varaaga27

varaaga27

முதலிரவு

ரிஷி அவனின் விகாஷிக்காக ஆவலோடு காத்திருக்க… அவனை ஏமாற்றாமல் வெகு சீக்கிரமாகவே அறைக்குள் வந்தாள் அவள்

பெண்மையின் நெளிவு சுழிவுகளை கண்ணியமாய் எடுத்து காட்டும் நம்மூர் புடவையில் அதற்கேற்ற அணிகலன்களில் அவளை முதன் முதலாக காலையில் இருந்து கண்டவனுக்கு மனம் மயங்கஅவள் கொண்டு வந்த பால் சொம்பை அருகில் இருக்கும் டேபிளில் வைத்தவன்..

தன்னையே கண்கள் மின்ன காதலுடன் பார்த்து கொண்டிருப்பவளை நெருங்கி அவளின் இடையோடு இறுக்கி அணைத்தான்.

அதில் அவள் வெட்கப்பட்டு குழைவாள் என்றால் அது தான் இல்லை.. அவனின் கண்களை பார்த்துக்கொண்டே தன் கைகளை அவனின் கழுத்திற்கு மாலையாக்கி அவன் கைகளில் சொகுசாக சாய்ந்துக்கொண்டாள்.

அது அவனிற்கு பிடித்திருந்தாலும்.. அவளை வம்பிலுக்கும் வகையில்…

என்ன நீ செம குஷியா இருக்க போல…  பயமா இல்லையா ? ”

என்று அவளின் பிறை நெற்றியில் முட்டிக் கேட்க…

பயமா.. எதுக்கு.. ? நீ என்ன புது ஆளா.. என் ரிஷி தான.. “

என்று ஏற்கனவே வில்லாய் இருக்கும் புருவத்தை இன்னும் வளைத்து கேட்க..

அவளின் ஆளை அடிக்கும் பார்வையில் சுண்டி இழுக்கபட்டவன்..

ஏய்.. இந்த காஸ்டியூம்ல சும்மா அல்லுறடி.. “

என்றவாறு அவள் கழுத்தில் முகம் புதைத்தான் ரிஷி.

ஹேய்.. ரிஷி.. இந்த காஸ்டியூம் நல்லாருக்குல.. ஆனா.. கம்பார்டபிளா இல்லை.. காலையில் எப்படி இருக்குனு பாக்கவே விடல.. சீக்கிரம் வானு கூப்பிட்டாங்க.. இரு நான் போய் பாத்துட்டு வரேன் “

என்று அவனை விலக்கி பக்கவாட்டில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை இப்படியும் அப்படியும் திருப்பி ரசிக்க..

தன்னை ரசிக்கும் அவளை ரசித்தபடியே வந்தவன்.. அவளின் பின்னால் இருந்து மீண்டும் இடையை அணைத்து கண்ணாடியில் முகத்தை பார்த்தவாறு தாடையை கழுத்தில் பதித்தான்இருவரது கண்களும் கண்ணாடியில் சந்தித்து ஒருவரை ஒருவர் விழுங்கியது.

அதை கண்டு மென்மையாக சிறிது குலுங்கி சிரித்தவன்அவளை தன்னை நோக்கி திருப்பி..

என் விகாஷி.. வெட்கம்னா கிலோ என்ன விலைனு கேட்பா போலவே..

என்று மீண்டும் சிரிக்க..

என்ன நீ.. நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன்.. பயமா இல்லையா வெட்கமா இல்லையானே கேட்டுட்டு இருக்க.. அதெல்லாம் எனக்கு எதுக்கு வரணும்.. உன்னை பார்த்தா எனக்கு காதல் மட்டும் தான்  வரும்..

என்று காதலாக கூற..

செக் பண்ணிருவோமா  விகாஷி.. “

என்றவாறு அவளை அலேக்காக தூக்கியவன் கட்டிலை அடைந்து அவளிற்கு வெட்கம் வருமா வராதா என்ற விளையாட்டில் ஈடுபட..

என்னதான் ஜம்பமாக கூறிவிட்டாலும்… வராத வெட்கம் சற்று நேரத்திற்கெல்லாம் வந்துவிட.. சீ.. போடா.. ஏய்.. என்ற சத்தங்களுடன் அவர்களின் வாழ்க்கை அவர்களைப் போலவே ஆர்ப்பாட்டத்துடன் இனிமையாக தொடங்கியது

இனி என்றென்றும் இந்த ஜோடி மனமொத்த தம்பதிகளாக வாழ வாழ்த்தி அவர்களின் ஏகாந்தத்தை கலைக்காமல் செல்வோமாக…!!!

