vanam-9

vanam-9

கதம்பவனம் – 9

மங்களகரமான நாள் அல்லவா இன்று,வீட்டின் கடைசி மகனுடைய திருமணம் அதுவும் தனக்குப் பிடித்த மருமகளுடன் கேட்கவா வேண்டும் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு நிகராக நின்றார் சுந்தரம்,அவருக்குக் குறையாத அழகுடன் பங்கஜம் சிகப்பு வண்ண பட்டு புடவை அணிந்து, கழுத்தை ஒட்டி ஒரு கல் அட்டிகை மற்றும் ஒரு நீள சரடு,கையில் ஒற்றைக் கல் வலையில் மற்றும் சிகப்பு கண்ணாடி வளையல்கள்,நீண்ட முடியை பின்னலிட்டு அதில் சாரமாக மல்லிகை பூ ,மஞ்சள் பூசிய முகத்தில் நிறைவான புன்னகை,அதிலும் கணவனுடன் நின்று அனைவரையும் வரவேற்கையில் சொல்லவா வேண்டும்.

சுந்தரத்தின் கண்கள் அவ்வப்பொழுது பங்கஜத்தை தீண்டி செல்ல,முதுமையின் வெட்கமும் அழகு தான் என்று எண்ண வைக்கின்றது,மகன்கள் எல்லாம் மருமகள்களை மருகி மருகி பார்த்துக் கொண்டே வேலை செய்ய,முதுமையில் தெளிந்த நீரோடையாக நேர் கொண்டு காதல் புரிந்தார் சுந்தரம்.

ஐயர் கேட்பதை அவர் அருகில் இருந்து மாதங்கி எடுத்து கொடுத்துக் கொண்டு இருந்தாள்,மாப்பிள்ளை வீட்டு சார்பாக மூத்த மருமகள் என்றால்,பெண் வீட்டு சார்பாகச் சொந்த தங்கை அல்லவா,அதுவே அவளைப் பெருமை கொள்ளச் செய்தது,சொந்த பந்தங்கள் இடையில் பார் என் பரிமாணத்தை என்று பறை சாற்றும் விதமாகத் தோரணையாக அனைத்தையும் செய்தாள்,தங்கை மீது உள்ள பாசத்துக்காகச் செய்திருந்தால் பலன் கிடைக்குமோ என்னவோ.
—————————————————————————————————-
முதலில் மாப்பிள்ளையை அழைத்து வர சொல்ல கண்ணன்,அர்ஜுனன்,ராமன்,செல்வம் ஆகிய அண்ணன்கள் அழைத்து வர,கண்ணில் அலட்சியத்துடனும்,கம்பிரத்துடனும் நடந்து வந்தான் ராஜன்,சுந்தரத்திற்குத் தன்னைக் காண்பது போல ஒரு பிரம்மை,பிள்ளைகள் வளருவதும் வளர்ந்துவிட்டதும் ஏனோ நமக்குச் சுணக்கத்தைத் தான் தருகிறது,அதற்குள் வளர்ந்து விட்டானா என்ற நிலை தான் அணைத்துப் பெற்றோர்களுக்கும்,சுந்தரம் மட்டும் விதி விலக்கா என்ன.

அவன் மேடைக்கு வரவே பங்கஜத்தை அழைத்துக் கொண்டு அவரும் மேடை ஏறினார்,சில பல சடங்களுக்குப் பின் பெண்ணை அழைத்து வர சொல்ல,விமலாவை அழைத்து வந்தனர் அமுதா,சீதா,தாமரை அவர்கள் மேடையை அடையும் தருவாயில் அவளது கையை மாதங்கி பற்றிக் கூட்டி சென்றால்,நொடி பொழுதில் மூவரும் தங்களது முகப் பாவனையை மாற்றிக் கொண்டு மேடை ஏறினர்.

கண்ணனுக்குத் தான் வருத்தமாக இருந்தது,அதனை மறைத்து மனைவியுடன் நெருங்கி நின்று அனைத்து சடங்குகளையும் செய்தான்,ராஜன் சுந்தரத்தை ஒரு பார்வை பார்த்து வைத்தான்,’இனிமேதானே இருக்கு’ என்பது போல் இருந்தது அவனது பார்வை,அவனது பார்வையை பார்த்தும் பார்க்கததைப் போலத் திரும்பி கொண்டார்.

