ver 20

ver 20

வேர் – 2௦

சக்தியோ குழந்தையை தூக்கி நெஞ்சில் போட்டுக் கொண்டு இடது கையால் ஆருஷை அணைத்துக் கொண்டு, வலது கையை தன் தலைக்கு கீழ் வைத்து, கண்களை மூடி அவளுக்காக காத்திருந்தான் அவள் அறியாமல்…

அவனை பார்க்க, அவன் தூங்குவதுப் போல் இதழிக்கு தெரிய மெதுவாக பூனை பாதம் எடுத்து வைத்து வந்தவள், கோவிலுக்கு செல்ல கட்ட வேண்டிய புடவையை எடுத்து அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அவசரமாக கட்ட… தீடிரென அவனின் ஆழ்ந்த குரல் அவளை வித்திர்க்க செய்வதாய்…

“ என்கிட்டே மறைக்க உன்கிட்ட என்ன இருக்கு லிப்ஸ்… புதுசா ஏதாவது இருக்க என்ன..? நமக்கு ஒரு பையன் கூட இருக்கான் மறந்துட்டியா என்ன..!! “ என கண்களை மூடிக் கொண்டே மெதுவாக கூற… முகத்தில் ஆயிரம் வெட்க பூக்கள் பூக்க முகத்தை மறைத்தவளை கண்ட…

சக்தி “ என்ன நியாபகம் வந்துட்டா லிப்ஸ் “ என மெதுவாக.. மிக மிக மெதுவாக கேட்க… அந்த நிமிடம் அவளின் மாய வலைகள் அறுபட, முகம் அப்படியே கோபத்தை தத்தெடுக்க..,

அருகில் கிடந்த குஷனை எடுத்து அவனை நோக்கி அடிக்க வர, “ டேய் சக்தி உனக்கு வாஸ்து சரி இல்ல “ என அலறிக் கொண்டே குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடியவன் தலையில் அவள் எறிந்த குஷன் பட்டு கீழே விழுந்தது…

“ குட்டிமாமா… நீ சரியான பிராடு.. என்னம்மா நடிக்குற… இனி இப்படி சும்மா சீண்டிகிட்டு இருந்த கொன்னுருவேன் “ என வெளியில் சென்றவனை திட்ட……

ஆனாலும் அவள் மனதோ “ குட்டிமாமா நீ நல்லா தேறிட்ட… முன்னாடி நான் உன் பின்னாடி குட்டிமாமான்னு சுத்துனேன்… உன்னை மக்கு மாமான்னு கூட நினைச்சேன்.. ஆனா நீ கில்லாடி மாமா.. இப்போ நான் தான் மக்கு ஆகிட்டேன் “ என வெட்கமாக, செல்லமாக அவனை கொஞ்சிக் கொண்டாள்….

அறையில் இருந்து வெளியில் வந்தவன், ஹாலுக்கு வர அங்கு வெற்றியை பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தான் சக்தி….

அவனின் சிரிப்பை கடுப்புடன் பார்த்த வெற்றி “ என்ன சிரிப்புடா “ என கேட்டுக் கொண்டே அவன் கையில் இருந்து அப்பொழுது தான் எழுந்த ஆருஷை தூக்கி கொண்டான்..

“ என்னடா வெற்றி… ஒரே நாளுல லவ்வோபதி வாழ்க்கை வேண்டாம்ன்னா இப்படி சாமியார் ஆகிட்ட…. என்னாச்சுடா “ என நெற்றியிலும், கன்னத்திலும் பட்டை போட்டு அமர்ந்திருந்தவனை பார்த்து கேட்க…

“ போடா நீ வேற.. நான் ஒன்னை கட்டிக்கிட்டு வந்திருக்கனே.. அவ தான் விடியதுக்கு முன்னாடியே தண்ணியை ஊத்தி எழுப்பி விட்டுட்டாடா… அது மட்டும் காணாதுன்னு நம்மளை பெத்தாங்களே நம்ம தாய் குலம் அது வந்து இப்படி கோலம் போட்டுட்டு போயிருக்கு… ஆனாலும் அண்ணி மாதிரி யாரும் வர முடியாதுடா.. உன்னை இவ்ளோ நேரம் தூங்க விட்டுருக்காங்க… ஆனா என்னை பாரு “ என நீலி கண்ணீர் வடிக்க…

