Vanavil vazhkai 13

Vanavil vazhkai 13

பலராமன், அமுதா, வெண்பா மூவரும் ஆனு திறந்த வாயை மூடாமல், வாயில் ஈ போறது தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றனர். ஏய் “என்னப்பா ஆச்சு? ஏன் என்னையே பார்க்குறீங்க , என்று கேட்டாள். வெண்பா , தான் முதலில் வாயைத் திறந்து, “ ஏன்டி, உனக்குக் கன்னடம் தெரியும்னு சொல்லவில்லையே, எப்படி இந்த மொழியைக் கத்துக்கிட்டே!, என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

அடிப் போடி இவளே, “ நான் எங்கே கன்னடம் கத்துக்கிட்டேன்? “ அப்போ, ‘ இப்போ பேசினியே’, என்றாள். ஈஈஈஈஈஈஈ அது கூகுலில் இருந்து சுட்டதுடி என்று கூறவும், அவளை அமுதாவும், வெண்பாவும் வெட்டவா, குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்து வைத்தனர்.

அவர்கள் பார்வையைப் பார்த்தவள், அடி கன்பார்ம், என்று நினைத்து, யாழினி எஸ்கேப் என்று ஓடினாள். இருவரும் அவளைத் துரத்திப் பிடித்து முதுகில் நாலு மொத்து மொத்தினார்கள். ஏய் விடுங்கடி, நீயும், அப்பாவும் யோசிக்கலை. அதான், நானாகப் பார்த்து கத்துக்கிட்டு கேள்வி கேட்டேன். அதுக்கா இந்த அடி அடிப்பார்கள் என்று கூறினாள். பலராமன், அவளை அணைத்துக் கொண்டார்.

சகோதர சகோதரிகளுக்கும் பானுமதியின் அன்பு வணக்கம். இது வரை என் வானவில் வாழ்க்கை கதையைப் படித்து கருத்து கூறியும் ஆதரவும் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரொம்ப என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து எனக்கு ஆதரவையும், கருத்துக்களையும் கூறுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். இதோ வானவில் வாழ்க்கை 9 வது பாகம். படித்து தங்கள் கருத்துக்களைக் கூறவும்.

மூன்று பேரும் தாங்கள் வேறு ஊருக்குப் புலம்பெயரத் தயாராயினர். யாழினி, அப்பா படுப்போமா. நாளைக் காலையில் நிறைய வேலை இருக்கிறது என்று கூறினாள். ம்ம் சரிம்மா, போய்ப்படுங்கள் என்று கூறினார். மூவருக்கும் படுத்தது தான் தெரியும். அடித்துப் போட்டது போல மூவரும் தூங்கினர். காலை எட்டு மணிக்கு சூரிய ஒளி பட்டு எழுந்தாள்.

யாழினி, அமுதாவை எழுப்பாமல் தன் காலைக் கடன்களை முடித்துவிட்டு, கீழே இறங்கி வந்தாள். கதவைத் திறந்து, வெளியே வந்து பால் பாக்கெட்டையும், நியூஸ் பேப்பரையும் எடுத்து வந்தாள். நியூஸ் பேப்பரை ஷோபாவில் போட்டு விட்டு , கிச்சனில் சென்று டிக்காசன் இறக்கி விட்டு, பாலைக் காய்ச்சினாள்.

காபியைத் தனக்கும் மட்டும் கலந்து வைத்து விட்டு, குக்கரில் அரிசி பச்சைபருப்பைப் கழுவி தேவையான நீர் ஊற்றி அடுப்பில் வைத்தாள். பின் பிரிட்ஜில் பீன்ஸ், கேரட், தக்காளி, கத்தரிக்காய், அனைத்திலும் இரண்டு இரண்டு வெட்டி, வெங்காயம் வெட்டி வைத்தாள். பாசிப் பருப்பில் அனைத்துக் காய்களையும் தேவையான தண்ணீர் ஊற்றி வேக வைத்தாள்.

பின் தனக்குரிய காபியை எடுத்துக் கொண்டு, ஹாலுக்கு வந்து காபியைக் குடித்துக் கொண்டே நியூஸ் பேப்பரைப் புரட்டினாள். யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டு, போய்க் கதவைத் திறந்தாள். ஒரு வயதான அம்மா, கீரை, காய்கறிகளைச் சுமந்து நின்றாள். “நீ யாருமா புச்சா இருக்கே?” ஐயா! இல்லையா? என்றார். அப்பா, தூங்கிட்டு இருக்கார். அப்படியா கண்ணு, ஐயா வயக்கமா எனிக்கிட்டே தான், “ காய்கறி, கீரை எல்லாம் வாங்குவாரும்மா. “

இல்லை, எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். நீங்க போங்க என்றாள். இன்னாம்மா நீ, நான் அவருக்காகவே ப்ரெஸா கீரை, காய்லாம் கொண்ணாந்திருக்கேன். நீ இன்னாம வேணாம்னு சொல்லிக்கினு ஈக்கிறே. நீ போய் அந்த ஐயாவை இட்டாம்மா. அவரு வாங்குவாறு என்றாள். நான் தான் வேண்டாம் என்று சொல்கிறேனே, என்றாள் யாழினி.

