ver 12

ver 12

                                             வேர் – 12

சக்தியை பார்த்துக் கொண்டு நின்றிருந்த வித்யாவோ அவளையும் அறியாமல் அவன் பின்னே போக “ அடியே… வித்யு… பக்கத்துல பாருடி பெரிய எரிதணல் ஒன்னு நிற்குது .. அது பக்கத்துல வந்துச்சு .. நாம போஞ்சு போயிருவோம்டி “ என வித்யா காதில் மெதுவாக கூறி சுவிகா அவளை தடுத்து நிறுத்த..

அப்பொழுது தான் தன் நிலை அறிந்த வித்யா “ நல்ல வேளை சுவி காப்பாத்துன… இல்லன்னா “ என கூறி இதழியை பார்க்க…

அவளோ கடுமையாக இவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்… அவள் அருகில் மெதுவாகசென்ற வித்யா “ ஹீ..ஹீ… இதழ் இது தான் நம்ம குட்டிமாமாவா..? “ என கேட்க…

அவள் “ நம்ம குட்டிமாமாவா “ என கேட்பதை கேட்ட சுவிகா “ அடி.. ஆத்தீ.. இவா இன்னைக்கு அடிவாங்காம விலக மாட்டா போலவே “ என எண்ணி “ அடி.. வித்யு“ என அழைக்க…

வித்யாவை நோக்கி திரும்பிய இதழி “ என்ன சொன்ன “ என முகத்தை சாதரணமாக வைத்து கேட்ட..

அவளின் முகத்தை கவனிக்காத வித்யா “ நம்ம“ என ஆரம்பித்து அவள் முகம் பார்க்க..

அவள் முகத்தில் ஏறிய சிவப்பை கண்டு “ இல்லடி… உன் குட்டிமாமாவான்னு “ கேட்டேன்என இழுத்து கூற..

வித்யாவை முறைத்த அவள் “ அவர் என் குட்டிமாமா இங்க யாராவது அவரை பார்த்து ஜொள்ளுறதைபார்த்தேன்“ என கூறி இருவரையும் முறைக்க..

“ அடி ஆத்தீ… நான் உன் குட்டிமாமாவை பார்க்கலடி தாயே “ என சுவிகா ஜாகா வாங்க…

சுவிகாவை கண்டு சிரித்த வித்யா.., இதழி பக்கம் திரும்பி “ ஜஸ்ட்பன்யா.. அதுக்கு எதுக்கு இப்படி கோபம்.. எங்களை பத்தி உனக்கு தெரியாதா..? “ என கேட்க…

அவள் கூறிய பிறகு தான் மெதுவாக தெளிந்தஇதழி, அப்பொழுது தான் தன் நியாமற்ற கோபம் புரிவதாய் “ சாரிடி… குட்டிமாமா என்று வந்தா எனக்கு.. நான் நானாகவே இல்லைடி.. சாரிடி“ என அவர்களிடம் மன்னிப்பு கேட்க..

“ சரி… சரி… விடு “ என கூறி மணியம்மாளை காண சென்றனர்…

அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு… அவுட்ஹவுஸ் நோக்கி சென்றனர்… அங்கிருந்த இனியாளிடம் அரைட்டை என நேரத்தை போக்கி நாலு பேரும் கேரம் விளையாடி. என்று நேரத்தை நெட்டி முறித்தனர்…கேலி, கிண்டல் என்று கிளம்பி அவர்களும் பள்ளிக்கு சென்றனர்….

இப்படியாக நாட்கள் கழிய இதழியால் இப்பொழுது எல்லாம் சக்தியை பார்க்கவே முடியவில்லை.. இவளை அவன் பார்த்தாலும் காணாமல் செல்கிறான்.. காரணம் அறியாமல் இவள் தான் தவித்துப் போனாள்…

அவனை பற்றி யோசித்துக் கொண்டு இருக்க அவளை தேடி கதிர் வந்தான்… மதில் சுவர் பக்கம் நின்று விசில் அடிக்க.., தங்கள் அவுட்ஹவுசில் இருந்து வெளியில் வந்த இதழி அவன் நிற்பதை கண்டு  அவனை நோக்கி சென்றாள்……..

அப்பொழுது தான் மீண்டும் ஆபிஸ் கிளம்ப ரெடி ஆகிக் கொண்டு இருந்த சக்தி விசில் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க.. இதழி மதில் பக்கம்சென்று அந்த மரத்தில் ஏறுவதைக் கண்டான் ” இவளுக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பார்த்தாலும் இப்படி குரங்கு மாதிரி மரத்துல தொங்கிட்டு இருக்க வேண்டியது.. இவளை  ” என பல்லைக்கடித்து அவளைப் பார்க்க…

கையில் ஏதோ வைத்து உண்டு கொண்டு நின்றிருந்த காட்சி கண்ணில் பட… அதிலும் சக்தி கண் மென்று தின்றுக் கொண்டிருந்த அவளின் இதழை ஸ்கேன் செய்ய..

