VNE 62(4)

VNE 62(4)

மனம் தடதடத்தது!

எப்படியும் தனி ஆவர்த்தனமும் நிச்சயம்!

கதவை திறந்தாள்…

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் மட்டுமே அறையை நிறைத்திருக்க, ஷ்யாம் ஜன்னலின் வழியே கசிந்த நிலவொளியில் ஆழ்ந்தபடி நின்றிருந்தான். மஹாவின் கண்களில் கண்ணீரை கண்ட போது அவன் தன்னை மறந்து அவளை சமாதானம் செய்து விட்டான் தான். ஆனால் அவனால் உண்மையில் இன்னமும் நிலைக்கு வர முடியவில்லை.

தன்னுடைய அத்தனை தவிப்பும், துடிப்பும், காதலும்… அவள் உணரும் படி ஏன் செய்ய முடியவில்லை?

அனைத்தையும் மறந்து யாரோ ஒருவன் கூறிய தகவலை நம்ப முடிகிறது என்றால், இத்தனை காதலும் விழலுக்கு இறைத்த நீரா?

இறுக்கமான முகத்தோடு கைகளை கட்டிக் கொண்டு அவனிருந்த நிலையை பார்த்து உள்ளுக்குள் லேசாக நடுங்கியது!

“ப்.. பா… பால்…” சொல்லும் போதே அவளுக்கு நடுங்கியது.

ஷ்யாம் எதுவும் பேசவில்லை.

அவனிடம் கொண்டு வந்து கொடுக்க, அவன் மெளனமாக அவளையே பார்த்தான். அந்த கண்கள் என்ன சொல்கிறது என்பதை படிக்க முயன்றாள்.

பாலை வாங்கி வைத்தவன், வேறு புறம் திரும்பிக் கொண்டான்!

தன்னைத் தானே வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்!

அவளுக்கு பேச பயமாக இருந்தது. என்ன சொல்வான் என்று தெரியவில்லை. வெளியில் சமாதானம் ஆனது போல தோன்றினாலும் உண்மையில் அப்படி இல்லை என்று அவளுக்கு தெரியும். அவ்வளவு சீக்கிரத்தில் அவனை சமாதானம் செய்யவும் முடியாது என்பதையும் அவள் புரிந்து வைத்து இருந்தாள். தான் செய்த காரியத்தின் வீரியம் இப்போது அவளுக்கு மிகத் தெளிவாக புரிந்தது.

தன்னுடைய உணர்வுகள் தனக்கு நியாயமாக தோன்றினாலும், அவனது உணர்வுகளை தான் கணக்கில் கொள்ளவில்லை என்பதும் புரிந்தது.

அவன் தவறிய போது எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல் நேரடியாக மன்னிப்பு கேட்டிருக்கிறான். தானும் மன்னிப்பு கேட்பதில் தவறில்லை என்றெண்ணிக் கொண்டு,

“ஷ்.. ஷ்யாம்…” என்றழைக்க, அவன் திரும்பவில்லை. வலுக்கட்டாயமாக அவனது முகத்தை திருப்பினாள்.

அவனது கண்கள் சிவந்து கலங்கியிருந்தது.

கலங்கிய அவனது முகத்தை அதிர்ந்து பார்த்தாள்.

“ஷ்யாம்… என்ன இது?” அவனது அழுத்தமும் அடங்காப்பிடாரித்தனமும் வெளியில் தான் என்பது தெரியும். அவளிடம் எப்போதுமே அவ்வளவு மென்மையான காதலன் தான். அவனை பார்க்கையில் தாய் தவிக்க விட்டுப் போன சிறு குழந்தையாகதான் இப்போது தோன்றியது. அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

வேறு புறம் திரும்பி கொண்டான். அவனது அந்த முகத்தை காட்ட அவனுக்கு விருப்பமில்லை. அவள் முன்னிலையில் கீழிறங்க அவன் தயங்க மாட்டான் தான். ஆனால் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்ட மனைவியின் மேல் இன்னும் கோபம் குறைந்தபாடில்லை. அழுத்தமாக நிற்க முயன்றான். ஆனால் முடியவில்லை.

அவனது முகத்தை மஹா திருப்ப, “ப்ச்…” என்று முகத்தை சுருக்கியபடி அவளது கையை எடுத்து விட்டான். முகம் இன்னமும் சிவந்திருந்தது. தன்னைத் தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு என்ன செய்து அவனை சமாதானம் செய்வது என்று புரியவில்லை.

“சாரி… சத்தியமா உன்னை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியல… நான் ஓவர் பொசெசிவா இருக்கேன்னு தெரியுது… அந்த பொசெசிவ்னஸ் ஓவராகி நிறைய முட்டாள்தனம் பண்றேன்… சம்டைம்ஸ் ஐ ம் வெரி மச் சிக். அதுவும் புரியுது… இனிமேலும் இப்படி நடக்காதுன்னு என்னால ப்ராமிஸ் பண்ணவெல்லாம் முடியாது. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுவேன்… ஆனா மொத்தமா என்னால என்னை மாத்திக்க முடியாது ஷ்யாம்…” என்று கூறிக்கொன்டிருந்தவளுக்கு குரல் தேய்ந்து தழுதழுத்தது!

