VNE 63(3)

VNE 63(3)

இருவருக்குமே ஒருவருக்கொருவர் அருகாமையை விட்டுத்தர மனமில்லை!

அவளது வெற்றிடையில் கைப் பதித்து தன்னோடு இழுத்து அணைத்து கொள்ள, உள்ளுக்குள் நடுங்கியது அவளுக்கு!

மெளனமாக அவனது முகத்தை ஏறிட, “ரொம்ப குளிருதா மஹா?” அணைத்தவாறே கேட்க, அவள் எந்தப்பக்கம் தலையாட்டினாள் என்பதை அவளே அறியவில்லை!

“அங்க போய் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதடி… டென்ஷனாகாத… தலைவலி வந்துடும்… கஷ்டமா இருந்தா வந்துடு… சரியா?” என்று கேட்க,

“ம்ம்ம்ம்…” என்று தலையாட்டினாள்.

“டயட்ல இருக்கேன்னு சொல்லிட்டு சாப்பிடாம இருக்காத குல்ஃபி… ஒழுங்கா சாப்பிடு….”

“ம்ம்ம்ம்… நீயும் நேரத்துக்கு சாப்பிடு… ஓவரா சிகரெட் பிடிக்காதடா…” என்று கவலையாக கூற,

“ஏய் கிட்டத்தட்ட சிகரெட்டையே விட்டுட்டேன்டி… அந்த ஸ்மெல் உனக்கு பிடிக்கலைன்னு… எப்பவாவது ஏதோ ஒன்னு தான்… இத்தனை நாள்ல நான் சிகரெட் பிடிச்சு நீ பாத்தியா?” என்று கேட்க,

“ம்ஹூம்…” என்று இடம் வலமாக தலையாட்டினாள்.

“ஸ்டாப் பண்ணிருவேன் மஹா… உடனே முடியாது… கொஞ்ச கொஞ்சமா பண்ணிருவேன்…”

“ம்ம்ம்ம்…” தலையாட்டிக் கொண்டிருந்தாளே தவிர, அவளுக்குள் ஏக சோகம்.

“அங்க போய் ரொம்ப நேரம் தூங்காம இருக்காத மஹா… ஒழுங்கா தூங்கு…”

“ம்ம்ம்…” என்று அவனை முறைத்தவள், “இத நான் உனக்கு சொல்லணும்… நீதான் ஆந்தையாட்டம் முழுச்சுட்டு இருப்ப…” எனவும் வாய்விட்டு சிரித்தவன்,

“ஓகே ஓகே… ஆனா உன் புருஷனை நினைச்சுட்டு நீ தூங்காம இருப்பல்ல…” என்று வம்பிழுக்க,

“நான் ஏன் அந்த வீணா போனவனை நினைக்கப் போறேன்? அவன் என்னை துரத்தி விடறதுலையே இருக்கான்…” என்று நொடிக்க,

“சரி… அப்படீன்னா எங்கயும் போகாம அவன் கூடவே இருந்துடேன்…” என்று சிரித்துக் கொண்டே கூற, மஹாவின் முகம் பளீரென்று பளபளத்தது!

“நிஜமாவா சொல்ற?” என்று கேட்க,

“அடி… ராஸ்கல்… இத முடிச்சுட்டு இன்னும் எம்டி எம்பிஏ ஜான்ஸ் ஹாப்கின்ஸ்ல பாக்கி இருக்குடி… உன்ன நம்பி டீம்ட் யுனிவர்சிட்டி வரைக்கும் ப்ளான் பண்ணிட்டேன்…” அவள் விளையாட்டாக கூறியதை வைத்து அவளை கலாய்க்க, அவள் சிணுங்கினாள்.

“டேய் மாமா… சத்தியமா என்னால அவ்ளோலாம் படிக்க முடியாதுடா… நான் அவ்ளோ வொர்த் இல்ல…” என்று புலம்பியவளை பார்த்து சிரித்தான்.

“அதெல்லாம் படிக்கலாம்… நீ படிக்க நான் கேரண்டி…” என்று குறும்புப் புன்னகையோடு கூற,

“வேணா… அழுதுடுவேன்…”

“நீ அழுதாலும் படிச்சு தான் ஆகணும்…”

“ச்சே… எல்லாரும் கல்யாணம் பண்ணமா, ரெண்டு குழந்தைங்கள பெத்தமா, லைஃப்பை எஞ்சாய் பண்ணமான்னு இருப்பாங்க… எனக்கு வாச்சதும் தான் இருக்கே… தத்தி தத்தி… படி படின்னு உயிரை வாங்குதே ஆண்டவா…” சத்தமாகவே புலம்ப,

“ஏன்டி… ஹாஸ்பிடல் அட்மின்ல நீ உக்காரும் போது, கொஞ்சமாவது டீசன்ட் டிக்ரி வேணாமா? வெறும் எம்பிபிஎஸ் மட்டும் வெச்சுகிட்டு அட்மின்ல உக்காருவியா? யார் மதிப்பாங்க?” என்று சீரியசாகவே கேட்க,

“நான் அட்மின்ல உக்காந்துக்கறேன்னு எப்படா சொன்னேன்?”

