்.

அடுத்த  தடவை லைசென்ஸ்  வாங்கணும்தானே

இல்லை  இந்த  தடவை டூவிலருக்கு மட்டும்  போட்டுக்கலாம்ண்ணு இருக்கறேன்..

என்றவன் அடுத்து  எதுவும்  கேட்கவில்லை . சற்று  நேரம் வரை இவளாக  ஏதாவது  பேசுவாள் என எதிர்  பார்க்க அவளோ எதுவும்  பேசவில்லை..அமைதியாக  வெளியேறினான் அபி

இந்த  கண்ணாம்பூச்சி  ஆட்டம் இரண்டு  நாட்களாய் தொடர்ந்து  கொண்டிருந்தது. அபிக்கோ  பொறுமை அவனை விட்டு  கொஞ்சம்  கொஞ்சமாய் விலகிக் கொண்டு  இருந்தது. அவன் உணர்ந்தே இருந்தான்  அவள் அவன் இல்லாவிட்டாலும் ஏதாவது  ஒரு மூளையில்  நின்றபடி இவனை பார்த்துக் கொண்டு  இருப்பதை

இவளுக்கு  என்ன  தான்  பிரச்சினை  அங்கங்கே நின்று பார்க்க மட்டும்  தான்  செய்வாளா.. பனிமலர் உனக்கு  இருக்குதுடி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி  மொத்தமாக தர போறேன்..
இதையும் மனதிற்குள்  மட்டுமே  சொல்ல முடிந்தது.

இரண்டு  நாட்கள்  கழிய மூன்றாவது  நாள்  நிஷாவின் நிச்சயதார்த்த விழாவை பிரபல ஹோட்டலில் ஹால் புக் செய்து விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். காலை முதலே அவளது தந்தையிடம் அனுமதி வாங்கியிருந்தாள். மாலை முதலே சற்றே  அழகாய் புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை ஏழுமணிக்கு அவசரமாக கிஷோர் அழைத்து  கொண்டு  இருந்தான்.

மலர் எங்க ரெண்டு  பேருக்கும் சின்ன  பிரச்சினை  ஆகிடுச்சிநிஷா இந்த  கல்யாணம்  பிடிக்கலைண்ணு சொல்லி வீட்டை விட்டு கிளம்பி மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கிறா நீ உடனே கிளம்பி நிஷா வீட்டுக்கு  வா

வாட்என்ன  பிரச்சினை

ப்ளீஸ்  நீ வாயேன்..நிஷா வீட்ல தான்
நானும் இருக்கிறேன். சீக்கிரம்  வா மலர்..


அடுத்த  நிமிடம் அபியின் அறைக்கதவை தட்டிக்கொண்டு  இருந்தாள் மலர்.. கதவை  திறந்தவன் இவளை பார்க்கபார்த்த நொடி  கண்களை அவள் புறம் இருந்து திருப்ப முடியவில்லை.  ‘அபி உனக்கு வந்த சோதனையாமனதில் நினைத்தவன். அவளிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாய்  அவளை மட்டும் பார்த்தபடி நின்றான்.

அவளோ  அவனை  தடுமாற வைப்பதை உணராமல் உடனே புறப்படு  என்றபடி நின்றாள்.

எங்கே என்றவனுக்கு மறுவார்த்தை கூற தோன்றவில்லை.
இளமஞ்சல் நிற  டிசைனர் சுடிதார் முழுக்க முழுக்க கற்கள் பதித்திருக்க தேவதை போல எதிரில் நிற்க  தடுமாறிய மனதை அடக்கியபடி    எங்கே என  மறுபடியும்  கேட்டான்….

அபி  வெரி அர்ஜெண்ட்   நாம  உடனே நிஷா வீட்டுக்கு  போகணும்..

யார்  நிஷா.. நான் ஏன்  வரணும்உன் கூட என்ன  எதுக்கு  கூட்டு சேர்க்கிற..

நிஷா தெரியாதா..அன்றைக்கு  பார்ட்டிக்கு  போணமே..அவ தான்

அங்கே  போனது உனக்கு  ஞாபகம்  இருக்கா. எனக்கு  எல்லாம்  மறந்திடுச்சி.. இந்த  ரெண்டு  நாளா பேசாமல் சுத்தறது தான்   ஞாபகம் இருக்கு.

விளையாடாத அபிசொல்லி காட்ட இது தான் நேரமா..எனக்கு  நீதான்  உதவி செய்யணும் அவளோட வீடு கொஞ்சம்  அவுட்டர். இப்ப போணாதான் சரியா இருக்கும் வந்து  காரை எடு

அவள் கெஞ்சிக்கொண்டு இருக்க இப்போது  மிஞ்சுவது இவனது முறை ஆனது. ஏம்மா .. நிச்சயதார்த்தம்  ஏதோ ஹோட்டல்  பேர் தான் சொன்ன இப்ப வீட்டுக்கு  கூப்பிடற.. நான்  என்ன  உன்னோட டிரைவரா என்னால வர முடியாது.

அபிஇப்ப  வர முடியுமா முடியாதா.. நீ வரலைன்னா நான்  கால்டாக்சி  புக் பண்ணிட்டு கிளம்பிடுவேன். பிரச்சினைன்னு  அக்கே  கிஷோர் கூப்பிடறான் நீ இருந்தா நல்லா இருக்குமேன்னு பார்த்தேன். முடியாதுன்னா போ நானே பார்த்துக்கறேன்

இரு வரேன் என்றவன் தயாராகி வர வண்டியை  எடுத்தவன் இடம் எங்கேன்னு சொல்லுஅவள் சொல்ல சொல்ல  அந்த  இடத்திற்கு வண்டியை  செலுத்தினான்.

என்ன  பிரச்சனையாம் ஏதாவது  சொன்னானா

எனக்கு  தெரியாது  அன்றைக்கு  பங்சனுக்கு அப்புறம்  இப்ப  தான்  பேசி இருக்கிறான்.

என்று முடிக்க அதற்கு  பிறகு இருவரும் ஒருவருக்கொருவர்  எதுவும் பேச வில்லை  அவ்வப்போது  அடிக்கடி  மலர் இவனை   திரும்பி பார்த்ததோடு சரிநிஷாவின் வீட்டின் அருகில்  வண்டியை  நிறுத்தியவன் இவள்  முகம் பார்க்க

இவனையும் அழைத்தபடி அவர்களது வீட்டில்  நின்ற வாட்ச்மேனுக்கு அறிமுக புன்னகையை அளித்தவள் இவனோடு உள் சென்றாள். ஹாலில் கிஷோர் இவர்களை வரவேற்றவன்  அவ மாடில அவ ரூம்ல இருக்கறாகதவை திறக்க மாட்டேங்கறா திறந்தாலாவது
பேசலாம். எனக்கு  என்ன  செய்யறதுன்னே தெரியலை ப்ளீஸ்  ஏதாவது  செய். அங்கே  என்னோட வீட்ல எல்லோரும்   மண்டபத்தில் வெயிட் பண்ணிட்டு இருக்கறாங்க..

நிஷாவோட அம்மா அப்பா எங்கே

எல்லோரும்  மண்டபத்தில்  தான்  இருக்கறாங்கஇவ எனக்கு  போன் பண்ணி இந்த  கல்யாணம்  வேணாம்
உனக்கும்  எனக்கும்  செட் ஆகாது. கடைசி வரைக்கும்  என்னால சண்டை போட்டுவிட்டு சந்தேகத்தோட வாழ முடியாதுன்னு சொல்லறா.. உனக்கே தெரியும்லஇந்த  கல்யாணத்துக்காக எவ்வளவு  போராடி இருக்கறேன்னுசம்மதம் வாங்க எவ்வளவு  சிரமபட்டேன். ஒரே நிமிடத்தில்  எல்லாத்தையும் வேண்டாம்ன்னா என்ன  அர்த்தம்

மூனு நாள்ல அப்படி என்ன  தான்  சண்டை  போட்டிங்கஇந்த அளவு போறதுக்கு..

அது அது வந்து  முதல்ல அவகிட்ட பேசு அப்புறம்  சொல்லறேன்இவர்களை  மாடிக்கு அழைத்து சென்று   நிஷாவின் அறையின் முன் நின்றவன் முதல்ல கதவை திறக்க சொல்லு எதா இருந்தாலும்  பேசிக்கலாம்.

ப்ரோ ..பிரச்சினை  என்ன..  அத சொல்லுங்க முதல்ல.. புரியாத மொழி படம் பார்க்கறமாதிரி இருக்கு என்னன்னு தெரிஞ்சா தானே ஏதாவது  பேச முடியும் அபி கிஷோரை பார்த்து  கேட்க ..

என்னடா ஆச்சு

நீ முதல்ல அவள கதவை திறக்க சொல்லு அப்புறம்  சொல்லறேன்.

ஓகே  இருஎன்றவள் நிஷா நிஷா என கதவை தட்டஅந்த  புறமோ நிஷாவின் அழுகை குரல் காதில்  விழுந்தது.

மலர் அவன் என்ன  ஏமாத்திட்டேன். நம்பிக்கை  துரோகம்  பண்ணிட்டான்
நான்  தப்பு பண்ணிட்டேன்

அழாத நிஷா முதல்ல  கதவை திறஅப்புறம்  பேசலாம்.

அந்த இடியட் போயிட்டான் தான

யாரை சொல்லற.. கிஷோரையா

ஆமாம்  அவன் தான்  அவனை பார்க்கவே பிடிக்கலை

அவன் போயிட்டான் கதவை திற

இவளுக்காக கதவை திறக்க இவளோடு மற்ற இருவரும்  ஊள் நுழைந்தனர் .

கிஷோரை பார்த்த உடன் நிஷா ஏற்கனவே  உட்புற கதவில் சாவி  மாட்டியிருக்க யோசிக்காமல்  கதவை பூட்டியவள் சாவியை ஜன்னல் வழியாக வீசி இருந்தாள்வரமாட்டேன்னா வரமாட்டேன்  தான்  எப்படி  கூப்பிட்டுட்டு போவ என கேட்க..

என்ன  செய்யற  நிஷா என மலரும்

லூசாடி நீ என கிஷோரும் ஓரே நேரத்தில்  கத்தி இருந்தனர். அருகில்  இருந்த சேரில் தலையை பிடித்தபடி கிஷோர் அமர..

மலரோ என்ன  தான்  நடந்துச்சு முதல்ல அத சொல்லு  தெரிஞ்சா தானே ஏதாவது  செய்ய முடியும் என்றவள்  கதை கேட்க தயார்  ஆனாள்.

உருகாதே!!!


உருகாதே..வெண்பனிமலரே_10


அவன்  உன் கிட்ட எதுவுமே சொல்லலையாகேட்ட நிஷாவை பார்ந்து பதில் சொன்னவள்

இல்ல நிஷா..இங்கே  வரச் சொன்னான் அவ்வளவு  தான்

நீயே சொல்லு மலர் எவ்வளவு ஹேப்பியா  அன்றைக்கு பார்ட்டி போச்சு. இவன் அன்றைக்கு என்ன  செஞ்சான் தெரியுமாஇங்கே பாரு என தனது மொபைலில் இருந்த மெசேஜை நீட்டினாள்என்ன  அந்த  ஹோட்டல் மாடிக்கு வா  உங்கிட்ட தனியா பேசணும்ன்னு   சொல்லிட்டு அங்கே போனா அந்த  சுரபிய கட்டி பிடிச்சிட்டு நிக்கறான் இவனை நான்  எப்படி  நம்ப முடியும்.

நிஷா பேச ஆரம்பிக்கவுமே அபியும் அருகில்  இருந்த இருக்கையில் அமர்ந்தவன் இவர்களது கதையை கேட்க ஆரம்பித்து இருந்தான்இப்போது  கிஷோர் பேச ஆரம்பித்தான்..

மலர் இங்கே பாரு இவ எனக்கு  அணுப்பின மெசேஜ் இவ தான்  என்னைய மொட்டை  மாடிக்கு வா நான்  உனக்கு  கிப்ட் தர்றேன்னு  மேசேஜ் அணுப்பினா. நானும் போனேன். அங்கே  அந்த லேசான இருட்டுல அன்றைக்கு போட்டு இருந்த
அந்த சிவப்பு  கலர் ஷாலை  போட்டுட்டு திரும்பி நின்றுகிட்டு இருந்தா. நானும் நிஷான்னு  போய் பிடிச்சா எனக்கு பின்னாடி கிஷோர் கத்திகிட்டு இருக்கிறா

உண்மையிலேயே மலருக்கு  ஒன்றும்  புரியவில்லை  எப்படி  சமாதானம்  செய்வது எனவும் தெரியவில்லைஇதை கேட்டிருந்த
அபி தான்எப்படி  சகோ ஆள் மாறினாங்க

அது.. இந்த  பசங்க வேணும்னே அந்த  மாதிரி  செட் பண்ணி  இருக்கறாங்க. இந்த  நிஷாவும் யார்  நின்றாலும் சரி கிஷோர் கண்டு பிடிச்சிருவான்னு சொல்லி இருக்கறாஅங்கே  வேற மாதிரி  ஆகிடுச்சி

மலர் நீயே சொல்லு அதெப்படி தெரியாம போகும். எத்தனை வருச பழக்கம். எனக்கு இவனை தவிர வேற யாராவது  நின்றிருந்தா நான்  இத மாதிரி  பண்ணி இருப்பானா. எல்லாமே வேஷம்.. இவனை நம்ப கூடாது ..

