“அதெல்லம் நினைச்ச நேரத்துக்கு லீவ் எடுக்க முடியாது ப்ரௌனி. ஜனகு சாமியாடிருவான். ஏற்கனவே ஓன் வீக் லீவ் போன மாசம் கல்யாணத்தப்ப எடுத்தாச்சு. புரிஞ்சுக்க”
“இனி உன் கிட்ட பேசற மாதிரி இல்ல சிமி.”
தன் போனை எடுத்தவன், இரவு மணி பத்து என்றும் பாராமல்,
“சீரி, கால் ஜோன்” என்றான்.
“ஏய் ப்ரௌனி! என்ன பண்ணுற? இரு, இரு நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம்” என சமாதானப் படுத்துவதற்குள் ஜோன் போனை எடுத்திருந்தான்.
“பிரகாஷ் சார், சொல்லுங்க. எப்படி இருக்கீங்க? கல்யாண லைப்லாம் நல்லா போகுதா? எங்க பேங்க் ஸ்டாப்ப நீங்க மேரேஜ் பண்ணதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். சித்ரா இஸ் அ லக்கி கேர்ள்” என இளித்தான்.
‘யாரு? நான் லக்கியா? பெரிய புளியங்கொம்பா புடிச்சுட்டோம்னு வேலைல கோட்டை விட்டறாத சித்ரா. எனக்கு டார்கேட் முக்கியம், சேல்ஸ் முக்கியம் அப்படினு முக்கிட்டு இப்போ சாராம் மோராம்! ப்ராடு ஜனகு. அப்புறம் என்னமோ சொன்னானே, ஹ்ம்ம்! இனிமே பிரகாஷ நல்லா ப்ரேன்வாஷ் பண்ணி நிறைய இன்வெஸ்ட் செய்ய வைக்கனும். தலையணை மந்திரத்த யூஸ் பண்ணுன்னு சொல்லிட்டு கோணை சிரிப்பு ஒன்னு சிரிச்சான் பாரு இந்த கேணை! சீச்சீ. உனக்கெல்லாம் இந்த பிரகாஷ் தான்டா கரேக்டு’
“சித்ரா லக்கி இல்ல! நான் தான் லக்கி ஜோன்.”
“ஆமா சார் ஆமா. ஷி இஸ் அ பிரிலியண்ட் கேர்ள்”
“என் வைப்ப இனி கேர்ள், கேர்ள்னு சொல்லாதீங்க ஜோன். சித்ரானே சொல்லுங்க”
“ஹிஹி! ஸ்யூர் சார். அவங்க உங்க வைப்பாச்சே! சித்ரா மேடம்னு கூப்பிட்டா கூட தகும் சார்”
ஸ்பீக்கரில் நடக்கும் சம்பாஷணையைக் கொலை வெறியுடன் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவை, கண்ணில் சிரிப்புடன் பார்த்திருந்தான் பிரகாஷ்.
“ஜோன், சித்ராவுக்கு ஓன் வீக் லீவ் வேணுமே! சாத்தியப்படுமா? ரொம்ப வோர்க்னா பரவாயில்லை ஜோன். ஹனிமூன் போகலாம்னு ஒரு ஐடியா. லீவ் குடுக்க முடியலைன்னா பரவாயில்ல, நான் மட்டும் தனிமூன் போய்ட்டு வரேன்” சிரித்தான்.
அந்தப் பக்கம் ஜோனும் சிரித்தான். இவர்களின் சிரிப்பைப் பார்த்து, பிரகாஷை முறைத்தாள் சித்ரா.
“குட் ஜோக் பிரகாஷ் சார். ஐ அட்மையர் யுவர் சென்ஸ் ஆப் ஹியூமர். லீவ் கண்டிப்பா சாங்கஷன் பண்ணுறேன் சார். இப்போதைக்கு சித்ராவுக்கு நான் நிறைய வேலை கூட குடுக்கறது இல்ல. அவங்க சும்மா வந்து உட்கார்ந்துட்டு தான் போறாங்க. லீவ் எப்ப வேணும்னு சிஸ்டம்ல கீ இன் பண்ண சொல்லுங்க சார். இப்பவே அப்ரூவ் பண்ணிருறேன். எங்களோட கோல்ட் கிளையண்ட் நீங்க. இந்த சலுகை கூட குடுக்க மாட்டோமா” குரலில் அப்படி ஒரு பணிவு, அடக்கம்.
‘அடேய் ஜனகு! எப்படிடா இப்படி அந்தர் பல்டி அடிக்கற? வேலையே குடுக்கறது இல்லையா? ஒரு மாசமா, என்னை தெலிசேல்ஸ்ல போட்டு வாட்டு வாட்டுன்னு வாட்டிட்டு, இப்ப என்னம்மா நடிக்கறடா! நீ ஒரு முள்ளமாரினா, இந்தப் பிரகாஷ் ஒரு கேப்மாரி. ரெண்டு மாரிசும் இளிக்கற இளிப்ப பாரு’ வறுத்தெடுத்தாள் இருவரையும்.
“ஓ ஜோன்! தேங்க்யூ சோ மச். உங்க பேங்க்ல கிளையண்டா இருக்கறது ஆல்வேய்ஸ் மை ப்ளேஷர். பாய்” காலை டிஸ்கனேக்ட் செய்தவன், எப்புடி என்பது போல மிதப்பாகப் பார்த்தான்.