“என்னை நீ பைத்தியம், லூசு, அரவேக்காடுன்னு திட்டலாம்… நான் அப்படித்தான்டா இருக்கேன். பைத்தியமா… உன் மேல பைத்தியமா…” என்றவளால் அதற்கும் மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உடைந்து வாய்மூடி அழ ஆரம்பித்து இருந்தாள்.

அதற்கும் மேல் அவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான், அதற்கும் மேல் தாங்கவியலாமல் உடைந்து!

“அதுக்கும் மேல நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்டி… இன்னைக்கு எத்தனை தடவை செத்து பிழைச்சேன்னு எனக்கே தெரியல மஹா…” என்றவன், அவளை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டான், அவளுக்குள்ளே ஆழ்ந்து அமிழ்ந்து விடுவதை போல!

“ப்ளான்க்கா ஆய்ட்டேன்டா… என்ன பேசறேன்னே தெரியாம பேசிட்டேன்… சாரி… சாரி பார் எவ்ரிதிங்…” என்று அவனது நெஞ்சாங்கூட்டுக்குள் கரைந்து கொண்டிருந்தாள் மஹா!

“உன்னை காணோம்ன்னு போலீஸ் கமிஷனர் கிட்ட அன்அபீஷியலா கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தேன். அவங்க என்ன பண்ணாங்க தெரியுமா?” என்று அவன் கேட்க, நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தாள்.

“என்ன பண்ணாங்க?” கண்ணீரோடு அவள் கேட்க, அவளை இன்னமும் இறுக்கிக் கொண்டான், அவளை தவற விட்டுவிட கூடாது என்றெண்ணிக் கொண்டு!

“கிண்டில ஏதோ ஒரு பொண்ணு ட்ரைன் முன்னாடி விழுந்துடுச்சாம்… அந்த பாடிய பார்த்து வெரிபை பண்ணுங்கன்னு கூப்பிட்டாங்கடி…” என்று கூறியவனின் கண்களில் கண்ணீர் விழவா எழவா என கேட்டுக் கொண்டு நின்றிருந்தது.

மஹா அதிர்ந்து பார்த்தாள்!

இது எத்தனை பெரிய அதிர்ச்சி. அந்த இடத்தில் தான் இருந்திருந்தால்?

அந்த அதிர்ச்சியில் இதயத் துடிப்பே நின்றிருக்கக் கூடுமே…

“போய் பார்த்து இல்லைன்னு தெரியறதுக்குள்ள…” என்று கண்ணீரோடு நிறுத்தியவன், “செத்துட்டேன்… நீ இல்லைன்னா எனக்கு மட்டும் என்னடி இருக்கு இங்க?” என்றவன் அவளை முழுவதுமாக இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவனது உடல் குலுங்கியது.

அழுகிறான்! ஆண்கள் அழ மாட்டார்கள் என யார் சொன்னது?

கம்பீரம் மறந்து, சிறு குழந்தையாக, மனைவியின் மடி சாய்ந்து அழுவதும் ஆண்மைக்கு அழகுதான்!

சுகமோ, சோகமோ அதை மனைவிடம் மட்டும் கொட்டும் ஆண்மை ஆச்சரியமான அழகுதான் !

பத்து மாதம் தன் குழந்தையை மனைவி வயிற்றில் சுமக்க, இருவரையுமே காலம் முழுக்க நெஞ்சில் சுமக்கும் ஆண்மை ஒப்புமை இல்லாத அழகுதான்!

இல்லாளின் உணர்வுகளை உள்வாங்கி, அவளது உணர்வோடும் உயிரோடும் ஒன்றி கலந்து, காலமெல்லாம் பயணிக்கும் ஆண்மை ஆர்ப்பரிக்கும் அழகுதான்!

நரை கூடி கிழப் பருவம் எய்தும் போதும் காதல் கிழவியை கண் துஞ்சாமல் ரசிக்கும் ஆண்மை ஆனந்த அழகுதான்!

அவனை இவள் சமாதானம் செய்வாளா, இவளை அவன் சமாதானம் செய்வானா?

இருவருமே உணர்வுகளின் பிடியில்!

அவனது கண்ணீர் இவளுக்காக மட்டுமே!

இவளது கண்ணீர் அவனுக்காக மட்டுமே!

உயிருக்குள் கரைந்து கலந்து விட கட்டளையிட்டது உணர்வுகள்!

கண்களை துடைத்துக் கொண்டு சற்றே விலகி அவள் முகம் பார்க்க, தலை குனிந்தவள் நிமிரவில்லை.

அழுகை குறைந்து அவளுக்குள் வேறு ஏதோ ஒருவிதமான பரபரப்பு!

அவளது இடையை தன்னோடு இழுத்தபடி அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களை ஆழமாக பார்த்தான்!

“ஹண்ட்ரட்த் டே மஹா…” கரகரப்பாக ஒலித்த அவனது குரல் அவளுக்குள் ஏதோவொரு மாயத்தை செய்வித்தது. உடலில் புதுவித உணர்வு, ஒருவிதமான இன்ப அவஸ்தை!

நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனது உயரத்திற்கு எம்பி, அவனது முகத்தை கைகளால் பற்றி, அவனது உதட்டுக்கு வெகு அருகில் போய் ஒரு நொடி யோசித்தவள், அவனது உதட்டில் முத்தமிட்டாள்,

அழுத்தமாக… ஆழமாக… வன்மையாக… வன்மையில் மென்மையாக அவனது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தாள், நிதானமாக!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!