UVU 13

UVU 13

13

ஒரு வாரமாக கவி பள்ளிக்கு வரவில்லை. மணி வகுப்பு ஆசிரியரிடம் விசாரித்துப் பார்த்தான். அவள் அம்மாவுக்கு உடல் நலம் கவலைக்கிடமாக இருக்கிறது என கடிதம் மட்டும் பள்ளிக்கு வந்திருப்பதாக சொன்னார் அவர்.

வீட்டிலிருந்து பல முறை அவள் போனுக்கு முயன்றுப் பார்த்தான் மணி. அவள் போன் காலை எடுக்கவே இல்லை. அவனின் நினைவுகள் அவள் ப்ரோபோஸ் செய்த மறுநாளுக்கு சென்றது.

பள்ளிக்கு வந்தவுடனே, அவளைக் கண்டுக் கொள்ளாதது போல் அமர்ந்திருந்தான். அவள் இடத்திலிருந்து இவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி. கணக்கு ஆசிரியை அல்ஜிப்ராவின் ஸ்குவர் ரூட் பற்றி காட்டுக் கத்தலாய் கத்திக் கொண்டிருந்தார். மணி அவர் போட்ட கணக்குகளை முயன்று கொண்டிருந்தான்.

“கவிலயா!” ஆசிரியை மூன்று முறை அழைக்கவும் நிமிர்ந்து கவியை நோக்கினான். அவன் மட்டும் அல்ல வகுப்பே அவளை நோக்கியது. எழுந்து நின்றவள், தலையைக் குனிந்துக் கொண்டு

“யெஸ் மிஸ்” என்றாள்.

“நான் இங்க காட்டுக் கத்தா கத்திட்டு இருக்கேன். நீ எங்க பராக்கு பார்த்துட்டு இருக்க? கொஞ்சமாச்சும் படிக்கனும்னு நினைச்சு கிளாஸ்கு வரீங்களா? இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். வருங்காலத்தப் பற்றி கொஞ்சம் கூட பயமில்ல. அம்மா அப்பா சேர்த்து வச்ச சொத்திருக்கே, நாம ஏன் படிக்கனும்னு ஒரு திமிரு. அதை கட்டிக் காக்கவாச்சும் படிப்பு வேணாமா?” ஒட்டு மொத்த மாணவர்களையே விளாசி வாங்கினார் அவர்.

அப்பொழுதும் தலையைக் குனிந்துக் கொண்டே,

“சாரி மிஸ்” என்றாள்.

“முதல்ல நிமிர்ந்து பாரு கவிலயா!”

நிமிர்ந்தவளின் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

“ஏன் எப்ப பாரு மணியயே பார்த்துட்டு இருக்க? லவ்வா?” ஒரு ஆசிரியர் செய்யக் கூடாத தப்பை அவர் செய்தார். வகுப்பே கைக்கொட்டி சிரித்தது. பொல பொலவெனெ கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது கவிக்கு.

“செய்யறதையும் செஞ்சிட்டு எதுக்கு இந்த நீலி கண்ணீர்? கண்ண துடை” அதற்கும் பாட்டு விழுந்தது. அவசரமாக கண்ணைத் துடைத்தவளின் பார்வை அவளையும் மீறி மணியிடம் வந்தது. அவனுக்குப் பார்க்கவே பாவமாக இருந்தது.

இந்த வயதில் இருக்கும் பிள்ளைகள் இப்படி மனதை அலைப்பாய விடுவது சகஜம்தான். பெற்றவர்களோ, ஆசிரியர்களோ இதை குத்திக் காட்டி அவர்களை தவறான பாதைக்கு செல்ல தூண்டாமல், அன்பாக பேசி நல்வழி படுத்த முயலலாம். யோசிக்காமல் முடிவெடுக்கும் பருவம் இது. பல தற்கொலைகளும், போதைப் பொருள் பழக்கங்களும் வீட்டை விட்டு ஓடிப் போகும் சம்பவங்களும் டீன் ஏஜ் காலகட்டங்களில் தான் நடக்கின்றன. அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், படிப்பு சுமை, தோழர்களின் சேர்க்கை இப்படி பல விஷயங்களில் சிக்கித் தவிக்கும் இவர்களை நல்வழி படுத்தியிருக்க வேண்டிய நாமே அவமானப் படுத்தி அடியையும் கிளப்பி விடுவதால் திசை மாறி போகிறார்கள் வருங்கால தூண்கள்.

“இங்க வந்து, இந்தக் கணக்கைப் போட்டு முடி” அழைத்தார் ஆசிரியை.

கண்ணைத் துடைத்துக் கொண்டு முன்னே சென்றவள், ஒரு நிமிடத்தில் கணக்கை எழுதி முடித்தாள்.