“என் பொண்டாட்டி அட்மின்ல உக்காராம.. வேற யார் உக்காருவாங்களாம்?”

“அதுக்காக என்னை கொடுமை பண்ணாதடா மாமா…”

“வேற வழியே இல்ல… படிச்சுத்தான் ஆகணும் குல்ஃபி…” என்றவனை பார்த்து முறைத்தவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

“உன்னை பாக்காம ஒரு மாசம் எப்படி ஓட்ட போறேன்னு தெரியலடா… இன்னும் நீ வருஷக்கணக்கா பிரிஞ்சு இருக்க சொல்ற?” என்றவளுக்கு குரல் கனத்தது.

அவளது கனத்த குரலை கண்டவன், அவனது இடக்கையால் அவளை இன்னமும் இறுக்கிக் கொண்டான்.

“இன்னும் கொஞ்சம் பீலிங்கா பேசட்டா?” அவனது இடது பக்க மார்பில் சாய்ந்திருந்தவள், முகத்தை நிமிர்ந்து பார்த்து கேட்க,

“ஏன்டி?”

“இல்ல… இன்னும் கொஞ்சம் கட்டிப்ப ல்ல…” கிசுகிசுப்பாக கேட்க,

“இன்னும் கொஞ்சம் கட்டிக்கட்டா?” அவளது அதே கிசுகிசுப்பில் அவனும் கேட்க,

“கேட்டுகிட்டா கட்டிகிட்ட?” என்றவள் அவனது மார்பில் இன்னும் கொஞ்சம் ஒடுங்க,

“கடைசி பக்கத்தை காணோம் மச்சின்னு என்னை புலம்ப விட்டுடுவடி…”

“கடைசி பக்கம் எங்க இருக்கோ, அதை தேடித்தான் படிக்கணும் மச்சி…” என்று சில்மிஷமாக அவள் சிரிக்க,

“ஏய்… என் பொண்டாட்டி ஒரு மார்க்கமா தான்டி இருக்கா…” கள்ளத்தனமான புன்னகை அவனது முகத்தில்!

“அவ பல மார்க்கமாக தான் இருக்கா…. நீ தான் காலைல இருந்தே கண்டுக்க மாட்டேங்கற…”

“டெம்ப்ட் பண்ணாதடி… உன் புருஷன் ஒரு பிரின்சிபலோட இருக்கான்…”

“அதென்னடா வீணா போன பிரின்சிபல்…?”

“பிரிஞ்சு இருந்தா தான் லவ் ஸ்ட்ராங் ஆகுமாம்… உன் அண்ணன் சொன்னான்…”

“அவன் இன்னொரு வீணா போனவன்… அதனால இப்ப என்ன பண்ண போற?”

“லவ்வை ஸ்ட்ராங் ஆக்க போறேன்…” என்று ஷ்யாம் சிரிக்க,

“டேய் நீ கடைசி வரைக்கும் வாய்ல தான்டா வட சுடுவ…” என்றவள் அவனை தள்ளி விட்டு முன்னே செல்ல முயல, அவளது சேலை முந்தானையை பிடித்தவன், அவளை தன்னை நோக்கி இழுக்க, ஷ்யாம் மேல் பூமாலையாக வந்து விழுந்தாள், அவனது மனைவி!

“ரொம்ப சூடேத்தி விடாதடி… அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல…” என்றவன், அவளது இடையை பற்றியிருந்தான். அதுவரை விளையாட்டாக பேசி அவனை கேலி செய்து விட்டாளே தவிர, அவன் இடையை பற்றியவுடன் நடுங்கியது. நெளிந்து கொண்டே,

“லொள்ளு பண்ணாத… பப்ளிக் பிளேஸ்ல…” வார்த்தைகள் தந்தியடிததது!

“இது எனக்கே எனக்கான ப்ரைவேட் பிளேஸ் மஹா… சோல் ப்ராப்ரைட்டர்…” அவளது இடையில் விளையாடியபடியே கூறியவனின் முகத்தில் அத்தனை கள்ளத்தனம்! அவன் எதைக் கூறுகிறான் என்பதை அறியாதவளா அவனது மனைவி?