பெற்றவர்களுக்குப் பாத பூஜை செய்து,மந்திரங்கள் சொல்லி மங்கள நாணை கையில் எடுத்து கொடுக்க,விமலாவின் கழுத்தில் கட்டி தனது மனைவி என்னும் உயர்ந்த பதவியைக் கொடுத்தான் ராஜன்,வகுடில் போட்டு வைத்து,அவளது கால் பிடித்து மெட்டி போடும் வரை தனது அண்ணிகளின் கேலிகளை ஒரு சிரிப்புடன் எதிர் கொண்டான்.

அடுத்து சங்கு மற்றும் மோதிரங்கள் எடுக்கும் விளையாட்டு நடக்க அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்,மாதங்கி மோதிரத்தை குடத்துக்குள் போட இருவரும் கையை வீட்டு தோலவினர்,மாதங்கி விமலாவை ஊக்க படுத்திக் கொண்டு இருந்தாள்,விமலாவோ இரு முறையும் அவனுக்கே விட்டு கொடுத்தாள்,மாதங்கி முகம் சுண்டி போக,அவள் காதில் “ஏண்டி,தம்பிக்கே விட்டு கொடுக்குற,நீ எடுத்துதான் கெட்டி காரத்தனமா இருந்து குடும்ப நடத்துவனு அர்த்தம்”.

“லூசு மாதிரி உலராத அக்கா நம்பக் கொஞ்சம் விட்டு கொடுத்த தான் அவுங்களுக்கும் விட்டுக் கொடுக்கத் தோணும்,நீ பாரு இப்போ மோதிரத்தை நான் தான் எடுப்பேன், மாலையைச் சரி செய்து கொண்டே தனது தமைக்கைக்குப் பதில் அளித்தாள் விமலா “.

அவள் சொன்னது போலவே இந்த முறை மோதிரத்தை விமலா தான் எடுத்தால்,தனது தமக்கையைப் பார்த்துப் புருவம் உயர்த்திக் கேட்க,அதனை அலட்சியம் செய்தாள் மாதங்கி (அது சரி இதெல்லாம் புருஞ்சுட்டாலும்).

சொந்தங்கள்,நண்பர்கள் வாழ்த்துக்களை பெற்று கொண்டு மணமக்கள் உணவு உண்ண வர,அங்கே தனது அண்ணன் மார்களும்,அண்ணி மார்களும் நின்று கொண்டு இருந்தனர்,அண்ணன்கள் திருமணத்தில் தான் செய்த அனைத்து தனக்கு திரும்ப கிடைக்கும் என்று அறிந்தவன் விமலாவை எச்சிரிக்கை செய்ய எண்ணி அப்போதுதான் அவள் புரம் திரும்ப.

அவன் பேச வருவதற்குள் அமுதா அவன் அருகில் வந்து “என்ன தம்பி பொண்டாட்டிய உஷார் பண்ண பாக்குறீங்களா,எங்க கல்யாணத்துல என்ன கலாட்டா பண்ணீங்க,பேசாம இருக்கணும்”,விமலாவை பார்த்துத் தோள்களைக் குலுக்கி கொண்டான்,அவளுக்குத் தான் ஒன்னும் புரியவில்லை.
அவர்கள் சாப்பிட அமரவே ஒருகத்திகள் உப்பை கொட்டி ராஜனுக்குத் தெரியாமல் அதன் மீது சாதத்தைப் பரப்பினர்,அவனும் அண்ணன்களுடன் பேசி கொண்டே அதனைக் கவனிக்கவில்லை, இங்கோ விமலாவுக்கு அப்பளம் அடிக்க அமுதா,சீதா,தாமரை அனைவரும் சுற்றி வளைத்து அவள் எதிர் பார்க்காத நேரம் அவள் தலையிலும்,கன்னங்களிலும் அடித்தனர்,”ஐயோ அக்கா”அவள் சீனுங்குவதைப் பார்த்து அனைவரும் சிரிக்க,ராஜனும் சிரித்தான்.

