வேர் – 12

அன்று அவுட்ஹௌஸ் வெளி வராண்டாவில் இருந்தடேபிளில் அமர்ந்து இதழி படம் வரைந்துக் கொண்டு இருந்தாள்… இப்பொழுது எல்லாம் நேரம் இருக்கும் பொழுது இப்படி ஏதாவது செய்தே நேரத்தை நெட்டி முறிக்கிறாள்…

மணிபாட்டிக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போகவே அவரை வீட்டிலையே இருக்க கூறினார் கண்ணுபாட்டி.. ஆனாலும் ஏதாவது காரணம் சொல்லி அரண்மனையில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்….

கண்ணழகி கூறுவதை கேட்காமல் மணி வேலை செய்வதை கண்ட அவர் இப்பொழுது கங்கா என்ற ஒரு பெண்ணை மணிபாட்டிக்கு உதவியாக வைத்திருக்கிறார்… ஆனாலும் இப்பொழுது கூட அரண்மனைக்கு தான் சென்றிருகிறார்…

அவளும் வேலை நேரம் போக இதழியுடன் சேர்ந்துக் கொள்வாள்… இப்பொழுது எல்லாம் இனியாளை ஏதாவது சாக்கு சொல்லி அரண்மனைக்கு அழைத்து விடுவான் வெற்றி…

ஆனால் இதழி அங்கு செல்வதை குறைத்துக் கொண்டாள்… அன்று குற்றாலத்துக்கு போன அன்று பல உண்மைகளை அறிந்துக் கொண்டாள் அவள்..

இத்தனை நாள் இதழிக்கும் – சக்திக்கும் உள்ள உறவு என்பது அவனை பிடிக்கும்… அவனை தான் அவள் கட்ட வேண்டும் என்று அவன் வாய்மொழியாக “ குட்டிமாமாவை தான் நீகட்ட வேண்டும்  “ என்று அவன் கூறி சென்று விட்டான்..

அதே தான் இத்தனை நாளும் இதழி வேதவாக்காக எண்ணி இருந்தாள்… அவன் கூறியதால் அவனை தான் கட்ட வேண்டும் என்று அவனை பார்க்கும் நேரம் எல்லாம் கூறி வந்தாள்…

ஆனால் அப்பொழுது எல்லாம் அது காதலா என்று கேட்டால் சத்தியமாக இல்லை என்று தான் கூறுவாள்… அது காதல் தானா என்று அறியும் வயதும் அவளுக்குஇல்லை…

நித்தி அவனிடம் பேசும் பொழுது “ அவளில் ஒரு கோபம், அவளை அப்படியே அறையலாமா “ என்ற வெறி வந்தது அதுவும் எதனால் என்று அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை…

“ தான் ஏன் குட்டிமாமாவிடம் அப்படி கூறினேன்.. வேறு யாரேனும் வந்து என்னிடம் இப்படி கூறினால் அவர்களிடம் இப்படி கூறுவேனா..?“ என்ற பெரிய வினா அவளிடம்… அதற்கு பதில் உடனே “ இல்லை “ என்று வந்தது..

அப்பொழுது தான் அறிந்துக் கொண்டாள் “ குட்டிமாமா உங்களை தான் கட்டிக் கொள்வேன் “ என்ற ஒரு வார்த்தையில் அவள் வாழ்கையே அடங்கி இருக்கிறது… அவன் குட்டிமாமாவை தவிர வேறு யாரேனும் மனதில் உண்டா என்று அவளிடம் கேட்டாலும் அவள் மனது இல்லை என்று தான் கூறும்…

ஒரு நாளேனும் அவன் இவளை நேருக்கு நேர் பார்த்து பேசி இருப்பானா அப்பொழுதும் “ இல்லை “ தான் பதில்… அப்படியும் இவன் அவள் மனதில் வந்து விட்டானே..?

என்ன வென்றே புரியாத அந்த வயதில் “ உன்னை தான் கட்டிக்குவேன் “ என்று கூறியவள் இப்பொழுது அவனை விடுவாளா..?

