வேர் – 18

இதழிக்கு தன் சங்கிலியை அனுவித்த சக்தி பாட்டியை பார்த்து நின்றான்.. கண்களில் “ உனக்கு சந்தோசமா பாட்டி “ என்னும் விதமாக நின்றிருந்தான்… இதழிக்கோ அத்தனை சந்தோசம்… “ தன் காதல் இத்தனை சீக்கிரம் நிறைவேறும்என அவள் நினைக்கவே இல்ல.. அதே சந்தோசத்துடன் சக்தியை பார்க்க அவனோ பாட்டியை கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான்….

பாட்டி அசதியில் தூங்க… எல்லாரும் வெளியில் செல்ல இதழி பாட்டி அருகில் அப்படியே அமர்ந்திருந்தாள்…

தன் அறைக்கு சென்ற லக்ஷ்மிக்கு இருப்பே கொள்ளவில்லை… அவர் எண்ணம் முழுவதும் வேறாக இருந்தது.. ஆனால் நடப்பதோ எல்லாம் தலைகீழ்…

“ இந்த இருவரையும் அவருக்கு எப்பொழுதும் பிடிக்கவே செய்யாது.. ஆனாலும் வெற்றி – இனி விஷயம் கேள்வி பட்டதில் இருந்து அவர் அமைதியாக இருக்க ஒரே காரணம் சக்தி மட்டுமே…

ஒருவேளை தன்னுடைய வெறுப்பை அப்பட்டமாக இனியாள் மீது காட்டினால், சக்தி கூறுவதுப் போல் வெற்றி அவளை திருமணம் செய்து வந்துவிட்டால் அவரால் ஒன்னும் செய்யமுடியாதே. அது தான் அமைதி காத்தார்…

அதிலும் சக்தியும் இருவர் மேலும் பாசமாக இருக்கிறான்… ஒரு வேளை தான் வெற்றி கல்யாணத்துக்கு சம்மதம் கூறவில்லை என்றால், வெற்றிக்காக அவன் இதழியை திருமணம் செய்து விட்டால் அவளின் கெளரவம் என்ன ஆகும்..? மதிப்பு என்ன ஆகும்.. அவளின் தோழிகளே “ வேலைகாரியின் மாமியார் “ என்று கூறிவிடுவார்களே..?

அதனால் தான் முதலில் இருந்தே அவர் இருவரையும் வெறுத்தார்… எப்படியும் யாராவது ஒருவரை வீட்டை விட்டு விரட்டி விட்டால் மற்றவள் தானாக வெளியில் செல்வாள் அதனால் தான் அவர் வெற்றி – இனி காதலை கண்டும் காணாமல் இருந்தார்… “ தான் எது கூறினாலும் எதிர்த்து பேசும் இதழியை முதலில் விரட்ட எண்ணினார்.. இனியாளோ அவர் எது கூறினாலும் அமைதியாக செல்வாள்.. அதனால் தான் அவரின் முழு கோபமும் இதழியை தாக்கியது….

இப்பொழுதோ எல்லாம்.. எல்லாம் மாறிவிட்டது… “ சக்தி இப்படி செய்வான் என்று அவர் நினைக்கவே இல்ல.. தாலி காட்டலியே வெறும் சங்கிலி தானே போட்டிருக்கிறான்… அவளை சீக்கிரம் வீட்டை விட்டு விரட்டுவோம்.. இவளை விரட்டி விட்டால் இனியாள் தானாக விலகி விடுவாள்.. கொஞ்ச நாள் சோகத்தில் வெற்றி சுத்துவான் பிறகு சரி ஆகிவிடுவான்.. தன் தகுதிக்கு ஏற்ப ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் போதும்  “ என எண்ணிக் கொண்டார்… அதன் பிறகு தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது…

பாட்டியை தான் பாத்துக் கொள்வதாக கூறி இனியாள் வர.., மெதுவாக பாட்டியின் தலையை கோதிய அவள் தங்கள் அறைக்கு சென்றாள்…. இனி பாட்டி அறைக்கு வந்த கொஞ்ச நேரத்தில் வெற்றியும் வர…

“ இங்க என்ன பண்ணுற இனி “ என கேட்டுக் கொண்டே அவர் அருகில் அமர.. இனியாளோ பாட்டியை பார்த்து அமர்ந்திருந்தாள்..

“ பாட்டிக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை இனி… பாட்டிக்கு வீசிங் உண்டுன்னு உனக்கு தெரியும் தானே… ஆனால் கீழே விழுந்ததில் பாட்டிக்கு இல்லாத நோய் எல்லாம் வந்துட்டு…. டாக்டர் வேற நாள் குறிச்சுட்டார்… எப்படியோ அண்ணன் கல்யாணத்தை முடிச்சுட்டாங்க….

அண்ணனும் பாட்டிக்காக மட்டும் தான் இதழியை கல்யாணம் முடிச்சுருப்பாங்க… இல்லன்னா அம்மா சொல்லுறதை தான் செய்வாங்க… என்னைவிட அம்மாபிள்ளை அவன் தான்…. அம்மா எது சொன்னாலும் அப்படியே செய்வான்… கோபம் வந்தா அம்மாகிட்ட அதை எடுத்து சொல்லி புரியவைப்பான்….

இப்போ அம்மாவுக்கு சுத்தமா உங்களை பிடிக்கவே செய்யாது… எப்படி அவளை ஏத்துப்பாங்கன்னு தெரியல… ஆனாலும் அண்ணன் அம்மா கிட்ட சொன்னா அம்மா கேட்பாங்க “ என கூற..

அமைதியாக கேட்ட இனி தலையை ஆட்டிக் கொண்டாள்… “ என்ன ஆனாலும் சக்தி இதழியை பார்த்துக் கொள்வான் “ என வெற்றிக் கூறியதை கேட்டு முழுமையாக நம்பினாள்…

“ சரி இனி பாட்டியை பாத்துக்கோ.. குட் நைட் பொண்டாட்டி “ என கூறி கண்ணடித்து சென்றான் வெற்றி…

அறைக்கு சென்ற இதழிக்கு தூங்கம் என்பது வரவே இல்லை… அவன் அணிவித்த சங்கிலியை எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்…. அந்த நிமிடம் அவளுக்கு எதுவுமே நினைவில் இல்ல…

“ லக்ஷ்மிக்கு தன்னை பிடிக்காது என்பதும், கண்ணுபாட்டி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறார் என்பதும் “ இப்படி எதுவும் நினைவில் இல்ல.. தான் இப்பொழுது சக்தியின் மனைவி…!! அவள் ஆசைப்பட்ட குட்டிமாமாவின் மனைவி…!!

இந்த நாள் அவள் வாழ்வின் வசந்த நாள்…!! அவன் நினைவுகள் உலர்ந்து சருகாய் போகுமோ என எண்ணி ஏங்கி இருந்த நாட்கள் போய்.., அவன் நிஜமாய்..!! பசுமையாய்…!! அவளில் நிலைத்திருக்க வைத்த நாள்..!!! அவளுக்கே அவளுக்காக அவள் குட்டிமாமா வந்துவிட்டான்… அந்த நினைவே அவளுக்கு தித்திப்பாய் இனித்தது…!!!

கட்டிலில் புரண்டுக் கொண்டு சக்தியை நினைத்துக் கொண்டே இருந்தவளின் மனதில் கவிதை சிதறல்கள்…,

“ இப்பொழுதெல்லாம் என் ஆழ்மன உணர்வுகளில் எல்லாம் உன் முகவரி…

என் முகமோ உன் காதல் நோக்கி தவமிருக்க..

நீயோ உன் திமிரையும், உன் கர்வத்தையும் கட்டிக் கொள்கிறாய்…

உன்னை கண்டு எத்தனை முறை விழி நாணமுற்று கண்களை மூடினாலும்..,

என்னை கட்டிக் கொள்ளாமல் உன் திமிரையும், உன் கர்வத்தையும் கட்டிக் கொள்கிறாய்…

எப்பொழுது உன் கர்வத்தையும், திருமிரையும் உடைத்து என்னை கட்டிக் கொள்வாய்..”

சிறு வெட்க புன்னகை ஓன்று அவள் முகத்தில் அழகாக தோன்றி அவன் அருகில் இல்லாமலே அவளை சிலிர்க்க வைத்தது…

“ ஏய்.. பெண்ணை..!! உனக்கு என்ன ஆனது… என்றும் இல்லாமல் இன்று இப்படி அவனுக்காக உருகுகிறாய்… எப்படி..? எதில்..? அவனிடம் இப்படி தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டாய்…!! சொல் பெண்ணே..!!! “ என அவள் மனசாட்சியே அவளிடம் கேள்வி கேட்பதுப் போல் இருக்க…

அதை எல்லாம் கவனிக்காத அவள்.. மீண்டும் கனவுலகில் செல்ல.. அவளின் காதல் மனதோ

 “ நீ அணைக்கின்ற வேளையில் உயிர்பூ திடுமென்று மலரும்..” என்று பாடிக் கொண்டிருக்க…

தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த சக்திக்கு “ பாட்டியின் உடல் நிலையே மனதில் வந்து அவனை இம்சித்தது…. கூடவே இதழி நினைவும் வந்து முகத்தில் சிறு புன்னகையை பரிசாக தர.., அவன் விழிகளில் ஆயிரம் உணர்வுகள்….

