VKV 17

VKV 17

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 17

மாறன் வாங்கிக் கொடுத்த அந்தப் பட்டுப் புடவையில் எழிலே உருவாக நின்றிருந்தார் விசாலாட்சி. தலை நிறைய மல்லிகைப் பூவும், கண்கள் நிறைய ஆசைகளையும் சுமந்து நின்றார். பக்கத்தில் பட்டு வேட்டி சட்டையில் இளமாறன். காதோரம் லேசாக நரைத்திருந்த போதும், வாலிப மிடுக்கோடு நின்றிருந்தார்.

ஆண்டவா! ஒரு இருபது வருடங்களுக்கு முன் இவர்களை நீ இணைத்து வைத்திருக்கக் கூடாதா?’ இளமாறனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த தமிழ்ச்செல்வனின் மனது தனக்குள்ளேயே மௌனமாக அழுது கொண்டிருந்தது

விசாலாட்சிக்குப் பக்கத்தில் நின்றிருந்த குந்தவியோ, மனதிற்குள் வைத்துப் புழுங்க நான் ஆள் கிடையாது என்பது போல தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். சற்று முன் தான் இளமாறனும், விசாலாட்சியும் மாலை மாற்றி ஆண்டவன் சன்னிதானத்தில் கணவன், மனைவி ஆகி இருந்தார்கள்

எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் ஐயர் மந்திரம் சொல்ல, தன் வாழ்க்கையின் அத்தனை பொழுதுகளிலும் தன்னோடு கூட நின்ற தன் இரு உயித்தோழமைகளும் மனம் நிறைந்து அட்சதை தூவ, மூன்று முடிச்சிட்டு அந்த மங்கையை மனைவி ஆக்கி இருந்தார் இளமாறன்.

இதை விட கொஞ்சம் க்ரான்டா பண்ணலாமே மாறா?’ என்று தமிழ் கேட்டதற்கும், மறுப்புத் தெரிவித்திருந்தார் இளமாறன்.

விசாலாட்சி சைட்ல இருந்து எந்த சொந்தமும் வராதப்போ, நான் மட்டும் ஆட்கள் சேக்குறது அழகில்லை தமிழ். அந்தப் பொண்ணை எந்த வகையிலயும் நான் காயப்படுத்த விரும்பலை.’ சொன்னவரை ஆரத்தழுவிக் கொண்டார் தமிழ்ச்செல்வன்.

தன் பக்கத்தில் நின்றிருந்த விசாலாட்சியைத் திரும்பிப் பார்த்தார் இளமாறன். அதே நேரம், அவரும் திரும்பி இளமாறனைப் பார்க்க, இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். அன்று வெள்ளிக்கிழமை, அதனால் விசாலாட்சி லீவ் போட்டிருந்தார். சேர்ந்தாற் போல வார இறுதி நாட்கள் இருப்பதால் மாறனின் வீட்டில் தங்க முடிவு செய்திருந்தார்கள்.

தாலி கட்டிய கையோடு ரெஜிஸ்ட்ரேஷனையும் முடித்திருந்தார்கள். எல்லாம் முடித்து வீடு வர நண்பகல் ஆகியிருந்தது. வரும்போதே லன்ச்சையும் முடித்து விட்டு வந்திருந்தார்கள். மாறனின் வீடு இப்போது முழுதாக மாறியிருந்தது. விசாலாட்சியின் விருப்பப்படி தேவையான பொருட்கள் ஆங்காங்கே இடம்பிடித்திருந்தன

மாறன், நான் சொன்ன மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்களா?” சோஃபாவில் அமர்ந்து, பார்வையால் விசாலாட்சியை தொடர்ந்தபடி இருந்த இளமாறனைக் கலைத்தது விசாலாட்சியின் குரல்.

ம்.. எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் விசாலி. முதல்ல நீ இப்பிடி வந்து உக்காரு. உனக்கும் டயர்டா தானே இருக்கும்?” சொன்னவருக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் விசாலாட்சி.

