UUU–EPI 9

103977454_653445081909496_2472649225753995686_n

UUU–EPI 9

அத்தியாயம் 9

டார்க் சாக்லேட்டில் நிறைய சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. தரமான டார்க் சாக்லேட் ஃபைபர், அயர்ன், மக்னேசியம் போன்ற மினரல்களை கொண்டுள்ளது. சரியான விகிதத்தில் சாப்பிடும் பொழுது இந்த சாக்லேட் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

 

ரிஷியின் ஹோண்டா சிட்டியில் ஏறி அமர்ந்தனர் பெண்கள் மூவரும். நந்தனா முன்னால் அமர்ந்து கொள்ள குட்டியுடன் பின்னால் அமர்ந்து கொண்டாள் சிம்ரன். இரட்டையர்கள் இருவரும் சாக்லேட், பிஸ்னஸ், வரவு செலவு என பேசிக் கொண்டே வர, பின்னால் ஒரே பாட்டும் கும்மாளமுமாக இருந்தது.  

ரோஷிணியுடன் ரைம்ஸ் பாடி, அவள் சொல்லும் கதையை ரசித்துக் கேட்டு, இவளும் லாஜிக்கே இல்லாத கதைகளை அள்ளி விட்டு குட்டியை சிரிக்க வைத்து ஒரே குதூகலம்தான்.

“சிம்மு ஆண்ட்டி! கேட் ஏன் மியாவ் மியாய் சத்தம் போடுது?”

“அது..ஹ்ம்ம்.. தெரியலையே சீனீ பாப்பா!”

“ஏன்னா அதோட மம்மி அதுக்கு மியாவ் மியாவ்னு தான் சொல்லிக் குடுத்தாங்க! அதான்” என சொல்லி குட்டி கெக்கேபெக்கெவென சிரிக்க, இவளும் அவளை கிச்சுகிச்சு மூட்டி அதே போல கெக்கெபெக்கேவென சிரித்தாள்.

“இப்போ என் டர்ன்”

“கேளுங்க, கேளுங்க! மாமா சொன்னாங்க சீனீ பாப்பா சோ ஷார்ப்புன்னு! எனக்கு எல்லாம் தெரியும்! ஆமாத்தானே மாமா?”

“ஆமாடா குட்டிமா” என ரிஷி பதில் அளித்தான்.

“டாக் ஏன் லொள் லொள்னு பார்க் பண்ணுது?”

“இது சோ ஈசி! அதோட மம்மி அப்படித்தான் சொல்லிக் குடுத்தாங்க ஆண்ட்டி”

“அதான் இல்ல!”

“அப்புறம்?”

“ஹரே ட்வீண்ஸ்! நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!” என இரட்டையர்களை கேட்டாள் சிம்ரன்.

“கடவுளோட படைப்பு அப்படி” என நந்தனா சொல்ல, ஏதேதோ சைண்டிபிக் காரணங்களை அளந்து விட்டான் ரிஷி.

“அதெல்லாம் இல்ல! அது ஏன் லொல் லொல்னு குரைக்குதுனா, அதோடா டாடி தான் அப்படி குரைக்க சொல்லிக் குடுத்தாங்க” என சொல்லி இவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவளோடு சேர்ந்து சின்னவளுக்கும் சிரிப்பு. ஜோக் சிரிப்பாக இருந்ததோ இல்லையே இருவரும் சிரிப்பது நந்தனாவையும் தொற்றிக் கொள்ள அவளும் குலுங்கி சிரித்தாள்.

சிரித்தப்படி வந்த மூன்று பெண்களையும் பார்த்தப்படி புன்னகையுடன் காரை செலுத்தினான் ரிஷி. ரியர் வியூ கண்ணாடி வழி ரிஷியின் பார்வை சிம்ரனின் சிரித்த முகத்தை அடிக்கடி தொட்டுத் தடவிப் போனது.

மவுண்ட் பிரிஞ்சாங்கில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த மோசி ஃபாரஸ்டுக்கு காரை விட்டான் ரிஷி. மிக குறுகலாகவும் வளைந்து நெளிந்தும் பாதை செல்ல, கவனமாக காரை செலுத்தினான் அவன். வழி நெடுக பச்சை பசேல் என தெரிந்த தேயிலை தோட்டத்தையும், செடி கொடிகளையும் வேடிக்கைப் பார்த்தவாறே குட்டிக்கும் சுட்டிக் காட்டியபடி வந்தாள் சிம்ரன்.

