VNE 63(1)

VNE 63(1)

63

ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் கண்களை தீண்டியது. அவசரமாக கடிகாரத்தை பார்த்தாள். ஏழரையை தொட்டிருந்தது. எப்போதுமே ஆறு மணிக்கு முன்னரே எழுந்து விடும் ஷ்யாம் இன்னமும் விழிக்கவில்லை. நல்ல உறக்கத்தில் இருந்தான். எப்போதும் அவன் உறங்கும் நேரம் குறைவு தான் என்றாலும், திருமணத்திற்கு பின்னர், அது வெகுவாக மாறியிருந்தது. ஆனாலும் அவனை பொறுத்தவரை ஐந்தரை மணிக்கு அன்றைய நாள் ஆரம்பமாகிவிட வேண்டும். மஹாவுக்கு அவன் எழும் நேரம் என்பது நடு இரவு. காலை உடற்பயிற்சியை முடித்து விட்டு, அவள் எழும் போதெல்லாம் குளித்து முடித்து இருப்பான்.

இரவு முழுக்க பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கணவனின் கைவளைவில் படுத்துக் கொண்டு ஏதேதோ கதைகளை பேசினாலும், அதை தாண்ட அவன் நினைக்கவில்லை. அவளுக்கிருந்த குற்ற உணர்வை அவனால் உபயோகிக்க முடியாது. அதோடு அவன் கொண்ட காயமென்பது ஒரு நாளில் ஆறிவிடக் கூடியதும் அல்ல!

அதை புரிந்து கொண்டாள் மஹா!

ஆனால் கணவனை எப்படி சமாதானம் செய்வது என்பதுதான் புரியவில்லை. நாளை காஞ்சிபுரத்தில் டியூட்டியில் சேர வேண்டும். மஹாவும் பிருந்தாவுமாக தங்க கார்த்திக் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தான். அதில் சேஷாவும் விகாஷினியும் சேர்ந்து கொள்வதாக திட்டம். திட்டமெல்லாம் சரிதான். ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டும். அடுத்த மாதம், வீட்டிலிருந்தே மருத்துவமனைக்கு போய் வரலாம்.

இந்த மாதம் வீட்டிலிருந்து போனால் அடுத்த மாதம் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி வேலையை முடித்து விட்டும் வரலாம் என்றும் ஒரு எண்ணம் முன்னர் இருந்தது. ஆனால் ஷ்யாமை சமாதானம் செய்யாமல் போக அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் சூழ்நிலை இப்படி இருக்கும் போது என்ன செய்வது என்பது புரியவில்லை. தான் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு எத்தனை பேரை காயப்படுத்தி, அலைய வைத்து, கணவனை சந்தேகப்பட்டு, அவனை தீக்குளிக்க சொல்லாதது ஒன்று தான் மீதம் என்று எண்ணிக் கொண்டவளுக்கு தலை வலிக்கும் போல இருந்தது.

படுத்திருந்த வாக்கிலேயே தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தள்ளி படுக்கும் போதே ஷ்யாமுக்கு விழிப்பு வந்துவிட, லேசாக கண்களை குறுக்கி மனைவியை பார்த்தான். குழப்பமாக தலையை பிடித்துக் கொண்டு படுத்திருந்ததை பார்த்து, தலைவலி போல என்பதை புரிந்து கொண்டவன்,

“ஏய் குல்ஃபி…” என்றழைக்க, மஹாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பளபளப்பு!

எத்தனை நாட்கள் கழித்து அவளை குல்ஃபி  என்றழைக்கிறான்!

“ம்ம்ம்…” என்று முனகினாள். தலைவலி ஆரம்பித்து இருந்தது. இரவு அழுததோடு விழித்திருந்ததும் காரணமாக இருக்கக் கூடும்.

“தலைவலிக்குதா?” என்று கேட்க,

“ம்ம்ம்…” என்றாள்.