************************************

அடுத்த நாள் அதிகாலையில் வழக்கம் போல் முகிலனிற்கு முழிப்பு வர… என்றும் இல்லாத வகையில் தன் மேனி, மனம் அனைத்தும் பஞ்சாய் பறப்பதை போல் உணர்ந்தான்… ஒருவேளை பஞ்சுக் கன்னங்கள் அவன் நெஞ்சில் பதிய தூங்கும் அவன் மனையாளின் கைங்கரியமாக இருக்குமோ என்னவோயாருக்குத் தெரியும்…

அதன் மென்மையில் சிலிர்த்து அவளை எழுப்பாமல் கைவளைவிலேயே வைத்துக்கொண்டு.. நேற்று இரவு அந்த முகம் காட்டிய வர்ணஜாலங்களை அசைப்போட்டான்.

அதன் நினைவிலேயே மனதில் காதல் பொங்க.. நேற்று இரவு கொடுத்தது போதாதென்று அவளை நகற்றி மேலும் மேலும் அந்த கன்னத்தில் முத்தமிட்டான்.

அவளோ அசைய கூட காணோம்.. அவளை எழுப்ப சற்று வன்மையாக முத்தமிட.. அவனின் மீசை குத்திய வலியில் தான் கன்னத்தை தேய்த்துக் கொண்டே தனது சிப்பிக் கண்களை மூடி மூடி திறந்தாள் ருத்ரா

அவனை பார்த்ததும் மீண்டும் அவள் முகத்தில் நேற்றைய மிச்சங்களின் வெட்கம் வர… அவன் முகத்தை.. அதில் இருக்கும் குறும்பை பார்க்க முடியாமல் கட்டிலில் இருந்து இறங்க பார்ததாள்…

அவன் விட்டால் தானே..

இன்னும் நேரம் இருக்கு… இங்க இருந்து ஒன்பது மணிக்கு தான் கிளம்புறோம்

என்றவன்.. அவளை வம்படியாக தன் மேல் போட்டுக்கொண்டு அசைய விடாமல் சிறைப்பிடித்தான்.. ருத்ராவும் வேறு வழியின்றி அவனின் வெற்று மார்பிலேயே முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அதற்கு பிறகு அவர்கள் கிளம்பும் வரை அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்பதை சொல்லவும்   வேண்டுமோ.. ?

************************************

இங்கே வீட்டில் முத்ராவை பெண் கேட்க சொல்லி கார்த்தி தன் வரலாற்றையே புரட்டி போடும் விதமாக ஆறரை மணிக்கே எழுந்து அழிச்சாட்டியம் செய்ய…

டேய்.. ஒரே நாளுக்குள்ள என்னடா நடந்துச்சுஇப்படி காலங்காதத்தால வந்து உயிரை வாங்குற.. ஒரு பத்து மணிக்கு கேட்குறோம்டா.. நீ கிளம்பு

என்று அவனை விரட்ட..

காயு கொட்டாவி விட்டுக் கொண்டே தன் ரூமிற்குள் இருந்து வெளிவந்தாள்.. அண்ணி மற்றும் தோழி இல்லாமல் கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்ததுபின்னே இந்நேரம் அவர்கள் மாடியில் யோகா செய்து முடித்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்களே..

வந்ததும் கார்த்தியை பார்த்து பின் தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ என்று பதறி மணி பார்க்க.. அதுவோ உள்ள நேரத்தை தான் காண்பித்தது..

பின் இப்போது விசித்திரமாக கார்த்தியை பார்த்து..

என்ன ஆச்சு உனக்கு.. ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருச்சாடா உன்னை.. இப்படி இந்நேரத்துக்கு எழுந்து  குளிச்சு முடிச்சி அதிர்ச்சிலாம் தர”

என்று வினவ..

அப்போது தான் பெற்றோரும் அவனின் தலையை கவனித்தனர்.. அது லேசாக ஈரமாக இருந்து..  அவன் குளித்து விட்டான் என்று கட்டியம் கூறியது

அதை பார்த்து அபிராமி தலையில் அடிக்ககார்த்தி மனாசீகமாக கடிகாரத்தை பார்க்காமல் எழுந்ததும் வழக்கம் போல் குளித்து வந்த தன் மடத்தனத்தை நொந்தான்.. பின் காயுவை பார்த்து சமாளிப்பதற்குள் மாணிக்கவேல்..

