Uyirodu Vilaiyadu 14

(பல அமெரிக்க ஏஜென்சிகள் (FBI, DEA, HSI, CBP, USPIS, DOJ, DOD), யூரோபோலின் ஆதரவுடன், இருண்ட வலையில் இயங்கும் இருண்ட வலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுத விற்பனை’ அமைப்புகளைக் குறிவைத்து, ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சியான ‘ஆபரேஷன் சபோடோரை/ sabador, ஆபரேஷன் ஒனிமஸ்/onimas’  நடத்தியது.

இருண்ட வலையில் அதிக அளவில் ஓபியாய்டு விற்பனையாளர்களைக் கண்டறிந்து சீர்குலைப்பதற்கும், ஓபியாய்டு கடத்தலுக்கு வசதியாக இருக்கும் குற்றவியல் நிறுவனங்களை அகற்றுவதற்கும் இந்த நடவடிக்கை நோக்கம் கொண்டது.

மும்பை டி.சி.பி (போதை மருந்து எதிர்ப்புச் செல்) சிவ்தீப் லாண்டே கூறுகையில், ‘எல்.எஸ்.டி போன்ற மருந்துகளின் விஷயத்தில், டார்க் நெட் ஒரு பெரிய சப்ளையர் என்பது உண்மைதான். கடந்த ஆண்டு, மும்பையிலிருந்து ஐந்து மாணவர்களை நாங்கள் பிடித்தபோது, அவர்கள் இருண்ட வலைமூலம் ரூ .70 லட்சம் மதிப்புள்ள 1,400 எல்.எஸ்.டி pills வாங்கியுள்ளனர். சென்னை, மும்பையில் இளைஞ்சர்களை குறி வைத்து இந்தத் தளங்கள் இயங்கி வருகின்றன.’ என்றார்.)

அத்தியாயம் 14

‘சாணக்கிய நீதியில் உள்ள வரிகள்,

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ
ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ
ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய
விநாச காலே விபரீத புத்திஹி

‘விநாச காலே விபரீத புத்தி’ என்றால் ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள்.  அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர்.

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை. யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. கெட்ட காலம் வருகிறது என்றால், இறை ஸவரூபமான சீதா தேவி கூடத் தன் அறிவை உபயோகிக்க மறந்ததால் தான், தங்க நிற மானைப் பார்த்துச் ஆசைப்பட்டதால்,  அதைத் தேடி ராமனும் சென்றதால் தான் ராமாயணம் விளைந்தது என்கிறார் சாணக்கியர். 

கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல,  ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.

‘சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும்.
முன்றுறையரையனார், பழமொழி நானூறும் இதையே தான் சொல்கிறது.

பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள்.பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம்.

விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,

‘பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)’

ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் கவனமாக இருந்தாலும், விபரீத புத்தி வந்து நம்மைக் கெடுத்துவிடும். நம்மை அழிக்க ஆளே இல்லையென்று ஆடிப் பார்க்கத் தோன்றும். உலகத்தை நாம் போலி வேஷம் போட்டு ஏமாற்ற முடியும்.ஆனால், நம்முள்ளிருந்தே அனைத்திற்கும் சாட்சியாய் இருக்கும் நம் மன சாட்சியும், தெய்வ சாட்சியையும் ஏமாற்ற முடியாது. நேரம் வரும்போது இவையென்றுமே நமக்கு எதிராகத் திரும்பும் சமயம் என்ன முயன்றாலும், யாராலும் அழிவிலிருந்து நம்மைக் காக்க முடியாது தான்.

அதனால் தான் பெரியவர்கள்,

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!” என்றார்கள். 

‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்று சொல்வதும் இது தான்.’ என்று முன்னர் ஒரு முறை சம்யுக்தா சொன்னது நினைவிற்கு வர, இது ஜோக்ராஜ் விஷயத்தில், எந்த அளவுக்குப் பொருந்தி போகிறது என்று நினைத்துப் பார்த்தான் விக்ரம்.

‘இந்தியாவின் மிக முக்கிய மாபியா அமைப்பின் தலைவன். ஐம்பது வருடத்திற்கு மேலாக நிழல் உலகை ஆண்டு கொண்டிருப்பவன். எத்தனை தலைமுறை அமர்ந்தே உண்டாலும் அள்ள, அள்ளக் குறையாத, அரசாங்கத்திடம் கூட இல்லாத அளவிற்கு செல்வ பலம், ஆள் பலம் இருந்தும், அழிவுக் காலம் வந்ததால், பெண்கள் விஷயத்தால் ஜோக்ராஜின் நிழல் உலக சாம்ராஜ்யமே பலமான ஆட்டம் கண்டு கொண்டு இருந்தது.

ஒழுக்கம் கேள்விக்குறியாகி இருக்க, அநீதி தலை தூக்கியிருக்க, அழிவுக் காலம் ஆரம்பமாகியிருந்ததால், ஜோக்ராஜூக்கு புத்தி சரியாக வேலை செய்யாமல் போக, ‘சிங்க கூட்டத்தைச்/ pride of lions, அதைச் சிறு நரி எதிர்ப்பது போல், இத்தாலிய மாபியா குழுவின் செல்ல மகளைக் கடத்தி, அந்தப் பெண் இறப்பிற்கு காரணமாய் மாறி இருந்தார்.

Ancient Greek woman

அந்தப் பெண் பின்புலம் ஒன்றே, ஜோக்ராஜ்ஜை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். புத்தி வேலை செய்யாததால், இவர் நிற்கவில்லை. அந்தப் பெண்ணின் கணவன் யார், அவன் பின்புலம் என்ன என்பதாவது இவரை யோசிக்க வைத்திருக்க வேண்டும். அதையும் அவர் யோசிக்கவில்லை. விளைவு உலகின் மிகப் பெரிய, பலம் வாய்ந்த பத்திற்கும் மேற்பட்ட மாபியா குழுக்களைப் பகைத்து கொண்டிருக்க, இவரைக் காப்பாற்ற பல்தேவ், சத்ருஜித்,  தான் முன்னால் நிற்க வேண்டிய நிலை. ஒரு நாட்டின், ஒரு குழுவின் தலைவனானவன் தவறும்போது அது அவனுக்குக் கீழ் உள்ள எல்லோரையுமே பாதிக்கும் என்பது இது தான்.

மாபியா குழுக்களில், ‘என்னை நீ காப்பாற்று. உன்னை நான் காப்பாற்றுகிறேன்.’ என்பது போல் அல்லையன்ஸ் இருக்கும். ரத்த சம்பந்த பட்ட குழுக்கள் என்றால், இதன் loyalty மிக அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு உதவி வேண்டும் என்றால் அவர்களும், அவர்களுக்கு உதவி வேண்டும் என்றால் இவர்களும் செல்வார்கள். ஆனால், ஒரு குழுவின் தீராப் பகைக்கு ஆளாகி விட்டால், அவர்களுடன் நட்பில் உள்ள ஒட்டுமொத்த குழுக்களும் எதிராகத் திரும்பி விடும். அது தான் அங்கே நடந்திருந்தது.’ என்பதை நினைத்துப் பார்த்த விக்ரம், மீண்டும் பல்தேவ் பேச்சில் தன் கவனத்தை பதித்தான்.

