uvvn – 15

uvvn – 15

யமுனாவிற்கும் சேரனுக்கும் வெற்றிலைப் பாக்கு மாற்றி இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது.  அன்று மட்டுமே அவன் யமுனாவிடம் பேசியிருந்தான். அவனிடம் ஜீவாவின் கைபேசி எண் இருந்தும் அவனைத் தொடர்பு கொண்டு யமுனாவிடம் பேசலாம் தான். ஆனால் ஏதோ தயக்கமாகவே இருந்தது.

இந்த நேரத்தில் தான் வசுந்தரா அவனிடம் வந்தாள். அவளுக்கு அன்று செல்வி சொல்லியதிலிருந்து ஜீவாவை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று இருந்தது. 

தந்தையிடம் நேரடியாகச் சென்று அவனது செல்போன் எண் கேட்க அவளால் முடியவில்லை. ஏனெனில் தந்தையிடம் எப்போதும் நற்பெயர் எடுத்து வைத்திருப்பாள். வரதனும் பெண் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பார். ஆனால் வசுந்தவிற்கு எப்போதும் தனக்குக் கீழ் அனைவரும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அதனால் தான் அப்பாவிடம் நன்மதிப்பைப் பெற்று தங்களது கம்பனியின் பொறுப்பைப் பெற்றிருந்தாள்.

சேரனுக்கு முதலில் இருந்தே தந்தை நடத்தும் கார்மென்ட்சில் அவ்வளவாக ஆர்வமில்லை.  அது வசுந்த்ராவிற்கு இன்னும் வசதியாக இருந்தது.

தந்தைக்குப் பிறகு மொத்த கம்பனி பங்கும் தனக்கே வந்துவிட வேண்டும் அதனால் தன்னுடைய மூளையை செலவு செய்து கம்பனியின் வளர்ச்சியில் இடுபட்டாள்.

ஜீவாவைத் திருமணம் செய்தால் , அவர்கள் ஊரிலேயே மிகப் பெரிய குடும்பம் , அதற்கு மருமகள் என்ற மதிப்பும் மரியாதையும் தானாகவே வந்துவிடும். ஆனால் ஜீவா எப்படிப் பட்டவன் என்று அவளுக்குத் தெரியவேண்டியிருந்தது.

சேரன் மூலம் அவனிடம் பேசிவிட நினைத்தாள்.

“ என்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க? சேரனின் அறைக்குள் நுழைந்த படியே கேட்டாள்.

“ அட என்ன வசு , உனக்கு வீட்டுல இருக்கறவங்கள பாக்கரத்துக்கெல்லாம் நேரம் இருக்கா? என்ன இந்தப் பக்கம்?” சட்டையில் சென்ட்டை தெளித்துக் கொண்டே கேட்டான்.

“ ம்ம்ம்.. என்ன விடு . உன்ன பிடிக்கறது தான் இப்போ முடியல. உங்களுக்கு கஸ்டமர் கேர் போன் பண்ணாக் கூட பிஸியா இருக்காமே!” தூண்டில் போட,

“ என்ன சொல்ற ? என் போன் எப்பவும் சும்மா தான் இருக்கு! ரெண்டு நாளைக்கு ஒரு தடவ தான் கடமைக்கு சார்ஜ் போடறேன்” வெள்ளந்தியாக பதில் சொன்னான்.

“ என்ன சொல்ற? நீ அண்ணிக்கு போன் பேசறதே இல்லையா?” ஆச்சரியமாகக் கேட்க ,

“ அவ கிட்ட போன் இல்ல. இன்னும் காலேஜ் போறாளே . அவ அண்ணன் கிட்ட தான் இருக்கு. “ சலித்துக் கொண்டான் சேரன்.

“ ம்ம் அப்பறம் என்ன. ரெண்டு அவங்களுக்குப் போன் பண்ணி யமுனா கிட்ட பேசவேண்டியது தான”

“ அதெப்படி உங்க தங்கச்சி கிட்ட போன் குடுங்கன்னு சொல்றது. அது அவ்ளோ நாகரீகமா இருக்காது” மறுத்தான்.

“ நீ இன்னும் எந்தக் காலத்துல இருக்க , இப்போலாம் எப்படி எல்லாமோ பேசறாங்க, உனக்கு இது கூட சொல்லித் தரணுமா? யமுனா உன்னப் பத்தி என்ன நினைப்பா?” கொஞ்சம் அவனை ஏற்றி விட,

“ இப்போ என்ன செய்யலாம்னு சொல்ற?” அவள் வழிக்கே வந்தான்.