தலையணைப் பறந்து வந்து நேராக அவன் முகத்தின் மேல் மோதியது.
“இனிமே என் வேலை விஷயத்துல தலையிடாத ப்ரௌனி! நான் மனுஷியா இருக்க மாட்டேன். லீவ் எடுன்னா, நானே அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கப் போறேன்! என்னம்மோ ஸ்கூல் பிள்ளைக்கு அம்மா வந்து லீவ் கேக்கற மாதிரி இருக்கு நீ செய்யறது.” மீண்டும் இன்னொரு தலையணை பறந்து வந்தது.
இருவரும் தங்களது ரூமில் தான் இருந்தார்கள். தீபா நிலாவுடன் விளையாடியபடியே அவள் ரூமிலேயே தூங்கி விட்டாள். அடிக்கடி நிலா, தீபாவை அவளுடனே வைத்துக் கொள்வாள். ஆனாலும் இவர்கள் இருவரும் தான் அடுத்த ஸ்டெப்புக்கு போகாமல் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு தூங்கி விடுவார்கள்.
‘இந்த கிஸ்கார் நாயகன், லைசன்ஸ் கிடைச்சும் இப்படி பம்மிகிட்டு திரியறானே, என்னவா இருக்கும்? தொட்டு தொட்டுத் தான் பேசறான். பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப் பிடிச்சுக்குறான். ஆனா நெத்திய தவிர வேற இடமே இல்லாத மாதிரி அங்க மட்டும் தான் கிஸ் பண்ணுறான். என்னாச்சு இவனுக்கு? புரிஞ்சிக்கவே முடியலையே. நாம ஒரு ஸ்டேப் முன்னுக்கு எடுத்து வைக்கலாம்னு நினைச்சாலும், இந்த வெட்கம் வேலாயுதம் வந்து தடுக்குதே! அடப்போடா!’ கடுப்பில் மேலே பாய்ந்து பிராண்டாமல் அவனை விட்டு வைத்திருந்தாள் சித்ரா.
“ஹே, சிமி! ஸ்டாப் இட். இப்ப நீதானே ஜனகு லீவ் குடுக்க மாட்டான்னு மூக்கால அழுத. அதனால தான் ஹெல்ப் பண்ணேன். உதவி செஞ்சதுக்கு சுக்ரியா சொல்லாட்டியும், அடிக்காம இருக்கலாம்” பொய்யாய் முறைத்தான்.
“இப்ப எதுக்கு நமக்கு ஹனிமூன்? அங்க போயும் தூரமா தள்ளி படுத்துக்கிட்டு கைய மட்டும் புடிச்சிக்கிட்டு தூங்கவா? அதை இங்கயே செய்யலாம். காச வேஸ்ட் பண்ணாத” கடுப்பில் மனதில் உள்ளதை சொல்லிவிட்டாள் சித்ரா.
அவள் சொன்னதைக் கேட்டு கண்களில் பளபளப்பேற கட்டிலில் அமர்ந்திருந்தவன், எழுந்து அவள் அருகில் வந்தான். அசையாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் சித்ரா. அவள் முகத்தை தன் கைகளால் தாங்கியவன்,
“யாரோ ப்ரௌனிய லைக் மட்டும் தான் பண்ணுறேன், இன்னும் லவ் பண்ணலன்னு சொன்னாங்களே! அந்த யாரோ, யாருன்னு தெரியுமா சிமி?” கண்களை ஊடுறுவிப் பார்த்துக் கேட்டான்.
‘அது நானே, லைக் பண்ணறேன்னு சொன்னதும் நானே, லவ் பண்ணலேன்னு சொன்னதும் நானே, அது நானே’ மனதில் பாடியவள்,
“பிடிச்சிருக்கு தான். ஆனா இப்போ உனக்குத் தான் என்னை பிடிக்கலையோன்னு சந்தேகமா இருக்கு” குரலில் ஆதங்கம்.
அவளின் குரல், அவனை அசைத்துப் பார்த்தது. கையின் அழுத்தம் கூட அவளை நோக்கி குனிந்தவன், கன்னத்தில் அழுத்தமாக கடித்துவிட்டு கட்டிலின் மறு புறத்திற்கு ஓடி போய் நின்று கொண்டான். பத்ரகாளியான சிமி,
“டேய்! எதுக்குடா கடிச்ச? இப்பத்தானே ராணிம்மா செஞ்சு தந்த முறுக்கு மலாய் கெபாப் ஒரு வெட்டு வெட்டிட்டு வந்த.அது பத்தலையா? இன்னும் என்னை வேற எதுக்கு கடிக்கற?” வெகுண்டாள் அவள்.
கலகலவென சிரித்தவன்,
“சிமி அது முறுக்கு மலாய் கெபாப் இல்ல, முர்க் மலாய் கெபாப்” என கொதிக்கும் எண்ணெயில் அப்பளத்தைப் பொரித்தான்.
“இப்ப இந்த ஆராய்ச்சிதான் ரொம்ப முக்கியம். வலிக்குது ப்ரௌனி” கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்.
“ஹ்ம்ம், என்னை என்ன செய்ய சொல்லுற சிமி? இப்ப கடிக்க மட்டும் தான் முடியும், சுவைக்க இன்னும் நேரம் வரலையே!” பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
“இப்படி டபுள் மீனிங்ல பேசியே என்னை உசுப்பேத்தறது! இன்னிக்கு செத்தடா நீ” கட்டில் மேல் ஏறி அவன் புறம் ஓடினாள் அவனைப் பிடிக்க.
