UYIRODU VILAIYADU 23

news-body-image_30537

(இந்தியாவில் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு நடந்தால் , சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணைக்கு மக்களிடமிருந்து ஒரு கூச்சலும், கூக்குரலும் இருக்கும். ஊழல் முதல் கொலை வரை, சிபிஐ என்பது இந்திய மக்கள் சிபிஐ விசாரிக்கக் கோருவது வாடிக்கை.

இந்தியாவில் இரண்டாம் உலகப் போரின்போது, ஊழல்குறித்து விசாரிக்கச், சிறப்பு காவல் துறை ஸ்தாபனமாக, சிபிஐ 1941 இல் தொடங்கப்பட்டது.

1965 முதல், சிபிஐ, பொருளாதார குற்றங்கள், கொலைகள், கடத்தல், பயங்கரவாதம் போன்ற குற்றங்களை ஆராயத் தொடங்கியது.

சிபிஐ நிறுவனர் கோஹ்லி. ஒரு தேசிய புலனாய்வு நிறுவனத்தை வளர்ப்பதற்கான திறனைக் கண்ட தொலைநோக்கு பார்வையாளரான கோஹ்லி, 1963 முதல் 1968 வரை பதவியில் இருந்தார்.

கோஹ்லியின் மறக்கமுடியாத வார்த்தைகள்: ‘சிபிஐயின் குறிக்கோள் – தொழில், பக்கச்சார்பற்ற தன்மை, நேர்மை: இவை எப்போதும் உங்கள் பணிக்கு வழிகாட்ட வேண்டும். கடமைக்கு விசுவாசம் இருக்க வேண்டும் . முதலில், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் பணியாற்ற வாருங்கள்.’ என்றார்)

அத்தியாயம் 23

அசை போடுதல்!…

இந்த வார்த்தையைப் பல சமயங்களில் கேட்டு இருப்போம்.

உணவினை மிருகங்கள் அசைபோடுவது வழக்கம். மனிதனும் விலங்கிலிருந்து வந்தவன் என்பதாலோ என்னவோ, அவனும் அசை போடுகிறான் உணவை அல்ல, மன உணர்வுகளை…

‘MAN IS a social animal’ என்பது எத்தனை உண்மை

உணர்வுகள் எளிதில் இறப்பதில்லை…. ஏனென்றால் எண்ணங்கள் என்னும் உணவினை தினமும் நாம் அளித்துக் கொண்டிருப்பதால்!

நம் கடந்த கால சிந்தனைகள், எண்ணங்களின் தொகுப்புதான் மனம். மனம் என்பது முற்றிலும் கடந்த காலம். மனமானது நிகழ்கால அனுபவங்களைக், கடந்தகால அனுபவங்களோடு பொருத்திப் பார்த்து எதிர்காலத்தைக் கற்பித்துக் கொள்கிறது. எனவேதான் காலம் என்பது மனதின் கற்பிதம் என்று சொல்கிறார்கள். படைப்பு அல்ல… கற்பிதம் அவ்வளவுதான்.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, திரும்பி பார்க்கும் காலம்…. கடந்த காலம். நாமே அறியாமல், நம் கை நழுவி செல்லும் நீர் போல் ஓடி மறைந்த நேரம்.

எண்ணங்களில் நிழலோவியமாய், புகைப்படத்தில் எச்சங்களாய், நினைத்து பார்க்க புன்னகையையும், வருத்தங்களையும், வாழ்க்கை பாடங்களையும் கொண்டது.

காலம் என்னும் அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷ பேழையில், நாம் செலவு செய்து விட்ட செல்வம்.

எத்தனையோ நபர்களைச் சந்தித்து, அவர்களால் நம் வாழ்வும், நம்மால் அவர்கள் வாழ்வும் ஏதாவது ஒரு வகை மாற்றத்தைச் சந்தித்து இருக்கும் என்பது மறுக்க முடியாதது.

அப்படியொரு கடந்த காலத்தை தான், விமானத்தில் அசை போட்டு கொண்டிருந்தாள் சம்யுக்தா.

யார் வாழ்வை, யார் மாற்ற, யாரின் வாழ்விற்குள் வருகிறார்கள் என்பது காலம் நம்மோடு ஆடும் கண்ணாமூச்சி.

ஈஸ்வர் வாழ்வை மாற்றச் சம்யுக்தா அவனைச் சந்தித்தாளா?…
இல்லை சம்யுக்தா வாழ்வின் திருப்பு முனையாக மாற, ஈஸ்வர் அவள் வாழ்க்கைக்குள் வந்தானா?

ஆறு மாதங்களுக்கு முன்
இடம் – இ.சி.ஆர்/ கிழக்கு கடற்கரை சாலை
நேரம் -இரவு 8 மணி.

mine is the night, with all her stars | Ocean at night, Beautiful moon, Beach at night

உலகத்தின் மிகச் சிறந்த ஓவியன் நம்மைப் படைத்தவன் தான்.

காலையில் வெற்று தாளாய், சமுத்திரத்திற்கு போட்டியாக நீல வர்ண வானத்தில், வெள்ளை முத்துக்களை சிதற விட்டது போன்ற பஞ்சு பொதிகள், மேக கூட்டத்தை உலவ விடுபவர், இரவில் வேறு வகையான ஓவியத்தை நமக்குக் காட்சிக்கு வைப்பார்.