“ ஏய்… பொண்ணே…!! என்ன மாயம் செய்தாய்…!! “ என அவன் மனது, அவளிடம் கேள்விக் கேட்க…. அவளை உடனே பார்க்கும் ஆவல் எழ.., அவளை நோக்கி சென்றான் அவன்…

அவன் நினைவில் மூழ்கி இருந்தவளை அறைகதவை திறக்கும் சத்தம் கேட்க.., அவசரமாக எழுந்த அவள் திரும்பி பார்க்க…, அங்கு சக்தி நிற்க…

“ குட்டிமாமா… எ.. என்ன மாமா “ என தயக்கமாக, நெஞ்சில் படபடப்புடன் கேட்க…

“ என் பொண்டாட்டியை பார்க்க வந்தேன்… ஏன் வரக்கூடாதா “ என மெதுவாக ஆழ்ந்த குரலில் கண்ணடித்து கேட்க…

இன்று அவனின் குரலில் பெரும் வித்தியாசம் தெரிவதாய்… மெதுவாக தலை குனிந்தவளை ரசனையாக பார்த்த அவன் “ பாட்டியை நினைச்சா தூக்கம் வரல இதழி, அதான் கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன் “ என கூறி அவளுடன் கட்டிலில் அமர…

அவளின் மனதோ “ டேய்.. மாமா நீ வேணா பேச வந்திருக்கலாம்… உன்னை இன்னைக்கு என்னமோ நிமிர்ந்து என்னால் பார்க்கவே முடியல.. என்னமோ ஆகுது “ என அவள் மனதுடன் புலம்பி கொண்டே தனது அணிந்திருந்த குட்டி ஷர்ட்டை இழுத்துக் கொண்டே தவிப்புடன் நிற்க…..

அவளின் புலம்பல் அவனுக்கு கேட்டதோ..? இல்ல அவளை பார்த்து அவனில் தயக்கம் வந்ததோ என்னவோ ஏதோ ஒன்று அவனை தாக்க “ சரி நாளைக்கு பேசலாம் “ என அவன் கிளம்ப…

அவன் கிளம்புகிறானே என்ற தவிப்பில், வேகத்தில் அவனின் கையை பிடிக்க.., அவள் வேகமாக பிடித்தாளோ..? இல்லை அவன் வேகமாக திரும்பினானோ..? ஏதோ ஒன்றில் அவன் அவளுடன் நெருங்கி வர..,

அவளின் “ குட்டிமாமா “ என்ற அழைப்பில் “ லிப்ஸ் “ என அவளின் இதழை வருடிய அவனின் மூச்சு காற்று, அவள் மூச்சு காற்றுடன் கலக்க… அவளின் நெஞ்சாங்கூடு ஏறி, இறங்க.. அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்….

என்ன நிகழ்ந்ததென்று அறியாமல், அவள் அவனில் சாய அந்த ஒரு அணைப்பு அவனுக்கு போதுமானதாக இருக்க.., தன் சங்கிலி அவள் கழுத்தில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு அவள் யார் என்று அவனுக்கு அடையாளம் காட்ட., கவலையில் இருந்த அவன் மனதுக்கு, அவளின் அந்த அணைப்பு ஆறுதலளிக்க…,    

அந்த ஒரு நொடி ஆறுதல், அவனுக்கு இனிய பாலமாய் இருக்க.., அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்… அந்த ஒரு கணம் இருவரும் தன்னிலை இழக்க… அவளுடைய காதலும், அவனுடைய சொல்லா காதலும், அலைபுறும் மனதும் அமைதியடையும் தருணமாய்…!!!

மறுகணமே இதழியின் இதழை ஓலையாக்கி.., அதில் இன்பத்தின் முகவரியை எழுத ஆரம்பித்தன அவனின் உதடுகள்…

அந்த நிமிடமே ஒரு இனிய கனவு இருவருள்ளும் உருவாக்கிட.., இதழியின், இதழும், உடலும் வெட்க பூக்கள் பூக்க ஆரம்பித்தன….

அந்த இளவேனில் இரவில் யாருமே எதிர் பாராத நிகழ்வாய் அவர்களின் திருமணதிற்கு ஒப்புதலாய் நடந்தேறியது.., அவர்களின் அழகிய இல்லறம்….

அவள் அவனிடம் தேடிய நேச தருணங்களாய்.., அவன் அவளுடன் சரண் புகுந்த அந்த நிமிடங்கள் ஆறுதல் நிமிடங்களாய் மாற..,

ஜன்னல் வழியே தெரிந்த தென்னை மரங்கள் தென்றல் காற்றுடன் உரசி காதல் வசனம் பேச.., சக்தியோ தன் மனைவியிடம் ஆறுதலையும், அவளே அறியாத அவனின் காதலையும் தேடிக் கொண்டிருந்தான்….

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் திடீரென விழிப்பு தட்ட… எழுந்தவளுள்  இனம் புரியாத சோர்வில் உடல் தத்தளிக்க.. விழித்த பிறகே தன் நிலை உரைக்க… டக்கென எழுந்து அமர்ந்தாள் இதழினி..

குட்டிமாமாவின் முதல் முத்தம்… உயிர் வர இனிக்க செய்தது.. அப்பொழுது தான் சக்தியின் நினைவு வர அவன் பக்கம் திரும்பி பார்த்தாள் அவள்… அவன் இருந்த இடம் காலியாக இருக்க.. மணியை பார்க்க அது அதிகாலை 4 என்று காட்ட..

குட்டிமாமா எப்போ எழுந்தாங்க.?.. எங்க போனாங்க..? இப்படி சொல்லாம கொள்ளாம கிளம்பிருக்காங்க..?என அவளுள் பல கேள்விகள் உதிக்கும் தருணம் அறைக்கதவு வேகமாக தட்டப்பட.., அப்பொழுது தான் தன் கோலம் தெரிவதாய்….  தான் இருக்கும் நிலை அறிந்து கதவை திறக்காமலே ” என்ன ” என கேட்க..

இதழி கண்ணுபாட்டி இறந்துட்டாங்க.. சீக்கிரம் வா ” என கூறி இனியாள் செல்ல… அப்படியே அதிர்ந்து நின்றாள் அவள்.. 

என்னை மாமா கூட சேர்த்துவைக்க தான் உயிரை பிடித்து வைத்திருந்தீங்களா பாட்டி.? எனக்கும் மாமாவுக்கு திருமணத்தை செய்து வைத்து, எங்களை வாழ்கையில் இணைக்க தான் இத்தனை நாள் இருந்தீங்களா ?  ” என கேவலுடன் குளியலறையில் புகுந்துக் கொண்டாள் இதழி….. கண்களில் அருவியாக நீர் வழிய குளியல் அறையில் நின்றிருந்தாள்…

எப்படி..? நேற்று கூட நன்றாக இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தாரே… குட்டிமாமா.. மாமா ” என சக்தியின் நியாபகம் வர அவசரம் அவசரமாக குளித்து வெளியில் வந்தாள்…

அழுத அறிகுறியாக கண்கள் வீங்கி.., வெளியில் வந்தவளை கண்ட இனியாள் அவள் அருகில் வர.., இருவரும் அப்படியே வாசலில் நின்றுக் கொண்டனர்… இதழியின் கண்கள் சக்தியை தேட அவனோ பாட்டியின் அருகில் நின்றிருந்தான்… அவள் அறை விட்டு வெளியில் வரவும் பார்த்தவன் தான் அதன் பிறகு அவள் பக்கம் அவன் திரும்பவே இல்லை…

அதன்  பிறகு எதற்கும் நேரம் இல்லாமல் போக.. அன்று மாலையே பாட்டியின் இறுதி சடங்கும் முடிந்தது… இதழி விழிகளோ சக்தியை தொடர. அவனோ அங்கு ஒருத்தி இருப்பதுப் போல் காட்டிக் கொள்ளவே இல்லை…

அதுக்கடுத்த நாளே நாராயணன் சக்தி – இதழி இருவரின் திருமணத்தையும் கோவிலில் சட்டப்படி நடத்த வேண்டும் என்று லட்சுமியிடம் கூற…

அடுத்த நாளே காலையில் லட்சுமி ஜோசியரை அழைத்து வந்தார்…., யோசனையாக பார்த்த நாராயணன் எதுவும் கூறாமல் அவர் அருகில் அமர…. வெற்றி, சக்தி இருவரும் வேலை இருப்பதாக வெளியில் கிளம்பினார்கள்…

அவர்கள் கிளம்பவும் நல்ல நாள் பார்க்க லட்சுமி கூற..  நாட்களை கணித்த அவர் “ நாள் நன்றாக இல்லை, அதிலும் இப்பொழுது திருமணம் நடந்த நாள் மிகவும் மோசமான நாள் அதனால் தான் வீட்டில் ஒரு உயிர் சென்றிருக்கிறது…  

அப்படி  நடந்தால் மேலும் உயிர் இழப்பு வரும், தொழில் விட்டு போகும் என இதழினியின் பிறந்த பலனும், சக்தி பலனும் வைத்து கூற இதழி அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தாள்… “ பொதுவாக இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த பெண்ணின் ராசி சரி இல்லை “ என கூற நாராயணனோ யோசனையாக லக்ஷ்மியை பார்க்க…

ஆனால் லக்ஷ்மியோ அவரை எதிர் பார்வை திருப்பி பார்க்க.. அமைதியாக பார்த்துக் கொண்டார் நாராயணன்… லக்ஷ்மிக்கு எப்படியாவது இதழியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும்… அதனால் அவர் ஜோசியரை அழைத்து வந்தார்…., அவர் கூறியதுப் போலவே ஜோசியர் கூறினார்… ஆனால் லக்ஷ்மி கூறாதது பற்றியும் ஜோசியர் கூற அப்படியே பார்த்து நின்றார்… “ உண்மையாகவே இவள்களின் ராசி சரி இல்லையோ..? “ என எண்ண ஆரம்பித்தார்…

அந்த நாள் அமைதியாக கழிய.. சக்தி வீட்டுக்கு வரவே இல்ல.. அப்படியே பாட்டியின் சமாதியில் அமர்ந்துவிட்டான்…

அவனுக்கு தான் செய்தது.. சரியா தவறா என்று தெரியவே இல்லை… அதிலும் பாட்டி முன் தன் சங்கிலியை அவளுக்கு அணிவித்து விட்டான் தான்… ஆனால் இரவு அவளை எடுத்துக் கொண்டது தவறு என்றே அவன் மனதுக்கு பட்டது… அவள் எப்படி எல்லாம் தன்னை காதலித்தாள், ஆனால் நான் அவளின் காதலுக்கு மரியாதையை எதுவும் செய்யாமல், அதிலும் அவள் ஆசைப்பட்ட மாதிரி “ உன்னை தான் கட்டிக் கொள்வேன் “ என்று கூறாமலே அவளை எடுத்துக் கொண்டது “ தவறு “ என அவன் பாட்டியிடம் கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தான்..

