UUU–EPI 26-part 2

103977454_653445081909496_2472649225753995686_n-8be5453a

UUU–EPI 26-part 2

“உங்க பேமிலிய பத்தி எல்லாம் சொன்னான் அண்ணா! உன்னைப் பத்தியும் சொன்னான். வாட்சாப்ல நந்தனா போட்டோவ அனுப்பி, திஸ் இஸ் நந்தனான்னு கேப்ஷன் போட்டிருந்தான். அத டவுன்லோட் செஞ்சுப் பார்த்தேன். உன் போட்டோவையும் அனுப்பி திஸ் இஸ் ரிஷி, நந்தனாவோட ட்வீன் ப்ரதர்னு அனுப்பினான். அத நான் டவுன்லோட் கூட பண்ணல”

“ஏன்டி?” தன் படத்தைப் பார்க்காததில் லேசாக கடுப்பானான் ரிஷி.

“எதுக்கு? அண்ணா நீ பேச்ச்லர்னு சொன்னான்! அந்த டைம்ல எந்த பேச்சலரையும் பார்த்து வழியிற மூட்ல நான் இல்ல. விக்கி, கல்யாண ஏற்பாடு, ஆக்சிடேண்ட், தலை வலி, மெமோன்னு செம்ம ஸ்ட்ரேஸ்ல இருந்த சமயம் அது! எவன் சிங்கிளா இருந்தா என்ன மிங்கிளா இருந்தா எனக்கு என்ன அப்படின்ற மனநிலை. நந்து மட்டும்தான் என் போக்கஸா இருந்தா! நந்துவுக்கு வேண்டியதை செஞ்சிக்கிட்டே, வேலையைப் பத்தி நினைக்காம, கல்யாணத்தப் பத்தி நினைக்காம, சிவசுவ பத்தி நினைக்காம எனக்காக என் இஸ்டப்படி அந்த சில மாதங்கள வாழ்ந்துப் பார்க்க நினைச்சேன். புடிச்ச மாதிரி உடுத்துனேன், மேக்கப் செஞ்சிக்கிட்டேன், லென்ஸ் யூஸ் பண்ணேன், நெனைச்சத சாப்பிட்டேன். மொத்தத்துல எனக்கான புதிய உலக சிருஷ்டிச்சுக்கிட்டேன்!” என சொன்னாள்.

அவளின் பூப்போட்ட கலர் ஆடைகள், ஆளை அசரடிக்கும் கலர் லென்ஸ்கள், ஆளைக் கொல்லும் ஹீல்ஸ்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன ரிஷிக்கு.

“என் அழகு பூங்கா ராயா!” என அவள் தாடையைப் பிடித்து செல்லமாய் ஆட்டினான் ரிஷி.

“கேமரன் வந்து ரெண்டு நாள் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தேன். அப்புறம் தான் ‘மிஷன் நந்தனா’வ துவக்கனேன். நந்துவ எப்படி நெருங்கலாம்னு பல திட்டம் போட்டு வச்சிருந்தேன். அவ சகோதரன ஆள் வச்சு லேசா கார்ல இடிச்சுத் தள்ளிட்டு நான் ஹெல்ப் பண்ணற சாக்குல உள்ள நுழையலாமான்னு ஒரு திட்டம்!”

“அடிப்பாவி!” திகைத்துப் போனான் ரிஷி.

“ஏற்கனவே ஆக்சிடேன்ட்னால லைப்பே மாறிப் போச்சு! மறுக்க அதேவான்னு ட்ராப் பண்ணிட்டேன்.” என புன்னகைத்தாள்.

இவன் இன்னும் அதிர்ச்சியில்தான் வாய் பிளந்து அமர்ந்திருந்தான்.

“சரி, அதிரடியா எதுனாச்சும் தொடங்கற முன்னே, நோட்டம் விடற மாதிரி ‘பைட் மீ’க்கு போய் பார்த்துட்டு வரலாம்னு வந்தேன். அப்பத்தான் அந்த ஸ்நாட்ச் தேப்ட் உங்க கடை முன்ன நடந்தது. ஒரு கர்ப்பிணி பெண்ணுன்னு மட்டும்தான் தெரிஞ்சது. கிட்ட போகற வரை நந்தனான்னு தெரியல. நம்ப நந்து கிட்டத்தான் கொள்ளை அடிக்கப் பார்த்தான் அவன்னு தெரிஞ்சதும் அப்படி ஒரு பதட்டம் எனக்கு. கோபம் வேற கண்ணு மண்ணு தெரியாம வந்தது! வச்சி ஹீல்சாலே வெளுத்துட்டேன் அவன” என கோபமாய் சொன்னாள் சிந்தியா.

