வேர் – 22
அவனின் ஷர்ட்டை பற்றி இழுத்து ” யோவ் உனக்கு என்னதான்யா பிரச்னை..? ” என அதிரடியாய் பழைய இதழியாய் வீறு கொண்டு எழுந்து கேட்க,
அவளின் இந்த அதிரடியில் அவளை நோக்கி திரும்பிய அவன் கண்கள்மின்ன அவளை பார்த்தான்… மனமோ “ இப்பொழுதே காரணத்தை கூற வேண்டுமா.? “ என கேட்டுக்கொண்டிருந்தது….
அதற்குள் கையில் இருந்த ஆருஷ் அழ ஆரம்பிக்க “ டேய்… உன் அப்பாகிட்ட பேச நினைக்குற நேரம் எல்லாம் நீ அழுது ஆர்பாட்டம் பண்ணு.. அப்புறம் கேட்ப ஒரு நாள் ம்மா எனக்கு எதுக்கு தங்கச்சி பாப்பா இல்லன்னு கேட்ப… அப்போ கவனிச்சுகிறேண்டா உன்னை “ என பல்லைக் கடித்துக் கொண்டே அவனை தூக்கி தோளில் போட்டு தட்டி கொடுத்துக் கொண்டே “ அப்புறம் உங்களை கவனிச்சுகிறேன் “ என்னும் விதமாக சக்தியை முறைத்து கீழே சென்றாள்….
அவள் செல்லவும் “ டேய் மகனே… அப்பாவை இப்படி ஜஸ்ட்மிஸ்ல எப்பவும் காப்பாத்துடா “ என சொல்லி கொண்டு வெளியில் செல்ல எத்தனிக்கவும் அவன் போன் அழைக்கவே பால்கனி நோக்கி சென்றான் அவன்,
வெற்றி அழைப்பதைக் கண்டு “ சொல்லு வெற்றி… உன் பொண்டாட்டி வெளிய விட்டுட்டாளா.? “ என சம்மந்தமே இல்லாமல் சக்தி கேட்க,
“ என்ன அண்ணா அங்கிட்டு அடி பலமா… சம்மந்தமே இல்லாம கேள்வி கேட்குற “ என வெற்றி வார,
ஆர்ப்பாட்டமாக சிரித்த சக்தி “ உனக்கு இதழி பற்றி தெரிஞ்சும் இப்படி கேட்குறியேடா “ என கேட்டவன்.. “ சரி சொல்லு எதுக்கு கால் பண்ணுன “ என,
“ எதுக்கு பண்ணுனேன் என்று உனக்கு தெரியாதா.? “ என கேள்வியாக கேட்க,
சிறிய யோசனைக்கு பின் “ இதழி பிறந்த நாள் பத்தி பேசுறியாடா..? “ என கேட்க,
“ ஆமாண்ணா.. அடுத்த வாரம் ரெண்டு பேருக்கும் பிறந்த நாள் வருது… என்ன பண்ணலாம் “ என கேட்க,
“ டேய். நீ உன் பொண்டாடிக்கு செய்ய.. என்கிட்ட எதுக்குடா கேட்குற “ என சிறு கடுப்புடன் கேட்க,
“ இல்லண்ணா… வர வர நீ ரொம்ப ரொமாண்டிக்கா மாறிட்ட, அது தான் ஏதாவது ஒரு ஐடியா சொல்லேன் “ என இழுவையாக கேட்க,
“ சாரிடா வெற்றி… என்கிட்ட கேட்குறியா.. அட போடா… நீ உன் இனிக்கு பிடிகுறதை செய்டா அதுவே அவளுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் “ என கூற,
“ சரிண்ணா… நான் இன்னும் ரெண்டு நாளில் வந்து விடுவேன்.. அப்புறம் பிளான் பண்ணலாம் “ என கூறி அழைப்பை நிறுத்தினான் வெற்றி…
வெற்றியிடம் பேசி முடித்து வர, அப்பொழுது தான் “ இதழியிடம் ஊட்டி விட கூறினோம் “ என்ற நியாபகம் வர,
“ ஏதாவது செய்து இன்னைக்கு இதழி கையால் சாப்பிடணும் என்ன செய்யலாம்..? “ என யோசிக்க,
அவன் மனதில் பளிச்சென அந்த யோசனை வர, ஜன்னல் வழியாக வெளியே பார்க்க இதழி ஆருஷிடம் ஏதோ பேசிக் கொண்டே சாப்பாடு ஊட்டுவதைக் கண்டவன்,
“ ம்மா “ என அழைத்துக் கொண்டே நேராக லக்ஷ்மி அறைக்கு சென்றான்…
“ ஏண்டா இப்படி ஏலம் போட்டுட்டே வார.., வா வந்து சாப்பிடு… சூளையில் ஏதோ ஒரு வேலை இருக்குன்னு அப்பா சொன்னாங்க சீக்கிரம் ரெண்டு பேரும் சாப்ட்டு கிளம்புங்க “ என கூறிக் கொண்டே கங்கா எடுத்து வந்த சாப்பாட்டை டைனிங்டேபிளில் வைக்க..