“சார்லி அமெரிக்காவில் செயல்படும் நியூயார்க் நகர மாஃபியா குடும்பங்களான, ‘காம்பினோ, லூசீஸ், ஜெனோவேஸ், போனன்னோ மற்றும் கொழும்பு குடும்பங்ககளின்’ செல்ல மகன்.

Jason Momoa in The Red Road (2014)

இந்த மிகப் பெரிய தேனீ கூட்டில் கல் எரிந்து விட்டார். தங்கள் மீது சிறு கீறல் விழுந்தாலே, கீறியவனின் தலையைச் சீவும் இந்த மாபியா குடும்பங்களின் தீராப் பகைக்கு ஆளாகி விட்டு, ‘டேமேஜ் கண்ட்ரோல்’ என்று எங்களை அனுப்பி வைத்தால், எங்களால் முடிந்தது உங்க அப்பாவைக் காப்பாற்றுவதற்காகப், ‘பீட்டர் தான் அந்தப் பெண்ணைக் கடத்தினான்’ என்று அவன்மேல் பழி போட்டுக் கதையை அப்படியே திருப்பி விட்டோம்.

நிஜத்தில் அந்தப் பெண் மரணத்தின் பின் இருப்பது உங்க அப்பா என்பது மட்டும் தெரிய வந்தால், நிச்சயம் நம்மில் ஒருத்தரை கூட உயிரோடு விடமாட்டார்கள்.

கோடிக்கணக்கில் நம் தலைக்கு, ‘bounty’ பிக்ஸ் செய்து விடுவார்கள். ‘யார் நம்மைக் கொன்றாலும் காசு’ என்று அறிக்கை விட்டால் நாம் காலி.

அதைத் தடுக்க பீட்டரை அவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களும் அவனை டார்ச்சர் செய்து கொன்று விட்டார்கள் தான். ஆனால், இனி இவர்களுடன் இங்கே தொழில் செய்வது முடியாத ஒன்று. பணத்தையும் தாண்டி இங்கே, ‘loyalty என்ற ஒன்று இருக்கிறது பாய்.

இன்னும் இவங்களுக்கு கோபம் குறையவில்லை. பொருட்கள் நமக்குத் தருவதையும் நிறுத்தி விட்டார்கள். இனி இங்கே இருப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல் தான். இங்கே, இனி நாங்கள் செய்ய எதுவும் இருப்பதாய் தோன்றவில்லை.

பீட்டர் உடன் அந்தச் சமயம் ஒரு கிழவன் இருந்ததாகக் கேள்விபட்டதில், பீட்டரின் அறுபது தூரத்து சொந்தங்களை, நண்பர்களை, அவன் போகும் பாரில் உள்ளவர்களைக் கூட, தேடி த்தேடி கொன்று விட்டார்கள். ஒருத்தரை விடலை. complete blood bath, annihilation.

Mafia 3 screenshot showing a shootout.

அந்தச் சமயம் பீட்டருக்கும், உங்க அப்பாவுக்கும் மிகப் பெரிய சண்டை. பீட்டரை நம்ம குழுவிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார் என்பது உலகறிந்த ரகசியம். சமாதானம் ஆகதான், உங்க அப்பா சொல்லி, பீட்டர் சார்லி மனைவியைக் கடத்தினான் என்பது யாருக்கும் தெரியாது.” என்றார் பல்தேவ்.

“காரணம் இல்லாமல், ஆதாயம் இல்லாமல் அந்தக் கிழம் மூச்சை கூட விடாதே!…” என்றான் சத்ரு ஏதோ யோசனையில்.

“பாஸ்!…” என்று இழுத்தார் பல்தேவ்.

“என்ன சொல்லு பல்தேவ்… உனக்கு என்ன தெரிய வந்திருக்கு?” என்றான் சத்ரு.

“அது பாஸ்… மெக்ஸிகோவின் calaca/எலும்புக்கூடு குழுவும் அதன் தலைவன், ‘Alejandro Bernardo Carlos’ தான் இதற்க்கு காரணம். சார்லியை அழித்தபிறகு, அமெரிக்காவின் மாபியா தலைமை பதவியை உங்க அப்பாவுக்குக் கொடுப்பதாய் ஆசை காட்டி, பணம், ஆளுதவி, ஆயுதம் எல்லாம் கொடுத்து இருக்கான். சில பல கோடி உங்க அப்பாவின் புது அக்கவுண்டுக்கு மாறி இருக்கு.” என்றார் பல்தேவ்.

“என்னது?…” என்று தன் இருக்கையிலிருந்து அதிர்ந்து எழுந்து நின்ற சத்ருஜித்,  முகத்தில் வந்த பயம், பதட்டம் சொல்லாமல் சொன்னது, ‘அந்தச் சார்லி’ எப்படி பட்டவன் என்று.

சற்று நேரம் தலையைக் கொதி கொண்டு நடந்தான் சத்ருஜித்.

சார்லி என்ற பெயர் சத்ருஜித் போன்றவனையே பதற வைத்திருந்தது.
மீண்டும் தன்னை சமாளித்து கொண்டு, இருக்கையில் வந்து அமர்ந்த சத்ரு, தன்னை சமாளித்து கொண்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.

“விளையாடறியா பல்தேவ். சார்லி என்பவன் மலை மாதிரி. அவன் குழு ஆலமரம் மாதிரி. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களின் சப்போர்ட் இருப்பவன். இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அவன் குடும்பம்.

சார்லிக்கு முன்னாடி அந்த, ‘மெக்ஸிகோ calaca குழுவும், அதன் தலைவன் கார்லோஸ், இந்தக் குழுவும் கூட சின்ன எறும்பு. நசுக்கி தள்ளிட்டு போயிட்டே இருப்பான்.

சார்லி இறந்தால் கூட, அவங்க குடும்பத்தில் அடுத்த இடத்தில் இருப்பவர் தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும்?…  இந்தக் கிழம் எப்படி பாஸ் ஆக முடியும்?. மாபியா பற்றி ஏபிசி தெரிந்தவங்க யாரை கேட்டாலும் இதைச் சொல்லுவாங்க.” என்றான் சத்ரு கோபத்துடன்.

