UVVU36

UVVU36

உயிர் விடும்வரை உன்னோடுதான்
அத்தியாயம் 36
“இப்படி பொசுக்கு பொசுக்குனு கிஸ் குடுத்தா நான் எப்படி சண்டை போடறது ப்ரௌனி?” மூச்சு வாங்க முறைத்தவாறே கேட்டாள் சித்ரா.
“சண்டை போடனும்னு நினைக்கறவங்க எப்படி வேணும்னாலும் போடலாம். என் கிஸ் என்ன பாவம் பண்ணுச்சு? அது மேல பழியைத் தூக்கிப் போடுற!’ மீண்டும் நெருங்கியவனை தள்ளி விட்டவள், தலையணைகளை இருவருக்கும் நடுவில் பாலமாக அடுக்கினாள்.
“தோ பாரு ப்ரௌனி! இந்த பார்டர தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது. பேச்சு பேச்சாதான் இருக்கனும். பீ கேர்பூல்” மிரட்டினாள்.
“நான் வர மாட்டேன். நீயா வருவ சிமி!”
“எந்திரன்ல நடிக்கிறாங்க எமி, கோட்ட தாண்டி வர மாட்டா இந்த சிமி”
“எவ்வளவு வித விதமா கொடுத்தாலும் இந்த வாய் மட்டும் அடங்க மாட்டுது” ஆசையாக அவளது இதழ்களை நோக்கினான்.
“அப்படி பார்க்காதே ஹே ! மே டர் ஆத்தி ஹே!”
“விட்ரு சிமி! உலகத்துலயே அதிகமா பேசப்படற மொழியில நான்காவது இடத்துல இருக்கற எங்க ஹிந்திய இப்படி கொலையா கொல்லுறியே, இது அடுக்குமா?”
“இப்ப வேணும்னா அதிகமா உங்க மொழிய மக்கள் பேசலாம். ஆனா ஆதியில அதாவது 300 பி.சி(bc)க்கு முன்னே கண்டுபிடிக்கப்பட்ட மொழி எங்க மொழி தமிழ் தான். யாருகிட்ட!” தமிழ் வாத்தியார் மகள் சிலிர்த்துக் கொண்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க ஊரு சப்பாத்தி ருசியா, உங்க ஊரு தோசை ருசியான்னு சண்டை திசை மாறறதுக்குள்ள நம்ம மேட்டருக்கு வருவோமா?”
“என்ன மேட்டரு?”
“நித்திரா தேவிய கட்டிப் பிடிக்கப் போன என்னை, தலைகாணியால அடிச்சு ரிடர்ன் கூட்டிட்டு வந்தயே, எதுக்கு சிமி?”
“என்னைத் தவிர வேற யாரையும் நீ கட்டிக்கறது பிடிக்கல ப்ரௌனி. அதுக்குத்தான்!” சிரித்தாள்.
“அப்ப சரி, வா கட்டிக்கலாம்”
“இப்ப பேசி முடிக்கலாம்! அதுக்கப்புறம் உன்னைக் கட்டிகறதா இல்ல வெட்டிக்கறதான்றத பார்க்கலாம். எதுக்கு ஜோனை நமக்குள்ள அடிக்கடி இழுத்த? அப்போ எனக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு தெரியுமா?” அதை நினைத்து இப்பொழுது கூட பல்லைக் கடித்தாள் சித்ரா.
“உன்னை எதுக்கு ஜோனுக்கு கீழ வேலைக்கு சேர்க்க வச்சேன் தெரியுமா? அவனோட வோர்க்கிங் ஸ்டைல் தெரியும் எனக்கு. சேல்ஸ், தார்கேட் அப்படின்னு உன்னை வேறு எதுவும் நினைக்க விடாம செஞ்சிருவான்னு தெரியும். வேலைல முழு கவனமும் போகவும் தானே சீக்கிரமா உன்னோட இழப்புல இருந்து மீண்டு வந்த சிமி! ஆனா அவனுக்கு நம்மை பற்றி எதுவும் தெரியாது. நான் காய் நகர்த்துனது எல்லாம் அவனோட பாஸ் வழியா தான்.”
“அதுக்குன்னு அவன் பேர வச்சே என்னை மிரட்டுவியா நீ?”