நந்தனா தன்னிடம், ‘ஹீல்ஸ்ல அடிச்சே இமயமலைக்குத் துரத்திடுவா’ என சொன்னதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான் ரிஷி.  

“நந்துவ பார்த்ததும் ஐ வாஸ் ஸ்பீச்லெஸ்! எவ்ளோ அழகு இந்த நந்தனான்னு தான் முதல்ல தோணுச்சு! போட்டோல பார்த்தத விட ஓஞ்சு போய் தெரிஞ்சா! மனச அப்படியே பிசைஞ்சது எனக்கு. சாகும் போது கூட அவ நினைவா இறந்த பாரதியை நெனைச்சு கண்ணு கலங்க ஆரம்பிச்சது. கஸ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்! கடைக்கு வான்னு நந்து கூப்பிடவும் அவ கூடவே போனேன். அப்பத்தான் வேலைக்கு ஆள் எடுக்கற நோட்டிஸ்ச கவனிச்சேன். சட்டுன்னு ஒரு திட்டம். இந்த வழியில நந்து கிட்ட நெருங்கலாம்னு. வாய்க்கு வந்த பொய்யெல்லாம் சொல்லி, நந்துவோட இளகிய மனச கரைச்சு வேலைக்கு சேர்ந்துக்கிட்டேன். அவ பேர் என்னன்னு கேட்டப்போ சிந்தியான்னு வாய் வரைக்கும் வந்துருச்சு. பாதியிலே கட் பண்ணி சிம்ரன்னு சொல்லிட்டேன். அவசரத்துல அந்தப் பேர்த்தான் வாயில வந்தது ரிஷி! சிம்ரன் பேர்ல போலி அடையாள அட்டை வாங்கிக் குடுக்க சொன்னதுக்கு என் அண்ணாவும் மூர்த்தி சித்தப்பாவும் என்னை வச்சி ஓட்டி எடுத்துட்டாங்க” என புன்னகைத்தாள் சிந்தியா.

“நீங்க பெரிய அப்பாடக்கர் பேமிலின்னு இப்போ ஒத்துக்கறேன்டி. இல்லீகலா அடையாள அட்டையே செஞ்சிக் குடுத்து என்னை ஏமாத்திருக்கீங்க!” என கடுப்பில் சொன்னான் ரிஷி.

“நான் என்ன செய்ய ரிஷி! நீ ரொம்ப கோபக்காரனா தெரிஞ்ச. நெஜத்துல நீ ஒரு புள்ளைப்பூச்சின்னு அப்பவே புரிஞ்சிருந்தா அவ்ளோ செலவு செஞ்சு அடையாள அட்டை(ஐ.சி) எடுத்துருக்க மாட்டேன்! ஐ.சி திருட்டுப் போச்சுன்னு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு ஆக்டிங்க போட்டு நாள கடத்திருப்பேன்!”

“என்னது நான் புள்ளப் பூச்சியா? அத புள்ள பெத்துக் குடுக்கற பூச்சி சொல்லக் கூடாது!(கைனின்னு அவன் லாங்குவேஜ்ல சொல்றான்)”

“சரி, இப்பவாச்சும் உண்மைய ஒத்துக்க! மறுநாள் வேலைக்கு கிளம்பி வரப்போ, ‘பைட் மீ’ பக்கமா என்னையும் டீவாவையும் பார்த்த! என் அழகுல மயங்கி என்னை கவர்ந்திழுக்க என் டீவாவ யூஸ் பண்ணிக்கிட்ட! சரியா?” என பெருமையாக முடித்தான்.

“ஆசை தோசை அப்பள வடை! என்னா நெனைப்புடா சாமி உனக்கு! பேரழகன் சூர்யா மாதிரி இருந்துட்டு, காக்க காக்க சூர்யா மாதிரி சீன் போடாதே!”

