varaaga nathiaraiyoram 4

varaaga nathiaraiyoram 4

அடுத்த நாள் அதிகாலையிலேயே அனைவரும் கார்முகிலனது டஸ்டர் காரில், தேனியை நோக்கி புறப்பட்டனர்.

 

இவர்களது வசதிக்கு ரேஞ்சு ரோவர் காரே வாங்கலாம், இருந்தும் அந்த பிரவுன் நிற டஸ்டர் கார் முகிலனை கவர்ந்தது ஏன் என்றே தெரியவில்லை… அதுவும் அவனை போல் கொஞ்சம் திமிர், கர்வம் கலந்து தோற்றம் கொடுத்ததால் இருக்கலாம்.

 

தான் ஓட்டுவதாக கார்த்திகேயன் எவ்வளவோ கூறியும், முகிலன் சம்மதிக்காமல், வரும்பொழுது ஓட்டுமாறு கூறிவிடவே… அனைவரும் சிறிதுநேரம் உறங்கி எழுந்தனர்.

 

பின்பு முகிலன் அவர்களுக்கு வேண்டியதை, ஒரு உயர்தர உணவகம் முன்பு நிறுத்தி வாங்கித்தந்து… தானும் உண்டான்.

 

இன்னும் ஒரு மணிநேரத்தில் ஊரை நெருங்கிவிடுவார்கள் என்பதால் பெற்றோர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டே வந்தனர், சின்னவர்களும் தாங்கள் தாத்தாவுடன் சென்ற நாட்களை நினைத்துப்பார்த்து உரையாடினர்.

 

முகிலன் பேசவில்லை என்றாலும், அவனும் அதை கவனித்து அசை போட்டுக்கொண்டே தான் வண்டி ஓட்டினான்.

 

காலை சுமார் 10 மணிவாக்கில் தேனியில் இருக்கும் அவர்களது குலதெய்வம் கோவிலான, ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவிலை மாணிக்கவேல் குடும்பத்தார் வந்தடைந்தனர்.

 

கோவிலின் உள்ளே நுழைகையில் எதிர்ப்பட்ட அனைவரும் இவர்களை அடையாளம் கண்டு விசாரித்து செல்ல, கோவிலின் மூலவரான சிவன் சன்னதியை பரவசத்தோடு வந்தடைந்தனர்.

 

அங்கு உள்ள குருக்களும் இவர்களை கண்டு மகிழ்வோடு,

 

“வாங்கோ வாங்கோ இப்போ தான் கோவிலுக்கு வர மனசு வந்ததோ.. ஐயா இருக்கும் பொழுது வருடம் தவறாம வந்தீங்கோ.. அப்புறம் அவரு போனதும் கோவிலையும் ஊரையும் மறந்துட்டீங்கோ”

 

என்றவாறு வரவேற்க மாணிக்கவேலோ,

 

“அப்படிலாம் இல்ல சாமி… அப்பா போனதுக்கப்புறம்… அவரு இல்லாம இங்க வர இஷ்டமில்லாம போயிருச்சி… இப்போ வரணும்னு தோன்றின அடுத்த நாளே வந்துட்டோமில்ல”

 

என்று கூறி அவர்கள் கொண்டு வந்த பொருட்களை இறைவனுக்கு படைப்பதற்காக கொடுத்தனர்.

 

குருக்களும் அனைத்தையும் சிவனிற்கு முன் வைத்து, அவர்கள் கொண்டு வந்த பூக்கள் மற்றும் மாலையையும்  லிங்கத்திற்கு சூட்டினார்.

 

“சரி சித்த நாழி இருங்கோ அர்ச்சனை பண்ணுறேன்… பெயர், ராசி, நட்சத்திரம் எல்லாம் சொல்லுங்கோ”

 

என்றவாறு குருக்கள் இவர்களது பெயரில் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் கொடுத்தார்.