“அட.. கொப்புரானே..!! சக்தி அது ஆபத்தான இடம் உன் கண் அங்க போக வேண்டாம் என அவள் லிப்ஸ்  பின்னே செல்லும் மனதுக்கு கடிவாளமிட்ட அவனுக்கு அப்பொழுது தான் அருகில் நின்றவனிடம் அவள் சிரித்து, இதழ் சுழித்து பேசுவது கண்ணில், பட்டு கருத்தில் பட..

அவள் பேசுவது அவனுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது.. “ தனக்கு ஏன் கோபம் வருகிறது “ என்று அவன் எண்ணவே இல்லை… அதே கோபத்துடன் அவளை நோக்கி கிளம்பினான்.. வெளியில் வந்தவனை நாராயணன் பிடித்துக் கொண்டார்.. இருவரும் தொழில் பற்றி பேசஆரம்பிக்க….கடுப்புடன் அவரிடம் பேசிக் கொண்டு நின்றான்..….

கதிர் அருகில் சென்ற இதழினி ” என்ன.. பெப்பர்.. உன்னை எப்போ வர சொன்னேன் நீ எப்போ.. வார ” என கேட்க..

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இதழி ” என தயங்கி கூற..

அவன் தயங்குவதை கண்ட அவள் ” என்னடா.. இப்படி தயங்குற.. நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்ல போறியா… சாரி… அப்படி ஒரு எண்ணம் இருந்தா அந்த எண்ணத்தை அழிச்சிரு ” என கேலி செய்ய..

உனக்கு இந்த எண்ணம் வேற இருக்கா..போடி போ… எனக்கு என் அத்தை பொண்ணு அருக்காணி வெயிட் பண்ணிட்டு இருக்கா இதழ்… உனக்கு அந்த எண்ணம் இருந்தா இப்பவே அழிச்சிரு ” என கண்ணடித்துக் கூற..

டேய்.. டேய்… ரொம்ப தான் ” என இதழ் சுளிக்க..

சரி இப்போ நான் வந்த விஷயத்தை சொல்லுறேன்.. ” என கூறி வெற்றியின் காதல் கதையை கூறினான் கதிர்..

அதை கேட்ட அவளுக்கு ஆச்சரியமாக  இருந்தது..  ” வெற்றி மனதில் தன் அக்கா இருக்கிறாளா..இது தெரியாம இத்தனை நாள் இருந்திருக்கேனே என தன்னை தானே மானசீகமாக தலையை தட்டிய அவள் அவனை நோக்க..

அன்னைக்கு உங்களை கலாட்டா பண்ணுனது இதுக்கு தான்… அப்படி கலாட்டா பண்ணினால், இனி வீட்டில் பாட்டிக் கிட்ட சொல்லுவா.. அப்படி சொன்ன பிறகு பாட்டி தனியா விடமாட்டாங்க. யாரையாவது கொண்டு விட சொல்லுவாங்க.. அப்போ வெற்றி அவளை ஸ்கூல் கொண்டு விட செல்லும்போது அவன் காதலை சொல்லலாம்னு இருந்தான்.. ஆனா நீ பெரிய இவா மாதிரி வந்து கெடுத்துட்ட ” என அவளை குற்றம் சாட்ட..

சரி.. சரி.. ரொம்ப பண்ணாத.. நான் ஏதாவது பிளான் பண்ணுறேன் ” என கூறி அவனை அனுப்பிவிட்டு அப்படியே அந்த மரத்தில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்...

அவளுக்கு வெற்றியை பற்றி நன்கு தெரியும், ” எப்பொழுதும் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் சில விஷயங்களில் அவன் மிகவும் பிடிவாதமானவன்  ” என்று  கண்ணுபாட்டியின் வாய் மொழியாக கேட்டு தெரிந்திருக்கிறாள்…

எப்படியும் அவன் அவளை விடமாட்டான் என்று தெரியும்.. அன்று ஆன்வல் பங்சன் அன்று பொறுமையாக இருந்து அவர்களை அழைத்து சென்ற பொறுப்பான வெற்றி ஒரு நிமிடம் வந்து போனான்…

என் மனம்  குட்டிமாமா பின்னாடி செல்வதுப்  அறிந்தும் அவர் என்னை தவிர்ப்பதுப் போல், அக்கா வெற்றியை தவிர்ப்பாளா.? என எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது…