புரண்டு அவள் பக்கம் வந்தவன், அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவளது கண்கள் தானாக மூடிக் கொண்டது. கண்களில் சின்ன முத்தங்கள். ஒரு விதமான ஆழ்ந்த அமைதியின் பால் வசப்பட்டது மனம். மனம் அமைதியடைய தலைவலி குறைவது போன்ற தோற்றம். நெற்றியை வருடிக் கொடுத்தவன், “எதையும் இந்த குட்டி மண்டைக்குள்ள ஏத்திக்காத… உன் புருஷன் கொஞ்சம் நல்லவன் தான்டி…” என்று கூற, அவளுக்குள் இருந்த குறும்பு மஹா எட்டிப் பார்த்தாள்.

அவனது பின்னந்தலையில் கைக் கோர்த்தவள், தன்னை நோக்கி இழுத்து, “என் புருஷன் எங்க வேண்ணா நல்லவனா இருக்கட்டும்… என்கிட்ட கெட்டவனாக மாட்டேங்றானே…” கிறக்கமான குரலில் கூறியவளை பார்த்து சிரித்தவன்,

“அவன் இன்னும் கொஞ்ச நாளைக்கு உன்கிட்ட நல்லவனாவே இருக்கட்டும்… இப்பவே சோதனை மேல் சோதனைன்னு பாட்டு பாட வேண்டியிருக்கு…” என்று அவளது கன்னத்தில் முத்தமிட,

“லிமிட்டட் எடிஷன்லையே காலத்தை ஓட்டலாம்ன்னு முடிவே பண்ணிட்ட…” என்று குறும்பாக சிரித்தவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்,

“எப்பா… இந்த லிமிட்டட் எடிஷனை மெய்ன்டைன் பண்ணவே நாக்கு தள்ளுது… இன்னும் ஃபுல் எடிஷனுக்கு ஆசைப்பட்டா உள்ளதும் போச்சுடான்னு போக வேண்டியதுதான்…” என்றவன், அவளது முகத்தில் கோலமிட, கண்கள் தாமாக மூடிக் கொள்ள, அவளது அந்த வெளிப்படையான மயக்கம் அவனை கிறங்கடித்தது. ஆனாலும் தன்னை சுதாரித்துக் கொண்டவனை கண்களை திறந்து பார்த்து முறைத்தாள்.

“ஆனா எனக்கு இந்த லிமிட்டட் எடிஷன் வேணா…” என்று பல்லைக் கடிக்க,

“ஓகே… டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணிக்கறேன்…” என்று சாதாரணமாக கூறியவன், எழுந்து கொள்ள முயல,

“டேய் புருஷாஆஆ…” என்று இழுக்க, சிரித்தான் ஷ்யாம்!

“என்னடி பொண்டாட்டி?” என்று குறும்பாக கேட்க,

“கடுப்பேத்தாதடா…”

“இப்ப ஒழுங்கா எந்திருச்சு வீட்டுக்கு கிளம்பற வழிய பாரு… அப்படி வர வேணாமா, இங்கயே இருக்கறதுன்னா இரு… நான் கிளம்பனும்… தலைக்கு மேல வேலை இருக்கு…” என்றவன், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எழுந்து விட,

“டேய் வெர்ஜின் பொண்ணுங்க சாபம் உன்னை சும்மா விடாதுடா…” என்று கடுப்படித்தவளை குறும்பாக பார்த்தவன்,

“ஆஹான்ன்ன்ன்….” என்றவன், சிரித்துக் கொண்டே குளியலறையை தஞ்சமடைந்தான்.

இவனை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது என்று தீவிரமான யோசனைக்கு உள்ளானாள் மஹா.

‘ச்சே… என்ன பண்ணாலும் அசைய மாட்டேங்குறாரே சுவாமிஜி…’ என்று நகத்தை கடித்துக் கொண்டு யோசனையில் இருக்க,

“இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நீ புறப்பட்டு வரலைன்னா, நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்… எப்படி வசதி?” குரல் வந்த திசையை பார்த்தாள் மஹா.

குளித்து, இடுப்பில் துண்டோடு, தலை துவட்டிக் கொண்டிருக்க, அவளுக்குள் பல்ப் எரிந்தது!