மலர் அவள் சொல்லறத கேட்காதநிஜமாகவே  எனக்கு  தெரியலை
நல்லா இருட்டா இருந்தது. இவள்தான் அங்கே நிற்கறான்னு போனேன். ஆள் மாறி இருக்குமின்னு கனவாக கண்டேன்.

மலர் அமர்ந்தபடி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள் முதல்ல ஒரு  விஷயம் எனக்கு  புரியலை.. ரெண்டு  பேரும் அங்கே  ஒன்றாக தானே  இருந்திங்கஅப்புறம்  ஏன் மொட்டை  மாடில சந்திக்கணும் ..

கேட்டுக்கொண்டு இருந்த அபியோமலர் அவங்க லவ்வர்ஸ்மா அவங்க பர்சனலா ஏதாவது  பேச யோசித்து  இருப்பாங்க அது எதுக்கு.. ப்ரோ  போணிங்க  ஆள்மாறினது தெரியலை
அங்கே என்ன  தான்  நடந்துச்சு

நான்  அவளோட தோளைதான் தொட்டேன் இவ பின்னாடி நின்னு கிஷோரற்னு  கத்தினா.. அவ்வளவுதான்  இவ கீழே கோவிசிட்டு வந்துட்டா.. நான்  எவ்வளவு  சொல்லியும் கேட்கலைஅன்றைக்கு எல்லோரும்  கிளம்பற வரைக்கும்  இருந்தவ அதுக்கப்புறம் பேசவே இல்லை. நானும்  தினமும்  கால் பண்ணினேன். நேற்று  வீட்டுக்கும் வந்தேன் இவ பேசவே மாட்டேங்கறா..

இன்றைக்கு எல்லோரும்  மண்டபத்துக்கு  வந்தாச்சு எனக்கு  கால் பண்ணி நான்  வரமாட்டேன்  இந்த  கல்யாணத்துல இஷ்டம்  இல்லன்னு சொல்லறா..

மலர் எழுந்தவள் நிஷா உனக்கு  நிஜமாகவே  பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எத்தனை வருசமா இந்த  கல்யாணத்துக்குக்காக போராடிக்கிட்டு இருக்கிறீங்க.. இப்ப தான்  ஒரு  வழியா ஓகே  சொன்னா நீ இப்படி  செஞ்சா எப்படி  கிளம்பு

நீ பேசாமல் இரு. இப்பவே இப்படி பண்ணறவன் கல்யாணத்துக்கு  அப்புறம்  இத மாதிரி செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்  என்னால முடியாது.

கிஷோரோ ஏய் நான்  தப்பும் செய்யலடிநீ ஏன் இப்படி  பேசிவிட்டு இருக்கற அன்றைக்கு  ரெண்டு  நிமிடம்  வெயிட் பண்ணி இருந்தன்னா முகத்தை பார்த்துட்டு ஸாரி  கேட்டுவிட்டு வந்து  இருப்பேன் அதுதான்  நடந்து  இருக்கும்.

கிஷோர் நான்  நம்ப மாட்டேன்  அவ எத்தனை நாளை உன் பின்னாடி சுத்தினா தெரியுமா. நீ என்கிட்டேயும் பேசிட்டே அவள்கிட்டேயும் ரூட் விட்டு  இருக்கற.. அவளை சமாதானம்  பண்ண போய் இருக்கற நான்  வந்ததும் எனக்கு  தகுந்தமாதிரி கதை சொல்லிட்டு இருக்கற..

ஏய்.. இதென்ன  நீ புதுசா கதை சொல்லற

கேட்டிருந்த அபி.. சிஸ்டர்  நீங்க  கேக்கறது சரி தான்  இவங்கள  நம்ப முடியாது. நீங்க  எடுத்த  முடிவுதான்  கரெக்ட்வா மலர் நாம கிளம்பலாம்.

இப்போது மலர்   அபி என  கத்தியிருந்தாள்அபி அருகில் சென்றவள்  அபி நீயும்  நானும்  எதுக்கு  வந்து  இருக்கிறோம் தெரியுமா பேசி அனுப்பி வைக்கநீ இந்த  மாதிரி  பேசினா இவங்க இப்போதைக்கு  போக மாட்டாங்கநிஷா ஏதோ தப்பா யோசித்து  வச்சி இருக்கற.. உன் வீட்டிலேயும் சரி அவனோடு வீட்டிலேயும் சரி சம்மதிக்காமல் எவ்வளவு  போராடுனிங்க இப்ப இப்படி  சொன்னா எப்படிஇத்தனை நாள் கிஷோரை புரிஞ்சிகிட்டது இவ்வளவு தானா.ஏதோ சின்ன  மிஸ் அண்டர்டேன்டிங் இத பெருசு பண்ணாத..யோசித்து  பாரு. இத்தனை வருசம் நடந்தத. ஒரே நிமிஷத்தில் எதுவுமே மாறாதுஅன்றைக்கு நடந்தது எதிர்பாராமல் நடந்தது அதையே சொல்லிட்டு இருக்காத..முதல்ல புறப்படு ..

நிஷா அமைதியாக  ஒரு புறம் அமர்ந்திருக்க இரண்டு நிமிடம்  யாருக்குமே பிடிக்காத மெளனம் நிலவியது


ஆளுக்கு ஓரு புறம் அமைதியாக  அமர்ந்திருக்க அபிதான் இப்போது  பேச ஆரம்பித்தான். ப்ரோ இவங்க சரி வர மாட்டாங்க.. உண்மையா இருக்கறவனை பார்த்தா நூறு சந்தேகம்  வரும். நீங்க  உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி  வேற நல்ல  பொண்ணா பார்த்து  கல்யாணம் பண்ணிகங்க  இந்த  பொண்ணு  வேண்டாம் ப்ரோ ..

அபி நீ பேசாமல் இருக்கறையாமலர் சத்தமிட

அப்புறம்  என்ன  மலர்  எத்தனை நேரம் சொல்லஇங்கே  பாருங்க கிஷோர் உங்களுக்கு  பொண்ணு  கிடைக்கலைன்னா சொல்லுங்க. என்னோட ஆபீஸ்ல ஒவ்வொரு  பொண்ணும் லட்டு மாதிரி  அழகா இருக்கும்  அதில ஒன்றை பார்த்து  ஓகே  பண்ணுங்க . இவங்க  கால முழுசுக்கும் சந்தேக பட்டு நம்ம வாழ்க்கையையும் நரகமாக்கிடுவாங்க

உண்மைய சொல்லுங்க  கிஷோர்..அன்றைக்கு ஏன் அங்கே  போனிங்க

அதுநிஷா உனக்கே தெரியும்  நாம பார்த்து பேசுவோம் மத்தபடி என்னோட கை கூட உன் மேல பட்டது இல்லை. நம்ம கல்யாணத்துக்கு  வீட்ல சம்மதிச்சிட்டாங்கசோசின்னதாய் உனக்கு  ஒரு  கிஸ்

என்னது என நிஷா  கேட்க

அபியோ இப்படி  தான்  இருக்குமின்னு நினைச்சேன்..அத மாதிரி  தான்  நடந்து  இருக்கு .

ஸாரி  நிஷாஅன்றைக்கு அப்படிதான்  நினைச்சு அங்க வந்தேன். அது வேற மாதிரி  ஆகிடுச்சி. நான் தப்பானவன் எல்லாம்  இல்ல ..
புரிஞ்சிக்கோநீ இல்லாம என்னால வாழ்வே முடியாது நிஷா..

நிஜமாகவா சொல்லற..

ப்ராமிஸ் உன் மேல ..

ஸாரிடா நான்  தான் உன்ன  தப்பு தப்பான புரிஞ்சிகிட்டேன். மன்னிச்சிடு என்றவள் அவன் அருகில் வந்து அவன் தோள் சாய்ந்தபடி மறுபடியும்  அழ ஆரம்பிக்க

ஏய் போதும்பா அழாத நான் தான்  உனக்கு  புரிய வச்சி இருக்கணும் . தோள் சாய்ந்தவளை தட்டி கொடுத்து  பேசிக்கொண்டு  இருக்கஇதை பார்த்த அபிக்கு மட்டும் அல்ல மலருக்கும் உதட்டில்  சிரிப்பு உதயமாகி இருந்தது. அப்போது கிஷோருடைய போன் சிணுங்கியது. போனை பார்த்தபடி அம்மா கூப்பிடறாங்க என்றவன் அட்டென் செய்ய..

கிஷோர் மண்டபத்துக்கு  எல்லோரும்  வர ஆரம்பிசாசிட்டாங்க. எங்கே நிஷாவே  கூப்பிட்டுட்டு  வரேன்னு போன  ரெண்டு  பேரும்  இன்னும்  இங்கே  வரல.. எங்கே இருக்கற

அம்மா கிளம்பியாச்சுமாஇன்னும்  ஐந்து  நிமிடம்  அங்கே  வந்துடுவேன்.

நிஷா நாம சீக்கிரம்  கிளம்பனும்.

மலரிடமும் அபியிடமும் திரும்பிய நிஷா ஸாரி   மலர் உங்களையும் இங்கே வரவச்சி டென்சன் பண்ணினதுக்கு…  நாம போகலாம்  என நடந்து  கதவை திறக்ககதவு திறக்கவில்லை.

கிஷோர்  கோபத்தில் சாவியை எடுத்து  வெளியே  வீசினேன்னே.. மை காட் இப்ப எப்படி  போறது.. மாற்றி  மாற்றி  கதவை ஆராய்ச்சி  செய்ய ஆரம்பித்தனர் நால்வரும்.

கதவு வெரி ஸ்டிராங்  வேற கீ இருக்கா

இல்லையே..

அபிதான் சுற்றிலும்  பார்த்தவன் இந்த  பக்கம்  இன்னொரு  கதவு இருக்குதே இது எங்கே போகும் என்றபடி கதவை திறக்கஅது சின்ன  பால்கனிஅங்கிருந்து  பார்க்க தோட்டம் அழகாய் காட்சி தந்தது.

இந்த வழியாக  கீழே போக முடியுமா

போகலாம்  அபி குதிச்சா கால் உடையும்

ஏதாவது  கயிறு  மாதிரி இருக்கா

நிஷாவோ இங்கே  அந்த  மாதிரி  எதுவும்  இல்லை

கீழே இறங்கற மாதிரி ஏதாவது  தேடுங்க

மலரோ நிஷா  சாரி  ஏதாவது  இருக்கா அத பிடிச்சிட்டு கீழே இறங்கிடலாம்.

பாட்டியோடது ஓன்று  இருக்கு இரு எடுத்து  தர்றேனு. பிரோவை திறந்து  தர.. அபியோ உன்னோட  பாட்டி கை விட்டுட மாட்டாங்களே

மாட்டாங்க.. இந்தா இத என்ன  செய்ய போறிங்கவாங்கி பால்கனியில் ஒருபுறத்தை கட்டியவன் கிஷோரை பார்த்து  முதல்ல நீ இறங்கு கிஷோர் உன் வீட்ல ஏணி இருக்கா

இல்லை

சரி பார்த்து  இறங்கு பத்தடி தான்  இருக்கும்  விழுந்தாலும்  புல் தரைதான் அடி அவ்வளவா படாது .

முதலில்  கிஷோர் இறங்கினான். முதலில்  இறங்கிய கிஷோரை பார்த்து அபிகிஷோர் உங்களோட  வாரிசுகளுக்கு  உங்களோட கல்யாணத்தை கதையா சொல்லலாம். அவ்வளவு சுவாரஷ்யமா இருக்கும்அடுத்தது நிஷா நீங்க  இறங்குகுங்க
அவளையும் மெதுவாக  இறக்கி விட
அவள் இறங்கும் முன்பே கிஷோர் அவளை கீழே விழாதவாறு அழகாய் தாங்கி இருந்தான்

மலர் நீ இறங்கறயா

இல்லை  அபி நீ இறங்கு அடுத்ததாக
நான்  வரேன். என்றவள் இவன் இறங்கவும் அடுத்ததாக மலர் இறங்க ஆரம்பிக்க மூன்று  பேர் இறங்கும் போது  அமைதியாக  இருந்த சேலை இவள் இறங்க ஆரம்பிக்கவும் மேல் புறமாக கிளிய  ஆரம்பிக்க  பயத்தில் கத்தியபடி கண்களை இறுக்கமாக மூடியவள் கீழே விழுந்தாள்.

உருகாதே பனிமலரே!!

உருகாதேவெண்பனிமலரே_11

கீழே விழப்போகிறோம் என்ற  உணர்வு தோன்றவும் கண்களை மூடியபடி கத்திக்கொண்டு விழுந்த மலரை ஓரு நொடியில் தாங்கி இருந்தான் அபி தாங்கியவன் அவளோடு சேர்த்து  விழபுல் தரை அவனை இதமாய் தாங்கி இருந்தது.

விழுந்ததை பார்த்து போதே அருகில்  வந்திருந்தனர் நிஷாவும் கிஷோரும்
ஆனால்  விழுந்த  மலர்தான் கண்கள் திறக்காமல் அவன்  மேலிருந்தும்  எழாமல் விழுந்திருந்ததை பார்த்த கிஷோரோ  என்ஜாய் என்பது போல கையை காட்டியவன் நிஷாவை அழைத்து  கொண்டு  சென்றிருந்தான்.