இங்க என்ன பண்ணுற ” என சக்தியின் அதட்டல் குரல் கேட்டு திரும்பியவள் சத்தியமாக சக்தியை எதிர் பார்க்கவில்லை…

குட்டிமாமா ” என அழைத்து திரும்பியவள் ” ஆஆஆஆ “தடுமாறி விழப்போக…

ஏய் ..லிப்ஸ்.. மெதுவா ” என பதறிக் கூற…

அவனின் ” லிப்ஸ் ” என்ற அழைப்பில் மயங்கி தடுமாற… கை பிடி நழுவ அப்படியே கீழே விழ…,

திடீரென அவ விழவும், அதை எதிர் பார்க்காத சக்தி சற்றும் யோசிக்காமல் அவளை தன் கைகளில் ஏந்தி இருந்தான்…

கீழே விழுந்தோம்..!! ஆறு மாசம் பெட்டுல இருக்க வேண்டியது தான்… அய்யோ.. அப்புறம் குட்டிமாமாவை பார்க்கமுடியாதே... கடவுளே காப்பாத்து..!! ” என வேண்டுதலுடன் கீழே விழுந்தவளை சக்தியின் கரம் தாங்கிப் பிடிக்க…

குட்டிமாமா..!! ” என அழைத்து அவன் நெஞ்சில் இதழ் பதித்து அவன் கழுத்தை சுற்றி கையை மாலையாக போட்டவளை கண்ட சக்தி மீண்டும்திகைத்தான்…..

அவனின் திகைத்த முகத்தை கண்ட இதழி அவனின் மனநிலையை அறியாமல் ” குட்டிமாமா நான் உங்களை தான் கட்டிப்பேன்.. “ என கூறி.., இன்றும் ஏதாவது பதில் சொல்லுவானா என அவன் முகத்தை ஏக்கமாக பார்க்க….

அவளின் கண்களின் ஏக்கமும், அவளின் குட்டிமாமா என்ற அழைப்பும் அவனை ஏதோ செய்ய அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் அவளை ஒரு பார்வைப் பார்த்து சென்றான் அவன்… அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் அப்படியே நின்றிருந்தாள் இதழினி…

வெற்றி அவளிடம் காதலை எப்படி கூறுவது என தெரியாமல் சுற்ற.. இனியாள், இதழி பரீட்சைக்கு தயாராக.. இருவரும் ஒரு வழியாக தங்களின் பள்ளிப் படிப்பை முடித்தனர்.. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தான் இனியாள் கொஞ்சமாக வெற்றியை எட்டிப்பார்த்தாள் என்று கூற வேண்டும்...

தான் விரும்பும் பெண்ணின் மனதில் இடம் பிடிக்க ” அவர்கள் கண்ணில் இடம் பிடித்தாலே, மனதில் இடம் கிடைக்கும் ” என்று ஏதோ ஒரு அனுபவ காதலன் கூறியதை கடைபிடித்தான் வெற்றி…

எப்பொழுதும் அவள் கண்ணில் படுவது தான் அவனின் முதல் வேலை போல் அவளின் பின்னே வால் பிடித்து சுத்த ஒரு கட்டத்தில்.. இனியாள் மனதில் வெற்றி அழுத்தமாக இடம் பிடித்துக் கொண்டான்...

அன்று வீட்டில் இருந்து வெற்றி, இனி, இதழி, கண்ணு பாட்டி நான்கு பேரும் கேரம் விளையாட… ஒவ்வொரு முறையும் வெற்றி இனிக்காக காயை தட்டி விட்டு அவளை ஜெயிக்க வைக்க அதை கண்ட கண்ணுபாட்டிக்கு சந்தோசமும் சிறு யோசனையும் வருவதாய்… இதை எல்லாம் லட்சுமி அமைதியாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்…

அவருக்கு வெற்றியின் செயல்கள் எதுவும் பிடிக்கவில்லை…. அதிலும் அவன் இருவருக்கும் பாத்து பாத்து செய்வதை காணும் நேரம் எல்லாம் அவருக்கு கொலைவெறியே வரும் ஆனாலும் அமைதிக்காத்தார்.. தனக்கு நேரம் வராமலா போகும் என்று எண்ணத்தில் காத்திருந்தார்……..

விளையாடி முடித்து எல்லாரும் கலைய வெற்றியை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றார் கண்ணுப் பாட்டி…

“ டேய் வெற்றி என்னடா நடக்குது “ என கேட்க..