அழகான பெண்ணின் கருங்கூந்தல் போல், போதை தரும் கண்ணின் கருமணிகள் போல், கருமை நிற வானம் என்னும் தாளில் தாளில், எண்ணில் அடங்கா ஜொலிக்கும் வைரங்களை வாரி இறைத்தது யார்?..

‘ஜொலிக்கும் இந்த வைரங்களை, கொள்ளை அடிக்க முடியவில்லையே!…. எட்டாத உயரத்தில் அந்த நிலவென்னும் பந்தை கொண்டு வைத்தவன் யார்?…’ என்று என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏங்க வைக்கும் இரவுப் பொழுது.

யாரோ ஒரு சில மினுமினுப்புகளை வாரி இறைத்தது போலவே தோன்றுகிறது நட்சத்திரங்கள் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்க, அந்தக் நட்சத்திர கம்பளத்தின் மேல் நடந்து, இரவு சாம்ராஜ்யத்தின் ராணியாக, நிலாவானது முடி சூடி கொள்ளும் அழகை காண கண் கோடி வேண்டும்.

எல்லாம் இழந்து விட்டது போல் துவண்டு விடும் மனதானது எப்படி அந்தகாரம் சூழ்ந்தது போலாகுமோ, அதே போல் வானத்தின் நிறம் கருமை என்னும் ஆடை உடுத்தி கொண்டிருக்க, வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளியானது இருக்கும் வரை, நமக்குத் தோல்வியே இல்லை என்பதை உணர்த்துவது போல் நட்சத்திரங்களும், நிலவும் ஒளியேற்றி கொண்டிருந்தது.

இரவு வானம் எண்ணில் அடங்காக் கற்பனையான படைப்புகளை உருவாக்கக் கற்பனையாளர்களுக்கு அட்சய பாத்திரம்.

மனதை கொள்ளை கொள்ளும் இந்த அழகுடன் சமுத்திரமும் இணைந்தால்?

ஓவியம் மட்டும் கண்களுக்கு விருந்தளித்தால் போதுமா!… இன்னிசை வேண்டாமா?…’ என்று கேட்பது போல் மீண்டும் மீண்டும் அன்னையை தேடி ஓடி வரும் குழந்தையை போல், ஆர்ப்பரித்து கொண்டு, யுகம் யுகமாய் கரையை தேடி ஓடி வரும் சமுத்திரம் எழுப்பும் இசை!….

யார் இத்தனை பெரிய கண்ணாடியை வானத்தைப் பிரதிபலிப்பது போல் வைத்தார்கள்… ஓஹ் சமுத்திரம் தான் வானத்தைப் பிரதிபலிக்கிறதோ… கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் விண்வெளியில் தானே இருக்கும். அதை யார் இங்கே கொண்டு வந்து வைத்தது என்ற எண்ணம் தோன்ற வைக்கும் அளவுக்கு, இருளில் குளித்துக் கொண்டிருந்தது வங்காள விரிகுடா.’

அந்த வங்காள விரிகுடாவை ஒட்டியவாறு நீண்டிருந்தது, கிழக்கு கடற்கரை சாலை. அதில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த சம்யுக்தாவின் மனதில் தான் இயற்கையை பற்றிய இத்தனை கற்பனையும் ஓடிக் கொண்டிருந்தது.

மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த ஓலா கேப், ‘கடல் முத்து/ ocean’s pearl’ என்ற ஐந்து நட்சத்திர ரிசார்ட்டுக்குள் நுழைந்து நின்றது.

காரிலிருந்து இறங்கினார்கள் சம்யுக்தாவும், ஹேமாவும். அவர்களுடன் பணி புரியும் இன்னொரு பெண் மருத்துவரும் வந்திருந்தார்.

அவர்களுடன் பணி புரியும் தோழியின் திருமண விருந்து விழா. அதற்குக் கலந்து கொள்வதற்கு தான் இவர்களைக் கார் அனுப்பி, அழைத்து வந்திருந்தாள் மணப்பெண்.

கடல் முத்து/ ocean’s pearl!…

கடல் அன்னைக்கு கைக்கெட்டும் தூரத்தில் கடலை ஒட்டி அமைந்து, அந்தி சூழும் அந்த இரவு வேளையில், தேவதை போன்ற பெண்ணின் வனப்பினை கொண்டது போல் மின்னிக் கொண்டிருந்தது அந்த பீச் ரிசார்ட்.

Hotel Ocean Spray, Puducherry - trivago.com

பூமியில் செதுக்கப்பட்ட, ரவிவர்மன் ஓவியம் அந்தக் கடல் முத்து.

தனித்துவமான இயற்கை சூழல்களில், நகர சலசலப்பிலிருந்து விலகி, வங்காள விரிகுடாவின் மடி அலைகளில், சூரிய கதிர்கள் முத்தமிட்ட, கடற்கரையில் புதுவிதமான சொர்க்கத்தை காண்பது போன்ற பிரமை ஏற்படுத்தி, வைரம் போல் மின்னிக் கொண்டிருந்தது.

இது ஒரு அமைதியான சரணாலயம்!.

பரந்த சோலை இயற்கையை, அதன் தன்மையோடு காட்டும் விதமாய் அமைக்கப்பட்டு இருந்தது.