“ அப்போஎனக்கு மணாளன் குட்டிமாமாவா..? “ ஒரு முறை“ குட்டிமாமா “ என்று தன் இதழால் கூறி பார்த்தாள் அப்படியே தித்திப்பாய் இனித்தது…

எப்பொழுது அழுத்தமான முகத்துடன் தான் சுற்றுவான் “ இஞ்சி தின்ன குரங்கு“ மாதிரி.. கொஞ்சம் என்ன பார்த்து சிரித்தா என்னவாம்..? காலையில் அந்த மைதாமாவு மூஞ்சி காரியை பார்த்து மட்டும் ஈஈனுசிரிக்குற..!!

அன்று யோசித்ததில் தன் மனம் முழுதாக அறிந்துக் கொண்டாள்… தன் மனதில் அமர்ந்திருக்கும் குட்டிமாமா மேல் அவளுக்கு காதல் உண்டென்று… அறிந்த நொடி அந்த வானையே எட்டிய உணர்வு…!!

இப்பொழுது எல்லாம் சக்தியை கண்டாலே ஒதுங்கி விடுவாள் இதழினி… ஏதோ ஒரு பயம்… அதிலும் சில நேரம் அவன் பார்க்கும் பார்வை…

அழுத்தமாக ஒரு பார்வை பார்ப்பான்… அப்படியே விழிகளுக்குள் நுழைந்து சென்று விடுவதைப் போல்… அந்த பார்வையை பார்க்கும் பொழுது சில நேரம் இதழிக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருக்கும்… அவனின் கம்பீர தோற்றமும் அவள் மனதையே அடித்து வீழ்த்தும் அதற்கு பயந்தே அவனை சந்திப்பதை, அங்கு செல்வதையே குறைத்துக் கொண்டாள்…

அவனை“ சத்தமில்லாமல் காதல் செய்ய “ அவன் எழும் நேரம் முன்பே எழுந்து அவனுக்காக காத்திருக்க.. அவன் முகம் அவள் கண்ணில் பட்டதும் சத்தமில்லாமல் சென்று விடுவாள்… எக்ஸ்ஸாம் நேரம் கூட விடியற் காலை எழாதவள் அவனை காணவே அவன் ஜாக்கிங் வரும் நேரம் எழுகிறாள்… “ அடடே.. காதல் செய்யும் மாயம்.. எனஅவளே சில நேரம் இதை எண்ணி சிலாகித்தது உண்டு… அவனை நேருக்கு நேர் பார்க்க பயம்…

இத்தனை நாள் அவனை நேருக்கு நேராக பார்த்து “ உன்னை தான் கட்டிக் கொள்வேன் “ என்று கூறியவள் இப்பொழுது அவனை பார்த்தே பயந்து ஓடினாள்…

அவனை பார்த்தால் புதிதாக ஒரு வெட்கம் வேறு… அவளை நினைத்தே அவளுக்கு சிரிப்பாக வந்தது “ இதழிக்கு வெட்கமா..!! அடடே…!! இதழியையும் ஒருவன் பலமாக சாய்த்து விட்டானே..!! டேய் கள்ளா..!!!! சத்தமில்லாமல் ஒரு யுத்தம் மனதில் நடத்திவிட்டாயே..!! “ என செல்லமாக அவனை கொஞ்சிக் கொள்வாள்….

இப்படி பலவாறாக அவனை எண்ணிக் கொண்டே படத்தை வரைய “ இதழினி“ எனஅவன் குரல் கேட்டு பதறி எழுந்ததில் பேப்பர், பென் என அவளை விட்டு சிதற..,

அவளோ அவன் உச்சரித்த “ இதழினி“ என்ற குரலில் மயங்கி நின்றாள்… ஏதோ முதல் முறையாக அவன் அழைப்பது போல்அவளின்  மனது அதை ரசித்து தொலைத்தது… அவனின் கம்பீர அழைப்பு வேறுஅவளை சிலிர்க்க செய்ய…. எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை…

சிதறி விழுந்த பேப்பரை கையில் எடுத்த அவன், அதை பார்த்து அவளை நோக்கி “ இதழி இது நம்ம வீடு போல இருக்கு… ஆனா ஒரு வித்தியாசம் தெரிதே “ என அவன் யோசிக்க..,