“ என்ன பாட்டி.. வீட்டுல எல்லாரும் தான் நடக்குறோம்… மணிபாட்டி மட்டும் எப்பாவது நடக்குறாங்க “ என யோசனையாக கூற..

“ டேய்.. உனக்கும் – இனியாளுக்கும் இடையில என்ன நடக்குது “ என

“ ஓ.. அதுவா பாட்டி… இனியை பார்த்தா எனக்கு ஒரே பட்டாம் பூச்சியா பறக்குது… ஆனா அவளுக்கு பறக்கல.. அது தான் அவளுக்கு பறக்குதான்னு அவளை டீப்பா வாச் பண்ணுறேன் “

“ டேய்… கேலி பண்ணாதடா… ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடக்குது “ என வினவ..

“ அது தான் பாட்டி எனக்கு பட்டாம்.. “ என ஆரம்பிக்க..

“ டேய்“ என கடுப்பு குரலில் பாட்டி எகிற..

“ பாட்டி.. பட்டாம் பூச்சி… அது தான் காதல்.. இந்த லவ் பாட்டி .. அது இப்போ எனக்கு இனி மேல வந்திருக்கு… அவளுக்கும் என்னை பார்த்தா கொஞ்சம் பறக்கும் போல.. ஆனா சொல்லாம இருக்கா “ என யோசனையாக கூற…

பாட்டியின் எண்ணமும் இது தானே… இரண்டு பேத்திகளும் இங்கயே மருமகளாக வந்தால் அவர்களை எங்கும் அனுப்ப வேண்டாம்… கூடவே இருப்பதுப் போல் ஆகிவிடும்.. ஆனால் லச்சு..? சரி சமாளிப்போம் என எண்ணிய அவர்..

“ உன் காதலை அவகிட்ட எப்போ சொல்ல போற “

“ அது தான் தெரியல “ என கூற..

சிறிது யோசித்த பாட்டி “ நான் ஒரு ஐடியா சொல்லவா “ என கேட்க..

ஆர்வமாக அவர் முகம் பார்த்து “ சொல்லு பாட்டி “ என வெற்றி கூற…

“ பேசாம அவளை எங்கையாவது அழைச்சுட்டு.. போடா“ என ஒரு நல்ல பாட்டியாக ஐடியா கொடுக்க…

“ யாரு.. நான் அவளை எங்கையாவது அழைச்சுட்டு போகணுமா..? நல்லா வந்தா போ..? அப்படி அவள் வந்தாலும் அவ கூடவே அலையுமே அந்த ஒட்டுபுல்லு அது விடாது “ என கடுப்பாக கூற..

“ யாருடா.. அந்த ஒட்டுபுல்லு “ என பாட்டி யோசனையாக கேட்க..

“ அது அந்த உடன்பிறவி.. ஒரு குரங்கு இருக்குதே “ என இதழியை திட்ட..

“ ஓ என யோசித்த பாட்டி.. “ சரிடா.. பேசாம ஒண்ணு பண்ணுவோம்.. நாளைக்கு எல்லாரும் குற்றாலம்போவோம்… அங்க லவ் சொல்ல நிறைய இடம் இருக்கு… நான்எல்லாரையும் பாத்துகிறேன்… நீ உன் வேலையை பார் “ என கூற..

“ இந்த வயசான காலத்துல பேசாம வீட்டுல இரு பாட்டி…. நான் வேற ஏதாவது பண்ணுறேன் “ என பாட்டியை கலாய்க்க..

“ அட போடா… நாளைக்கு மதியம் எல்லாரும் கிளம்புறோம் “ என கண்டிப்பாக பாட்டி கூற…

“ சரி பாட்டி நீ சொல்லுற நானும் வாரேன்.. நாளைக்கு மட்டும் லவ் சொல்லமுடியாம போச்சு.. உன்னை அப்படியே அந்த மலையில் தள்ளி விட்டு வந்துருவேன் “ என எச்சரிக்க..

“ போடா… பாத்துக்கலாம்“ என கூறி தன் கட்டிலில் அமர, வெற்றி குதுகலத்துடன் வெளியில் சென்றான்…

வெற்றிவெளியில் செல்ல “ சக்தியும் இதழியை விரும்பினால் எத்தனை நல்லா இருக்கும் “ என எண்ணி கண்ணழகி பெருமூச்சு விட்டு அமர்ந்திருந்தார்……

காலையில் எப்பொழுதும் போல் இதழியும், இனியும் அரண்மனைக்குள் வர…

“ இதழி, இனி நாம இன்னைக்கு எல்லாரும் குற்றாலம் போறோம் “ என கூற…

இனியை விட இதழி தான் பெரும் சந்தோசம் அடைந்தாள்.. காரணம் அவளின்  குட்டிமாமா.. வீட்டில் எல்லாரும் என்றால் அவனும் உண்டு தானே என குதுகலமாக இருக்க..