அதனால் தான் அவன் அவளை நேருக்கு நேர் பார்க்காமலே சுற்றிக் கொண்டு இருந்தான்… அன்று இரவு இதழி சக்திக்காக வெளியில் காத்திருக்க அவன் அன்று முழுவதும் வீட்டுக்கு வரவே இல்லை… இதை யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தார் லக்ஷ்மி… அடுத்த நாள் இனியாள் ப்ராட்டிக்கல் என அவள் காலேஜ் கிளம்பி சென்றாள்…,

எங்கும் செல்ல, யாரையும் பார்க்க விருப்பம் இல்லாத சக்தி அவன் அறையில் இருந்து இதழியை கவனித்துக் கொண்டு இருந்தான்… அன்று நடந்ததை பற்றி அவளின் முகத்தில் ஏதாவது பிடித்தமின்மை தெரிகிறதா. என பார்க்க.. அவள் எப்பொழுதும் போல் இருக்க… “ இதழிக்கு தன் மேல் எத்தனை காதல் “ என அவளின் நினைவில் இருக்க…., அவனை நோக்கி சென்றார் லட்சுமி…

“ சக்தி “ என அழைக்க..

“ என்னம்மா “ என கேட்டு அவரைப் பார்த்து சக்தி திரும்ப…

” சக்தி ஏண்டா இப்படி பண்ணுன…? அவளை எதுக்குடா கல்யாணம் பண்ணுன  ” என கேட்க..

ம்மா… நானும் பாட்டி இப்படி சொல்லுவாங்கன்னு எதிர் பார்க்கலை.., நானும் உங்க இஷ்டப்படி தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்… ஆனால் அவளை எனக்கு..” என “ எனக்கு அவளை பிடிக்கும்மா.. உங்க இஷ்டபடி தான் கல்யாணம் செய்யணும்னு இருந்தேன் “ என்று சொல்ல வரும்முன் அவனின் போன் ஒலிக்க.. அதை எடுத்து பேசிக் கொண்டே பால்கனிக்கு சென்றான் சக்தி.. 

லக்ஷ்மி நல்ல நேரமா.? இல்லை இதழியின் கெட்ட நேரமா..? எது என்று தெரியாமலே… சக்தியை சாப்பிட அழைக்க அவன் அறைக்கு வந்தவளின் காதில் அவன் பேசுவது அப்படியே விழ.., இதழி மனது அப்படியே ஒரு நிமிடம் தன் இயக்கத்தை நிறுத்தியது..

” குட்டிமாமா பாட்டிக்காக தான் என்னை கல்யாணம் பண்ணுனாங்களா..? அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லையா..? அதனால் தான் என்னை கட்டுவீங்களா..? என கேட்கும் நேரம் எல்லாம் முறைத்து விட்டு சென்றார்களா..? அப்போ அன்று நடந்தது..?  “ என அவள் மனது அவன் பேசியதை அறைகுறையாக கேட்டு அவள் மனத்தை வேதனை செய்தது..

அதிலும் அவள் மனது ” அவன் தான் பாட்டியை நினைச்சு தூக்கம் வரலைன்னு சொன்னானே.. அதனால் உன்னை தேடி வந்திருப்பான்… அவனுக்கு உன் மேல் காதலும் இல்லை…. எதுவும் இல்லை…. இப்பொழுது கூட என்ன சொல்கிறான் அவன் அம்மாவின் இஷ்டபடி தான் கல்யாணம் பண்ண எண்ணினானான்..? இன்னும் இவனுக்காக, இவன் பின்னாடியே சுத்த போறியா என அவளின் மனது கேள்வி கேட்க… அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

உண்மை தானே… என்றாவது அவன் அவளை பிடிக்கிறதாக சொல்லிருக்கிறானா.. ?  இல்லையே..? அப்போ எந்த தைரியத்தில் அவனிடம் நீ உன்னை இழந்து நிற்கிறாய்..? அந்த ஒற்றே சங்கிலிக்காக உன் வாழ்கையை பணயம் வைத்துவிட்டாயே என அவளிடம் கோபமாக சாட பதில் இல்ல… என்ன பதில் கூறுவாள் எல்லாம் உண்மை தானே… அடுத்து வந்த நேரம் எல்லாம் அவளுக்கு நரக நேரம்….

அன்று மதியமே வீட்டுக்கு போலீஸ் வர..,

அவர்களை கண்ட நாராயணன் “ என்ன “ என்று கேட்க….

 ” சார்… உங்க மேல கேஸ் கொடுத்திருக்காங்க… ஊரை சுற்றி பல நூறு கிலோமீட்டர் தள்ளி தான் சுண்ணாம்பு சூளை வைக்க வேண்டும்… அதிலும் இரவு நேரங்களில் எரிக்கும் சுண்ணாம்பு கல்லில் இருந்து வரும் புகையில் எதிரில் வரும் வண்டி அடையாளம் தெரியாமல் மோதி பல, விபத்து நடப்பதாக புகார் வருது சார்… ஒன்னு அதை இடம் மாற்றுங்க….. இல்லை என்றால் அதை மூட வேண்டும்..இப்போ எதுக்கு உங்களை அரெஸ்ட் பண்ணாமல் இதை சொல்கிறேன் என்றால் இந்த ஊரின் பெரிய மனிதர் நீங்க தான்.. சொன்னால் புரிந்துக் கொள்வீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தான் வீடு தேடி வந்து கூறுகிறோம் “ என கூற… வேறு வழியில்லாமல் தற்காலிகமாக அவர்கள் சூளையை மூடும் நிலை வர நாராயணன் மிகவும் தளர்ந்து விட்டார்..

சக்தி, வெற்றி இருவரும் அது சம்மந்தமாக அலைந்தனர்… இதழி பற்றிய நினைவில் குற்ற உணர்ச்சியாக சுற்றிக் கொண்டு இருந்த சக்தியின் மனதை இச்சம்பவம் முழுமையாக மாற்றியமைக்க அப்படியே அதில் கவனத்தை செலுத்த.. இத்தனை நாட்கள் அவள் அறியாமல், அவளையே கவனித்து வந்த சக்தி அதன் பிறகு அவளின் மேல் இருந்த பார்வையை விலக்கிக் கொண்டான்… அதிலும் அவன் அவளை கவனித்து பார்த்ததில் அன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு “ இதழி முகம் வாடி இருக்கிறதா “ என பார்க்க…

அவளோ எப்பொழுதும் போல் தான் இருந்தாள்… லக்ஷ்மியும் அவளை இப்பொழுது எதுவும் சொல்லாமல் இருக்கவும்.. தைரியமாக அவன் சுண்ணாம்பு சூளையை கவனிக்க சென்றான்… அடுத்த கொஞ்ச நேரத்தில் லட்சுமி தன் வேலையை காட்ட ஆரம்பித்தார்… 

அவன் கிளம்பி செல்லவும் இதழியை அழைத்த லக்ஷ்மி பாரு உன்னால எல்லாம் போச்சு.. உங்களால உன் பாட்டி செத்துபோச்சு, உன்னை கல்யாணம் செய்து என் மாமியார் உயிரை எடுத்து விட்ட.. இப்போ ஜோஸ்யக்காரர் உன் ராசி சரி இல்லைன்னு சொல்லிட்டு போய் கொஞ்ச நேரம் கூட ஆகல… அதுக்குள்ள போலீசுக்கு போக வேண்டிய நிலைக்கு எங்களை கொண்டு வந்துட்ட.. இன்னும் இந்த வீட்டுல இருந்து யார் உயிரை எடுக்க போகிறாய்… உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் எங்களை விட்டு எங்காவது சென்று விடு.. எத்தனை பணம் வேண்டும் என்றாலும் கேளு தாரேன்… ஆனால் என் குடும்பம் எனக்கு முழுசாக வேணும்….. அவன் உனக்கு செயின் போட்டது எல்லாம் கல்யாணமே இல்ல… அதை வைத்து மனதில் கோட்டை கட்டாதே… அவன் ஆசைப்பட்ட படி என் மகனை நிம்மதியா வாழ விடு ” என வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லார் முன்னும் அவளை கேட்க குறுகிப் போனாள் இதழினி…

அடுத்த நாட்களில் இருந்து லக்ஷ்மியின் பேச்சுக்கள் அதிகமாக இருந்தது… அதிலும் கூடவே சக்தி கூறியதும் நினைவில் வர, ” இனி இங்கு இருந்து யாருக்கும் பாரமாக தான் இருக்க வேண்டாம் ” என எண்ணிய அவள் வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்தாள்……

அவன் போலீஸ் ஸ்டேஷன் கலெக்டர் ஆபிஸ் என்று அவன் தொழிலை அவன் மீட்கவேண்டும்… சூளையை மீட்கும் வேலையை ஆரம்பித்தான்.. ஊரை விட்டு வெளியில் சூளையை அமைத்துக் கொள்கிறேன் ” என ஆர்டர் வாங்க அவன் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருந்தான்..

” அவளிடம் ஒரு வார்த்தையாவது கூறி இருக்கலாம்..எதுவும் கூறாமல் அவன் அவளை தவிர்க்க…” வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்ற முடிவை வலுகட்டாயமாக எடுத்தாள்.. ஒருமனதோ “ அவன் உனக்கு தாலிகட்டியவன் அவனிடம் பேசு.. எல்லாம் சரியாகிவிடும் “ என கூற…

இன்னொரு மனதோ “ அவன் கிட்ட போய் வாழ்கை பிச்சை கேட்க போறியா…? அவன் ஆசைப்பட்ட படி யாரை வேணா கல்யாணம் பண்ணட்டும்.. நீ இப்படி எல்லார்கிட்டயும் அவமான படணுமா..?  “ என கேட்க அவனை விட்டு இந்த வீட்டை விட்டு போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனம் முழுவதும் நிறைந்திருக்க… உடனே செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தாள்..