“புக்ல இருக்கற கடைசி குவெஸ்டியனையும் சால்வ் பண்ணு” அது மிகவும் கஸ்டமான கணக்கு. இவரே வீட்டில் மண்டையைக் குடைந்து பல முறை செய்து பார்த்து விட்டுத்தான் வந்திருந்தார். கவியோ இரண்டு நிமிடங்களில் கணக்கைக் போட்டு முடித்து விட்டு தலைக் குனிந்து நின்றிருந்தாள்.

“போ! போய் உட்காரு. ஒழுங்கா கிளாச கவனி” உள்ளுக்குள் அவள் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்தார் அவர்.

எப்படித்தான் வாங்கி கட்டினாலும், மணியைப் பார்ப்பதை நிறுத்தவில்லை கவி. ரிஸஸ் டைம் பெல் அடித்தவுடன் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். கவி மட்டும் டெஸ்க் மேலேயே தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். அவள் அருகில் வந்து நின்றான் மணி.

“கவி”

படக்கேன நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.

“சொல்லு மணி. யெஸ்சா, நோவா, மேபீயா?” அவசரமாக கேட்டாள். அவள் கண்களில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த மணிக்கு நாக்கு குழறியது. ஜீஜுவிடம் கேட்டு யெஸ் சொல்லி விடலாமா என யோசித்தான். தலையை உலுக்கிக் கொண்டவன், அவள் அருகில் அமர்ந்தான்.

“கவி!” அவன் ஆரம்பிக்கும் போதே,

“உன் டோனே சரியில்ல மணி. நோ மட்டும் சொல்லிறாதே! நான் செத்துப் போயிருவேன்” மிரட்டினாள்.

“மக்கு சாம்பிராணி! சும்மா சும்மா செத்துப் போயிருவேன்னு மிரட்டுற? அறைஞ்சிருவேன்”

“அப்போ சரின்னு சொல்லு”

“இப்போதானே டீச்சர் திட்டுனாங்க. அப்பவும் அடங்க மாட்டீயா?”

டீச்சரை பற்றி ஞாபகம் காட்டவும், மீண்டும் கண்களில் கண்ணீர் குளம் கட்ட ஆரம்பித்தது.

“என்னை யாருக்குமே பிடிக்க மாட்டிக்கிது. நீயும் அதை தானே சொல்லப்போற? சரி விடு!” பாவமாக வைத்திருந்தாள் முகத்தை.

சுற்றி முற்றி பார்த்த மணி, யாரும் இல்லை என உறுதிப்படுத்திகொண்டு, அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

“அழாதே கவி. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. வேணும்னா மேய்பீன்னு வச்சிக்கலாம். சரியா?”

“மேய்பீன்னு சொல்லி என்னை சமாதானப் படுத்த பார்க்கற இல்ல? அப்புறம் கழட்டி விட்டுருவ”

“இல்ல கவி. முதல்ல பிரண்ட்ஸ்சா இருப்போம். படிச்சு முடிப்போம். அப்புறம் லவ் பண்ணலாம். இப்ப நட்ப தாண்டி போனா எதுவும் சரி வராது. என் குடும்ப நிலைக்கு நான் நல்லா படிக்கனும். இந்த லவ்லாம் என்னை டிஸ்ட்ரக்ட் பண்ணிரும். ப்ரண்ட்ஸ்?” கையை நீட்டினான்.

அவன் கையைப் பற்றி கொண்டவள் ப்ரெசெஸ் தெரிய மலர்ந்து சிரித்தாள்.

“நம்ம ப்ரண்ட்ஷிப்ப கேசரியோட கொண்டாடலாமா?” காலையில் தானே செய்து எடுத்து வந்திருந்த கேசரியை, பாத்திரத்தை திறந்து எடுத்துக் கொடுத்தான். அவளும் வாங்கி ஆசையாக சாப்பிட்டாள். அவனுக்கும் எடுத்துக் கொடுத்தாள்.

சாப்பிட்டு முடித்தவள், ஈ என பல்லைக் காட்டி ப்ரெசெஸில் ஒட்டி இருக்கிறதா என கேட்டாள்.

தலையில் அடித்துக் கொண்டவன்,

“இப்படி பல்லைக் காட்டிட்டே இரு. மேய்பீ, நோ ஆகப் போகுது” என மிரட்டினான்.

“நோன்னு மட்டும் சொன்ன, உயிரை எடுத்துருவேன். உலகத்துல எந்த மூலையில நீ இருந்தாலும் உன்னை என் கிட்ட வர வைப்பேன் நான். எனக்கு நீ, உனக்கு நான். மறந்துறாதே மணி” முகத்தில் கோபம் இல்லை, ஆனால் வார்த்தைகள் உறுதியாக வந்து விழுந்தன. 

