உத்தரவின்றி முத்தமிடு 4
ஆரி அர்ஜுனனின் இல்லத்தில் ஜானகி தன் மகனையும் மருமகளையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, வலது கால் எடுத்து வைத்து தன் கணவனின் கரம் பிடித்து விரும்பியோ விரும்பாமலோ தன் புகுந்த வீட்டிற்குள் வந்தாள் யாத்ரா.
பின்பு அவள் கையால் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்ல ஏற்கனவே ஒருவித பதற்றத்தில் இருந்த யாத்ராவுக்கு கைநடுக்கம் காரணமாக அந்த நேரம் பார்த்து தீக்குச்சியை பற்றவைப்பது பெரும் சவாலாக இருக்க,
அப்பொழுது ஆரியின் அத்தை ஒருவர்,
“என்ன ஜானகி உன் மருமகளுக்கு விளக்கேத்தவே ஒரு நாள் தேவை படும் போலவே” என விளையாட்டாக சொல்லி அனைவரையும் பார்த்து சிரிக்கவும், தன் மனைவிக்கு பக்கத்தில் நின்றவாக்கிலே அவளது இரு கரத்தையும் பிடித்த ஆரி மிக நிதானமாக அவளுடன் இணைந்து தீக்குச்சியை பற்றவைக்க உதவியவன், அவளது நடுங்கும் கரத்தை ஆதரவாக பிடித்தபடி அவளுடன் இணைந்தே விளக்கேற்றி எந்த நிலையிலும் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்ல,
“ம்கும் மாப்பிள்ளை விளக்கேத்துறது உன் வீட்ல தான் நடக்குது ஜானகி” என மீண்டும் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது.
ஏனோ அது யாத்ராவுக்கு சங்கடத்தை ஏற்படுத்த ஜானகியும் வந்தவர்களிடம் ஏதும் சொல்ல முடியாமல்,
“யாத்ரா ஆரிக்கிட்ட இருந்து வாங்கி நீ பண்ணுடா மா” என்று சொல்லவும், ” இருக்கட்டும் மா”என்றவன்,
“இதுல என்னத்தை இருக்கு ரெண்டு பெரும் சேர்ந்து தான் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண போறோம் சோ சேர்ந்து விளக்கேத்துறதுல என்ன தப்பு இருக்கு” என கூறி புன்னகைக்க அதன் பிறகு நடந்த எந்த சடங்கிலும் ஒருவரும் வாய் திறக்க வில்லை, அடுப்பறையில் பால்காட்சியது முதல் அதை விருந்தினருக்கு கொடுத்தவரை ஆரி யாத்ரா இருவரும் சேர்ந்தே தான் செய்தனர். அதை பார்த்த விருந்தினருக்கு ஆச்சரியமாக, யாத்ராவும் கூட அதே ஆச்சரியத்துடன் தான் ஆரியை பார்த்திருந்தாள். மனம் ஏதோ ஏதோ பழைய சிந்தனைக்குள் உழன்றது,
“கிச்சன் வேலை உன்னுடையது இதை கூடவா ஒழுங்கா செய்ய முடியாது, சீக்கிரம் எடுத்துட்டு வா” என ஆதிக்கமிக்க குரல் ஒன்று மிக சத்தமாக அவளது செவியில் வந்து மோதியது பெண்ணவளின் மனம் உடனே சில நொடிகளுக்கு முன்பு கிச்சனில் ,
“ஏய் சூடா இருக்கு கிளிப் யூஸ் பண்ணிக்கோ” என்று ஆரி அவள் தடுமாறவும்,
“கண்ணம்மா விட்று நீ போய் சக்கரை எடு நான் பார்த்துகிறேன்” என்றதை நினைத்து, இரெண்டு குரலுக்கும் அதில் இருந்த வார்த்தைகளுக்கும் உள்ள வித்யாசத்தை ஒப்பிட்டு பார்த்து ஆச்சரியப்பட்டது.
சிறிய விடயம் தான் ஒரு ஆண் அதுவும் இந்த காலத்தில் சமையல் அறை வேலைகளை செய்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லையே ஆனால் அதற்கே பெண்ணவளின் மனம்,
‘பரவாயில்லையே இதெல்லாம் செய்யிறான் ம்ம்’ என ஆணவனை ஒரு கணம் எண்ணி வியந்தது.