“ ம்மா… இன்னைக்கு சண்டே நான் எங்கையும் போகல.. நீங்க இப்போ வாங்க “ என அவரை கையேடு அவர் அறைக்கு அழைத்து வந்தவன் “ ம்மா.. உன் மருமக எனக்கு ஊட்டி விடமாட்டாளாம் “ என சிறு குழந்தையாக அவரிடம் புகார் வாசிக்க…
அவனை பார்த்து முழித்த அவர் “ டேய் வெற்றி தான இப்படி கிறுக்கு வேலை பார்ப்பான்.. என்னையில் இருந்து நீயும் இப்படி மாறுன.. அதெல்லாம் எனக்கு தெரியாதுடா..? நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு ஆளைவிடு “ என நகர,
“ ம்மா.. அதெல்லாம் எனக்கு தெரியாது, நீ தான் ஏதாவது செய்யணும் “ என,
“ கடவுளே…!!! ஏன் இப்படி என்னை சோதிக்குற “ என மானசீகமா தலையில் அடித்த அவர் “ ஏண்டா “ என்னும் விதமாக அவனைப் பார்க்க,
“ ம்மா.. பிளீஸ்ம்மா… உன் பையன் காதலுக்கு ஏதாவது பண்ணேன் “ என அவரின் நாடியை பிடித்து கெஞ்ச,
“ போ ஏதாவது பிளான் பண்ணுறேன் “ என கூற, நேராக தன் அறைக்கு சென்றான் சக்தி…
அவன் செல்லவும் தன் அறையை அங்கும், இங்கும் அளந்தவர் யோசனை வராமல் களைப்பாக கட்டிலில் அமர்ந்து விட்டார்…
“ வேற ஏதாவது ஹெல்ப் கூட கேட்டிருக்கலாம் இவன்.. ஆனா இந்த காதலுக்கு ஹெல்ப் நம்மளுக்கு வராதே.? அப்படியும் வந்தாலும் பிரிக்குற மாதிரி தானே வரும்… அட..!! ஆண்டவா இப்படி வம்புல மாட்டி விட்டுனானே இவன் “ என கட்டிலில் அமர்ந்தவர் தீவிரமாக விட்டதை பார்த்து, நாடியில் கையை வைப்பதும், எடுப்பதுமாக இருக்க,
அந்த நேரம் அறைக்கு வந்த நாராயணன் , லச்சுவை பார்த்துக் கொண்டே “ லச்சு சாப்ட வராம இங்க என்ன பண்ணுற “ என கேட்டுக் கொண்டே நாராயணன் அவர் அருகில் அமர,
அவரை பார்த்து தன் யோசனையை விட்ட லட்சுமி “ ஒண்ணும் இல்லங்க வாங்க சாப்பிடலாம் “ என அழைத்து அவருக்கு உணவு பரிமாற,
ஆருஷ் தூங்கவே அவனை தூக்கிக் கொண்டு வீட்டின் உள் வந்தாள் இதழினி, அவளை கண்ட லக்ஷ்மி “ இதழி, சக்தி சாப்பிட வரவே இல்ல, ரூம்ல தூங்கிட்டு இருக்கான் போல ” என கூறி, அவனுக்காக உணவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அவளிடம் கொடுத்தவர் ” அவனை எழுப்பி சாப்பிட வை ” என கூற,
“ நான் மாமாவை வர சொல்லுறேன் அத்தை “ என கூற,
அவளை தடுத்த அவர் “ எப்போ எழும்புறான்னு தெரியல.. நீ அவனுக்கு எழுப்பி கொடு “ என அவளிடம் மீண்டும் கூற,
அவரை யோசனையாக பார்த்த அவள் “ சரி “ என தலையை ஆட்டிக் கொண்டு தோளில் தூங்கிய ஆருஷை பார்க்க,
“ அவனை இங்க தா “ அவளிடம் அவனை வாங்கி ஹாலில் அவனுகென்று மாட்டி இருந்த தொட்டிலில் படுக்க வைத்தார்..
சக்திக்கு சாப்பாட்டை எடுத்து கொண்டு யோசனையாக தங்கள் அறையை நோக்கி சென்றாள், “ இத்தனை நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தாங்க மாமா “ என மனதில் ஓட அறையை திறந்துக் கொண்டு உள் நுழைந்தாள்….
தங்கள் அறைக்குள் நுழைந்தவள் சக்தியை பார்க்க, அவனோ கட்டிலில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருக்க, “ உண்மையாவே குட்டிமாமா தூங்குறாங்க போல மாடி வேலை ஆரம்பித்ததுல இருந்து ரொம்ப வேலை பாக்குறாங்க, அப்படி என்ன தான் ரகசியம் அங்க இருக்கோ தெரியல “ என முணுமுணுத்துக் கொண்டே அவன் அருகில் சென்று “ குட்டிமாமா “ என அழைக்க,
அடுத்த நிமிடம் என்ன நடந்தது என்று அறியும் முன்னே அவள் அவன் கையணைப்பில் இருந்தாள்,
“ லிப்ஸ், ஊட்டி விட சொன்னா விடமாட்டியா.? “ என சிறு சீண்டலுடன் கேட்க,
அவனின் சீண்டலில் அதிர்ந்து விழித்த அவள், அவனை முறைப்புடன் பார்த்து, அவனை தள்ளி விட்டுக் கொண்டே “ பிராடு “ என முறைத்து எழ,
“ இதுல என்னடி பிராடு தனம் நீ கண்டுட்ட.., புருஷன் ஆசையா கேட்டேன் நீ தரல அது தான் இப்படி “ என கண்சிமிட்ட,
அவனை பயங்கரமாக அவள் முறைக்க “ பிளீஸ் இதழி, செமையா பசிக்கு “ என வயிற்றை பிடித்துக் கொண்டு கூற,
அதற்கு மேல் அவனிடம் கோபத்தை இழுத்து பிடிக்காத இதழி “ சரி வாங்க “ என கூறி, தட்டை எடுத்து அவன் அருகில் அமர்ந்தாள்.
மெதுவாக அவனுக்கு ஊட்டிவிட, அவனோ அவளையே பார்த்திருந்தான்… அவளை இப்படி சந்தோசமாக பார்க்க அத்தனை சந்தோசமாக இருந்தது…
“ என்ன அப்படி பாக்குறீங்க..” என மெதுவாக இதழி கேட்க..
“ நீ ரொம்ப மாறிட்ட இதழி… அன்னைக்கு நான் சொன்னேன் நினைவிருக்கா. உன்னை பழைய படி மாற்றுவேன் என்று… அதே போல் நீயும் மாறிட்ட “ என அவளைப் பார்த்துக் கொண்டே ரசனையாக கேட்க..