சுகமாய் கைகளில் தாங்கி இருந்தவன் தன் மேல் விழுந்தவளை பூக்களை போல் தாங்கியபடி அவளின் முகம் பார்ந்தவன்  கண் திறக்காமல் இருந்தவளை சில நிமிடங்கள் வரை நன்றாகவே ரசித்தான்.

இரண்டு  நிமிடம்  வரை எதுவும்  சொல்லாமல் தன் மேல் தாங்கியவன் மலர் இப்பவே என்னுடைய   இடுப்பு  போச்சுன்னு நினைக்கிறேன். சொன்னவன் அதையே சொல்லி கொஞ்ச  நேரம் இவளிடம் விளையாட நினைத்தான்ஏய் எழுந்திரு மலர் இடுப்புல புடிச்சிடுச்சின்னு நினைக்கறேன்அம்மா   வலிக்குதுஇடுப்பு  வலிக்குது என்ன நன்றாகவே சத்தமிட்டான்.

கடைசி நிமிடத்தில்  தன்னை  தாங்கி பிடித்தவனின் மேல் விழுந்திருந்தவள் இவனது சத்தம்  கேட்டு கண்விழிக்க
திறந்ததும்  பார்த்தது அவனது முகத்தை  தான். அவசரமாக அவன் மேலிருந்து  எழுந்தவள் இவன் எழ கை கொடுத்தபடிஸாரி  நான்  வேணும்ன்னு  விழல.. அந்த சாரி கிளிஞ்சிடுச்சி

அவங்க  ரெண்டு  பேரும் எங்க  போணாங்க

சீக்கிரமே  கேட்டுட்ட மலர்அவங்க  இந்நேரம் மண்டபத்துக்க போய் இருப்பாங்க

அவங்க வேலை முடிஞ்சதும் விட்டுவிட்டு  போயிட்டாங்களா
சரி நீ எழுந்திரு அபி

ஏய்.. என்ன  பொய் சொல்லறேன்னு நினைக்கறயாநிஜமாகவே  எழுந்திருக்க முடியல.. இதுக்குதான் என்னை வம்படியா கூப்பிட்டுட்டு  வந்தியாநான் வரமாட்டேன்னு அப்பவே சொன்னேன் நீ கேட்கல இப்பபாரு என்னால முடியலபோச்சு இனி எப்படி  வீட்டுக்கு  போறது

அபி நிஜமாகவே  முடியலையா. இந்தா கையபிடிச்சிட்டு மெதுவாக எழுந்திரு

என்ன  வெயிட்  நீ.. எழுபது இருப்பியா..அபி கேட்க

சும்மா சொல்லாத ஐம்பத்து அஞ்சு தான்இதுக்கே இப்படி  சொன்னா எப்படியாம்.. கைத்தாங்கலாக அவனை எழுப்பியவளின் மேல் மொத்தமாக  சாய்ந்திருந்தான் வலிக்குது நிற்க முடியலை என்றபடி

அபி நான்  வேணும்னா வாட்ச்மேனை கூப்பிட்டுட்டு  வரவா

அதெல்லாம்  வேண்டாம்  உன்னோட  தோள்ல கை போட்டுக்கறேன் அப்படியே கார் வரைக்கும்  கூப்பிட்டுட்டு  போயிடு நாம வீட்டுக்கு  போய்விடலாம்கைத்தாங்கலாக அழைத்து  நகர்ந்தவளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள்  சிரிப்பு  குமிழிட்டு கொண்டு  இருந்தது
அபி உன் காட்ல  அடை மழைதான்டா என்ன சொன்னாலும் நம்புவா போல இருக்கே.. இன்னும்  ரெண்டு  நாளைக்கு இதை வச்சே இவகிட்ட  வேலை வாங்கலாம்  போலவே
நினைத்தவன் வண்டி  ஓட்ட முடியுமோ என்னவோ தெரியலையே

பரவாயில்லை  அபி நான்  டிரை பண்ணறேன் நேரா ஹாஸ்பிடலுக்கு  போயிடலாமா

ஐயோ ஹாஸ்பிடலுக்காவேண்டாம்  வீட்டுக்கு  போயிடலாம். அங்கே  போனா என்கிட்ட தைலம் இருக்கு போட்டு  பார்க்கலாம் சரி ஆகிடும்.

ஏன் இப்படி  பயந்துக்கற..

எனக்கு  ஊசின்னா கொஞ்சம்  பயம்.
உண்மைமா நம்பு.

பேசியபடி வந்தவள்  இவனை பார்த்து  நிஜமாகவே  அடி பட்டிருக்கா..உன்ன பார்த்தா எனக்கு  சந்தேகமாக இருக்கு

மறுபடியும்  அம்மா என்றவன் இத மேலிருந்து விழும்போது யோசித்து  இருக்கணும் அப்படி  கத்தட்டு விழுந்தகாப்பாத்தி விட்டா இப்படி  எல்லாம்  தான்  பேர் வரும். இந்த  பொண்ணுங்க ரொம்ப  மோசம். எப்பவுமே சந்தேகமாக தான்  எல்லாறையும் பார்க்கறாங்க. நல்லதுக்கு காலமே இல்ல அபி..அம்மா  சொல்லறது சரிதான். ..

நார்மலாதானே கேட்டேன் அதுக்கு ஏன் எல்லா பொண்ணுங்களையும் சொல்லுவேஇதோ கார் வந்தாச்சு உள்ள  உட்காருநான்  வண்டி ஓட்டறேன். இவனுக்கு  வண்டியை திறந்து  விட்டவள் உடுத்த புறம் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தாள். கொஞ்ச நேரம் பொறுத்துக்க வீட்டுக்கு  போயிடலாம்.

இவன் சீட்டில்  சாய்ந்தபடி அமர்ந்து  கொள்ள இவள் மிதமான வேகத்தில்  வண்டியை  எடுத்தவள் வீடு வரும் வரைக்கும் மெதுவாக  அவனிடம்  பேச்சு  கொடுத்த  படி வந்து  சேர்ந்தாள். இறங்கும் தருவாயில்  அபிஅப்பாகிட்ட சொல்லாத.. சங்கட படுவாங்க..

சொல்ல கூடாதா என்னோட ரூம்புக்கு எப்படி  போறது. நடக்கவே முடியல ரொம்ப  வலிக்குது. எப்படியும்  பார்த்தா சொல்ல தானே செய்யணும்.

இப்ப அப்பா தூங்கி  இருப்பாங்க. நான்  உன்னை ரூம்ல விட்டுடறேன். நாளைக்கு  காலையில்  பார்த்துக்கலாம் சரியா

ம்ஓகே  ஓகே  வா இந்த பக்கம் வா தோள்ல கை போட்டுக்கறேன் ரூம்ல
விட்டுடு. காலையில்  பார்க்கலாம். சரி என்றவள் இவனை மறுபடியும்  அழைத்து  சென்றவள் இவனது ரூம்பில் கட்டியில்  இவனை அமர்த்தியவள் இவனது முகம் பார்க்க அதிக வலியை தாங்குவது போல் முகத்தை  வைத்திருந்தான்.

ஸாரி  அபி.. படுத்துக்கோ வரேன் என்றபடி வெளியேறியவளை பார்த்து  இருந்தவன் 



அவள் அந்த  புறம் நகரவும் இந்த  பக்கம்  குத்தாட்டம் போட ஆரம்பித்தான். அபி செமடாமுகத்தை  பார்த்தா பேச மாட்டியாரெண்டு  நாளா எவ்வளவு  கடுப்பேத்தின என்னைவாடிவா இன்னும்  ரெண்டு  நாளைக்கு  எனக்கு  மட்டும் தான்  நீ வேலை செய்ய  போறஉன்னை எங்கேயும்  நகர விட போறது இல்ல.. எப்படி  அப்பாவுக்கு தெரிய கூடாதாஇது ஒன்னே போதும்..உன்னை  வளைச்சி வளைச்சி வேலை வாங்கஆனாலும்  நீ சோ ஸ்வீட்ராஎன்ன  சொன்னாலும் நம்பற..

மலர் வரும் சத்தம்  கேட்க வேகமாக  தனது பெட்டில் திரும்பி படுத்துவன் அம்மா  என முனங்கியபடி  கண்கள் மூடி இருந்தான்.

அபிநான்  தான்  வரலாமா..

ம்ம் என்றவனிடம் அபி  நீ இன்னும் சாப்பிடலல்ல. தோசை எடுத்துவிட்டு வந்து  இருக்கறேன் சாப்பிடறையா..

அப்பா எங்கே மலர்

அவர் ரூம்ல போய் படுத்திட்டார். இந்தா இத எடுத்து  சாப்பிடுவல்ல..

குடு சாய்ந்தபடி அமர்ந்திருக்க  அவனது கைகளில் தந்தவள் அருந்த தண்ணீரை  அருகில்  எடுத்து  வைத்து விட்டு சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே இருந்தாள். சாப்பிட்டுமுடிக்கவும்  இருந்த  பாத்திரத்தை எடுத்து  சென்றவள் சில நிமிடத்தில்  திரும்ப வந்தாள். அபி என அழைத்தபடி..

தைலம் கொண்டு வந்து இருக்கிறேன்  போட்டு விடவா

என்னதுநீயா என்றபடி இவளை பார்க்க..

ஸ்பிரே தான்முதுகு காட்டு ஸ்பரே பண்ணி விடறேன் சரியாகிவிடும்.

இரு.. என்றவன் கடைசி நொடி அங்கே வச்சிட்டு போ மலர் நான் பார்த்துக்கறேன்.

நீ எப்படி  போடுவ

எப்படியோ போட்டுக்கறேன்போ மலர் என கூறியவன். குட் நைட் கதவைத் சாத்திட்டு போ எனக்கு  தூக்கம் வருது. என்னை பற்றி  யோசிச்சிட்டு தூங்காம இருக்காத .. இப்ப அவ்வளவா வலிக்கல சரியா

ம் ..என்றபடி வெளியேறினாள் மலர்..தனது அறைக்கு  சென்றவள் நேரம் பார்த்தவள் நேரம் பத்தை நெருங்கி  கொண்டு  இருக்க ஏற்கெனவே  இந்த சில நாட்களாய் அபியின் தங்கையிடம்  நல்ல நட்பு உதயமாகி இருந்தது. சரியாக  தினமும் பத்து  மணிக்கு  அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். பத்து  மணி ஆகவும் அவள் அழைக்கவும் சரியாக  இருந்தது.

மலர் எப்படி இருக்கறஇந்த  நாள் நல்லா போச்சுதுதா..

எங்கே நாம ஒன்று  நினைச்சா அது வேற மாதிரி ஆகுதுமனசே சரியில்லைபாதாரிகா
நீ என்ன  திட்ட கூடாதுநான்  வேணும்ன்னு எதுவும் செய்ய

என்னது மொட்டை  மொட்டயா பேசற எனக்கு  எதுவுமே  புரியவில்லை. என்னுடைய  அண்ணா  கூட இருக்கும் போது மனசு சரியில்லையா.. தப்பாச்சே  நான்  ஏன்  உன்னை திட்ட போறேன். மலர் பேஸிக்கலி நான்  கொஞ்சம்  தத்தி..
புரியற மாதிரி  சொன்னால்தான் எனக்கு  புரியும் அரை குறையா சொன்னா சத்தியமா புரியலைடா

இரண்டு  நிமிட அவகாசத்தில்  நடந்ததை சொல்லி  முடிக்க கேட்டவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

கூடவே ப்ளீஸ்  தாரு உன் அண்ணா  எதுவும் சொல்லலஅடி பலமா இருந்தா என்ன செய்யஎன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. நீ கேட்டு சொல்லறையா. தைலம் போட்டு விடறேன்னேன் திட்டி அணுப்பிட்டாங்கஅவள் சொல்லவும்….அவளுக்கு  தெரியாமல்  இருக்க வேண்டிய மொபைலை மூடியபடி  சிரித்தவள் இவளிடம் சிரிப்பை அடக்கியபடி..
இதுக்கெல்லாம் நான்  திட்டுவனா.. பயப்படறமாதிரி இருக்காது நான்  அண்ணா  கிட்ட பேசிட்டு உன்கிட்ட சொல்லறேன் . போனை வைத்தவள் அதே சிரிப்போடு அபியை அழைத்திருந்தாள்.

அபி நம்பரை பார்க்க தன்னை  கலாய்க்கவே தனது தக்கை போன் செய்கிறாள் என நினைத்தவன்  ஹோய் என்ன  அதிசயம் இந்நேரத்துக்கு கூப்பிடறமச்சான்  பக்கத்தில்  இல்லையா..

அவர் தூங்கிட்டார்ணா..ஏன் அவர்கிட்ட பேசணுமா..

வேணாம்மா. அவர் பேசினா என்னால பதிலே பேச முடியாதே..

அந்த பயம் இருக்கட்டும்என்னுடைய  ஓரே அண்ணாவோட இடுப்புல அடி பட்டுடிச்சாம் அதுதான்  நலம் விசாரிக்க கூப்பிடறேன் ஆனால் சார் ரொம்ப  ஹேப்பியா இருக்கறமாதிரில்ல தோணுது.