சடங்குகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்து சொந்தங்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு கிளம்பியிருந்தனர், அப்பொழுது தன் தாய் தந்தையரை பிரிந்து வந்ததால் அவர்களை எண்ணி யாத்ராவின் முகம் வாட்டமாக இருக்க அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜானகி அவள் அருந்த காஃபியை கொடுத்துவிட்டு அவளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருக்க, பதிலுக்கு புன்னகைத்து கொண்டிருந்த யாத்ராவோ மனதிற்குள் இரவை பற்றிய அச்சத்துடன் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அங்கே வந்த ஆரி தன் தாயுடன் மகிழ்ச்சியுடன் உறவாடிக்கொண்டிருந்த தன் காதல் மனைவியை தனக்கானவள் என்கின்ற கர்வத்துடன் சில நொடிகள் ரசித்தவன் தன் தாயிடம்,
“ம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்ட்டு வந்திர்றேன் ” என்று யாத்ராவை பார்த்தபடி கூற அவரோ,
“என்ன வெளியே போறியா உனக்கென்ன பைத்தியமா? இன்னைக்கு தான் டா உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு, எந்த வேலை இருந்தாலும் அதை நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று அதட்ட,
“மா வேலை இருக்கு” என்றவன் அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தபடி தன் ஜீப்பை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றுவிட, யாத்ராவின் முகத்தை பார்த்து கவலை கொண்ட ஜானகி,
“தப்பா எடுத்துக்காத மா அவன் வேலை அப்படி” என்று ஒருவித சங்கடத்துடன் சமாளிக்க,
யாத்ராவோ, ” பரவாயில்ல அத்தை நான் தப்பா நினைக்கல” என்று தன் மாமியாரை சமாதானம் செய்தவளுக்கு ஆரி சென்றதில் ரெட்டிப்பான மகிழ்ச்சி.
“சரி வாடா உன்னை உன் ரூம்ல விடுறேன், உன் திங்க்ஸ் எல்லாம் அங்க தான் இருக்கு ஏதும் வேணும்ன்னா கேளு சரியா” என்றவருக்கு மகனின் செயலை எண்ணி கோபமாக வந்தது. ஜானகி கவலை தொனித்த முகத்துடன் அங்கிருந்து சென்று விட, அர்ஜுனன் தன் அருகில் இல்லை என்கின்ற உணர்வே அவளுக்கு நிம்மதி அளித்திருக்க,எந்த வித கவலையும் இன்றி யாத்ரா நிம்மதியாக இருந்தாள்.
!!!!!!!!!!!!!
“டேய் ஆரி இங்க என்னடா பண்ற? இன்னைக்கு தான் டா உனக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு,நான் பார்த்துக்கறேன் நீ வராதன்னு சொன்னேன்ல,நீ முதல்ல போ டா ” மாறன் விரட்டினான் .
அதற்கு,”எனக்கு மட்டும் அவளை அங்க தனியா விட்டுட்டு இங்க வரணும்ன்னு ஆசையா, என்ன பண்றது இவன் மாட்டுவான்னு தானே இவ்வளவு நாளா காத்திருந்தோம் இப்போ சிக்கி இருக்கும் பொழுது சும்மா விட முடியுமா” என ஆரி தன் முழு கை சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டபடி கூற,
“டேய் நீ கடமை வீரன்னு ஒத்துக்குறேன் ஆனா எந்த புது மாப்பிள்ளையும் இப்படி பண்ண மாட்டான்டா. அதுவும் ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டு, சும்மா என்ஜாய் பண்ண வேண்டாமா”என்ற மாறனிடம்,
“இவன் கதையை முடிச்சா தான் எனக்கு நிம்மதி” என்று கூறிவிட்டு தன் துப்பாக்கியை லோட் செய்தபடி உள்ளே நுழைய,
“டேய் உன்னை பார்த்தாலே பயமா இருக்கு, இப்போ எதுக்கு துப்பாக்கியை லோட் பண்ற?என்ன செய்ய போறன்னு சொல்லிட்டாவது செய், அரசியல் செல்வாக்கு உள்ள இடம் டா பிரச்சனை வரும். பார்த்து ஹண்டில் பண்ணு ஆரி, பெரிய ரிஸ்க் ஆகிடும்”
“அதுக்கு என்ன பண்ண சொல்ற, அவன் பண்ணின காரியத்தை அப்படியே விட சொல்றியா. இவனை விட்டா நாம போலிஸ்ன்னு சொல்றதுக்கே அர்த்தம் கிடையாது .” என்றவனின் விழிகள் அனலை கக்க,
“ஆரி” என ஏதோ பேச வந்த மாறனை தன் கரம் உயர்த்தி தடுத்த அர்ஜுனன்,
“அந்த இடத்துல வேற யாரும் இருந்தாங்களா? நம்ம பசங்கள யாரும் பார்த்தாங்களா?”