“உங்களுக்குத் தெரியுது… ஆனால், இந்தச் சிம்பிள் லாஜிக் தெரியாமல் தான், அந்தக் கார்லோஸ் விரித்த வலையில் உங்க அப்பா வசமாய் சிக்கிட்டார். கார்லோஸ் அப்பா மெக்ஸிகோவில் எப்படிப்பட்ட கொடுங்கோலன் என்பது உலகமே அறியும். பலவித போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மெக்ஸிகோ அதிபரைக் கொன்றது, சில பல கிராமங்களை எரித்தது என்று அந்த ஆள் செய்த குற்றத்திற்கு மெக்ஸிகன் அரசாங்கமோ, ராணுவமோ நேரிடையாக இறங்க முடியாது என்று தான் சார்லியின் உதவியை நாடினார்கள்.

Bones at the Nazi concentration camp of Majdanek in the outskirts of Lublin 1944

இப்படி அரசாங்கம் நேரிடையாக இறங்க முடியாத பல சூழ்நிலைகளில், தனியார் mercenary/ வாடகை இராணுவ கூலிப்படையை நிர்ணயிப்பார்கள். ஏதாவது பிரச்சனை வந்தாலும் அரசாங்கம், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை/ plausible deniability என்ற நிலை வரும். அதற்காக அமெரிக்க அரசாங்கமும், மெக்ஸிகன் அரசாங்கம் சார்லி உதவியை நாடினார்கள்.

சார்லியும் இத்தனை வருடத்தில், ‘calaca குழுவையே’ இல்லாமல் ஆக்கி விட்டான். அவங்க அப்பாவையும் நடுரோட்டில் போட்டுத் தள்ளிட்டான். அதற்கு நேரிடையாகப் பழி வாங்க முடியாது என்று நன்கு தெரிந்த கார்லோஸ், சார்லிகு எதிராகத் தான் ஒற்றை விரலைக் கூட அசைக்க முடியாது என்று தயார் செய்த பலியாடு தான் உங்க அப்பா. தன் பழிவாங்கலை உங்க அப்பாமூலம் நிறைவேத்திட்டு இருக்கான்.

உங்க அப்பாவும், ‘சார்லி மனைவியைக் கடத்தி உதவறோம்’ என்றதும் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் போய்ப் புதைகுழியில் சிக்கிட்டார். forbidden fruit is more tasty என்ற தத்துவம் வேற உதிர்கிறார். உங்க அப்பா அவர் சிக்கியது போதாது என்று நம்மையும் சிக்க வச்சிட்டார்.

கிட்டத்தட்ட சார்லி குழுவில் மட்டும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகளவில் அவன் நண்பர்கள் குழு என்று கணக்கு செய்தால், ராணுவத்திற்கு சமமான படையைப் பகைச்சிட்டு இருக்கார் உங்க அப்பா.

அதையே இங்கே இந்தியாவில் செய்துட்டு இருக்கார். இங்கே புதுசாய் தேஜ் என்பவனை இமயமலை மாதிரி வளர விட்டதும் அவர் தான் பாஸ்.” என்றார் பல்தேவ்.

நீண்ட நேரம் யோசனையில் இருந்த பல்தேவ் எண்ணவோட்டத்தை கலைத்தது ஜோக்ராஜின் குரல்.

போதை ஏறி உச்சஸ்தாயில் கத்தி கொண்டே, தள்ளாட்டத்துடன் மூன்று அழகிகள் புடை சூழ வந்தவனை கண்டு சத்ரு முகம் இறுக ஆரம்பித்தது.

Watch: Akshay Kumar, Riteish Deshmukh and team celebrate Ranjeet's ...

“உனக்குப் பைத்தியமாடா!… என் மாளிகையை உடைத்து வைத்திருக்கே!… ஒவ்வொன்றும் நான் பார்த்துப் பார்த்து அழகு செய்தது. இன்னொரு முறை இப்படி செய்தே உன்னைப் பொளந்துடுவேன்…” என்று குழறியவன், கயிற்றில் தொங்கி கொண்டிருந்தவனை கண்டு,

“அவன் எவன்டா இந்நேரத்திற்கு ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துட்டு இருக்கான்?”என்றவர் அவன் அருகே சென்று கண் விரித்துப் பார்க்க, பார்வையில் தென்பட்ட காட்சி அவர் போதையை தெளிய வைத்தது.

“இந்தக் கிழவனுக்கு இருக்கும் லொள்ளை பாரேன்… துணியைத் துவைத்து காய போட்டு இருப்பது போல், பிரிச்சி மேஞ்சி இருக்கான்… இது என்னா நக்கல் அடிக்குது ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யறான் என்று…” என்றார் பல்தேவ் கடுப்புடன்.

“ஜஸ்ட் மிஸ்ஸு… பரணிக்கு பதில் இந்த ஆளை ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய வச்சி இருக்கணும்… மனசுக்குள் அப்படியே தசரதன் மறுபிறவி என்று நினைப்பு. சுடுகாட்டுக்கு போற வயசில் கூட எத்தனை குஜிலிஸ் பாருங்களேன்!.. அந்த இடத்தில நிக்கிறார் இந்த ஆளு.” என்றான் விக்ரம் வந்த சிரிப்பை அடக்கிய படி.

“டேய் கிரகம் பிடிச்சவேனே!…  சீரியஸ் டைமில், டபிள் மீனிங்ல பேசி, சிரிப்பை மூட்டாதேடா…” என்றார் பல்தேவ்.

“என்னை என்ன அங்கிள் செய்யச் சொல்றீங்க!… அந்த ஆள் செய்வது அப்படி தானே இருக்கு. அவனவனுக்கு ஒன்னை….” என்று ஆரம்பித்த விக்ரம், பின்புற மண்டையில் ஒரு தட்டு தட்டினார் பல்தேவ். 

“வாயை மூடு விக்ரம். நானே சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கேன். போகும் போக்கைப் பார்த்தால் அடுத்த பார் கம்பிப் பற்றித் தொங்கும் ப்ராக்டிஸ் இதுக்கு தான்.  நடக்கும் கூத்தைக் கவனி.” என்றார் பல்தேவ்.

“அப்பனுக்கும் மகனுக்குமே முட்டிகுது. சபாஷ் சரியான போட்டி. ஒரு பாப் கார்ன்னுக்கு ஆர்டர் கொடுங்க அங்கிள். பிரண்ட் ரோச்சீட். அடி தூள். மிஸ்டர் சத்ரு!… உங்க பீலிங்ஸ் பத்தலை… உங்க கிட்டே இன்னும் ரியாக்ஷன் எஸ்க்ஸ்பெக்ட் செய்யறோம். இன்னும் ஒர்க் செய்யணும் சார் நீங்க….” என்று விக்ரம் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்க, வந்த சிரிப்பைக் கையால் வாயை மூடி மறைத்தார் பல்தேவ். 

“சத்ரு!… யார் இவன்?… என்ன செய்து வைத்திருக்கே?” என்றார் ஜோக்ராஜ் திகைப்புடன்.