அதற்குள் இந்தப் புறம் வந்தவன்,
“சிமி, கட்டில் பாத்து. உடைஞ்சிற போகுது.” என சிரித்தான்.
“நீ என்ன சொன்னாலும் நான் பொறுத்துக்குவேன் ப்ரௌனி. என் வேய்ட்ட பத்தி பேசுனா மட்டும் பொங்கிருவேன். இன்னிக்கு உனக்கு சங்குதான்.” கட்டிலில் இருந்து இறங்கி பிரகாஷை துரத்தினாள். இருவரும் சின்னக் குழந்தைகள் போல் கட்டிலை சுற்றி ஓடினார்கள்.
மூச்சு வாங்க ஓட்டத்தை நிறுத்திய சித்ரா,
“கப்பூரு, என்னால ரொம்ப ஓட முடியாதுடா. தீபாவ கூட மணி தான் புடிச்சுட்டு வந்துக் குடுப்பான். பாரு எப்படி மூச்சு வாங்குது. இப்படியே மூச்சு நிக்கப் போகுது பாரு” அவள் சொல்லி வாய் மூடுவதற்குள், அருகில் வந்த பிரகாஷ் தன் கைகளால் அவள் வாயை மூடி இருந்தான். அவசரமாக அவன் வாயைப் பொத்தவும் தடுமாறிய சிமி அவனையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தாள்.
அருகருகே படுத்திருந்த இருவரும் அமைதியாகவே இருந்தனர். இருவரின் மூச்சு சத்தம் மட்டுமே அங்கு கேட்டது.
“சிமி!” மெல்ல அழைத்தான் பிரகாஷ்.
“ஹ்ம்ம்”
“இனிமே இப்படி பேசாதே சிமி. “
“எப்படி?”
“மூச்சு நின்னுரும், பேச்சு நின்னுரும் இப்படிலாம். என்னால தாங்கிக்க முடியாது சிமி. “ குரலில் நடுக்கம்.
“சரி இனிமே பேசல பிரகாஷ்”
இன்னும் அருகில் நகர்ந்து அவன் கைகளில் தலையை வைத்துக் கொண்டாள். மல்லாக்க படுத்திருந்த இருவரும் மேலே சுற்றும் காற்றாடியையே சிறிது நேரம் பார்த்திருந்தனர்.
“சிமி!” குழைவாக வந்தது குரல்.
“என்ன?” பதட்டத்தில் இவள் குரல்.
“இப்போ எதுக்கு இவ்வளவு நெர்வஸ்?”
“அது வந்து, ஒன்னும் இல்ல கப்பூரு”
“எல்லாமே இருக்கு சிமி. உனக்கு என்னைப் பிடிக்குது, இல்லைன்னு சொல்லல. ஆனா இந்தப் பிடித்தத்தினால மட்டும் நாம அடுத்தக் கட்டத்துக்குப் போக முடியாது. என் குரல் கொஞ்சம் மாறனதுக்கே நடுங்கற, இதுல ஒன்னும் பண்ண மாட்டிக்கிறேன்ன்னு என்னையே திட்டற.”
“ப்ரௌனி!”
“இரு நான் பேசி முடிச்சிருறேன். உன் பிரச்சனை என்ன தெரியுமா சிமி, நன்றி கடன உடனுக்குடன் தீர்த்துடனும்னு நீ நினைக்கறது தான். பிள்ளைங்க மேல நான் வச்சிருக்கற பாசத்துக்கு, உன்னையே குடுத்து கைமாறு செய்யத் துடிக்கற. ஆனா உன்னோட இந்த நிலைய பயன்படுத்தி குளிர் காஞ்சா என்னை மாதிரி சுயநலவாதி யாரும் இருக்கமாட்டாங்க சிமி. எனக்கு உன்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டு, கைய மட்டும் பிடிச்சுட்டு இருக்கறது எவ்வளவு கொடுமையா இருக்கு தெரியுமா? ஆனா ஏன் நான் பொறுத்துப் போறேன்? நாளைக்கு உன்னோட சிட்டுவேஷன பயன்படுத்தி நான் அட்வாண்டேஜ் எடுத்துட்டேன்னு நீ குற்றம் சுமத்தக் கூடாது. அதுக்குத்தான். நீ எனக்கு வேணும் சிமி. இந்த ப்ரௌனி மேல காதல் கொண்ட மனைவியா வேணும். கடமையுணர்ச்சியுள்ள சித்ரா பௌர்ணமியா வேணாம். சம்ஜே?”
அவன் கைகளில் படுத்தவாறே தலையாட்டியவள்,
அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“ஏய் சிமி! இப்பத்தானேடி படிச்சு படிச்சு சொன்னேன். என் பிரம்மச்சர்ய விரதத்தை முடிச்சு வைக்காம விடமாட்ட போல இருக்கே”
குலுங்கி குலுங்கி சிரித்தவள்,
“யாரு நீ பிரம்மச்சாரியா? எலி ஏரோப்ளேன் ஓட்டுச்சுன்னு கூட சொல்லு நான் நம்புவேன். நீ பிரம்மச்சாரின்னு மட்டும் சொல்லாதே, நம்பவே மாட்டேன். “ என்றவள் இன்னும் சிரித்தாள்.