மோசி ஃபாரஸ்ட் ஹைக்கிங் மற்றும் ட்ரேக்கிங்குக்கு புகழ் பெற்ற இடமாகும். கடவுள் தனது கொடையை அள்ளி வழங்கி இருந்தான் அவ்விடத்தில். கடலுக்கு 2032 மீட்டர் மேலே இருக்கும் இந்த இடம் பார்க்கவே ஒரு அமானுஷ்ய உணர்வைக் கொடுக்கும். மரம் செடி கொடி, நடைபாதை எல்லாம் பச்சையாய் பாசி(moss) படர்ந்திருப்பதால் தான் இந்த காட்டுக்கு மோசி ஃபாரஸ்ட் எனும் காரணப்பெயர் வந்தது.

இரட்டையர்களுக்கு மிகப் பிடித்த இடம் இதுவாகும். அடிக்கடி இங்கே வந்து இயற்கையை ரசித்து விட்டுப் போவார்கள். நாள்தோறும் உழைக்கும் களைப்பு எல்லாம் அங்கிருந்த சுத்தமான சில்லென்ற காற்றை சுவாசிக்கும் பொழுது அப்படியே மறைந்து போய் புத்துணர்ச்சி வந்து விடும் ரிஷிக்கு.

பார்க் செய்து விட்டு, அங்கே இருக்கும் டவருக்கு சென்றார்கள் நால்வரும். அந்த பலகையால் செய்யப்பட்ட டவரின் மேல் மாடியில் ஏறி நின்றால் பச்சை பலேசென்ற பனி போர்த்திய மலை மகளை கண்டு தரிசிக்கலாம். டவரின் அருகே இருந்த ஓய்விடத்தில் நந்தனா அமர்ந்துக் கொள்ள, குட்டியைத் தூக்கிக் கொண்டு ரிஷியும் சிம்ரனும் மேலே ஏறினார்கள்.

வரும் போதே குளிரும் என ரிஷி எச்சரித்ததால் ஸ்வேட்டர் அணிந்து வந்திருந்தாள் இவள். ஹீல்சுக்கும் அவன் தடா போட, ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தாள் சிம்ரன். மூச்சு வாங்க மேலே ஏறியதும், அப்படியே ஸ்டன்னாகி நின்றாள் நம் சிம்மு.

“வொண்டர்ஃபூல்! ஷப்பா என்ன ஒரு அழகு” என வியந்துப் போனாள்.

வெள்ளைப் பனி சூழ வானத்தை மலைமகள் முட்டி நின்றாளா, இல்லை மலையரசியை வான் மேகம் கட்டித் தழுவியதா என பிரித்தறிய முடியாதபடி கவிதையாய் இருந்தது அவள் கண்ட காட்சி. குளிரில் இரு கரங்களையும் ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொண்டாள் அவள். கன்னமும் ஜில்லிப்பில் சிவந்துப் போய் கிடந்தது.

“சிம்மு ஆண்ட்டி! கேரி மீ” என ரிஷியிடம் இருந்து இவளிடம் தாவினாள் சீனி பாப்பா.

குழந்தையை வாங்கிக் கொண்டவள், குருவி, செடி, மேகம், என கண்ணுக்குத் தெரிந்ததை அவளுக்கும் காட்டினாள். இவர்கள் பின்னாலேயே நின்றிருந்தான் ரிஷி. ஏற்கனவே அவன் பார்த்து ரசித்த அழகிய இடம்தான். ஆனால் இன்று என்னவோ அவ்விடம் இன்னும் அழகு கூடி தெரிந்தது அவன் கண்களுக்கு.

ஒழுங்காக இடுப்பில் இருக்காமல், கையையும் காலையும் ஆட்டுவது, சிம்ரனின் கழுத்தைக் கட்டிப் பிடிப்பது என குட்டி அட்டகாசம் செய்ய, நிற்க முடியாமல் தடுமாறினாள் சிம்ரன். பின்னால் நின்றிருந்த ரிஷி, இரு கரம் கொண்டு இருவரையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.

“சீனீம்மா, மாமாட்ட வாங்க! சிம்மு ஆண்ட்டிக்கு கஸ்டமா இருக்குல்ல” என இவன் அழைக்க, அவளோ புதிதாக கிடைத்தத் தோழியை விடமாட்டேன் என பிடிவாதம் பிடித்தாள்.

“இல்ல நந்தா சார்! இருக்கட்டும்” என வாய் சொன்னாலும், மெல்லிய உடம்பு தள்ளாடியது.

