Vanjam-9

Vanjam-9

                         வஞ்சம் – 9

இன்று  ( சென்னை பட்டணம் )

காரிகை அவளால் அவள் கார்மெண்ட்ஸ் தோல்வியை தாங்கவே முடியவில்லை, ஒரு சின்ன பெண் முன்னால் அவரின் தொழில் ராஜ்ஜியம் சரிந்து கொண்டிருப்பதை அவரால் உணரமுடிந்தது… காரிகையின் கோபம் விஷ்ணு மேல் திரும்பியது,

அவனின் கவனம் தொழில் மேல் இல்லை என்று எண்ணிய காரிகை அவனை அழைத்தார்,

“ இங்க பார் விஷ்ணு, நமக்கு வர வேண்டிய ஆர்டர் எல்லாம் எங்கையோ போகுது, தொழிலை கவனிக்க முடியவில்லை என்றால் என்னிடம் சொல்லு, நானே பழைய மாதிரி பார்த்துக் கொள்வேன் “

” என் மீது நம்பிக்கை வைத்து தானே இந்த தொழிலை என் கையில் தந்தீங்க,  இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், சீக்கிரமே அவளுக்கு ஒரு முடிவை கட்டுறேன் ” வன்மமாக கூறிக் கொண்டான்..

“ நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ தெரியாது, அவள் இனி மேல் தொழில் பக்கமே வர கூடாது “

காரிகை கார்மெண்ட்ஸ் எப்பவும் அழியவும் கூடாது, அது தோற்கவும் கூடாது, தியாகராஜ் நமக்கு எதிரா வந்ததால் தான் அவனிடம் பேசி என் வழிக்கு கொண்டு வந்தேன், யாரை என்ன செய்ய வேண்டும் என்று உனக்கே நல்லா தெரியும், அவளுடைய தகுதியை அவளுக்கு காட்டு, நேற்று வந்தவள் இந்த ஆட்டம் காட்டுகிறாளா..? “ கோபத்துடன் பல்லை கடித்துக் கொண்டார்…

அவள் அழித்த மூர்த்தியின்  கார்மெண்ட்ஸ், அவளை விட வளர்வதை  அவளால் தாங்க முடியவில்லை… காரிகைக்கும், மூர்த்திக்கும் தீர்க்கப்படாத கணக்கு ஓன்று உள்ளது. பட்டறை கட்டுவதில்  தான் இருக்கிறது இருவருக்குமான வெற்றி..? தோல்வி..?

அவர் இருந்த இடத்தில் இன்னொருத்தியை அவரால் நினைத்து பார்க்கமுடியவில்லை, மீண்டும் தானே தொழிலில் முன்  வர வேண்டும் என்று எண்ணினாள்… பல ஊடகங்களில் இருந்தும், பலர் கேலி பார்வையில் இருந்து அவளை காத்தது, காப்பது அவளின் தொழில் மட்டுமே,  யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டாள்.. அதற்காக தான் விஷ்ணுவையே அவள் உருவாக்கினாள்… அவளுக்காக, அவளின் நலனுக்காக,

அதற்கடுத்து வந்த நாட்களில் இருவருக்கும் தொழில் போட்டி அதிகரிக்க, கீர்த்தி வெற்றி வாகை சூடியவளாய் வலம் வந்தாள், விஷ்ணுவோ அவளிடம் உண்மையாகவே தோற்றுக் கொண்டிருந்தான்..

“ தனக்கு ஒரு வாய்பில்லாமலா போகும் “ கொதிப்புடன் அவளை வீழ்த்தும் நாளுக்காக காத்திருந்தான்

இப்பொழுது அவளை வீழ்த்தும் ஒரே வழி, அவள் ஊரில் அவன் சாயபட்டறையை ஆரம்பிப்பது தான், அதை கட்ட விடாமல் தடுக்க தான் அவள் தன் தொழிலில் விளையாடுகிறாள் என்று அன்றே அவன் அறிந்துக் கொண்டான்…

அவளுக்கு பயந்து எடுத்த காரியத்தை பாதியில் விட அவன் ஒன்றும் பேடி இல்லை, வீரன்…!! நினைத்ததை முடிப்பவன்…!!