‘ஆஹா ஐடியா…’ என்று அமைதியாக எழுந்தவள், அவனருகில் சென்று, பின்னாலிருந்து அணைக்க,

“ஏய் என்னடி பண்ற?” நெளிந்தான் ஷ்யாம்.

“நீங்க தான் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ண போறீங்களே சுவாமிஜி? இப்பவும் கீப் அப் பண்ணுங்க…” என்று கிசுகிசுக்க,

“அழுக்கு மூட்டை… மொதல்ல போய் குளி…” என்று சிரித்தான்.

“அழுக்கு மூட்டையா?” என்றவள், அவனது பின்கழுத்தை கடித்து வைத்து விட்டு போக,

“ஏய் ரத்த காட்டேரியா மாறிட்டு வர்ற குல்ஃபி…”

“நீ தான் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றவனாச்சே…”குளியலறையிலிருந்து சத்தமாக கூற,

“வேணான்டி… சிக்கன் சிக்ஸ்டிஃபை போட வெச்சுடாத… நான் இப்போதைக்கு நல்லவனா இருக்கனும்ன்னு ட்ரை பண்றேன்…” என்று பதிலுக்கு கத்த, குளியலறை கதவை திறந்தவள், எட்டிப் பார்த்து,

“அதான் எதுவும் நடக்க மாட்டேங்குதே பாவ்வ்வ்வ்வா…” என்று கண்ணடிக்க, அவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஏய்… ரொம்ப கெட்ட பொண்ணா ஆய்ட்டடி…” என்று சிரிக்க,

“அப்கோர்ஸ்… உன் பொண்டாட்டி எப்படி இருப்பேன்? ஆனா நீ எப்படி டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றன்னு நானும் பாக்கறேன்டா…” என்று உள்ளிருந்தே சூளுரைக்க, இவன் வெட்க புன்னகையோடு உடை மாற்றிக் கொண்டிருந்தான். இது மிகவும் சுவாரசியமான விளையாட்டாக இருந்தது அவனுக்கு!

கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

வெறும் துண்டை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு மஹா, கால்களை மிதியடியில் துடைத்துக் கொண்டிருந்தாள், குளித்து முடித்து, புத்தம் புது பூவாக!

தலைக்கு குளித்திருப்பாள் போல… முடியை விரித்து விட்டிருக்க, நீர் சொட்டிக் கொண்டிருந்தது!

உண்மையிலேயே மனம் தடதடத்தது என்பதற்கான அர்த்தம் அப்போதுதான் புரிந்தது அவனுக்கு. கண்ணாடி வழியே பார்த்த போதே நெஞ்சுக்குள் ரயில் ஓடியது! ஆனால் அவளோ சற்றும் கவலை இல்லாமல், அதாவது காட்டிக் கொள்ளாமல், தலை துவட்டிக் கொண்டிருக்க, அதிர்வை அவனால் சமாளிக்க முடியவில்லை.

மஹா காட்டிக் கொள்ளவில்லையே தவிர, உள்ளுக்குள் வெட்கம் அவளை தின்று கொண்டிருந்தது. ‘போலாமா? வேண்டாமா?’ என்று ஆயிரம் முறை கேட்டிருப்பாள். ‘சரி என்னவானா என்ன? உன் புருஷன் தான?’ என்று மனசாட்சி உசுப்பி விடவும் தான் துணிந்து வந்தாள், சுவாமிஜியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற உறுதியோடு!