“ம்ப்ச்!” என சலித்துக் கொண்டவன், இன்னும் அவர்களை நெருங்கி சிம்ரனை பின்னால் இருந்து அணைத்து ஒரு கையை குட்டியின் பின்பக்கம் கொடுத்து அவள் விழாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“என்ன செய்யறீங்க?” என படபடத்தாள் சிம்ரன்.

“ரெண்டு பேரும் தள்ளாடி விழாம இருக்க, முட்டுக் குடுக்கறேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேணா!” என இவள் ரிஷியைத் தள்ள முயற்சிக்க, குட்டியோ சிம்ரனோடு சேர்த்து மாமனின் கழுத்தையும் கட்டிக் கொண்டாள். சின்னவள் இழுத்த இழுப்பில் பெரியவர்கள் இருவரின் கன்னமும் உரசிக் கொண்டு நின்றது.

அவளின் ஜில்லிப்பை இவன் வாங்கிக் கொள்ள, இவனின் சூட்டை அவள் வாங்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவருக்கும் பேச்சு வரவில்லை. வெறும் மூச்சு மட்டும் தான் வந்தது. ரிஷியின் ஒரு கை மருமகளைப் பிடித்திருக்க, இன்னொரு கை மெல்ல உயர்ந்து, சிம்ரனின் இடையைத் தழுவிக் கொண்டது. அவன் தாடையோ மங்கையவள் தோளில் பள்ளி கொண்டது.  

“விடுங்க ரிஷி, ப்ளிஸ்!” அவள் குரல் கெஞ்சலாக ஒலிக்க, சட்டென்று விலகி நின்றான் ரிஷி.

“சாரி, சாரி சிம்ரன்! அது..ஐம் ரியலி சாரி” என திக்கித் திணறினான் ரிஷி.

அவனுக்கு பதிலளிக்காமல், குழந்தையைப் பிடித்துக் கொண்டு படியிறங்க நடந்தாள் சிம்ரன். சட்டென அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் ரிஷி.

“அவள நான் தூக்கிக்கிறேன்! நீ இறங்கு” என சொன்னவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு கீழிறங்கினாள் சிம்ரன்.

‘என்னடா பண்ணி வச்சிருக்க நீ! செம்ம கோபத்துல இருக்கா போலிருக்கே! அவ பக்கத்துல வந்தா மட்டும் ஏன் தான் என்னோட கை காலெல்லாம் நான் சொன்ன பேச்சை கேட்க மாட்டிக்குதுன்னு தெரியலையே! கண்ட்ரோல் யுவர்சேல்ப் ரிஷி, கண்ட்ரோல்’ என தன்னைத் தானே திட்டியபடி அவள் பின்னோடு இறங்கினான்.

சிம்ரன் நேராக சென்று நந்தனாவின் அருகே அமர்ந்துக் கொண்டாள். அங்கே வந்ததும் சீனி பாப்பா ரிஷியிடம் இருந்து இறங்கி நந்தனாவின் அருகே போய் நின்று சிணுங்கினாள். அமர்ந்திருந்த இடத்தில், எடுத்து வந்திருந்த சிறிய பாயை விரித்து, கலக்கி எடுத்து வந்திருந்த பாலை மகளுக்குப் புகட்ட ஆரம்பித்தாள் நந்தனா.

“ப்ரோ, சிம்ஸ கூட்டிட்டுப் போய் அந்த பாசி படிஞ்ச மரத்தலாம் கிட்ட காட்ட வேண்டியது தானே! பாப்பா நேப் டைம் இப்போ. சுத்தி ஆளுங்க எல்லாம் இருக்காங்க! நான் இங்கயே இருந்துக்குவேன். நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஒரு வால்க் போய்ட்டு வாங்க” என சொன்னாள் அவள்.          

“இல்ல நந்து! நான் இங்கயே உங்க கூடவே இருக்கேன்” என்றாள் சிம்ரன்.

“நீ கேமரனுக்குப் புதுசு தானே! இதெல்லாம் பார்த்தது இல்லைன்னு சொன்னல்ல! போ போய் பாரு! அவ்ளோ அழகா இருக்கும்”

அவள் வற்புறுத்தவும் வேறு வழி இல்லாமல் ரிஷியுடன் நடக்க ஆரம்பித்தாள் சிம்ரன். மலை ஏறுவதற்கென நடைபாதை அமைத்திருந்தார்கள். பனியும் பாசியும் படர்ந்திருக்க அப்பாதை வளவளவென இருந்தது. காட்டுப் பூச்சிகளின் ஒலி, அங்கங்கே தென்படும் சில மனிதர்களின் பேச்சு சத்தம் தவிர பலத்த மௌனம் இருவரிடமும்.