அடுத்து அவனுக்குச் சாம்பார் ஊற்ற,அதனை பிசைந்து வாய்க்குள் வைத்தவன் அடுத்த நொடி கொமட்டி கொண்டு கை கழுவும் இடம் நோக்கி சென்றான்,அவன் செல்வதைப் பார்த்த அண்ணன்கள் அனைவரும் சிரிக்க,விமலாவிற்கும் புன்னகை,ஒருவராகக் கேலியும் கிண்டலுமாக உண்டு முடித்து அனைவரும் மண்டபம் விட்டு கிளம்ப மாலை நெருங்கியது.

பாலும் பழமும் உண்ண முதலில் ராஜன் வீட்டுக்கு சென்று உண்டு விட்டு,விமலாவின் வீட்டுக்கு வந்தனர்,அங்கே ஒரு வாரம் கழித்து மறுவீடு விருந்து என முடிவு செய்யப் பட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர்.

செல்லும் முன் விமலாவுக்கு அழுகை தாங்க முடியவில்லை,தந்தை செல்லம் என்பதால் அவரை மட்டும் கட்டி கொண்டு அழுதாள்,தாய்த் திடமாக இருந்தார் பக்கத்தில் தானே என்ற எண்ணம்,ராஜனுக்கும் அதே தான் போலும்,இருந்தாலும் பெணின் உணர்வுக்கு மதிப்பளித்தான்,இதில் மாதங்கி அழுதது தான் கூத்தாகி போனது,விமலாவிற்கே எரிச்சலாக இருந்தது,அழுதாள் கூடத் தங்கை பாசம் என்று விட்டு விடலாம்,அவளை அப்புடி வளர்த்தோம் இப்புடி வளர்த்தோம் என்று வரலாறு பேச,

ராஜன் அவன் அண்ணிகளை முறைத்துப் பார்த்தான் அமுதா வேறு எங்கோ பார்க்க,சீதா ராமனுடன் பேசி கொண்டே நகர்ந்து விட்டால்,தாமரையோ செல்வம் பின்னால் ஒழிந்து கொண்டால்,பின்ன என்ன முதல் நாள் இரவில் அத்தனை தூரம் ராஜனுக்குப் பாடம் எடுத்தனர்,திருமணம் முடியும் வரையில் எதுவும் தகாத செயல் நடந்தாலும் பொறுத்தருள வேண்டுமென்று கேட்டு கொண்டனர்,அவனும் அவர்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து அமைதிக்காக்க,அவனது அமைதியை சோதித்தால்.

அதன் பின் ராஜன் வீட்டுக்கு சென்றனர்,சென்றவுடன் ராஜன் அண்ணன்களுடன் சென்று அமர்ந்து கொள்ள,விமலா பெண்களுடன் கலந்து கொண்டாள்,சுந்தரமும்,பங்கஜமும் வர விளக்கேற்றி நானும் இக்கதம்பவனத்தில் ஓர் அங்கமென கை கோர்த்து கொண்டாள்

திருமண வீடு என்பதைக் கூடி இருக்கும் சொந்தமும்,சந்தன மனமும்,பிள்ளைகளின் ஆர்ப்பரிப்பு,பெண்களின் சிரிப்பொலியும் எடுத்துரைத்தது,குளுமையான இரவு வேளை ஆரம்பமாக

அமுதா,”விமலா நீ போய்க் குளி”.

“அக்கா “,அவள் பாவமாகப் பார்க்க அமுதாவிற்குச் சிரிப்பு தான் வந்தது,விமலா அந்த விட்டுக் கடை குட்டி விஜியை விடச் சிறு பிள்ளை தான்,அதனால் அவள் பயம் கொள்ள அவளைச் சமாளித்துக் குளிக்க அனுப்பினால்.

சீதா,”என்ன தாமரை இவ குளிக்கச் சொன்னதுக்கே இந்தப் படா இருக்கு,உனக்கு மேலே இருப்பா போலையே”,

“போங்க அக்கா “,எங்க போகச் சொல்லுற நீ, உன் புருஷன் இவ எப்போ தனியா கிடைப்பான்னு பார்த்து கிட்டே இருக்காரு,நீ ஓடு தம்பிய கவனி”,சீதா விரட்ட வெட்கம் கொண்டு ஓடிவிட்டாள்,செல்வம் ஒரு வாரமாக அவளிடம் பேச முடியவில்லை,அவள் அங்குமிங்கும் சென்று வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான், அதனைத் தாமரையும் அறிவால் அறிந்தும் என்ன செய்ய அனைவர் முன்னிலையில்.
———————————————————————————————-
மாதங்கி ,”என்னடி தலைக்குக் குளிச்சுட்டுத் துவட்டமா பேராக்கு பார்த்துட்டு நிக்குற”,அவளது மனநிலை புரியாமல் பேசி கொண்டே போனால்.

