VNE 45(2)
VNE 45(2)
“அத்தை மாமால்லாம் வீட்ல தான் இருக்காங்க ஷ்யாம்…” என்ற கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தான். கண்களில் வெறுமை!
நம்பியவன் முதுகில் குத்த, காதலித்தவள் புரிந்து கொள்ள மறுக்க, அந்தரங்கம் ஊருக்கே வெளிச்சமிட்டு காட்டபட்டிருக்க, அதையும் சந்தர்ப்பவாதிகள் உபயோகிக்க நினைக்க என இவனது நிலையை எண்ணினால் கார்த்திக்கே பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. ஆனாலும் ஷ்யாம் அதையெல்லாம் சமாளித்து நிற்கிறானே என்று தான் தோன்றியது.
விஜி செய்த துரோகம் ஜீரணிக்க முடியாதது. ஷ்யாம் போன்ற ஒருவனிடம் இதை தானே எதிர்பார்க்க முடியும்?
ஆரம்பத்தில் அதிர்ந்தாலும், மனம் இப்போது ஷ்யாம் புறம் சாய்ந்தது.
இவனது இயல்பை அறிந்த விஜிக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று தான் புரியவில்லை. ஷ்யாம் சொல்வதை போல, அவன் செய்த தவறுகளை மகாவின் பெயரை சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறான் என்று தான் தோன்றியது.
அதே உணர்வோடு அவனைப் பார்க்க, அவன் இருளை வெறித்தபடி,
“ம்ம்ம்ம்…” என்றான்.
“தனியா இருக்காத மச்சான்… வா வீட்டுக்கு…” என்றவனை வெறுமையாக பார்த்தவன்,
“எந்த பக்கமிருந்து என்னை ஷூட் பண்ணிருப்பானே தெரியல கார்த்திக்… என்னன்னெமோ எனக்கு தோணுது…” கண்கள் எங்கோ பார்த்திருக்க, அவனது அந்த வார்த்தைகள் கார்த்திக்கை அதிர செய்தது.
“ப்ச்… அதெல்லாம் நினைக்காத ஷ்யாம்… கிளம்பி வா… இன்னைக்கு நம்ம வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்…” என்று அழைத்தவனை உணர்வில்லாமல் பார்த்தவன்,
“யாரை கார்த்திக் நம்பறது?” என்று வேதனையாக கேட்க, கார்த்திக்கு அந்த கேள்வி வெகு வேதனையாக இருந்தது.
“நான் இல்லையா? மஹா இல்லையா? உனக்காக உன்னோட குடும்பம் மொத்தமும் இல்லையா? ஏன் இந்தளவு பீல் பண்ற ஷ்யாம்… நாங்க எல்லாருமே இருக்கமே…”
“மஹா…” என்றவன் கசப்பாக புன்னகைத்தான். “ஷீ டிசர்வ்ஸ் பெட்டர் இல்லையா கார்த்திக்?” கசப்பாகவே கேட்டவன் நிமிர்ந்து அவனது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
கார்த்திக் மெளனமாக கீழே வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஷ்யாமுடைய கேள்விக்கு அவனது பதில் ஆமென்று தான் இருந்திருக்கும். ஆனால் அதை சொல்லவும் மனம் வரவில்லை. அவனது தங்கையின் மேல் ஷ்யாமுக்கு இருக்கும் நேசத்தின் அளவை புரிந்தவனால் அது போன்றதொதொரு பதிலை சொல்லவும் முடியாது. ஆனாலும் கூறினான்.
“நினைச்சிருக்கேன் ஷ்யாம்…” அதே ஆழ்ந்த பார்வை ஷ்யாமிடத்தில், மெலிதான புன்னகையோடு!
“ம்ம்ம்…”
“மூர்த்தி இருக்கார்ல…” என்றவனுக்கு அதை கூற சற்று தயக்கமாக இருந்தது.
“ப்ரொடியுசர் விநாயகமூர்த்தியா?”
“ம்ம்ம்ம்… நம்ம பண பிரச்சனை இருந்தப்ப, அவர்கிட்ட என்ன பண்றதுன்னு ஒரு தடவை கேட்டேன்…”
“ம்ம்ம்ம்”
“ஷ்யாம் லேடீஸ் மேட்டர்ல செம வீக்… எவளாவது நடிகை இருந்தா அனுப்பி விடு… கொஞ்ச நாளைக்கு உன்னை விட்டுடுவான்ன்னு சொன்னார்… இன்னும் எத்தனையோ பேரும் இந்த வார்த்தையை கொஞ்சம் கூட மாத்தாம சொல்லி இருக்காங்க… உன்னை பார்க்க முடியுமான்னு கேட்டதுக்கு, நடிகையா இருந்தா பார்க்கலாம்ன்னு சொன்னவங்க எத்தனையோ பேர் ஷ்யாம்… சாரி டூ சே திஸ்… உன் மேல இருந்த இம்ப்ரஷன் இதுதான்…” விஸ்கியை பருகியபடி கார்த்திக் கூறியதை கேட்டவன், உணர்வுகளற்ற பார்வையை அவன் மேல் பதித்திருந்தான்.