நடந்துக் கொண்டே இருந்தவள், திடிரென நின்று இவனை முறைத்துப் பார்த்தாள்.

“எ..என்ன?”

“ஏன் அப்படி செஞ்சீங்க நந்தா சார்?” குரலில் கோபம்.

“ஏன்னு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? எனக்கே என்னை நெனைச்சு டென்ஷனா இருக்கு சிம்ரன். ஏன் உன் பக்கத்துல மட்டும் இப்படி தன்னிலை இழந்து போறேன்னு தெரியல. ஐம் சாரி! சாரி சொல்லிட்டா, தொட்டதும் பட்டதும் இல்லாம போயிடாதுன்னு எனக்குப் புரியுது! ஸ்டில் ஐம் சாரி! ரியலி சாரி! நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணற சிம்ரன். இது நல்லதுக்கு இல்லைன்னு மட்டும் எனக்குத் தெரியுது! நான்லாம் கல்யாணம் காட்சின்னு செஞ்சு செட்டில் டவுன் ஆகற ஆளு இல்லை சிம்ரன். அப்படி ஒரு இண்டேன்ஷன் இல்லாம உன்னை தொடரது ரொம்பத் தப்புன்னு என் அறிவுக்குத் தெரியுது! ஆனா மனசுக்குத் தெரியல. நேர் கோட்டுல போன என் அறிவும் மனசும் இப்போ கொஞ்ச நாளா வேற வேற கோட்டுல பயணிக்கற ஃபீல். அதனால இனிமே உன் கிட்ட என் கையும் காலும் மிஸ்பிஹேவ் பண்ணா, ஓங்கி ஒரு அறை குடு! நான் சத்தம் போடாம வாங்கிக்கறேன்.” என மனதில் தோன்றியதை எல்லாம் அவளிடம் சொன்னான் ரிஷி.

இடுப்பில் கை வைத்து, அவனை முழு நிமிடம் ஆழ்ந்து நோக்கினாள் சிம்ரன்.

“எனக்குத் தெரியும் நந்தா சார்! என்னோட அழகு யாரையும் அடிச்சு சாய்ச்சிடும்னு! இவ்ளோ அழகையும் என் மேல கொட்டி, தங்க சிலையா என்னை வடிச்சு வச்சது அந்த கடவுளோட தப்பு! அவர் மேல தப்பிருக்கறப்ப உங்கள கோவிச்சிக்கறதுல என்ன நியாயம்! இட்ஸ் ஓகே! இந்த தடவை போனா போகுதுன்னு மன்னிச்சு விடறேன்! அடுத்த தடவை இது மாதிரி சில்லியா பிஹேவ் பண்ணீங்க, கெளம்பிப் போய்க்கிட்டே இருப்பேன்!” என சொன்னவள், முன்னால் திரும்பி வீறு கொண்டு நடக்க, அடுத்த நிமிடம் கீழே விழுந்து கிடந்தாள்.

ஈரப்பாதை வழுக்கி விட்டிருக்க, கீழே கிடந்தவள் அருகே சிம்ரன் என கத்தியபடி வேகமாய் வந்து அமர்ந்தான் ரிஷி.

“ஹே! ஆர் யூ ஓக்கே?” என இவன் பதட்டமாய் கேட்டான்.

கீழே விழும் முன்னே கை இரண்டையும் ஊணி இருக்க, முகமும் மேல் உடம்பும் எந்த சேதாரமும் இன்றி தப்பித்திருந்தது. ஆனால் ஏற்கனவே அடிப்பட்டிருந்த முட்டியில் மீண்டும் அடி.  

மெல்ல நிமிர்ந்துப் அவன் முகத்தைப் பார்த்தவள், வாயு தொல்லை வந்த வான்கோழி போல இளித்து வைத்தாள்.

“வழுக்கி விழுந்துட்டேன் நந்தா சார்.” என வலியைக் காட்டாமல் சிரித்து வைத்தாள்.

“அடி பட்டிருக்கா?” என இவன் பார்வையால் அவள் உடல் முழுதும் ஆராய,

“இல்ல. அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் எழ முயன்றாள். ஆனால் முடியவில்லை. வாய் திறந்து சொல்லாவிட்டாலும் வலியை முகம் காட்டிக் கொடுத்தது.