சக்தி மனதோ “ நான் வாங்குன குஷன் அடியை வெளிய சொன்னா சிரிப்பாங்கடா.. ஆனாலும் நீ எனக்கு எவ்வளவோ பரவால தம்பி பையா “ எண்ணி “ ஆமாடா வெற்றி “ என தலையை ஆட்டிக் கொண்டான்…

அடுத்த கொஞ்ச நேரத்தில் இதழி வெளியில் வர குழந்தையை அவளிடம் கொடுத்த சக்தி கிளம்பி வர, எல்லாரும் குலதெய்வம் கோவிலை நோக்கி சென்றனர்…

கோவில் பூஜை முடிந்து எல்லாரும் பிரகாரத்தை சுற்றி வந்து அங்கிருந்த திண்ணையில் அமர, வெற்றியோ, இனியாளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மலைப் பக்கம் அழைத்து சென்றான்…

ஆருஷன் தூங்கவே அவனை லக்ஷ்மி மடியில் வைத்துக் கொண்டு, நாராயணன் அருகில் அமர்ந்து கொண்டார்… அவர்கள் கூடவே சக்தியும் அமர,

இதழியோ “ அத்தை நான் குளத்து பக்கம் போறேன் “ என கூறி அவள் சென்றாள்… சக்தியோ செல்லும் அவளை பார்த்து நின்றான்….

குளம் அருகில் இருந்த படியில் அமர்ந்த இதழி மனதில் “ மாமா அந்த ஒரு வருஷம் எதுக்கு என்னை தேடி வரலை… உண்மையாவே என்னை பிடிக்கலியா..? ஆனா மாமா செய்கையும் செயலும், எனக்கு பார்த்து பார்த்து செய்வதும் பார்த்தால், பிடிக்காததுப் போல் தெரியவில்லையே.. எதற்க்காக என்னை தேடி வரவில்லை “ என்ற வாசகமே மனதில் உலா வர அப்படியே அமர்ந்திருந்தாள்….

சக்தியோ தேங்காயை எடுத்து உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க…. மலை பக்கம் சென்ற வெற்றியும், இனியாளும் வருவதை கண்ட நாராயணன் “ டேய் சக்தி நேரம் ஆகிட்டு இதழியை அழைச்சுட்டு வா..? “ என கூறினார்…

அவர் கூறவும் எழுந்து சென்ற சக்தி, அங்கு சென்று அவளைப் பார்க்க அவளோ தீவிர யோசனையில் இருக்க “ என்ன இதழி யோசிக்கிற “ என கேட்டு அவள் அருகில் செல்ல..,

தனது நினைவின் நாயகனே அருகில் வர, எழுந்த இதழி அவனை பார்த்து அவசரமாக திரும்ப, தடுமாறி விழ போனவளை சரிந்து விழாமல் தடுத்தவன், அவளை தாங்கி பிடிக்க..,

அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல் அவனின் கையை தட்டிவிட்டு செல்ல..

“ தொடத் தொட மலர்ந்தென்ன பூவே.. தொட்டவனை மறந்ததென்ன “ என மெதுவாக கண்சிமிட்டி பாட.. 

“ தொட்டவனை யாரும் மறக்கவில்லை… தொட்டவளை மறந்தது நான் இல்லை “ என கோபமாக கூறி சென்றாள் இதழினி…

அவளின் இந்த தீடிர் தாக்குதல் அவனுக்கு அதிர்ச்சியளிக்க… அவன் மனதில் பெரும் கேள்வி..? மற்ற நேரம் என்றால் தான் எது செய்தாலும் ஒரு பார்வை பார்த்தோ , இல்லை வெட்கமாகவோ செல்லும் இதழியின் இந்த பதில் அவனை பெரிதும் வருத்தவைப்பதாய்…

அவன் மனம் பலவற்றில் சிக்கி தவித்தது…. அவனும் அவள் வாயில் இருந்து ஏதாவது கேள்வி வருகிறதா..? என்று அவளை சீண்டி தான் பாக்கிறான்…