“ அப்படியா.. நான் மாறவே இல்லையே… அப்படியே தான் இருக்கேன் “ என குறும்புடன் கூற,
“ அப்படியா.. புரூப் பண்ணவா “ என ரகசியமாக கேட்டு அவளின் கையை பிடித்து ஒவ்வொரு விரலிலும் முத்தம் வைத்துக் கொண்டே அவளின் முகத்தை பார்க்க,
அவனின் ஒவ்வொரு செயலிலும் அவளின் முகம் பல வழிகளில் வெட்கம் கொள்ள,
அவளை அருகில் இழுத்தவன் “ உன்னோட இந்த வெட்கம் மட்டும் போதும் இதழி, நீ எந்த அளவுக்கு மாறி இருக்க என்று அறிய “ என மெதுவாக அவள் காதில் கூற,
“ ஆஹா.. கண்டு பிடிசுட்டானே “ என எண்ணிய அவள் அவனை பார்த்து “ க்கும் “ இதழை சுளித்துக் கொண்டு “ மாமா மேல் அறையில் என்ன பண்ணுறீங்க “ என மெதுவாக கேட்க,
அவளை பார்த்து சிரித்த அவன் “ அது சஸ்பென்ஸ் “ என கண்சிமிட்ட,
“ ரொம்ப தான் “ என இதழை சுழிக்க, அவனின் கண்களோ ஒரு நொடிக்கும் அதிகமாக அவளின் இதழில் பதிந்து மீண்டது…
அவள் அவனுக்கு ஊட்ட, அவன் அவளுக்கு ஊட்ட என்று அங்கு ஒரு அழகான புரிதல் மீண்டும் எழுந்தது…
அடுத்த இரண்டு நாளில் வெற்றியும், இனியாளும் வர, அடுத்த நாளே வீட்டில் கூறிக் கொண்டு வெற்றி – இனியாளை ஆபிஸ் அழைத்து சென்றான்…
சக்தி எப்பொழுதும் போல் ஆபிஸ் சென்றான்… இப்பொழுதெல்லாம் சக்தி மனதில் மெல்லிய பனிசாரலாய் அவளின் நினைவுகள்…!!
தன் மேல் கோபமாக இருந்தவளோ இப்பொழுதோ காதலால் கரைகிறாள்..!!
நாளை இனியாளுக்கும், இதழிக்கும் பிறந்தநாள் வெற்றி வீட்டையே ரெண்டுபண்ணிக் கொண்டிருந்தான்…
சக்தியோ அன்று முழுவதும் ஆபிசே கதி என்று இருந்தான்… இதழியோ அன்று முழுவதும் அவனுக்காக காத்திருந்தாள்…
ஆருஷை வைத்துக் கொண்டு அவனுக்காக காத்திருக்க சக்தி வரவே இல்லை… வெற்றியிடம் “ குட்டிமாமா எங்க “ என கேட்க,
“ அண்ணன் இன்னைக்கு முன்னாடியே கிளம்பிட்டானே இதழி “ என அவன் கூறி சென்றான்…
கோபமான அவள் அவனுக்கு அழைக்க, அவன் எடுக்கவே இல்லை, கோபத்துடன் அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்..
11 மணிக்கு போல் வீட்டுக்கு வந்த சக்தி, மாடிக்கு சென்று செய்ய வேண்டியதை செய்து, அறைக்கு வர மணி பணிரண்டை காட்டியது…
அப்படியே களைப்பாக கட்டிலில் படுக்க, அந்த நேரம் அலாரம் அடிக்க பதறி எழுந்தாள் இதழி, அவனோ அப்படியே அசையாமல் படுத்திருந்தான்…
எழுந்தவள் அருகில் பார்க்க, சக்தி தூங்கிக் கொண்டிருப்பது தெரிய, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள், மீண்டும் அலாரம் அடிக்க அவன் எழும்புவான் என அவள் ஆவலாக அவனைப் பார்த்தாள்,
” தன் பிறந்த நாள் அவனுக்கு நினைவிருக்கிறதா ” என ஆனால் அவனோ அசையவே இல்லை…
ஒரு நாளும் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடியதே இல்லை.. அவர்களின் ஒரு வயது பிறந்த நாளின் போது தான் அவர்களில் பெற்றோர் இந்த உலகை விட்டு சென்று விட்டனர் என மணிபாட்டியின் வாயிலாக கேட்டதில் இருந்து அவர்கள் பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை,
ஆனால் இந்த இரண்டு நாளாக வெற்றி இனியாள் பிறந்த நாளை மனதில் கொண்டு வந்து அவளுக்காக செய்யவும், அவளின் மனதும் சிறு பிள்ளையாக அவளின் பிறந்தநாளை கொண்டாட ஆசைக் கொண்டது.
சக்தி அவளுக்கு பார்த்து, பார்த்து இப்பொழுது செய்வதில் அவளும் மனதளவில் சிறு குழந்தையாகவே மாறிவிட்டாள்..
இன்றும் அதே ஆசையுடன் “ ஒரு வாழ்த்தாவது கூறுவான “ என ஆவலாக அவனை பார்க்க,
அவனோ “ இப்பொழுது எனக்கு தூக்கம் தான் பெரிது “ என்பதாக படுத்திருந்தான்…
சிறிது நேரம் அவன் முகத்தையே பார்திருந்தவள், அப்படியே படுத்துக் கொண்டாள்… மனமோ மீண்டும் பழையதை எண்ணி தவிக்க ஆரம்பித்தது “ குட்டிமாமாவுக்கு என் பிறந்த நாள் நினைவிலையே இல்லையா “ என எண்ணி அப்படியே தூக்கத்தை தொடர்ந்தாள்…
##########################
12 மணியாகவே இனியாள் அருகில் சென்ற வெற்றி “ ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி “ என அவள் காதில் கிசுகிசுக்க,
மெதுவாக கண்களை திறந்த அவள் “ தேங்க் யூ மாமா “ என கூறி அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து மீண்டும் தூக்கத்தை தொடர,
“ ஏய் எழும்புடி “ என அவளை உலுக்கி எழுப்பிய அவன் அவளை தூக்கி நிறுத்த,
