vizhiyil un vizhiyil

vizhiyil un vizhiyil

மண்டபத்தில் உள்ள மணமகன் அறைக்கு சென்றான் ஆதி. உள்ளே இருந்த மாறனும் அருளும் தலை நனைந்து வரும் ஆதியை வேற்றுகிரக வாசி போல் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்..

“என்னடா நனைஞ்சுருக்க. என்ன ஆச்சு”

” மழை பெய்யுதா… இல்லையே தலை மட்டும் நனைஞ்சு இருக்கறத பாத்தா வேணும்னே ஊத்தின மாதிரி இருக்கே”

“ஆமா… டா பிஸி ல தலை சூடு ஆய்டுச்சு.. அதான் தண்ணி ஊத்திகிட்டேன்”

“அதுக்கு இங்க வந்து  குளிச்சுருக்கலாம்ல… அப்படி என்ன டென்சன். எல்லாம் பக்காவா நீதான ப்ளான் பண்ண…”

” ம்ம்ம் இருந்தாலும் எல்லாம் நல்ல படியா நடக்கனுமே. இல்லைனா தாமு அப்பா முகத்த என்னால பாக்க முடியாது. அதான்… வேற ஒன்னும் இல்லை..”

என உண்மையை மறைத்து  ஏகதேசமாக உண்மையாக தொன்றும் படி ஏதையோ கூறிவிட்டு தலையை துடைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான்.

அவனை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டனர் இரு நண்பர்களும். அவன் கூறியதில் முழு உண்மை இருந்ததால் ஏற்று கொண்டு அமைதியாய் இருந்தனர்..இப்ப தாமு… தாமோதரன். ஜெய் ஸ்ரீ யின் அப்பாவிடம் தன்னை நிருபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன்…

கண்களை மூடினால் அவன் இருண்ட காலம் கண்முன் தோன்றி சஞ்சலபடுத்த தூங்க முடியாமல் வேறு வழியின்றி ஸ்டோர் ரூமில் ஸ்டாக் சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியேறினான்…

அவனை புரிந்து கொண்ட நண்பர்களும் ஒன்றும் பேசாமல் சரி என கூறிவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டனர்..

மாறன் கல்யாண கனவினில் கரைந்து இருக்க. அருள்  ஆதியை பற்றி சிந்திந்து கொண்டு இருந்தான்..

எப்படி இருந்த ஆதி… எல்லாம் ஒரே நாளில் தலைகீழாய் மாறியதே. பள்ளி, கல்லூரி நாட்களில் கலகலவென, அசால்டாக, எந்த விஷயத்தையும் சுலபமாக கையாண்டு, எல்லாருடனும் வளவளத்துக்கொண்டு எப்பொழுதும் ஒரு கூட்டத்துடன் சுற்றிய ஆதி எங்க… இப்ப மனதை மறைத்து, இறுக்கத்துடன் , அமைதியின்றி தவித்து தன்னை ஒன்றும் இல்லாதவனாய் உணர்ந்து துவண்டிருக்கும் ஆதி எங்க…

அருள், ஆதி பள்ளியில் இருந்து இணைபிரியா நண்பர்கள்.  ரவீந்தரும் மாறனும் இவர்களுடன் ஸ்ரீ வாசவி கல்லூரியில் ஒன்றாக பிபிஏ மற்றும் எம்பிஏ படித்தவர்கள்.

வெளியே வந்த ஆதி அவன் டூவிலரை வேகமாக ஓட்டிக்கொண்டு மனம் போன போக்கில் சேன்றான்… வேகமாக முகத்தில் மோதிய சில்லென்ற காற்று அவன் மனவொட்டத்தை மட்டுபடுத்த சிறிது தளர்ந்தவன் மணி யை பார்த்தான், இரண்டு… அப்படியே நதிக்கரைக்கு விரைந்தான்… வெண்நுரை பொங்க சலசல வென ஓடிய நதி தீரத்தை கண்டான்… அதை கண்டதும் வெண்பட்டில் தன்னை ஈர்த்த பெண் நியாபகம் வர.. அவளை பற்றி சிந்தித்தான்…

“அவ என்னை பாக்குறத பாத்தா என்னை அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கு… யாராயிருக்கும்…”

யோசித்தால் மூளை அவனின் பால்ய கால நினைவுகளை நினைவூட்ட மறுத்தது… கடந்த இரண்டு வருடமாய் தன் கட்டளை படி கடந்ததை நினைக்காது எதிர்காலத்தை பற்றி மட்டுமே யோசித்த மனது, சுயமாக முன்னேறியே ஆக வேண்டும் என பிடிவாதத்துடன் வேறு எதையுமே யோசிக்காது இறுகிய மனது இளகி ஆட்டம் கண்டது..