“ ஆன்ட்டி “ என்ற அறைகூவலுடன் ஒரு யுவதி வீட்டில் நுழைய…

“ ஹாய்.. வித்யுஎன்ன… இந்த பக்கம் காத்து வீசுது “ என வெற்றி வினவ…

“ ஹாய் வெற்றி.. ஆன்ட்டியை பார்க்கலாம்ன்னு வந்தேன்“ என கூறி இதழியை ஒரு பார்வை பார்க்க..

“ வாடா.. செல்லம்.. எப்படி இருக்க.. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு  “ என கேட்டுக் கொண்டே லட்சுமி அவளை அணைத்து விலக…

வீட்டில் எல்லாரையும் கேட்ட லச்சுவிடம் பதில் கூறிக் கொண்டே வீட்டை பார்வையால் அலச..

“ யாரை தேடுற நித்தி “ என லட்சுமி கேட்க..

“ நான் யாரை தேடுவேன் ஆன்ட்டி.. எல்லாம் சக்தியை தான் “ என கூற

“ டேய் வெற்றி.. இந்த மைதாமாவு மூஞ்சிகாரி எதுக்கு சக்தியை தேடுறா “ என கோபத்துடன் வெற்றியிடம் கேட்க..

“ ஒ.. உனக்கு தெரியாதுல அம்மாக்கு நித்தியுவை ரொம்ப பிடிக்கும்… வீட்டுக்கும் வருவாளே… நீ ஸ்கூல் போற நேரம் வருவா.. அம்மா கூட சொல்லுவாங்க அண்ணாவை இவளுக்கு தான் கட்டிக் கொடுக்கணும் “ என சொல்ல

“ஆஆ“ என வெற்றி அலற..

“ வாட்யா.. வெற்றி “ என நித்யா கேட்க

“ நத்திங்யா… ஆன்ட்டி கடிச்சுட்டு “ என ஒரு காலை தூக்கி கொண்டு கூற..

“ வாட்“ என நித்யா அலற..

“ சாரிய்யா… எறும்பு கடிச்சுட்டு “ என கூறி “ ஏண்டி என்னை மிதிச்ச “ என இதழியை முறைக்க…

அவனின் முறைப்பை கண்டுக் கொள்ளாமல் “ இங்க பார் வெற்றி.. குட்டிமாமாவை கட்டிக்கணும்னு யாராவது வந்தா.. பாத்துக்க“ எனஅவனை எச்சரிக்க..

அவளை யோசனையாக பார்த்த அவன் “ அப்போ யார் கட்டிகுவாங்களாம்..?? “

“ அது மாமா தான் முடிவு பண்ணுவாங்க “ என கூறி திரும்ப.., சக்தியின் சிரிப்பு சத்தம் மாதிரி இருக்கு என வெற்றி மாடி நோக்கி திரும்ப அவளும்..,

“ இது குட்டிமாமா சிரிப்பு மாதிரி இருக்கு “ என மாடி பக்கம் திரும்ப…, சிரித்துக் கொண்டு வரும் அவனைக் கண்டு “மாமா சிரிக்கும் போது மின்னல் அடிக்குற மாதிரி ரூம் வெளிச்சமா இருக்கு “ என அவளின் ஒரு மனது ஜொள்ள…

இன்னொரு மனதோ “ ஊக்கும்.. அப்படியே சிரிசுட்டாலும்… வீட்டுல LED லைட் போட்டுருக்கு “ என இடக்காககூற அதை அடித்து விரட்டும் நேரம்..

“ சரி நித்தி… எனக்கு டைம் ஆகிட்டு… சாயங்காலம் பார்க்கலாம் “ என கூறி அவளின் தோளில் தட்டி செல்ல.., அதை கண்ட இதழிக்கு இரண்டு காதிலும் புகை வராத குறையாக முறைத்து நின்றாள்…

அடுத்த கொஞ்ச நேரத்தில் எல்லாரும் குற்றாலம் கிளம்ப நித்தியையும் அவர்கள் கூடவே அழைத்துக் கொண்டார்.. சக்தி வேலை இருக்கு என்று வராமல் இருக்க, “ டேய் வெற்றி உனக்கு முக்கியமான வேலை இருக்கு ஆபிஸ் வா “ என வெற்றியையும் அழைக்க..

வெற்றி கண்ணுபாட்டியை நோக்க “ டேய்.. இன்னக்கு வேலையை உன் அப்பா பாத்துப்பான் அவனை கூட்டிட்டு போ.. நாங்க குற்றாலம் போறோம் “ என கூற..