“நீங்க செய்ய வேண்டியதை தான் நான் செய்து வைத்திருக்கிறேன் பாஸ்!… எத்தனையோ முறை படிச்சி படிச்சி சொன்னேன். இந்த பரணி வேஸ்ட் என்று. என் பேச்சை கேக்கவேயில்லையே நீங்க. இன்னைக்கு எத்தனை இடத்தை அந்த தேஜ் அழித்து இருக்கான் தெரியுமா? co ordinated attack/ ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்திட்டு, ஜஸ்ட் லைக் தட் என்று எல்லாத்தையும் அழிச்சுட்டான். இடம், பொருள், என்று ஒற்றை முடி கூட மிஞ்சலை. இன்னைக்கு மட்டும் நூற்றிமுப்பது கால். ‘எங்கே எங்க சரக்கு, எங்கே ஆயுதம், எங்கே பொண்ணுங்க என்று?…’ என்ன பதில் சொல்ல சொல்றீங்க?” என்றான் சத்ரு கோபத்துடன்.

“பணத்தை திருப்பிக்கொடு… இல்லையென்றால் டைம் கேட்டுப் பொருளை அனுப்பு… ஒன்றும் இல்லாத இந்தச் சின்ன விஷயத்துக்கா இப்படி லூசு மாதிரி ரியாக்ட் ஆகிட்டு இருக்கே!… சில்லி பாய்…”என்றார் ஜோக்ராஜ் தள்ளாட்டத்துடன்.

அப்பொழுது தான் மாபியா பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்த விக்ரமிற்கே, ஜோக்ராஜ் பேச்சு கேணை தனமாய் தான் தோன்றியது.

‘மாபியாவில் பணம் என்றுமே பிரதானம் இல்லை. சொன்ன சொல், கொடுத்த வாக்கு முக்கியம். கை நீட்டிப் பணம் வாங்கிய பிறகு, குறிப்பிட்ட தேதியில் பொருள் சப்ளை ஆகவில்லை என்றால், அது அந்தக் குழுவின் மேல் உள்ள நம்பிக்கையைக் குறைக்கும்.

இவர்களை ஒருவன் வைத்துச் செய்கிறான்’ என்பது ஏற்கனவே கசிய ஆரம்பித்து, நிறைய குழுக்கள் இவர்களிடமிருந்து பொருள் வாங்க மறுத்து வருகிறார்கள். அதிலும் சார்லி விஷயத்தால் நிலைமை இன்னும் மோசம். மற்றவர்கள் முன் இது தலைகுனிவு. இமேஜ் டோட்டலாகக் காலி என்ற நிலை.

‘இந்தக் குழுவைவிட வலிமையான குழு ஒன்று ஆட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்’  என்பதை பிரகடனபடுத்துவது போன்றது. survival of the fittest/ தான் மட்டும் தான் பலசாலி என்பதை இது போன்ற குழுக்கள் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

துணைக்கு வேறு குழுக்களின் உதவி இல்லையென்றால், நேரம் பார்த்து எதிரி குழுக்கள் இவர்களைச் சாய்த்து விடுவார்கள். உளவு சொல்ல, ரெய்டு வருவதை முன்னரே தெரிவிக்க, பொருள் வாங்க, விற்க, பாதுகாப்பாய் பின் நிற்க என்று மற்ற குழுக்களின் தயவும் இந்தக் குழுவிற்கு தேவை.

தேஜ் நிமிரவே முடியாமல் ஆடி விட்டுச் சென்ற ஆட்டமானது, பல மோசமான விளைவுகளை உண்டாக்கும்’ என்பது புரியாமல் போதையில் அழகிகளுடன் தள்ளாடி கொண்டிருக்கிறார் ஜோக்ராஜ் என்பது விக்ரமிற்கே புரிந்ததது.

குறைந்திருந்த கோபம் மீண்டும் சத்ருவிற்கு அதிகமாகி விட, அடுத்த நொடி அவன் கோட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கி ஒன்று வெளியே வந்து, தன் கோர பசிக்கு இரையாய் ஒரு உயிரைப் பலிவாங்கி கொண்டது.

Rahul Bose Photo - 10 | Images | Photo Gallery | Image Gallery ...

“வாய் வார்த்தை புரியவில்லை என்றால், ஆயுத வார்த்தையாவது எல்லோருக்கும் புரியுதான்னு இனி பார்க்க வேண்டியது தான் பாஸ்… என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. முடிஞ்சா எனக்கு ஹெல்ப்பா இருங்க. இல்லையா நிறைய மாளிகை இருக்கு. நிறைய ரூம் இருக்கு. என் கண் முன்னே வராமல்,  இதோ இந்தப் பொம்மைகளுடன் விளையாடிட்டே இருங்க. டோன்ட் எவர் க்ராஸ் மை வே.” என்றான் சத்ருஜித் அடக்கப்பட்ட கோபத்துடன்.

துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைத்து, உயிர் அற்ற உடலாய் தொங்கி கொண்டிருந்த பரணியின் உடலைக் கண்டு திகைத்து நின்றார் ஜோக்ராஜ்.

“இந்தக் கூட்டத்திற்கு நான் தான் தலைவன்…” என்றார் அவர் கோபத்துடன்.

“தென் ஆக்ட் லைக் யு ஆர் எ லீடர்/ அப்போ ஒரு தலைவனாய் நடக்க முயற்சி செய்யுங்கள். நீங்கச் செய்து வைத்த மெஸ், எல்லாத்தையும் நாங்க கிளீன் செய்துட்டு இருக்கோம்.

அந்தச் சார்லியை கொன்றால், ‘அமெரிக்காவின் அடுத்த பாஸ் நீ’ என்று எவனோ முழம், முழமாய் பூவைக் காதில் சுற்றி விட்டால், ‘அதை இன்னும் சுற்று…’ என்று வாங்கி வந்ததிலேயே, உங்க கபாசிட்டி/capacity தெரிஞ்சி போச்சு. So shut your mouth before I hang you there.” என்றான் சத்ரு.

அவன் கண்களில் தெரிந்த கோபத்தில், ஜோக்ராஜ் அவரே அறியாமல் ரெண்டு அடிபின் வைத்தவர், அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாய் அகன்றார்.

மகனைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவனைப் பகைத்து கொண்டோமோ என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

‘ஹ்ம்ம்!..  நான் தானே தலைவன். என்னை மிஞ்சி இந்தப் பொடி பயல் என்ன செய்துட போறான்!… பார்த்துக்கலாம்.’ என்ற எண்ணம் ஜோக்ராஜிற்கு தோன்றியது.

அங்கிருந்து பின்னங்கால் பிடரியில் படுவது போல் அகன்ற தன் தந்தையை கண்ட சத்ருவின் வாயிலிருந்து காது கொடுத்துக் கேக்க முடியாத நிற நிறமாய் வார்த்தைகள் வந்து விழுந்தது.