வெட்கத்தில் நெளிந்தவளை சில்மிஷமாக பார்த்தவன், புருவத்தை ஏற்றி இறக்கி, புன்னகைக்க, அவளது இதயம் பலமடங்கு வேகமாக துடித்தது.

அவனது தோளில் சாய்ந்தபடி வீட்டுக்குள் செல்ல முயன்றவளை அவசரமாக நனைத்தது மழை!

சிறு சிறு துளியாக மேலே விழுந்த போதே அவளுக்குள் உற்சாகம் பீறிடத் துவங்கியிருந்தது. பிரிவின் துயரம் அனைத்தையும் மழை கரைத்து விடுவதை போல தோன்றியது!

“மஹா… சீக்கிரம் உள்ள வா… நனையாத….” என்று அவளை இழுக்க, உள்ளே போக முயன்றவனையும் சேர்த்து மழையில் நனைத்தாள்.

“ஏய்… என்னடி பண்ற?” சிரித்தபடி அவளை கடிந்தாலும், அவளை அணைத்து பிடித்தபடி நனைந்தான் ஷ்யாம்!

சிறு துளி, பெருமழையாக கொட்டத் துவங்க, அவனை அலையில் தள்ளிவிட்டு, இன்னும் சிரித்தபடி நனைய துவங்கினாள் மஹா.

அலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட எழுந்தவன், மழையில் முழுவதுமாக நனைந்தவளை தாபமாக பார்த்தான். மஞ்சள் நிற சேலை உடலோடு ஒட்டிக் கொள்ள, மழை அவளது அழகை பட்டவர்த்தனமாக்க, காலை முதலே அவனை சீண்டியபடி இருந்த அவனது மனைவி, இப்போது அவனை மொத்தமாக தனக்குள் சுருட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏய் என்னையா தள்ளி விட்ட?” என்றபடி அவளை துரத்த, அவள் அவனிடம் சிக்காமல் போக்கு காட்ட, ஷ்யாமும் அவளை விடாமல் துரத்தினான்.

அவனிடம் சிக்குவது போல சிக்கி, பின் மீண்டு சிரித்தபடி அவனிடம் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள் மஹா. மனைவிடம் ஒவ்வொரு முறையும் சுகமாக தோற்றுக் கொண்டிருந்தான், அந்த காதல் கணவன்!

விளையாடியது போதும் என்று தோன்றிய் போது அவளை மொத்தமாக கைகளில் அள்ளிக் கொள்ள,

“ஏய்… என்ன பண்ற?” என்று மஹா அலற,

“உஷ்ஷ்… பேசாதடி  பொண்டாட்டி…” அவளை வீட்டுக்குள் போய் இறக்கிவிட,

“கொஞ்ச நேரம் நனையலாம்டா… ப்ளீஸ்…” மழையில் இன்னும் நனைய மஹா கெஞ்ச,

“ம்ஹூம்… முடியாது…” மழையில் நனைந்து அவளது அழகை வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருப்பதை அவளே உணரவில்லை. அரைகுறையாக தெரிந்தவற்றை தொட்டுத் தழுவிய அவனது பார்வையில் அத்தனை கல்மிஷம்!

“ப்ளீஸ் ஷ்யாம்ம்ம்ம்…”

“முடியாதுடி…” என்றவன், அந்த பின்பக்க பிரெஞ்ச் விண்டோ கதவை மூடிவிட்டு, மனைவியை தள்ளிக்கொண்டு மாடியறைக்கு சென்றான். அவனது படுக்கையறையை உபயோகிக்க அவனுக்கு விருப்பமில்லை. அந்த அறையை கிட்டத்தட்ட ஸ்டோர் ரூம் போல ஆக்கியிருந்தான் இத்தனை நாட்களில்!

“ஷ்யாம்… எதுக்கு உன் பொண்டாட்டியை தள்ளிட்டு போற?”

“என் பொண்டாட்டிய தானடி தள்ளிட்டு போறேன்…” கள்ளப் புன்னகையோடு கூறியவனை திரும்பி பார்த்தவளால், அவனது அந்த சில்மிஷப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

அவளை பார்த்தபடியே அறைக் கதவை காலால் அறைந்து மூட, அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் அவனது மனைவி!

“ரொம்ப நனைஞ்சு இருக்க குல்ஃபி…” கிசுகிசுப்பாக கூறியபடியே அருகில் வர, அவள் பின்னடைந்தாள்!