இங்கு வந்த முதலில் கோபமாக கொந்தளித்தவள் இப்பொழுது எல்லாம் அமைதியையே கடைப்பிடிக்கிறாள் காரணம் தான் தெரியவில்லை… எப்பொழுதும் பாட்டிக்காக தான் திருமணம் செய்ததாக கூறுகிறாள்…. பாட்டிக்காக திருமணம் செய்தவன், அன்று அவளை எடுத்துக் கொண்டது ஏன் என்று யோசிக்கவே மாட்டாளா..? மீண்டும் அவளையே எப்பொழுதும் சுற்றி சுற்றி வருகிறேனே அதுவும் பாட்டிக்காக தான் ”  என்று தான் இன்னும் எண்ணுகிறாளோ..?

இவளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்ததும் பாட்டிக்காக தானா..? இவள் மேல் அத்தனை கோபமாக இருந்தும், அருண் அன்று கூறியதும் ஓடி போனேனே அதுவும் பாட்டிக்காகவா..? வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவளை இங்கு அழைத்து வந்ததும் பாட்டிக்காக தானா..?

எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எண்ணி செய்தது தவறா..? அம்மாவின் மனநிலை அறிந்து, அவரை மாற்றி இதழியை கைபிடிக்க எண்ணியது தவறா..? விட்டு சென்றவளே தேடி வர வேண்டும் என்று காதல் கொண்ட மனம்  எண்ணியது தவறா..? இதில் எது என் தவறு…? தான் என்ன தவறு செய்தோம்…

எல்லா தவறும் அவள் பக்கமே “ யார் எது சொன்னாலும் காதில் எடுக்காதே என்று கூறிய பிறகும் அவள் சென்றது. அவனால் தாங்கவே முடியவில்லை… உண்மை காதல் அவளை கொண்டு வந்து சேர்க்கும் என்று எண்ணி இருந்தான்.. அதே போல் வந்தும் விட்டாள்….

தவறு என்பது ரெண்டு பேர் மேலுமே உள்ளது… அவள் என்னிடம் கூறாமல் வெளியில் சென்றாள்… அதனால் நான் அவளை அழைக்கவில்லை… எல்லாம் மறந்து நானே அவளை அழைத்து வந்தும்விட்டேன்… வேறு என்ன பிரச்னை அவளுக்கு..? அவனுக்கு தெரியவே இல்லை…

இதழி என்ன கூறினாலும் சக்தி பேசாமல் இருக்க காரணம் தன்னை விட்டு சென்ற பிறகும், தன் குழந்தையை அவள் பெற்றெடுத்தது தான், அன்று அவளை நோக்கி ஓட வைத்தது…. தன் குழந்தையை பெற்றெடுத்தவள், இப்பொழுது என்னை விலக்கி வைக்க காரணம் என்ன..? இனியும் தாமதிக்க வேண்டாம் என்று எண்ணிய சக்தி அவளிடம் பேச எண்ணினான்…. அப்படி திடமான முடிவெடுத்த பின் நிம்மதியாக இருக்க… வீட்டை நோக்கி சென்றனர் எல்லாரும்….

வீட்டில் செல்லவும் அவனுக்கு அழைப்பு வர, எல்லாரிடமும் கூறியவன், இதழியை தேட… ” இப்போ தான் மேலே போனா “ என நாராயணன் கூற..

போன் பேசிக் கொண்டே மாடிக்கு சென்றான் சக்தி…. “ ங்கா….ங்கா… “ என்று சக்தியின் குரல் கேட்டு எதிர் சத்தம் செய்ய, போனை கட் செய்து  தொட்டில் பக்கம் சென்றான்…,

“ அம்மா எங்கடா “ என கேட்க, அவனை பார்த்து ஆருஷ் சிரிக்க… “  உன் அம்மா மாதிரி  சிரிச்சே மயக்குடா “ என கூறி அவனை தொட்டிலில் இருந்து தூக்கியவன் “ இதழி “ என அழைக்க

அவள் “ என்ன “ என வர.., அவளை ஊன்றி பார்த்த அவன் “ செங்கல் சூளை வர போய்ட்டுவாறேன்… வெயிட் பண்ணு “ என அவளை பார்த்து கூறியவன், குழந்தையிடம் திரும்பி “ அம்மாவை பார்த்துக்கோ செல்லம்.. அப்பா இதோ வந்திடுறேன் “ என கூறி குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்து அவளிடம் கொடுத்து சென்றான்….