“ ஹாய் வினு “ என்றபடி விஷ்ணுவை நோக்கி வந்தாள் ரிஷிபா.. ரெட் கலர் ஸ்லீவ் லெஸ் அணிந்து, என்னை பார், என் காலை பார் என்ற அலங்கோலத்தில் வந்தாள் அவள்…

அவளின் உடை அலங்காரம் அவனை முகம் சுழிக்க செய்தது, அதே நேரம் அவன் மனம் காரணமே இல்லாமல் கீர்த்தியை நினைத்து, அவளின் உடை அலங்காரத்தையும் கம்பேர் செய்துப் பார்த்தது, ஆனால் அதை பற்றிய எந்த எண்ணத்தையும் முகத்தில் காட்டாமல்,

 “ ஏய்.. ஷிபா.. வாட் எ சர்ப்பிரைஸ் “ என்றபடி மெதுவாக அணைத்து விலகியபடி “ ஜூஸ் ஆர் டீ “

“ வேண்டாம் வினு, என்கேஜ்மென்ட் ஷாப்பிங் போகணும் கொஞ்சம் வாரீங்களா..? “

நாற்காலியில் சாய்ந்து இருந்து, நாடியில் ஒரு கையை வைத்து யோசித்தவன், மெதுவாக வலது புருவத்தை வருடிக் கொண்டான்,

அவனையே பார்த்திருந்தாள் ரிஷிபா, கோதுமை நிறத்தில், ஆறடிக்கும் மேல் உயரத்தில், கூர்மையான கண்களுடன், முகத்தை மறைத்து விழுந்த ஒற்றை முடி கற்றை, சாக்லேட் நிறத்தில் ஷர்ட் அணிந்து கம்பீரமாக அவன் அமர்ந்திருந்த தோற்றம் அவள் மனதில் ஆழ புகுந்தது,

“ எத்தனை ஆண்களை பார்த்திருக்கிறேன், இவனிடம் அப்படி என்ன இருக்கிறது என்று என் மனம் இவன் பின்னே ஓடிவருகிறது, இவனை பற்றி நன்கு அறிந்து இவனிடம் சரணடைய என் மனம் ஏன் ஆசைக் கொள்கிறது “ நெஞ்சில் விடை தெரியாத பல கேள்விகளுடன் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்திருந்தாள்…

 “ வரல ரிஷிபா.. நீயே போயிட்டு வாயேன் “

“ எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா..? “ சிணுங்கலுடன்  கொஞ்சினாள் அவள்,

அவனுக்கு எரிச்சலாக வந்தது, காரணமே தெரியாமல் ஏதோ ஒன்று  அவன் மனத்தை வியாபித்திருந்தது. “ அர்ஜென்ட் வேலை இருக்கு ரிஷிபா, நீ போய்ட்டுவாயேன் “ என்றபடி வேலையில் மூழ்கிப் போனான், இல்லை அவளிடம் இருந்து தப்பிக்க அப்படி நடித்தான்,

அவன் செயலில் காலை தரையும் உதைத்துக் கொண்டு ஒரு சிணுங்கலுடன் வெளியில் சென்றாள் அவள்..

உடனே அவன் கை, அவனையும் அறியாமல் அவளை அழைத்தது,

அவசர வேலையில் இருந்தவள் போன் அழைக்கவே, யார் என்று பார்க்காமல் “ ஹலோ.. கீர்த்தி ஹியர் “

“ ஹாய் பேபி “

“ நீயா.. என்ன வேணும்..? ” என்றபடி கடுப்புடன் வினவினாள்,

“ நீ தான் “ நமட்டு சிரிப்புடன் கூறினான் அவன்.

“ ஏய் “ பல்லைகடித்துக் கொண்டாள்..

“ ச்சீ..ச்சீ… நீ அணில் கொத்திய மாம்பழம்டி, நீ எனக்கு வேண்டாம்… அதற்குள் பெரிசா கற்பனை பண்ணாதே..? “ கேலியாக கூறினான்..