“காத்து கருப்பு இல்லமா.. காதல் காத்து உன் அண்ணன் பக்கம் அடிச்சிருச்சி... அதான் பையன் நேரம் காலம் தெரியாம ஆடுறான்..”

என்று கொட்டு வைத்தார்.

“என்னது காதலா…?

என்று அதிர்ச்சி அடைவது போல் நெஞ்சைப் பிடித்தவள்

“யார் யார் அந்த பாவப்பட்ட ஜீவன்…?”

என்று காயு வினவ..

“நம்ம முத்ரா தான்மா..” என்றார் தந்தை.

முத்ரா என்றதும் காயுவிற்கு துள்ளி குதிக்காதது தான் குறை..

“ஹைய்.. செம இனி முத்ராவும் இங்கேயே தான் இருப்பா.. வாவ்..

என்று சந்தோஷத்தில் தடுமாற.. ( உன் கவலை உனக்கு.. )

கார்த்தி தான் மனதிற்குள்… இந்த குட்டிப்பிசாசு சந்தோசப்படுறதா பார்த்தா முத்ரா பேருக்கு தான் என் பொண்டாட்டியா இருப்பா போல.. முழு நேரமும் இவளே வச்சிப்பாளோ.. என்று வருங்காலத்தில் தனக்கு வரப்போகும் நிலைமையை தானே கணித்தான் அந்த காதல் ஜோதிடன்.

“நேற்றிரவு திடீர்ன்னு வந்து முத்ராவ பொண்ணு கேளுங்க.. இல்ல இல்ல.. அப்படி கேட்கலை..  நீங்க கேட்குறீங்களா இல்லை நான் கேட்கவானு மிரட்டலா காதலை சொன்னான் பாரு..

என்று அபிராமி பாவனையோடு சொல்லி ஓட்ட..

அதற்கும் மேல் அங்கு இருக்க கார்த்தி என்ன முட்டாளா..? அந்த இடத்தை விட்டே மறைந்துப் போய்விட்டான் கேலி கிண்டலில் இருந்து தப்பிக்க..

காலை பத்து மணி..

வீட்டிற்குள் நுழைந்த ருத்ராவையும் முகிலனையும் வரவேற்றார் அபிராமி. கார்முகிலன் மற்றும் ருத்ராவின் முகத்தில் கூடுதலாக தெரிந்த பிரகாசம் அவர்களின் வாழ்க்கை மலர்ந்ததை அனுபவசாலியான அவரின் கண்களுக்கு எடுத்துக்காட்ட.. மனதில் பெரும் நிம்மதி குடிக்கொண்டது.

பின்னர் அவர் கார்த்தி மற்றும் முத்ராவிற்கு திருமணம் செய்ய  முடிவெடுத்திருப்பதாகவும் இன்னும் கருணா அண்ணாவிடம் பேசவில்லை என்றும் கூறி வீட்டில் நடந்த கூத்தை கூறி சிரிக்க..

கார்முகிலனிற்கும் சிரிப்பு வந்து விட்டதுஎப்போதும் மனதிற்குள் கார்த்தியின் சேட்டையை எண்ணி நகைப்பது தான்.. ஆனால் இன்று ஏனோ மறைக்க தோன்றவில்லைஅவனின் சிரிப்பை பெற்றோர் ஆச்சரியமாக பார்க்க.. இனி வரும் நாட்கள் மேலும் மேலும் பல ஆச்சரியங்கள் அவர்களிற்கு அள்ளி அள்ளித் தருவான் கார்முகிலன்.. காதல் தான் ஒரு மனிதனை எந்தளவு மாற்றுகிறது.. 

ருத்ராவிற்கோ தன் தங்கை தன்னுடன் வாழ்நாள் முழுக்க என்ற நினைவே வானத்தில் பறக்க வைத்தது…

கார்த்திக்கு முத்ராவிடம் அவள் வீட்டினர் பேசும் முன்பே அவளிடம் திருமணம் குறித்து பேச நினைத்தான்… அது என்னமோ இப்போதே திருமணம் உறுதியாகிய சந்தோசம் மனதை நிறைத்தது.. வருங்கால மாமனார் மாமியார் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒரு காரணம்… கண்டிப்பாக சம்மதிப்பார்கள் என்று

காரை கல்லூரியை விட்டு சற்று தள்ளி இருக்கும் ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தினான்.

