VNE 56(3)
VNE 56(3)
“ஐயோ… என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கறா…” என்று வேண்டுமென்றே கத்த,
பிருந்தாவும் கார்த்திக்கும் சிரிக்க, பல்லைக் கடித்த மஹா, பேசாமல் பைரவியை நோக்கி போனாள்.
அதன் பின்னும் இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு, அரட்டையை தொடர்ந்து விட்டுத்தான் கிளம்பினான். கார்த்திக் பிருந்தாவை அழைத்துக் கொண்டு போய் விட தயாராக, ஷ்யாம் மஹாவோடு கிளம்பினான்.
மஹா இறுக்கமாகவே தான் இருந்தாள் என்பது கார்த்திக்கும் புரிந்தது, பிருந்தாவுக்கும் புரிந்தது. ஆனால் ஷ்யாமுக்கு நேர இருக்கும் சேதாரத்தின் அளவு தான் அவர்களுக்கு புரியவில்லை.
கிளம்பியவனின் அருகில் சென்ற கார்த்திக்.
“மச்சி… நைட் ஒரு பன்னெண்டு மணிக்கு கால் பண்ணட்டா?” என்று கிசுகிசுப்பாக கேட்டான் சிரித்துக் கொண்டே.
“ஏன்டா? ஏன் இந்த கொலவெறி உனக்கு?” என்று சிரித்தவன், மஹாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
“இல்ல மச்சி… பாத்தா அடி பலமா விழும் போல இருக்கு… அதான் என்னாச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்ல…”
“கிராதகா… நீயெல்லாம் ஒரு மச்சானா…” என்று மஹாவை பார்த்தவன், “யோவ் என்னய்யா பண்ணி வெச்சு இருக்க?” என்று அவனையே கேட்டான் ஷ்யாம்.
“நான் பண்ணி வைக்கல மச்சி, நீ தொட்ட குறை, விட்ட குறை தான்… வீட்டுக்கு போ… தெரியும்…” என்று கூறியவன், கண்ணடித்துவிட்டு, பிருந்தாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
ஓரக்கண்ணில் மீண்டும் மகாவை பார்த்தவன், நெஞ்சை நீவிக் விட்டுக் கொண்டான்.
“எத்தனையோ பாத்துட்டோம்… இதை பாக்க மாட்டோமா?”
*****
மெளனமாக வீட்டினுள் நுழைந்தவளின் முகம் கோவைப் பழம் போல சிவந்திருந்தது. எதுவும் பேசாமல் குளித்து விட்டு, பாலை சூடு செய்தவள், இரண்டு பேருக்குமாக எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.
அவள் வருவதற்கு முன்பாகவே படுத்திருந்தவன், இறுக்கமாக கண்களை மூடிக் கொண்டான்.
எந்த நேரம் வெடிகுண்டு வெடிக்க போகிறதோ என்ற உள்ளார்ந்த பயம் தான்!
ஆம் பயமே தான்!
‘ஊருக்கே நீ டானா இருக்கலாம் தம்ம்ம்ம்ப்ப்ப்ரி… ஆனா உன் பொண்டாட்டி கிட்ட டண்டணக்கா டான் தான…’ என்று வெண்ணிறாடை மூர்த்தி கூறுவது போல அசரீரி கேட்டது.
பாலை எடுத்துக் கொண்டு வந்தவள், நங்கென்று டேபிளில் வைக்க, அதை கண்டுகொள்ளாதவன் போல, கண்களை திறக்காமல் படுத்து இருந்தான்.
முந்தைய தின இரவே அவனது அத்தனை ஆசைகளுக்கும் மூடு விழா நடத்தியிருந்தாள் அவனது மனைவி. அதனால் பேருந்துகளில் குறிப்பிட்டு இருக்கும், ‘கரம், புறம், சிரம்’ நீட்டாதீர்கள் என்பதை வெகு நேர்த்தியாக கடைபிடிப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அதிலும் மோகத்தின் ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்திருந்த அவனை, அணுவணுவாக அவளை ரசித்து புசித்துக் கொண்டிருந்தவனை பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி…
எவரெஸ்ட் உச்சியின், எண்பத்தி எட்டு நாற்பத்தி எட்டை கடக்க இன்னும் சில அடிகளே மிச்சம் உள்ளது என்ற நிலையில் அவள் கேட்ட அந்த கேள்வி அவனை அங்கிருந்து தூக்கி கீழே எறிந்து இருந்தது.
“ஒன்ஸ் யூஸ் பண்ணிட்டா உனக்கு இன்ட்ரெஸ்ட் போய்டுமே…” என்ற அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அந்த இடத்தில், அந்த நிலையில், அந்த நேரத்தில் அவனுக்கு புரியவே இல்லை. தான் அவனல்ல என்று அவனது மனம் கத்திக் கூறிக் கொண்டிருந்த போது தான், அடுத்த கண்ணி வெடியில் அவன் கால் வைத்தான்.