“ மாமா “ என செல்ல சிணுங்கலுடன் எழுந்தவள் தங்கள் அறையை பார்க்க,
அறை எங்கும் காண்டில் நிரம்பி, நடுவில் அவளுக்காக கேக் வைத்திருந்தான் வெற்றி,
இத்தனை வருடத்தில் முதல் முறையாக அவள் பிறந்த நாள், காலேஜ் படிக்கும் பொழுது வெற்றி சிறு வாழ்த்துடன் முடித்துக் கொள்வான்…
இன்றோ அவளுக்காக எல்லா ஏற்பாடும், இரவு தூங்கும் பொழுது கூட அவர்கள் அறையில் ஒரு அலங்காரமும் இல்லை.. சமையல், கோவில் பூஜை, கருணை இல்லத்தில் சாப்பாடு என்று இருவரும் ஏற்பாடு செய்திருந்ததை அறிந்தாள்… ஆனால் இதை அவள் எதிர் பார்க்கவில்லை…
அதிலும் தனி அறையில் இப்படி ஒன்றை எதிர் பார்க்கவில்லை… ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவள் அவனின் இதழில் இதழ் பதிக்க,
அவளை அணைத்துக் கொண்டவன் “ என்னடி… டர்டி கிஸ் தார.. பல்லு கூட விளக்கலை “ என அவளை வார,
அவனை விட்டு பிரிந்தவள் அவனை முறைக்க “ சும்மா ஜில்லு, இதுகெல்லாம் முறைக்கலாமா..? வாங்க.. கேக் கட் பண்ணலாம் “ என அவளின் கையை பிடித்து கேக் அருகில் சென்றவன்,
அவளிடம் கத்தியை கொடுத்து கட்பண்ண கூறியவன், அவள் அருகில் நிற்க, அவளோ தன் கையில் இருந்த கத்தியை அவன் கையில் கொடுத்து அவன் கையுடன் தன் கையை பிணைத்துக் கொண்டாள்…
அந்த நிமிடம் வெற்றி அடைந்த சந்தோசத்தை வார்த்தையால் கூறமுடியாது… தன்னுள் நேசத்தை விதைத்து, மென்மையாக காதல் செய்ய வைத்தவளை, தன்னை உயிராய் நேசிப்பவளை மென்மையாக அணைத்து,
உச்சியில் முத்தம் ஒன்று வைத்தவன், அவள் உச்சியில் தன்கன்னத்தை பதித்து அவளுடன் சேர்த்து, அவளின் சந்தோசத்தை பங்குப் போட்டுக் கொண்டான்… அடுத்த வந்த பல மணி நேரம் அவர்களுகாய், அவர்கள் காதலுக்கான நேரமாக அமைய இருவரும் அந்த சந்தோசத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தனர்…
##########################
இதழி மீண்டும் படுக்கவும் மெதுவாக எழுந்த சக்தி “ சாரிடி லிப்ஸ்.. இன்னும் கொஞ்ச நேரம் “ என அவளிடம் மெதுவாக மன்னிப்பை வேண்டியவன், அவளின் கன்னத்தில் தன் இதழ்களை பதித்து விலகியவன்,
அவளுகென்று வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்து அதில் “ ஸ்வீட் லிப்ஸ் “ என எழுதி தான் படுத்திருந்த இடத்தில் வைத்தான்…,
அடுத்ததாக அவளுகென்று தேடி தேடி வாங்கிய நகையை எடுத்து அதில் “ என் உயிர் நீ “ என எழுதினான்… அதில் அப்படி எழுத காரணம் அவன் அதை வைக்கும் இடம் தான்..
அவள் எழுந்ததும், முதலில் ஆருஷை நோக்கி தான் செல்வாள் என்று அவனின் தொட்டிலில் வைத்தான்… “ இருவருமே என் உயிர் “ என்ற செய்தியை அது கூறியது…
அறையை சுற்றி பார்த்தவன் அடுத்ததாக இதழி செல்லும் இடமான கண்ணாடி முன் சென்றவன் ஸ்கெட்ச் எடுத்து “ ஸ்மைல் பிளீஸ் “ என எழுதி அதில் ஒரு ஸ்மைலியை வரைந்து வைத்தான்..
அவனுக்கு நன்றாகவே தெரியும், அவளிடம் நேரில் வாழ்த்துக் கூறாமல் இப்படி செய்தால் கண்டிப்பாக கோபம் வரும் என்று அறிந்து தான் அந்த ஸ்மைலியை வரைந்து வைத்தான்… அதை பார்த்தாவது கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணி அப்படி செய்தான்….
அப்படியே அவளுக்கு மொபைலில் ஒரு வாழ்த்தை அனுப்பியவன் வெளியில் சென்றான்… கங்காவிடம் காலை, மதியம் என்று சமையலைக் கூறி வெளியில் சென்றவன் அதன் பிறகு வீட்டுக்கு வரவே இல்ல… தங்கள் அறை கதவு மெலிதாக தட்டபட, எழுந்த இதழி “ யாரு “ என கேட்டு சக்தி பக்கம் திரும்ப அவன் படுத்திருந்த இடத்தில் கவர் இருக்க, அதை பார்த்துக் கொண்டே சென்றவள்,
மெதுவாக கதவை திறக்க அங்கு இனியாள் நின்றிருந்தாள் “ ஹாப்பி பர்த்டே ஸ்வீட்டி “ என வாழ்த்தியவள் அவள் அருகில் வந்து மெதுவாக அணைத்து விலகியவளிடம், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு “ மீ டூ “ என கூற,
“ என்னாச்சுடி உன் குரலே சரியில்லையே..? ஏன் இன்னும் கிளம்பாம இருக்க.. கோவிலுக்கு போகணுமாம்.. சக்தி மாமா உன்கிட்ட சொல்லலியா… அவங்க கிளம்பி இருக்காங்க “ என யோசனையாக அவளை பார்த்து கூற,
“ ஒன்னும் இல்லக்கா.. இப்போ தான் எழுந்தேன். அது தான் “ என மெதுவாக முணுமுணுக்க..