 அவன் செல்லவும் “ செல்லம் நீங்க அம்மாவை பாத்துபீங்களா..? “ என கேட்டு அவனை மூக்கோடு மூக்குரசி பேச கிழுக்கி சிரித்தான் அவன்…

“ மாமா “ என அழைத்துக் கொண்டே இனியாள் அறைக்குள் செல்ல…

“ என்ன இனி “ என கேட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தவன் அவளை நோக்கி திரும்ப…

“ நாளையில் இருந்து காலேஜ் போகணும் மாமா.. போகவே எனக்கு பிடிக்கலை “ என அவன் அருகில் வந்து செல்ல சிணுங்கலுடன் அவனிடம் கூற..

பதறி எழுந்த அவன் “ என்னாச்சு இனி.. அங்க ஏதாவது பிரச்சனையா… மாமா வரணுமா…? ” என பதறி வினவ…

“ போ மாமா.. அங்க பிரச்சனை ஒண்ணும் இல்லை.. உங்க கூடவே எப்போவும் இருக்கணும் “ என அவனின் கையை பிடித்துக் கொண்டே கூற…

இப்போ இவகிட்ட செல்லம் கொஞ்சினா கண்டிப்பா நாளைக்கு காலேஜ் கட் அடிசுருவா.? என எண்ணிய வெற்றி “ அட என்னம்மா நீ… இன்னும் நாலு மாசம் தானே… அதுவரை மாமா உன் பக்கமே தலை வச்சு படுக்கமாட்டேன்… என்கிட்ட  கோல்ட்மெடல் வாங்குவேன்னு சொல்லிருக்க.. மாமா மானத்தை காப்பாத்துடி “ என அவளை கேலி செய்ய..

“ போ மாமா… அதெல்லாம் நான் வாங்குவேன் “ என ரோசமாக கூறியவள்.. “ ஆனா மாமா நாளையில் இருந்து உன் கிட்ட இப்படி இருந்து பேசவே டைம் இருக்காது, எக்ஸ்சாம், பிராட்டிகல், அது இதுன்னு வேலை இருந்துட்டே இருக்கும் மாமா, ஆனா எனக்கு  எப்பவும் இப்படி உன் கிட்ட இருக்கணும்னு போலவே இருக்கு “ என கூறி அவனின் தோளில் சாய…

அவளை மெதுவாக அணைத்த அவன் “ இன்னும் நாலு மாசம் தான் இனி.. அப்புறம் உன்னையே மாமா கூட ஆபிஸ் அழைச்சுட்டு போறேன் “ என கூற

அவனை நம்பாமல் அவள் பார்க்க “ உண்மைடி என்கூட அழைச்சுட்டு போறேன் “ என கூற…

“ அப்போ சரி ஒரு முத்தம் கொடுங்க “ என சிரிப்புடன் கூற அவளை முறைத்தவன் “ அங்கிட்டு போ… இப்போ முத்தம் கொடுத்தா சரி வராது.. நீ ஓடி போ “ என அவளிடம் கூறி மனுசனை சும்மா இருக்க விடுறாளா என குப்புற படுத்துக் கொள்ள…

“ நீங்க தரலென்னா என்ன நான் தாரேன் “ என கூறி குப்புற படுத்தவனை திருப்பி கன்னத்தில் நச்சென ஒரு இச் வைத்து நிமிர “ ஏய் ஜில்லு “ என வெற்றி அழைப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியில் ஓடினாள் இனி…

“ ஜஸ்ட் மிஸ்… பிரன்ஞ் கிஸ் “ என கூறி புன்னைகை முகத்துடன் மீண்டும் குப்புற படுத்துக் கொண்டான் வெற்றி….