சொல்லிட்டாளாஅதெல்லாம்  இல்லைசும்மா சின்ன  விளையாட்டு..
நான்  நல்லா  தான்  இருக்கிறேன்.

உன்னோட  வாய்ச கேட்டாலே தெரியுது
இப்படியா மிரட்டுவ..சரிண்ணா எப்ப அப்பாவை வந்து  பேச சொல்லலாம். எத்தனை  நாள் இப்படியே சின்ன  பிள்ளை  மாதிரி  விளையாட்டுண்டுட்டு இருக்க போறே.. இனி நீ வேலையில்  ஜாயின் பண்ணினா அப்புறம் லீவு கிடைக்கிறது கஷ்டம்ல்ல

தாரு.. இவள் என்ன  நினைக்கறான்னே தெரியலையே தைரியமாக அப்பாவை வரச் சொல்லலாம்  அப்பா முன்னாடி பிடிக்கவில்லைன்னு சொல்லிட்டா
அப்புறம்  சரி பண்ணறது கஷ்டம்டா..
இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம்
அப்புறம் ஏதாவது  யோசிக்கலாம் அவளுக்கும் என்னை பிடிக்குது இது நல்லதாகவே தெரியுதுஆனாலும் அவளுக்குள்ள நிறைய குழப்பம்  இருக்கு  அதிலேயிருந்து அவ வெளிய வரணும் அப்புறம் தான்  கல்யாணத்தை  பற்றி  பேச முடியும்.

என்னணா செய்ய போற..

இப்போதைக்கு  இன்னும்  ரெண்டு  நாளைக்கு  அவள என்கூடதான்  வச்சிக்க போறேன் அப்புறம் என்ன  பண்ணலாம்ன்னு யோசிக்கணும்.

சரிண்ணா என்ஜாய் நானும் கட் பண்ணறேன்


என்னுடைய  கால்ஸ்க்காக அண்ணி வெயிட்டிங்  குட் நைட்ணா..அடுத்ததாக
மலரை அழைத்தவள்மலர் அண்ணாவுக்கு இப்போதைக்கு அவ்வளவாக வலிக்கலைன்னு சொன்னாங்க. நீ தூங்கு காலையிலே அவனை நல்லா  பாத்துக்கோ.. நான்  மறுபடியும்  காலையில் உன்கிட்ட பேசறேன் என்ன கட் செய்தாள்.

அடுத்த  தாள் காலை ஏழு மணிக்கே அபியின் கதவை தட்டி இருந்தாள் மலர்அபி வலி  குறைஞ்சிருக்கா

நேற்று  நடந்ததை மறந்து  இருந்தவனோ என்ன  வலி என ஆரம்பித்து…  இவள் முகம் பார்க்கவும்.. லேசா இருக்கு என்றான்.

அபி இப்ப என்ன  செய்ய.. அப்பா எழுந்ததும் உன்கிட்டதானே பேசுவாங்க
நீ ஹால் வரைக்கும் வந்து  உட்கார்ந்துக்கோ.. அப்பா போகவும் மறுபடியும்  ரூம்ல வந்து  ரெஸ்ட் எடு சரியா..

ம்நீ போ வரேன்..

அபி  நடக்க முடியும் தானேநான்  வேணும்னா ரெண்டு  நிமிஷம் கழித்து்  வரேன்  உன்ன ஹால் வரைக்கும்  கொண்டு  வந்து  விடஅவள் சொன்னதற்கு எல்லாம்  தலையை மட்டும்  ஆட்டி வைத்தான் எங்கே பேசினால் சிரித்து விடுவோமோ என்ற பயம்  புதிதாக  வந்து  இருந்தது.

அப்போது அந்த  நிமிடத்தை அழகாக ரசிக்க ஆரம்பித்து  இருந்தான் அபி. இவனுக்காக .அவளுடைய பதட்டம்..  அப்போது மட்டும்  அல்ல. அவளுடைய  தந்தை  புறப்பட்டு போகவும் இவளும் தனது வண்டியை எடுத்து  போனவள் இவனுக்காக மொத்த  மெடிக்கலையும் வாங்கி  வந்திருந்தாள்.

நீதான்  ஹாஸ்பிடல் வர மாட்டேங்கற.. இதெல்லாம்  சீக்கிரம்  சரி ஆகறதுக்கு. இதுல  ஹாட் வாட்டர் ஊற்றி  ஒத்தடம் கொடுத்தா உடனே வலி சரியாகிடுமாம். ஓகே வா.

எல்லா விளையாட்டும் அடுத்த  நாள்
அவளுக்கு தெரியவரப் போவதை அப்போது அவன்  உணரவில்லை.

உருகாதே!!!

உருகாதேவெண்பனிமலரே_12

அடுத்த  நாள் காலை எழும் போதே நிஷா அழைத்திருந்தாள். மலர் தேங்க்ஸ் மலர் சரியான  நேரத்தில்  வந்து  எனக்கு  அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச.. ஒரு வேளை என்னால இந்த  நிச்சயதார்த்தம்  நின்றிருந்தா
என்னால யோசித்து  பார்க்கவே முடியல.. கிஷோர் இல்லாம என்னால வாழ்ந்து இருக்க முடியாது . அவங்களோட பேமிலி எனக்கு  ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க குடும்பத்தில் என்னை ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க..


ஷப்பா சமாதானம்  ஆகியாச்சா  இப்ப எங்க இருந்து கூப்பிடற..

வீட்ல இருந்துதான். ரெண்டு  பேரும்  மூவிக்கு  போக ப்ளான்  பண்ணி இருக்கிறோம்வந்து  பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லி  இருக்கிறான் . நேற்று  ஏன் வரல

மூவி என சொல்லவும் அபியை முதல் முதலாய் பார்த்தது ஞாபகம் வந்தது. முழுதாக ஓரு வாரம் முடிந்திருக்க அவனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை நினைத்தவள்எப்படி இந்த மாற்றம் வந்தது என இவள் மனம் யோசித்துக்கொண்டு இருக்க
எதிர் முனையில் நிஷாவோ மலரு இருக்கறயாஇல்லை டிரிம்முக்கு போயிட்டயா அண்ணா கூட எனவும்..

எந்த அண்ணா கூட

ஏய் ஏமாற்றாதயாருகிட்ட நேற்று பார்த்தனே வேகமாக விழறதுக்கு முன்னாடி புடிச்சது என்ன.. மேடம் ஏதோ மெத்தையில் படுத்தமாதிரில்ல கண்ணு மூடி கிடந்திங்க..  உண்மைய சொல்லு அந்த  பையனைதானே உங்க அப்பா உனக்கு  பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க..ஓரே ரொமான்சா அதனால்தான் வராமல் அப்படியே 
போய்டிங்களா..

லூசு.. லூசு மாதிரி  உளராத.. அவனே என்னை கீழே விழாமல்  பிடிக்கறேன்னு இடுப்பு  பிடிச்சி வலிக்குதுன்னு சுத்திட்டு இருக்கறான் நீ பூதுசா கதை சொல்லற..

ஹா..ஹா இப்படி  வேற சொல்லி  இருக்கறாங்களாநானும்  கிஷோரும் வரும்  போது கண்ணடிச்சி பை சொல்லி  அனுப்பினாங்க.. அது பொய்யா.. நீதான்  பார்த்து  இருக்கலைன்னா
நான்  பார்த்தேனேஅவங்க கண்ணுல எவ்வளவு  லவ் தெரியுமா..உன்னை மட்டும் தான்  கண் சிமிட்டாம பார்த்துட்டு இருந்தாங்க.. நீ சொல்லாட்டி போயேன் அடுத்த தடவை அவங்கல பார்க்கும் போது நேரடியாகவே கேட்டுக்கறேன்.

நிஷா காலையில் போன் பண்ணி கடுப்படிக்கறையாநீ போனை வை..

ஏன்மா உண்மைய சொன்னா கோபம் வருதா.. நம்ம ப்ரண்டுங்க  யாருக்கும்  சொல்ல மாட்டேன்  ப்ராமிஸ்

நிஷா இதே மாதிரி  பேசிட்டு இருந்த இது தான்  நான்  உன்கிட்ட பேசறது கடைசியாக  இருக்கும்  புரியுதா

அம்மா தாயே அப்படி  எதுவும்  பண்ணிடாத. நான்  இனி இத பற்றி பேசலை ஓகே வா. இன்னும்  ஒரு  மாதம்தான்  இருக்கு என்னுடைய  கல்யாணத்திற்கு  என்னுடைய  எல்லா  ஃபங்சனுக்கும் நீ கூட இருக்கணும்
அத முன்னாடியே சொல்லிடதான் கூப்பிட்டேன்பை போனேன் வைக்கறேன்டி என்றபடி கட் செய்தாள்.
இவளோ தனது அறையில்  இருந்தபடி இவனை எட்டி பார்க்க அங்கே  இவளது தந்தையோடு பேசிக்கொண்டு  இருந்தான்அவனது முகத்தை  ஆழ்ந்து பார்க்க வலிக்கான எந்த  அறிகுறியும் தெரியவில்லைஒருவேளை நம்மகிட்டதான் நடிக்கறானோ.. அவள் சொல்லறதுதான் நிஜமாக இருக்குமோயோசித்தபடி  நடை பயின்று கொண்டிருந்தாள்.

அங்கே அபியோஎன்ன  அங்கிள் முகத்தையே பார்க்கறிங்க என்ன  ஆச்சு

அத தான்  நான்  கேட்கனும் என்ன  ஆச்சுஎன்னோட பொண்ணு  நேற்றிலிருந்து உன்கிட்ட  பேசவே விடல கூடவே உன்னை ஸ்பெசலா வேற கவனிக்கறா..உன்னை  எழுந்திரிக்க விடாமல் அத்தனை வேலையும்  செஞ்சு தர்றா.. எனக்கே  என்னுடைய  கண்ணை நம்ப முடியலை.. ஆச்சர்யமா இருக்கு..

அங்கிள் ஒரு  சின்ன  விளையாட்டு  ரெண்டு  நாளைக்கு  இப்படி தான்  இருக்கும்  கண்டுக்காதிங்க

என்னவோ சொல்லற அபி.. எனக்கென்ன நல்லது நடந்தால் சரிதான்.

அதெல்லாம்  நல்லதாகவே நடக்கும்  அங்கிள் என்றவன்   எதிரில் வந்த மலரிடம் காபி ஒரு  டம்ளர்  கிடைக்குமா என கேட்க

வெயிட் பண்ணுங்க கொண்டு வரேன் என்றபடி அப்பா உங்களுக்கு

வேண்டாம்டாநான் இப்ப கிளம்பிடுவேன். ஏன்மா இன்றைக்கு  வீட்டு வேலை செய்யற அம்மா வரலையா..

ஆமாம்பா அவங்க  பேத்தி  ஊர்ல இருந்து வந்து  இரூக்கறாங்கலாம் அதனால லீவு எடுக்க சொல்லிட்டேன்.
நான்  இன்றைக்கு வீட்டு வேலையை பார்த்துக்கறேன்பா

சரிடா.. என்றவர் சிறிது  நேரத்தில்  போன் வர குடோனுக்கு  கிளம்பி இருந்தார். இவள் சமையல் செய்தபடி ஹாலில் இருந்தவனை திரும்பி பார்க்க டிவியை ஆன் செய்திருந்தவன் அதிலேயே ஒன்றி இருந்தான்முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது அவனது திருட்டு தனம்
படவா என்னையவே ஏமாற்றறையா..
நீ இன்றைக்கு  மாட்டினடா.. மனதில் நினைத்தவள்.. சாதத்தை குக்கரில்  வைத்தவள் நேற்றிலிருந்து வேலையா வாங்கறஇன்றைக்கு  எல்லா  வேலையும்  நீதான் செய்யறஇல்ல செய்ய வைக்கிறேன்.

அருகில்  இருந்த பாத்திரத்தில்  தண்ணீர்  எடுத்தவள் யோசிக்காது தட்டி இருந்தாள் கூடவே அம்மா  கால்ல தண்ணீர்  கொட்டிடுச்சி என்றபடி. சத்தம்  போட அடுத்த நொடி அருகில் நெருங்கியவன் இவளை தனது இரண்டு  கைகளால் தூக்கி இருந்தான் சுடுதண்ணீர்  வச்சா பார்த்து  எடுக்க மாட்டியா.. எரியுதா என கேட்டபடி 

 


இவளை ஹாலிற்கு தூக்கியபடி வர.. இவனையே பார்த்தவள் உனக்கு  இப்போ இடுப்பு  வலிக்கலையா.. அப்புறம்  சார் நான்  வெறும்  தண்ணீரை  தான்  கொட்டினேன். சுடுதண்ணீர்ரை  இல்ல.. இவள் சொன்னது துவனியே தெரிந்து  விட்டது தான்  நன்றாக மாட்டிக்கொண்டது. இவளை பார்த்தபடி தூக்கிய கைகளை விடப்போகநன்றாகவே அவனது சட்டையை இருக்கி பிடித்திருந்தாள் மலர்.