“இல்லன்னா நான் சொன்னத நீ அப்படியே கேட்டுருவியா? ஃபர்ஸ்ட் மீட்லயே சார் சார்னு கூப்பிட்டு என்னை பத்தடி தள்ளி வச்ச. பேர் சொல்லி கூப்புடுன்னு சொன்னா, அந்த பிகு பண்ணுற. அதனால உன் கிட்ட காரியம் சாதிக்க அவனைப் பயன்படுத்திக்க வேண்டியதா போச்சு. நீ நெருங்கி வந்தா தானே சிமி, என்னால அடுத்த ஸ்டெப்புக்கு போக முடியும்! அவன் கிட்ட போட்டுக் குடுத்ததுக்கப்புறம்  கூப்பிட்ட பாரு பிரகாஷ், பிரகாஷ்னு மொத்தம் நாலு தடவை. அப்படியே சிலிர்த்துப் போயிட்டேன்” கண்ணடித்தான் அவளைப் பார்த்து.
“எத்தனை தடவை கூப்பிட்டேன்னு எல்லாம் கணக்குப் பண்ணி வச்சிருக்கியா நீ?”
“உன்னை கணக்குப் பண்ண துடிச்சுட்டு இருந்த எனக்கு அதெல்லாம் பெரிய கணக்காவே தெரியல சிமி” 
“ஓவரா பண்ணாதே ப்ரௌனி. சரி, நான் தான் தெரியாம இங்லீஸ்ல பேசனேன். நீ ஏன் தமிழ் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல?”
“நீ ப்ரோபெஷனலா இருக்கட்டும்னு ஆங்கிலத்துல பேசறப்ப நான் மட்டும் எப்படி தமிழ்ல பேசறது? எனக்கு தமிழ் தெரியும்னு சொல்லத்தான் இருந்தேன். அதுக்குள்ள என்னை கிராதகான்னு சொல்லவும், சரி இந்த வாய் எந்த அளவுக்குப் போகுதுன்னு பார்க்கலாம்னு ஒரு ஆசை”
அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தவள்,
“கேட்டுருச்சா?”
“கேட்காம இருக்குமா? உன் விஷயத்துல காதை மட்டும் இல்ல மனசயும் திறந்து வச்சிட்டே காத்திருக்கற எனக்கு, உன்னோட ஒவ்வொரு அசைவும் மனசுக்குள்ள பதிஞ்சு போயிரும். அன்னைக்கு நான் தீபீய பார்க்க கிளம்பிட்டு இருக்கேன். அதனால தான் உன்னை வீட்டுக்கு வர வச்சேன். நீ வேர்த்து விறுவிறுக்க வந்தது மனசு கேட்கல. அதோட அருகில பார்த்ததும் உன்னை சீக்கிரம் விடவும் முடியல. அதான் ப்ளைட் மிஸ் பண்ணுற சான்ஸ் இருந்தும் நானே உன்னை ட்ராப் பண்ணேன். என் பக்கத்துல நீ உட்கார்ந்துட்டு வரதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா சிமி? அதுக்கும் வச்சப் பாரு ஆப்பு!” செல்லமாக முறைத்தான் அவளை.
“அது வந்து, என் மேல எந்த தப்பும் இல்ல. நீ தமிழ் கமிங்னு சொல்லிருந்தா நான் ஏன் அப்படி பேசப்போறேன்” பழியை அவன் மீதே தூக்கிப் போட்டாள்.
“சொல்லாம விடவும் தானே உன் மனசுல இருந்தது தெரிய வந்தது. கேணை கிறுக்கன்னு சொன்னது கூட பரவாயில்ல. ஆனா என்னைப் பார்த்தா வாந்தி கமிங்னு சொன்னத தான் என்னால தாங்கிக்கவே முடியல. அவ்வளவு கேவலமாவா நான் இருக்கேன் சிமி?” மனம் தாளாமல் கேட்டான். தலையணை பார்டரைக் கடந்து அவன் அருகில் சென்றவள், அவன் தாடையைப் பற்றி கொஞ்சினாள்.
“சேச்சே! அப்படிலாம் இல்ல ப்ரௌனி. நீ எவ்வளவு அழகு தெரியுமா! அப்போ கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலருன்னு சுத்திட்டு இருந்தேன். ஆனா இப்போ வெள்ளையும் ப்ரௌனும்  தவிர வேற எந்த கலரும் பிடிக்கறது இல்ல தெரியுமா. வானவில் வந்தா கூட கண்ணை இருக்கமா மூடிக்கிறேன், அதுல உன் கலர் இல்லன்னு.”
“ஆஹான்!”
“நெஜமா ப்ரௌனி! இப்பல்லாம் சாப்பாட்டுல கூட எனக்குப் பிடிச்சது இட்லிதான். அது தான் உன்னை மாதிரியே வெள்ளையா இருக்கு. சட்னில கூட தேங்காய் சட்னி தான் பிடிக்குது.”