மாலை ஆகவும் குழந்தையை தூக்கிக் கொண்டு தோட்டத்து பக்கம் சென்றாள்… கோவிலுக்கு சென்று வந்த பிறகு வெளியில் சென்ற சக்தி இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை…

அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே ஆருஷை தோளில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டே அங்கும் இங்கும் சுற்ற அவன் தூங்கவும் அவனை கொண்டு தொட்டிலில் படுக்க வைத்த இதழினி சக்திக்காக காத்திருந்தாள்…

அடுத்த கொஞ்ச நேரத்தில் சக்தி வர, அவளோ கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டு இருக்க, அவளின் பளீர் இடுப்பும், அவனை மயக்கிய அவளின் இடுப்பு மச்சமும் அவன் கண்ணுக்கு காட்சி தர, அவளிடம் பேச வந்ததையும் மறந்து அவளை அணைத்தான் அவன்…

இதழி அருகில் இருந்தாலே கையை, காலை வைத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான் சக்தி.. அதிலும் இப்பொழுது அவளின் மச்சத்தை பார்க்கவும் சுத்தம் எல்லாம் மறந்துப் போக, அவளிடம் பேச வந்ததும் மறந்துப் போக அவளை அணைக்க…

அவனைப் பார்த்து திரும்பியவள், அவனின் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளி விட, “ உன்கிட்ட பேசணும் இதழி “ என கூறி அணைக்க…

இத்தனை நாள் அமைதியாக இருந்த இதழினி இன்று சீறிவிட்டாள் “ ச்சீ… தள்ளுங்க “ என முகத்தை சுழித்த இதழி அவனை தள்ளிவிட..

அவளின் முகபாவனையும், அந்த “ ச்சீ “ என்ற வார்த்தையும்…, அவனை சிங்கமென கோபம் கொள்ள வைக்க அவளை முரட்டுத்தனமாக அணைத்தவன் அவளின் இதழில் தன் இதழை பதிக்க….

அவனை வலுகட்டாயமாக பிரித்தவள் “ உங்களுக்கு வெட்கமா இல்ல.. பிடிக்காத பொண்ணுகிட்ட இப்படி மிருகம் மாதிரி தான் பிகேவ் பண்ணுவீங்களா..? “ என கோபத்துடன் சீற…

வந்த கோபத்தை அடக்கியவன் “ இதுல என்ன மிருக குணம் பார்த்த… இது ஒரு கணவன், சாதரணமா மனைவி கிட்ட நடந்துக்கிற ஒரு சாதாரண விஷயம்… சிம்பாலிக்கா சொல்லுறதுன்னா “ கணவன், மனைவி ஒன்றுதல் “ என கண்ணடித்துக் கூற…

“ அதெல்லாம் எனக்கு தெரியாது, இதெல்லாம் எனக்கு பிடிக்கவும் செய்யாது “ என முகத்தை திருப்பிக் கொண்டு கூற…

அவளின் நிலை அவனுக்கு சிரிப்பை வரவழைக்க அவளைப் பார்த்து பெரும் குரலெடுத்து சிரித்தவன் உன்னை பார்த்தா கலித்தொகையில் வருமே ஒரு பாட்டு அது தான் உடனே நியாபகத்துக்கு வருது….

அந்த தலைவியும் இப்படி தான் தலைவனுடன் இணைய மறுப்பா… தலைவனின் நிலையை அழகா பாடலா சொல்லிருப்பாங்க…

“ வேங்கையின் முற்றிய மலரின் நன்மையை கொண்ட சுணங்குகள் அழகு செய்துக் கொண்டிருக்கும் பூண்கள் கொண்ட நின் மார்பினை கொண்டு பொய்யாக வேனும் என்னை தழுவித்தான் சென்றாலென்ன..? “ என கூறி அவளை நோக்கி

“ பெண்ணே..!! இந்த தலைவனின் நிலை அறிந்து பொய்யாக கொஞ்சம் தழுவினால் என்னவோ..? “ என பாடலின் முதல் இரண்டு வரிகளை கூறி அவளிடம் நாடக பாணியில் உரைக்க… மனமோ “ டேய் மகனே அடுத்த வரி சொன்ன உனக்கு சங்கு தான் “ என கூறவும் அந்த வரிகளோடு நிறுத்திக் கொண்டான் சக்தி…

( வேங்கையின் முற்றிய மலரின் நன்மையை கொண்ட சுணங்குகள் அழகு செய்துக் கொண்டிருக்கும் பூண்கள் கொண்ட நின் மார்பினை கொண்டு பொய்யாக வேனும் என்னை தழுவித்தான் சென்றாலென்ன..? முத்தின் அழகு தெரியும் முறுவலாளே..!! உன் பசலை நோய் எல்லாம் அப்படியே என்னில் ஒற்றி எடுத்து எறிந்து விடலாமே..? )

அவனை முறைத்த அவள் “ உங்களுக்காக பொய்யா உங்க கூட என்னை வாழ சொல்லுறீங்க “ அப்படி தானே என நிறுத்தி நிதானமாக கேட்க..