“பாசி மணி!” நிலாவின் குரலில் நடப்புக்கு வந்தான்.

“என்னடி தேஞ்சு போன நிலா?”

“உனக்குப் போன், உன் கேர்ள் பிரண்ட் கிட்ட இருந்து”

ஓடி வந்து போனை வாங்கினான் மணி.

“ஓட்டமா ஓடி வர, செம்ம லவ்வோ? இரு அக்கா வரட்டும், வச்சிவுடறேன்”

“போடி நிலா, பலா, இடியப்ப கொலா!” அழகு காட்டியவன் போனை வாங்கிக் கொண்டு தூர சென்றான்.

“ஹெலோ”

“ஹெலோ மணி”

“கவி! எப்படி இருக்க? ஏன் ஒரு வாரமா ஸ்கூல் வரல?”

“மணி” அந்தப் பக்கம் தேம்பினாள் கவி.

“என்னாச்சு கவி? ஏன் அழற?” லேசாக பதட்டம் இவனிடம்.

“எங்க அம்மா இறந்துட்டாங்க. மூனு நாள் ஆச்சு” இன்னும் பலமாக தேம்பினாள். மணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“அழாதே கவி. எனக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னு கூட தெரியல. ஆனா நீ அழுதா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு”

“என்னால முடியல மணி. எங்க அம்மா மட்டும் தான் என்னைக் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்குவாங்க. இப்ப அவங்களும் போய்ட்டாங்க. எனக்கு யாரும் இல்லாத மாதிரி ஒரு பீல்”

“நான் இருக்கேன் கவி உனக்கு ” யோசிக்காமல் பட்டென சொன்னான் மணி.

அந்தப் பக்கம் இன்னும் அழுகை.

“எனக்கும் அம்மா இல்லை கவி. என் அக்காதான் எனக்கு அம்மா. உனக்கும் இப்போ அம்மா இல்லை. இனிமே என்னையே அம்மாவா நினைச்சிக்க” அந்த வயதில் அவனால் அப்படித்தான் சமாதானம் செய்ய முடிந்தது. ஆனால் அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

“நெஜமா நீ எனக்கு அம்மாவா இருப்பியா மணி?”

“சத்தியமா கவி.”

“மணி, எங்கப்பா எனக்கு டி.சி வாங்கிட்டாரு. நாங்க வெளிநாட்டுக்குப் போக போறோம். எங்கன்னு அப்பா சொல்ல மாட்டிக்கிறாங்க. என்னால உன்னைக் காண்டேக்ட் பண்ண முடியுமான்னு தெரியல. ஆனா உன்னை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன். நீ?” அவளுக்கு அவனின் உறுதி தேவைப்பட்டது.

“நானும் உன்னை மறக்க மாட்டேன் கவி” அவள் நாட்டை விட்டே செல்கிறாள் எனும் விஷயம் மணிக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

“பாய் மணி. ரொம்ப நேரம் பேச முடியாது. அப்பா இருக்காங்க. என்னை மறந்தறாதே ப்ளிஸ். நீ மேய்பீன்னு சொன்னாலும், ஐ லவ் யூ மணி. கோன மிஸ் யூ சோ மச். அப்பா வராங்க. பாய் மணி. பாய்!” அவள் குரல் தொய்ந்து மறைந்தது. மணியின் கண்கள் அவனையும் அறியாமல் கலங்கியது.

தம்பியின் கலங்கிய கண்களைப் பார்த்த நிலா,

“என்னடா மணி? ஏன்டா கண்ணு கலங்குது?”

“ஒன்னும் இல்லக்கா”

“கழட்டி விட்டுட்டாளா?”

“அக்கா! உனக்கு வேற பேசவே தெரியாதா? உன் போன் கொஞ்ச நேரம் எடுத்துக்கறேன். அப்புறம் தரேன்”

“டேய், டால்க் டைம் கொஞ்சம் தான் இருக்கு. முடிச்சிறாதடா”

போனுடன் வாசலுக்கு வந்தவன், மனப்பாடமாக வைத்திருந்த நம்பருக்கு டயல் செய்தான்.

“நிலா?”

“நிலா போன் தான் ஜீஜு. நான் மணி பேசுறேன்”

“என்ன மணி? குரல் ஒரு மாதிரி இருக்கு?”

அதன் பிறகு கடகடவென எல்லாவற்றையும் ஒப்பித்தான் மணி. அரை மணி நேரம் பேசிவிட்டுத்தான் வைத்தான். பிறகே மனம் சமன் பட்டது அவனுக்கு.

சித்ராவின் குளறுபடி கண்டுபிடிக்கப்பட்ட அன்று, ஜோன் வழக்கம் போல் அவளைக் கேபினுக்கு அழைத்தான். தலைவிதியை சபித்தவாறே சென்றாள் சித்ரா.