இவளோ அவனின் “ நம்ம வீடு “ என்ற சொல்லில் அப்படியே ரசித்து நின்றாள்… அவளிடம் பதில் இல்லாமல் போக “ இதழி“ என அழுத்தி அழைக்க..,

“ ஆங்.. எ.. என்ன கேட்டீங்க “ எனகேட்டு தடுமாற.., அதற்குள் அவளுக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது… ( ரொம்ப நேரமா பிள்ளை வெளியில் உட்காந்து இருக்குல்ல ஓவர் வெயில் போல.. அதுதான் வேர்க்குது… என அவள் மனது அவளுக்கு கௌண்டர் கொடுத்தது..)

அவளை யோசனையாக பார்த்த அவன் “ உனக்கு என்ன ஆச்சு..!! எதுக்கு இப்படி வேர்க்குது..?“ என கேட்டுக் கொண்டே அவளின் முகத்தை கையால் துடைக்க வர.., அவரசரமாக அவனை விட்டு விலகினாள்…

அவளின் விலகலை புருவம் சுருங்க பார்த்தவன் “ சரி உட்காரு “ எனஅவளின் கையை பிடிக்க வர.., அதற்கும் அவனை விட்டு விலகினாள் அவள்…

அவளை பார்த்துக் கொண்டே “ வீட்டுல யாரும் இல்லையா “ என கேட்க…

அவனின் மனதோ “ அடேய்…!! பிராடு பயலே..!! அங்க எல்லாரும் இருக்கதைபார்த்துட்டு தானே இவளை பார்க்க ஓடி வந்த… என்னம்மா நடிக்குறடா.. வெளிய வேணா நீ நடிக்கலாம்.. என்கிட்ட உன் நடிப்பு ஆகாதுடா மகனே “ எனஎச்சரிக்க…

“ உனக்கு தெரிந்தா என்ன தெரியாட்டி என்ன.. உன்னால வெளிய வந்து சொல்ல முடியுமா..? பேசாம அடங்கி இரு “ என இவன் அதனை எச்சரிக்க…

“ நானும் பாக்குறேன் அவளுக்கு மஞ்ச தண்ணீ ஊத்துனதுல இருந்து… நீ தான் மந்திரிச்சு வுட்ட சொனாங்கி மாதிரி அலையுற… ஆனா வெளிய எல்லாருக்கும் அந்த புள்ள தான் உன் பின்னாடி அலையுற மாதிரி காட்டிகுற… இதுக்கு எல்லாம் சேர்த்து ஒரு நாள் அனுபவிப்ப “ என அவனுக்கு எச்சரிக்க விடுக்க..

“ நான்இப்படி தான்.. எதையும் சொல்லமாட்டேன்…

“ அப்போ இப்படியே கண்ணால அந்த பிள்ளைய மயக்கிட்டே இரு… நீ ஒன்னும் சொல்லாம அலை. ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவளும் சொல்லாம கொள்ளாம உன்ன விட்டு போவா…. அப்போ தெரியும் வெளியில் சொல்லும் காதலுக்கு உள்ள மரியாதையும், சொல்லாத காதலுக்கு உள்ள மரியாதையும் “ என

“ அதை அந்த நேரம் பாத்துக்கலாம்.. அவ கண்ண பாரு.. இந்த கண்ணு என்னை விட்டு போகுமா… ஒரு நாளும் போகாது “ என இறுமாப்பாக கூற..

“ அப்போ நீ அவகிட்ட காதல் சொல்லாமலே.. இருக்க போற அப்படி தானே..

“ ஆமா… சொல்லமாட்டேன்… என்னோட ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு என் காதலை உணர்த்துவேன் “ என கூற

“ நீ கிழிச்ச..!! உன்அம்மா ஏதாவது சொன்னா… இவளை இனி நினைக்க கூடாதுன்னு நினைப்ப.. இந்த லட்சணத்துல இவரூஉஉ… சொல்லாமல் காதலை உணர்த்துவாராம்… டேய்… எனக்கு ஏற்கனவே காது குத்தி கருப்பு கம்மலும் போட்டாச்சு “ என எரிச்சலுடன் கேலி குரலில் கூற..