என்ன  கீழே விட்டு  என்னோட இடுப்பை உடைக்க போறியா.. இவள் கேட்ட வேகத்திலேயே இல்லை  என்பது போல தலையாட்டினான்.
பிச்சிடுவேன்.. என்ன  அப்படியே ஷோபாவில் ஊட்கார வை..அது போலவே இறக்கி விட

குட் இப்ப என்ன செய்யறபோய் மதியத்துக்கும் நீயே சமைக்கறஎன்ன  அப்படி  பார்க்கற ரெண்டு  நாளா எத்தனை வேலை வாங்கின இன்றைக்கு  முழுதும்  நீதான் எல்லா  வேலையும் செய்யறவிடமாட்டேன்  உன்னை  …அப்பாவுக்கு  இன்றைக்கு  நிறைய வேலை இருக்குன்னு புறப்பட்டு  போய் இரூக்கறாங்க. நைட்தான் வருவாங்க. வேலை செய்யற அம்மாவும் வரலசோ என்ஜாய் சமையல் அறை இன்றைக்கு  உனக்கு  மட்டும் தான்.

மலர்  இது அநியாயம்  நான்  விளையாட்டுக்கு தான்  அப்படி  பண்ணினேன்.

அவன் சொன்னதை இடை மறித்தவள்
நானும்  உன்கிட்ட  விளையாடலாம் செல்லம்போங்க போங்க போங்க  போய் வேலையை கவனிங்க.. ஹலோ போறதுக்கு  முன்னாடி இந்த  நீயூஸ் சேனலை மாத்திட்டு கார்டூன் சேனலை வச்சிட்டு போங்க..

ஒரு  வயசு பையனோட தனியா இருக்கறேம்ன்னு பயம் இருக்கா உனக்கு

உன்னை  வீட்டுக்குல்ல விட்டது  என்னோட அப்பா தப்பான ஆளை இந்த  பக்கமே சேர்க்க மாட்டாங்க..அப்புறம்  தாரு வேற எப்பவுமே என்னோட அண்ணா இப்படி அப்படின்னு ஓகோன்னு சொல்லறா.. ஓவரா பேசிண ரிக்கார்ட் பண்ணி அவளுக்கு போட்டு காட்டிடுவேன்முதல்ல போய் வேலையை கவனி.. எனக்கு  சரியா  ஒன்பது மணிக்கு  பசிக்கும் ஓகேசொன்னதை கேட்டபடி தலையில்  அடித்துக் கொண்டு நகர்ந்தான்.

டிவியை பார்த்தபடியே  ஹலோ அபி சமையல்  ஆச்சாஇன்னும்  ஒன்பது ஆகறதுக்கு பத்து  நிமிடம்  தான்  இருக்கு அவ்வப்போது  கவுண்டவுன் வாசித்து  கொண்டிருந்தாள்.

நேரம்டாராஜாமாதிரி எல்லோரையும் மிரட்டிவிட்டு இருந்தா இவ நம்மல கூஜாவா ஆக்கிடுவா போல.. இப்படியாடா தனியா சிக்குவ .. ஒன்பது மணியை நெருங்கவும் உணவை தட்டில் எடுத்தவன்  மஹாராணி சாப்பாடு ரெடி என இவளிடம் தர

எட்டிப்பார்த்தவள் ஸ்பூன் போட்டு எடுத்துட்டு வாங்க  துரை அவனது பாணியிலேயே  பதில் தர..

எல்லாம்  நேரம் முனங்கியபடி எடுத்து  வந்தவன் இவளிடம் நீட்ட

ஸார் இப்படி  முன்னாடி உட்காருங்க..

எதுக்கு

அவசரபடாதிங்கசொல்லறேன்.. அப்படியே வாயை திறக்கறேன் ஊட்டி  விடு

ஏய்.. இதெல்லாம்  ஓவரு

என்ன  ஓவரு.. நீ செஞ்சதுக்கு நான்  செய்யறது ரொம்ப  கம்மி .. ஊட்டி  விடுதட்டில் இருந்து இரண்டு  ஸ்பூன்  ஊட்டி  விடவும் தட்டை வாங்கியவள் போதும்  போதும் நானே சாப்பிட்டுகறேன். உனக்கு  எவ்வளவு  கோபம் வரும்ன்னு பார்க்கலாம்ன்னு
பார்த்தேன். இட்ஸ் ஓகே  கொஞ்சம்  நல்லவன் தான் போல இருக்குஅபி உன்ன கட்டிக்கறவ ரொம்ப லக்கி எப்படி  கேட்கறயாநல்லா  சமைக்கறநல்லா  வீட்டு வேலையும் செய்யற

நல்லா  கொஞ்ச  கூட செய்வேன் பார்க்கறையா.. என்றபடி அவளை நெருங்கபோனை கையில்  எடுத்தவள் தாருஎப்படி  இருக்கற
சும்மா  தான் பாப்பா  என்ன  பண்ணறாஉன்னோட  அண்ணா  இங்கே  தான்  இருக்கறாங்க பேசறையா என்றவள்இவனிடம்  போனை தந்து விட்டு தோட்டத்தை நோக்கி நகர்ந்து இருந்தாள்.

அந்த  நேரம் போனை தந்து நகர்ந்தவள் அப்போது தான்  கவனித்தாள் அவன் சொன்னதை..

நல்லா  கொஞ்ச கூட செய்வேன். பார்க்கறையாஇவன் என்ன  நம்ம கிட்ட இப்படி  பேசறான். சரியில்லையே..மலர் இனி இவன்கிட்ட அளவாக பேசு.. இவள் அவனை ஊட்டி  விட சொன்னது ஓவர் என்பது அவளுக்கு  புரியவே இல்லை.

இங்கே போனை வாங்கியவளோ..என்னணாஇந்நேரத்துக்கு கூப்பிடற..

நீ வேற தாருஅவ கண்டு பிடிச்சிட்டா..

ஹாஹாஎன சிரித்தவள்..இனி என்ன  செய்ய போற

நல்ல வேளை கோப படலை அதுக்கு பதிலாக நல்லா வேலை வாங்கறா..
இப்படியேதான் நாள் போகுமா.. ஒரு  வேளை இவள் கல்யாணத்துக்கு  சம்மதிக்க மாட்டாலோ..கவலையாக இருக்கு..சண்டை போட்டு சமாதானம்  ஆகி மறுபடியும்  சண்டை  போட்டு  எனக்கே ஒரு மாதிரி  இருக்கு. நடக்குமாநடக்காதாதெரியவே இல்லை..தாரு என்ன  செய்ய..

இதற்குதான் என்ன  மாதிரி  அறிவாளிகிட்ட ஐடியா  கேட்கணும்ங்கறது.. அண்ணா  இனி நான்  பார்த்துக்கறேன் நீ என்ன  பண்ணற

என்ன  பண்ணனும்

இப்ப எதுவும்  செய்ய  வேண்டாம். யோசித்து நாளைக்கு நல்ல  ப்ளானா சொல்லறேன்..அதுக்கப்புறம் சுபம் தான்..

அப்படிங்கற..

அப்படியே தான் அபி.. என்றபடி போனை வைத்திருந்தாள் தாரிகாமலரை அடியோடு சாய்க்கும் திட்டத்தோடு தாரிகா  வரப்போவதை உணராமல் தோட்டத்தில்  இனி இவனிடம்  பேசக்கூடாது  என்ற தீர்மானம்  செய்திருந்தாள் மலர்.

உருகாதே!!!

உருகாதேவெண்பனி மலரே_13

 

அன்று இரவே அழகான திட்டத்தோடு அழைத்திருந்தாள் தாரிகாஅண்ணா  இது தான்  சரியான  வழி இதையே பாலோ பண்ணு.. நீயும்  வந்து  சேரு கூடவே அங்கிள்,மலர் ரெண்டு  பேரையும்  அழைச்சிட்டு பெங்களூர்  வந்திடுநானும்  வரேன் அங்கே  வச்சி பேசிக்கலாம்.

எப்படி..  சம்மதிப்பான்னு நினைக்கறையா

அண்ணா  அது என்னோட பிரச்சினைநீ அவங்கள அழைச்சிட்டு  வா

என்ன  சொல்லி  அழைச்சிட்டு வரஅபி கேட்க..

இதுவும் நான் தான்  சொல்லி  தரணுமா.. பாட்டிக்கு  அப்பா மாதிரி  தான் மலரோட அப்பாவும் பார்க்கணும் போல இருக்குன்னு பாட்டிய பேச சொல்லலாம். உனக்காக பாட்டி என்ன  வேணும்னாலும் செய்வாங்க

தேங்க்ஸ் தாருஅழைச்சிட்டு வரேன்.

சரிண்ணா சீக்கிரம்  வாநானும்  வரேன் என கட் செய்தாள். காலையில் சொல்ல இவன் எதிர்  பார்த்திருக்க
மலர் இங்கே  மறுபடியும் தன்னுடைய  கூட்டுக்குள் நுழைந்திருந்தாள்அபியுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி  இருந்தாள்.

மாலையில் தந்தை வந்ததும் தந்தையிடம் பேசியவள் இவனோடு பேசுவதை தவிர்த்து கொண்டிருந்தாள். இரவு உணவு உண்ணும் போதும் சரி  அடுத்த  நாள் காலை எழும்போதே
தனது திட்டத்தை  செயல் படுத்த நினைத்திருக்கமலரே இவனிடம்  பேசும் நிலையை  எற்படுத்தி இருந்தது
அவனது நல்ல  நேரம்

லைசென்ஸ்சுக்காக  வரச்சொல்லி  இருக்கறாங்க கூட வர்றிங்களா என கேட்டவளின் முகத்தை  கண் தட்டாமல் பார்க்கவும்…. முடியாதுன்னா பரவாயில்லை  நானே சமாளிச்சுப்பேன் இவள் சொல்லவும் சிரித்திருந்தான்

அதெப்படி ரெண்டு  நிமிடம்  பார்த்தாலே பேச இவ்வளவு  திணர்ற.. அப்போ நேற்றிலிருந்து பேசாமல் இருந்தது தப்புன்னு உனக்கே புரியுது தானே.. நான்  உன்னை மாதிரி  கிடையாதுபேச வந்தா முகத்தை  திருப்பிட்டு போக மாட்டேன். எத்தனை  மணிக்கு  போகணும்.

நீ சொல்லி  காட்டறல்லவேண்டாம்  நானே போயிக்கறேன்

ஏய்ஓவரா பண்ணாதஉனக்கு  நான்  குரு மாதிரி  சொல்லிக்கொடுத்ததை நீ சரியா  பண்ணறையான்னு பார்க்க வேண்டாமாஎத்தனை  மணிக்குன்னு கேட்டேன்.

ஓன்பது மணிக்கு  அங்கே  வரச்சொல்லி  இருக்கறாங்க..

நேரம் பாரு இப்பவே எட்டரை ஆக போகுதுவேகமாக  கிளம்பு .. வண்டியை எடுத்து  நான்  முன்னாடி  விடறேன். விலகி போனவனை பார்த்தபடி நகர்ந்தாள்.

அவள் கிளம்பி வரவும் இவளையே வண்டி ஓட்ட வைத்தவன்  சின்ன  சின்ன  திருத்தங்களை சொல்லியபடி வந்தான். அங்கிருந்த பார்மாலிட்டிகளை முடிக்கவும் ஏற்கனவே  சொல்லி  தந்த டிரைவிங் நிறுவனம்  இவளோடு சேர்ந்து  இன்னும்  மூவரை ஏற்றியபடி செல்ல.. அவளுக்கு  வாழ்த்து சொன்னவன் ஒரு  ஓரத்தில்  வண்டியை  நிறுத்தி ஏசியை ஓடவிட்டு காரின் கதவை  சாத்தியவன்
கண்களை முடியாதபடி சீட்டில் சாய்ந்திருந்தான்.

நேற்று  பகல் முழுக்க மலர் காட்டிய பாராமுகம் இரவு தூக்கத்தை  நன்றாக கெடுத்து  இருந்தது. சரியாக  தூக்கம் இல்லாததால்  அந்த  இடத்தின் அமைதி,ஏசியின் குளுமைஅவனையும் அறியாமல்  தூங்கி இருந்தான்.

வேகமாக  காற்று  வீசகளையும் தலைமுடியை கோதியபடி கார் கதவில் சாய்ந்தபடி அபி நின்றிருக்க எதிர்  முனையில் இறங்கியவள் வேகமாக  இவனை நோக்கி  ஓடி வந்து கொண்டிருந்தாள்.