 

பின்பு சிவனிடம் உள்ள மாலையை எடுத்துக்கொண்டு  மாணிக்கவேலிற்கு போடவர..

 

அவரோ,

 

“வேண்டாம் சாமி… சாமிக்கு சாத்துன மாலைய மனுசங்க போடுறது தப்புன்னு அப்பா சொல்வாரு… அவரு இருக்குற வர இதை ஏத்துக்கவே இல்ல.. இப்போ நான் மட்டும் ஏத்துகிட்டா அப்பாக்கு பிடிக்காது”

 

என்றவாறு அதை மறுக்க…

 

அய்யரும் அதில் நெகிழ்ந்து,

 

“அப்பாக்கு தப்பாம பொறந்திருக்கீங்கோ… சேமமா இருங்கோ…”

 

என்று வாழ்த்தினார்.

 

அடுத்து அவர்கள் குலதெய்வமான முருகனையும் அதே போல் வழிபட்டனர்.

 

பின்பு அனைவரும் கோவிலை சுற்றி அனைத்து கடவுள்களையும் கொடிமரத்தையும் வணங்கினர்.

 

இதற்குள் இவர்கள் வந்த தகவல் பெரியகுளம் முழுக்க பரவவே, அனைவரும் வந்து நலம் விசாரித்து சென்றனர்.

 

பெரியவர்கள் அனைவரும் பேசுவதற்கு ஏதுவாக ஒரு இடத்தில் அமர, காயு செல்போனை எடுத்து செல்பி எடுக்க சென்றாள். கார்த்தியும் அவளை பார்த்து, அவளுக்கு பாதுகாப்பாக கூடச்செல்ல, முகிலன் கோவிலைச் சுற்றி பார்க்க சென்றான்.

 

அவ்வாறு செல்கையில் அவன் கோவிலுக்கு பின்னே இருக்கும் வராகநதியை கண்டான்.

அதை கண்டதும் தான் சிறுவயதில் தாத்தாவுடன் நீச்சல் அடித்ததை நினைத்து பார்த்துக்கொண்டே அருகில் உள்ள படித்துறையில் அமர்ந்தான்.

 

அதே நேரத்தில் ருத்ராவின் வீட்டில்… கல்யாணியின் வீட்டினர் வெளியே சென்றதும், தெய்வம் மீண்டும் தன் திருவாயை திறந்தார்.

 

“நல்லாருக்கு ணே…. ரொம்ப நல்லாருக்கு நீங்க பிள்ளை வளர்த்த லட்சணம்… என்னை பார்த்து கண்டவனு எனக்கு தெரிஞ்சவங்க முன்னாடியே பேசி என் மானத்த வாங்கிட்டா… இதுவே நம்ம அம்மா அப்பா இருந்திருந்தா அவ என்ன பார்த்து இந்த வார்த்தை சொல்லுவாளா ?…”

 

என்று நீலக்கண்ணீர் வடிக்க,

 

கருணாகரனோ தன் பெற்றோரை சொன்னதும் தங்கையை சமாதானம் செய்ய,

 

“அவ எதோ அதிர்ச்சில அப்படி சொல்லியிருப்பா… நீ இந்த மாதிரினு சொல்லியிருந்தா இவ்ளோ பிரச்சனை ஆகியிருக்காது…”

 

என்றார்.

 

அவரோ,

 

“அப்போ அவ என்ன கண்டவங்கனு சொன்னது உங்களுக்கு தப்பா தெரியல ஆனா நான் எங்க அண்ணன் தானனு உரிமையோட உங்க கிட்ட கேட்டது தப்பா போச்சு..”

 

என்று சோகரசம் பிழிந்தார்.

 

அதற்குள் சீதா, இந்த நாடகத்தை பார்த்து பல்லை கடித்துக்கொண்டிருந்த ருத்ராவிடம்

 

“பெரியவங்கள பார்த்து அப்படி பேசினது தப்பு ருத்ரா… பாரு… அவங்க எவ்ளோ வருத்தப்படுறாங்கனு… போய் மன்னிப்பு கேளு”

 

என்றார்.