“நானும் போனா போகுதுன்னு பார்த்தா, என்னை ரொம்பத்தான் கலாய்க்கற சிமி. இதுக்கு உனக்கு தண்டனை வேணாம்? இப்ப நான் குடுக்கற ஸ்பைடர்மேன் கிஸ்சுல நாளு நாளைக்கு இந்த வாய் பேசக்கூடாது.” என மிரட்டியவன், கொடுத்துவிட்டே அவளை விட்டான்.
அன்றிலிருந்து சித்ராவின் கைவளைவில் மகளும், பிரகாஷின் கைவளைவில் அம்மாவும் மகளும் என நெருங்கி இருந்தனர்.
ஹனிமூனுக்கு அவர்கள் புறப்படும் நாளும் வந்தது. இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக குடும்பத்துடன் ஹனிமூன் சென்றது பிரகாஷாக தான் இருக்கும். அந்த சிறிய குடும்பம் ஜோன் எப் கென்னடி இண்டேர்னேஷனல் ஏர்போர்டை அடைந்த போது அமெரிக்க நேரம் காலை மணி பத்து. நீண்ட தூர ப்ளைட் பயணத்தில் தீபாவை சமாளிக்க முடியாமல் குடும்பமே களைத்துப் போயிருந்தார்கள்.
ஏற்கனவே பிரகாஷ் கார் வாடகைக்கு பேசி இருந்ததால், இவர்களுக்காக விமான நிலையத்திலேயே கார் காத்திருந்தது. இமிகிரேஷன் பார்மாலிட்டிகளை எல்லாம் முடித்துக் கொண்டு அப்பாடா என காரில் ஏறி அமர்ந்தனர். எப்பொழுதும் போல் மணி பிரகாஷின் பக்கம் அமர பெண்கள் மூவரும் பின்னால் அமர்ந்தனர். கார் ஏசி பட்டவுடனேயே தீபா கண் அயர்ந்து விட்டாள்.
“ஜீஜூ எப்படி இங்க கார் ஓட்டறீங்க?” அதிசயமாக கேட்டான் மணி.
“என் கிட்ட இண்டேர்னெஷனல் லைசென்ஸ் இருக்கு மணி”
“அது இல்ல ஜீஜூ. நம்ம நாட்டுல ட்ரைவர் ரைட் சைட்ல உட்கார்ந்திருப்பாங்க. இங்கெ லெப்ட்ல இருக்கே.” அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
“நம்ம நாட்டுல லெப்ட் சைட்ல ட்ரைவ் பண்ணனும். அதனால ட்ரைவர் சீட் ரைட்ல இருக்கும். இங்கல்லாம்  தலைகீழ். அவ்வளவுதான் வித்தியாசம். ட்ரைவிங் கத்துகிட்டனா இதெல்லாம் ஈசியா வரும். “
“ஆவ்சம் ஜீஜூ. உங்களுக்கு எல்லாமே தெரியுது”
“ஹ்கும். ஆரம்பிச்சிட்டீயா உன் ஜீஜூ ஜபத்த! அக்கா கூட இப்படி மாம்ஸ் பின்னால சுத்தல” தம்பியை வாரினாள் நிலா.
“எங்க ஜீஜூவ நான் புகழ்ந்தா உனக்கு எங்கடி வலிக்கிது? இதுக்கு தான் இவள கூட்டிட்டு வந்துருக்க கூடாது ஜீஜூ. இம்சை” புகார் வாசித்தான் மணி.
“விடு மணி. நாம க்ளோசா இருக்கறதுல நிலா மேடத்துக்கு பொறாமை.” பிரகாஷ் வம்பிழுத்தான் நிலாவை.
“ஆமா, ரொம்ப பொறாமை. பொறாமை பட வேண்டியவ திறந்த வாய் மூடாம வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு வரா.” சத்தமாக சொன்னவள்,
பின் முணுமுணுப்பாக,
“நீங்க ரெண்டு பேர் மட்டும் வர வேண்டியது தானே. எதுக்கு நாங்க இடைஞ்சலா? உனக்கு அறிவே இல்லைக்கா” நூறாவது முறையாக தன் அக்காவைத் திட்டினாள்.
“உங்க மூனு பேரையும் அங்க விட்டுட்டு என்ன செய்யறீங்க, சாப்பிடீங்களா இல்லையா இப்படி மண்டைய போட்டு குழப்பி ஹனிமூன, சனிமூன மாத்துறதுக்கு பதிலா நீங்க கூடவே இருந்தா எனக்கு நிம்மதியா இருக்கும் நிலா. இதுக்கு மேல பேசுன, வாயிலயே போட்டுருவேன்” கண்டித்தாள் சித்ரா.
“இனி நிலா மேடம் ஏன் பேச போறாங்க! நம்ம கிட்டலாம் பேச அவங்களுக்கு இனி டைம் ஏது?” பூடகமாக சொன்னான் பிரகாஷ்.
மூன்று பேருமே அவனை ஒரு மாதிரி பார்க்கவும்,
“இப்ப சாப்பிட போக போறோம். சாப்பிடும் போது பேச முடியாதுல, அதை சொன்னேன்” என சிரித்தான்.
காரைப் பார்க் செய்தவன், குனிந்து சித்ராவிடம் இருந்த தீபாவைத் தூக்கிக் கொண்டான். நிலாவும், மணியும் முன்னே நடக்க சித்ராவுடன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இணைந்து வந்தான் பிரகாஷ்.