“அவன் இல்லடி இவன்… இப்ப இருக்கவனுக்கு இந்த மஹா மட்டும் தான் வேணும்…” என்றவனை, ஆழ்ந்து பார்த்தவள்,
“அப்படீன்னா எப்படி அவ்வளவு டீப்பா ஃபீல் பண்ணிருக்க?” என்று கேட்க, அவனுக்கு புரியவில்லை.
“என்ன ஃபீல் பண்ணிருக்கேன்?” உண்மையிலேயே அவனுக்கு என்ன சொல்ல வருகிறாள் என்பதே புரியவில்லை.
“அந்த வீ… வீ…” என்று தயங்கியவள், “வீடியோல…” என்று முடிக்க,
என்னவென்று யோசித்தவன், நினைவுக்கு வந்ததும் தலையிலடித்துக் கொண்டான்.
“ஓ மை காட்… இன்னும் அந்த நெனப்புல தான் இருக்கியா?” என்று கேட்க, அவளது கண்களில் கண்ணீர் வெள்ளம்.
“என்னை அழ வைக்க போறேன்னு சவால் விட்டல்ல… அதான் எப்படியெல்லாம் என்னை அழ வைக்கற பார்…” என்றவள், இப்போது முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்து இருந்தாள்.
அவளது கண்ணீர் அவனை வெகுவாக சுட்டது. ஒன்பதாவது மேகத்தில் பறந்து கொண்டிருந்தவனை தரையில் தூக்கியடித்து இருந்தது.
அவளை தான் அழ வைக்கிறேனா? அதுதான் உண்மையா? மனம் வெகுவாக காயப்பட்டு இருந்தது. மெளனமாக அவளை விட்டு விலகியவன், குரல் கனக்க,
“லைஃப்ல தோத்துகிட்டு இருக்கனோன்னு எனக்கு தோணுது மஹா…” என்றவனின் கையை பிடித்தாள்.
“ப்ச்… விடு…” என்றவன், பால்கனியிலிருந்த மூங்கில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரவை வெறிக்க ஆரம்பித்து இருந்தான். எவ்வளவு சந்தோஷமாக துவங்கிய ஒரு உறவு… முடிவு பெறாமல், அதிலும் வெகுவாக காயப்பட்டு, இது போல முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை.
அதே மனநிலை தான் இன்றைக்கும் அவனுக்கு. முந்தைய தினம் இரவு முழுவதையும் பால்கனியிலேயே கழித்தவன், இப்போது கண்களை இறுக்கமாக மூடியபடி படுத்துக் கொண்டான்.
கண்ணை திறந்து பார்த்தால் தானே விசுவாமித்திரனின் தவத்தை மேனகை கலைக்க?!
“பால்…” என்றவளின் குரலுக்கு விழிக்க வேண்டுமா என்று யோசித்தது மனது.
‘யோசிடா ஷ்யாம்… நீ கண்ணை தொறந்தா கண்டிப்பா உன்னை சமாதி பண்ண ரெடியா இருக்கா… அதுவும் இன்னைக்கு… வேண்டாம் டா… சபலப்பட்டுடாத செல்லம்… ஸ்டெடி… ஸ்டெடி…’ தனக்கு தானே கூறிக் கொண்டவன்,
“நான் தூங்கிட்டேன்…” என்று இன்னமும் இறுக்கமாக கண்களை மூடிக்கொள்ள,
“அந்த தூங்கின மூஞ்சியை கொஞ்சம் இந்த பக்கம் காட்டு…” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு!
‘தூங்கினா எப்படி எனக்கு கேக்கும்… ஆஹா மாட்டிகிட்டேனே…’ என்று யோசித்தவன், அவள் புறம் திரும்பி, “ஹாய் பொண்டாட்டி… எப்படி இருக்கீங்க?” என்று கையை காட்டி, ‘ஈஈஈஈ’ என்று சிரித்து வைக்க,
“சகிக்கல…” என்று கடுப்படித்தாள்.
“அப்படியா? ஓகே… பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு என்னோட மூஞ்சியை மாத்திக்கட்டா?” என்று அப்பாவியை போல அவன் கேட்டு வைக்க,
“ஏன்?” என்று கேட்டு முறைத்தாள்.