ஜோக்ராஜ் அறியாதது ஒன்று, வலியவன் பின் தான் குழு நிற்கும் என்பது. அந்தக் குழுவில் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் பேர் ஏற்கனவே சத்ருஜித்தை தங்கள் தலைவனாய் ஏற்று கொண்டார்கள் என்பதோ, தான் வெறும் தலைவன் என்ற பதவியில் இருக்கும் அலங்கார பொம்மை என்பது ஜோக்ராஜ் பாவம் அறியவில்லை.

coup-de -etat என்று ராணுவ புரட்சியை, ஆட்சி, தலைமை மாற்றத்தைச் சொல்வார்கள்.அதைச் சத்தம் இல்லாமல் செய்து வெற்றியும் பெற்று விட்டான் சத்ருஜித்.

“பாஸ்!…” என்றார் பல்தேவ்.

“நீ இந்தியா வந்து சேரு. பிறகு பேசிக்கலாம்.” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு, மீண்டும் நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான்.

ஜோக்ராஜை சத்ருஜித் மிரட்டிய துவனியே சொல்லாமல் சொன்னது ஜோக்ராஜின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டது என்பதை. அந்தக் குழுவின் தலைவனாகச் சத்ருஜித் முழு பொறுப்பேற்று விட்டான் என்பதை.

“ஹ்ம்ம்!…” என்று குரல் கொடுக்க, வேக வேகமாய் ஒரு பெண் அவன் மடியில் வந்து அமர்ந்தாள்.

அதற்குள் பரணியின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது.

அந்த அறையில் ஒதுங்கி நின்றிருந்த தன் வலது கையான அபீரிடம், “அவன் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்காங்க?” என்றான் சத்ரு.

“மனைவி, ஒரு மகள் ஏழு வயசு. வயதான நோயாளி அப்பா ஒருவர்.” என்றான் அபீர்.

“நோயாளி என்றால் கஷ்டப்படுவாங்க இல்லை… எனக்கோ இளகிய மனசு. வீட்டு சிலிண்டர் பிரச்சனை செய்யுதுன்னு சொல்லிட்டு இருந்தான் இல்லே… அது வெடிக்கும் முன், அங்கே இருக்கும் நம்மைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிளீன் செய்துடு. ஒரே நாளில் இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் உயிர் துறக்கணும்னு இருக்கு போலிருக்கு.” என்றவன் பேச்சைக் கேட்டு அபீர் என்பவன் பரணி வீட்டிற்கு கிளம்பினான் நான்கு பேருடன்.

மீதம் உள்ள பரணி குடும்பத்தைப் போட்டுத் தள்ளவும், அங்கு இந்தக் குழுவின் சம்பந்தப்பட்ட பைல், பென் டிரைவ், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்களைச் சுத்தப்படுத்தவும் விரைந்தனர் அபீருடன் சிலர்.

கணவன் இறந்தது தெரியாத பரணி மனைவி, வழக்கம்போல் தன் சமையல் வேலைகளை முடித்து, மகளைப் பள்ளியில் விட்டுக் காய்கறி வாங்க மார்க்கெட் சென்றாள். உடல் நலம் இல்லாத பரணி தந்தை, மாத்திரைகளின் உபயத்தால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

பரணி செய்வது சட்டத்திற்கு புறம்பான வேலையென்பதாலும், பரணி குழுவே அவன் குடும்பத்தைப் போட்டுத் தள்ளக் கிளம்பி இருப்பதாலும், குழுவின் பாதுக்காப்பு விளக்கிக் கொள்ளப்பட்டு இருந்தது.

அது நாள்வரை, ‘அண்ணா!… அண்ணி!…’ என்று சொல்லிப் பாச பறவையை வளர்த்துக் கொண்டிருந்த, ‘ஒட்டுன்னி தம்பிகள்’  திடீர் என்று காணாமல் போனார்கள்.

பரணிக்கு விசுவாசமாய் இருந்த சிலரும், பரணி இறந்த விஷயம் தெரியாதவர்களாய் இருக்க, அவர்களுக்கும் வெவ்வேறு ஊர்களில் வேலை கொடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருந்தார்கள். பரணி குடும்பம் கொல்லப்பட்டாலும் எதிரி குழுவான, ‘தேஜ்’ தான் இதைச் செய்தான் என்று கதையை மாற்றும் முயற்சி அது.

மொத்தத்தில் சத்ரு என்ற அரக்கனின் பாச கயிறு அந்த மூவரை நோக்கி நீண்டு இருந்தது.

பரணியின் வீடு ஒதுக்குபுறமான இடத்தில் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதிகமாய் மக்கள் புழக்கம் இல்லாத பகுதி அது. காலை வேளையில் கூட அந்தப் பக்கமே வெறிச்சோடி காணப்பட்டது.

Residential Site Layouts in Gerugambakkam , Chennai - Plots ...

பரணியின் வீட்டின் முன் வந்து நின்றது ஒரு அம்புலன்ஸ், ஒரு கார், ஒரு டெம்போ லாரி. அதிலிருந்து இறங்கியவர்கள் தங்கள் கையில் இருந்த சாவி கொண்டு கதவைத் திறந்து கொண்டு, மருந்தின் உபயத்தால் ஆழந்த உறக்கத்தில் இருந்த பரணியின் தந்தையை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்ற, அது அங்கிருந்து அகன்றது.

காரில் வந்தவர்கள் அந்த வீட்டில் இருந்த வெள்ளை காகிதத்தைக் கூட விடாமல் சுத்தமாய் வழித்து எடுத்தார்கள். லேப்டாப், மொபைல், டைரி, பென் டிரைவ், சிடிக்கள், பைல்கள் என்று துணி, பண்ட பாத்திரம், நாற்காலி, மேஜை, டிவி, பிரிஜ்ட் தவிர வீட்டைக் காலி செய்தது போல் அனைத்தையும் பேக் செய்து முடிக்க, அந்த டெம்போ கிளம்பியது.

அதே சமயம் பரணியின் மகள் படிக்கும் பள்ளியின், பிரின்சிபால் அறைக்குள் நுழைந்தாள் ஒரு பெண். அடுத்த பத்து நிமிடத்தில் பரணியின் மகள், அந்தப் பெண்ணுடன் அனுப்பி வைக்கப்பட, அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளி வந்த அந்தப் பெண், காத்திருந்த காரில் ஏறினாள். அந்தக் குழந்தையைச் சுமந்த கார் சென்னை நகர போக்குவரத்தில் கலந்து மறைந்தது.

Kidnapping and Abduction - Provision and Difference

அதே சமயம் காய்கரி வாங்கி கொண்டு, தன் ஸ்கூட்டியில் திரும்பிக் கொண்டிருந்த பரணியின் மனைவி, எதிரே வந்த லாரி கடந்து செல்ல வழி விட்டு ஒதுங்கி நிற்க, லாரி கடந்த சமயம், அந்தப் பெண் ஒட்டி வந்த ஸ்கூட்டி கேட்பாரற்று அனாதையாய் ஒரு புதரில் விழுந்து கிடந்தது.