‘கனவு இலக்கு/Dream destination’ என்று பயணிகளால் அழைக்கப்படும் இந்த ரிசார்ட், உண்மையிலேயே மாயாஜாலமானது.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியின் பளபளப்பான சிற்றலைகளை, கண்டும் காணாது போல், பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில், 5 ஏக்கர் ஏரியின் மயக்கும் அழகை சுற்றி, திகைப்பூட்டும் சபையர்/நீலக்கல் பளபளபது போல் அமைக்கப்பட்டு இருந்தது ரிசார்ட்.

சமுத்திரத்தின் மேற்பரப்பில் உருவாகி, கொஞ்சி விளையாடி, தவழ்ந்து வரும் காற்று பெண்ணானவள், மென்மையாய் சிணுங்கியபடி அங்கு அமைக்கப்பட்டு இருந்த தென்னம்தோப்புக்களில் குதித்து விளையாடி, ஒரு பரவச நிலையை உருவாக்கி விடுகிறாள் என்றால் மிகையல்ல .

முறுக்கு Cobstone பாதைகள், மாறாத மற்றும் அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் கொண்ட, 23 ஏக்கர் பரப்பளவில் ஒரு மகோனத்தை படைத்தது போன்ற ஐந்து நட்சத்திர ரிசார்ட் அது. நிலப்பரப்பு குளங்கள் மற்றும் தோட்டங்களுக்கு அதிக வரவேற்பைப் பெற்றது.

‘பூமியில் சொர்க்கம்/heaven on earth’ என்று விவரிக்கப்படும் இந்தக் கம்பீரமான ரிசார்ட், கடற்கரை விடுமுறையைத் தேடும் பயணிகளிடையே பிரபலமானது.

இதைத் தேவ சிற்பி என்றழைக்கப்படும், ‘மயன்’ என்பவர் தான் வந்து, வடிவமைத்தாரோ என்று எண்ணும் விதமாய் இருந்தது.

ஹோட்டல் அதிபன் நிச்சயம் கால ரசிகனாகத் தான் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கண்டு, வியந்து, அந்த அழகில் மயங்கிய படியே, தேவலோகத்திற்கு தேவதைகள் தான் வந்து விட்டதோ என்று பார்ப்பவர்கள் எண்ணும் வண்ணம் உள்ளே வந்தார்கள் சம்யுக்தாவும், ஹேமாவும்.

சம்யு பேபி பிங்க் அனார்கலியிலும், ஹேமா வெள்ளை நிற
அனார்கலியிலும் பார்ப்பவர் கண்களை விரிய செய்து கொண்டு இருந்தார்கள்.

Keerthy Suresh latest photos from Remo track launch - Mallufun.com   

இது போன்ற பார்ட்டிகளை சம்யுவும், ஹேமாவும் எப்பொழுதும் மறுத்து விடுவார்கள். ஆனால், நாளையே துபாய் பயணம் என்று மணப்பெண் என்று வற்புறுத்தி அழைத்ததால், வேறு வழியின்றி இருவரும் கிளம்பி வந்திருந்தார்கள்.

மறுக்கவும் வழி இல்லாமல், அழைத்து வரவும் அவர்கள் தோழி ஏற்பாடு செய்திருக்க வர வேண்டிய கட்டாயம்.

‘அருகில் தானே!… தலையை காட்டி விட்டு வந்து விடலாம் என்று கிளம்பி வந்தவர்கள் அறியாதது, அந்த ஹோட்டல் அமைந்திருந்தது இ.சி.ஆரில், சென்னை முதலை பண்ணையின் அருகே என்பதையும், அது அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, நாற்பதினாலு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதையும் .

ஒன்றரை மணி நேர பயணம் செய்து, இவர்கள் வந்து சேரும் போது, மணி ஏழரைக்கும் அதிகம்.

“என்னடீ!… இவ்வளவு தூரம் கூட்டி வந்துட்டா?… எங்கே இடம் என்று நீ கேக்கவே இல்லையா?” என்றாள் சம்யு கடுப்புடன்.

“கார் வரும் சொன்ன பிறகு, அதை எல்லாம் எதுக்கு கேட்டுக்கணும் என்று அப்படியே விட்டுட்டுட்டேன். தவிர நம்ம கூட வேலை பார்க்கும் இன்னொரு டாக்டர் மேடம் கூடத் தானே கிளம்பி வந்தாங்க… அதான் இதையெல்லாம் கேட்டுக்கணும் என்று தோணலை.” என்றாள் ஹேமா தோளைக் குலுக்கி.

“உன்னை நம்பி வந்தேன் பாரு… என்னை உதைக்கணும்…” என்றாள் சம்யு.

“கட்டி வச்சா…  இல்லை வைக்காமலா?” என்றாள் ஹேமா.

“என்னது!” என்றாள் சம்யு குழப்பத்துடன்.

“இல்லைடீ… நீ தான் உதைக்கணும் என்று சொன்னே!… அதான் கட்டி வச்சி உதைக்க போறியா, இல்லை கட்டி வைக்காம உதைக்க போறியான்னு தெறிஞ்சிட்டு, அதன் மூலம் ஜெனரல் நாலெட்ஜ் வளர்த்துக்கலாம் என்று தான்.” என்றவளை இழுத்து கொண்டு உள்ளே சென்றாள் சம்யு.