அங்கு முத்ராவை காயு அழைத்து வருவதாக ஏற்பாடு.. வீட்டில் தந்தை முத்ரா தந்தையுடன் பேச போகும் நேரத்தில் இங்கு வந்திருந்தான்…

முத்ராவோ புலம்பிக் கொண்டிருந்தாள்..

“காலேஜே பாதி நாளு தான்.. அதுலயும் பாதி கட் அடிச்சி கூட்டிட்டு வந்திருக்கியே.. உன்னையெல்லாம்..

என்று பொரிய..

“இரும்மா.. ட்ரீட் குடுக்குறதே பெருசு.. அதுக்கெல்லாம் நேரம் காலம் பாக்கலாமா..

என்று கேட்டாள் காயு.. ( நியாயந்தானே…!!! )

எதுக்கு ட்ரீட்உனக்கு கல்யாணம் பிஃஸ் ஆகிருச்சா.. என்று முத்ரா கேலி செய்ய..

அதற்கு பதில் கார்த்தியிடம் இருந்து வந்தது..

“கல்யாணம் பிஃஸ் ஆகிருக்கு தான்.. பட் அவளுக்கு இல்ல.. எனக்கு..”

என்று கூறியவாறு எதிர்ப்பக்கம் அமர..

அவள் இதயமோ அவனை பார்த்தா அன்றி அவன் கூறிய செய்தியை கேட்டா என்று பிரித்தறிய முடியாத படி தாளம் தப்பி இடமும் தப்பி தொண்டையில் வந்து துடித்தது…  மேலும் கடினப்பட்டு தேற்றிய மனதும் இப்போது உடைந்து விடுவேன் என்று பயம் காட்டியது.

********************************

அங்கே மாணிக்கவேல் தன் மகனின் விருப்பத்திற்கு ஏற்ப உண்மையை சொல்லியே கருணாகரனிடம் பெண்  கேட்டார். கூடவே இது முத்ராவிற்கு தெரியாது என்றும்..

கருணாகரன் சீதா தம்பதியினருக்கு எப்போதும் பிடிக்கும் கார்த்தியை இப்போது மேலும் அதிகமாக பிடித்தது.. பின்னே பெண்ணிடம் காதலை சொல்லி மனதை கலைக்காமல்.. அவனின் பெற்றோரிடமே கூறி அவர்களை பெண் கேட்க வைத்த குணம் அரிதல்லவா.. ? மேலும் யாருக்கு தான் தன் பெண்கள் ஒரே வீட்டில் வாழப் போவது பிடிக்காது..

ஆனாலும் கடமை தவறாத தந்தையாக…

“நீங்க கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசம் மாணிக்கம்.. ஆனா இதுல முத்ரா சம்மதம் கேட்கணும்.. அவ அவங்க அக்கா கூட இருப்போம்னு இருக்குற ஒரு காரணத்துக்காகவே சரி சொல்லுவா.. இருந்தாலும் கேட்டு சொல்றேன்.. அதே மாதிரி கல்யாணத்தை படிப்பு முடிஞ்ச பிறகே வச்சிகலாம்னு

என்று சொல்லாமல் நிறுத்தினார்..

“அடஅதுக்கு எதுக்கு தயங்குற.. நானே அதை தான் சொல்ல வந்தேன்.. ஒரு 2 வருஷம் போகட்டும்... அதுக்குள்ள இங்க காயுக்கு கல்யாணம் முடிச்சிரும்.. அப்புறம் இவங்களுக்கு பாக்கலாம்என்ன சொல்ற கருணா..

என்று கேட்க..

அங்கு வாய் வார்த்தையாக நிச்சியதார்த்தம் அழகாக நடந்து முடிந்தது.

***********************************

இப்போவா அடுத்த நிமிசமா.. நான் எப்போ வரது என்று முத்ராவின் கண்ணிற்குள் இருந்த உப்பு நீர் கேள்வி கேட்க.. நீ வரவே வேண்டாம் என்றவாறு அதனை முயன்று உள்ளே தள்ளிக்கொண்டிருந்தாள்.

அதனை பார்த்த காயுவிற்கு இவளும் விரும்புகிறாள் என்று புரிய.. அண்ணனை முறைத்து சீக்கிரம் சொல்லு என்ற விதமாய் பார்வையால் மிரட்ட.. கொஞ்ச நேரம் என்று கண்களால் கெஞ்சியவன்.. அவளை போக சொல்லி தலையாட்டினான்.