“பசிக்குதுன்னா சொல்ல மாட்டியா சிமி? நானே முகத்தப் பார்த்து கண்டுபிடிக்கனுமா?” மென்மையாக கடிந்துக் கொண்டான். இவ்வளவு சத்தத்திலும் பிரகாஷின் தோளில் இருந்த தீபா சுகமாக தூங்கிக் கொண்டே வந்தாள்.
‘தாக்கோ பெல்’ (taco bell) என்ற துரித உணவகத்துக்குத் தான் அழைத்து வந்திருந்தான் இவர்களை.
“நாம தங்க போற ஹோட்டல நல்ல இந்தியன் சாப்பாடு கிடைக்கும். அது வரைக்கும் நீ பசியா இருக்க வேணாம்னு தான் இங்க வந்தேன். மோஸ்ட்லி இங்க தாக்கோஸ் பன்றி, மாட்டு இறைச்சில தான் இருக்கும். நான் சிக்கன் கேட்டு வாங்கி தரேன்.”
உள்ளே ஐவர் அமரக்கூடிய இடம் தேடி அமர்ந்தார்கள்.
“தீபாவ இங்க குடுங்க. நீங்க போய் ஆர்டர் செய்ங்க” என மகளை வாங்கிக் கொண்டாள். தனியாக இருக்கும் போது வாடா, போடா என்றாலும் தம்பி தங்கை முன் மரியாதையாகவே விளிப்பாள் சித்ரா.
கைமாறியதும் விழித்துக் கொண்டாள் தீபா. கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றிலும் பார்த்தவள், ஏக குஷியாகி விட்டாள். அந்தக் கடையின் அமைப்பு, வித்தியாசமான மேசை நாற்காலிகள், லைட்டிங் என பார்க்கவும் சித்ராவின் மடியில் இருந்து இறங்கி கொண்டாள். பிரகாஷ் பின்னாலேயே ஓடியவள், அவனுக்கும் மணிக்கும் நடுவில் போய் நின்றவாறே அவன் காலை சுரண்டினாள்.
“தீபா குட்டி எழுந்துட்டீங்களா?” என அவளைத் தூக்கிக் கொண்டான் பிரகாஷ். மெனுவில் தெரிந்த எல்லாவற்றையும் கேட்டாள் தீபா. அவளின் ஆர்ப்பாட்டத்தை ரசித்த விற்பனை பெண், பலூன் ஒன்றை தீபாவின் கையில் நீட்டினாள். வெட்கத்துடன் வாங்கிக் கொண்டவள்,
“தேங்க் யூ!” என சொன்னாள்.
பலூனுடன் சுற்றி சுற்றி ஓடிய தீபாவை வைத்துக் கொண்டு எப்படியோ சாப்பிட்டு வெளியேறினார்கள் அவர்கள். அந்த இடத்தை விட்டு வர மாட்டேன் என ஒரே அழுகை வேறு. சித்ராவுக்கு கோபம் கரை கடப்பதை உணர்ந்த பிரகாஷ், அவள் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.
“எதுக்கு டென்ஷன் சிமி? இந்த ட்ரிப்ல நீ ரிலேக்‌ஷா தான் இருக்கனும். நோ கோபம் நோ தாபம். அட, தப்பா சொல்லிட்டேன். நோ ஃபோர் கோபம், யெஸ் ஃபோர் தாபம்.” கண்களால் சிரித்தான்.    
அவன் சொன்ன விதத்தில் அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது. நல்ல மனநிலையுடனே ஹோட்டலை அடைந்தார்கள். நிலாவும், மணியும் தங்க ஒரு அறையும், இவர்கள் மூவருக்கும் ஒரு அறையும் எடுத்திருந்தான் பிரகாஷ். இரு அறைகளும் பக்கம் பக்கமாக இருந்தது. அருகில் நெருங்கியவுடன்,
“மணி, எங்க ரூம்ல வந்து ரிப்ரெஷ் ஆகிக்க. உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” என நிலாவை மட்டும் அறைக்குள் செல்லும் படி சைகை காட்டிவிட்டு மணியை தோளோடு அணைத்து தள்ளிக் கொண்டு போனான் பிரகாஷ்.
“மணி, இந்த ஊருல கால்பந்தாட்டத்தை பூட்பால்னு சொல்லாம சோக்கர்னு சொல்லுவாங்க தெரியுமா?” என பேசியபடியே நடந்த அவர்களை தேறாத கேஸ் என்பது போல் பார்த்தாள் நிலா.
“ஹனிமூன் வந்து மச்சானை கட்டிப்பிடிச்சுட்டு போறாரு இந்த மாம்ஸ். நல்லா விளங்கிரும்” முனகியபடியே ரூமின் உள் நுழைந்து கதவை தாளிட்டாள்.
திடீரென பின்னாலிருந்து இரு வலிய கரங்கள் அவளை இழுத்து அணைக்கவும் பயத்தில் கத்த முற்பட்டவள், பின் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள். அந்த உருவம் முன்னேறி அவள் கழுத்து வளைவில் இளைப்பாறவும்,
“பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பாவம் பொழைச்சு போகட்டும்னு கட்டிப் பிடிக்க விட்டேன். அதுக்குன்னு மூஞ்சிய வைச்சி முதுகு சொரியற வேலைலாம் வச்சிக்காதே. ஒழுங்கா முன்னாலே வா”
“எப்படிடி நான் தான்னு கண்டு பிடிச்சே?”