இது எல்லாமே சொல்லிவைத்தது போல் ஒரே சமயத்தில் நடந்து முடிய, எதற்குமே சாட்சியோ, ஆதாரமோ இல்லாமல் போனது.

அதே சமயம் சத்ருவின் அறையில் நின்றிருந்தான் அவனின் இடது கையான லூயிஸ் என்பவன், தன் தலைவன் பெண்ணொருத்தியுடன் சல்லாபித்து கொண்டிருக்க, அவனை எப்படி நெருங்குவது என்று புரியாமல் தவித்து நின்றான் லூயிஸ்.

சத்ருவை நெருங்குவதா, பின்னர் பேசுவதா என்று தயங்கித்தயங்கி அவன் நிற்க,

“வாட்?… இங்கே பிசியா இருக்கேன்னு தெரியலை?…” என்று இரைந்தான் சத்ரு.

“பாஸ் மன்னிச்சுடுங்க பாஸ்… தலை போற அவசரம் என்றால் உங்களை டிஸ்டர்ப் செய்யலாம் என்று நீங்கத் தான் பாஸ் சொல்லியிருந்தீங்க.” என்றவனின் கைகள் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டது முன் நடந்த நினைவின் நியாபகமாய்.

‘ஏன் இதை முன்னரே என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை?…’ என்று கர்ஜித்து, சத்ரு தூக்கி எறிந்த பேப்பர் வெய்ட் ,லூயிஸ் தாடை எலும்பை உடைத்திருந்தது.

“யார் தலை போகப் போகிறது?… உன் தலையா?… தலை இல்லாமல் முண்டமாய் இருந்தால் நல்லா இருக்க மாட்டியே!…. இப்போ மட்டும் அழகு உன் கிட்டே அப்படியே டான்ஸ் ஆடுதா என்ன!…” என்றான் சத்ரு கிண்டலாக.

ஜோக் அடித்து விட்டானாம். இதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று லூயிஸ் பேய் விழி விழித்து நின்றான்.

இவனைத் தவிர உலகில் உள்ள அனைத்து ஆண்களும் விகாரமாய் தான் இவனுக்குத் தெரிவார்கள். ஏதோ ஒரு சூனியக்காரி மாய கண்ணாடி முன் நின்று, ‘உலகில் மிக அழகான பெண் யாரென்று’ கேட்டுக் கொண்டே இருப்பாளாம். அது போன்ற ஸெல்ப் obssesed சத்ரு.

“சொல்லு…” என்றான் சத்ரு சிரிப்புடன் அவன் அடித்த ஜோக்குக்கு அவனே சிரித்து முடித்து.

“பாஸ்!… நம்ம கூட்டத்தில் யாரோ இருந்துட்டு தான் அந்தத் தேஜ்ஜூக்கு உதவி செய்துட்டு இருக்கனும். இல்லையென்றால் நம்மைப் பற்றி அவனுக்கு இத்தனை விஷயம் தெரிய வாய்ப்பில்லை. சோ, நம்ம குழுவில் உள்ள எல்லோரையும் பற்றி விசாரிக்கச் சொல்லி இருந்தீங்க பாஸ்… விசாரிச்சுட்டேன்… சந்தேகபடுவது மாதிரி அதிகமாய் செயல்பட்டு இருப்பது ஒரு ஆள் தான் பாஸ்…” என்றான் லூயிஸ்.

சத்ருவின் கண்கள் சுருங்கியது.

“யார் அது?…” என்றான் அவன்.

“பல்தேவ் தான் பாஸ் அது…” என்றான் லூயிஸ்.

“வாட்!…. எதை வைத்துச் சொல்றே?” என்றான் சத்ரு கோபத்துடன்.

“பாஸ்!… அவரைப் பற்றி விசாரிக்கும்போது சில பல வருடமாகவே அவர் சின்னப் பெண்ணை ரகசியமாய் சந்திக்கிறார் என்ற தகவல் கிடைத்தது பாஸ்…” என்றான் லூயிஸ்.

“இது பெரிய விஷயமா!… prostitute கிட்டே அந்த ஆள் போறான் என்பது தான் தலை போற விஷயமா என்ன?… அந்த ஆளுக்குச் சின்னப் பொண்ணுங்களை பிடிச்சி இருக்கு. என்னை என்ன மாமா வேலை பார்க்கச் சொல்றியா?” என்றான் சத்ரு அசிரத்தையாக.

“பாஸ்!… முதலில் நானும் அப்படி தான் நினைத்தேன். பல்தேவ் ரகசியமாய் சந்திக்கும் அந்தப் பெண் அப்படிப்பட்ட பெண் என்று… ஆனால் அந்தப் பெண் பல்தேவ் மகளாம் பாஸ்.” என்றான் லூயிஸ்.

“வாட்!…” என்ற சத்ரு, தன் மேல் இருந்த பெண்ணைக் கீழே தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தான்.

“பல்தேவிற்கு பெண் மட்டும் இல்லை. திருமணம் ஆகி மனைவியும் இருந்திருக்காங்க பாஸ். ஒரு கார் விபத்தில் இறந்துட்டாங்க. அதுவும் ஆக்சிடென்ட் இல்லை. திட்டமிட்ட கொலை என்ற தகவல் உண்டு. இதோ பாஸ் இந்த pendriveவில் எல்லா விவரமும் இருக்கு. இவ்வளவு பெரிய விஷயத்தைப் பல்தேவ் உங்களிடம் சொல்லாமல் மறைந்திருக்கிறார் என்றால், இன்னும் என்னென்ன எல்லாம் மறைத்திருக்கிறாரோ!… .ஒருவேளை அந்தத் தேஜ்ஜூக்கு உதவுவது இவராகக் கூட இருக்கலாம் இல்லையா? ” என்றவன் ஒரு pendrive நீட்ட, அதைத் தன் லேப்டாப்பில் இணைத்து உயிர்ப்பித்த சத்ருஜித் கண்கள், கண்ணெதிரே தெரிந்த சம்யுக்தாவின் உருவத்தைக் கண்டு அகல விரிந்தது.

Keerthy Suresh (aka) Keerthi Suresh photos stills & images

“பல்தேவ் பொண்ணு. பெயர் சம்யுக்தா. அவங்க டாக்டர். இதே சென்னையில் தான் இருக்காங்க…” என்றான் லூயிஸ்.

‘Struck by lightining’ என்று பதம் சொல்வார்கள். மின்னலால் தாக்கப்பட்டது போல் உறைந்த நிலை. அந்த நிலையில் கண்கள் நிலை குத்தி நிற்க, லேப்டாப்பையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சத்ருஜித்.

“டார்லிங்….”என்று படுக்கையிலிருந்து அழைத்த அழகியை உதறியவன், அடுத்த நொடி படுக்கையில் எழுந்து நின்றான்.