அன்று இனியாள் காலேஜ் விட்டு வரவும் அவளை கட்டியணைத்து கதறிவிட்டாள் இதழினி ” அக்கா இனி நாம இங்க இருக்க வேண்டாம்… எனக்கு இங்க இருக்க பிடிக்கலை ” என அழ..

என்ன ஆச்சு இதழி சொல்லு “

அத்தை ரொம்ப பேசுறாங்க.. நான் ராசி இல்லாதவாளாம், நான் தான் கண்ணுபாட்டியை கொன்று விட்டேனாம்… இங்கு இருந்தால் இனியும் யாரையாவது கொன்று விடுவேனாம் .” என அழ.

இது எப்பவும் அத்தை சொல்லறது தானே இதழி இதுக்கு போய் அழலாமா.. நீ இப்போ சக்தி மாமா மனைவி.. நீ எதுக்கு வீட்டை விட்டு போகணும் ” என கூற..

இல்ல.. இது ஒரு கல்யாணமே இல்லையாம்… பாட்டிக்காக தான் என்னை குட்டிமாமா கல்யாணம் செய்தாங்களாம்… இல்லன்னா அவங்க அம்மா சொன்ன பெண்ணை தான் கல்யாணம் பண்ணிருப்பாங்களாம் “

உனக்கு இப்படி யார் சொன்னா..? “

மாமாவே அத்தை கிட்ட சொன்னதை நானே கேட்டேன் ” என இதழி கூற

அந்த நேரம் வெற்றி அவளிடம் அன்று கூறியதும் நினைவலையில்.. ” பாட்டிக்காக தான் அண்ணன் இதழியை கல்யாணம் செய்தான் ” என்ற வாக்கியம் இனியாள் நினைவில் வர…

லக்ஷ்மி கோவில்க்கு சென்ற நேரம் இருவரும் வீட்டை விட்டு சென்றனர்… மணி பாட்டி அடிக்கடி தூத்துக்குடி செல்வார்.. அப்படி செல்லும் பொழுது ஒருமுறை இனியாளையும் அழைத்து என்றார்… அங்கு செல்லலாம் என எண்ணி வெளியில் வந்து விட்டனர் இருவரும்…

யாருக்கும் சொல்லாமல் வெளியில் வர இனிக்கு இஷ்டம் இல்லை.. அதிலும் அவளின் வெற்றியிடம் கூறாமல் வர சுத்தமாக மனதில்லை… ஆனாலும் தன் தங்கையின் வேதனை பார்த்து உடனே கிளம்பி விட்டாள்…  இதழிக்கோ எதுவும் அவன் மனதில், மூளையில் இல்லை.. “ குட்டிமாமாவுக்கு என்னை பிடிக்கவில்லை “ அந்த ஒரு வாக்கியம் மட்டும் மனதில்…

இருவரும் பஸ்ஸ்டான்ட் உள் நோக்கி நடக்க… தூத்துக்குடி பஸ் வர ஏறிக் கொண்டனர்… அங்கு வந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு செல்ல வீடு பூட்டி இருக்க… அங்கு ஒரு பாட்டி தங்கி இருப்பதாக அன்று கூறினார் மணிப்பாட்டி அங்கு அப்படியே நின்றிருந்தனர்.. சிறு கிராமாம் அதனால் பயமில்லாமல் நிற்க…

பக்கத்துக்கு வீட்டு பெரியவர் வந்தார்… வந்தவர் இருவரையும் ஊன்றி கவனிக்க… கண்டவர் மனதில் சந்தோசம் பொங்க அவர்களை நோக்கி ஓடி வந்தார் அவர்..

வந்தவர் “ யம்மாடி நீங்க பாண்டி பசங்க தானே “ என கேட்க 

அவரை கேள்வியாக பார்க்க…

அவளின் கேள்வியை அறிந்து “ நான் தான் பாண்டிக்கு இங்க வேலைக்கு இடம் பார்த்தேன்.. கல்யாணம் முடிந்த அன்னைக்கே இங்க வந்துட்டான்…. உங்களை பார்க்க அப்பிடியே ருக்கு மாதிரியே இருக்கு “ என கூற…

இனியாள் அவரை நோக்கி மெதுவாக புன்னகை புரிந்தாள்… “ இங்க என்ன பண்ணுறீங்க… யாரை தேடி வந்தீங்க “ என அவர் கேட்க… இதழி அமைதியாக நிற்க…

“ இங்க வேலை பார்க்க வந்திருக்கோம் அங்கிள்.. இனி இங்க தான் இருக்கணும்  “ என கூற…

அவர் மனதில் ” இவர்களின் மாமா வீட்டுக்கு செல்ல போகிறதா தானே சொன்னாங்க.. என்ன ஆச்சு  ” என்று கேள்வி தோன்ற ஆனாலும் இப்பொழுது எதையும் பேசவேண்டாம் என எண்ணி..

“ அப்படியா வாங்க… பக்கத்துக்கு வீடு தான் நம்ம வீடு.. என்னை உங்களுக்கு தெரியலியா.. சின்ன வயசுல இங்க தான் எப்பவும் இருப்பீங்க… என் பையன் தான் உங்க வயசு தோழன் “ என கூறி பழைய கதைகளை கூற இருவரும் வாசலில் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.. இருவருக்கும் சிறுவயது கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வர அவருடன் அப்படியே ஒட்டிக் கொண்டனர்.. அவர் வீட்டில் இருக்க நினைத்து அங்கு சென்றனர்…..

வீட்டுக்கு வந்த வெற்றி எப்பொழுதும் போல் “ இனி “ என அழைத்துக் கொண்டே வர...

அவன் குரல் கேட்டு வெளியில் வந்த லக்ஷ்மி ” ஏண்டா வீட்டுக்கு வந்ததும் வாராததுமா.. இப்படி அந்த வேலைகாரிகளை ஏலம் போட்டுட்டே வார “ எனக்கேட்க..

“ ம்மா.. எத்தனை நேரம் சொல்வது அவங்க வேலைகாரிகள் இல்ல “ என கூற..

“ சரிடா.. இனி சொல்லலை.. ஆனா ரெண்டு பேரையும் காணும்… வீட்டை விட்டு போய்ட்டாளுக போல.. உன் பாட்டியை கைக்குள்ள போட்டுட்டு ஆடிகிட்டு இருந்தாளுக.. இப்போ அவர் இல்லை என்றதும் சொல்லாம, கொள்ளாம கிளம்பிட்டாங்க “ என கூறி அவர் செல்ல…,

“ ம்மா… என்ன சொல்லுறீங்க…. அவங்களை காணுமா..? “ என அதிர்ச்சியாக கேட்க..

“ ஆமா.. காணும்.. அவள்களுக்கு ஒரு நன்றி இருக்கா பார்த்தியாடா…. இத்தனை நாள் மூணு வேளை சாப்டாளுகளே… ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பினாள்களா.? “ என திட்ட…

கோபமான  வெற்றி “ இவரை திருத்த முடியாது “ என எண்ணி நாராயணனுக்கு அழைத்து கூற.., பதறிய நாராயணன் உடனே வீட்டுக்கு ஓடி வர.. லக்ஷ்மியோ அசையாமல் அமர்ந்து “ சின்ன மருமகள் “ சீரியல் பார்க்க…  

வீட்டுக்கு வந்த நாராயணன் அவரை பார்த்து “ லக்ஷ்மி என்ன இது, அவங்க எங்க “ என அமைதியாக, ஆனால் அழுத்தமாக கேட்க..

அவரை பார்த்த அவர் “ அவளுக ரெண்டு பேரையும் ஒரு வார்த்தை என்னை பேசவிடாம செய்திட்டு இப்போ அவங்க எங்கன்னு என்கிட்ட கேட்டா.? எனக்கு எப்படி தெரியும்.. நல்லா படிக்க வசீங்கல்ல. எங்க..?  யார் கூட போனாங்களோ..? யாருக்கு தெரியும்…அவங்களை நீங்க ஒரு வார்த்தை சொல்ல விடமாடீங்க.. அதுக்கு தான் தகுதி பார்த்து வீட்டுல யாரையும் சேர்க்கணும்.. அவளுக இஷ்ட படி இருக்க வச்சா.. இப்படி தான் சொல்லாம கொள்ளாம போவாளுக..? “ என கண்டபடி பேச…

“ லக்ஷ்மி “ என அதட்டிய நாராயணன் “ உன்கிட்ட பேசுறதும் அந்த சாக்கடையை மேல அள்ளி வீசுறதும் ஒன்னு.. நீ இப்படி மாறுவன்னு நினைக்கவே இல்லை லக்ஷ்மி “ என ஆத்திரத்துடன் ஆரம்பித்து கவலையில் முடித்தார் நாராயணன்…

அவர் அப்படி கூறவும் லக்ஷ்மிக்கு தன்னை குறித்தே ஆச்சரியமாக இருக்க… அமைதியாக இருந்தார்…

சக்திக்கு அழைத்த வெற்றி  நடந்ததை கூற “ டேய்.. பக்கத்துல எங்கையாவது போயிருப்பங்கடா… எனக்கு இன்னும் வேலை முடியல… இன்னும் ஒன் ஹவர்ல வாரேன் “ என கூற…

“ டேய் காணாம போனது உன் பொண்டாடிடா… “ என கோபமாக கத்த..

“ அவள் என் மனைவி என்று அவளுக்கு நினைவிருந்தால் இப்படி வீட்டை விட்டு சென்றிருக்க மாட்டாள் “ என நிதானமாக கூறி அழைப்பை நிறுத்தினான் சக்தி… அதற்குள் நாராயணன் தன் காரை எடுத்துக் கொண்டு அவர்களை தேடி கிளம்ப கூடவே வெற்றியும் சென்றான்….