“நீங்க தான் சகிக்கலைன்னு சொல்லிட்டீங்களே மேடம் ஜி…”
“உன்னை….” என்று கடுப்பாக பல்லைக் கடித்தவள், “ஏன்டா… அத்தனை பேரையும் விட்டுட்டு உன்னை தான் கட்டிப் பிடிப்பாளா?” நின்று கொண்டு ரவுத்திரமாக கேட்க,
“யாரடி சொல்ற?” என்று கேட்டான் ஷ்யாம். உண்மையில் அவளது கேள்வி அவனுக்கு புரியவே இல்லை.
“ம்ம்ம்ம்… உன்னோட வப்… ம்ம்ம்ம்… எக்ஸ் கேர்ள்ப்ரென்ட்ட சொல்றேன்…” என்றவளின் முகத்தில் கோபம் கனன்றுக் கொண்டிருந்தது.
“எவடி அவ? எனக்கே தெரியாம?”
“ம்ம்ம்… சௌஜன்யா யாராம்?” சீறினாள்.
“அவ எப்ப டி என்னோட கேர்ள் ப்ரென்ட் ஆனா?”
“அப்புறம் எப்படிடா?” என்று கேட்க வந்தவள், அதற்கும் மேல் கேட்க முடியாமல் நிறுத்த,
“பேசிகலி உனக்கு ஒரு விஷயம் புரியல…” என்றவன், எழுந்து படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டவன், “லவ் வேற, லஸ்ட் வேற மஹா… ஆக்சுவலி அது லஸ்ட் கூட கிடையாது… ஜஸ்ட் ன் ஒன் நைட் ஸ்டான்ட்… இப்ப நாம…” என்று கூறிக் கொண்டே போக,
“நிறுத்து… எனக்கு ஒரு எழவும் தெரிய வேணா… எஸ்ஜே சூர்யா மாதிரி இருக்கு ஆனா இல்லையாம்… எனக்கு காது குத்திட்டாங்கடா…” பல்லைக் கடித்தவள், “அதை விட்டுத் தொலை… பழசை பேசி ஒண்ணுமே ஆக போறதில்லைன்னு வேற டையலாக் அடிப்ப… இப்ப எப்படி அவ உன்னை கட்டிபிடிச்சா? அதுக்கு பதிலை சொல்லாம நீ தூங்கறவனா?”
“எப்படி கட்டிப் பிடிச்சா?”
“ம்ம்… வேணா… என்னை கொலகாரியாக்காத…” என்றவளின் முகம் தக்காளிப் பழமாக சிவந்திருக்க, அப்போதுதான் சௌஜன்யா கவுன்சில் மீட்டிங்கின் போது சிரித்தபடி அவனது இடையை வளைத்தது நினைவில் வந்தது. ‘ஆஹா வெச்சுட்டாங்கய்யா ஆப்பு’ என்று தலை சுற்றித்தான் போனான்.
“ஏய் லூசு பொண்டாட்டி… அவ பழக்கமே இப்படித்தான்… உனக்கு தெரியாதா? அவ ஏதோ படம் ப்ரோடியுஸ் பண்ண போறாளாம்… முன்னாடியே ரெண்டு படம் ப்ரோடியுஸ் பண்ணிருக்கா… இப்ப பைனான்ஸ் கேட்டா… யோசிக்கறேன்னு சொன்னேன்… அவ்வளவுதான்டி நடந்தது…” என்று கூறியவனை முறைத்தாள்.
“அதுக்கு எதுக்குடா கட்டிப்பிடிக்கணும்? நீ ஈஈன்னு இளிக்கணும்?” மனைவியின் கிடுக்கிப் பிடி கேள்விக்கு அவன் பதில்களை தயார் செய்தா வைத்தான்? ‘கிராதகா… சாமியாட போறான்னு சொன்னியே… இதான் மேட்டருன்னு சொன்னியாடா? தெரிஞ்சு இருந்தா கொஞ்சம் பிரிப்பர் பண்ணி இருப்பேனே…’ கார்த்திக்கை மனதுக்குள் வறுத்து எடுத்தவன்,
“டார்லிங்… அவ கட்டிப் பிடிக்கறதுக்கு நான் என்ன பண்ண? அதோட அவளை பார்த்து நான் எப்ப டார்லிங் சிரிச்சேன்? அந்த உன் அண்ணன் பன்னாடை என்னவோ சொன்னான்னு சிரிச்சேன் டா…ர்ர்ர்லிங்க்க்க்…” என்று கடுப்பாக கூற,
“என் அண்ணன் உனக்கு பன்னாடையா? எருமை…”
“பின்ன… பேரை வெச்சானே… அதுக்கு சோறு வெச்சானா? மேட்டரை சொல்லாம…” என்று பல்லைக் கடிக்க,
“என்னடா மேட்டர்?”
“ம்ம்ம்… உன்னோட க்ராஸ் எக்ஸாமினேஷன் முடிஞ்சுச்சா?” என்றவனை முறைத்துக் கொண்டே பாலை அவனிடம் கொடுக்க, ஒரே மூச்சில் குடித்து விட்டு கவிழ்ந்தடித்து படுத்தான்.