தனது தாயையும்,தமைக்கையும் எண்ணும் பொதுக் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது,பழகிய உறவாக இருந்தாலும் அவள் முதல் அடி எடுத்து வைக்கப் போகும் தருணம் அல்லவா,அவள் கை பிடித்துத் தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டாமா,எண்ண எண்ண இன்னும் அழுகை வந்தது.

அவள் உணர்வுகள் மாதங்கிக்கு புரியவில்லை போலும் அதுசரி,சகோதரியிடம் அனுசரணையாக இருந்திருந்தால்.மனிதர்களின் அன்பு புரிந்திருந்தால்,உணர்வுகளை மதிக்கத் தெரிந்திருக்கும்,அவள் தான் அதைச் செய்யவில்லை,இதற்கு அவர் தாயும் ஒருவகையில் காரணம்.

மாதங்கி அவளை வதைப்பதை பார்த்த மற்ற மூன்று பெண்களுக்கும் தாங்க முடியவில்லை,அக்கா நீங்க போய் அத்தை கூட இருங்க,உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்”,எதை சொன்னால் அவள் அவ்விடம் விட்டு செல்வாள் என்பதை அறிந்து அமுதா உரைக்க,மாதங்கியும் வாயெல்லாம் பல்லாக,

“சரி அமுதா நீங்க ரெடி பண்ணுங்க நான் அத்தை கிட்ட போறேன்”,அவள் சென்றவுடன் விமலாவின் அருகில் வந்த மூன்று பெண்களும்.

“அம்மாடி,ராஜன் ரொம்ப நல்ல பையன் அதுக்கு மேல நீ யோசிக்காத”அதன் பின் அவளைத் தயார் செய்து அவளைச் சமாளித்து,அவளை உள்ளே தள்ளிய பின் தான் மூச்சே வந்தது,அமுதாவும்,சீதாவும் தாமரையே தேவலாம் என்பது போல் எண்ணி கொண்டனர்.

அறைக்குள் பயத்துடன் நுழைந்தவளின் எண்ணம் எங்கெங்கோ செல்ல,ராஜனை கவனியாது அவள் போக்கில் நின்று கொண்டு இருந்தாள், அவன் அவளைத் தான் கன்னத்தில் கை ஊன்றி பார்த்துக் கொண்டு இருந்தான்,உரிமை இல்லாத பெண்ணைப் பார்ப்பது தவறு என்பதால் கூடவே இருந்தாலும் ஒரு முறை கூடத் தனது பார்வை அவளைத் தவறாகத் தீண்டியது இல்லை,ஆனால்

இன்று தனது மனைவியாக வந்த பின் அந்தக் கண்ணியம் எதற்கு என்று எண்ணினான் போலும்,மேல் இருந்து கீழ் நோக்கி சென்றது அவனது கண்கள்,அவனை எதிர் நோக்க தைரியமற்று நின்று கொண்டுருந்தாள்,

“வந்து உட்காரு”,

அவள் தலையைத் தூக்கி அதிர்ந்து பார்க்க “அவன் முகத்தில் கண்ணனுக்கு எட்டாத ஒரு புன்னகை”,பேசியது அவன் தான, இன்னும் நம்ப முடியவில்லை.
—————————————————————————————————-
அதி காலையில் விழித்த விமலா முதலில் பார்த்தது ராஜனின் முகத்தைத் தான் அவளைக் கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் வைத்துத் துயில் கொண்டு இருந்தான் அந்த முரடன், என்ன நடந்தது என்பதைச் சிந்திக்கக் கூட அவளால் முடியவில்லை,நேற்று நடந்த நிகழ்வு அத்தகையது.

அப்புடி என்ன நடந்தது……….

error: Content is protected !!