தன் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடும் அளவுக்கு நெருக்கமான உறவா.. யாரது.. யாரது.. மனம் கூச்சலிட விடையறியாமல் ஒரு பெருமூச்சு விட்டு மீண்டும் மண்டபத்தை நொக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.

மண்டபத்தை அடைந்தான் தூக்கம் வர மறுத்தது… தன் ஏற்பாடுகளை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தான்… மணி மூன்றை நெருங்க… தாமு அப்பாவின் அறையை அடைந்தான். அங்க ஏற்கனவே ரெடியாகி இருந்த தாமோதரனும் சகுந்தலாவும் பேசிக்கொண்டு இருந்தனர்… ஆதி யை கண்டதும் ஆதூரத்துடன் முகத்தில் சிரிப்பை படர விட்ட சகுந்தலா வரவேற்றார்.

“வா ஆதி, எங்க இடையில கொஞ்ச நேரமா உன்ன காணலை”

“அம்மா… எதாவது விஷயமா? என்ன தேடீனீங்களா? என்ன செய்யனும்மா”

“ஒரு விஷயமும் இல்ல. அருள் மண்டபம் புல்லா சுத்தி உன்ன தேடிகிட்டு இருந்தான். அவன்கிட்ட கூட சொல்லாம எங்க போன”

ஆதி சொல்ல முடியாமல் பாவமாய் பார்த்தான். உண்மை சொன்னால் தன்னை பெற்ற மகனை விட பாசமாக பார்த்துக் கொள்ளும் தாயின் உள்ளம் வருந்தும், பொய் சொன்னால் கண்டுபிடித்து விடுவார்… என்ன செய்ய..

அவன் நிலைமை உணர்ந்த சகுந்தலா” சரிசரி விடு என்ன சொல்றதுன்னு யோசிக்காத… வந்துட்டீல்ல முதல்ல ரெடி ஆகிட்டு, எதாவது சாப்பிட்டு அப்புறம் வேலைய பாரு.. இந்த அப்பா சொன்னாருன்னு நேத்து மாதிரி சாப்பிடாம கூட வேலை பாக்காத..”

நான் சாப்பிடாதது அம்மாக்கு எப்படி தெரியும். என வியந்த ஆதி அப்பாவை ஏறிட

” ஆதி, நீ வேலைய கச்சிதமா செய்ன்னு தான் சொன்னேன். ஆனா சாப்பிடாம செய்ய சொல்லல. உன்ன நம்பி இரண்டு பேர் இருக்காங்க…அதனால முதல்ல உன்ன பாத்துக்க. இந்த விஷயத்திலாவது நான் சொல்றத கேளு…” ன்னு கண்டிப்புடன் கூறினார்

“சரி ப்பா”

“ஏங்க. அத கொஞ்சம் பாசமா சிரிச்ச முகத்தோட சோன்னா என்ன. பையன் முகம் ஏற்கனவே வாடி இருக்கு”

” நமக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு. புதுசா சிரிச்சா மாதிரி பேச சொல்ற… “

” ஆமாமா சிரிச்சுடாதீங்க… கல்யாண நேரத்துல மழை வந்திட போகுது…

நீ போ ஆதி, ரெடி ஆகு…. அப்படியே பக்கத்து ரூம்ல மதி இருப்பா, அவள  இங்க வர சொல்லிட்டு போ”

” யாரும்மா மதி”

” சொல்றேன் இப்ப நேரம் இல்ல… நான் கீழ போய் முகூர்த்த வேலைய பாக்கனும். நீ கிளம்பு”

சரிம்மா என தலையாட்டி விட்டு நகர்ந்த ஆதி பக்கத்து அறையின் கதவை தட்டினான்.  கதவை திறந்தது நேற்று பார்த்தவளே தான். இவனை யாரோ நீ என பார்த்து என்ன என கண்களிலேயே வினவ…

அவளை எதிர்பார்க்காத ஆதியோ பின் சுதாரித்து சகுந்தலா அம்மா அவளை அழைத்த விவரத்தை சொல்ல.. சரி என தலையாட்டி விட்டு கதவை அறைந்து சாத்தினாள்.

என்னடா.. நேத்து சுத்தி சுத்தி பாத்தா..

இன்னைக்கு யாருன்னே தெரியாத மாதிரி கதவை சாத்திட்டு போறா சரியான லூசா இருக்குமோ என யோசித்து தோளை குலுக்கி விட்டு நகர்ந்தான்.

உள்ளே இருந்த மதி… இளமதி… ஒரு நிமிடம் நிதானித்து பின் கதவை திறந்து ஆதி போய் விட்டானா என பார்த்தாள்..

“என்னை மறந்துட்டல்ல உன்னை இன்னும் என்னவெல்லாம் பண்றேன் பாரு” என மனதினில் கருவியவள் சகுந்தலாவை காண சென்றாள்…

error: Content is protected !!