நீச்சல் குளத்தின் அருகே தான் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

நீச்சல் குளத்தை அடைய ரிசெப்ஷனில் விசாரித்தவர்கள், அந்த மிக பெரிய வரவேற்பினை கடக்க முயல, நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதை குறுகியதாக இருக்க, அங்கே ரூம் பாய்கள் பைகளை ட்ராலிகளில் கொண்டு செல்வதும், வெய்ட்டர்கள் உணவு வண்டிகளை தள்ளி செல்வதும் என்று கூட்டம் அதிகமாக இருக்க, சுவர் ஓரம் ஒதுங்கி நின்றார்கள்.

‘இவ்வளவு பெரிய ரிசார்ட் கட்டியவனுக்கு, உள்ளே செல்லும் வழியை மட்டும் ஏன் குறுகளாய் வைத்திருக்கிறான்?…’  என்ற எண்ணம் எழவே செய்தது.

சேர்ந்தாற்போல் பத்து பேர் அந்த பாதையை கடக்க முடியாது. இதில் அங்கங்கே கலை பொருட்கள், அலங்கார தூண்கள் அமைக்கப்பட்டு வழியானது, இன்னும் குறுகப்பட்டு இருந்தது .

அது காரணமாய் தான் அமைக்கப்பட்டு இருந்தது என்பதை, பெண்கள் இருவரும் அறிய  அறிய வாய்ப்பில்லை.

அந்த மிக பெரிய ரிசெப்சனை பிரதிபலிப்பது போல், எதிர் பக்க சுவர் முழுவதும் கண்ணாடி அமைக்கப்பட்டு இருந்தது.

கண்ணாடி என்றல் மனிதர்கள் தங்களையும் அறியாமல் தங்கள் உடை, தலைமுடி சரி செய்வது தானாய் நடக்கும் ஒன்று . கூட்டம் விலக காத்திருந்த சம்யுக்தாவும் ஹேமாவும் சுவரில் இருந்த கண்ணாடியில் தங்கள் நலுங்கிய உடை, பயணத்தால் கலைந்த தலை முடியை சரி செய்து கொண்டார்கள்.

இருவரும் அறியாத ஒன்று அது one way கண்ணாடி என்பதை. கண்ணாடி பின் இருப்பது சுவர் அல்ல. ஒரு அறை என்பதையும், உள்ளே இருப்பவர்கள் வெளியே நடப்பதை கவனிக்கும் பொருட்டு, பாதுக்காப்பு காரணங்களுக்காக அப்படி அந்த இடம் வடிவமைக்க பட்டு இருக்கிறது என்பதையும்.

பாதுகாப்பே தான்!… . திடீர் என்று அந்த ஹோட்டல்ல மேல் தாக்குதல் நடத்தினால், உள்ளே வரும் எதிராளிகளை அவர்களே அறியாமல் கவனித்து, அவர்களை தாக்க ,ஆவண செய்ய வகையில், புல்லெட் ப்ரூப் கண்ணாடியாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஒரே சமயத்தில் பலர் உள்ளே நுழைய கூடாது என்பதற்காக தான் ஹோட்டலின் உள் வரும் பாதையும் குறுகலாக அமைக்கப்பட்டு இருந்தது.

152cm x 2m - Mirror Window Film - Mirror Effect Glass Film One Way: Amazon.co.uk: Kitchen & Home

‘எதற்கு அந்த இடத்தை தக்க போகிறார்கள்? இவ்வளவு அழகான இடத்தை தாக்க யாருக்கேனும் மனம் வருமா?…’ என்று கேட்டால், அழகின் பின் ஆபத்தும் இருக்கலாம் என்பது போல், அந்த ஹோட்டல், ‘black panthar/கருங்சிறுத்தை ‘ மாபியா கூட்டத்தின் தமிழக தலைமையிடங்களில் ஒன்று.

welcome to Black Panther gaming channel - Black Panther Gaming | Facebook

‘காட்டின் பேய்/ ghost of the forest/ phantom of the forest’ ‘beautiful’, ‘unreal’ ‘nature’s excellence’, majestic என்று அழைக்கப்படுபவை கருங்சிறுத்தைகள்.

நல்ல செவிப்புலன், மிகவும் நல்ல கண்பார்வை மற்றும் வலுவான தாடை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. இவை புத்திசாலியான, எதிர்பாராத தாக்குதலுக்கு பெயர்பெற்றவை. அதன் கருமை நிறம் தனது எதிராளிகளிடம் இருந்தும் மறையவும், மறைந்து தாக்கவும் இரவு நேரங்களில் பயன்படுகிறது.

இந்த black panther/ கருங்சிறுத்தை குழு யாருடையது என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

தேஜ்ஜின் மாபியா குழுவே தான்.

ஜாக்கெல் நடத்தும், ‘black wolf consulting limited’ சட்டத்திற்கு உட்பட்டது என்றால், அதன் சட்டத்திற்கு புறம்பான நிழல் உலக கரம் தேஜ்ஜின், ‘பிளாக் பாந்தர் ‘ மாபியா.

ஒரு நாணயத்திற்கு எப்படி ரெண்டு பக்கம் இருக்குமோ, அதே போல் இந்த ரெண்டு குழுவும் ஒன்று தான் என்ற உண்மை சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பள்ளி, கல்லூரிகளில் விற்பனை ஆகும் போதை மருந்தினை எப்படி தடுப்பது என்ற விவாதம் உள்ளே நடந்து கொண்டிருக்க,பேசி கொண்டே இருந்த தேஜ் , மின்னல் தாக்கியது போல் அடுத்த நொடி தன் இருக்கையில் இருந்து எழுந்து கண்ணாடி அருகே சென்றான்.