விசாலி…”

ம்…”

இப்பிடி எங்கூட இருந்துட்டு திங்கக்கிழமை நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டா நான் என்ன பண்ணுறது?” மாறனின் குரலில் தவிப்பு இருந்தது.

இது ஒரு பெரிய விஷயமா? சட்டுன்னு காரை எடுத்துட்டு கிளம்பினா, எங்கிட்ட ஓடி வந்திடலாமே. அதுக்கப்புறம் வெள்ளிக்கிழமை நான் இங்க வந்திடுவேன்.” சுலபமாகச் சொன்னார் விசாலாட்சி.

முடியுமா விசாலி?”

கண்டிப்பா முடியும் மாறன். எப்பவுமே நெகடிவ்வா யோசிக்கக் கூடாது. முயற்சி பண்ணிப் பாப்போம். முடியலைன்னா அதுக்கப்புறம் என்ன பண்ணுறதுன்னு அப்போ யோசிக்கலாம்.”

ம்அது சரி பொண்ணே, உம் புருஷனை நீ பேர் சொல்லித்தான் கூப்பிடுவியா?”

எம் புருஷனை நான் பேர் சொல்லி கூப்பிடாம, வேற எவ கூப்பிடுவா?”

அப்பிடி வேற இருக்கோ? இருந்தாலும் இது நல்லால்லை. இனிமே என்னை மாறன்னு கூப்பிடக் கூடாது.”

இதேதுடா வம்பாப் போச்சு. அப்போ எப்பிடித்தான் கூப்பிடுறதாம்?”

எங்கம்மா அப்பாவை அத்தான்னு கூப்பிடுவாங்க.”

அத்..தா..னா?” அஷ்டகோணலானது விசாலாட்சியின் முகம்.

எதுக்கு இப்பிடி ஒரு ரியாக்க்ஷ்ன் கலெக்டரம்மா?

எனக்கு இந்த அத்தான், என்னங்க, மாமா, மச்சான் எல்லாம் வராது மாறன். வேணும்னா கோபம் வரும் போது வாடா, போடான்னு கூப்பிடுறேன்.”

…! அது வேற வருமோ?” 

ம்லைட்டா வரும். என்னை ரொம்பவே உதாசீனம் பண்ணினா வரும். அதே கோபம் தான் இன்னைக்கு வரைக்கும் என்னோட பெத்தவங்களை எங்கிட்ட இருந்து தள்ளி வச்சிருக்கு.”

அடேங்கப்பா, அப்போ கொஞ்சம் கெயார் ஃபுல்லா தான் இருக்கனும்னு சொல்லுங்க.”

ஏன்? உங்களுக்கு என்னை உதாசீனப் படுத்துற ஐடியா ஏதாவது இருக்கா?” சொன்னவரை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் இளமாறன்.

உன்னைக் காயப்படுத்தி பாக்குற தைரியம் எனக்கு இல்லை விசாலி. வாழ்க்கையில எனக்கு என்ன குறைன்னுதான் இத்தனை நாளும் நினைச்சு இருந்தேன். ஆனா, உன்னைப் பாத்ததுக்கு அப்புறம் தான், என் வாழ்க்கையே இனிமேல்தான் ஆரம்பம்னு புரிஞ்சுக்கிட்டேன்.” ஆழ்ந்து, அனுபவித்து பேசிக் கொண்டிருந்தவரை நிமிர்ந்து பார்த்தார் விசாலாட்சி

என்ன? ஐயா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கிற மாதிரி தெரியுது. அதை விடுங்க, புடவை எனக்கு எப்பிடி இருக்குன்னு சொல்லலையே.” பேச்சின் போக்கை மாற்றினார் விசாலாட்சி.

சூப்பரா இருக்குடா. உமா நிச்சயதார்த்தத்துக்கு இன்னொன்னு வாங்கிக்கலாம் என்ன?”

எல்லாரையும் இன்னைக்கு கூப்பிட்டிருக்கலாமே மாறன்.”