அவளை யோசனையாக பார்த்த அவள் “ சரி சீக்கிரம் கிளம்பி வா “ என கூறி வெளியில் சென்றாள்…
அவள் செல்லவும் நேராக கட்டில் அருகில் செல்ல, அங்கிருந்த பார்சலை எடுத்துப் பார்க்க சிகப்பு நிற டிசைனர் புடவை அதில் இருக்க, எடுத்து பார்த்தவள் அசந்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும்… மனதில் சக்தியை கொஞ்சிக் கொண்டவளே வெளியில் முறைத்துக் கொண்டாள்,
அந்த நேரம் ஆருஷ் சிணுங்கும் குரல் கேட்க, அவன் அருகில் செல்ல அங்கிருந்த பெட்டியை பார்த்து மீண்டும் முகத்தில் புன்னகை தோன்ற “ குட்டிமாமா “ என அவனை கடுப்பாக அழைத்தவள்
ஆருஷ் தொட்டிலை மெதுவாக ஆட்ட, அவனோ மீண்டும் தூக்கத்தை தொடர, கண்ணாடி முன் செல்ல “ ஸ்மைல் பிளீஸ் “ என்ற வாக்கியத்தை பார்த்து சிரிப்பு வர, ஆனாலும் அந்த சிரிப்பை முகத்தில் கொண்டு வரமல் அவன் எழுதி இருந்ததுக்கு கீழே “ மீ ஆங்க்ரி “ என எழுதி அதன் கீழ் ஒரு ஆங்க்ரி ஸ்மைல் வரைந்து வைத்தாள்…
அடுத்ததாக மொபைல் எடுத்து பார்க்க “ வாட்சப்பில் அவன் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்தைப் பார்த்தவள், “ டேய் குட்டிமாமா வீட்டுல இருந்துட்டே விளையாடுறியா.. உன்னை “ என பல்லை கடித்தவள், கோவிலுக்கு செல்ல கிளம்ப வேண்டுமே என்ற நியாபகம் வர, அவன் அளித்த புடவையை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்…
அடுத்த கொஞ்ச நேரத்தில் ஆருஷையும் எழுப்பி அவனுக்கும் புது துணி உடுத்தி, அவனை அங்கிருந்த அவன் நாற்காலியில் அமரவைத்தவள் சக்தி கொடுத்த நகையை அணிந்தவள், “ மாமா வாரேண்டா “ என சபதமெடுத்தவள் ஆருஷையும் தூக்கிக் கொண்டு கீழே சென்றாள்…
டிசைனர் புடவை உடலை தழுவி இருக்க, ஜாக்கெட்டில் இருந்த தங்க நிறமும், வைரம் போல் மின்னும் கற்களும் கண்ணை பறித்தது, அதிலும் அந்த கற்களுக்கு இணையாக இதழி முகமும் ஜொலிக்க, கையில் குழந்தையுடன் இறங்கி வர, சக்தியால் அவள் மேல் இருந்து கண்களை அகற்றவே முடியவில்லை,
அவனின் பார்வை தடுமாறி, தடுமாறி அவள் மேல் பாய, மனமோ “ அம்மாடி, கொல்லுறாளே ராட்சசி “ என மெதுவாக முணுமுணுக்க, அவன் அருகில் வந்த இதழி “ குட்டிமாமா எப்படி “ என மெதுவாக கண்ணடித்து கேட்டுக் கொண்டே அவன் தோளை இடிக்க.,
“ ராட்சசி படுத்துறாளே “ என எண்ணி அவளைப் பார்த்து “ கொல்லுரடி லிப்ஸ் “ என கண்ணடித்து கூறி மெதுவாக அவளை இடையோடு அணைக்க வர,
அவனின் எண்ணம் அறிந்த அவளோ அவனை விட்டு தூர விலகி நின்று “ வீட்டுல இருந்துட்டே ஒரு விஷ் கூட பண்ணல “ என முறைக்க,
“ ராட்சசி சமயம் பார்த்து அடிக்குறாளே “ என எண்ணியவன் அவளை கண்களில் காதல் ரசம் சொட்ட பார்க்க, அவனின் பார்வை அவளை ஏதோ செய்ய அந்த பக்கம் திரும்பிக் கொண்டாள் மனமோ “ பக்கி எப்படி பார்க்குது பாரு “ செல்லமாக சலித்துக் கொண்டது..
அடுத்த கொஞ்ச நேரத்தில் கோவிலுக்கு கிளம்பி, பூஜையை முடித்து, அன்னதானம் எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர நேரம் காலை பத்து ஆக, காலை உணவை முடித்த அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்திருக்க, ஆருஷோ அப்படியே நாராயணன் தோளில் தூங்க, அவனை தூக்கிக் கொண்டு லக்ஷ்மி அறையில் படுக்க வைத்த அவர் மீண்டும் ஹாலில் அமர,
எல்லாரையும் நோக்கிய வெற்றி “ அப்பா “ என மெதுவாக அழைக்க,
“ என்னடா வெற்றி “ என அவன் பக்கம் திரும்ப எல்லார் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது..
“ அப்பா… தூத்துக்குடி ஆபிஸ்ல இனியையும் சேர்க்க நான் முடிவெடுத்து எல்லாம் பண்ணிட்டேன், அவளும் இப்போ என கூட ஆபிஸ் அவர் ஆரம்பிச்சுட்டா, நான் இல்லாத நேரம் அவளும் ஆபிஸை பாத்துக்கணும்ல, உங்களை கேட்காமல் இந்த முடிவை எடுத்துட்டேன் “ என நாராயணனை பார்த்துக் கூற,
அவனின் இந்த முடிவு எல்லாரையும் சந்தோசபடுத்த “ நல்ல முடிவு பண்ணிருக்க வெற்றி “ என சக்தி வந்து அவனை அணைத்துக் கொள்ள,
இதழியோ “ அக்கா வாழ்த்துக்கள் “ என கூறி அவளை அணைக்க,
லக்ஷ்மியும், நாராயணனும் பார்வையாலையே வாழ்த்துக் கூற “ ஒரு நிமிஷம் “ என கூறிய வெற்றி அவன் அறைக்கு சென்று டாக்குமென்ட்ஸ் எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தவன் “ ஹாப்பி பர்த்டே ஜில்லு… என் வாழ்கையில், என உயிரில் பாதியான நீ, என் தொழிலும் எல்லாமுகாக வர வேண்டும் “ என கூறி அவள் கையில் பிறந்த நாள் பரிசாக அதை கொடுக்க,
“ லவ் யூ மாமா “ என கூறி அவனை அணைத்தவள் “ எப்பொழுதும் உங்க கூடவே இருப்பேன் “ என கூற,
அவளை அப்படியே அணைத்துக் கொண்டான் வெற்றி… இது தான் வெற்றி.. அவன் ஆர்பாட்டமானவன்.. எது செய்தாலும் இப்படி ஆர்ப்பாட்டமாக செய்பவன்… மனைவி மேல் இருக்கும் பாசத்தை வீடறிய செய்பவன் அவன்… அது தான் அவனின் காதலும் வீடறிந்த விஷயம்…
வெற்றி இனியாளிடம் மீண்டும் காதலை கூறிய தருணம் இதழியின் பார்வையோ சக்தியையே பார்க்க, அவனோ அவளையே அசையாமல் பார்த்திருந்தான்…
மாலை ஆகவே வெற்றி இனியாளை அழைத்துக் கொண்டு ஹோட்டல், பீச் என்று செல்ல, லக்ஷ்மியோ சக்தியையும், இதழியையும் யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்தார், மனமோ “ சக்திக்கும், இதழிக்கும் நடுவில் என்ன பிரச்சனை “ என யோசிக்க கண்களோ அவன் அறை வாசலையே பார்த்திருந்தது…
கொஞ்ச நேரத்தில் கீழ் இறங்கி வந்த சக்தி “ ம்மா.. ஒரு சின்ன வேலை வெளிய போயிட்டு வாரேன் “ என கூறி செல்ல,
“ டேய்.. இதழியை எங்கையாவது அழைச்சுட்டு போடா “ என இங்கிருந்து குரல் கொடுக்க,
“ கடவுளே இந்த அம்மாவே எல்லாம் சொதப்பிரும் போலவே “ என எண்ணிய சக்தி “ ம்மா.. கொஞ்ச நேரத்தில் உனக்கு போன் பண்ணுறேன். அப்போ சொல்லுற வேலையை மட்டும் செய்,, சொதப்புன பாத்துக்க “ என மிரட்டி செல்ல சிரிப்புடன் வெளியில் சென்றான் அவன்..