உனக்கு எல்லாம் கேலியா தான் இருக்கும்.. ஒவ்வொரு நேரமும் “ குட்டிமாமா உன்னை தான் கட்டிக்குவேன்னு “ இதழி விளையாட்டா சொல்லும்போதும் எனக்கு உண்மையாவே ஒரு பயம் இருக்கும்…!! ஒரு தவிப்பு இருக்கும்…!!

அது எதனால் தெரியுமா “ எல்லாமே விளையாட்டா போக கூடாதே “ என்று ஒவ்வொரு நாளும் பயந்தேன்.. அது தான் அவகிட்ட பேசாம இருந்தேன்… அப்போ தானே அவளுக்கு என்னோட நினைப்பு வரும்…

அதிலும் “ என்னைக்குஇதழி எனக்கு முறைப்பொண்னு தெரிஞ்சுதோ… அன்னைக்கே அய்யா இந்த அத்த பொண்ணு மேல கண்ணை வச்சுட்டேன் “ என 

“ அது தான் எனக்கு தெரியுமே… அந்த பிள்ளையை யாருக்கும் தெரியாம உன் ரூம் ஜன்னல் வழியா பாக்குறதும், அவ இங்க வீட்டுக்கு வரும் நேரம் பார்த்து அந்த பிள்ளையை மயக்கவே விதம், விதமா டிரஸ் பண்ணுறதும் எனக்கு தெரியாதாக்கும்.. என நொடிக்க…

“ ம்ம்.. தெரிதுல அப்புறம் என்ன.. உனக்கே தெரியும் போது என் லிப்ஸ்க்கு தெரியாதா..? என்ன“ என கேட்க..

“ அடேய்.. மடையா நான் உன் கூடவே இருக்கேன் எனக்கு தெரியும்… அவள் என்ன உன் கூடவா இருக்கா அவளுக்கு தெரிய..?“ என கடுப்பு குரலில் கேட்க..

“ அதெல்லாம்… அவள் என்கிட்ட எப்பவும் இருக்கும் காலம் வரும்… அப்போ தெரிஞ்சா போதும்… இப்ப பாரு அவள் என்னை எத்தனை காதலிக்கா அது எனக்கு போதும் அதிலும் “ குட்டிமாமா உன்னை தான் கட்டிக்குவேன் என்று சொல்லும் போது அவள் முகத்தில ஒரு அழகான வெட்கம்.., அப்புறம் அந்த லிப்சால “ குட்டிமாமா “ என்று சொல்லும் போது அப்படியே…!!!  “ என ரசனையாக இழுத்து ஆரம்பிக்க….

“ அடேய்..,!! மானம்கெட்டவனே… வெளிய தான் அம்பி மாதிரி கஞ்சி குடிச்சுட்டு சுத்துற உள்ள பயங்கரமா ஹாட் பிரியாணி திங்குற.. உன்னை எல்லாம்.. போடா.. போடா. எனக்கே வெட்கமா இருக்குடா..“ என அலற..

கூடவே“ டேய் மடையா…!! உன்னை அவள் காதலிக்குறா என்றுஉனக்கு தெரிஞ்சா மட்டும் போதுமா.. நீ அவளை காதலிக்குற என்று அவளுக்கு தெரிய வேண்டாமா..? என கேட்க..

“ அதெல்லாம் தெரியவேண்டாம்.. சொல்லி தான் தெரியணுமா… போ உன் வேலையை பார்த்துட்டு.. நான் இவகிட்ட இப்போ பேசணும் “ என அவனின் மனசாட்சியை விரட்டியடித்து அவளை நோக்கி திரும்பினான்…

தான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அப்படியே நின்றவளை யோசனையாக பார்த்து “ இதழி உன்னை தான் கேட்குறேன் வீட்டுல யாருமே இல்லையா..?? என அழுத்தமாக வினவ..