இல்லைடா, கொஞ்ச நாள் போகட்டும். என்னமோ தெரியலை இந்த மூணு நாளையும் நாம ரெண்டு பேரும் தனியா அனுபவிக்கனும்னு தோணிச்சு. எல்லாரையும் கூப்பிட்டு ஒரு நாள் விருந்து வெப்போம், சரியா?”

ம்…” அமைதியாக மாறனின் மடியில் தலை வைத்துக் கொண்டார் விசாலாட்சி. மாறனின் கைகள் இதமாக அவர் தலையைக் கோதிக் கொடுத்தது.

மாறன்

ம்…”

ஏதாவது பேசுங்களேன்.”

என்ன பேச விசாலி.”

உங்களைப் பத்தி, உங்க அம்மா அப்பா பத்தி, உங்க காலேஜ் லைஃப் பத்தி, உங்க ஃப்ரெண்ட்ஸ் பத்தி. இப்பிடி ஏதாவது பேசுங்க மாறன்.” தனது காலேஜ் கலாட்டாக்களை ஒவ்வொன்றாக மாறன் அள்ளிவிட, சிரித்தபடியே கண்ணயர்ந்தார் விசாலாட்சி. அமைதியாகத் தன் மடியில் தூங்கும் மனைவியின் நெற்றியில் முத்தம் வைத்தவர், நிறைந்து போன மனதோடு தானும் கண்ணயர்ந்தார்.

                                       ——————————————————————–

சீர்வரிசைக்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டிருந்தார் ஆராதனா. சிறுகச் சிறுக தன் பெண்ணிற்காக அவள் வயதுக்கு வந்ததிலிருந்து தான் பார்த்துப் பார்த்து சேர்த்த அத்தனையையும் கடை பரப்பி இருந்தார்.

என்னம்மா எல்லாம் சரியா இருக்கா? இல்லை இன்னும் ஏதாவது வாங்கணுமா?” கேட்டபடி வந்தார் தமிழரசி.

இல்லை அத்தை, எல்லாம் சரியாகத்தான் இருக்கு. எதுக்கும் நீங்களும் ஒரு தரம் சரி பாத்துருங்க. ஒரு குறையும் வந்திரக் கூடாது அத்தை.” ஆராதனாவின் குரலில் பெண்ணைப் பெற்ற தாய்க்குரிய கலக்கம் இருந்தது.

பாத்திரம், பண்டங்கள் அனைத்தும் வெள்ளியிலும், பித்தளையிலும், வெண்கலத்திலும் இருந்தது. பதினேழு வெள்ளித் தாம்பாளங்கள் சீர்வரிசை வைப்பதற்கென்றே வாங்கி வைத்திருந்தார் ஆராதனா. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கல்யாணம் முடிந்த பிற்பாடு வாங்குவதாக ஏற்பாடு.

அத்தை, நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம பக்கத்து சீரெல்லாத்தையும் நிச்சயதார்த்தம் நடக்கும் போதே குடுத்துரலாம் அத்தை.”

என்னாச்சு ஆராதனா? ஏன் இப்பிடி பண்ணப்போறே?”

சுதா பாட்டியால ஏதாவது பிரச்சினை வந்திருமோன்னு நான் பயப்படுறேன் அத்தை. அவங்க ஏதாவது குறை சொல்லி, அதனால ஃபங்ஷனுக்கு எந்தப் பங்கமும் வந்திரக்கூடாது அத்தை.”

ஏம்மா இந்தக் கல்யாணத்துல அந்தம்மாக்கு இஷ்டம் இல்லையா?” ஆச்சரியமாகக் கேட்டார் தமிழரசி.

எனக்கு அவங்க வீட்டு விஷயம் உங்க பிள்ளை அளவுக்கு தெரியாது அத்தை. ஆனாலும்…” 

இரு இரு, என்ன மென்னு முழுங்குற? வயசு போனவங்க, மங்கலகரமான விஷயத்துக்கு முன்னாடி வராம ஒதுங்குறாங்க, அப்பிடீன்னு தானே நான் நினைச்சேன். இது என்ன புதுக் கதையா இருக்கு!” தமிழரசி கேட்கவும், பேசிக்கொண்டிருந்த ஆராதனா, மெதுவாக ரூம் கதவை அடைத்து விட்டு வந்தார்.