“இல்லை டா ஊருக்கு அவுட்டர், சிவிலியன்ஸ் யாரும் இல்லை”
“எத்தனை பேர்”
“அவனோட சேர்த்து மூணு பேர் இப்போ தான் மயக்கம் லேசா தெளிய ஆரம்பிச்சிருக்கு”
“மொத்தமா மாட்டிக்கிட்டாங்கன்னு சொல்லு” என தன் மீசையை முறுக்கியவன், “வா டா இப்போ தர போறது தான் என் கல்யாணக்குக்கு உண்மையான ட்ரீட்டு” என்றவன் உற்சாகமாக உள்ளே நுழைந்து அவர்களை அழுத்தமான பார்வை பார்க்க, அவர்களோ பாதி மயக்கம் தெளிந்த நிலையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த இன்ஸ்பெக்டர்க்கும் ஆரி அர்ஜுனன் மற்றும் மாறனின் நண்பனுமான ஆரிதன்,
“உண்மைய சொல்லாம உங்கள இங்க இருந்து அனுப்ப முடியாது உங்க வீட்ல வேலை பார்த்த வைதேகியோட பொண்ணு ரோஜாவ என்ன பண்ணுனீங்க” என்று ரெக்கார்டரை ஆன் செய்து டேபிள் மீது வைத்தபடி விசாரணையை துவங்க,
அப்பொழுது, ” இப்போ என்னடா நாங்க தான் அன்னைக்கு அந்த பொண்ணை தூக்கிட்டு போய் ரேப் பண்ணினோம் நாங்க மூணு பேர் மட்டும் இல்லை செத்து போன எங்க ட்ரைவோரட சேர்த்து நாங்க நாலு பேர் சேர்ந்து செஞ்சோம். இன்னும் செய்வோம் உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க டா” என்று அந்த கூட்டத்தின் தலைவனும் தொழிலதிபரின் மகனுமான சர்வேஷ் சொல்லி முடிக்கவும் தன் அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி ஆவேசமாக வந்த ஆரி அவனது தலையில் ஓங்கி அடிக்க, ஒரே அடியில் கீழே விழுந்தவனோ வலியில் கதறிவிட, அதை கண்ட மற்ற இருவரும் பயத்தில் நடுங்கி கொண்டிருக்க அர்ஜுனனோ ஒருத்தனையும் விட வில்லை.
ஆரித்தனும் மாறனும் எவ்வளவோ தடுத்தும் ஆரி யாரையும் வைத்து பார்க்க வில்லை.
அவர்களின் உயிர் உடலில் இருந்து பிரியும் வரை அவர்களை இறங்கமின்றி தாக்கிய அர்ஜுனனை,
“அர்ஜுனா விடு டா” என்று மிகவும் சிரமப்பட்டு தடுத்த ஆரிதன், “என்ன டா இது” என்றவன் “கண்ட்ரோலே இல்லாம ஏண்டா இவ்வளவு கோப்படுற, எல்லாத்திலையும் அடாவடி தனம், நான் தான் விசாரிச்சிட்டு இருந்தேன்ல”
“விசாரிச்சு என்ன பண்ண போற, ஒரு வாரத்துல வெளிய வந்திருவான் கேஸ் சுத்தமா நிக்காது நீ பார்க்காததா”
“ஆனா தண்டனை கொடுக்குறது சட்டத்தோட வேலை” என்று அர்ஜுனனுடன் வாதிட்ட ஆரிதனே வருங்காலத்தில் ஒருநாள் சட்டத்தை தன் கையில் எடுக்க போகிறோம் என்பதை அறிந்திருந்தால் இன்று அர்ஜுனனுடன் இவ்வாறு வாதிட்டிருக்க மாட்டான்.