மூச்சு  வாங்க  இவன்  எதிரில் நின்றவள் அபிலைசென்ஸ்  கிடைச்சிடுச்சி .. இங்கே  பார் ஓகே  பண்ணின பேப்பர்  என்றவள் எதிர் பாராத நேரத்தில்  இவனை அணைத்து  விடுவித்தாள்.. திடுக்கிட்டு  கண் விழித்து  பார்க்க  எதிரில் சற்று  தொலைவில் இவளை அழைத்து  சென்ற வாகனம் வந்து கொண்டு  இருந்தது

வேகமாக  இறங்கியவுடன்  கார் கதவின் அருகில்  நிற்கவண்டியை விட்டு  இறங்கியவள் முகத்தில்  எதையும்  கண்டு பிடிக்க முடிய வில்லைஅமைதியாக  இவனை நோக்கி  வரஇவனோ இவன் மனதில்  அபி உனக்கு  எல்லாமே கனவில் மட்டும் தான்  நடக்கும்  போல இருக்குஅவளோட முகத்தை  பார்த்தா லைசென்ஸ்  ஊத்திகிச்சு போலஉனக்கு  குடுப்பன அவ்வளவுதான்

இவனது அருகில்  வந்தவளோ கையில்  இருந்த பேப்பரை  நீட்ட  எதுவும்  சொல்லாமல் என்ன  என்பது  போல இவளை பார்க்க

லைசென்ஸ்  ஓகே  ஆயிடுச்சி போட்டோ எடுக்க அங்கே  ஆபீஸ்க்கு போக சொல்லி  இருக்கறாங்க

அத தான்  சிரிச்சமாதிரி சொல்லலாம்லநான்  கூட அவ்வளவு  தான்னு நினைச்சேன்வாஎன்றவன் கதவை திறந்து  விடமறுபடியும் அமைதி

ஒரு  கையில்  வண்டியை  செலுத்தியவன் அடுத்த  கையில்  இருந்த மொபைலில் தாரிகா மேசேஜ் அணுப்பி இருந்தான். நைட் கிளம்பி வர்றோம். நீயும் கிளம்பி வா எனமேசேஜ் அணுப்பியபடி திரும்பி  இவளை பார்க்க இப்போதும்  வெளியே வேடிக்கை  பார்த்தபடி வந்து  கொண்டிருந்தாள் .நீ இங்கே  இருந்தா தானே பேச மாட்டவா என்னோட வீட்டுக்கு  அங்கே  நீ  என்கிட்ட பேசித்தான் ஆகணும்..  மனதில் இவன் இப்படி  நினைக்க அவளோ வேறு யோசித்து  கொண்டு  இருந்தாள்.

இவன் பத்து நாள் தங்கறதா சொன்னான்  கிட்டத்தட்ட  ஆச்சுஇவன் கிளம்பிட்டா.. நாம கொஞ்சம்  ரிலாக்சா இருக்கலாம்இவன் பக்கத்தில்இருந்தாலே மூச்சு அடைச்சமாதிரி தோணுது.. நிம்மதியா இருக்க முடியல..படபடப்பா ஏதோ  ஓரு மன உணர்வு தோன்றஎன்ன  என அறியாமலே அவனின் மேல் கோபமாக அமர்ந்திருந்தாள். இவன்கூட இருந்தா இப்படி தான்  தோணுது..  முடிஞ்ச மட்டும் இவன்கிட்ட இருக்க கூடாது. பலவாராக நினைத்தபடி இவள் இருக்கஇவளது மனம் போகும் போக்கு  இவளுக்கே சுத்தமாக புரியவில்லை.

லைசென்ஸ்ற்கான பேப்பரில் சைன் போட்டு தர வாங்கியவளுக்கு ஓடி வந்து  அவனை இருக்கி அணைத்து கன்னத்தில்  முத்தமிட்டபடி சொல்ல நினைக்கஅந்த  எண்ணம்  மனதில் தோன்றவும்  தன்னை  நினைத்தே பயந்தபடி மெதுவாக  இவனை நோக்கி  வந்தாள்.

இப்போதும் அவனது முகம்  பார்க்க  முடியாமல் வெளியே  வேடிக்கை  பார்ப்பதாய் பேர் செய்தபடி வந்து  கொண்டிருக்கமுகத்தை  பார்க்க  கூட பிடிக்காமல் திரும்பி  இருப்பதாய் நினைத்தவன்   கோபத்தில் ஒரு  நிமிடத்தில்  வண்டியை  உச்ச  பட்ச வேகத்திற்கு வண்டியின்  வேகத்தை  கூட்டி இருந்தான்.

வேகமாக  முன்னால் சரிந்தவள் இவனின் புறம் திரும்பிஅபிஏன் இவ்வளவு  வேகம் எனக்கு  பயமா இருக்கு

இல்லை.. ஸாரி  ஏதோ யோசனைமெதுவாகவே போறேன் என்றபடி மறுபடியும்  ஸ்லோவாக செலுத்த ஆரம்பித்தான்.

இவர்கள்  லைசென்ஸ்  வாங்கி  வீட்டிற்கு  கிளம்புகையில் இரண்டு  மணியை தாண்டி  இருக்க அங்கிருந்து  புறப்பட்டவன் எதிரில் தெரிந்த உயர்ரக ஹோட்டலில்  வண்டியை  நிறுத்தி  இருந்தான்.

அபி…  சாப்பாட்டிற்கு வீட்டிற்கு  போயிடலாம்.. இங்கே  வேண்டாம்.

ஏம்மாகைல காசு இல்லையா. .. எப்படியும் ஊருக்கு  ரெண்டு நாள்ல கிளம்ப போறேன்.. உன் கூட ஹோட்டலுக்கு போய் சாப்பிடணும்ன்னு நினைச்சேன். வேண்டாமாஒரு வேளை தானே…  ரெண்டு  பேரும் சேர்ந்து  வெளியே  சாப்பிட்டாதான் என்ன

இப்படி சொல்லவும் மறுக்காமல்..ம்சரி.. என்றவள் இவனோடு வர இருக்கை தேடி அமர்ந்தவன் அருகில்  இருந்த மெனு கார்டை பார்த்தபடி இவளுக்கு  என்ன  பிடிக்கும் என கேட்டு  ஆர்டர் செய்தான். இது நான்  உனக்கு  தர்ற டிரிட்
பதிலுக்கு  நீயும்  தரணும் நான்  ஊருக்கு  கிளம்பறதுக்கு முன்னாடிஓகே வா

பதிலுக்கு பதிலாகநான்  மாட்டேன்னா

மாட்டைன்னு  நீ சொன்னா உன்ன விட்டுடுவேனா என்ன..

இதை சொல்லவும் இவனை திரும்பி பார்க்க இவன் சாப்பிட்டு  கொண்டு  இருந்தான். அங்கிருந்து  வீட்டிற்கு  வர..நான்கு  மணியை நெருங்கி இருந்ததுஅப்போதே மலரின் தந்தை  இவர்களுக்காக காத்திருந்தார் இரண்டு  நாட்களுக்கு  தேவையான துணிகளை பேக் செய்தபடி

அபி உன்னோட  பாட்டி பேசினாங்கப்பாஎன்ன  பார்க்கணும் போல இருக்குதாம்இன்னும்  எத்தனை  நாள் இருக்க போறேன்னோன்னு ஓரே அழுகை.. நாம உன்னோட  வீட்டுக்கு  ஒரு  தடவை போயிட்டு  வந்திடலாம்பா

அங்கிள் அதுக்கு ஏன் கண் களங்கறிங்கஇருங்கள் என்னன்னு கேட்கிறேன்  என்றவன்  நகர்ந்து சென்று பாட்டியை அழைக்க அவரோ என்னடா.. இன்னும்  கிளம்பலையாஎன்னோட பேத்தியை கூப்பிட்டுட்டு

பாட்டி..நானும் என்னவோ ஏதோன்னு கூப்பிட்டா.. நீ விளையாடறையா

என்னடா தாருதான் சொன்னா போன் பண்ண சொல்லி. .. கரெக்டா பேசினேனா..

ரொம்ப  சரியா தான்  பேசி இருக்கற..பத்து ரூபாய்க்கு  நடிக்க சொன்னா நூறு ரூபாய்க்கு நடிப்பையேஅங்கிளே அழறாங்கநீ பேசுணத கேட்டு..நைட் பஸ்சுக்கு தான்  டிக்கெட்  போட்டு  இருக்கிறேன்  காலையிலே வந்துடுவேன் சரியா என்றபடி  திரும்ப இவர்கள்  நின்ற  இடத்திற்கு  வந்தான்.

கொஞ்சம்  உடம்பு  சரியில்லை  போலிருக்கு  பஸ் டிக்கெட் போடறேன் நைட்டுக்கு போகலாம்  அங்கிள் என்றவன் இவளை பார்க்க  இவளும் அப்பாவோட நானும் உங்க பாட்டியை பார்க்க  வரேன் என அவன் விரித்த  வலையில்  அழகாய் வந்து  விழுந்தாள்.

உருகாதே!!

உருகாதே வெண்பனிமலரே.._14


காலை ஏழு மணியை தொடவும் இவர்கள்  அபிநந்தன் வீட்டிற்கு வந்து  இறங்கினர். கால்டாக்சியை விட்டு  இறங்கும் முன்னமே அத்தை என்ன சத்தமிட்டபடி ஒடி வந்த  பூஜாவை அதே மகிழ்ச்சியோடு தூக்கியவள்தன்னோடு அணைத்தபடி   பூஜாகுட்டி எப்படி  இருக்கறிங்க என அவளிடம் கொஞ்சியபடி வீட்டிற்குள்  நுழைந்தாள். பார்த்த அபி தான்  அப்படியே அதிர்ச்சியில் சிலையாக  நின்றிருந்தான். எந்த கேப்லடா.. இந்த  அளவுக்கு  பாச பயிரை வளர்த்தாங்க என்ன நினைக்க

அதை விட ஆர்பாட்டமாக பின்னால் தாரிகா வந்திருந்தாள். ஹாய் அபி அண்ணா. ..  உனக்கு  முன்னாடி நான் தான்  வந்தேன் பார்த்தாயாஇவனிடம் பேசிக்கொண்டு  இருக்க மதுசூதனனை வரவேற்ற மூர்த்தி  வாடா எத்தனை  நாள் ஆச்சுஇடையிடையே  வான்னா கேட்கவா செய்யற.. என்ன வினவியபடி அழைத்து  சென்றார்.

பூஜாவோடு உள் நுழைந்த மலர் அவர்களது ஹாலிற்குல் பிரவேசித்தவளை அபியின் தாய் தேவகி வரவேற்றார். வாம்மா மலர் நிஜமாகவே  பூவை மாதிரி  தான்  இருக்கற.. வா.. வா வரவேற்று அமர வைக்க.. அமர்ந்தபடி சுற்றிலும் பார்க்க அபியினுடைய வீடு இவர்களது வீட்டை விடவும் இருமடங்கு பெரியது. பெரிய  ஹால் மாடிக்கு செல்லும்  படிக்கட்டுகள் உட்புறமிருந்து துவங்க  இரண்டு  மாடிகளை  கட்டி இருந்தனர்.

இவளை அமர வைத்தவர் வந்தவர்களுக்கு  ஜூஸ் எடுத்து  வர சென்றிருக்க.. பின்னால் தாருவோடு பேசிக்கொண்டு  வந்தவன் இவள் அமர்ந்து  இருப்பதை  பார்த்து  இவள் அருகில்  அமர அவனை தொடர்ந்து அடுத்த இருக்கையில் தாரிகா  அமர்ந்தாள். பூஜாவோ மாமா என இவனிடம்  தாவி இருந்தாள்.

மடியில்  தாங்கியவன் எங்க  வீடு பிடிச்சிருக்கா என கேட்க

அவனுக்கு  பதில் சொல்லாமல் பாட்டிய எப்ப பார்க்க போகலாம்  என கேட்கஇதை கேட்கவே திணறி இருந்தாள். பூஜா இப்போது  அவனை தாண்டி அவனது தங்கை தாரிகாவிடம் தாவி இருந்தாள்அவளது வீட்டிலும் அருகில்  அமர்வான்தான்  ஆனாலும்  இவ்வளவு  அருகில்  அமர்ந்தது இல்லைஅபியிடைய தாயார் தன்னை  பற்றி என்ன நினைப்பார் இதை நினைத்தவளுக்கு இன்னும்  பயமாக இருந்தது

தேவகி ஜூஸ் எடுத்து  வரவும் வேகமாக எழுந்தவள் அவரிடம்  அன்ட்டி நான் எல்லோரும்  தர்றேன் என வாங்க..

என்னமாநாங்க உன்ன கவனிக்கணும் நீ  எங்கள கவனிக்க வர்றதாரு இதையெல்லாம்  நீ கத்துக்கோ..

கத்துக்கலாமே.. மலர் இத குடு அப்படியே  இந்த  இடத்தில்  உட்காரு என எழுந்த இடத்தில்  அமர வைத்தவள் இப்ப  ஜஸூ குடி நான்  அப்பாவுக்கும் அங்கிள்க்கும். கொடுத்திட்டு வரேன். இந்த  அப்பாவுக்கு  பேச ஆள் கிடைச்சா போதும் அங்கேயே நின்றிடுவாங்கஇன்னமும்  போர்டிகோவில் பேசியபடி நின்ற தந்தையை நோக்கி  சென்றாள்.

மறுபடியும்  அவன் புறம் அமர நன்றாக  அவள் அவள்அருகில்  நெருங்கி  அமர்ந்தான. பக்கத்தில்  உட்கார்ந்ததால தானே  எழுந்து  ஓடின என்ற கேள்வியோடு..

பார்த்தா என்ன நினைப்பாங்கநகர்ந்து  உட்காருங்கபாட்டிய எப்படி பார்க்க போகலாம்..

முதல்ல கைல இருக்கிறதா குடி குளிச்சிட்டு சாப்பிட்ட  பிறகு  போகலாம்பாட்டி பின்னாடி இருக்கற ரூம்ல இருக்கறாங்கஎழுந்தவன் இரு தாருவ வரச்சொல்லறேன். ரெடி ஆனதும் போகலாம் என்றபடி பின் புறப்பட்டு தோட்டத்திற்குள்  நுழைந்தான்.