“எங்கடா நம்ம பேச்சுல சாப்பாடு இன்னும் வரலியேன்னு பார்த்தேன். அன்னைக்கு இந்தியன் ரெஸ்டாரண்ட்ல ராகி இட்லி அடிச்சு விட்டயே, அது வெள்ளையாவா இருந்தது?”” சிரித்தவாறே அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“அது வந்து, உன் முடி மாதிரியே ப்ரௌனா இருந்ததா அதான் ட்ரை பண்ணேன். சரி பேச்சை மாத்தாம கதைய கண்டினியூ பண்ணு”
“அன்னைக்கு உனக்காக வேலைய விட்டுட்டு ட்ரைவர் வேலை பார்த்தா, என்னை நீ திரும்பி கூட பார்க்கல. போன்ல யாருன்னு கேட்டா, ஆபிஸ்ல இருந்துன்னு பொய் வேற. ஆபிஸ்ல உள்ளவங்களுக்கு தான் ஐ லவ் யூ சொல்வாங்களா? அந்த கடுப்புல தான் வாந்தி எடுக்க ரெடியா இருன்னு தமிழ்ல சொல்லிட்டுப் போனேன். நான் சொன்னதுக்கு அர்த்தமே வேறடா! இன்னவரைக்கும் உனக்கு புரிஞ்சிச்சா இல்லையான்னு கூட எனக்குத் தெரியல” நமட்டு சிரிப்புடன் சொன்னான்.
“ஆமா நாம ரெண்டு பேரும் தீயா செய்ற வேலைக்கு வாந்தி ஒன்னுதான் குறைச்சல்” பழிப்பு காட்டினாள்.
“ஏய்! நானாடி தீயா வேலை செய்ய மாட்டேன்னு சொன்னேன்? நீதானே பேச்சு பேச்சோட இருக்கட்டும்னு சொன்ன! பாப்ரே! பொண்ணுங்க வாயில பேசறது ஒன்னு, மனசுல எதிர்பார்க்கிறது இன்னொன்னு. பசங்க இதப் புரிஞ்சுக்கறதுகுள்ள தாத்தா ஆகிருறாங்க. ஆனா நாங்க அப்படி இல்ல சொன்னத தான் செய்வோம், செய்யறத தான் சொல்வோம்”
“நீதான் ஆண் குலத்துக்கே அம்பாசிடர்(ambassador) மாதிரி பீலா விடாதே ப்ரௌனி. மீதிய சொல்லு” பார்டரை எல்லாம் மறந்து, அவன் கை வளைவில் சுகமாக சாய்ந்துக் கொண்டே கேட்டாள் சித்ரா.
“தீபீ இருக்கற இடத்துக்கு வந்த பின்னும் உன் ஞாபகமாவே இருந்துச்சு. சரி, வேலைய சாக்கு வச்சு உன் குரல கேட்கலாம்னு போன் பண்ணேன். நம்ம தீபா எடுத்தா”
“அட! அவ என் கிட்ட சொல்லவே இல்லையே”
“விளையாட்டா மறந்துருப்பா. நீங்க ரெண்டு பேரும் பேசி சிரிக்கறத தூரத்துல இருந்து கேட்டுருக்கேன் சிமி. நேரடியா அவ பேசவும் எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு. அதுவும் சித்தா பொணமி போன் இதுன்னு சொன்னதும் எனக்கு அப்படி ஒரு சிரிப்பு. கஸ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன். அப்புறம் நீ எங்கன்னு கேட்டப்ப அம்மா பாத்ரூம் போயிருக்காங்கன்னு சொன்னா. அம்மான்னு சொல்லவும் எனக்கு ஒரு பரவசம். தீபீகிட்ட நான் அம்மான்னு தான் உன்னை காட்டியிருக்கேன். நீயும் தீபாகிட்ட சின்னம்மா, சித்தி இப்படி சொல்லி குடுக்காம அம்மான்னு காட்டிக்கிட்டது ரொம்ப சந்தோஷமா இருந்தது”
“மாதி இருந்திருந்தா நான் தீபா பக்கமே போயிருக்க மாட்டேன். முழுசா விட்டுக் குடுத்துருப்பேன். அவ இல்லாத பட்சத்துல குழந்தைக்கு நான் தானே தாய்? அவளுக்காக தான் கல்யாணமே செஞ்சிக்க கூடாதுன்னு இருந்தேன். எனக்கு கணவனா இருக்கறவன் அவளுக்கு நல்ல தந்தையா இல்லாம போயிட்டா? அந்த பயம் வேற. உன் கிட்ட பழகனதும் அந்தப் பயம் போச்சு. என்னை விட தீபா மேல தானே உனக்கு பாசம், நேசம், அன்பு எல்லாம் ஜாஸ்தியா இருக்கு”
“என்னடி, திடீர்னு மக கிட்டயே உரிமைப் போராட்டம் நடத்துற? நாலு பொண்ணுங்களுக்குத் தகப்பன்டி நானு. இருந்தாலும் இந்த சிமி தான் என் முதல் மக அப்புறம் தான் நிலா, தீபா, தீபீ எல்லாம்.”
அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள்,
“நீ சொன்னத அப்படியே நான் நம்பிட்டேன் கப்பூரு” என சிரித்தாள்.
“நம்ம மக உன்ன மாதிரி இல்ல. எடுத்தவுடனே எனக்கு என்ன வாங்கித் தருவன்னு உரிமையா கேட்டா. அவ கேட்ட பார்பிய அமெரிக்காவில இருந்து வரும் போதே வாங்கி வந்தேன். அப்பா நான் பறந்து பறந்து சம்பாதிக்கறேன், என் மக உடைஞ்ச கால் பொம்மைய வச்சு விளையாடறாளென்னு கவலையாப் போச்சு”
“நான் டாய்ஸ்ல ரொம்ப செலவு பண்ணறது இல்ல. நிறைய புக்ஸ் வாங்கி தருவேன் பிரகாஷ்”
“நாலு வயசுலயே புக் குடுத்து ஏன் பிள்ளைங்கள டார்ச்சர் பண்ணனும். எங்கம்மா மாதிரி இருக்க வேணாம் சிமி. நம்ம பிள்ளைங்க நிறையா விளையாடட்டும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா படிப்பு பக்கம் திசை திருப்பலாம். அதுக்குத்தான் நான் எஞ்சாய் பண்ணாத ப்ளேகிராவுண்ட், கேம்ஸ் எல்லாம் நம்ம பிள்ளைங்களுக்கு கிடைக்கனும்னு ஏற்பாடு பண்ணேன்.” அவ்வளவு சந்தோஷம் அவன் குரலில்.
“கண்டிப்பா செய்யலாம் ப்ரௌனி! நாமலும் கூட சேர்ந்து விளையாடலாம். உன்னோட சின்ன வயசு ஆசையும் நிறைவேறிரும்”
“ப்ளேகிராவுண்ட்ல நம்ம பொண்ணுங்க விளையாடட்டும். நாம ரெண்டு பேரும் பாத்ரூம்ல விளையாடி, இன்னொரு தம்பி பாப்பாவ ரெடி பண்ணுவோம்.”
“அடச்சை! வேற இடமே இல்லாத மாதிரி எப்ப பாரு பாத்ரூம இழுக்கறது. உன்னைப் போய் ரோமாண்டிக் ஹீரோன்னு இந்த உலகம் இன்னும் நம்புது! கர்மம்டா சாமி”
“கரெக்டா சொல்லு சிமி, சாமியா பூதமா?” சிரித்தான் அவன்.
“இந்த ஜோக்குக்கு இப்ப சிரிக்கனுமா?” நிஜமாகவே கடுப்பானாள் சித்ரா.
“விடு விடு. உனக்கு மட்டும் தான் ப்ளோல வருமா? எங்களுக்கும் வரும்னு லேசா காட்டுனேன்.”
“தீபா போன்ல வேற என்ன சொன்னா கப்பூர்?”
“நான் கேட்கவும், அவளும் திருப்பி சாப்பிடியான்னு கேட்டா! எனக்குப் புல்லரிச்சுப் போச்சு. டாடி போனதுல இருந்து அப்படி பாசமா என்னைக் கேட்க யாரும் இல்ல சிமி. இந்த சின்ன வயசுல எவ்வளவு அறிவா பேசறான்னு ரொம்ப சந்தோசமாகிட்டேன். அதை அவ கிட்டயும் சொன்னேன். அதுல இருந்து குட்டி மேடம் என்னை எங்கப் பார்த்தாலும் சாப்பிட்டியான்னு கேட்க தவறனது இல்ல. அந்த டைம்ல தான் நீ ரூமுக்குள்ள வந்துட்ட. அப்புறம் நீ பாடன சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. பயண களைப்புல இருந்த நான், தீபீ ரூம் நாற்காலியிலயே தூங்கிட்டேன். உனக்கு மனச சாந்தப்படுத்தற குரல் சிமி” ஆசையாக அவள் அதரங்களை தடவிக் கொடுத்தான். தடவிய விரல்களை முத்தமிட்டவள்,
“எங்கள ஃபாலோ பண்ண ஆள் வச்சிருக்கன்னு சொன்னியே ப்ரௌனி, அத வச்சு தான் நாங்க எங்க போனாலும் வந்து நின்னியா? சிவாவோட ஹோட்டல் ஸ்விம்மிங் ஃபூல்ல வந்து நின்ன மாதிரி!”