“இது என்ன எய்ட்ஸ்க்கு மருந்தா, ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிக்க? சின்ன புள்ளைல இருந்து உன் வால புடிச்சுட்டு சுத்தறனே, உன் வாசம் எனக்கு தெரியாதா?”
“வைசி! ஐ மிஸ்ட் யூ சோ மச்” இன்னும் இறுக அணைத்துக் கொண்டான்.
“டேய், விடுடா!” அவனைத் தன்னிடம் இருந்துப் பிரித்தவள் , பேக்கை கட்டில் ஓரம் வைத்து விட்டு தொப்பென கட்டிலில் அமர்ந்தாள். அவளையே பார்வையில் நிறைத்தபடி நின்றிருந்த சிவாவை நோக்கியவள்,
“எங்க மாம்ஸ எப்படிடா கவுத்த?” என கேட்டாள்.
“ஒரு ஆம்பள மனசு இன்னொரு ஆம்பளைக்குத் தான் தெரியும்”
“இப்படி பாடாவதி டைலோக் விடாம ,நான் கொலைகாரியா மாறறதுக்குள்ள சொல்லிரு”
கட்டிலில் வந்து அவளை நெருங்கி அமர்ந்துக் கொண்டான். அவள் வேண்டுமென்றே தள்ளி சென்றாள். மீண்டும் நெருங்கினான். இவள் மறுபடியும் தள்ளிப் போனாள். இப்படியே கட்டிலின் மூலை வரை சென்றார்கள்.
“இனிமே நகர்ந்தா நான் கீழ தான் விழனும். ஒழுங்கு மரியாதையா போய் அந்த நாற்காலில உட்காரு” எரிந்து விழுந்தாள்.
மறுக்காமல் நாற்காலியை தள்ளி வந்து அவள் முன்னே உட்கார்ந்தவன்,
“ஏன் வைசி, இப்ப வரைக்கும் சிவுன்னு கூப்பிடவே இல்லை?” ஏக்கமாக கேட்டான்.
“அப்படி கூப்பிட்டா மட்டும் என்ன நடந்துற போகுது? மறுபடியும் உங்கக்கா பேச்ச கேட்டு என்னை விட்டுட்டு தான் போகப் போற” கடுப்பாக சொன்னாள்.
அமைதியாகவே அவளைப் பார்த்திருந்தவனை,
“லுக் விடறத நிறுத்திட்டு மேட்டருக்கு வா” என்றாள்.
“சித்ரா கல்யாணத்தப் பற்றி அக்கா சொன்னப்பவே பிரகாஷ்க்கு போன் போட்டு பேசுனேன். என்னதான் பாலன் மாமா அவர் நல்லவர்னு சொன்னாலும், உன்னோட அக்கா வாழ போற மனுஷன பற்றி நான் தெரிஞ்சிக்கனும்ல. நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா நீ தானே அவ கூட சேர்ந்து கண்ண கசக்கிட்டு நிப்ப அத என்னால எப்படி தாங்க முடியும் வைசி?” அவன் கண்களில் தெரிந்த நேசத்தில், பட்டென தன் விழியைத் தாழ்த்திக் கொண்டாள் நிலா.
“ஸ்டார்ட்டிங்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா உன் கிட்ட பினிஸிங் சரி இல்லையே”
“அப்படி நீ நினைச்சுகிட்டா நான் என்னடா செய்யறது? மனசு விட்டுப் பேசனோம் நாங்க ரெண்டு பேரும். எல்லாத்தையும் என் கிட்ட சொன்னாரு.”
“எல்லாத்தையும்னா?”
“அது அவரே சொல்லற வரைக்கும் என்னால வெளிய சொல்ல முடியாது வைசி”
“அப்போ நம்ம விஷயத்தை பற்றியும் சொன்னேன். அதுக்கு அவர், நிலா எங்களோட முதல் மக. அவளுக்கே உன்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்கு கன்பர்மா தெரிஞ்சா தான் உதவி செய்ய முடியும். அவ கண் கலங்கனா சித்ரா தாங்க மாட்டான்னு சொல்லிட்டாரு. அப்புறம் கொஞ்ச நாளா உன்னை வாட்ச் பண்ணிருப்பாரு போல, நீ வெளிய சிரிச்சாலும், கண்ணுல அது எட்டலனு என் கிட்ட சொல்லி வருத்தப் பட்டாரு. உன்னைப் பார்க்கனும்னு சொன்னேன். அதுக்கு தான் இந்த ட்ரீப்”
“அப்போ, நீங்க ரெண்டு பேரும் இத்தனை நாளா காண்டேக்ட்ல தான் இருந்திருக்கீங்க?”
தலையை ஆம் என ஆட்டினான்.
“சரி, இப்ப எதுக்கு இந்த சந்திப்பு? இதனால நீ என்னத்த சாதிக்கப் போற?” அவனை உற்று நோக்கியவாறே கேட்டாள் நிலா.
கண்ணாடியைக் கலட்டி துடைத்து மறுபடியும் மாட்டியவன்,
“இனி என்னால உன்னை விட்டு இருக்க முடியாது வைசி. எனக்கு நீ வேணும்” உறுதியாக சொன்னான்.