நான் என்னத்தைச் சொல்ல அத்தை. சுதா தங்கமான பையன் தான், இல்லேங்கலை. குந்தவியும், அவங்க வீட்டுக் காரரையும் போல நாம தேடினாலும் கிடைக்காது.”

அப்புறம் என்னம்மா?”

அந்த பாட்டிதான் வில்லங்மே. குந்தவி மனசுல இப்பிடி ஒரு எண்ணம் இருந்தது எனக்கு சாடை மாடையா தெரியும் அத்தை. ஆனாலும் அந்தம்மா இதுக்கு அனுமதிக்காதுன்னு நான் கொஞ்சம் தெம்பா இருந்தேன். ஆனா சுதா என்ன பண்ணினான்னு தெரயலை அவங்களை சம்மதிக்க வச்சுட்டான்.”

இவ்வளவு நடந்திருக்கா? நீ ஏன்மா இதை இவ்வளவு நாளும் எங்கிட்ட சொல்லலை?”

எப்பிடி அத்தை சொல்லுறது? உங்க பேத்தி ஆசை வச்சுட்டா, உங்க மகன் தலை ஆட்டிட்டாரு. அவங்க ரெண்டு பேருக்கும் எதிரா நான் என்னத்தை பண்ணுவேன் சொல்லுங்க?”

ம்அதுவும் சரிதான். சரி பாக்கலாம் ஆராதனா, நீ கவலைப்படாதே. என்ன, சீர்வரிசையில ஒரு குறையும் வந்திரக் கூடாது. அவ்வளவுதானே, நான் எதுக்கு இருக்கேன். ஒரு சொல் வராம பாத்துக்கிறேன் என்ன?”

சரிங்கத்தை.” புன்னகை முகமாக ஆராதனா வெளியேற, தமிழரசி முகத்தில் சிந்தனை படர்ந்தது.

                                 —————————————————————————-

மண்டபத்தில் அலங்கார வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.‌ தமிழ்ச்செல்வன் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தது. தெரிந்த சொந்த பந்தங்களுக்கு மட்டுமே சொல்லி இருந்தார்கள். அதுவே ஒரு நூறு குடும்பத்திற்கு மேல் வந்துவிட்டது

சிம்பிளாக ஃபங்ஷனை நடத்த தமிழின் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை. தங்களுக்கு இருப்பது ஒரே பேத்தி. அவள் சம்பந்தப்பட்ட அனைத்தும் விசேஷமாக செய்ய வேண்டும் என்று ஒரே பிடியில் நின்று விட்டார்கள். தமிழ்ச்செல்வனின் திருமணமும் அவசர கோலத்தில் நடை பெற்றதால் அவரும் மறுத்து ஒன்றும் சொல்லவில்லை.

பூ அலங்காரங்களை மாத்திரம் மீதம் வைத்துவிட்டு மற்ற வேலைகள் அனைத்தும் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உமாவும் இன்று அப்பாவோடு கிளம்பி வந்திருந்தாள். மகளின் விருப்பப்படி ஆங்காங்கே ஒரு சில திருத்தங்கள் செய்ய தமிழும் அனுமதித்து இருந்தார். சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த black Audi மண்டப வாசலில் வந்து நின்றது. காரை விட்டு இறங்கிய சுதாகரன் உள்ளே போனான்.