‘அடிப்பாவி… சபதம் போட்ட மாதிரியே பண்ணிடுவாளோ…’ என்று தனக்குள் புலம்பியவன், “ஏய்… இந்த வெக்கம்னா என்னன்னு தெரியுமா?” அவள் புறம் திரும்பாமல், கண்ணாடியை பார்த்தவாறே கேட்க,

“வெக்கமா? அப்படீன்னா என்ன பாவ்வ்வ்வ்வா?” என்று ஒருவிதமாக கேட்டவள்,

“வேணா குல்ஃபி… இருக்கற கொஞ்ச நஞ்ச நல்லவனையும் காலி பண்ணிடாத…”

“உன்ன யார்டா நல்லவனா இருக்க சொல்றது?” அவனை பார்த்து கண்ணடிக்க, கண்ணாடியிலிருந்து திரும்பியவன், அவளை நோக்கி வந்து, தாடையை நிமிர்த்தியவன்,

“வேணா மஹா… ஏதோவொரு குற்ற உணர்ச்சில இருக்க. என்னை ஹர்ட் பண்ணிட்டதா நினைக்கற. அந்த குற்ற உணர்ச்சியை நான் தூண்டி விட்டுட்டதா நீ நினைக்கக் கூடாது. எல்லாமே நேச்சுரலா இருக்கணும். இப்ப நீ எதுக்கோ காம்பன்சேட் பண்ண நினைக்கற. எனக்கு உன்னோட காம்பன்சேஷன் வேணாம். என்னை முழுசா எப்ப நம்ப முடியுதோ அப்ப வா…” நிதானமாக கூறியவனை ஆழமாக பார்த்தவள்,

“நான் கொஞ்சம் சறுக்கிட்டேன் தான். தப்பு பண்ணிட்டியோன்னு நினைச்சுட்டேன் தான் ஷ்யாம். நான் ஒத்துக்கறேன். ஆனா அது தப்புன்னு புரியுதுடா… அவசரக்குடுக்கையாட்டம் பண்ணிட்டேன். நீ என்னை விட பெரியவன் தான… இந்த அவசரக் குடுக்கையை மன்னிக்க மாட்டியா?” பாவமாக கேட்டவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.

“நமக்குள்ள என்ன மஹா மன்னிப்பு எல்லாம்? அதுக்கெல்லாம் அர்த்தமே இல்லடி… ஆனா கொஞ்சம் இடைவெளி அவசியம்ன்னு படுது…”

“எவ்வளவு நாள்?”

“தெரியல…”

வலித்த குரலில் கூறியவனை முறைத்துப் பார்த்தாள்.

“ஹலோ… ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது மச்சி…” கிண்டலாக கூற, சிரித்தபடி நகர்ந்தவனை இன்னமுமே முறைத்தாள்.

“ஆனாலும் உனக்கு வாய்க்கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்…” என்று சிரித்தபடி நகர,

“ஆமா நீதான மெஷர் பண்ண…” என்று உதட்டை சுளிக்க,

“ஏய் ரொம்ப சுளிக்கற… ஒய்ட் விக்கெட் ஜாக்கிரதை…” என்று கேலியாக கூறினான். ‘ஒய்ட் விக்கட்டா?’ என்று குழப்பமாக பார்க்க,

“கட்டிருக்கற துண்டை சொன்னேன்டி…” என்றவனை, ஒரு மார்கமாக பார்த்தவள்,

“சுவாமிஜி… தாங்கள் தான் டிஸ்டன்ஸ் கீப் அப் செய்பவர் ஆயிற்றே… தங்களின் கவனம் ஏன் அந்த ஒய்ட் விக்கெட்டின் மேல் போகிறது?” என்று அதே கிண்டல் குரலில் இவள் கேட்க,

“என்ன செய்வது குழந்தாய்? சுவாமிஜியின் கண்களுக்கு அத்தனையும் பச்சை பசுமையாக தெரிகிறதே…”

“வெறும் வாயில் வடை சுட்டு விற்பவர் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டோம் சுவாமிஜி…” என்று கண்ணடித்தவள், தலை காய வைக்க ட்ரையர் போட துவங்கினாள்.