“தப்பு செஞ்சா நான் தண்டனை கொடுப்பேன் அது யாரா இருந்தாலும் சரி” என அர்ஜுனன் ஆவேசமாக கூற ஆரிதனை பார்த்து கண்ணை காட்டிய மாறன்,
“டேய் ரிதா நீ சொன்னா அவன் கேட்கவா போறான் விடு டா அடுத்த வேலையை பார்ப்போம்” என்று சொல்லவும் பெருமூச்சை வெளியிட்ட ஆரிதன், ” அர்ஜுனா நீ இங்க இருக்க வேண்டாம் நீ வீட்டுக்கு கிளம்பு நானும் மாறனும் பார்த்துக்குறோம்” என்று சொல்ல இல்லை என்று மறுத்த அர்ஜுனனை நண்பர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க சிறிதும் குறையாத கோபத்துடன் ஆரி வீட்டிற்குள் வந்தான்.
!!!!!!!!!!!!!!
அங்கிருந்து கிளம்பியது முதல் அந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்தவனுக்கு சில நிமிட பயணத்திற்கு பிறகு இறுக்கம் மெல்ல மெல்ல குறைந்து யாத்ராவின் முகம் நினைவுக்கு வர அவனது இதழ் தானாக புன்னகைத்து கொண்டது.
‘தூங்கிருப்பாளா இல்லை விழித்திருப்பாளா’ என்னும் சிந்தனையுடன் தன் அறைக்கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்களில் தன் உடலை குறுக்கிக்கொண்டு பாதுகாப்பை தேடும் குழந்தையை போல படுத்திருக்கும் தன் மனைவியின் முகம் பட, எஞ்சியிருந்த சொற்ப கோபம் கூட வந்த இடம் தெரியாமல் சென்றுவிட ,புன்னகைத்தபடி அவளை நெருங்கியவன் தரையில் மண்டியிட்டு அமர்ந்து, அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ‘சாரி கண்ணம்மா இன்னைக்கு நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான நாள் இன்னைக்கு போய் உன்னை நான் தனியா விட்டுட்டேனே, முக்கியமான வேலை அதான் உன்னை விட்டுட்டு போய்ட்டேன்’ என்று மனைவியின் கேசத்தை வருடி கொடுத்தவன்,எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொள்ள,
நிமிடங்கள் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கவும் எழுந்து கொண்ட யாத்ரா அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை அருந்திக்கொண்டிருக்கும் பொழுதே பால்கனியில் கேட்ட குரலில் திகைத்தவள்,
‘இது ஆரியோட குரலே, வந்துட்டாரா’ என்ற சிந்தனையுடன் எட்டிப்பார்க்க பால்கனியின் கதவில் சாய்ந்தபடி தன்னையே பார்த்திருந்த ஆரி அர்ஜுனனை கண்டு திகைப்படைந்தாள்.
அவனது அழுத்தமான பார்வையை பார்க்க இயலாது சிறு படபடப்புடன் நின்றிருந்தவள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,
“வந்துடீங்களா” என்று சம்பிரதாயம் பொருட்டு கேட்க,
“ஏண்டா வந்தன்னு கேக்குறது போல இருக்கே கண்ணம்மா” என்று கண்ணடித்தபடி நக்கலாக கேட்டான் அர்ஜுனன்.
‘ச்ச மனசுல கூட ஒன்னும் நினைக்க முடியல’ என அவனை மனதிற்குள் திட்டிகொண்டவள் , “அதெல்லாம் இல்லை” என்று சொல்ல,
“அதெல்லாம் இல்லையா! அப்போ எப்ப வருவேன்னு ஏங்கிட்டு இருந்திருக்க சரியா?” என்று ஆரி கேட்கவும் அதிர்ந்து விழித்தவள், அவனது விழிகளை பார்க்க இயலாது குனிந்து கொள்ள, பதில் சொல்லாது தன் கரங்களை பிசைந்தபடி குனிந்திருந்தவளை ஆரி இரெண்டு எட்டில் நெருங்க, அவன் நெருக்கம் கண்டு பெண்ணவள் நான்கு எட்டுக்கல் பின்னால் சென்று நிற்க,
“நான் ஒன்னு கேட்டேன் அதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை” என்றவன் பேச்சோடு பேச்சாக தன் பார்வையாலே அவளை மிக மிக நிதானமாக அளவெடுத்தான். நீல நிற காட்டன் புடவையில் ஒப்பனைகள் ஏதும் இன்றி விரித்து விடப்பட்ட கூந்தல் ஆங்காங்கே கலைந்திருக்க,குண்டு விழிகளை உருட்டிக்கொண்டு ம்ம் அழகான திருடி தான்! பார்வையாலே என்னை திருடி விட்டாளே!