அவனைப் புகைப்படத்தில் இருந்தே உறைய வைத்திருந்தாள் சம்யுக்தா. புகைப்படத்தைக் கண்ட அடுத்த நொடி சம்யுக்தா என்பவள், ‘தனக்கானவள்’ என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ பதிந்து போனது.

ஆயிரம் மது சீசாகள் கொடுக்காத போதையை, லட்சம் பெண்களின் அணைப்பில் வராத பரவசத்தை சம்யுக்தாவின் அங்கங்கள் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது.

சம்யுக்தாவின் சிவந்த அதரங்கள் அவனுள் ஒரு ப்ரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

“ஐந்தே நிமிடத்தில் வலைத்தளங்களில் உள்ள இவ புகைப்படம் எல்லாம் எனக்கு வேண்டும்…” என்றான் சத்ருஜித் கண்களைச் சிமிட்ட கூட மறந்தவனாய். சம்யுக்தா படத்தையே ஒருவிதமாய் கண்கள் பளபளக்க பார்த்துக்கொண்டிருந்தான்.

வேட்டை நாயின் வெறித்தனம் அவன் கண்களில்.

அவன் வேட்டையாடக் குறி வைத்து விட்ட பெண் மானாய் சம்யுக்தா.

“சம்யுக்தா!… சம்யுக்தா!…” என்று அவன் வாய் புலம்ப ஆரம்பித்திருந்தது.

பேய் பிடித்தவன் மாதிரி, லேப்டாப்பை கையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தான்.

ஆம், சம்யுக்தா என்ற பெண்ணின அழகு சத்ருஜித் என்பவனின் எண்ணம், சொல், செயல் என்று எல்லாவற்றையும் போதை மருந்தின் வீரியத்துடன் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.

கணினியில் தெரிந்த சம்யுக்தாவின் புகைப்படத்தை ஒருவித வேகத்துடன் தடவி கொடுக்க ஆரம்பித்தான். லூயிஸ் எடுத்துக் கொடுத்த புகைப்படம் ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க, சம்யுக்தா என்ற பெண்ணவளின் அழகு மட்டுமே அவன் முன் விஸ்வரூபம் எடுத்திருந்தது.

“சம்யுக்தா இந்த நொடி எங்கே இருந்தாலும், இன்னும் ஒரு மணி நேரத்தில் என் கண் முன்னால் அவ இருக்கணும்.   xxx இடத்தில் உள்ள என் மாளிகைக்கு அவளைக் கொண்டு போய்டு.

எனக்கு மட்டுமே அவ வேணும். she is mine. only mine… mine…mine… பல்தேவின் மகள் சம்யுக்தா, இனி இந்தச் சத்ருஜிஜித்தின் காதலி. வருங்கால மனைவி. எவன் அவளைத் தலை நிமிர்ந்து பார்த்தாலும், அருகில் சென்றாலும் கூட ஷூட் செய்யத் தயங்காதே!. அவ நிழலைக் கூட வேறு எவனும் நெருங்கக் கூடாது. இனி சம்யுக்தா இந்தச் சத்ருஜித் அந்தப்புர பைங்கிளி. எனக்காகவே படைக்கப்பட்ட தங்க பதுமை. 

நான் மட்டுமே பறித்து, ரசிக்கும் என் பூங்காவனம். நான் மட்டுமே ருசிக்கும் தேன் கிண்ணம். என்னை மகிழ்விக்க பிரம்மன் படைத்த பொற்சித்திரம். சம்யுக்தா இனி இந்தச் சத்ருஜித்தின் ஏக போக உரிமை. எனக்கு மட்டுமே சொந்தமான சொத்து. she is mine.

நம்ம ஆள், எவன் எங்கிருந்தாலும், அவன் சம்யுக்தாவின் பாதுகாப்புக்கு என்று நிற்க வேண்டும். நீ திரும்ப வரும்போது சம்யுக்தாவுடன் வா. இல்லையென்றால் உன்னை நீயே சாகடிச்சுடு… எனக்கு வேலை வைக்காதே!…

பல்தேவ், விக்ரமிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.” என்றவன் பேச்சைக் கேட்டு லூயிஸ், சம்யுக்தாவை சத்ருவிற்காகச் சிறையெடுக்க கிளம்ப, சம்யுக்தாவின் புகைப்படம் முன், கால் மடங்கி அமர்ந்தான் சத்ருஜித்.

“சம்யுக்தா!…”ஈன சுரமாய் ஒலித்தது சத்ருவின் குரல்.

புகைப்படத்தில் இருந்த பெண்ணவள் ஏற்படுத்திய உணர்ச்சி பேரலையை தாங்க முடியாதவனாய் தவிக்க ஆரம்பித்தான்.

விஷம் கூடச் சட்டென்று கொன்று விடும். காமம் மெல்ல மெல்ல கொள்ளும் விஷம். அந்த விஷம்உடல் முழுவதும் பரவி, தலைக்கேற, சத்ரு மெல்ல மிருகமாகி போனான்.

அடுத்த நொடி படுக்கையில் இருந்த பெண்ணை இறுக அனைத்தவன் வாய் முணுமுணுத்தது என்னவோ, “சம்யுக்தா!…” என்ற பெயரை மட்டும் தான்.

கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது கணினியில் தெரிந்த அவள் புகைப்படத்தை மட்டும் தான்.

தன் கை வளைவில் இருக்கும் பெண் சம்யுக்தா தான் என்ற எண்ணத்துடன், தன்னருகில் இருந்த பெண்ணை அணுகினான் .

கற்பனையை நிஜமாக்கும் வேட்கை, அவனுள் அணையாத நெருப்பாய் உயர ஆரம்பித்தது.

அங்கே ஒருவன் தன் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, தன்னை இச்சை தீர்க்கப் பயன்படும் ஒரு பொருளாய் தன்னை கருத ஆரம்பித்து விட்டதை, தனக்கு அவன் குறி வைத்து விட்டதை அறியாத சம்யுக்தா அத்தனை நேரம் கோயிலில் செய்து கொண்டிருந்த தவத்திற்கு பலனாய், ஈஸ்வரின் கார் கோயில் வாசலில் வந்து நின்றது.

காரைக் கோயில் மதில் சுவர் அருகே நிறுத்தி விட்டு இறங்க முயன்றவர்களை தடுத்தது பூக்கடை அக்காவின் குரல்.

“செல்வம் தம்பி!… காரை இங்கே நிறுத்ததேய்யா…போலீசு வலிச்சுட்டு போய்டும்.மூணு தெரு தள்ளி, நம்ம கடை ஒண்ணு இருக்கு. அதுக்கு பக்கத்துல காலி மனை இருக்கு.அங்கே நிறுத்துய்யா. நம்ம பையன் தான் இருக்கான். காரைப் பத்திரமாய் பார்த்துக்குவான்.”என்றவரின் பேச்சைக் கேட்டு, ஈஸ்வர், ரிஷி, எமி இறங்கி கொள்ள, காரைப் பூக்கடை அக்கா சொன்ன இடத்தில் நிறுத்தச் செல்வம் சென்றான்.