“மாசத்துல ஒரு சண்டே அங்க வருவீங்கன்னு தெரியும். அந்த டைம்ல ஃபூல் வியூ உள்ள ரூம் புக் பண்ணிக்குவேன். நீங்க ரெண்டு பேரும் பண்ணற அட்டகாசத்த ரூம்ல இருந்தே பார்த்துட்டு இருப்பேன். இப்பத்தான் அறிமுகம் ஆச்சே, சும்மா ஸ்வீம்மிங் போற சாக்குல ஒரு அட்டேண்டென்ஸ் போடலாம்னு வந்தேன். பார்த்தா, சுடிதாரில் நனைந்த சொர்க்கம் ஒன்னு என் கண்ணுக்கு விருந்தா நின்னுட்டு இருந்தது. ரெண்டு பேரும் தடுமாறவும், அப்படியே அணைச்சுப் பிடிச்சுக்கிட்டேன். நீங்க விழக்கூடாதுன்னு தான் பிடிச்சேன். ஆனா உன் அருகாமையில நான் அதலபாதாளத்துல விழுந்துட்டேன். நீ சமாளிச்சிட்டேன்னு தெரிஞ்சும் அணைப்புல இருந்து விடபட முடியல. அதுக்குள்ள சார்னு கூப்பிட்டு என் மயக்கத்த தெளிய வச்சிட்ட. தீபா கத்தவும் என்னை விட்டு நகர்ந்துட்ட நீ. ரொம்ப பீல் ஆகிட்டேன். தீபாவ இறக்கி விட்டுட்டு நீ மூச்சு வாங்க நின்ன பாரு,என் கண்ணு உன் முகத்த தவிர மத்த எல்லா இடத்துக்கும் போச்சு” அவள் முறைக்கவும்,
“எனக்கானவள நான் எங்க வேணும்னாலும் பார்ப்பேன்”
“அடிங்க! அப்போ அன்னைக்கு நீ நிஜமா தான் என் வயிற்ற தடவியிருக்க! நான் கூட என்னோட இமேஜினேஷன்னு நினைச்சேன்.”
“அப்படி எப்படி நீ நினைக்கலாம்? அது சத்தியமா நடந்த உண்மை. இமேஜினேஷன் இல்ல. தீபா தலைய தடவிக்குடுக்கும் போது, குட்டியா கியூட்டா இந்த தொப்பை என்னையும் கவனின்னு சொன்ன மாதிரியே இருந்தது. இப்படி லேசா தடவுனது குத்தமா?” மீண்டும் தடவிக் காட்டினான்.
கைகளில் பட்டென போட்டவள்,
“டேய்! நீ தடவனத கூட நான் மன்னிச்சு விட்டுருவேன். ஆனா என் கிட்டயே எனக்கு தொப்பை இருக்குன்னு சொன்ன பாத்தியா, அத மட்டும் மன்னிக்க மாட்டேன்” முறுக்கிக் கொண்டாள்.
“அந்த தொப்பைதான் உனக்கு அழகு சிமி. நீ சொல்லற மாதிரி நானும் ஒரு கவிதை சொல்லவா? கேவலமா இருந்தா கலாய்க்க மாட்டீயே?”
“கலாய்க்க மாட்டேன் சொல்லு”
“ரோட்டுல போடாத நீ குப்பை
சிமிகிட்ட பிடிச்சது அவ தொப்பை”  
அவனின் இரு வரி கவிதையைக் கேட்டு உருண்டு புரண்டு சிரித்தவள்,
“பூவோட சேர்ந்த நாரும் மணக்குது ப்ரௌனி. நல்லா தேறிட்ட!” என்றவள் அவன் முகம் முழுக்க தன் முத்திரையைப் பதித்தாள்.
“ஏன் ப்ரௌனி, என் மேல காதல் கடலளவு இருக்குன்னு சொல்லுற! அப்புறம் என் மேல எப்படி கோபம் வருது? அன்னைக்கு நான் தீபாவோட கிப்ட் வாங்கிக்கலன்னதும் எவ்வளவு கோபம். எனக்கு உள்ளுக்குள்ள பயம் தான். இருந்தாலும் பந்தாவா நின்னுட்டு இருந்தேன்”
“சிமி டியர், என்னைப் பற்றி ஒன்னு மட்டும் நீ புரிஞ்சிக்கனும். ரோவனோட காதல் ஜீன் மட்டும் இல்ல, ஆராவோட கோப ஜீனும் சேர்ந்து செய்யப்பட்ட கலவை நான். அப்பப்போ கோபம் எட்டிப் பார்க்கும். முக்கியமா வேலை விஷயத்துல. அதனால எல்லாம் உன் மேல காதல் இல்ல அப்படின்னு நினைச்சுக்க கூடாது. புரியுதா சிமி?”