காயுவிற்கு அப்போது அபிராமியிடம் இருந்து கால் வந்தது.. இவன் இங்கு வருவது தெரியும் என்பதால் அவனிற்கு அழைக்க.. கார்த்தி சைலெண்ட்டில் போட்டதால் எடுக்கவில்லை..

காயு எடுத்ததும்..

“அவன் கிட்ட சொல்லுஎல்லாம் நல்லபடியா முடிந்தது.. முத்ரா கிட்ட கேட்டு வரட்டும்…”

என்க..

அம்மா.. இங்க உன் பையன் அவளை அழ வச்சிட்டு இருக்கான் என்ற வார்த்தைகள் வாய் வரை வந்தது.. பின் அடக்கி.. இங்க சிக்னல் கிடைக்கல நான் வெளிய போய் பேசிட்டு வரேன் என்று பொதுவாக.. ஆனால் கார்த்தியை பார்த்து முறைத்துச் செல்ல..

ஆஹா.. குட்டிப்பிசாசு போட்டுக் குடுக்க போகுது போலவே.. என்று மனதினுள் நினைத்தான்.. பின் பார்த்துக்கலாம்.. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா.. என்று அதை ஒதுக்கியும் தள்ளினான்.

இங்கே முத்ரா ஒன்றும் சொல்லாமல் தன் கைவிரல்களையே வைத்தக் கண் வாங்காமல் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்.. அப்புறம்.. என்ன சாப்பிடுற முத்ரா..

என்று கார்த்தி கேட்க..

அதே நேரம் கருணாகரன் முத்ராவிற்கு போன் செய்திருந்தார்.

அவனிற்கு பதில் சொல்லாமல் அதை காதில் வைத்து..

“சொல்லுங்கப்பா..” என்றாள் இவள்.

கார்த்திக்கு எதற்கு போன் என்று தெரியுமாதலால் அவன் உதட்டோர சிரிப்புடன் உரையாடலை கவனித்தான்..

அனைத்தையும் தந்தை கூற கூற.. முத்ராவின் மனம் மகிழ்ந்தாலும்.. தன்னை தவிக்க விட்டு சிரிப்பவனை தானும் தவிக்க விட ஆசை கொண்டது..

அதற்கு ஏற்றவாறு.. கருணாகரனும்,

“உனக்கு இதில் ஏதாவது ஆட்சேபனை இருக்காமா...

என்று கேட்க..

“இல்லப்பா..

என்றாள் கார்த்தியை உறுத்து விழித்தவாறு..

அதற்கு பின் போன் கைமாறி சீதாவிடம் போக..  அம்மா மகளின் உரையாடல் அவர் கூறிய புத்திமதிகளுக்கு ம்ம்.. ம்ம்.. போடும் வேலையோடு முடிந்ததால் கார்த்தி தான்.. எதற்கு இல்லப்பா சொன்னா

ஒரு வேளை கோபத்துல.. அவங்க சம்மதமான்னு கேட்டதுக்கு இல்லன்னு சொல்லிட்டாளோ.. அச்சோ.. நாம விளையாடலாம் என்று வந்தா இவ நம்மல வச்சி விளையாடுறாளே என்று கிட்டத்தட்ட அலறினான்.. மனதிற்குள் தான்.

அவள் பேசி வைத்து ஏதேனும் சொல்வாள் என்று பார்க்க.. முத்ரா ஒரு வெண்ணிலா ஐஸ்க்ரீம் என்று கேட்டு.. அது வந்ததும் மெதுவே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்ண ஆரம்பித்தாள். ( ஏய் பாவம் டி அவன்... )

“ஹேய்.. முத்ரா.. கோபமா.. நான் சும்மா தான் விளையாண்டேன்.. இப்போ எதுக்கு மாமாகிட்ட இல்லைனு சொன்ன.. நான் போன் பண்ணி பேசுறேன்.. எவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் வர கொண்டு வந்தேன் தெரியுமா..”

என்று தன் போனை எடுக்க..

“எந்த நம்பிக்கைல கல்யாணம் பேசுனீங்க.. நான் சம்மதிப்பேன்னா..?

என்று கேட்க..