“ஏய் நீ சிம்ரன்தானடி? இப்போ ஏன் ஜோதிகா புருஷன வம்பிழுக்கற! கொஞ்சம் கூட நல்லா இல்லடி இதெல்லாம்! இந்த சிம்ரன் வாயில நந்தன் பெயர் மட்டும்தான் வரணும்! இல்லைனா வாயத் தொறக்க முடியாத அளவுக்கு முத்தம் கொடுத்தே வீங்க வச்சிடுவேன்” என செல்லமாக மிரட்டினான் ரிஷி.

வாய் விட்டு சிரித்தாள் சிந்தியா.

“அண்ணா செண்ட் பண்ணப்பவே உன் போட்டோவ பார்த்திருக்கனும் ரிஷி! பார்க்காததால தான் ஃபர்ஸ்ட் மீட்டீங்லயே நாய் சேகர்னு உன்னைக் கூப்பிட்டு செம்ம பல்பு வாங்கனேன்” என சொல்லி நகைத்தாள்.

“என்னை எந்தப் பொண்ணும் அப்படிலாம் மரியாதை இல்லாம கூப்பிட்டது இல்லை தெரியுமா! ஐயா எங்க போனாலும் லேடிஸ் கிட்ட இருந்து தனி அட்டேன்ஷன் கிடைக்கும். ஐம் அ லேடிஸ் மேன் யூ க்நோ!” என பீற்றிக் கொண்டான் ரிஷி.

இவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“உன்னையும் டீவாவையும் தூரத்துல இருந்தேப் பார்த்தேன் ரிஷி! ஆனா உன்னை விட உன் நாய் என்னை கவர்ந்துருச்சு. தள்ளித் தான் வந்தேன். அதுவே என் பக்கம் வந்துச்சு! அந்தக் கண்ணப் பார்த்ததும் கொஞ்சாம போக முடியல!”

தன்னை விட தன் நாய் தான் அவளைக் கவர்ந்தது என சொன்னதும் முகம் தொங்கிப் போனது இவனுக்கு.

“இது, இந்த அட்டிடியூட் தான் உன் பக்கம் என்னை ஈர்த்துச்சு சிம்ரன்! எல்லா பொண்ணுங்களும் என் மேல விழுந்து பழகனாங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா அட் லீஸ்ட் என் கிட்ட ஐ காண்டாக்ட் குடுக்கவாச்சும் ட்ரை செய்வாங்க! ஆனா நீயோ, முத சந்திப்பிலேயே மட்டு மரியாதை இல்லாம நாய் சேகர்னு கூப்டு வச்சு திட்டன! ஹீல்ச கைல தூக்கிக் கொடுத்துட்டுப் போன! நீ போனதும் கண்ணு மண்ணு தெரியாத கோபம் தான் வந்தது. கோபம் குறைஞ்சதும், என்ன பொண்ணுடா சாமி இவன்னு மெர்சலாகிட்டேன். நம்ம கடைக்குத் தானே போய்ருக்க, அப்புறம் வச்சிக்கறேன் உன்னைன்னு நெனைச்சுட்டே வீட்டுக்குப் போனேன்! கடைசில நெஜமாகவே உன்னை வைச்சிக்கப் போற குடுத்து வச்ச மகராசனா ஆகிட்டேன் சிம்ரன்”

ரிஷி அப்படி சொன்னதில் கடுப்பாகிப் போனவள், அவன் நெஞ்சிலேயே குத்தினாள்.

“வைச்சிக்கறேன்னு சொல்லுவியா? சொல்லுவியா?” என கேட்டு கேட்டு குத்தினாள்.

சிரிப்புடன் அவள் கையைப் பற்றி தடுத்தவன்,

“எவனொருவன் கட்டிய பொண்டாட்டியையே வைத்துக் கொள்வதாக சொல்கிறானோ, அவனே பிற பெண் நோக்கா ஏகபத்தினி விரதன் ஆகிறான். நந்தன், விரதன் எப்படி ரைம் ஆகுது பார்த்தியா?” என புன்னகையுடன் கேட்டான் ரிஷி.