தேஜ் கண்கள், சம்யுக்தாவை கண்டதும் அகல விரிந்தது. அவனையும் அறியாமல் அவன் முகம் லட்சம் கோடி சூரியன் உதித்தது போல் மிக பிரகாசமாய் ஜொலிக்க ஆரம்பித்தது.

கண் இமைத்தால் கூடச் சம்யுக்தா மறைந்து விடுவாளோ என்று அஞ்சியவன் போல், கண்களைச் சிமிட்டாமல், எத்தனையோ ஜென்மங்கள் இருந்த தவத்திற்கு கிடைத்த பலன்போல், சம்யுக்தா தேஜ்ஜூக்கு தோன்றினாள்.

உடல், உயிர், சுவாசம், இதய துடிப்பு என்று எல்லாமே சம்யுக்தா என்றே துடித்துக் கொண்டிருந்தது.

தேஜ் பரம்பரை கோடீஸ்வரன். அந்த ரிசார்ட்டிற்கு சொந்தக்காரன். இந்தியாவை தன் அரக்கத்தனத்தால் பயமுறுத்தி கொண்டிருக்கும் சத்ருஜித் என்ற அரக்கனுக்கே சிம்மசொப்பனமாய் இருப்பவன்.

எங்கெல்லாம் சத்ருஜித்தின் கொடுமைகள், சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடக்கிறதோ அங்கெல்லாம் இவனும், இவன் குழுவும் துரியோதனனை எதிர்க்கும் காண்டீபனாக நிற்பார்கள்.

மகா பாரத யுத்தம் கூடப் பதினெட்டு நாட்கள் தான் நடந்தது. ஆனால் இந்தத் தர்ம யுத்தமோ பதினைத்திற்கும் மேற்பட்ட வருடமாய் நடந்து கொண்டிருந்தது. பலர் பல கால கட்டங்களில் ஜோக்ராஜ், சத்ருஜித் எதிர்த்து இருக்கிறார்கள். இருந்த இடம் தெரியாமல் அழிந்தும் இருக்கிறார்கள்.

இப்படி எதிர்ப்பவர்களை எல்லாம் ஒன்று திரட்டி, சத்ருஜித்துக்கு எதிராக ஒன்றிணைத்தது, ஜாக்கெலும் , தேஜ்ஜூம் தான்.

அந்த யுத்தத்தின் ஒரு பகுதியாக, சத்ருஜித், ஜோக்ராஜ்ஜின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பல்தேவ் பற்றிய தகவல் இவர்களை வந்து சேர்ந்தது. பல்தேவிடம் தான் தேஜ்ஜின் ஒட்டுமொத்த பண பரிவர்த்தனை, யாரோடு இவர்கள் தொழில் செய்கிறார்கள் என்ற தகவல் எல்லாம் இருப்பதாக கூடுதல் தகவல்.

ஆதி முதல் அந்தம் வரை பல்தேவ் பற்றி விசாரிக்க ஆட்கள் எட்டு திக்கும் அனுப்பட்டார்கள். கோவாவில் பல்தேவ் பெண்களுக்கு எதிராக ஆடிய ஆட்டம் தெரிய வர அப்பொழுதே பல்தேவிற்கு குறி வைத்து விட்டார்கள்.

அப்படி விசாரிக்கும் போது கிடைத்த கூடுதல் தகவல் தான் பல்தேவின் அழகான மகள் சம்யுக்தா பற்றியது.

எப்படி மாலினி இறந்த பிறகு, பல்தேவ் ஆட்கள் சம்யுக்தாவிற்கு கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்தி இருந்தார்களோ, அதே போல் ஜாக்கெல், தேஜ் ஆட்கள் பதினைந்து வருடமாய் சம்யுக்தாவை கண்காணித்து வருகிறார்கள்.

தேஜ் சம்யுக்தாவை பற்றி அறியும்போது அவனுக்கு வயது பதினேழு.

தன்னை போல் தாயை இழந்த சிறுமி என்பதோ, இல்லை கேடுகெட்ட தந்தை ஒருவனுக்கு இப்படி தேவதை மாதிரி, அப்பாவியான, உயர்ந்த குணங்கள் எல்லாம் சிறு வயதிலேயே அமைய பெற்று இருந்த சிறுமி என்பதாலோ, அவனே அறியாமல் ஈடுபாடு வந்திருந்தது.

காரணமே இல்லாமல் அந்தச் சிறுவனுக்கு அந்தச் சிறுமியின் மேல் எழுந்த அன்பானது காலப்போக்கில் காதலாக விஸ்வரூபம் எடுத்து இருந்தது.

அருகே வராமலே தேஜ்ஜின் இரும்பு கரம் அன்றிலிருந்து சம்யுக்தாவை பாதுகாத்து கொண்டிருந்தது சம்யுக்தாவே அறியாமல்.

யுத்தகளத்தில் வேறு வழி இல்லாமல் போரிட்டு கொண்டிருக்கும் தேஜ் என்பவனுக்கு, தான் இருப்பது புதை மணல் என்பதே அறியாமல், பூஞ்சோலையில் தேவதையாய் வளர்ந்த அந்தப் பெண்ணின் மேல் காதல்.