அவன் அப்படி பேசியதில் அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“ விஷ்ணு.., திஸ் இஸ் லிமிட்.. நீ லிமிட் தாண்டி பேசற..? “ என்றவளின் கோபம் டெசிபலில் ஒலித்தது,

அவன் அவளை சீண்டவே அழைத்தான், ஆனால் அவள் குரல் வேகமாக ஒலித்ததில் கோபமானான், அதிலும் இதுவரை அவனை எதிர்த்து யாருமே பேசியதில்லை, அப்படி இருக்கையில் அவள் குரலை உயர்த்தவும்,

ஆக்ரோசமானவன் “ என்னடி லிமிட்.. நீ தான் லிமிட் தாண்டிப் போற, பொண்ணா லட்சணமா அடங்கி இருக்கணும், அப்படியும் இல்லன்னா குழந்தை குட்டியை வளர்க்க போகனும், அதை விட்டுட்டு என்கிட்ட மோத வந்திருக்க, “

“ தி கிரேட் விஷ்ணுடி.. காட்டில் இருக்கும் சிங்கம், யாருக்கும் அடங்கமாட்டான் இந்த விஷ்ணு, இதில் நீ, ஆப்டர் ஆல் ஒரு பெண்மான் எனக்கு போட்டியா வந்திருக்க, சிங்கம் வேட்டையாடி பார்த்ததில்லைல அது தான் இந்த ஆட்டம் ஆடுற, எல்லாத்துக்கும் முற்று புள்ளி வைக்குறேண்டி, சிங்கம் எப்படி மானை வேட்டையாடும் என்று டிஸ்கவரி பாரு “ ஆக்ரோஷமாக ஆரம்பித்து கேலியில் முடித்தவன்,

பின் முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு “ சரியா ஐந்து மணிக்கு கே.எப்.சி. வார…!! வரணும்… நீ வராத அடுத்த செகண்ட் நான் அங்க உன் வீட்டில் இருப்பேன் “ என்று கத்தியவன் கோபத்துடன் அழைப்பை நிறுத்தினான்…

விஷ்ணு பேசி முடித்ததும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது, நான் உனக்கு அத்தனை கேவலமாக போய்விட்டேனா…? விடமாட்டேன், உன்னை என்னிடம் வந்து கெஞ்ச வைக்காமல் விடமாட்டேன் ஆத்திரமாக எண்ணிக் கொண்டாள்….

விஷ்ணுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, அவளிடம் பேசி முடித்த பிறகு தான் அவன் பேசிய பேச்சின் தீவிரம் புரிந்தது… அவன் மனது அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது என்பதை ரிஷிபாவிடம் பேசும் பொழுதே அறிந்துக் கொண்டான்..

இது அவனுக்கும், அவன் தொழிலுக்கும் நல்லதில்லை.. எல்லாம் இன்றே முடித்துக் கொள்ள வேண்டும், அவள் பின்னே செல்லும் மனதை கடிவாளமிட்டு கொண்டான்….

அன்று மாலை ” அவன் சொன்ன நேரத்துக்கு போக நான் ஒன்றும் அவன் வீட்டு நாய் குட்டி இல்லை ” என்றபடி கீர்த்தி அவன் சொன்ன நேரத்தை விட அரைமணிநேரம் கழித்தே அங்கு சென்றாள்…

அந்த பிரபல கே.எப். சி. யில் அவளுக்காக காத்திருந்தான் விஷ்ணு, அவள் எப்படியும் வருவாள் என்று பலமாக நம்பினான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் எதிர் பார்த்ததுப் போலவே “ ஹாய் பாஸ் “ என்றபடி  வந்து சேர்ந்தாள்.

அவளிடம் எதுவும் பேசாமல், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்… அடர்நிற அனார்கலியில் அட்டகாசமாக இருந்தாள். 

அவளும் அவனை தான் பார்த்திருந்தாள், ஒட்டு மொத்த முடியையும் ஒரு பாண்டில் அடக்கி இருந்தான், பார்மல் டிரஸில் அவள் கண்களுக்கு அழகனாக தெரிந்தான், அவன் பின்னே செல்லும் மனதை கஷ்டப்பட்டு அடக்கியவள் “ சிங்கம் பவ்யமா மானை தனியா சந்திக்க வந்திருக்கு, வெள்ளை கொடி காட்டவா..? “ போலியாக வினவினாள் கீர்த்தி..

அவள் பேசுவதையே சேரில் சாய்ந்திருந்து கேட்டவன், மெதுவாக கையில் இருந்த பேப்பரை அவள் முன் வைத்து அவள் முகத்தில் தோன்ற போகும் கோபத்தை ரசித்துப் பார்க்க, அவள் முகத்தையே பார்த்திருந்தான்..