“ பாட்டி நீயுமா போற “ என சக்தி ஆச்சரியமாககேட்க..

“ ஆமா.. ஏன்…?? நான் போகக்கூடாதா..?? நானும் யூத் தாண்டா..!!“ என தலை முடியை கோதி விட..

அவரை பார்த்த சக்தி சிரித்துக் கொண்டே  “ சரி பாத்துப் போயிட்டு வாங்க “ என கூறி இதழியை அழுத்தமாக பார்த்து சென்றான்..

இப்படி தான் எப்பவும் பார்ப்பான்.. ஆனா கேட்டதுக்கு பதில் மட்டும் சொல்லமாட்டான்.. இப்போ எதுக்கு பார்த்தான், அவன் பார்வையில் இருந்தது என்ன என்று அறியாமல் குழம்பிய இதழியின் ஒரு மனதோ “ உன்னை பாத்து பத்திரமா போயிட்டு வர சொல்லுறான் “ என கூற…

இன்னொரு மனதோ “ இவளை சொல்லிட்டாலும் ……அவன் பாட்டியை பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வான்னு சொல்லுறான் “ என கூற..

அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் வெற்றி எல்லாரையும் அழைத்துக் கொண்டு குற்றாலம்நோக்கி சென்றான்…

காரில் செல்லும் வழியெங்கிலும் இனியாளும் – வெற்றியும்பார்வையால் தொடர.. இதை நித்யா கண்கள் படமெடுத்து கொண்டது… வீட்டில் நடக்கும் எல்லாத்தையும் லட்சுமி அவளின் தோழியான நிம்மியிடம் கூற…

நிம்மியின் ஸ்டேட்டஸூம், லக்ஷ்மியின் ஸ்டேட்டஸூம்பொருந்திப் போக தன் வீட்டின் மூத்த மருமகளாக நித்தியாவை தேர்ந்தெடுத்தார்… “ தன் மகன் தனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான்.. இவளைதான் திருமணம் செய்வான் “ என  அவளை தொழிலை கற்றுக் கொள்ள கூறி இருக்கிறார்…

சக்தியும் – நித்தியாவும் ஒரே காலேஜ் அவளுக்கும் அவனை பிடிக்கும் என்பதால் அவரின் கூற்றுக்கு சரி என்று கூறி அவர்களது தொழிலை இப்பொழுது தான் கையில் எடுத்திருக்கிறாள்.. எப்பவாது தொழில் விஷயமாக சக்தியை பார்ப்பதுமுண்டு..

தன் தாயின் எண்ணம் அறியாத சக்தியோ அவளிடம் நன்கு பேசுவான்.. அவளுக்கு என்ன உதவிகள் என்றாலும் செய்வான்… அவனிடம் நட்பு கொண்டுள்ள ஒரே பெண் என்கிற பெருமை நித்தியை சேரும்….

ஒரு மணி நேரத்தில் அவர்கள் குற்றாலத்தை வந்தடைய… ஐந்தருவி, மெயினருவி என எங்கிலும் சுற்றிப் பார்த்து, குளித்து என நேரம் கழிய..

வெற்றி, இனியாளிடம் பேச சமயம் பார்த்துக் கொண்டு இருந்தான்… சுற்றிய களைப்பில் எல்லாரும் ஒரு இடத்தை பார்த்து அமர, இதழியும், இனியாளும் இடத்தை விட்டு நகர…

“ இதழி எங்கமா.. போற “ என பாட்டி கேட்க…

“ பழ தோட்டம் போறோம் பாட்டி “ என அவரிடம் கூற..

“ டேய் வெற்றி… அசமந்தம்…!! துணைக்கு போடா “ என சத்தமாக கூறி அவனைப் பார்த்து கண்ணடிக்க…

“ சரி பாட்டி “ என கூறி பவ்யமாக அவர்கள் பின் சென்றான்..

“ நித்தி.. நீயும் போ “ என லச்சு கூற “ போங்க ஆன்ட்டி.. கால் வலிக்குது. நான் இங்கையே இருக்கேன் “ என கூறி காலை தடவி விட்டுக் கொள்ள.. லச்சு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்…

அவர்கள் பழ தோட்டத்தை நோக்கி செல்ல, அக்கா நீயும் வெற்றி மாமாவும் சுத்துங்க.. நான் இங்கையே இருக்கேன் “ என கூறி அங்கிருந்த பெஞ்சில் அமர…

அவளை ஆச்சரியமாக வெற்றி பார்க்க “ பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருண்டுட்டுனு நினைக்குமாம் “ என பழமொழியை கூறி “ அங்கிட்டு போ குரங்கே “ என அங்கு வந்த குரங்கை விரட்ட…

“ தேங்க்ஸ் இதழி “

“ அட போ மாமா.. தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்.. என் அக்கா ஹாப்பியா இருக்கணும், அதே போல அக்காக்கு உன் மேல எந்த எண்ணமும் இல்லைன்னா அவளை நீ தொந்தரவு பண்ணக் கூடாது “ என கூற..