உட்கார கூட சொல்லாமல் படபடவென பொரிய ஆரம்பித்து விட்டான் அவன்.

“சித்ரா! ஐ நெவர் எக்ஸ்பேக்ட் திஸ் ப்ரம் யூ! இவ்வளவு கேர்லசா இருந்திருக்க. இந்த லாஸ்க்கு எல்லாம் இப்ப யார் பதில் சொல்லுறது? பெரியவனுங்க எல்லாம் போன போட்டு என் மண்டைய குடையறானுங்க. அவனுங்க கேக்கற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல. “ மேலிடத்தில் இருந்து அவன் வாங்கிய ஆப்புக்கு இவளை காய்ச்சி எடுத்தான்.

“ஜோன், அது “

“ஷட் அப் சித்ரா! குடுத்த வேலைய ஒழுங்க செய்ய துப்பில்ல. உன்னைலாம் யார் பேங்க் வேலைக்கு வர சொன்னது? எங்கயாச்சும் வெய்ட்டர் வேலைக்கோ, மேசை துடைக்கற வேலைக்கோ போக வேண்டியது தானே. இங்க வந்து என் உயிர எடுக்கற. கண்ட கண்ட அரைவேக்காட்டுகெல்லாம் பதில் சொல்லனும்னு என் தலை எழுத்து” கத்தினான். எல்லோர் கண்களும் தலை குனிந்து நின்றிருந்த சித்ராவின் மேலேயே இருந்தது.

‘தோ ஜனகு! அம்புட்டு தான்டா உனக்கு மரியாதை. போன மாசம் டோப் சேல்ஸ் செஞ்சப்ப, மேலிடம் என்னையா புகழ்ந்தாங்க? உன்னைத்தானடா கூப்டு வச்சு விருந்து குடுத்தானுங்க! அப்போ இனிச்சது, இப்போ கசக்குதா? தூ! நீ இவ்ளோதான்டா.’

“செய்யறதயும் செஞ்சிட்டு இப்படி தலை குனிஞ்சி நிக்கிற. பிரகாஷ் சார் கேஸ் போட்டா இன்னும் எவ்வளவு பிரச்சனை தெரியுமா? ஊமை மாதிரி நிக்கிறியே சொல்லு!” இன்னும் உச்சஸ்தாயில் கத்தினான்.

“அதெல்லாம் போட மாட்டாரு” அமைதியாக என்றாலும் அழுத்தமாக சொன்னாள் சித்ரா.

“அதெப்படி உனக்குத் தெரியும்? அவர் என்ன உனக்கு மாமனா ,மச்சானா?” எள்ளல் குரலில். பொறுமையாக நின்றிருந்த சித்ரா தலை நிமிர்ந்து அவனை நேர்ப்பார்வைப் பார்த்தாள்.

“அவங்க இனத்துல மாமன் மச்சான்னு சொல்ல மாட்டாங்களே! கொஞ்சம் இருங்க ஜோன்” அவசரமாக போனைத் தட்டிப் பார்த்தவள்,

“பதி(கணவன்)னு வச்சிக்கலாமா?” கடுப்பில் கேட்டாள்.

“சித்ரா!”

“அப்புறம் என்ன ஜோன்? நான் செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். அஸ் பெர் ரெகுலேஷன் ஒன் மன்த் டைம்ல நான் பணத்தை செட்டல் பண்ணிருறேன். என்னோட கேர்லஸ்னெசுக்கு என்ன வேணுன்னா சொல்லுங்க நான் கேட்டுக்கறேன். இந்த மாதிரி மாமனா, மச்சானாலாம் தரக்குறைவா பேசாதீங்க. எனக்கு கோபமா வருது. வோர்க்பிளேஸ் ஹாராஸ்மேண்ட்னு, நான் கேஸ் பைல் பண்ண வேண்டி இருக்கும்.” அந்தப் ப்ளோரிலே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு பேரமைதி. ஜோனுக்கு முகமே செத்து விட்டது.

“ஐம் சாரி சித்ரா. அப்படி நான் பேசியிருக்க கூடாது” கார்பரெட் உலகத்தில் இது ஒன்று. மனது நிறைய வஞ்சம் இருந்தாலும் வாய் மட்டும் மன்னிப்பை யாசிக்கும். ஆனால் ஜோன் உணர்ந்து தான் மன்னிப்புக் கேட்டான். கோபத்தில் கத்தினாலும் அவனும் இது வரை பர்சனலாக யாரையும் தாக்கியதில்லை.

“இட்ஸ் ஓகே ஜோன். ஹார்ஷா பேசியிருந்தா நானும் சாரி கேட்டுக்கறேன்.” தலையை சரி என ஆட்டினான் ஜோன். அதற்குள் அவன் கைப்பேசி அலறியது. அவளை அமர சொல்லி விட்டு, நெற்றியை தேய்த்தவாறே காலை அட்டென்ட் செய்தான். அவன் பேசியது மட்டும் தான் சித்ராவுக்கு கேட்டது.