அதற்குள் குக்கர் சத்தம் கேட்கவும், உள்ளே ஓடினாள். அதை ஆப் பண்ணி வைத்தாள். சாம்பார் இருந்த அடுப்பையும் ஆப் பண்ணிணாள்.’ தாளிக்கனுமே என்று நினைக்குமே ‘, என்று நினைக்கும் போது, ஐயோ! ‘கதவைத் திறந்து போட்டு விட்டு வந்து விட்டோமே, என்று நினைத்து, வாசலுக்கு ஓடினாள்’. அங்கே, அந்தக் காய்கறிக்காரம்மா, அங்கேயே இருக்கவும், நீங்க இன்னும் போகலையா? என்று கேட்டாள்.

அட இன்னாம்மா நீ, ‘ நான் தான் சொல்றேனுலே, காய், கீரை வாங்குனு சொல்றேனே. ‘ நான் எம்மாந்தூரம் இந்தக் கூடையைத் தூக்கிட்டு வாரேன்.’ நான், எப்பவுமே முதல் போனி, ‘ இந்த வீட்டு ஐயாக்கிட்டே தான் பண்ணுவேன்’. ‘ இடையிலே யாரு கூப்பிட்டாலும் கேட்க மாட்டேன் தெரியுமா என்று கேட்டாள். ஐயோ! “ உங்களோட என்ன ரொம்ப ரோதனையா போச்சுனு, யாழினி தலையில் அடித்துக் கொண்டாள்.”

அதற்குள் பலராமன், எழுந்து வரவும், என்னம்மா, யாரிடம் பேசிக் கொண்டிருக்கே என்று கேட்டார். யாழினி, பதில் சொல்லும் முன், அந்தக் காய்கறிக்கார அம்மாவே கூப்பிட்டார்கள். ஓ! நீயா,” இவளும் என் பொண்ணு தான்”, என்று கூறினார். யாழினியிடம், “ உனக்குப் பிடித்த காய்கறி, கீரை வாங்கிக்கோமா”, என்றார்.

அப்படியே , அந்த அம்மாவுக்கும் ஒரு டம்ளர் காபி கொடும்மா என்றார். சரிப்பா, “என்று உள்ளே போனவள், இரண்டு டம்ளரில் காபி ஊற்றி எடுத்துக் கொண்டு வந்து, ஒன்று பலராமன் கையிலும், ஒன்றை அந்த காய்கறிக்காரம்மா கையிலும் கொடுத்தாள்.” பின், முறத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். அதற்குள், அமுதா வரவும், அவளுக்குக் காபி கலந்து கொடுத்தாள்.

முறத்தை எடுத்துக் கொண்டு, வெளியில் வந்து என்ன காய் இருக்கு என்று பார்த்தாள். அந்தம்மா வைத்திருந்த காய்களைப் பார்த்து, அதிர்ச்சியாகி நின்றாள். இவ்வளவு வகையா! என்று மனதிற்குள் நினைத்தாள். அமுதா, இங்கே வாடி, என்று அழைத்தாள். நீயே வாங்கு. எனக்கு கிச்சனில் வேலை இருக்கு என்று கூறிச் சென்றாள். பொங்கலுக்குத் தாளித்துக் கொட்டி, சாம்பார் தாளித்து கொதிக்க வைத்து இறக்கி, டைனிங் டேபிளின் மீது வைத்தாள்.

பலராமன், என்னம்மா டிபன் செஞ்சுட்டியா? என்று கேட்டார். ஆமாம்ப்பா! வெண் பொங்கலும், சாம்பாரும் வைச்சுட்டேன் என்று கூறினாள். வாசலுக்கு வந்தவள் , “அமுதாவைப் பார்த்து, என்னடி ஒன்றும் வாங்கவில்லையா என்றாள்? எதை வாங்குறதுனு தெரியலைடி என்றாள்.

யாழினியே, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட், வாழைத் தண்டு, சுண்டைக் காய், வாழைப் பூ, முருங்கைக் கீரை வாங்கினாள். அப்பா, நான் வாங்கிட்டேன், வந்து பாருங்க என்றாள். அவரும் பார்த்து விட்டு, எவ்வளவு ஆச்சு ஆயா? என்றார். மொத்தம் நூத்தம்பது ரூபாயாச்சுயா என்றாள். என்னது!, நூத்தம்பது ரூபாயா? என்றாள் யாழினி. பலராமன், ‘ சிரித்துக் கொண்டே, யாழினியின் தலையில் தட்டி, உள்ளே போகச் சொன்னார்.