“ சரி நீ அவங்க அண்ணன் நம்பர் குடு, நான் யமுனாவை பேச சொல்றேன்” ஒரு வழியாகக் கேட்டு விட்டாள்.

ஒரு புருவத்தை மட்டும் ஏற்றி அவளைப் பார்த்தான் சேரன்.

“ ஓ! மேடம்க்கு இப்போ ஜீவா நம்பர் வேணுமா.. அதுக்குத் தான் இவ்வளவு பிட்டா?” அவளைச் சந்தேகமாகப் பார்க்க,

“ அட உனக்காகத் தான் கேக்கறேன். குடுண்ணா” அவவனிப் பிடித்துத் தொங்கி அவனிடம் வாங்கிக் கொண்டு தான் சென்றாள்.

இத்தனை நாட்களில் இப்போது தான் இதயாவை ஒரு வழியாக சமாதானப் படுத்தியிருந்தான்.

அன்று திடிரென ஒரு கட்சித் தலைவன் இறந்துவிட்டதால் , உள்ளூர் கடைகள் பள்ளிகள் என அனைத்தும் மூடிவிடும்படி அறிவிப்பு வந்தது. மதியமே வாணி கிளம்பி விட, ஜீவா என்ன செய்கிறான் என்று அவனுக்குப் போன் செய்தாள்.

அவனுக்கும் அன்று அலுவலகத்தில் அரை நாள் லீவ் கொடுத்திருந்தனர். ஆகவே அவளை  அருகில் இருக்கும் பூங்காவிற்கு வரச் சொன்னான்.

இருவர் மட்டுமே அந்தப் பூங்காவில் இருந்தனர். நல்ல வேளையாக ஆங்காங்கே கூரை வேய்ந்து அங்கே மர சேர்கள் போடப்பட்டு இருந்தது.

அங்கிருந்த வாட்ச்மேன் இவர்களை வித்தியாசமாகப் பார்த்தான். அனைவரும் விடுமுறை என்பதால் வீட்டிற்குச் சென்று விட , இவர்கள் மட்டும் இங்கே வருகின்றனறே!

அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ள வில்லை. ஒரு கூரையின் கீழ் அமர்ந்தனர்.

“ இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு ஜீவா!” சுற்றி இருந்த மரங்களும் செடிகளும் , மணல் பரப்புகளின் நடுவே இருந்த விளையாட்டுத் திடலும் அவளை மிகவும் கவர்ந்தது.

“ ஆமா. எப்பயுமே குழந்தைங்க இருக்கற இடம் ரொம்ப அழகாத் தான் இருக்கும்.” அவனும் ரசித்துச் சொல்ல,

“ சரியா சொன்னீங்க. எனக்குச் சின்ன பசங்க பாக்கற கார்டூன் , அதுல வர இடம் எல்லாம் கூட  ரொம்ப பிடிக்கும். அதுவும் டோரா பஜ்ஜில வர அந்த ஆறு பாலம் எல்லாம் எவ்ளோ அழகு தெரியுமா?” அவள் முகத்தில் அத்தனை உவகை!

“ ஹே என்ன நீ அதெல்லாம் இன்னும் பார்ப்பியா?” அவனுக்கு அவளின் இந்த குழந்தைத் தனம் தான் மிகவும் பிடித்தது.

“ ஆமா! எங்க அம்மா கூட திட்டுவாங்க, ஆனா எனக்கு அது தான் பாக்க பிடிக்கும்!”

“ம்ம் .. உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்தக் குழந்தைத் தனம் தான். அன்னிக்கு நீ அந்த பறவைங்க கூட பேசிட்டு இருந்தப்ப எப்படி இருந்தது தெரியுமா. உன்னை அப்படியே தூக்கிக் கொஞ்சம் போல இருந்துச்சு” அவன் குரல் சற்று இறங்கவும், அவன் மூடு மாறுவதை உணர்ந்தாள்.

உடனே அதை மாற்ற “ நான் இப்படி பண்றது உங்களுக்குப் பிடிச்சிருக்கு , நான் இப்படி பண்ணா, எங்க அம்மா திட்டித் தீர்த்துடுவாங்க, அன்னிக்கு அப்படித் தான் மரம் ஏறி கொய்யாகாய் பறிச்சுட்டு இருந்தேன், கீழ நிக்கற என் ப்ரென்ட்டுக்கு நான் கூப்பிட்டது கேட்கலைன்னு  விசில் அடிச்சுட்டேன். எங்க அம்மா பாத்துட்டு அடிப் பின்னிட்டாங்க. பொறுக்கியா டி நீ ன்னு என் ப்ரென்ட் முன்னாடி அசிங்கப் படுத்திட்டாங்க” வருத்தமாக அவள் சொல்ல,

“ அப்படியா செஞ்சாங்க அத்தை. சரி விடு அவங்கள நான் டீல் பண்ணிகறேன். நீ இப்படியே இரு. ஐ லவ் தட்”

சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்தவன்,

“ இதயா எனக்காக ஒரே ஒரு முறை….” கண்கள் கெஞ்ச அவளைப் பார்க்க,

அவள் சிந்தனை எங்கோ சென்றது. உடனே வாயை இரு கைகளால் மூடிக் கொண்டாள்.