அந்த பேப்பரை எடுத்து பார்த்தவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது, எப்படி… எப்படி… முடிந்தது அவனால், அவன் ஊரையே அழிக்க அவனால் எப்படி முடிந்தது அவளால் தாங்கமுடியவில்லை..

அவன் மீண்டும் சாயபட்டறையை கட்ட, அவன் வாங்கிய ஸ்டேஆர்டர்.. இன்னும் இரண்டு நாளில் ஆரம்பிக்க போகிறதாக அதில் குறிப்பிட்டிருந்தான்… அதை பார்த்ததும் அவளுக்கு தெரிந்தது இதில் அவன் ஏதோ விளையாடி இருக்கிறான் என்று..

அவனுக்கு நன்கு தெரியும் அவளின் கையெழுத்து இல்லாமல் அவனால் அந்த ஊரில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்று, ஆனால் அவன் நண்பனின் உதவியுடன் போலி ஆவணம் ஒன்றை தயாரித்து அவளை திகிலடைய வைக்கவே எண்ணினான்.. அவளிடம் விளையாட தான் அவனுக்கு அத்தனை ஆசை உண்டே..!!

அவனையே ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தவள் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு அவளின் ஊரை நோக்கி சென்றாள்…

“ கொஞ்சிப் பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தால்

மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேக்குதடி

அட தொலைவில இருந்தா தானே

பெரும் காதல் கூடுதடி “ சின்னக்குயில் சித்ரா சின்ன குரலில் பாடிக் கொண்டிருந்தார்.

காரின் ஏசியை அணைத்துவிட்டு, கண்ணாடியையும் கீழே இறக்கிவிட்டு அந்த கிராமத்தின்  சுத்தமான காற்றை சுகமாக ஆழ்ந்து அனுபவித்தான் அகில் தேவ்…

ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய ஒற்றையடிப் பாதை அது, அன்று வெறும் மண்  தரையாக இருந்தது, இன்று ஒற்றை தார் ரோடாக மாறி இருந்தது,  எதிரே வாகனம் வந்தால் கூட விலகி வழிவிடமுடியாது, ஆனால் பெரிய வாகனம் என்று அங்கும் எதுவும் இதுவரை அவன் கண்களுக்கு தெரியவில்லை…

என்ன தான் பெரிய வண்டி இங்கு இல்லை என்றாலும், நகரத்தில் இல்லாத சுத்தமான காற்றும், அமைதியும் இங்கு இருந்தது, இங்கிருந்த காற்றும், அமைதியும் அவன் மனத்தை வெகுவாக நிறைத்தது…

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை. அதனை ஊடுருவி  கொண்டு சலசலத்து ஒடும் ஆறு, கரையோரமாக நின்றபடி தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி அங்கு வருவோரை வரவேற்றுக்கொண்டிருந்த நெற்கதிர்கள், வார்த்தைகளில் காவியமாக வடிக்க முடியாத ஒரு அழகை அந்த ஊர் பெற்றிருந்தது..

இயற்கையை ரசித்தப்படி காரை மெதுவாக ஒட்டி வந்த அகில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு அமைதியாக அந்த ஊரை ரசிக்க ஆரம்பித்தான்.

அன்று போல் இன்றும் அவன் மனத்தை நிறைத்தது. அவனுக்கு மனதே கேட்கவில்லை இப்படி ஒரு இயற்கைக்கு நடுவே எப்படி விஷ்ணு பட்டறை ஆரம்பிக்க எண்ணினான்..

அழகும் ஆபத்து என்று இந்த ஊரை பட்டறை கட்ட காரிகை தேர்வு செய்த அன்றே அறிந்துக் கொண்டான். அளவுக்கதிகமான அழகு என்றும் ஆபத்தே..!

பச்சையை வாரி வாரி வழங்கிய இயற்கை அன்னை அதே வேகத்தில் ஆபத்தையும் கொண்டு வந்தாள்..

இயற்கையை ரசித்தப்படி காரை ஒட்டி வந்தவன் மனதில் தோஷிகா காரணமே இல்லாமல் வந்துப் போனாள்.