விழிகளில் தாராளமாக வழியும் தாபத்துடன் தன் முன்னே நின்றிருந்தவனை கண்டு இனி என்ன நடக்கும் என்பதை எண்ணி பதறியவளுக்கு அதரங்கள் தானாக துடிக்க துவங்கியது.
இந்த நிமிடம் அர்ஜுனனின் கண்களில் அவள் பார்க்கும் உணர்ச்சி புதிது, பார்த்தே பெண்ணவளின் தேகத்துக்குள் பலவித மாற்றத்தை ஏற்படுத்த, தேகம் தளிர்த்தவள்.
“எனக்கு லைட்டா தூக்கம் வருது” என கூறி அவனை தாண்டி சென்று படுக்கையில் படுத்து கண்களை இறுக்கமாக மூடி கொள்ள, பொங்கி எழுந்த சிரிப்பை தனக்குள்ளே கட்டுப்படுத்திக்கொண்டவன், சத்தமின்றி அவள் அருகில் வந்து படுத்துக்கொள்ள, அவனது அருகாமையை உணர்ந்தவளுக்கு இதயம் பந்தைய குதிரையின் வேகத்தில் துடிக்க துவங்கவும் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவள் அருகே படுத்திருந்தவனிடம் சிறிய மாற்றம், மெல்லமாக அவள் பக்கமாக ஒருகரத்தை தன் தலைக்கு கொடுத்து திரும்பி படுத்தான்.
அவளது மேல் உதட்டில் துளிர்ந்திருந்த வியர்வையை துடைக்கும் சாக்கில் மிதமாக தன் விரல் கொண்டு அவளது இதழை வருடினான். நெற்றி சுருங்க தன் கண்களை முடிந்த வரை இறுக்கமாக மூடி கொண்டாள், இப்பொழுது புன்னகையுடன் அவளது முகத்தை வருடியவன்,
“தூங்கிட்டியா கண்ணம்மா” என்று கேட்டான்.
“ஆமா” வேகமாக அவனது கண்ணம்மாவிடம் இருந்து பதில் வந்தது,
“ஆஹான்” என்ற அவனது கேலி குரலில் தன் நடிப்பை அவன் கண்டுகொண்டான் என்பதை புரிந்துகொண்டவள் தன் நாக்கை கடித்துக்கொண்டாள். அவனோ மென்னகையுடன் தன் பணியை தொடர திசைமாறி வழிமறந்து பயணித்த அவனது விரல்கள் பெண்ணவளின் தேகத்தில் மின்னலை பாய்ச்ச, யாத்ரா சட்டென்று அவனது கரத்தை பிடித்துக்கொள்ள, அவனோ மிக லாவகமாக அவள் பற்றியிருந்த தன் கரத்தின் விரல்களுடன் அவளது கரத்தின் விரல்களை கோர்த்துக்கொள்ள, மனம் படபடக்க வேறுபக்கமாக திரும்ப முயன்றவளிடம்,
“ப்ளீஸ் கண்ணம்மா” என்றவன் அவளது வதனம் பற்றி தன் பக்கமாக திருப்பியவனின் தேகம் தாரளமாக தன்னவளுடன் தேகத்துடன் உரசிக்கொள்ள, அவனது உதடுகள் அவளது கழுத்து வளைவில் புதைந்து புதையலை தேடியது.
யாத்ராவோ அவனுடன் நெருங்கவும் முடியாது அவனை விலக்கவும் முடியாது ஒருவித பிரித்தெறிய முடியாத உணர்வுகளுக்குள் சிக்கி தவித்து கொண்டிருக்க, ஆணவனின் வழிமாறி பயணித்த ஈர இதழ்கள் பெண்ணவளை மேலும் தவிக்க வைத்தது.