“நல்லா புரியுது”
“ஆனா எனக்கு வர கோபத்தையும் மாயமா மறைய வைக்கிற வித்தை உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கு சிமி. ஐ லவ் யூ சோ மச் டியர். “ மூக்கும் மூக்கும் உரச எஸ்கிமோ கிஸ் ஒன்றை கொடுத்தான் பிரகாஷ். சற்று நேரம் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“உனக்கு உடம்பு முடியாம ஆபிஸ்கு வந்தப் பார்த்தியா, அப்போ எனக்கு பதறிப் போச்சு. ஈமெயில் பார்க்கற மாதிரி உன்னையே தான் பார்த்துட்டு இருந்தேன். பாடிட்டே மயங்கி விழவும், ரொம்ப பயந்துட்டேன் சிமி. தூங்கறன்னு கன்பர்ம் ஆனதும் தான் மூச்சே சரியா வந்தது எனக்கு. மெல்ல உன்னைத் தூக்கிட்டுப் போய் சோபாவுல படுக்க வச்சேன்.”
“எனக்கு அப்பவே சந்தேகம் தான். ஜோன் பேர சொல்லி சமாளிச்சிட்டே. கால்ல வேற க்ரீம் போட்டு விட்டுருக்க. அதுக்கூடவா எனக்கு தெரியாது? ரொம்ப பயமா போச்சு தெரியுமா? இவன் ஏன் இதெல்லாம் நமக்கு செய்யறான்னு. அதுக்கு அப்புறம் உன்னை விட்டுத் தள்ளி இருந்தாலும், உன்ன க்ளோசா வாட்ச் பண்ணிட்டே தான் இருந்தேன்.”
“தெரியும் சிமி. அடிக்கடி பார்க்கறீயேன்னு எவ்வளவு கஸ்டப்பட்டு உன் முன்னுக்கு டீசன்சி மேய்ண்டேய்ன் பண்ணேன் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் என் முன்னுக்கே மயங்கி விழற வரைக்கும் தான் இந்த டீசன்சி, மெதுவா மூவ் பண்ணலாம் போலிசி எல்லாம். அந்த சம்பவத்துக்கு அப்புறம், உங்கள தனியா விட முடியும்னு தோணல. ஹாஸ்பிட்டல்ல உங்கள விட்டுட்டு என்னால போகவே முடியல. அதான் வேற வழி இல்லாம உன்னை சீக்கிரமா என் கிட்ட வர வைக்க பிளான் பண்ண வேண்டியதா போச்சு”
“எது? இன்வென்ஸ்ட்மெண்ட் ப்ளான்ல விளையாடியதா?”
“ஓ! உனக்கு தெரிஞ்சிருச்சா சிமி? எப்போ?”
“இப்போத்தான். நீ சொல்லுறப்ப தான் ஸ்ட்ரைக் ஆச்சு. இவ்வளவு நாளா செய்யற வேலைல எப்படி தவறு வரும்னு நான் குழம்பாத நாளே இல்ல”
“நீ எந்த தவறும் செய்யல சிமி. நான் தான் உங்க சிஸ்டத்தை ஹேக் பண்ணி ஸ்கீம மாத்துனேன்”
“என்னது? ஹேக் பண்ணியா? என்னமோ ஹக் பண்ணேன்ற மாதிரி சாதரணமா சொல்லுற?” அதிர்ந்து விழித்தாள் சித்ரா.
“ஹஹஹ! மம்மி அனுப்பன க்ளாஸ்ல நான் விரும்பி போனது கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ளாஸ் தான். அதுவும் ஹேக்கிங் ரொம்ப செலஞ்சிங்கான விஷயம். ஆர்வமா கத்துக்கிட்டேன்.”
“புடிச்சு உள்ளுக்கு வச்சானுங்க, பேமஸ் வக்கீல் வண்டு முருகன் கூட வரமாட்டாரு உனக்கு வாதாட. பார்த்து நடந்துக்க ப்ரௌனி”
“கண்டுப்பிடிக்கற மாதிரியா எல்லாம் பண்ணுவோம்? சின்ன சின்ன விளையாட்டுத்தனமான ஹேக்கிங் செஞ்சிருக்கேன். சீரியசா செஞ்சது உன் சிஸ்டம்ல தான். இருந்தாலும் உன் பேங்க்கோட செக்குரிட்டி சிஸ்டம் ரொம்ப ஸ்ட்ராங் தான். ஒரு வாரம் எடுத்தது எனக்கு ஹேக் பண்ண. வேய்ட் பண்ணிட்டே இருந்தேன் உனக்கு எப்ப விஷயம் தெரிய வரும்னு. உனக்கு தெரிஞ்ச அன்னிக்கு நம்ம நைட் மீட்டிங்க பிக்னிகாவே அரேஞ் பண்ணேன்”
“”அந்த பிக்னிகல தான் உன்னைப் பற்றி நல்லா தெரிஞ்சுகிட்டேன் ப்ரௌனி. என் மேல உனக்கு லவ்னு கன்பார்ம் ஆனது அன்னிக்குத்தான். ரொம்ப தவிச்சுப் போயிட்டேன். ஏன், வை மீ? பல கேள்விகள் எனக்குள்ள.”