தன்னை தாயுமானவனாய் ஒருவன் காப்பாற்றி கொண்டு இருப்பதையோ, தனக்காக உயிரை எடுக்கவோ, உயிரைக் கொடுக்கவோ கூடத் தயங்காத ஒருவன் இருப்பதை சம்யுக்தா அறியாமல் போனது காலத்தின் சதிராட்டமே.

இந்த வகையில் விக்ரம், ஈஸ்வர் இருவரின் காதலுக்கும் சீனியர் தேஜ் என்று தான் சொல்ல வேண்டும்.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு நாளாவது தூரத்தில் இருந்து சம்யுக்தாவை பார்க்கவில்லை என்றால் தேஜ் வாழ்வே சூனியமாகி விட்டது போல் தோன்றி விடும்.

தேஜ் என்பவனின் உயிர், சுவாசம் எல்லாமே அவன் கையின் அருகே, கண்ணாடிக்கு மறுபுறம் தான் நின்று கொண்டிருந்தது, தன்னை ஒருவன் பல காலமாய் ஆராதித்து கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்.

கண்ணாடி முன் நின்று தானை சரி பார்த்து கொண்டிருந்த சம்யுக்தாவை கண்ட தேஜ் முகம் புன்னகையை தத்து எடுத்தது.

‘அழகின் பிறப்பிடமே, தான் அழகாய் இருக்கிறோமா என்பதை கண்ணாடி பார்த்து தெரிந்து கொள்வதை கண்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

சம்யுக்தாவை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், தன் பின்புறம் திடீர் என்று பாடல் ஒலிக்க, அதில் கவனம் கலைந்தான்.

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்.
அந்த ஒரு…. ஒரு… ஒரு சொல்லில்
உயிர் வாழ்வேன்…’ என்ற பாடலை, இவனை கிண்டல் அடிப்பது போல் அவன் தளபதிகளில் ஒருவன் ஒலிக்க விட, கையில் கிடைத்த கோப்பினை எடுத்து, விசிறி அடித்தான் தேஜ் அவன் மீது விளையாட்டாக.

முகம் முழுவதுமே புன்னகையில் ஜொலித்து கொண்டு தான் இருந்தது.

காதலிப்பவர்களை உடன் இருப்பவர்கள் கிண்டல் அடிக்கும் போது எப்படி பொய்யாக கோபப்பட்டாலும், மனதிற்குள் ரசித்து, வெட்கப்படுவார்களோ அப்படியொரு நிலையில் இருந்தான் அந்த ஒரு தலை காதலன்.

“இதயம் படம் முரளியே காதலை நொந்து விடும் அளவுக்கு, இருக்கு நீ செய்யும் இந்த வேலை… சொல்லாத காதல் செல்லாது பாஸ்… இதெல்லாம் 80களில் ட்ரெண்ட். ஹீரோயின் அறியாமல், ஹீரோ பின்னால் சுற்றுவது…

இப்போ எல்லாம் காலை காதல் சொல்லி, மதியம் டேட்டிங் சென்று, மாலை மேரேஜ் என்று பசங்க ரொம்ப பாஸ்ட்…  உலகத்தையே கலக்கி கொண்டிருக்கும் மாபியா கூட்ட தலைவன் என்று தான் பெத்த பெயர்…பொண்ணு கிட்டே போய் பேச சொல்லு… பூகம்பம் வந்த கட்டிடம் மாதிரி கை, கால் நடுங்குது…வார்த்தை வரலை…  பாஸ்… மிடில…

இப்போ சொல்லுங்க பாஸ்… பட்சியை தூக்கிடலாம். அப்புறம் நிதானமாய் பேசி உங்க மனதை புரிய வையுங்க.” என்ற தன் வலது கையை கண்டு பல்லை நறநறவென கடித்தான் தேஜ்.

கோபம் தீர அவனை துரத்தி, துரத்தி மொத்தி எடுத்த தேஜ் திரும்பிய போது, சம்யுக்தா ஹேமாவுடன் ரிசார்ட்ட்டிற்குள் நுழைந்திருந்தாள்.

“தனியா வந்திருக்கா போலிருக்கே!… எப்பவுமே இவ்வளவு நேரம் கழித்து வெளியே வர மாட்டாளே!… அதுவும் ரிசார்ட்டுக்கு … இரவு வேலையில்!… கூடவே வரும் மலை மாடுங்க, காண்டாமிருகங்களை வேற காணோம்… பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பு…” என்றவன் வேறு வழியாக ரிசார்ட்ட்டிற்குள் நுழைந்தான் சம்யுக்தாவை தொலைவில் இருந்து பார்த்து ரசிக்க.

இது எதையும் அறியாத சம்யுக்தா, விருந்தாகவும், பேச்சிலர், மெய்டன் பார்ட்டியாகவும் கலை கட்டி கொண்டிருந்தது அந்த நீச்சல் குளத்தை அடைந்தாள்.

ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த டாக்டர்கள், அவர்கள் குடும்பத்தினர் வந்திருக்க, அவர்களுடன் கலந்து கொண்டார்கள்.

மணமக்களை கண்டு வாழ்த்தினை தெரிவித்து விட்டு,கொண்டு வந்த பரிசினை கொடுத்து, போட்டோவிற்கு நின்று விட்டு உணவருந்தும் இடத்திற்கு வந்தார்கள்.