அடுத்த கொஞ்சநேரத்தில் வீட்டை நோக்கி வந்த சக்தி “ அம்மா… “ என அழைக்க…

“ டேய்..!! என்னாச்சுடா உனக்கு… இப்படி ஏலம் விட்டுட்டே வாரே.. போன காரியம் என்ன ஆச்சு… நல்ல படியா முடிஞ்சுதா… இல்லையா.. “ என ஒரு தாயாக கேட்க..

“ ம்மா… என் பொண்டாட்டி எங்க “ என உறுமலாக கேட்க…

“ டேய்.. பொண்டாட்டியா.. யாருடா அது “ என கேலியாக கேட்க…

“ அம்மா… என்னை கோபப்படுத்தாதீங்க.. இதழி எங்க “ என நிறுத்தி நிதானமாக கேட்க…

“ அவங்க வீட்டை விட்டு போய்ட்டாங்க “ என நிதானமாக கூறினார் லக்ஷ்மி…

“ அவங்க யாருன்னு தெரியுமா..? “என்கிட்ட உண்மையை மறைக்க முடியாது என்னும் விதமாக கூர்மையாக பார்க்க..

உன் பார்வை என்னை ஒன்னும் செய்யாதுடா என பதில் பார்வை பார்த்த லட்சுமி “ ஓ.. தெரியுமே.. இந்த வீட்டின் வேலைகாரியோட பேத்தி “

“ அம்மா… உண்மையை சொல்லுங்க… அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியாது “ என அவரை கூர்மையாக பார்த்து கேட்க…

“ டேய் என்ன நீ அவளுகளுக்காக என்னை இப்படி நிற்க வைச்சு கேள்வி கேட்குற..? ” என கோபமாக லக்ஷ்மி கேட்க..

“ பதில் சொல்லுங்க அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா..? தெரியாதா..? “

“ ஆமாடா.. தெரியும்.. குடும்ப மானத்தை கப்பல் ஏத்திட்டு ஒருத்தி ஓடிப் போனாளே அவ பொண்ணுங்க தான் இவங்க..”

“ அது தெரிஞ்சும் நீங்க அவங்களை இப்படி வீட்டை விட்டு போக வச்சுருக்கீங்க… வெற்றிக்கு உண்மை தெரிஞ்ச அதே நாள் உங்களுக்கும் தெரியும்… கண்ணு பாட்டிகிட்ட பேசுனதை கேட்டும் அவங்களை இப்படி போக வச்சுருக்கீங்க.. நான் படிச்சு.. படிச்சு சொன்னேன் அவங்களை ஒன்னும் சொல்லாதீங்க. சொல்லாதீங்கன்னு கேட்டீங்களா..? “

“ டேய்.. என்னடா நீ.. அவங்களுக்காக என்கிட்ட இப்போ சண்டை போடுற… எனக்கு அவங்களை பிடிக்கல.. அந்த வேலைகாரனோட பொண்ணுகளை என் வீட்டு மருமகளா ஏத்துக்க என்னால் முடியாது… உங்க பாட்டி அவங்களை என் மருமகளா கொண்டு வர பாக்குறாங்க… எனக்கு யார் மருமகளா வரணும் வர கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன் உன் பாட்டி இல்லை… அதனால் அதை தெரிஞ்ச அவள்களே வீட்டை விட்டு போய்டாளுக… இனி எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல…. நம்ம தகுதிகேற்ப நித்தியை கட்டிட்டு சந்தோசமா இருடா… உனக்கு தொழிலுக்கும் உதவி செய்வாள்..” என அவன் நிலை அறியாது அவர் தன் கற்பனையை கூற..

“ ஏன்மா.. இப்படி இருக்க நீ… கொஞ்சமாவது குணத்தை மாத்துங்க… அவங்க உங்களை என்ன செஞ்சாங்க.. நீங்க இப்படி அவங்களை விரட்டி எப்படியோ போகட்டும்னு விட்டுருகீங்க… அப்போவோட தங்கச்சி பொண்ணுங்க என்று தெரிந்தே விரட்டிருகீங்க…. இங்க பாருங்க.. இத்தனை நாள் உங்க இஷ்டபடி தான் அவளை கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்… ஆனால் பாட்டியோட ஆசைக்காக தான் அவளுக்கு என் செயின் போட்டு மனைவியா ஏத்துகிட்டேன்… உங்க கையால தாலி வாங்கி அவளை கட்ட நினைத்தேன்… இப்போ எல்லாம் போச்சும்மா…

அவளோடான கல்யாண வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைச்சேன் எல்லாத்தையும் அழிச்சுடீங்களே.. ஏன்மா இப்படி பண்ணுனீங்க..”

“ டேய் சக்தி நான் உன் நல்லதுக்கு தான் செய்தேண்டா… உனக்கு தான் அவளை பிடிக்காதே.. பிடிக்காதவள் கூட எப்படிடா வாழ்வா நீ..? அம்மா உன் நல்லதுக்கு தான் எதுனாலும் செய்வேன்.. சும்மா புலம்பாம… போ பொண்டாட்டியாம்.. பொண்டாட்டி போடா டேய்  “ என கூற

“ ம்மா… அவளை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணுனேன்… பல வருசமா மனசுல இருக்கா. அதை கூட உங்களுக்காக தான் அவகிட்ட சொல்லாம மறைச்சேன்.. உங்க இஷ்ட படி அவளை கைபிடிக்கணும்… இதழி கூட திகட்ட திகட்ட வாழணும்னு எத்தனை ஆசை வச்சுருந்தேன்.. எல்லாம் உங்களுக்காக தான் வெளியில் காட்டாம இருந்தேன்..அப்படி தான் அவகிட்ட சொன்னேன் அம்மா எது சொன்னாலும் காதில எடுதுக்காதன்னு… நான் உங்க ரெண்டு பேரையும் அத்தனை நம்பினேன்..

ஆனா ரெண்டு பேரும் நல்ல பரிசு தந்துடீங்க… அவா என்னடான்னா கட்டுன புருஷனை ஒரு வாரத்துல விட்டுட்டு ஓடி போய்ட்டா.. நீங்க என்னன்னா அவளை பேசியே விரட்டிடீங்க… “ என கோபத்துடனும், இயலாமையுடனும் கூறினான் சக்தி..

அவன் வருத்தமாக பேசவும், லக்ஷ்மிக்கு மிகவும் வருத்தமாக இருக்க.. ” சக்தி அவளை விரும்பினானா..?” அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் கூறாமல் தன் அறைக்கு சென்றார்…

அவர் அமைதியாக செல்லவும் சக்தியும் தன் அறைக்கு சென்றான்.. சென்றவனுக்கு நிம்மதி என்பது சுத்தமாக இல்லை…

அன்று பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததை வெற்றி கேட்டதுப் போல் லக்ஷ்மியும் கேட்டார் என்பது அறிந்தது தான்.. சக்தி வெளியில் செல்லவும் லக்ஷ்மி, பாட்டி அறையை தாண்டி சென்றார்… அதிலிருந்து தான் சக்தியும் இதழியிடம் ஓரளவு பேசவும் ஆரம்பித்தான்.. அதை மனதில் எண்ணி தான் தன் தாயிடம்  “ இருவரையும் ஒன்றும் கூறவேண்டாம் என்றும் கூறி இருந்தான்… அதே போல் தான் இதழியிடமும் கூறினான்… அப்படி தான் அன்று இனிக்கு மேல் படிப்பு படிக்க அப்ளிகேஷன் கொடுத்த அன்னைக்கும் இதை மனதில் வைத்து தான் தன் தாயை கண்டித்தான்..

ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் இப்பொழுது இதழி செய்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை… அன்று நடந்ததை அவளால் எப்படி மறக்க முடிந்தது… என் காதல் அவளுக்கு புரியவே இல்லையா..? இல்லை என் காதலை நீ அறியவே இல்லையா..? ஏன் இதழி என்னை விட்டு போன..? நீ என்னை விட்டு போகமாட்டன்னு நினைத்து எத்தனை கர்வமா இருந்தேன் தெரியுமா..? எல்லாம் எல்லாத்தையும் ஒரே நொடியில் சிதைத்து விட்டாயே..?

என் காதல் தான் உனக்கு தெரியலை, உன் காதல் எங்க போச்சு இதழி., இல்லை இந்த ஒருவாரத்தில் என் மேல் உள்ள உன் காதலை மறந்துவிட்டாயா..? இப்போ கூட உன்னை எங்க இருந்தாலும் வந்து தூக்கிட்டு வரணும்னு என மனசு சொல்லுது…

ஆனா ஒரு வேளை அன்று நடந்த, நம் வாழ்கையின் ஆரம்பம் உனக்கு பிடிக்காமல் என்னை விட்டு சென்றாயோ…? என்று தோண வைக்குற.. அதே மனசால “ அன்று உன்னோட காதலை நான் முழுமையா உணர்ந்தேன் “ என்றும் சொல்ல வைக்குற இதழி… என வருத்தமாக எண்ணி அப்படியே கட்டிலில் படுத்து கண்ணை மூடவும் அவளின் நினைவுகள்…

அதிலும் அவளிடம் அந்த ஒருநாள் மயங்கி இருக்க வைத்த அவளின் அந்த மச்சம்… அதற்க்கு மேல் முடியாமல் போக காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான் சக்தி..

சென்றவன் இரவு தான் வீடு திரும்பினான்… அதற்குள் நாராயணன் – வெற்றி இருவரும் அவர்களை தேடி களைத்து வந்தனர்…. சக்தி அவளை தேடி செல்ல வேண்டும் என்று என்னவே இல்லை.. மனதில் “ அவளாக தானே சென்றாள்… என் மேல காதல் இருந்தால், நான் கட்டிய செயினுக்கு அவள் மதிபளித்தால், தன் பாட்டியின் கடைசி  ஆசைக்கு அவள் மதிபளித்தால் தன்னை தேடி வருவாள் என்று மனதை கல்லாக்கிக் கொண்டான்….

அடுத்த நாளில் இருந்து என்றும் இல்லாத பழக்கமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தான்.. வீட்டில் லச்சுவிடம் பேசுவதில்லை… திருநெல்வேலி ஆபிஸ் மட்டும் சென்று வந்தான்… தினமும் நாராயணன், வெற்றி இருவரும் அவர்களை தேடி அலைந்தனர்….