“ என்ன இதழி… நான் அப்படியா இத்தனை நாளும் இருந்தேன்.. இப்போ தான் உங்க அக்கா என்னை கொஞ்சம் ஏறெடுத்து பார்க்க ஆரம்பிச்சிருக்கா… அதனால தான் என் ஆசையை அவகிட்ட சொல்ல நினைக்கிறன் “ இதழி தன்னை தவறாக எண்ண கூடாது என்று அவளிடம்எடுத்துரைக்க..

“ சரி.. சரி.. அக்கா குரங்குக்கு பயபடுவா போ “ என அவனை விரட்ட..

அவனும் அவளை நோக்கி சென்றான்… அவள் அருகில் அவன்.. மிக நெருக்கமாக நிற்க… காதல் வெட்கமறியாது என்பதை அன்று மனம் அறிவதாய்..!! ஆனாலும் படபட என அடித்துக் கொள்வதாய்…

மெதுவாக அவளை திரும்பி பார்த்தவனின் கண்களை பார்த்த இனிக்கு அவனின் எதிர் பார்ப்பு புரிவதாய்…!! பல நாட்களாய் உள்ளுக்குள் புதைந்திருந்த காதலும், அந்த நேசமும் இன்று இனிக்கு நன்கு புரிவதாய்..!!

அவளையே கண்களில் குறும்புடன் பார்த்துக் கொண்டு அவளின் கைகளை பிடிக்க… அவனிடம் இத்தனை பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சி இவளுள் பாய…. அவனுக்கு வயிற்றில் தான் பறந்தது.. இவளுக்கோ வாய் வழியாக வெளியில் வரும் போல் இருந்தது… பார்வையாலே அவளை சீண்டிக் கொண்டு இருந்தான் வெற்றி…

அவளின் தவிப்பை கண்கள் மின்ன.., குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டே அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க.. அவனை மெதுவாக எட்டிப் பார்க்க ” என்னை கட்டிக்கிறியா இனி.. உன்னை பார்த்ததில் இருந்தே எனக்குள் ஏதோ உணர்வு... அப்புறம் அன்னைக்கு முதல் முதலா உன்னை தாவணியில் பார்த்தேனே அன்னைக்கு தான் நீ எந்த அளவு மனசுல நிறைந்து இருக்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.. உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.. நீ என் வாழ்க்கை பயணம் முழுவதும் வருவியா…? ” என அவளை பார்த்து யாசிக்க…

மெதுவாக அவனை ஏறெடுத்துப் பார்க்க.. அவளை பார்வையாலே இதமாக கோதியவன் மென்மையாக புன்னகைத்தான்… எப்பொழுதும் வீட்டில் ஆர்ப்பாட்டமாக பார்த்தவனின் இந்த மென்மையும், இந்த பார்வையும் அவளுக்கு புதிதாக தெரிய அவனை அப்படியே பார்த்து நின்றாள்….

அவளின் அசையாத, நேசம் வழியும்  பார்வையை பார்த்து ” யாகூ  ” என கத்தி குதித்து அவளை அணைக்க வர… அவன் மார்பில் கைவைத்து அவள் தள்ளி விட…

அட என்னமா நீ…!! ஆசையா கட்டிப்பிடிக்க வந்தா இப்படி தள்ளி விட கூடாது.. குணமா கன்னத்தில முத்தம் கொடுத்து சொல்லணும் ” என கண்ணடிக்க…

மாமா என சிணுங்கி அவன் தோளில் உரிமையாய்  சாய… ஒரு வண்ணத்து பூச்சி சிறகை விரித்து படபடத்து தன் தோளில் அமர்ந்தது போல் அவன் மனமெங்கும் ஒரு சிலிர்ப்பு…!!

அவள் இதயம், தாய் மடி கிடைக்காத ஒரு குழந்தையைப் போல் அவன் மார்பில் சாய்ந்தது…!!