Adult Swim: 10 Summer Pool Parties in Los Angeles Los Angeles Magazine

சாப்பிட்டு கொண்டே லவுஞ்சில் இருந்த நாற்காலியில், அமர்ந்து கொண்டு அங்கு ஜோடியாக நடனம் ஆடியவர்களை பார்த்துக் கொண்டு, சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். நல்ல பொழுதுபோக்காய் தான் இருந்தது.

அதிக சத்தமுள்ள ஸ்டிரியோக்கள், உட்சபட்ச ஒலியுடன், ஆங்கில பாடலை அலறிக் கொண்டு இருந்தது.

மரண வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள். அதை போல் அலறி கொண்டிருந்தது அந்த இடம். இசையை கொலை செய்வது எப்படி என்று கிளாஸ் நடந்து கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும், ‘DJ டிஸ்க் ஜாக்கி’ என்பவன் தேர்ந்தெடுத்த பாடல்களை கேட்டுச் சம்யுவும், ஹேமாவும் தலையைப் பிடிக்காத குறை.

எல்லாமே பிரேக் அப் சாங். மணமகனும், மணமகளும், ‘என்னை விட்டு ஓடிட்டியே!…’ என்று ஒப்பாரி வைக்காத குறையாய், அந்த ஆங்கில பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தது.

“என்ன இழவுடீ இது?… நடப்பது திருமணத்திற்கு வர முடியதவர்களுக்கான ரிசெப்சன் மாதிரி. அதுல போய் ஓடிப் போயிட்டான், பிரேக் அப், கள்ள காதல், செகண்ட் லைன் ஓட்டுவது, எப்படி கொல்வது போன்ற கருத்துக்களை அள்ளித் தெளிக்கறாங்க!… அதையும் கேட்டுட்டு, ஆஹா ஒஹ்ஹனு புகழ்ந்து ஆடிட்டு இருக்குங்க!…” என்றாள் ஹேமா சம்யுவின் காதுகளில்.

“ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை… நல்லா டான்ஸ் ஆடணும் என்றால் இந்திய படப் பாடல்களிலேயே, கேட்டவுடன் கால்கள் தானாய் தாளம் போட வைக்கும் பாடல்கள், கானா சாங்ஸ் நிறைய உண்டு. இங்கிலிஷ் சாங்ஸ்ல கூட நல்ல பாட்டுங்க, ஆல்பம்ஸ் எவ்வளவோ இருக்கு. எல்லோரும் சேர்ந்து குத்துவோம், ஆடுவோம் என்று மியூசிக் ஒரு பக்கம் அலறுது. பாட்டு வரிகள் அப்படி இருக்கு… அதையும் ரசிச்சிட்டு ஆட்டிட்டு இருக்காங்க.” என்றாள் ஹேமா நொந்தவளாய்.

“இசை எத்தனையோ மனதிற்கு ஆறுதல் தருபவை. மனம் சோர்ந்து போகும் போது, மெலடி பாடல்களை கேட்டால், மனம் தானாகவே டிப்ரெசனில் இருந்து மீண்டு விடும். 80களில் வந்த பாடல்களை கேளு. இசை தனியாக இருக்கும். பாடல் வரிகள் தெளிவாக கேட்கும். ரெண்டும் தனித்தனியாய் சேர்ந்து ஒன்றாகவே பயணித்து நம்மை எல்லாத்தையும் மறக்க வைத்து விடும். 

எத்தனையோ இரவு நேர பயணங்களில், வீடு விழாக்களில் ஒலித்த அந்த பாசிட்டிவ் பாடல்கள் எங்கே?… காதல், திருமணம், பக்தி, குத்து டான்ஸ், சோகம், வாழ்வை ரசிப்பது என்று எது வேண்டும் என்றாலும், உற்ற துணையாய் இசையின் ஞானி ஒருத்தர் போதுமே!….

எத்தனையோ பேரின் வாழ்வுக்கு உற்ற துணையாய் இருந்தது இளையராஜா சார் பாடல்களில் இல்லாத, மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் மேல் ஏறி நிற்பது போல் கதறும் இந்த பாடல்கள்?…

வந்தோம்… வாழ்த்தியாச்சு. வந்ததுக்கு சாப்பிட்டாச்சு… கிளம்பலாம்… இங்கிருந்து போய்ச் சேரவே ரெண்டு மணி நேரம் ஆகும்… இந்தத் தலைவலியை கேட்பதற்கு , சீக்கிரம் போனா சீக்கிரம் தூங்காவது செய்யலாம்.” என்றாள் சம்யு.

“இருடீ!…    இந்த   மாதிரிக்   கூத்து எல்லாம், அடிக்கடி பார்க்கக் கிடைக்காது.  கொஞ்ச நேரம்   பார்த்துட்டு   போகலாம்.”  என்ற ஹேமா பேச்சை கேட்டு  அங்கேயே அமர்ந்து பார்த்து கொண்டு    இருந்தார்கள்.

நடுவில் ஹேமாவிற்கு, அவள் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவர்கள் அங்கே இ.சிஆரில் தான் இருப்பதாகவும், அவர்களின் உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், அந்த வீட்டின் மூத்த தலைமுறை அவளை பார்க்க விரும்புவதாகவும் சொன்னவர்கள், அன்று அவர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்றும் சொல்லி, ஹேமாவை அழைத்து போக வருவதாகவும் சொன்னார்கள்.