“ இல்லை“ என தலையசைத்தவளை கண்டு… புருவம் சுருக்கிய அவன் “ வாய் திறந்து பதில் சொன்னா என்னவாம்..? “ என வினவ..

“ அடேய்.. உன்னை பார்த்தா இப்போலாம் காத்து தான் வருது “ என்ற உண்மையை எப்படி இந்த வாய் ஓயாமல் பேசும் இதழி கூறுவாள்…

அவனின் கேள்விக்கு பதில் கூறாமல் அப்படியே தலைகுனிந்து நின்றாள்… “ அவள் வாழ்க்கை டையிரியில் இப்படி அவள் பதில் கூறாமல் தலை குனிந்து நின்ற நாளே கிடையாது.. எல்லாம்இந்த சக்தி மயம் “

அவளின் அமைதியைப் பார்த்து.., தன் முன்னால் இருந்த நாற்காலியை காட்டி “ இதழி உட்காரு “ என கூற..

“ இ..இல்லை.. நான் நின்னுகிறேன் என காற்றாகி போன குரலில் கூற..

“ அப்படியா“ என கூறி தாடையை தடவிய அவன்…

“ நான் இன்னைக்கு முழுசும் இங்க தான் இருக்க போறேன்… நீயும்இப்படியே நிற்க போறியா..? “ என கேட்டு தாடையை தடவிக் கொண்டே கையை கட்டி, காலை ஆட்டிக் கொண்டே, அப்படியே சாய்ந்து அமர…..

“ என்ன….!! இன்னைக்கு முழுசும் இங்க இருக்க போறியா..? “ என அதிர்ந்துஅவளையும் அறியாமல் சத்தமாக ஒருமையில் விளிக்க…

மனதில் குதூகலித்துக்கொண்டே“ என்ன.. போறியாவா..? வயசுல மூத்தவங்களுக்கு மரியாதை தரணும்.. இது கூட உங்க பாட்டி உனக்கு சொல்லி தரலியா “ எனஎப்பொழுதும் போல் கடுமையாக கேட்டு அவளின் கையை பிடித்து இழுத்து நாற்காலியில் அமரவைக்க…( என்னநீ.. எப்போ பார்த்தாலும் அந்த பிள்ளையை கையை பிடிச்சு இழுக்க..)

அவன் கையை பிடித்து இழுத்து நாற்காலியில் அமர்வைக்கவும் அதிர்ந்த அவள் அதில் இருந்து எழப் போக..

“ ஏய்.. அப்படியே இரு “ என அதட்ட..

ஆமா இவர் சொன்னா அப்படியே கேட்கணுமோ.. ஏதோ முதலில் கொஞ்சம் தடுமாறிட்டேன்.. அது தான் கொஞ்சம் சைலெண்டா இருந்தா விடமாட்டான் போலியே.. அவன் வீட்டுக்கு போனா ஒரே பார்வையா பார்த்து கொல்லுவான்.. என்னமோ அதிசயமா இன்னைக்கு இங்க வந்து இம்புட்டு சீன் போடுறான் “ ஒரு வேளை அந்த மைதாமாவு மூஞ்சிகாரியை என்கிட்ட சொல்லி மடக்க பாக்குறானோ.. என்கிட்ட சொல்லி மடக்க பாக்குற அளவுக்கு அந்த மூஞ்சி அம்புட்டு வொர்த் இல்லையே… என்னவா இருக்கும் “ என அவனை சந்தேகமாகவும், யோசனையாகவும்பார்த்துக் கொண்டே மீண்டும் எழ..,

“ ஆஹாசக்தி.. உஷாரகிட்ட.. அதுக்குள்ள ஏதாவது செய்.. “ என மனம் கூற… அதே நேரம் அவள் எழுந்து சென்று விடக்கூடாதே என்று எண்ணம் மட்டும் மனதில் இருக்க… டக்கென்று அவளை நோக்கி திரும்பி எழுந்தவளை மீண்டும் நாற்காலியில் அமரவைத்து நாற்காலியில் இரு பக்கமும் அவன் கையை அரணாக வைத்துக் கொண்டான்…