“எப்படிலாம் பிட்ட போடற! யாராச்சும் இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா! நீதான் நந்தான்னு தெரியாம உனக்கே ஓனர்னு நான் பந்தா பண்ணதுலாம் கடவுளுக்கே அடுக்காது! அடிக்கடி இத நெனைச்சு நெனைச்சு சிரிச்சுக்குவேன்”

“உண்மை தெரிஞ்சு அதிர்ச்சில வாயைப் பிளந்துட்டு நின்னியே நீ, எவ்ளோ அழகா இருந்தத் தெரியுமா! பிங்க் பார்பி பொம்மை ஒன்னு பெரிய சைஸ்ல வந்து நின்ன மாதிரி, பியூட்டிபுல்! எனக்கு நீதான் ஓனர்னு சொன்னது நெஜமா இருக்கக் கூடாதான்னு ஓன் செகன்ட் தடுமாறி போச்சு என் இதயம். நந்தனா, புள்ளைங்க மட்டும்னு இருந்த இந்த சிங்கிள நீ எப்படி அப்படி நெனைக்க வைக்கலாம்னு ஒரு குட்டி கோபம் உன் மேல. அதோட கண்ணைக் காட்டி, உதட்ட சுழிச்சு, நாக்க நீட்டி என்னை கவர் பண்ண பார்க்கவும் இன்னும் புசுபுசுன்னு கோபம் ஏறிடுச்சு! பார்த்த முதல் நாளே என் சிங்கிள் ஸ்டேட்டஸ்க்கு ஆப்பு வச்சிடுவியோன்னு பயம்தான் கோபமா மாறிடுச்சு! அதான் அவ்ளோ கஸ்டமான வேலைலாம் குடுத்தேன். நீ சோர்ந்து போகறத பார்த்து மனசு வேற கேக்கல சிம்ரன். அதான் வேலையை குறைச்சது மட்டுமில்லாம, ஷீலாவையும் உனக்கு ஹெல்ப் செய்ய சொல்லிக் கேட்டுக்கிட்டேன்.”

“நான் அவ்ளோ அழகா ரிஷி? எப்படி பார்த்த உடனே ஈர்ப்பு வந்ததுன்னு சொல்ற?”

“அடிக்கடி நான் அழகு நான் அழகுன்னு தம்பட்டம் அடிச்சிக்கிற உனக்குத் தெரியாதா நீ அழகுன்னு?”

சோகமாக புன்னகைத்தாள் சிந்தியா.

“என்னோட செல்ப் காண்பிடன்ஸ அந்த விக்கி அடிச்சு நொறுக்கிட்டான் ரிஷி! நான் ஓரளவு பார்க்கற மாதிரி இருக்கேன்னு தெரியும்! ஆனா அவன் கிட்ட பழகனதுல இருந்து, என்னோட தன்னம்பிக்கை அதலபாதாளத்துல விழுந்துடுச்சு! என்னை நானே தூக்கி நிறுத்த யூஸ் பண்ண ட்ரீக்தான் என்னை நானே அழகு அழகுன்னு சொல்லிக்கிறது. நம்ம கிட்ட இல்லைன்னு நினைக்கற ஒன்ன இருக்குன்னு நம்மல நாமே நம்ப வைக்கனும் ரிஷி! நான் முட்டாள்னு மனசு சொன்னா, இல்லை நான் புத்திசாலின்னு நமக்கு நாமே சொல்லிக்கிட்டே இருக்கனும். இது தான் தன்னம்பிக்கைய பில்ட் பண்ணறதோட ஃபர்ஸ்ட் ஸ்டேப் ரிஷி”

“கைல கிடைச்ச வைரத்த போற்றி பாதுகாக்காம, கண்ணாடி கல்ல தேடிப் போற அந்த விக்கி ஒரு வடிக்கட்டன முட்டாள்! அந்த மாதிரி முட்டாள் இருக்கவும்தான் என் சிம்ரன் எனக்கே எனக்கா கிடைச்சா! அழகே பொறாமைப்படற அளவுக்கு பேரழகி நீ டா சிம்ரன். அந்த அழகுலாம் என்னை மாதிரி மகா ரிஷி கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்! ஆரம்பத்துல என்னை ஈர்த்தது உன்னோட புற அழகுதான். மாசு மரு இல்லாத இந்த முகம், அழகான ஸ்கின் நிறம், அலை அலையான இந்த கூந்தல், நீளமா இருக்கற இந்த கழுத்து, ஹார்ட் ஷேப்ல இருக்கற இந்த கிஸ்ஸபிள் உதடு இதெல்லாம் என்னை கிறுக்குப் புடிக்க வச்சது. அதோட சேர்த்து கஸ்டமான வேலை குடுத்தாலும் முனகாம செஞ்ச டெடிகேஷன், நந்து மேல வச்சிருக்கற அன்பு, குட்டி மேல வச்சிருக்கற பாசம், கபேல வேலை செய்யறவங்களோட பழகற பாங்குன்னு எல்லாமே பிடிச்சது சிந்தி. உன் கூட பழக பழக ஈர்ப்பு காதலா மாற ஆரம்பிச்சது! உன் கிட்ட பேசறப்போ, பழகறப்போ எல்லாம் நார்மலா காட்டிக்க ரொம்பவே சிரமப்பட்டேன்! ஆனாலும் என்னையும் மீறி பல தடவை உன்னை தொட்டுத் தடவின்னு செம்மையா வாங்கி கட்டிருக்கேன் உன் கிட்ட!”