முணுமுணுத்துக் கொண்டே அவள் அவனருகே படுக்க, அவளை நோக்கி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு ஒற்றைக் கையால் தலையை பிடித்துக் கொண்டு,
“இங்க பார் மஹா… திஸ் இஸ் தி லிமிட்… இந்த கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது… நானும் வர மாட்டேன்…” என்று இருவருக்குமிடையில் தலையணையை வைத்து விட்டு அவளிடம் பாடம் எடுக்க, அவள் தன்னுடைய வாயில் கை வைத்து,
“டோர் க்ளோஸ் பண்ணிக்க… ஆல் டீட்டைல்ஸ் ஐ நோ…” என்றவளை,
“அப்படித்தான்டி சொல்வ… ஆனா நீயே என்னை உசுப்பேத்தி விடுவ… காலை பாரு பாவா… அதைப் பாரு பாவா… இதை பாரு பாவான்னு ஹஸ்கியா பேசி மூடை ஏத்தி விடுவ… நானும் ஜொள்ளு விட்டுட்டு மானம் கெட்டு போய் உன்கிட்ட வருவேன்… அப்புறம் திடீர்ன்னு ஞான கண்ல உனக்கு ஏதாவது தெரிஞ்சுடும்… சிகரெட்டை தூக்கி போட்டு மிதிச்சு ராவர மாதிரி என் மூடை மிதி மிதின்னு மிதிச்சு ஒரு வழியாக்கிட்டு அழுவ… அப்புறம் உன் சோகம் என்னை தாக்க கண்மணி கண்மணின்னு நானும் பீல் பண்ணிட்டு ராத்திரி பூரா முழிச்சுட்டு இருக்கணும்… நோ சான்ஸ்… நீ அந்தபக்கம்… நான் இந்தப்பக்கம்… நோ டச்சிங் டச்சிங்… ஹஸ்கியா ஏதாவது பேசு… ராவிடறேன் ராவி…” நீளமாக கடுப்பு ப்ளஸ் எரிச்சலோடு பேசிவிட்டு கவிழ்ந்தடிக்க, அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. வாய் விட்டு சிரித்தவள்,
“அப்படியா பாவா…” அவன் கூறியதை போலவே வேண்டுமென்றே ஹஸ்கியாக கூற,
“வேணான்டி… நேத்தே என்னை ரொம்ப டென்ஷனாக்கி விட்டுட்ட…” என்றவனை,
“என்ன பாவா… பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டீங்க…” என்றவளின் குரலில் அத்தனை போதையிருந்தது. ஆனால் அவள் அதை விளையாட்டாக செய்து கொண்டிருந்தாள்.
“ஏய் வேணா… அப்புறம் சேதாரமானா நான் பொறுப்பில்ல…” கையை நீட்டி எச்சரிக்க,
“அப்…. ப்ப… டியா பாவ்வ்வா…” என்பதை அத்தனை போதையாக கூறியது அவளது அதரங்கள். அவளையே சற்று நேரம் பார்த்தவனுக்குள் ஒருவிதமான போதை ஏறியது.
நடுவிலிருந்த தலையணையை தூக்கிப் போட்டவன், அவளது முகத்தை பற்றி, ‘பாவ்வ்வா’ என்று போதையாக கூறிய அந்த அதரங்களை கொய்தான்.
கைகள் அதன் போக்கில் பயணிக்க, தன்னுள் அவளை மெய்மறந்து ஆழ செய்தவன், சற்று நேரம் கழித்து அவளை விடுவித்து விட்டு,
“நானும் மனுஷன் தான்டி… என்னை கன்னாபின்னான்னு உசுப்பேத்தி விட்டுட்டு, என்னவெல்லாம் பேசற…” என்றவன், “இன்னொரு தடவை பாவ்வ்வான்னு ஹஸ்கியா கூப்பிடு… அப்புறம் உனக்கு இதான் ட்ரீட்மெண்ட்…” என்றவனின் ட்ரீட்மென்ட்டில் சிரிக்கத் தான் தோன்றியது, வெட்கத்தோடு!
வெட்கமாக சிரித்தவளை பார்த்தவன்,
“நோஓஓ… கண்ட்ரோல் டா கண்ட்ரோல்… இன்னைக்கு இவ என்ன பண்ணாலும் நாம அசைஞ்சே கொடுக்கக் கூடாது…” என்றவன், இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தான்.
மஹா வாய்விட்டு சிரித்தாள்!
வெகு நாட்களுக்கு பிறகு, இலகுவான மனநிலையில் உறங்கினாள்!