“சொல்லுங்க பிரகாஷ் சார்”

“சித்ராகிட்ட தான் அந்தப் பண மேட்டர் பற்றி பேசிட்டு இருக்கேன்”

“ஹ்ம்ம்”

“வீ ஆர் டெரிபலி சாரி பார் தெ மிஸ்டேக் சார். திஸ் வில் நெவர் ஹேப்பன் அகைய்ன். ஐ கென் கெரண்டி யூ திஸ்”

“வாட்! நெஜமாவா சொல்லுறீங்க?”

“சித்ரா அண்ட் அஸ் வில்லிங் டீ பே யூ தெ லாஸ் மிஸ்டர் பிரகாஷ்.”

“ஓ! தெங்க் யூ சார். ஸ்யூர். இனிமே இப்படி நடக்காது. தேங்க் யூ சோ மச். பாய். இல்ல திட்ட மாட்டேன். ஓகே பாய்” குரலில் அப்படி ஒரு குழைவு.

‘ஏன் கிட்ட அப்படி கத்துனான். கப்பூரு பேசவும் அப்படியே செட்டப் கிட்ட பேசுற மாதிரி குழையுறான். அவன் மட்டும் நேருல வந்திருந்தா காலைக் கழுவி அந்த தண்ணியில ஜீஸ் போட்டு என்னையே குடிக்க வைச்சிருப்பான் இந்த ஜனகு. நாஸ்ட்டி பெல்லோ’

போனை வைத்தவன் முகமெல்லாம் சிரிப்பு.

“யூ ஆர் சோ லக்கி சித்ரா. பிரகாஷ் சார் தான் பேசுனாரு. பணம் திருப்பிக் குடுக்க வேணாம்னு சொல்லிட்டாரு. லாஸ்ட் டைம் நீ செஞ்ச இன்வெஸ்ட்மேண்ட் நல்ல ரிடர்ன் குடுத்துருக்காம். சோ இந்த லாஸ்லாம் ஒரு மேட்டர் இல்லன்னு சொல்லிட்டாரு.”

‘என் கிட்ட பாச்சா பலிக்கலன்னு ஜனகு மூலம் மூவ் பண்ணிருக்கியா ப்ரௌனி. எமகாதகன்டா நீ’ அவனை நினைக்கும் போதே, இரவில் அருகில் தெரிந்த அவன் கண்கள் தான் ஞாபகம் வந்தது. மயிர்க்கால்கள் எல்லாம் நட்டுக் கொண்டு நின்றது அவளுக்கு. உடம்பை ஒரு உதறு உதறிக் கொண்டாள்.

“ஆர் யூ ஓகே சித்ரா?” ஜோன் அவளை மேலும் கீழுமாக பார்த்தான்.

“ஐம் பைன் ஜோன். இருந்தாலும் இது மிஸ்டர் பிரகாஷோட பணம். வீ நீட் டூ காம்பேன்செட் ஹிம் ஜோன்”

அவளை விஷ ஜந்து போல பார்த்தான் ஜோன்.

“யூ சீ சித்ரா, கிளையண்டே பணம் வேணாம்னு சொல்லுறாரு. அதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்? திருப்பி கொடுக்கனும்னா பாங்க் சில லட்சங்கள இழக்க நேரிடும். அதனால எம்ப்ளோயியோட இன்க்ரீமெண்ட்ல தான் கை வைப்பாங்க. உனக்கு தெரியும் தானே? உன்னால மத்தவங்க ஏன் சிரமப்படனும்?”

“ஜோன்!” பேச வந்தவளை கை நீட்டி தடுத்தவன்,

“பிரகாஷ் சார், அப்படி நாம பணத்த திருப்புனா, அக்கவுண்ட்ஸ் க்ளோஸ் பண்ணிட்டு வேற பேங்க் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாரு. சோ உன் ஹோனெஸ்டி, டீ டீகாஷன்(டெடிகேஷன்) எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வச்சிட்டு போய் வேலைய பாரு” பெரிய ஜோக் சொல்லிவிட்டது போல இடி இடியென சிரித்தான் ஜோன். அவன் ஜால்ராக்களும் அவனுடன் சேர்ந்து வயிறு குலுங்க சிரித்தார்கள்.