அடுத்த  ரெண்டாவது நொடி  தாரு வர..அண்ணா எங்க  மலர்

இந்த  வழியா போணாங்க

சூப்பர்  வாவாஇன்றைக்கு  அவன் காலி..  இவளது கை பிடித்து  இழுத்தவள் பின்  புறம் செல்ல அங்கே  அபி டியூப்பில்  தண்ணீர்  பாய்த்துக்கொண்டு இருந்தான். இங்கே  எப்ப வந்தாலும் தண்ணீர்  விட வந்திடுவான்இவன்கிட்ட எனக்கு  ஒரு பாக்கி இருக்குவா..

என்னது

வாவாநான்  சொல்லறேன் லாஸ்ட் டைம் வந்தப்ப தண்ணீர்  விடறேன்னு என்னைய குளிப்பாட்டி விட்டான். இன்றைக்கு  மாட்டிக்க போறான். அவனது அருகில்  நெருங்கியவள் ஒரு  நொடியில்  அவனது கையில்  இருந்து  பிடிக்கியவள் அவனது மேல் தண்ணீர்  விட அடுத்த  நொடி  கீழே போட்டு விட்டு அண்ணா  நான்  வின் ஆயிடுட்டேன். சொன்னமாதிரி தண்ணீர்  விட்டுவிட்டேன் என சிரிக்கஒரு நொடியில்  அதை கையில்  எடுத்தவன்
இருவர் மீதும் தண்ணீர்  விட ஆரம்பித்தான்.

அபி வேண்டாம்  என  மலரும் அண்ணா  வேண்டாம்  என  தாரிகாவும்  கத்த மாமா என ஓடி வந்த  பூஜாவிடம் பைப்பை தந்தவன் அவளை தோளில் தூக்கியபடி நீ அடி செல்லம்மாமா வேடிக்கை  பார்க்கிறேன்  என நிற்க..அவர்கள்  நகர்ந்த பக்கம் துரத்தியபடி தண்ணீரை பிய்ச்சி அடிக்கபூஜாவிற்கு அவ்வளவு  சந்தோஷம். .. சிரித்தபடி அம்மாவின் மேல் மலரின்  மேல் என மாறி மாறி தண்ணீரை ஊற்றிக் கொண்டு  இருந்தாள். அடுத்த பத்தாவது நிமிடம்  தேவகி துண்டோடு வந்திருந்தார்தெரியுமே இது தான்  நடக்கும்ன்னு பூஜாவுக்கு சளி பிடிச்சிட போகுதுஇறக்கி விடு அபி.. போய் துணியை மாத்திட்டு வாங்கபாட்டி ரொம்ப  நேரமாக காத்து இருக்கறாங்க உங்கள் பார்க்க

ஸாரி மாஇதோ போகிறேன் என  அபியும் கூடவே இவர்களும் நகர்ந்தனர்

காலை உணவை முடித்து  விட்டு  அபி இவளையும் அழைத்து கொண்டு  பாட்டியை காண அழைத்து  சென்றான். பின்புற தோட்டம்  தாண்டவும் தனியாக அமைந்து இருந்தது அந்த வீடுபாட்டி ஆரம்பத்தில தாத்தா கூட  வாழ்ந்த வீடு இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்கஇப்போதைக்கு பாட்டி கூட ஒரு நர்ஸ் மட்டும்  இருக்கறாங்கஅப்புறம் அம்மாவுக்கு வேலை முடிஞ்சதும் பாட்டி கூடத்தான் இருப்பாங்கஇவளுடன் பேசியபடி அழைத்து செல்ல..இவள் உள் நுழையவும்  அபியின் பாட்டி..

அபி.. வாவா.. காலையில்  இருந்து
உன்னை தான்  தேடறேன் என கூறியவர் வீல் சேரில் கட்டில் அருகில்  அமர்ந்திருந்தார். அவனுக்கு  பின்னால் நுழைந்த மலர் பாட்டியிடம் நெருங்கியவள் ஆசிர்வாதம்  பண்ணுங்க பாட்டி என காலில் விழ அதே நேரம் அபியும் அதையே  சொல்லி காலில் விழுந்திருந்தான். ஓரே நேரத்தில்  இருவரின் தலையிலும் தனது கைகளை வைத்தவர் இருவரையும் ஆசிர்வதித்தார்.

ரெண்டு  பேரும்  தீர்க்க ஆயுலோட நல்லபடியாக வாழுங்க என உறைத்தவர்  இருவரின் கையையும் பிடித்து  கட்டிலில் அமர்த்தியபடி
ஏண்டா  ரெண்டு  வருசமா வராமல் இருந்த.. என பேரனிடம் சண்டையிட ஆரம்பித்தார்.

மலரின்  நிலை வேறாக  இருந்தது. ஓரே நேரத்தில்  அவனும் அவளோடு விழுந்ததே அவளுக்கு  வேறு மாதிரியான உணர்வில் இருக்க.. அவளையும் நகர விடாமல்  அவளோடு நெருங்கி  நின்றவனை அவளால் முறைக்கு கூட முடியவில்லை.   மனதிற்குள்  நினைத்து  கொண்டாள் இவனோட வீட்டுக்கு  வரவும் இவனுக்கு  குளிர்  விட்டு  போயிடுச்சி என..

அவனிடம்  சற்று  நேரம் பேசியவர் இவளிடம் திரும்பி பேச ஆரம்பித்தார். நல்லா  இருக்கறயாடாஉன்னை  கடைசியாக நாலு வயதில் பார்த்தது. திரும்ப பார்க்க இவ்வளவு  நாள்  ஆகி இருக்கு

அபியோ..டோன்ட்  பீல்  என்னோட செல்ல பாட்டி இனிமேல்  அடிக்கடி  பார்க்கலாம்என்றவன் அவரது கன்னம் தொட்டு கொஞ்ச..

போடாநீ சொல்லாத.. நீ சொல்லு ராசாத்தி  நான்  கேட்கறேன் .

இனி அடிக்கடி  வரேன் பாட்டி. ..

போதுமா .. அவளே சொல்லிட்டாஅபி  கூற

சரிடா நான்  மாத்திரை  போட்டுவிட்டு கொஞ்சம் நேரம்  படுக்கறேன். நீங்க போறதுன்னா போய்கங்க.. இவர்களை போகச்சொல்லவும் அவனோடு வெளியேறியவள் வாசலை தாண்டவும் அவனோடு சண்டையிட ஆரம்பித்தாள். ஏன் அபி இப்படி செய்யறிங்க.. காலையில்  ஹால்லயும் அப்படி  நெருங்கி  உட்காரறிங்க இங்கேயும்  அப்படியே செய்யறிங்க.. பார்க்கறவங்க என்ன  பற்றி  என்ன  நினைப்பாங்கஇது உங்க வீடுங்கறதால இப்படி  செய்யறிங்களா

கேட்ச் பண்ணிட்டாய்யா.. என மனதில்  நினைத்தவன் இதோ பாரு என்னோட வீட்ல எப்பவும் இப்படி தான்  இருப்பேன். உனக்காக எதுவும் மாத்தல.. யாரும்  தப்பா நினைக்க மாட்டாங்கபேசியபடி நடக்க சற்று   தொலைவில் கார்டனில் இருந்து சேரில் அமர்ந்தபடி மதுசூதனனும் மூர்த்தியும் பேசிக்கொண்டு  இருப்பது தெரிந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக சிரித்தபடி பேசிக்கொண்டு  இருக்க இவளையும் அறியாமல்  நின்று  பார்த்து  கொண்டு  இருந்தாள்

என்ன  பார்க்கற மலர்

என்னுடைய  அப்பாவும் உன்னோட  அப்பாவும் அவ்வளவு  ப்ரெண்ட்சாஎனக்கு  தெரியவே தெரியாது. அப்பா முகத்தில்  எவ்வளவு  சந்தோஷம்எனக்காகவா எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட இருந்தாங்களா..

நீ சொல்லறது புரியலை

எனக்கு  அப்பா தான்  உலகம்வேற எங்கேயும் போக பிடிக்காது. அதனாலயே எங்கேயும் போனது இல்லைஇப்ப தான்  தோணுது நான்தான்  தப்பு பண்ணிட்டனோன்னுவாங்க அவங்க  பேசட்டும்  நாம உள்ள போகலாம்.

அவள் பேசி விட்டு  வீட்டிற்குள் நுழைய அப்போதுதான்  அவனுக்கும் புரிந்தது. அவள் வருத்தபடறாநிச்சயமாக  அப்பாவோட ஆசையை பற்றி யோசிப்பாஇல்லை யோசிக்க வைக்கணும்இவன் இவ்வாறு  நினைத்தபடி நகர்ந்தான்.

மாலை மூன்று  மணியை தாண்டி இருக்க இவளையும் தாரிகாவையும் அழைத்து  கொண்டு  ஷாப்பிங்  எனக்கு கிளம்பி  இருந்தான். ஒவ்வொரு  கடையாய் ஏறி இறங்கி  வீட்டுற்கு  வரும்  போது  இரவு ஏழு மணியை தொட்டிருந்தது.இரவு உணவை உண்டவள் இவனுக்கும்  தாரிகாவிற்கும் குட்நைட் உரைத்து விட்டு தனக்கென ஒதுக்கி இருந்த அறைக்குள்  நுழைந்தவள் அன்றைய நாளில் நடந்ததை மனதிற்குள்  அசை போட….

அன்றைய நாளில் அவனோடு சுற்றியது கடைசியாக….அபியோடு சேர்ந்து  பாட்டியின்  காலில் விழுந்ததே திரும்ப திரும்ப கண் முன்னாள் வந்து கொண்டு  இருந்தது.

வெண்பனி மலரே உருகாதே!!!

 

உருகாதே வெண்பனிமலரே.._15

ஏனோ அன்றைய  நாளுக்கு  பிறகு மீண்டும்  தனது கூட்டுக்குள் நுழைந்தது போல தோன்றியது  அபிக்கு. பார்க்கும் போது பேசினால் தான்  ஆனால்  இவன் அருகில்  வர போகிறான்  என தோன்றினால் விலகி ஓடுவதை வாடிக்கையாய் வைத்திருந்தாள்.

இன்றோடு வந்து  மூன்று  நாள் முடிந்திருக்க அவனோடு கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டு  இருந்தாள்ஒன்று இவனுடைய தாயோடு இருந்தாள். பாட்டியோடு சில நேரம் பாதி நேரம் தாரிகா பூஜாவோடு அவளை பொறுத்தவரை இந்த நாட்களை அழகாக்கி கொண்டிருந்தாள் வீட்டினரோடு

பாட்டியின்  பிறந்த நாள் அடுத்த நாளில் இருக்க தாரிகாவோடு அவளையும் அழைத்து  கொண்டு  பிறந்தநாள்  கேக் வாங்க பாட்டிக்கு கிப்ட் வாங்க என     அவளையும்  தன்னோடு அழைத்து  வந்திருந்தான். ..மலருக்கும் ஊருக்கு  புறப்படுவதற்குல்லாக  அணைவருக்கும் ஏதாவது  கிப்ட் வாங்கி  தர வேண்டும் என நினைத்திருக்க மகிழ்ச்சியோடு  அவனோடு வந்திருந்தாள்.

அவனோடு வந்து  இறங்கிய மாலின் ஒரு பகுதியில்  தேடி ஒவ்வொன்றாக வாங்கி கொண்டு  இருந்தாள். பிறந்தநாளுக்காக  அணைவருக்கும் உடையை தேர்வு  செய்திருந்தாள்.
உள் நுழைந்த போதே அபியிடம் சொல்லி  இருந்தாள். வீட்ல இருக்கற எல்லோருக்கும்  டிரஸ் எடுத்து  தர போறேன். நீங்க  எதுவும்  சொல்லக்கூடாது  என..

மொத்தத்தையும் எடுத்து பிறகு பில் செய்து விட்டு  பிறந்தநாள்  கேக் ஆர்டர்செய்து விட்டுவண்ணகாகிதம்,பலூன் என அத்தனை பொருட்களும்  வாங்கிய பிறகு வீட்டிற்கு  வர மதியம்  தாண்டி இருந்ததுவீட்டிற்குள்  நுழைந்தவுடன் அவரவர்க்கு  வாங்கிய பொருட்களை தந்தவள் அபியின் உடையை அவனுக்கு  கொடுத்தாள்.

இது உங்களுக்குபிடிக்கலைன்னா மாத்திக்கலாம்பிரித்து  பார்க்க

நல்லா இருக்காஇத தேர்வு  செய்ய ஒரு  மணி நேரம்  ஆச்சு.

ம்என்றபடி எடுத்து  கொண்டு  நகர்ந்திருந்தான். அவனுக்கும் தெரியும்  இவனது உடை எடுக்க  அவள் எடுத்து  கொண்ட நேரம்மீதி ஆண்களுக்கு தேர்வு செய்த தாரிகா  இவனிடம்  அப்போதே சொல்லி  இருந்தாள். அண்ணா  மலருக்கு  உன்ன ரொம்பவே பிடிக்குது.. ஏனோ சொல்லதான் யோசிக்கறா

அடுத்த  நாள்  மதியமே துவங்கி  இருந்தனர் அலங்காரத்தை தங்களது ஹாலை பிறந்தநாள்  கொண்டாட. மாலை வரை கலகலத்தபடி  முடிக்க இரவு ஏழு மணிக்கு  தனது பாட்டியை அழைத்து  வந்தவன் கேக் வெட்ட கொண்டாட்டம் களை கட்டியது. எல்லோருக்குமே இள நீலநிறத்தில் உடை தேர்வு செய்திருக்கிறார் பாட்டிக்கு  இவளது சார்ப்பாக குளிருக்கு இதமாக  ஷால்
ஒன்றை பரிசளித்தவள் அப்போதே தந்தையுடமும் அபியிடமும் கூறி விட்டாள் நாளைக்கு  ஊருக்கு  போக டிக்கெட்  எடுங்க வந்து  ஐந்து  நாள் ஆச்சு என்று.