ஆனால் சக்தியோ அவளின் நினைவு துரத்தினாலும், அவளை தேடி செல்லமாட்டேன்.. அவளாக போனாள், அவளாக வரட்டும் என்று மனதை தேற்றிக் கொண்டான்…

இனியாள், இதழி வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்துக் கொண்ட ராஜன். அவளுக்காக ஒரு வேலையை ஏற்பாடு செய்துக் கொடுத்தார்… எக்காரணம் கொண்டும் அவள் இதழியை வெளியில் விடவே இல்ல..இனியாளே வேலைக்கு சென்றாள்.. அருகில் இருந்த ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் காலை முதல் மாலை வரை…  பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுப்பது தான் அவளின் வேலை…

அவர்களின் செலவுக்கு ஏற்றது போல் சம்பளம் இருக்க சந்தோசமாக வேலையில் சேர்ந்தாள்.. அவர் உதவியுடன் பக்கத்திலையே ஒரு வீடு வாடகைக்கு வர நல்ல மனதாக இருவரும் அங்கு தங்கி கொண்டனர்… அடுத்த இரண்டு நாளில் அவரின் மகன் சூர்யா மும்பை சென்று விட்டு வர. அவனுக்கு அத்தனை சந்தோசம்.. தன சிறுவயது தங்ககைகள் மீண்டும் வந்ததில்.. இருவரையும் நன்கு பார்த்துக் கொண்டான்…

இதழிக்கு சக்தியின் நினைவு வரும் பொழுது எல்லாம் கரைவாள்.. ” மாமா உனக்கு என்னை பிடித்திருந்தால் கண்டிப்பாக என்னை தேடி வந்திருப்பாயே.? என்னை கொஞ்சமும் உனக்கு பிடிக்கவில்லையா.? ” என இங்கிருந்தே அழுது கரைவாள்.. நீயாக என்னை தேடி ஆறாமல் இனி நான் அந்த வீட்டில் கால் வைக்கமாட்டேன் ” இவள் ஒரு பிடிவாதத்தால் இருக்க… அவள் தானே போனாள் அவளே வருவாள் என அவன் ஒரு பிடிவாதத்தில் இருந்தான்…. ஆனால் எக்காரணம் கொண்டு இவளின் வருத்தத்தை இனியாளுக்கு காட்டவேமாட்டாள்… 

அன்று காலையில் இனியாள் சென்டர் போக கிளம்பிக் கொண்டு இருக்க.. இதழி அவளுக்கான டிபன் எடுத்து வைத்துக் கொண்டு, காலையில் இருந்து தலை சுற்றிக் கொண்டேஇருப்பதால் சாப்பிடுவோம் என எண்ணி அவளுடன் சாப்பிட அமர… ஒரு வாய் இட்லி எடுத்து வைக்கவும் வாமிட் வர குளியல் அறை நோக்கி ஓடினாள் இதழி….,

யோசனையாக அவளை நோக்கி ஓடிய இனியாள் ” என்னாச்சு இதழி ” என கேட்க

தெரிலக்கா காலையிலிருந்தே அப்படி தான் இருக்கு… ” கொஞ்சம் படுத்து எழுந்தா சரியாகும் ” என கூறி அவள் பாட்டுக்கு செல்ல… ” இதழி நில்லு கொஞ்சம் ”  என அவளை அழைக்க….

என்னக்கா ” என கேட்டு கொண்டே அவளை பார்த்து திரும்ப…

என்ன ஆச்சு உனக்கு.. வா ஹாஸ்பிட்டல் போகலாம். காலையில் இருந்தே தலை சுத்துதுன்னு சொல்லுறால்ல நான் போற வழியில் ஓர்  கிளீனிக் இருக்கு பார்த்துட்டு நான் சென்டர் போறேன். வா ” என அழைக்க

அவளுக்கும் இனியாள்  கூறுவது சரியாக இருக்க கிளம்பி வந்தாள்.., இருவரும் கிளம்பினார்கள்…

அங்கு சென்று அவளை டெஸ்ட் செய்து பார்த்ததில் ” ஷி இஸ் பெர்க்னென்ட் ” என கூற.. அப்பொழுது தான் ரெண்டு மாதமாக தன்னை கவனிக்கவில்லை என்று தெரிவதாய்…

அதை கேட்ட இனியாள் அதிர்ச்சியாக அவளை பார்க்க, இதழியோ டாக்டர் கூறும் அறிவுரையை கவனமாக கேட்க ஆரம்பித்தாள்…மனதில் ” குட்டிமாமா ” என செல்லமாக கொஞ்சிக் வயிற்றை தடவிக் கொண்டாள்…  வெளியில் இருவரும் வர அமைதியாக நடந்து வந்தாள் இனியாள்…

இனியாள் சென்டர் செல்லாமல் மீண்டும் வீட்டுக்கே வர ” அக்கா ” என மெதுவாக அழைத்த இதழியை பார்த்து முறைத்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்…

வீட்டுக்கு வந்த இனியாள் அமைதியாக நிற்க, அவளை நோக்கி ஓடி வந்த இதழி ” அக்கா குழந்தையை அழிக்க சொல்லாதக்கா… என்னோட குட்டிமாமாவின் வாரிசுக்கா… என்னோட காதல் பரிசுக்கா.. கருவை கலைக்க சொல்லாதக்கா ” என அவள் பேசும் முன் கதற…

இனியாள் மனதில் சொல்லவெண்ணாத வலி எழ ” நான் அவ்ளோ கல்நெஞ்சக்காரியா இதழி ” என கேட்க

அப்படி இல்லக்கா.. நான் மாமாவை விட்டு வந்துட்டேன் நீ அப்படி சொல்லிட்டா என்னால தாங்கமுடியாதுக்கா”

சரி சொல்லு… உனக்கு சக்தி மாமாவை அவ்வளவு பிடிக்குமா.?” என கேட்க மனதில் உள்ள காதலை முதல் முறையாக வாயை திறந்து தன் அக்காவிடம் கொட்டினாள் இதழி…

இத்தனை ஆசை வச்சுட்டு எப்படிடி அவரை விட்டு வந்த.. லூசா உனக்கு பிடிச்சிருக்கு.. கிளம்பு வா இப்போவே போவோம் ” என அழைக்க..

இல்ல வேண்டாம்க்கா… மாமாக்கு என்னை பிடிக்கலக்கா.. பிடிக்காத ஒருத்தர்கிட்ட போய் கெஞ்ச சொல்லுறியா..? ” என கோபமாக கேட்க..

ஏண்டி.. அத்தனை காதல் வச்சுருக்க..இதுல போய் ஈகோ பாக்குற.. இது உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் இல்ல… இப்போ மூணாவதா ஒரு ஆள் வரப்போகுது அந்த குழந்தைக்காக பாருடி”

இல்ல வேண்டாம்… உனக்கு நான் இருக்கது கஷ்டமா இருந்தா சொல்லுக்கா.. நான் எங்கையாவது போய் என் குழந்தையை பெத்து வளர்த்துகிறேன் ” என கூறி கோபத்துடன் வெளியில் கிளம்ப..

பதறி தவித்த இனியாள் ” ஏண்டி உன் பொல்லாத கோபத்திலும், பிடிவாதத்திலும் உன் வாழ்க்கையை அழிக்குற… ”

இது பிடிவாதம், கோபம் இல்லக்கா என் மனசுல இருக்க வலி.. கிட்ட தட்ட 7  வருஷமா மனசுல இருக்கிற வலி… எத்தனை நாள் என்னை உனக்கு பிடிக்குமான்னு கேட்டு மாமா பின்னாடி அலைஞ்சேன் அது உனக்கு தெரியுமாக்கா. அப்போ எல்லாம் பேசாம போனாங்க.. இப்போ மறுபடியும் அவர்கிட்ட போய் ” என்னை ஏத்துக்கங்க என்று வாழ்க்கை பிச்சை கேட்க சொல்லுறியா ” என அழுகையுடன் கேட்க…

இதற்கு மேல் என்ன கூறுவாள் இனியாள் அப்படியே அமைதியாக அவளை நன்கு பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்… இதழி மனம் முழுவதும் வலியும், வேதனையும் தன் காதல் கானல் நீராகிப் போன வலி.. மேலும் அக்காவை வருந்த வைக்க விரும்பாமல் எல்லாத்தையும் மனதோடு புதைத்துக் கொள்ள பழகி விட்டாள் இதழினி.. மேலும் மேலும் மனதோடு இறுகி போனாள்…

அன்று வீட்டுக்கு வந்த சக்தி என்றும் இல்லாத நாளாக குடித்துவிட்டு வர ” டேய் சக்தி… என்னடா இது.. இப்படி வந்திருக்க என்ன ஆச்சு உனக்கு ” என கேட்க..

முடியலம்மா என்னால முடியல… அவ என்னை விட்டு எதுக்கு போனா.? என்னை உண்மையாவே பிடிக்கலியா..? அ.. அன்னைக்கு நடந்தது அவளுக்கு பிடிக்கல.. அது தான் என்னை விட்டு போய்ட்டா.. இனி எப்படிம்மா அவளை நான் பார்ப்பேன்..? அவள் காதல் எங்க  போச்சும்மா.? வார்த்தைக்கு வார்த்தை உன்னை தான் கட்டிப்பேன் குட்டிமாமா என்று பின்னாடியே சுத்துவா.? அந்த இதழிக்கு நான் எங்க போவேண்மா.. மனசு வலிக்குது. என்னையும், எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே போய்ட்டாமா..? என்னால் முடியலம்மா  ” என கூறி பல நாட்களுக்கு பிறகு இன்று தான் லட்சுமியிடம் பேசி அவர்மாடியில் படுத்துக்  கொண்டு அப்படியே தன் மனதின் வேதனையை கொட்ட..