“ நான் என்ன சொல்லுறேன் இதழி.. நீ என்ன பேசுற… என்கூட உன்னை பொய்யா வாழ அழைக்கலை…. என் குழந்தைக்கு தாயாய், எனக்கு மனைவியாய் இருன்னு தான் சொல்லுறேன்.. இதுல எங்கிருந்து பொய்யான வாழ்க்கை வருது இதழி “ என அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கேட்டான் சக்தி… அப்படியாவது அவள் மனதில் இருப்பது வெளி வரட்டும் என்ற எண்ணத்துடன்…

“ இதுல எல்லாமே பொய்யான வாழ்க்கை தான்… எனக்காக நான் ஒரு நாள் கூட வாழவில்லை… என்னோட ஆசை எல்லாம் எல்லாம் அடுத்தவங்களுக்காக நான் இழந்து நிற்குறேன்….

மணிபாட்டி இருக்கும் வரை எந்த கவலையும் இல்லாமல் இருந்தேன்.. அவங்க போனதும் கண்ணுபாட்டிகாக இந்த வீட்டுக்கு மீண்டும் வந்தேன், அப்புறம் உங்க அம்மா பேசுறதை எல்லாம் கேட்டும் போக வழி இல்லாமல் இங்க இருந்தேன், அப்புறம் கண்ணுபாட்டி எதிர் பாராத விதமா, அது ஒரு விபத்து என்று தான் நான் சொல்லுவேன்… அப்படி தான் என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சாங்க…

உங்களுக்கு என்னை பிடிக்குமோ, பிடிக்காதோ எனக்கு தெரியாது… அன்னைக்கு ஏதோ ஒரு விதத்தில் என்னை எடுத்துக்கிடீங்க, நான் பல வருசமா உங்களை என் நெஞ்சுல சுமந்துகிட்டு இருந்தேன்.. நீங்க அன்னைக்கு உங்க பாட்டியை நினைச்சு வருந்துவது பிடிக்காமல் உங்க முன்னாடி என்னையே இழந்து நின்னேன்….

ஆனா அது தப்பு என்பது போலவே நீங்க அடுத்து வந்த நாளில் நடந்துக்கிட்டீங்க… அதிலும் அத்தை பேசுனது என்னால் தாங்க முடியலை… அப்போ கூட நான் அதை எப்பொழுதும் இது சொல்லுவது தான் என்று பேசாமல் தான் இருந்தேன்..

ஆனா அன்னிக்கு நீங்க அத்தை கிட்ட சொன்னதை என்னால மறக்க முடியல, நீங்களே சொன்னீங்க பாட்டிக்காக தான் என்னை கல்யாணம் பண்ணுனதா..?  அப்படி இஷ்டம் இல்லாத இடத்தில் என்னால் இருக்க முடியல.. யாருக்கும் பாரமாவும் நான் இருக்க விரும்பலை அது தான் வீட்டை விட்டு போனேன்..

அப்போ கூட உங்க கிட்ட சொன்னாலும் நீங்க ஏதாவது சொல்லி இங்கையே இருக்க வச்சுருபீங்க…. அன்னைக்கு ஒருநாள் பிறகு நீங்க என் முகம் பார்க்காமல் சுற்றவும், இதுக்கு மேலையும் உங்களையும் நான் வருத்த விரும்பலை அது தான் கிளம்பினேன்…

ஆனாலும் அடுத்து வந்த நாட்களில் நீங்க என்னை தேடி வருவீங்க.. உங்களுக்கு என்னை பிடிக்கும், என்னை எப்படியும் தேடி வருவீங்கன்னு அப்படி நம்பி இருந்தேன், ஆனால் ஒவ்வொரு நாளும் எனக்கு உங்க மனசுல நான் இல்லை என்பதை புரியவச்சுடீங்க…