‘டேய் தீவெட்டி தலையா! இது அவ்ளோ பெரிய ஜோக் ஒன்னும் இல்லடா. சிரிக்கறான் பாரு குஷ்டம் வந்த குரங்கு மாதிரி. கப்பூரு, என்னால ஒன்னும் பண்ண முடியாத மாதிரி இப்படி செக் வச்சிட்ட இல்ல. இருக்குடா உனக்கு. சாப்டுக்கிட்டு இருந்த சிங்கத்த சொரிஞ்சி விட்டுட்ட இல்ல, அது உன்னை குதறாம போகாதுடா. ஹ்ம்ம். தூங்கிகிட்டு இருந்த சிங்கம்னு தானே சொல்வாங்க. பரவாயில்ல, யாருக்கு எது பிடிச்சிருக்கோ அத தானே சொல்ல முடியும்’ மனதில் புலம்பியவாறே தன் இருக்கையில் அமர்ந்தாள்.

இந்த பண விஷயத்தைப் பற்றி இவள் போன் செய்தாலும் எடுக்காமல், நேரில் சென்றாலும் பார்க்காமல் கண்ணாமூச்சி ஆடினான் பிரகாஷ். ஒரு வாரமாக முயற்சித்தவள், கொலைவெறியில் இருந்தாள் அவன் மீது.

சிவா யூஎஸ் போக இரண்டு நாள் இருக்கும் போது, தன் குடும்பத்தையும் சித்ராவின் வீட்டினரையும் அவன் வேலை செய்யும் ஹோட்டலில் டின்னருக்கு அழைத்திருந்தான். பத்மாவின் முகத்திற்காக குடும்பத்தைக் கிளப்பி இருந்தாள் சித்ரா. அவ்வப்பொழுது நிலாவின் முகத்தையும் பார்க்க தவறவில்லை. சோகத்தை மறைத்து சிரித்த முகமாகவே வலம் வந்த தங்கையைக் காண மனம் வலித்தது சித்ராவுக்கு. தீபாவுக்கு அழகிய பிங்க் கலரில் கவுன் அணிவித்தவள், அந்த சிவாவின் பார்ட்டிக்கு இது போதுமென பழைய சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்தாள். அது வயிற்றையும் கையையும் இழுத்துப் பிடித்தது.

‘அடக் கடவுளே! போன மாசம்தானே இந்த சட்டைய போட்டேன். சரியா தானே இருந்துச்சு. இப்ப இப்படி பிடிக்குதே’. அடித்துப் பிடித்து சுடியைப் போட்டு விட்டாலும், கையை அசைக்க முடியவில்லை அவளால்.

“நிலாஆஆஆஆ!”

“என்னக்கா? ஏன் கத்துற?” ரூமுக்கு ஓடி வந்தாள் நிலா.

“இந்த சுடிய கழட்டி விடுடி. மூச்சு விட முடியல. கர்மம். அதுக்குள்ள ஒரு ரவுண்டு பெருத்துட்டேன் போல” சலித்துக் கொண்டாள் சித்ரா.

அக்காவும், தங்கையும் நடத்தும் சட்டை போராட்டத்தைப் பார்த்து தீபா கெக்கேபெக்கேவென உருண்டு புரண்டு சிரித்தாள்.

“சித்தாபொணமி ஃபேட்(fat) கேர்ள் !” என சுற்றி சுற்றி வந்து பாடினாள்.

“பேசாம ஓடிப்போயிரு. கையில புடிச்சேன் வெளுத்து விட்டிருவேன்” மகளை மிரட்டினாள் சித்ரா.

“பேப்பேபே” அழகு காட்டியவள் மணியிடம் ஓடி விட்டாள்.

“நான் வாங்கி குடுத்த புது சுடி எங்கக்கா? அத போட வேண்டி தானே?”

“அது ரொம்ப அழகா இருக்குடி. இந்த பாகுபலிக்கு பழைய சுடி போதும்னு நினைச்சேன்”

அக்காவை முறைத்த நிலா,

“அவன கறுவித்தள்ளாட்டி உனக்கு தூக்கம் வராதே! சீக்கிரமா புதுசா போட்டுகிட்டு வாக்கா! மணி ஆகுது. ஆட்டோ வேற புடிக்கனும்”

அழகான ஆரஞ்சு வண்ண சுடிதாரில், முடியை பூராண் சடைப்போட்டு முன்னே இழுத்துப் போட்டிருந்தாள் நிலா. தன் தங்கையை ஆசை தீர பார்த்த சித்ரா,

“நீ அழகிடி! இப்படியே ட்ரேஸ் பண்ணேன். எதுக்கு தொள தொளன்னு மணி சட்டையையும் எடுத்துப் போட்டுக்கற?”

“அது தான் எனக்கு காம்பர்டபளா இருக்கு. அதோட பார்க்க வேண்டியவங்க பார்க்கத் தான் இந்த அழகெல்லாம். எதுக்கு எல்லோருக்கும் காட்டனும்” சொன்னவள் அறியவில்லை அவள் சினிமாவுக்காக சைன் போட்டிருந்த பத்திரத்தின் மகிமையை.