“டேமிட் சிம்ரன்! எங்க வலிக்குதுன்னு சொல்லு” என படபடத்தான் ரிஷி.  

“காலு முட்டி கிட்ட வலிக்குது. எழ முடியல”

கையைப் பிடித்து மெல்ல தூக்கி விட்டான் சிம்ரனை. நிற்க முடிந்தாலும், நடக்க முடியவில்லை. வலி உயிர் போனது அவளுக்கு. கலங்கப் பார்த்த கண்களை மூடி மூடி திறந்தாள் அவள். பார்த்திருந்த ரிஷிக்கு மனதைப் பிசைந்தது.

“உப்பு மூட்டை தூக்கிக்கவா? கொஞ்ச தூரம் தான்! மெதுவா போய்டலாம்”

“ரொம்ப கொரியன் ட்ராமாலாம் பார்ப்பீங்களோ சேகர்? அதுலதான் படக் படக்குன்னு நாயகிய நாயகன் தூக்கி பின்னால வச்சிக்குவான்” என அந்த நேரத்திலும் வேடிக்கைப் பேசினாள் சிம்ரன்.

இவன் முறைத்துப் பார்க்க,

“சரி சரி! கீழ குனிஞ்சு உக்காருங்க! ஏறிக்கறேன்! தூக்கிட்டு, அப்புறம் இடுப்பு போச்சு, முதுகு போச்சுன்னு பாட்டுப் படிக்கக் கூடாது” என சொல்லியபடியே குனிந்தவன் பின்னால் வாகாக ஏறிக் கொண்டாள் சிம்ரன்.

அவர்களைக் கடந்துப் போனவர்கள், இருவரையும் பார்த்து புன்னகைத்து விட்டுப் போனார்கள்.

“இவங்களாம் நம்மல லவ்வர்னு நெனைச்சிருப்பாங்க இல்ல?” என கேட்டப்படியே விழுந்து விடாமல் இருக்க அவன் கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள் சிம்ரன்.

அவளை சுகமாய் சுமந்தப்படி, மெல்ல நடந்தான் ரிஷி.

“லவ்வு, கல்யாணம், பிள்ளை குட்டிலாம் என் வாழ்க்கையில இல்லவே இல்லை சிம்ரன்!”

சொல்லும் போதே அவன் குரலில் லேசாக ஏக்கம் எட்டிப் பார்த்தது.

“எனக்கு இப்போ லவ் மேல செம்ம கடுப்பு நந்தா சார்! ஆனா பியூச்சர்ல கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். என்னை மாதிரியே மூனு குட்டிய ரிலீஸ் பண்ணுவேன்! என் பேரயும் பெருமையும் சொல்ல பிள்ளை வேணும்ல!”

“அது சரி!”

“கல்யாணம் கோயிலுல தாலி கட்டி ரொம்ப சிம்பிளாதான் செய்யனும்னு ஆசை! ஆனா பெரிய ஹாலுல டின்னர் வைக்கனும். மாப்பிள்ளை மேடையில அலங்காரம் செஞ்ச தேர் போல உள்ள நாற்காலில உட்கார்ந்திருக்க, நான் கிராண்ட் எண்ட்ரேன்ஸ் குடுக்கனும். ரேட் கலர் லெஹெங்கா போட்டு, துப்பட்டாவ கையில புடிச்சுக்கிட்டு

“டண்டனக்கு டணக்கு டணக்கு

மம்பட்டியான் அட மம்பட்டியான்”னு பாட்டு ஹை பிட்ச்ல ஓட நான் ஆடிக்கிட்டே வரனும்.

“நான் ஐயனார போல

ஒரு காவலுக்கு போறேன்

இப்போ நெய்ய ஊத்தி

சோறு திங்க நேரம் இல்ல போடி”னு மாப்பிள்ளை எழுந்து ஆடிக்கிட்டே வந்து என்னைத் தூக்கிக்கனும்!” என அவள் கண்டு வைத்திருந்த கல்யாண கனவை சொல்லிக் கொண்டே வர, அதில் மாப்பிள்ளையாக தான் ஆடுவதைப் போல கற்பனை விரிய, தலையை உலுக்கி அதை அடக்கி வைத்தான் ரிஷி.

“அது என்ன அத்தனை வெடிங் சாங்ஸ் இருக்க, இந்த மம்பட்டியான் பாட்டுக்கு ஆடப் போறேன்னு சொல்லற?” என கேட்டான் ரிஷி.

“அதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கு நந்தா சார்! மம்பட்டி எடுத்து மாப்பிள்ளையோட இன்பமான வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கப் போறோம்னு சொல்லாம சொல்லறதுதான் இந்த மம்பட்டியான் பாட்டுக்கு ஆடற டான்சு! புரிஞ்சவன் பொழைச்சி ஓடிருவான்! புரியாதவன் புதைஞ்சி போய்டுவான்!” என பாவனையாக இவள் சொல்ல, வாய் விட்டு சிரித்தான் ரிஷி.

சிம்ரனை சுமந்து வந்த நந்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நந்தனா. தமையனின் முகத்தில் தெரிந்த இளக்கத்தையும், மென்மையையும் உள் வாங்கிக் கொண்டாள் அந்த அன்பு தமக்கை. அவளுக்கும் இவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க முகம் மலர்ந்து போனது.

ரிஷி சிம்ரன் விழுந்து வாரியதை சொல்ல, அங்கிருந்து அவசரமாக கிளம்பினர். சிம்ரனை ஒரு கிளினிக்குக்கு அழைத்து சென்றனர் இரட்டையர்கள். அங்கே பரிசோதித்து வலிக்கு தடவவும், உட்கொள்ளவும் மருந்து கொடுத்து அனுப்பினார் டாக்டர்.

அன்று டின்னர் இருக்க, ரிஷி வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்க சொல்லியும் பிடிவாதமாக மருந்தைப் போட்டுக் கொண்டு வந்திருந்தாள் சிம்ரன். சைனிஸ் ஹலால் ரெஸ்டாரண்டில் தான் அன்று டின்னர் ஏற்பாட்டுக்கு சொல்லி இருந்தான் ரிஷி. மலாய் பெண்ணும் அவர்களோடு வேலைப் பார்ப்பதால் அந்த மாதிரி ஹலால் சான்றிதழ் இருக்கும் இடங்களையே தேர்ந்தெடுப்பான்.

சிம்ரனை நடுவில் அமர்த்தி இரட்டையர்கள் இருவரும் அவளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்கள். ஷீலாவும் வந்திருக்க, கேலியும் சிரிப்புமாக போனது அன்றைய இரவு உணவு. உணவு முடித்து, பெண்கள் மூவரையும் வீட்டில் இறக்கி விட்டான் ரிஷி.

கிளம்பும் முன்,

“மருந்து தேய்ச்சிக்கிட்டுப் படு சிம்ரன். வலி இருந்தா நாளைக்கு வேலைக்கு வர வேணா” என சொன்னான்.

சரியென தலையாட்டினாள் இவள்.

“நந்து வரேன்” என மகளை பாத்ரூம் கூட்டி சென்றிருந்த தமக்கைக்கு கேட்கும் படி சத்தமாக சொன்னவன் பின் சிம்ரனைத் திரும்பிப் பார்த்தான்.

“குட் நைட் சிம்ரன்” என இவளின் பச்சை நிற கண்களைப் பார்த்து மென்மையாக சொன்னவனின் கைகள் மெல்ல அவள் கன்னத்தை வருட உயர்ந்தது.

பட்டென அவன் கன்னத்தில் ஓர் அறை வைத்தாள் சிம்ரன். திகைத்து நோக்கியவனைப் பார்த்து,

“நீங்கதான் சொன்னீங்க, தொட்டா, அடின்னு! சோ அடிச்சிட்டேன்! இந்த சிம்ரன இனி தொட்ட, நீ கெட்ட!!!!!!!” என கெத்தாக சொன்னவள், அடித்தக் கையை தொடையில் தேய்த்துக் கொண்டாள்.

“ஒரு ப்ளோல சொல்லிட்டேன்! அதுக்குன்னு நெஜமா அறைவியா நீ?”

“கீழ விழுந்த பல்லையும், வாயால சொன்ன சொல்லையும் திரும்ப வாங்கிக்கவே முடியாது மிஸ்டர் சேகர்! வாங்கிக்கவே முடியாது” என சிவாஜி ஸ்டைலில் சொன்னவள், திரும்பி தனதறைக்குப் போய் விட்டாள்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டான் ரிஷி.

 

பளிச்சென கொடுத்தாள் ஓர் அடி

என்றைக்கு கிடைக்குமோ காதல் கடி!!!!!!!

(உருகுவான்…)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!