“அதெல்லாம் உங்க அம்மா கிட்ட யாரோ உன்னை பொண்ணு கேட்கும் போது பார்த்த பார்வை சொல்லிருச்சி.. வாயால தான் சொல்லனுமா என்ன..”

என்று கேட்டவாறு அவளின் தந்தைக்கு அழைப்பு விடப்போக..

அவனின் போனை பிடுங்கி டேபிளில் வைத்தவள்..

“காதலை கூட காஷுவல்லா சொல்ற நீ.. ஒரு பீலிங் கூட இல்ல..

என்றவாறு அவனை மேலும் கீழும் நோக்கினாள்.

“இப்போ நான் தான் பீலிங்ல இருக்கேன்.. என்ன பண்ணி என்ன.. இப்படி சொதப்பி வச்சிருக்கியே நீ.. உனக்கு பீலிங் வேணுமாம்ல பீலிங்கு.. போடி அந்தாண்ட..

என்று கடித்தான்.

அவனை கண்டு வாய்விட்டு.. வயிற்றை பிடித்து சிரித்தவள்..

“ஹையோஉன்னோட சத்தியமா முடியல கார்த்தி.. இந்த கல்யாணத்துலஹாஹா.. உனக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்று.. ஹாஹா.. அப்படின்னு கேட்டவர் கிட்ட வேற என்ன சொல்லணும்

என்று சிரிப்பினூடே கேள்வி கேட்டாள்.

அவள் கூறிய பிறகே அவளின் குறும்பை உணர்ந்தவன்…

“இரு இரு.. இதுக்கெல்லாம் உனக்கு கண்டிப்பா என்கிட்ட இருந்து தண்டனை வரும்.. கல்யாணம் நடக்கட்டும்” என்று விளையாட்டாய் பல்லை கடித்தான்.

“அதுக்குத்தான் இன்னும் இரண்டு வருசம் இருக்கே…”

என்று தோளை குலுக்கினாள் முத்ரா..

“என்னது.. இரண்டு வருசமா

என்றவன்.. பின்பே அன்று கருணாகரன் மண்டபத்தில் கூறியதை நினைவு கூர்ந்தான்.

“நான் சும்மா சொல்றாருன்னு நினைச்சேன்.. நிஜமாவே இரண்டு வருசமா..?

என்று தனியே பேசி..

“பரவால்ல.. அதுவரை நாம லவ் பண்ணுவோம்…”

என்று சமாதானமும் ஆகினான்..

இவர்களின் காதலில் அந்த ஐஸ்க்ரீம் கடையே உருகியது என்றால் மிகையல்ல..

எவ்வளவு நேரம் பேசினார்களோ.. முத்ராவிற்கு போன் பேச சென்ற காயுவின் நியாபகம் வர..

“கார்த்தி.. காயுவ காணோம்.. வா போகலாம்”

என்று எழுந்தவள்.. மறக்காமல் காயுவிற்கு பிடித்த பிஸ்தா ஐஸ்க்ரீமை வாங்கிவிட்டு தான் வெளியே வந்தாள்.

அவளை வெளியே வந்து தேடியும் காணோம் என்றதும் இருவரும் சிறிது பதற்றம் அடைந்தனர். முத்ரா அவசரமாக காயுவை கால் செய்ய…

அருகில் இருந்த கார்த்தியின் காரில் இருந்து போன் அடிக்கும் சத்தம் கேட்டது.

பின் சீட்டில் எட்டிப் பார்க்க.. காயு காரின் பின்னால் எப்போதும் இருக்கும் குஷனை வைத்து சுகமாய் தூங்கியிருந்தாள்.

முத்ராவிற்கு வந்ததே ஆத்திரம்.. ஐஸ்க்ரீமை காரின் முன் சீட்டில் வைத்தவள்.. பின்னால் கதவை திறந்து அவள் காலில் போட்டாளே ஒரு போடு.. ஏற்கனவே போனின் சத்தத்தில் சிறிது கலைந்திருந்த தூக்கம் இப்போது முத்ரா அடித்த வலியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியிருந்தது.

கார்த்திக்கும் கோபம் வந்திருந்ததுஇப்படியா சொல்லாமல் கொள்ளாமல் வருவது என்று..

காயு முழித்து சாவகாசமாக இருவரையும் பார்த்தவள்.. தன்னை அடித்தவளை திருப்பி அடித்தாள்.

அடித்த கையோடு..