மூவரும் சாப்பிட்டு விட்டு, மதியத்திற்கு யாழினியே, சுண்டைக் காய் குழம்பும், எண்ணெய் கத்தரிக்காய் வதக்கலும், முருங்கைக் கீரை சமையல் செய்தாள். பலராமன், “தன் நண்பர்களிடமும்;ஒரு சில புரோக்கர்களிடமும்;, வீட்டையும், கடையையும் விற்பதாகக் கூறி; நல்ல ஆட்களாக இருந்தால் சொல்லும் படிக் கூறினார்.

மூவரும் சாப்பிட்டு முடித்தனர். காலிங் பெல் அடிக்கவும், ‘ யாழினி போய் கதவைத் திறந்தாள்’. யார் நீங்க? என்று கேட்டாள். வீட்டு புரோக்கர் என்று கூறினார். அப்பா, வீட்டுப் புரோக்கர் வந்திருக்காறு என்றாள். பலராமன், வெளியே வந்து உள்ளே அழைத்தார். வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். அமுதாவை, நீ போ அறைக்கு, நான் அப்புறம் வருகிறேன் என்றாள். பத்திரத்தை எடுத்து வந்து காண்பித்தார்.

பலராமன், ஒரு விலை சொல்ல, யாழினி, இல்லை அப்பா சொல்ற விலை ஒத்து வராது. மேற்கொண்டு இரண்டு இலட்சம் வேண்டும் என்றாள். எப்படி சொல்றேம்மா? என்றார் புரோக்கர். எங்க அப்பா வாங்கும் போது, எந்த டெவலப்மென்ட்டும் இல்லை. ஆனால், “ இப்போ பாருங்க, எவ்வளவு கடைகள், எவ்வளவு சூப்பர் மார்க்கெட், ஹாஸ்பிட்டல்ஸ், பார்க், ஹோட்டல்ஸ், ஸ்கூல்ஸ், தியேட்டர் என்று எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கு”.

நான் சொன்னது கூட கம்மி தான். அப்பா, “எதுக்கும் ஒரு இன்ஜினியரிடம் ஆலோசனை கேட்பது நல்லது”, என்று கூறினாள். யார் சார் இந்தப் பொண்ணு? என்றார் புரோக்கர். என் அண்ணண் பொண்ணு தான் என்றார். அவர்களை அனுப்பி விட்டு, லேப் டாப்பில் , அமுதாவின் வீட்டை போட்டோ எடுத்து, தன் உயிர்த் தோழியான வெண்பாவிற்கு அனுப்பினாள். அவளுக்கு போன் செய்தாள்.

வெண்பாவிற்கு, “ போன் செய்தாள். சொல்லு யாழி, ‘ எப்படி இருக்கேடி? என்றாள்; ம்ம் நான் நல்லாயிருக்கேன்; நீ எப்படி இருக்கே? என்றாள். நான் நல்லாயிருக்கேன். உனக்கு, ஒரு வீட்டினுடைய அமைப்பை ஈமெயில் பண்ணியிருக்கேன்; சென்னை தான்; அதனுடைய மதிப்பு எவ்வளவு என்று சொல்ல முடியுமா?”, என்றாள். உடனே தெரியனுமா? என்றாள் வெண்பா. ஆமா என்றாள்.

அவளும், அவள் ஈமெயிலை ஓப்பன் பண்ணிப் பார்த்தாள். அந்த வீட்டைப் பார்த்து,’அவளே பிரமித்துப் போய் விட்டாள்!, அவ்வளவு அழகாக இருந்தது அந்த வீடு. யாழினிக்கு, போன் பண்ணி, யாழி , யார் வீடு இது? ஏன் விற்கிறாங்க? என்று கேட்டாள். ‘ இவளும், நடந்ததைக் கூற, நான் அப்பாவிடம் பேசி விட்டு சொல்றேன். எப்போ என்றாள்? , யாழி. அரை மணி நேரத்தில் என்று கூறி, போனை ஆப் செய்தாள்.

அவள் சொன்னது போலவே, அரை மணி நேரத்தில் போன் செய்தாள். வீடியோ கால் என்பதால், பலராமன் , அமுதா இருவருமே இருந்தனர். வெண்பாவின், குடும்பமே இருந்தது. வணக்கம் அங்கில், ஆன்ட்டி என்றாள். நல விசாரிப்பு முடிவடைந்தவுடன், “ சார் இந்த வீட்டை நானே வாங்கிக்கிறேன்”, என்று வெண்பாவின் அப்பா கூறினார். அவர் சொன்ன செய்தி மூவரையும் பிரமிப்படையச் செய்தது. ஆ, அவ்வளவு பெரிய தொகையா! , என்று ஆச்சரியப்படனர்.