“அக்காவ உட்பீன்னு சொல்லிட்டு திரிஞ்சவன், இப்போ நான் தான் வேணும்னு சொல்லுறத கேட்க வேடிக்கையா இருக்கு” வேண்டுமென்றே தன் மனக் காயங்கள் ஆற அவனைக் காயப்படுத்தினாள் நிலா.
கண்களை மூடித் திறந்தவன்,
“வைகாசி நிலா! நீ ஒரு ஹிப்போக்ரீட் தெரியுமா?”
“யாரு நானா? நானா?”
“ஆமா நீதான். ப்ரேமம் படத்துல அக்காவ சைட் அடிச்சிட்டு அந்த நிவின் தங்கச்சிய கல்யாணம் பண்ணப்ப மட்டும், மை நிவின், மை நிவின்னு ஜொள்ளு விட்ட. இப்ப அதுவே நான் செஞ்சப்போ உனக்கு கோபம் வருதா? இத்தனைக்கும் நான் சித்துவ லவ் கூட பண்ணல. நான் மட்டும் உன் செல்லாக்குட்டி நிவின்கு எந்த வகையிலடி குறைஞ்சு போயிட்டேன்?”
‘இவன கூட்டிட்டு போய் அந்தப் படத்த பார்த்திருக்க கூடாதோ! நான் நிவின் பாலிய டாவடிச்சத பயபுள்ள இன்னும் மனசுல வச்சிருக்கே’
“அது வெறும் படம். இது நம்மோட வாழ்க்கை. அதோட நான் யார சைட்டடிச்சாலும் உனக்கு என்ன பிரச்சனை?”
“நம்மோட வாழ்க்கைன்னு சொல்லற இல்ல, அது தான் பிரச்சனை. என்னோட வாழ்க்கைன்னு சொல்லாம நம்மோட வாழ்க்கைன்னு சொல்லுறப்பவே தெரியலையா வைசி, நீ வேற நான் வேற இல்லைன்னு. ஏன்டி, பிரச்சனைலாம் முடிஞ்சு நான் ஆசையா வரப்போ இப்படி முகத்த திருப்பற?” கண்கள் கலங்கியது அவனுக்கு. பொறுக்குமா நிலாவுக்கு, எழுந்து அவன் மடியில் அமர்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.
“என் வீக்னஸ் எங்கன்னு தெரிஞ்சு, அதுலயே என்னை அடிச்சு சாய்க்கறடா சிவு.”
சிவு எனும் மந்திர சொல்லைக் கேட்கவும், இன்னும் அவளை தனக்குள் புதைத்துக் கொண்டான் சிவா. அணைத்தவாறே இருவரும் அப்படியே அமர்ந்திருந்தனர்.
“எனக்கு தெரியும் உன் மனசுல நான் தான் இருக்கேன்னு. ஆனா உன் மண்டைக்குத்தான் புரியவே இல்ல. அக்காவ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லுறப்பலாம் எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? உன்னை அப்படியே கழுத்த நெரிச்சுக் கொல்லனும் மாதிரி வரும். வாய்ல மட்டும் அப்படி சொல்லிட்டு, என்னை அப்படியே இந்த நாலு கண்ணும் ஆசையா பார்க்கும். உன் கண்ண நம்பறதா இல்ல வாய நம்பறதான்னு சாலமன் பாப்பையா கிட்ட பட்டிமன்றமா வைக்க சொல்ல முடியும்? என்னை பாடாப்படுத்திட்டடா. இதுல உங்கக்கா வேற. என்னையும் மாதியையும் கம்பேர் பண்ணிக்கிட்டு. சித்ராவுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா சத்தியமா உன் பக்கமே நான் வந்துருக்க மாட்டேன்டா. நான் மாதி மாதிரி இல்ல. நீ நம்புறியா?”
“உன்னை நம்பாம யாரை நான் நம்புவேன் வைசி! மாதி வேற, நீங்க மூனு பேரும் வேற. கூட வளர்ந்த எனக்கு தெரியாதா?”
“உங்கக்காவ எப்படி சமாளிக்கப் போற சிவு? அவங்களுக்கு என்னை கண்டால டப்பா டாண்ஸ் ஆடுமே!”
“அதெல்லாம் ஒரு ஐடியா வச்சிருக்கேன்” ஒரு மாதிரியாக சிரித்தான்.
சந்தேகமாக அவனைப் பார்த்தவள்,
“என்ன ஐடியா?”
“இப்போவே நாம வேலைய ஸ்டார்ட் பண்ணோம்னா, மூக்கும் முழியுமா இருக்கற நீ வாயும் வயிறுமா ஆயிடுவ. அப்புறம் படீர்னு அக்கா காலுல விழுந்தரலாம். நீ விழ வேணாம். வயிறு இடிக்கும். நான் மட்டும் விழறேன். எப்படி ஐடியா?” என்றவன் வேலையை ஆரம்பிப்பது போல முகம் முழுக்க முத்தக் காவியத்தை எழுத ஆரம்பித்தான். அவளிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லாததால் நன்றாக அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன், விழுந்து விழந்து சிரிக்க ஆரம்பித்தான்.
“அட லூசு பாப்பா! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி. என் வைசிய நானே அப்படி அவமானப்படுத்துவேனா?” கொஞ்சிக் கொண்டான்.