அப்பொழுது தான் அவன் செய்த செயல் தெரிந்தது.. அதிலும் வலது கையில் ஷாக் அடித்தது போல் ஒரு தீண்டல்… அந்த தீண்டல் அடிவயிறு வரை சென்று தாக்கியது…

நாற்காலியை விட்டு எழ போகிறாள் எனவும் அவளின் வயிற்றில் கைவைத்து அவளை அமரவைத்திருந்தான் அவன்… ( அப்போ கண்டிப்பா ஷாக் தான் அடிக்கும் )

அதில் அந்த மென்மையில் மயங்கிய மனதை கடிவாளமிட்டு அடக்கினான்.. “ பின்ன வெளிய தெரிஞ்சா இவன் மானம் போயிருமே அப்படியே அதே கடுகு போல் முகத்தை வைத்துக் கொண்டே “ இருன்னு சொன்னா எழும்புற “ என அவளை முறைக்க..

இப்பொழுது மீண்டும் ஊமையாவது அவள் முறையானது… “ இப்படி டச் பண்ணிட்டு மரம் மாதிரி இருக்கிறான்.. இவனை கட்டிக்கிட்டு இதழி உன் நிலைமை பாவம் தான்.. பார்க்க தான் இப்படி கஞ்சி போல இருக்கான்னு.. பார்த்தா எல்லாத்திலும் கஞ்சி தான் போல “ என மனதில் கௌண்டர் கொடுக்க..

“ அவனுக்கு ஒன்னும் ஆகல போல நமக்கு தான் என்னலாம்மோ ஆகுது…எத சொல்ல… எத விட… என்னல்லாமோபறக்குது.. ஆனா என்னதுன்னு தான் தெரியல.. கையெல்லாம் நடுங்குது… முகம் வெளிருது ( அதான்ப்பா… அந்த சோப்பு பூ ) “ என புலம்பி அப்படியே அமைதியாக தலையை குனிந்துக் கொண்டாள்…

அவளின் நிலையை பார்த்துக் கொண்டும் மெதுவாக புன்னகை புரிந்துக் கொண்டு அவளை ஆசையாக..!!! ரசனையாக…!! பார்த்தான்..

“ இதழி“ என அழைக்க.. அவனுக்கும் காத்து தான் வந்தது… “ அய்யோ இது வேற நேரம் காலம் தெரியாமல் சதி பண்ணுது “ என எண்ணி மெதுவாக செருமி கொண்டு “ இதழி“ எனஎப்பொழுதும்போல் அழுத்தி அழைக்க..

“ ம்ம் என தலையை உயர்த்தாமல் சத்தம் கொடுக்க..

“ என்னை பாரு… உனக்கு மரியாதையே தெரியல.. இதை தான் இத்தனை நாள் ஸ்கூல்ல சொல்லி தந்தாங்களா.??“ என முறைத்துக் கொண்டே கேட்க..

“ மடையா.. மடையா.. “ என திட்டி அவனை நோக்கி நிமிர்ந்து “ என்ன “ எனமுறைத்துக் கொண்டே கேட்க… மனதில்“ எப்போ பார்த்தாலும் இப்படிமுறைசுட்டே அலை.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் இப்படி முறைச்சுட்டு அலைவேன்.. நீ என் பின்னாடி கெஞ்சிட்டே அலைவ “ என அவனை சபித்து அவனைப் பார்த்து இருந்தாள்…

அவள் நிமிர்ந்து பார்த்ததை கண்டு “ சரி… என்னை பார்த்து.. குட்டிமாமாஉன்னை தான் கட்டிப்பேன்னு சொல்லு“ என

அவனைப் பார்த்து விழித்து“ அடபாவி இதுக்கு தான் இத்தனை அக்கபோறா “ என்பதாய் அவள் பார்க்க..

“ உன்னை நான் டெய்லி வந்து சொல்ல சொல்லிருக்கேன்… கொஞ்ச நாளா நீ என் கண்ணுல படல… நானும் வேலை டென்சன்ல இருந்தேன் கொஞ்சம் உன்னை கவனிக்கலை… சோ இப்போ சொல்லு “ என கூறி அவளை அப்படியே சேரோடு இழுந்து தன்கால் அருகில் வைத்துக் கொண்டு கைகளை சோம்பல் முறித்து பின்னந்தலையில்கட்டிக் கொண்டான்.. “ நான் சொன்னதை செய்து விட்டு இடத்தை விட்டு நகரு “ என்னும் விதமாக இருந்தான்….