அந்த நேரம் தான் நான் கர்ப்பம் என்று தெரியவும் அத்தனை சந்தோசப்பட்டேன் “ என் குட்டிமாமா வாரிசுன்னு. என காதல் பரிசுன்னு அப்படி சந்தோசமா இருந்தேன் அப்போ கூட நீங்க வருவீங்க, என்னை தேடுவீங்கன்னு எதிர் பார்த்தேன் ஆனால் நீங்க வரவே இல்லை…

வெற்றி மாமா தான் வந்தாங்க, அதுக்கு பிறகும் உங்களை எதிர் பார்த்தேன். நீங்க கடைசி வரை வரவே இல்லை… இப்போ குழந்தைக்காக என்னை இங்கு அழைச்சுட்டு வந்திருக்கீங்க…

இவன் மட்டும் இல்லன்னா என்னை நீங்க தேடி வந்திருக்கவேமாட்டீங்க… ஆனா எனக்கு ஒரு மனசு உண்டு அதிலும் உங்க மேல அளவுக்கதிகமான காதல் உண்டுன்னு உங்களுக்கு தெரியவே இல்லை…

ஒவ்வொருதருக்காக வாழ்ந்து குழந்தைக்காக வந்து, இப்போ உங்களுக்காக உங்க கூட பொய்யா வாழ அழைக்குறீங்க..?  “ என மனதில் உள்ளதை கொட்டி கண்ணீர் விட  

அவளின் கண்ணீர் அவனை வருந்த வைக்க “ இதற்கு தான் இத்தனை நாள் எதை பற்றியும் பேசாமல் இருந்தேன்… இப்போ நான் எது சொன்னாலும் அவள் காதில் ஏறவே செய்யாது “ என எண்ணிக் கொண்டிருந்த தருணம் அவளின் குரல் மீண்டும் அவனை கலைப்பதாய்…

“ மத்தவங்களுக்காக வாழுற வாழ்க்கை எனக்கு வேண்டாம்.. எனக்கே எனக்காக எப்போ குட்டிமாமா நீ வருவ..? “ என அவனைப் பார்த்து கேட்க

ஒரு வெப்ப மூச்சு அவனிடம் இருந்து வெளிவர, ஆனாலும் அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்ய அவளிடம் உண்மையை கூற எண்ணி, அவளை நோக்கி “ எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இதழி.. பாட்டிக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணுனேன்…” என கூறி நிறுத்த..

“ வேண்டாம் மாமா…. காதல், நேசம் எல்லாம் மனசுல இருந்து வரணும், பாட்டிக்காக, அம்மாவுக்காக வர காதல் எல்லாம் எனக்கு வேண்டாம்…. அதே போல உங்க ஆசைக்காக மிருகமாகவும் நான் உங்க கூட வாழ விரும்பலை… மனசால இணைத்து வாழ தான் நான் விரும்புகிறேன்… மரகட்டையா என்னால் வாழ முடியாது “ என வார்த்தைகளை கோபமாகவும், வருத்தமாகவும் அவள் சிதறவிட… இளகிய மனது மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ள..

“ அப்போ என் கூட வாழுற வாழ்க்கை உனக்கு மிருகமா இருக்குமா…? “ என கேட்டு கோபத்துடன் பெரிய பெரிய மூச்சுகளை இழுத்துவிட்டவன்…

“ என்னை சொல்லணும்…!! உனக்காக, என் அம்மாவுக்காக எல்லாம் ஒவ்வொன்னா பார்த்து செய்தவன் நான்… அதை கூட புரியாமல்… என் காதலை கொஞ்சமும் மதிக்காமல் என் கூட வாழ்ந்த ஒரு நாளில் என்னை அவமானபடுத்தி சென்றவள் நீ..!! அதிலும் என் குழந்தை பிறப்பையே என்கிட்டே இருந்து மறைத்தவள் நீ..!! உனக்கு மட்டும் மனசு இல்லை இதழி, எனக்கு உண்டு…!! அந்த மனசுல அளவுக்கதிகமான காதலும் உண்டு…!! அதே மனசுல என் அம்மா மேல பாசமும் உண்டு…!! எது செய்தாலும் ரெண்டு யாரையும் பாதிக்க கூடாதுன்னு நினைத்து செய்தவனுக்கு பரிசு என் குழந்தையின் வரவை என்கிட்ட இருந்து மறைத்தது…!! வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு..!! “ என விரக்தியாக சிரித்தவன் மேலும் தொடர்ந்தான்…