முதல் முறையாக தான் செய்த தவறின் வீரியம் தெரிய அப்படியே அவனை அணைத்து அமர்ந்து விட்டார் லட்சுமி… மனது பல வழிகளில் தவிக்க அப்படியே அவன் தலையை கோதி அமர்ந்துவிட்டார்…

இப்படியாக நாட்களும் மாதங்களும் கழிய இதழிக்கு 7 மாதமாக, மிகவும் மெலிந்து விட்டாள்… அவளுக்காக சூர்யா, இனியாள்  பார்த்து பார்த்து செய்ய எதுவும் அவளை மாற்றவில்லை… சில நேரம் மணிக்கணக்காக விட்டதை பார்த்து அமர்ந்து விடுவாள்…. டாக்டர்ஸ் மிகவும் கவனமாக இருக்க கூற பார்த்து பார்த்து கவனித்தாள் இனியாள்.. அவளுக்கும் வெற்றியை நினைத்து சில நேரம் கண்ணீர் பெருக தங்கை முகம் பார்த்து போக்கிக் கொள்வாள்….

அன்று வேலை விஷயமாக சூர்யாவை தேடி வெற்றி வர, தெரு நல்லியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு தூக்க முடியாமல் தூக்கிய ஒரு கர்ப்பிணியை நோக்கி  அவளுக்கு உதவ சென்ற வெற்றி ” வீட்டுல யாரும் இல்லையா..? இப்படி நீங்க கஷ்டப்படுறீங்க  ” என கேட்டுக் கொண்டே நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க.. பார்த்த வெற்றி அப்படியே அதிர்ந்துவிட்டவன்  ” இதழி ” என அழைக்க

அவனை இங்கு எதிர்பார்க்காத இதழி  ” வெற்றி மாமா ” என...

ஒன்றும் கூறாத வெற்றி ” எங்க தங்கி இருக்கீங்க ” என அமைதியாக கேட்க..

இங்க தான் என அருகில் இருந்த வீட்டில் நுழைய அமைதியாக அவள் பின்னே சென்றவன் குடத்தை அங்கு வைத்து விட்டு ” எத்தனை மாசம் இதழி ” என குரல் கமர கேட்க..

” 7 முடிஞ்சுருக்கு மாமா ” தலை குனிந்துக் கொண்டே மெதுவாக கூற..

இதழி மாத்திரை சரியா எடுத்துகிட்டியா..? மதியம் சாப்டியா..? ” என சப்பலை வீட்டின் உள் கழட்டிக்  கொண்டே இனியாள் கேட்டு அவளை நோக்கி திரும்ப.. அங்கு இருந்த வெற்றியை கண்ட அவள் கையில் இருந்த பழங்கள் நழுவி கீழே  விழ, ” மாமா ” என அழைத்துக் கொண்டே ஓடி வந்து அவனை தாவி அணைத்துக் கொண்டாள் இனியாள்..

அவளை அணைத்து மெதுவாக நிமிர்த்திய வெற்றி ” என்னை மறந்துட்டல்ல இனி… உனக்கு இந்த மாமா தேவை இல்லாமலே போய்ட்டேன் தானே..? அதனால் தானே என்கிட்டே சொல்லாமலே இப்படி வந்து தனியா கஷ்டப்படுறீங்க ” என கலங்கி கேட்க..

அப்படி எல்லாம் இல்ல மாமா.. “

எப்படி இல்ல இனி.. நாங்க உங்களுக்கு தேவை இல்லை என்று தானே விலகிடீங்க…” என

அவனை கையை பிடித்து சேரில் அமர வைத்த இனியாள் நடந்ததை கூற, அமைதியாக கேட்டுக் கொண்டான்… ” நானும் அங்க போகல இனி உன்கூடவே இருக்கேன்.. நீ இல்லாத இத்தனை நாளும் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா..? ” என கூற அந்த நேரம் அங்கு வந்த இதழி அவள் கையில் காபியை கொடுத்து ” குட்டிமாமா எப்படி இருக்காங்க வெற்றி ” என கேட்க….

அவன் நல்லா இருக்கான்.. நீ இல்லாம கிறுக்கன் மாதிரி அலையுறான்… தாடி வளர்த்து பார்க்கவே எப்படியோ இருக்கான் .. பாதி நாள் வீட்டுக்கே வரதில்லை..” என கூற..

என்னை மாமா தேடினாங்களா.? ” என கேட்க… அவனிடம் பதில் இல்லை.. வீட்டில் அவன் தந்தை தேட கிளம்பினதுக்கே ” யாரும் அவளை தேடி செல்லவேண்டாம்.. போனவளுக்கு நாம தேவை என்றால் வருவாள்…  வெற்றி உனக்கு இனியை திருமணம் செய்ய இஷ்டம் இருந்தால் அவளை தேடு. மத்தபடி யாரும் எங்கும் செல்ல கூடாது என்று கூறி விட்டான்… ஆனாலும் நாராயணனும், வெற்றியும் தேடும் பணியை செய்து கொண்டு தான் இருந்தனர்…

எனக்கு தெரியும் வெற்றி மாமா.. குட்டிமாமாவுக்கு என்னை பிடிக்கல..? ” என கண்ணீர் சிந்த..

அவனுக்கு உன்னை  பிடிக்காமல் தான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கியா ” என அவளின் பெரிய வயிறை சுட்டிக்காட்டி கோபமாக கேட்க…

அமைதியாக அவள் அறைக்கு  சென்று விட்டாள்… சக்தி இப்பொழுது சோகத்தில் இருக்கான் என்றால் மாமா என்னை ஏன் தேடவில்லை ” என அவள் எண்ண..

வெளியில் இருந்த வெற்றியிடம் ” இப்படி தான் மாமா ஏதோ  பேசிட்டு இருக்கா.. சக்தி மாமா இவளை தேடினால் உடனே இங்க அழைச்சுட்டு வாங்க ” என கூற சரி என கூறிய வெற்றி இனியாளை வெளியில் அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு சூர்யாவை பார்த்து விட்டு ” எனக்கு ரொம்ப  வேண்டியவங்க நல்லா பார்த்துக்கோங்க ” என கூறி சென்றான்…

வீட்டுக்கு சென்றவனுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.. நேராக மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான்…இத்தனை மாதமாக தேடிய அவனின் இனி கிடைத்துவிட்டாளே. சக்தியை ஏதாவது செய்து அவளை இங்கு அழைத்து வருவதுப் போல் செய்யவேண்டும்… அத்தனை காதல் வைக்க தன்  அண்ணன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.. அந்த காதலால் தான் இவன் குழந்தையை அவள் சுமக்கிறாள்… எனக்கே இப்படி சந்தோசமாக இருக்கும் பொழுது அண்ணனுக்கு விஷயம் தெரிந்தால் எத்தனை சந்தோசப்படுவான் என எண்ணிக் கொண்டிருக்க..

அவனை தேடி சக்தி வர.., அண்ணா இங்க வந்து உட்காரு என அருகில் இடம் கொடுத்து தள்ளி அமர., ” என்னடா உனக்கு  இன்னைக்கு…. ரொம்ப சந்தோசமா என்னை கூப்டுற மாதிரி இருக்கு ” என கேட்டுக் கொண்டே அவன் அருகில் அமரஅவனைகட்டிக் கொண்டு அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான் வெற்றி…  

“ டேய் வெற்றி என்னாச்சுடா. உனக்கு சின்னபையன் மாதிரி பண்ணுற எழும்புடா…” என கூறி அவன் தலையை கோத.. தன்னுடைய மொபைல் போனை எடுத்துக் கொண்டே “ எதுக்குண்ணா இப்படி பேய் மாதிரி தாடியும், முடியும் வளர்த்திருக்க நல்லாவா இருக்கு  “ என கேட்க…

“ டேய்.. நல்லா தாண்டா இருக்கு “ என கூறிக் கொண்டே தலையை கோதிவிட.. மனதில் “ பொண்டாட்டி இல்லாத சோகத்தை இப்படி தான் போக்கிக்கணும்டா “ என கூறிக் கொண்டான்…

“ அண்ணா “ என வெற்றி அழைக்க..

“ என்னடா “ என.

“ சின்ன வயசுல நீ எனக்கு ஒரு பாட்டு பாடுவியே அதை பாடேன் “ என மெதுவாக கேட்க…

“ அதான பார்த்தேன்.. நீ இப்படி மடியில் வந்து படுக்கும் போதே எனக்கு தெரியும்டா.. இது என்ன சின்ன பிள்ளைமாதிரி “ என செல்லமாக கடிய…

“ பாடுண்ணா “ என சக்தி நாடியை பிடித்து கெஞ்ச

சக்திக்கும் கொஞ்சம் மனது ரிலாக்ஸாக வேண்டி  “ சரி.. சரி.. பாடுறேன் “ என..

“ தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மால

சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

 

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்

ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்

ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்

தொட்டில் மேலே முத்து மால

சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

 

சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல

தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல

தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்

நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா

ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்

வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்

தொட்டில் மேலே முத்து மால

சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட “ என அவனின் குரலில் பாட அப்படியே மெய்மறந்து கேட்டிருந்தான் வெற்றி… கூடவே அப்படியே சக்தியின் குரலை தன்னுடைய மொபைல் போனில் ரெகார்ட் செய்தான் வெற்றி…  

 

“ போதுமாடா “ என புன்சிரிப்புடன் கேட்க..