ஒரு வழியாக கிளம்பி ஹோட்டலை அடைந்தார்கள் சித்ரா அண்ட் பேமிலி. சிவா இரு குடும்பத்துக்கும் தனியாக மேசை ரிசர்வ் செய்திருந்தான். ஏற்கனவே வந்திருந்த பத்மா, தீபாவை அழைத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். எட்டு பேர் அமரக் கூடிய மேசையை அவர்களுக்கு ஒதுக்கி இருந்தார்கள்.

ஒன்றாக அமர போனவர்களை,

“சித்து, நீ சிவா பக்கத்துல உட்காரும்மா” என அவன் அருகில் அமர வைத்தார் பத்மா. சிவாவின் வலது புறத்தில் சித்ராவும், இடது புறத்தில் நிலாவும் அமர, நிலாவின் பக்கத்தில் மணி அமர்ந்தான். சித்ராவின் வலது புற நாற்காலி காலியாக தான் இருந்தது. சாப்பிடும் போது தீபா அம்மா வேண்டும் என சேட்டை செய்ய வாய்ப்பு இருந்ததால் அந்த இடத்தில் யாரும் அமரவில்லை.

என்ன உணவு வேண்டுமென இவர்கள் பேசி முடிவெடுத்துக் கொண்டிருக்கும் போதே, பாலன் திடீரென எழுந்து நின்றார்.

“ஹாய் சார். வாட் அ பிளசண்ட் சர்ப்ரைஸ்” என்றவரின் குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே நின்றிருந்தது சாட்சாத் நம் ப்ரௌனி தான்.

சித்ராவுக்கோ இவன் எங்கே இங்கே என ஒரே ஆச்சரியம்.

“ஹாய் பாலன் ஜி. பேமிலியோட டின்னரா?”

‘இல்லடா பேமிலியோட பரமபதம் ஆட வந்துருக்கோம். பார்த்தா தெரியலை!’ அவன் மேல் ஏற்கனவே இருந்த கோபம் வெளிவந்தது சித்ராவுக்கு.

“ஆமா சார். என் பிரதர் இன் லா அப்ரோட்கு வேலைக்கு போறாரு. சோ சின்ன செலப்ரேஷன். பத்து, சார் தான் எங்க கம்பேனியோட புது போர்ட் ஆப் டைரக்டர். மேஜர் ஷேர்ஸ் இப்போ இவர் கிட்ட தான் இருக்கு” என அறிமுகப் படுத்தினார்.

‘அடப்பாவி! உன் அக்கவுண்ட் மேனேஜர் எனக்கு தெரியாம எப்படிடா இந்த டீலிங்? இன்னும் வேற எங்க எங்க பணத்த பதுக்கி வச்சிருக்க? சரியான பதுக்கி பரமசிவம்டா நீ’

“ஓ பாலன் ஜி! எதுக்கு இந்த பார்மாலிட்டி எல்லாம். இவங்கள ஏற்கனவே எனக்கு தெரியும். மேடம்

சித்ரா தான் என்னோட அக்கவுண்ட் மேனேஜர். சோ இப்படி வெளியாள் மாதிரி ட்ரீட் பண்ண வேணாமே” அழகாக சிரித்தான் பிரகாஷ்.

“பிகாஷ், சாப்டியா பிகாஷ்?” பொம்மைக் காருடன் விளையாடி கொண்டிருந்த தீபா அப்பொழுதுதான் அவனைப் பார்த்து கேட்டாள்.

“இன்னும் இல்லடா தீபா குட்டி”

“அப்படினா, எங்க கூட கண்டிப்பா நீங்க டின்னர் சாப்பிடனும். சித்ரா சொல்லும்மா” பத்மா கைப்பிடித்து வேணாம் என சிக்னல் கொடுப்பது கூட புரியாமல் புது பாஸ்சின் மேல் பாசம் பீறிட்டது அவருக்கு. பாதி கணவர்கள் செய்யும் தவறையே அவரும் செய்தார்.(அதாங்க வைப் குடுக்கற சிக்னல புரிஞ்சிக்காம இருக்கறது. இன்னிக்கு நைட் பாலனுக்கு கண்டிப்ப பால் ஊத்திருவாங்க பத்மா. ஒரு நிமிஷம் அவருக்காக ப்ரே பண்ணுங்க எல்லோரும், அடி இடி மாதிரி விழாம இருக்கனும்னு)

“சாப்பட வாங்க சார்” ஈயென இளித்தாள் சித்ரா.

“ஜிம் போகலாம்னு வந்தேன். பாலன் ஜி கம்பெல் பண்ணறதனால ஜோய்ன் பண்ணிக்கிறேன்” மணியை பார்த்து புன் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் படக்கென சித்ராவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

பத்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. கணவனின் கரத்தைக் கிள்ளி வைத்தார்.