“ஓ அப்பவே கண்டு பிடிச்சிட்டியா? அதுக்கு அப்புறமும் தெரியாத மாதிரி என்ன அலைய விட்டல்ல! கேடி  சிமி நீ!”
“நீ பணத்துக்கு கல்யாணம்னு பேசவும், ரொம்ப அப்செட் ஆகிட்டேன். வேணும்னே உன்னை திசைத் திருப்பி பேச விடாம பண்ணேன். உன் டென்ஷனான முகத்தப் பார்க்க செம்ம ஜாலியா இருந்தது ப்ரௌனி”
“உன்னோட ட்ரீக்க நானும் கொஞ்ச நேரத்துல கண்டு பிடிச்சுட்டேன். அதனால தான் வாய்டீன்னு சொல்லி அடக்கி வச்சேன். இன்னும் அழிச்சாட்டியம் பண்ணியிருந்தா அன்னைக்கு கண்டிப்பா வாய்டீ குடுத்துருப்பேன். நீ சுதாகரிச்சிட்ட. ஜஸ்ட் மிஸ் ஆகிருச்சு”
“அந்த டைம்ல மட்டும் அப்படி ஏதாச்சும் செஞ்சிருந்த, நீயும் வேணா உன் அக்கவுண்டும் வேணான்னு போயிருப்பேன்”
“அப்படி தான் செய்வன்னு தெரியும். அதனால தான் ரொம்ப கண்ட்ரொல்டா இருந்தேன். அந்த நிலவொளியில இந்த சித்ரா பௌர்ணமி எவ்வளவு அழகா இருந்தா தெரியுமா? அப்படியே சோறு தண்ணி இல்லாம பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. என்னோட பிரகாஷமே இந்த பௌர்ணமில தான் இருக்கு தெரியுமா சிமி?” அவள் முகவடிவை அளந்தான்.
“பணத்தை நீ திருப்பி தரன்னு பிடிவாதமா சொல்லவும், மனசுக்கு ரொம்ப கவலையா போச்சு. பணத்த வச்சு உன்னை கல்யாணத்துக்கு மிரட்டுனதே மொக்க பிளான் தான். பிப்டி பிப்டி சாண்ஸ் தான்னு தெரியும். நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு சொன்னதும் எனக்கு கோபம் தான் வந்துருக்கனும். ஆனா ஒரு வகையில வருத்தம் இருந்தாலும், ரொம்ப சந்தோஷமாவே பீல் பண்ணேன். என்னோட சிமி, பணத்துக்கு விலை போகலன்னு மனசுக்குள்ள ஒரு ஆறுதல். பணம் தேட நீ எவ்வளவு கஸ்டப்படுவன்னு புரிஞ்சது. அதனால தான் பணம் வேணாம்னு சொன்னேன். உன் முகத்தப் பார்த்தே நீ திருப்பி குடுக்க ட்ரை பண்ணுவன்னு புரிஞ்சது. அதான் மறுபடியும் ஜோனை புடிச்சு பணம் வேணாம்னு சொன்னேன். யப்பா, அந்த டைம்ல பிடிவாதம் பிடிச்ச உன்னை வச்சிக்கிட்டு நான் பட்ட பாடு இருக்கே!”
“அது பிடிவாதம் இல்ல கப்பூரு, தன்மானம். உன்  பொண்டாட்டி தன்மான சிங்கம். அதை என்னிக்கும் நீ மறக்க கூடாது. ஆமா, நீ சொன்ன ப்ளாஸ்பேக்ல தான் உனக்கு கல்யாணமே ஆகலையே, அப்புறம் ஏன் விடோவர்னு டிக்லேர் பண்ணி வச்சிருந்த?”
“உன்னாலதான் சிமி”
“என்னாலயா?”
“ஆமா! நீதான் ஆபீஸ்ல எல்லார் கிட்டயும், புள்ளை இருக்கு ஆத்துக்காரு மேல போயிட்டாருன்னு சொல்லி வச்சிருந்த. அதான் உனக்கு ஏத்த மாதிரி நானும் சொல்லி வச்சேன். சிங்கிள், இத்தனை வயசு வரைக்கும் இன்னும் கல்யாணம் ஆகலன்னு இருந்தா, நீ என்ன என்ன கற்பனைய ஓட்டுவியோ! எதுக்கு வம்புன்னு தான் அப்படி டிக்லேர் பண்ணேன்.”