“வெறும் வாய்ல வடையா? ஆல் மை டைம்…” என்றவன், “அடியே… ட்ரெஸ் போட்டுட்டு இந்த வேலைய பண்ண மாட்டியா?” பொறுமையை கைவிட்டு அவன் கேட்க,

“தங்களுக்கு வெட்கமாக இருந்தால் வேறு பக்கமாக திரும்பிக் கொள்ளுங்கள் சுவாமிஜி… நான் இங்குதான் உடை மாற்ற போகிறேன்…” என்று கிண்டலாக கூற,

“அடிப்பாவி… செஞ்சாலும் செய்வ தாயே… இனிமே இருந்தா எனக்கு சேஃப்டி இல்ல…” என்றவன், சிரித்தபடி வெளியே போக,

“மவனே… எப்படி நீ தப்பிக்கறன்னு நானும் பார்க்கறேன்…” என்று சிரித்தவள், அதே புன்னகையோடு உடை மாற்றத் துவங்கினாள்.

****

“நான் இப்படியே கிளம்பிக்கறேன் ஷ்யாம்… வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு வந்துட்டேன்…” ஆத்மநாதன் காபியை குடித்தபடியே கூற,

“அம்மாவாச்சும் ரெண்டு நாள் இங்க இருக்கட்டுமே நானா. மாமியார் மருமக சண்டை ஏதாவது வந்தா கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்ல… மஹாவும் ரெண்டு நாள் கழிச்சே போகட்டும்…” என்று ஷ்யாம் சிரித்தபடியே அன்றைய பிசினஸ் லைனை எடுத்துக் கொள்ள,

“விட்டா நீயே சண்டை மூட்டி விடுவ போல…” சமையலறையிலிருந்து ஜோதி குரல் கொடுத்தார்.

“பின்ன? உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்தா என்னை கண்டுக்க மாட்டால்ல… எப்படி இருந்தாலும் உன் மருமகளுக்கு சண்டை போட ஒரு ஆள் வேணும்… அவ்வளவுதான…” கிண்டலாக கூறியவனின் தோளில் ஒரு அடி வைத்தான் கார்த்திக்.

அவனுமே ஜாகிங் முடித்துவிட்டு குளித்து தயாராகி இருந்தான்.

“பாவி… இந்த வில்லத்தனம் எல்லாம் நீ பண்ணுவியா மச்சான்?” என்று கேட்டபடி எதிரில் அமர,

“நீயும் கத்துக்க… கல்யாணத்துக்கு அப்புறமா உனக்கு நல்லா பொழுது போகும்…”

“தெய்வமே… உன்னை மாதிரி பிரச்சனைய இழுத்து விட்டுட்டு உக்காந்து என்சாய் பண்ற அளவு நமக்கெல்லாம் தெம்பு பத்தாது தெய்வமே…” கார்த்திக் சிரிக்க, நாதன் சிரித்தார். அவருக்கு தெரியாதா? தன் மகனின் லொள்ளுத்தனங்கள் எல்லாம்!

“கரெக்டா சொன்ன கார்த்திக். அதுல என்னதான் இருக்குமோ? பிரச்சனையே இல்லைன்னா கூட, அங்க ஒரு பிரச்சனைய செஞ்சு விட்டு, அதை உக்கார்ந்து சால்வ் பண்ணி… பயபுள்ள கொஞ்சம் அதிகமாத்தான் போகுது…” என்று சிரிக்க,

“பிரச்சனைகள் இல்லைன்னா லைஃப்ல சுவாரசியம் இல்ல கார்த்திக். நம்மளை உயிர்ப்போட வெச்சு இருக்கறது பிரச்சனைகள் தான். பசின்னு ஒன்னு இருந்தா தான் மனுஷன் சாப்பாட தேடி ஓடுவான். பசியே இல்லைன்னா? உலகமே ஸ்தம்பிச்சு போகாதா? அது மாதிரிதான்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பசி… பணப்பசி, அதிகாரப் பசின்னு எத்தனையோ இருக்கு… இந்த பசியும் அது கொண்டு வர்ற பிரச்சனைகளும்  இருக்க வரைக்கும் தான் நாம ஓட முடியும். வின் பண்ண முடியும். எல்லா விஷயத்தையும் நம்ம கண்ட்ரோல்ல வைக்க முடியும்…” நிதானமாக கூறியவனை பெருமையாக பார்த்தான்.

error: Content is protected !!