“எனக்கு உன் மேல எப்ப பிடித்தம் வந்ததுனு தெரியல ரிஷி! ரொம்ப அழகா இருக்கியே, விக்கி மாதிரி திமிர் இருக்கும், தள்ளி நின்னு பழகனும்னு தான் நினைச்சேன். அதான் ப்ரேண்ட்னு கை குடுத்து சமாதானமாகிட்டாலும் ஒதுங்கிப் போக ஆரம்பிச்சேன். ஆனா நீ அதுக்கு விடல. என்னை வம்பிழுத்து பேச வச்ச, சிரிக்க வச்ச, கோபப்பட வச்ச! மொத்தத்துல உன்னை கவனிக்க வச்ச! உன் கிட்ட கிண்டலா நக்கலா பேசறப்பலாம் அவ்ளோ உற்சாகமா இருக்கும் ரிஷி. என்னைப் பார்க்கறப்போ உன் கண்ணுல தெரியற வெளிச்சம் எனக்கு அவ்ளோ பிடிச்சது. என் கிட்ட சண்டை போடறப்போ கூட உன் கண்ணுல டன் டன்னா வழியற ரசனைய நானும் ரசிச்சிருக்கேன். எனக்குள்ள சலனத்த நீ விதைக்க ஆரம்பிக்கவும், இங்கிருந்து சட்டுன்னு கெளம்பிடனும்னு நெனைச்சேன்”

“ஏன், ஏன்?”

“ஏன்னா சிவசுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்த நான் செய்யப் போறேன்னு என் உள்ளுணர்வு பயம் காட்டிட்டே இருந்தது.”

வேற்று ஜாதியான தன்னை எங்கே காதலித்து விடுவாளோ என அவள் பயந்ததை சொல்கிறாள் என புரிந்துக் கொண்டான் ரிஷி.

“நந்துவுக்காகத்தான் வந்தேன்! அவளும் பிள்ளைகளும் நல்லா வாழ வழி செய்யறதுக்குத்தான் வந்தேன். வந்த இடத்துல நீ என்னை திசைத் திருப்பற மாதிரி இருந்தது. அதான் அன்னைக்கு உன்னோட ஆபிஸ்ல தங்கற மாதிரி சீன் போட்டு, நந்தனாவோட பெர்சனல் டீட்டேயில் எதாச்சும் கிடைக்குமான்னு ஆராய வந்தேன். அவளோட அடையாள அட்டை காப்பி, கையெழுத்து இப்படி எதாச்சும் கிடைக்குமான்னு தேடத்தான் அங்க தங்கினேன். சீசீடீவி இருக்குன்னு தெரியும். அப்படி மாட்டனா, தங்க இடம் இல்லைன்னு உன்னை நம்ப வைக்கலாம்னு தான் துணிலாம் கொண்டு வந்து ஸ்டோர் ரூம்ல வச்சேன். அன்னைக்கு மட்டும் நான் தேடனது கிடைச்சிருந்தா, கிளம்பிப் போய்ட்டே இருந்துருப்பேன் ரிஷி!”

முன்பே நந்தனாவின் டீட்டேய்ல்ஸ் சிக்கி இருந்தால், அவள் பெயரில் அவள் அறியாமலே பண முதலீடு செய்து, பிள்ளைகள் இடைநிலைப்பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் பணம் அவர்கள் கைக்கு கிடைக்கும்படி செய்திருப்பார்கள். ஆனால் அன்று ரிஷியிடம் மாட்டிக் கொண்டாளே சிந்தியா! கையும் களவுமாய் மாட்டியவள், அதன் பின் காதலிலும் அல்லவா மாட்டிக் கொண்டாள்.