உன்னை அப்படி பாத்துக்கணும்ன்னு நினைச்சேன்…. என் அம்மாவுக்கு உனக்கு பிடிக்காது… எந்த காலத்திலும் உனக்கும் அவங்களுக்கும் எதுவும் வராம பாத்துக்கணும்னு தான் என் மனசுல உன் மேல இருந்து ஆசையை கூட மறைச்சேன்….

ஆனாலும் பல முறை உன் மேல் உள்ள காதலை உன்கிட்ட உணர்த்திருக்கேன்… அன்னைக்கே கல்யாணம் முடிந்த உடனே இதை எல்லாம் சொல்லிருக்கலாமே இதழினி…

என்கூட வாழ்றது உனக்கு அத்தனை கஷ்டமா இருக்கு… மனசால இணைந்து வாழணும்னு சொல்லுற நீ அன்னைக்கு என் கூட வாழ்ந்த அந்த ஒரு நாள் வாழ்கை உன் மனசால இணைந்து தானே இருந்த “ அப்போ எதுக்குடி என்னை விட்டு போன.., என்னை சாகடிக்கவா..? பெருசா மனசுல நினைத்தேன்னு சொல்லுறியே அது உண்மையா இருந்தா… அந்த காதல் என்னை விட்டு உன்னை போக வைத்திருக்காது… எனக்கு உன் மேல் காதல், நேசம் இல்லை என்று தானே சொல்லுற.. சரி எனக்கு இல்லை… நான் ஒரு ஜடம், மிருகம் என்றே வச்சுக்க.. உன்கிட்ட இருந்த காதலும், நேசமும் எங்க போச்சு..

எல்லாம் வேஷம், காதலாம் காதல்… அந்த மண்ணும் வேணாம் எதுவும் வேணாம்னு இருந்த என்னை ஏண்டி அப்படி வந்து டார்ச்சர் பண்ணுன “ குட்டிமாமா உன்னை தான் கட்டிப்பேன்னு “ சொல்லியே சுத்தி சுத்தி வந்து… இப்போ என் கூட வாழுறது உனக்கு மரக்கட்டை வாழ்க்கையா…

“ ம்ம் “ என முகத்தை அழுந்த துடைத்த சக்தி.. பெரு மூச்சை எடுத்து விட்டவன்  “ இனி ஒரு நொடி கூட இந்த மிருகம் கூட நீ வாழ வேண்டாம்… “

“ என் குழந்தையை இங்க விட்டுட்டு உன் ஆசைபடி எது வேணா செய்… உனக்காக வாழ்… ஆனாலும் ஒன்னு சொல்லுறேன் குடும்பத்துக்காக வாழுறது தான் வாழ்க்கைடி ”

இதுக்கு மேலையும் உன்கிட்ட நின்னு பேசுனா அதுக்காக தான் பேசுறதா நினைத்தாலும் நினைப்ப… எப்படி இப்படி மாறுன இதழி.. என் இதழி இப்படி இருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை.. மனசு வலிக்குதுடி “ என நெஞ்சை மெதுவாக நீவி விட்டுக் கொண்டான் சக்தி…

அவனுக்குள் தாங்க முடியாத வலியும், அடக்க முடியாத கோபமும் அவனை தாக்க “ சரி என் கூட வாழவேண்டாம்… போ.. என்னை விட்டு போ.. கெட் அவுட் “ என உயர்ந்த குரலில் கர்ச்சிக்க..

தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆருஷ், இவனின் காட்டு கத்தலில் வீரிட்டு அழ, அப்பொழுது தான் தன் ,முழு கோபம் புரிய., தலையை கோதிய அவன், அதிர்ந்து நின்ற இதழியையும் பொருட் படுத்தாமல் கதவை அறைந்து சாத்தி வெளியில் சென்றான்….

வேர் பயங்கர கோபத்தில் இருக்கிறது…..

 

error: Content is protected !!