“ம்ம்ம்… வெளிய எப்படி வேணும்னாலும் இம்ப்ரஷன் இருக்கலாம் கார்த்திக்… ஐ ம் லீஸ்ட் பாதர்ட்… பாஸ்ட்ல என்னோட லைஃப்ஸ்டைல் வேற… ஆனா எல்லாரும் சொல்ற அளவுக்கெல்லாம் இல்ல… தட்ஸ் எ கைண்ட் ஆப் லக்ஸுரி… நான் மிஸ் பண்ணலை… அவ்வளவுதான்… அதை தப்புன்னு நான் சொல்லவும் மாட்டேன்… நான் என்ன பண்ணேன், பண்றேன்னு எனக்கு தெரியும்… நான் தப்பு பண்ணிட்டேன், இப்ப திருந்திட்டேன்ன்னு சொல்றதெல்லாம் ஹம்பக்… போலித்தனம்… பியுச்சர்லயும் இதே மாதிரி இன்னொரு தடவை சொல்ல சந்தர்ப்பம் அமையாதா? யாரும் யாரையும் திருத்த முடியாது…” என்றவன் சற்று இடைவெளி விட்டு, கால் மேல் காலிட்டு, கைகளை கட்டியபடி கண்களை மூடிக் கொண்டவன்,
“மஹாவோட ரிலேஷன்ஷிப்ப கமிட்மென்ட்டா பார்க்கறேன்… அவளுக்கு நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்… இருக்க முடியாதுன்னு எனக்கு தோணி இருந்தா கண்டிப்பா ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டேன்…” என்று நிறுத்தியவன், கண்களில் கனவோடு,
“அதுவும் ஒரு சிங்கிள் மொமென்ட்ல தோனுச்சு… மஹா இல்லாம என்னோட லைஃப் கம்ப்ளீட் ஆகாதுன்னு… ஐ லவ் தட் மொமென்ட்… அந்த மாதிரி மொமென்ட்ஸ் எனக்கு லைஃப் முழுக்க வேணும் கார்த்திக்…” என்றவனுக்கு அவன் இப்போதிருந்த சூழ்நிலையும் மீறி அன்று முதன்முதலாக ஏரிக்கரையில் பரிமாறிக் கொண்ட முத்தம் அவனது நினைவுக்கு வந்தது.
அப்போதைய மயக்கம் அவன் கண்களில், கிறக்கம் குரலில்!
அதன் பின் அவளை முத்தமிட்ட ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு தேவ கணங்களே! எத்தனையோ பார்த்துவிட்டவனுக்கு, இது வெறும் முத்தம் தானே என்று தோன்றாத அளவு, உயிருக்குள் புகுந்து அவனுள் மாயம் செய்த முத்தங்கள்!
இனி அவளது கண்களில் தனக்கான தேடலை காண முடியுமா? அதே காதலோடு அவளால் அணுக முடியுமா?
அதிலும் அவள் கள்ளத்தனமாக அவனை தழுவிக் கொண்டே பாடிய அந்த ‘நீதானே…’ பாடலையும், அவளது கண்களின் பாவங்களையும், பாடலுக்கு பின் அவளோடு மயங்கிய அந்த நேரத்தையும் மறக்க முடியுமா?
முதல் முத்தம் மயங்க வைக்க, இரண்டாவது கிறங்க வைக்க, மூன்றாவது உடலை சிவக்க வைக்க என கூடிக் கொண்டே போன அந்த தேவ நிமிடங்கள்… கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு அவளை எடுத்துக் கொள்ள பரபரத்த கைகளை முயன்று அடக்கி வைத்தாலும் அன்று அவள் கண்களில் கண்ட காதல்… காதலோடு கூடிய தாகம்… தன் சுயம் தொலைந்த அந்த கணம்! மறக்க முடியுமா?!
மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் தோளுரச, இருவருக்குள்ளும் உணர்வு தீயை பற்ற வைக்க, காதோரம் குறுகுறுத்த மீசையின் உராய்வில் அவள் மயங்கி கண்களை மூடிய அந்த தருணம்… கல்வெட்டாக அவனது மனதில் பதிந்து தான் போயிருந்தது.