அவளின் மாமா என்ற அழைப்பும், உரிமையான சாய்தல் கூட அவனுக்கு தன்  காதலுக்கு கிடைத்த அனுமதியாகஅவளை மெதுவாக அணைத்து முன்னுச்சியில் தன் இதழ்களை மெதுவாக பதித்து.., அதில் தன் கன்னத்தை பதித்துக் கொண்டான்… (யப்பா ஒரு கிராமத்து கிஸ் கிடைச்சுட்டுய்யா..!! )

எத்தனை நேரம் அப்படி இருந்தார்களோ, பின் மெதுவாக அவனிடம் இருந்து விலகிய அவள் ” கிளம்புவோம்.. இதழி ஏதாவது  நினைப்பா ” என கூறி  அவனை விட்டு அவள் விலகிய பொது அவன் விழிகள் குறும்புடன் அவளை நோக்கி ” அவளுக்கு எல்லாமே தெரியும் ” என குறும்பு குரலில் முடிக்க…

பதைப்புடன் நிமிர்ந்தவள் ” என்னாதூ.. இதழிக்கு தெரியுமா ” என பதறி கேட்டு அவனை விட்டு இன்னும் விலகி நிற்க…..

அவளுக்கு மட்டும் இல்ல.., பாட்டிக்கும் தெரியும்.. அவங்க தான் இந்த ஐடியா குடுத்தாங்க ” என கூற…

என்ன..!! பாட்டிக்கும் தெரியுமா..” என கேட்டு அவளையும் அறியாமல் அவனை நோக்கி மீண்டும் வந்திருந்தாள் அவள்…

அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக் கொண்டு ” ஆமா.. தெரியும் ” என கூறி அவள் கன்னத்தில் முத்தம் வைக்க.. எங்கிருந்தோ வந்து தங்கள் மேல்  விழுந்த மங்குஸ் பழத்தில் இருவரும் பதறி விலக...

அவர்களை பார்த்து ” கீச்.. கீச் ” என்ற சத்தத்துடன் இரு குரங்கு முறைத்துப் பார்க்க...

ஆஞ்சநேயா..!! உன் முன்னாடி இப்படி கட்டிப்பிடிக்குறது தப்பு தான்.. ஆனா என்ன பண்ணுறது.. என்னோட ஹனிக்கு உன் இடம், இந்த மலை இதை எல்லாம் பார்த்த பிறகு தான் காதல் மலர்ந்திருக்கு.. அவ கூடவே இத்தனை வருடம் இருந்திருக்கேன்.. ஒரு பார்வை கூட பார்க்காம இப்படி டுயூப் லைட் மாதிரி இருந்தா.. இப்போ பாரு எப்படி வளைச்சு வளைச்சு சைட் அடிக்குறா…  அது தான் ஒரே ஒரு கிஸ் பண்ணுனேன்.. மன்னிச்சுக்கோ ” என குரங்கை பார்த்து வேண்ட… அவனை பார்த்த அவளுக்கு சிரிப்பு வர அப்படியே அவனை பார்த்து நின்றாள்..

அவனை பார்த்த குரங்கு அவனை நோக்கி தாவ.. இருவரும் பதறி விலக… அங்கிருந்த மரத்தில் இரண்டு குரங்கும் தொங்கி கையில் இருந்த பழத்தை பகிர்ந்து உண்ண.”

ஓ.. சாரி.. உங்க இடத்துல நின்னு நான் என்  டார்லிங்க்கை கொஞ்சுனதுக்கு கோபமா ..!! ஓகே...ஓகே... நாங்க கிளம்புறோம் ” என அதுகளிடம் இருந்து விடை பெற்று கிளம்ப..

வழியில் காத்திருந்த இதழியை அழைத்துக் கொண்டு வர… தன் அக்காவின் முகத்தை பார்த்து அவளுக்கு சந்தோசம் வர அதே சந்தோசத்துடன் அவன் முகத்தை பார்த்து பார்த்து இதழி சிரித்துக் கொண்டே வர..,

என்ன பிசாசு… சிரிப்பு வேண்டி இருக்கு ” என முறைக்க..

இல்ல.. பியூஸ் போன லைட் மாதிரி இருந்த முன் முகம் பளிச்ன்னு இருக்கு... அது தான் என்ன மாயம்னு யோசித்தேன் ” என அவனை வார..

அடிங்க ” என அவளை விரட்ட…

அதே விரட்டலும், சிரிப்புமாக எல்லாரையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள்… தன்  பேத்தி, பேரன் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை கண்ட கண்ணழகி ” டன்னா ” என கையை காட்ட..

டன் ” என பதில் கையை வெற்றி காட்ட..  சந்தோசமாக தலையை ஆட்டிக் கொண்டார் கண்ணழகி..

இதை எல்லாம் ஆராய்ச்சியாக பார்த்து வந்தார் லட்சுமி..

 

error: Content is protected !!