அவனது வலிய கரங்கள் அவளது மென் இடையில் யாழ் இசைத்து கொண்டிருந்தது , அவனது ஒவ்வொரு அணுவும் அவளுடன் ஒன்றாக கலந்து எல்லையற்ற காதல் இன்பத்தை காண துடிக்க ஆரம்பிக்க,
அவளோ அவன் தன்னை மறந்திருந்த நேரம் சற்றென்று அவனிடம் இருந்து விலகி எழுந்து அமர,
“கண்ணம்மா” என்றபடி அவளது கரத்தை பிடித்திழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவனவள் அவனது அரவணைப்புக்குள் சிறைப்பட,
குழப்பமான மனநிலையில் இருந்த பெண்ணவளோ,
“ப்ளீஸ்” என காற்று குரலில் கெஞ்ச. அவளை அணைத்தபடி தன்னுடன் நெருக்கிக்கொண்டவன், தன்னவளின் வதனத்துடன் தன் வதனத்தை வைத்து உரசியபடியே,
” வாட்” என காதல் தளும்பும் குரலில் கேட்க, அவனது குரலில் சில நொடிகள் தன் சுயத்தை தொலைத்தவள் தன்னை மறந்து கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள், மீண்டும் அவளுக்குள் உணர்வு குவியல்கள். குழப்பமுற்ற மனம் தனிமையை நாடியது.
ஆனால் உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் அர்ஜுனனோ மனைவியின் மனதில் இருக்கும் குழப்பங்களை அறிந்துகொள்ள தவறியவன் என் மனைவி என்னும் உரிமையில் அவளது பிறை முதலில் முத்தத்தை பதித்தபடியே இன்னும் பல முத்தங்களை அவளது தேகத்தில் முத்திரையாக பதிக்க துவங்கினான்.
முத்தம் ஓர் அழாகான, அற்புதமான, புனிதமான கணவன் மனைவி உறவுக்கு முதல் அச்சாரம் அதை அர்ஜுனன் சரியாக செய்தான். தன்னவளின் முகத்தில் விளையாடிக்கொண்டிருந்த முடி கற்றையை எடுத்து காதோரமாக சொருகியவன் , அவளது கன்னத்தில் முத்தமிட்டான் . அவ்வளவு உணர்வு பிடியிலும் பெண்ணவளை மிக மென்மையாக கையாண்டான். எல்லாம் சரி தான் கொஞ்சம் அவள் மனதின் குழப்பங்களை கண்டறிந்து அதை சரி செய்துவிட்டு வாழ்க்கை பயணத்தை துவங்கியிருந்தால் பின்னாளில் வரவிருக்கும் மனஸ்தாபங்களை தடுத்திருக்கலாமோ.
அவளது மென்மையான கன்னத்தில் அவனது தாடியும் மீசையும் ஏற்படுத்திய தீண்டல்கள் அவளுக்குள் மாற்றங்களை உண்டாக்கியது, தன்னவனின் தீண்டலில் அவளது பெண்மை கரைந்து கொண்டிருக்க, வழக்கம் போல அவனது அருகாமையில் செயலற்று போகும் தன் இயலாமையை எண்ணி வருந்தியவளாய் தனது இதழ்களை அழுந்த கடித்து கொண்டாள். அவனது காதலில் அவள் கிரங்காமல் இல்லை, ஆனால் ஏனோ மனம் ஏற்க மறுத்தது என்பதை விட அவள் மனம் ஆரியை நம்ப மறுத்தது.
ஆணவனது சின்ன சின்ன அத்துமீறல்கள் இப்பொழுது எல்லையை கடக்க தன்னவளின் அருகாமை கொடுத்த இன்பத்தில் இருந்து வெளிவர விரும்பாதவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னவளை கொள்ளையிட்டு முழுவதும் ஆட்கொண்டவன்.
“தேங்க்ஸ் கண்ணம்மா” என்று காதலோடு கூறி அவளது நெற்றியில் முத்தமிட பெண்ணவளோ அவனை பார்த்து முறைத்தபடி போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு விலகி படுக்க அவளது செயலில் இதழ் இசைத்தவன் வம்பாக அவளது போர்வைக்குள் நுழைந்து அவளது செல்ல திமிறல்களை அழகாக அடக்கியபடி தன்னவளை தன்னுடன் நெருக்கமாக இழுத்து அணைத்தபடி உறங்கிவிட, கொஞ்ச நேரம் எதையோ சிந்தித்தபடி அவனது அணைப்பிற்குள் கிடந்தவள் பின்பு அவனது இதயத்துடிப்பை கேட்டபடி அவனது சூடான சுவாசத்தை சுவாசித்துக்கொண்டே உறங்கினாள்.
தொடரும்