அவளது மயக்கம் அவனை பித்தம் கொள்ள வைத்து கட்டுக்களை உடைக்க முயல, மெலிதாக நடுங்கியவளை அணைத்துக் கொண்டவன் மனம் மகிழ்ச்சியில் ததும்பி வழிய, கடற்காற்றை அனுபவித்தபடி அந்த பிரெஞ்ச் விண்டோவிலேயே தலை சாய்த்தபடி அமர்ந்து விட்டிருந்தான். அவளும் அவனது நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டு கடலை பார்த்துக் கொண்டிருந்தது எத்தனை நேரம் என்று தெரியவில்லை.
அந்த நிறைவான நிமிடங்கள் இனி வாய்க்குமா?
முயன்று தன்னை மீட்டுக் கொண்டு விஸ்கி க்ளாஸை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
ஷ்யாமுடைய பட்டவர்த்தனமான, எதையும் ஒளிக்காத வார்த்தைகளை கேட்டவனுக்கு அவ்வளவு பிடித்தது.
“புரியுது மச்சான்… ஆனா நான் சொல்ல வந்தது என்னன்னா, அவங்க சொன்னதையெல்லாம் கேட்டுட்டு உன் கூட பேசவே கூடாதுன்னு சொன்னப்ப கூட என் தங்கச்சி எல்லாரையும் எதிர்த்துட்டு நின்னா… ஷ்யாமை பத்தி எனக்கு தெரியும்… அவன் உண்மையானவன்னு என்கிட்ட வாதம் பண்ணா…” என்று கார்த்தி கூறியதை கேட்டவனுக்கு மெல்லிய புன்னகை… கசப்புக்களை ஜீரணம் செய்துவிட்டு இனிப்பை அருந்திய புன்னகை… தனக்காக வாதம் செய்தவளை எண்ணி மனம் விகசித்தது. அவளை, அவளது அந்த நம்பிக்கையை இழந்து விட்டோமோ என்ற பயமும் தன்னையும் அறியாமல் உள்ளுக்குள் பாம்பென சுருண்டதை அவனால் மறுக்க முடியவில்லை.
“அந்த மஹா எனக்கு வேணும் கார்த்திக்…” இருக்கையில் பின்னந்தலையை சாய்த்து கண்களை மூடியபடி சற்று சிறிய குரலில் கூறியவனின் குரலிலிருந்த வேதனை கார்த்திக்கை அசைத்தது.
“எனக்கு என்னவோ இந்த சிச்சுவேஷன்ல மேரேஜ் அந்த அளவு வொர்க் அவுட் ஆகும்ன்னு தோணலை மச்சான்… கொஞ்சம் தள்ளிப் போடலாமே?” என்று கூற, நிமிர்ந்து அவனை பார்த்தான்.
“முடியாது மச்சான்… இந்த சிச்சுவேஷன்ல தான் கண்டிப்பா மேரேஜ் நடந்தே ஆகனும்…” அவ்வளவு தீவிரமான குரலில் கூறியவனை புரியாமல் பார்த்தான்.
“ஏன்? கொஞ்சம் ஸ்பேஸ் கொடேன்… அவளும் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணிடுவா ஷ்யாம்…”
“மீடியா என்னை டைஜஸ்ட் பண்ணிடும்… இதே விஷயத்தை பத்தி பேசி எழுதி… உப்ப்ப்…” என்று பெருமூச்சு விட்டவன், “இப்போதைக்கு அந்த லீக்ஸ்ல சம்பந்தப்பட்டது நான்னு வெளிய அவ்வளவா பரவலை… ஆனா இப்படியே இருக்காது… ஒன்ஸ் வெளிய பரவ ஆரம்பிச்சுடுச்சுன்னா கஷ்டம் கார்த்திக்… அதுக்குள்ளே அவங்க வாயை அடைக்கணும்… சோ மேரேஜ் இஸ் தி ஒன்லி சொல்யுஷன்… அதுவும் இல்லாம அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்க நான் விரும்பலை… இப்பவே என்னை விட்டு ரொம்ப தள்ளி போய்ட்டா…” வலியோடு கூறியவனை ஆதூரமாக பார்த்தவன்,
“இல்ல மச்சான்… இதெல்லாம் இனிஷியல் ஹிக்அப்ஸ் தான்… கண்டிப்பா உன்னை ரொம்ப லவ் பண்றா… ஆனா ஓவர் பொசெசிவ்… அதனால தான் நான் உன்ட்ட சொன்னேன்… அவளோட டெம்பர் உனக்கு ஒத்து போகாதுன்னு… இப்பவும் ஒன்னும் தப்பில்ல… யோசி… கொள்ளிகட்டையால தலைய சொரியாதன்னு எங்கம்மா தான் சொல்லும்… இந்த மேரேஜ் உனக்கு ரொம்ப ரிஸ்க் ஷ்யாம்…” என்று தீவிர குரலில் கூறியவனை பார்த்து சிரித்தான்.