காதல் பல பொய்கள் சொன்னாலும் மன்னிக்கும். ஏனென்றால் காதல் இன்பமல்லவா! கல்யாணம் ஒரு பொய் சொன்னாலே கசந்து போகும்! ஏனென்றால் கல்யாணம் துன்பமல்லவா! வைரமுத்துவே காதல் பார்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பார்ப்பது நான்கு கண்ணிலடி பெண்ணே என சொல்லி இருக்கிறாரே!  அதனால்தான் ரிஷியைத் திருமணம் செய்யும் முடிவில் இருந்தவள், நந்தனா பெயரில் இன்வெஸ்ட் செய்தது நந்தனுக்குத் தெரியும்படி பார்த்துக் கொண்டாள். அவன் ஆட்சேபிக்கும் பட்சத்தில், சமாளிக்கவாத் தெரியாது இந்த கேடிக்கு!

அவள் கிளம்பி போயிருப்பேன் என சொன்னதில் மனம் கணத்துப் போனது ரிஷிக்கு. அப்பொழுது அவள் கிளம்பி இருந்தாலும், பாசிங் க்ளவுட்டாக கொஞ்ச நாளில் அவனுமே அவளை மறந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்தன எனும் உண்மை உறைக்கவும் மனதை தேற்றிக் கொண்டான் இவன்.

சிந்தியா நந்தனாவின் வீட்டிற்கு வந்த பிறகு தானே, கொஞ்சம் கொஞ்சமாக இருவரின் ஈர்ப்பும் நேசமாய் வளர ஆரம்பித்தது. இந்த காதல் சரிதானா என இவன் தன்னுள்ளேயே போராடிக் கொண்டிருக்க, இவளோ வேண்டாம், வேண்டாம் இந்தக் காதல் வேண்டாம் என தனக்குத் தானே வேலி போட்டுக் கொண்டு போராடி கொண்டிருந்தாள். ரிஷி மறைமுகமாக தன் காதலை கிடைத்த சந்தர்ப்பத்திலெல்லாம் அவளிடம் வெளிக்காட்ட, அதை அறிந்திருந்தும் அவனை கேலி, கிண்டல், நக்கல் செய்து திசைத் திருப்பிக் கொண்டிருந்தாள் சிந்தியா.

மனதினுள்ளே மெல்லிய சாரலாய் காதல் துளிர்த்திருந்தும், அதை வெளிக்காட்ட பயந்தாள் சிந்தியா. மூர்த்தியின் காதல் எப்படி தன் குடும்பத்தையே ஆட்டிப் படைத்தது என சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவளாயிற்றே! அவளுடைய போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்த நாள் எங்களை விட்டு போய்விடு என சொல்லி ரிஷி அவளைக் கட்டிக் கொண்ட நாள்தான்.

“என்னைப் போயிடு சிம்ரன்னு சொன்னல ரிஷி, அன்னிக்குத்தான் என்னை சுற்றி இருந்த எல்லாத் தளைகளையும் தூக்கி எறிஞ்சுட்டு உன் கூடவே வாழ்நாள் முழுக்க இருக்கனும்னு முடிவு செஞ்சேன். போயிடுன்னு சொல்லிட்டு நீ தவிச்ச தவிப்பு புரிஞ்சது! கண்டிப்பா உன்னை விட்டுப் போயிட்டா என்னால வாழ முடியாதுன்னு தெரிஞ்சது! அன்னைக்கு நான் உனக்குக் குடுத்த முத்தம், மூடுவிழா முத்தம் இல்ல ரிஷி! நம்ம காதலோட திறப்பு விழா முத்தம்.”

“பின்ன ஏன்டி விட்டுட்டுப் போன? எப்படிலாம் உன்னைத் தேடி அலைஞ்சேன் தெரியுமா!” என ஆதங்கமாக கேட்டான் ரிஷி.