அவள் முகம் இன்னும் தெளியாததைப் பார்த்தவன்,
“அவங்க என் மேல உயிரையே வச்சிருக்காங்க வைசி. எனக்கு அவங்க ஒரு கண்ணுன்னா நீ இன்னோன்னு. அது அவங்களுக்கும் புரியுது. ஆனா பிடிவாதம். எப்படியும் என் சந்தோசத்துக்காக விட்டுக் குடுப்பாங்க. நீயும் என் சந்தோஷத்துக்காக அக்காவ அட்ஜஸ்ட் பண்ணி போகனும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும். செய்வியா?”
சரி என தலையாட்டினாள். பின் மெதுவாக,
“சிவு, அக்காவுக்கு கல்யாணம் ஆகலைன்னா என்னை தேடி வந்துருக்க மாட்டதானே?” என கேட்டாள்.
“சத்தியமா வந்துருப்பேன் வைசி. என்னால சித்துவ உன்னோட அக்காவா மட்டும் தான் பார்க்க முடிஞ்சது. என்னோட மனைவியா இல்ல. அக்கா கல்யாண ஏற்பாட செஞ்சிருந்தாங்கன்னா கண்டிப்பா நான் நிறுத்திருப்பேன். சித்ரா பண்ண தியாகத்துக்கு அவ மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கறது உண்மை. ஆனா அது சத்தியமா காதல் இல்ல. எப்பவுமே சித்து எதுக்காகவும் என்னை தேடனது இல்ல. என்னை சுத்தி சுத்தி வந்தது நீ மட்டும்தான். உனக்கு எல்லாத்துக்கும் நான் தேவை வைசி. நான் இல்லாம நீ இயங்க மாட்ட. என்னைக் கேக்காம, மேடம் பெரிய முடிவு எடுத்தீங்களே, என்ன ஆச்சு?”
தலையை குனிந்து கொண்டாள் நிலா.
“பிரகாஷ் மட்டும் இல்லைன்னா என்ன ஆகிருக்கும்? இனிமே என் கிட்ட டிஸ்கஸ் பண்ணாம ஏதாச்சும் முடிவெடு, அப்புறம் தெரியும் இந்த சிவா யாருன்னு” கடிந்துக் கொண்டான்.
“அந்தப் பணத்த பிரகாஷ்கு கொஞ்சம் கொஞ்சமா திருப்பி குடுத்தறலாம். என்னதான் அவர் உனக்கு மாமான்னாலும், என்னைத் தாண்டி அவர். புரியுதா வைசி?”
“ஹ்ம்ம். ஆனா அக்கா தான் எனக்கு முதல்ல, அப்புறம் தான் நீ. உனக்கு புரியுதா?”
“சரிடி, சரி! அது எனக்கு நல்லாவே புரியும், அப்பவும் சரி இப்பவும் சரி சித்ராதான் உனக்கு முதல்ல. இங்க காண்ட்ரேக்ட் முடிச்ச பிறகு தான் என்னால இந்தியாவுக்கு வர முடியும். அதுக்கு அப்புறம் கல்யாணத்த வச்சிக்கலாம். வர காசுல, உனக்கு டான்ஸ் அகடேமியும், எனக்கு பேக்கரியும் திறக்கலாம். இப்போ உன்னைப் பார்க்கனும்னு சொன்னது, நமக்குள்ள மிஸண்டேர்ஸ்டேண்டிங்க கிளியர் பண்ணிக்கத்தான். இனி நிம்மதியா இரு. நானும் மன சஞ்சலம் இல்லாம நிம்மதியா என் வேலைய பார்ப்பேன்”
“ஹ்ம்ம் சரி. காக்க வச்சி கழுத்த அறுத்தற மாட்டியே சிவு?” இன்னும் பயம் தெளியாமல் பாவமாக கேட்டாள் நிலா.
அவளை ஆழ்ந்து நோக்கியவன், தன் கழுத்தில் போட்டிருந்த சிவா எனும் பெண்டென்ட் வைத்த சங்கிலியைக் கழற்றி அவளுக்கு அணிவித்தான்.
“இந்த செகண்ட்ல இருந்து நீ என் பொண்டாட்டி. இனி நம்புவியா?
சங்கிலியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், ஆவேசமாக அவன் உதட்டை முற்றுகையிட்டாள்.
“மெதுவாடி! எல்லாத்துலயும் உனக்கு வேகம் தான் வைசி” அவள் வேகத்தில் இவன் உருகிப் போனான்.
மறுநாள் வருவதாக அவன் திரும்பி செல்லும் போது, கண்ணீரும் சிரிப்பும் போட்டி போட அவனை அனுப்பி வைத்தாள் நிலா. வெளியே சென்று வரும் போதே தூங்கியபடி வந்த தீபாவை பிடுங்கிக் கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள் நிலா.
ஒரு மயக்க நிலையிலேயே பிரகாஷும் சித்ராவும் குளித்து உடை மாற்றி படுத்துக் கொண்டார்கள். எப்பொழுதும் போல் நெருங்கி படுத்துக் கொண்டாலும், இருவரும் மௌனமாகவே இருந்தனர். ஏற்கனவே களைப்பாக இருந்த சித்ரா, படுத்த கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டாள்.
நடு இரவில், மிதப்பது போல இருக்கவும் பட்டென கண்ணைத் திறந்த சித்ரா,
“ப்ரௌனி என்ன பண்ணுற?” என அதிர்ச்சியாக கேட்டாள்.
(தொடர்ந்து உன்னோடுதான்)

comments

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!