இதற்கு முன் என்றால் கண்டிப்பாக அவள் கூறி இருப்பாள்… ஆனால் காதல் கொண்ட மனதோ “ அவன் காதலை கூறும் முன் நீ எதையும் உளறி விடாதே “ என எச்சரிக்க.., அப்படியே அவனைப் பார்த்து இருந்தாள்…

அவளின் பார்வையை கண்ட அவனோ “ எதுக்கு சொல்லணும்னு யோசிக்கிறியா..? “ என வினவ..

“ கண்ணுலகேட்குற கேள்வியை மட்டும் சரியா சொல்லு.., மனசுல கேட்கறதுக்கு ஒண்ணுக்கும் பதில் சொல்லாத “ என மீண்டும் அவனை முறைத்துப் பார்க்க..

“ பாக்குறதைபாரு.. உருண்டகண்ணி.. இப்படிகண்ணை உருட்டி உருட்டி பார்த்து.. கட்டிகிறேன்னுசொல்லி சொல்லி எந்த பிள்ளையையும் மனசுல நினைக்காம இருந்த என்ன இப்படி உன்னை நினைக்க வச்சுட்ட… “ என எண்ணி அவளை பார்த்து“ சீக்கிரம் சொல்லு “ என கூறி அவள் வரைந்த ஓவியத்தை கையில் எடுத்துக் கொண்டான்…

அவனுக்கு வீட்டில் நீச்சல் குளம் இருந்தால் ரொம்ப பிடிக்கும்.. அதை தான் இதழியும் வரைந்திருந்தாள்… வீட்டை அப்படியே வரைந்து அதில் ஒரு நீச்சல் குளம் வைத்திருந்தாள்… கூடவே ஒருவர் அமர்ந்திருப்பது போல் அவுட்லைன் போட்டு வைத்திருக்க “ இதுல என்ன வரும் இதழி “ என அவளைப் பார்த்து கேட்க..

“ அதுல ஒரு பாமிலி வரும் “ என மெதுவாக கூற..

“ அதை ஏன் இன்னும் வரையாம வைத்திருக்க “ என மெதுவாக கேட்க..

“ ஆங்.. அதுக்குள்ள தான் நீங்க வந்துடீங்களே “

“ ஓ.. அப்படியா… சரி.. சரி அது இருக்கட்டும்.. நீ சொல்லு “ என கூற…

அதற்குள்“ ஏய்.. இதழி“ என்ற குரல் கேட்க…

“ சரி.. உன் அக்கா வந்துட்டா… நாளைக்கு இதே நேரம் வருவேன்.. என்கிட்ட சொல்லணும்“ என கூறி அவளிடம் கூற வந்த காரியம் மறந்து, அவள் வரைந்த ஓவியத்தையும் எடுத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி சென்றான் அவன்…

அவன் செல்லவும் “ குட்டிமாமாவுக்கு என்ன ஆச்சு… இப்படி வம்பு பண்ணுறாங்க.. என யோசிக்கஅவள் மனதோ “ இவன் எப்பவும் உன்கிட்ட விளையாட தான செய்வான்.. ஒன்னு முறைப்பான் இல்லன்னா… உன்னை கட்டிப்பேன்னு சொல்லுனு சொல்லுவான்.. இவனா காதல் சொல்லுறதுக்கு முன்னாடி லூசு மாதிரி எதையும் உளறாதே.. இத்தனை நாள் நீ உளறிகிட்டு இருந்ததுக்கு அவனுக்கு இளக்காரமா போச்சு “ என கூற “ அதுவும் சரி தான் “  என தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்…

அவளை விட்டு விலகி வந்தவனுக்கோ “ டேய் நீ அவளை தேடி எதுக்கு போன இப்போ என்ன பண்ணிட்டு வந்திருக்க “ என கடிய..