 

அவ்வளவு தான் இவ்வளவு நேரம் எரிமலைக்குழம்பாய் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்த அவளது கோபம் வெடித்து சிதறியது…

 

“அவங்க நடிக்குறாங்க  அஅஅ….”

 

என்று வாய்விட்டு கத்த வேண்டும்போல் இருந்தது ருத்ராவிற்கு.

 

ஆனால் ஓர கண்ணால் தன்னையே விஷமமாய் பார்க்கும் அத்தையை பார்த்தவள், தன் பலவீனத்தை காட்ட விருப்பமின்றி, தன் தாயை முறைத்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

முத்ராவும் தமக்கை பின்னாடியே செல்ல அவளை கைகாமித்து நிறுத்திய ருத்ரா…

 

“என்பின்னாடி வராத முத்ரா, போய் உங்க அத்தை என்ன டிராமா பண்ணுறாங்கன்னு பார்த்து என்கிட்ட சொல்லுற…”

 

என்று அடிக்குரலில் யாருக்கும் தெரியாமல் அவளிற்கு ஒரு வேலை கொடுத்த கையோடு நதியை நோக்கி சென்றாள்.

 

நதியை அடைந்த ருத்ரா தனது துப்பட்டாவை வயிற்றில் இறுக்கிக் கட்டி நீரினுள் பாய்ந்தாள்.

 

வீட்டிற்குள் முத்ரா நுழைந்ததும், சீதா அவளிடம்,

 

“என்ன ? மகாராணி கோவிச்சிக்கிட்டு ஆத்துக்கு போயாச்சா ?…”

 

என்று முத்ராவிடம் தாழ்ந்த குரலில் கிசுகிசுத்து கேட்டார்.

 

அதற்கு அவளும் தலையை மட்டும் அசைத்து பதில் கூறினாள்.

 

சீதா அதை பார்த்து,

 

“ஏன் தான் இந்த பொண்ணுக்கு இவ்ளோ கோபமோ… இவ இப்படி இருந்தா, எப்படி போற வீட்டுல குப்பை  கொட்டுவா ?..”

 

என்று முத்ராவிடம் அங்கலாய்த்தார்.

 

ருத்ரா கோபமாக எங்கு செல்கிறாள் என்று அறிந்த கருணாகரனும், யாரை சார்ந்து பேச என்று தெரியாமல் முழிக்க…

 

தெய்வமும் இது தான் திட்டு வாங்காமல் இருக்க சாக்கு என்று அண்ணனிடம் கோபித்துத் தன் வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.

 

கருணாகரன் நடந்த பிரச்சனையில் உழன்றுகொண்டே, ஆயாசத்தோடு சோபாவில் அமர்ந்தார்.

 

அவர் அமர்ந்ததும், அருகில் கைப்பிடியில் இருந்த ரிமோட்டில் அவரது கைப்பட்டு, எதேச்சையாக ஹாலில் உள்ள  தொலைக்காட்சி உயிர் பெற்றது. அதில் வந்த லோக்கல் சானல் கூறிய செய்தியில் உயர்மட்ட மின்சாரம் பாய்ந்த நிலைக்கு ஆளாகினர் ருத்ரா குடும்பத்தினர்.

 

அதில் வந்த செய்தியானது இதுதான்.

 

“சோத்துப்பாறை அணை திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

 

கடந்த சிலநாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மலை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பியிருந்தது. பலவருடங்கள் கழித்து சோத்துப்பாறை அணையை திறந்திருக்கிறார்கள்.”

 

மேலும் இவ்வாறு அந்த செய்தி சொல்லிகொண்டே போக.. முதலில் மீண்டது முத்ரா தான்.

 

“ருத்ரா…….”

 

என்று கதறிக்கொண்டே ஆற்றுக்கு ஓடினாள் முத்ரா.