“நானும் இப்போ வருவாங்க அப்புறம் வருவங்கன்னு நடந்துட்டு இருந்தேன்.. போறவன் வரவன் எல்லாம் ஒரு மாதிரி பார்க்கவும்.. காரில் உக்காந்து இருந்தேன்.. அப்போவும் வராம.. என்ன தூங்க வச்சிட்டு இப்போ அடிப்பியாடி என்னை…”

என்று கத்தினாள்.

அவள் கத்தியதில் காதை தள்ளி வைத்து மணி பார்க்க.. அது ஒரு மணியை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது

அவர்கள் இடைஞ்சல் இல்லாத இடத்தில் உட்காந்திருந்ததால் யாரும் கவனிக்கவும் இல்லை.. கவனித்திருந்தாள் இரண்டு ஐஸ்க்ரீம்க்கு மூன்று மணி நேரம் உட்கார விடுவார்களா என்ன.. ?

முத்ரா தான் அசடு வழிந்தே சமாளித்தாள்

“ஹிஹி.. இல்லடி.. உன்னை காணோம்னு கொஞ்சம் பயந்துட்டேன்.. அதான்..”

என்றவள்..

“இதோ உனக்கு பிடிச்ச பிஸ்தா ஐஸ்க்ரீம் கூட வாங்கிட்டு வந்துட்டேன் பாரு..

என்று சமாதானப்படுத்த.. ஐஸ்க்ரீம்க்கு கரையாத மனசும் உண்டோ.. ???

ஒரு வழியாக தோழிகள் சமாதானம் ஆகினர். கார்த்தி அதில் தலையிடாமல் வேடிக்கைப் பார்த்து புன்னகையோடு காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.

**********************************

ஒரு வாரம் கழித்துஅபி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை அன்று ரிஷி பேருக்கு மாற்ற போகும் நாள்.. தொழிலாளர்கள் கூடியிருக்க.. முக்கியமான நான்கு பேரும் அறையில் இருந்து வெளிவராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்…

வாக்குவாதத்தில் பங்கேற்றிருப்பது நம் முகிலனும் ரிஷியும் தான்..

என்னடா இது என்று கண்ணை நன்றாக தேய்த்து விட்டு பார்த்தாலும் அவர்கள் தான் கத்திக் கொண்டிருந்தனர்.. ருத்ராவும் விகாஷினியும் எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் ஊர் செய்தி ஒன்றை விவாதித்துக் கொண்டிருந்தனர்.

விஷயம் என்னவென்றால் இது தான்.. கம்பெனியை மொத்தமாக வாங்கிக்கொள்ளுமாறு முகிலன் கூற.. அவனோ.. அப்படியெல்லாம் வாங்க முடியாது.. பார்ட்னரா இருக்கலாம் என்றான்.

சும்மா என்றால் சம்மதித்திருப்பனோ.. இப்போது ரிஷி என்னவென்றால் அபி மற்றும் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷனை ஒன்றாக்கி.. அபிவிகாஷி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரை அல்லவா சூட்டி பார்ட்னர் ஆக சொல்கிறான்..

“ஏற்கனவே எனக்கும் விகாஷினிக்கும் ஆகாது…”

என்று சொல்லி முகிலன் மறுக்க..

விகாஷினி அப்போது மட்டும் அவனை முறைத்தாள்.. ஆனால் அங்கு போய் எதுவும் நீ முகிலனிடம் பேச கூடாது என்று கூறிய ரிஷியின் வார்த்தையை மனதில் கொண்டு வந்து.. என்னமோ பண்ணி தொலைங்க என்றவாறு ருத்ராவிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.

“உன்னை யாருடா பார்ட்னர் ஆக சொன்னது.. நான் விகாஷினி அப்புறம் ருத்ரா மட்டும் பார்ட்னரா இருக்கோம்.. நீ உன் கனவான கம்ப்யூட்டர் கம்பெனி வேலையை பாரு..

என்றான் ரிஷி..

அவன் ஏதோ கூற வர.. ருத்ரா மற்றும் விகாஷினியின் சிரிப்பு சத்தம் இவர்களை தடை செய்தது..

அவர்களை பார்த்து புன்னகையோடு..

“பாருடா.. நல்லா தான பழகுறாங்க.. சரின்னு சொன்னா நாம வெளிய போய் ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்ல

என்று உற்ற நண்பனின் மனதை மாற்ற போராடி அதில் வெற்றியும் கண்டான் ரிஷி.