 

“ இது போதும்ண்ணே “  என சக்தியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட. “ “ சை.. ண்ணா முதல்ல இந்த காட்டை அழிடா… கிஸ் பண்ண கூட முடியல “ என கேலி குரலில் கூற…

 

“ அடேய்… போடா..” என கூறி கொண்டே எழுந்து தன் அறைக்கு சென்றான்… சக்திக்கு இதழி நினைவு வர அப்படியே கன்னத்தை தடவி விட்டுக் கொண்டே சென்றான் அவன்…

 

அடுத்த நாளே வெற்றி இனியாள் இருக்கும் வீட்டுக்கு சென்று இதழியிடம் “ கருவில் இருக்கும் பொழுதே தகப்பனின் குரலை குழந்தை கேட்கவேண்டும் என்று சக்தி பாடிய பாட்டு ரெகார்ட், புது போனில் வைத்து கொடுக்க “ சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்… இரவு நேரங்களில் சக்தியின் குரல் தான் அவளுக்கும், அவள் குழந்தைக்கும் துணையாகின…

 

சக்தி குரல் கேட்ட உடனே சில நேரம் குழந்தையும் அமைதியாகி விடுவான் “ இப்பவே அப்பா கோண்டுடா நீ “ என செல்லமாக கொஞ்சிக் கொள்வாள் இதழி.. அவனின் குரல் கேட்டதில் இருந்து அவளில் சில மாற்றம்… உடல் கொஞ்சம் தேற ஆரம்பித்தாள்..

 

அடுத்த செக்கப் வெற்றி திருநெல்வேலி சிட்டிஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான்.. செலவு எல்லாமே அவனுடையதாக அப்படி பார்த்துக் கொண்டான்……

 

இப்படியாக நாட்கள் கழிய நாராயணன் வீட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவருக்கு காபி கொண்டு கொடுத்தார் லக்ஷ்மி… கிட்ட தட்ட பல மாசமாக லக்ஷ்மியிடம் நாராயணன் பேசுவது இல்லை…

 

அவர் முன் காபியை வைத்து விட்டு திரும்ப அப்படியே கீழே விழுந்தார் லக்ஷ்மி.. “ லக்சு என்ன ஆச்சு “ என பதறிய நாராயணன் அவரை தாங்கி பிடிக்க..

 

“ கங்கா தண்ணீ கொண்டு வா “ கூற ஓடி வந்த கங்கா அவர் முகத்தில் நீர் தெளிக்க மெதுவாக கண்களை திறந்த லக்ஷ்மி எழ ஆயத்தமாக மீண்டும் கீழே விழ போக…

 

“ டேய் வெற்றி டாக்டர்க்கு கால் பண்ணுடா “ என பதறி கூறினார் அவர்…

 

அடுத்த சில நேரத்தில் வந்த டாக்டர் அவரை பரிசோதித்து “ பிரசர் அதிகமா இருக்கு… பாஸ்டிங் இருக்காங்களா…? “ என கேள்வியாக வினவ

 

மெதுவாக தலையை ஆட்டினார் லக்ஷ்மி.. எல்லாரும் அவர் முகத்தை பார்க்க சக்தி முகத்தில் ஆச்சரியம்… “ நல்லா சாப்டுங்க.. உடல் நிலையை பொறுத்து பாஸ்டிங் இருங்க “ என கூறி அவர் சென்றார்.. 

 

அவர் செல்லவும் “ என்ன லச்சு இது “ என நாராயணன் கடிய…

அவரோ சக்தியை பார்த்துக் கொண்டு இருந்தார்… “ என்னம்மா “ என சக்தி வினவ..

“ என்னை மன்னிச்சுருடா… நான் பெரிய பாவம் பண்ணிட்டேன்… இப்போ தான் தோணுது எவ்வளவு கேவலமா நான் இருந்திருக்கேன்… ருக்கு பிள்ளைங்க என தெரிந்தே அவளை பேசியது தப்பு.. அதுக்கு தான் ரெண்டு பேரும் சீக்கிரம் என் கண்ணுல தெரியணும்னு விரதம் இருக்கேன் “ என கண்ணீருடன் கூற…

அவர் அருகில் வந்த வெற்றி “ ம்மா.. அதுக்கு இப்படி தான் பண்ணுவாங்களா..? அவங்க நம்மளை தேடி சீக்கிரமா வருவாங்க “ என கூற..

“ சீக்கிரம் வந்திருவாங்களாடா.? “ என கேட்க…

“ ஆமாம்மா வருவாங்க.. முதலில் அண்ணனை இந்த வேஷத்தை கலைக்க சொல்லுங்க.. தேவதாஸ் மாதிரி இருக்கிறான் “ என கூற..

நாராயணனும், லக்ஷ்மியும்  “ ஆமாடா. சக்தி அழகா சேவ் பண்ணி நீட்டா இருடா “ என கூற…

“ சரிம்மா.. எடுக்குறேன்.. நீங்க உடம்பை பாத்துகோங்க “ என கூறி வெளியில் சென்றனர்….

அன்று இதழிக்கு விட்டு விட்டு வலி வர… பயந்த இனியாள் வெற்றியை அழைக்க அவசரமாக ஓடி சென்றான்… அவளுக்கு சக்தியை காண அத்தனை ஆசை இருந்தும் அப்படியே அடக்கி கொண்டாள்…

“ மாமா.. பக்கத்துல பழைய ஹாஸ்பிடல் போகலாம் “ என இனியாள் கூற..

“ வேண்டாம் இனி, நம்ம போற ஹாஸ்பிடலுக்கு போகலாம் “ என வேகமாக வண்டியை செலுத்தி அங்கு வந்து சேரவும்… இதழிக்கு மீண்டும் வலி வரவும் சரியாக இருந்தது… 

அங்கு சேர்த்து விட்டு வெற்றி வெளியில் வர சக்தி நண்பன் அருணை பார்த்தவன்… ஹாஸ்பிட்டல் விட்டு வெளியில் வந்து சூர்யாவை உடனே வர கூறினான்…

அவன் வர எல்லாம் அவன் கையில் ஒப்படைத்த வெற்றி “ இனியாளிடம் எதுனாலும் எனக்கு கால் பண்ணு “ என வெளியில் காத்திருந்தான்….

அடுத்த கொஞ்ச நேரத்தில் சிசேரியன் முறையில் சக்தியில் புதல்வன் பிறக்க… இனியாள் தன் கையில் வாங்கிக் கொண்டாள்…

இதழியை அறைக்கு மாற்றிய பிறகு வெற்றி வந்து பார்த்து சென்றான்…. அருண் வரவு அதிகமாக இருக்க சூர்யாவிடம் எல்லாம் கூறி சென்றான்…

அதே போல் எல்லாம் சூர்யா பார்த்துக் கொள்ள எதிர் பாராத விதமாக சக்தி வர, பயந்த சூர்யா “ அச்சோ… சக்தி சார் இதழி அறையில் இருக்காங்க என்றால் இதழி கணவர் இவரா ..? அய்யோ நாராயணன் சார் கிட்ட வேற தங்கச்சி புருஷன் சரி இல்லைன்னு சொல்லிட்டேனே.. டேய் சூர்யா நீ செத்த ” என அலறிய அவன் வெற்றிக்கு அழைத்து கூற…

“ என்ன அண்ணன் அங்க வந்திருக்கானா..? “ என கேட்டு எல்லாம் அறிந்துக் கொண்டவன்..

“ சரிடா.. நீ ஆபிஸ் வா “ என கூறி அடுத்த நாளே மும்பை அனுப்பி விட்டான்….

அதன் பிறகு சக்தி இவனை அழைக்க, “ ஐ.. அண்ணா “ என அவனை கட்டியனைத்து எதுவும் தெரியாததுப் போல் சந்தோசத்தை பகிர்ந்துக் கொண்டான்….

அடுத்து சக்தி திருமணம் முடித்து… சக்தி ஆசைப்பட்ட படியே இதோ இன்று அவன் அம்மாவின் கையால் தாலியும் வாங்கி இதழிக்கு கட்டிவிட்டான்… இதை கட்டுவதற்குள் எத்தனை கஷ்டம், எத்தனை பேச்சு, எத்தனை வலி, எத்தனை அவமானம் எல்லாம் யோசித்த சக்தி பெருமூச்சு விட…

அதே நேரம் ஆருஷன் அழும் குரலில் கடந்த காலத்தை விட்டு கலைந்த இதழி அவனை நோக்கி தொட்டில் பக்கம் செல்ல, அதே நேரம் வேகமாக அறைக்கு வந்த சக்தியும் குழந்தையை நோக்கி தொட்டில் அருகில் செல்ல இருவர் நெற்றியும் செல்லமாக மோதிக் கொண்டன… அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க… ஆருஷன் மீண்டும் அழ “ டேய் மகனே என பொண்டாட்டியை கொஞ்ச நேரம் சைட் அடிக்க விடுறியா நீ “ என அவனிடம் கூறிக் கொண்டே குழந்தையை தூக்க, இதழியோ அவனை முறைக்க…

“ வாடா செல்லம் நாம வெளிய போகலாம்… இங்க ஒரே புகைச்சலா இருக்கு என போகிற போக்கில் அவளை சீண்டி விட்டு செல்ல..

“ டேய் குட்டிமாமா.. இங்க வந்து தானே ஆகணும் அப்போ வச்சிக்கிறேன் உன்னை “ என கருவிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள் இதழினி…

பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த வெற்றி “ தாயே லக்ச்சுமி அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் நீ தான் எனக்கு எதிரியா இருக்க… கையில வசமா சிக்குன அப்படியே வறுத்து தின்னுருவேன் உன்ன.. அப்படி கொலை வெறியில் இருக்கேன்… ஒழுங்கா என்னோட ஜுஜிலிப்பாவை என்கூட இன்னக்கு சேர்த்து வைக்குற “ என கருவிக் கொண்டே பூவை அவர் கையில் திணிக்க…

“ என்னடா.. ரொம்ப வெந்து போய் இருக்க போல “ என போகிற போக்கில் அவனை வாரி விட்டு லச்சு செல்ல…

“ ம்ம்மா…” என பல்லை கடித்த வெற்றி அந்த பக்கம் திரும்ப மாடியில் இனியாள் செல்வதை கண்ட வெற்றி பூனை பாதம் எடுத்து வைத்து மாடியில் கால் வைக்க…

“ டேய் வெற்றி இங்க வா “ என சக்தி அழைக்க..

“ சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..

இதுக்கு மேல பச்சை மண்ணு தாங்காது சாமி “ என புலம்பிக் கொண்டே சக்தியை நோக்கி சென்றான் வெற்றி…

வேர் அடி வாங்கி மெல்ல சாயும்…..  

 

error: Content is protected !!