அந்த வீட்டின் மதிப்பு மூன்று கோடி என்றனர். அதனால் வந்த பிரமிப்பு தான், “ இவர்கள் வாயடைக்க வைத்தது”. அடுத்து , எப்போ சார் ரிஜிஸ்ட்ரேசன் வைத்துக் கொள்ளலாம் என்றார். பலராமன், ‘ என் கடையையும் விற்க வேண்டும், நாங்கள் செல்லும் ஊரில், வீடும், கடையும் பார்த்த பின் தான் விற்க முடியும்’, என்று கூறினார்.

நீங்கள் எந்த ஊருக்குச் செல்லப் போகிறீர்கள், என்று கேட்டதற்கு, பெங்களூரு சார் என்றார். அவர் சில விவரங்களைக் கேட்டுக் கொண்டு, உடனடியாக பெங்களூருவில் வசிக்கும் ஒருவருக்குக் கான்பரன்ஸ் கால் போட்டு பேசினார். அவரும், அவர் இருந்த வீட்டைக் காண்பிக்க, மூவருக்கும் பிடித்துப் போனது.

காரணம் அந்த வீடு, மெயினான இடத்தில் இருந்தது ஒன்று, அடுத்தது கீழ் தளத்தில் கடையும் வைத்துக் கொள்ளலாம். அதனால், நாளைக்கே புறப்பட்டு வருகிறோம் சார். நாளைக்கு மறு நாள் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார். வெண்பா, அப்பாவே கடையையும் வாங்குவதாகச் சொன்னவுடன் , மூவருக்கும் இரட்டிப்பு சந்தோசம்.

உடனே, பேக்கிங் வேலையை ஆரம்பித்து விட்டனர் பெண்கள் இருவரும். பலராமனும், சேர்ந்து கொண்டார். நான், இப்போவே பணத்தை எடுத்துட்டு வந்து விடவா என்றார். வேண்டாம் என்று விட்டனர் பெண்கள் இருவரும். அன்று இரவுக்குள் , அனைவரது துணிகளும் அடுக்கப்பட்டன. பாத்திரங்கள் எல்லாம் .அட்டைப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு துரிதமாக வேலை நடந்தது. இரவு உணவுக்கு கொஞ்சம் மாவைப் பிசைந்து சப்பாத்தி செய்து, மதியம் வைத்த குழம்பையே தொட்டுக் கொண்டு சாப்பிட்டனர்.

இரவு படுத்தவர்கள், காலையில் தாமதமாகத் தான் எழுந்தார்கள். மளமளவென்று காலைக் கடன்களை முடித்து விட்டு, காபி கலந்து குடித்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு, காரில் ஏறினர். ஓட்டுநர் இருக்கையில் யாழினி, உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தாள். ஏம்மா, பணம் எடுக்கவில்லையே என்றார். உங்கள் பக்கத்தில் , ஒரு பேக் இருக்கு. அதில் பணம் இருக்கு என்றாள்.

என்னது! என்று அதிர்ந்தனர். அது உன் பணம் தானே, அதை ஏன் எடுத்தே என்று கேட்டார்கள். அப்போ, நான் உங்க பொண்ணு இல்லையா? என்று கேட்டாள். நான் உங்களோட இருக்க வேண்டும் என்றால், நான் செய்றதையும் தடுக்கக் கூடாது. அதுக்கு ஓகே என்றால், நான் இருக்கேன். இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற நேரிடும் என்று கூறினாள்.

அதற்கு மேல் இருவரும் பேசவில்ல. ஒரு ஹோட்டல் முன் நிறுத்தி சாப்பிட்டார்கள். பெங்களூரூ செல்லும் பைபாஸ் தார் சாலையில், அவள் காரை லாவகமாக ஓட்டியது, இருவரையும் வியக்க வைத்தது!. பெங்களூருவில் வண்டி நுழைந்தவுடன், சில இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு வந்து ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கினர்.

மறு நாள் காலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, டிபன் அறைக்குள் வருவதற்குள், வீட்டை விற்பவரிடம் பேசி முடித்தார். அதற்குள் டிபன் வரவும் சாப்பிட்டு விட்டு, கீழே இறங்கி வந்தனர். வீட்டை விற்பவரும், வெண்பா, வெண்பாவின் அப்பா மூன்று பேரும் நின்றிருந்தனர். வெண்பாவை வைத்து எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

error: Content is protected !!