அவ்வளவு  நேரம் மகிழ்வுடன்  இருந்தவனுக்கு மொத்தமாக முகம் விழுந்து  விட்டது. தாரிகா கூட இவளிடம் கேட்டிருந்தாள் நான்  இன்னும் ஒரு வாரம் இருப்பேன் அது வரைக்கும் நீயும் இருப்பேன்னு நினைச்சேன். பூஜாவோட அப்பா இங்கே வர்றேன்னு சொல்லி இருந்தாங்கஉனக்கு அறிமுகபடுத்தணும் இப்படி நிறைய நினைச்சேன்பரவாயில்லை மறுபடியும் பார்க்கலாம் என சொல்லி விலகி இருந்தாள்.

மதுசூதனன் கூட என்ன பாப்பா இத அப்புறம் சொல்ல கூடாதா.. பாரு எல்லோரும் வருத்த படறாங்க..
அப்பாஎப்படியும் அங்க போகணும்தானே மறுபடியும் இங்க திரும்ப வரலாம்பாதற்சமயம் அவளுக்கும் அவளது மனநிலை நன்றாக புரிந்து இருந்தது. அபியை சுற்றியே யோசித்து  கொண்டிருப்பதுஅவன்புறமாய் தன் மனம் சரிந்து கொண்டிருப்பது. அவனிடம் பேசாமல் இருந்தாலும் தனது பார்வை வட்டத்திற்குல் அவனை வைத்திருந்தது இப்படி பல வகையில் அவளை  தொந்தரவு செய்து கொண்டிருந்தான். இதில் இருந்து விடுபட அவள் கண்டு பிடித்தது தான் இந்த ஊருக்கு போகும் படலம் .ஒன்பது மணிக்கு  அவரவர் தூங்க செல்ல அபி தனது அறையில்  கோபத்தோடு நடைபயின்று கொண்டிருந்தான்.

பிறந்தநாள்  கொண்டாட்டம் முடியவும் மலர் சொன்னவுடனேயே தனது அண்ணனின் முகத்தை  பார்த்தவள் பின்னோடு அவனது அறைக்கு  வந்திருந்தாள்

அண்ணா..என அழைத்தது தான்  தெரியும்  பொறிய ஆரம்பித்து  இருந்தான்இவளோட மனசுல நான்  இருந்தாலும் கடைசி வரைக்கும்  சொல்ல போறது இல்ல.. நீதான்  இங்க வா..ஓகே சொல்லுவான்னு சொன்ன . எதுவும்  நடக்க போறது இல்லைஎனக்கே கடுப்பாகுது.. நானும் ஆபீஸ்க்கு மெயில் பண்ணறேன். வேலையில்  வந்து  ஜாயின் பண்ணறேன்னுஇதோட எல்லாமே முடிஞ்சி போச்சி இப்ப போனா இனி வரவே மாட்டேன். ஊருக்குல்ல பொண்ணா இல்லை எனக்கு  ஏன் இவள பிடிச்சிதுஒவ்வொரு  நிமிஷமும் நகரம் மாதிரி  இருக்கு..
நெருங்கி  வர்றமாதிரி இருக்கு அடுத்த  நிமிஷம்  விலகிபோறா..

அண்ணா  ப்ளீஸ்

நீ போ தாரிகாஇனி இத பத்தி எதுவும் யார்  கிட்டேயும் பேசாதநடக்கிறது நடக்கட்டும்.

திரும்ப  பேசவும் வழியில்லாமல்  தனது அறையில்  தஞ்சம் அடைந்து  இருந்தாள். அடுத்த நாள்  காலையிலேயே  புறப்பட ஏதுவாக தனது துணிகளை பேக் செய்து ரெடியாக இருந்தாள். இவளது அறைக்குள்  வந்த  தாரிகாவோ அவள் பங்கிற்கு  அடுத்த  

அதிர்ச்சியை தந்து விட்டு  சென்றிருந்தாள்..இரவு அண்ணனது அறையில்  இருந்து வந்த  பிறகு நீண்ட நேரம் யோசித்து  இந்த  திட்டத்தை  செயல்படுத்த  நினைத்திருந்தாள்

அண்ணாவை ஒரு  ப்ரோஜெக்ட் விஷயமா  அமெரிக்கா போக சொல்லி  ஆர்டர் வந்து  இருக்கு அண்ணாவும்நீ கிளம்பவும் அவங்களும் போயிடுவாங்க.. இனிமேல்  ரெண்டு வருஷம் கழிச்சி தான் பார்க்க முடியும். அதுவும் வருவாங்கலோ இல்ல அங்கேயே தங்கிடுவாங்கலோ அதுவும் தெரியலை ..உங்க  எல்லோரையும் நிறைய மிஸ் பண்ணுவேன் என கிளப்பிி  இருக்க

இவ்வளவு  நேரம் தெரியாத பிரிவை இப்போது  உணர ஆரம்பித்தாள்மாலை வரை அபி அவளது கண்களுக்கு அகபடவில்லைமாலை ஏழுமணிக்கு எல்லோரிடமும்  சொல்லி விட்டு புறப்பட இவர்களை அழைத்து செல்ல வந்தவனும் கையோடு பேக்கை எடுத்து வந்திருந்தான். அத்தனை பேரிடமும் சொன்னவன் இவர்களை  பார்த்து  உங்கள் பஸ் ஏத்தி விட்டுட்டு நானும்  மும்பைக்கு  கிளம்பறேன்.

மறுபடியும்  பார்க்க  சந்தர்ப்பம்  கிடைச்சா பார்க்கலாம்  அங்கிள்உங்க வீட்ல இருந்த நாட்களை என்னால காலத்திற்கும் மறக்க முடியாது.. எல்லாமே மதுசூதனனிடம் மட்டுமே பேசினான். இவள் புறம் திரும்பவும் இல்லை  எதுவும் பேசவும் இல்லைவண்டி ஏற்றிவிட அடுத்த  நாள்  காலையில்  கோவையை  வந்தடைந்தனர்.

காலை வந்த சிறிது  நேரத்திலேயே குடோனில்  இருந்து அழைப்பு வர உடனே மதுசூதனன் கிளம்பி  இருந்தார்..நீ ரெஸ்ட்  எடுபாப்பா.. மதியம் சாப்பிட வெளியே  வாங்கிட்டு வந்துடறேன். தூங்கி எழுந்திரு என கிளம்பி  இருக்கமுன் கதவை சாத்தியவள் தனது அறைக்குள் வரமுதல் முதலாக அபி வந்தது. அதன் பின்னே நடந்தது ஒவ்வொன்றாய் நினைத்தவளுக்கு தன்னுடைய  மனம் நன்றாக புரிய அழ ஆரம்பித்தாள். அவனை நேசிப்பது இப்போது  நன்றாக  தெரிந்தது. கூட இருக்கும்  போது தெரியாதது இங்கு  வந்த  பிறகு நன்றாக  தெரிந்தது.

அழுது அழுது கிட்டத்தட்ட  இரண்டு  மணிநேரம்  தாண்டி இருக்கஅவளது அறையில் கதவு லேசாக தட்டப்பட்ட போய் திறந்தவள் எதிரில் நின்றவனை பார்த்ததும் மகிழ்ச்சி  அழுகை இரண்டும் போட்டியிட அவனை வயிற்றோடு அணைத்திருந்தாள்.. 

அவளுடைய  செய்கை எதுவும்  புரியாமல் அபியோஇங்கே பாரு உன்னமாதிரி எனக்கு  கல்நெஞ்சு கிடையாது.. எனக்கு  உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ இல்லாம என்னால வாழ முடியாது.. உனக்கு  உன் அப்பா கூட இருக்கணும் அவ்வளவு  தானே.. இங்கே  வேலைய கவனிக்க நம்பிக்கையான ஆளை போடலாம்  உங்கள்  அப்பாவையும் நம்ம கூட கூப்பிட்டுக்கலாம். இத விடவும் பெஸ்டா உன்கிட்ட ஏதாவது  ஐடியா  இருந்தா சொல்லு அத மாதிரி  வேணும்னாலும் செய்யலாம் என்ன  சொல்லற

இவளை பஸ் ஏற்றி விட்டவன் மும்பைக்கு கிளம்பாமல் இரண்டில் ஒன்று  கேட்டு விடுவது என பின்னோடு அடுத்த  பஸ்ஸில் வந்திருந்தான்என்ன  மலர் ஏதாவது  பதில் சொல்லு

இத விட எனக்கு பதில் சொல்ல தெரியாது என்றவள் அவனை விட்டு  நகர.. அப்போதுதான்  அவ்வளவு  நேரம் அவள் அவனை அணைத்து  இருந்தது  தெரிந்ததுஎனக்கு நீ  நல்லது மட்டும்  தான்  செய்வேங்கற நம்பிக்கை  எப்பவோ வந்திடுச்சி.. நீ என்ன  சொன்னாலும் எனக்கும் ஓகே தான்

ஏய் நீ அழுதிட்டா இருந்த

பின்ன உன்கிட்ட அப்படி சொல்லிட்டு வந்துட்டேன் இங்கே  வந்தபிறகுதான்  எனக்கே புரிஞ்சுது  இனி நீ இல்லாம என்னால ஒரு  நிமிஷம்  கூட இருக்க முடியாதுன்னுநீ நிஜமாகவே  அமெரிக்கா  போயிடுவாயா

அமெரிக்காவாஎதுக்கு

தாரிகா சொன்னாலேநீ அமெரிக்கா  போக போற ஒரு  வேளை அங்கேயே  செட்டில் ஆனாலும்  ஆகிடுவேன்னு

இந்த  அழுகைக்கு அதுதான்  காரணமா…  ஆபிஸ்ல நான் தான்  எல்லாம்கை காட்டினால் போக அத்தனை பேரும் தயாரா இருக்கறாங்க.. நான்  எதுக்கு போகணும்தாரு உன்னை குழப்பி விட்டு  இருக்கறாஅதுவும்  நல்லது தான்இப்ப தான்  நீ  நல்ல விதமா யோசிக்க ஆரம்பித்து  இருக்கற ….அவளை ஹாலிற்கு  அழைத்து  வந்தவன் இந்த  நல்ல நீயூஸை எல்லோருக்கும் சொல்ல வேண்டாமாஎன்றவன்  முதலில்  உன்னோட  அப்பாவுக்கு  சொல்லலாம் என்றபடி போன் செய்யமாமா நான்  அபி பேசறேன் உங்க பொண்ணு  கல்யாணத்துக்கு  ஓகே  சொல்லிட்டாநீங்க  கிளம்பி  வாங்க

என்னது நீ வரப்போவது தெரிஞ்சுதான் என்னை தனியா விட்டுட்டு  போனாங்களா

அங்கேயிருந்து  பஸ் ஏறினதும் சொல்லிட்டாங்க மலரோட முகம்  சரியில்லைன்னுநான் தான்  ஒரு  அரைமணிநேரம்  வெளியே  இருங்க உங்க பொண்ணு  கிட்ட பேசனும்ன்னு
கேட்டேன். இரு தாருகிட்டே சொல்லிடலாம் என்றவன் அவளுக்கு ரிங் விட்டு அவள் எடுக்கவும்

தாரு விக்கெட் விழுந்திடுச்சிகல்யாணத்துக்கு  ஓகே  சொல்லிட்டா எனவும்

டேய் இங்கே  என்ன கிரிக்கெட்டா நடக்குது.. இரு உன்னை  என்ன  செய்யறேன் பாரு என மலர்  துரத்த ஆரம்பிக்க அவளுக்கு  அகபடாமல்  ஹாலை சுற்றி ஓட ஆரம்பித்தான்.ஒருவழியாக இருவரது கண்ணாம்மூச்சி  ஆட்டம் முடிவுக்கு வந்து  இருந்தது.

அப்புறம்  என்னங்கஆவணி மாதம் கல்யாணம்  பிக்ஸ் பண்ணியாச்சுநம்பிக்கை  ஆன ஆளை பார்த்து மதுசூதனன் அவரோட ஆபீஸ்க்கு வேலைக்கு ஆள் எடுத்தாச்சு

அவரும் தெளிவா மலர்கிட்ட சொல்லிட்டார் கொஞ்ச நாளைக்கு காசி ராமேஷ்வரம்ன்னு நிறைய ஊருக்கு போக ஆசை இருக்கு. அதெல்லாம் முடிச்ச பிறகு உன்கிட்ட வரேன் அது வரைக்கும் என்ன தொந்தரவு பண்ண கூடாதுன்னு..

இப்போதைக்கு இரண்டு  பேரும் போன்ல உருகி உருகி அன்பை பறிமாறிகிட்டு இருக்கறாங்கநாமலும் இதே மகிழ்ச்சியோட கிளம்பலாம்.

வெண் பனிமலரே
நிறைவுற்றது.




 








 



 


 











 











 




 






 

 





 

error: Content is protected !!