“ இவனுக்கு என்ன ஆச்சு “ என லக்ஷ்மி யோசித்துக் கொண்டிருக்க,
அந்த நேரம் அறைக்குள் இருந்த இதழியோ “ குட்டிமாமா, ஏதோ பிளான் பண்ணுறாங்க.. என்னன்னு தான் தெரியல “ என யோசித்துக் கொண்டே அங்கும் இங்கும் பூனையாக சுற்ற,
அடுத்த கொஞ்ச நேரத்தில் “ இதழி, சக்தி உன்னை மாடிக்கு வர சொன்னான்.. என்னன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாரியா..? “ என லக்ஷ்மி கூற,
“ ஐ.. பூனை குட்டி வெளியில் வந்துட்டு “ என எண்ணிய இதழி “ ஈஈஈஈ.. சரிங்கத்தை… ஆருஷை பாத்துகோங்க “ என அவரிடம் கூறி மாடி நோக்கி சென்றாள்…
இன்று தான் இதழி ,மாடிக்கு செல்கிறாள்.. அந்த அறை அவளின் கைவண்ணம் தான் ஆனால் அவள் ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை, இன்று அங்கு செல்ல போகிறாள்…
அவளின் முதல் வேலை எப்படி இருக்கிறது என்று அறியவே அவளின் ஆர்வம் அதிகரித்தது…. அதிலும் “ குட்டிமாமா என் பிறந்த நாள் அன்று இந்த அறையை எனக்கு பரிசளிக்க போகிறாரா..? “ ஏன் சந்தோசமாக எண்ணிக் கொண்டு அங்கு செல்ல,
அங்கு சென்றவள் கண்களிலோ கண்ணீர் வடிய அப்படியே நின்றிருந்தாள்… சக்தியோ அவளின் சந்தோசத்தையும், அவளின் கண்ணீரையும் பார்த்துக் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்… அங்குள்ள ஒவ்வொரு பொருளும் சக்தியின் காதலை அவளுக்கு உணர்த்தின,
பல வருடமாக அவள் வரைந்திருந்த ஓவியம் எல்லாம் இப்பொழுது உயிர் பெற்று சுவற்றை அலங்கரித்திருக்க, அவளின் ஒவ்வொரு ஆசையும், திறமையும் அதில் ஜொலித்தது… அவளின் கனவு, ஆசை எல்லாம் அதில் தெரிந்தது… அதிலும் அதில் இருந்த ஒரு ஓவியத்தின் மீது அவள் பார்வை அப்படியே நிலைக் கொண்டது,
பல வருடங்களுக்கு முன் அவள் வரைந்த ஓவியம் அந்த நீச்சல் குளம் ஓவியத்தை, இப்பொழுது அதில் ஒரு குடும்பமும், அவன் கையில் குழந்தையும், அருகில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் இருப்பதுப் போல் இருந்தது…
அவள் மனமோ “ இத்தனை வருடமாக மாமா இந்த ஓவியத்தை வைத்திருந்தாரா..?, நாம தான் மாமாவை தப்பா புரிந்து அவரை பிரிந்து, ஆருஷ் பிறப்பை கூட மறைத்து விட்டோமோ…? “ என அவளுக்கே அவள் மீது கோபமாக வந்தது… மாமா இந்த ஓவியத்தை வைத்திருக்கிறார் என்றால் அவர் என்னை மறக்கவே இல்லை…
அன்று மாமா அத்தனை கூறிய பிறகும் தன் தவறுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் அவரை எப்படி எல்லாம் நோகடித்து பேசிவிட்டோம்… ஆனாலும் மாமா அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவளை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டார் “ என மனம் குற்றஉணர்சியில் தவித்தது…
“ குட்டிமாமா.. ஐ லவ் யூ… சாரி மாமா “ என கூறிக் கொண்டே அவன் நெஞ்சில் ஓடி வந்து சாய்ந்துக் கொண்டாள்.. இதை தான் சக்தியும் எதிர் பார்த்தான்…
தன் செய்கையில் அவள் தன் காதலை உணரவேண்டும் என்று எண்ணினான்… அவன் எண்ணிய படியே எல்லாம் நிறைவேற மென்மையாக அவளின் கூந்தலை வருடிவிட்டவனுள் அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வு… சோகத்தினாலோ, வலிகளினாலோ இல்லாமல் சந்தோஷத்தில் அவள் சிந்திய கண்ணீர் துளிகள் அவனை காதலுடன் நனைத்தன….
அவள் அசைவுகளில்….!! செல்ல சிணுங்கல்களில்…!! பொங்கிய ஆனந்த கண்ணீரில்…!! மெல்லிய வளையோசையில்.. மெல்லிய விசும்பல்களில் அவர்களின் காதல் தடம் பதிந்தது…
“ சாரி இதழி, உன்கிட்ட நிறைய பேசணும்னு தான் இத்தனை நாள் உன்னோட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தேன்… உன்னை எனக்கு சின்ன பிள்ளையில் இருந்து பிடிக்கும்.. என்னைக்கு நீ என் அத்தை பெத்த ரத்தினம் என்று அறிந்தேனோ அன்றே நீ என் மனதில் வந்துட்ட.. அதுக்கு முன்னாடியே வந்துட்ட.. ஆனால் அம்மா சொன்ன தகுதி, உன் திமிர் இதை எல்லாம் பார்த்து உன் மேல கோபமா இருக்கிற மாதிரி நடிச்சேன்… எஸ், நடிக்க தான் செய்தேன்..,
ஆனா அன்னைக்கு உன் பங்ஷன் அன்னைக்கு உன் கழுத்தில் மாலை போட்டு நிமிரவும் சொன்ன பார்த்தியா “ குட்டிமாமா உங்களை தான் கட்டிப்பேன்னு “ அந்த வார்த்தை என்னை அப்படியே சாய்த்தது…
ஆனாலும் ஒரு பயம் எனக்கு பயந்து தான் நீ அந்த வார்த்தையை சொல்லுறியோன்னு ஒவ்வொரு நொடியும் பயந்தேன்… ஆனால் நாளடையில் அந்த வார்த்தையே எனக்கு ஒரு கர்வத்தை தந்திச்சு….