இன்று முதல் அபி மற்றும் விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் அபிவிகாஷி கன்ஸ்ட்ரக்ஷன் ஆக மாறி.. தலைமை அலுவலகம் கோவையில் இருப்பதாகவும்.. அடிக்கடி ரிஷி மற்றும் விகாஷினி மும்பை சென்று அங்குள்ள ஆபீஸை பார்ப்பதாகவும் முடிவாகியது.

*********************************

இரு வருடங்கள் கழித்து

ஹாலில் முத்ராவின் வாயை கார்த்தி மூடியிருக்க… அவளை நகர விடாமல் அவன் பிடித்து வைத்திருந்தான்… அருகிலேயே…

“இவள் வாயை இப்படியே தச்சி வைச்சா நல்லாருக்கும்..”

என்றார் சீதா தன் கணவர் கருணாகரனிடம்

அனைவரின் பார்வையும் டீபாவை பிடித்து தன் சின்னஞ்சிறு கால்களால் நடுக்கத்தோடு நடக்க தொடங்கிய ருத்ரமுகியின் மகள் மித்ராவின் மீது தான் குவிந்திருந்தது...

சிறிது தூரம் டீபாவை பிடித்து நடந்தாள். பின் தனியே தன் கால்களால் தளிர்நடையிட்டு சோபாவில் அமர்ந்திருக்கும்  தந்தையின் கால்களை பற்றிக்கொண்டு

“ப்பா…”

என்றாள்.

அனைவரும் ஒஹ்ஹ்ஹ என்று கத்திகைதட்டியவாறு மித்ராவை முத்தமழையில் கொஞ்சமுகிலனும் அதில் அடக்கம் தான்.

கார்த்தி அதன் பின்பே முத்ராவின் வாயை விட்டான்.. பின்னே.. எப்போது மித்ரா எழுந்தாலும்… பார்த்து பார்த்து.. என்று பதறி அவளருகில் சென்று நின்று..  கீழே விழுகிற மாதிரி இருக்கவும் தூக்கிக்கொள்வாள்.

எத்தனையோ தரம் ருத்ரா மற்றும் வீட்டினர் சொல்லியும் கேட்கவில்லை.. அதான் இன்று இப்படி அவளை ஓரிடத்தில் பிடித்து வைத்தாயிற்று…

அதோ இதோ என்று இரு வருடங்கள் ஓடிவிட… இன்னும் நான்கு நாட்களில் கார்த்திகேயன் மற்றும் முத்ராவின் திருமணம் கோயம்புத்தூரிலேயே வைத்துக் கொள்ள முடிவாகி இருந்தது.

அதற்கு தான் அனைவரும் இங்கேயே தங்கியிருந்தனர்.

இந்த இரு வருடங்களில் நடந்த முக்கிய நிகழ்வை குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் நம் காயுவிற்கு திருமணம் ஆகி தன் கணவன் வருணோடு சென்னையில் வசித்துக் கொண்டிருக்கிறாள்திருமணத்திற்காக நாளை வருகிறாள்அவள் தற்போது ஆறாம் மாதம்.. இன்னும் ஓரிரு மாதங்களில் வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக தாய்வீடும் வந்துவிடுவாள்.  

தெய்வம்… அண்ணன் பெண் கொடுக்காத கோபத்தில் அவசர அவசரமாக பணக்கார பெண்ணை பார்த்து கையோடு தன் மகனிற்கு கட்டி வைத்து.. இப்போது அங்கு சம்பளமில்லாத வேலைக்காரியாக போக்கிடம் இன்றி வாழ்ந்து வருகிறார்.

அவரின் தோழி கல்யாணியும் தன் இரு மகன்களுக்கு நல்லபடியாக திருமணம் செய்வித்து நன்றாகவே இருக்கின்றார். காலத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டல்லவா..? அவரின் மகனின் மனதை மாற்றாதா என்ன…

அனைவரும் கார்த்தி திருமணத்திற்கு குவிந்திருக்கும் வேலைகளைப் பார்க்கச் சென்றனர். கார்த்தி பொதுவாக கலகல சுபாவம் என்பதால் அவனின் நட்பு மற்றும் தொழில் வட்டம் மிகப்பெரியதுஅனைவரையும் அழைக்கும் பணியை அவனே ஏற்றுக்கொண்டான்.

இவ்வாறு நாட்கள் வண்ணமயமாய் பறந்து அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் வந்து நின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!