“நான் சிம்ரன் இல்ல சிந்தியான்னு உன் கிட்ட வெளிப்படுத்த நாள் குறிச்சு வச்சிருந்தேன் ரிஷி. நந்தனா டெலிவரி முடிஞ்சதும், உங்க ரெண்டு பேர் கிட்டயும் எல்லா விஷயத்தையும் சொல்லி, என் காதலையும் சொல்லனும்னு வேய்ட் செஞ்சேன். ஆனா அதுக்குள்ள நந்துக்கு ஏர்லி லேபர் ஆகிடுச்சு. என் ஐடெண்ட்டிய ரீவீல் பண்ண வேண்டியதா போச்சு! அண்ணாக்கு ஆர்டர் செஞ்சிருந்த ப்ரோஸ்தெதிக் லேக் சொன்ன தேதிக்கு முன்னமே வந்துடுச்சு. அத பிக்ஸ் பண்ணறப்போ அவன் கூட நான் இருக்கனும்னு ப்ளான் பண்ணி இருந்தேன். அட் அ டைம்ல எல்லாம் நடக்கவும் எனக்கும் தடுமாற்றமா போயிருச்சு. நந்துக்கும் உனக்கும் துணையா தில்லும்மாவ விட்டுட்டு, நான் அமெரிக்கா கிளம்பிட்டேன். அதோட…” சொல்லத் தயங்கினாள் சிந்தியா.

“அதோட என்ன?”

“நான் சிம்ரன் இல்ல சிந்தியான்னு தெரிஞ்சும் உன் காதல் ஸ்ட்ராங்கா இருக்கான்னு பார்க்கனும்னு தோணுச்சு. ஏதோ ஏமாத்துக்கார பொண்ணுன்னு தெரிஞ்சும் என்னைத் தேடுவியான்னு தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு. அப்படி தேடலைனாலும் அமெரிக்காவுல இருந்து வந்ததும் உன்னைப் பிரிச்சு மேஞ்சிருப்பனே தவிர, போடான்னு போயிருக்க மாட்டேன் ரிஷி!”

“என் காதல் உண்மையா பொய்யான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தியா? என் வாழ்க்கையில ஒரு பொண்ணு வந்தா, என் கடமைகளில இருந்து தவறிடுவேனோன்னு என் மனச பூட்டி வச்சிருந்தேன்டி. அந்த பூட்ட ஆட்டி, அசைச்சு, உடைச்சு உள்ள வந்தவ நீ! நான் செய்யற சாக்லேட்ட போல உன் முன்ன உருகி நின்னேன்டி காதலால! நீ விட்டுப் போனதும் நந்துவுக்காக நடமாடனாலும், உள்ளுக்குள்ள செத்து சுண்ணாம்பா போயிருந்தேன்! உன் தேகத்துக்குத் தான் சிம்ரன், சிந்தியான்னு பெயர்! நான் காதலிச்சது அந்த தேகத்துக்குள்ள இருக்கற ஆன்மாவ! சிந்தியா சிம்ரனா மாறினாலும், சிம்ரன் சிந்தியாவா மாறினாலும் அந்த ஆன்மா ஒன்னுதானே!” என கரகரத்த குரலில் கேட்டான் ரிஷி.   

அவனை இறுக அணைத்துக் கொண்டாள் சிந்தியா!

“உன் காதல சந்தேகப்பட்டு அப்படி செய்யல ரிஷி! புண்பட்ட என் இதயத்துக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. தாத்தா நான் டாக்டர் ஆகனும்னு என் மேல பாசத்தக் கொட்டனாரு. என்னைப் பெத்தவங்க என் தாத்தாவுக்கு பயந்தே பாசத்தக் கூட மறைமுகமா காட்டனவங்க! தில்லும்மா பாசம் காட்டனாலும், அவங்களாலும் தாத்தாவ மீறி பலது செய்ய முடியாது! விக்கி என் பணத்துக்காக என் பின்னால வந்தவன். அண்ணா என்னை விட்டு தூரமாகவே இருந்து பழகிட்டான். அவனது எப்பவுமே தொலைதூர பாசம்தான். எனக்கே எனக்கா ஒரு ஜீவனாச்சும் துடிக்காதான்னு ஏக்கமா இருக்கும். நான் விட்டுட்டுப் போனா என் ரிஷி எனக்காக துடிப்பானான்னு தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு ரிஷி! தப்புத்தான், என்னை மன்னிச்சிடு” என கண் கலங்கியவளை ஆதுரமாகப் பார்த்தான் ரிஷி.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தன் மீது யாராவது அன்பைப் பொழிவார்களா என ஏங்கி நிற்கும் அந்த வயது வந்த குழந்தையை அன்பாய் அணைத்துக் கொண்டான் ரிஷி.