 

அவளை பின்பற்றி பெற்றோரும் பதைப்பதைத்தபடி ஓடினர்.

 

ஆற்றை அடைந்ததும் முத்ரா பார்த்தது… சலசலத்தபடி வேகமாக ஓடும் நீரையே.

 

“ருத்ரா… ருத்ரா….”

 

என்று அடித்தொண்டையில் இருந்து கத்தியபடியே தேட… அங்கு ஒருவரும் தென்படவில்லை. நீரின் அளவையும் வேகத்தையும் பார்த்ததுமே அவளுக்கு புரிந்துபோனது ருத்ராவின் நிலைமை.

 

தானும் நீரினுள் பாய்ந்து தனதுயிரானவளை தேட  சென்றாள்.

 

அந்த நேரம் வந்த அவளது பெற்றோர்கள் வேகமாக அவளது கையை பிடித்து, ஓரமாய் இருந்த மரத்தின்கீழ் அமர வைத்தனர்.

 

அவள் அதனை கண்டுகொள்ளாமல் திமிற,

 

“இப்போ உன் அக்காவ தேடுறதா இல்ல உன்னை பாக்குறதா ?..”

 

என்று கருணாகரன் கர்ஜித்த பிறகே சிறிது அடங்கினாள். பின்பு விசும்பலோடு தனது தாயை கட்டிக்கொண்டாள்.

 

அவளது தலையை வருடிய கருணாகரன்,

 

“நான் உடனே போய் ஊர் பெரியமனுசங்க கிட்ட உதவி கேக்குறேன்… நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க”

 

என்றவாறு கண்களில் கண்ணீரோடு புறப்பட்டார்.

 

கோபத்தில் நீரில் பாய்ந்த ருத்ராவிற்கு, அடுத்த நொடியே நீரின் வேகம் வழக்கத்தை விட வேகமாக இருப்பது தெரிந்துவிட்டது.

 

முதலில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு, காலையில் நன்றாக தானே இருந்தது என்று யோசித்துகொண்டே எதிர்நீச்சல் அடித்து கரையேற முயல, வராகநதியோ இத்தனை வருடமாக தன்னோடு கொஞ்சிவிளையாடிய தன் தோழியை தன்னோடு அழைத்துக்கொள்ள விளைந்ததோ…?

 

ருத்ராவும் நீரின் வேகத்திற்கு அடித்து செல்லப்பட்டாள்.

 

அங்கே கோவில் படித்துறையில் அமர்ந்திருந்த முகிலனுக்கு ஏனோ பாட்டு கேட்க வேண்டும் என்று தோன்ற, தன் ஐ போனை எடுத்து தான் பதிவு செய்த பாடல்களை எதை கேட்கலாம் என்று தேட ஆரம்பித்தான்.

 

அதில் “நதியே நதியே” என்ற பாடல் வர,

 

“இந்த நேரத்திற்கு பொருத்தமா இருக்குமே…”

 

என்று எண்ணி அதனை ஒலிக்கவிட்டான்.

 

என்ன தான் அவன் இறுக்கமானவன் என்று வெளியே பேசினாலும், அவனே காட்டிக்கொண்டாலும், இது போல் மனதை ரிலாக்ஸ் செய்யும் விதத்தில் அவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம்.

 

பாடலோடு அந்த ஏகாந்தமான பொழுதை ரசிக்க தொடங்கினான்.

 

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

 

அந்த வரிகள் வந்ததும், அவன் அப்படியா என்றவாறு நீர்நிலையை சுற்றி அங்கும் இங்கும் ஏதேனும் முகம் தெரிகிறதா ? என்று வேடிக்கையாக தேட… சற்று தொலைவில்… ஆற்றின் நடுவில் உள்ள கரும்பாறையை பற்றிக்கொண்டு, ஒரு பளிங்கு முகம் பளிச்சென்று தெரிந்தது.

 

 

      

error: Content is protected !!