“ நீ என்னுடையவள், நீ எனக்கே எனக்கு சொந்தம்.. இப்படி நிறைய எண்ணம் “ அந்த எண்ணம் எல்லாம் தந்த கர்வத்துல கூட நான் உன் வார்த்தையை, ஒவ்வொரு நொடியும் நீ என் பதிலுக்காக ஆவலா என முகத்தை பார்க்கும் பொழுது எல்லாம் உனக்கு பதில் சொல்ல விடாமல் தடுத்தது…
ஆனாலும் அம்மாவுக்கு உங்களை கண்டாலே பிடிக்காது, அம்மாவுக்கு நீங்க ரெண்டு பேரும் அப்பா தங்கச்சி பொண்ணுங்க என்று அறிந்த பிறகும் உங்களை திட்டினதை என்னால் தாங்க முடியல..
அம்மாவையும் திட்டினேன்… என ஆசையை அம்மாவிடம் கூறினால் எப்படியும் நம்மளை சேர்த்து வைப்பாங்க என்று முழுமையாக நம்பினேன்… ஆனால் அம்மா கொஞ்சமும் மாறவே இல்லை… அம்மா அப்படி இருப்பாங்கன்னு நினைக்கவே இல்ல..
பாட்டி நம்மளுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலை என்றாலும், நான் கொஞ்ச நாளில் உன்கிட்ட என் காதலை கூறி உன்னை எப்படியாவது கை பிடித்திருப்பேன்..
அதற்குள் நமக்கு கல்யாணமும் ஆகி எல்லாம் கைமீறி போச்சு… நீ என்னை விட்டு பிரிந்தது என் மனசில் விழுந்த பெரிய அடி… நீ என்னை விட்டு போக மாட்டேன்னு இருந்த இருந்த என் கர்வத்தில் விழுந்த மிக பெரிய அடி அது.. என ஆண்மைக்கே விழுந்த அடியா அதை நினைத்து தான் உன்னை தேடி வரவே இல்லை.. அதிலும் ஒரு நாள் என் கூட நீ வாழ்ந்து போனதை என்னால் தாங்க முடியலை…” என கூற
அவளின் உயிரை, வேரோடு சாய்த்தது அவனின் பேச்சு…! செவிமடலை சிலிர்க்க செய்யும் அவனின் சுவாசக்காற்று அவளுக்குள் வெட்கத்தை பூக்கசெய்ய மறுநிமிடமே அவனுடைய பரந்த மார்பில் சாய்ந்துக் கொண்டாள்…
“ அது தான் எல்லாம் அன்னைக்கே சொல்லிடீங்களே.. மறுபடியும் எதுக்கு அதையே பேசி நல்லா இருக்க மூடை கெடுக்கிறீங்க “ சிறு கோபம் காட்டி பேச,
“ இல்ல இதழி.. உனக்கு எல்லாம் நான் புரியவைக்கணும்.. நாளைக்கு உன் வாயில இருந்து என்னை தேடி வராதவர் நீங்க தானே என்ற வார்த்தை வரவே கூடாது.. அதே போல என் பையனுக்கும் நான் அப்படி ஒரு காரியம் பண்ணினேன் என்று தெரியவே கூடாது “ என்று சிறு வேதனையாக கூற,
“ நான் தான் மாமா பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உங்களை புரிஞ்சுக்காம இருந்துட்டேன்… அன்னைக்கே உங்க கிட்ட கேட்டுருந்தா இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது… சாரி மாமா… “ என மீண்டும் மன்னிப்பை யாசிக்க,
அதிலும் நீ இங்க வந்த பிறகு நீ பேசும் பேச்சு அப்படி என்னை வலிக்க செய்தது, உன்கிட்ட வரவும் முடியாம விலகவும் முடியாம நான் தவித்த தவிப்பிருக்கே அப்பப்பா சொல்ல முடியாதது.. அதிலும் நீ என்னை வெறுப்பேத்தவே அழகா என் முன்னாடி வந்து நிற்ப… அந்த வேதனை எனக்கு மட்டும் தெரியும் “ என மெதுவாக கூற,
“ நான் மட்டும் என்னவாம்..? உங்களை மறக்கவும் முடியாம, விலக்கவும் முடியாம.? என்னை உங்களுக்கு பிடிக்காது என்ற உண்மையை ஜீரணிக்கவும் முடியாம ஒரு வருஷம் இருந்தேன்… அதிலும் நேசம் இல்லாமல் நீங்க என்னை மனைவியா எடுத்துகிட்டீங்க என்ற கோபம் தான் வானளவுல உயர்ந்து நின்னுச்சி அது தான் என்னையே அறியாம உங்களை காயபடுத்திட்டேன் “ என கூறி அவன் மார்பில் முகத்தை வைத்து அழுத்த,
“ நீ நான் உன்னை விரும்பலன்னு நினைச்சுட்டு இருக்க, நான் நீ என்னை விரும்பல அது தான் என்னை விட்டு போய்டன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்… அப்புறம் குழந்தை பிறந்த பிறகு தான் பெரிய உண்மை தெரிஞ்சது.. அப்புறம் எல்லாம் பேசி சரி பண்ண என்று நாம் இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிட்டோம் “ சீண்டலாக கூற,
“ போ மாமா “ என நெஞ்சில் ஆசையாக குத்தியவளை விட்டு விலகிய சக்தி “ ஒரு நிமிஷம் லிப்ஸ் “ என கூறி அருகில் இருந்த டேபிளில் இருந்த பேப்பரை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் “ எனக்கு வெற்றி மாதிரி எல்லார் முன்னாடியும் பாசத்தை காட்ட தெரியாது லிப்ஸ், என்னை பற்றி உனக்கு என்ன நினைப்பிருந்தாலும் எப்போவும் என்கிட்ட நீ சொல்லணும் லிப்ஸ், எதையும் மனசுல போட்டு குழம்பிக்காம இருக்கணும்.. எப்பவும் உனக்கு நான் இருக்கேன் என்ற எண்ணம் உன் மனசுல வரணும், எனக்கு எல்லாமே நீ தான்.. உன்னை விட்டா யாருமே இல்லை அதை மட்டும் உன் மனசுல வைச்சுக்கோ.. நம்ம ஆபிஸ்ல இனி நீ தான் எல்லாம்… உன் அனுமதி இல்லாமல் நான் கூட எதையும் செய்யமுடியாது…
இந்த இதழி இல்லை என்றால் இந்த சக்தி ஒண்ணுமே இல்லை என்று நீ புரிஞ்சுக்கணும் “ என கூறி அவள் கையில் பேப்பர்ஸ் திணித்தவன்..