“ஆவ்வ்வ்வ்! ஏன்டி என்ன கிள்ளுன?” கையைத் தேய்த்தவாறே கேட்டார் பாலன்.

“கிள்ளலைங்க. தட்டிக் கூப்பிட்டேன். பிள்ளைக்கு பசிச்சிருக்கும். சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்க” என கஸ்டப்பட்டு சிரித்தவாறே கூறினார்.

பிரகாஷிற்க்கு சிரிப்பைத் தாங்க முடியவில்லை. கட்டுப் படுத்தினாலும் உடல் குலுங்கியது. ஏற்கனவே அவன் மேல் கடுப்பில் இருந்த சித்ரா அவனின் அடக்கப்பட்ட சிரிப்பில் மேலும் காண்டானாள். மேசைக்கடியில் அவன் கையைப் பிடித்துக் கிள்ளப் போனவள் தெரியாமல் தொடையக் கிள்ளி வைத்தாள். அவளே அறியாமல் அவசரத்தில் செய்த செயல் தான், கிள்ளிய மறுநொடியே தான் செய்த தவறை உணர்ந்தாள். கையை உறுவிக் கொள்ள முயன்றவளின் செயல் வெறும் முயற்சியாக மட்டும் தான் இருந்தது. அவள் கையை தன் தொடை மேலேயே வைத்து அழுத்திப் பிடித்திருந்தான் பிரகாஷ். பதட்டமாக அவனை நோக்கியவள், அவனின் மலர்ந்து விகசித்த முகத்தைக் கண்டு பீதியானாள்.

‘கப்பூரு, நான் கிள்ளனதுக்குப் போய் நீ குடுக்கற ரியாக்‌ஷன் ரொம்ப ஓவருடா. சீக்கிரம் மலை எறங்குடா சாமி’

மற்றவர்களின் கருத்தைக் கவராமல், கையை இழுத்துப் பார்த்தாள் சித்ரா. அது இரும்பு பிடியாக இருந்தது. அவன் பக்கத்தில் நேப்கினை கீழ்ந்ந் தள்ளிவிட்டவள், அதை எடுப்பது போல அவன் அருகில் குனிந்து,

“கைய விடுடா கப்பூரூ!” என சிரித்தபடியே வார்த்தையை துப்பினாள்.

“ஏஜின்னு கூப்பிடு விடறேன்”

“அப்படினா?”

“என்னங்கன்னு உங்க ஊருல கூப்பிடிவாங்களே, அது மாதிரி”

“முடியாதுடா. வேணுன்னா பாவ் பஜ்ஜின்னு கூப்படறேன்” அந்த நேரத்திலும் அவள் வாய் அடங்கவில்லை.

“ஹ்ம்ம்..வாய்டீ குடுத்தா தான் இந்த வாய் அடங்கும் போல” கிண்டலடித்தான். மற்றவர்கள் எல்லோரும் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்தபடி இருந்ததால் இவர்களின் அக்கப்போரை கவனிக்கவில்லை. ஆனால் பத்மாவின் கண்கள் மட்டும் இவர்களின் மேலேயே இருந்தது. அதனாலேயே சிரித்தபடி பிரகாஷை முறைத்தாள் சித்ரா.

“ஹ்ம்ம் கூப்பிடு சிமி. ஐம் வேய்ட்டிங்”

“விடுடா ஏஜி” கோபமாகவே வார்த்தை வந்து விழுந்தது.

“அடுத்த தடவை ஆசையா கூப்பிடுவன்னு நினைக்கிறேன்”

“நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம். மூஞ்சியும் முகரையும் பாரு”

“என் மூஞ்சிய விடு சிமி.. ஆஜ் தும் பொஹோத் கூப்சூரத் லக் ரஹி ஹோ(இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க)” மயக்கத்துடன் சொன்னான் பிரகாஷ்.

‘இன்னிக்கு யாரு தும்முனான்னு தெரியலையே. இவன் கிட்டயே கேக்கலாமா?’ இவள் வாயைத் திறப்பதற்குள்,

“இன்னிக்கும் எங்க ஹிந்திய பத்தி எதாவது கவுண்டர் குடுத்த, எல்லார் முன்னுக்கும் வாய்டீ குடித்துருவேன்” மிரட்டினான்.

“எத்தனை தடவை தான் கூப்பிடறது சித்தாபொணமி” கத்தினாள் தீபா. எல்லோருடைய கண்களும் பட்டேன திரும்பிய சித்ராவின் மேலேயே இருந்தன.

‘ஏன் எல்லோரும் இப்படி பார்க்கிறாங்க?’ விழித்தாள் சித்ரா.

(தொடர்ந்து உன்னோடுதான்)

Comments 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!