ஒர் இடத்தில் காரை நிறுத்தி விட்டு அமைதியாக ஒடிக் கொண்டிருந்த ஆற்றை ரசிக்க ஆரம்பித்தான். காரிகை இந்த ஊரை தேர்வு செய்ய இந்த ஆறும் ஒரு காரணமே..!!

சாயம் தயாரிக்க அளவுக்களதிகமான தண்ணீர் தேவைப்படும். இப்படி வஞ்சகம் இல்லாமல் ஒடும் ஆற்றில் இருந்து தேவைக்கு அதிகமான தண்ணீர் அவர்களுக்கு கிடைக்கும் என்று தண்ணீர் தரத்தின் அளவை ஆய்வு செய்த அதிகாரிகள் கூற காரிகையால் இதற்கு மேல் இந்த ஊரை மறுக்க காரணம் இருக்கவில்லை, உடனே இங்கிருந்த பல மக்களிடம் பவ்யமாக பேசி, பாதி இடத்தை அவர்கள் பெயருக்கு வாங்கிவிட்டாள்..

தேவ் எவ்வளவு கூறியும் கேட்காமல் வயல் போக மீதி இருந்த நிலத்தை பல இலட்ச லாபத்துக்கு விற்றுவிட்டனர்…. அதற்கு மேல் அவனை யோசிக்கவிடாமல் சிட்டுகுருவிகளின் சத்தம் காதை நிறைக்க அதன் பக்கம் பார்வையை திருப்பினான் அகில்.

ஆற்றின் அருகில் இருந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்த்துக் கொண்டிருக்கும் சிட்டுக்குருவி தன் குழந்தைகளுக்கு உணவை கொண்டு வர அதை கண்ட சின்ன சிட்டுகள் தன் மகிழ்ச்சியை ” கீச்.. கீச் ” என்று வெளிப்படுத்தின… அதை ரசித்துப் பார்த்தவனின் கண்கள் அப்படியே ஆற்றின் பக்கம் திரும்பியது…

நீரின் மேல் மட்டத்தில் துள்ளி குதித்த மீன் குஞ்சுகளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.. இதே ஊரில் சாயப்பட்டறை வந்தால் மீன்கள் இப்படி துள்ளி விளையாடுமா..? பறவைகள் இந்த ஆலமரத்தை தேடிவருமா..? அவனுக்கே தெரியவில்லை.. ஒருக்காலும் விஷ்ணுவை அவன் எதிர்த்து நிற்கமாட்டான்…

இந்த மாதிரியான ரம்மியத்துடன் கூடிய இயற்கையை அவன் வாழும் பட்டணத்தில் கிடைக்குமா என்ன…? இதுவரை விஷ்ணு இந்த ஊரை நேரில் பார்க்கவில்லை. அவன் தாய் கூறியதை கேட்டு அப்படியே வேலையை ஆரம்பிக்கிறான்.. முடிந்தால் அவனை இங்கு அழைத்து வந்து இயற்கையின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று அகில் மனதில் எண்ணிக் கொண்டான்…

காரை விட்டு அந்த ஆற்றின் கரையோரமாக நடக்க ஆரம்பித்தான் அகில்… விஷ்ணுவை பற்றி யோசித்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தான். சிறிதுதூரம் சென்றவன் காதில் சில சிறுவர்களின் கூச்சல் கேட்க, அவன் அனுமதியும் இல்லாமல் சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்றது…….

சத்தம் வந்த திசையை நோக்கி சென்றபொழுது  அங்கே சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்க, அவர்களை பார்த்துக் கொண்டு ஆற்றின் அருகில் இருந்த சிறு மலை குன்றின் மேல் அவள் அமர்ந்திருந்தாள்…

அவன் கண்கள் அவளை பார்த்த மகிழ்ச்சியில் பனிக்க, வாய் தானாக ” தேஷிகா ” என்று முணுமுணுத்தது…..

அன்றும் அவளை இதே ஆற்றங்கரையில் தான் பார்த்தான்.. அன்று மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்… இன்றோ மகிழ்ச்சியை இழந்தவளாய் அவன் கண்களுக்கு தெரிந்தாள்…

கொ(வெ)ல்வாள்………

தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!

 

error: Content is protected !!