“ ம்ம்ம் ஹும்ம்.. மாட்டேன்!” அவள் திகைத்துப் பார்க்க,

அவள் செய்கையை நக்கலாகப் பார்த்தவன் , சத்தமாகச் சிரித்தான்.

“நான் இன்னும் என்னனு கேட்கவே இல்லையே ! அதுக்குள்ள உன்னோட டர்ட்டி மைன்ட் என்ன யோசிக்குது !” கண்ணடித்துக் கேட்க,

உடனே வாயிலிருந்து கையை எடுத்தாள். அவனுக்குக் அழகு காட்டி விட்டு

“ நான் ஒன்னும் யோசிக்கல, நீங்க கேளுங்க” செல்ல முறைப்பு அவளிடம்!

“ ஒரே ஒரு தடவ விசில் அடிச்சுக் காட்றியா..” அவன் கேட்டவுடன் பதறினாள் அவள்.

“ ஐயையோ! இங்கயா.. நான் மாட்டேன்! யாராச்சும் பாத்தா அசிங்கமாயிடும்” அவள் மறுத்துக் கூற,

“ இங்க தான் யாரும் இல்லையே , ஒரே ஒரு தடவ, எனக்காக அடி. நான் உனக்கு ஒன்னு தருவேன்” அவளிடம் டீல் பேசினான்.

சற்று நேரம் மறுத்தவள், பின்பு அக்கம் பக்கம் பார்த்து விட்டு,  பின்பு நாக்கை மடக்கி நாடு விரலையும் ஆள் காட்டி விரலையும் வைத்து ஒரு விசில் அடித்தாள். அங்கிருந்த வாட்ச்மேன் அவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான். அவள் உடனே வாயிலிருந்து கையை எடுத்துக் கொள்ள, சிரித்தான் ஜீவா.

“ வாவ்.. சுப்பர் டீ ரவுடி !”

“பாத்தியா! இதுக்குத் தான் நான் அடிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்போ பாரு ரவுடின்னு சொல்ற, போ !”

“ சும்மா செல்லமா டி ! என் ரவுடி !” சொல்லிக்கொண்டே

அவளிடம் ஒரு சாக்லேட் பாரைக் கொடுத்தான்.

“வாவ்! எனக்கு ரொம்ப பிடிச்சது.” வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

அவள் உண்பதையே பார்த்திருந்தான்.

“ வேணுமா?!” அவனிடம் பாதியை நீட்ட, வேண்டாமென மறுத்தான். அவள் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தவன், முடித்ததும் கையில் ஒட்டியிருந்ததை நக்கப் போனவளைத் தடுத்து , அவளது விரலை சுவைத்தான்.

அவளுக்கு அவனது உதடு பட்டதும் சப்த நாடியும் ஒடுங்கியது. விரல்களில் அடித்த மின்சாரம் உடலெங்கும் பரவியது.

மெதுவாக அவளது கையை விட்டான். ஆனால் அவள் தான் இன்னும் லயித்துப் பொய் அமர்ந்திருந்தாள்.

அவளது லயிப்பை சட்டென பெய்த மழை கலைத்தது. அங்கிருந்த வாட்ச்மேன் ஓடி வந்து அவன் பார்க்கை மூடவேண்டும் என்றும் அவர்களை கிளம்புமாறு சொல்ல,

வேறு வழி இன்றிக் கிளம்பினர்.

சிறிது நேரத்திலேயே மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. ரயில்கள் ரத்தனாதால் , அவர்கள் பஸ் பிடித்துச் செல்ல முடிவு செய்தனர்.

கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. நான்கு ஐந்து பேருந்துகளும் நிரம்பி வழிந்து கொண்டே வந்தது.

வேறு வழியின்றி அங்கேயே நிற்க, நேரம் போய்க்கொண்டே இருந்தது.

அப்பொழுதே மணி ஆறு ஆகிவிட ,

“ ஜீவா அடுத்த பஸ் கூட்டமா இருந்தாலும் பரவால்ல, நாம போய்டலாம். ரொம்ப லேட் ஆனா அம்மா திட்டு வாங்க!” சற்று பயம் பரவியது வாணிக்கு.