விஷயத்தைச் சம்யுவிடம் சொல்ல, ஹேமாவை கிளம்ப சொல்லிய சம்யு, ‘அழைத்து வந்த மணப்பெண் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்திருப்பாள்’ என்றும் சொல்ல, அங்கு இருப்பவர்களும் தெரிந்த மருத்துவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என்பதால் சம்யுவை விட்டுக் கிளம்பினாள் ஹேமா .

அடுத்து நடக்க போகும் பல விபரீதங்களை, தன் தோழியின் உயிர், மானத்திற்கே அங்கே மிக பெரும் ஆபத்து ஏற்பட போகிறது என்பதை மட்டும் ஹேமா முன்னரே அறிந்திருந்தால், சம்யுக்தாவை அந்த இடத்தை விட்டு இழுத்து கொண்டு ஓடியே இருப்பாள்.

அது வரை எந்த தீங்கும் சம்யுக்தாவை நெருங்காமல் பார்த்து கொண்டு இருந்த தேஜ், விக்ரம், ஜாக்கெல், பல்தேவ் அறியாதது, சம்யுக்தா என்ற பெண் ஆபத்தை தன்னை நோக்கி இழுக்கும் காந்தம் போன்றவள் என்பதை.

சில சமயம் சம்யுக்தா தானாகவே ஆபத்தை நோக்கி சென்று விடுவாள். சில சமயம் ஆபத்து இவளை தேடி வரும்.

கிளம்பிய ஹேமாவும், அவளை அனுப்பி வைத்த சம்யுவும் அறியாதது, மணப்பெண், மணமகன் அந்த பார்ட்டியை விட்டு, ஹோட்டல் அறைக்கு எஸ்ஸாகி விட்டது.

பார்ட்டி பிளானார் தலைமையில் தான், அந்த பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது.

வந்தவர்களை ஒரு மணி நேரத்திற்கு வரவேற்ற மணமகனும், மணமகளும் ஏற்கனவே புக் செய்து இருந்த அறைக்குத் தனிமை தேடி சென்று விட்டார்கள்.

ஹோட்டலில் தங்க வந்தவர்கள், பார்ட்டி ஆட்கள் என்று ஆட்கள் பல்வேறு பக்கம் சிதறி போனார்கள். வந்தவர்களில் பலர் அது வீக் எண்டு என்பதால் அங்கேயே தங்கும் திட்டத்தோடு தான் வந்தே இருந்தார்கள்.

சிலருக்கு அங்கு வந்த பிறகு ஜோடிகள் கிடைக்க, அவர்களும் அங்கேயே தங்கும் பிளான் செய்து கொண்டு இருந்தார்கள்.

இது எதையும் அறியாத சம்யு, அங்கு இல்லாத மணமகளை தேடி கொண்டு இருந்தாள்.

அதற்குள் தங்களுடன் இணைந்து ஆடும் படி பலர் கேட்க, அந்த அழைப்பை எல்லாம் தன்மையாக மறுத்துக் கொண்டே, பார்ட்டி நடக்கும் இடத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஒரு சில சமயங்களில் ஒரு இடத்தை விட்டு நாம் கிளம்புவதும், கிளம்பாமல் அங்கேயே தங்குவதும் 12B கதை போல தான் ஆகும்.

அது தான் அங்கே நடக்க ஆரம்பித்தது.

கிளம்பாமல் அங்கேயே தங்கி, அங்கே அரங்கேறும் அந்த இசை, கலாச்சார கொலையை பார்த்து கொண்டிருந்த சம்யுக்தாவின் வாழ்வில் தேஜ் என்பவனுக்கு பதில் ஈஸ்வர் நுழைய விதி விளையாட ஆரம்பித்தது .

எப்படி விக்ரம் காதலுக்கு ஈஸ்வர் எதிரியாய் வந்தானோ, அதே போல் தேஜ் காதலுக்கும் ஈஸ்வர் எதிரியாகி போனான்.

பல வருடமாய் காத்திருந்த, பாதுகாத்திருந்த தேஜ் என்பவனின் காதல், ஈஸ்வர் கைகளுக்கு சென்றது.

அது தேஜ் கோட்டை.
அவன் சாம்ராஜ்யம். அவன் ஆட்கள் காவலுக்கு இருக்கும் இடம். ஊர் உலகத்தில் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒன்று என்றாலே கொதித்து எழும் தேஜ், தன் உயிரானவளை ஆபத்து நெருங்க விட்டு இருந்தான்.

இது எப்படி நடந்தது என்று பலமுறை பின்னர் அவன் யோசித்தும் தேஜ்ஜூக்கு விடை கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சம்யுக்தா, ஈஸ்வர், தேஜ் வாழ்வை மாற்றி போட போகும் நிகழ்ச்சிகளுக்கு ஆச்சாரம் இடும் வேலையை விதியானது அழகாய் செய்து கொண்டிருந்தது.

சுற்றி இருந்த பல பாதுக்காப்பு அரண்கள் தகர்ந்து விட, எந்த கரம் சம்யுக்தாவை காக்க வர போகிறது?

புள்ளி மானை வேட்டையாட வெறி கொண்ட பல ஜந்துக்கள் காத்திருந்தன.

புள்ளி மான் புலியாகுமா?.. இல்லை பலியாகுமா?

ஆட்டம் தொடரும்…