Same character different movie - The Hindu

செல்வம் திரும்ப வர மற்ற மூவர் கோயில் வாயிலில் காத்திருந்தனர்.

“தம்பி ரிஷி….”என்று அழைத்துக் கொண்டு மணி ரிஷியை நெருங்கி, “தம்பி…நீங்க வீட்டுக்கெல்லாம் வேலை ஆள், வாட்ச்மென் அனுப்பும் செக்யூரிட்டி நிறுவனம் வச்சி இருக்கீங்க இல்லை…இங்கே துவாரகா அபார்ட்மெண்ட்ஸ் என்று ரெண்டாயிரம் குடும்பம் இருக்கும் அபார்ட்மெண்ட் இருக்கு.அந்தச் செக்ரட்டரி இப்படி ஆள் வேண்டும் என்று சொல்லிட்டு இருந்தார்.அவர் கிட்டே பேசறீங்களா?” என்று கேட்க,

“சூர் அங்கிள்…”என்றவனுக்கு தன் மொபைல்லில் அழைப்பு போட்டுக் கொடுக்க, ரிஷி அந்த அழைப்பைப் பேச ஆரம்பித்தான்.

நாச்சியார்' படத்துக்காக இளையராஜா ...

அதே சமயம் கவிதா, “யம்மாடி எமி… நீ அழகு நிலையம் தானே கண்ணு வச்சி நடத்துறே!…எனக்குத் தெரிந்தவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்து இருக்காங்க. அவங்க இந்தப் பாக் என்று ஏதோ கொடுக்கறீங்களாமே அதைப் பத்தி விசாரிச்சாங்க…பேசரியா கண்ணு?” என்று அழைப்பைப் போட்டுக் கொடுக்க எமியின் கவனம் அதில் போனது.

Varalaxmi Sarathkumar: புதிய தொழில் துவங்கிய ...

ஆக மொத்தம் ஹேமாவின் பிளான் படி, செல்வம், ரிஷி, எமி பிசியாக வைக்கப்பட்டார்கள்.

ஈஸ்வர் மட்டும் தனித்து நிற்க, பூக்கார அக்கா, “ஈஸ்வர் தம்பி!… சம்யு கண்ணு உனக்காக வெகுநேரமாய் காத்திருக்கு. இவங்க நிதானமாய் பேசி முடிச்சுட்டு வருவாங்க. நீ உள்ளே போக்கண்ணு.” என்று சொல்ல, ‘சம்யுக்தா’ என்ற பெயர் ஈஸ்வரிடம் ஏற்படுத்திய மாற்றத்தைக் காண கண் கோடி வேண்டும்.

அடுத்த நொடி ஈஸ்வர் கால்கள் கோயிலுக்குள் விரைந்தது.

கோயிலுக்குள் ஈஸ்வர் கால் வைத்ததும் சம்யுக்தவிற்கும், சம்யுக்தா இருக்கும் இடத்தில்  கால் வைத்ததால் ஈஸ்வருக்கும் ஒரு நொடி சிலிர்த்தது.

ஹேமாவுடன் வாயாடி கொண்டிருந்த சம்யு, அடுத்த கணம் கோயில் வாயிலை நோக்கி எழுந்து ஓட ஆரம்பித்திருந்தாள்.

Unni Mukundan Age, Height, Weight, Girlfriend, Life And More.Keerthi Suresh Cute Expressions || Keerthi Hot Video || Keerthi ...

சம்யுக்தாவும் ஈஸ்வரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள, உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறி, உருவாக்கிய மேடையில், ‘காதல் என்ற நாடகத்தை’ அவர்களின் கண்கள் நான்கும் அரங்கேற்றிக் கொண்டிருந்தது.

காதல் என்ற ஆற்றின் வெள்ளத்தில் கைகள் ரெண்டும் பலமாய் இணைய, இருவரின் உள்ளம் அந்த ஒற்றை தொடுகையில் சிலிர்த்து, நுரைத்து, நிறைந்து போனது.

‘அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்’ என்று ராமன், சீதையின் முதல் பார்வையை, அவர்கள் இருவருக்குமிடையே, ‘காதல் மலர்ந்த அந்தக் கணத்தைக்’ கம்பர் மிக அழகாய் வர்ணிப்பார்.

இங்கே சம்யுக்தா, ஈஸ்வரின் பார்வைகள், பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் அந்த ராமன், சீதையின் காதல் மலர்ந்த, ‘அந்த ஒற்றை பார்வையாய், காதல் மலர்ந்த ஒற்றை கணமாய்’ தினம் தினம் மலர்ந்து கொண்டிருந்தது.

நேற்று இரவு தான் பார்த்து விட்டுப் பிரிந்திருந்தார்கள் அவர்கள் இருவரும். ஆனால், ஒரு யுகம் பிரிந்த தவிப்பினை தான் இருவரின் கண்களும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

‘போதும்!…’ என்று மனிதன் சொல்ல முடியாத ஒரே இடம் காதல் மட்டும் தான்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட விஷமாகி விடும். ஆனால், எத்தனை எல்லைகளைக் கடந்தாலும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மனம் ஏங்கும் இடம் காதலில் தான்.

காதலில் சரணாகதி அடைந்த உள்ளங்கள் மீட்சியை விரும்புவதில்லை. விரும்பியே இரு மனம் பூட்டி கொள்ளும் ஆயுள்கால மலர் விலங்கு காதல்.

காதல்!
வார்த்தைகள் தோற்கும் இடம்.
பிறந்த உயிரின் மறு ஜனனம்
இதயங்கள் கருவறைகளாக
மாறும் மகோன்னதம்!
பூமியில் சொர்க்கத்தை
படைக்கும் விந்தை!
தீராத மாய வேட்கை
உள்ளுக்குள் எங்கோ ஒரு
தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே
இருக்கும் வினோதம்!.
இதய துடிப்பின் அடி நாதம்!
காத்திருப்புகள் தவமாய் மாறும் தபோவனம்!
இரு மன இணைவில் தான் என்ற சுயம்
மரிக்கும் ஏகாந்தம்!.
அவன் அவளாய்!…
அவள் அவனாய்!…
மாற்றி வைக்கும் மாயம்
இறவா நிலையைக் கொடுக்கும்
சஞ்சீவனம்!
வரைமுறைக்குள் அடக்க முடியாத தேடல்
எல்லைகளை எல்லாம் தூள்தூளாக்கும்
சாகசம் !
மீள முடியாத, 
மீட்சி விரும்பாத, 
இரு மனம்
உயிரோடு விளையாடும் ஆட்டம்! .

அப்படிப்பட்ட காதலில் உருகி கொண்டிருந்தது சம்யுக்தா, ஈஸ்வரின் இடம் மாறியிருந்த இதயங்கள்.

ஆட்டம் தொடரும்.