“ சரி இதயா, பயப்படாத, போய்டலாம்!” சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பேருந்து வந்து நின்றது.

இருவரும் மொத்தமாக நனைந்து இருந்தனர். இதயாவிற்கு ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தது.

அந்த பேருந்திலிருந்து இறங்கியவனைக் கண்டதும் உடல் மொத்தமும் நடுக்கம் கண்டது. கால்கள் துவண்டு விழுந்துவிடும் போல ஆனது.

எதிரே நின்றவன் அந்த மழையிலும் நெருப்பைக் கக்கும் பார்வையை இருவர் மேலும் வீசிக் கொண்டிருந்தான் .

ஜீவா சிறிதும் கலங்காமல் தைரியமாகவே நின்றான்.  

மெல்ல வாய் திறந்தாள் வாணி.

“ அண்ணா….”

“ பஸ்ல ஏறு” ஆணை மட்டுமே வந்தது வெற்றியிடமிருந்து.

ஜீவாவை ஒரு பார்வை பார்த்தாள் வாணி, அவன் பேசாமல் இருக்க,

“ ஏறுன்னு சொன்னேன்!”

அவள் அடுத்த நொடி ஏறிவிட்டாள்.

வெற்றி ஜீவாவைப் பார்க்க,

“ நானே உங்ககிட்ட .. “ சொல்ல ஆரம்பித்த ஜீவாவைக் கையைக் காட்டி நிறுத்தினான்.

“ நாளைக்கு என் ஊர் பாலத்துக்கிட்ட அஞ்சு மணிக்கு வா”  சொல்லிவிட்டு விடு விடுவென்று நகர்ந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டான்.

முகத்தில் வழிந்த மழை நீரைத் துடைத்த படி நிற்க, மழையும் நின்றது. மனதில் என்ன நடந்தாலும் வாணியை மட்டும் விடமுடியாது என்பதில் உறுதி பிறந்தது.

அடுத்த பஸ்ஸில் அவனும் செல்ல, இத்தனை நேரம் இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வில்லியம் அங்கிருந்த மரத்தின் பின்னாலிருந்து வெளியே வந்தான்.

“ ச்ச ! இந்த வெற்றி அவனை அடி பொளந்துடுவான்னு பார்த்தா..பேச்சு வார்த்தை நடத்தக் கூப்புடறான். நாளைக்கு போய் என்ன நடக்குதுன்னு பார்க்கணும்.” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

வாணியின் அருகில் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் வெற்றி. அவன் கம்பியைப் பிடித்து இருந்தத இறுக்கத்திலேயே  அவனின் கோபம் தெரிந்தது.  இன்னும் சற்று அழுத்திப் பிடித்தால் கம்பியே பெயர்ந்து வந்துவிடும் போல ஆனது.

அவனிடம் இப்போது எதுவும் பேசுவது அவனை மேலும் தூண்டிவிடுவது போல ஆகும் என்று வாயை மூடிக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்ததும் இத்தனை நாள் பொத்தி பொத்தி ஆசையாக வளர்த்த் அன்புத் தங்கை என்றும் பாராமல் ஓங்கி ஒரு அரை விட்டான்.

சுருண்டு போய் கீழே விழுந்தாள். ரேகா ஓடி வந்து பார்த்தார்.

“வெற்றி எப்போ டா வந்த, என்ன ஆச்சு, ஏன் அவள அடிச்ச,?” வாணியின் அருகில் வந்து அவளை எழுப்ப, அவள் உடல் நடுங்குவது தெரிந்தது.

“ என்ன டி இப்படி நடுங்குது. வெற்றி என்ன டா ஆச்சு?” பதட்டமானார் ரேகா.

வாணியின் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. அம்மாவிடம் சொன்னால் அவர் மேலும் வருந்துவார் . கண்ணை இருக்க மூடித் திறந்தாள்.

வாணியின்  தவிப்பை உணர்ந்தவன், ரேகாவின்  மனம் புண்படாமல் இருக்கவேண்டும் என நிலைமையை சமாளித்தான்.

“ அது ஒண்ணுமில்லம்மா, மழைல நனஞ்ச்சுட்டே நின்னுட்டு இருந்தா, காய்ச்சல் வந்தா என்ன செய்யறது, அதான் கோவம் வந்துடுச்சு , அடிச்சுட்டேன். “ தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்.

 

“முதல்ல போய் வெந்நீர்ல குளிச்சுட்டு டிரஸ் மாத்து “ அவளை ஏறிட்டும் பாராமல் சொல்லிவிட்டுச் சென்றான்.

 

error: Content is protected !!