“ அப்புறம் இது உன்னோட டிராயிங்க் அறை.. உன்னோட ஆசை எதுனாலும் பண்ணிக்கலாம்.. இல்ல எனக்கு இங்க வேண்டாம் நான் ஆபிஸ் வாரேன் என்று கூறினாலும் நீ அங்கையும் வரலாம்… எங்க இருந்துனாலும் நீ ஆபிஸ் ரன் பண்ணலாம்.. உனக்கு துணையா நான் இருக்கேன்.. “ என கூறி அவளைப் பார்த்தான்..
இது தான் சக்தி.. எதையும் ஆர்பாட்டம் இல்லாமல் செய்பவன்.. காதலும் சரி, எது என்றாலும் சரி… அவனுக்கு அதிரடியாக எதையும் செய்ய வராது.. அமைதியாய் பாசத்தில் உணரவைப்பவன்…
அவளோ அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்… சக்தி என்று ஒருவன் தன் வாழ்வில் இல்லை என்றால் நான் இப்படி உயிர்புடன் இருப்பேனா.? என்பது அவளுக்கு பெரிய கேள்வியே…
அப்படியே பிரமிப்பாக அவனைப் பார்க்க “ இன்னும் ஒன்னு உன்கிட்ட சொல்லணும் லிப்ஸ் “ என கூறிய அவன் மெதுவாக அவளைப் பார்க்காமல் திரும்பி நின்றுக் கொண்டான்..
“ மனமோ ஒன்றரை வயசுல ஒரு பிள்ளையை வச்சுக்கிட்டு பொண்டாட்டி கிட்ட லவ் சொல்ல வெட்கபடுற முதல் ஆண் மகன் நீயாக தான் இருப்ப “ என கேலி செய்ய..
அவனால் இத்தனை நேரம் இதழியை நேராக பார்த்தவனால் இப்பொழுது பார்க்க முடியவில்லை… ஏனோ அவன் மனம் எப்படி அவளிடம் காதலை கூற என காதலால் வெட்கியது..
பள்ளி மாணவன், அவன் காதலியுடன் காதலை கூற தவிப்பதுப் போல் தவித்துக் கொண்டு இருந்தான்… தலையை கோதிக் கொண்டும், முகத்தை துடைத்துக் கொண்டும் நிற்க..,
அவனை யோசனையாக பார்த்த இதழி “ என்ன சொல்லணும் மாமா “ என கேட்டு அவன் முன் வர,
“ அது.. வந்து லிப்ஸ் “ என தடுமாற..
அவனின் இந்த தடுமாற்றம் கூட அவளுக்கு பிடித்து தொலைக்க.. அவனை ரசனையாக பார்த்தாள்… அவனின் தடுமாற்றமும், அவன் தன் முகம் பார்க்க தயங்குவதையும் கண்ட அவளுள் அவனின் வெட்கம் அவளை வெட்கம் கொள்ள வைத்தது…
ஆணவனின் வெட்கம், அவள் முகத்தை மலர செய்ய, “ குட்டிமாமா “ என அழைத்து அவன் தோளை தொட,
அவள் அருகில் வந்தவன் “ ஐ லவ் யூ லிப்ஸ் “ அவள் காதோரம் கூறியபடி முரட்டுதனமாக இழுத்து, அணைத்து அவளின் இதழை காதலுடன் தன்வசமாக்கிக் கொண்டான் அவளின் குட்டிமாமா…!!
அவள் இத்தனை வருடமாக.. இத்தனை நாட்களாக கேட்க ஆசைப்பட்ட அந்த வார்த்தை… குட்டிமாமா தன்னிடம் கூற மாட்டாரா..? என ஏங்கிய வார்த்தை…!!
இப்பொழுதோ எதிர் பாராத விதமாக அவன் வாயில் இருந்து உதிர, ஆயிரம் கூடை மலர்களை அவள் மேல் ஒன்றாக கொட்டிய உணர்வு…!!
அதே உணர்வில் அவளின் குட்டிமாமாவை இறுக்கி அணைக்க மறுகணமே, காவிய தலைவனாகி, அவளின் இதழ்களில் காவியம் படைக்க ஆரம்பித்தன அவன் உதடுகள்…!!
இத்தனை காலமாக விடை தெரியாத கேள்விக்கு விடையாக அவனின் காதல் காவியங்கள்.. அந்த நிமிடமே அவளின் காதல் மெல்ல விழித்தெள அவனுக்காய்…!! அவன் ஒருத்தனுக்காய் பல நிகழ்வுகளை மறக்க தயாராய் அவள் மனது….
என்றும்…. எதற்காகவும் விட்டு தருவதாய் காதல் இருந்ததில்லை என்று புரிவதாய்.. அவள் மேல் இருந்த காதலை கூறிய அந்த தருணம் சக்தி மனது இலவம் பஞ்சாய் மாறி மெல்ல மேல் எழுவது போல் ஒரு அனுபவம்…!!
தனக்கென பிறந்தவள்… தன் நேசத்துக்காய் காத்திருந்தவள்.., அழகான தருணத்தில் தன் கைகளில் பொக்கிஷமாய் அடங்கியவள்….!!
தன்னுடைய காதலுக்காய் தன் பொக்கிஷத்தை சுமந்தவள்… மீண்டும் தன் கைகளில் பொக்கிஷமாய் வந்து அடங்கியதை போல் ஒரு சிலிர்ப்பு…!!
“ என்னை சாய்க்கவே வந்தவள் “ என்ற செய்தி அவன் கண்களில்… அந்த நிமிடமே ஒரு இனிய கனவு கூடு இருவர் மனதிலும் உதயமாக அவளை இறுக்கி அணைக்க.., இதழியின் முகமும், உடலும் வெட்க பூக்கள் பூத்தன….
கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி.!!
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா உன்மத்தமாகுதடி!
உன் கண்ணில் நீர் வழிந்தால் – என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணில் பாவையன்றோ – கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ..?
வேர் காதலால் சாய்ந்தது….