“ ஏன் நான் எதுவும் பண்ணலியே.. அவள்என் முறை பெண் அதுதான் கட்டிக்க சொன்னேன் இதுல என்ன இருக்கு “ என அசால்ட்டாக கேட்க…

“ சரி நீ அவளை கட்டிப்பியா,,? “ என கேட்க 

“ ஆமா கட்டிப்பேன்.. அதுலென்ன இருக்கு “

“ உங்கஅம்மாக்கு இவளை பிடிக்காது.. உங்க குடும்பத்துக்கு இவள் தகுதி இல்லன்னு.. முந்தி நீ கூட நினைச்சியே “ என கேட்க.. .

“ ஆமா… நினைச்சேன். அது தான் அவள் கிட்ட சரியா பேசாம.. சும்மா விளையாடுனேன்.. ஆனா இப்போ தான் அவள் எங்க வீட்டு வாரிசே… இனி என்ன தகுதி வேணும் “

“ சரி.. இதை உங்க அம்மா கிட்ட சொல்லி இவளை கட்டிப்பியா. என கேட்க..

“ ஆமா கட்டிப்பேன்.. அம்மா கையால் தாலிவாங்கி தான் இவளுக்கு கட்டுவேன் “

“ அப்போ சரி போ…. அவள் உன்னை கட்டிக்கிறேன்னுஎப்போவும் சொல்லுவா தானே.. “ இதழி உன்னை தான் நான் கட்டிப்பேன்..! நீ இப்போ போய் சொல்லு என கூற…

“ இல்ல அது.. இப்போ சொல்லமாட்டேன்… நான் சொல்லவே மாட்டேன் “ என அவசரமாக கூற..

“ ஏன் “ என கேட்க.

“ அவளை எனக்கு பிடிக்கும்.. அதே நேரம் இந்த காதல் கத்திரிக்கானு அவகிட்ட போய் சொல்லிட்டு இருக்க மாட்டேன்…. அவளுக்கும் என்னை பிடிக்கணும்...  அவளுக்கு என்னை பிடிக்க வச்சுட்டே இருப்பேன்..

அப்போ கல்யாணம் “

அம்மாவுக்கு அவளை பிடிக்க வைத்து கல்யாணம் பண்ணுவேன்.. நான் அம்மாக்கு குடுத்த சத்தியத்தை காப்பாற்றணும்.. இப்போ இவளுக்கும் வாக்கு கொடுத்து அது.. வேண்டாம்… நான் அவ கிட்ட சொல்லமாட்டேன். ஆனா அவளை எப்பொழுதும் என்னை காதலிக்க வைப்பேன்… என்னை கொஞ்ச நேரம் தனியா விடு “ என கூறி அப்படியே அவளின் அந்த மஞ்சள் ரோஜாவைபார்த்து நின்றான்…

அதுவும் இப்பொழுது அவளைப் போலவே நன்றாக வளர்ந்திருந்தது.. அப்படியே அந்த செடியை வருட… அவளின் மேல் கை பட்டதுப் போல் இருக்க… அவசரமாக தன் கையை விலக்கிக் கொண்டான்…

அடுத்த நாளில் இருந்து அவள் வரைந்த ஓவியத்தைக் கொண்டு வீட்டில் நீச்சல் குளம் கட்ட வேலைகள் ஆரம்பித்தது…. அவனுக்கும் இந்த எண்ணம் இருந்தது என்று வீட்டில் எல்லாருக்கும் தெரியும்…

அதிலும் வெற்றி “ இதழி அண்ணனுக்கு நீச்சல் குளம் ரொம்ப பிடிக்கும்.. எப்பொழுதும் சொல்லுவான் இப்படி வீட்டில் நீச்சல் குளம் இருந்தா நல்லா இருக்கும்னு “ என கூற..

“ குட்டிமாமா எனக்காக தான் நீச்சல் குளம் கட்டிருக்காங்க “ என நம்பி, நினைத்து இருந்தவள் மனதை அப்படியே மாற்றி விட்டான் வெற்றி…

வேர் மெல்ல சாயும்….

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!