“பரவால்ல நான் சொருஞ்சுக்கறேன்…” என்று சிரித்தவன், “எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணிக்கலாம் கார்த்திக்… ஆனா விட முடியாதுன்னா முடியாதுதான்…” என்று அழுத்தம்திருத்தமாக கூறியவனை பார்த்து சிரித்த கார்த்திக்,
“உன்னோட இந்த ஆட்டிடியுட் தான் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ற விஷயம் மச்சான்… இவ்வளவு தெளிவா இருக்க… விஜி விஷயத்துல கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கலாமே…”
நேரடியாக கேட்டான் கார்த்திக். விஸ்கி க்ளாசை ஒற்றைக் கையில் உருட்டியபடி யோசித்தான் ஷ்யாம். இது தனிப்பட்ட பிரச்சனையாக இருந்து இருந்தால் தான் இந்தளவுக்கு இறங்கி இருக்க போவதில்லை என்று தோன்றியது. கெமிக்கல் ரியாக்ஷன்களில் கேட்டலிஸ்ட் என்று சொல்வார்களே… அது போல… இங்கு மஹா!
அவளது கண்ணீர்… அவளது கோபம்… அவள் முன் தான் பட்ட அவமானம்… அவளது கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லாமல் போன கணங்கள்… அவளை தன்னிடமிருந்து பிரிக்க நினைத்த விஜியின் நடவடிக்கை… அவள் தனக்கு மட்டும் தான் என்ற தன்னுடைய உள்மன வெறி… இப்படி அனைத்தும் அவளால்… அவளுக்காக… அவளே!
இதை எப்படி சொல்வது? அவளை காரணம் காட்டி தான் செய்தவற்றை நியாயப்படுத்துவது போல ஆகி விடாதா? தான் செய்த அனைத்துக்கும் தான் மட்டுமே பொறுப்பு. அது நல்லதோ கெட்டதோ… எதுவாக இருந்தாலும்… அவளால் செய்தேன் என்று சொல்வது எஸ்கேபிசம்… அது உண்மையாகவே இருந்தாலும் அதை தான் சொல்ல முடியாது. அந்த காரணங்கள் எல்லாம் தன்னுடைய உள்மனவெளிக்கு மட்டுமே சொந்தமானவை!
மெளனமாக இருப்பவனை பார்த்து, “கொஞ்சம் நிதானமா இருந்து இருக்கலாம்ன்னு இப்ப தோணுதா ஷ்யாம்?” என்று கேட்க,
மறுத்து தலையசைத்தான்.
“ஐ டேக் தி கம்ப்ளீட் ஓனர்ஷிப் ஃபார் வாட் ஹேப்பன்ட் கார்த்திக்… நிதானமா செஞ்சு இருக்கலாமோன்னு ரீஎக்சாமைன் பண்ணவும் மாட்டேன்… வேற மாதிரி இருக்கலாமோன்னு நினைக்கவும் மாட்டேன்… நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும்… தெரியாம பண்ணிட்டேன்னு சொன்னா அது…” என்றவன், சற்று நிறுத்தி, “இட்ஸ் எ கைன்ட் ஆப் டிஸ்ஹானஸ்டி… ஏமாற்றுவேலை… வஞ்சகம்… நான் அப்படி பண்ண மாட்டேன்… என்ன பண்ணாலும் அதை நான் பண்ணா, நான் அது என்னோட சுய உணர்வுல பண்ற வேலை தான்… நோ அதர் செகன்ட் தாட்…”
மிகத் தெளிவாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான். தவறு செய்துவிட்டால் அந்த பழியை மற்றவர்கள் மேல் திணித்து தான் தப்பித்துக் கொள்வதைத்தான் பார்த்து இருக்கிறான். ஆனால் ஷ்யாம்? அவனை பார்க்கும் போதே வியப்பாக இருந்தது.
“ஆனா அந்த வீடியோவும் போட்டோவும் எடுத்தப்ப எனக்கு கண்டிப்பா சுயநினைவு இல்ல…” என்றவனை அதிர்ந்து பார்த்தான் கார்த்திக்.