“காலைலருந்து சூயிங் கம் வேணுமான்னு வம்பு பண்ணல்ல… இப்ப எனக்கு வேணுன்டி…” கிறக்கமான குரலில் கேட்க, அவள் இன்னுமே பின்னடைந்தாள்.

சுவர் தடுக்க, அதில் சாய்ந்தவளை, தாடையை மென்மையாக பிடித்து நிமிர்த்தினான். அவனது பார்வையெல்லாம் அவளது உதடுகளில் லயித்து இருக்க, கண்களை திறந்தவள் பேச முடியாமல் உறைந்தாள்.

அந்த இடைவெளியில் அவளது இடையைத் தன்னோடு சேர்த்தவன், அவளது இதழ்களை அணைத்திருந்தான்.

அழுத்தமாக… ஆழமாக… வன்மையாக… வன்மையில் மென்மையாக அவளது இதழில் கதை எழுதிக் கொண்டிருந்தான், நிதானமாக!

அவனது வன்மையான மென்மையில் தன்னை தொலைக்க ஆரம்பித்தவள், மயக்கத்தில் எதன் மீதோ மோத, மியுசிக் சிஸ்டம் பாட ஆரம்பித்தது.

புகைபூஞ்சுருளும் பொருளும் எரித்திட தேவையில்லை…

ஒரு முத்தம் கொடு…

இடையோடு சேர்த்து அவளை வளைத்தவன், மென்மையாக பின் கழுத்தில் முத்தமிட, அவள் உடல் சிலிர்த்தாள். வெட்கத்தில் அவனை வலுகட்டாயமாக விலக்கியவளை பின்கழுத்தில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுக்க, அவளுக்கு இந்த உலகம் மறக்கத் துவங்கியிருந்தது.

படிகத்துகளோ பனியோ நுகர்த்திட தேவையில்லை….

உன் வாசம் கொடு…

சின்ன சின்ன சில்மிஷங்கள், கள்ள முத்தங்கள், அவன் தன்னை மறக்க போதுமானதாக இருக்க, அவள் வாசம் அவனுக்குள் வியாபித்து அவனை பித்தம் கொள்ள செய்தது.

உன் குரல் எழிலில் அக்குழல் மறக்க, உன் காதல் போதும் பெண்ணே கிறுகிறுக்க..

ஏய் பெண்ணே…!

என் போதை கோதை போதை கோதை நீ…

அவளது அண்மை அவனை போதையில் ஆழ்த்தி இருந்தது. அந்த நேரத்தில் அவளை காட்டிலும் வேறு போதை வேண்டுமா என்று யாரேனும் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு வேண்டாமென்று மறுக்கும் நிலையிலிருந்தான்.

திரவங்களும் பீற்று குழலும் குருதிக்கு தேவையில்லை….

ஒரு புன்னகை கொடு…

அவள் மயக்கத்தோடு புன்னகைத்தபோது மீண்டும் மீண்டும் பிறந்தான். அப்படியொரு கிறக்கம் அவள்மீது. விட்டு விட முடியாமல், விட்டால் மீண்டும் கிடைக்காதோ என்ற பயம் கொண்டு அமிழ்தத்தை அருந்தும் அசுரனாக மாறியிருந்தான்.

தேவதை சாத்தான் ரகசியம் கேட்டிட தேவையில்லை…

உன் சொற்கள் கொடு…

இது ஏழ் பிறப்பும் தொடரும் பந்தம் என்பதை முழுவதுமாக உணர்ந்தவனுக்குள், இது எத்தனை பிறவிகளில் தொடர்ந்த உறவோ என்ற எண்ணம் அவனை சுழற்றியடிதது. ஆதியும் நீயே அந்தமும் நீயே என்று அவளுக்குள் மொத்தமாக சரணடைய சொன்னது. சரணடைந்தான்!

உன் மொழியினிலே சுகம் கிடைக்க உன் காதல் போதும் பெண்ணே என்னை ஈர்க்க….

ஏய் பெண்ணே…!

மூலிகை சாலக் காளான் எதுவுமே தேவையில்லை….

உன் நெஞ்சை கொடு….

என் போதை கோதை போதை கோதை நீ…

மீள முடியாத அந்தப் போதை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மனம் கேட்டது. அதீத காதலும், அதிகபட்சமான மோகமும் என்னவெல்லாம் செய்யக் கூடும் என்பதை அன்று தான் உணர்ந்தான். அது ராஜ போதை… கஞ்சாவோ மார்ஃபினோ வேறு எந்தப் போதை வஸ்துவுமே கொடுக்க முடியாத ராஜ போதை.

அது காதலினால் மட்டுமே கிடைக்கும் ராஜ போதை!

error: Content is protected !!