“என் வாழ்நாள் முழுக்க, போதும்டா என்னை விட்டுருன்னு நீ கெஞ்சற அளவுக்கு திகட்ட திகட்ட அன்பையும் காதலையும் அள்ளிக் கொடுப்பேன்டி சிம்ரன். நக்கல் அடிப்பேன், கலாய்ச்சி விடுவேன், சண்டை போடுவேன் ஆனா எல்லாத்தையும் காதலோட செய்வேன்டி”

அவனின் வார்த்தையில் மனம் நிறைந்துப் போனது அவளுக்கு.  

“லைப்ல நெக்ஸ்ட் என்னன்னு உடைஞ்சிப் போய் நின்ன எனக்கு, உத்வேகம் குடுத்தது உன்னோட காதல் தான் ரிஷி! நம்மையும் ஒருத்தன் லவ் பண்ணறான், அதுவும் கண்ணாபின்னான்னு லவ் பண்ணுறான்னு தெரிஞ்சப்போ எனக்கு வந்த கர்வத்துக்கு அளவேயில்ல. கர்வம்தான் ரிஷி! ஏன்னா நீ என்னை எனக்காக லவ் பண்ண! என்னோட பணபலம், ப்ரோபஷன் இதெல்லாம் தெரியாத முன்னமே என்னை லவ் பண்ண! ஐ லவ் யூ சோ மச் ரிஷி. நான் உன்னை மட்டும் லவ் பண்ணல, நந்துவ, சீனீ பாப்பாவ, குட்டிப் பாப்பாவ, ‘பைட் மீ’ய, டீவாவ, உன் கூட பேக்கேஜா வர எல்லாரையும் லவ் பண்ணறேன். இனியும் லவ் பண்ணுவேன்! சிம்மு லவ் சேகர் சோ சோ சோ மச்” என சொல்லி அவன் முகம் முழுக்க முத்தமிட்டவள், கடைசியாக அவன் உதட்டில் வந்து இளைப்பாறினாள். இவ்வளவு நாள் பட்ட துன்பங்கள், அந்த இளைப்பாறுதலில் கரைந்து மறைந்து போனது சிந்தியாவுக்கு.

தன்னவள் கொடுத்த ஆசை முத்தத்தில் உள்ளுயிர் உருக மயங்கி நின்றான் ரிஷி.

“சார்,சார்” எனும் அழைப்பில் விழித்தெழுந்தான் ரிஷி.

“வீடு வந்துடுச்சு” என்றார் ட்ரைவர்.

இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் தன்னவளை மென்மையாக எழுப்பினான் ரிஷி. இருவரும் நந்தனாவின் வீட்டு கேட்டை திறந்து உள்ளே வர, தன்னால் முயன்ற அளவு ஓடி வந்தாள் நந்தனா.

சிந்தியாவை இறுகக் கட்டிக் கொண்டவள், கண்ணீர் கண்களோடு,

“என் பாரதி எனக்காக அனுப்பி வச்ச தேவதைதான் நீயா! உன்னை ஆரம்பத்துல இருந்து ரொம்ப ரொம்ப பிடிச்சதே எனக்கு! அப்போ ஏன்னு புரியல, இப்போ புரியுது! பாரதி அவருக்குப் பதிலா எங்கள பார்த்துக்க உன்னை அனுப்பிருக்காருடா! எங்க ஏஞ்சல் நீ” என சொல்லி அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள். தில்லும்மா எல்லா விஷயத்தையும் இன்றுதான் நந்தனாவிடம் சொல்லி இருந்தார்.         

அம்மாவோடு ஓடி வந்திருந்த சீனி பாப்பாவும்,

“சிம்மு ஆண்ட்டி! எங்க போன நீ? நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?” என அவள் காலைக் கட்டிக் கொண்டாள். அவர்கள் பின்னால் தில்லும்மா கலங்கிய கண்களோடு கைக் குழந்தையை ஏந்தியவாறு நின்றிருந்தார்.

சீனீ பாப்பாவைத் தூக்கிக் கொண்ட ரிஷி, தமைக்கையையும் தன் தாரமாகப் போகிறவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

(உருகுவான்….)

 

(தீபாவளி முடிஞ்சு எபிலாக்ல சந்திக்கலாம் டியர்ஸ். என் செல்லங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்)     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!