அடடே சுதா, வாப்பா. வேலைகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. உனக்கு ஏதாவது சேன்ஜ் பண்ணனும்னு தோணிச்சுதுன்னா சொல்லுப்பா, மாத்திரலாம்.” தமிழ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘ஐயாஎன்று யாரோ அழைக்க,

இதோ வந்திர்றேன் சுதா.” என்று விட்டு நகர்ந்து விட்டார் தமிழ்ச்செல்வன். மணமேடை அலங்காரம்வயிட் அன்ட் பாட்டல் க்ரீன்தீம் கலரில் அட்டகாசமாக இருந்தது. பின்னணியில் செயற்கைப் பூ அலங்காரமும், இறுதியில் இயற்கையான கானேஷன் மலர்களை அடுக்கத் திட்டமிட்டிருந்தாள் உமா. அதன்படி செயற்கை அலங்காரங்கள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்தன. இயற்கையான மலர்களை நிச்சயத்திற்கு முந்தைய நாள் கிடைக்குமாறு ஏற்பாடு பண்ணி இருந்தார் தமிழ்ச்செல்வன்.

ஹாய் டார்லிங், என்ன பண்ணுறீங்க?” கேட்டபடி உமாவின் பக்கத்தில் வந்து நின்றான் சுதாகரன். அப்போதுதான் அவன் வந்ததைக் கவனித்த உமா,

அத்தான், உங்களைக் கூப்பிடலாமான்னு நானே இப்போ நினைச்சேன்.” குரலில் அத்தனை பரவசம் இருந்தது.

எதுக்குடா?”

டெக்கரேஷன் எப்பிடி இருக்கு? உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

சூப்பர் மது. அவ்வளவு அழகா இருக்கு. பேசாம இந்த பிசினஸையும் ஆரம்பிச்சர்லாமான்னு தோணுது. அத்தனை பேர்ஃபெக்டா டிஸைன் பண்ணி இருக்கே.”

இன்னும் வேலை பாக்கி இருக்கு அத்தான். நாச்சுரல் ஃப்ளவர்ஸ் இன்னும் வரலை. அது வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாம் ஃபினிஷ் பண்ணுவாங்க.” சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தான் சுதாகரன்.

அம்மணி ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கே!”

இல்லையா பின்னே. திரும்பிக் கூட பாக்காத அத்தானோட, நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்திருக்கேனே. சந்தோஷம் இருக்காதா?” சொன்னவளின் கரத்தைப் பிடித்துக் கொண்டவன், அதை லேசாக அழுத்திக் கொடுத்தான்.

அப்பிடியெல்லாம் ஒன்னும் ப்ளான் பண்ணி உன்னை ஹர்ட் பண்ணலை மது. சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் அந்த மாதிரி அமைஞ்சு போச்சுடா.”

ம்விடுங்க அத்தான். பழைச பேசி என்ன ஆகப்போகுது. என் அத்தான் இப்போ எங்கூட இருக்காங்க, எனக்கு அது போதும்.”

மது, உம் மனசுல அந்த காயம் இன்னும் இருக்கில்லையா?” சொன்னவனைப் பார்த்து கண்ணை எட்டாத ஒரு சிரிப்பு சிரித்தாள் உமா.

உண்மையை சொல்லட்டுமா அத்தான். இந்த உலகத்துல யாரு என்ன சொன்னாலும் என்னை அது பாதிக்காது. ஆனா, அதுவே நீங்க சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா, நான் அப்பிடியே மாறிப் போயிடுறேன். என்னையே என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை அத்தான்.”

ம்புரியுது மது.” 

அத்தான், நாளைக்கு நைட் எல்லா வேலையும் முடிஞ்சதுக்கு அப்புறம் நான் இங்க வருவேன். அப்போ நீங்களும் வர்றீங்களா?” ஆசையாகக் கேட்டவளின் காதோரக் கூந்தலை ஒதுக்கியவன்

கண்டிப்பா வர்றேன் டா. நிச்சயதார்த்தத்துக்கு பதிலா கல்யாணத்தையே வெச்சிருக்கலாம் மது.” இடையோடு அவளை அணைத்தவன் ஆதங்கப்பட, சுற்று முற்றும் பார்த்தாள் உமா. ஆங்காங்கே வேலை செய்பவர்கள் நின்றிருந்தார்கள். மண்டபத்திற்கு பொறுப்பானவரை அழைத்த உமா,

அண்ணா, அப்பா வந்தாங்கன்னா நான் அத்தான் கூட போறேன்னு சொல்லிடுங்க என்ன?” என்றாள்.