“அடப்பாவி! என்னை எப்படிலாம் ஏமாத்திட்டு சுத்திருக்க! ஒவ்வொரு தடவையும் விடோவர்னா நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அப்படி இப்படின்னு என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணியிருப்ப” மொத்தி எடுத்தாள் அவனை.
“சரி பொழச்சுப் போ! உனக்கு என் மேல பாசம், காதல் வந்தது புரியுது. அது எப்படி  என் தங்கச்சி தம்பி மேலயும் இவ்வளவு பாசம் வந்துச்சு உனக்கு?”
“உன் கூடவே அவங்கள பார்க்கிறேன்ல அதனால இருக்கலாம். அவங்க உன் கிட்ட காட்டுற பாசம் எனக்கும் வேணும்னு ஒரு ஆசை சிமி. எதையும் எதிர்பார்க்காம அவங்க ரெண்டு பேரும் உனக்காக எவ்வளவோ தியாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு அதுல பாதி கூட தெரியாது. அவங்க பாதுகாப்புக்கும் நான் ஆள் வச்சிருந்ததால எனக்கு எல்லாம் தெரியும். மணி எக்ஸ்ட்ரா கிளாஸ்னு சொல்லிட்டு டியூசன் படிச்சுக் குடுக்கறான். அது உனக்கு தெரியுமா? நிலா சினிமால ஆடுறதும் இப்படிதான் எனக்கு தெரியும். அவங்க தப்பான வழிக்கு போகாத வரைக்கும் நான் எதுலயும் தலையிடல. இப்படி கண்காணிச்சதல தான் சிவாவும், நிலாவும் வெளியில அடிக்கடி சந்திக்கறது கூட எனக்குத் தெரியும். அதனால தான் உனக்கு உட்பீன்னு சொன்னாலும் சிவாவ நான் எதிரியா நினைச்சது இல்ல.”
“தூரமாவே இருந்து எங்கள நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. ஜகஜால கில்லாடி நீ கப்பூரு”
“உன் அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணியிருந்தேனே உங்கள நல்லா பார்த்துக்குவேன்னு. இப்ப வரைக்கும் அதை நிறைவேத்திட்டு தான் இருக்கேன்னு நம்பறேன் சிமி”
கண்கள் கலங்க அவன் மார்பில் சாய்ந்தவள்,
“பெரிம்மா கிட்ட நீ பேசனதுல எனக்கு எவ்வளவு மன நிறைவா இருக்கு தெரியுமா பிரகாஷ்! போக போற உசுருக்கு நீ மன சாந்திய குடுத்துருக்க. தேங்க்ஸ் ப்ரௌனி”
“தேங்க்ஸ் சொன்னா அடி விழும். நம்ம டீலிங்கல நோ தேங்க்ஸ் ஒன்லி கிஸ். இப்ப சொல்லு என்ன கிஸ் வேணும்?”
“உன் அளவுக்கு எனக்கு கிஸ்ஸோலோஜி தெரியாது ப்ரௌனி. அதையும் நீயே பார்த்து பதமா குடு”
“எனக்கு தெரிஞ்ச எல்லா கிஸ்ஸையும் ட்ரை பண்ணியாச்சுடா. இரு யோசிக்கறேன், ஏதாவது விட்டுப் போச்சான்னு” யோசித்தவன், முகம் மலர,
“சிமி ஆக முக்கியமான கிஸ்ச மறந்துட்டேன்”
‘ஆஹா! முகம் பல்ப் போட்ட மாதிரி ஜொலிக்குதே, ஜொலி ஜொலிக்குதே!’
“சொல்லு கேட்போம்”
“அதெல்லாம் சொல்ல முடியாது, குடுக்கத்தான் முடியும்”
அவள் முகம் முழுக்க சின்ன சின்ன செல்ல கடி கடித்தவன் கடைசியாக கழுத்தில் பல் தடம் தெரியுமளவுக்கு கடித்து, அதே இடத்தில் அழுந்த முத்தமிட்டான்.
அவன் கொடுத்த காதல் கடியை சுட்டிக் காட்டியவன்,
“இதுதான் பைட் அண்ட் நிபள் கிஸ் (bite and nibble). என்னோட காதல் தடத்த உன் மேல பதிச்சுட்டேன் சிமி. யூ ஆர் மைன். ஒன்லி மைன்”
(தொடர்ந்து உன்னோடுதான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!