சரிங்கம்மா.” அவர் சொல்லவும், சுதாகரனின் கையிலிருந்த கார்க் கீயை வாங்கியவள்,

இன்னும் கொஞ்ச நேரத்திற்கு காரும், காருக்கு சொந்தக்காரரும் என் பேச்சைத் தான் கேக்கனும்என்று சொல்லிய படி, முன்னே நடந்தாள். புன்னகையுடன் பின் தொடர்ந்தான் சுதாகரன். அவள் பிடிவாதம் தான் அவன் அறிந்தது ஆயிற்றே.

காரை ட்ரைவ் பண்ணியவள் நேராக ஆற்றங்கரைக்கு வந்திருந்தாள். சுதாகரன் அவளைக் கேள்வியாகப் பார்க்க புன்னகைத்தவள்,

அத்தானோட கொஞ்ச நேரம் செலவு பண்ணனும்னு தோணிச்சு.” என்றாள்.

ம்ஹூம்செலவு பண்ணுற நேரத்துல கொஞ்சம் கருணையும் காட்டலாம் இல்லையா?” அவன் கேலியாக சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்தவள் கண்களில் கலக்கம் இருந்தது.

மது, என்னாச்சுடா. ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” அவனின் கேள்விகளில் உடைந்தவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

மது, எனி ப்ராப்ளம்? உம் மனசுல என்ன இருக்கு? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணுற?” அவன் பேசப் பேச அவள் அணைப்பு இறுகியது.

அத்தான்.” கலக்கத்துடன் வந்தது அவள் குரல்.

இங்கப் பாரு மது, எதுவா இருந்தாலும் மனசுல வச்சு குழம்பிக்காக எங்கிட்ட சொல்லுடா. இப்போ என்ன குழப்பம்? யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான்.” 

அப்போ எதுக்கு இந்தக் கலக்கம். எவ்வளவு சந்தோஷமான நேரம் இது. இந்தக் கணங்களை நாம ரெண்டு பேரும் அனுபவிக்க வேணாமா மது?”

மனசுல ஏதோ ஒரு பயம் அத்தான். எல்லாம் நல்ல படியா எந்தப் பிரச்சினையும் இல்லாம முடியனும்கிற பயம் ஒரு மூலையில இருந்துக் கிட்டே இருக்கு அத்தான்.”

அடடா, இது என்ன சின்னப் பிள்ளை மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு. இது நியாயமே இல்லை மது.”

எது அத்தான்?”

ஆத்தங்கரை ஓரம், காத்து சிலு சிலுன்னு வீசுது. யாருமே இல்லாத தனிமை, அழகான மாமன் பொண்ணு பக்கத்துல. இப்பிடி ஒரு ரொமாண்டிக் அட்மோஸ்ஃபியரை அனுபவிக்க விடாம, அழுது வடிஞ்சா எப்பிடி மது?” கேலியாகக் கேட்டபடி அவள் நெற்றியில் செல்லமாக மோதினான் சுதாகரன். கலங்கிய கண்களைத் துடைத்தவள்,

சரியான வெளக்கெண்ணைய் அத்தான் நீங்க. சந்துல சிந்து பாடாம இதுக்கெல்லாமா பர்மிஷன் கேட்டுக்கிட்டு நிப்பாங்க.” என்றாள் அசால்ட்டாக. அவள் சொன்னதின் அர்த்தம் புரிய சற்று நேரம் பிடித்தது சுதாகரனுக்கு. வாய்விட்டு உல்லாசமாகச் சிரித்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். தங்கள் உலகத்தில் மயங்கி உருகிய இருவரும் தங்களைக் கடந்து போன பென்ஸைக் கவனிக்கவில்லை

 

 

error: Content is protected !!